சண்டியரே 8
மணக்கோலத்தில் மணப்பெண்ணாய் தங்கமயில் தங்கமென அலங்காரத்தோடு காத்திருக்க.. ஆனால் மணமகன் குரு ஆதிரனோ இன்னும் வந்து சேரவில்லை. கமலாம்பிகை மயூரன் இருவரும் மயிலின் இரு புறம் தவிப்போடு நின்றிருந்தனர். கண்கள் கோவில் வாயிலை தொட்டு தொட்டு மீண்டது மூவருக்கும்..
இகிழ்ச்சியாக அவர்களைப் பார்த்தவர் “நீங்க எதிர்பார்க்கிற எவனும் வரமாட்டானுங்க..! அப்படியெல்லாம் இந்த தியாகேசன குறைச்சு மதிப்பிடாதிங்க.. செய்ய வேண்டிய வேலையை பக்காவா நேத்து இராவே செஞ்சிட்டேன்..! எவனும் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது.!” என்று எகத்தாளமாக சிரித்தார்.
“ஆமா ஆமா செய்ய வேண்டிய வேலை எல்லாம் ரொம்ப சிறப்பா செஞ்சிட்டு தான் வந்திருக்க போல தியாகேசா..” என்று அருகில் குரலில் திடுக்கிட்டு அவர் திரும்பிப் பார்க்க..
அங்கே விஜயராகவன் கோபமாக நிற்க.. அவர் அருகில் குரு ஆதிரன் ரௌத்திரத்தோடு நின்றிருக்க.. அவர்களின் சொந்தங்கள் எல்லாம் தியாகேசனைப் பார்த்து “உன்னை ஒரே வெட்டா வெட்டவா? பல குத்துகளா குத்தவா?” என்று முறைப்போடு நிற்க..
தியாகேசனுக்கு தூக்கி வாரி போட்டது. “எப்படி.. எப்படி இது நடந்தது? எப்படி இவர்கள் வந்தார்கள்? நான் போட்ட பிளான் எல்லாம் என்ன ஆச்சு?” என்று இன்னும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
அதிர்ச்சி குறையாமல் நின்றிருந்த அத்தானின் அருகில் வந்த ஆதிரன் அவரது சட்டை காலரை கொத்தாக பிடித்து “எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ண நீ இப்படி பண்ணி இருப்ப? சின்ன குழந்தைனு கருணை கூடவா உனக்கு இல்ல? அந்த அளவுக்கு உனக்குள்ள இருந்த மனிதம் செத்துப் போய் மிருகம் வந்துடுச்சா?” என்று உறுமினான்.
ஆதிரன் பேசியது கேட்டதும் கமலாம்பிகைக்கும் மயிலுக்கும் தூக்கி வாரி போட்டது. “சின்ன குழந்தைய என்ன பண்ணினார்?” என்று பயத்தோடு தம்பியை பார்த்து கேட்டார்.
“என்ன நடந்துச்சுனு உன் புருஷன் கிட்ட கேளு கா.. ஆள பாரு.. பேர பாரு தியாகேசனாம். ஆனா செய்யறது எல்லாம் பொறுக்கி வேலை..” என்றான் முகத்தை மட்டும் அக்காவின் பக்கம் திருப்பி..
“யோவ் என்னய்யா பண்ணி தொலச்ச.. உன்னையே பார்த்து மரியாதையா அமைதியா போற புள்ளை இப்பல்லாம் உன்னால கோவமாக கத்திட்டு சண்டை போடுற அளவுக்கு கொண்டு வந்து விட்டு வச்சிருக்க.. சின்ன பிள்ளைன்னா.. ஆருரன் புள்ளையா? என்னய்யா பண்ணி தொலச்ச சொல்லுய்யா? இந்த மாதிரி ஏதாவது எடக்கு முடக்கா பண்ணிட்டு இருந்தேன்னா.. புருஷனும் பார்க்க மாட்டேன் மனுஷனும் பார்க்க மாட்டேன்.. சோத்துல விஷத்தை வச்சுருவேன்.. ஆமா பார்த்துக்கோ..” என்றதும் அவரோ திடுக்கிட்டு மனைவியை பார்த்தார்.
“சோத்துல விஷத்தை வைக்காத கா.. விஷத்துல சோத்த வை உன் புருஷனுக்கு” என்றவன் “காலையிலிருந்து குழந்தையை காணும். வீடு ஃபுல்லா நாங்க தேடி எங்கேயுமே கிடைக்கல.. ஆறு மாச குழந்த எங்க போயிடுவா.. சொல்லு?” என்றதும் கமலாம்பிகை அதிர்ந்து “இவர் ஏதும் செஞ்சுட்டாரா ஆதிரா? குழந்தைக்கு ஒன்னும் ஆகல இல்ல.. நல்லா இருக்கா இல்ல? எனக்கு நெஞ்சே படபடன்னு அடிச்சிக்குது” என்றவர் குழந்தை நல்லா இருக்க வேண்டும் என்று மனதுக்குள் அத்தனை பிரார்த்தனை அவரிடம்..!
ஆனாலும் தம்பியும் அப்பாவும் திருமணத்திற்கு கிளம்பி வந்ததிலிருந்து பெரிதாக தம்பி மகளுக்கு பாதிப்பில்லை என்று புரிந்து கொண்டார்.
“நாங்க அந்த புள்ளைய காணோங்குற கேப்புல அந்த குடிகார பயல கொண்டு வந்து உன் மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இந்த ஆளு பிளான் போட்டு இருக்காரு கா. அப்படி எல்லாம் நடந்தா உலகம் அழிஞ்சிடாது..! இவர் என்னதான் திட்டம் போட்டாலும் மேல ஒருத்தன் இருக்கான்னு நிரூபிச்சிட்டான். குழந்தையை கண்டுபிடிச்சாச்சு..”என்றான் தியாகேசன் மேல் இருந்த கோபம் சற்றும் குறையாமல்.
“ஆரூரா காப்பாத்திட்டப்பா.. ஈசா..!” என்று வேண்டிக் கொண்ட கமலாம்பிகை “குழந்தை எங்கடா இருக்கா? ஒன்னும் பிரச்சனை இல்ல இல்ல..” என்று பதட்டத்தோடு கேட்டார்.
“ஹாஸ்பிடல்ல இருக்கா கா. பாத்துக்க சொல்லிட்டு வந்து இருக்கேன்” என்றான் ஆதிரன் கலங்கிய குரலில்.
சகோதரனின் மகள் தான். ஆனாலும் இத்தனை நாட்களாக மகளாக பாவித்து வளர்த்தவன் அந்த நிலையில் அவளை கண்டதும் மனம் தவித்து போனது. குழந்தையை இப்படி செய்தவனை அடித்து துவம்சமாகிட கிளம்பவனை தடுத்து நிறுத்தி “முதலில் காரியத்தை பார் குரு.. அதன் பின் வீரியத்தை காட்டலாம்..!” என்று விஜயராகவன் அழைத்து வந்து விட்டார்.
“குழந்தை ஹாஸ்பிடல இருக்காளா? அங்கு சேர்க்கும் அளவுக்கு என்ன மாமா ஆச்சு?” என்று இப்பொழுதுதான் மயில் வாய் திறந்து கேட்க..
“உன் குடிகாரப்பன் என் பெண்ணை கொல்ல பார்த்தான்” என்றான் பல்லை கடித்துக்கொண்டு..
