“உங்க ரெண்டு பேரையும் எப்படி கரெக்ட் பண்ணனேனு? கேட்கிறானுங்க மா!” என்றவுடன் அதிர்ச்சியாக பார்ப்பாள்.. வாய்விட்டு திட்டுவாள்.. கோபம் கொண்டு செல்வாள்.. என்று ஏதேதோ கற்பனையில் அவன் தயக்கமாக அவளை பார்க்க, அவளோ கலகலவென்று சிரித்தாள்.
“என்ன நெனச்சானுங்க எங்கள பத்தி..!!” என்று மீண்டும் சிரித்தாள்.
“என்னமா சிரிக்கிற?” என்றவனிடம்..
“இதுக்காக கோபப்பட்டு என்ன ஆகப்போகுது? இந்தக் காலத்திலேயும் பொண்ணுங்களும் பையனும் பேசினால்.. அது தப்பான முறையில் தான்னு எண்ணம் கொண்ட.. அதுவும் மனநோய் கொண்டவனுங்க கிட்ட கோபப்பட்டு என்னாக போகுது? புரிந்தவர்களுக்கு விளக்க தேவையில்லை.. புரியாதவர்களுக்கு எவ்வளவு விளக்கினாலும் தெளிய போவதில்லை. இதுல கோபப்பட்டு என்னாக போகுது?” என்றவள் “ஆனாலும்…” என்று அவனைப் பார்த்து வாய் பொத்தி சிரிக்க..
அவனுக்குமே முன்ன இருந்ததைவிட இப்போது சற்று மனநிலை மாறி இருந்தது. சரி தானே இப்படி பேசிக் கொண்டிருப்பவர்கள் தானே மாற வேண்டும்!! நாம் ஏன் எதற்காக தயங்க வேண்டும்? என்று யோசித்தவன், அவளின் நமட்டு சிரிப்பை பார்த்து “இப்போ எதுக்கு சிரிப்பு? ஒழுங்கா சொல்லு என்ன நெனச்ச?” என்று விரல் நீட்டி மிரட்டும் தொனியில் கேட்க..
“அச்சச்சோ.. அதை சொன்னா உங்க மனசு கஷ்டப்படுமே ஆஃபிஸர்!!” என்று அவள் ராகம் இழுக்க..
“பரவால்ல ஆஃபீஸர்!! கஷ்டப்பட போவது என் மனசு தானே? நானே இஷ்டப்பட்டு தானே கேட்கிறேன்.. பரவால்ல.. அதுதான் தொண்டை வரைக்கும் வந்துடுச்சுல..சும்மா வெளியில சொல்லிடுங்க!!” என்றான் அந்த வாயில் கதவில் சாய்ந்து நின்றபடி..
“அது ஒன்னுமில்லை ஆஃபீஸர்.. இந்த முஞ்சிக்கு இரண்டு ஃபிகர் கேக்குதா? அதுவும் சவுத் அண்ட் நார்த்? மெயின்டெய்ன் பண்ண முடியுமா ஆஃபிஸர்?” என்று மீண்டும் கலகலத்து சிரித்தவளை முறைப்புடன் பார்த்தவனுக்கும் சிரிப்பு தான்!!
“ஏன் இந்த மூஞ்சிக்கு என்ன ஆஃபிஸர்? இரண்டு என்ன இருபது ஃபிகர் கூட திரும்பி பார்க்கும் ஆஃபிஸர்!! நம்ம ஃபேஸ் கட் அப்படி!!”
“ஹா.. ஹா.. இருபதும் திரும்பி பார்த்து செட் ஆகி என்ன ப்ரோஜனம்? இந்த மூஞ்சிக்கு லவ் எல்லாம் செட்டாகாது ஆபீஃஸர். ஏதோ வீட்ல பாவம் பார்த்து அரேஞ்ச் மேரேஜ் பண்ணா தான் உண்டு!!” என்றாள் நக்கலோடு!!
