சண்டியரே 19
அதற்குப் பின் ஆரூரன் என்ன ஆனான்? அவன் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்று பொன்வயலில் இருந்த யாருக்கும் தெரியவில்லை..!! ஆரூரன் தெரியப்படுத்தவும் விரும்பவில்லை..!!
அதே வருடம் அதற்கு பின் நடந்த திருவாரூர் தேர் திருவிழாவின் போது, இவங்க ஊரில் இருந்து சென்ற இளைஞர் வட்டத்தில் ஒருவன் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதாக காவல் துறையினரால் பிடிப்பட்டான்.
அவனை அடித்து உதைத்து விசாரித்ததில் அதற்குபின் தான் தெரிந்தது திருவிழா நடக்கும் ஊர்களில் எல்லாம் தனித்திருக்கும் பெண்களிடமும்.. கூட்டத்தில் எதிர்படும் பெண்களிடமும்.. தனிமையில் சிக்கும் பெண்களிடமும் இவ்வாறு அவன் தன் கைவரிசை காட்டி இருந்தது.
முதலில் அவனை தவறுதலாக காவல்துறை பிடித்து விட்டனர் என்று நண்பர்கள் சொல்லக் கேட்ட, பொன்வயலை சேர்ந்த பெரியவர்களும் அவனின் பெற்றோர்களும் அவனை ஜாமீனில் எடுக்க வர.. காவல்துறை அவனிடம் விசாரித்ததை சொல்ல பெற்றவர்களுக்கும் திகைப்பு. ஊர் பெரியவர்களுக்கும் திகைப்போ திகைப்பு..!!
“அப்போ நம்மூர்ல இதே மாதிரி ஒரு பிரச்சனை நடந்துச்சே..??” என்று ஊர் பெரியவர்கள் தங்களுக்குள் பேசி அதையும் காவல்துறை விட்டு விசாரிக்க சொல்ல.. அப்படி செய்ததும் தான் என்று ஒத்துக் கொண்டான் அவன், காவல்துறையின் தீவிர விசாரிப்பில்…
இதைக் கேட்டு அந்த ஊர் பெருசுகளுக்கு பெரும் அதிர்ச்சி..!
“அட இந்த நாரப் பய செஞ்சது தெரியாம ஒன்னும் தெரியாது அந்த ஆரூரன் பிள்ளையை போய் தப்பா பேசிட்டோம்யா..” என்று தங்களுக்குள் வருந்தினர்.
இளைஞர்கள் கூட்டமும் தங்களுக்குள்ளேயே ஒருவன் இப்படி இருந்து பேரை கெடுப்பான் என்று நினைக்கவில்லை..!
அவர்களுமே அன்று ஆரூரனை பேசியதை நினைத்து வருந்த..
இந்த விஷயம் காட்டுத் தீ விட வேகமாக ஊரில் பரவியது. ஆனால் என்ன செய்ய இவர்களின் இந்த ஒழுங்காக விசாரிக்காத தன்மையினால் ஆரூரன் என்று இளலஞன் என்ன ஆனான் என்று தெரியவில்லை..!
அவன் மீது கவலைப்பட்டே அவனின் தாயின் உயிர் பிரிந்து இருக்க.. அனைத்துக்கும் காரணமான தியாகேசனும் வாய்மூடி அமைதியாக இருந்து கொண்டார்.
கண்ணால் காண்பதும் பொய்..! காதால் கேட்பதும் பொய்..! தீர விசாரிப்பதே மெய் என்று பெரியோர் வாக்கு அங்கே பொய்த்து போனது..!
தந்தையை பார்த்து இதனை கோபமாக சொன்ன ஆதிரன் “சந்தோஷம் இல்லப்பா.. அவனும் போயாச்சு..! அவனை நினைத்து அம்மாவும் போயாச்சு..! இந்த பெரிய வீட்ல நீங்களும் நானும் மட்டும்தான். அடுத்தது என்னையும் ஒருத்தன் குறை சொன்னாலும் இப்படித்தான் செஞ்சுருவீங்க.. இல்ல?? தீர விசாரிக்காமல்..!” என்று அத்தனை கேள்விகள் தந்தையை பார்த்து..
அவரும் சென்ற மனைவியை நினைத்து அழுவதா இல்லை விட்டு சென்ற மகனை நினைத்து அழுவதா என்று தெரியாமல் தவித்து போனார்..
“நான் தம்பிய தேட சொல்றேன் பா..”
