அத்தியாயம் 34
எப்போதும் போல் அதிகாலையில் வீட்டிற்கு வந்தவனை கவனித்துக் கொண்டிருந்தார் பட்டு மாமி. வழக்கம் போல் தன் அறைக்குள் நுழைந்தவனின் கண்ணில் குழந்தையென உறங்கும் வியனி தான் விழுந்தாள்.
‘என்னை ராத்திரிப் பூரா தூங்கவிடாம பண்ணிட்டு நீ மட்டும் கும்பகர்ணி மாதிரி நல்லா குறட்டை விட்டு தூங்கும்?! இருடி வர்றேன்.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், நேரே வியனியின் அருகே சென்று அவளை அணைத்தவாறு நெருங்கிப் படுத்துக் கொண்டான். அவளை பின்னால் இருந்து, இடையில் கையிட்டு அணைத்திருந்தவனின் முகத்தினை மயிலிறகாய் வருடியது வியனின் கருங்கூந்தல். அதில் வந்த வாசனையை நுகரும் பொருட்டு, தனது முகத்தினை அவளது பின்னங்கழுத்தில் வைத்து அழுத்த, உறங்கிக் கொண்டிருந்த வியனி சட்டென அவன் புறம் திரும்பினாள். அவள் திரும்பிய வேகத்தில் அவர்களது இதழ்கள் இரண்டும் ஒன்றையொன்று தீண்டவே, ஆரிகேத்தின் உடலிற்குள் மின்சாரம் பாய்ந்தது. அவளாக அவனுக்கு அளிக்கும் முதல் முத்தம். திகட்டாத இனிப்பாக தித்தித்தது. தூக்கத்தில் இன்னும் கொஞ்சம் அவனை நெருச்கி வந்தவள்,
“ம்ம்ம்.. கேஎஃப்சி சிக்கன்னா.. கேஎஃப்சி சிக்கன் தான்.. என்ன ஒரு சாஃப்ட்?” என்றவள் மீண்டும் அவனது இதழ்களை கடித்து சுவைக்க ஆரம்பித்தாள். தன் கண்களை மூடிக் கொண்டு, அவளுக்கு தன் இதழ்களை சுவைக்கக் கொடுத்தவன், அவள் தன் இதழ்களில் கொடுக்கும் அழுத்தம் தாளாது அவளது இடையில் இருக்கும் தன் கையில் அழுத்தம் ஒன்றை கொடுத்தான் ஆரிகேத். அவன் கொடுத்த அழுத்தத்தில் மடக்கி வைத்திருந்த தன் கால்களை நீட்டி, தனது வலது காலை வசதியாக ஆரிகேத்தின் மேல் தூக்கிப் போட்டவளை இன்னும் நெருக்கமாக இறுக்கி அணைத்துக் கொண்டான். அவளது மூச்சுக்காற்றோடு தன் மூச்சுக்காற்றை கலக்கவிட்டவனின் கைகள், அவளது கழுத்துவளைவினை அளந்து அங்கே அலை அலையாக கிடந்த கூந்தலை சுருட்டி அவளது கன்னத்தில் வருட, கூசிச் சிலிர்த்தது மங்களையவளின் தேகம். கூச்சத்தில் அவனது இதழ்களை மேலும் அழுத்திக் கடிக்க, அவள் கொடுக்கும் வலி கூட சுகமாகயிருந்தது. அவனது பின்னந்தலை முடிக்குள் கைவிட்டு அலைந்தவளின் மனதுக்குள்,
‘கேஎஃப்சி சிக்கனை றெக்கையோடவா கொடுப்பாங்க. இவ்வளவு றெக்கை இருக்கு. அதுவும் பொசு பொசுன்னு சாஃப்ட்டா இருக்கு.’ என்று நினைத்தவள் பட்டென கண் திறந்தவளின் முன்னே அரைகண்ணை மயக்கத்தில் மூடியபடி அவளை அணைத்துப் படுத்திருந்த ஆரிகேத் விழுகவே, பட்டென அவனைக் கடித்து சுவைத்துக் கொண்டிருப்பதை நிறுத்தினாள்.
‘அய்யோ! நானா இப்படி பண்ணேன்?! அவன் என்னைப் பத்தி என்ன நினைப்பான்?! ஏற்கனவே நான் அவனை மயக்குற திட்டதுல தான் நேத்து அந்த மாதிரி நின்னேன்னு தப்பா நினைச்சுட்டுருப்பான். இப்போ நானே வலியப் போயி முத்தங்கொடுத்துருக்கேனே இதுக்கு என்ன கலாட்டா பண்ணப் போறானோ?’ என்று மனத்தில் எண்ணிக் கொண்டவள், மெல்ல எதுவுமே நடவாதது போல் எழுந்து குளியலறைக்குள் நுழையும் முன், அவளை இடைமறித்து நின்றான் ஆரிகேத்.
‘இப்ப என்னப் பண்ணுறது? சமாளிப்போம்.’ என்று நினைத்தவள் நிமிர்ந்து நின்று அவனை நேராக பார்க்க முயன்றாலும் அவனது கண்களைப் பார்க்க முடியாது, தலை கவிழ்ந்து போய் நின்றிருந்தாள் வியனி ஹில்டா.
“க்கும்.. ஹனி! நேத்து நைட் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்த?” என்றவன் கேட்டதும் சட்டென சீறும் நாகமாய் அவனைப் பார்த்து முறைத்தவள்,
“ஓஹோ! அதுக்குள்ள வத்தி வைச்சுட்டாங்களா?” என்று பல்லை நறநறவென கடித்தவாறு கேட்க,
“அவங்க வத்தி வைச்சாங்களோ? இல்லையோ? அதையெல்லாம் நீ பேசாத. நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு.” என்றவளின் மணிக்கட்டை அளித்துப் பிடிக்க,
“ஆமா! நடு ராத்திரியில பேய் மாதிரி தான் வீட்டுக்கு வந்தேன். போதுமா? எப்பவும் இல்லாத அக்கறை இப்போ என்ன புதுசா என் மேல அப்படியே பிழியுறீங்க?” என்று அவனிடம் இருந்து தன் கையை விடுவிக்கப் போராடியவளை தன் மார்போடு இறுக்கி, அவளது கையை அவளின் பின்புறமாக வளைத்து முதுகுதண்டோடு அழுத்திப் பிடித்துக் கொண்டான். அவனது அழுத்தத்தில் அவளது கண்ணில் நீர் தேங்கினாலும் அவன் முன்னே அழுதவிடக்கூடாது என்ற வைராக்கியத்தினால் அழுகை தன்னுள்ளே இழுத்துக் கொண்டு திமிராக அவனைப் பார்த்தாள் வியனி.
“உன் மேல நான் அக்கறைப்படாம வேற யாரு அக்கறைப் படுவா? நேத்து ராத்திரி நான் அனுப்புன கார்ல வராம யார்கூட வந்து இறங்கின? இது என்ன உங்க ஃபாரின்னு நினைச்சியா? இந்தியா! அதுவும் தமிழ்நாடு. இங்க கல்யாணம் பொண்ணுங்களுக்கு சில வரைமுறைகள் இருக்கு. அது தெரியலைனாலும் பரவால்ல, சொன்னா கேட்கக்கூட மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குறது புத்திசாலித்தனம் இல்ல. அடங்காப்பிடாரித்தனம்.”
“ஓஹோ?! இந்த மாமியும் அவங்க பொண்ணும் தேவதைங்களாக்கும்; நான் தான் அடங்காப்பிடாரியா தெரியுறேனாக்கும்?! ஆமா! நான் அடங்காப் பிடாரி தான். காலைல இருந்து நைட் வரைக்கும் ஆப்ரேஷன் பண்ணிட்டு கார் ரிப்பேர்னு தினேஷ் கூட பத்திரமா வந்து இறங்கினேன் பாருங்க, நான் அடங்காப்பிடாரி தான். இந்த அடங்காப் பிடாரி உங்களுக்கு வேண்டாம்ல. அப்போ எனக்கு டிவோர்ஸ் கொடுங்க. நான் எங்க நாட்டுக்கே திரும்பிப் போறேன்.”
“ஹேய் ஹனி! வார்த்தையை விடாத. அப்புறம் ரொம்ப வருத்தப்படுவ?!”
“அவ்வளவு சீனெல்லாம் உங்களுக்கு கிடையாது சாரே! நீங்க என்னைய டிவர்வ் பண்ணிட்டு யாரை வேணாலும்.. யாரை வேணாலும் என்ன? யாரை வேணாலும்.. அந்த ஒழுக்க குலவிளக்கு தர்பூசணியவே கல்யாணம் பண்ணிக்கோங்க. எனக்கென்ன வந்துச்சு?” என்றவளை விலக்கிக் தள்ளியவன்,
“ஒன்னு சொல்புத்தி இருக்கணும்? இல்ல சுயபுத்தியாவது இருக்கணும்? நான் என்ன சொன்னாலும் அதுக்கு ஆப்போஸிட்டா தான் செய்வேன்னு கங்கணம் கட்டிட்டு அலைஞ்சா? நான் என்ன பண்ண முடியும்? உனக்கு டிவொர்ஸ் தானே வேணும்? தர்றேன்டி. அதுக்கு அப்புறம் நீ என்ன தான் கெஞ்சினாலும் உனக்கு நான் திரும்ப கிடைக்கவே மாட்டேன்.” என்றவாறே குளியலறைக்குள் நுழைய,
“போங்களேன்! யார் வேண்டாம்னு சொன்னது? தர்பூசிணி மாதிரி இருக்குறவ நல்லவளாம்; கார் பஞ்சர்னு ப்ரெண்ட் கூட வந்த நான் கெட்டவளாம். உங்க நியாயத்தை தஞ்சாவூர் கல்வெட்டுல பதிப்பு பக்கத்துலயே அந்த குண்டு மாமியை உட்கார வையுங்க. நாளைக்கு உங்க சந்ததி எல்லாம் அந்த கல்வெட்டைப் படிச்சுட்டு நாசமா போகட்டும்.” என்றவளின் குரல் கேட்டு கதவைத் திறந்து மெல்ல தன் தலையை மட்டும் வெளியே நீட்டியவன்,
“கார் பஞ்சர்னு தெரியுதில்ல? அப்பவே எனக்கு ஒரு போன் பண்ணணும்னு தோணவே இல்ல இல்ல? ஆனா அந்த தினேஷ்கு மட்டும் ஃபோன் பண்ணி வரச்சொல்லத் தெரியுது? அப்படித்தானே?!” என்று சொல்லி மீண்டும் குளியலறைக்குள் மறைய,
“அவனை நான் ஒன்னும் ஃபோன் பண்ணி வரச்சொல்லல. அவனும் என்கூட தான் ஹாஸ்பிட்டல்ல சர்வீஸ் பார்த்துட்டு இருந்தான். அவனே என் நிலையப் பார்த்துட்டு ட்ராப் பண்ணிட்டுப் போனான். இதுல என்ன தப்பிருக்கு?” என்று குளியலறைக் கதவை தட்டி சண்டையிட்டுக் கொண்டிருந்தவளை பிடித்து உள்ளே இழுத்தவன், பீச்சுக்குழாய்கு அடியில் நிற்க வைத்தவன், தன் இரு கைகளாலும் அவளது இருபுறமும் அணைக்கட்டினான். முகத்தில் நீர் வலிய அவனை முறைத்துப் பார்த்தவளின் அருகே வந்த ஆரிகேத்,
“நான் தினேஷ் கூட நீ வண்டில் வந்ததை தப்பா சொல்லல. தவிர்க்க முடியாத காரணமா இருந்தா பரவாயில்ல. ஆனா நீ வேணும்னே பண்ணிருக்க. அதுனால தான் எனக்கு உன் மேல கோபமே வந்தது.” என்றவன் கூற, தன் புருவங்களை சுருக்கி அவனைப் பார்த்தவளின் மூக்கோடு மூக்கு உரசியவன்,
“கொஞ்சம் யோசிச்சுப் பாரு. ஹாஸ்பிட்டலே நம்மளோடது தான். நீ அந்த தினேஷ் கூட வர்றதுக்கு பதிலாக, எனக்கு ஒரு போன் பண்ணிருந்தேன்னா நானே வந்து கூட்டிட்டு வந்துருப்பேன். இல்ல தினேஷ் கூட வர்றேன்னு எனக்கு ஒரு போன் பண்ணிருந்தேன்னா, உன்னையும் பத்தி யாரும் பேசாம நான் பார்த்துருப்பேன். இது எதுவுமே செய்யாம, நிலைமையைப் புரிஞ்சுக்காம டிவொர்ஸ் கேட்குறியே?! அது என்ன மிட்டாயா? உடனே கடைல போயி வாங்கிட்டு வர்றதுக்கு? கல்யாணம் அப்படிங்குறது ரெண்டு பேரோட வாழ்க்கை மட்டும் அதுல சம்பந்தப்பட்டதில்ல. ரெண்டு குடுங்களோடு சம்பந்தப்பட்ட விஷயம். உன் அண்ணன்களுக்கும் என் தங்கச்சிக்கும் நான் என்ன பதில் சொல்வேன்? நீயும் தான் என்ன பதில் சொல்லுவ? அப்பப்ப நிஜமாவே நீ டாக்டருக்கு தான் படிக்குறியா? இல்ல காலேஜ் போறேன்னு சொல்லிட்டு உன் மூளையை எதாவது காயிலாங் கடைக்கு போட்டுட்டியான்னு சந்தேகம் வருது.” என்றவன் அவளது முகத்தில் வலியும் நீரை இதழ் கொண்டா உறிய,
“இப்ப என்ன தான் சொல்ல வர்றீங்க? எதா இருந்தாலும் நேருக்கு நேரா சொல்லுங்க.” என்று சொன்னவளை இடையோடு வளைத்தவன், அவளது முகத்தோடு தன் முகத்தை வைத்து தேய்த்தவாறே,
“இனி எது நடந்தாலும் என்கிட்ட சொல்ல சொல்றேன். உனக்காக உன்னை சுமக்க நான் இருக்கேன்னு சொல்லுறேன்.” என்றவன் கூற, அவனது முகத்தை பிடித்து தள்ளிவிட்ட வியனி ஹில்டா,
“அப்போ ஒவ்வொன்னுக்கும் எல்கேஜி புள்ள மாதிரி உங்கக்கிட்ட கேட்டுட்டு செய்ய சொல்றீங்களா? என்ன உங்க ஆணாதிக்கத்தை காட்டுறீங்களா?” என்றவளைப் பார்த்து இருபுறமும் தலையசைத்தவன்,
“ம்ஹூம்.. உனக்கு இப்படி சொன்னா புரியாது. சொல்லுற விதத்துல சொல்றேன்.” என்று கூறி அங்கிருந்து வெளியேறினான். அவன் கூறவரும் எதையும் புரிந்து கொள்ளாத வியனி ஹில்டா, அவன் மீதான தனது கோபத்தை இன்னும் எண்ணெய் ஊற்றி வளர்த்துக் கொண்டாள். இருவரும் கிளம்பி ஹாலுக்கு வரவே, அங்கு ஆரிகேத்திற்காக உணவு மேஜையில் காத்திருந்த தர்ஷினி,
“ஆரி மாமா.. வாங்கோ! வாங்கோ! உங்களுக்கு பிடிக்குமேன்னு கிச்சடியும் வெள்ள பனியாரமும் பண்ணிருக்கேன்.” என்று கூறி, வியனியின் கண் முன்னேயே அவனது கையைப்பிடித்து இழுத்துச் சென்று உணவு மேஜையில் அமர வைத்தாள். கோபத்தில் கன்னங்கள் சிவக்க நின்றிருந்த வியனியை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே தர்ஷினி தட்டில் வைத்த உணவை சுவைக்கத் தொடங்கினான் ஆரிகேத். இங்கே ஹாலில் நின்று அவனைப் பார்த்து கொண்டிருந்த வியனியின் மனதில்,
‘திங்குறதைப்பாரு கடோத்கஜன் மாதிரி. இங்க ஒருத்தி வாயைப் பார்த்துட்டு நிக்குறேனே?! ஒரு வார்த்தை வந்து சாப்பிடுன்னு சொல்லக்கூடாது? க்கும்..’ என்று சிணுங்கியவாறு நின்றிருக்க, உணவு மேஜையில் அமர்ந்திருந்த ஆரிகேத்திற்கு மேலும் இரண்டு கரண்டி உணவை வைத்த மாமி,
“என்ன தர்ஷு? அவன் தான் சின்ன வயசுல இருந்தே ஒழுங்கா சாப்பிடமாட்டான்னு தெரியும்னோ?! நீ அள்ளி கொடு.” என்று கூற, அவனது தட்டில் இருந்த உணவை எடுத்து அவனது வாயருகே கொண்டு சென்றாள் தர்ஷினி.
‘போதும்! இதுக்கு மேல இங்க ஒரு நிமிஷம் கூட நிக்கமாட்டேன்’ என்று நினைத்த வியனி, சிறுபிள்ளை யென் தன் கால்களை நிலத்தில் ஓங்கி அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள். வியனி பசியோடு வீட்டை விட்டு வெளியேறுவதைப் பார்த்த ஆரிகேத், பாதி உணவிலேயே எழுந்து கொள்ள முயல, அதற்கு இடம் கொடுக்காது, அவனை மீண்டும் அமர வைத்தார் பட்டு மாமி. தர்ஷினி ஊட்டி விட நினைத்து, அவனது வாயருகே கையை கொண்டுவர, அதனை தடுத்து உணவை அள்ளி வாயில் வைத்தவனுக்கு அறுசுவையான உணவு கூட கசந்தது. தினேஷோடு அவள் வந்திறங்கியதை ஆரிகேத்தால் எப்படி தாங்கிக் கொள்ள முடியவில்லையோ அதேபோல் தான் தர்ஷினியோடு ஆரிகேத் பழகுவதை வியனியினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதைத் தான் அவளுக்கு உணர்த்த நினைத்தான் ஆரிகேத். ஆனால் வியனியின் கோபம் இன்னும் அதிகமாகும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. கோபத்தினால் அவள் செய்த காரியத்தினால் ஆரிகேத் பட்டபாடு என்னவோ?!
அத்தியாயம் 35
‘க்கும்.. இவருக்கு அவ கையால சாப்பிடணும்னு அவ்வளவு ஆசை இருக்குது?! அதுனால தான் இன்னும் அங்கயே உட்கார்ந்து விருந்து சாப்பிட்டு இருக்காரு. அப்படியே ராமன் மாதிரி சீன் போட வேண்டியது. தப்பு கிடைக்காதவன் எல்லாம் ராமன் கிடையாது; தப்பு செய்யுறதுக்கு சான்ஸ் கிடைச்சும் ஸ்டெடியா இருக்கான் பாரு. அவன் தான் ராமன்.’ என்று மனதுக்குள் புலம்பியபடியே காலேஜுக்கு சென்றாள் வியனி ஹில்டா. எப்போதும் வாசலிலேயே வரவேற்கும் காவ்யா, இன்று தன்னைக் காண வராத காரணத்தினால் அவளைத் தேடிக் கொண்டிருந்தவளை தேடி வந்தான் தினேஷ்.
“என்ன காவ்யாவை தேடுறியா?”
“ஆமா! எங்க அவளை ஆளையே காணோம்? என்கிட்ட சொல்லாம எங்கயும் போக மாட்டா?! இப்போ ஃபோன் பண்ணாலும் நாட் ரீச்சபிள்னு வருது. அவளுக்கு என்னாச்சுன்னே தெரியல.”
“ரொம்ப புலம்பாத. அவளுக்கு நாளைக்கு காலைல கல்யாணம்.”
“என்னடா சொல்ற? அவ என்கிட்ட இதைப்பத்தி எதுவுமே சொல்லவே இல்ல.”
“அவளுக்கு தெரிஞ்சா தானே உனக்கு சொல்லுவா. அவளுக்கு நேத்து நைட்டு தான் தெரியும். அதுவும் இல்லாம மேடம் அவங்க அப்பாவோட கண்ட்ரோல்ல இருக்காங்க. ஃபுல் ப்ரொட்டக்ஷன். அவளால எங்கயும் நகர முடியாது. “
“என்னடா சொல்ற? விருப்பமில்லாம எப்படி கட்டாய கல்யாணம் பண்ணமுடியும்? அவ மேஜர்டா, அவளுக்கு புடிச்சவங்களை கல்யாணம் பண்ண, அவ முழு உரிமை இருக்குடா.”
“அதெல்லாம் உங்க ஊர்ல. இங்க பெத்தவங்க பார்த்து வைக்குறவங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும். அதுவுமில்லாம அவ அப்பா ஒரு அரசியல்வாதி வேற; அவர் சொல்ற மாதிரி மினிஸ்டரோட பையனைத் தான் கட்டிக்கணும். இல்லேன்னா பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காம கொன்னுடுவார்.”
“இப்ப எனக்கு அவளை பார்க்கணும் தினேஷ். எப்படியாவது என்னைய அவ வீட்டுக்கு கூட்டிட்டு போயேன். ப்ளீஸ்.”
“க்கும்.. என் லவ்வரோட அப்பா தான் காவ்யாவோட அப்பாக்கு லாயரா இருக்காரு. அதுனால தான் எனக்கு இவ்வளவு டீடெயில்ஸ் தெரிஞ்சுது. நீ என்னன்னா என்னோட உயிருக்கு மட்டுமில்லாம அவங்க உயிருக்கும் சேர்த்து உலை வைச்சுடுவப் போல?!”
“டேய்.. டேய்.. தினேஷ் அப்படி எல்லாம் சொல்லாதடா. நீதான் எங்களுக்கு பெஸ்ட் பிரண்ட். நீயே இப்படி சொன்னா நாங்க யாருகிட்ட டா போய் ஹெல்ப் கேட்போம்?!”
“போதும்! போதும்! ரொம்ப சீன் போடாத. அப்படியே பழைய சிவாஜி கணேசன் படம் பார்க்குற மாதிரியே இருக்கு.”
“அப்படியா கோபால் தெரியுது?!”
“அய்யோ ராமா! இந்த கருமத்தை என்னால பார்க்க முடியலையே?! சரி கூட்டிட்டு போறேன். ஆனா இந்த மாதிரி நடிச்சு அவர் பேரை கெடுக்காத.”
“ஓகே! ஓகே! கோபப்படாத கோபால். வா இப்பவே நாம் காவ்யா வீட்டுக்கு போவோம். “
“இப்பவா?!”
“பின்ன அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் போலாமா?”
“அதுவும் சரிதான்.”
“அடிச்சேன்னு வையி. செவுலு அவிலாகிடும் பார்த்துக்கோ. ஒழுங்கா கிளம்பு டா. அவ வீட்டுக்கு போவோம்.”
“வர வர உன்னோட அப்ரோச்சே சரியில்ல. வித்தியாசமா வேற பேசுற. இதெல்லாம் கொஞ்சங் கூட சரியில்ல. சொல்லிட்டேன்.”
“எல்லாந்தெரியும் சீக்கிரம் வண்டிய எடு.” என்றவள் தினேஷுடன் அவனது பைக்கில் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள் வியனி ஹில்டா. காலையில் சாப்பிடாமல் சென்றவளை சமாதானப் படுத்தவென அங்கு வந்த கண்ணில் தினேஷின் பின்னால் அமர்ந்தபடி பைக்கில் செல்லும் வியனி விழவே கோபத்துடன் அவர்களை பின் தொடர்ந்து சென்றான் ஆரிகேத். காவ்யாவின் வீட்டிற்கு அருகில் வந்ததும் தினேஷின் பைக்கில் இருந்து இறங்கியவள் அவனை தன்னுடன் உள்ளே அழைத்துச் செல்ல மறுத்துவிட்டாள்.
“வேண்டாம் தினேஷ். நானே போய் பேசுறேன். நீ இங்கேயே வெயிட் பண்ணிட்டு இரு. அப்படி உள்ள ஏதாவது அசம்பாவிதம் நடக்குற மாதிரி தெரிஞ்சா?”
“நான் உடனே உள்ள வந்துடுறேன்.”
“வேணாம். இந்த நம்பருக்கு போன் போடு.” என்றவள் ஆரிகேத்தின் போன் நம்பரை அவனிடம் கொடுத்து விட்டு காவ்யாவின் வீட்டின் தெருமுனையில் நின்று நோட்டமிட ஆரம்பித்தாள். ஏனெனில் அவளுக்கு நன்றாக தெரியும் காவ்யாவின் அப்பா நாராயணசாமி யார் சொன்னாலும் கேட்காத மனிதர் என்று. அமரேந்திர நாத்தின் வலது கை. அரசியலில் பெரும் புள்ளி. இவர் இல்லாமல் அக்கட்சியில் எதுவும் நடவாது. அப்படிப்பட்டவர் தனது அரசியல் காரணங்களுக்காக கல்வித்துறை அமைச்சரின் மகனான வேலுச்சாமிக்கு தன் மகளை திருமணம் முடித்து வைக்க முடிவு செய்திருந்தார். மது, மாது என் அத்தனை கெட்டப்பழக்கமும் உடையவனுக்கு, தன் சுய லாபத்திற்காக மட்டுமே இத்திருமணமத்தினை முடிவு செய்திருந்தார். காவ்யா எவ்வளவோ முயன்றும் அவரது பிடிவாதத்தை கொஞ்சமும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. இறுதியில் அவளது கையை காலை கட்டியாவது மணமேடைக்கு அனுப்பப் போவதாக கூறியவுடன் சுதாரித்துக் கொண்டவள், தன் தந்தையின் வழக்குகளை பார்த்துக் கொள்ளும் வக்கீலின் மூலமாக இவ்விஷயத்தை தினேஷிற்கும் வியனிக்கும் தெரியும்படி செய்திருந்தாள். காவ்யாவிற்கு நன்றாக தெரியும், வியனி தன்னை எப்படியும் மீட்க வருவாள் என்று. ஆதலால் வியனியின் வருகைக்காக தனதறையில் குறுக்கும் நெடுக்குமாக நடைப்பயின்று கொண்டிருந்தாள் காவ்யா.
‘இப்ப என்னப் பண்றது? எப்படியாவது உள்ளப் போறது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் கண்முன்னே அவ்வீட்டில் இருந்து வேலைக்காரப் பெண்மணி ஒருவர் வெளியே வருவதை கண்டாள். அவரைக் கண்டதும் மனதுக்குள் திட்டம் ஒன்றை தீட்டியவள், நேரே அவரை நோக்கிச் சென்றாள். அவரின் பின்னே நிழலாக தொடந்தவள்,
“அக்கா.. அக்கா.. கொஞ்சம் நில்லுங்க..” என்று கத்த, அப்பெண்மணியோ வியனியின் குரல் காதில் விழாது போலவே நடந்து கொண்டிருக்க,
“ஐஐஐஐஐ பத்தாஆஆஆயிரம் ரூபாய் நோட்டு” என்று அவர் காதில் விழும்படி சத்தமாகக் கூற, சட்டென அப்பெண்மணி திரும்பிப் பார்த்தார். அவரைப் பார்த்துக் கொண்டே,
“பாவம் யாரோ! பத்தாயிரம் ரூபாய் நோட்டை கீழப் போட்டுட்டு போயிட்டாங்க. யாரோடதுன்னு தெரிஞ்சா அவங்கக்கிட்ட கொடுத்துடலாம்.” என்று சத்தமாக கூறியவளை நோக்கி நடந்து வந்தார் அந்த வேலைக்காரப் பெண்மணி.
