- அத்தியாயம்
சுந்தரமும் வசந்தியும் நாங்க கிளம்புறோம் தீப்தி நீ ஜானவியோடு வா என்று கூற.
அங்கே வந்த பாஸ்கர் தீப்தியின் பதற்றத்தை கண்டு வசந்தியிடம் “அம்மா ஜானவி கிருஷ்ணா கூட இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும்..நீங்க தீப்தியை கூட்டி போங்க” என்றதும்.
ஒருமனதாக சரியென்று கிளம்பினர் மூவரும்.. ஜானவி தன்னை தனியாக விட்டுச்செல்லும் தீப்தியின் மீது கோபம் வந்தது.
ஜானவியின் முகம் மாற்றத்தை கண்டவன்.. “ஏன் பொம்மை என் மேல் நம்பிக்கை இல்லையா”என்று கையை இறுக்கி பிடிக்க..
“ரொம்ப டயர்டா இருக்குங்க”என்று ஷோபாவில் சாய.. அங்கே பழச்சாறு கொண்டு சென்ற பையனிடம் பழச்சாறை வாங்க கொடுத்தான் கிருஷ்ணா.
பழச்சாறு குடித்தத்தை கண்ட மாயா கீதாவை அழைத்துக்கொண்டு செல்ல “அம்மா பசிக்குது”என்று சொல்ல.
“ஒழுங்கா வாடி நான் உனக்கு பிரியாணி சுமோட்டால ஆர்டர் பண்ணித்தரேன்” என்று கீதாவை இழுத்துகொண்டு செல்ல..
அங்கே டேபிளிலிருந்த பழச்சாற்றை பார்த்ததும் பசியாக இருந்ததால் கீதா எடுத்துக் குடிக்க..
“ஏய் எனக்கும் கொஞ்சம் தாடி” என்று பஞ்சத்து பிறந்த பரதேசிகள் போல் பழச்சாறை குடித்தனர் அம்மாவும் மகளும்..
குடித்து விட்டு தள்ளாடி நடக்க முடியாமல் நடக்க அங்கே வந்த மணி இருவரையும் கெஸ்ட் ஹவுசிஸில் படுக்க வைத்து.. என்ன கருமத்தை குடித்தார்களே தெரியவில்லையென்று பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கேன் என்று புலம்பிச் சென்றான்.
பாலா மாயாவிற்கு போன் செய்தவன் மாயா போனை எடுக்காமல் உறங்கிக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணா போட்டோ ஷுட் முடித்தவுடன் ஜானவியை அழைத்துச்சென்று அறையில் படுக்க வைத்து நெற்றியில் முத்தம்மிட்டுச் சென்றான்.
பாலா கெஸ்ட்ஹவுசின் ஏதோ அறையில் தான் ஜானவி இருப்பாள் என்று ஒவ்வொரு அறையாக மெதுவாக திறந்து பார்க்க மாயா உறங்கிக்கொண்டிருப்பது தெரிந்து அவரை எழுப்ப..
“ஏய் யாருடா அது இந்த நேரத்தில் தூக்கத்தில் எழுப்புவது அவரது யானை தந்தம் போலிருக்கும் காலால் ஒரு ஏத்து வைக்க கீழே போய் அம்மா”என்று விழுந்தான் பாலா..
“மாயாம்மா” என்று அவா¤ன் கன்னத்தை தட்டி எழுப்பி.. “ஜானவி எந்த அறையில இருக்கா” என்று ஜானவியின் பெயரை கேட்டதும்.. மாயா போதை தெளிந்தவளாக எழுந்து அமா¢ந்து ஜானவி இருக்கும் அறையின் அடையாளத்தை கூறிவிட்டு திரும்பவும் படுத்து தூங்கிவிட்டார்.
பாலா தைரியம் வருவதற்கு வேட்டியின் அடியில் சொருகி வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து ஒரே மடக்கில் குடித்தான்.. போதை ஏறியவுடன் ஜானவியின் அறைக்குள் சென்று கதவை சாத்தினான்.
கீதா மாயாவுடன் தூங்கிக்கொண்டிருந்தவள் ஜானவியை பார்த்து நான் தான் கிருஷ்ணா மாமாவை கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறவதற்கு ஜானவியின் அறைக்கு போக அவள் குடித்த போதை மருந்து வேலை செய்ய துவங்க அங்கேயே உறங்கிவிட்டாள்.
பாலா அன்று அடிவாங்கிச் சென்றவன் ஜானவியை பார்க்க வாய்ப்புக்கிட்டவில்லை.. கீதாவை ஜானவி என்று நினைத்து ஜானவியின் அறைக்குள்ளே பாலா குடிபோதையில் கீதாவை அருகில் சென்றவன் கருப்பா இருந்தாலும் நல்ல நாட்டுக்கட்டையா தான் இருக்கா என்று கீதாவை தலை முதல் கால் அணுவணுவாக இரசித்தான்.
