ATM Tamil Romantic Novels

மன்னவன் பார்வையிலே 15,16

அத்தியாயம் 15

 

வீரா கூறியதை கேட்டு கிரகிக்க கூட முடியாமல் மிரட்சியுடன் நின்றிருந்தாள் நந்தினி.

 

நந்தினி அந்த அறையின் உள்ளே வரும் போது ஒன்றும் அவள் உணரவில்லை அவன் அருகில் வரும் போது தான் வீராவின் மீது இருந்து வந்த பர்ஃபியூமின் மணம் அவளுக்கு சந்தேகத்தை வரவழைத்தது இதே மணம் தானே அன்று குளியலறையில் இவள் மீது படர்ந்தவன் மீதும் வந்தது 

அது மட்டுமின்றி அவனின் உடல்வாகு வீராவின் உடல்வாகுடன் ஒத்து இருந்ததால் தான் அவளுக்கு இவன் மீது அதிக சந்தேகம் வர காரணம் அதனால் தான் அவள் உறுதியாக வீரா தான் அன்று தன்னுடன் கழிவறையில் இருந்தான் என்று யூகித்திருந்தாள்.

 

அந்த பர்ஃபியூமின் மணம் நந்தினிக்கு மீண்டும் சந்தேகத்தை வரவழைக்க அவனிடம் கேட்டேவிட்டாள்

அவனும் பதிலுக்கு ஆமாம் என்று கூறியவுடன் மறுவார்த்தை கூற முடியாமல் வாயடைத்து போய் நின்றுவிட்டாள்.

 

நந்தினி தன்னையே பார்த்து கொண்டே இருப்பதை பார்த்த வீரா தன் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி “என்ன” என்று அவளிடம் கேட்டான் 

உடனே அவளுக்கு கோபம் வந்துவிட்டது 

“நீயெல்லாம் மனுசனா எதுக்காக அப்படி பண்ணின சொல்லு

ஊர்ல எல்லாரும் உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு எவ்வளவு கேவலமா பேசிக்கிறாங்க உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா பாவி” என்று நந்தினி கேட்டுக் கொண்டே கோபத்துடன் அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்.

 

“ஏய் முதல்ல என் சட்டையில் இருந்து கையை எடு டி” என்று கூறிக் கொண்டே தன் சட்டையில் இருந்து அவளின் கையை விலக்கினான் வீரா.

 

“எனக்கு உன்னோட கல்யாணத்தை நிறுத்தனும் எனக்கு வேற வழி தெரியல அதனால தான் அப்படி பண்ணினேன்” என்றான் வீரா கோபத்துடன்.

 

நந்தினி வீராவின் முகத்தை பார்த்து பயந்தேவிட்டாள் இவனுக்குள் இவ்வளவு வன்மம் இருக்கிறதா என்று.

 

அன்று இரவு…

 

வினோத் தன் நண்பனிடம் கண்ணை காட்டிவிட்டு அந்த குளியலறையின் உள்ளே நுழைந்தான்.

 

அப்போது வீரா மண்டபத்தின் உள்ளே சிக்னல் இல்லாததால் அலைபேசியில் யாருடனோ பேசுவதற்க்காக வெளியில் வந்து நின்றிருந்தான் வினோத் அந்த குளியலறையின் உள்ளே நுழைவதையும் பார்த்து கொண்டே தான் இருந்தான் அவன் சாதரணமாக தான் உள்ளே செல்கிறான் என்று நினைத்த வீரா எதுவும் கண்டுகொள்ளவில்லை.

 

வீரா இருட்டில் நின்றிருந்ததால் வினோத் அவனை பார்க்கவில்லை.

 

அந்த நேரம் பாக்கியமும் தண்ணீர் வரவில்லை என்று அங்கேயும் இங்கேயும் சுற்றி கொண்டு இருந்தார்.