“இந்தாம்மா பொண்ணு!”
“என்னையவா கூப்பிட்டீங்க?”
“பின்ன இங்க உன்னையும் என்னையும் தவிர வேற யார் இருக்கா?”
“ஓ! அப்போ என்னைத்தான் கூப்பிட்டுருக்கீங்க. சொல்லுங்க. எதுக்கு என்னைய கூப்பிட்டீங்க?” என்று அப்பெண்மணியை கூர்மையாக பார்த்துக்கொண்டே கேட்க,
“அது வந்து.. அது வந்து.. நீ கைல வைச்சுருக்குற பத்தாயிரம் ரூபாய் நோட்டு என்னோடது. அதை என்கிட்ட கொடுத்துடேன்.” என்று ஒருவாறு திக்கித் திணறி கேட்டுவிட, அவரை ஒற்றைப் புருவம் உயர்த்தி பார்த்த வியனி,
“இந்த பத்தாயிரம் ரூபாய் நோட்டு உங்களோடது?” என்று சந்தேகமாக கேட்க,
“ஆமா! என்ன நீ குறுக்கு விசாரணை நடத்திட்டு இருக்குற? அது என்னோடது தான்னு சொன்னா கொடுக்க வேண்டியது தானே?!” என்று சத்தமிட்டார் அப்பெண்மணி.
“ஓகே! அப்போ இந்த அமௌண்ட் உங்களுக்கு எப்படி வந்துச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்.”
“அது வந்து.. அது வந்து.. அதையெல்லாம் உனக்கெதுக்கு சொல்லணும்? இப்ப நீ இதை தருவியா? மாட்டியா?”
“இதென்ன இதேமாதிரி இன்னும் ரெண்டு நோட்டு சேர்த்து தர்றேன். ஆனா நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும்.”
“என்ன பண்ணணும்?”
“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு வீட்டுக்குள்ள இருந்து வெளியே வந்தீங்களே?!”
“ஆமா! நம்ம நாராயணசாமி அய்யா வீட்டுல இருந்துதே வந்தேன். அதுக்கென்ன இப்போ?!”
“அதுக்கு ஒன்னுமில்ல? அங்க இருக்குற காவ்யா பொண்ணு கிட்ட நான் கொடுக்குற இந்த போனை மட்டும் கொண்டு போய் கொடுத்தா போதும்.”
“அய்யோ! நான் மாட்டேன்த்தா. இது மட்டும் அய்யா காதுக்கு போச்சு?! அம்புட்டு தான்.”
“சரி. ரெண்டு நோட்டு பத்தாத? இன்னும் ரெண்டு நோட்டு சேர்த்து தர்றேன். போதுமா?”
“ஆனா பெரியய்யா?”
“ஒன்னும் பண்ண மாட்டாரு. யாருக்கும் தெரியாம இதை கொண்டு போய் கொடுத்தா போதும்.”
“ம்ம்ம்..”
“சொளையா நாற்பதாயிரம் ரூபாய். இதுக்காக நீ இன்னும் அஞ்சு மாசம் அங்க வேலைப்பார்க்கணும். ஆனா இப்போ நீ இப்படி இருந்து அப்படி மாத்துனா போதும்.”
“சரிமா. அதைக் கொடு.”
“நான் எப்படி உன்னை நம்புறது?”
“என்னம்மா இப்படி கேட்குற? அப்படி நம்பிக்கை இல்லாம எதுக்கு என்கிட்ட உதவி கேட்குற? நானெல்லாம் கவரிமான் பரம்பறையாக்கும். ஒத்த முடி உதிர்ந்தாலும் நாண்டுக்குவோம். உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் கொடு. இல்லேன்னா வேற ஆளைப் பார்த்துக்கோ.”
‘வேற ஆளு கிடைச்சா உன்கிட்ட ஏன் தொங்கப் போறேன்?’ என்று உள்ளுக்குள் நினைத்தவள்,
“சரி சரி கரெக்டா கொடுத்துடணும். இல்லேன்னா அவ்வளவு தான்? இவ்வளவு காசு கொடுக்குறவ என்ன வேலையும் செய்வேன். புரிஞ்சுதா?”
“பாப்பா! இப்படி முகத்தை வைச்சுக்காதம்மா. உனக்கு செட்டாகல. பிஞ்சு மூச்சு உனக்கு.”
“க்கும்.. சொன்னதை செய். போ. சீக்கிரம்.” என்ற வியனியின் பேச்சை கேட்ட அந்த பெண்மணி, மீண்டும் அவ்வீட்டிற்குள் வியனி கொடுத்த போனுடன் சென்றாள். யாருக்கும் தெரியாமல் காவ்யாவின் அறைக்குள் சென்று வியனி அளித்த போனை அவள் கையில் சேர்த்தாள் வேலைக்காரப் பெண்மணி. தன் கையில் போன் வந்த மறு நொடியே வியனிக்கு அழைத்த காவ்யா,
“வினி.. வினிஇஇஇஇ.. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. என்னைய அந்த தடியனுக்கு கட்டி வைக்கப் போறாங்க. என்னைய எப்படியாவது வந்து கூட்டிட்டு போ. ப்ளீஸ். இப்ப மட்டும் நீ என்னைய காப்பாத்த வரல.. நான்.. நான்.. இந்த ஸ்டூல்ல இருந்து கீழே குதிச்சு செத்துப் போயிடுவேன்.” என்று அழுதவாறே கூற,
“பயத்துல லூசுத்தனமா பேசாத. ஸ்டூல்ல இருந்து கீழே குதிச்சா யாராவது சாவாங்களா?” என்று வியனி அதட்ட,
“ஆமா, இப்போ அது ரொம்ப முக்கியம் பாரு?! இப்ப என்னைய கூட்டிட்டு போக வர்றியா? இல்லையா?” என்று மீண்டும் அழுகத் தொடங்கினாள் காவ்யா.
“நான் வந்து உன்கூட உட்கார்ந்து செப்பு சாமான் வைச்சு விளையாடவா? சொல்றதை கேளு. உன் வீட்டோ பின் கேட்டுல ரெண்டு பேர் மட்டும் தான் நிக்குறாங்க. அங்க இருந்த சிசிடிவி கேமாராவை உடைச்சுட்டேன். நீ எப்படியாவது அவங்க கண்ணுல மண்ணைத் தூவி, அங்க இருக்குற சுவர் ஏறி குதிச்சுடு. உனக்காக வெளியே ஆட்டோல வெயிட் பண்ணிட்டுருக்கேன்.”
“எனக்கு ரொம்ப பயமாயிருக்கு வினி.”
“சுவர் ஏறி குதிக்க பயமாயிருந்தா? அந்த இடிச்சப்புளியவே கல்யாணம் பண்ணிக்கோ. என் உயிரை எடுக்காத. உனக்கு வெறும் பத்து நிமிஷம் டைம் தர்றேன்.”
“சரி.. சரி.. வர்றேன்.” என்ற காவ்யா, அக்காவலாளிகள் அசந்த நேரமாக பார்த்து, பின்பக்க கேட்டை ஏறி குதித்து வெளியே ஓடி வந்தாள். நடப்பவை அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆரிகேத்திற்கு வியனியை நினைத்து அழுவதா சிரிப்பாதா என்றிருந்தது. ஏனெனில் இக்கல்யாணத்திற்கு தலைமை தாங்குவது அனுக்ஷயன். அவன் அவ்வளவு சீக்கிரம் தனது தோல்வியை ஒத்துக் கொள்ள மாட்டான். தன் தோழனின் திருமணத்தை நிறுத்திய வியனியையும் மன்னிக்க மாட்டான். தேனீக்கூட்டை கலைத்தது போல் சும்மா இருந்தவனின் ஈகோவில் கல் எறிந்திருந்தார்கள் தோழிகள் இருவரும். எது எப்படி இருந்தாலும் தன் மனைவிக்கு உதவி செய்ய நினைத்தவன் அவர்களை பின்தொடர்ந்து சென்றான் ஆரிகேத். தன்னருகே அமர்ந்திருந்த வியனியைப் பார்த்து காவ்யா,
“வினி இப்போ நாம எங்க ஓடிப் போயிட்டு இருக்கோம்?” என்றா வெள்ளந்தியாக கேட்க,
“ம்ம்ம்.. என்னோட குருவம்மா பாட்டி வீட்டுக்கு தான்.” என்று பதிலளித்தாள் வியனி.
“அப்போ மெடிக்கல் கேம்ப்?”
“அந்த ஊருக்கு பக்கத்துல தான் மெடிக்கல் கேம்ப்பும் அரெண்ஜ் பண்ணிருக்காங்க. ஆரிகிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும். எல்லாம் அவன் பார்த்துப்பான்.”
“ஆமா, நாம இப்போ ஊரை விட்டு ஓடிட்டு இருக்குறதைப் பத்தி அவர்கிட்ட சொல்லிட்டியா?”
“ம்ஹூம்.. இல்ல. அங்க போனதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்.” என்று காவ்யாவிற்கு பதில் அளித்த வியனி, ஆட்டோ ட்ரைவரை பார்த்து,
“அண்ணா கொஞ்சம் சீக்கிரம் ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா? என்று கூறவே, அவரும் வேகமெடுத்து அவர்களை ரயில்வே ஸ்டேஷன்னை நோக்கி அழைத்துச் சென்றார். ஆட்டோவை விட்டு இறங்கிய தோழிகள் இருவரும் மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் செல்லும் ரயிலில் பதிவு செய்திருக்கும் பகுதியில் ஏறி அமர்ந்து கொள்ள, தடதடவென ஒரு கூட்டம் ஓடி வரும் சத்தம் கேட்டு மெல்ல எட்டிப் பார்த்த வியனி ஹில்டா, சற்று அதிர்ந்து தான் போனாள். ஏனெனில் ஒவ்வொரு பிரிவாக நாராயணசாமியின் ஆட்கள் ஒருபக்கம் தேடினார்கள் என்றால், அனுக்ஷயனின் ஆட்கள் ஒருபக்கம் தேடிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். சட்டென ஏதோ முடிவு செய்தவள், தன்னுடன் சீட்டில் அமர்ந்து பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்த காவ்யாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே இறங்கிய வியனி, அவளைத் தரதரவென இழுத்துக் கொண்டே அனுக்ஷயனை நோக்கிச் சென்றாள் வியனி ஹில்டா. வியனி அனுக்ஷயனை நோக்கிச் செல்வதைக் கண்ட ஆரிகேத்திற்கு புரிந்து போயிற்று. கண்டிப்பாக ஏதோ வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கப் போகின்றாய் என்று. ஆதலால் அவளை நிறுத்துவதற்காக வியனியின் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தான் ஆரிகேத். ஆரிகேத் வியனியை தடுத்து நிறுத்துவதற்குள் அனுக்ஷயனை காவ்யாவுயன் நெருங்கியிருந்தாள் வியனி ஹில்டா. அங்கு கூடியிருந்த அனைவரின் முன்னே, அனுக்ஷயனைப் பார்த்து ஓவென் கதறிய வியனி, அதன் பின் அவனது சட்டையைப் பிடித்து கேட்ட கேள்வியில் மொத்த ஜனகூட்டமும் ஸ்தம்பித்து நின்றிருந்தது என்றால், பர்கரை வாயில் வைத்தவாறே வியனியின் மீது மயங்கி சரிந்திருந்தாள் காவ்யா.
அத்தியாயம் 36
அனுக்ஷயனின் அருகே நீதி கேட்கும் கண்ணகியாக ஒருகையில் காவ்யாவை இழுத்துக் கொண்டு சென்ற வியனி, அனுக்ஷயனின் சட்டையை பிடித்து அவனை உலுக்க முயல, வியனியின் மேல் கடுங்கோபத்தில் இருந்த அனுக்ஷயன், அவளைப் அடிப்பதற்காக தன் கையை உயர்த்தினான். ஆனால் தூரத்தில் வேகமாக வந்து கொண்டிருக்கும் ஆரிகேத்திற்காகவும், தன்னைச் சுற்றி கேமராவுடன் நின்று கொண்டிருந்த மக்களுக்காகவும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். இருப்பினும் தன் சட்டையைப் பிடித்து இருந்த வியனியின் கையை தட்டி விட்டு அனுக்ஷயன்,
“யார் நீ? எதுக்கு அவளை இழுத்துட்டு ஓடி வந்த? முதல்ல என் சட்டைல இருந்து கையை எடு.” என்றவாறே அவளை தள்ளி நிறுத்தினான்.
“ஓஹோ! நான் யாரா? சரி.. போய் தொலையுது. நான் தான் யார்னு தெரியல. பரவாயில்ல. இவளை யார்னு தெரியுதா?” என்ற வியனி, தன் அருகில் பர்கரை அப்போதும் ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்த காவ்யாவை காட்ட, சற்று தன் விழி உயர்த்தி காவ்யாவைப் பார்த்தான் அனுக்ஷயன்.
“இவளை தெரியாம போகுமா? இவளுக்காக தானே இவ்வளவு தூரம் வந்திருக்கோம்.” என்று அனுக்ஷயன் கூற,
“வந்துருக்கோம் இல்ல. வந்திருக்கீங்க. ஏன்னா இது உங்களால் நடந்த தப்பாச்சே?!” என்று வியனியும் அவளது குரலை உயர்த்தி பேச,
“வாட்?! என்னாலாயா? நானா அவளை வீட்டை விட்டு ஓடச் சொன்னேன்?!” என்று அனுக்ஷயன் கூற,
“பின்ன இன்னும் எட்டு மாசத்துல உங்கக் குண்டு வெளியே வந்துரும்னு தானே இவளை அவசர அவசரமா இந்த இடிச்சப்புளிக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்க்குறீங்க? என்று மேலும் வியனி கத்த, இப்போது வியனியை விட்டுவிட்டு காவ்யாவை முறைக்க ஆரம்பித்தான்.
‘அங்க என்ன பார்க்குறீங்க? இங்கப் பாருங்க. நல்லா ஜூம் பண்ணி பாருங்க. இவ வயித்துல உங்க வாரிசு வளருதுன்னு தெரிஞ்சு தானே?! அவளை யாருக்கும் தெரியாம இந்த ஜந்துவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்க்குறீங்க?!” என்று அனுக்ஷயனுக்கு அதிர்ச்சியளித்தாள் வியனி. வினி அளித்த அதிர்ச்சியில் தேகம் விரைத்து காவ்யாவை முறைத்துப் பார்த்தப்படி அனுக்ஷயன் நின்றிருந்தான் என்றால், வாயில் வைத்து பர்கரை முழுங்கக் கூட தோன்றாமல், வாயைப் பிளந்தபடி வியனியை பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா.
“எப்படி டி? சொல்லே இல்ல?” என்று காவ்யா அதிர்ச்சியில் வாய் திறக்க,
“உனக்கு தெரியாதுடி. டாக்டர் என்னைய தனியா கூப்பிட்டு சொன்னாரு.”
“ஏது இந்தாளு குழந்தைக்கு நான் அம்மாவாகப் போறேன்னா?”
“ஆமா! நீ கொஞ்சம் சும்மா இருக்கியா? நீ குழந்தை மாதிரி?! உனக்கு இதப் பத்தியெல்லாம் ஒன்னுமே தெரியாது.” என்று காவ்யாவை அதட்டி வாயை மூட வைத்த வியனி,
“சொல்லுங்க சார்! மொத்த மீடியாவும் உங்களைத் தான் பார்த்துட்டு இருக்கு. நீங்க இவ கூட பழகி கர்ப்பம் ஆக்கிட்டு, உங்க இமேஜ் கெட்டுப் போகக்கூடாதுன்னு உங்க ப்ரெண்டுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்க்குறீங்க. பாவம், என் ப்ரெண்ட். நீங்க பண்ண தப்புக்கு அவ தானே இந்த சமூதாயத்துக்கு முன்னாடி தலை குனியணும்?! எங்க உங்க ப்ரெண்ட்? நான் நியாயத்தை அவர்கிட்டயே கேட்டுக்குறேன்.” என்றவாறே வேலுசாமியை நோக்கிச் சென்றவள்,
“சார்.. உங்களை ஏமாத்தணும்னு அவ நினைக்கவே இல்ல. இதை பத்தி அவளுக்கு எதுவுமே தெரியாது. இவங்க ரெண்டு பேரோட பழக்கத்துக்கு நான் தான் சாட்சி. இப்ப அவரோட லேண்டுக்கு பட்டாவா உங்க பெயரை யூஸ் பண்ணிக்கப் போறாரு. இதுக்கு மேலேயும் உங்களுக்கு சிகண்ட் ஹார்ட் தான் வேணும்னா, நீங்க தாராளமா காவ்யாவை கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்று கூறிய மறுநிமிடம் நாராயணசாமியை நோக்கிச் சென்றாள்.
“சார்! இந்த விஷயத்தை உங்கக்கிட்ட முன்னாடி சொல்லிருப்பேன். ஆனா உங்கக்கிட்ட சொல்றதுக்கு காவ்யா ஒத்துக்கல. அதான் சொல்லல.” என்றவளை கூர்மையாக பார்த்த நாராயணசாமியின் மனதுக்குள் சில கணக்குகள் ஓட, சட்டென அனுக்ஷயனை நோக்கிச் சென்றார். அங்கு கூடியிருந்த அத்தனை பேர் முன்னிலையிலும் அனுக்ஷயனின் கையைப் பிடித்து கொண்ட நாராயணசாமி,
“மாப்ள! என் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுங்க. உங்க கையை காலா நினைச்சு கேட்குறேன். அவளை கைவிட்டுடாதீங்க.” என்று கண்ணீர் வடிக்க, தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் எதையும் உணர முடியாது, திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள் காவ்யா. அந்த மனநிலையிலும் கையில் இருந்த பர்கரை விடாது காலி செய்ய, சூழ்நிலை காரணமாக அமைதியாக பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்த அனுக்ஷயன், நடக்கும் அனைத்திற்கும் காரணமான காவ்யாவை முறைத்துக் கொண்டிருந்தான்.
தன்னை முறைக்கும் அனுக்ஷயனைப் பார்த்த காவ்யா,
‘இவன் எதுக்கு என்னைய இவ்வளவு பாசமா பார்க்குறான்? ஓ! இவனுக்கும் பசிக்குது போல. அதான் என் பர்கரையும் என்னையும் மாத்தி மாத்தி பார்க்குறான் போல. கஞ்சப் பைய! பார்க்க நல்லா டீசண்டா.. ரிச்சா இருக்குறான். ஒரு பர்கர் வாங்கித் திங்க மாட்டான்?! என் கைல இருக்குறதை பிடிங்கித் திங்குற மாதிரியே பார்க்குறான். நான் கொடுக்க மாட்டேன்பா.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டே மேலும் பர்கரை கடித்து சாப்பிடத் தொடங்க, அவளை குறுகுறுவென பார்த்த அனுக்ஷயன்,
‘அரிசி மூட்டை! அரிசி மூட்டை! இவளுக்கு திங்க வாங்கிக் கொடுத்தே என் ப்ரெண்ட் நடு ரோட்டுல நிக்கப் போறான்.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டவன்,
“சுத்தி மீடியா இருக்காங்கன்னு பொய் பேசாத. நானும் இவளும் பழகினோம்னு சொல்றதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?” என்று வியனியை கூர்மையாக பார்த்தவாறு அனுக்ஷயன் கேட்க, சற்று பேச முடியாது திணறிய வியனி, தங்களை பதிவாக்கிக் கொண்டிருந்த மீடியாவின் அருகில் சென்றவள்,
“அய்யோ! இந்த நியாயத்தை கேட்க யாருமில்லையா? பழகும் போது எந்த பொண்ணாவது ஆதாரத்தோடு பழகுவாளா? அதுவும் ஒரு பொண்ணு இந்த விஷயத்துல பொய் சொல்லுவாளா? இந்த நாட்டுல பொண்ணுங்களுக்கு நீதி கிடைக்காதா?” என்று அழுக அவளின் தோளின் மீது கையொன்று விழுக திடுக்கிட்டு விழித்த வியனி நிமிர்ந்து பார்க்க அங்கே அடக்கப்பட்ட கோபத்தோடு நின்றிருந்தான் ஆரிகேத். அவனைப் பார்த்ததும் அவனது தோள் மீது சாய்ந்து அழுவது போல் நடித்தவளை தோளோடு அணைத்தவாறு அவளது காதுக்குள் மெதுவாக,
“போதும்! இத்தோடு நிறுத்திக்கோ. கிளம்பு வீட்டுக்கு போகலாம்.” என்றுரைத்தவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள்,
“எனக்கு தெரியும் நீங்க எங்களுக்கு நியாயம் வாங்கிக் கொடுப்பீங்கன்னு.” என்று அவனைப் பார்த்து கூறியவள், மீண்டும் மீடியாவை பார்த்து,
“இதோ இவருக்கும் அவங்களோட பழக்கத்தை பத்தி நல்லா தெரியும். இவர்கிட்ட கேட்டுப்பாருங்க.” என்று ஆரிகேத்தையும் இந்த விவகாரத்திற்குள் இழுத்து விட, தன் மனைவியை மீடியா முன் விட்டுக் கொடுக்கவும் முடியாது, அனுக்ஷயனுக்கு எதிராக நிற்க விருப்பமும் இல்லாது, வியனியை முறைத்தபடி நின்றிருந்தவனின் முன்னே மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருத்தர்,
“சார்.. இவங்க சொல்றது உண்மையா? சொல்லுங்க சார். உங்களுக்கு அவங்க ரெண்டு பேரோட பழக்கத்தை பத்தி தெரியுமா?” என்று கேட்க, மற்றொருவர் அவனை நோக்கி,
“சார்.. முதல்ல இவங்க உங்களுக்கு யார்னு சொல்லுங்க. இவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று தன் கைகளை மடக்கி கேட்டவரை கூர்ந்து பார்த்த ஆரிகேத், வியனியின் இடையை வளைத்து தன் தோளோடு சேர்த்து அணைத்தக் கொண்டே,
“இவங்க என்னோட பொண்டாட்டி.” என்றவன், திரும்பி அனுக்ஷயனைப் பார்த்து கொண்டே,
“அவங்க ரெண்டு பேரும் பழகுனது உண்மை தான்.” என்றும் கூற, ஆரிகேத்தை பார்வையால் எரித்து விடுவது போல் பார்த்தான் அனுக்ஷயன். அனுக்ஷயனை நோக்கி பதில் பார்வை பார்த்த ஆரிகேத், தன் அணைப்பில் நின்றிருந்த வியனியை திரும்பி தீப்பார்வை பார்த்தான். அவனிடமிருந்து விலகவும் முடியாது, அவனது தீப்பார்வையை தாங்கவும் முடியாது, அவனுடன் நின்றிருந்த வியனி
‘போச்சு! போச்சு! வியனி. நீ இன்னைக்கு அவ்வளவு தான். ஹல்கு இன்னைக்கு என்னைய தூக்கிப் போட்டு மிதிக்க போறான். உன் கதை முடிஞ்சுது.’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே “ஈஈஈஈஈ” என்று அவனைப் பார்த்து சிரித்தவளை தன் அணைப்பில் வைத்துக்கொண்டே அனுக்ஷயனியிடம் வந்தவன் தனது தழைத்த குரலில்,
“இதுக்கு மேல நீ எதுவும் தெரியாத மாதிரி நின்னு ப்ரயோஜனம் இல்ல. உன்னோட இமேஜை காப்பத்திக்கணும்னா, நீ அவளை கல்யாணம் பண்ணிக்கோ.” என்று கூற, வியனியைப் பார்த்த அனுக்ஷயன்,
“இவளை நான் கெடுத்துட்டேன்? ம்ம்ம்?” என்று கேட்க, “ஆமா.” என்று பதிலுரைத்தாள் வியனி ஹில்டா.
“அதுக்கு நீ சாட்சி..” என்று அனுக்ஷயன் கேட்க, “அஃப்கோர்ஸ்..” என்று வியனி மீண்டும் பதிலளிக்க,
“உன்னை?” என்று வியனியை முறைத்தவன், அருகில் நின்றிருந்த ஆரிகேத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு நேரே நாராயணசாமியிடம் சென்று,
“உங்க பொண்ணுக்கும் எனக்கும் இப்ப இந்த இடத்திலேயே கல்யாணம் நடக்கணும்.” என்று கூறியவன், வியனியை ஒட்டி கோழிக்குஞ்சாக நின்றிருந்த காவ்யாவின் கையைப் பிடித்து இழுத்து தன்னருகே நிறுத்தி கொள்ள, காவ்யாவின் கையில் மீதம் வைத்திருந்த பர்கரோ கீழே விழுந்து விட்டது. கீழே தவறி விழுந்த பர்கரை ‘வடை போச்சே’ என்ற நிலையில் பார்த்திருந்த காவ்யாவின் கையை அனுக்ஷயன் இறுக்கிப் பிடிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்ணில் நீர் தேங்கியது. கலங்கிய காவ்யாவின் கண்ணில் அனுக்ஷயன் என்ன கண்டானோ? மெல்ல தன் குரலை தழைத்துக் கொண்டு,
“இது நீயா தேடிகிட்ட வாழ்க்கை. இனி உன்னோட வாழ்க்கை; என் கைல. இப்பவே அழுது உன்னோட கண்ணீரை வேஸ்ட் பண்ணிடாத.” என்று கூற,
“அதில்ல.. ரெண்டு நாளாக அப்பாக்கூட சண்டைப் போட்டு ஒன்னுமே சாப்பிடல. இப்போ தான் வினி பர்கர் வாங்கிக் கொடுத்தா. அதை முழுசா சாப்பிட விடாம கீழ் தட்டி விட்டுட்டீங்க. அதான் அழுகையா அழுகையா வருது.” என்றுரைத்த காவ்யாவை பார்க்கும் போது, ஏதாவது நல்ல சுவராக பார்த்து முட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது அனுக்ஷயனுக்கு. அவளைப் பார்த்து தன் பல்லை கடித்துக் கொண்டே,
“ஒரு பர்கர் என்ன? ஆயிரம் வாங்கித் தர்றேன். முதல்ல அழுகுறதை நிறுத்து. தெரியாமல் தான் கேட்குறேன், நிஜமாவே நீ டாக்டருக்கு தான் படிக்குறியா?” என்றவன் கேட்க, தன் மூக்கை உறிஞ்சி கொண்டே,
“உங்களுக்கு வேணா இன்ஜக்ஷன் போட்டுவிட்டு நிரூபிக்கவா?” என்றவளை வெட்டவா குத்தவா என்று பார்த்துக் கொண்டிருந்தான் அனுக்ஷயன். கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் காவ்யாவின் கழுத்தில் தாலி கட்டிய அனுக்ஷயன், மீடியாவிடம் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துவிட்டு, காவ்யாவின் கையைப் பிடித்து தரதரவென தன் காருக்கு அழைத்துச் சென்றான். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு திருமணத்தையே நடத்தி முடித்துவிட்ட திருப்தியில் தன் கைகளை உயரே தூக்கி சோம்பல் முறித்த வியனி,
“அப்புறம் பாஸே! பட்சி தான் உங்க வலையில இருந்து பறந்து போயிடுச்சே?! அப்புறமும் இங்க இலவு காத்த கிளி மாதிரி ஏன் நிற்குறீங்க. ஜரிகண்டி! ஜரிகண்டி!” என்று வேலுச்சாமியைப் பார்த்து கிண்டல் செய்ய,
“என்னோட கல்யாணத்தை கெடுத்திட்டீல.. உன்னை வைச்சுக்குறேன்டி..” என்றவன் கூற,
“ஒழுங்கா ஒருத்தியைக் கூட கட்டிக்க முடியலை. இந்த லட்சணத்துல இவர் என்னை வைச்சுக்குறாராம். போயா!” என்று திமிராக வேலுசாமியிடம் பேசியவள், ஆரிகேத்தின் புறம் திரும்பி,
“கண்டவனெல்லாம் என்னைய வைச்சுக்குறேன்னு சொல்றான். பார்த்ததுண்டு மரம் மாதிரி நிக்குறீங்க. உங்கக்கூட காய். இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காதீங்க. நான் வீட்டுக்கு போறேன்.” என்று வராத கண்ணீரை வரவழைத்தவாறே அங்கிருந்து ஓடினாள் வியனி.
