ATM Tamil Romantic Novels

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோகம் : 4

அடுத்த நாள் காலை கண் விழித்த ஆதிராவுக்கு பொழுது கொஞ்சம் இன்பமாகவே விடிந்தது.

 அகரன் வீட்டிற்கு வரப் போகிறான் என்ற எண்ணமே அவளை சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கடித்து இருக்க, ஆனால் உடல் என்னவோ வழக்கத்திற்கு மாறாக அசதியாக இருக்கவும்… என்ன இது…? இவ்ளோ சோர்வாக இருக்கு…? என்று கையை தூக்கி நெட்டி முறித்துக் கொண்டவள் போர்வையை விலக்கிவிட்டு எழுந்து வர, அப்போது தான் ஆதிராவின் அறைக்குள் வந்த மஹா… எவ்ளோ நேரம் டி தூங்குவ…? மணி இப்போவே ஏழு ஆகப்போகுது என்றார்.

 

அதைக் கேட்ட ஆதிரா… “என்ன…? அவ்ளோ நேரமாகவா தூங்கினேன்.” என்று நம்ப முடியாமல் தாயிடமே கேட்டாள்.

 

“இருக்கட்டும் ஆதி… நேத்து வாசலில் வேறு மயக்கம் போட்டு விழுந்து கிடந்தியா…? உடம்பு சரி இல்லைன்னு நானும் உன்னை எழுப்பலை… உன்ன கடையில  சமையல் வேலைன்னு  ரொம்ப வாங்குறனா ஆதி…?” என்று கேட்டவரின் குரலில் வேதனை. நாள் முழுக்க படிப்பையும் பார்த்துக் கொண்டு வீட்டு வேலையையும் சேர்த்து கடையில் உள்ள பல வேலைகளையும் அவள் தான் பெரும்பாலும் பார்த்துக் கொள்கிறாள். தாயின் வயதின் காரணமாக முன்னை போல எல்லாம் செய்ய முடிவதில்லை என்பதை அவள் உணர்ந்ததால் அவருக்கு ஆதரவாக அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வாள் ஆதிரா.

 

“என்னம்மா…? இப்படி எல்லாம் பேசுற…? அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா… பார்சல் வாங்குறதுக்கு பதிலாக அங்கேயே சாப்பிட்டு வந்திருக்கலாம். அதை செய்யாமல் பாதி வழியில் வரும் போதே  பசியில் கண்கள் இருட்டிட்டு வந்துருக்கும் என்னை அறியாமல் மயக்கம் போட்டு விழுந்துட்டேன் போல…” என்று அவரை சமாதானப்படுத்தும் முயற்சியாக பேசியவள் இப்போது தான் நியாபகம் வந்தவளாக… “ம்மா நான் உங்கக்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லனும்…?”

 

“என்ன…?” என்றார் மஹா.

 

அது… அந்த கொலை மட்டும் நடக்கலைம்மா…? இன்னொன்றும் நடந்தது என்று சொல்ல வருவதற்குள், நேற்று இவர்களிடம்  பிறந்த நாளுக்கு ஸ்வீட் ஆர்டர் கொடுத்தவர்கள் வந்து விட, “ஆதி, நேத்து செஞ்ச ஜாமுன் ரெண்டை எடுத்து சாமிக்கு வை. சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா. நீ சொல்ற கதையை பற்றி அப்புறம் பேசலாம். என்ன சரியா…? என்று வேகமாக ஆர்டர் சரி பார்க்க சென்றுவிட, குளிக்காமல் பூஜை அறைக்குள் செல்ல என்னவோ மாதிரி இருக்க… குலாப் ஜாமுனை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து சமையல் அறைக்குள் வைத்துவிட்டு குளிக்க சென்றுவிட்டாள்.

 

குளித்து முடித்து உடை மாற்றிவிட்டு வெளியே வந்த போது மஹா சற்று பரபரப்புடன் அங்கும் இங்கும் தேடிப் புரட்டிக் கொண்டு  இருக்க… அதை கவனித்து விட்டு அருகில் சென்றவள்… “என்ன மஹா ஆச்சு…?” என்றாள்.