 

நந்தினி டவல் ஒன்றை எடுத்து கொண்டு அந்த குளியலறையின் உள்ளே சென்றாள் அவள் முனகும் சத்தம் கேட்டு வீரா உள்ளே செல்லும் போது அவள் அரை மயக்கத்தில் கிடந்தாள்

வினோத் அடித்ததில் அவள் மயங்கியிருந்தாள்.

 

வினோத் அதற்க்குள் அங்கிருந்து ஓடி விட வெளியே பாக்கியத்தின் குரல் கேட்டு கொண்டிருந்தது வீரா ஏதோ யோசித்தவன் தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று வேண்டுமென்றே அவள் மீது படர்ந்து அவளின் உடைகளை கலைந்து தூக்கி எறிந்தான் நந்தினி அரை மயக்கத்தில் இருந்தாலும் அந்த பர்ஃபியூமின் நெடியை அவள் உணர்ந்தாள்.

 

வீரா இருட்டில் தன் தலையையும் உடைகளையும் கையால் கலைத்து கொண்டான்.

 

அவன் எதிர்ப்பார்த்தை போன்று தடைப்பட்ட மின்சாரம் வந்து விட 

பாக்கியமும் கதவை திறந்து வந்தார்.

 

அவனுக்கு தெரியும் இவர்கள் இருவரையும் இந்த கோலத்தில் பார்த்தால் கண்டிப்பாக அவர் கத்தி கூச்சலிடுவார் என்று அவன் எதிர்ப்பார்த்தை போன்று அனைத்தும் நடக்க ஒரு வழியாக திருமணமும் நல்லபடியாக முடிந்தது.

 

வீராவுக்கு பிடிவாதம் கோபம் திமிர் என அனைத்துமே சிறு வயதில் இருந்தே சற்று அதிகப்படியாக தான் இருந்தது 

அவன் ஒன்றை மனதில் நினைத்துவிட்டாள் அவன் அதை அடையும் வரை ஓய மாட்டான்.

 

நந்தினிக்கு பதட்டத்தில் எதுவும் பேச கூட முடியவில்லை அவள் நன்றாக யோசித்து பார்க்கும் போது தான் அவளுக்கு அனைத்தும் விலங்கியது ஆக அனைத்தும் இவன் சதி தான் என்று முன்பு போல் இல்லாமல் இடையில் தன் மீது இருந்த அவன் மையல் பார்வையையும் நினைத்து பார்த்தாள் இப்போது தான் அவளுக்கு அனைத்தும் விளங்கியது.

 

“இந்த விஷயம் சுபாஷ்க்கு மட்டும் தெரிஞ்சுது அவரு உன்னை சும்மா விட மாட்டாரு” என்று நந்தினி கோபத்துடன் கத்தினாள்.

 

சுபாஷ் என்ற வார்த்தையை கேட்டவுடன் வீராவுக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது அவளின் கழுத்தை பிடித்து நெரித்தவன் அவளை சுவற்றோடு சுவராக சாய்த்து அவளை தன் உயரத்துக்கு தூக்கி நிறுத்தினான் அவள் கால்கள் அந்தரத்தில் ஆடியது.

 

“என்ன டி சுபாஷ் அவன் என்ன பெரிய இவனா நான் தான் உனக்கு புருஷன் நீ எனக்கு மட்டும் தான் 

உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் இந்த ஜென்மத்தில் நான் மட்டும் தான் உனக்கு புருஷன்” என்று கூறியவன் அவள் மூச்சு விட சிரம்மப்படும் போது தான் அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்தான்.

 

அவளின் கழுத்தில் இருந்து கையை எடுத்தவுடன் நந்தினி தரையில் விழுந்தாள் கீழே விழுந்தவள் இறுமி கொண்டே இருந்தாள்.