“இல்ல.. இல்ல.. நான் கொல்ல எல்லாம் சொல்லல.. நான் தூக்கி மோட்டர் ரூம்ல பதுக்கி வச்சுக்கடா யார் கண்ணுக்கும் தெரியாம, கல்யாணம் முடிஞ்சதும் வந்து வீட்ல கொடுத்துடுடானு சொன்னேன். கொல்லலாம் பார்க்கல.. அடியே கமலா நிசம் டி.. என்னை நம்பு டி..!” என்று அங்கே இருந்த ஜாதி ஜனத்தை பார்த்து எங்கே தன்னை கொலைகாரன் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கத்தினார் தியாகேசன்.
‘கொல்ல பாத்தாரா?? அதுவும் பச்சை குழந்தையையா??!!’ என்று மயில் அப்பனை அருவருப்பாக பார்த்தவள், “நீ எல்லாம் அப்பனா? நீயும் ரெண்டு பிள்ளைகளை பெத்து வச்சிருக்க தானே? சின்ன பிள்ளை கொல்ல உனக்கு எப்படிப்பா மனசு வந்துச்சு?” என்று காட்டமாக கேட்டாள். மயூரன் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அப்பாவை முறைத்தான்.
தன் அப்பா கோபப்படுவார் பேசுவார் அவ்வப்போது சில்லரைதனமாக சில வேலைகள் செய்வார் என்று நினைத்திருந்தவளுக்கு தன் அப்பா கொலை செய்வாரா? அதுவும் சின்ன குழந்தையை? என்று நம்பவே முடியவில்லை.
“ஐயோ மயிலு..! சொன்னா கேளு நிஜமாவே மோட்டார் ரூமுக்குள்ள புள்ளைய தூக்கி வச்சு மறைச்சு வைக்க தான் சொன்னேனே தவிர கொல்ல எல்லாம் யாரையும் அனுப்பவே இல்ல மயிலு.. இது உன் மேல சத்தியம்.!” என்று சத்தியம் செய்யப் போனவரின் கையை தட்டி விட்டார் கமலாம்பிகை.
“என் பொண்ணு நூறு வருஷம் புருஷனோடு நல்லா வாழ வேண்டிவ.. உன் பொய் சத்தியத்தை வேணா உன் தலையில அடி.. இல்லன்னா நீ மாப்பிள்ளையா கொண்டு வந்தியே அவன் தலையில அடி.. ரெண்டு பேர் தலையிலும் இடி விழ!” என்று சீறினார்.
அதன் பின் தான் அதுவரை அங்கே லோகநாதன் வரவில்லை என்பதை கண்டு “இந்த குடிகார பையன் எங்க போனான்? ஒருவேள காலைல குடிச்சிட்டு மப்புல எங்கேயும் கிடக்குறானோ அவன் தான் மாப்பிள்ளை என்கிறதை மறந்துட்டு? அவன் கிட்ட தானே இந்த வேலையை கொடுத்தோம் நாம..” என்று யோசித்தார்.
“உன் குடிகார மாப்பிள்ளைய தேடுறியா நீ? என் பொண்ண என்ன பண்ண சொன்னீயோ அதேதான் அவனுக்கு பண்ணி வச்சிருக்கேன்” என்றான் கொடூரமாக ஆதிரன்.
“மோட்டர் ரூம்ல அடைச்சு வச்சிருக்கியா? நான் இப்பவே அவனை போய் கூட்டிட்டு வரேன் என்ன நடந்தாலும் சரி என் பொண்ணு உனக்கு கிடையாது..! இந்த கல்யாணம் நடக்காது..!” என்று இங்கேயும் அங்கேயும் குறுக்கு மறுக்காக வேகவேகமாக நடந்து கொண்டிருந்தார்.
தியாகேசன் சொந்தபந்தங்கள் கூட அவரை பார்த்து முகம் சுளித்தனர். தங்களுக்குள் கிசுகிசுப்பாக இல்லை சத்தமாக பேசிக் கொண்டனர், தியாகேசனை பற்றி அவதூறாக.. ஆனால் அதை எல்லாம் கண்ணிலும் காதிலும் விழுந்தாலும் “இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் அந்த புள்ளைக்கு என் புள்ளையை அம்மாவா ஆக விடமாட்டேன்..!” என்று குதித்துக் கொண்டிருந்தார் தியாகேசன்
“நான் வரும்போது போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு தான் வந்திருக்கேன். என் புள்ளையை பம்பு செட்டில் தண்ணில அமுக்கி கொல்ல பார்த்தேனு.. அதனாலதான் இப்ப அவள ஹாஸ்பிடல்ல வெச்சிருக்கேன். கூடவே டாக்டர் சர்டிபிகேட் வாங்கியாச்சு.. நீ இப்படி ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேனா கண்டிப்பாக போலீஸ் கம்பிதான்” என்று ஆதிரன் சொன்னதும்,
பம்பு செட்டில் வைத்து கொல்ல பார்த்தாரா என்று அத்தனை பேருமே திகைத்து விட்டனர்.
“என்னது போலீஸா?’ அடங்கினார் தியாகேசன். சில நிமிடம் மட்டுமே ஆனாலும் அவர் கொண்ட ஆணவம் அவரை பேச வைத்தது.
“போலீஸ் தானே..!! போ போ.. போய் என்ன வேணாலும் கம்ப்ளைன்ட் பண்ணு. நானும் உள்ள போறேன். ஆனா இந்த கல்யாணத்தை மட்டும் நடத்த விட மாட்டேன் டா..!” என்று அவர் கொதித்தார்.
“போலீஸ்ல போய் என் புள்ளையை கொல்ல முயற்சி பண்ணுனேன்னு சொல்ல மாட்டேன்..!” என்று ஆதிரன் நாக்கை கன்னத்தில் துலாவி ஒரு மார்க்கமாக அவரை பார்த்தான்.
“வேற என்ன சொல்லுவ? கல்யாணத்துக்கு சமாதிக்க மாட்டேன்னு சொல்லுவியா? சொல்லிக்கோ.. நீ போலீஸ் ஸ்டேஷன்லையே வச்சு கல்யாணத்தை பண்ணாலும் அங்கேயும் வந்து தடுப்பேன்டா..!” என்று நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு தன் பொண்ணை ஆதிரன் அண்ட விடாமல் அடை காத்து நின்றார்.
“சேச்ச.. அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன் மாமோய்.. நீ எப்போ எங்க கல்யாணத்தை தடுத்த.. எங்க கல்யாணம் பண்ணி வைக்க இவ்வளவு வேலையும் பார்த்ததே நீதானே இதுக்கு ஊரே சாட்சி தெரியுமா?” என்றான் எள்ளலாக..!
“ஆமா டா.. அப்ப வேலை பார்த்தேன். அப்ப புடிச்சி இருந்தது. இப்ப புடிக்கல அதனால நடக்க விட மாட்டேன்..!”
