மோக விழியால் தீண்டாதே அசுரா!!!
மோகம் : 1
அன்று மதிய நேரம் மும்பை மாநகரம் வழக்கத்திற்கு அதிகமாகவே ஜனக்கூட்ட நெரிசல்.
சூரியன் சுட்டு எரிக்கும் அந்த மதிய வெயில் நேரத்தில் நீல நிற மேகங்கள் மெல்ல மெல்ல தன் கருமை படர்ந்து கொண்டு இருக்க அங்கு தட்ப வெப்ப நிலை மெது மெதுவாக மாறிக் கொண்டு இருந்தது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஜோர்வென்று மழை சாரலாக வீசி கொட்டத் தொடங்கவும்…
“அட இன்னைக்கு வீடு போய் சேர்ந்த மாதிரி தான் என்று நெற்றியை தடவிக் கொண்டாள் நம் கதையின் நாயகி ஆதிரா.
சிகப்பு நிற நெட் அனார்கலி சுடிதாரில் ஒரு பக்கத் தோளில் துப்பட்டாவை போட்டுக் கொண்டு தன் இடது கையில் கட்டி இருந்த கருப்பு வார் வைத்த வாட்சில் மணியைப் பார்த்த போது வழக்கத்தை விட இன்று நேரம் விரைவாக ஓடிக் கொண்டு இருப்பதைக் கண்டவளுக்கு இதயம் தட தடவென்று அடித்துக் கொள்ள, என்ன செய்வது என்று தெரியாமல் புருவத்தை அழுத்தி தேய்த்தாள்.
“ஆரே ய்யார்…. இப்போ தான் சீசனேக் கிடையாதே… இப்போ எதுக்கு மழை பெய்யுது…? ச்சை… வீட்டுக்கு வேற போகணும் இல்லன்னா மஹா என்னை பிரிச்சு மேஞ்சுடும்…” என்று தனக்குளே வாய் விட்டு புலம்பிக் கொண்டு இருந்தாள். அவள் அழைக்கும் மஹா வேறு யாரும் அல்ல… அவளின் தாய் மஹாலட்சுமி தான்.
அவளின் புலம்பலை அருகில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த அவளின் தோழி வாகினி…” ஆரே… கியா கு வா…?” என்று கேட்டாள் அந்த வட நாட்டுப் பெண் அக்கறையாக. வாகினி அவளின் தோழி. நெருக்கம் என்று எல்லாம் சொல்லிவிட முடியாது. வாகினி தன் கல்லூரிப் படிப்பிற்காக அருணாச்சல் பிரதேசத்தில் இருந்து இங்கு வந்து தங்கிப் படிக்கிறாள். இருவரும் ஒரே பெஞ்ச் என்பதால் பழக்கம். மஹாலக்ஷ்மிக்கு தன் மகள் நட்பு வட்டாரங்களை உருவாக்கிக் கொள்வதோ அல்லது அவர்களோடு சேர்ந்து வெளியில் சுற்றுவதோ எதுவுமே பிடிக்காது. அது மாதிரி மகள் செய்து விட்டாள் என்ற செய்தி காதில் விழுந்தால் கூட அடிப் பின்னி எடுத்து விடுவார். அவருக்கு ஆதிராவின் மேல் எவ்வளவு பாசம் இருக்கிறதோ அதே அளவு கண்டிப்பும் இருக்கிறது. அதை அறிந்த ஆதிரா நேரம் ஆகிக் கொண்டு இருப்பதை கைக் கடிகாரத்தில் பார்த்தவள் பயமும் புலம்பலுமாக பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக வைத்தக்கண் வாங்காமலே சாலையை கவனித்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் எதிர்ப்பார்ப்பு இன்று பொய்த்து தான் போனது. நான்கு மணிக்கே வர வேண்டிய இரண்டு பஸ்களும் இன்று வரவே இல்லை. இதற்கு மேல் ஏழு மணிக்கு மேல் தான் பஸ் என்பதால் அவளுக்கு என்ன செய்வது என்று புரியாத பதட்டம்.
தெருவில் நிற்க வைத்த சிலை போல் அசையாமல் நின்றவளை கண்ட அவளின் தோழி வாகினி… “சப் டீக் ஹை நா…?” அவள் தோளில் தன் கரம் அழுந்தப் பற்ற கேட்டாள்.