 

“பிளாஸ்டிக் ஸ்பூன் எல்லாம் எங்க வச்சேன்னு தெரியல ஆதி…. காஸ்டமர் வேறு வெளியில் வெயிட் பண்ணுறாங்க. என்றதும்… இதுக்கு எதுக்கு சுடு தண்ணியை காலில் ஊற்றிக் கொண்டவ போல நிக்கிறம்மா… அது வெள்ளை பீரோவில் பாக்கு மாற தட்டுக்குப் பின்னாடி இருக்கு…?” என்றதும் நொடியில்  சிட்டாக பறந்துப் போய் எடுத்து அவர்கள் கையில் கொடுத்தப் பின் தான் மஹாவிற்கு மூச்சே வந்தது.

 

“ஏன்ம்மா இப்படி இருக்க…? ஸ்பூன் தானே அதற்கு போய் இவ்ளோ டென்ஷன் ஆகுறீயே…?” என்று சலித்துக் கொண்டாள்.

 

“அப்படி இல்ல டி… கஸ்டமர் நமக்கு கடவுள் மாதிரின்னு வெறும்  வாயில் வடை சுட்டால் மட்டும் போதாது. அவங்களை தெய்வமாக மதித்து சிறு குறை கூட இல்லாமல் ஆர்டர்ஸ் பண்ணிக் கொடுக்கனும் அதுக்கு தான் இந்த பதட்டம்.” என்றவர்… “நீ எல்லாம் என்னதான்  ஹாஸ்பிட்டாலிட்டி மானேஜ்மண்ட் படிச்சியோ…?” என்று சொல்லவும்… முணுக்கென்று வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு… “போம்மா…” என்றாள் ஆதிரா.

 

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் இடைவெளியில் ஒரு கார் அவர்களின் வாசல் முன் வந்து நின்றது. வந்து இறங்கியது என்னவோ அகரன் தான். அவனை அவர்கள் இருவரும் ஏற்கனவே எதிர்ப்பார்த்து இருந்ததால் சந்தோஷமாகவே வரவேற்றனர். உள்ளே போன ஆதிரா, ஆர்த்தி தாம்பூலம் கரைத்து எடுத்து வர, அவனுக்கு ஆலம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளே போகச் சொன்னார் மஹா.

 

“எப்படி இருக்க ஆதிரா…? என்றான் அகரன். அவளை பார்வையாலே வருடினான். இத்தனை நாட்கள் அவளை பிரிந்து இருந்ததில் மீண்டும் சந்திக்க செல்ல வேண்டும் என்ற அவா. ஒரு வழியாக அவன் தேவதையை கண்டுவிட்டான். உண்மையிலே அவள் தேவதை தான். அவளை ரசித்துக் கொண்டே நின்று இருந்தான்.  

 

அவன் பார்வை பேசும் மொழிகள் பெண்ணவளுக்கு புரிய, லேசாக தலையை கவிழ்ந்துக் கொண்டு “ம்ம்…  நீ…?” என்றாள்.

 

“எனக்கென்ன…? நீங்க ரெண்டுப் பேரும் என் கூட இல்லாமல்  என்னால அந்த நாளு வருஷம் லண்டனில் இருக்கவே முடியல… அதான் எப்படியோ நேரம் கிடைக்கும் போது உங்களைப் பார்க்க வந்துவிட்டேன்.” என்றான் குதுகலமாக.

 

“சரி நான் போய் உனக்கு காபி எடுத்திட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு நகரப்பார்த்தவளை… “நில்லு. அதெல்லாம் வேணாம் இங்க வந்து உக்காரு.” என்று தனக்கு அருகில் இருக்கும் இருக்கையைக் காட்ட, அவள் அமர மறுத்துவிட்டாள்.

 

“நீ இன்னும் மாறவே இல்லையா…?  அதே பழைய  கலச்சாரப் பஞ்சாங்கமாக தான் இருக்கியா…?”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… எதுனாலும் நீ அங்க இருந்தே பேசு என் காது கேட்கும்.” என்றாள்.

