ATM Tamil Romantic Novels

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 05

 

அரவிந்த் அவளின் இதழை சாறு போல் உறிந்து எடுத்து விட்டு…. அவள் மூச்சு விட சற்று விலகிய அடுத்த நிமிடம் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தவளின் முகமோ கோபத்தில் சிவந்து தான் போனது.

 

ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி….பிறகு நக்கலாக பார்த்தவன்…. “நான் உன்ன மொத தடவையா கிஸ் பண்ணுறேன் ரொம்ப தான் பண்ணுற எல்லாத்தையும் மறந்திட்டியா டி….” என்றான் மோக கலந்த குரலில்.

 

“யூ ராஸ்கல்….உன்னால தான்டா நான் என் குடும்பத்தை பிரிந்து வேற இடத்திற்கு படிக்க போனேன். ஏன் இப்படி என் உயிர வாங்குற?” என்றாள் ஆத்திரம் மாறாத குரலில்.

 

“இல்ல டி….!! நீ கம்பனி கொடுத்து ரொம்ப நாள் ஆச்சா அதான் உன் வீட்ல நீ நல்ல தூங்கிட்டு இருந்த இங்க தூக்கிட்டு வந்தேன்….”

 

“ஆனா…. நீ என்னடானா…. உங்க அப்பன் வீடு மாதிரி நல்ல சாப்பிடுற தூங்குற. சரி ரெண்டு நாள் ஜாலியாக இருக்கட்டும்னு விட்டேன்…. என்ன தான் நீ பண்ணுறேன்னு பார்க்கலாம்னு….” என்றான் அசல்டாய் சட்டையை மடித்துக்கொண்டு….பிறகு ஒரு மார்க்கமாக சிரித்தவன்.

“ஆனாலும்….” எனத் தொடங்கி, சற்று நிறுத்தி அவளை ஏற இறங்க பார்த்தான்.

 

அவனின் இந்த அளவெடுக்கும் பார்வையை பார்த்து உள்ளுக்குள் பயபந்து உருள…. “என்ன?” என்றாள் சற்று உள்ளே போன குரலில்.

 

“ஒரு மொக்க படத்தில் ஹாட் சீன் கிடைச்சுது….” என்றான் மொட்டையாக.

 

அவனின் பேச்சுக்கள் எதுவும் புரியாமல் முழித்து கொண்டிருந்தாள் தனுஜா.

அவளின் பேந்த பேந்த முழிக்கும் கண்ணில் முத்தமிட தோன்றிய ஆசையை மனதில் மறைத்து விட்டு….

 

“அதான் டி பாத்ரூம்ல….” என ஆரம்பிக்க முதலே….

 

தனுவோ….” ஐய்யோ!! ஆத்தாடி….” என்று அலறி தன் நெஞ்சில் கை வைத்து கொண்டாள்.

 

“அடடா!! அதை பார்த்தால் மனுஷன் மூடு ஜிவ்வுனு ஏறுதுடி!!”….

“என்ன டி பாத்ரூம்ல டான்ஸ் ஆடிட்டே குளிக்குற” என்றான் கிறக்கமான குரலில்.

 

அவள் முகம் வெளுத்து, பேயறைந்ததை போல் அசையாமல் நின்றாள்.

 

“ஓடவும் முடியாது

ஒளியவும் முடியாது 

நம்ம பிக் பாஸ் கேமரா மாறி இல்லாமல் உன் 

பொட்டு சைஸ்ல வாங்கி ரூம் ஃபுல்லா 

மாட்டிருக்கேன்…” என சிரித்து கொண்டே சொன்னவனின் மூஞ்சில நான்கு குத்து விட்டால் தான் என்ன? என மனதில் அவனை தாளித்து கொண்டாள்.

 

“ஹே!! அறிவு இல்ல இப்படியா பண்ணுவ….” என்று அவனிடம் சொன்னவளுக்கு கண்களில் கண்ணீர் கரித்து கொண்டு வந்தது.

 

“அட விடு டி!! நான் நேரில் பார்க்காததா!!”

என அவள் கண்ணீரை துடைக்க போனான்.

 

“போடா!!” என்று கையை தட்டி விட்டு குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள்.

 

“அடியே!!! இங்க பாரு டி…. நான் ஒன்னும் பார்க்கல டி…. சும்மா பாத்ரூம்ல கேமரா இருக்குனு விளையாடினேன்.”