“என்னது அரேஞ்ச் மேரேஜா? நெவர் எவர்!! எங்க அப்பா அம்மாவே லவ் மேரேஜ் தான் தெரியுமா? அப்பவே எங்க அம்மாவை லவ் பண்ணி எங்க தாத்தாவுக்கு தெரியாம எங்க அம்மாவை கூட்டிட்டு போய் மருதமலை கோவிலில் வைத்து கல்யாணம் பண்ணவரு எங்க அப்பா!! அவருக்கு பிறந்த நான் எப்படி அரேன்ஜ் மேரேஜ் பண்ணுவேன் ஆஃபிஸர்!!” என்று ஒற்றை புருவத்தை தூக்கி அவன் கேட்ட விதத்தில் ஆவென்று வாயை பிளந்தாள் நவி.
“பரவாயில்லையே உங்க அப்பா பயங்கர லவ்வர் பாய் போல… சூப்பர்!!” என்று சிலாகித்தாள்.
“இங்க ஃபேஸ் கட் வொர்த் இல்ல.. அங்க எப்படி ஆபிஸர்?” என்று கலாய்த்தவனைப் பார்த்தவள் விழிகளை விரித்து “இங்க ஆளே வொர்த் இல்ல ஆஃபிஸர். கொன்னுடுவாங்க லவ்வுனு போய் நின்னா!! எங்க அம்மா தனியா விஷம் எல்லாம் வைக்க வேண்டாம்.. அவங்க வச்ச ரசத்தையே கொடுத்தா போதும்!! நான் குடிச்சிட்டு அவுட்!!” என நாக்கை வெளியே நீட்டி தலையை சாய்த்து கூறியவளை பார்த்தவனும் வாய் விட்டு சிரித்தான்.
“சரி.. சரி.. டைம் ஆகுது! உள்ள போ!!” என்றான்.
“ச்ச.. கொஞ்சநேரம் இதை மழையை ரசிக்க விடமாட்டாரே.. பொறாமை சூழ் உலகமடா!!” என்று முணுமுணுத்தவள் லிஃப்ட்டை நோக்கி நடக்க.. “சேட்ட.. சேட்ட.. போ!” அவளுக்கு பின்னே நடந்தான்.
அவர்கள் வந்த லிஃப்ட் நின்றவுடன் இறங்க போனவளை பார்த்து தயக்கத்தோடு “நம்மை திரும்பவும் சேர்த்து பார்த்தால்.. ஏதாவது சொல்லுவானுங்க..” என்று இழுத்தவனை பார்த்தவள் தலையிலடித்துக் கொண்டு “சரி நீங்க போங்க.. நான் இந்த லிஃப்ட்ல அப்படியே நாலாவது ப்ளோர் வரைக்கும் ட்ராவல் பண்ணிட்டு அப்புறமாஆஆ வரேன்!” என்றாள் கடுப்போடு!!
“இப்பதானே விம் பார் போட்டு விளக்கினேன்.. மறுபடியும் மத்தவங்கள பத்தியே பேசுகிறானே!!” என்று அலுத்துக் கொண்டவள் அறியவில்லை.. அவன் தயங்கியது யோசித்தது எல்லாம் அவனுக்காக அல்ல அவளுக்காக என்று!!
அவனுக்கும் அவளை தனியாக அனுப்ப மனமில்லை. ஆனால் மீண்டும் சேர்ந்து சென்று அந்த நாதாரிகள் வாயில் அவளை அவலாக கொடுக்க வேண்டாம் என்றுதான் விலகிப் போனான். ஆம்!! நவ்னீதாவிடம் இருந்து சற்று விலகி தான் இருந்தான். அதுவும் அவளுக்காக தான்!!
அதே பிரேக் டைம்.. லஞ்ச்.. டின்னர் என்று ஒன்றாகத்தான் சாப்பிட்டார்கள் மூவரும். ஒன்றாகத்தான் படித்தார்கள். ஆனால் முன்னே இருந்த ஏதோ ஒரு நெருக்கம் குறைவது போல உணர்ந்தாள் நவி. முன்ன போல இப்போதெல்லாம் இரவில் படிக்கும் போது அவர்களோடு வருவதில்லை விதுரன்.