 

வீரா அவளை ஒரு பொருட்டாக கூட மதியாமல் பக்கத்தில் இருந்த பால் சொம்பை எடுத்து பாலை டம்ளரில் ஊற்றி குடிக்க தன் வாய் அருகே கொண்டு சென்றான் 

“உனக்கு வேணுமா டி” என்று கேட்க நந்தினி கோபத்துடன் எழுந்து அவன் அருகில் வந்து அவனை தன் கையை ஓங்கி கொண்டு அடிக்க போக ஒற்றை கையால் அவளின் இரு கைகளையும் பிடித்துக் ‌கொண்டவன் பொறுமையாக டம்ளரில் இருந்த பாலை பருகி முடித்தான் “இப்போ அடி டி” தேம்பாக அவளின் கையை விடுவித்து தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்க நந்தனி தன் கையில் இருந்த கண்ணாடி வளையல்கள் சலசலக்க வேக வேகமாக அவன் நெஞ்சில் அடித்தாள்.

 

வீராவுக்கு அவள் அடித்த அடி எதுவுமே வலிக்கவேயில்லை சிறு குழந்தை தன் நெஞ்சில் தட்டி விளையாடுவதை போன்று இருந்தது.

 

நந்தினி அவனை அடித்து அடித்தே சோர்ந்து அப்படியே தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

 

வீரா அவளின் அழுகையை பார்த்தவனுக்கு இதழோரத்தில் ஒரு சிறு புன்னகை கூட மலர்ந்தது.

 

அவன் சிரிப்பதை பார்த்த நந்தினிக்கு இன்னும் கோபம் அதிகரித்தது “இரு டா இப்போவே உன்னை பத்தி வீட்ல இருக்கவங்க எல்லார் கிட்டையும் சொல்லி உன் முகத்திரையை கிழிக்கிறேன்” என்று அவள் வெளியில் செல்ல போக வீரா அவளின் கைப்பிடித்து தடுத்தான்.

 

நந்தினியின் கையை பிடித்து அவளின் முதுகின் புறம் வளைத்து பிடித்து கொண்டான் வீரா 

“என்ன டி ரொம்ப துள்ளுற சின்ன பொண்ணா இருக்கியேன்னு பாவம் பார்த்து விட்டா ரொம்ப ஆடுற உன்னை அவ்வளவு சீக்கிரமா விட்டு கொடுக்க தான் உன்னை கல்யாணம் பண்ணினேனா நீ இந்த ரூம் விட்டு வெளியே போகும் போது முழுசா இந்த வீராவோட பொண்டாட்டியா தான் போகனும்” என்று கூறி கொண்டே அவளை தூக்கி தன் தோளில் போட்டு கொண்டவன் அவளை தன் படுக்கைக்கு தூக்கி சென்றான்.

 

“ஏய் என்னை.. விடு.. விடு…” என்று நந்தினி கத்தி கொண்டே அவன் தோளில் வேக வேகமாக அடித்து கொண்டே இருந்தாள்.

 

வீரா அவளின் அடி எதையும் கண்டுகொள்ளாமல் அவளை படுக்கைக்கு தூக்கி சென்றவன் பொத்தென்று அவளை படுக்கையில் போட்டான் நந்தினி அவன் போட்ட வேகத்தில் படுக்கையில் விழுந்து விட 

அவள் சுதாரித்து எழுந்து கொள்ளும் முன்னே வீரா அவள் மீது விழுந்தான்.

 

அவள் பயத்துடன் அவன் முகத்தை பார்த்து கொண்டே இருக்க பட்டாம்பூச்சியின் சிறகை போன்று துடித்து கொண்டு இருக்கும் அவளின் மையிட்ட கண்களை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய அவளின் கண்களில் மெல்ல தன் இதழ் பதித்து விலகினான் வீரா.

 

நந்நினிக்கு அவன் தன்னை இதழால் தீண்டியது எரிச்சலடைய செய்ய கோபத்துடன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

 

நந்தினி அவனை அறைந்துவிட்டு எங்கே அவன் தன்னை மீண்டும் அடித்து விடுவானோ என்று பயத்துடனே பார்த்து கொண்டே இருந்தாள்.