பாலா அவசர அவசரமாக தன் ஆடைகளை களைந்து கட்டிலில் கீதாவின் மேல் பாய.. போதையில் இருந்தாலும் கீதா லேசாக கண திறந்தவள்..
“ஏய் யாருடா நீ கையை எடுடா எருமை மாடே” என்று பாலாவை தள்ளிவிட.. அவள் தள்ளுதலில் சிறிது விலகியவன்..
“ஏய் பாப்பா நீ கருப்பா இருந்தாலும் ரொம்ப அழகாயிருக்க”என்று அவளின் முகவடிவை அளக்க..
“நான் அழகா இருக்கேனா.. என்னை எல்லாரும் கருப்பா இருக்கேனு என்னை யாரும் கல்யாணம் செய்ய மாட்டேன்கிறாங்க”என்று உதட்டை பிதுக்கியவாறு அழும் குரலில் பேச
“அச்சோ அழுகாத கருப்பு பாப்பா நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து விட்டோம் என்றால் யாரும் நம்மை பிரிக்க மாட்டாங்க”என்று கீதாவை அடைந்து விட துடித்து மாய வார்த்தைகள் பேசினான்.
“அப்படியா நாம ஒண்ணு சேருவோமா”என்று கேட்க..
“ஆமா வாடி கருப்பு பாப்பா” என கீதாவின் இதழ்களில் முத்தமிடத்துவங்க.
“ஏய் ஏய் விடுடா ஏன்டா இப்படி கடிச்சு வைக்கிற”
“அச்சோ சாரிமா ரொம்ப காய்ச்சு கிடக்கிறேன்.. இது தான் முதல் முறை”என்று கீதாவின் ஆடையை விலக்கி அவளின் பனிக்கட்டிகளை கரைத்து ஆராய்ச்சி நடத்தி இருவரும் கூடலில் முக்குளித்தனர்.
மாயா காலையில் எழுந்தவுடன் கீதாவை தேட அவள் வெளியே சென்றிருப்பாள் எண்ணி முதலில் நாம ஜானவியை அவமானப்படுத்த வேண்டும் என எழுந்து கொண்டையை போட்டுக்கொண்டு வெளியே வந்தவர்.. ஆள் நடமாடுகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து
ஜானவியின் அறைக் கதவை வெளியிலிருந்து லாக் செய்தவர் சத்தம் போட்டு அனைவரையும் அழைத்தார்.
ப்யூட்டிசியன் ஜானவிக்கு அலங்காரம் ஆரம்பித்திருந்தனர்.. மாயாவின் சத்தம் கேட்டு அங்கே கிருஷ்ணாவும் வர..
மாயா கிருஷ்ணாவிடம் “தம்பி இந்த அந்நியாயம் எங்காவது நடக்குமா.. உனக்கு பெண்டாட்டியா வர போறவ நடத்துற கூத்தை பாரு.. அவ ரூம்ல யாரோ ஒரு ஆள் இருக்கான்” என்று கூற
சுந்தரமும், வசந்தியும் மாயா போட்ட சத்தத்தில் என்னமோ நடந்திருக்கு என்று பதறி வந்தனர்..
மாயா சொன்ன செய்தியை கேட்டு பதறி
“அம்மா எங்க பொண்ணு தவறு செய்ய மாட்டா?” என்று கண்ணீர் விட்டனர்.. தங்கள் மகள் தவறான செயலை செய்ய மாட்டா என்று மலைபோல் நம்பிக்கை வைத்திருந்தனர்.
“அத்தை உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா.. ஜானவிக்கு ப்யூட்டிசியன் அலங்காரம் செய்துட்டு இருங்காங்க”என்று மாயாவிடம் எரிந்து விழுந்தான்.
என்னையே வா திட்டுற.. வாடா வா.. வா.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவமானப்பட்டு நிற்க போற என்று
ஜானவியின் அறைக்கதவை திறக்க அங்கே பாலா கீதாவும் அறைகுறை ஆடையில் இருவரும் அணைத்தபடி உறங்கியிருந்தனர்.
கிருஷ்ணா மாயாவை பார்த்து புன் முறுவலுடன் “என்ன அத்தை நீ செய்த வினை உங்களுக்கே திரும்ப வந்திருச்சா” என்று கூறிவிட்டு இதுதான் நீங்க உங்க பொண்ணை வளர்த்த லட்சணமா என மாயாவை புழுவை விட கேவலமாக பார்த்தான்.
“எப்படி அத்தை ஒரு பொண்ணு மேல அபாண்டமா பலி சுமத்த மனசு வருது.. இனி ஒரு நிமிசம் கூட என் வீட்டில் இருக்க கூடாது”.