ஒருநாள் இம்லி அதைக் கேட்டு விட.. “அவரெல்லாம் ஹெட் வெயிட் பார்ட்டி டார்லிங்!! படிக்கணும் எல்லாம் அவசியம் கிடையாது. சிட்டி ரோபோ மாதிரி பார்த்தாலே போதும் எல்லாம் மண்டைக்குள்ள ஏறிடும்!! அந்த கொழுப்பு தான்.. வேற புக்ஸ் எதுவும் படிச்சிட்டு இருப்பாராக்கும்!!” என்று கூறிக் கொண்டிருந்தவளை குறுகுறுப்புடன் பார்த்தாள் இம்லி.
“சொன்னா அடிக்க வருவ டார்லீ.. அடிக்க மாட்டேன் சொல்லு.. நா சொல்றேன்” என்று பீடிகை போட்டவளின் நீண்ட சடையை இழுத்து தன் கையில் சுற்றிக்கொண்ட நவி “நீங்க சொல்லுங்க ஆஃபிஸர்.. அப்புறம் கோபப்படவா வேணாமா நான் யோசிக்கிறேன்” என்றாள் நவி.
“அது.. அது.. ஸ்வீட் ஹார்ட் நீயும் தேவாவும் நல்ல பேர்!” என்றாள்.
“வாயில அடி.. வாயில அடி!! வி ஆர் ஜஸ்ட் பிரண்ட்ஸ்!! நீ எப்படியோ அப்படித்தான் நானும் அவருக்கு” என்று இவள் விளக்க முற்படும் முன் கையை உயர்த்தி தடுத்த இம்லி, “இரு.. இரு.. ரெண்டு பேருமே நைட் ட்ரெஸ் தான் போட்டு இருக்கோம். ஆனா அன்னைக்கு உன்னை பார்த்து இந்த மாதிரி போடாத என்று திட்டினார் தானே? அப்போ பக்கத்தில் நானும் தான் இருந்தேன். ஆனா விதுரன் என்னை ஒன்னுமே சொல்லலையே?? ஏன்?? மூணு பேரும் ஒன்னா தான் சுத்துறோம். ஆனா என்னை விட உன்கிட்ட ஒரு க்ளோஸ்நெஸ் அவருக்கு இருக்கு. அது எனக்கு சூர்!!” என்றாள்.
‘ஆமாம்! அன்று அப்படித்தான் கோபப்பட்டான். முதன்முறையாக இவர்கள் இருவரையும் நைட் ட்ரெஸில் பார்த்து!! இதுவரை பார்த்தது இல்லை அவன். பெரும்பாலும் சுடிதாரில் படித்து விட்டு ரூமுக்கு சென்றவுடன் தான் மாற்றுவார்கள். அன்று மாலை ஒரு குளியல் போட்டு நைட் ட்ரெஸூடன் வந்தவர்களை அமைதியாக அழுத்தமாக பார்த்தவன், சாப்பிடும்போது அப்படி கடிந்து கொண்டான் அவளை. நவ்னீதாவை!!
“அது அப்படி இல்ல இம்லி.. பொதுவா நார்த் இந்தியன்ஸ் டிரஸ் ஃபிட்டிங் சவுத் இந்தியன் விட கொஞ்சம் வேற மாதிரி தானே இருக்கும். இப்ப இப்ப தான் இந்த மாதிரி நைட் ட்ரெஸ் சென்னை வந்ததுக்கு அப்புறம் நான் போடறேன். எங்க வீட்ல கூட இந்த மாதிரி எல்லாம் அலோவ் பண்ண மாட்டாங்க. அது அவருக்கும் தெரியும். அதனாலதான் அப்படி திட்டிட்டு போனார். மத்தபடி ஒன்னும் இல்லை” என்றவளின் உள்ளம் ‘இம்லி கூறுவதும் உண்மைதானே? அவன் ஏன் என்னிடம் மட்டும் அன்று அப்படி உரிமையாய் கடிந்து கொண்டான்!’ என்று யோசித்தது ஓரமாக..