என்றார் விஜயராகவன் குரல் கலங்க..
“வேண்டாம் விடுங்க..! அவன் எங்கேயாவது போய் நிம்மதியா இருந்துக்கட்டும். அவனை தேடி கண்டுபிடிக்கிறேன்னு சொல்லி திரும்ப அழைத்து வந்து அடுத்தது வேற எவனாவது எதாழனவது சொன்னா அதையும் நீங்க நம்புவீங்க? அதை நிரூபிக்கறதுக்கு அவனுக்கு இன்னொரு ஆள் வேணும்.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..!” என்று அடித்து சொல்லிவிட்டு அவன் தன் வேலையை பார்க்க..
ஆனால் விஜயராகவனுக்கும் மனது துடித்தது. மகளை தனியாக அழைத்து தன் மனதை பகிர்ந்து கொள்ள “கலவப்படாதிங்க பா.. தம்பி வந்துருவான்.. கண்டிப்பா கிடைச்சிடுவான்” என்று அவர்களும் தங்களுக்கு தெரிந்த வகையில் அவனை தேடினர். கூடவே கோவிலுக்கு அத்தனை நேர்த்திக்கடன் அன்னதானம் என்று வரிசையாக செய்தார் விஜயராகவன்.
பருவ வயதில் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லாமல் இயலாமல் வேலை பார்க்கும் பிள்ளைகளைக் கண்டால் உடனே அவர்களுக்கு உதவி படிக்க அனுப்பி வைத்து விடுவார் விஜயராகவன். இங்கே தான் செய்யும் உதவி எங்கோ உலகின் ஒரு மூலையில் இருக்கும் தன் மகனுக்கு யார் மூலமாகவது சென்றடையும் என்ற ஒரு நம்பிக்கை..!
அன்று தன் மகனை நம்பாமல் தான் விட்ட வார்த்தைகளும் காட்டிய கோபமும் அவரை ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் அறுத்துக் கொண்டுதான் இருந்தது. அதை தாண்டியும் வாழப்பழகி கொண்டார் விஜயராகவன்.
ஆனால் ராகவியோடு ஆரூரன் திரும்ப வந்த அன்றே முதலில் சந்தேகம் உதித்தாலும் மறுநாளே கண்டுபிடித்துவிட்டார் வந்தது ஆதிரன் அல்ல ஆரூரன் தான் என்று..!!
பெற்றவருக்கு தெரியாத சூல் உண்டா? ஆனால் அதனை அவர் காட்டிக் கொள்ளவில்லை. சின்ன மகன் விஷயத்தில் முதலில் தவறு செய்து விட்டதால் பொறுமையாக இம்முறை காத்திருந்தார் அவனே அனைத்தும் சொல்லட்டும் என்று..!!
அன்று கல்யாண விருந்தில் தியாகேகன் போட்டு உடைத்து விட.. அப்போது ஏற்பட்ட சலசலப்பில் தான் தன் மகன் யார் என்று தனக்கு தெரியும் என்று மகனுக்கு ஆதரவாக அவர் பேச.. ஆரூரன் கண்களில் தந்தையின் புரிதலை கண்டு மின்னல்..!! தன் தந்தையாய் இது என்று ஆனந்தம். அதன் பிறகு தனிமையில் அவன் அவரிடம் அனைத்தையும் சொல்லிவிட மகனை ஆதூரமாக அணைத்துக் கொண்டார்.
அதன் பின் இந்த வேலைகள் எல்லாம் தனக்கு ஈடுபாடு இல்லை என்றவன், காலையில் அருகில் இருக்கும் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு ப்ரொபஷராக சேர்ந்தான். மதியம் வரை அவனது வேலை அங்கே அதன் பின் தனது பணியை பிரபல மருத்துவமனையில் மாலை வரை தொடர்வான்.
அவசர நோயாளிகள் என்றால் மட்டுமே இரவு வரை பார்ப்பவன், அதன் பின் வீடு திரும்பிவான். அதன்பின் மகள் அப்பா அக்காவோடு அவனது நேரம் கழியும். மயிர் எனக்கு படைப்பில் உதவிடுவான். இவன் வரவில்லை என்றாலும் அரிசி ஆலை சக்கரை ஆலை என்று அனைத்து இடத்திலும் நம்பிக்கையான ஆட்கள் இருந்ததால் அவற்றில் கணக்குகளையும் அவ்வப்போது பார்த்துக்கொள்வான். வழக்கம் போல விஜயராகவன் வயல்வெளிகளை பார்த்துக் கொண்டார்.