 

ஓ ஹாட்… போதும். விடும்மா தாயே. போனில் கூட அதிகம் பேசுறது இல்ல… நடந்ததை மட்டும் ஒரு வரி செய்தியாக சொல்லுறன்னு ஏற்கனவே எனக்கு உன் மேல் ஒரு கடுப்பு, நேரில் வந்துப் பார்த்தால் அதுக்கு மேல இருக்கும் போல இருக்கு. என்ன இது…?” என்று சலித்துக் கொண்டான் அகரன்.

 

அவர்களின் சம்பாசனைகளை கேட்டுக் கொண்டே உள்ளே வந்த மஹா… “கல்யாணம் ஆனா பிறகு எல்லாம் பேசுவா…? இப்போ அவளை கொஞ்சம் ப்ரீ ஆக விடு.” என்று சொன்னதும்…

 

“எல்லாத்துக்கும் நீ தான்ம்மா காரணம்…” என்று மஹாவை குற்றம் சாட்ட…

 

“உங்க ரெண்டுப் பேருக்கும் திருமணம் முடியும் வரை இப்படித் தான் இருக்கனும்… ஏதாவது கள்ள வேலைப் பார்த்த, காலை உடைச்சு அடுப்பில் போட்டுவிடுவேன். ஜாக்கிரதை.” என்று மிரட்டினார்.

 

“ஓகே ஓகே….” என்று சரண் அடைந்தவன்… ஆதிராவை நோக்கி… “நீ

அமேசான் காட்டு அறிய வகை மூலிகை போல நீ ஒரு இனம்.உன்னிடம் இதை எல்லாம் எதிர்ப்பார்த்தது என் தவறு தான்” என்று கிண்டலாக சொல்லிவிட்டு, “எனக்கு காபி எல்லாம் வேணாம்… ஜூஸ் எதாவது எடுத்திட்டு வா.” என்றான் அகரன்.

 

சமையல் அறைக்குள் வந்தவள் ஜூஸ் பிழிய ஆரஞ்சை குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்க… பட்டென்று ஒரு ஐடியா அவள் மனதில் உதிர்த்தது.

 

அவசரமாக ஆரஞ்சை பிழிந்து விட்டு அவனிடம் தாய் மூலம் கொடுத்ததும் திரும்ப வந்தவள் அடுப்பில் பாலை  வைத்து அது கொதித்த பின் கஸ்டர்டு பௌடரைக் கலந்து சில பழங்களையும் துண்டாக நறுக்கிப் போட்டவள் கொஞ்சம் கெட்டியாக கிளறி பாதம்களை தூவி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு வந்தாள்.

 

மஹாவும் அகரனும் குசுகுசுவென்று எதோ ரகசியம் பேசிக் கொண்டிருக்க… ஆதிரா வரும் அரவம் கேட்டு  அந்த பேச்சு அப்படியே பாதியில் நிறுத்தி வைக்குமாறு மஹா ஜாடைக் காட்டவும்…

 

“என்ன நான் வந்ததும் பேச்சை நிப்பாட்டிட்டீங்க.?” என கேட்டுக் கொண்டே கையை டவலில் துடைத்துவிட்டு சோபாவின் அருகில் வந்தாள்.

 

“அவள் காதில் ஏதும் விழுந்து இருக்குமோ…?” என ஒரு நொடி அகரன் பதறிவிட்டான். 

 

“ஒன்னும் இல்ல ஆதிரா…  இப்போவே மாப்பிள்ளைக்கு உன்னை கல்யணம் கட்டி லண்டனுக்கு பறந்து செல்ல வேண்டுமாம்… உன்னை சம்மதிக்க வைக்க சொல்லுறான்…” என்று மஹா விளக்கியதும்…

 

“இல்ல… இல்ல… இன்னும் நான் இப்போ தான் படிப்பை முடிக்கப் போறேன் இன்னும் மேலே படிக்கனும்… அதோட நான் வேலை ரெண்டு வருஷம் போவேன் அதன் பிறகு  தான் கல்யாணம்.” என்றாள் அவசரமாக.