 

வீரா கோபத்துடன் அவள் இரு கைகளையும் உயர்த்தி பிடித்தவன் தன் இதழால் அவளின் காது மடலை உரசிக் கொண்டிருக்க அவனின் உஷ்ன மூச்சு காற்றை நன்கு உணர்ந்தாள் “என்ன டி கண்ணுல முத்தம் கொடுத்துக்கே கோபம் வருதா காலையில விடியுறதுக்குள்ள உன் உடம்புல என் உதடு படாத இடமே இருக்காது பார்க்குறியா” என்றான் அவளின் சிவந்து இதழ்களை தன் கண்களால் பருகி கொண்டே அவள் சற்றும் எதிர்பாராத சமயம் அவள் இதழில் தன் இதழை பதித்தான்.

 

நந்தினி அவனை விலக்கி தள்ள துடித்தாலும் அவளால் ஒரு அடி கூட அவனை நகர்த்த முடியவில்லை ஆறடி உயரமுள்ள ஆண் மகனை மெல்லிய மேனியுடைவாளால் எப்படி நகர்த்த முடியும்.

 

முதலில் அவனிடம் தன் எதிர்ப்பை காட்டி தவித்து கொண்டிருந்தவள் நேரம் ஆக ஆக அந்த முத்தத்திற்க்கு அவளின் உடலும் மனமும் ஈடு கொடுக்க ஆரம்பித்தது அவள் மனதில் ‘இது வேண்டாம்’ என்று கூறிக் கொண்டே இருக்க அவளின் உடலோ தலைவனுக்கு முழுதாக தன் ஒத்துழைப்பை வாரி வழங்கி கொண்டு இருந்தது.

 

அவளின் இதழில் தன் முதல் முத்திரையை பதித்து கணவன் என்ற உரிமையை நிலைநாட்டியவன் 

அவளை முத்தமிட்டு கொண்டே தன் கைகளில் இருந்த அவளின் கையை மெல்ல விடுவித்தான்.

 

அவளின் இதழில் இருந்த தன் இதழ்களை கழுத்து வளைவிற்க்கு கொண்டு வந்தான் வீராவின் கைகைள் மெல்ல ஊர்ந்து கீழே இறங்கி அவளின் மலை முகட்டில் ஒன்றை அழுத்தி பிடித்து கொள்ள நந்தினி சுயநினைவுக்கு வந்து அவனின் கையை தள்ளிவிட்டாள் வீராவுக்கு உடனே கோபம் வந்துவிட்டது.

 

நந்தினியின் மேல் இருந்து எழுந்தவன் கோபத்துடன் அவளின் இரு கைகளையும் அந்த கட்டிலின் இரு முனைகளிலும் கட்டி வைத்தான்.

 

“ஏய் என்ன பண்ற” என்று அவள் அலறி துடித்து கொண்டு இருக்க

அவளை ஒரு பொருட்டாகவே அவன் மதிக்காமல் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து அந்த அறையையே இருள் ஆக்கியவன் ஒரு பெரிய மெழுகுவர்த்தி ஒன்றை மட்டும் ஏற்றி வைத்தான்.

 

இவன் என்ன செய்கிறான் என்று அவனை பார்த்து கொண்டே இருந்தவள் தன் இரு கையையும் அந்த கட்டிலில் இருந்து விலக்க முயற்சி செய்து தோற்று போனாள்.

 

வீரா அவளை கண்களால் திண்பதை போன்று பார்த்து கொண்டே தன் சட்டையின் பட்டன்களை கழட்டியன் தன் ஷர்ட்டை கழட்டி எறிந்தான்.

 

‘முருகா என்ன காப்பாத்து’ என்று நந்தினி பயத்துடன் மனதில் வேண்டி கொண்டு இருக்க 

முருகனுக்கு அவளின் வேண்டுதல் கேட்டுவிட்டதோ என்னவோ அந்த அறையின் கதவை யாரோ வெளியில் இருந்து தட்டினர்.