“ ஆ… ஆன்… டீக்…கே வாகி” என்று சொன்னவளுக்கு உள்ளுக்குள் சற்று பயப்பந்து உருளத்தான் செய்தது. அவளுக்காக அவள் அம்மா அங்கு காத்துக் கொண்டு இருப்பாள் ஆனால் இவளோ இன்னும் இங்கு இருந்து கிளம்பக் கூட இல்லையே… மணிக் கடிகார முட்கள் நகர்ந்து கொண்டே இருந்ததை தவிர பஸ் எதுவும் வந்தது போல் தெரியவில்லை.
மஹாவிற்கு போனில் அழைத்து தகவல் சொல்லி விடலாம் என்று எண்ணி போனை எடுத்துப் பார்க்க அது ஏற்கனவே தவற விட்ட அழைப்புகள் என்று ஆறுக்கு மேல் வந்து இருந்தது. அதைப் பார்த்தவளுக்கு…” அய்யோ கடவுளே நீ தான் என்னை உயிரோட காப்பத்தனும். இன்னைக்கு அடி கன்பார்ம்” என்று எண்ணிக் கொண்டவள் சிறு நடுக்கத்துடனே பொத்தானை அழுத்த முனைய… உள்ளங்கையில் இருந்த வியர்வையில் அவள் வைத்து இருந்த ஆன்ட்ராயிட் கைப்பேசி நழுவி விழ…
ஒரு நொடியில் கையில் பிடித்து நெஞ்சோடு சேர்த்து அழுத்தினாள்.
உப் என்று ஒரு மூச்சை வெளியிட்டுக் கொண்டவளுக்கு அவள் போன் தப்பித்தவறி கீழே விழுந்து சிதறித் தேங்காய் போல் உடைந்து இருந்தால் அவ்ளோ தான் இனி போனை கனவில் கூட அவள் எதிர்ப் பார்க்க முடியாது.
இந்த போனை எவன் தான் கண்டு பிடிச்சானோ…? இருபத்தி நான்கு மணி நேரமும் அதில் என்ன தான் இருக்குன்னு பல நாள் திட்டு விழும் ஆதிராவுக்கு… இந்த போன் என்னைக்கு என் கையில் இருந்து உடையப்போகுதுன்னு மட்டும் பாரு என்பது தான் மஹாலக்ஷ்மியின் பெரும்பாலான வாசகமாக இருக்கும். அதை ஆதிரா அப்போது அலட்சியமாக கேட்டுக் கொண்டு கடந்து விடுவாள்.
இப்போது போன் உடைந்தால் தன் தாய் எப்படி நடந்து கொள்வார் என்பதை கற்பனை செய்து பார்த்தவளுக்கு அதில் தோன்றிய காட்சிகளை எண்ணும் போது இதழில் சிரிப்புக் கூட வந்தது. அதே சிரிப்புடன் டையல்
செய்ய… அது முதல் ரிங்கிலே எடுக்கப் பட… அப்போதில் இருந்து சரமாரி வசைகள்.
இவளைப் பேசக்கூட விடாமல் எதிர்ப்பக்கம் அவள் தாய் மஹா அர்ச்சனை செய்து கொண்டு இருக்க அதைக் கேட்ட இவளுக்குத் தான் எரிச்சலும் கோபமும் மூண்டது.
“வீட்டுக்கு வா இன்னைக்கு துடைப்பக்கட்டை பிய்யுதா இல்லையான்னு மட்டும் பாரு.” என்று திட்டி விட்டு… இவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கூட காதில் வாங்காமல் போனை எதிர் முனையில் கட் செய்துவிட்டார்.
அழைப்பு துண்டிக்கப்பட்டு ஒரு நிமிடம் கடந்த போதும் காதில் இருந்து போனை எடுக்காமல் இருந்தாள் பெண்ணவள்.
வீட்டிற்குப் போகவே அவளுக்கு இப்போது பயமாகத் தான் இருந்தது.
தன் நிலை என்னவென்று கூட சொல்ல அவகாசம் கொடுக்காத தாயின் மேல் அவளுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தாலும் இதற்கு மேல் பேருந்துக்கு காத்துக் கொண்டு இருப்பது வீண் என்று தோன்ற… பணம் போனாலும் பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டு ஆட்டோவிற்கு ஓலாவில் புக் செய்ய எத்தனிக்க…
அதற்குள் ஒரு ஆட்டோகாரன் வந்து… “சவாரி மேடம்…?” என்றான் அவள் முன் நிறுத்தவும்…
“ஹா… பைசா கித்னா ஹை…?”
