மோகம் : 5
தொண்டையில் துப்பாக்கியை வைத்து ஐ வில் கில் யூ என்று அரக்கன் மிரட்டிய போதும் மாறாக மஹாவின் இதழில் படிந்த நக்கல் சிரிப்பில் அவன் கை இன்னும் கொஞ்சம் முன்னேறியது.
அதை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாதவரோ, மரணத்தின் வாசலில் நின்று இருக்கும் வேளையில் கூட “என்ன வேணும் உனக்கு…?” என்றார் தில்லாகவே.
“ஆதிரா எங்க….?” என்று அவள் இருக்கும் இடம் தெரிந்தாலும் வேண்டுமென்றே கர்ஜனையாக கேட்டான்.
ஆதிராவைப் பற்றி பேசியதும் உள்ளுக்குள் ஒரு நொடி அதிர்ந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், “என் மகள் எங்க இருந்தா உனக்கு என்ன…?” என்றார் சீற்றம் கலந்த குரலில்.
“உன் மகளா…?” என்று நக்கல் தொனியில் கேட்டவன். “அவளை என்னோட அனுப்பி வை இப்போவே.” என்றான் அதிகாரமாக.
“உன் அதிகாரம் எல்லாம் என்னிடம் செல்லாது. உன்னால பண்ணுறதை பண்ணிக்க.?” என்று முகத்தில் அலட்சியம் காட்டியவருக்கு அவனின் உன் மகளா என்ற நக்கல் தொனியில் சற்று இதயம் தடதடக்க வைத்தது…
அவரின் அலட்சிய பதில் அவனுக்குள்ளே குருதி சூடு ஏறியது.
அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்… “நீயாக அவளை என்னிடம் அனுப்பி வைப்ப… நான் என்னிடம் வரவைப்பேன்.” என்று தீர்க்கமாக சொன்னவன் விழிகள் நெருப்பை கக்கி நான் சொன்னதை செய்து காட்டுவேன் என்ற பார்வையைக் கண்டு உள்ளம் திடிக்கிட்டுப் போனார்.
அதிரடியாய் நுழைந்தவன் சிந்தனைக் கோடுகளுடனே வீட்டை விட்டு வெளியே போனான். இங்கு நடப்பவை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த டேவிட்… அண்ணாவின் சிந்தனை படர்ந்த முகம் அவனையும் குழப்பியது.
அந்த குழப்பம் கலந்த முகத்துடனே “அண்ணா, உங்களை நான் இப்படிப் பார்த்ததே இல்லையே…?” என்று சற்று தயங்கி தான் கேட்டான்.
“வீட்டுக்கு போகலாம்.” என்று சொன்னதோடு சரி. வேறு பேச்சின்றி அமைதியாகவே பயணம் சென்றது.
வீட்டை அடைந்ததும் எதுவும் பேசாமல் சோபாவில் அமர்ந்து விட, அருகில் கையைக் கட்டிக் கொண்டு நின்ற டேவிட்டை நோக்கி… என்னுடன் வா… என்று கை அசைத்தபோது… எதுவும் சொல்லாமல் அவனையே பின் தொடர்ந்தான் டேவிட்.
அது ஒரு ரகசிய பாதாள அறை. அந்த அறை கதவை திறந்த போதே கும் இருட்டு. புதியதாக காண்பவரை ஹார்ட் அட்டாக்கே வரவைத்து விடும் பேய் வசிக்கும் அறை போன்ற ஒரு தோற்றம்… சுவர் எங்கும் ரத்தக் கறைகள் படிந்து இருக்க, அங்காங்கு சிலந்திக் கூடுக்கட்டி அறையை ஆக்கிரமித்து இருக்க, நெடுநாள் சுத்தம் செய்தப்படத்தால் கருப்பு படிந்த டைல்ஸ் தரைகள், எலி செத்த வாடை…நடுவில் ஒரு டேபிள் மேல இருந்த பெட்டியின் மீது தான் அந்த அரக்கனின் கண் பதிந்தது.
டேவிட்க்கு அந்த அறைக்குள் முதன் முதலாக நுழைவதால் குமட்டலே வந்து விட்டு இருக்க… அவசரமாக அறையை விட்டு வெளியேறி ஓடிப்போய் பாத்ரூம் சிங்கில் வாந்தி எடுத்தான்.
