ATM Tamil Romantic Novels

கதைப்போமா காதலே‌.. 2

கதைப்போமா 2

 

ஆச்சரியமா இல்லை அதிர்ச்சியா என்று தெரியாத புரியாத மனநிலை தான்‌ நவிக்கு.

 

மும்பைக்கு செல்ல வேண்டும்‌ என்று கம்பெனியில் இருந்து அவளுக்கு ஆர்டர் வந்தது முதல் இவன் வருவானா? மாட்டானா?

 

வந்தால் இவனிடம் எப்படி நடந்து கொள்வது? என்று பல்வேறு அலைப்புறுதல்கள் மனதின் உள்ளே நடந்து கொண்டிருக்க.. இப்பொழுது அனைத்தும் மறந்து விரிந்த சிரிப்புடன் “ஹாய்.. விதுரன்!!” என்று பதில் கூறினாள்.

 

இவளுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த இம்லியும் அவனைப் பார்த்து “ஹாய் தேவா.. ஹௌ ஆர் யூ?” என்றாள்.

 

“யா.. ஃபைன் சிவா!” என்றான்.

 

“டோண்ட் கால் மீ சிவா.. இட்ஸ் லைக் பாய்ஸ் நேம் தேவா!” என்று சிணுங்கினாள்.

 

“வாட் டு டூ யா?” என்று தோள் குலுக்கிக் கொண்டவனின் கண்கள் அருகில் நின்றிருந்த நவியின் இதழ்களை தான் பார்த்தது எதிர்ப்பார்ப்போடு.. அவன் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் அந்த “டுட்டுடூ..!!” வார்த்தையை சொல்லியது அவளது செவ்விதழ்கள்.

 

“தென்.. கேர்ள்ஸ்..” என்ற விதுரனை பார்த்த இருவரும் இப்போதைக்கு ப்ரேக் பாஸ்ட் தான் ஃபர்ஸ்ட் டாஸ்க் என்று கோராசாக சொல்லி சிரித்தனர்.

 

அந்தேரியில் இருக்கும் பிரபல மருந்து கம்பெனி சோலாரிஸ் இல் தான் இந்த ட்ரைனிங். அதுவும் மூன்றாண்டுகளாக மார்க்கெட்டிங்கில் இருக்கும் இவர்களுக்கு ரெப்ரஷ்மெண்ட் ட்ரெய்னிங்கா இங்கே அழைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு பிரிவுகளிலிருந்து இவர்கள் வந்திருந்தாலும், பொதுவான சில பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அதன் பின்னே அவரவர் பிரிவுகளில் பயிற்சி கொடுக்கப்படும். முதல் ஐந்து நாள் பொதுவான பயிற்சியும் அடுத்த ஐந்து நாள் அவர்கள் பிரிவுகளுக்கான பயிற்சியும் என்று அறிவிக்கப்பட்டிருக்க.. மொத்தம் 50 பேர் கொண்ட அந்த குழு அந்த பெரிய ஹாலை ஆக்கிரமித்திருந்தது.

 

வழக்கம் போல் இம்முறையும் நவியும் இம்லியும் முதல் இருக்கையில் அருகருகே அமர்ந்து கொண்டனர். இது இப்போது என்று இல்லை, முதன் முதலில் வேலைக்கு சேர்ந்த பொழுது கொடுத்த இரண்டு நாள் ட்ரைனிங்கிலும் அதற்குப்பின் வந்த ப்ராடெக்ட் ட்ரைனிங்கிலும் இவர்கள் இருவரும் இப்படித்தான்!! இதிலும் இருவரும் இரு வேறு பிரிவுகள். அதற்கு பிரிவுகளில் ஷெஷன் கொடுக்கும்போது மட்டும் பிரிந்து செல்பவர்கள், மீண்டும் பார்க்கும் போது ஓட்டிக்கொண்டே தான் திரிவார்கள்.

 

இதில் இம்லியோ வீர மராட்டிய பெண்!! நவியோ சுத்த தமிழ் பெண்!!

எப்படி இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு ஆழ்ந்த நட்பு என்று அவர்களுக்கே தெரியாது இருவரும் பேசிக் கொள்வது ஆங்கிலத்தில் தான். அவளுக்கு ஹிந்தியும் மராட்டியும் தெரியாது. இவளுக்கு தமிழ் தெரியாது.

 

காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் மொழி அவசியமில்லை!!

 

அனைவரும் ஹாலில் அமர்ந்து இருக்க.. வழக்கம் போல வந்த ஹெச்ஆர் அண்ட் மார்க்கெட்டிங் டீம் தங்களது திறமைகளை இவர்களிடம் ஏற்றுவதாக நினைத்து சில பல செஷன்கள் எடுத்தார்கள். 

 

இரண்டாவது ஷெஷனிலேயே தூக்கம் வந்துவிட்டது நவிக்கு. அருகிலிருந்த இம்லியை யாருக்கும் தெரியாமல் தொடையில் நறுக்கென்று கிள்ள.. அவள் அதிர்ந்து இவளை திரும்பிப்பார்க்க, “தூக்கம் வருது டியர்!!” என்று உதடுகளை அசைக்க.. இப்போது இவள் கிள்ளினாள் அவளை.