“150 மேடம்… கஹான் ஜானா ஹை…?” ( எந்த இடத்துக்கு போகணும் மேடம்…?”)
“ மாதுங்கா” என்றாள் இவள். ( மும்பையில் அவள் வசிக்கும் இடம் )
“டீக் ஹை… மில் கர் ரஹான்னா.” ( ஏறுங்கள் )
தன் நண்பியிடம் திரும்பி… “மே ஜா ரஹா ஹூ… பாய்…” என்று கை காட்டிவிட்டு அவள் பச்சை மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட ஆட்டோவினுள் ஏறினாள்.
அந்த ஆட்டோக்காரன் அரை மணி நேரமாக அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து கொஞ்சம் தள்ளி தான் நின்று இருந்தான். கல்லூரிகள் முடியும் நேரம் என்பதால் சவாரிக்காக காத்து இருக்கிறான் போலும்.
மாதுங்காவிற்கு போக முன்நூறு குறையாமல் யாரும் வாங்க மாட்டார்கள்.
இந்த ஆட்டோ டிரைவர் குறைவாக வாங்கியதே அவளுக்கு ஆச்சரியம் தான்.
அதை அவரிடமும் கேட்கத் தான் செய்தாள்.
அதற்க்கு அவனின் பதில்…” என்னப் பண்ணுறது மேடம்…? நாள் முழுக்க சாவாரி இல்ல…வீட்டிற்கு வெறும் கையோடப் போக முடியாது இல்லையா…?
அதான் வேறு வழி இல்லாமல் ஏத்திக்கிட்டேன்.” என்று ஹிந்தியில் தான் பதில் சொன்னான்.
அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை. அவள் வீட்டை அடையவே ஒரு மணி நேரம் இருக்க… அதையும் வாட்ஸ்அப்பில் அவளின் அம்மாவிற்கு மெசேஜ் அனுப்பி விட்டு சும்மா உக்கார்ந்து இருக்கப் பிடிக்காமல் தன் பையில் வைத்து இருந்த புக்கை எடுத்து புரட்டிக் கொண்டு இருந்தாள் ஆதிரா.
சாரலாகப் பெய்துக் கொண்டு இருந்த மழை திடீர் என்று வேகம் எடுத்து அதிகம் பெய்துக் கொண்டு இருந்ததால் டிராபிக்கும் சற்று அதிகமாகத் தான் இருந்தது. பல்லாயிரக்கணக்கான வாகனக் கூட்டத்தின் நெரிசலில் அவள் போய்க் கொண்டு இருக்கிற ஆட்டோவும் ஊர்ந்து பயணித்துக் கொண்டு இருக்க…
அவள் எதிர்பாராத ஒன்றாக வேகமாக முகமூடி அணிந்த ஒருவன் அவள் இருந்த ஆட்டோவில் வந்து பின் சீட்டில் வந்து ஏற… அவளுக்கு திடுக்கென்று இருந்தது.
“ஹலோ… ஆப் க்ஹோன் ஹை…? ஆட்டோ சே பாகார் நிக்கலோ.” ( யாரு நீ… ஒழுங்கா ஆட்டோவை விட்டு இறங்கு. )
அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவன்… “வாயை மூடு ஆதிரா.” என்றான் தமிழ் மொழியில்.
அவளின் வாய் அவள் அறியாமலே பசை போல் படக்கென்று ஒட்டிக் கொண்டது. இடிப் போன்ற குரல். யாவரையும் ஒரு நொடி திகில் அடைய செய்யும் குரல்.
அவளுக்கு பேர் அதிர்ச்சி…யார் என்றே தெரியாத ஒருவன் ஆட்டோவில் ஏறி தன்னை மிரட்டுகிறான் அதுவும் அவனுக்கு எப்படி என் பெயர் தெரியும். என்று யோசனையுடன் புருவம் இடுங்க… அவன் முகத்தை திரும்பி உற்று நோக்கினாள்.
கருப்பு நிற முகமூடி அணிந்திருந்தான். அதில் “மாஸ்க் டெவில்…”
என்று பேஷன் வாரத்தைகள் வேறு இருந்தது. அதற்கு மேல் அவன் முகம் ஒன்று சுத்தமாக அவளுக்கு தெரியவில்லை.