“சத்தியமாக” என அவள் தலையில் கை வைக்கவும்…. 

 

“என்னது விளையாடினியா….?”

 

“எவ்ளோ தைரியம் இருந்தா கூல் ஆக என்கிட்ட சொல்லுவ….?” எனச் சொல்லி அவன் சட்டையைப் பிடித்தாள். அதில் இரண்டாவது பட்டன் விலகி அவன் நெஞ்சில் இருந்த “மை பைங்கிளி” என்று பச்சை குத்தி இருந்ததை அப்படியே வெறித்து பார்த்தாள்.

 

குட்டை போல் தேங்கிய கண்ணீரோடு அவனை விழி நோக்கி…. “இதுவும் உன் நடிப்பில் ஒன்றா….” என்று கண்ணாலே கேட்டாள்.

 

“நீ என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா….” என்று அவன் மனம் ஊமையாக அழுதது.

 

“ம்…. என்ன….? இதுவா உன்ன ஏமாத்த அப்போ ஸ்கெட்ச்ல எழுதினேன்…. அழிஞ்சிட கூடாதுன்னு பச்சை குத்தினேன்….அதான் இப்போ மொத்தமாக அழிக்க முடியலை….” என்றான் உதட்டை பிதுக்கி கொண்டே…

 

“ம்ம்!!…”என்று உதட்டைசுளித்துக்கொண்டாள்.

 

“அதை ரொம்ப சுழிக்காத கடிச்சு வச்சிடுவேன்……”

 “அவ்வ்….”

 

அவன் பேச்சில் எரிச்சல் தோன்றவே…. “இங்க பாரு அரவிந்த்…. 

என் வாழ்கையில் தேவை இல்லாத விஷயம் நீ, அடுத்து நீ சொல்லுற டிராமா காதல்.…”

 

“காதல் பொய் இல்ல டி புரிஞ்சுக்கோ……” என்று அவளின் பட்டு போன்ற 

 கன்னத்தை தாங்கி கொண்டான்.

 

“நல்ல நடிகன் டா நீ….”

ஆனா….அத நான் நம்பி ஏமாறுவேன்னு இந்த ஜென்மத்தில் நினைக்காதே சம்ஜா….” என்றாள் ஆக்ரோஷமாக.

 

“எப்போது என்ன என் வீட்ல விடுவ அரவிந்த்….?”

 

அவன் பெருமூச்சு ஒன்று விட்டு “இப்போதைக்கு அந்த ஐடியா இல்ல……” என்று அலட்சியமாக கூறினான்.

 

“ம்ம்!! தெரிஞ்சது தானே….”

“சரி விடு…. நான் தூங்க போறேன் காலையில் பேசிக்கலாம்…. நீ உன் ரூம்க்கு போ…” என விரட்டினாள்.

 

“இது நம்ம ரூம் பைங்கிளி!!” என மெல்ல காதில் கிசுகிசுத்தவன் எதற்கு அடி போடுகிறான் என்பது கூட தெரியாதா அவளுக்கு…. “என்னாது!!…. அதெல்லாம் வேலைக்கு ஆகாது….போ வெளியே…” என்றாள் கோபமாக.

 

“நோ…. நோ….” என்று கட்டிலில் விழுந்தான்.

 

“இப்படிலாம் பண்ணாத….தயவு செஞ்சு வெளிய போ….” என அவள் கையெடுத்து கும்பிட்டாள்.

 

“இது என் வீடு எனது அறை…. நான் எங்க வேணாலும் தூங்குவேன்……”

என்று சொல்லி விட்டு மெத்தையில் உருண்டு கொண்டிருந்தவனை கண்டு ஆத்திரம் பீறிட்டு வந்தது.

 

“பச்!! நான் வேற ரூம்ல தூங்கிக்குறேன்……” என வெளியே செல்ல அவள் கதவில் கை வைக்க…. அது திறந்தால் தானே….

 

அரவிந்தோ ஏளனமாக நகைத்து கொண்டு…. அவள் கண் முன்னே சாவியை பரண் மேல் தூக்கி வீசினான்.

 

பரணில் கிடந்த சாவியை இயலாமையுடன் பார்த்தவள். 