 

 

அத்தியாயம் 16

 

கதவை தட்டும் சத்தம் கேட்டு வீரா கதவின் புறம் திரும்பி பார்த்தவன் நந்தினியின் கைக்கட்டை அவிழ்த்து விட்டு வெளியே சென்றான்.

 

வெளியே சென்ற வீரா யார் என்று பார்க்க அங்கே அருண் தான் தயக்கத்துடனே நின்றிருந்தான்.

 

“சாரி மச்சான் சிவ பூஜையில கரடி புகுந்த மாதிரி வந்துட்டனா என்னோட மொபைல் உள்ளே இருக்கு அதை மட்டும் கொஞ்சம் எடுத்து கொடு டா பிளீஸ்” என்று கேட்டான் அருண்.

 

வீரா இடுப்பில் கை வைத்து கொண்டே அவனை ஒரு முறை நின்று முறைத்து பார்த்தவன் மீண்டும் உள்ளே வந்து கதவடைத்தான்.

 

அருணின் அலைப்பேசி எங்கே இருக்கிறது என்று லைட்டை போட்டு தேடி கொண்டு இருந்தான் வீரா 

இது தான் சமயம் என்று நினைத்த நந்தினி மெல்ல நடந்து வெளியே செல்ல போக 

“எங்கே போற டி” என்று கேட்டான் வீரா.

 

நந்தினி அவன் கேள்வியில் பயத்துடனே நின்று கொண்டாள்

என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தவள் “பா…பா..த்..ரூம்” என்று திக்கி திணறி கூறினாள் “சரி போய்ட்டு வா” என்று கூறினான்.

 

நந்தினியும் வெளியே சென்று விட டேபிள் மீது இருந்த அருணின் மொபைலை எடுத்து கொண்டு வந்து கொடுத்தான் வீரா.

 

வெளியே வந்த வீராவுக்கு வீடே அமைதியாக இருப்பதை போன்று தோன்ற “என்ன டா வீடே அமைதியா இருக்கு எல்லாரும் எங்கே?” என்று கேட்டான்.

 

“எல்லோரும் நைட் ஷோ படத்துக்கு போய்ருக்காங்க காலையில தான் வருவாங்க நானும் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அருண் அங்கிருந்து சென்றான்.

 

இங்கே குளியலறையின் உள்ளே வந்து கதவடைத்து கொண்டே நின்றிருந்தாள் நந்தினி வெளியே செல்லவே அவளுக்கு பயமாக இருந்தது தன்னிடம் இருந்த கைப்பேசியில் சுபாஷ்க்கு அழைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.

 

என்னதான் வீராவிடம் தைரியமாக இருப்பதை போன்று காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் அவனை நினைத்து பயமாக தான் இருந்தது.

 

வீட்டின் பின்புறம் நின்றிருந்த‌தால் போனில் சுத்தமாக சிக்னல் இல்லை எவ்வளவு முயற்சி செய்தும் சுபாஷ்க்கு ஒரு ரிங் கூட போகவே இல்லை கண்கள் இரண்டும் கலங்க ஆரம்பித்தது

அழுது கொண்டே அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டே நின்றிருந்தாள் நந்தினி.

 

அந்த நேரம் வீரா வெளியே இருந்து கதவை தட்டினான் “நந்தினி நந்தினி” என்று அவன் கதவை தட்டி கொண்டே அழைக்க

அந்த பக்கம் இருந்து பதில் எதுவும் வரவேயில்லை.

 

அந்த பக்கம் இருந்து பதிலும் வராததால் வீரா பதட்டத்துடனே மீண்டும் கதவை உடைத்து விடுவதை போன்று ஓங்கி தட்ட ஆரம்பித்தான் “நந்தினி நந்தினி” என்று.