‘எல்லாப் பக்கமும் எனக்கு ஆப்பு வைச்சுட்டு.. இப்ப நான் பேச வேண்டிய டயலாக்கையும் அவளே பேசிட்டு ஓடுறா? இப்பத்தான் புரியுது. இவளை இவளோட அண்ணே எதுக்கு என் தலைல கட்டி வைச்சான்னு..’ என்று மனதுக்குள் புலம்பியவாறே அவளைப் பின் தொடர்ந்து வீட்டிற்கு சென்றான் ஆரிகேத். தன்னுடன் காரில் அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வைத்துக் கொண்டிருந்த காவ்யாவை கோபமாக பார்த்துக்கொண்டே,
“க்கும்.. காவ்யா.. காவ்யாஆஆஆஆ..” என்று கத்த, திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் விழித்தாள் காவ்யா.
“இதோ பார்! இப்ப நீ மிஸ்ஸஸ் அனுக்ஷயன். இனி நான் சொல்றதைக் தான் நீ கேட்கணும்.” என்று கட்டளையிட, அவனை கண்சிமிட்டாமல் பார்த்தாள் காவ்யா.
“நான் சொல்றது கேட்குதா?”
“ம்ம்ம்..”
“இனிமே நீ. அந்த வியனியை பார்க்கவோ? அவக்கூட பேசவோ? கூடாது. மீறி அவளைப் பார்த்த? உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். அவளை போட்டு தள்ளிடுவேன்.”என்றவன் கூற, பயத்தில் வேகமாக,”பார்க்க மாட்டேன்.. பேச மாட்டேன்.. நீங்க சொல்லுறதை கேட்குறேன். அவளை ஒன்னும் பண்ணிடாதீங்க..” என்றவளைப் பார்க்க மேலும் எரிச்சல் தான் வந்தது.
‘எப்படி நடக்க வேண்டியது என்னோட கல்யாணம்? இப்படி ரயில்வே ஸ்டேஷன்ல.. கேவலமா.. ச்சே.. இதுக்கெல்லாம் காரணம் அந்த வியனி தான். அவளை.?’ என்று உள்ளுக்குள் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தான் அனுக்ஷயன். தன் தோழியின் வாழ்க்கையை காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வியனிக்கு தெரியவில்லை, அவளது வாழ்க்கைபாதையை மாற்றக்கூடிய விதியொன்று, அவளுக்காக அங்கே காத்திருக்கின்றது என்று.
அத்தியாயம் 37
“என் பையனோட கல்யாணத்தை அஞ்சு நாள், ஊரைக் கூட்டி திருவிழாவா நடத்தலாம்னு நினைச்சுருந்தேன்னே.. இப்படி பஞ்சப்பரதேசியாட்டும் ரயில்வே ஸ்டேஷன்ல யாருமில்லாத அனாதை மாதிரி நடத்திட்டாங்களே! அவனென்ன ஆயி அப்பனில்லாதவனா? குத்து கல்லாட்டாம் பெத்த இருக்கேன். என்கிட்ட ஒத்த வார்த்தை எம்மவே சொல்லலியே! ஊருக்கே ராஜா அவே. அவனைப் போய் பழி சொல்லி கல்யாணம் பண்ணிகிட்டாளே! வரட்டும் அவ.. பொய் சொன்ன அந்த வாயை நான் கிழிக்கத் தான் போறேன். ஏங்க.. என்னங்க.. நான் இம்புட்டு புலம்புறேனே?! என்ன ஏதுன்னு ஒத்த வார்த்தை கேட்கமாட்டீகளா? உலகமே உங்க பேச்சை கேட்டு என்ன ப்ரயோஜனம்? நாம பெத்த ஒத்த மவே! அவனோட கல்யாணத்தை பார்க்க முடியலைன்னு கொஞ்சமாவது விசனப்படுதீகளா?! பிடிச்சு வைச்சு பிள்ளையாராட்டும் உட்கார்ந்துருக்கீக.. இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்லுவேன்?” என்று அனுக்ஷயனின் தாய் அகிலாண்டேஸ்வரி நடுவீட்டில் அமர்ந்து புலம்ப, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அமரேந்திர நாத்தின் முகம் ஏகத்திற்கும் கோபத்தினால் சிவந்திருந்தது. சரக்கென்று வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்ட மறுநிமிடம் வாசலுக்கு ஓடிச் சென்றார் அகிலாண்டேஸ்வரி. வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கும் தன் மகனைப் பார்த்து மறுநொடி, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல் அனுக்ஷயனை நோக்கி ஓடிவந்தவர், அவன் நெஞ்சில் சாய்ந்து,
“எய்யா! ராசகுமாரா! உன் கல்யாணத்தைப் பத்தி எம்புட்டு கனவு கண்டு வைச்சுருந்தேன். இப்படியா உனக்கு கல்யாணம் நடக்கணும்.” என்று புலம்பியவரின் தோளில் தட்டி சமாதானப்படுத்த முயன்றவன்,
“இங்கப்பாருங்கம்மா. இவ தான் உங்க மருமக. நடந்ததை யாராலும் மறுக்க முடியாது; மாத்தவும் முடியாது. அதுனால சூழ்நிலையை புரிஞ்சு, ஜீரணிக்க முயற்சி பண்ணுங்க.” என்ற தன் தாயாரிடம் கூறியவன்,
“வள்ளியம்மா.. வள்ளியம்மா..” என்று தன் சமையல்காரம்மாவை அழைக்க, “சொல்லுங்க தம்பி..” என்று நின்றார் அவர்.
“என்ன வள்ளியம்மா வெறுங்கையோடு வந்து நிற்குறீங்க?” என்றவன் அவரைப் பார்த்து கேட்க, வள்ளியம்மாவோ அகிலாண்டேஸ்வரியை பார்த்தவாறு நின்றிருந்தார்.
“தெருவுல நடந்தாலும் திருமணம் திருமணம் தான். தாலியை யாரும் கழட்டி தன் சொல்லி கேட்கமாட்டாங்க. இந்த ஜென்மத்தில இவ தான் என்னோட பொண்டாட்டி. போங்க போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வாங்க.”
“தம்பி.. அம்மா?!”
“அவங்க பையன் நான் சொல்றதை கேட்கப் போறீங்களா? இல்லையா?” என்று அவரிடம் உறுமியவன், அகிலாண்டேஸ்வரியை நோக்கித் திரும்பினான்.
“இங்கப்பாரும்மா! நீ உன் பையனுக்கு ஒரு பொண்டாட்டியை எப்படி நடத்தணும்னு சொல்லிக் கொடுத்து வளர்த்துருக்க. உன்னோட பாரம்பரியம் மேல் நம்பிக்கை இருந்தா? உன் புள்ளி என் மேல நம்பிக்கை இருந்தா? உன் மருமகளை எப்படி வரவேற்பியோ, அந்த மாதிரி இவளை வர வேற்கணும். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு கல்யாணம்; ஒரே பொண்டாட்டி தான்.” என்று அழுத்தமாகக் கூற, தன் முகத்தை தோளில் இடித்துக் கொண்ட அகிலாண்டேஸ்வரி,
“க்கும்.. கல்யாணமாகி அரை மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள என் மகனை சுருட்டி முந்தானைல முடிஞ்சு வைச்சுக்கிட்டா. பெரிய வசியக்காரியா இருப்பாப்போல! மூஞ்சையைப் பாரு! ஒன்னும் தெரியாத பச்சைப்புள்ள மாதிரி.” என்று சத்தமாக முணுமுணுக்க,
“இப்போ நீங்க ஆரத்தி எடுக்கும் போறீங்களா? இல்லையா?” என்று தன் தாயை நேரடியாக மிரட்டினான் அனுக்ஷயன்.
“எடுக்குறேன்டா! எடுக்குறேன். சும்மா குரலை உசத்தி பேசி என்னைய மிரட்டாத. எல்லாம் என் தலையெழுத்து. பெத்த மகனெல்லாம் என்னைய ஏசுற அளவுக்கு விதி என்னைய வைச்சுருக்குப்பாரு.. அதை சொல்லணும். இப்படி கிழக்கப் பார்த்த மாதிரி நில்லுங்க.” என்றவர், வள்ளியம்மா கொண்டு வந்து கொடுத்த ஆரத்தித் தட்டை வாங்கி ஆலம் சுற்ற ஆரம்பித்தார்.
“கொஞ்சம் சிரிச்சுட்டே எடும்மா.. உன் முகத்தை இப்படி கொடூரமா பார்க்க முடியல..”
“க்கும்.. என்னைய கிண்டல் பண்ணதெல்லாம் போதும். நான் சொல்றதை கொஞ்சம் காதுல வாங்கிக்கோ.”
“ம்ம்.. என்ன சொல்லுங்கப்பா?”
“தெருவுல நின்று கல்யாணம் பண்ணாலும் அது கல்யாணம் காற்று சொல்லிட்ட இல்ல.. அப்போ நானும் இவளை என் மருமகளா ஏத்துக்குறேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷனர்.”
“என்னது?”
“இவளைப் பொண்டாட்டியா ஏத்துக்கிட்ட, அப்படிங்குறதை நிரூபிச்சுக் காட்டு..”
“எப்படிம்மா?”
“இவ வயித்துல இன்னும் ஆறே மாசத்துல உன்னோட குழந்தை உண்டாகணும். எந்தப் பொய்யை சொல்லி இவ இந்த வீட்டுக்குள்ள வந்தாளோ? அது உண்மையாகணும். அப்படி இவ செய்யலைன்னா, என் அண்ணே மவ ரத்னாவை நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லணும்.”
“என்னம்மா பேசுற நீ? இவ கழுத்துல நான் கட்டுன மஞ்சக்கயிறோட ஈரம் கூட இன்னும் காயல. அதுக்குள்ள இன்னொரு கல்யாணம் பத்தி பேசுற?”
“என்னமோ?! லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி பேசுற?! இப்போ உன்னால் இவ கூட வாழமுடியுமா? முடியாதா?”
“என்னக் கருமமோ? பண்ணி தொலைக்குறேன். இன்னும் பத்து மாசத்துல உன் கைல பேரனோ? பேத்தியோ? இருக்கும். போதுமா?” என்ற அனுக்ஷயனை பேவென பார்த்திருந்தாள் காவ்யா.
‘இது என்ன பொதுநலத் திட்டமா.. குறிப்பிட்ட நேரத்துல திட்டம் போட்டு முடிக்க? அம்மாவும் பிள்ளையும் என்னை என்ன பிள்ளை பெத்துக்க கொடுக்குற மெஷின்னு நினைச்சாங்களா?’ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டு நின்றிருந்தவளை நோக்கி கைக்காட்டி, வள்ளியம்மாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் அனுக்ஷயன்.
‘என்னது என் பக்கத்துல நின்று தானே அந்தம்மா கிட்ட பேசுறான்? அப்புறம் ஏன் எனக்கு எதுவுமே கேட்க மாட்டேங்குது?’ என்று உள்ளுக்குள் கேட்டு கொண்டிருந்தவளின் அருகே வந்த அனுக்ஷயன்,
“பசில காது அடைக்குதுன்னு நினைக்குறேன். வள்ளியம்மாக் கூட போ. சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வெளிய போகணும்.” என்றுரைத்துத்து விட்டு சட்டென தன் காரை எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே சென்றுவிட்டான்.
‘என்னடா நடக்குது இங்க? அவ என்னடான்னா காலைல யாருன்னே தெரியாத ஒருத்தன் கூட கல்யாணம் பண்ணி வைக்குறா. இவன் என்னடான்னா பல வருஷம் கூட வாழ்ந்த மாதிரி பேசிட்டு போறான். இவனுங்க லூசா? இல்ல நான் லூசா?’ என்று மனதுக்குள் திகைத்து நின்றிருந்தவளை அனுக்ஷயனின் அறைக்கு அழைத்துச் சென்று உணவு வழங்கிய வள்ளியம்மா. அவளை நன்றாக தூங்கி ஓய்வெடுக்குமாறு கூறிச் சென்றார். பாவம் காவ்யாவிற்கு தான் தூக்கம் வந்தபாடில்லை.
‘ஏன் வினி இப்படி பண்ண? நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கவேயில்ல..’ என்று வியனியைப் பற்றி நினைத்துக் கொண்டே தூக்கிப் போனாள் காவ்யா. இங்கே தனது மொபைலை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வியனியின் கவனத்தை கலைக்கும் பொருட்டு, காரினை வேகமாக செலுத்தத் தொடங்கினான் ஆரிகேத்.
“என்னப் பண்றீங்க? என்னைய கொன்னுட்டு அந்த தர்பூசணிய கட்டிக்கலாம்னு பார்க்குறீங்களா? ஆவியா வந்துனாலும் பழி வாங்குவேன். ஜாக்கிரதை.”
“உண்மை தான் தாயே! இல்லேன்னா உயிருக்கு உயிரான ப்ரெண்ட்கிட்டக் கூட ஒரு வார்த்தை கேட்காம திட்டம் போட்டு அவளை அந்த அனுக்ஷயனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பியா?”
“ஏது சார் ரொம்ப வருத்தப்படுற மாதிரி இருக்கு? மிஸ்டர்.. அவ உங்களுக்கு தங்கச்சி மாதிரி.. அதை மனசுல வைச்சுக்கோங்க..”
“அதுனால தான் கேட்குறேன்.. அவளுக்கு போய் எதுக்கு உன்னோட அண்ணை கல்யாணம் பண்ணி வைச்சு? உங்க குடும்பத்துல நான் ஒருத்தன் வந்து மாட்டிக்கிட்டு போதாதா?”
“ஹலோ! பார்த்து பேசுங்க. என் அண்ணன் ஒன்னும் அந்த அளவுக்கு மட்டமில்ல. நான் சொன்னேன்னா எல்ஐசி பில்டிங்ல இருந்து கூட குதிப்பான்.”
“எப்படி நீ சொன்ன அப்படிங்குறதுக்காக உன் ப்ரண்ட்டை கல்யாணம் பண்ணிக்கிட்டானே.. அதுமாதிரியா? இந்த கல்யாணமே அவனுக்கு அவனே பண்ணிகிட்டு தற்கொலை தான். போயும் போயும் அவனுக்கு உன் ப்ரெண்ட் தான் கிடைச்சாளா?”
“நானும் பார்த்துட்டே இருக்கேன். உங்களுக்கு வாய் ரொம்ப தான் நீளுது.”
“அதை உன்னால மட்டும் தான் அடக்க முடியும். ஆனா அதை நீ செய்ய மாட்டியே?!”
“என்னது?”
“போச்சு இனிமே புரியாத மாதிரியே நடிப்ப.. ஆமா எனக்கு ஒன்னு புரியவே இல்ல.. இந்த அண்ணே திடீர்னு எங்க இருந்து வந்தான்?”
“அகிலாம்மா எங்க குருவம்மா பாட்டியோட தூரத்து சொந்தம். எனக்கு பெரியம்மா முறை. என்னவோ சின்ன வயசுல லண்டனுக்கு வரும் போது எல்லாம் என்னைய அவ்வளவு பாசமா பார்த்துப்பாங்க. அது மட்டும் இல்ல.. ரொம்ப நாளா அண்ணே கல்யாணம் வேணாம்னு பிடிவாதம் பிடிச்சுட்டு இருந்துச்சா? அதுக்கு ஒரு வேட்டு வைக்கணும்னு தான் காவ்யா கூட கோர்த்து விட்டேன்.”
“அப்போ இந்த கல்யாணத்தைப் பத்தி உன் அண்ணனுக்கு ஒன்னுமே தெரியாது. அப்படித்தானே?!”
“இல்ல காவ்யா பத்தியும் வேலுசாமி பத்தியும் கொஞ்சம் சொல்லி அவளை காப்பாத்த தான் சொன்னேன். ஆனா திடீர்னு இப்படி ஒரு ஐடியா தோணுச்சா.. அதான் அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம..”
“பொய் பொய்யா சொல்லி அவனை இல்லை கட்டி கடல்ல தள்ளிவிட்டுட்ட..”
“ஹலோ! அதென்ன எப்பப் பார்த்தாலும் நெகடிவ்வா பேசுறீங்க? அப்படி எல்லாம் என் அண்ணனோட வாழ்க்கையாக விடுவேனா? அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குறதுக்கு அகிலாம்மாகிட்ட ஐடியா கொடுத்துருக்கேன். இந்நேரம் அவங்க ஆட்டத்தை ஆரம்பிச்சுருப்பாங்க.”
“எப்பா நீ சரியான கேடி பில்லா.. கில்லாடி ரங்கா.. சொடக்கு போடுற நேரத்துல மலையையே பிரட்டி போட்டுருக்க..” என்று அவளைப் பார்த்து கூறிய அனுக்ஷயன், தங்களது அப்பார்ட்மெண்ட் வாசலில் காரை நிறுத்திவிட்டு, காற்றில் கலைந்திருந்த அவளது முடியை ஒதுக்கிவிட்டவாறே,
“காலைல இருந்து ஓடி ஓடி டயர்டா இருப்ப. சரியா சாப்பிடக் கூட இல்ல. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடுவேன். அப்புறம் வீட்டுல யார் கூடயும் சண்டை போடாத. ஓகே..” என்றுரைத்து வியனியின் நெற்றியில் முத்தமிட்ட ஆரிகேத், அவள் காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் சென்று மறையும் மட்டும் பார்த்திருந்து விட்டு காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
‘யாரோ யாரோடி
ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன்
திமிருக்கு அரசன்
ஈக்கி போல நிலா
வடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ
சொல்லு..’ என்று பாட்டுப் பாடியபடி வீட்டிற்குள் நுழைந்தவளின் முன்னால் வந்து விழுந்தது அவளது பெட்டி படுக்கை.
“வீட்டை விட்டு வெளியப் போடி..” என்ற வார்த்தை கூறியவரைப் பார்த்து விக்கித்து நின்றாள் வியனி ஹில்டா. நிஜமாவே விதி என்ற பெயரில் சேலை வியனியின் வாழ்வில் விளையாட வந்த தாரகை யாரோ?
அத்தியாயம் 38
வீட்டிற்குள் நுழைந்த வியனியின் முன் ஆக்ரோஷமாக நின்றிருந்தார் குருவம்மா பாட்டி. பாட்டி என்று ஓடி வந்தவளின் முன் அவளது பெட்டிப் படுக்கையை தூக்கிப் போட்டவரை திகைத்து நோக்கினாள் வியனி ஹில்டா.
“பாட்டிஇஇஇஇ?!”
“என்ன பாட்டி? எதுக்கு இப்படி கண்ணை உருட்டி உருட்டி பார்க்குற? ம்ம்ம்.. குடும்பமாடி நடந்திருக்குற? உன்னைப் பத்தி வண்டி வண்டியா சொல்றாங்கடி.. உன்னை என்ன செஞ்சா தகும்?” என்று கத்தியவரை ஆவென பார்த்திருந்த வியனி,
“பாட்டி.. நீ.. நீங்களா.. என்னை?” என்று கூற,
“பேசாத.. ஒரு பொண்ணை எதுக்குடி ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க? புருஷனை புருஷனா நினைக்காம ஹாஸ்டல் வார்டனா நினைச்சுருக்க? இந்த என்னா வீடா? இல்ல லாட்ஜா? இல்ல ஹாஸ்டலா? நம்ம வீட்டுல வந்து தங்கியிருக்குற விருந்தாளிகளை மூணு நாளு சோறு போட்டு, அவங்க ஊருக்கு போறதுக்கு டிக்கெட் போட்டு அனுப்ப வேணாம்? அவங்க என்ன உன் வீட்டு வேலைக்காரங்களா? நீ பார்க்க வேண்டிய வேலையெல்லாம் அவங்களை செய்ய வைச்சு.. இங்கேயே தங்க வைக்குற அளவுக்கு.. அவங்களை டார்ச்சர் பண்ணிருக்குற.. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல வினிம்மா..” என்று கூறி அவளது கையைப் பிடித்து இழுத்தார் குருவம்மா. இப்பொழுது வியனிக்கு அவர் சொல்ல வருவது கொஞ்சம் புரிய ஆரம்பித்திருந்தது.
“அதுக்கு என்னைய வீட்டை விட்டு வெளியப் போக சொல்லுவீங்களா? இது புருஷன் வீடு; என்னோட வீடு. அவரே போகச் சொன்னாக்கூட நான் வெளியப் போக மாட்டேன். நீங்க யார் அதை சொல்றதுக்கு? இவங்களை வேலை பார்க்க சொல்லி நான் சொல்லல. அவங்களாப் பார்த்தாங்க நான் தடுக்கல. எதுக்கு பாட்டி நான் தடுத்து ஆரியோட புதுப் பொண்டாட்டி எங்களை மதிக்க மாட்டேங்குறான்னு பேர் வாங்கணுமான்னு தான் அவங்க எது செஞ்சாலும் நான் பேச இருந்தேன். அப்புறம் என் புருஷனுக்கு நான் பொண்டாட்டியா நடக்கலைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? என் புருஷன் வந்து உங்கக்கிட்ட கம்ப்ளெண்ட் பண்ணாரா? இல்ல நீங்க தான் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ரூம்குள்ள என்ன நடக்குதுன்னு வந்து பார்த்தீங்களா?” என்று அவரது கையை உதறிவிட்டு, தன் இடுப்பில் கை வைத்து நின்றவளை பெருமையாகப் பார்த்தார் குருவம்மா.
“அப்போ நீயும் புருஷனும் சந்தோஷமா தான் வாழுறீங்க?! அப்படித்தானே?!”
“ஆமா! அதை எப்படி நான் நிரூபிக்குறதுன்னு சொல்லுங்க. செஞ்சு காட்டுறோம்.” என்று வியனிக் கூற,
“அம்மாடி வசந்தி! வெளிய வாம்மா. உன் மருமக எப்படி நிரூபிக்கணும்னு கேட்குறா. வந்து சொல்லிட்டுப் போ.” என்று பாட்டியும் வியனியைப் பார்த்து கொண்டே கத்தினார். இதெல்லாம் யாரால்? எதனால் நடக்கின்றது என்பதை கண்களால் வியனி பாட்டியிடம் வினவ, கண்களால் பட்டு மாமியையும் தர்ஷினியையும் ஜாடை காட்ட, புரிந்து போனது வியனிக்கு.
‘அப்போ இந்த ரெண்டு ஜந்துவும் தான் வசந்தியம்மாகிட்ட சொல்லி, தாய்கிழவியை இங்க வைச்சுருக்குங்க.. இதுங்கள என்னப் பண்ணுறேன்னு பாரு?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வியனி வெளியே ஒன்றும் அறியாத பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டாள். வசந்தியைப் பார்த்ததும்,
“அத்த! எப்ப வந்தீங்க? எப்படி இருக்கீங்க? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?” என்று அணைத்துக் கொண்டே பேசியவளின் முகத்தில் பட்டு மாமி கூறியது போல் திமிரோ அகங்காரமோ எதுவும் தெரியவில்லை. மாறாக குழந்தைத்தனம் தான் தெரிந்தது.
‘இவ நிஜமாவே குழந்தையா? இல்ல அப்பாவி மாதிரி நடிக்குறாளா?’ என்று எது உண்மை? எது பொய்யென்று? அறியாது அவளது முகத்தை ஆராய்ந்தார் வசந்தி.
“நான் நல்லாருக்கேன். அதே மாதிரி என் பையனும் நல்லாருக்கணும்னு நினைக்குறேன்.”
“அவருக்கென்ன? அவரை நான் ரொம்ப நல்லாப் பார்த்துக்குறேன். ஆனா, இப்ப இந்த ரெண்டு நாளாக தான் எங்களுக்குள்ள சண்டையா வருது. யார் செய்கூலி, சேதாரம் வைச்சாங்களோ?” என்று வியனி கூற,
“அம்மாடி! அது செய்கூலி, சேதாரம் இல்ல.. செய்வினையோ சூனியமோன்னு சொல்லணும்..” என்று குருவம்மா பாட்டி கூற,
“ஆமா! ஆமா! அதே தான். யாரோ எங்க ரெண்டு பேருக்கும் சூனியம் வைச்சுட்டாங்க போல. ஆனா, இப்போ சந்தோஷமா தான் இருக்கோம்.” என்று கூறி சிரித்த வியனியை உற்றுப் பார்த்த வசந்தி,
“நல்லாருந்தா சரி தான்! எதுக்கும் நம்ம குலதெய்வ கோயிலுக்கு ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.” என்று கூற,
“அதெப்படி அவங்க ரெண்டு பேரு மட்டும் போவாங்க?” என்று பட்டு மாமி இடையில் வர,
“ஏன்?” என்று பட்டு மாமியை சந்தேகமாக பார்த்தார் வசந்தி.
“இல்ல.. அவங்க ரெண்டு பேரு மட்டும் ஹனிமூன் போனா பரவால்ல. ஆனா கோயிலுக்கு போறாங்க. இந்த பொண்ணு வேற நம்ம கோத்திரமில்ல. அவளுக்கு என்ன சடங்கு சம்பிரதாயம் தெரியப் போகுது? சர்ச்சுக்கு போக சொன்னா, பயமில்லாம போவா. நம்ம கோயிலுக்கு எப்படின்னுண்டு தான் யோசனையா இருக்கு.” என்று பட்டு மாமி கூற,
“அது சரி! அவ்வளவு பயமிருந்தா, நீங்க எல்லாரும் எங்கக்கூட வாங்களேன். சேர்ந்து எல்லாரும் ஒன்னா போலாம்.” என்ற வியனி, பாட்டியைப் பார்த்து எப்படி என்றவிதமாக புருவம் உயர்த்த, யாருமறியாமல் தன் தலையில் அடித்துக் கொண்டார் குருவம்மா பாட்டி.