 

“கல்யாணத்துக்குப் பிறகு படிக்கலாம் ஆதிரா… லண்டனில் வேலைக்கும் போலாம்… இதுக்காகவா இன்னும் இரண்டு மூன்று  வருஷம் காத்திருக்க வேண்டும்.” என்றான் ஆயாசமாக. அவனுக்கு இப்போதே இந்த பேரழகியை தன் மடிக்குள் பொத்தி வைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

 

“என் முடிவு இது தான்.” என்று தீர்மானமாக சொன்னவள்… எழுந்து அறைக்குள் செல்ல முனைய… அவளை தடுத்து நிறுத்தியது அகரனின் குரல்.

 

“சரி உன் விருப்பம். நான் உனக்காக இன்னும் மூன்று வருடம் காத்து இருப்பதில் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… கொஞ்சம் என்னிடம் காதலி போல நடந்துக்கலாமில்ல… நீ என்கிட்டே எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கிட்டாலும் அதில் ஒரு எச்சரிக்கை விலகல் எல்லாம் இருக்கு. நீ மாலை ஏழு மணிக்கு அனுப்புற ஒற்றை வரி செய்திகாக நாள் முழுக்க காத்திருப்பேன் ஆதிரா… ஆனால் உனக்குள் அதே தாக்கம் இருக்குதான்னு எனக்கு தெரியனும்…? மத்த காதலர்கள் போல எனக்கும் பீச் பார்க் என்று சுத்த வேண்டும் என்று எனக்கும் ஆசை இருக்காதா…?” என்று கேட்டப் போது அவளிடம் பதில் இல்லை.

 

மஹாவுக்கும் அவர்களுக்கு இடையில் புகுந்து பேச முடியாது என்பதால் அவரும் அமைதியாகவே நின்று இருந்தார். காக்கை தன் குஞ்சை பொத்தி பொத்தி பாதுகாக்குமே அது போல தான் மஹா, ஆண் துணை இல்லாத வீடு, அகரனும் படிப்பிற்காக ஹாஸ்டல் அதன் பின் வேலை லண்டன் என பறந்து விட, கண்ட ஓநாய்களின் பார்வையும் வக்கிரமும் அவள் மீது பதிந்துவிடக் கூடாது என்பதாலே என்னவோ  ஆதிராவை வயதுக்கு வந்தப்பின்  அதிக கண்டிப்புடன் வளர்த்தார். அதன் விளைவு தான் இது என்று புரிந்தது. அகரனனின் வயதுக்குரிய ஏக்கமும் புரிந்து தான் இருந்தது.    

 

“நீ ஆதிராவை பீச்சுக்கு கூட்டிட்டுப் போ. ரெண்டு பேரும் காலை டிபன் முடிந்ததும் கிளம்புங்க. சாயந்தரம் ஆறு மணிக்குள் வீட்டில் இருக்கனும்.” என்று சொல்லவும், இருவரும் மஹாவை அதிசயமாகப் பார்த்தனர். 

 

“என்ன பார்வை…? அகரன் இனி ஆதிரா உன் பொறுப்பு. ஆனால் இந்த சலுகையைப் பயன்படுத்தி உன் நடவடிக்கையில் எதாவது மாற்றம் வந்தா…?” என்று சொல்லி முடிக்கும் முன்பே… “அதெல்லாம் ஒன்னும் நடக்காது.” என்று அவசர வாக்கு கொடுத்தான் அகரன். ஏங்கே மனதை மாற்றி அதெல்லாம் போகவேண்டாம் என்று மறுத்துவிடுவாரோ என்ற பயம் அவனுக்குள். ஆனால் மஹா அப்படி எல்லாம் சொல்லவில்லை என்றதும் ஒரு நிம்மதி உள்ளுக்குள் பரவியது.