“உனக்கு என்ன தான் வேணும் என்னை ஏன் இப்படி சித்திரவதை பண்ணுற……”என்று கத்தினாள்.

 

“நீ தான் டி ரொம்ப படுத்துற…. அந்த **** நாய் மடியில் படுத்து தூங்குற…. என் பக்கத்துல படுக்க என்ன….?” அவள் கையை வலிக்க பற்றி உறுமினான். அவளை தேடி அவள் வீட்டு அறைக்கு வரும் போது தாஸ் சொன்னது போல் கெளதம் மடியில் தூங்கி கொண்டிருக்கவும்…. அவனுக்குள் பொறாமை தீ கொழுந்து விட்டு எறிந்தது.சும்மா பார்த்து விட்டு போகலாம் என்று வந்தவன் இச்செயலில் அவளை பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை எனத் தூக்கி கொண்டு வந்து விட்டான்.

 

“தனுஜா அவனை தீயாக முறைத்தவள் அவன் என் நண்பன்……”

 

“அப்போ நான் யாரு டி உனக்கு….?”

 

“நீயா நடிப்புகாரன், எமகாதகன், நம்பிக்கை துரோகி போதுமா……” 

என சொல்லும் போது (அவள் மனம் கனத்து போவதை அவளால் தடுக்க முடிய வில்லை)

 

“இப்போ வழிய விடு….” என்றாள் சீற்றமாக.

 

அவள் கூற்றில் கோபம் துளிர்த்தவன். “அப்படியா!!” அவளை அலேக்காக தூக்கி மெத்தையில் பொத்தென்று போட்டன்.

அந்த பஞ்சு மெத்தையில் அமுங்கி விழுந்து எழுந்தவளை தன் இரு கைகளாலும் சிறையிட்டு மார்போடு அழுந்த அணைத்து படுத்துக்கொண்டான்.

 

அவள் திமிற திமிற…. “ஏய்!! மூட் ஆகுது டி….

 பிறகு சேதாரம் உனக்கு தான்…. மொத மாறி கிஸ்ஸோட விட மாட்டேன் பார்த்துக்கோ” என்றான் மிரட்டும் தொனியில். வாய் மட்டும் தான் மிரட்டியது. மனதோ “ஓகே வா” என யாசித்து கொண்டிருந்தது.

 

இதற்கு மேல் ஏதும் பண்ண அவள் என்ன முட்டாளா….

“கப் சிப்!!” என்று வாயை மூடி மெல்ல மெல்ல கண்ணயர்ந்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு கண் விழித்து எழுந்தவன் இப்போவும் என்னுடைய தேவைக்காக தான் மறுபடியும் நான் உன் வாழ்க்கைக்குள்ள வந்திருக்கேன் பைங்கிளி. (இந்த தடவ உன்ன நான் எப்படியும் என் வசம் ஆக்கிருவேன்…இல்ல நீ என் வசம் வந்தாகனும் இல்ல வர வைப்பேன்) அதற்கான படிகளை யோசித்து கொண்டே வெகு நாள் கழித்து சுகமாக உறங்கினான்.

 

 

ஆராதிப்பாளா…

 

 இதய சிறை – 06

 

மறுநாள் காலையில் கண் விழித்த தனுவிற்கு… தன்னை அணைத்துப் படுத்திருக்கும் அரவிந்தைப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது.

 

“ஹே தடிமாடு!! எழுந்திரி டா….” என தலையை பிடித்து கீழே தள்ள… மேலும் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு தூங்குபவனைக் கண்டு இரத்த அழுத்தம் எகிறியது.

 

“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். 

எழுந்திரி……” என கத்தியவளை கண்டு அலட்டிக்கொள்ளாதவன்.

 

“ஹே பைங்கிளி!! குட் மார்னிங்…” என்றான் மந்தகாச புன்னகையுடன்…

பல நாட்கள் கழித்து நிம்மதியாக தூங்கியவனின் மனதில் விவரிக்க முடியாத ஆயிரம் சந்தோசங்கள்… தன் வாழ்க்கை முழுவதும் இப்படியே செல்ல வேண்டும் என ஆழ் மனதில் புது புது ஆசைகள் வேறு பொங்கி வழிந்தது.

 

“ஐய….எந்திரி!!”