 

நந்தனி பயத்துடனே நின்றிருந்தவள் “இதோ வரேன்” என்று முகத்தை கழுவி கொண்டு வந்து கதவை திறந்தாள்.

 

“ஏன் டி அறிவுக்கெட்டவளே ஒரு தடவை கூப்பிட்டா உன்னால பதில் சொல்ல முடியாது” என்று கத்தி கொண்டே வீரா அவள் அருகில் கையை ஓங்கி கொண்டு வர

நந்தினி கண்கள் பயத்துடன் படபவென அடித்து கொண்டது இதய துடிப்பு எகிற ஆரம்பித்தது.

 

நந்தினி பயந்து நிற்பது பார்த்தவன் ஓங்கிய கையை கீழே இறக்கினான்.

 

அப்போது தான் கவனித்தான் அவள் கையில் மொபைல் இருப்பதை “யார் கிட்ட போன் பேச போன” என்று அவளிடம் கேட்டு கொண்டே அவளிடம் இருந்து அந்த மொபைலை வாங்க முயற்சி செய்ய அவனிடம் அந்த மொபைலை கொடுக்காமல் அவள் பின்னே மறைத்து கொண்டாள்.

 

“ஏய் போனை கொடு” என்று கேட்டு கொண்டே வீரா அவள் முன்னே வர நந்தினி பின்னே நகர்ந்து சென்றவள் தட்டுத்தடுமாறி பின்னே இருந்த தொட்டியில் கால் தடுக்கி விழ போனாள்.

 

வீரா ஓடி வந்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்து கொள்ள இருவரும் நிலை தடுமாறி அந்த பெரிய தண்ணீர் தொட்டியின் உள்ளே விழுந்தனர்.

 

அந்த மொபைலும் தண்ணீரின் உள்ளே விழுந்தது தண்ணீரில் மூழ்கிய நந்தினியை தன்னுடன் கெட்டியாக பிடித்து கொண்டு எழுந்தான் வீரா.

 

நந்தனி தண்ணீரில் விழுந்ததில் அவளின் புடவை தன் கடமையை சரியாக செய்யாமல் மறைக்க வேண்டிய இடங்களை எல்லாம் ஆங்காங்கே வெளிச்சம் போட்டு காட்டி கொண்டு இருந்தது 

வீரா கண்கள் வஞ்சனையே இல்லாமல் அவள் மேனியெங்கும் அலைபாய்ந்து கொண்டு இருந்தது.

 

நந்தினி அவனின் தொடுகை பிடிக்காமல் அவனை தன்னிடம் விலக்கி தள்ள பார்க்க அவளை இன்னும் இன்னும் தன்னோடு சேர்த்தணைத்து கொண்டான்.

 

“என்ன டி ரொம்ப துள்ளுற நான் உன் மேல நான் கை வச்சா பிடிக்காது ஆனா அந்த சுபாஷ் கை வச்சா மட்டும் பிடிக்கும் அப்படி தான அவனுக்கு தான போன் பண்ண வந்த” என்று கேட்டான் கோபத்துடன் வீரா.

 

அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்றிருந்தாள்

இருவரும் வெகு நேரமாக அந்த தண்ணீர் தொட்டியில் நின்றிருக்க கார்த்திகை மாத பனி வேறு அவர்களின் உடலை ஊடுருவி குளிர செய்தது.

 

பனி காற்று வீசும்போது நந்தினிக்கு லேசாக உதறல் கூட எடுக்க ஆரம்பித்தது வீரா அவளின் முகத்தில் தோன்றும் பாவனைகளை பார்த்து கொண்டே இருந்தவன் ஏதோ புரிந்தவனை போல அவளின் இடையில் கை கொடுத்து தன் கையில் அவளை ஒரு குழந்தையை போல் தூக்கி கொண்டான்.