 

அவனுடன் தனிமையான பயணம் முதல் முறை. மனம் சற்று படபடவென்று அடித்தது. அவனின் காதல் எதிர்ப்பார்ப்புகளில் இவள் மனம் அவனுடன் செல்ல சற்று பின் வாங்கியது. அவளால் இயல்பாகவே ஒன்ற முடியாமல் போனது. அது  ஏன் என்று அவளுக்கே புரியவில்லை. 

 

டிபனை முடித்துவிட்டு  மஹாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள் இருவரும். அவளுடன் தனியாக பயணிக்கவே வாடகை கார் செல்ப் ட்ரைவ் பண்ண புக் செய்தவன், வெள்ளை நிற சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டு கையில் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை அணிந்து கொண்டான். அறையில் இருந்து கிளம்பி வந்தவனை இப்போது தான் நன்றாக உற்றுப்பாத்தாள் ஆதிரா. உருவத் தோற்றத்தில் பல வித்தியாசங்கள். சுருட்டை முடி இப்போது பார்லரில் செலவு செய்த  சில ஆயிரங்களால் நேராக மாறி சீராக வெட்டப்பட்டு இருந்தது. ஜிம் போவான் போலும்… முன்னை விட உடல் ரொம்பவே மெருகேறி இருந்தது. தொள தொளவென்று அவன் அணியும் உடைகள் இப்போது இல்லை… இறுக்கமான ஷர்ட்,ஜீன்ஸ், உபயோகத்துக்காக விலை உயர்ந்த பொருட்கள்  என்று ஆளே இந்த நான்கு வருடத்தில் ஆளே மாறிப் போய் வந்து இருந்தான் அகரன்.

 

அவனையே வியப்பாக பார்த்துக் கொண்டு இருந்தவளை கண்டு சிரித்தவன்… எல்லாம் பணம் செய்யம் மாயம்…” என்று சொல்லிவிட்டு அவள் அருகில் வந்து நின்றான். “என்ன போலாமா…?” என்றான் காதோராம் கிசுகிசுப்பாக.

 

“ஹான்… போலாம்.” என்றவள் அவனுடன் ஒரு அடி தள்ளியே நடந்து வந்தாள். இருவரும் காரில் ஏறி பயணம் செய்துக் கொண்டு இருக்க… அவளையே திரும்பி திரும்பி பார்த்து ரசித்துக் கொண்டே காரை ஓட்டினான் அகரன்.

 

அவனின் தன்னை திரும்பிப் பார்ப்பது புரிந்தாலும் எதையும் கண்டுக் கொள்ளாதவள் போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு ஜன்னலோரம் பார்வையை பதித்தாள் பெண்ணவள்.

 

அவன் கேட்ட சிறு சிறு கேள்விகளுக்கு பதில் மட்டும் சொல்லிக் கொண்டே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே பேசினாள்.

 

அவளின் பார்வை நாளு திசையிலும் அலைப்புறுவதைக் கண்டவன் புருவத்தை சுருக்கி… “என்ன வேணும் ஆதிரா…? ஏதும் பிரச்சனையா…?” என்று கேட்க… வேகவேகமாக இல்லை என்று தலையை ஆட்டியவள் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு தலை கவிழ்ந்து அமர்ந்து இருந்தாள்.

 

அவளின் செய்கைகள் யாவும் சற்று விநோதமாகவே இருக்க, தன்னுடன் தனியாக வருவது அவளுக்கு பிடிக்கவில்லையோ என்று உள்ளுக்குள் மனம் வருந்தினான். அம்மா சொன்னதற்காக வேறு வழி இல்லாமல் வந்து இருப்பாளோ…? இதை எல்லாம் எண்ணும்போது அவன் இதயத்தில் வலி பரவுவதை அவனால் தடுக்கமுடியவில்லை. அவனுக்கு அவனே ஆறுதல் கூறிக் கொள்பவன் போல உப் என பெருமூச்சை வெளியிட்டுவிட்டு நெஞ்சை இதமாக தடவிக் கொண்டான்.

 

ஆனால் ஆதிராவின் நிலையே வேறு… தான் கண்காணிக்கப்படுகிறோம் என்று அவளுக்கு முன்னமே தெரியும் அல்லவா…? அதனாலே தங்களை யாரேனும் தொடர்ந்து வருகிறார்களா என்பதிலே அவள் கவனம் நின்றது. இதை அறியாத அகரன் மனம் வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தான்.

