“ஹேய் நவி.. டிக்கெட் புக் பண்ண போறோம். உனக்கு சேர்த்து பண்ணிடவா… இல்லை…” என்று இழுத்த அந்தோணி என்ன சொல்ல விழைகிறான் என்று புரியாதவளா அவள்?
“ஏன் அந்தோணி… நாம போறது சென்னைக்கு தானே? இல்லை நீ வேற ஏதாவது ஊருக்கு போகப் போறியா?” என்று நவி அவனை ஆழ்ந்து பார்த்துக் கேட்க “ஹி.. ஹி.. ஹி.. இல்ல நவி..” என்ற அசட்டு சிரிப்போடு “இல்லை நீ உன் பிரண்டு… பிரண்டு தானே அவன்?” என்று அவன் தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் வண்ணம் கேட்க.. ஒரு நிமிடம் உள்ளம் தடுமாறினாலும் அடுத்த நிமிடம் அழுத்தமாக “ப்ரண்டு தான்!!” என்றாள் நவி.
அவளின் வார்த்தைகளில் கோபம் கொப்பளிப்பதை உணர்ந்த அந்தோணி “ஓகே..ஓகே.. கூல்! கூல்!! ஜஸ்டி க்ளாரிபிகேஷன். அதான்…” என்றவன் “சரி உனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணிடுறேன்” என்றவனிடம் “ஸ்டேஷன் போகும் போது என்கிட்ட பணம் வாங்கிக்கோ டிக்கெட்டுக்கு” என்றாள்.
அந்தோணி இவளது பிரிவை சேர்ந்தவன் மற்ற பிரிவுகளில் இருந்தும் சென்னையிலிருந்து ட்ரெய்னிங் காக வந்திருந்த நபர்கள் மொத்தமாக டிக்கெட் பதிவு செய்து கொள்ளப்போவதாக பேசிக் கொண்டே செல்ல.. அங்கே நின்றிருந்த இம்லி அப்போது அங்கு வந்த விதுரனிடம் “ஏன் நீங்க போகும் போது உங்க கூட என் ஸ்வீட் ஹார்ட்டை அழைச்சிட்டு போகக்கூடாது? “என்று கேட்டாள்.
அதே கேள்விதான் நவியின் மனதிற்குள்ளும்!! ‘அழைத்துக் கொண்டு போவாயா?’ என்று கண்கள் அவனிடம் கேட்க.. அவனும் அழுத்தமாக அவளைப்பார்த்து பின் இம்லி பக்கம் திரும்பியவன் “நான் எதுக்குமா? அதுதான் அவளை கூட்டிட்டு வந்த மாதிரி பத்திரமா கூட்டிட்டு போக அவ பிரண்டு இருக்கானே?!! இந்த பிரெண்டு எல்லாம் வேணாம்!! அதோட கேர்ள்ஸ் எல்லாம் கூட கூட்டிட்டு போறது ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ்.. காம்பரமைஸ்!! நமக்கு செட் ஆகவே ஆகாது!! ஃப்ரீயா போகணும்” என்று கூறி சிரித்தவனை கண்டு அவ்வளவு வலித்தது பெண்ணவளுக்கு!!
“நான் உனக்கு கமிட்மெண்ட்டா?” என்று அவள் பார்க்க.. அவனும் “நான் உனக்கு வெறும் பிரண்டா?” என்று பார்த்தான். அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் சென்றுவிட்டாள் நவி.
என்னை ப்ரண்டு மட்டும்தான் என்று சொன்னாள் அன்று அப்போது கோபப்பட்டவன், இன்று எந்த மனநிலையில் ஜூகு பீச்சில் அவளை நெருங்கி நின்றான் என்று அவனுக்கும் தெரியவில்லை.
அக்காஃபியை ரசிக்கும் விதமான மனநிலை தான் அவ்விருவருக்கும் அப்பொழுது!! அதையும் தாண்டி என்ன? என்று நினைக்கவில்லை!!
ஆனால் அன்றிரவு நவி… விதுரன், நவ்னீதா, இம்லி மூவரும் சேர்ந்து ‘கேட் வே ஆப் இந்தியா’ அருகிலும் சற்று தள்ளி இருந்த தாஜ் ஹோட்டலின் எதிரிலும் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ விதுரனுடன் அருகில் நின்று எடுக்க ஒரு தடை… அதை உடை என்று மனது கூறினாலும், அறிவு மீண்டும் அதற்குத் தடா போட, நடுவில் இம்லியை நிறுத்தி இருவரும் இரு பக்கம் நின்று கொண்டு எடுத்த போட்டோதான் அது! !