கோமதி மார்க்கெட் சென்று வரும் போது கிருஷ்ணாவின் காரை வழிமறைத்து கணவரும் மாயாவும் போட்ட திட்டத்தை கிருஷ்ணாவிடம் கூறிவிட..
“தம்பி என் வீட்டுக்காரரை எதுவும் செய்துடாதீங்க”என்று அவர் செய்த தவறுக்கு நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்குறேன் என கிருஷ்ணாவிடம் கை எடுத்து கும்பிட.
“உங்களால தான் செல்வம் இன்னும் உயிரோட இருக்கான்.. இல்லைனா நான் அவனை எப்பவே கொன்றிருப்பேன்.. அதுவுமில்லாமல் என் அண்ணனுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கேன்.. உன் வீட்டுக்காரரை பழி வாங்கக் கூடாதுனு . ஆனால் அது ஒரு எல்லை வரைதான்.. ரொம்ப ஆட்டம் போட்டான் துப்பாக்கியை எடுத்து பொட்டு பொட்டுன்னு சுட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. கொஞ்சம் உங்க வீட்டுக்கார ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க”என்று எச்சரித்து கோமதியை அனுப்பி வைத்தான்.
“மாயா அத்தை நீங்க நேத்து ரிசப்சனில் ஜானவிக்கு கொடுத்த பழச்சாறில் போதை மருந்து கலக்கலை.. நீங்க கலக்க சொன்ன போதை மருந்து பழச்சாறை கீதா தான் குடிச்சிருக்கா.. ஆமா இந்த பாலா எப்படி வந்தான்”என்று மாயவை மடக்கி பிடித்து கேள்வி கேட்க..
“மாயா எனக்கு எதுவும் தெரியாது கிருஷ்ணா”என்று அறைக்குள்ளே சென்று பாவி மகளே!
“எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்கிட்டேயே”என்று கீதாவை அடித்து எழுப்ப..
இருவரும் தூக்கத்தில் எழுந்தவர்கள் தங்களை சுற்றி எல்லாரும் வேடிக்கை பார்ப்பதை கண்டு வெட்கி தலைகுனித்தனர்.
“மாயா செய்த தவறை உணர்ந்து கிருஷ்ணாவின் காலில் விழுந்து தம்பி எங்களை மன்னித்து ஏத்துக்கப்பா ”என்று கிருஷ்ணாவிடம் மண்டியிட்டு கேட்க.. அவன் பேசாமல் அமைதியாக நின்றான்.
சுந்தரம் கிருஷ்ணாவிடம் “மாப்பிள்ளை தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.. அது போல மாயா என் பொண்ணுக்கு தீங்கு செய்ய நினைத்து அவங்க பொண்ணு இப்ப கெட்டுப் போச்சு தான் செய்தது தவறு என்று உணரும் அவரங்களை மன்னிச்சுடுங்க ?”என்று பெரும் தன்மையாக பேச.. மாயா சுந்தரத்திடம் மன்னிப்பு கேட்டார்.
பாலா.. “கிருஷ்ணாவிடம் அண்ணா நான் தவறு செய்துட்டேன் கீதாவை நானே திருமணம் செய்துக்குறேன்” என்று கீதாவை அழைத்து சென்றான்.
“மாயா அத்தை நான் வீட்டில் இருக்கும் போது என் கண்ணில் படக்கூடாது”என்று கோபத்துடன் பேசி விட்டு திருமணத்திற்கு ரெடியாக போனான் கிருஷ்ணா.
மாயா.. அப்பா சாமி! எங்கே என்னை வீட்டை விட்டு அனுப்பி விடுவானோ நினைத்தேன்.. நல்ல வேளை இந்த சுந்தரம் என்னை காப்பாற்றி விட்டான்.
என் பொண்ணு தவறு செய்தாலும் ஒரு பணக்காரன் வீட்டுக்குதான் மருமகளா போறா என்று பெருமை கொண்டு..சேலையை துதறிக்கொண்டு எதுவும் நடக்காதது போல லலிதா எனக்கு ஒரு காபி போடு அதிகாரம் செய்ய ஆரம்பித்தார்.
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்ற கதையானது மாயாவின் செயல்.
திருமணம் கோவிலில் நடைபெறுவதால் அதிகாலையில் அனைவரும் கோவிலுக்கு செல்ல ரெடியாகினர்.. குழந்தைகளை புறப்பட வைப்பதற்கு தீப்திக்கு போதும் போதும் என்றானது..
எப்படியோ மூவரையும புறப்பட வைத்து கோவிலுக்கு பாஸ்கருடன் காரில் அழைத்து சென்றாள்.
காரில் செல்லும் போது குழந்தைகள் “சித்தி எப்ப வருவாங்க”என்று தீப்தியை கேள்வி மேல் கேள்வி கேட்டு பாடாய் படுத்தினர்.. அவர்கள் கேட்கும் கேள்விக்கு பொறுமையாக பதிலளித்தாள் தீப்தி
“அத்தை எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ”என்று ஆதினி. தீப்தியின் கன்னத்தில் முத்தமிட்டது..