 

அவளை கையில் வைத்து கொண்டே தண்ணீர் தொட்டியில் இருந்து இறங்கியவன் வீட்டின் உள்ளே அவளை தூக்கி வந்தான்.

 

அறையின் உள்ளே வந்து அவளை இறக்கிவிட்டவன் “டிரஸ் மாத்திக்கோ உடம்பு குளிரில் நடுங்குது பாரு” என்றான் வீரா.

 

“சரி நீங்க வெளியே போங்க” என்று அவள் தலை குனிந்து கொண்டே கூறினாள்.

 

“எதுக்கு நான் இப்படி வெளியே போன உடனே பின் வாசல் வழியா அந்த சுபாஷ் கூட ஓடி போக வா 

இங்கேயே கழட்டி மாத்து டி” என்றான் கோபத்துடனே கேட்டான் வீரா.

 

நந்தினி பதிலுக்கு “டிரஸ் மாத்த தான் உங்களை வெளியே போக சொன்னேன்” என்றாள் நடுக்கத்துடனே.

 

அவனும் கபோர்டின் அருகில் சென்றவன் அங்கிருந்த ஒரு ஷார்ட்சை மட்டும் கையில் எடுத்து கொண்டான் ஏதோ பல வருடம் குடும்பம் நடத்திய மனைவியின் முன்னே உடையை மாற்றுவதை போன்று எந்த வித கூச்சமும் இல்லாமல் சாதாரணமாக உடையை மாற்றினான்.

 

நந்தினி அவனை பார்க்க முடியாமல் முகத்தை திருப்பி கொண்டாள்.

 

இப்போதும் வீராவுக்கு நந்தினியின் மீது பொல்லாத காதலா என்று கேட்டாள் அது அவனுக்கே தெரியாது சுபாஷ் அவளை திருமணம் செய்யவே கூடாது என்ற ஒரே காரணத்திற்க்காக தான் அவன் அவளை திருமணம் செய்து கொண்டது.

 

“என்ன டி டிரஸ் மாத்தலையா” என்று கேட்டுக்கொண்டே வீரா அங்கிருந்த நாற்காலியை போட்டு அவளை பார்த்து கொண்டே அமர்ந்து கொண்டான்.

 

“இல்லை பரவாயில்லை நான் அப்படியே இருந்துக்குறேன்” என்றாள் நந்தினி.

 

“நான் வேணும்னா ஹேல்ப் பண்ணவா” என்று வீரா கேட்டான்

“வேண்டாம் எனக்கு தூக்கம் வருது நான் தூங்கவா பிளீஸ்” என்று கேட்டாள் நந்தினி.

 

“ம்ம்” என்று வீரா பதில் கூற

நந்தனி பால்கனி வழியாக புடவையை பிழிந்து விட்டு வந்து அங்கிருந்த பாயை கீழே விரித்து அதில் தலையணையை போட்டு கொண்டு அதே ஈர உடையுடன் படுத்து கொண்டாள்.

 

வீரா அவளை வன்மத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேண்டுமென்றே ஏசியை ஆன் செய்தான் அந்த அறையை உள்ளிருந்து பூட்டி சாவியை தன் பாக்கெட்டில் போட்டு கொண்டு வந்து பெட்டில் படுத்து கொண்டான்.

 

ரிமோட்டை எடுத்து வேண்டுமென்றே ஏசியை அதிக குளிரில் வைத்தவன் ஒரு போர்வையை எடுத்து போர்த்தி கொண்டு படுத்து கொண்டான்.

 

நந்தினி தான் அணிந்திருந்த புடவையை தன்னோடு இழுத்து போர்த்தி கொண்டு படுத்திருந்தாள் ஈர புடவை அந்த அறையில் குளிர் வேறு அவளை பாடாய் படுத்தி எடுக்க ஆரம்பித்தது.

 

அந்த அறையில் இருந்த ஒரே ஒரு போர்வையையும் வீரா போர்த்தி கொண்டு படுத்து உறங்கி கொண்டிருந்தான் அவனிடமிருந்து சீரான மூச்சு காற்று வெளியே வருவதை பார்த்தவள்.