மொத்தமாக குழுவாக நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாலும்… இது அவர்கள் மூவரும் எடுத்துக் கொண்டது தனி போட்டோ. சம்திங் ஸ்பெஷல் தான் அவர்களுக்கு. குறிப்பாக நவிக்கு!!
ஒருவழியாக ட்ரைனிங் பீரியட் முடிந்தது. பகல் பொழுது செண்ட் ஆஃப் செலிப்ரேஷன் அது இது என்று நேரம் சென்றது… மறுநாளில் இருந்து அனைவரும் தங்கள் உறைவிடத்திற்கு திரும்பி பறந்து செல்லும் வேடந்தாங்கல் பறவைகளாய் அனைவரும் சந்தோஷம் கலந்த வருத்தத்துடன் தங்கள் உடைமைகளை பேக் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சிவாங்கி அழகிய பிள்ளையார் அதுவும் அன்று நவி ரசித்த சித்தி விநாயகரை அவளுக்கு பரிசாய் கொடுத்தாள்.
“வாவ்… நிச்சயமா இப்படி ஒரு அழகான கிஃப்ட்டை உன் கிட்டே இருந்து எதிர்பார்க்கவே இல்ல டார்லிங்!! ஐ அம் சோ ஹாப்பி” என்று இம்லியை அணைத்துக்கொண்டாள் நவி.
அதேபோல் விதுரனுக்கும் ஒன்றை பரிசளித்தாள். ஆனால் அதில் என்ன இருந்தது என்று நவி கேட்கவில்லை. விதுரனும் அவளுக்கு நன்றி சொல்ல…
“ஓகே நான் கிளம்புறேன் நவி டியர். நான் லோக்கல். அதனால நைட்டு என்ன இங்க ஸ்டே பண்ண விட மாட்டாங்க. உனக்கு மார்னிங் டிரெயின் தானே நவி? ஹாப்பி ஜெர்னி!! பத்திரமா போயிட்டு வா!!” என்று மீண்டும் அவள் அணைத்துக்கொள்ள…
கள்ளம் கபடம் அற்ற.. எதையும் எதிர்பார்க்காத அன்பை மட்டுமே கொடுக்கும் அந்த மராத்திய பெண்ணின் அன்பில் பூரித்து தானும் அவளை இறுக்க அணைத்து விடை கொடுத்தாள்.
“திரும்ப நாமா பார்ப்போமா தெரியாது இம்லி. கீப் இன் காண்டாக்ட் இம்லி!!” என்று கண்கள் கலங்க பிரியாவிடை கொடுத்தாள் நவி.
இம்லி கிளம்ப.. அவ்விடத்தில் விதுரனும் நின்று அவளுக்கு கையசைத்து விடை கொடுக்க.. திரும்பி விதுரனை பார்த்தவள் ஒன்றும் கூறாமல் தன் அறையை நோக்கி சென்றவள் பின்னே சென்றான். மீண்டும் அதில் லிஃப்ட்!!
எதிர் எதிராய் நின்றாலும் இருவரிடமும் ஏதோ ஒரு தயக்கம்!! அதையும் மீறிய மெல்லிய மயக்கம்!! தேனை உண்ட வண்டினை போல கிறக்கம்!!
ஆனாலும் அவன் மனதில் அன்று அவள் சொல்லியே ஜஸ்ட் ஃப்ரென்ட் அரித்துக் கொண்டிருக்க.. மெல்ல அவளை நெருங்கியவன் “நான் வெறும் ஜஸ்ட் பிரண்டா உனக்கு?” என்றான்.
இருவருக்குள்ளும் மெல்லிய இழையோடிய அந்த காதல் வலைகள் இன்னும் உறுதிப் படுத்திக் கொள்ளாத நிலையில் அவனின் இந்த கேள்வி வெறும் அபத்தமாகத்தான் பட்டது அவளுக்கு.
“பின்னே ட்ரெயின்ல கூட என்னை கூட்டிட்டு போக மாட்டேனுனிங்க..அதுக்கு ஆயிரம் கமிட்மெண்ட் காம்ப்ரமைஸ் பண்ணனும்னு பேச்சு வேற” என்று அவளும் தன் வலிகளை அவனிடம் கூற. ..
“நான் என்ன கேட்கிறேன்.. நீ என்ன பதில் சொல்ற? ” என்று குரல் உயர்ந்தது விதுரனுக்கு.