பாஸ்கர் காரை ஓட்டிய படியே “ம்ஹீம் எனக்கு தான் தீப்தி அத்தையை பிடிச்சிருக்கு ஆனா நான் முத்தம் கொடுக்க முடியலையே ” என்று சோகமாக சொல்ல
தீப்தி கோப பார்வை பார்க்க அமைதியானான் பாஸ்கர்.
அடர் குங்குமநிறபட்டில் தங்கசரிகை பார்டர் வைத்து அதே நிறத்தில் ஜாக்கெட் அணிந்து.. சிவப்பு கற்கள் பதித்து நீண்ட ஆரமும். அதற்கேற்ற நெக்லஸ்சுடன் சேர்ந்த அதே டிசைன் உள்ள ஜிமிக்கியும், கைநிறைய தங்க வளையல்களும், வைர கல் பதித்த ஒட்டியாணமும் பூட்டி அலங்கரித்தார்… அழகிற்கே அழகு சேர்த்தாள் ஜானவி..
பட்டு வேட்டி சட்டையில் ஆறடி ஆண்மகனாய் அழகோடு கிருஷ்ணா மணமேடையில் ஐய்யர் சொல்லும் மந்திரங்களை சிரத்தையாக கூறிக்கொண்டிருந்தான்.. கிருஷ்ணா முகத்தில் தன் வாழ்வில் ஒரு மாற்றம் நடக்கப் போகிறது என்ற சந்தோசம் அவன் முகத்தில் ஒளிர்ந்தது.. பக்கத்தில் மூன்று குழந்தைகளும் அமர்ந்திருந்தனர்.. அதுவும் கீரன் கிருஷ்ணாவின் மடியில் தான் அமர்வேன் என்று அடம்பிடித்து அமர்ந்தது.. ஆதினி கோபம் கொண்டு வெடுக்கென்று முகத்தை தூக்கி வைத்தது.. எப்போதும் நீ தான் சித்து வின் மடியில் உட்காருற.. இப்ப சித்தி வருவாங்க அவங்க மடியில் நான் அமர்ந்து கொள்வேன் என்று முகத்தை கோணியது..
பாஸ்கர் பச்சை வண்ண சில்க் சர்ட் பட்டுவேட்டி கட்டியிருந்தான். சில நண்பர்கள் “டேய் மாப்பிள்ளைக்கு துணை மாப்பிள்ளை ரொம்ப மேக்கப் போட்டிருக்க”என்று பாஸ்கரை கிண்டல் செய்தனர்.
தீப்தி பச்சை வண்ண பட்டு கட்டி இப்போதும் தன்னை எளிமையாக அலங்காரம் செய்து கொண்டாள்..
தீப்தி ஜானவியை மணமேடைக்கு அழைத்து செல்ல கிருஷ்ணாவிற்கு அருகில் நாணத்துடன் தலைகுனிந்து அமர்ந்தாள்.. ஆதினி சித்தி என்று மடியில் ஏறி அமர்ந்தது. கீரனிடம் எப்படி என்று தலையை ஆட்டிச் சிரிந்தது.
கல்யாணத்திற்கு வந்தவர்கள்.. தன் குழந்தையை கூட மடியில் வைத்து தாலி கட்டியிருக்கிறார்கள்.. கிருஷ்ணா அண்ணன் குழந்தைகளை மடியில் வைத்து தாலி கட்டுவது இது தான் முதல் முறை என்று பேசி சிரித்தனர்.
தீப்தி மேடையில் ஜானவி அருகே நிற்க.. சுகந்தி தன் மகளுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று கடவுளை வேண்டினார்..
கூட்டத்தில் இருந்த பாட்டி ஒருவர் தீப்தியிடம் சென்று “ஏம்மா நீயே வாழாவெட்டியா இருக்க பொண்ணு நீ பக்கத்துல நிற்கலாமா”என்று நாக்கில் விசத்தை தடவி பேச..
தீப்தி கண்ணில் கண்ணீர் முணுக்கென்று வநத்து.. மனதில் காயத்துடன் மேடையை விட்டு இறங்கும் முன் பாஸ்கர் அங்கே அம்மன் சிலையில் இருந்த தாலியை எடுத்து வந்து தீப்தி உணரும் முன் அவள் கழுத்தில் தாலி கட்டினான்..
அந்த மூதாட்டியிடம் “பாட்டி இப்போ என் மனைவி ஜானவி அருகில் நிற்கலாம்ல”என்று கேட்க பாட்டி தலைகுனிந்து நின்றார்.
- அத்தியாயம்
தீப்தி தன் கழுத்தில் தாலி ஏறியது கனவா நனவா என்று அறியாமல் நின்றிருந்தாள்..