‘இந்த பொண்ணை வைச்சுட்டு, நான் படுறபாடு.. பாண்டூரங்கா.. இவளுக்கு நல்ல புத்திர கொடுப்பா..’ என்று தன் மனதுக்குள் புலம்பிக் கொண்டே,
“நீ சொல்றதும் சரி தான். நான் மாப்பிள்ளைகிட்ட சொல்லி, ட்ரெயின்ல டிக்கெட் புக் பண்ண சொல்றேன். நாளைக்கு காலைல எல்லோரும் ரெடியா இருங்க.. எனக்கு கொஞ்சம் தலைவலிக்குது நானும் வசந்தியும் வியனியோட ரூம்ல ரெஸ்ட் எடுக்கப் போறோம்.” என்றுக் கூறியபடி வசந்தியையும் தன்னோடு வியனியின் அறைக்கு அழைத்துச் சென்றார் குருவம்மா.
‘இப்போ எதுக்கு தாய்கிழவி மூஞ்சி காட்டிட்டு போகுது?!’ என்று மனதுக்குள் நினைத்தவாறே ஆரிகேத்திற்காக ஹாலில் காத்திருக்கத் தொடங்கினாள் வியனி ஹில்டா. ஆளில்லாத தியேட்டரில் தனக்காக காத்துக் கொண்டிருந்த அனுக்ஷயனுக்கு அடுத்ததாக இருந்த சீட்டில் அமர்ந்தான் ஆரிகேத்.
“என்னடா புது மாப்பிள்ளை? முதராத்திரி அதுவுமா யாருமில்லாத கடைக்கு டீயாத்த என்னைய எதுக்கு இங்க வரச் சொன்ன?”
“ம்ம்ம்.. உன் கூட டூயட் பாடத்தான். வர்றியா? டூயட் பாடலாம்?”
“அய்யோ! நான் அந்த மாதிரி பையனில்லடா. அதுக்கு நீ வேற ஆளப்பாரு..”
“என்ன கிண்டலா? வர்ற கோபத்துக்கு உன்னையும் உன்னோட அருமை பொண்டாட்டியையும் தூக்கிப் போட்டு மிதிக்கணும் போல கோபம் வருது.”
“அடடடா.. மச்சானுக்கு எம்புட்டு கோபம் வருது? அதென்ன உன் பொண்டாட்டி? அவ உன் அருமை தங்கச்சி இல்லயா? இப்படி சொல்லிட்டியடா.. இதை மட்டும் உன் அருமை தங்கச்சி கேட்டா, எப்படி இருக்கும்?”
“அருமை தங்கச்சியா? எமகாதகி..”
“அப்படியா?! அது இப்ப தான் உனக்கு தெரிஞ்சுதா?”
“வாடா நல்லவனே! இப்போ இந்த வாய் பேசுறேல்ல?! காலைல உன் பொண்டாட்டி அவ்வளோ பேசி ஒரு சம்பவம் பண்ணாளே?! அப்போ எங்கப் போயிருந்த?”
“கல்யாணம் பண்ணிட்டல்ல.. போகப் போக உனக்கும் பழகிடும். நீயும் என்னை மாதிரியே வாயிருந்தும் ஊமையா நிப்பப் பாரு.”
“என்னடா பிடிசாபமா? இந்த காலத்துல பேட்சுலர் பசங்க கொடுக்குற சாபமே பழிக்கேறதில்ல. நீ கல்யாணமானவன். நீ கொடுக்குற சாபமா பழிக்குப் போகுது?!”
“வேணா! என் வயித்தெறிச்சலை கொட்டிக்காத. அப்புறம் நீயும் என்னை மாதிரி தான் அலைவ.”
“ஓஹோ! புரியுது.. புரியுது.. அப்போ சார் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு சொல்லு..”
“அதெல்லாம் விடு.. இப்போ எதுக்கு என்னைய வரச் சொன்ன? அதை சொல்லு முதல்ல..”
“பார்த்தியா? பார்த்தியா? டாப்பிக்கை சேன்ச் பண்ற..”
“அப்படின்னா அந்த டாப்பிக் எனக்கு பிடிக்கலைன்னு அர்த்தம். வாந்தியும் பேதியும் அவே அவனுக்கு வந்தாத்தான் தெரியும்.”
“சரி.. சரி.. ரொம்ப பொங்காத..”
“இப்ப எதுக்கு கூப்பிட்ட அதைச் சொல்லு முதல்ல..”
“இந்த இதுல நாராயணசாமியும் வேலுசாமியும் இல்லீகல் பிஸ்னஸ் பத்தின டீடெயில்ஸ் இருக்கு. இதை வைச்சு என்ன பண்ண முடியும்னு பாரு..”
“கொடு..” என்று அந்த கோப்புகளை வாங்கி பார்த்த ஆரிகேத்,
“இதெல்லாம் பத்தாது அனு. அவனுங்களுக்கு இருக்குற செல்வாக்குக்கு கேஸ் கோர்ட்ல நிக்காது.” என்று கூற, ஆரிகேத்தை கூர்மையாக பார்த்த அனுக்ஷயன்
“அப்போ உன் ஹாஸ்பிடல்ல அந்த பத்மநாபனோட சேர்ந்து செய்யுற கள்ளத்தனத்தை காட்டிக் கொடுக்க வேண்டியது தானே..” என்றான்.
“அந்த நாராயணசாமி ஒரு பணக்கார முதலை. ஈசியா பத்மநாபன் மேல பழியைப் போட்டு தப்பிச்சுக்குவான். ஓடுமீனோட உறுமீன் வர காத்திருக்குமாம் கொக்கு.. அது மாதிரி காத்திருந்து தான் அந்த திமிங்கலத்தை பிடிக்கணும். அவன் பண்றதை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டணும். ஆதாரத்தோடு நான் வரும்போது நீ எனக்கு பக்கபலமா இருக்கணும்.” என்று கூறி அனுஷ்ஷயனைப் பார்த்து ஆரிகேத் புன்னகை புரிய, சரியாக அதே நேரம் அவனது அழைப்பேசியும் அவனை அழைக்க, அழைப்பை எடுத்து காதில் வைத்த ஆரிகேத்தின் முகம் சுருங்கியது.
“இப்ப என்ன டிக்கெட் போடணும், அவ்வளவு தானே?! போடுறேன்.. வைக்க.. ம்ம்ம்.. சரி.. சரி.. சீக்கிரம் வர்றேன்..” என்றவாறு அழைப்பை ஆரிகேத் துண்டிக்க, இப்போது அனுக்ஷயனின் அழைப்பேசி சிணுங்கியது. அதனைப் பார்த்த ஆரிகேத்,
“கிளம்பு.. கிளம்பு.. வீட்டுல ஹோம் மினிஸ்டர் வெயிட்டிங். அடுத்த மீட்டிங் எப்போ மெஸேஜ் பண்ணு..” என்றவாறே எழுந்து கொள்ள,
“அங்க மட்டும் என்ன வாழுது? நீயும் கிளம்பு.. கிளம்பு.. காத்து வரட்டும்..” என்றா அனுக்ஷயன் கூற, இருவரும் தங்கள் தலையில் தொப்பியை மாட்டிக்கொண்டு முகத்தை மறைத்தவாறு அங்கிருந்து வெளியேறினர். தங்களது குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக ஆரிகேத் எடுத்த வந்த டிக்கெட்டோடு தயாராகி காத்திருந்தனர் அனைவரும்.
“அம்மாஆஆஆ..”
“ம்ம்ம்.. “
“இந்த வியனியையும் எதுக்கு நம்ம கூட சேர்த்து போகணும்? ஆரிமாமா கூட அவளை சேர்த்து வைச்சுப் பார்த்தாலே அப்படியே கோபம் கோபமாக வருது.”
“நீயேன் கோபப்படுற? அதான் நான் இருக்கேனோல்லையோ? எல்லாத்தையும் என்னாண்ட விட்டுடு. இப்ப என்ன அந்த வியனி, ஆரிகூட சேர்ந்து வரக்கூடாது. அவ்வளவு தானே?!”
“ம்ம்ம்..”
“வரமாட்டா. நான் பார்த்துக்குறேன்.” என்ற பட்டுமாமி செய்த வினையால் பாதிக்கப்படப் போவது வியனியா? இல்லை ஆரிகேத்தா? யாரறிவாரோ?!
அத்தியாயம் 39
அனைவரும் கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் சென்ற நிலையில், தன் சட்டைப்பையில் வைத்திருந்த டிக்கெட்டுகளை ஆரிகேத் வெளியே எடுத்து சரிபார்க்க, அதில் இருந்த டிக்கெட்டுகளில் வியனியின் டிக்கெட் மட்டும் மாயமாக மறைந்து போயிருந்தது.
‘எப்படி அவளோடு மட்டும் காணாமப் போச்சு? நான் தானே வாங்கிட்டு வந்தேன். அது எப்படி காணாம போகும்?’ என்று யோசித்தவனின் மனக்கண்ணில் மின்னி மறைந்தாள் தர்ஷினி. டிக்கெட்டுகளை எண்ணிக் கொண்டே, ஆரிகேத் கிளம்பி வெளியே வரும்போது, எதிர்பாராத விதமாக அவன் மேல் மோதினாள் தர்ஷினி. அச்சமயம் அவன் கையில் இருந்த டிக்கெட்டுகள் பறந்து கீழே விழ, “சாரி.. சாரி..” என்றவாறே அதனை மீண்டும் சேகரித்துக் கொடுத்துவிட்டு சென்றாள். இதனை ஞாபகப்படுத்திப் பார்த்த ஆரிகேத்,
‘அப்போ தான் மிஸ்ஸாகிருக்கணும். பரவால்ல! இப்ப என்ன பெனால்டி கட்ட சொல்வாங்க. கட்டிட்டாப் போச்சு.” என்றவன் யோசித்துக் கொண்டு நின்றிருக்க, அனைவரும் அங்கிருந்த ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டனர். அமர்ந்த சில நொடிகளில் தங்களது பெட்டியை சரிபார்த்துக் கொண்டிருந்தாள் வியனி. திடீரென,
“பாட்டிஇஇஇஇ..” என்று கத்த,
“என்ன வியனி? எதுக்கு இப்படி கத்துற?” என்று கேட்டார் குருவம்மா.
“உங்க லக்கேஜை மட்டும் எடுத்துகிட்டு என்னோட லக்கேஜை காரிலேயே வைச்சுட்டு வந்துட்டீங்க.. இப்போ என்னோடத மட்டும் காணோம்.”
“அவங்கவங்க லக்கேஜை அவங்கவங்க பத்திரமாத் தானே எடுத்துட்டு வந்தாங்க. உன்னோடதை நீதானே எடுத்துட்டு வந்து? இப்போ காணோம்னு சொல்ற?!”
“என்னோட லக்கேஜை தர்ஷினி தான் எடுத்துட்டு வர்றதா சொன்னா.” என்று வியனி கூறி முடிக்கும் முன்,
“நீ எப்போ என்கிட்ட சொன்ன? நீயா உன் காதுல போனை வைச்சு கிட்டு பேசிட்டுருந்த. நீ எங்கக்கிட்ட பேசுறியா? இல்ல போன்ல பேசுறியான்னு எனக்கு எப்படி தெரியும்? நான் உன் லக்கேஜை எல்லாம் எடுக்கவே இல்ல.” என்று கூற, அவளை ஒரு பார்வை முறைத்து பார்த்து வியனி,
“பாட்டி ட்ரெயின் எடுக்க இன்னும் டைம் இருக்கு. நான் போயி லக்கேஜ் எடுத்துட்டு வந்துடுறேன்.” என்று கூறிவிட்டு இரயிலில் இருந்து கீழே இறங்கி சென்றாள். அவள் செல்வதை திருப்தியுடன் பார்த்த தர்ஷினி,
‘போ.. போ.. திரும்பி நீ வர்றதுக்குள்ள ட்ரெயின் கிளம்பி இருக்கும். குலதெய்வ கோவிலுக்கு ஆரிமாமாக்கூட நான் தான் போகப் போறேன்..’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள். வியனி கீழே இறங்கி செல்வதை பார்க்காது, அங்கு இருந்த டிடிஆரிடம் டிக்கெட்டிற்கான பணத்தை பெனால்டியுடன் செலுத்தி புதிதாக வாங்கிக் கொண்டிருந்தான் ஆரிகேத். ஆதலால் மீண்டும் அவன் ட்ரெயினில் ஏறும் போது வியனி, அவன் கண்ணில் தென்படவில்லை.
“ஆமா வியனி எங்க?”
“லக்கேஜ் எடுக்க போயிருக்காப்பா”
“என்னம்மா நீங்க ட்ரெயின் கிளம்பப்போகுது. இப்பப் போயி கீழே இறங்கி போயிருக்கா. சரி.. இந்தாங்க டிக்கெட்டை வைச்சுருங்க. நான் போயி பார்த்துட்டு வர்றேன்.”
“ஆரிமாமா! நீங்க எதுக்கு இறங்குறேள். ட்ரெயின் கிளம்ப இன்னும் நாழி இருக்கு. அவா சீக்கிரம் வந்துடுவா. நீங்க கீழே இறங்கி ட்ரெயின் கிளம்பிடுத்துன்னா.. என்ன பண்றது? அதுவுமில்லாம நாங்க எல்லாரும் பொம்மனாட்டிங்களா.. இருக்கோம்.. நீங்க இப்போ சட்டுன்னு கீழ இறங்கிட்டீங்கன்னா.. எங்கக்கூட துணைக்குன்னு யாரும் இல்ல.. அதான் சொன்னேன்..”
“அவ என்னோட வொய்ஃப். அவ இல்லாம நான் மட்டும் உங்கக்கூட வந்து எந்த ப்ரயோஜனமும் இல்ல. அதுவுமில்லாம சப்போஸ் நான் வரலைன்னாலும் இந்த கம்பார்ட்மெண்ட் முழுக்க ஃபுல் செக்யூரிட்டியோட தான் இருக்கும். உங்க யாருக்கும் எந்த பயமும் வேணாம்.” என்றவன் சட்டென இறங்கி வியனித் தேடி கார் பார்க்கிங்கிற்கு செல்ல, மாமியும் தர்ஷினியும் பொறுமியபடி அமர்ந்திருந்தனர்.
“என்ன இந்த டிக்கி ஓபனே ஆகமாட்டேங்குது?” என்று காரை குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வியனி.
“அதுக்கு முக்கியமான கார் சாவி வேணும்.”
“ஆமால்ல..” என்றபடியே திரும்பியவளின் முன்னே நின்றிருந்தான் ஆரிகேத்.
“க்ராக்.. க்ராக்.. மண்டைல மூளையைத் தவிர மத்த எல்லாத்தையும் எக்கச்சக்கமா வளர்த்து வைச்சுருக்க. தள்ளு..” என்றவன் காரின் பின்னே நின்று கொண்டிருந்தவளை விலக்கி, கார் சாவி கொண்டு டிக்கியை திறந்து உள்ளே இருந்த லக்கேஜை எடுத்தவன்,
“வா.. சீக்கிரம் போகலாம்..” என்றவாறே அவளை தன்னுடன் இழுத்து கொண்டு செல்ல, அவர்கள் செல்லும் முன் ரயில் அங்கிருந்து கிளம்பிச் சென்றிருந்தது.
“போச்சு.. போச்சு.. உன்னால தான் லேட்டு.. இப்ப ட்ரெயினும் போயிடுச்சு.”
“ஆமா பொல்லாத ட்ரெயின். ஊருக்கு தான் பெரிய பணக்காரரு.. பொண்டாட்டிய இப்படி ட்ரெயின்ல கூட்டிட்டு போறீங்க? ஒரு ஏரோப்ளேன்ல கூப்பிட்டு போறீங்களா? ஆனாலும் நீங்க இவ்வளோ காஞ்சனா இருக்கக்கூடாது.”
“யாரு நான் கஞ்சனா?”
“பின்ன நானா?”
“ஓ! அப்போ ஃப்ளைட்ல டிக்கெட் போட்டா மட்டும் மேடம் கரெக்டா லக்கேஜை தூக்கிட்டு வந்துருவீங்கப் பாரு?”
“வேணா.. என் வாயை கிளறாதீங்க.. அப்புறம் நடக்குறதே வேற..”
“என்னடி பண்ணுவ? இல்ல என்ன பண்ணுவேன்னு கேட்குறேன்..” என்று தன் முழுக்கை சட்டையை மேலேற்றியவாறே அவளருகில் வர, தன்னை சுற்றி ஒருபார்வை பார்த்த வியனி, சட்டென அவன் முன் மண்டியிட்டு சத்தமாக அழுக ஆரம்பித்தாள்.
“ஆஆஆஆஹ்.. என்னைய விட்டுட்டு எங்கேயும் போயிடாதீங்க.. நான் என்ன கேட்டேன் உங்கக்கிட்ட? என்னையும் உங்கக்கூட கூட்டிட்டு போங்கன்னு தானே கேட்டேன்.. அதுக்கு போயி அடிக்க வர்றீங்களே.. அய்யோ இதை யாரும் கேட்கமாட்டீங்களா?” என்று சத்தமிட, அங்கு நின்றிருந்த டிடிஆர் ஒருவர்,
“ஓ! இந்தப் பொண்ணை கலட்டி விட்டுட்டு நீ மட்டும் ஊருக்கு போக ப்ளான் பண்ணித் தான், என்கிட்ட பெனால்டியோட டிக்கெட் வாங்கினியா?” என்று கேட்க,
“அய்யோ! அது வேற பண்ணாரா? இவருக்கு என்மேல் கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. பாசமில்லன்னு தெரியும்.. ஆனா இப்போ மனிதாபிம் கூட இல்லயே..” என்று மேலும் அழுக,
“இப்ப உன் நடிப்பை நிறுத்தப் போறியா? இல்லயா?” என்று ஆரிகேத் தன் பல்லை கடிக்க, அதனை தன் ஓரக்கண்ணால் பார்த்த வியனிக்கு கொண்டாட்டமாக இருந்தது.
‘பல்லக்கடிக்குறியா? நல்லாக்கடி.. அந்த தர்பூசியவா கட்டிப்புடிச்சுட்டு பின்ன? உனக்கு இது பத்தாது.’ என்றவளின் மனக்கண்ணில், தர்ஷினி கீழே விழாமல் இருக்க, அவளது இடையை வளைத்துப் பிடித்தவாறு நின்றிருந்த ஆரிகேத் தோன்றி மறைந்தான்.
“பாருங்க.. இப்பக்கூட பாசமா..” என்று பேசிக் கொண்டிருந்த வியனியின் வார்த்தைகள் அனைத்தும் ஆரிகேத்தின் இதழுக்குள் கரைந்து போனது. வியனியின் பேச்சை தடை செய்யும் விதமாக அவளது இதழை சிறை செய்தான். சுற்றியிருந்தவர்கள் அவர்களை கேமராவினால் புகைப்படங்கள் எடுக்க, கூச்சத்தினால் அவனை விலக்க முயற்சித்தவளை இன்னும் அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான் ஆரிகேத்.
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன, இங்க இப்பவே ஃபர்ஸ்ட் சைட் கொண்டாடிடுவேன். நானும் போனப் போகுது சின்னம் பொண்ணுன்னு பார்த்தா ரொம்ப ஆட்டம் போடுற.. வாயை மூடிக்கிட்டு வர்ற.. புரிஞ்சுதா?” என்றவன் அவளது கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான்.
‘இப்ப எதுல போகப்போறோம்னு கேட்டா, திரும்ப கடிச்சு வைப்பானோ?’ என்று யோசித்த வியனி, அவனிடம் எதுவும் கேட்காமல் வாயை மூடி கொண்டாள். காரில் அவளை ஏறச் செய்து, தானும் ஏறிக் கொண்டவனைப் பார்த்து,
“அப்போ?! நாம கார்லயா போறோம்?!” என்று கேட்க, அவளை ஒருப்பார்வை பார்த்தான் ஆரிகேத். அதில் உள்ளே சென்ற குரலோடு,
“இல்ல இங்க இருந்து நாகர்கோவில் வரைக்கும் கார்ல போன எப்படியும் நாலு நாள் ஆகுமே?! அதான் கேட்டேன்.” என்று கூற,
“விட்ட ட்ரெயினை பிடிக்க முயற்சிப் பண்றேன். அப்படியில்லன்னா நம்ம ஃப்ளைட்ல போவோம்..” என்று கூறியவனை நிமிர்ந்து பார்த்தாள் வியனி. அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்த ஆரிகேத், அவள்புறம் திரும்பி அவளை நோக்கி தன் புருவங்களை என்னவென்று கேட்டவாறு ஏற்றி இறக்க, அவன் விழிப் பார்வையில் பொங்கித் தான் போனாள். சிறிது தூரம் சென்ற நிலையில், காரில் தனக்குப் பிடித்த பாடல்களை ஒலிக்கச் செய்தவளை பார்த்துக்கொண்டே காரை செலுத்தினான் ஆரிகேத். திடீரென கேட்ட,
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
என்ற பாடல் ஒலிக்க அப்படியே திகைத்து அமர்ந்து கொண்டாள் வியனி ஹில்டா. அவளின் நிலையை பார்த்த ஆரிகேத்திற்கு சிரிப்பு ஒருபுறம் வந்தாலும் அவளை சீண்டிப் பார்க்க எண்ணினான். கார் ஸ்டீரிங்கை ஒரு கையால் சுழட்டிக் கொண்டே, தன்னருகே இருந்தவளின் இடையோடு கையிட்டு தன்னோடு சேர்த்து இழுத்தணைத்தவனை மிரண்ட விழிகளோடு பார்த்தாள் வியனி ஹில்டா.
“தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா” என்று பாடியவாறு காரை ரோட்டமாக நிறுத்தியவன், அவளது கழுத்தோரமாக முத்தமிட, சிலிர்த்தடங்கியது கன்னியவளின் பூமேனி. அவளது கூந்தலுக்குள் தன் கைகளை நுழைத்து, அவளது தலையை பின்னோக்கி இழுக்க, தன் முகத்தை மேலும் அவனுக்கேற்றவாறு காட்டியவளின் இதழை தன் இதழால் மெல்ல அணைத்து, அவளது மூக்கோடு மூக்கூரச, தன்னையும் அறியாமல் கண்ணை மூடினாள். பெண்ணவளின் நிலவு போன்ற வட்ட முகத்தை தன் மீசைகளாலும் இதழ்களாலும் வண்ணம் நீட்டிக் கொண்டிருக்க, தான் இருப்பது சொர்க்கலோகமோ என்பது போல் தன்னிலை மறந்திருந்தாள் மங்கை.
அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ..
எந்த உறவோ என்று பாடல் ஓடிக் கொண்டிருக்க, வியனியின் உடையோடு கையிட்டு அவளது வெற்று மேனியை தீண்டியவனின், தேகம் முழுவதும் இப்போதே அவள் வேண்டுமென்ற வேட்கையை கிளற, கண்ணை மூடி தன்னை மறந்திருந்தவளை, சீட்டின் பின்னோடு சேர்த்து சாய்க்க, அவனோடு சேர்ந்து தன் மேனியும் மோகத்தில் எரிவதை உணர்ந்தாள் வியனி. கொய்யா கனிகளை பறிக்கக் துடித்த கைகள் அதனை நோக்கி நகரும் வேளையில், ஆரிகேத்தின் கைப்பேசி அலற, அதனை எடுத்து காதில் வைத்தவன்,
“சொல்லு தர்ஷினி.. இதோ வந்துட்டே இருக்கோம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்டேஷன் வந்துடுவோம்..” என்றவாறே வியனியை விட்டு விலகியிருக்க, மந்திரத்திற்கு கட்டுப்பட்டதை போல் மயங்கி இருந்தவள், கண் விழித்து அவனை மோகமாகப் பார்த்தாள். ஆனால் அவனோட கடமையே கண் போன்றது போல் மீண்டும் காரை இயக்கத் தொடங்கியிருந்தான். கலைந்திருந்த தன் ஆடைகளை சரிசெய்து கொண்டவள்,
“இவனுக்கெல்லாம் எதுக்கு பொண்டாட்டி? நீங்க போங்க என் பொண்டாட்டிக்கூட சீக்கிரம் வந்துடுவேன்னு சொல்ல வாய் வருதா? தர்ஷினி.. தர்பூசணின்னு வலியுறாரு.. இனிமே என் பக்கத்துல வாங்க.. வாலை ஒட்ட வெட்டுறேன்..” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தவளை பார்த்த ஆரிகேத்,
“இப்ப எதுக்கு முணங்குற? இவ்ளோ நேரம் நல்லாத்தானே இருந்த?” என்று கேட்க,
“அதான் தர்பூசணி ஃபோன் பண்ணிட்டாளே?! அப்புறம் எதுக்கு என்கிட்ட பேசுறீங்க? அவ சொன்ன மாதிரியே சீக்கிரம் போய் அந்ஊ ஓடுற ட்ரெயினை ஒத்த கையால நிறுத்துங்க..” என்று கோபமாக பதில் கூறினாள் வியனி ஹில்டா.
“என்னது ஓடுற ரயிலை ஒத்த கையால நிறுத்தவா? என்னடியாச்சு உனக்கு?”
“இன்னும் என்ன ஆகணும்? அந்த தர்பூசணி ஃபோன் பண்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க? இப்ப அந்த குண்டு பூசணி ஃபோன் பேசுனதுக்கு அப்புறம் எப்படி மாறிட்டீங்க?”
“ஓஹோ?! ஃபோன் பண்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டுருந்தேன்?”
“பேச்சை மாத்தாதீங்க.. இப்போ தர்ஷினி தானே ஃபோன் பண்ணா?!”
“ஆமா. எங்க இருக்கீங்க? எப்ப ஸ்டேஷன் வருவீங்க? அப்படின்னு நம்ம மேல இருக்குற அக்கறைல கேட்டா.. அதுக்கென்ன இப்போ?”
“என்னது அக்கறைல கேட்பாளாமா? ஆமாப்பா.. ஆமா.. யாருக்கும் உங்க மேல இல்லாத அக்கறை அவளுக்குல்ல.. அவ இதுவும் கேட்பா.. இன்னமும் கேட்பா.. அவ்ளோ அக்கறை அவளுக்கு உங்க மேல இருக்குன்னா.. நீங்க அவளையே கல்யாணம் பண்ணிருக்கலாம்.. என்னைய ஏன்..”
“செட் ஆப்.. எப்பப் பாரு.. சின்னபொண்ணு கூட போட்டிக்கிட்டு.. இன்னொரு பொண்ணைப் பத்தி தப்பா பேசாத..”