அந்த அரக்கனுக்கு இந்த அறை அதிக பழக்கம் என்பது புரிய முடிகிறது. . கண்ணை மூடி பழைய நினைவுகளை யோசித்தவன் கையில் வைத்து இருந்த பேட்டரி விளக்கை ஒளிரச் செய்து… டேபிள் நடுவே கனமாக இருந்த ப்ளூ கலர் இரும்பு பெட்டியை திறந்து பார்க்க… பெட்டி முழுவதும் இருபது வருடத்திற்கு முன்பு எடுக்கப் பட்ட புகைப்படங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தன…
அரை மணி நேரமாக ஒவ்வொரு புகைப்படமாக புரட்டியவன்… ஒரு படத்தைக் கண்டதும் கண்கள் அதிலே நிலைக்குத்தி நின்றது.
எதையோ கண்டுப்பிடித்துவிட்டவன் போல எப்பொழுதும் இறுக்கமாகவே வலம் வருபவனின் முகம் இப்போது கொஞ்சம் புன்னகையை தத்து எடுத்துக் கொண்டது. இன்னும் சில புகைப்படங்களை ஆராய்ந்து தகவலை சேகரித்துக் கொண்டவன் வெளியே வரும் போது வெறி கொண்ட வேங்கையாக இருந்தது அவனின் மூச்சுக்கள். இனி நடப்பவை அனைத்தும் அதிரடி தான் என்று முடிவு செய்தவனாக ஹாலில் வந்து கால் மேல் காலிட்டு
அமர்ந்தவன்… ஒரு சிகரட்டை பற்றவைத்துக் கொண்டே ஊதித் தள்ளினான்.
“அண்ணா…?”
“ம்ம்”
“என்ன ஆச்சு உங்களுக்கு…? அந்த பொம்பளை யார்…? இவ்ளோ தூரம் அவ பேசின பின் நீங்க உயிரோட வைத்து இருக்கிற ஆள் நீங்க இல்ல… அப்படி இருக்கும் போது…?” என்று வார்த்தையை முடிக்காமல் தொக்கி நிறுத்தினான்.
“ஆதிரா எங்க இருக்கா….?” அடுத்த சிகரட்டை பற்றவைத்துக் கொண்டு…
“இதோ அண்ணா…?” என்று அவசரமாக… அடியாட்களுக்கு கால் செய்தவன் அவள் இருக்கும் இட தகவலைக் கேட்டுவிட்டு அவனிடம் சொல்ல ம்ம் என்றதோடு நிறுத்திக் கொண்டான்.
அவன் அமைதியை புரிந்து கொண்டவனாக… இதற்கு மேல் கேட்டால் அண்ணன் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதை உணர்ந்தவன் உஷாராக வாயை மூடிக்கொண்டான்.
அந்த அரக்கனின் முகம் பல கோணங்களில் சிந்தித்துக் கொண்டிருந்தது. நிறைய குழப்பங்கள்… நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணும் என்பார்களே அதுபோல பல தடயங்கள் விட்டுப் போயிருந்தது. அதன் நினைவிலேயே உழன்று கொண்டிருக்க…
டேவிட் போன் நம்பருக்கு அழைப்பு வர, அதில் காதில் கொடுத்தவன் கேட்ட செய்தியில் வாட் என்று அதிர்ந்தான்.
அவன் அதிர்வை சாவதானமாக பார்த்த அந்த அரக்கனும் புருவம் உயர்த்தி என்ன என்றான். இயல்பாக.
“அண்ணா நீங்க இங்க வந்திருக்க தகவல்… ராவிற்கு போய் இருக்கு. அங்க வேலை செய்ற நம்முடைய ஏஜென்ட் ஒருத்தன் தான் எனக்கு போன் பண்ணி சொன்னான். மும்பை சிட்டி முழுக்க நம்மளை தேடிட்டு இருக்காங்க அண்ணா.” என்ற டேவிட் பதட்டக் குரலில் பேசினான்.
“இப்போதும் அதே இயல்பான முகம் தான். கண்களில் நிறம் மாறி இருந்தது போலும். “தேடட்டும்.” என்று சொன்னவன் மீண்டும் சிந்தனையில் மூழ்கி விட்டான்.
“அண்ணா நான் வேணா மந்திரி கிட்ட பேசி பார்க்கட்டுமா…?”