“கரெக்ட்.. ஆனா அது உனக்கு மட்டும் தானே தெரியும் போலீசுக்கு தெரியாதே..! எனக்கும் தங்கத்துக்கும் கல்யாணம் நிச்சயமானது.. பத்திரிக்கை எடுத்து ஊர் ஊரா நீ சுத்துனது.. மண்டபம் எடுத்தது விருந்துக்கு ஏற்பாடு பண்ணினது.. என்று ஊருக்கே தெரியும். இப்படி ஒரே பொண்ணு கல்யாணத்தை பிரம்மாண்டமா நடத்திக்கிட்டு இருக்கும்போது இடையில் யாராவது வந்து கோல்மால் பண்ணினா.. என் மாமனுக்கு கோபம் வருமா வராதா? அவன எப்படி சும்மா விடுவாரு?” என்றதும் திகைப்படைந்தார் தியாகேசன்.
“என்னடா சொல்ற? நான் என்னடா பண்ணுனேன்?” என்று பதறினார். கூடவே லோகநாதன் காலையிலிருந்து இன்னும் இங்கே வரவில்லை. ஃபோன் அடித்தாலும் எடுக்கவில்லை. அந்த பயம் வேற அவரை ஆட்டிப் படைத்தது.
“எங்க கல்யாணத்துல வந்து இடைஞ்சல் பண்ணின லோகநாதன.. என் அத்தானே மோட்டர் பம்புல கை கால கட்டி போட்டு தண்ணீர் திறந்து விட்டு அவனை மூச்சு திணற திணற வச்சு கொன்னுட்டாருன்னு சொல்லிடுவேன்..! சாட்சிக்கு அங்காளி பங்காளினு எல்லாரையும் கூப்பிடுவேன்..” என்று அவர்களைப் பார்க்க..
“ஆமா ஆதிரா.. நாங்களும் வருவோம் சாட்சிக்கு..” என்றதும் இப்பொழுது நிஜமாகவே ஆடித்தான் போனார் ஆதிரனின் அதிரடியில் தியாகேசன்.
அதெல்லாம் விட லோகநாதன் இப்பொழுது மூச்சுக்கு திணறிக்கொண்டு பம்புசெட்டில் கிடக்கிறான் என்ற செய்தியே அவருக்கு இன்னும் கைகால் எல்லாம் உதறலெடுக்க..
“இல்ல.. இல்ல.. சத்தியமா சொல்றேன் டா உன் பொண்ணு நான் அப்படி எல்லாம் பண்ண சொல்லவே இல்ல..! மறைச்சு வைக்க மட்டும் தான் சொன்னேன்.. அதுக்காக என்ன கொலை கேஸ்ல எல்லாம் மாட்டி விடாதடா” என்று அழுது விடுபவர் போல பேசியவரை கண்டு சுட்டு விரலால் காதை குடைந்தான் ஆதிரன்.
“அவன கொன்னு அந்த பழியை என் மேல போட்டுடாதடா ஆதிரா உனக்கு கெஞ்சி கேட்டுக்கறேண்டா..” என்று கெஞ்சியவரை அப்பொழுதும் அவரை கண்டு கொள்ளாமல் தன் சட்டையின் கைபட்டனை நிறுத்தி நிதானமாக போட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து ஒரு பக்கம் கோபமாக பொத்துக்கிட்டு வந்தாலும்.. மறுபக்கம் பயமாகவும் தான் இருந்தது இப்படி ஆதிரனது அதிரடி ஆட்டத்தில்..
“ஆமா உம்ம வயசு என்ன?” என்று கேட்டான். இப்ப எதுக்கு இதை கேட்கிறான் என்று அவனைப் பார்த்தவர் “52..!” என்றார்.
“எங்க அப்பா வயசு என்ன தெரியுமா? 65..! அவர் இன்னவரைக்கும் மாப்பிள்ளைனு உமக்கு மரியாதை கொடுத்து பேசுறாரு.. நான் உம்ம வருங்கால மாப்பிள்ளை.. என்னைய வாடா போடான்னு பேசுவீரோ?” என்றவனை பார்த்து..
‘அடப்பாவி..; ஐயோ எதற்கெல்லாம் மூஞ்சியை தூக்குறான்.. முடியல இவன் கூட..’ என்று எண்ணியவர், “தப்புதேன்.. தப்புதேன்..” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டவர் “தயவு செய்து அந்த லோகநாதன் விட்டுடு சொல்லு மாப்பிள்ளை” என்றார் தாழ்ந்து.
ஆதிரன் ஒற்றை புருவத்தை உயர்த்தி “என்ன..??” என்று கேட்க “விட்டுடுங்க மாப்பிள்ளை.. விட்டுடுங்க மாப்பிள்ளை.. தயவுசெய்து அந்த குடிகார பய லோகநாதன விட்டுவிடுங்க மாப்பிள்ளை” என்று கெஞ்சினார்.
“கேக்கல.. இன்னும் கொஞ்சம் சத்தமா..!” என்று காது மடல் அடியில் இடது கையை வைத்து அவன் கேட்க..
‘படுத்துறானே.. படுத்துறானே.. நானே சுகர் பேசன்ட் டா’ என்று மனதுக்குள் புலம்ப மட்டுமே தியாகேசனால் முடிந்தது.
“மாப்பிள்ளை அந்த லோகநாதன் விட்டுடுங்க.. அவனை கொலை பண்ணி என் மேல பழிய போடாதீங்க.. சத்தியமா உங்க பொண்ண பம்பு செட்டுக்குள்ள எல்லாம் வச்சு நான் கொல்ல சொல்லல.. அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் கிடையாது” என்றார்.
“இப்ப சொன்னீரே அதான் சரி.! உமக்கு அந்த அளவு எல்லாம் தைரியம் பத்தாது” என்று இகழ்ச்சியாக உதட்டை வளைத்தான்.
“ஆனாலும் ஏன் அவனை அப்படி பண்ண தெரியுமா? அந்த நாதாரி பய தான் நீர் அனுப்புன ஆளுகிட்ட என் பொண்ண தண்ணில அமுக்கி கொல்ல சொன்னான். என் பொண்ண அப்படி செய்ய சொன்னவனை சும்மா விட்டு நான் என்ன சொம்பனா?” என்றதும் அதிர்ந்து நெஞ்சில் கையை வைத்துவிட்டார்.
“அடப்பாவி அவன் குடிகாரன் பாவிதான் நினைச்சா.. அவன் கொலைகார பாவியா இருக்கானே? அவனுக்கு போய் என் பொண்ண நீ கட்டி கொடுக்க பாத்திருக்க.. நீ எல்லாம் மனுசனா நீ எல்லாம் ஒரு அப்பனா?” என்று அத்தனை திட்டினார் கமலாம்பிகை.
மாமன் நன்றாக திட்டு வாங்கும் வரை அமைதியாக இருந்தான்.
ஆனால் தியாகேசனோ ஆதிரனைப் பார்த்து “என்னைய கொல கேசில் மாட்டி விட்டுவிடாத மாப்பிள்ளை.. உங்க அக்கா கழுத்தில அப்புறம் தாலி தங்காது” என்று கெஞ்சினார். உண்மையில் அவருக்கு ஆரூரன் மீது வெறுப்புத்தானே ஒழிய கொலை செய்யும் அளவுக்கு எல்லாம் மா பாதகன் இல்லை.