“யோவ்.. வண்டிய நிறுத்து.. நிறுத்துன்னு சொல்றேன்ல..” என்றவள் அவனது கார் ஸ்டீரிங்கை ஒடிக்க, நேரே சென்று மரத்தில் முட்டி நின்றது. தன் தலையை தேய்த்துக் கொண்டே, தன்னருகே இருந்தவளின் முகத்தை உடனே நிமிர்த்திப் பார்த்தவன், அவளது மூச்சற்ற நிலையைக் கண்டு மூச்சுவிட மறந்து, செய்வதறியாது திகைத்திருந்தான். தன்னவளின் உயிர்காப்பானா ஆரிகேத்?
அத்தியாயம் 40
தன்னருகே கவிழ்ந்து படுத்திருந்தவளை வேகமாக நிமிர்த்தி, அவளது கன்னத்தில் கை வைத்து தட்டினான்.
“ஹேய்! எந்திரிடி.. ஹேய்! கண்ணைத் திறந்து பாரு டி..” என்றவனின் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவளில்லாத உலகத்தை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மெல்ல அவளை காரிலிருந்து வெளியே தூக்கியவன், சிபிஆர் கொடுப்பதற்காக அவளது மூக்கை ஒரு கையால் பிடித்து, மற்றொரு கையால் அவளது வாயைத் திறந்து, அதில் தன் மூச்சுக்காற்று காற்றை நிறைந்தவன், தன் கைகளைக் கோர்த்து அவளது நெஞ்சின் மத்தியில் வைத்து அழுத்த, தன் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து அவனைப் பார்த்தாள் வியனி ஹில்டா. அதனைக் கண்டவனுக்கு கோபம் தலைக்கேற, பளீரென்று கன்னத்தில் அறைந்தான். இதுவரை யாரிடமும் வாய்மொழியாக கூட எதுவும் கேட்டு அறிந்திராதவளுக்கு, ஆரிகேத்தின் இந்த முகம் முற்றிலும் புதிதாக தெரிந்தது. தன் கன்னத்தில் கை வைத்து சற்று வாயைப் பிளந்தவாறு அதிர்ச்சியாக பார்த்திருந்தவளை பார்த்தவனுக்கு மனம் தாளவில்லை.
“ஏன்டி இப்படியிருக்க? மெட்சூர்டாவே நடந்துக்க மாட்டியா? உனக்கு எதுவும் ஆகிடுச்சோன்னு எப்படி பயந்துட்டேன் தெரியுமா? ஏன் இப்படி பண்ண? எதுவும் அடிபட்டுருக்கா? எங்கயாவது வலிக்குதா?” என்றவாறே அவளது உடல் முழுவதும் ஆராய்ந்தான். கண்ணில் நீர் வலிய,
“இல்ல.. நா.. நா.. நல்லாருக்கேன்.. உங்களுக்கு எதுவும் ஆகலைல?” என்று தவித்தவாறு அவனை அவள் ஆராய, குழந்தையென அமர்ந்திருந்தவளை வாரி அணைத்துக் கொண்டான்.
“இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகல. தாங்க் காட்.. பட் இப்படி காரை டேமேஜ் பண்ணி வைச்சுருக்கியே.. இப்போ எப்படி ஊருக்கு போறது? சுத்தியும் ஒரு ஈ காக்கா இல்ல.. இப்ப எப்படி நாம ஸ்டேஷன் போறதுன்னு கொஞ்சம் கூட யோசிக்கமாட்டியா?”
“சாரி.. சாரி.. வெரி சாரி.. எனக்கு இப்படி ஆகும்னு தெரியாது. தர்ஷினி சொன்ன நேரத்துக்கு நாம அங்கப் போகக்கூடாதுன்னு தான் நினைச்சேன். காரை ஸ்டாப் பண்ண தான் நினைச்சேன். இப்படி ஆக்ஸிடென்ட் ஆகும்னு நினைக்கவேயில்ல..”
“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஸுஸுஸுஸு.. அழக்கூடாது. அதான் நான் இருக்கேன்ல.. நான் பார்த்துக்குறேன்.. இப்ப என்ன தர்ஷினி கூட சேர்ந்து நாம ஊருக்கு போகக்கூடாது அவ்வளவு தானே?!”
“ம்ம்ம்..”
“ஓகே நான் ச்சாப்பரை வரச் சொல்றேன்..” என்றவன் தன் அஸிஸ்டெண்ட்கு ஃபோன் செய்து ஹெலிகாப்டரை வரச் சொல்ல, அவனோ அவர்கள் இடத்திற்கு சிறிது தூரத்தில் சில மணிநேரங்களில் வந்து விடுவதாக தெரிவித்தான். பேசும் அவனையே இமை மூடாது பார்த்திருந்த வியனியை கண்களால் என்னவென்று ஆரிகேத் வினவ, ஒன்றுமில்லை எனும் விதமாக தன் தலையை இடம் வலமாக ஆட்டினாள்.
“இன்னும் கொஞ்ச தூரம் போனா ச்சாப்பர் இருக்கும். ஆனா இங்கிருந்து அங்கு எப்படி போறது? காரை இப்படி டேமேஜ் ஆக்கி வைச்சுருக்க.. இந்த லொக்கேஷன் ஷார் பண்ணி கார் வர வைக்கலாம்னு பார்த்தா எப்படி ரெண்டு மணி நேரமாவது ஆகும். இப்ப என்ன பண்றது?” என்றவன் யோசித்தவாறு அமர்ந்திருக்க,
“இப்ப என்ன நாம இங்கிருந்து கொஞ்ச தூரம் முன்னாடி போகணும்.. அவ்வளவு தானே? லிஃப்ட் கேட்டு போவோம்..”
“நிஜமாவே உனக்கு மண்டைக்குள்ள எதுவுமில்லயா?”
“இப்படிலாம் பேசுனீங்க.. அப்புறம் நான்பாட்டுக்கு எந்திரிச்சு போயிடுவேன்..”
“அம்மாத்தாயே! கிறுக்குத்தனமா எதையும் செஞ்சு வைச்சு என்னைய பைத்தியமாக்காத.. இந்த ரோட்டுல எந்த வண்டியும் வராது.. அப்படியே வந்தாலும் நிக்கமாட்டாங்க.. புரியுதா?”
“எப்படி நிறுத்தமாட்டாங்க? அதையும் தான் பார்க்கலாம்.. இருங்க வர்றேன்..” என்ற வியனி, மரத்தில் முட்டி மோதி நின்றிருந்த காரின் டிக்கில் இருந்து தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டவள், அதிலிருந்து சில துணிமணிகளை எடுத்து கொண்டு மரத்தின் பின்புறம் சென்று மறைந்தாள்.
“இப்ப எதுக்கு இவ ட்ரெஸ் எடுத்துட்டு மரத்துக்கு பின்னால போயி ஒளிஞ்சுக்குறா?” என்று முணுமுணுத்தவாறு நின்றிருந்தவனின் முன்னால் ஒன்பது மாத கற்பினி பெண்ணாக வந்து நின்றாள் வியனி. துணிகளை குழந்தையென மூட்டை செய்து தன் வயிற்றில் ஒன்பது மாத கருவாக வைத்திருந்தவளை பார்த்ததும் ஆச்சர்யத்தில் கண்கள் விரித்தான் ஆரிகேத். தன் வயிற்றை தடவியவாறே,
“இப்ப லிஃப்ட் கொடுப்பாங்க.. வாங்க..” என்றவள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு, ஆரிகேத்தின் கையைப் பற்றி சாலையோரம் அழைத்துச் சென்றாள். வியனியின் நடிப்பை உண்மையென்று நம்பிய ஒரு நடுத்தர வயதுடையவர், தன் காரை நிறுத்தினார். அவரைப் பார்த்ததும்,
“ஆஆஆ அம்மா..” என்று நடிக்க, அவரோ..
“உங்களுக்கு லிஃப்ட் வேணுமா?” என்று கேட்டார்.
“இல்ல.. இல்ல.. அண்ணா.. நாங்க எப்படியோ போயிக்குவோம்.. அம்மாஆஆஆ.. ப்பூஊஊ.. என்ன வெயில்?” என்றவள் தன் சுடிதார் துப்பாட்டாவை எடுத்து தன் தலையில் போட,
“அப்படிதான் சொல்லாதீங்க.. உங்களைப் பார்க்குறப்போ நிறைமாசம் மாதிரி தெரியுது.. நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க.. உங்களை அங்கக் கொண்டு போய் விட்டுடுறேன்.” என்று அவளை பரிதாபமாக பார்த்தபடி கூறினார். தன் மனைவி மற்றொருவரின் பார்வையில் பரிதாபமாக தெரிவது, ஆரிகேத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் அவளை கோபத்துடன் முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தான்.
“தாங்க் யூ சோ மச் அண்ணா.. உங்களை மாதிரி நல்லமனசு உள்ளவங்களால தான் இன்னமும் இந்த உலகம் அழியாம இருக்கு. இன்னைக்கு நிலைமைல யார் இந்த மாதிரி எல்லாம் மத்தவங்களுக்கு உதவி செய்வாங்க?”
“நீங்க எங்கப் போகணும் சொல்லுங்க?”
“இங்க தான் பக்கத்துல ரெண்டு கிலோமீட்டர்ல.. இவரோட தங்கச்சி வீட்டுக்கு போகணும்.. அவங்க ஹெலிகாப்டர் அனுப்பி வைக்குறேன்னு சொன்னாங்க.. ஆனா அதுக்கு இங்க இருந்து நாங்க எப்படி போறதுன்னு தெரியல? அவரோட தங்கச்சி வீடாச்சே? பொண்டாட்டி மூணு மாசமா இருந்தா என்ன? ஒன்பது மாசமா இருந்தா அவருக்கென்ன? அவருக்கு அவரோட தங்கச்சி வீட்டுக்கு போயே ஆகணும்..” என்றவாறே தன் கண்களை கசக்க, ‘அடிப்பாவி! என் தங்கச்சிக்கு தெரிஞ்சா? உன்னைய அம்மிக்கல்லுல வைச்சு ஆஞ்சுப்புடுவா..’ என்று நினைத்தவாறே அவளைப் பார்த்திருந்தான் ஆரிகேத்.
“இந்த மாதிரி நிலைமைல நீங்க எப்படி நடந்து போக முடியும்? வாங்க அண்ணி.. வாங்க.. உங்களை நான் ட்ராப் பண்றேன்..” என்றவர் கூறியதும்,
‘அண்ணியா?! நானா?! டேய் கிழவா! உனக்கு நான் அண்ணியா? சாவுக்கு சங்கூதுற வயசுல இருக்குற உனக்கு என்னைய அண்ணியாக்கிட்டியேடா!’ என்று உள்ளுக்குள் நினைத்தாலும் வெளியே ஈஈஈஈஈ என்று இளித்து வைத்தாள் வியனி ஹில்டா.
“வாங்க அண்ணா.. நீங்களும் வாங்க..” என்றவர் ஆரிகேத்தைப் பார்த்து கூற, உதட்டோர புன்னகையோடு ஆரிகேத்தை வியனி பார்க்க, ‘இவனுக்கு நான் அண்ணனா? எல்லாம் என் தலையெழுத்து..’ என்று நினைத்தவாறே வியனியை மேலும் முறைத்தான் ஆரிகேத்.
‘அய்யய்யோ! இவர் முகமே சரியில்லையே.. இருந்திருந்து இப்பத்தான் ஒரு வண்டி நிறுத்திருக்காங்க.. அதையும் கெடுத்துருவார் போலவே?! அடியேய்.. வினி.. இந்த ஹல்க் வாயைத் திறக்குறதுக்குள்ள நாம தான் ஏதாவது பண்ணி இவரை சரிகட்டும்..’ என்று நினைத்த வியனி,
“ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ..” என்று அழுக ஆரம்பித்தவளை கூர்மையாக பார்த்தான் ஆரிகேத். அவனை ஒற்றைகண்ணால் பார்த்துக் கொண்டே,
“ஆஆஆஆஆ.. இவரு வரமாட்டாருண்ணா.. இவரு.. இவரு.. என்கூட சண்டை போட்டுட்டு நிக்குறாரு..” என்று அழுதவாறே கூறியவள், ஆரிகேத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே,
“என்மேல் கோபமா இருக்காரு.. என்னால தான் ட்ரைனை விட்டுட்டாரு.. அதுனால அவர் தங்கச்சி வீட்டு ஃபங்ஷனுக்கு லேட்டாகுதுல.. அதுனால தான் இப்படி மூஞ்சையை வைச்சுட்டு இருக்காரு..” என்று கார்காரரைப் பார்த்து கூறியவள்,
“சாரிங்க.. என்னால முடியல.. இந்த நிலைமைல எப்படிங்க என்னால உங்க பின்னாடி ஓடி வர முடியும்? இப்படியே கோபப்பட்டீங்கன்னா.. உங்கப் பொண்ணும் கோபக்காரியாத்தான் பிறப்பா ஹரிகாப்பா..என்று ஆரிகேத்தைப் பார்த்து அழுதபடியே கையெடுத்து கும்பிட, “ஹரிகா?” என்ற ஆரிகேத், வியனியின் நடிப்பில் அசந்து நிற்க, கார்காரோ உருகி விட்டார்.
“இங்கப்பாருங்கண்ணா.. குடும்பத்துக்குள்ள சண்டை சச்சரவு வர்றது எல்லாம் சகஜம் தான்.. அதுக்காக அண்ணி இப்படி நிறைமாசமா இருக்கும் போது உங்க கோபத்தை காட்டலாமா? வாங்க.. வந்து வண்டில ஏறுங்க..”
“ஆமா.. ஹாரிகாப்பா.. வந்து வண்டில ஏறுங்க. அவங்க சொன்ன நேரத்துக்குள்ள நாம போயிடலாம்.. இப்படி என் மேல கோபப்படாதீங்க..” என்ற வியனி கிட்டத்தட்ட அவனை காருக்குள் அமரும்படி தள்ளிவிட்டாள். இருவரும் காருக்குள் ஏறியதும் அவளிடமிருந்து முற்றிலுமாக விலகி ஜன்னல் ஓரமாக அமர்ந்தவனை காரின் முன் கண்ணாடி வழியாக, புருவங்கள் சுருக்க பார்த்திருந்தார் கார்காரர்.
‘இவர் எங்களை சந்தேகப்படுறாரோ? வினி நடிப்பை கண்டினியூ பண்ணு..’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட வியனி,
“என்னங்க.. இப்படி அந்த பக்கமா முகத்தை திருப்பிக்கிட்டா என்ன அர்த்தம்? இந்த மாதிரி நேரத்துல இப்படி கஷ்டப்படுத்துறீங்களே?” என்று ஆரிகேத்தின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டாள் வியனி. அதனை தனது முன் கண்ணாடியில் பார்த்து கொண்டிருந்த கார்காரர்,
“அழுகாதம்மா.. இந்த மாதிரி நேரத்துல சந்தோஷமா இருக்கணும்.. அண்ணே! பாவம்.. புள்ளத்தாச்சி பொண்ணை கஷ்டப்படுத்தாதீங்க..” என்றவர் ஆரிகேத்திடம் கூற, எரிகின்ற கொல்லியில் மேலும் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது. அதுவரை அவரை முறைத்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்திருந்தது.
“சும்மா சும்மா.. அண்ணியை பார்த்து முறைக்காதீங்க.. ப்ரோ.. இந்த மாதிரி நேரத்துல அவங்களை சந்தோஷமா வைச்சுக்கணும்.. நீங்க ரெண்டு பேரும் உங்களுக்குள்ள இருக்குற பிரச்சனையை பேசி தீர்த்துக்குங்க.. உங்க பிரச்சனை குழந்தையை பாதிக்காம பார்த்துக்கோங்க.. ப்ரோ..”
“நல்ல கேட்டுக்கோ.. நீங்க என்கிட்ட சாரி கேட்க வேண்டாம்.. இதோ உங்க பொண்ணுக்கிட்ட கேளுங்க ஹாரிகாப்பா..” என்றவள் ஆரிகேத்தின் கையை எடுத்து தனது உருண்டு திரண்டிருந்த வயிற்றின் மேல் வைக்க, மெல்ல அவளருகில் வந்த ஆரிதேத், அவளது காதருகில் குனிந்து,
“நீ என்னைய எவ்வளவு வெறுப்பேத்த முடியுமோ.. அவ்வளவு வெறுப்பேத்திட்ட.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன.. மவளே! இப்ப நடிச்சுட்டுருக்குறதை உண்மையாக்கிடுவேன்..” என்று கூற,
“க்கும்.. இந்த மாதிரி தான் நாம உண்டு.. நம்ம குடும்பம் உண்டுன்னு இருக்கணும்.. தனக்கு போகத்தான் தானமும் தர்மமும்.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க.. அப்புறம் உங்க தங்கச்சி குடும்பத்தை பார்க்கலாம்..” என்று ஆரிகேத்திடம் கூறியவள்,
“அதோ அங்க தான்.. இன்னும் கொஞ்சம் முன்னாடி.. இவரோட தங்கச்சி வீட்டாளுங்க நிற்குறாங்க..” என்று கார்கரரைப் பார்த்து கூறியவள், தங்கச்சி வீட்டாளுங்களாக ஆரிகேத்தின் செக்ரட்டரியை கை காட்டினாள்.
“ரொம்ப.. ரொம்ப.. தாங்க்ஸ்ண்ணா.. நாங்க வர்றோம்..” என்று கார்காரிடம் கூறியவள், ஆரிகேத்தின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஹெலிகாப்டரை நோக்கி சென்றாள். இவர்களைப் பார்த்ததும் அருகில் வந்த ஆரிகேத்தின் செக்ரட்டரி லாரா,
“சார்.. வெதர் கண்டீஷன் இப்போ ரொம்ப மோசமா இருக்குறதால, நீங்க இங்க பக்கத்துல இருக்குற ஹோட்டல தங்குறதுக்கு அரேன்ஜ் பண்ணிருக்கோம் சார்.” என்றவள் கூற, ஆரிகேத்தின் பின்னே நின்றிருந்த வியனி,
“நாம இங்க ஹோட்டல்ல தங்கப் போறோம்னு நீங்க சொல்லவேயில்ல..” என்று கூறி அவனது கையைப் பிடித்து கொள்ள, அதனை கவனித்த லாரா,
“மேம்! சார் இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டிசைட் பண்ணாங்க.” என்று கூற,
“எப்போ? கார்ல சொல்லவே இல்ல?” என்றவளிடம்,
“உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சுருக்கலாம்.” என்ற லாராவை முறைத்த வியனி,
“கொஞ்சம் வாயை காண்பிங்க..” என்று ஆரிகேத்திடம் பேசியவாறே அவனை தன்னை நோக்கி திருப்பினாள். அவளை திரும்பிப் பார்த்த ஆரிகேத் புருவம் சுருக்கிப் பார்க்க, அவனது வாயின் இருபுறமும் கையை வைத்து வழுக்கட்டாயமாக திறந்தாள்.
“ஏய்! என்னடி பண்ற?” என்ற ஆரிகேத்தின் தன் வாயருகே இருந்தவளின் கையை தட்டிவிட,
“இல்ல.. உங்களுக்கு வாயிருக்கா? இல்லையான்னு பார்த்தேன்..” என்றவாறே மீண்டும் அவனது வாயருகே கை வைத்தவளின் வெண்டைப்பிஞ்சு விரல்களை ஆரிகேத் கடித்து வைக்க,
“ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ.. ரவுடி.. இப்படியா கடிச்சு வைப்ப.. வலிக்குது..” என்றவாறே கையை அவனிடம் இருந்து எடுத்து கொண்டாள். இவர்கள் இருவரும் இவ்வாறு விளையாடி கொண்டிருக்க, அவர்களை பொறாமையுடன் பார்த்திருந்தாள் லாரா. அதுவும் வியனியின் மீது அவளது பார்வை வன்மமாக படிந்தது. ஆரிகேத் தன்னை கவனிப்பதை உணர்ந்த லாரா தன் முகபாவனையை மாற்றிக் கொண்டாள்.
“சார் இன்னைக்கு நைட் கல்வித்துறை அமைச்சர் கூட இதே ஹோட்டல்ல உங்களுக்கு மீட்டிங் இருக்கு.”
“டீட்டைல்ஸ் எல்லாம் ரெடியா இருக்கா?”
“அதையெல்லாம் உங்க மெயிலுக்கு அனுப்பிட்டேன் சார்.”
“ஓகே. இப்போ நீங்க கிளம்பலாம்.” என்றவன், அருகில் இருந்த ஹோட்டலுக்குள் வியனியை இழுத்துக் கொண்டு நுழைய, அங்கிருந்த படியில் காலை இடித்துக் கொண்டவள்,
“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹல்க்.. கால் வலிக்குது. இப்படியா இழுத்துட்டு வருவ?” என்றவள், அப்படியே மடங்கி வாசலில் அமர்ந்து விட,
“ஹேய் வினி! ஒழுங்கா எந்திரிச்சுடு.. போதும் நடிச்சது. இனி நீ நடிக்கணும்குற அவசியமில்ல.” என்றவளின் கையைப் பிடித்து ஆரிகேத் எழுப்ப,
“அய்யோ.. நிஜமாகவே நடக்க முடியலை. படிக்கட்டுல நல்லாவே காலை இடிச்சுக்கிட்டேன் போல?!” என்று எழ முயன்று முடியாது போகவே, மீண்டும் படியில் அமர்ந்தாள். அதனைப் பார்த்த அந்த ஹோட்டல் மேனேஜர்,
“அய்யோ! மேடம்.. இந்த மாதிரி நேரத்துல கவனமா இருக்கக்கூடாதா?” என்று கேட்டவாறே அவளை தூக்கிவிட முயல, அதனை தன் ஒற்றை கையால் தடுத்து, தானே அவளை தூக்கி, தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.
“மூணு வேளைல ஒரு வேளை கூட சாப்பிட மிஸ் பண்ண மாட்டதானே?!”
“ம்ஹூம்.. மூணு வேளையில்ல அஞ்சு வேளை சாப்பிடுவேன்..”
“நல்லாவே தெரியுது. பார்க்கத்தான் பஞ்சு மூட்டை மாதிரி இருக்குற.. தூக்குனா யானை கணம் கணக்குற..” என்று அவளைப் பார்த்து கூறினாலும் தன் கையில் இருப்பவளை பொக்கிஷமென தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டே தங்களது அறைக்குள் நுழைந்தான். வியனியை மெத்தையில் அமர வைத்தவன், அங்கிருந்த முதலுதவி பெட்டியை எடுத்து, அதிலிருந்த களிம்பை அவளது காலில் மெல்ல தடவினான்.
“ஸ்ஸ்ஸ்ஸ்.. வலிக்குது..”
“ம்ம்.. கொஞ்ச நேரம் அசையாம காலை வைச்சுரு.” என்றவன் வரவேற்பறைக்கு அழைத்து சாப்பாடு சொல்லி வரவழைத்தான்.
“கைய கழுவிட்டு வா.. உனக்கு பிடிச்ச ஆலு புரோட்டா வர வைச்சுருக்கேன்..” என்றவன் கூறியதும் மெத்தையில் இருந்து துள்ளி எழுந்தவள், எழுந்த வேகத்திலேயே மீண்டும் அமர்ந்தாள்.
“எனக்கு வேணாம்..” என்று தன் முகத்தை திருப்பிக் கொண்டவரின் அருகே அமர்ந்து, அவளது கன்னத்தைப் பற்றி திருப்பியவன்,
“ஹேய் விளையாட்டுக்கு சொன்னதையெல்லாம் ஏன் சீரியஸா எடுத்துக்குற? ஹனி.. ஹனி.. இங்கப்பாரு.. ம்ம்ம்ம்ம்ம்.. யம்மி..” என்றுக்கூறி அவள் கண் முன்னேயே ஆலு புரோட்டாவை எடுத்து வாயில் வைக்க,
“ம்ம்ம்.. அது என்னோடது.. எனக்கு வேணும்..” என்றவாறே அவன் கையில் இருந்ததை தன் வாயில் வைத்துக் கொள்ள,
“சரி நீ சாப்பிட்டு தூங்கு.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன்.” என்றவளின் நெற்றியில் தன் நெற்றியை வைத்து மெல்ல வலிக்காது முட்டியவாறே கூற,
“சீக்கிரம் வந்துடுங்க.. இந்த இடத்தைப் பார்த்தா ரொம்ப பயமாயிருக்கு..” என்று அவனது கழுத்தில் கை கோர்த்துக் கொண்டாள் வியனி ஹில்டா.
“அதுனால தான் கண்ணை திறக்காம தூங்கிட்டு இரு. நான் சீக்கிரம் வந்துடுவேன்.. நீ இந்த ஆரிகேத்தோட சரிபாதி டி. இப்படி எல்லாம் பயப்படக் கூடாது.” என்று அவளிடம் கூறியவன் அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு சென்றான். அதே நேரத்தில் தனது கைப்பேசியில்,
“சார் கிளம்பிட்டாங்க.. அவ மட்டும் தான் இப்போ ரூம்ல இருக்கா.. நீங்க வரலாம்..” என்று யாருக்கோ வியனியைப் பற்றிய தகவலை தெரிவித்தாள் லாரா. ஆரிகேத் மீண்டும் ஹோட்டலுக்கு வந்து பார்த்த போது வெறும் அறை தான் அவனை வரவேற்றது.
“ஹனி.. ஹனிஇஇஇஇ..” என்றவன் கத்தியும் பதிலில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்படி அவளுக்கு என்னவாகியிருக்கும்?
அத்தியாயம் 41
“டேய்.. என்னைய எதுக்குடா தூக்கிட்டு வந்துருக்கீங்க? பயமாயிருக்கு.. அந்த லைட்டயாவாது போட்டு விடுங்கடா.. ஹலோ! யாராவது இருக்கீங்களா? அய்யோ! இருட்டுல தனியா புலம்ப விட்டுட்டாய்ங்களே?! அடேய்! கண்ணிமைக்கும் நேரத்தில் கபலத்தில் கட்டையால் அடித்து கவ்விக் கொண்டு வந்த லகுட பாண்டிகளா?” என்று கத்திக் கொண்டிருந்தாள் வியனி ஹில்டா. இருட்டான அறையில் நாற்காலியில் அமர வைத்து கட்டிப் போடப்பட்டிருந்தாள். கலந்துரையாடலுக்கு ஆரிகேத் சென்றிருந்த நேரம், அவர்களது அறைக்கு வெளியே ஏதோ ஒரு சிறுமியின் அலறல் குரலைக் கேட்டு வெளியே வந்தவளை, தலையில் கட்டையால் தாக்கி, சாக்கிற்குள் வைத்து தூக்கி வந்துவிட்டனர். நான் எங்கிருக்கிறோம் என்ற பயத்தை விட அச்சிறுமிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பயமே அதிகமாயிருந்தது.
“ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா டேய்! முடியல.. கொஞ்சம் கைக்கட்டை அவிழ்த்து விடுங்கடா. காலுக்கடியில் கொசு கடிச்சு உயிரை வாங்குது. சொரியக் கூட முடியலை. இந்த மூக்கு வேற குறுகுறுன்னு இருக்கு. கொஞ்சம் அதையெல்லாம் சொரிஞ்சுக்குறேன். என்னோட ஆமா மேல சத்தியமா நான் எங்கேயும் ஓடிப் போயிடமாட்டேன்.” என்றவள் கத்த, தூரத்தில் இருந்து அவளது அருகே யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு, அவ்விருட்டிலும் கூர்மையான அவ்விடத்தை நோக்கினாள் வியனி ஹில்டா.