“ஆயிரம் கிலோ பாறையை என் மேலே வச்ச மாறி இருக்கு…”என சலித்து கொண்டாள்.

 

“விடு பைங்கிளி!! இனி உனக்கு பழகிவிடும்…” என்றான் அசால்டாக.

 

“அடப்பே…. என்று எழுந்தவளை… அலேக்காக கட்டிலில் தள்ளியவன்…

“ஹே!!! ஒரு டர்டி கிஸ் பண்ணலாமா….?” என கண்கள் மின்ன கேட்டான்.

 

அவள் அவனை அதிர்ச்சி கலந்த முகத்துடன் நோக்கினாள்.

“வாட்?”

“நெவர்….”என்று சொல்லி அவனிடம் சிக்காமல் தப்பிக்க பார்த்தாள்.

 

“உன்கிட்ட யாரு டி பெர்மிஷன் கேட்டா இப்போ….?”

 

 “நான் நினைச்சால் போதும்……” என சொல்லி விட்டு நெருங்கினான்.

 

“வ்வேணாம் பிளீஸ்….!!” என்றாள் மெல்லிய குரலில்… அதை கண்டுகொள்ளாமல் நெருங்கியவன்…

“ஒரு நிமிடம் தயங்கி….

மூன்று சொல்லுவதற்குள் பாத்ரூம் உள்ளே ஓடீட்டின்னா விட்டு விடுவேன்.…” 

“ஓகே யா?”

 

“ரெடி!!”…. “த்ரீ”…. “டூ”…. என ஆரம்பிக்க…. உடனே அடித்து பிடித்து எழுந்து பாத்ரூம் சென்று கதவை அடைத்தாள்.

 

“அப்பாடி!! தப்பிச்சோம்……” என்று மூச்சு வாங்கி நின்று கொண்டே… பல் துலக்க ப்ரஷைத் தேடி எடுத்து விட்டு… தன் காலை கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தவள்….அலமாரியில் இருக்கும் துணிகளை எடுத்து கொண்டு மீண்டும் குளிக்க சென்றாள்.

 

இங்கு அரவிந்த் அவளை தன் வசம் இழுக்கும் முயற்சிக்கான முதல் படிகளுக்கு ஆயத்தமாகி…பக்கத்து அறையில் குளித்து விட்டு… கையில் ஒரு கப் காபியுடன் நாளிதழ் படிக்க ஆரம்பித்து விட்டான்.

 

குளித்து விட்டு கதவை மெல்ல திறந்து ஓரக்கண்ணால் அறையில் திசையெங்கும் சுழற்றினாள். அவன் இல்லை என்றதும் நிம்மதி பெரு மூச்சு ஒன்று விழ… தலை வாரி கொண்டே கண்ணாடியில் தன் வீட்டில் உள்ளவர்களை பற்றி சிந்திக்கலானாள்.

 

“அவர்களுக்கு இந்நேரம் தகவல் தெரிஞ்சிருக்கும்…. ஆனால் இன்னும் யாரும் வந்த மாறி இல்லையே….

கெளதம் வேறு எங்கு போனான்… இவன் எதற்கு இப்போ என்னை இங்க கடத்திட்டு வந்திருக்கான்… அவனுக்கு எதுவும் தெரிஞ்சுருக்குமோ…. என்று ஒரு நிமிடம் பயந்தவள்… இல்ல இல்ல வாய்ப்பு இல்லை….”

என்று மனதை திடப்படுத்திக்கொண்டாள்.

 

“ச்ச!! ஃபோன் வேற கையில் இல்ல… எல்லோருக்கும் நான் எப்படி தகவல் கொடுப்பேன்… ரொம்ப அவசியமாச்சே… அங்க என்ன நடந்துகிட்டு இருக்குனு கூட தெரியலயே….”

“நான் நெனச்ச படி எல்லாம் நடந்திடுமா….?” 

அப்படியே நடந்தாலும்…. அதற்கு மேல் யோசிக்கவே பயமாக இருந்தது அவளுக்கு. 

இன்னும் அடுக்கடுக்கான கேள்விகள் ரேசன் கடை கூட்டம் போல் வரிசை கட்டி கொண்டு நின்றது.

 அதை எல்லாம் நினைத்து பார்த்து தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

 

இப்போழுது அம்மாவும், அத்தையும் சரியாக சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பார்களே என்று அறிந்தவளுக்கோ… இதயம் கனத்தது… கண்களில் நீர் வழிந்தது.