“நான் கேட்டதுக்கு நீங்களும் பதில் சொல்லல” என்று அவளும் அவனை முறைத்துக் கொண்டு நிற்க அவர்கள் தளம் வந்துவிட…
சட்டென்று ஒரு கூட்டம் இவர்கள் வெளிவந்ததும் வளைத்து கொண்டது. “ஏய் விதுரா… உன்ன தான் தேடிட்டு இருந்தோம். நைட் பார்ட்டி நம்ம பார்ட்டி ரூம்ல தான் மறக்காம வந்துடு” என்றவர்கள் அங்கேயே நின்றிருந்த நவியை பார்த்து “சாரி நவி இட்ஸ் ஒன்லி பார் பாய்ஸ். நோட் பார் கேர்ள்ஸ்!!” என்று சிரித்துக்கொண்டே சென்று விட..
“போங்கடா!!” என்று இவளும் தன் அறைக்கு செல்ல திரும்பியவள் சட்டென்று ஞாபகம் வர விரதனை பார்த்து “நீங்க ட்ரிங்ஸ் எடுப்பீங்களா?” என்று கேட்டாள்.
“என்ன செய்யட்டும்? எடுக்கவா? ” என்று கேட்டான்.
அவள் எடுக்க வேண்டாம் என்றால் கண்டிப்பாக எடுக்க மாட்டான் அதேநேரம் அவளுக்கும் அவனிடம் எடுக்க வேண்டாம் என்று கூறி உரிமை எடுக்க பிடிக்கவில்லை. “யுவர் விஷ்!!” என்று விட்டு மனதில் எழுந்த படபடப்பை அடக்கியவாறு அவள் வேகமாக சென்றாள் அறையை நோக்கி…
“கொழுப்பெடுத்தவ!!! ஏதாவது ஒன்னு சொல்றாளா பாரு? யுவர் விஷ்ஷாம்!! யுவர் விஷ்!! நான் யாராம் அவளுக்கு? ஜஸ்ட் பிரெண்ட் தானே!! அப்போ அப்படித்தான் சொல்லுவா.. இதுக்காகவே எடுக்குறேன்டி!!” என்று நினைத்தவன், வீம்புக்கு என்றே பார்ட்டியில் கலந்து அதில் ஐக்கியமானான்.
அறைக்கு சென்ற நவிக்கும் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். எப்பொழுதும் அருகில் சலசலத்துக் கொண்டிருக்கும் இம்லி இல்லாதது.. கூடவே பார்ட்டி நடக்கிற சத்தம் இவளுக்கும் லேசாக கேட்க.. ஒருவேளை அவனும் எடுத்து இருப்பானோ? அந்த நினைவே அவளை தூங்கவிடாமல் இம்சை செய்ய.. எழுந்தவள் வேகமாக பார்ட்டி நடக்கும் மூன்றாம் தளத்திற்கு சென்று பார்த்தாள்.
கதவு உள்ளே தாள் போட்டு இருக்க சத்தம் மட்டுமே கேட்டு கொண்டிருந்தது. இப்பொழுது போய் என்ன என்று கேட்டால்.. அவ்வளவு தான்!! மொத்த கூட்டமும் உள்ள தான் இருக்கும். ஏற்கனவே மெல்லுகின்ற வாய்க்கு நாமலே அவல் கொடுத்தது போல ஆகும். வேண்டாம் என்று திரும்பத் தன் அறைக்குச் செல்ல அவளுக்கு முடியவில்லை அப்படியே மெதுவாக படிகளில் ஏறி நான்காம் தளத்தில் உள்ள மொட்டை மாடிக்கு வந்து விட்டாள்.
எப்பொழுதும் அவளுக்கு பிடித்த இடம்!! இன்றும் அதே மொட்டைமாடி சிலுசிலுவென காற்று… இரவு வானத்தில் உலா வரும் நிலா. ..
விதுரனும் அவள் மேலிருந்த வீம்புக்காக தான் உள்ளே சென்றது. கூடவே… இரண்டு ரவுண்டு உள்ளேயும் போய்விட்டது. அடுத்து கையில் வைத்துக் கொண்டவன் தயக்கத்தோடு மற்றவர்களை பார்த்தவாரே அமர்ந்திருந்தான்.
அப்போது அவன் அருகில் வந்த அமர்ந்த கணேஷ் “என்ன யா.. பிரிவுத் துயரா? எப்பொழுதும் வர மாட்டீங்க இன்னைக்கு உள்ள தள்ளிக்கொண்டே இருக்கீங்களே!!” என்றான்.
“புரியாத மாதிரி கேட்க வேண்டியது எல்லாம் புரிந்திருந்தாலும்…” என்று அவன் முதுகில் தட்டியவன் “அதான் உங்க கேர்ள் பிரண்டை பிரிய போவது பற்றி… ” என்று சிரிப்புடன் கணேஷ்!!
“யோவ் போயா.. எதாவது சொல்லிட போறேன்..!!” என்று கடித்து குதறாத குறையாக விதுரன்!!