முதன் முதலில் மகளை விட்டுச் செல்வதால் மனமே இல்லாமல் அவன் இருக்க..
“அதெல்லாம் உங்க அக்கா நல்லா பார்த்துப்பா யா.. நீ கெளம்ப போ.. நாங்கல்லாம் இருக்கோம் தானே பாத்துக்கலாம்” என்றதும் அவன் சென்று விட,
சிறிது நேரத்திலேயே வேம்பு வந்து “தாத்தா நான் பாப்பாவா பார்த்துகிட்டா?” என்று கேட்டாள்.
“ஏன் வேம்பு பொண்ணு இப்பவே நீ ட்ரைனிங் எடுக்குறியா? இல்ல உன் கூட்டுக்காரிக்காக உதவி செய்றியா?” என்று நகைப்பார்.
தன்னை தாத்தா கண்டுகொண்டார் என்று புரிந்து அசட்டு சிரிப்பை சிரித்தவள் “எல்லாம் உங்க பேத்தி பண்ற பாடு தான் தாத்தா.. என்னை அங்கு இருக்கவே விட மாட்டேங்குற தாத்தா.. புள்ளைய தூக்கிட்டு வானு பாடா படுத்துறா!” என்ற அவள் ராகவியை தூக்கிக்கொண்டு தங்கள் வீட்டுக்கு சென்று விடுவாள்.
வேம்புவின் வீட்டிற்கு வரும் மயிலும் என்னதான் கொண்டவன் மீது கொண்ட கோபத்தை அவன் குழந்தையிடம் காட்ட முடியாமல் தன் அன்பாலும் அரவணைப்பாலும் அவளை குளிப்பாட்டுவாள். அவளுக்கு பார்த்து பார்த்து செய்வாள். மதியம் தூங்கியதும் வேம்புவின் மூலமாகவே வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவாள். கமலாம்பிகை பார்த்தாலும் அதை கண்டு கொள்வதில் மதியத்திற்கு மேல் அவர் பார்த்துக் கொள்வார் இப்படியாக அன்னை அம்மாச்சியின் கரங்களிலும் அதற்குப்பின் இரவு தந்தையின் கரங்களிலும் தவழ்ந்து வளர்ந்தாள் ராகவி.
இப்படியாக தான் கடந்த பதினைந்து நாட்கள் சென்றது..!!
“அம்மா எனக்கு ஒரு டவுட்..” ஒரு நாள் ராகவிக்கு கமலாம்பிகை உணவு ஊட்டி கொண்டிருக்கும் போது கேட்டான் மயூரன்.
“என்னடா உனக்கு சந்தேகம்?” என்று கேட்க..
“அம்மா ராகவி பாப்பா மாமாவோட பாப்பா தானே?”
“ஆமா..!”
“அப்போ நீ பாப்பாவுக்கு என்ன முறை வேணும்?”
“ஏன் டா உனக்கு தெரியாதா? என் தம்பி பொண்ணு என்னை அத்தைனு கூப்பிடுவா டா.+” என்றார்.
“அது முன்ன மா.. இப்போ மாமா அக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. அப்போ அக்கா தானே இந்த பாப்பாவுக்கு அம்மா முறை? அப்போ நீ இந்த பாப்பாவுக்கு என்ன முறை வேணும்?” என்று கேட்டவனை விழி விரித்து பார்த்தவர்,
“அப்படி பார்த்தா அம்மாச்சி தான்..!” என்றார்.
“ஏம்மா உறவுக்குள்ள இவ்வளவு கன்ப்யூஸ் பண்றீங்க? நாளைக்கு ராகவி பாப்பா வளர்ந்தால் உன்னை அத்தைன்னு கூப்பிடுமா? இல்ல அம்மாச்சினு கூப்பிடுமா?” என்றதும் அவர் முறைக்க..
“ஆனா என்னைய எப்படி கூப்பிடணும்?” என்றதும் அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டியவர் “முதலில் பாடத்தை பாடிட அப்புறம் வாழ்க்கை படிக்கலாம்..!” என்று அனுப்ப..
“பள்ளி பாடத்தை எந்த வயதிலும் படிக்கலாம் மா.. ஆனா வாழ்க்கை பாடத்தை அப்பவே படிச்சிடனும்” என்று சென்ற மகனை வாய் பிளந்து பார்த்தார் கமலாம்பிகை.