“ஏய்.. எதுக்கு இப்படி கத்திட்டே இருக்க? இனிமே இப்படி கத்துன.. கத்துறதுக்கு வாய் இருக்காது.”
“முகமூடி சார்.. முகமூடி சார்.. என்னைய எதுக்கு இங்க தூக்கிட்டு வந்துருக்கீங்க? என்னால உங்களுக்கு நயா பைசாக்கு லாபம் கிடையாது. என் புருஷன் ஒரு கஞ்சப்பிசுனாரி.. அவன்கிட்ட என்னைய நீங்க கடத்திட்டு வந்ததா, சொன்னாக்கூட ஒத்த பைசா கொடுக்கமாட்டான். என்னைய இங்கேயே நீங்களே வைச்சுக்கோங்கன்னு சொல்லிருவான். முகமூடி சார்.. இந்த கையை மட்டும் அவிழ்த்து விடுங்களேன். கொஞ்சம் கை காலை சொரிஞ்சுக்குறேன்..”
“பேசாம இருக்கப் போறியா? இல்லையா?” என்று முகமூடி அணிந்த ஒருவன் அவளை மிரட்டிப் கொண்டிருக்க,
“டேய்! இவப் புருஷனுக்கு போன் போட்டு, இனிமே அந்த ஹாஸ்பிடல் விசயத்தில் தலையிடக்கூடாது; இதுவரைக்கும் கலெக்ட் பண்ணி வைச்சுருக்குற எவிடெண்ஸை எல்லாம் ஒப்படைக்க சொல்லு. அப்படி செஞ்சா தான் அவனோட பொண்டாட்டி உயிரோட கிடைப்பான்னு ஃபோன் பண்ணி நம்ம ஆளுங்க மை வேற லொக்கேஷன்ல இருந்து பேசச் சொல்லு..” என்று மற்றொரு பெண்ணின் குரல் கேட்டது. குரல் கேட்ட திசையை நோக்கிப் பார்த்த வியனி,
“யக்கா.. நிஜமாவே சொல்றேன்.. நீங்க கடத்திட்டீங்கன்னு என் புருஷன் சந்தோஷம் தான் படுவான். துளி கூட வருத்தப்படமாட்டான். என்னைய கடத்தி உங்களுக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்ல. வேணும்னா அவனை கடத்துங்க. அப்ப தான் அவனும் பயப்படுவான். நீங்க சொல்றபடி எல்லாம் செய்வான். அதை விட்டுட்டு ஒன்னும் தெரியாத பச்சமண்ணை இடத்திற்கு வந்து கொன்னா.. உங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும்? நான் சொல்றதை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..” என்று கூற,
“ஏன் வரமாட்டான்? பொண்டாட்டி பாதம் தரையில் படாம தூக்கிட்டு திரியுறான். வராம போவானா? டேய்! இவளை நீ அறையுற அறையில இவ அலரணும். அதை நீ வீடியோ எடுத்து அவ புருஷனுக்கு அனுப்புற. அப்புறம் தெரியும்.. அவனுக்கு இவ எவ்ளோ முக்கியம்னு?!” என்று முகமூடி அணிந்த பெண் கூற,
“லூசாக்கா நீ.. என்னைய அடிச்சா அவனுக்கு எப்படி வலிக்கும்? அவனை அடிச்சாத்தான் அவனுக்கு வலிக்கும்.. நான் இன்னும் வாழ்க்கைல எதுவுமே அனுபவிக்கல.. அதுக்குள்ள என்னைய கொன்னுடாதீங்க.. வேணும்னா என் அண்ணன்கிட்ட சொல்றேன்.. அவன் உடனே வருவான்.. எவ்ளோ பணம் வேணும்னாலும் தருவான்.” என்று அழுகுரலில் கூறிக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான் ஒருவன். அவன் அறைந்த அறையில் உதட்டோரம் கிழிந்து ரத்தம் வந்தது. அவனது ஐவிரல் தடங்கள் அவளது பளிங்கு முகத்தில் அச்சாகப் பதிந்திருந்தது. மேலும் அவளை மறுகன்னத்தில் அடிக்க வலியில் துடித்துப் போனாள் வியனி ஹில்டா.
“டேய்! இதை அவப் புருஷனுக்கு அனுப்பி வை. அப்புறம் அந்த பீஸ் என்னாச்சு?”
“அதை அடுத்த ரூம்ல கட்டி வைச்சுருக்கோம்.. மேம்..”
“எதுக்கு ரெண்டு ரூம்ல வேஸ்டா அடைச்சு வைச்சுருக்கீங்க? அந்த பீஸை இங்க கொண்டு வந்து போடுங்க. அப்புறம், இன்னைக்கு அனுப்ப வேண்டிய பீஸெல்லாம் ரெடியா?”
“அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டோம். டெலிவரி ஒன்னு தான் பண்ணணும். எல்லாத்தையும் சரியா பண்ணுங்க. எங்கேயும் சொதப்பக் கூடாது..”
“இல்ல மேம்.. கரெக்டா பண்ணிடுவோம்.” என்றவன் தலைவியிடம் பேசிக் கொண்டிருக்க,
“டேய் விடுங்க டா! என்னைய எதுக்குடா தூக்கிட்டு வந்துருக்கீங்க? என் புருஷனுக்கு தெரிஞ்சது, உங்களை கண்டதுண்டமா வெட்டிடுவாரு. விடுங்கடா..” என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்த வியனி ஹில்டாவிற்கு தலையே சுற்றியது.
“காஆஆஆ.. காவ்யா.. நீ எப்படிடி இவங்ககிட்ட மாடட்டிக்கிட்ட?”
“வினி பேபி.. நீயும் இங்க தான் இருக்கியா? எப்படி இருக்க? நல்லாருக்கியா?”
“நாம என்ன கல்யாணவீட்டுக்கா வந்துருக்கோம்.. இடத்திற்கு வந்துருக்காங்க.. கொஞ்ச நேரம் அமைதியாக இருடி..”
“அதான் பேச்சுத் துணைக்கு நீ இருக்கியே?! எனக்கென்ன பயம்? இந்நேரம் உன் புருஷனும் என் புருஷனும் நாம இருக்குற இடத்தை கண்டுபிடிச்சுருப்பாங்க.”
“கிழிச்சாங்க! உன் புருஷனைக்கூட விடு. என் புருஷன் சனியன் விட்டுச்சுன்னு தலைமுழுகிருப்பாரு.”
“ச்சே.. ச்சே.. ஆரியண்ணா அப்படியெல்லாம் இல்லடி. உன் மேல உயிரையே வைச்சுருக்காரு.”
“நீதான் மெட்சிக்கணும்.” என்றவளின் கண்முன்னே அன்று நடந்த சம்பவம் வந்து போனது. சிறுமியின் அலறல் குரலைக் கேட்டு வெளியே வந்தவள், அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான தடயமே இல்லாது போக, மீண்டும் தங்களது அறைக்கு திரும்பும் வழியில் லாராவை கட்டியணைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்த ஆரிகேத்தை கண்டாள் வியனி ஹில்டா. அவன் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து கண்ணில் நீர் பொங்கி வழிய, அதனை ஒரு கையால் துடைத்துக் கொண்டே, கோபத்தோடு நடந்து வந்தவள், தன்னை பின் தொடர்ந்து வந்தவர்களை கவனிக்க தவறிவிட்டாள். அவள் கவனம் சிதறி இருந்த நேரத்தில் அவளது தலையில் கட்டையால் அடித்து தூக்கிக் கொண்டு வந்துவிட்டனர். வேறு ஒருப் பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் தன் கணவன், எவ்வாறு தன்னை காக்க வருவான்? என்ற விரக்தியில் தான் ஆரிகேத்தினை தன் மனதுக்குள் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள். ஆரிகேத்தினை நினைக்கும் போதெல்லாம் கொலைவெறியானது. ஆரிகேத்தினைப் பற்றி வெறுப்பாக வியனி நினைத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தன் மனைவியை யாரோ ஒருவன் பலமாக அடிப்பதையும் அவள் வலியால் துடிப்பதையும் பார்த்துக் கொண்டிருந்த ஆரிகேத்தின் கை முஷ்டிகள் இறுகின.
“எவ்ளோ தைரியமிருந்தா.. இந்த ஆரிகேத்தோட பொண்டாட்டி மேல கை வைச்சுருப்பாங்க?” என்றவன் உறுமிக் கொண்டிருந்த நேரத்தில் அவனைக் காண, அவனது ஹோட்டலுக்கு வந்திருந்தான் அனுக்ஷயன்.
“வியனி காணாமப் போனது அதுக்குள்ள உனக்கு தெரிஞ்சுடுச்சா?”
“என்ன வியனியக் காணோமா? என்னடா ஆரி சொல்ற?”
“அப்போ நீ உன் தங்கச்சியத் தேடி வரல? ம்ம்ம்ம்ம்ம்.. அப்போ உன் பொண்டாட்டியும் காணோமா?”
“ஆமா.. காலைல கோவிலுக்கு போனவளை காணோம்..”
“ஓ?! அப்போ உனக்கு பொண்டாட்டிய நினைச்சு கவலையா? இல்ல உன்னோட காரை நினைச்சா?”
“கிண்டலா?”
“இல்ல! நீ சொன்ன தோரணை அப்படி தான் நினைக்க தோணுச்சு..”
“காவ்யா ரொம்ப இன்னோஷண்ட் ஆரி. யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவா. நான் வினியைப் பார்க்கக் கூடாதுன்னு சொன்னதுனால என் மேல கோபத்துல இருந்தா. இன்னைக்கு காலைல சான்ஸ் கிடைச்சதும் காரை எடுத்துட்டு, கோவிலுக்கு போறேன்னு சொல்லி வினியைத் தான் பார்க்க வந்துருக்காளோன்னு நினைச்சேன். அதான் வினியைத் தேடி இங்க வந்தேன். ஆனா நீ சொல்றதைப் பார்த்தா யாரோ ப்ளான் பண்ணித் தான் நம்ம பொண்டாட்டிங்களை தூக்கிருக்கணும்.”
“அப்படித்தான் இருக்கணும் அனு.. ஆனா யாரா இருக்கும்? தொழில் ரீதியா நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய எதிரிங்க இருக்காங்களே?!”
“நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய எதிரிங்க இருக்கலாம். ஆனா ரெண்டு பேருக்கும் பொதுவான எதிரி யாரு?”
“வேலுச்சாமி? நாராயணசாமி? இதுல யாரா இருக்கும்?”
“நிச்சயமா வேலுச்சாமியா இருக்க முடியாது ஆரி. ஏன்னா அவரோட பொண்ணையே அவர் எதுக்கு கடத்தப் போறாரு?”
“நாம இப்படித்தான் நினைப்போம்னு நினைச்சு.. அவரே கடத்திருந்தா? இந்த வீடியோவோட பேக்ரௌண்ட் பாரு.. ஏதோ பழைய தியேட்டர் மாதிரி இருக்கு.. இந்த போஸ்டரைப் பாரு..”
“ம்ம்.. இது அன்பே வா படத்தோட போஸ்டர் தானே?! அப்போ அவங்க நம்ம சிட்டிக்கு வெளியே போயிருக்குறதுக்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்குறேன்..”
“எப்படி சொல்ற அனு?”
“இதை ஜூம் பண்ணி பாரு. இந்த போஸ்டருக்கு கீழே அதோட ஏரியா பெயர் தெரியுது.”
“அப்புறமென்ன? கிளம்பு..” என்று கிளம்பிய அனுக்ஷயனும் ஆரிகேத்தும் கடத்திய கும்பல்களை கையும் களவுமாக பிடித்தனர். அதிரடியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்து திகைத்து அமர்ந்திருந்தனர் காவ்யா மற்றும் வியனி.
“வாவ்.. நான் சொல்லல. அவங்க சீக்கிரம் வந்து நம்மளை காப்பாத்திடுவாங்கன்னு..” என்று வியனியைப் பார்த்து கூறிய காவ்யாவின் கைக்கட்டை அனுக்ஷயன் அவிழ்த்து கொண்டிருக்க, வியனியின் அருகே வந்த ஆரிகேத், அவளது முகத்தை இருபக்கமும் திருப்பி பார்த்தான்.
“உன்னை இப்படி யார் அறைஞ்சான்னு சொல்லு?” என்று அங்கு ஏற்கனவே அடிவாங்கி வலியில் கிடந்தவர்களை காட்டி கேட்க, தனக்கு சற்று தூரத்தில் முகமூடி அணிந்திருந்தவனை கை காட்டினாள் வியனி ஹில்டா.
“அவன் தான் அடிச்சான்..” என்று வியனி கூற, அவள் கண்முன்னேயே அவளை அடித்தவனின் கைகளை உடைத்தான் ஆரிகேத்.
“மவனே! யார் பொண்டாட்டி மேல கை வைக்குற?” என்றவனை தொடர்ந்து உள்ளே நுழைந்த அவனது பாதுகாவலாளிகள், அங்கிருந்தவர்களை கயிற்றால் கட்ட, வியனியை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து கொண்டிருந்தான் ஆரிகேத். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அங்கிருந்த தூணில் இருந்து சட்டென வெளிப்பட்ட உருவம் ஒன்று ஆரிகேத்தை கத்தியால் தாக்க வர, அவனை மறைத்தவாறு வந்து நின்று, அதனை தன் மீது வாங்கிக் கொண்டாள் வியனி ஹில்டா.
“ஹேய்! ஹனிஇஇஇஇ..” என்று ஆரிகேத் கத்தியவாறு வியனியை தன் கையில் தாங்க, தாக்க வந்த உருவத்தின் கையை பின்புறமாக மடக்கி முதுகில் ஒரு தட்டு தட்டினான் அனுக்ஷயன். அவ்வுருவத்தின் முகமூடியை நீக்கிச் பார்க்க அதிர்ந்து தான் போனான் அனுக்ஷயன்.
“நீயா?” என்றவன் கேட்க, “ஏன் என்னை எதிர்பார்க்கலயா?” என்றவாறு சிரித்தது அவ்வுருவம்.
அத்தியாயம் 42
“லாராஆஆஆ.. நீ?”
“நீ எங்க பாஸ்கு தெரியாம அவரோட இடத்துல ஆள் செட் பண்ணும் போது? அவரால உங்க இடத்துல செட் பண்ணி முடியாதா?”
“அப்போ நீ நாராயண சாமியோட ஆளா?”
“ஆமா.. இப்ப நீங்க என்கிட்ட இருந்து தப்பிச்சுருக்கலாம்.. ஆனா அவர்கிட்ட இருந்து தப்பவே முடியாது.. எங்க நெட்வொர்க் ரொம்ப பெருசு.. அது புலிவாலைப் புடிச்ச மாதிரி.. விட்டாலும் கடிக்கும்.. விடலேன்னாலும் கடிக்கும்..”
“நீ ரொம்ப பேசுற..” என்ற ஆரிகேத் தன் பாதுகாவலர்களை அழைத்து,
“இவளை நம்ம சீக்ரெட் இடத்துக்கு கொண்டு போங்க.. விசாரிக்குற விதத்துல விசாரிங்க.. இவ ஒருப் பொட்டு கண்ணு மூடக்கூடாது..” என்றபடியே தன் கையில் மயங்கி சரிந்திருந்த வியனியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான். ஆரிகேத்தின் பின்னோடு ஓடிய காவ்யாவின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய அனுக்ஷயன், அவளது உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்தவன்,
“உனக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லையா? யாரை கேட்டு என்னோட காரை எடுத்துட்டுப் போன? வியனியை பார்க்க போகக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல?” என்றவள் தலையில் நறுக்கென கொட்ட,
“ஆஆஆஆஆ.. வலிக்குது.. நீங்க ரொம்ப பேட் பாய்.. எப்பப் பார்த்தாலும் என்னைய திட்டிட்டே இருக்கீங்க.. நான் இனிமே உங்கக்கூட வரவே மாட்டேன்..” என்று தன் தலையை தேய்த்துக் கொண்டே கூறினாள் காவ்யா. அவளை எரிச்சலோடு பார்த்தவன்,
“அறைஞ்சேன்.. முப்பத்திரண்டு பல்லும் கலண்டுடும்.. என்னைய கேட்காம இனிமே வெளில காலை வையி.. அப்புறம் இருக்கு உனக்கு.. இப்ப ஒழுங்கா வீட்டுக்கு கிளம்பு..” என்று கூற,
“எனக்கு ஒன்னும் முப்பத்திரண்டு பல்லுலாம் இல்ல.. முப்பது தான் இருக்கு..” என்றவளின் அருகே வந்த அனுக்ஷயன் அவளது தலையை மெல்ல தட்டியவாறே,
“இப்ப இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம்? முதல்ல நீ வீட்டுக்கு போ.. நைட் வந்து எத்தனை பல் இருக்குன்னு கணக்கெடுக்குறேன்..” என்று கூற,
“ம்ஹூம்.. முதல்ல வினி எப்படி இருக்கான்னு பார்க்கணும்.. அப்புறம் தான் வீட்டுக்கு போவேன்..” என்றபடியே அவனது பிடியில் இருந்து விலகியவள், ஆரிகேத்தினை பின்தொடர்ந்து வெளியே செல்ல, அங்கே ஆரிகேத்தின் கார் எப்போதோ மருத்துவமனையை நோக்கி பறந்திருந்தது. ஆரிகேத்தின் காரை காணாது திருதிருவென முழித்துக் கொண்டு நின்றிருந்தவளின் அருகில் வந்த அனுக்ஷயன்,
“இப்ப உனக்கு வினியைப் பார்க்கணும்.. அவ்வளவு தானே?!” என்று கேட்க,
“ம்ம்..” என்று கண்ணில் நீருடன் கூறியவளை தன்னோடு காரில் ஏற்றிக் கொண்டு ஆரிகேத்தின் மருத்துவமனையை நோக்கிச் சென்றான். ஆரிகேத் தன் மருத்துவமனையை அடைந்ததும், ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த வியனி ஹில்டாவை தன் கையில் ஏந்தி கொண்டு உள்ளே நுழைய, அதனைப் பார்த்த தினேஷ் பதறியபடி ஸ்ரெக்சரை எடுத்துக் கொண்டு ஓடி வர, அவை எதுவும் ஆரிகேத்தின் மனதில் பதியவே இல்லை. தன் கையில் சுமந்தபடியே ஆப்பரேஷன் தியேட்டரினுள் நுழைந்தவனை சமாதானப்படுத்திய மருத்துவர்கள், வெளியே அனுப்ப, அறையின் கதவில் தெரியும் சிறு கண்ணாடியின் வழியே, உள்ளே இருக்கும் வியனி ஹில்டாவை பார்த்துக் கொண்டிருந்தான் ஆரிகேத்.
‘என்னைய தனியா விட்டுட்டு போயிடாதடி.. நீ இல்லேன்னா எனக்கு இந்த வாழ்க்கைல எதுவுமே இல்லைடி.. என்னைய ஏமாத்திடாதடி..’ என்றவன் மனம் முழுவதும் வியனியையே வட்டமடித்து கொண்டிருக்க, உள்ளே மயக்கத்தில் இருந்தவளின் இதயத்தை துடிக்க வைக்கும் பொருட்டு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்க, படுக்கையில் படுத்திருந்தவளின் உடலோ அரையடிக்கு எழுந்து அடங்கியது. அதனைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. யாருக்கும் எதற்கும் கலங்காதவன், முதன்முறையாக தன் வாழ்நாளில் கலங்கி நின்றிருந்தான். உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது வியனியாக இருந்தாலும், தன் சுவாச ஓட்டம் தடைப்பட்டது போல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான் ஆரிகேத். அரைநாள் போராட்டத்திற்கு பின், போன வியனியின் உயிரை மீட்டுக் கொண்டு வந்திருந்தனர் மருத்துவர்கள். வெளியே தவிப்புடன் ரத்தம் தோய்ந்த சட்டையுடன், கலங்கிய முகத்துடன் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தவனின் அருகே வந்த மருத்துவர்,
“இனி பயப்படுறதுக்கு ஒன்னுமில்ல. கொஞ்சம் க்ரிட்டிக்கலா தான் இருந்தாங்க. கத்திக் குத்து இன்னும் கொஞ்சம் கீழே இறங்கியிருந்தாலும் எங்களால அவங்களை காப்பாத்திருக்க முடியாது. இதயத்துக்கு கொஞ்சம் மேல கத்தி இறங்கிருக்கு. அதுவுமில்லாம ரொம்ப ஆழமா இறங்கல. அதுனால கோமாக்கு போகாம பிழைச்சுட்டாங்க. இன்னும் கொஞ்ச நாலு மணி நேரத்துல சுயநினைவுக்கு திரும்பிடுவாங்க. நீங்க போய் பார்க்கலாம். டேக் கேர்..” என்றுவாறு அங்கிருந்து சென்றார். சிலை போல் நின்றிருந்தவனின் மனதுக்குள் மருத்துவர் கூறியன மட்டுமே வட்டமிட, அசையாதிருந்தவனின் தோளில் மெல்ல தட்டிய அனுக்ஷயன்,
“அதான் வினிக்கு ஒன்னுமில்லன்னு சொல்லிட்டாங்களே! அப்புறம் ஏன் இப்படி இருக்க? போ.. போய்.. அவளைப் பாரு..” என்றவன் கூற, வியனி இருக்கும் ஐசியூ அறைக்குள் செல்ல முயல, அங்கே அவனுக்கு முன் உள்ளே நுழைந்திருந்தாள் காவ்யா. வாடிய கொடியாக உயிர்ப்பில்லாமல் கிடந்த வியனியைப் பார்க்க, பார்க்க, காவ்யாவால் அழுகையை அடக்க முடியவில்லை.
“ஹேய்! வினி.. ஏதாவது பேசுடி.. வாயடி.. வாய் ஓயாம பேசுவியே.. இப்ப பேசுடி.. மனசு ரொம்ப வலிக்குதுடி.. கண்டு முழிச்சுப் பாருடி..” என்றவளின் தோளில் கை வைத்து சமதானப்படுத்த முயன்ற அனுக்ஷயனின் தோளில் முகம் புதைத்த காவ்யா,
“இவ நான் சொன்னா கேட்க மாட்டேங்குறா.. நீங்க இவ அண்ணேந்தானே?! நீங்க சொன்னா கேட்பா.. ப்ளீஸ்.. ஒரு தடவை என்னையப் பார்த்து பேசக்கூட வேணாம்.. சிரிச்சா போதும்.. சொல்லுங்க..” என்று கூற, அனுக்ஷயனின் கண்களும் கலங்கின.
“இவ இப்படி இருக்குறதுக்கு யார் காரணமா இருந்தாலும்.. அவங்களுக்கு சாவைவிட பெரிய தண்டனை கொடுக்கணும்.. எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க..”
“ப்ராமிஸ்டா.. வினி இப்படி இருக்க காரணமானவங்க.. அவங்களே அவகிட்ட வந்து என்னைய கொன்னுடுன்னு கெஞ்ச வைப்பேன்.. இப்ப அவளை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு.. அவளுக்கு நிறைய ப்ளட் லாஸ் ஆகிருக்காம்.. நிறைய நேரம் ரெஸ்ட் எடுக்கணுமாம்.. நாம இப்ப போய்ட்டு அப்புறமா அவளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வருவோம்..”
“ம்ஹூம்.. அப்புறம் நீங்க என்னைய வினியை பார்க்க விடவேமாட்டீங்க..”
“இல்லடா.. கண்டிப்பா கூட்டிட்டு வர்றேன்.. இங்கப்பாரேன்.. அழுதழுது கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்துருச்சு.. இந்த மாதிரி உன்னை வினிப் பார்த்தா.. திட்டுவாளா? இல்லையா?”
“ஆமால.. வினிக்கு நான் இப்படி இருந்தா.. சுத்தமா பிடிக்காது.. நாம வீட்டுக்கு போய் வினிக்கு சாப்பாடு எடுத்துட்டு.. எனக்கு கொஞ்சம் டச்சப் பண்ணிட்டு வந்துடுவோம்..” என்றவளை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றான் அனுக்ஷயன். அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றதும், வியனியின் அருகே அமர்ந்த ஆரிகேத், அவளது கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
“என்னை ரொம்ப பரமுறுத்திட்ட.. இந்த க்ரேட் ஆரிகேத்துக்கு மரணத்தோட வலிய கொடுத்துட்டடி.. நீ எப்ப? எப்படி? எனக்குள்ள வந்துன்னுலாம்.. எனக்கு தெரியாது. ஆனா.. இங்க சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்ட டி.. இனிமே உன்னைய என்னோட ஆயுசுக்கும் அங்கிருந்து வெளியேத்த முடியாது. எல்லோரும் ஒருநாள் கல்யாணம் பண்ணிக்குறது தானேன்னு.. அசால்டா நினைச்சு தான் உன்னைய கல்யாணம் பண்ணேன்.. அதுக்கப்புறம் உன் மேல லவ்வெல்லாம் வந்துச்சான்னு தெரியல.. ஆனா, உன்னைய விட்டு என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல. அதுனால தான் எங்க? எந்த நாட்டுல வேலை இருந்தாலும் முடிச்சுட்டு.. உன்னைத் தேடி நடுராத்திரியானாலும் ஓடி வந்துடுவேன். உன்னோட சுண்டு விரல் போதும்டி. அதைப் பிடிச்சுட்டே தூங்கிடுவேன்.. நாள் பூரா எனக்கு இருக்குற டென்ஷன் எல்லாம் தூரமா போகிடும். விடிஞ்சதும் நீ எந்திரிக்குறதுக்குள்ள கிளம்பி போயிடுவேன். எனக்கு உன்னோட முகத்தை பார்க்க ரொம்ப வெட்கமா இருந்துச்சு.. எங்க நான் உன்னைய சுத்தி சுத்தி வர்றதை தெரிஞ்சுகிட்டேனா என்னைய கேலிப் பண்ணுவன்னு நினைச்சேன்.. நான் இப்படியெல்லாம் கிடையாது தெரியுமா? தர்ஷினி வீட்டுக்கு வந்தப்போ நீ பொறாமைப்பட்டதை வைச்சு நீயும் என்னைய விரும்புறேன்னு புரிஞ்சுகிட்டேன். அதுனால தான் நான் உன்னைய நெருங்கி நெருங்கி வந்தேன். ஆனா, நீ தான் தத்தியாச்சே! புரிஞ்சுக்கவே மாட்டேன்னு ஒத்த கால்ல நிக்குற.. சரி.. எப்படியாவது என் மனசுல இருக்கிறதை உன்கிட்ட சொல்லிடலாம்னு நினைச்சு தான் ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்தேன். ஆனா, உன் உயிருக்கு நானே எமனாவேன்னு கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலடி.. நீ என்னோட பொண்டாட்டின்னு தெரிஞ்சா உன் உயிருக்கு ஆபத்துன்னு தான் யாருக்கும் தெரியாம வைச்சுருந்தேன். அதையும் ஊரைக்கூட்டி மைக் போட்டு சொல்ல வைச்சுட்ட.. உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு இப்படி தான் நிரூபிக்கணும்னு இல்லடி.. இந்த ஒருநாளுக்குள்ள நரகம் எப்படி இருக்கும்னு பக்கத்துல போய் பார்த்துட்டு வந்துட்டேன்.. இன்னொரு தடவை என் பேச்சை கேட்காம ஏதாவது பண்ண?” என்றவன் வியனின் நெற்றியோடு நெற்றி மோதினான். அவனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள், அவளது விழிகளின் மேல் விழ, மெல்ல மங்கையவள் கண்விழித்தாள்.