“ஏய் பொண்டாட்டி வாடி”என்று பாஸ்கர் தீப்தியை தோளோடு அணைத்துக்கொண்டு ஜானவியின் அருகில் சென்று இருவரும் நின்று கொண்டனர்.
தீப்திக்கு சந்தோசப்படுவதா இல்லை தீடிரென்று பாஸ்கர் தாலி கட்டிவிட்டான் என்று அவனிடம் கோபம் கொள்வதா என்று தெரியா வண்ணம் ஏதோ தேவலோகத்தில் இருப்பதை போல நினைத்திருந்தாள்.. சுகந்திக்கு தன் மகள் வாழ்க்கையில் ஒளி வந்து விட்டது என்று ஆனந்தம் கொண்டார்.
கிருஷ்ணா பாஸ்கருக்கு “வாழ்த்துக்கள் டா”என்று கைகொடுத்தான்
ஐய்யர் நல்ல நேரம் முடிய இன்னும் கொஞ்ச நாளிகை தான் இருக்கு என்று சொல்ல.. மாங்கல்யமும் அட்சதையும் சுமங்கலி பெண்ணிடம் கொடுத்துவிட்டு மேலே அட்சதை தட்டை ஐயரிடம் கொடுக்க சுந்தரத்திடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி கிருஷ்ணாவின் கையில் கொடுக்கப்பட
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
த்வம் சஞ்சீவ சரத சதம்
என்று ஐய்யர் மந்திரம் கூற… ஜானவியின் உள்ளே இரயில் ஓடியது. எந்த பெண்ணுக்கு தாலி கட்டும் பதட்டம் இருக்கும்.. ஜானவி பதட்டப்படுவதை கண்டு அவள் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்து நானிருக்கேன் என்று கண்ணைச் சிமிட்டினான்.
கெட்டி மேளம்…கெட்டி மேளம்…என்று ஐய்யர் சப்தமிட…
கிருஷ்ணா ஜானவியின் சங்கு கழுத்தில் பொன்தாலியை அணிவித்தான்.
மாங்கல்யம் நெஞ்சில் உரச மெய் சிலிர்த்து அமர்ந்தாள் ஜானவி.
பாலா பயந்த படியே கீதாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று வாசலில் தயங்கியபடி நின்றான்.
கீதா பாலா பயப்படுவதை கண்டு “எதுக்கு பயப்படுறீங்க” இது உங்க வீடுதானே என்றாள் முகத்தை சுருக்கி..
“இது எங்க வீடுதான்.. எங்க அப்பா அம்மா இறந்த பிறகு செல்வம் அண்ணா என்னை பார்த்துக்கிட்டாரு.. அவர் சொல்லுறதை சின்ன வயசுலேருந்து செய்வேன்.. இப்போ எங்க அண்ணன் ஒரு காரியத்தை செய்ய சொன்னாரு நான் செய்யலை மேல கோவப்படுவாரு “.. என்று கவலைபட்டு கூறினான் பாலா.
“உங்க அண்ணன் என்ன செய்ய சொன்னாங்க நீங்க எதை சரியா செய்யலை”என சற்று காட்டமான குரலில் கேட்க.
பாலா அண்ணனும் மாயாவும் திட்டம் போட்டதை அவளிடம் விளக்கி கூற
“ச்சை கேட்கவே அறுவறுப்பா இருக்கு” என்று முகம் சுளித்து
“நான் கிருஷ்ணாவ கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டேனே தவிர.. ஜானவியின் பெண்மையை கலங்கப்படுத்த நினைக்கலை.. உங்க அண்ணன் சொன்னாருனு இப்படியொரு கேவலமான காரியத்தை செய்த நீங்க.. நாளைக்கு என்னையும் உங்க அண்ணா வேண்டாம்னு சொன்னா என்னை விட்டு போய்விடுவீங்களா” என்று கோபமாக பேசினாள்.
கீதா கோவப்பட்டதை பார்த்து “ஏய் அப்படியெல்லாம் நான் உன்னை விடமாட்டேன்.. எங்க அண்ணன் கோவக்காரர் தான்.. ஆனா எங்க கோமதி அண்ணி ரொம்ப நல்லவங்க.. அவங்க எங்க அண்ணன்கிட்ட பேசி நம்மளை சேர்த்துப்பாங்க” என்று நம்பிக்கை வார்த்தை கொடுத்து கீதாவின் கோவத்தை சாந்த படுத்தினான்.
செல்வம் பாலாவின் மீது கொலைவெறியில் இருந்தான்.. “நான் செய்ய சொன்னது என்ன.. இவன் செய்து வந்திருக்கான்.. வீட்டுக்கு வரட்டும் வெட்டி பொளி போடுறேன்” என்று ஆத்திரத்துடன் கத்திக்கொண்டிருக்க
“அண்ணா” என்று வீட்டினுள் உள்ளே நுழைத்தான் பாலா.