“என் அக்கா காலத்துல தாலி தங்கனும்னா.. உம்ம பொண்ணு கழுத்துல என் கையால தாலி ஏறனும்..! அதுவும் உம்ம வாயால சொல்லணும்..!” என்று நிமிர்ந்து நின்று பேசியவனை கண்டவர் ‘கடைசியிலே என் வாயாலேயே தாலி கட்டுனு சொல்ல வச்சிட்டானே’ என்று நொந்தவர்,
“வாங்க மாப்பிள்ளை.. வந்து என் பொண்ணு குளத்துல தாலி கட்டுங்க முகூர்த்தத்துக்கு நேரமாச்சு” என்றார்.
“சரி சரி முகூர்த்தத்துக்கு நேரமாச்சு எல்லாரும் வாங்க..” என்ற ஆதிரன், நூலறுந்த பட்டம் போல் தொய்ந்து போனவரை “மச்சான் தவசி.. உன் சித்தப்புவ தூக்கிட்டு சாமி சன்னதிக்கு வந்து சேரு” என்றான்.
“அதுக்கு என்ன மாப்பி.. இழுத்துட்டு வந்துடுறேன்..” என்றான் ஆதிரனின் ஒன்றுவிட்ட மச்சான் ஒருவனான கும்பகோணத்தை சேர்ந்த தவசிராஜ்.. “வா.. வா.. சித்தப்பு நான் உன்ன பிடிச்சிக்கிறேன்” என்று அவரை இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.
அப்பர் சுந்தரர் திருஞானசம்பந்தர் என்று பல நாயன்மார்களாலும்.. சங்கீத மும்மூர்த்திகளால் பல கீர்த்தனைகளாலும்.. மனம் உருகி பக்தி சொட்ட சொட்ட பாடப் பெற்ற எம்பெருமான் தியாகராஜ சன்னதி முன் நின்றனர் குரு ஆதிரன் தங்கமயில் மற்றும் இருவரின் குடும்பத்தினர்.
இறைவனிடம் ஆசிப் பெற்ற பொன் தாலியை தன் வலது புறம் நின்றிருக்கும் தங்கமயில் கழுத்தில் கட்டி, தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான் குரு ஆதிரன்.
விஜயராகவன் கண்களில் கண்ணீர் துளிர்க்க மகன் பேத்தியை வாழ்த்த.. கமலாம்பிகை தன் பெண்ணை காப்பாற்றிவிட்டோம் என்று நிம்மதி தன் தம்பி கையில் கொடுத்துவிட்ட பெரும் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடிக்க.. மயூரனோ மாமனை கட்டி அணைத்து வாழ்த்தை தெரிவித்தான். வந்திருந்த சுற்றமும் உறவும் நண்பர்களும் அத்துணை வாழ்த்துகள் கூற.. ஒருவர் மட்டும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார் என்றால் அது தியாகேசன் தான்..!
இக்கல்யாணத்தை தடுக்க முடியாத பெரும் கோபத்துடனும் அந்த லோகநாதனுக்கு எதுவும் ஆகி என்னை மாட்டி விட்டுருவானோ என்று பயத்துடனும் மனமே இல்லாமல் மணமக்களை வாழ்த்தினார் தியாகேசன்.
அன்று தம்பதிக்களுக்கான தனி இரவு..!
தங்களை பற்றி அறிந்துக் கொள்ளும் முதல் இரவு..!
“உன் மனசில் வேற யாராவது இருக்காங்களா.. தங்கம்?” என்று குரு ஆதிரன் கூர் பார்வையோடு கேட்க, அவனை அதிர்ந்து பார்த்தாள் தங்கமயில்..!!
தொடரும்…
சண்டியரே 9
திருமணம் முடித்து ஏற்பாடு செய்திருந்த மண்டபத்திற்கு அனைவரையும் அழைத்து வந்து விட்டார் விஜயராகவன். ஏனோ தியாகேசனின் வீட்டுக்கு செல்ல பிடித்தமில்லை. தந்தையின் மனம் புரிந்த தனயனாய் ஆதிரனும் கல்யாண விருந்து இருக்கிறது என்று சொல்லி சொந்த பந்தங்களோடு மண்டபத்திற்கு சென்று விட..
தன் வீட்டிற்கு மன மக்களை அழைத்து பால் பழம் கொடுக்க முடியாத கையாளாகத்தனத்தோடு வேறு எங்கும் செல்ல முடியாமல் அவர்கள் பின்னையே வந்து கொண்டிருந்தார் தியாகேசன். கூடவே தவசியை அவருக்கு அருகில் நிறுத்திவிட்டான் ஆதிரன். ‘அவர் மீது ஒரு கண் வைத்துக் கொள்’ என்று குறிப்பால் உணர்த்தி விட,
“ஒரு கண் என்ன இரண்டு கண்ணுமே அவர் மேல தான்.. நான் பார்த்துக்கிறேன் மாப்பி.. கவலைப்படாதே இந்த நாளை என்ஜாய் செய் மாப்பி” என்றதோடு அவனும் சித்தப்பு சித்தப்பு என்று தியாகேசனை போட்டு படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான்.
அவர் நின்றால் “என்ன சித்தப்பு ஏன் நிக்கிறீங்க.. உட்காருங்க.. உட்காருங்க” என்று இருக்கையை எடுத்து போட்டு அமர வைத்தான்.
அவர் ரொம்ப நேரம் அமர முடியாமல் எழுந்து நடந்தால் கூட “எங்க போறீக சித்தப்பு.. மாப்பிள்ளை கிட்ட சொல்லவா?” என்று அதட்டி உருட்டி தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்தான் தவசி.
“அவன் ஒருத்தன் தான் தொல்லன்னு பார்த்தா.. அவன் கூட சேர்ந்த அத்தனை பீஸ்சும் நமக்கு தொல்லையா தான் வந்து வாச்சி இருக்கு.. எல்லாம் அந்த குடிகார பய லோகநாதனால வந்தது. நான் சொன்ன மாதிரி பிளான் பண்ணி இருந்தா இந்நேரத்துக்கு அவன் எனக்கு மாப்பிள்ளை வந்து இருப்பானா?” என்று உள்ளம் புழுங்கி கொண்டிருந்தார்.
கமலாம்பிகை கணவனை கண்டு கொள்ளவே இல்லை. வந்த விருந்தினர்களை வரவேற்பது உபசரிப்பது.. குசலம் விசாரிப்பது.. என்று அவர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார். இரு வீட்டுருக்கும் சேர்த்து அவரே பெண் என்று ஆக சொந்த பந்தங்களை வைத்துக்கொண்டு அனைத்து வேலையும் தனதாக்கிக் கொண்டார்.
ஜோடியாய் தம்பியையும் மகளையும் பார்க்கும் போது அவருக்கு அத்தனை ஆனந்தம்..! மகன் ஆண்பிள்ளை. என்ன இருந்தாலும் அவன் தன்னை பார்த்துக் கொள்வான்.
ஆனால் மகள் என்று வரும்போது தாய்க்கு தான் அத்தனை கவலைகள்..! அவளது மணவாளன் சரியாக அமைய வேண்டுமே.. இல்வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமே.. எந்த பிரச்சினையும் இல்லாமல் என் மகள் இல்லறத்தில் நல்லறம் காண வேண்டுமே.. என்று அத்தனை கவலைகள் வேண்டுதல்கள் இருக்கும்..! அவையெல்லாம் இன்று தீர்ந்தது போல தம்பியுடன் மன மகிழ்வோடு வாழப்போகும் மகளை மனநிம்மதியோடு பார்த்திருந்தார்.