 

குளிரில் தன் கைகைள் விரைத்து போக ஆரம்பிக்க நந்தினி சத்தம் போடாமல் மெல்ல எழுந்து சென்று கபோர்டில் இருந்த நைட்டி ஒன்றை கையில் எடுத்தவள் தான் அணிந்திருந்த உடைகளை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தாள்.

 

என்ன தான் அவள் சத்தம் போடாமல் இருட்டிலேயே உடை‌ மாற்றி விட எண்ணினாலும் அவளின் கையில் அணிந்து இருந்த கண்ணாடி வளையலின் சிணுங்கள் அந்த அறை எங்கும் கேட்க ஆரம்பித்தது.

 

அந்த சத்தத்திலேயே அந்த கள்ளனும் மெல்ல கண்ணை திறந்தான் அந்த விடிவிளக்கின் வெளிச்சத்தில் தன்னவளின் மேனி முழுவதும் தன் கண்களை ஓடவிட்டான்.

 

சும்மாவே அவளிடம் மயங்கி தான் கிடக்கிறான் அவளை இந்த கோலத்தில் பார்த்தவனுக்கு மோகம் தலை தூக்க ஆரம்பித்தது.

 

வீரா பெண் பித்தன் என்றெல்லாம் கூறி விட முடியாது இத்தனை வருடத்தில் எந்த பெண்ணையும் ஏறேடுத்து பார்த்ததில்லை ஏனோ இவளிடம் மட்டும் பொல்லாத எண்ணங்கள் எல்லாம் தோன்றி அவனை இம்சை செய்ய ஆரம்பித்தது.

 

நந்தினி தன் ஈர புடவையை கழட்டி எறிந்தவள் தன் மேலாடையின் கொக்கிகளை அவசரமாக நீக்கி கொண்டு இருந்தாள் அதுவோ நான் பிரியவே மாட்டேன் என்று அவளிடம் சண்டையிட்டு கொண்டிருந்தது.

 

குளிர் தாங்க முடியாமல் வேகமாக பிடித்து இழுத்து கொண்டு இருந்தாள் மனதில் வீராவை திட்டிக் கொண்டே இருந்தாள்.

 

அப்போது திடீரென அவளின் வெற்றிடையில் யாரோ கையை நுழைப்பதை போன்று தோன்ற 

பதட்டத்துடனே திரும்பினாள் நந்தினி.

 

அவள் முன்னே அவளின் கணவன் தான் நின்றிருந்தான்

“நான் தான் ஹேல்ப் பண்றேன்னு சொன்னனே டி லட்டு என்னை எழுப்பி இருக்க வேண்டியது தான” என்று கண்ணடித்து அவளிடம் கேட்டான்.

 

நந்தினி பயத்துடனே நின்றிருக்க வீரா அவளின் மேலாடையின் கொக்கியில் கை வைக்க போனான் நந்தினி அவனின் கையை தன் மேல் இருந்து கோபத்துடன் தட்டிவிட்டாள்.

 

மேலும் அவன் கண்களை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

 

இத்தனை வருடமாக அவளுடன் தான் அவன் இருக்கிறான் இதுவரை ஒரு தப்பான பார்வை கூட அவன் பார்த்தது இல்லை என்று அவளுக்கு சுபாஷ் உடன் திருமண பேச்சை எடுத்தார்களோ அன்றிலிருந்து இவன் பார்வை மாறியிருந்தது.

 

வீராவின் அந்த கண்கள் புலி மானை வேட்டையாடும் போகும் ‌பார்வையை போன்று இருந்தது.

 

நந்தினி வெளியே தைரியமாக நின்று கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் பயத்துடனே நின்றிருந்தாள்.

 

 

தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “மன்னவன் பார்வையிலே 15,16”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top