“அங்கேயே நில்லுடா” என்று வீடே அதிரும் படி உருமி.. “நீயெல்லாம் பன்னி மேய்க்க கூட லாய்க்கு இல்லஞ் ஒழுங்கு மரியாதையா வீட்டை விட்டு வெளியே போய்விடு” என ஆத்திரத்தில் மூச்சுவிடாமல் பேசினேன்.
கணவன் ஆத்திரப்படுவதை கண்டு கோமதி “என்னங்க வீட்டுக்கு வந்த புள்ளைங்களை வெளியே நிக்கவச்சு பேசிட்டு இருக்கீங்க.. அவன் தப்பு செய்தா வீட்டுக்குள்ள கூப்பிட்டு கண்டிங்க.. அதை விட்டு பாலாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுவது தப்புங்க.. இது கொஞ்சம் கூட நல்லாயில்ல பார்த்துக்குங்க.. பாலாவுக்கும் இந்த வீட்டில் உரிமையிருக்கு என்று தன் கொழுந்தனுக்காக வக்காளத்து வாங்கி பேசினாள்.
சீற்றத்தில் இருந்தவன் கோமதி பேசிய வார்த்தைகளை மதிக்காமல் “வாயை மூடுடி.. என் குடும்ப விசயத்தில் நீ தலையிட வேண்டாம் என்று பாலாவின் மேல் இருந்த கோவத்தை எல்லாம் கோமதி மேல் காட்டினான்.
“அப்படியா நான் பேசலப்பா.. இந்த வீட்டில பேச உரிமை எனக்கு இல்லைனா.. நான் எதுக்கு இங்க இருக்கணும் இப்பவே நான் என் அம்மா வீட்டுக்கு கிளம்புறேன்.. என்று கோமதி அவளறைக்கு வேகமாக செல்ல.
“என்னடா வம்பா போச்சு.. கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா போச்சு என்று புலம்பிக் கொண்டு கோமதியின் பின்னே அவளை சமாதான படுத்த சென்றான்.
கோமதி உள்ளே சென்று அவளது உடைகளை கப்போர்டிலிருந்து எடுத்து ஒரு பையில் போட்டு அடைத்து அறையிலிருந்து வெளியே செல்ல..
அவளின் கை பிடித்து “ஏய்.. என்னடி உன்னை என் குடும்ப விஷயத்தில் தலையிட்டு பேச வேண்டாம்னுதான் சொன்னேன்.. நான் உன்னை வீட்டை விட்டு போகச் சொல்லல..என்னை விட்டு போகாதடி கோமு என கெஞ்சி .. இப்ப என்ன இவங்க ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ள சேர்க்கணும்.. அவ்வளவுதான என்றான்.
“ஆமா” என்று கையை கட்டிக்கொண்டு வீராப்பாக பேசினாள்.. எங்க அடிச்சா எங்க வலிக்கும் என்று தன் கணவனின் வீக்னெஸ் பாயின்டை பிடித்தாள்..
செல்வத்திற்கு வெளிநாட்டிலிருந்து போன் கால் வர போனை ஆன் செய்து “ஹலோ சொல்லுங்க”.. என்று கூறிவிட்டு..
“ஒரு நிமிஷம் சார்” என்று போனை தள்ளி பிடித்த செல்வம் கோமதியிடம் “உன் இஷ்டம் போல பண்ணு” என்று போன் பேசியவாறு வெளியே சென்றுவிட்டான்..
செல்வம் செய்ய போகும் காரியம் தெரிந்தால் கோமதி அவனை விட்டு பிரிந்து விடுவாள் அறியாமல் பெரும் தவறை செய்ய போகிறான்.
“தேங்கஸ் அண்ணி”
“தேங்க்ஸ் சொல்லி என்னை அந்நிய படுத்தாத பாலா.. இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா என்ன செய்யணுமோ அதைத்தான் செய்தேன்.. நீ தப்பு செய்தாலும் நல்ல அழகாக பொண்ணா பார்த்து கூட்டி வந்திருக்க.. என புன்னைகையுடன் பேசினாள்.
கீதா இதுவரை தன்னை எல்லாரும் கருப்பு என்று குறை சொன்னவர்கள் மத்தியில் கோமதி தன்னை அழகாக இருக்கிற என்று சொன்னது கீதாவிற்கு கண்ணீரை வரவழைத்தது.
“அக்கா” என்று ஓடி வந்து கோமதியை கட்டிப் பிடித்து இதுவரை எல்லாரும் என்னை கறுப்பினு என்னை கிண்டல் செய்தாங்க.. நீங்க மட்டும் தான் என்னை அழகா இருக்கேனு சொல்லிருக்கீங்க என் கண்டிக் கொண்டு அழுதாள் கீதா.