அதன் பின் இவரே வீட்டிற்கு அழைத்து பாலும் பழம் கொடுத்து நாத்தியாய் செய்ய வேண்டிய வேலைகளை விஜயராகவன் வீட்டு பெண்ணாக முன் நின்று செய்தார்.
கூடவே பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய நகைகளையும் சபையிலேயே வைத்துக் கொடுக்க ஆதிரனோ வாங்க மறுத்து விட்டான். விஜயராகவன் இதற்கு நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை என்று அமைதியாக இருக்க..
“இது என் பொண்ணுக்கு செய்ய வேண்டிய சீர் தம்பி.. நாளைக்கு ஒரு வார்த்தை யாரும் என் பொண்ண தப்பா பேசிட கூடாது தம்பி.. இது அவர் உழைப்பு மட்டும் கிடையாது என் உழைப்பும் சேர்ந்து தான் இருக்கு மறுக்காதடா..!” என்று கெஞ்சலாக கேட்கும் அக்காவை தட்ட முடியாமல் சரி என்று தங்கமயிலோடு வாங்கிக் கொண்டான்.
மற்ற சீர் எதுவும் வேண்டாம் என்று விட்டாலும் அதற்கான பணத்தை மகளின் பெயரில் தியாகேசன் ஏற்கனவே போட்டு வைத்திருக்க.. அந்த பாஸ்புக்கையும் மகளிடமே ஒப்படைத்தார் கமலாம்பிகை.
அதன் பின் இரவு சடங்கு இருக்க, என்னதான் நாத்தி முறையாக இருந்தாலும் அவர் அம்மா அல்லவா? மற்ற உறவு பெண்களை விட்டு பெண்ணை அலங்கரித்து ஆதிரன் அறைக்கு அனுப்பி வைக்க சொன்னார்.
இருவரும் பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்க சுமங்கலிகள் தங்க மயிலுக்கு நலுங்கு வைத்து நல்ல நேரத்தில் அனுப்பி வைத்தனர்.
இரு மனங்கள் திருமணம் என்று உறவில் இணைந்தாலும்.. அந்த உறவு நிரந்தரமாய் உணர்வுகளால் பின்னிப் பிணைவது தாம்பத்தியத்தில் தான்..!!
என்னதான் முதலில் அங்கே காமமும் மோகமும் ஆட்சி செய்தாலும்.. அதன் பின்பு அவர்களுக்கான காதலும் அவர்கள் கொண்ட நேசமும் அவர்களுக்கிடையேயான புரிதல் மட்டுமே அந்த இல்லற வாழ்க்கையை நல்லறமாக கொண்டு செல்ல வழி வகுக்கும்..!!
முதல் இரவு..!!
இதுவரை ஆண் என்று பெண் என்று இருந்த இருவரும் கணவன் மனைவி என்ற பந்தத்துக்குள் நுழையும் முதல் இரவு..!
ஆடைகளின்றி ஆலிங்கனம் செய்வது அல்ல.. ஆழ் மனத்தில் மனைவி என்ற பந்தத்தோடு ஒன்றாய் கலப்பதே தாம்பத்தியம்..!
‘அமுதூற்றினை ஒத்த இதழ்களும்…’ என பாரதி தொடங்கி எத்தனையோ கவிஞர்கள் பெண்களை வர்ணித்து பாடியுள்ளனர். பெண்ணின் இதழ்கள் மட்டுமல்ல அவளே அமுதம் தான்.
காதல் களிப்பில் கிறங்கி முயங்கி கிடந்தாலும் உனக்கு நான்.. எனக்கு நீ என்ற அர்ப்பணிப்போடு ஆரம்பிக்கும் தாம்பத்தியமே வாழ்நாள் வரை நீடிக்கும்.
காமம்.. மோகம் ஆண்-பெண் இருபாலருக்குமே ஹார்மோன்களின் சதிராட்டதால் ஏற்படும் பொதுவான வேட்கை. தம்பதியரிடையே வெறுப்பு வளர்வதற்கும், பிணக்கு முற்றுவதற்கும், பிரிவு எண்ணத்தை மேலோங்கச் செய்வதற்கும் தாம்பத்தியத்துக்கு முக்கிய இடம் உண்டு.
காமம் கொண்டு களித்தால் அங்கே அது வேட்கை மட்டுமே..!
காதல் கொண்டு களித்தால் அங்கே அது தாம்பத்தியம்..!!
மெல்லிய படப்படப்போடு தான் ஆதிரன் அறைக்குள் நுழைந்தாள் தங்கமயில்.
இது அவனின் பழைய அறை அல்ல..! அதற்கு அருகில் இவர்களுக்கு என்று புதிய அறையை சற்று விஸ்தாரமாக்கி கட்டி இருந்தார் விஜயராகவன். ஆதிரன் அப்பாவின் போக்கிற்கே விட்டு விட்டான்.
மகள் பேத்திக்கு சீர் செய்வாள் என்று எதிர்பார்க்காமல் அனைத்தும் அவரே புதிதாக வாங்கி வைத்திருந்தார்.
தொண்டை குழி ஏறிய இறங்க அவ்வறையின் மெல்லிய அலங்காரங்களை பார்த்தப் படி நுழைந்தாள் தங்கமயில். ஆதிரனை அங்கே காணவில்லை. மண்டபத்திலிருந்து வீட்டிற்கு வந்து சில சடங்குகளை முடித்தவன், மீண்டும் மகளைக் காண மருத்துவமனைக்கு சென்று விட்டான் என்று கேள்வியுற்றாள்.
வந்துவிட்டானா? வரவில்லையா? என்று தெரியவில்லை ஒருவித பதட்டத்தோடு தான் உள்ளே நுழைந்தாள் மயில்.
இவளை அலங்காரம் செய்யும் பொழுது வேம்புவும் அருகில் தான் இருந்தாள். முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தவள் தொடையிலேயே நறுக்கென்று கிள்ளி வைத்தாள் தங்கமயில்.
“ஏண்டி எருமை கிள்ளுற? நானே என் கிரெஷ நினைச்சு கவலையில இருக்கேன். உன்ன மாதிரி ஒரு ரவுடி கிட்ட மாட்டி அவர் என்ன பாடு பட போறாரோ?” என்று வருத்தப்பட்டவளின் தலையில் கொட்டி,
“உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா டி? இன்னைக்கு காலைல இருந்து அவர் செய்ற ஆக்ஷன் சீனெல்லாம் பாத்துட்டு தானே இருக்க.. எங்க அப்பாவையே கதி கலங்க வைச்சிட்டார். அந்த குடிக்கார பய லோகநாதன் மூச்சு முட்டு முட்டு பம்பு செட்டு தண்ணீரில் அமுக்கி எடுத்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காரு.. இதுக்கு மேலயுமா இந்த உலகம் அவர அமைதி நம்புது?” என்று இவள் மேவாயில் கை வைக்க..
“இந்த அளவு கூட அவர் இறங்கி அடிக்கலனா உங்க அப்பா மாதிரி அந்த லோகு மாதிரி ஆட்கள் எல்லாம் அடக்க முடியுமா சொல்லு? ஆனாலும் என் க்ரெஷ் பொண்ணுங்கன்னா பூப்போல மதிப்பவர் நீயோ புயலு.. அவர் என்ன கதியாகப் போறாரோ? ஏன் டி எதுக்கும் நாளைக்கு காலைல டாக்டரோட வீட்டுக்கு வரவா?” என்று கண்ணடிக்க..