அன்று தவசி வீட்டிற்கு வந்திருந்தான். திருவாரூருக்கு ஆரூரனை பார்க்க சென்றவனை வீட்டில் போய் குழந்தையை தூக்கி வர சொல்லி இருந்தான் தடுப்பூசி போடுவதற்காக ஆரூரன்.
“ அத்தாச்சி.. எப்படி இருக்க?” என்றபடி வந்தவனை “வாடா.. வா.. என்ன இந்த பக்கம் ஒன்னு ஆளையே காணும்?” என்று வரவேற்று கமலாம்பிகை அவனுக்கு குடிக்க கொடுக்க, “எங்க குட்டி பாப்பாவ காணோம்?” என்று கேட்டான்.
“அதை ஏன் கேக்குற தவசி.. என் பொண்ணுக்கு இப்பதான் அவ பொண்ணு மேல பாசம் முளைச்சிருக்கு.. அதுவும் நேரா வந்து தூக்கிக்காம அந்த வேம்பு பொண்ண விட்டு தூக்கிட்டு வர சொல்லி எங்க வீட்ல வச்சுக்காம வேம்பு வீட்ல வெச்சி கொஞ்சிக்கிட்டு இருக்கா.. மதியத்துக்கு மேல் தான் சாப்பாடு கொடுத்து தூங்க வச்சு அனுப்பவா” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
என்னதான் கணவன் மோசமாக இருந்தாலும் மகள் தன்னைப் போலவே தான் பாசக்காரி என்று அதில் ஒரு பெருமை அவருக்கு.
“ஓ சரி சரி நான் போய் பாப்பாவை தூக்கிட்டு வரேன்” என்றதும் சரி என்றார்.
“வீடு தெரியும் இல்ல?” என்று கேட்டதும் “உன் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி தானே தெரியும் அத்தாச்சி. ஔ என்றபடி சென்றான் தவசி.
குழந்தையை குளிப்பாட்டி அப்பொழுதுதான் தூங்க வைத்துக் கொண்டிருக்க அதற்குள் தியாகேசன் மகளை அழைக்க.. “வேம்பு பாப்பாவ பாத்துக்கோ டி.. எங்க அப்பாரு கூப்பிடுறாரு நான் வந்துறேன்” என்று தன் வீட்டிற்கு ஓடினாள் மயில்.
“மயில் பேர் வெச்சது ஓடுறா?” என்று கிண்டல் செய்தாள் வேம்பு.
அந்நேரம் பார்த்து அங்கே வந்தான் தவசி. வீட்டுக்கு வெளியே நின்று “மயிலு.. மயிலு..” என்று குரல் கொடுக்க..
“யாருடா நம்ம வீட்டுக்கு வந்து மயில கூப்பிடுறது?” என்று யோசனையோடு வெளியே வந்தாள் வேம்பு.
தவசியை கண்டதுமே கண்டுகொண்டாள். “அட நம்ம பிரம்மச்சரிய விரத கேசு.. ஆஞ்சநேய பக்தனா? இவரு ஏன் நம்ம வீட்டு வாசல் முன்னாடி வந்து நிக்குறாரு?” என்று கதவில் ஒயிலாக சாய்ந்தப்படி பின்னலை முன்னுக்குப் போட்டு அதை திருகிக்கொண்டே அவனை பார்த்து என்ன என்று கேட்டாள்.
தவசிக்கோ அவள் யார் என்று தெரியவில்லை. மயிலின் சிநேகிதி என்று மட்டும் புரிந்து கொண்டவன் “மயில் இல்ல?” என்று கேட்டான்.
“மயிலு இப்பதான் பறந்து போச்சு?” என்று நக்கலாக பதில் உரைத்தாள்.
“என்னது பறந்து போச்சா?” என்று ஒரு நொடி திகைத்தவன் அவள் வம்பு இழக்கிறாள் என்று புரிந்து “நான் அந்த மயில கேட்கல.. எங்க அத்தாச்சி பொண்ணு மயிலு எங்கன்னு கேட்டேன்?” என்று பற்களை கடித்துக் கொண்டு கேட்க..
“ஓ.. அந்த மயில கேக்குறீங்களா? அந்த மயிலு முருகன் கிட்ட இருக்கு அதை கூட்டி போக அவர் பர்மிஷன் தரணுமே?” என்றாள் மேவாயில் கை வைத்து..