 

ஒருவழியாக இருவரும் டீ ப்ரேக்கில் எழுந்து முதல் ஆளாய் ஓடிவந்து தங்களுக்கான டீயும் பிஸ்கட்டும் எடுத்துக்கொண்ட அமர்ந்தனர்.

 

கண்கள் தூக்க கலக்கத்தில் இருந்த நவியை பார்த்து சிரித்தாள் இம்லி.

 

“சிரிக்காதடி!! தூக்கம் தூக்கமா வருது. ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா எடுக்கிறார்களா பாரு!! தெரிஞ்சு அதையே சொல்லி சொல்லி கடுப்பேத்துறானுங்க. தலைவலி தான் வருது!! பீல்டில் இருக்கும் போது கூட தெரியல‌. இவனுங்க கிளாஸ் எடுக்குறேனு காலேஜ் டிஸ்நெரி பாடம் எடுக்கிற தான் கடுப்பாகுது!!” என்று புலம்பிக் கொண்டே டீ அருந்த..

 

“இன்னும் சின்னப் புள்ளை மாதிரி பிஹேவ் பண்ணாதே நிதா.. நமக்கு தெரியாதது நிறைய இருக்கும். அவங்க என்ன சொல்றாங்கன்னு ஒழுங்கா கவனிச்சா தான் உனக்கு தெரியாதது என்ன சொல்றாங்கன்னு புரியும்!!” என்றப்படி அருகில் அமர்ந்த விதுரனை தான் முறைத்தாள் நவி.

 

“இங்க பாரு விதுரா.. எனக்கும் எல்லாம் தெரியும்னு நான் சொல்லல. ஆனா ஒரு செஷனை எப்படி இன்டரஸ்ட்டா எடுக்கணும் அவனுங்களுக்கு தெரியல..” என்று அவள் தலையை தேய்த்து விட்டப்படி சுடச்சுட அந்த டீயை குடித்து முடித்தாள்.

 

“உனக்கு இன்னும் ஜெர்னி டயர்ட் போகல.. அது இல்லாம நேத்து நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்திருப்பீங்க. அதுதான் இந்த தலைவலி” என்றான் சரியாக. அவன் அப்படிதான்.. எப்போதும் சில விஷயங்களை சரியாக கண்டுப்பிடிப்பான் அதில் இதுவும்‌ ஒன்று.

 

“ஆமா இதெல்லாம் மட்டும் கரெக்டா கண்டுபிடி!!” என்று மனதில் முணுமுணுத்துக்கொண்டே டீயில் கவனமானாள் நவி!!

 

ட்ரைனிங் என்றால் சும்மா இல்லை அன்று நடத்தியதை மறுநாள் ஆன்லைன் டெஸ்ட் வைத்து அவர்களின் கற்றல் திறனை கவனித்தபடியே இருப்பார்கள் இந்த ட்ரெய்னிங் டீம். 

 

எப்பொழுது ட்ரெய்னிங் என்றாலும் இதுதான் இவர்கள் என்று தெரியாதா என்ன?? இரவில்… அன்றைக்கு நடத்தியவற்றை ரீகால் பண்ணிக் கொண்டு, சாப்பிட்டு முடித்து அந்த கட்டிடத்தின் சுற்றுப்பாதையில் இருந்த திண்டில் அமர்ந்தனர் நவியும் இம்லியும்!!

 

எப்போதும் அப்படிதான் சாப்பிட்டவுடன், அந்த கட்டிடத்தை ஒரு சுற்று வந்துகொண்டே அன்றைக்கு நடத்தியதை பற்றி இருவரும் டிஸ்கஸ் செய்வார்கள். 

 

நவி அறிவியல் சார்ந்த படிப்பு இம்லியோ அக்கவுண்ட் சார்ந்த படிப்பு. ஆனாலும் வீட்டு சூழ்நிலை காரணமாக இந்த ரெப் வேலையை செய்து கொண்டிருக்கிறாள். அதனால் அறிவியல் மருத்துவம் சம்பந்தப்பட்ட பகுதிகளை நவி தான் அவளுக்கு விளக்குவாள். இன்று பொதுவான ஒற்றை பேசிக்கொண்டே நடந்து நடந்து இவர்கள் அமர சற்று தூரத்திலேயே இவர்களை பார்த்தபடியே விதுரன் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.

 

‘வேறு யாரிடம்? இந்நேரம் வீட்டுக்குத்தான் அழைத்திருப்பான். அம்மா அப்பா தம்பி தாத்தா என்று ஒரு ரவுண்டு அனைவரிடம் பேசிவிட்டு தான் வருவான்’ என்று நவி மனதில் நினைக்க.. ஆனாலும் அவன் பார்வை முழுதும் இவர்கள் மீதே!!