“தேவை இல்ல குரங்கே..! வேணாம் வேம்பு என்கிட்ட நல்லா வாங்கி கட்டுவ.. ஒழுங்கா ஓடிடு” பேசிக்கொண்டு இருக்கும்போதே கமலாம்பிகை வந்தவர், “கல்யாணமாகாத பொண்ணு உனக்கு என்ன இங்க வேல.. போ போ..” என்று வேம்பை விரட்டிவிட்டார்.
“அட அய்த்த.. என் வயசு தேன் இவளுக்கும். இவளுக்கு கல்யாணம் கட்டி கொடுத்ததுனால இவ பெரிய மனுசி.. அதே வயசுல இருக்குற நான் கல்யாணம் கட்டாததனால சின்ன புள்ள ஆயிட்டேனா?” என்றவள்,
“இங்க பாரு அய்த்த உன் பொண்ணோட விவரம் எனக்கு தான் தெரியும். அதுதான் உன் பொண்ணுக்கு நாலு புத்தி மதிய சொல்லலாம்னு வந்தேன்.. நீ கொடுத்து வச்சு அவ்வளவுதான் உனக்கு பத்து மாசத்துல பேரப்பிள்ளை கிடைக்க வழி சொல்லலாம்னு வந்தேன்.. ம்ம்ம்.. நீ விரட்டி விட்ட இல்ல போ போ..” என்று போனவளே பார்த்து,
“அடி ஆத்தாடி ஆத்தா.. என்ன பேச்சு பேசிட்டு போறி பாத்தியா?” என்று இக்கால குமரிகளின் அதிரடி பேச்சில் வாய் பிளந்து நின்றார் 42 வயது கமலாம்பிகை.
கூடவே “ஹேப்பி ஃபர்ஸ்ட் நைட் டி மச்சி.. நான் சொன்னதெல்லாம் மறக்காத டி..!” என்று கத்திக்கொண்டே சென்ற வேம்புவை கண்டு தங்கமயிலுக்கு தான் வெட்கம் பிடுங்கி தின்றது.
மயிலை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டு கத்திக்கொண்டே அவள் செல்ல.. கமலாம்பிகையோ “பேச்ச பாரு பேச்ச.. எடு அந்த தொடப்பக்கட்டையை..” என்க..
“அய்த்த.. ரொம்ப பண்ணாத எங்க அறுந்த வாலு சங்கத்துக்கே உன் பொண்ணு தான் தலைவி.. நான் ஓடிட்டேன் அய்த்த..” என்று வேகமாக ஓடியவள் முட்டி விழுந்ததோ தவசியின் மீது..!
யாரும் சீண்டாமல் யாரையும் தீண்டாமல் முப்பது வயது வரை தவமாய் காத்து வைத்திருந்த தன் பிரம்மச்சரியத்திற்கு இழுக்கு வந்ததாய் நினைத்த தவசி..
“ஏய் எழுந்திரு..” என அதட்டி தன் மீது இருந்து அவளைப் பிடித்து தள்ளி விட்டவன் “முதல்ல போய் குளிக்கணும் சே..!” என்ற படி சென்றவனை, அவன் தள்ளிவிட்ட அதே கோலத்திலேயே படுத்தபடி கிடந்து முறைத்துக் கொண்டு இருந்தாள் வேம்பு.
சரி சரி இந்த ஜோடியை நாம் அப்புறமா மீட் பண்ணுவோம்.! இப்போதைக்கு புதுசா கல்யாணம் ஆன ஜோடி போய் பார்ப்போம் வாங்க.. வாங்க..!!
வேம்பு அவளிடம் ரகசியம் பேசியதெல்லாம் நினைத்து ஒரு பக்கம் சினிமாடிக்காக சிரிப்பு வந்தாலும் இப்பொழுது நிஜம் அவளை பயமுறுத்தியது நிதர்சனம்..!
“விடிய விடிய அப்படியே நின்னுட்டு இருக்கிறதா உத்தேசமா?” என்றவனின் குரல் அவளுக்கு பின்னிருந்து கேட்க திரும்பி பார்க்கும் பொழுது கதவை தாளிட்டு ஒரு கையில் வேஷ்டி பிடித்துக் கொண்டு முன்னே நடந்தவன், திரும்பி அவளை ஒற்றை பார்வை பார்த்து புருவம் உயர்த்த சட்டென தலையை குனிந்து கொண்டவள் அவன் பின்னே மெல்ல நடந்தாள்.
அவன் கட்டிலில் அமர்ந்து அவளைப் பார்க்க அப்பவும் நின்று கொண்டு தான் இருந்தாள். சிறு வயதிலிருந்து கால் அவளுக்கு தரையிலே தங்காது. இங்கே அங்கே ஓடி ஓடி கொண்டிருப்பாள். இதோ ஐந்து நிமிடம் ஒரு இடத்தில் சிலையாய் நிற்க அவனுக்கே சிரிப்பு வந்தது.
“வா.. உட்காரு.. எல்லாம் சொன்னாதான் நீ செய்வீயா? ஆமா அந்த வெள்ளி சொம்பு ரொம்ப அழகா இருக்கோ.. ரொம்ப நேரமா அதையே உத்து உத்து பாத்துட்டு இருக்கியே?” என்று நக்கல் அடித்தான்.
முதல் நாளே.. ச்சே முதலா இரவிலே முட்டிக் கொள்ள வேண்டாம் என்று ஏதோ நல்ல எண்ணத்தோடு பாலை அவனிடம் நீட்டினாள்.
“இப்போ எல்லாம் அந்த பால் ரெண்டு பேருக்கும் ஷேர் பண்ணி கொடுக்கிற வேலையும் நாங்க தான் செய்யணுமோ? பாரேன் இது எனக்கு யாரும் சொல்லவே இல்ல..” என்றாலும் அவளிடம் இருந்து வாங்கி சூடாக இருந்த பாலை சற்று ஆற்றி முதலில் அவளிடம் நீட்டினான்.
இதே தியாகேசன் பார்த்த மாப்பிளை என்றால் இந்நேரம் இம்மாதிரி பேச்சுக்கு ஏதாவது திருப்பி சூடாக தந்து இருப்பாள் இல்லை முகத்தை திருப்பி இருப்பாள்.
தன் மாமன் தானே என்றதால் அது கொஞ்சம் குறைவாக இருந்தது. அதாங்க.. அந்த கோபம்..!
“ஏன் நீங்க செய்தால் என்ன? ஆண் பெண் சமம் என்று பேச செய்றீங்க தானே..” என்றவள் இப்பொழுது தைரியத்தோடு அவன் அருகில் அமர்ந்து பாலை வாங்கி குடிக்க..