“முருகன் யாரு? அவன் ஏன் பர்மிஷன் கொடுக்கணும்? மயில் புருஷன் ஆரூரன் தானே?” என்று இவன் கேட்க..
பீறிட்டு கிளம்பிய சிரிப்பை அடக்கிக் கொண்டவள் “நல்லா இருக்கு போங்க மயிலுக்கு தலைவனே முருகன் தான்..! அவன்தான் அந்த மயிலு தாங்கு தாங்குன்னு தாங்கும் வேறு யாரையும் மயிலு அது ஏத்தாதுல தெரியாதா உங்களுக்கு? ஏன் முருகனோட பொண்டாட்டிகள கூட மயில் ஏத்தாது?* என்று அவள் கதை படிக்க.. தலை சுற்றி போனது தவசிக்கு.
மறுபடியும் இவள் எந்த மயிலை குறிப்பிடுகிறாள் என்று கேட்க “புரியலையா?” என்றவள் தன் வீட்டுக்கு காலண்டரில் மயிலோடு தன் மனைவிகள் சகிதம் நின்றிருந்த முருகனைக் காட்டி “இந்த மயில்தான்..!” என்றதும் அவனுக்கு கடுப்பு வர பல்லை கடித்தவன் இது “ரெண்டத்தையும் நான் சொல்லல நான் கேட்டது தங்கமயில்!” என்றான்.
“தங்கமமிலா.. ஓ சாரி பாஸ் தங்கமயில் ஓட கிளை நம்மூர் பக்கத்துல இன்னும் திறக்கலையே பெரிய பெரிய சிட்டிலதான் தொறந்து இருக்காங்களாம். தஞ்சாவூர்ல இருக்குன்னு கேள்விப்பட்டேன். திருவாரூரில் கூட இல்லையாம்?” என்று அவள் அதிசயப்பட்டு பேச.. அருகில் இருந்த தூணிலையே முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது தவசிக்கு.
“ஏய் அவ்வளவு தான் உனக்கு மரியாதை? ஒழுங்கு மரியாதையா தங்கமயில் வீட்டிலிருந்து தூக்கிட்டு வந்த ராகவி பாப்பா எங்கன்னு சொல்லு இல்ல?” என்று அவன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அவளிடம் எகிற..
“என்ன ரொம்ப எகிறீரு.. அதுவும் வேட்டிய தூக்கி கிட்டு வந்து தனியா இருக்கிற பொம்பள கிட்ட இப்படி எல்லாம் பேசினீங்க.. ஊர கூட்டி பஞ்சாயத்து வச்சு புடுவேன் ஆமா.. என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணுனாருனு.. அப்புறம் நீங்க தான் என்னைய கட்டிக்கோணும்” என்று எங்கோ பார்த்துக் கொண்டு அவள் கூற..
ஏதோ அருவருப்பான வார்த்தை கேட்டவன் போல காதை பொத்துக் கொண்டு “ஆஞ்சநேயா.. ஆஞ்சநேயா..” என்று கூறியவனை கண்டு அவளுக்கு இன்னும் சுவாரசியம் பொங்கியது.
“பாரா கல்யாணம் சொன்னா காதை பொத்திக்குவாராம். ஆனா தனியார் கிட்ட பொண்ணு கிட்ட வம்பு பண்ணுவாராம்.. இதெல்லாம் எந்த ஊரு நியாயம்? ஒருவேளை நீங்க கைலாசவிலிருந்து வரிங்களோ?” என்றதும் அவள் தன்னுடைய கேரக்டரை பங்கம் படுத்துவது போல பேசுவதைக் கண்டதும் சுற்றிமூற்றி யாரும் இருக்கிறீர்களா என்று பார்த்தவன் “அவ்வளவுதான் மரியாதை வாயை பேத்து விடுவேன்?” என்று எகிறினான்.
“பேப்ப.. பேப்ப.. எங்க பேரு பாப்போம்” என்று அவன் முன்னே நெருக்கமாக வந்து முன்னெழில்கள் கூட அவனை முறைத்துப் பார்க்க நின்றாள்.
சட்டென்று இரண்டு எட்டு பின்னால் நகர்ந்தவன் “இங்க பார் விளையாடாமல் குழந்தையை கூட்டிட்டு வா.. அங்க ஆரூஅ தூக்கிட்டு வர சொல்லி இருக்கான். ஏதோ தடுப்பூசி போடணுமாம்” என்று சற்று திக்கு திணறியே பேசினான்.