மெல்ல தைரியத்தை வரவளைத்துக் கொண்டு “யார் நீ…?” என்றாள் ஆதிரா.
அவளின் மரியாதை அற்ற பேச்சில் இவனுக்கு நரம்புகள் புடைத்தது.
தன் முதுகில் சொருகி இருந்த துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றிப் பொட்டில் வைக்க…
யார் என்று கேட்ட ஒரேக் கேள்விக்காக துப்பாக்கியை நீட்டியவனைப் பார்த்தவளுக்கு பீதியாகி வீல் என்று கத்தத் தொடங்க…
அந்த சத்தத்தைக் கேட்ட ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்க்க எத்தனிக்க…
அவரின் பின் தலையில் புல்லட்டை இறக்கி இருந்தான் அந்த கயவன்.
அதிவேகமாக இறங்கிய புல்லட்டின் சத்தம் அணுகுண்டை போல சத்தம் எழுப்ப அதே வேகத்தில் பின் மண்டை தெறித்து அதில் இருந்து பீறீட்டு சிதறிய ரத்தத்துளிகள் அவள் முகத்தில் தெளித்தது.
“ஒரு வார்த்தை மரியாதை குறைஞ்சுது அடுத்த குறி நீதான்…ஜாக்கிரதை. “ என்று அவள் முடியை கொத்தாகப் பிடித்து அவன் முகத்திற்கு நேராக இழுத்து மிரட்டியவனைக் கண்டு உடல் நடுங்க… இனி சொல்ல மாட்டேன் மாட்டே… என்று பயத்தில் ஒப்புக்கொண்டாள்.
அதன் பின் தான் அவளை விட்டான் அந்த ராட்சசன்.
அவளின் சடை முடியை ஒரு நொடி பியித்ததுப் போல் இருந்தது அவன் பிடி.
அவள் ஆசையாக வளர்த்த கூந்தல். அவளின் தாயின் முடியை ஒப்பிடும் போது அவளுக்கு சிறிது அளவே. இருந்தாலும் முடியின் பராமரிப்பில் அவளைக் குறை சொல்ல முடியாது. அப்படிப் பட்ட முடி பாதி அவன் கையில் கொத்தாக போய் விட்டது போல் ஒரு பிரமை அவளுக்கு. பின் மண்டை வேறு யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்தது போல் ஒரு வலி.
அவள் முடிக்கு எந்த சேதாரமும் இல்லை என்ற போது அவள் அறியாத ஒரு நிம்மதி. பின் மண்டையை வேறு வலி போக அழுந்த தேய்த்துக் கொண்டாள்.
இதை எல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் அவன்.
இப்போது ஆட்டோ ட்ரைவர் கதைக்கு வருவோம். “அந்த ஆட்டோ ட்ரைவர் அவன் இறக்கிய புல்லேட்டில் இன்னுமா உயிரோடு இருப்பார். அவர் மறு நிமிடமே பரலோகத்தில் செட்டிலாக போய் விட… ஒரு சில வண்டிகள் ஆட்டோவை சூழ்ந்து மற்றவர் பார்வைப் படாமல் மறைத்துக் கொண்டு அரண் போல் நின்றது. சாய்ந்து கிடந்த சடலத்தை வேறு வண்டியிலும் மாற்றிவிட்டு இன்னொருவன் ஆட்டோவில் ஏறி எதுவும் நடக்காதது போலவே ஆட்டோ சென்று கொண்டு இருந்தது. இவை நடந்தவை எல்லாம் ஒரு ஐந்து நிமிடம் கூட இராது என்று தான் சொல்லவேண்டும்.
ஆதிரா பேயை நேரில் காணும் போது ஒரு அதிர்ச்சி வருமே. அந்த நிலையில் தான் இருந்தாள். முதன் முதலில் அவள் கண் முன் ஒரு கொலை.
யார் என்றே தெரியாத ஒரு ராட்சசன்… ஆம் அவன் ராட்சசனே தான்.
அவன் முகமூடி அணிந்து இருந்தாலும் அந்த வெள்ளையும் பழுப்பு நிறமும் கலந்த அவனின் அசுரவிழிகள் தான் அவளுக்கு தெரிந்தன.
அவள் பயத்தில் தன் கையில் வைத்து இருந்த பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஆட்டோ சீட்டின் மூலையில் போய் பதுங்கிக் கொண்டாள்.