“தைரியம்தேன் என் அக்கா மகளுக்கு” என்றவன் அவள் அருந்திய அதே டம்ளரில் மீதி பாலை ஊற்றி அவள் இதழ் வைத்து குடித்து அதே இடத்தில் இவனும் எதார்த்தம் போல இதழ் வைத்துக் குடிக்க.. மெல்ல மெல்ல தைரியம் அவளிடம் இருந்து விடை பெற்று செல்ல துவங்க.. மீண்டும் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
இதழ்கள் என்னவோ பாலை பருக இரு கண்களும் அவளைத்தான் உச்சி முதல் கால் பாதம் வரை அவளை பருகிக் கொண்டிருந்தது. நிதானமாகவே பாலை அருந்தியவன் அதை அருகில் இருந்த டீபாயில் வைத்து விட்டு அருகில் இருந்த தலையணை எடுத்து தன் மடியில் வைத்து தாடையை ஒரு கையால் தாங்கி “அப்புறம் தங்கம்?” என்றதும்.. என்ன பேச என்று அவளுக்கும் தெரியாமல் மாமனை பார்த்து அசட்டு சிரிப்பை ஒன்றை உதிர்த்தாள்.
“உன் மனசுல வேற யாராவது இருக்காங்களா தங்கம்?” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் தங்கமயில்.
ஒரு நொடிக்கு குறைவாக அவள் கண்களில் மின்னி மறைந்த வலி பயத்தை கண்டு கொண்டான் ஆதிரன்.
“இல்ல தங்கம்.. பொதுவா யாரும் பொண்ணு பார்க்க வரும்போது அவங்கள பாத்து உனக்கு புடிச்சிருந்து இருக்கலாம். ஆனா.. உங்க அப்பா தான் சரியான கோளாறு புடிச்சவராச்சே அவரால அதை தட்டி போய் இருக்கலாம். அப்படி ஏதாவது மனசுல இருக்கான்னு கேட்டேன்? ஏன்னா நீ காதல் கீதல் பண்ணிருந்தா எனக்கு செய்தி வந்திருக்கும். நானும் இதே ஊர்ல தான் இருக்கேன்” என்றதும் தலையை குனிந்து கொண்டவள்,
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மாமா.. எனக்கு எங்க அப்பா பார்த்த ஒரு மாப்பிள்ளையும் பிடிக்காது. நானா ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணி ஓட்டலாம் என்று யோசிப்பேன்.. ஆனா அதுக்கு முன்னாடி அதுவே புட்டுக்கும்..” என்றாள் மென் சிரிப்போடு குரலில்.
“எப்படி.. இப்ப சாமி வந்த மாதிரி நடிச்சு ஓட்டிவிட்டியே அப்படியா?” என்றதும் நாக்கை கடித்துக் கொண்டாள் அவள்.
“அப்ப சரி.. ரொம்ப நல்லது..! அப்போ ஆரம்பிக்கலாமா?” என்றவன் அவளைப் பார்த்துக் கொண்டு தன் சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்ட உள்ளுக்குள் வெடவெடுத்து போனது மயிலுக்கு.
சட்டையை கழட்டி அருகில் இருந்த ஹாங்கரில் மாட்டியவன் அணிந்திருந்த வெள்ளை பனியனோடு அவளை நெருங்க.. அவனின் பரந்து விரிந்த திண்ணிய மார்பும்.. உருண்டு திரண்ட புஜங்களும்.. கட்டுக்கோப்பாக வைத்திருந்து உடலமைப்பும்.. பெண்ணவளுக்கு தொண்டையை வரள செய்தது பயத்தால்..
“நான் கூட இந்த சினிமால எல்லாம் வர மாதிரி மனச புரிஞ்சுக்கணும் அதுக்கு அப்புறம் தானு டயலாக் எல்லாம் அடிச்சிருவியோ இல்ல நான் வேறவொருத்தன மனசுல நினைச்சி இருக்கேன்.. அது போறதுக்கு மறக்குறதுக்கு எனக்கு டைம் வேணும்ன்னு கேட்டு என் பீலிங்க்ஸ்ல மண் அள்ளி போட்டுடுவியோனு நெனச்சு பயந்தேன். நல்ல வேலை தங்கம் அப்படி எதுவும் நடக்கல..” என்று இப்படி அந்தரங்கமாக பேசும் மாமனை அதிர்ந்து பார்த்தாள் தங்கம்.
“என்ன மாமா இப்படி எல்லாம் பேசுற..?” என்று அவள் எச்சில் விழுங்க..
“வேற எப்படி பேசுவாங்க ஃபர்ஸ்ட் நைட்ல? அதுவும் வைஃப் கிட்ட? ஏன் டி முப்பது வருஷம் பிரம்மச்சரியம் முடியும் வேளை இது.. இந்த வேலையில் தாம்பத்திய பத்தி பேசாம.. தார் பாலைவனத்த பத்தியா பேச முடியும்?” என்றவன், மெல்ல அவள் கைகளை பிடித்து தன்னுள் பொத்தி வைக்க.. மெல்ல நடுங்கியது அவனின் வெம்மையில்..!
“இந்த ஜிமிக்கி உனக்கு அழகா இருக்கு தங்கம்..” என்றவன் குனிந்து மெல்ல அவளது காது மடலை வருடி, அதில் தன் முத்தத்தை அழுத்தமாக பதித்தான்.
“ம்மா.. ம்மா… மா.. மா..” என்றவள் வார்த்தைகள் எல்லாம் தொண்டைகுழியை விட்டு வெளியே வரவில்லை.
பொதுவாக பெண்களுக்கு உணர்ச்சியை தூண்டக் கூடிய பகுதி இது தான்.. இந்த பகுதியில் தொட்டு தடவி அவன் முத்தம் கொடுக்க உணர்ச்சி பெருக்கெடுக்கெடுத்தது அவளுக்கு.
பெண்ணவளின் காதில் தொடர்ச்சியாக அவன் மென் முத்தங்களாக கொடுக்க..
அந்த முத்தங்களும்..
முத்த சத்தங்களும்..
கற்றை மீசையின் குத்தல்களும்..
இரண்டு வார தாடியின் சொரசொரப்பும்..
அவள் தேகதத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்த.. அடுத்த வார்த்தைகள் எங்கே பேச??
ஆணவனோ இச்.. இச்.. இச்… னு தொடர்ச்சியா முத்தம் கொடுக்க, மயில் முழுவதுமாக கிறங்கி விட்டாள். முத்தம் கொடுத்தவன், அவளை மொத்தமாக எடுக்க காது மடலை கவ்வி கடித்து கொண்டிருந்தான்..
“போதும்ம்ம்… ம்ம்ம்ம்…” ரெண்டு கண்களையும் மூடிக் கொண்டு முனகிக் கொண்டிருந்தாள்..
“ம்மாமா.. மாமா… ப்ப்ளீளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ம்ம்ம்….”
“போதுதும்ம்ம்ம்ம்ம்ம்… ப்ப்ப்ளீளீளீஸ்ஸ்ஸ்ஸ்….” என்று அவளின் மறுப்பு சிணுங்கல்கள் எல்லாம் அவனுக்கு இன்னும் வேண்டும் என்ற செல்ல சிணுங்கல்களாக கேட்டு அவன் நிறுத்தவே இல்லை தனது முத்த யுத்தத்தை..!!
தள்ளி விட்டு எழ முயன்றவளை இழுத்தவன் மலைப்பாம்பு போல அவளை இறுக்கி தன்னுள் உள்ளிழுத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான்.
பின் அவள் தாடையைப் பற்றி கண்களை கூர்ந்து பார்க்க.. அவன் பார்வையில் தெரிந்த புதுப்புது அர்த்தங்களில் மயிலின் வயிற்றுக்குள் கிலி பிடித்தது.