    

இன்று காலை உணவை அறைக்கு அவனே கொண்டு வர…

“உனக்கு பிடிச்ச ஐட்டம் தான் எல்லாமே சாப்பிடு……”

என்று அவனே தட்டை நீட்டி அவனே பரிமாறினான்.

 

“ம்ம்…” என சொல்லிக் கொண்டு வேறு எதுவும் பேசாமல் வாங்கி சாப்பிட தொடங்கினாள். அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

 

“என் மூஞ்சில என்ன எழுதி ஒட்டிருக்குன்னு அப்படி பார்க்குறீங்க… சாப்பாடு வேணும்னா போட்டு சாப்பிட வேண்டியது தானே.…”

 

“ஆ” என வாயை பிளந்தவனைக் கண்டு…. “ஊட்டி விடு” என தட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.

 

“முடியாது” என வாயை திறந்து சொன்னவளின் கைகளோ….அதற்கு எதிர்மாறாக அவனுக்காக சிறிதளவு எடுத்து வாயருக்கே கொண்டு சென்றது.

 

அதில் சிரித்து கொண்டே வாங்கியவன்… அவள் ஊட்ட ஊட்ட சளைக்காமல் வாங்கி கொண்டான்.

 

இருவரும் சாப்பிட்டு முடித்து கையை கழுவி விட்டு வந்து அமர…

அவளையே மீண்டும் மீண்டும் பாத்துக்கொண்டிருந்தான்.

அதில் எரிச்சலாகி…

 

“இனி என்ன வேணும் உனக்கு?” 

“எதுக்கு இப்படி பார்த்துகிட்டே இருக்க…”

 

“அது இல்ல டி உன் அழக ரசிக்கிறேன்…

அப்படியே டைரி மில்க் மாறி இருக்க டி….”

 

“ஓகோ!! கருப்பு கலர இப்படியும் வர்ணனை பண்ணலாமோ ….?” என்றவளின்

 மூளை எதையோ யோசித்து கொண்டிருந்தது.

 

“ஹே!! இது மட்டும் இல்ல டி தேன், கருப்பட்டின்னு நெறைய சொல்லலாம் பைங்கிளி… நீ அவ்ளோ இனிக்கிறடி என்றான்…” ஒரு மாதிரியான குரலில்.

 

 “ஓ அப்படியா!! சரி……” என அதோடு முடித்து கொண்டாள்.

 

“ஏன்டி? பொண்ணுங்களுக்கு…. அலங்காரம் பண்ண ஆச படுவாங்க… இந்த மாறி சொன்னா வெக்கமோ இல்ல கூச்சமாவது படுவாங்க…நீ என்னடானா கல்லு மாறி அமைதியா இருக்க.…”

 

“அப்போ நீ நிறைய பொண்ணுங்க கிட்ட சொல்லிருக்க, அப்படிதானே?

நான் எப்படி ரியாக்ஷன் கொடுக்குறேன்னு என்னையே டெஸ்ட் பண்ணி பார்க்குற….” அப்படித்தான என ஆவேசமாக கேட்டாள்.

 

“இது என்ன டி இது ….? வம்பாக இருக்கு… பொதுவா சொன்னேன் டி…”

“ஏன்!! நான் எது சொன்னாலும் அமைதியாகவே இருக்க…”

 

“நான் என் வாழ்கையில் பட்ட அனுபவம் தான் வேற என்ன?

எனக்கு பார்த்த மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல தான்… ஆனா அவன் சொத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க போறான்னு தெரிஞ்ச அப்போ எனக்கு எவ்ளோ கஷ்டமாக இருந்துச்சு தெரியுமா… நானும் கௌதமும் நீ என்னை கடத்திட்டு வந்த அன்னைக்கு அவனுக்கு நைட் கால் பண்ணினோம்…”

 அவன் என்னையும், என் நிறத்தையும் அவ்ளோ அசிங்கமாக பேசிவிட்டான்…. என சொன்ன கண்களில் நீர் ததும்ப… மெல்ல துடைத்துக் கொண்டாள்.