அவளின் வெண்ணிற கால்கள் பயத்தில் உறைந்து போய் அசைக்க முடியாமல் மரம் போல் வேரோடிப் போய்விட்டன.
ஒரு கொலையை அசலட்டாக செய்து எந்தவித குற்றஉணர்வும் இல்லாமல் சாலையை நோக்கிக் தன் கூர்மையான லேசர் விழிகளைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தான் அவன்.
ஆதிராவின் நிலை தான் மிக மோசமாக இருக்கிறதே. அவனின் முகத்தைப் பார்க்கவே பயமாக இருக்க… தன் புத்தகப் பையின் மேல் முகத்தைப் பதித்துக் கொண்டு கண்ணை மூடி எல்லா சாமியையும் உடன் அழைத்துக்கொண்டு இருந்தாள்.
தான் இப்போது வீடு வேறு போய் சேர வேண்டுமே… இவன் தன்னை எங்கு அழைத்து செல்கிறான் என்று கூட தெரியாததால் அவளின் கற்பனைக் குதிரைகள் எங்கங்கோ கதை போய்க் கொண்டு இருந்தன.
முதலில் கைக்கால் உடைந்தாலும் பரவாயில்லை கீழே குதித்து விடலாமா…? என்று எண்ண… அதற்கு வாய்ப்பு இல்லை என்று உடனே புரிந்தது. அவளின் ஆட்டோவை சுற்றி நாளாப் பக்கமும் சூழ்ந்து கொண்டது கார்கள். அது அவனுடைய கார்களாகத் தான் இருக்க வேண்டும். பின்னே அந்த சடலத்தை வலது பக்கம் இருக்கும் காரில் தானே மாற்றினார்கள் அதையும் இவள் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள். அந்த யோசனையை கை விட்டவள்…
பேசாமல் கையில் வைத்து இருக்கும் பெப்பர் ஸ்ப்ரேவை அவன் முகத்தில் தெளித்தாள் என்ன…? என்று திடீர் யோசனை தோன்ற…
அவள் தெளிக்கும் வரை அவன் கை என்ன பூவா பறித்துக் கொண்டு இருக்கும். அப்படியே தெளித்தால் இவன் உன்னை சும்மா விடுவானா…?”
அடுத்த நிமிடமே உன் இரண்டு கண்ணையும் கையிலே தோண்டி எடுத்து உன் கையிலே கொடுத்து விடுவான் என்று மனம் அலறியது.
ஒரு வேளை இவர்கள் அந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்குமோ…? இப்போது தான் வயசுப் பெண்களை அதிகம் குறி வைத்து கடத்தப் படுவதாக அவ்வப்போது செய்திகள் வேறு வந்துக் கொண்டு தானே இருந்தது. அது இவர்கள் தான் போலும் என்று உறுதியே செய்து விட்டாள்.
அவள் கண்ணை மூடிக் கொண்டு எததோ முனுமுனுத்துக் கொண்டு இருக்க… அவனின் கூர்மையான செவிக்குள் ஓரளவு விழுந்தாலும் அதைக் கண்டு கொள்ளாதவன் போலவே அமர்ந்து இருந்தான்.
சிறிது நேரம் கழித்து தன் மயில் போன்ற மெல்லிய இமைகளைப் பிரித்தவள்… கண்டது அவனின் நெருக்கமான முகம் தான். அதுவும் ஒரு இன்ச் தான் இடை வெளி இருந்தது. அதைக் கண்டவளுக்கு பயத்தில் இதயம் ஒரு நொடி நின்று விட்டது போல் தான் இருந்தது. அவள் அவனை சத்தியமாக இவ்வளவு அருகில் எதிர்ப்பார்க்கவில்லை. மீண்டும் பயத்தில் கத்த வாய் எடுக்க… திறந்த வாய்க்குள் துப்பாக்கியை சொருகி இருந்தான் அவன்.
“கத்திக் கூப்பாடுப் போட்டன்னு வை… இது தான் உன் கடைசி கதறல். இங்கயே சமாதி ஆக்கிவிடுவேன்.” என்றவனின் மிரட்டல் சிம்மக் குரலில் கர்ஜித்தது.
“சத்தம் போடுவே…?” என்று மிரட்டும் அரக்கனைப் பார்த்தவள்…
ஊஹ்ஹும்…!!! என்று வேகமாக தலையை ஆட்டினாள்.