 

“என்ன அதிசயமா இருக்கு ரெண்டு பேரும் மொட்டைமாடிக்கு போகாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கீங்க?” என்றபடி வந்தவன் அருகில் அமர, அதற்கு பதில் கூறாமல் “வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா விதுரா?” என்றாள் நவி.

 

“ம்ம்.. குட்!!” என்றவன், “ஏன் மாடிக்கு போகல?” என்று மீண்டும் ஆங்கிலத்தில் இம்லியிடம் கேட்க ஆனால் பார்வை முழுவதும் நவியிடம்!!

 

“சும்மா.. அப்படியே ஒரு‌ வாக் வந்தோம். இங்கேயே உட்கார்ந்தாச்சு” என்று சிரித்தாள் இம்லி. 

 

“என்னடா அதிசயம்?!!” என்று வியந்து சிரித்தான் விதுரன். காரணம் இவர்கள் இருவரும் படிக்கவேண்டும் என்றால் யாருடைய தொந்தரவும் இல்லாத அந்த நான்காவது மொட்டைமாடிக்கு தான் செல்வார்கள். பகல் போல் அங்கும் வெளிச்சம் ஆகத்தான் இருக்கும். குரூப் குரூப்பாக அமர்ந்து அங்கே படிக்கவும் செய்வார்கள் ட்ரெய்னிங் பீரியடில்!!

 

ஒன்பது மணிக்கு மேல் யாரையும் கீழே நடமாட அனுமதிக்க மாட்டார்கள் செக்கியூரிட்டி. அதனால் அதன் பிறகு சிறிது நேரம் மொட்டை மாடியில் படித்துவிட்டுத்தான் இவர்கள் உறங்க செல்வது வழக்கம். அது விதுரனும் அறிந்திருந்தது. ஆனால் இப்போது ஏன் போகவில்லை என்று மனதில் தோன்றினாலும் இது ஒரு சின்ன விஷயம் இதை வைத்து விசாரிப்பானேன் என்று விட்டு விட்டான்.

 

அந்த சின்ன விஷயத்திற்கு பின்னே தான் மிகப்பெரிய ரணம் இருக்கிறது நவிக்கு என்று அவனுக்கு புரியவில்லை. அதை கொடுத்தவனும் அவன்தான் என்று அப்போது தெரியவில்லை!!

 

மூவரும் லிஃப்டில் நின்றிருக்க பெண்களுக்கு முன்னால் நின்றிருந்த விதுரன் தளம் வந்ததும் இறங்கி, இம்லி சென்றதும் நவி இறங்கப் போகும் சமயம் “இந்த நைட் ட்ரஸை விடவே மாட்டியா?” என்றவனின் குரலில் கண்டிப்பாக கடுப்பு தான் இருந்தது என்பது அவளுக்கு தெரியும்.

 

சென்றவள் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து “மூணு வருஷமா போடும் அதே ட்ரஸ்!! எனக்கு புடிச்சிருக்கு போடுறேன். அதுமில்லாம இதுதான் எனக்கு கம்போர்ட்!!” என்று அவள் போட்டிருந்த டீ சர்ட் நைட் ட்ராக் பேண்டை சுட்டிக்காட்டியபடி சென்றாள்.

 

அவன் மீதான அளப்பரிய அன்பு இருந்தாலும் அதை தாண்டி அவன் கொடுத்த காயமும் உள்ளே தான் பத்திரமாக இருக்கிறது அவளுக்கு!!

ரணங்களின் வலி அவ்வப்போது அவளது வார்த்தைகளில் வந்து விழும்!!

 

விதுரனும் ஒரு தோள் குலுக்கலுடன் தன் அறைக்கு சென்று விட்டான்.

 

“விதுரா.. இது உனக்கு தேவையா? அவ எந்த டிரஸ் போட்டு இருந்தா உனக்கு என்ன? வந்த முதல் நாளையே ஏன் அவ கிட்ட சண்டை போடுற. இருக்கப் போறது 5 நாள் தானே!!” என்று அறிவு அறிவுறுத்தினாலும் மனது சமாதானமடைய மறுத்தது.

 

“எப்படி? எப்படி? எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அவள் அந்த உடையை உடுத்தலாம்” என்று!!

 

“நான் மட்டுமா இருக்கேன் இங்க.. இருக்குற அத்தனை காவாலி பயலுகள கண்களும் அவள் மீது தான்!! சொன்னா கேட்கிறது கிடையாது. பெரிய அறிவாளினு நினைப்பு!! வீம்பு.. பிடிவாதம்!!”என்று முணுமுணுத்தவன் புரண்டு புரண்டு படுத்தும் அவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.

 

மொபைலை எடுத்தவன் வெகு நாளைக்கு பிறகு அவளது நம்பருக்கு “குட் நைட்!!” என்று செய்தி தட்டிவிட அது பார்க்கப்பட்டதற்கான அடையாளம் வந்த பிறகே நிம்மதியாக உறங்கினான்!!

2 thoughts on “கதைப்போமா காதலே‌.. 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top