“எல்லாம் சரி தான்.. அந்த குண்டம்மாவை அப்படி கட்டிப்பிடிச்சுட்டு முத்தம் கொடுத்த கணக்கை சொல்லவே இல்ல..” என்ற மெல்லிய குரலில் அவனது காதுக்கு மட்டும் கேட்கும்படியாக கூறியவளை நிமிர்ந்து பார்த்த ஆரிகேத், அவளது முகம் முழுவதும் முத்தமாரி பொழிந்தான். நீரில்லாமல் காய்ந்து கிடக்கும் சருகான மலரிதழில் தன் இதழ்களை பொருத்தி, அவளது உயிரோடு உயிராக நினைத்தான் ஆரிகேத். தன் இதழ்களை கவ்விக் கொண்டிருந்தவனை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து பிரித்தவள்,
“எனக்கு பதில் வேணும்..” என்று கூற, அவளது நெற்றியை மறைத்த தலைமுடியை காதரமாக ஒதுக்கியவன்,
“நீ ஒரு பக்கம் இருந்து பார்த்தா எல்லாமே தப்பா தான் தெரியும். மறுபக்கமும் பார்த்திருக்கணும்.. அவளோட கண்ணுல ஏதோ விழுந்துடுச்சுன்னு என்னைய ஊதிவிடச் சொன்னா.. ப்ராமிஸா அவளுக்கு ஹெல்ப் தான் பண்ணேன். ஆனா, அவ நீ பின்னால் வர்றதை பார்த்துட்டு தான் இந்த மாதிரி நடிச்சுருப்பான்னு இப்ப தான் புரியுது.” என்று கூற, தன்னருகே இருந்தவனின் காதைப் பிடித்து திருகியவள்,
“இதுவே முதலும் கடைசியுமா இருக்கணும். ஹெல்ப் பண்ண போனேன்.. மாவாட்டப் போனேன்னு ஏதாவது பண்ணிட்டு வந்தீங்கன்னு தெரிஞ்சது.. மவனே.. கைமா தான்..” என்று மூச்சு திணறியபடி கூறியவளின் உச்சியில் முத்தமிட்டவன்,
“இந்த வாயாடியை ரொம்ப மிஸ் பண்ணேன்..” என்று கூற,
“பயந்துட்டீங்களா?” என்றாள் அவனது முகவடிவை அளந்தவாறு.
“ரொம்ப..” என்று கண்ணில் நீர் கசிய கூறியவன்,
“அந்த காலத்து அரசர்கள் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி தங்களது உயிரை மறைச்சு வைப்பாங்களாம். அது மாதிரி என் உயிர் உன்கிட்ட மறைஞ்சு கிடக்கு. என் உயிரே நீ தான்னு இந்த ஒரு நாளுல புரிஞ்சுகிட்டேன்..” என்று கூறியபடியே அவளுக்கு வலிக்காமல் தனது கை வளைவிலேயே அவளை வைத்துக் கொண்டான்.
“இப்படியே கொஞ்ச நேரம் இருடி.. நீ இன்னும் என் கைக்குள்ள.. எனக்குள்ள இருக்கேன்னு ஃபீல் பண்ணிக்குறேன்.” என்றவன் அவளை தன் மீது போட்டு கொண்டு அமைதியாக அக்கணங்களை அனுபவித்தான். காதலுக்கு இலக்கணமோ, எல்லையோ கிடையாது.. இது எல்லையில்லா ஏகாந்தப் பெருவெளி.. எப்படி வானத்தை நம்மால் எங்கிருக்கிறது என்று சுட்டிக் காட்ட முடியாதோ.. அது போலத்தான் காதலும்.. இதுதான் காதலின் உச்சம் என்று எதையுமே நம்மால் சொல்ல முடியாது. போகப் போக போய்க் கொண்டே இருக்கும்.. அது ஒரு சொல்லவியலாத அனுபவம்.. அனுபவித்துப் பார்த்தால்தான் காதலின் உன்னதம் புரியும், தெரியும். மனதால் ஒருவரைக் கட்டியணைப்பது தான் காதல். அன்பால் அரவணைப்பதே காதல். எண்ணங்கள் ஒன்றிணைந்து இதயங்கள் பரிமாறுவதே காதல். ஒருவர் மீது மற்றவர் செலுத்தும் அன்பே காதல்.
அத்தியாயம் 43
“வாங்க.. வாங்க.. சீக்கிரம் போய் வினியை பார்க்கலாம்..” என்று தன் முன் வந்து நின்ற காவ்யாவை ஏற இறங்க பார்த்தான் அனுக்ஷயன். கட்டத் தெரியாது, இங்கும் அங்குமாய் புடவையை சொருகி வைத்திருந்தவளைப் பார்க்கும் போது இழுத்தணைத்து கொஞ்சத் தான் தோன்றியது.
“என்னடி இது?”
“எதுங்க?”
“இப்படி சேலையை சுத்திட்டு வந்துருக்க? முதல்ல உன்னைய யார் புடவை கட்ட சொன்னது?”
“அத்தை தான் சொன்னாங்க. இனிமே உங்கக்கூட எங்க வெளியப் போனாலும் இப்படி புடவை கட்டிட்டு தான் போகணுமாம். அதான் கட்டினேன்.”
“கட்டியிருக்கியா? சுத்தியிருக்கியா?”
“எனக்கு தெரிஞ்ச அளவுக்கு கட்டினேன். ஏன் நல்லாயில்லயா?”
“நல்லாதான் இருக்கு. இன்னும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா இன்னும் நல்லாருக்கும். இரு நானே நல்லா கட்டிவிடுறேன்.” என்றவன் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றான். அவளது புடவையில் கை வைக்கும் போது,
“ஒரே ஒரு கண்டிஷன்..” என்றவள் கூற,
“என்ன?” என்றவனை நேருக்கு நேர் பார்க்க முடியாது, அவனுக்கு எதிர்புறமாக பார்த்தவாறு,
“நீங்க கண்ணை மூடிட்டு தான் எனக்கு சேலை கட்டி விடணும்.” என்று கூற,
“அது ரொம்ப கஷ்டமாச்சே?! வேணும்னா ஒன்னு பண்ணலாம்.” என்று புருவம் சுருக்கி கூறியவனை கேள்வியாகப் பார்த்தவளை ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கியவன்,
“நீ வேணா ஒரு அஞ்சு நிமிஷம் கண்ணை மூடிக்கோ.. அதுக்குள்ள நான் என்னோட வேலையை முடிச்சுடுவேன்..” என்று கூற,
“உங்களை எப்படி நான் நம்புறது? நான் கண்ணை மூடுன கேப்ல நீங்க கோக்கு மாக்கு பண்ணிட்டீங்கன்னா?” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் காவ்யா.
“அதெல்லாம் பண்ணுறவனா இருந்தா எப்பவோ பண்ணிருக்கணும். உனக்காக இவ்ளோ நாள் வெயிட் பண்ண வேண்டிய அவசியமே இல்ல.”
“ம்ம்.. ம்ம்ம்..”
“நீ இப்படி யோசிச்சேன்னா.. நீயே பொறுமையா சேலை சுத்திட்டு அம்மாக்கூட வா. நான் வினிக்கு சாப்பாடு கொடுக்க போறேன். ஏற்கனவே ரொம்ப நேரமாகிடுச்சு.”
“என்னது அத்தைக்கூடவா? வேணாம்.. வேணாம்.. நீங்களே கட்டிவிடுங்க. உங்கக்கூடவே வர்றேன்.”
“ஏன்டி? என்னோட அம்மா என்ன உன்னைய கடிச்சா திங்கப்போறாங்க?”
“அவங்க கடிச்சாக்கூட தாங்கிக்குவேன்.. ஆனா அவங்களோட கடி ஜோக்கைத் தான் தாங்க மாட்டேன்..”
“சரி.. சரி.. கண்ணை மூடிக்கோ..” என்று கூறிக்கொண்டே அவளது முந்தானையை எடுத்து முந்தானை கொசுவம் வைத்து பின் குத்தினான். இடையைச் சுற்றி புடவையை வளைத்து முன்னே கொண்டு வந்தவன், முன் கொசுவம் வைத்து, மடிப்பினை உள்ளே சொருக, அவன் கைப்பட்ட இடம் குறுகுறுக்க,
“போதும்.. போதும்.. மீதிய நான் பார்த்துக்குறேன்..” என்றவாறே அவனது கையை தன் மேல் இருந்து நீக்கியவளை குறும்புடன் பார்த்த அனுக்ஷயன்,
“எல்லாம் சரி.. சாப்பாடு செஞ்சுட்டியா?” என்று கேட்க,
“ஓ..” என்று தலையை பெரிதாக ஆட்டியவளை சந்தேகமாக பார்த்தான்.
“எங்க நீ சமைச்சதை காட்டு?”
“இதோ..” என்றவள் தான் சமைத்து வைத்த ப்ரெட் ஆம்லெட்டை காட்ட, அவள் நின்ற தோரணையைப் பார்த்த அனுக்ஷயனுக்கு சிரிப்பதா? இல்லை தன் நிலையை எண்ணி அழுவதா? என்று தான் விளங்கவில்லை.
“உடம்பு சரியில்லாம இருக்குறவங்களுக்கு ப்ரெட் ஆம்லெட்டையா கொண்டு போய் கொடுப்ப?”
“வேறென்ன கொடுப்பாங்க? நான் வேணா வினிக்கு போன் போட்டு கேட்கட்டுமா?”
“எதுக்கடுத்தாலும் வினியை தொந்தரவு பண்ணாத. நீ நிஜமாவே டாக்டரான்னு தோணுதுடி.”
“இருக்க.. நாளைக்கு என்னோட காலேஜ் சர்ட்டிபிகேட்டை எடுத்துட்டு வந்து காட்டுறேன். அப்போ தான் நீங்கல்லாம் நம்புவீங்க.”
“அப்படியே அதை ஒரு ஃப்ரேம் போட்டு வீட்டு வாசல்ல மாட்டுடி. உனக்கடுத்து வர்ற சந்ததிங்க எல்லோருக்கும் நீ டாக்டருக்கு தான் படிச்சுருக்கேன்னு நிரூபிச்ச மாதிரி இருக்கும்.”
“நிஜமா அப்படி பண்ணட்டுமா?!”
“உன்னை வைச்சுகிட்டு.. நான் படுற பாடு இருக்கே.. பாண்டுரங்கா..” என்றவாறே காய்களை வெட்டி காய்கறி சூப் செய்தவன், வெஜ்ரோலும் செய்து ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனருகே வந்த காவ்யா, அவனது முதுகை தன் ஒற்றை கை விரலால் சுரண்ட, அவளைத் திரும்பி என்னவென்று கண்களால் வினவினான் அனுக்ஷயன். அவனது கண்களின் கேள்வியை கண்ட காவ்யா,
“இல்ல.. இந்த ஆம்லெட்டை என்ன செய்யுறது?” என்று கேட்க,
“நீதானே செஞ்ச.. நீயே சாப்பிடு..” என்று கூறிய அனுக்ஷயனை மேலும் நெருங்கிய காவ்யா,
“இல்ல.. எனக்கு முட்டைல செஞ்ச எதுவும் பிடிக்காது. கொமட்டும்..” என்று கூற, அவளை உற்றுப் பார்த்தவன், அவள் செய்த ப்ரெட் ஆம்லெட்டை இரு தட்டுகளில் வைத்தான். பின், அவளது இரு கை உள்ளங்கைகளிலும் அந்த தட்டுக்களை வைத்து, கைகளை உயர்த்தி பிடிக்குமாறு கூறினான்.
“இப்போ எதுக்கு நான் தூக்கி பிடிக்கணும்?”
“ஏன்? கை வலிக்குதா? தூக்கிப் பிடிக்க முடியலையா?”
“ம்ஹூம்.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. இது எனக்கு ரொம்ப ஈஸியான வேலை தெரியுமா?”
“ஆஹான்.. சரி அப்போ இப்படியே கொஞ்ச நேரம் பிடிச்சுட்டு இரு..” என்றவன் அவளருகில் நெருங்க,
“இவ்ளோ தானா? எவ்ளோ நேரம்னாலும் இதை இப்படியே பிடிச்சுட்டுருப்பேன். பார்க்குறீங்களா?” என்று சவால் விட்டவளை இன்னும் நெருங்கினான்.
“என்னப் பண்ணப்போறீங்க?” என்றவாறு மிரண்டு விழித்தவளின் விழிகளுக்குள் தன் விழிகளை கலக்கவிட்டவாறே, தனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் படுமளவுக்கு நெருங்கியவன்,
“ப்ளேட் கீழே விழுந்துச்சுன்னா.. நான் என்ன சொல்றேனோ.. அதை நீ செய்யணும்..” என்று கூற,
“ப்ளேட் கீழ விழுகக்கூடாது. அவ்வளவு தானே?! டீல் ஓகே.” என்றவளை மேலும் மேலும் அருகில் நெருங்கியவன், அவளது இதழ்களை கவ்வி சுவைத்தான். கையில் இருந்த தட்டுக்களை கீழே போடவும் முடியாது; அவனிடம் இருந்து விழகவும் முடியாது தவித்தவள், இறுதியில் அவனே சரணமென தானும் அவனோடு இழையத் தொடங்கினாள். அவளது நிலையை புரிந்து கொண்ட அனுக்ஷயன், அவளது கையில் இருந்த தட்டுக்களை தன் இரு கைகளில் வாங்கி, அருகில் இருந்த உணவு மேஜையில் வைத்தவன், தன்னிடம் மயங்கி நின்ற பெண்மையை கையில் அள்ளிக் கொண்டான். உலகம் மறந்து தன் மன்னவனின் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு, சொக்கிப் போய் இருந்தவளை தங்களது அறைக்குள் தூக்கிச் சென்றான். கட்டில் தான் அமர்ந்தவன், தன் மடியினில் கொஞ்சும் பைங்கிளியை இறுக்கிக் கொண்டான். செண்பக மலரோ என்று சொல்லும்படியான சிவந்த மேனியாக மலர்ந்திருந்தவளின் காதோரமாக தன் இதழ்களை பதித்தவனின் கைகள், வீணையென அவளை மீட்டத் தொடங்கின. அவள் அறியாத பல மாயாஜால உணர்வுகளை உணர வைத்தான். அவனது உதடுகள் காட்டிய ஜாலத்தில் தன்னை மறந்தே போனது அவளது பெண்மை.
தான் மோகத்தால் அவளை அழுத்தம் கொள்ள பிடித்தான்; காதல் கிளிகள் கொஞ்சி கொண்டவர்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர். மெல்ல அவளை மெத்தையில் கிடத்தியவன், அவளது அங்கமெங்கும் முத்த ஊர்வலம் நடத்தினான். தடதடக்கும் அவளது இதய ஓசையை வைத்து அவளது உணர்வுகளை புரிந்து கொண்டவன், மலரின் மென்மை அறிந்து, அதில் இருக்கும் தேனை அருந்தும் வண்டாய் மாறினான். ஜாடியில் உள்ள தேனைச் சுவைப்பதற்கு தக்க கரண்டியைப் போட்டு எடுத்தால்தான் தேனும் கிடைக்கும். இருடல் ஓருயிராய் கலந்த இருவரையும் பார்க்க வெட்கப்பட்டு நிலாவானது, மேகத்தின் போர்வையில் தன்னை மறைத்துக் கொண்டது. தனது தேடல் முடியாது, மீண்டும் மீண்டும் மங்கையவளை நாடியவனுக்கு தன்னை வாரி வாரி கொடுத்து வள்ளலானாள் பேதை. விடியும் வரை விடாது கூடிய களித்தவன், விடிந்த பெண்ணும் தன் பொற்சிலையை விடாது தன் கைக்குள் பதுக்கிக் கொண்டு தூங்கினான். தன் கைப்பேசியில் வந்த அமைப்பினால் கண் விழித்த அனுக்ஷயன், கலைந்த ஓவியமாய் தன் மார்பில் முகம் பதித்து தூங்கிக் கொண்டிருந்தவளை கண்டான். இரவு முழுவதும் எழுதிய கவிதைகள் நினைவில் வர, மீண்டும் மலரை தேடும் வண்டாக முயன்றவனின் மோகநிலையை கெடுத்தது அவனது கைப்பேசி.
“ப்ச்.. ஃபோன் அடிச்சுட்டே இருக்கு. யார்னு பாருங்க. எனக்கு தூக்கம் தூக்கமா வருது. டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்று தூக்கக் கலக்கத்தில் உலறியவளை புன்னகையோடு பார்த்தவன் கைப்பேசியை எடுத்து காதில் வைத்ததும், அந்த பக்கம் இருந்து கத்திய ஆரிகேத்தின் குரலைக் கேட்ட உடனே போனை காதிலிருந்து சற்று தள்ளி பிடித்தான் அனுக்ஷயன்.
“டேய் கிராதகா! நைட் டின்னருக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்னு போன.. இப்ப ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கான டைமாகிடுச்சு. இன்னும் நீ சாப்பாடு எடுத்துட்டு வர்ற.. உன்னையவெல்லாம் நம்பினா நான் வயித்துல ஈரத்துனியைத் கட்டிட்டு படுக்கணும்.”
“நைட் ஐயா ரொம்ப பிஸி மச்சி! உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்குடா.. என்னமோ சாப்பாடே கிடைக்காதவன் மாதிரி பேசாத.. நீ நினைச்சா எப்பேர்ப்பட்ட சாப்பாட்டை மும் வாங்கி உன் பொண்டாட்டிக்கு கொடுப்பேன்னு தெரியும்.”
“அதெல்லாம் தெரிஞ்ச உனக்கு.. உன் தங்கச்சி கண் முழிச்சு உடனே அவளோட பெஸ்ட் பிரண்டைப் பத்தி தான் கேட்பாரற்று நினைப்பில் லாம் போச்சு இல்ல?!”
“சாரிடா மச்சி.. இதோ கிளம்பிட்டோம்..”
“ஒன்னும் வேணாம்.. ஹனிய ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு போயிருக்காங்க.. நானே எல்லா அரேன்ஜ்மெண்ட்ஸையும் பார்த்துக்குவேன். தேவையில்லாம நீ அழையாதன்னு சொல்லத் தான் ஃபோன் போட்டேன். நைட் மெஸேஜ் அனுப்பினேன். ரிப்ளேவேயில்ல.. அதான் உன்னை நைட் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு காலைல ஃபோன் பண்ணேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் உனக்கு அப்புறமா கால் பண்றேன்.” என்ற ஆரிகேத், தன் இடத்தில் அடைத்து வைத்திருக்கும் தாராவைக் காணச் செல்ல, அனுக்ஷயனோ தன் கைப்பேசியில் இருந்து போலீஸ் கமிஷனருக்கு அழைத்திருந்தான். அவரிடம் இருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொண்டவனின் இதழோரம் புன்னகை தவிழ்ந்தது.
“டேய்.. நாராயணசாமி! இனி நீ எங்கேயும் தப்பிக்க முடியாது டா..” என்று உதடுகள் முணுமுணுத்தவனின் மார்பில் தன் கன்னங்களை அழுத்தி நன்றாக உறங்கினாள் காவ்யா.
“இந்த பூனைக்குட்டியை வைச்சு கிட்டு.. ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது..” என்று பொய்யாய் சலித்தவன், மீண்டும் அவனது தேடல் வேட்டையை தொடங்கினான். குழந்தையென இருப்பவளின் செல்ல சிணுங்கலுக்கு ஏற்ப தன் சேவையை செய்யத் தொடங்கியவனை, சேட்டைகள் பல செய்யும் சேயாக தாங்கிக் கொண்டாள் காவ்யா. கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும். கணவனுக்கு தாயாக, தாரமாக, தோழியாக மனைவியும் மனைவிக்கு காவலனாக, காதலனாக, நண்பனாக கணவனும் இணைந்து வாழ்வதே திருமண பந்தம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் காலம்தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.. எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.. அதனைப் புரிந்து கொண்டான் அனுக்ஷயன். தன் மனைவியை தனது முதல் குழந்தையாக, தோழியாக, மனைவியாக தன் நெஞ்சில் தாங்குகின்றான்.
அத்தியாயம் 44
“உண்மையைச் சொல்லு.. உன்னையே யார் அனுப்பினா? இப்ப சொல்லப் போறியா? இல்லையா?” என்று தன் முன்னே கை கால்கள் கட்டப்பட்டிருந்த தாராவிடம் ஆரிகேத்தின் ஆட்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
“எனக்குத் தெரியாது.. நீங்க எத்தனை முறை.. எவ்வளவு டார்ச்சர் பண்ணி கேட்டாலும்.. என் பதில் இது தான்..” என்னவளின் முன்னே வந்து நின்ற ஆரிகேத்,
“பிரதிக்ஷா.. உன் பொண்ணு தானே?!” என்று கேட்க, தன் கண்களை அகல விரித்தாள் தாரா.
“உங்களுக்கு எப்..ப்ப..டி த்..த்..தெரியும்?” என்று திக்கித் திணறியவளின் முன்னே பிரதிக்ஷாவோடு அவள் எடுத்துக் கொண்டப் புகைப்படங்களை தூக்கிப் போட்டான் ஆரிகேத்.
“எல்லாம் குழந்தைங்களுக்காக வாழ்வாங்க.. ஆனா நீ?! குழந்தையவே உன்னோட சுயநலத்துக்காக பெத்தவ தானே?!”
“என் பொண்ணை என்ன பண்ணுன?”
“ஓ.. உனக்கு தாய்பாசமெல்லாம் இருக்கா? பெத்தப் பொண்ணையே வேவு பார்க்குறதுக்காக நடிக்க வைச்சு தானே நீ?! பச்சைப்புள்ளய சொந்த லாபத்துக்காக இன்னொருத்தி பெத்தப் பொண்ணா நடிக்க வைச்சவ தானே நீ? சொல்லு.. எதுக்கு இப்படி பண்ண? அந்த நாராயணசாமிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? கடத்துற குழந்தைகளையெல்லாம் என்ன பண்ணுவீங்க? சொல்லு..”
“என்னைப் பத்தி இவ்வளோ தெரிஞ்சு வைச்சுருக்குற.. உனக்கு அதுவும் தெரிஞ்சுருக்கணுமே?! என்னைய ஏன் கேட்டு டார்ச்சர் பண்ற?!”
“தெரியும் தான்.. ஆனா நீ உன் வாயால சொன்னாத்தானே அவனுங்களுக்கு என்னால தண்டணை வாங்கித் தர முடியும். இப்ப நீயா உண்மையை சொன்னா.. நீயும் உன் பொண்ணும் நிம்மதியா வாழலாம். சொல்லலேனா?!”
“சொல்லலேனா.. என்ன பண்ணுவ?!’
“ச்சே.. ச்சே.. உன்னைய நான் ஒன்னும் பண்ண மாட்டேன்.. உன் பொண்ணு மட்டும் தான் வெளிநாட்டுக்கு நீங்க அனுப்புற சரக்கோடு சரக்கா போவா..”
“அய்ய்ய்ய்யோ.. என் பொண்ணை என்னப் பண்ண? அவளை ஒன்னும் பண்ணிடாத.. நான் சொன்னதைக் தான் என் பொண்ணு பண்ணா.. மத்தப்படி அவளுக்கு உன் பொண்டாட்டின்னா ரொம்ப பிடிக்கும்.. அவளை விட்டுடு..”
“இப்படித் தானே.. நீங்க கடத்துன அத்தனை பொண்ணுங்களோட தாய்மார்களும் அழுதுருப்பாங்க; துடிச்சுருப்பாங்க.. உங்க வீட்டு பொண்ணுங்களோட மானத்தையும் உயிரையும் மட்டும்பொன்னாய் பார்த்துப்பீங்க.. மத்தவங்களோட மானமும் உயிரும் உங்களுடைய காலுக்கு செருப்பா நினைப்பீங்க.. அப்படித்தானே.. உனக்கு வெறும் ரெண்டு நிமிஷம் தான் டைம் தருவேன்.. அதுக்குள்ள நீ நடந்த உண்மை அத்தனையையும் சொல்லணும்.. இல்ல.. நீ அனுப்பின பார்சலோடு பார்சலா உன் பொண்ணும் போயிடுவா.. ம்ம்.. சொல்லு..”
“சொல்றேன்.. என் பொண்ணை ஒன்னும் பண்ணிடாத..” என்றவள் தங்கள் செய்யும் வியாபாரத்தை பற்றி கூற ஆரம்பித்தாள்.