“மாமா.. பார்க்கும் பார்வையே சரியில்லையே..” என்று உதறல் எடுத்தது. அவளின் மன நிலையை சரியாக கண்டு கொண்டவுடன் கண்களில் மின்னல் வெட்ட..
இதுவரை.. தாபம் கனன்று கண்களில் இப்பொழுது சுவாரசியம் மின்னியது. அவளை அங்குலம் அங்குலமாக ரசித்து தனக்குள்ளேயே புதைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது அவனுக்கு.
அவன் மனதில் எழுந்த அவள் மீதான எண்ணங்கள் கரையை கடக்கும் காட்டாற்று வெள்ளம் போல அவளை ஆக்கிரமிக்க.. அதிலிருந்து தப்ப இயலாது எதுவும் எதிர்வினை ஆற்ற முடியாமல் அவனை விழி விரிய பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மயில். அவனின் கைகள் அவள் இடை பற்றி தன்னை அவனை நோக்கி இழுத்ததையும், இறுக்கமாக அணைத்ததையும் தடுக்க முடியாமல் வாளாக இருந்தவள். இடையில் நர்த்தனமாடும் அவனது கைகளை தடுக்க முயற்சிக்க.. அவளின் அனைத்து செயல்களையும் தனது ஆளுமையால் தடுத்தவன், ஆசை மோகம் தாபம் என அனைத்தையும் ஒருங்கே அவளிடம் காட்டிக் கொண்டிருந்தான்.
கண்களோடு கண்கள் காதல் பரிபாஷை பேச..
இதழ்களை சூறையாடும் நோக்கத்தோடு இதழ்கள் நெருங்க..
விரல்களோ ஆலியிழை வயிற்றின் மென்மையை ஆராய்ச்சி செய்ய..
உடலோ அவளது உடலோடு பசை போல ஒட்டி உறவாட..
அவனை தடுக்க முடியாமல் செய்வதறியாமல் கண்கள் பல பாவனைகளை பாவையவள் காட்ட.. அனைத்தையும் தன் கண்களால் கைது செய்து கொண்டிருந்தான் கோமகன்.
அதேநேரம் அவள் தேன் சிந்தும் இதழ்களை நெருங்கிய அவன் இதழ்களோ மென்மையாக தீண்ட.. அவள் அதிர்ந்து அவனிடமிருந்து விலக போராட.. அதுவரை தீண்டி தீண்டாமல் இருந்த இதழ்கள் நான்கும் அவளின் விலகலில் இறுக்கமாக இணைந்தன..!!
“மாமா…” என்றவளின் வார்த்தைகள் எல்லாம் அவன் இதழ்களால் மென்று தின்றுக் கொண்டிருந்தான். சற்றே அவன் விலகிய நேரத்தில்..
“மாமா… ப்ளீஸ்.. ஒரு மாதிரி கூச்சமா இருக்கு.. இப்போ வேணாமே..” என்று மயில் தடுமாறினாள், அவனின் கைகள் அவள் மேனியில் உறவாட…
“தங்கம்.. எனக்கும் இது தான் டி ஃபர்ஸ்ட் நைட்.. உன்னை போல் தான் கூச்சம்.. வெட்கம் எல்லாம் எனக்கும் இருக்கு. நீ மட்டும் இல்ல.. நானும் உன் கிட்ட என்னை முழுசா ஒப்படைக்க போறேன்” என்றவன்,
அவள் முடியில் தன் விரல்களை நுழைத்து தன்னை நோக்கி இழுத்து, “பூ வெக்கபட்டா இந்த வண்டுதான் விட்டுவிடுமா என்ன?”
என்று கேட்டான் சரசமான குரலில்..
“விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை. என்னை தட்டிவிடும் எண்ணத்தில் நீயும் இல்லை.. தங்கம்..
தேன் குடிக்க வரும் இந்த வண்டினை தட்டிவிடும் எண்ணத்தில் நீயும் இல்லையடி” என்று சொல்லி அவளது இதழில் தேன் அருந்த தொடங்கினான்.
அவள் தலையை மெதுவாக பிடித்துக்கொண்டு இதழ் தேன் பருகினான். அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை பூக்களோ வாசம் வீசிக்கொண்டே கீழே சரிந்துகொண்டிருந்தன.
இருவரின் இதழ்களும் காதல் போரிட்டுகொண்டிருந்தன.
இணைந்த அவன் இதழ்கள் ரெண்டும் அவளின் இதழ்களோடு கலந்து உறவாட.. இதை சற்றும் எதிர்பார்க்காதவள் அதிர்ந்து அனைத்தும் மறந்தாள்.. அவனை எதிர்க்க வழியின்றி அவள் அமைதியாக இருக்க.. அவளின் இடையை மென்மையாக மெதுவாக அவன் விரல்கள் இடையோடு சேர்த்து வருட.. அதில் கூச்சத்தில் அவள் அவனை உதறித்தள்ள.. சட்டென்று அவளது பின்னந்தலையின் முடியை இறுகப் பற்றி தன் இதழ்களை அழுத்தமாக அவள் இதழ்களோடு பொருத்திக் கொள்ள முனைந்தான். முனைப்பில் வெற்றி பெற.. இதழ்கள் இன்னும் இணைப்பில் லயப்பில் அழுத்தமாய்!! ரசனையாய்!!
அப்படியேநெடுநேரம்நடந்தபோரில்வெற்றிதோல்விஇன்றிசமாதானம்ஆகாமல்இதழ்கள்பிரிய… ஆனால்தேகங்களோஇப்போதுஅப்போரைதமதாக்கிகொண்டன..
இருவரின்கண்களும்மோகபோதையில்மிதிக்க..
அங்கேகாமம்ஆட்கொண்டதுஅவர்களைகாதலாய்..!
முதல்முறைஅறியும்கலை.. ஆர்வத்தைஅடக்கமுடியாதவனாய்அவளின்சின்னஇடையைஆசையோடுதழுவி.. அவள்சிணுங்கச்சிணுங்கஅதில்முத்தமிட்டு.. அவள்பிஞ்சுவிரல்களைதன்வாயிலிட்டுமெல்லகடிக்க.. சிறுபெண்அவளால்அந்தபடபடப்பைபுதுவிதஉணர்வினைசமாளிக்கமுடியாமல் .. துவண்டுபோய்..
”விடு .. விடு.. மாமா ” எனஈனஸ்வரத்தில்முணகியவாறுகுறுகித்தரையில்அமர்ந்தாள்..!
அவனும்விடாமல் … அவளோடுமடங்கிச்சரிந்து .. அவள்அங்கங்களைமாறிமாறிச்சுவைக்க.. அப்படியேவெற்றுத்தரையில்மல்லாந்தாள்மலரவள்.
அவள்மீதுபடர்ந்தவன், அவளதுகழுத்தில்முகம்புதைத்துஅவள்வாசம்உட்கொண்டு, ஆலிலைவயிற்றில்முகம்புரட்டி. .. சின்ன நாபிகுழியில் நுனிநாக்கால் கோலமிட்டான் .
அவளதுஅடிவயிரெல்லாம்புதுவிதஉணர்வில்பட்டாம்பூச்சிகள்பறக்க.. உணர்வின் பிடியில் மாமனின் பிடியில் சொக்கிக்கிடந்த சுந்தரியை இன்னும் இன்னும் தன்திறமைகளை கொண்டு அவளை ஆட்கொண்டான்..
தொடரும்
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