ஏதோ ஒன்று.. இந்த எண்ணமே உனக்கு தேவையில்லாத ஒன்று!! அதுவும் காதல் என்று நீ நின்றால்.. உன் குடும்பத்தை பற்றி யோசித்தாயா? இன்னும் படிக்கும் உன் தம்பியை பற்றி யோசித்தாயா? வெளிநாட்டில் இன்றும் வயோதிகத்தை உடல் உபாதையை பாராமல் வேலை செய்யும் உன் தந்தையை பற்றி யோசித்தாயா? அதை எல்லாம் விட… உன்னை நம்பி படிக்க வேலைக்கென்று அனுப்பிருக்கும் உன் அன்னையை பற்றி யோசித்தாயா?
இதெல்லாம் பற்றி யோசித்தால்… காதல் எல்லாம் காத தூரம்
சென்றிடும்!!
இதுவே பெரும்பான்மையான மத்திய தர ஆண்கள் பெண்களின் எதார்த்த நிலை!!
பல சின்டரல்லா கனவுகள் பெண்களுக்கும்.. பல லவ்வர் பாய் கனவுகள் ஆண்களுக்கும் உண்டு!! ஆனால்.. வாழ்க்கையின் எனும் ஓட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விஷயங்கள் அணிவகுத்து முன்னே நிற்கும்போது..
இந்த சலனம் எல்லாம் சாம்பலாகி போகும்!!
வரும் ஈர்ப்பு எல்லாம் ஈர கனவுகளாய் மாறும்!!
பொங்கி வரும் காதல் எல்லாம் நுரை அடங்கிய பாலாய் வடிந்து விடும்!!
இதுவே பொதுப்படையான நிதர்சனம்!! உண்மை!! அப்படியும் அதை தாண்டி வரும் காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிந்தாலும்.. கல்யாணம் முடிந்து வரும் உறவு பிரச்சினைகளில் காதல் உணர்வு மறைந்து விடுகிறது பலருக்கு!!
அங்கே காதல் பெரும் கேள்விக்குறி???
சில விதிவிலக்குகளும் விதிவிலக்காய் உண்டு காதல் மிகுதி கொண்டு!!
அம்மாதிரியான மத்திய தர வாழ்வு தான் நவ்னீதாவுக்கும் விதுரனுக்கும்!! இருவருக்குள்ளும் தோன்றும் அந்த சிறு சலனம் கூட குடும்ப பொறுப்பு.. ஓடும் வேலை.. அதை தக்க வைக்க.. முன்னேறி செல்ல என்று ஓட்டம் எடுக்கும் நேரத்தில் காதல் என்கிற உணர்வு எல்லாம் யோசிக்க கூட முடியவில்லை அவர்களுக்கு!!
ஆனால் காதல் என்ற உணர்வு ஒரு இரக்கமில்லா பெரும் அரக்கன்!! அவனுக்கு..
உனக்கு குடும்ப பொறுப்பு இருக்கிறதா?
நீ பெரும் கோடீஸ்வரனா இல்லை இன்னும் அப்பா உழைப்பில் சாப்பிடும் விஐபி யா?
விடலை வயதா.. இல்லை முப்பதை தாண்டியவனா?
என்று எல்லாம் பார்ப்பதில்லை!!
உள்ளே நுழைந்து விட்டான் என்றால் நம்மை முழுவதுமாக மாற்றும் அரும் பெரும் கடமை அவனுதே!!
நவிக்கு இம்லி பேசியதில் இருந்து ஒரு சின்ன சலனம் விதுரன் மீது!! அது வெறும் பேச்சினால் மட்டுமல்ல!!
அவனின் கண்டும் கண்டுகொள்ளாத காட்டும் அக்கறை!! எந்த டாப்க்கியையும் தயக்கமின்றி அவனிடம் உரையாடும் அந்த நட்பும்!! அதைவிட இருவரின் குணங்ளும் ரசனைகளும் பலதிலும் ஒத்துப் போவது என்று!!
ஆனால்.. இவை யாவும் நல்ல நண்பனிடத்திலும் கிடைக்கும்! இது மட்டும் போதுமா என்ன காதலுக்கு?
‘ம்ஹூம்.. போதாது!’ என்று நிரூபித்தது இருவருக்கும் காதலும்!! காலமும்!
Super sis ❤️
As usual very interesting sis… waiting for your next episode 👍