“அப்போ.. ஒன்னும் இல்லையா? ஒன்னுமே இல்லையா?” என்று கேட்டான் கணேஷ்.
“இல்ல.. இல்ல.. போயா!!” என்று அவனை விரட்டினான்.
“அப்போ சூப்பர்… நம்ம டீம்ல நிறைய பேர் அந்த பொண்ணுக்கு ரூட் விடுறாங்க.. நீங்க பாய் ஃப்ரண்டா இருக்குமோ? உங்களுக்குள் ஏதாவது இருக்குமோ? என்று தான் தள்ளி இருக்கானுங்க. இந்த விஷயத்தை மட்டும் சொன்னேன்…. அவ்வளவுதான்..” என்றவனை கொலைவெறியோடு பார்த்த விதுரன் கையிலிருந்த குவளையிலுள்ள சரக்கை தொண்டையில் சரித்தான்.
“சரி சரி கிளம்பு.. பக்கத்துல உட்கார்ந்து அறுக்காத..” என்றான் கடுப்புடன் விதுரன்.
“ஓகே கேரி ஆன்… நாளைக்கு காலைல மொத வேலை மத்தவங்க அப்ளிகேஷன் போறதுக்கு முன்னாடி நாம போட்டு விடுவோம்” என்று கூறிக்கொண்டே சென்றவனை கையை பிடித்து நிறுத்தியவன் “என்ன அப்ளிகேஷன் போட போற? “என்று கேட்க..
“வேற எதுக்கு நவிகிட்ட ஒரு லவ் அப்பிளிகேஷன் தான்!!” என்று சிரித்தவனை பொறடியில் இரண்டு கொடுக்க வேண்டும் போல துறுதுறுத்த கையை அடக்கி கொண்டான் விதுரன்.
‘ஆனால் அவ தான் ஒன்றும் இல்லை என்று கூறி விட்டாளே.. பின் எப்படி அவளை… ச்சே.. எல்லாம் இவளால் வந்தது. எல்லார்கிட்டயும் என்னை ஜஸ்ட் பிரண்ட் மட்டும் சொல்லிட்டா.. இப்போ நானும் வேற சொல்லி வச்சு தொலைச்சுட்டேன்.. இனி நானும் அதையே மெயின்டெண் பண்ண வேண்டியதா இருக்கும். இப்ப பாக்குற ஒவ்வொருவனும் அவளுக்கு ப்ரொபோஸ் பண்ண போறேன் கிளம்பிட்டா….?? ஓ ஷிட்.. அவளை!!” என்று நினைத்த மாத்திரத்திலேயே அவ்வளவு ஆத்திரம் பொங்கியது.
அதுவும் கணேஷ் கையிலிருந்த சரக்கையும் வாங்கிய தொண்டையில் சரித்தவன் “நான் கிளம்புறேன்” என்று அந்த பார்ட்டி அறையை விட்டு வேகமாக வெளியில் வந்தவன் லிஃப்ட் நோக்கி செல்ல.. படியை பார்த்த அவனுக்கு என்ன தோன்றியதோ படபடவென்று படிக்கட்டுகளில் ஏறி மொட்டை மாடிக்கு வந்தான். அவனது உள்ளுணர்வு பொய்க்காமல் நிலவைப் பார்த்து நின்றவளை நோக்கி சென்றான். அவனது காலடி தடத்தில் அவன் வந்துவிட்டதை உணர்ந்தவள் சட்டென அவனை திரும்பி பார்த்தாள்.
எனக்காக நின்றுக் கொண்டிருப்பாளோ
என்று ஆசை எழ.. அவள் நிற்பதை பார்த்ததும் அவள் மேல் இருந்த கோபம் இன்னும் தீராதததால் அவளை நிற்பதை கண்டும் கொள்ளாமல் கடந்து செல்ல முற்படும் போது அவளின் கைகள் அவனின் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தின.
இருந்தாலும் அவளின் முகத்தை பார்க்காமல் வேறொங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் விதுரன். சில வினாடிகளில் அவன் கையை பிடித்திருந்த அவளின் கைகள் விடுபட்டதும் அவன் திரும்பி நடக்கும் முயலும் போது அவளின் கைகள் பின்பக்கமாக அவனின் சட்டை பிடித்து இழுக்க.. அவளை நோக்கி பின்பக்கமாக கால்களை எடுத்து வைத்தான்.
கண் இமைக்கும் நேரத்தில் மீண்டும் அவளின் உதட்டை ஆவேசமாக உறுஞ்சினான்.. காற்றுக்கு கூட இடம் தராமல்!!
Super sis