“சரி சரி..” என்று அவள் உள்ளே குழந்தையை தூக்க சென்றாள். ஆனாலும் அன்று பேசியவனுக்கு இந்த பதிலடி பத்தாது. இன்னும் கொஞ்சம் தர வேண்டும் என்று யோசித்தவள், “கொஞ்சம் உள்ள வாங்க குழந்தையோட பேக் எல்லாம் இருக்கு.. எல்லாத்தையும் எடுத்துக்கோங்க” என்றாள்.
சரி என்று அவன் உள்ளே செல்ல வேண்டுமென்றே குழந்தை தூக்க செல்லும் போது அவனது காலை இடறி விட்டாள்.
கால் தடுக்கி நிலை தடுமாறியவன் எங்கே குழந்தை மேல் விழுந்து விடுவோமோ என்று பயந்து சற்று தள்ள, அருகில் இருந்த வளர்ந்த குழந்தையின் மீது விழுந்து வைத்தான். அவளும் இதை எதிர்பார்த்திருக்க..
தன் மேல் விழுந்தவனை முறைத்துப் பார்த்தவள் “பொண்ணுங்க தனியா இருந்தா இப்படி தான் நடப்பீங்களோ, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆஞ்சநேயா ஆஞ்சநேயன்னு சொன்னது என்ன? கல்யாணம் என்ற பேச்சையே அபச்சாரம் அபச்சாரம் என கத்துனது என்ன? இப்போ அவசர அவசரமா என் மேல விழுறது என்ன?” என்று அவள் பொய் கோபமாய் கேட்க..
“ஐயோ.. சாரி சாரி கால் தடுக்கி விழுந்துட்டேன்” என்று அவன் எழ முயல.. அவன் கழுத்தில் இருந்து வெள்ளி முகப்பு வைத்து உத்திராட்சம் கோர்த்து வெள்ளி செயினோ அவளது ஜாக்கெட் ஹூக்கில் சிக்கிக் கொண்டது.
இதனை வேம்புவமே எதிர்பார்க்கவில்லை. அவன் எழப்போகும் போது அவளதும் சேர்ந்தே வர “ஐயோ.. என்ன பண்றீங்க?” என்று பதறி அவள் தன்னை மறைத்துக் கொள்ள அவனும் முகத்தை திருப்பிக் கொண்டான்.
ஆனாலும் அந்தப் பிறை நிலாக்களின் செழுவை அவன் கண்ணிலும் கருத்திலும் பட்டுவிட தலை உலுக்கி கொண்டவன் “சீக்கிரம் எடுத்து விடு..!” என்று உறுமினான்.
“பார்ரா விழுந்தது நீரு.. மாட்னது உம்மட செயினு.. என்னமோ என்கிட்ட சண்டைக்கு வரீரு?” என்றவள் எவ்வளவு முயன்றும் அது வராமல் போக “வரல..” என்றாள் சோகமாக..
அவனும் அவசரமாக திரும்பி “நான் எடுக்கவா?” என்று கேட்க..
“அச்சச்சோ வேணாம்..” என்று தாவணியால் தன்னை மூடிக்கொண்டாள்.
அவனுக்கோ பெருத்த சங்கடம்..! அவள் கைப்பற்றி அவளோடு எழுந்தவன் தனது செயினை கழட்டி அவளிடமே கொடுத்துவிட்டு தூளியில் உறங்கும் குழந்தையை தூக்கிக் கொண்டவன், அவளை பார்க்காமலேயே அங்கே வைத்திருந்த பேக்கையும் எடுத்துக் கொண்டு வேக நடையோடு வெளியேறி விட்டான்.
அவனை சீண்ட தான் செய்தாளே ஒழிய அதில் தானே மொத்தமா விழுவோம் என்று வேம்பு நினைக்கவே இல்லை. அந்த நிலையிலும் அவனின் அந்த கண்ணியம் அவளை கட்டி போட்டது
அவனுள்..!
“தவசி பையா.. உன் தவத்தை கலைக்க வந்த மேனகை நான்தான்..” என்றவள்
தன் மார்பில் இருந்த அவனது வெள்ளிச் செயினை பார்க்க பார்க்க ரகசிய சிரிப்பு அவளுள்..!
//ரைட்டு.. ஜியா..
அடுத்த ஸ்டோரிக்கு பேர் ரெடியா??//
//அதே.. அதே..!!//
Thavasi…🫢👌
super sis
👌👌👌👌👌👌👌👌👌
Adadey super