கீதாவின் கண்ணீரை துடைத்து விட்டு “வீட்டுக்கு வந்த முதல் நாள் அழ கூடாதுமா” என்று இருவரையும் குளித்து வரசொல்லி.. குளித்து வந்ததும் பூஜையறைக்கு அழைத்து சென்று சாமி படத்தின் முன் வைத்திருந்த மஞ்சள் சரடு எடுத்து வந்து பாலாவின் கையில் கொடுத்து கட்டு பாலா என்றாள்.
பாலா கீதாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு மனைவியாக்கினான்.
சுந்தரமும் வசந்தியும் கோவிலிலிருந்து வீட்டுக்கு முன்னதாக சென்றிருந்தனர்
லலிதாவின் உதவியுடன் உணவு தயாரித்து வைத்த ஆரத்தி கரைத்து விட்டு பொண்ணு. மாப்பிள்ளையின் வரவிற்காக காத்திருந்தனர்.
கிருஷ்ணா, ஜானவி, கீரன், வருண் ஒரு காரிலும், பாஸ்கர் தீப்தி ஆதினி ஒரு காரிலும் மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்தனர்.
இருகார்களும் வீட்டு வாசலில் நின்றது.. கீரன் ஜானவியின் மடியில் படுத்தவாறே தூங்கி விட்டது.. முதலில் கிருஷ்ணா காரிலிருந்து இறங்கி ஜானவியிடமிருந்து கீரனை எடுத்து தோளில் போட்டுக் கொள்ள.
சுந்தரம் கீரனை கொடுக்க மாப்பிள்ளை என்று கையை நீட்டினார்.
“இருகட்டும் மாமா நானே வைச்சிருக்கேன் கண்ணு முழிச்சி அழுவான் ” என்று கிருஷ்ணா தள்ளி நின்றிருந்த ஜானவியை கண்ணைக் காட்டி அருகே வந்து நிற்கச் சொன்னான்.. வருண் ஜானிவியின் கையை பிடித்து நின்று கொள்ள.. ஆதினி தீப்தியின் மடியிலிருந்து இறங்கி ஓடிவந்து ஜானவியின் அருகே நின்றது.. சுமங்கலி பெண்கள் கிருஷ்ணாவும் ஜானவியும் குழந்தைகளுடன் சேர்த்து ஆரத்தி எடுத்து வலது காலை எடுத்து உள்ளே சொன்னார்கள்.
.ஆதினி இறங்கிச் சென்றதும் தீப்தி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டாள்.
தீப்தியின் கவலை படிந்த முகத்தை பார்த்த பாஸ்கர் “ஏய் ஏஞ்சல் எதுக்கு முகத்தை சோகமாக வைக்காதடி இன்னும் பத்து மாசத்துல நமக்கும் ஒரு பாப்பா வந்துவிடும் கவலைபடாதடி” என்று குசும்பாக பேசி தீப்தியின் கன்னத்தில் முத்தமிட்டு காரிலிருந்து பட்டென்று காரிலிருந்து இறங்கி விட்டான்”
தீப்தியின் முகம் செவ்வானமாய் சிவந்து போனது.. உரிமையுடன் முத்தமிடும் போது தடுக்கவும் தீப்திக்கு மனமில்லை.. ஆனால் தீப்தியின் பழைய வாழ்க்கை கண் முன் வந்து போனது.
பாஸ்கரும் தீப்தியும் சேர்ந்து நிற்கச் சொல்லி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர்.
ஜானவியையும், திப்தியையும் குத்துவிக்கேற்ற சொல்ல.. மாயா வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல் “இந்த வீட்டு மருமகளுக்கு குத்து விளக்கேற்ற உரிமையிருக்கு.. தீப்திக்கு என்ன உரிமையிருக்கு விளக்கேற்ற சொல்லுறீங்க” என்று சாடை பேச கிருஷ்ணா பார்த்த பார்வையில் அடங்கிப்போனார் மாயா.
தீப்தியின் முகம் வாடிப்போனதை பார்த்து மனமுடைந்த கிருஷ்ணா “தீப்திக்கு இந்த வீட்டில் எல்லா உரிமையும் இருக்கு.. தீப்தி பொண்ணு என் தங்கை மாதிரி” என்று கூற.
நண்பன் கூறிய வார்த்தையை கேட்டு பாஸ்கருக்கு விழியோரம் கண்ணீர் கசிந்தது..
இரு பெண்களும் குத்துவிளக்கேற்றி சுவாமி கும்பிட்டதும் பால் பழம் கொடுத்து.. இருவரையும் சமையலறைக்கு அழைத்து சென்று பாலை காய்ச்சி.. பருப்பு, உப்பு, சர்க்கரை எல்லாவற்றிலும் கை வைக்க சொல்ல இருவரும் கலைத்து போய்விட்டனர்.. இரு பெண்களையும் அறைக்கு சென்று ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டனர்.