“நானும் நாராயணசாமியும் சேர்ந்து தான் இந்த பிஸ்னஸை செய்யுறோம்.. ஆதரவில்லாத.. கேட்க நாதியில்லாத.. குழந்தைகளை கடத்தி.. அவங்க வயசுக்கேத்த விலையில வெளிநாட்டு சந்தையில வித்துடுவோம். அவங்க அந்த குழந்தைகளை பல வழியில பயன்படுத்துவாங்க.. அவங்க கொடுக்கும் பணத்தை பல டிரஸ்ட் மூலமா கருப்புப் பணத்தை மாத்தி எங்க அக்கவுண்ட்ல போட்டுக்குவோம்.. அப்படி வர்ற பணத்தை இங்க இருக்குற அண்டர் கிரவுண்ட் ஸ்மக்லினுக்கு யூஸ் பண்ணிக்குவோம்.. எங்க பிஸ்னஸைப் பத்தி தெரிஞ்சுகிட்ட வேலுச்சாமிக்கு தன்னோடு மகளைக் கொடுத்து தன் பக்கம் இழுக்க நினைச்சார் நாராயணசாமி.. ஆனா அதையும் உன் பொண்டாட்டி தடுத்தா.. அதுமட்டுமல்லாம ஹாஸ்பிட்டல்ல சேர்ற அனாதை குழந்தைங்க காணாம போறாங்கன்னு போலீஸ்ல உன் பொண்டாட்டி கம்ப்ளைன்ட் கொடுத்தா.. எங்கப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சா.. அவளோட வீக்னெஸ் குழந்தைங்க காற்று கண்டுபிடிச்சோம்.. அதுனால தான் என் பொண்ணை ஏழைப்பொண்ணா.. யாரும் பாதுகாப்பில்லாத பொண்ணா.. உன் பொண்டாடிக்கிட்ட நடிக்க வைச்சு.. அவளை கடத்தலாம்னு பிளான் பண்ணோம்.. நாங்க ப்ளான் படி உன் பொண்டாட்டியும் நாங்க விரிச்ச வலையில் விழுந்துட்டா.. அன்னைக்கு என் பொண்ணு இத்துடன் சத்தத்தை கேட்டு தான் உன் பொண்டாட்டி வெளியே வந்தா.. அவளை திசை திருப்ப தான்.. அன்னைக்கு உனக்கு முத்தம் கொடுக்குற மாதிரி அவ கண்ணுக்கு முன்னாடி நடிச்சேன்.. அதுல குழப்பமானவளை ஈசியா கடத்திட்டோம்.. இதுல நாங்க எதிர்பாராத ஒரு விஷயம்.. நீயும் அனுக்ஷயனும் உள்ளே நுழைஞ்சது தான்.. உன்கிட்ட இருக்குற ஆதாரத்தை வாங்குன மாதிரியும் ஆச்சு.. உன் பொண்டாட்டிய உன் பெயரைச் சொல்லி நாங்க கொன்ன மாதிரியும் ஆச்சு.. உன் பொண்டாட்டிய கொன்ற பழியும் உன் மேல விழுந்துடும்.. ஒரு கல்லுல மூணு மாங்கான்னு நாங்க போட்ட ப்ளானை ஒன்னுமில்லாம பண்ணிட்ட.. நீ நினைக்குற மாதிரி.. இது எங்களோட முடிஞ்சுப் போற விஷயமில்ல.. இதுல பல நாடுகளோட பெரும்புள்ளிகளோட தலையீடு இருக்கு.. அவ்வளோ சீக்கிரம் உன்னால எங்களுக்கு தண்டணை வாங்கித் தர முடியாது.. நான் சொல்றதை கேளு.. உங்களுக்கு எவ்வளோ ஷேர் வேணும்? அதை மட்டும் சொல்லு.. உனக்கும் லாபம்.. எங்களுக்கும் லாபம்.. என்ன சொல்ற?” எனக் கேட்டவளின் முகத்தில் ஓங்கி அறைந்திருந்தான் ஆரிகேத்.
“பச்ச மண்ணுக்கு உயிரு.. உனக்கு அவ்வளோ ஈசியா போச்சுல்ல.. பெத்த குழந்தைய பிரிஞ்சா.. அந்த வலி எப்படி இருக்கும்னு உனக்கு காட்டுனாத் தான் நீயெல்லாம் திருந்துவ..” என்றவன் தனது ஆட்களுக்கு போன் செய்து பிரதிக்ஷாவை வெளிநாடுகளுக்கு செல்லும் கப்பலில் பார்சலாக அனுப்ப ஏற்பாடு செய்தான். அவ்வாறு செய்யும் ஏற்பாட்டை வீடியோ எடுத்து தாராவிற்கு போட்டு காட்ட, துடிதுடித்து போனாள் தாரா.
“அய்ய்ய்ய்யோ.. ஏன் இப்படி பண்ண? த
நான் தான் எல்லா உண்மைகளையும் சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என் பொண்ணை இப்படி பண்ண? அவளுக்கு ஒன்னுமே தெரியாத.. அவ சின்னப்பொண்ணுடா.. அய்யோ.. பிரதி.. நானே உன்னை கொல்லாம கொன்னுட்டேனே..” என்று கதறியழுதவளை சிறிதும் இரக்கமில்லாமல் பார்த்த ஆரிகேத்.. அடுத்தகட்ட நடவடிக்கையாக நாராயணசாமியைத் தேடிச் சென்றான். நாராயணசாமியின் வீட்டு வாசலில் கூட்டமாக இருப்பதைக் கண்ட ஆரிகேத், அவர்களை விலக்கி வீட்டிற்குள் செல்ல, அங்கே உயிரில்லாத உடலாக இறுதி ஊர்வலத்திற்கு தயாரக்கப்பட்டிருந்தது நாராயணசாமியின் சடலம். சடலத்தின் அருகே கதறும் தன் மனைவியை நெஞ்சில் தாங்கியப்படி நின்றிருந்தான் அனுக்ஷயன். ஆரிகேத்தை கண்டதும் யாரும் அறியாமல் கண்சிமிட்டியவனை பார்த்த ஆரிகேத்திற்கு விளங்கிவிட்டது, அனுக்ஷயன் தான் இந்நிகழ்விற்கு காரணம் என்று. சடங்குகள் நடந்தேற, தன் மாமனாருக்கு நல்ல மருமகனாக அத்தனை கடமைகளையும் செய்தான் அனுக்ஷயன். நாராயணசாமி இறந்த விஷயம் கேள்விப்பட்ட வியனி, காவ்யாவிற்கு போன் செய்து பேச, அனுக்ஷயன் கூறிய உண்மைகள் அனைத்தையும் வியனியிடம் கூறினாள் காவ்யா.
“உன் அப்பா இவ்வளோ மோசமானவர்னு எனக்கு தெரியாதுடி..”
“உனக்கு மட்டும் இல்ல வினி.. எனக்கே ஷாக்கிங்கா தான் இருந்துச்சு.. உண்மை தெரிஞ்சு அவர்கிட்ட நியாயம் கேட்கப் போன என்னையவே கொல்ல நினைச்சு துப்பாக்கியால சுட நினைச்சார்.. அந்த நேரத்துல மட்டும் அனு அங்க வரலைன்னா.. பெத்தப் பொண்ணுன்னு பார்க்காம என்னையவும் கொன்றுப்பாரு.. அனுவோட போலீஸும் வந்தாங்களா.. அதைப் பார்த்தவர்.. என்ன நினைச்சாரோ? தன்னோட நெத்தில துப்பாக்கியை வைச்சு.. தன்னைத்தானே என் கண்ணு முன்னாடியே சுட்டுகிட்டு செத்துட்டாரு.. என்னதான் இருந்தாலும் என்னைய பெத்து வளர்த்தவராச்சே.. அதான் அந்த கடமைக்காக அழுகை அழுகையாக வந்துச்சு.. அழுது முடிச்சுட்டேன் வினி.. அவரோட சொத்துத் எனக்கு எதுவும் வேணாம்னு லாயர்கிட்ட கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன்..”
“அந்த வேலுச்சாமி என்னவானான்?”
“அவனையும் போலீஸ் வலைச்சுப் பிடிச்சுட்டாங்க.. எப்படியும் அவன்கிட்ட இருந்து உண்மையெல்லாம் வாங்கிட்டு என்கவுண்டர்ல போட்டு தள்ளிடுவாங்கன்னு நினைக்குறேன் வினி..”
“இவ்வளோ நடந்துருக்கு.. என்கிட்ட யாருமே எதுவுமே சொல்லல.. வரட்டும் ரெண்டு பேரும்.. அவங்களுக்கு இருக்கு..”
“ஏய் வினி.. இவ்வளோ தூரம் நடந்த அத்தனைக்கும் காரணமே நீ தான். அண்ணா உனக்காக நான் இந்த விஷயத்துல தலையிட்டுருக்காரு.. இது சாதாரண விஷயமில்ல.. இந்த பிரச்சினையில அண்ணாவோட உயிருக்கே ஆபத்திருக்கு.. அதுனால தான் உன்கிட்ட எதுவுமே சொல்லலைன்னு நினைக்குறேன்.. நீ அண்ணன்கிட்ட சண்டை போடாத..”
“ஏன்டி என்னைப் பார்த்தா சண்டைக்காட்சி மாதிரியா இருக்கு?! அண்ணனும் தங்கச்சியும் சண்டைக்கோழி மாதிரி பார்க்குறீங்க.. நானா எதுவும் சண்டை போடமாட்டேன்.. ஆனா அவரா வாயைத் கொடுத்து வாங்கிக் கட்டிக் கிட்டா.. நான் பொறுப்பில்ல.. போதுமா..”
“என்னமோ போ வினி.. நானும் என் வீட்டுக்காரரும் நாளைக்கு சுவிட்சர்லாந்து கிளம்புறோம்.. நீ பத்திரமா உன் உடம்பை பார்த்துக்கோ..”
“ஹேய்.. நானும் வர்றேன்டி.. எனக்கும் சுவிட்சர்லாந்து பார்க்கணும்னு ஆசையா இருக்குடி..” என்ற வியனியின் பேச்சை கேட்டு கொண்டே உள்ளே நுழைந்த ஆரிகேத், அவள் காதில் இருந்த போனை வழுக்கட்டாயமாக பிடிங்கினான்.
“என் போன்னை கொடுங்க.. கொடுங்கன்னு சொல்றேன்ல..” என்று ஆரிகேத்திடம் இருந்து ஃபோனை பிடிக்க முயற்சித்தவளை தன் ஒற்றைக் கையால் அடக்கியவன்,
“உன் ப்ரெண்ட் அப்படித்தான் சொல்லுவா.. உடனே நீ ஹனிமூனை கேன்சல் பண்ணிட்டு இங்க வந்து நின்னுடாத.. என் ஹனியை நான் பார்த்துக்கேறேன்.. நீ உன்னோட புருஷனை மட்டும் நல்லா கவனிச்சுக்கோ.. இவளைப் பத்தி நினைக்கவே நினைக்காத..” என்று காவ்யாவிடம் கூறியவன் அழைப்பை துண்டித்தான்.
“ஏன் இப்படி பண்ணீங்க?” என்று அவனது கையில் இருந்த போனை பிடிங்கிய வியனி,
“ஹலோ! ஹலோ!” என்று கத்த, அதனை புன்னகையுடன் பார்த்திருந்த ஆரிகேத்தோ,
“ஏன் இப்படி லோ.. லோன்னு கத்துற.. உனக்கு தான் ரொமான்ஸ் வராது.. ரொமான்ஸ் பண்றவங்களையும் பண்ணவிடாம ஏன் கரடியா தடுக்குற?” என்று கேட்க,
“ஏது?! நான் கரடியா.. எனக்கு ரொமான்ஸை பத்தி ஒன்னும் தெரியாதா? என்னைப் பார்த்ததும் ஓடி ஓடி ஒளிஞ்சது யாரு? நீங்களா? நானா? போயா.. போயா.. பயந்தாங்கொள்ளி..” என்று கூறியவளை தன்புறம் திருப்பியவன், அவள் முகம் முழுவதும் முத்தமாரி பொழிய, அவனது மீசைமுடி குத்திய இடமெல்லாம் குங்குமமாய் சிவந்தது வெண்தாமரையாய் அமர்ந்திருந்தாள் வியனி ஹில்டா.
“இந்த ரொமான்ஸ் போதுமா?! மீதியை உன் உடம்பு சரியானதும் காட்டுறேன்.. அப்ப மட்டும் நீ ஓடுடி.. உன் கையை காலைக் கட்டி தூக்கிட்டு போறேன்..” என்று கூறியவனை நிமிர்ந்து பார்க்க முடியாது, வெட்கத்தில் முகத்தை தாழ்த்திக் கொண்டாள் வியனி ஹில்டா. அந்நேரம் உள்ளே வந்த தாதி ஒருவர், வியனியின் காயத்திற்கு மருந்திட வேண்டுமென்று கூறி ஆரிகேத்தை வெளியே செல்லுமாறு கூற, அவரிடமிருந்து மருந்துகள் அடங்கிய தட்டை வாங்கிய ஆரிகேத்,
“நீங்க போங்க.. நானே அவளுக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணிவிட்டுர்றேன்..” என்று கூற, வியனியின் முகம் மேலும் செந்தாமரையாய் சிவந்து போனது. அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு வெளியே சென்றார் தாதி.
“ம்ம்.. இந்த பக்கமா திரும்பு..” என்றவன் வியனியை தன் பக்கமாக திருப்பி, அவளது மேலாடையை நீக்க, அதற்கு தடை விதித்தவாறு அவனது கைகளை பிடித்து கொண்டாள் வியனி.
“ஹேய்.. மருந்து போடணும் டி.. கையை எடு..” என்று கூறி அவளது கையை விலக்கியவன், தன் காரியமே கண்ணாக, அவளது காயத்தை சுத்தப்படுத்தி மருந்திட தொடங்கினான். அவனது முகத்தை பார்க்க முடியாது வெட்கப்பட்ட வியனி, தன் முகத்தை திருப்பி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். வழக்கமாக மருந்திட்டு கட்டும் போது தாங்க முடியாத வலி இருக்கும் இடமெல்லாம், இன்று வலிக்காது மாயமாக மறைந்து போனது போல் இருந்தது. தன் மன்னவன் கைபட்டு இடமெல்லாம் கூசி சிலிர்த்ததே ஒழிய, வலி சுத்தமாக தெரியவில்லை.
“அவ்ளோ தான்.. முடிஞ்சது.. இப்ப நீ படுத்து ரெஸ்ட் எடு.. எனக்கு சின்னதா மீட்டிங் இருக்கு.. முடிச்சுட்டு வந்துடுறேன்..” என்றவன் அவளைப் படுக்க வைத்து தூங்க செய்தபின், சத்தமில்லாமல் தன் லேப்டாப்பில் மீட்டிங்கை தொடர்ந்தான்.
அத்தியாயம் 45
சில வாரங்களுக்கு பிறகு..
வியனியின் காயங்கள் ஆறிய நிலையில் அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் ஆரிகேத். ஒளிந்திருந்த வேலுச்சாமியை மட்டுமில்லாது அவனுக்கு உதவியாய் இருந்த பத்மராமையும் தாராவோடு சேர்த்து சிறையில் அடைத்திருந்தான். வியனி எள் என்று சொல்லும் முன் எண்ணெய்யாக அவள் முன் நின்றிருந்தான் ஆரிகேத். நீ இப்படி ஒரு பெண்ணின் அன்பிற்கு அடிமையாவாய் என்று முன்பு யாரேனும் கூறியிருந்தால் நிச்சயமாக சிரித்திருப்பான் ஆரிகேத். இன்று அவளின் அன்பிற்கு அடிமையாக, அவளைச் சுற்றி இயங்கும் கோளாக மாறியிருந்தான். பகலில் அவனது கைக்குள் இருக்க விரும்பும் வியனிக்கு, இரவானால் நாணம் வந்து தடுக்கும். அவனின் அருகே கூட செல்லாது ஏதோ ஒரு சாக்கு வைத்து தள்ளியிருந்தாள். ஆரிகேத்தும் அவளது உடல்நிலையை எண்ணி, அமைதி காத்திருந்தான். அவளுடைய காயங்கள் நன்றாக ஆறிய நிலையில் கிட்டத்தட்ட இரு மாதங்கள் கழித்து, அவர்கள் இருவரையும் காண வந்திருந்தனர் அனுக்ஷயனும் காவ்யாவும். மலர்ந்து விகசித்திரிந்த காவ்யாவின் முகத்தை கண்டதும், அவர்களது திருமண வாழ்க்கை எப்படி இருக்கின்றுது? என்பதை அறிந்து கொண்டாள் வியனி ஹில்டா. காவ்யாவைக் கண்டதும் தாவி அணைத்துக் கொண்ட வியனியை தானும் இறுக்கி அணைத்துக் கொண்டாள் காவ்யா. அவர்களைக் கண்ட காளையர்கள் இருவரின் கண்ணிலும் பொறாமை மின்னியது.
‘ஒரு நாளாவது என்னைய இப்படி இறுக்கி அணைச்சுருப்பாளா?! ராட்சசி..’ என்று ஆரிகேத் நினைத்திருக்க, அதுவே அனுக்ஷயனின் முகத்திலும் எதிரொலித்தது. இருவரின் பெருமூச்சும் அவர்களது ஏக்கத்தை ஒருவருக்கொருவர் எடுத்துக் கூற, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையை கோதிக் கொண்டனர்.
“நீயும் அதே தான் நினைச்சியா?” என்று ஆரிகேத் கூற,
“ம்ம்ம்.. ஆனா என் நிலைமையே பரவாயில்ல.. இன்னும் எட்டு மாசத்துல அப்பாவாகிடுவேன்.. ஹுய்.. உன்னையும் பார்த்தா தான் பாவமா இருக்கு..” என்றான் அனுக்ஷயன்.
“நான் ஸ்லோவா கட்டுனாலும் அஸ்திவாரம் ஸ்ட்ராங்கா கட்டுவேன் மாமு.. நீ வேணாப் பாரு.. உன் சிங்கக்குட்டிக்கு போட்டியா ரெண்டு சிங்கக்குட்டிங்களை ஒரே நேரத்துல இறக்குறேன்..” என்று ஆரிகேத் கூற,
“முதல்ல அஸ்திவாரத்தை ஸ்ராங்கா போடு.. முத்தத்தை அப்புறம் பார்க்கலாம்..” என்று அனுக்ஷயன் கேலி செய்ய,
“புள்ளிப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவாகண்டேன்?” என்று ஆரிகேத் முணுமுணுக்க,
“என்ன என்ன சொன்ன?” என்றவாறே தன் காதை ஆரிகேத்தின் வாயருகே கொண்டு வந்தான் அனுக்ஷயன்.
“ம்ம்.. வாழ்த்துக்கள் சொன்னேன்டா மாமு..” என்றவாறே அனுக்ஷயனின் எலும்பு நோக ஆரிகேத் அணைக்க, அனேக்ஷயனை தானும் இறுக அணைத்துக் கொண்டான் ஆரிகேத். இவர்கள் இருவரையும் கேலியாக பார்த்துக் கொண்டிருந்த வியனி,
“நீங்க ரெண்டு பேரும் இப்படின்னு சொல்லவே இல்ல..” என்று கூறி சிரிக்க, சட்டென விலகிய இருவரும் அசடு வழிய சிரித்தனர்.
“அது வந்து.. மாமு அப்பாவாகப் போறான்ற சந்தோஷத்துல.. கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்..” என்ற ஆரிகேத்தைப் பார்த்த வியனி, தன் கண்கள் விரிய காவ்யாவைப் பார்த்து,
“நிஜமா?! நீ.?” என்று கேட்க,
“ஆமாண்டி.. நாற்பத்தஞ்சு நாள் தள்ளி போயிருக்கு..” என்று வெட்கப்பட்டு கொண்டே கூற,
“எப்படி டி? இப்பத்தானே ஹனிமூன் போனீங்க.. அதுக்குள்ள?” என்று வியனி இழுக்க,
“போன வேலையை சிறப்ப செஞ்சு முடிச்சுருக்காங்க.. இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு?” என்று ஆரிகேத் கேட்க,
“அதானே.. இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு?” என்று வியனியைப் பார்த்து அனுக்ஷயன் கூறிவிட்டு, ஆரிகேத்தைப் பார்த்தவாறு,” இந்தாடா.. இது உங்க ரெண்டு பேருக்குமான ஹனிமூன் டிக்கெட்.. உங்க திங்க்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிக்கோங்க.. இன்னைக்கு நைட் ஃப்ளைட்ல கிளம்புறீங்க..” என்று கூறி, ஆரிகேத்தைப் பார்த்து கண்ணடிக்க, “மாமூ.. என் வாழ்க்கைல விளக்கேத்தி வைச்சுட்டடா..” என்றவாறே அனுக்ஷயனை மீண்டும் அணைத்துக் கொண்டான் ஆரிகேத்.
“ச்சீ.. ச்சீ.. தள்ளிப்போடா.. இந்த வேலையை எல்லாம் உன் பொண்டாட்டிகிட்ட வைச்சுக்கோ..” என்றவாறே அவனை தள்ளிவிட்ட அனுக்ஷயன், அவர்கள் இருவரையும் தன் விமானத்தில் சுவிட்சர்லாந்திற்கு ஹனிமூன் அனுப்பி வைத்தான். சுவிட்சர்லாந்து இறங்கியதும் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பங்களாவிற்கு சென்றனர் இருவரும். தங்களது அறைக்குள் நுழைந்ததும் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் ஆரிகேத். தங்களது அறையில் இருக்கும் பால்கனி வழியாக வெளியே தெரியும் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு முதலில் ஒன்றும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் தான் ஊசியாக குத்தும் குளிரை உணர்ந்தாள். அவள் அணிந்திருந்த புடவையைக் தாண்டி உணர்ந்த குறியைப் போக்க, தன்னை தானே இரு கைகளாலும் அணைத்துக் கொண்டு நின்றிருந்தாள். குளித்துவிட்டு காற்சட்டையோடு வந்த ஆரிகேத்தின் கண்ணில், குளிரில் பனித்துளிகளோடு மலர்ந்திருக்கும் மலராய் தெரிந்தாள் வியனி ஹில்டா. அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டவன், தன் தாடையை அவளது தோளில் வைத்து, அவளது கன்னத்தோடு தன் கன்னத்தை சேர்த்து இழைத்தான். அவன் உடற்சூடு அவளது உடலுக்கு இதமாக இருக்கவே, மேலும் அவனோடு ஒட்டிக் கொண்டாள் வியனி ஹில்டா. அவளது காதோரமாக இங்கும் அங்குமாய் அலைந்து கொண்டிருந்த முடிக்கற்றைகளை மெல்ல ஒதுக்கியவாறே, தன் இதழ்களால் அழுத்தமான முத்தம் ஒன்றை வைத்தான். ஒற்றை முத்தத்தால் பித்தத்தை தலைக்கேற்ற முடியுமா? அவனது ஒற்றை முத்தத்தால் அவளது ஒட்டுமொத்த உடலும் சூடாகியது. பொய்யோ எனும் இடையின் நடுவில் சிறுத்தும், மேலும் கீழும் விரிந்திருக்க, அங்கே தன் கைகளை சுதந்திரமாக அலையவிட்டவனின் விரல்களை மேலும் முன்னேற விடாது, வெட்கத்தில் தடுத்தவளை தன் முத்தத்தினால் சித்தம் தடுமாறச் செய்தான். அவன் கொடுக்கும் சுகவேதனை தாளாது அவனே சரணமென அவன் மீது சாய்ந்தவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டு, கட்டிலை நோக்கிச் சென்றான்.
கட்டிலில் தன் தேவகன்னிகையை கிடத்தியவன், கொளுத்த மீன் போல் சிவப்பாக இருக்கும் கைவிரல்களை தன் இதழ்களால் அழுத்தமாக முத்தமிட்டான். அவனது ஒவ்வொரு முத்தத்திற்கும் மங்கையவளின் மேனி துள்ளி அடங்கியது. அழகிய முகம் முழு நிலவுபோல ஒளிமிளிற, அதில் நட்சத்திரமாய் மின்னின அவனிட்ட முத்தங்கள். உருண்டு திரண்டு பவளம் மின்னிய உதடுகளை லட்சம் முறை சிறையெடுத்தாலும் அடங்காத ஆசையோடு மீண்டும் மீண்டும் நாடினான். பாலில் விழுந்த வண்டுபோல துள்ளிய கண்களுக்கு பரிசாக முத்தங்களை வாரி வழங்கினான். வில்லைப்போல் வளைந்திருந்த புருவங்களுக்கு இடையேயான அம்பாய் தன் இதழ்களை பதித்தான். மலர் மணம் வீசும் கூந்தலில் தன் மூக்கை நுழைத்து அதன் மணத்தை நுகர்ந்தான். வாழைத்தண்டுபோல் பளபளக்கும் கால்களோடு தன் கால்களை சேர்த்து உறவாடினான். மன்னவனின் போக வேட்டையை தாங்காது துவண்ட மங்கையவளை தன் மேல் போட்டு கொண்டான். ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்றும் கொய்யா கனிகளை தன் அதரங்களினால் கொய்தான். பூவிலிருந்து தேனெடுக்கும் வண்டாய் மாறினான். பூவுக்கு போகாது தேனெடுக்கும் வண்டிற்கு தன்னிடம் உள்ள அனைத்தையும் வாரி வாரி வழங்கிய பெண்மையை, விடிய விடிய கொண்டாடினான். விடிந்த பின்பும் தன் சொர்க்கத்தை தன் கைக்குள்ளேயே வைத்தபடி உறங்கியவன், ஆதவன் உச்சிக்கு வந்த பின்னரே கண்விழித்தான். தன் மன்னவனின் மார்பை மஞ்சமாக்கி துயில் கொண்டிருந்த பேதைப்பெண்ணை விழித்திருந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு நடந்த அனைத்தும் கண் முன்னே வந்து போனது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தவள், இன்று அவனுக்கு சகலமாகி போனாள். அவளுக்காகவென பொது மருத்துவமனை ஒன்றை கட்டியிருக்கின்றான். தர்ஷினிக்கு லண்டனில் நல்ல மாப்பிள்ளையாய் பார்த்து கட்டி வைத்தவன், பட்டுமாமியையும் குடும்பத்தோடு அங்கேயே அனுப்பி வைத்தான். தன் உலகத்தை அவளைச் சுற்றி அமைத்துக் கொண்டான். அவளுக்கு ஏற்பட்ட காயத்திற்கு சாமிக்குத்தம் தான் காரணம் என்று குருவம்மா பாட்டி கூற, அவளை அழைத்துக் கொண்டு குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்திருந்தான். கடவுள் இல்லையென்றவன் அவளுக்காக பக்தனாக மாறினான். விலை கொடுத்து மக்களை வாங்க எண்ணியவன், அதே எளிய மக்களுக்காக மருத்துவத்தை இனாமாக வழங்கினான். இவையனைத்திற்கும் காரணம் அவளது மனைவியே. எங்கே எப்போது அவளை விரும்ப ஆரம்பித்தான் என்பது அவனுக்கே புரியாத புதிர். ஒருவரை வெறுப்பதற்கு காரணங்கள் இருக்கும்.. ஆனால் விரும்புவதற்கு காரணங்கள் தேவையில்லை. அன்பிற்கு உள்ளத்திடம் பரந்த கருணை குணம் உண்டு. அங்கு அகங்காரம் அறவே இல்லை. தீமைகளையும், தவறுகளையும் இனங்கண்டு அவற்றைத் திருத்தியும், பொறுத்தும் அருள்வது அன்பொன்றே ஆகும். தனக்குப் பிடித்த ஒருவருக்காக எதையும் செய்ய துணியும். இத்தகைய அன்பே, கட்டுப்பாடற்ற அன்பு.
நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்கள் என்றால் அவரை முழுமனதுடன் நேசியுங்கள், அவர்களின் குறைகளுடன் சேர்த்து! நீங்கள் உங்களுக்குப் பிடித்தமானவரின் பிடிக்காத பண்பை ஒருபோதும் மாற்ற முனையாதீர். ஏனெனில், உங்களின் அந்த முயற்சி , அவரின் ஒருபாதியை மட்டுமே நீங்கள் விரும்புகிறீர்கள் எனக் கூறும். மறுபாதி ஒதுக்கப்பட்டது என பொருளாகிவிடும். தன் மனைவியின் குழந்தைதனத்தோடு சேர்த்து அவளது பொதுவுடமைக் எண்ணத்தையும் நேசிக்கின்றான் ஆரிகேத். ஆரிகேத்தை எந்த நிபந்தனையும் இல்லாத அவனை அவனுக்காகவே நேசிக்கின்றாள் வியனி ஹில்டா. அவர்களை வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.
**********************சுபம்***********************
Man/sir entha story full episode link share panunga it starts with 34 th part.