 

உண்மைய சொல்லுறேன் கேட்டுக்க… இங்க ஆண்கள் கருப்பா பிறந்தால் அழகுன்னு சொல்லுற எல்லோரும்… அதே பெண் கருப்பா பிறந்தால் அசிங்கம் தான் சொல்றாங்க புரியுதா….”

 

“அப்படி ஏன் நினைக்குற, நீ கருப்பாக இருந்தாலும் செம்ம அழகு டி.…”

 

“வெள்ளையா இருந்தாலும் அவ அழகின்னு…நீ யார் சொல்லியாவது கேள்வி பட்டுருப்ப… அதென்ன கருப்பா இருந்தாலும்னு இடை சொருகல்…நீயும் பொண்ணுங்க கருப்பா இருந்தா கேவலமா தான நினைக்கிற… பூசி மொளுகாம போய் வேளையை பாரு…”

 

“அப்படி இல்ல பைங்கிளி” என்றான் அவசரமாக.

நான் ஒன்னும் சினிமாவை பார்த்து நிஜத்தை உணராத முட்டாள் கிடையாது… நீ என்னையும் அப்படி நினைக்காத என அவள் கையை தன் கைக்குள் பொதித்து கொண்டே பேசினான்.

 

அவள் மேலும் பேசி பேசி வாக்குவாதம் செய்ய விரும்பாமல்… சரி சரி என்ன சீரியஸ் மோடுக்கு மாத்தாத…கருத்து சொன்னா எங்க சங்கத்துக்கு பிடிக்காது.

(அவங்ககுக்கே எல்லாம் தெரியும் ஹீஹீ!!)

 

“போய் உனக்கு ஆகவேண்டிய காரியத்தை பாரு….” அவனும் எதுவும் 

சொல்லாமல் எழுந்து போய் விட்டான்.

 

இங்கு ஒருவனின் கை வாய் எல்லாம் கட்டி ரெண்டு நாள் சோறு 

போடாமல் வைத்திருந்தது… வேறு யாரையும் அல்ல நம்ம கௌதம் தான். 

 

“அவளை எங்க டா ஓட விட்ட….” என்று சொல்லி சொல்லி அடிச்சிருப்பாங்கள் என்று தானே நினைக்கிறீர்கள். அதான் இல்லை….

அவனுக்கு பிடித்த சாப்பாடு எல்லாம் அவன் முன்னாடி வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாள் பசி… பிரியாணி, மீன் குழம்பு வாசம் வேறு அவனை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.

 

“டேய் விடுங்க டா என்ன….?”

என கை கட்டை விடுவித்து கொள்ள போராடினான்.

 

“நீங்க உண்மைய சொன்னாதான் விட சொல்லி உங்க மாமா சொல்லிருக்கார் பாஸ்…”

 

“ஐயோ!! முடியலேயே அந்த சாப்பாடாவது கொஞ்சம் ஊட்டி விடுங்க டா…புண்ணியமாக போகும்….”

 

“முடியாது பாஸ்…”

“பச்ச தண்ணி கூட கொடுக்க கூடாதுனு ஆர்டர் பாஸ்….” என்று தலையை சொரிந்து கொண்டான்.

 

கடைசியில் கத்தி க

த்தி, தொண்டை வலிக்க கண் மூடி தூங்கி விட்டான்.

எல்லோரும் அசந்த நேரம் பார்த்து… அவனின் கை கட்டை ஒரு கரம் அவிழ்த்து கொண்டிருந்தது.

திரும்பி பார்த்தான்… அவனின் இதழ் “நிஞ்ஜா” என்று அழைத்தது.

 

“யார் அந்த நிஞ்ஜா?”

 

ஆராதிப்பளா!!!

2 thoughts on “மாயோனின் இதய சிறையில்”

  1. По порядку: мне 35. Да, это единичный случай, потому как работал с другими поставщиками до последнего запрета. 12к+транспорт- это, видимо, “не о чем”. По твоим словам, мне следует заткнутся, читать о магазине какой он хороший и наслаждаться жизнью?[/quote] https://moskvakupit.shop ну то что ценники здесь шикарные заметил!и то что на “главной”-это и заинтересовало меня,но насторажило одновременно!ges_hmm.gifПосмотрим,что выйдет из-этого.Пока всё гладко!все я уже пошол на почту получать пришло быстро молодцы СПСР вчера трек сегодня забираю за качество как и обещал отпишу а то там кто то сомневался

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top