“குட் கேர்ள்.” என்றவன் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு இருந்த அவனின் ஆளிடம் கண்ணால் செய்கை செய்ய… அதை மறு நொடியே புரிந்து கொண்டவன்… கீழே வைத்து இருந்த பையை எடுத்துக் கொடுத்தான்.
அதைப் பெற்றுக் கொண்டவன் அதை அவசரமாக பிரித்து கையில் கிளவுஸை மாட்டிக்கொண்டு அவள் முகத்தில் இருந்த ரத்தத் துளிகளை தண்ணீர் வைத்து நீக்க கையை அவள் முன் கொண்டு போக…
அவள் நீரை அசிட் என்று நினைத்துக் கொண்டு முகத்தைப் பின்னால் இழுத்துக் கொண்டாள்.
அவளின் செயலில் இவனின் கண்கள் சிகப்பு ஏற… அதைப் பார்த்தவள் பயத்தின் ஊடே அவளையும் அறியாமல் முகத்தை முன் நோக்கிச் சென்றாள்.
பஞ்சில் தண்ணீர் விட்டு நனைத்து ரத்தம் படிந்த இடங்களில் துடைத்து விட… ஆசிட் என்று நினைத்து அவன் முதலில் வைத்த போதே பயப் பார்வை பார்க்க… பிறகு தான் தெரிந்தது சில்லென்ற நீர்த் துளிகள் என்று.
அவன் எதுவும் பேசாமல் காரியத்திலே கண்ணாக இருந்தான். தன் வேலையை சிறப்பாக முடித்தவன்…சொடக்கிட்டு… “இங்க பாரு… இங்கு நடந்த எல்லாம் இந்த ஆட்டோவில் இருந்து இறங்கினப் பிறகு மறந்திடணும் புரியுதா…? தேங்காயைத் திருவுவதைப் போல எதாவது தோண்டித் துருவரன்னு ஒரு செய்தி வந்தாப் போதும் கோழி கழுத்தை திருகுவது போல் செய்கை தான் செய்து காண்பித்தான், அது அவளுக்கு நன்றாகவேப் புரிந்தது.
“நான் மறந்துட்டேன்… நீங்க யாரு…? நான் இப்போ எங்க இருக்கேன்…?”
“ஓவராக நடிக்காத…ச்சீப் பே…” என்று கை அசைக்க…
இவளுக்கு கோபம் கனன்றது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாது அல்லவா… அமைதியாகவே இருந்தாள்.
“இறங்கு. உன் வீடு வந்து அரை மணி நேரம் ஆகுது.” என்றான் எரிச்சல் குரலில்.
அப்போது தான் தன் தெருவை எட்டிப் பார்த்தாள் ஆதிரா.
அது தன் வீட்டுத் தெரு என்ற போது அப்பாடா என்ற ஒரு ஆனந்தம் அவளுக்கு. வேகமாக இறங்கியவள் அவனைக் கண்டும் காணாமல் தன் வீட்டிற்குப் போய் சேர்ந்தாப் போதும் என்ற எண்ணத்தில் திட்டத்திட்ட ஓடினாள்.
இவனுக்கு எப்படி தன் வீடு தெரியும் என்பதையும் தன் பெயர் தெரியும் என்பதையும் அவள் மறந்த விடயம் அது.
யார் இவன்…?
“பாய்…” என்று சொன்ன அந்த ஆட்டோ ட்ரைவர் போல ஓட்டி வந்த அவன் கையாள் அழைத்தான்.
“ம்”
“பாய்… அது வந்து என்று தயங்கி…” வார்த்தை வெளிவராமல் நிற்க…
“என்ன…? என்னை போலீஸ் ரவுண்டுஅப் பண்ண நினைக்குதா…? எந்த நாயாலும் நான் மிதிக்குற காலடி மண்ணைக் கூட கண்டுப் பிடிக்க முடியாது. பொருள் பத்திரம்.” என்று மட்டும் எச்சரிக்கை செய்தான்.
“அது சேப் தான் பாய்…” என்றபின் அந்த ஆட்டோ அவர்கள் போக வேண்டிய திசையை நோக்கி பயணித்தது.
யார் இவன்….? இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
மோகம் தொடரும்…
Very interesting ud
Wow super sis ❤️
Wow super…
Wow interesting…