 

கொஞ்சம் நேரம் சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த ஆதிரா… பின் தொடர்ந்து எந்த காரும் அவர்கள் பின்னால் வராததால் சற்று நிம்மதிப் பெருமூச்செறிந்தாள். இப்பொது தான் அகரனைத் திரும்பி பார்த்தது அவள் விழிகள். எதுவும் பேசாமல் சாலை ஓரமே கண்ணைப் பதித்துக் கொண்டு அதிலே கவனமாக காரை ஓட்டியவனை “அகரா…?” என்றது அவளின் செப்பு இதழ்கள்.

 

அவன் பெயர் அதுவும் தன்னவளின் வாயில் இருந்து உதிர்க்கும் போது முகம் விகசித்தது. “ஆதிரா…?” என்று அவள் நோக்கி திரும்பி புன்னகையை இதழில் சிந்தி விட, அவளும் புன்னகைத்தாள்.

 

அதற்குள் இவர்கள் இந்தியா கேட் வந்து இறங்கிவிட, காரை ஓரமாக நிப்பட்டியவன்… வேகமாக வந்து அவள் பக்க கதவை திறந்து… “இப்போ இறங்கலாம் மை குயின்.” என்றதும் அவள் சிரித்துக் கொண்டே இறங்கினாள்.

 

இருவரும் ஒன்றாக நடந்து கொண்டே புறா இருக்கும் இடத்தை அடைய… அவள் கைப்பையில் இருந்த பொறியை புறாக்களுக்கு தீனியிட வீசவும், கூட்டமாக வந்த புறாக்கள் உண்ண ஆரம்பித்தது.

 

அதைக் காணவே கண்கொள்ளாத காட்சியாக இருக்க… இருவரும் புறாக்களுக்கு தங்களிடம் இருந்த பொறி காலியாகி போகும் வரை போட்டுக் கொண்டே ஒருவர் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தனர்.

 

அதன் பிறகு அவளை அழைத்துக் கொண்டு ப்ரைவேட் போட் ஒன்றில் படகு செய்ய அழைத்துச் சென்றான். ஒரு பிரைவேட் போட் அரை மணி நேரத்திற்கு மூவாயிரம் ரூபாய் என்று சொன்னதும் அகரன் எதுவும் சொல்லாமல் பணத்தை நீட்ட, அதை தடுத்த ஆதிரா… அந்த வியாபாரியிடம் பேரம் பேச, அது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் போல தோன்ற   கடைசியில் இரண்டாயிரம் ரூபாயில் வந்து நின்றது.

 

“இதற்கு மேல் குறைத்தால் பேட்டா கிடைக்காதும்மா… போம்மா.” என்று அந்த ஆள் ஹிந்தியில் திட்ட திட்ட கெஞ்சும் நிலைக்கு கொண்டு வந்து இருந்தாள் நம்ம அம்மணி.

 

சரி சரி என்று அதிலும் நூறு ரூபாய் குறைத்து தான் கொடுத்தாள். அவரும் இன்று சீசன் இல்லாத நேரம் பெரிதாக போனி இல்லாத நிலையில் வேறு வழியில்லாமல் அவள் கொடுத்த பணத்தை வாங்க வேண்டியதாகிப் போனது. எப்போதும் அமைதியாக இருக்கும் ஆதிரா, பேரம் பேசுவதில் அவள் காட்டிய தீவிரமும் பேச்சிலும் ஆவென்று வாயை பிளந்தான்.

 

இருவரும்  ஸ்பீட் போட்டில் ஏறி, முதலில் பாதுகாப்பு உயிர் கவச உடையை அணிந்துக் கொண்டு உக்கார, அந்த அரை மணி நேரம் ரம்மியமாகவே கழிந்தது.