வசந்தி சுகந்தியிடம் “இந்த காலத்து பெண்கள் சிறு வேலை செய்தவதற்கே களைத்து போய்விடுகிறார்கள் இவர்கள் நாளைக்கு பிள்ளை பெறும் வலியை எப்படி தாங்குவார்களோ” என்று கிருஷ்ணா போட்ட கண்டிசனை மறந்து பேசினார்.
குழந்தைகள் ஜானவியை ஓய்வெடுக்க விடாமல் ஜானவியிடம் விளையாடிக்கொண்டிருந்தது.. ஜானவியும் குழந்தைகளிடம் சிறுபிள்ளையாய் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தாள்..
தீப்தி இனி தன் வாழ்வு எப்படியிருக்கும் என சுவற்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அத்தை நீங்களும் விளையாடலாம் வாங்க” என்று தீப்தியை அழைத்தது ஆதினி.
“நீங்க விளையாடுங்க தங்கம்” என்ற தீப்தி மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
சோகமாக இருக்கும் தீப்தியை கண்ட ஜானவி அவளின் அருகே அமர்ந்து “தீப்தி நீ எதை நினைத்து கவலைபடுறன்னு தெரியுது..உன்னோட முடிந்து போன உன் வாழ்க்கைக்கு பாஸ்கர் அண்ணா உயிர் கொடுத்திருங்காங்க.. பரத் உன் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி.. அந்த கருப்புள்ளியை அழித்து உன் வாழ்க்கையை வெண்மையாக்க வந்திருக்கிற பாஸ்கர் அண்ணாவோட சேர்ந்து வாழ பாருடி.. அவரு புடைபோட்ட தங்கம் என்று தோழிக்கு அறிவுரை கூறினாள்.
“ம்ம்” என்று தலையை மட்டும் ஆட்டினாள்.. இனி பாஸ்கரோடு தன் வாழ்க்கை வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க வேண்டும் என்று மனதில் எண்ணினாள்..
தோட்டத்தில் பாஸ்கரும் கிருஷ்ணாவும் பேசிக்கொண்டிருந்தனர்.. பாஸ்கர் கிருஷ்ணாவிடம் “உனக்கு நான் ரொம்ப கடமை பட்டிருக்கேன்டா.. இத்தனை நாள் உன்னுடைய நண்பன் என்று தான் நினைத்திருந்தேன்.. இன்றைக்கு உன் குடும்பத்தில் என்னையும் ஒருத்தனாக நினைத்து தீப்தியை தங்கச்சினு சொல்லி எங்களை உன் குடும்பத்தில் சேர்த்துக்கிட்ட..அதை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்குடா மச்சான்” என்று கிருஷ்ணாவை கட்டிக்கொண்டான்.
“டேய் இதெல்லாம் ஒரு மேட்டராடா.. ஒழுங்கா இன்னிக்கு உனக்கு நடக்குற பர்ஸ்ட் நைட்டை கொண்டாடுற வழியா பாரு” என்று கண்ணடித்தான்
“போடா” என்று வெட்கப்பட்டான் பாஸ்கர்..
ஜானவியையும், தீப்தியையும் அலங்காரப்படுத்தி கையில் பால் சொம்புடன் சில அறிவுரைகளை சொல்லி அனுப்பி வைத்தனர் பெரியவர்கள்.
தீப்தி பரத்துடன் நடந்த முதல் இரவை நினைத்து பயந்தபடியே பால்சொம்பை இறுக பிடித்தபடி பாஸ்கரின் அறைக்குள் சென்றாள்.
பாஸ்கர் கட்டிலில் நகத்தை கடித்து கொண்டு தீப்தியிடம் எப்படி நடந்து கொள்வது என்று பதட்டப்பட்டுக் கொண்டிருந்தான்.
தீப்தி பாஸ்கரின் விருப்படி நான் நடந்து கொள்ளவேண்டும்.. என்று மனதிற்குள் திருக்குறள் மனப்பாடம் செய்வது போல சொல்லிக்கொண்டு அடிமேல் அடி எடுத்து கட்டிலின் அருகில் வந்து பால் சொம்பை பாஸ்கரிடம் கைகள் நடுங்க நீட்ட.. வளையோசை கேட்டு நிமிர்ந்து பார்த்து அசந்து போனான்,
தினமும் ஆபிஸில் தீப்தியை சுடிதாரில் பார்த்து பழக்கப்பட்டவன்.. இன்று அவன் கட்டிய மஞ்சள் கயிறு அவளின் மார்பில் உறவாட.. ஒற்றை பீளீட் விட்டிருந்த டிசைனர் சாரியில் அவளின் எழில் வனப்புகள் கண்ணாடி போல தெரிய.. அழகு தேவதையாக நின்றிருந்த தீப்தியை குறுகுறுவென்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.