 

இருவரும் இறங்கி இந்தியா கேட் நோக்கி சென்று சுற்றிப் பார்த்தவர்கள், அகரன் கூட்டத்திற்கு நடுவே ஒரு கால் முட்டிப் போட்டு ரோஜாப் பூவை நீட்டி தன் காதலுக்காக சம்மதம் வேண்டி நிற்க,

 

சுற்றி நின்ற கூட்டம் ஓவென கத்தியது. சிலர் எஸ் என்று சொல்ல சொல்லி கத்த, அவளின் பதிலை எதிர்ப்பார்த்து இருந்தான் அகரன்.

 

அவள் இந்த திடிர் ப்ரோபோஸல் அதிர்ச்சியாக இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் மூளை குழம்பியது. அவன் முகத்தை கண்டவள் அதை வாங்க எத்தனிக்க, அவள் காலடியில் சரியாக வந்து விழுந்தது மாஸ்க் டெவில் என்று எழுதப்பட்டு இருந்த முகமூடி. அன்று அவன் அணிந்து இருந்த அதே முகமூடி.

 

அதைக் கண்டதும் “நோ” என பயத்தில் அலறியவள்,  அவன் கையில் பிடித்து இருந்த ரோஜாவை தூக்கி தூரம் எறிந்தாள்.

 

ஆதிராவின் அலறல் அதன் பின் தான் கொடுத்த ரோஜாவை தூக்கி எறிந்தவளைக் கண்டு விக்கித்துப் போனான் அகரன்.

 

“வ்வா… இங்க இருந்து போலாம்… அ..அந்…த்..தா… விழி… காரன்.” என்று என்னன்னமோ உளறியவள் பயத்தில் நடுங்கிக் கொண்டே வாடகை கார் நோக்கி ஓடினாள். அகரனும் அவள் விசித்தரமான நடவடிக்கையைக் கண்டு பயந்தவனாக அவள் பின்னாலே ஓடினான்.

 

அந்த வெள்ளை பழுப்பு நிறவிழிக்கு சொந்தக்காரன் அங்கு இல்லை… இது அவன் அடியாள் செய்ததாகத்  தான் இருக்க வேண்டும். அவன் அடியாள் அவளையே அறியா வண்ணம் காரை தொடந்துக் கொண்டே வந்தவன் ஒவ்வொரு தகவலையும் அந்த அரக்கனுக்கு சொல்லிக் கொண்டு இருந்தான். அகரனின் ப்ரோபோசல் விடயம் அவன் சொல்லும் போது அந்த அரக்கனின் நரம்புகள் புடைத்தது. அவனை இப்போவே கொன்னுடு. என்று உத்தரவு பிறப்பித்தவன்… இல்ல இல்ல வேணாம்… என் மாஸ்க் மாதிரி ஒன்று  உன்கிட்ட இருக்கு இல்ல… அதை சரியாக அந்த ஆதிரா காலில் வீசு… என்றதும் அடியாள் மறுக்காமல் அதை செய்தான். ஆதிராவின் நோ என்ற அலறலும் பதறி அடித்துக் கொண்டு ஓடியதை வீடியோ காலில் கண்டவன்… அந்த பயம் இருக்கனும் என்று கை முஷ்டி இறுக சொன்னான். 

 

இங்கு மாதுங்காவில், மஹா தன் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு ஹாளுக்கு வந்த போது டமார் என்ற கதவை இடிக்கும் சத்தம் கேட்க, என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக் கொண்டு கதவை திறந்தாள் மஹாலக்ஷ்மி. 

 

அங்கு வந்து நின்று இருந்தவனைக் கண்டு… நீயா…? என்று வாயில் கை வைத்து அதிர்ந்தாள் மஹா. 

ஆமாம் அங்கு ஆதிராவின் வீட்டில் மஹாவின் தொண்டையில் துப்பைக்கியை அழுத்தி வைத்து… “ஐ வில் கில் யூ.”  மிரட்டிக் கொண்டு இருந்தான் அந்த அரக்கன்.

 

மஹாவின் இதழில் மாறாக நக்கல் சிரிப்பு.

 

மோகம் தொடரும்…  

 

  

     

   

1 thought on “மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top