“என்னோட அடுத்த தோட்டால உன் பேரு தான் எழுதி இருக்கும் போல. என்று துப்பாக்கியை தடவ, புரிந்து விட்டது டேவிட்டுக்கு. வேறு எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருக்க… தன்னை போலீஸ் சுற்றி வளைக்கிறது என்ற எந்தவித லஜ்ஜையும் இல்லாமல் தன் சிந்தனைப் போக்கில் சுழன்றான் அவன்.
இங்கு டெல்லி ரா அலுவலகம்… நெடு நெடுவென உயர்ந்து நின்ற அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏசி சொகுசு அறையில் அமர்ந்திருந்த போதும் வியர்வை வடிய, நம் அரக்கனை வலைவீசி பிடிக்க வேண்டிய ஆதாரங்களையும், தகவல்கள் ஏதும் கிடைக்கிறதா…? என திரட்டி கொண்டிருந்தார் முப்பத்தி எட்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் உளவுத்துறையின் பிரிவு அதிகாரி அரவிந்த்.
(மாயோனின் இதய சிறையில் ஹீரோ).
மண்டை சூடாக எப்படியாவது இவனை கையும் களவுமாக பிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக பைலில் ஆழ்ந்திருந்தவருக்கு இடையூறாக அடித்தது தொலைபேசி. பச் என்று சலிப்புடன் அதை பார்த்தவர் கட் பண்ண தோன்றாமல் காதில் வைத்தார். பேசியது அவர் மனைவியாயிற்றே…
“சொல்லு தனு…? நான் கொஞ்சம் வேலையில் அவசரமாக இருக்கேன் பிறகு பேசலாம்.” என்று சொன்னவர் போனை கட் செய்ய எத்தனிக்க…
“ஐயோ வச்சிடாதீங்க… இங்க நீங்க பெத்துப் போட்ட ரெண்டு பன்னிக் குட்டிக பாடாத பாடுபடுத்துறாங்க. என்னால முடியல அரவிந்த். நீங்க வாங்க…?” என்றதும்.
“சொன்னா கேளுடி. இங்கே வேலை இருக்கு வை டி போனை.” இன்று சற்று அதட்டலாகவே பேசி வைக்க முனைய…
அவன் நிலைமை புரிந்தவளாக “என்ன பிரச்சனை…?” என்று கேட்டாள் அவன் மனைவி. நடந்தவை ஒன்று விடாமல் அனைத்தையும் சொனனான்.
“இவ்வளவு தானா…? உங்க கூட்டத்தில் இருக்க கருப்பு ஆட்டை முதலில் கண்டுபிடித்து தகவல் போகாம பார்த்துகோங்க. பிறகு மும்பை கமிஷனர் சாணக்கியன் கிட்ட பேசிட்டீங்களா…? ( காவலனின் காவியக் கள்ளி ஹீரோ)
“பேசியாச்சு… ரகசிய போலீஸ் அமைப்பு அவங்கள தேடிட்டு தான் இருக்காங்களாம்.” என்று தகவல் சொன்னார்.. நீங்க சொல்ற ஆளு அந்த சிட்டியை விட்டு போக வாய்ப்பே இல்லை… ஒரு வாரம் பலமான காவல் போட்டு பாருங்க… மாட்ட வாய்ப்பிருக்கு.” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.
“அரவிந்தும் சாணக்கியனும் கலந்தது ஆலோசித்து பலமுறை அவனுக்கு ஸ்கெட்ச் போட்ட போதும் ஒரு துரும்பை கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அவர்கள் சேகரித்து வைத்திருந்த ஆதாரங்கள் எதுவும் பெரிதாக பயன்படாதது போலத்தான் இருந்தது. சாணக்கியனும் எப்படியாவது அந்த பெயர் தெரியாத அரக்கனை பிடித்து விட போராடிக் கொண்டிருந்தான். அவன் வாழ்க்கையில் எத்தனையோ கேஸ்களை எளிதாக சமாளித்து இருந்தவனுக்கு ஆட்டம் காட்டியது என்னவோ இந்த கேஸ் தான். தடையமே இல்லாமல் ஒருவன் தப்பிக்க முடியுமா…? முடியும் என்பதை தானே அந்த அரக்கன் பண்ணிக் கொண்டிருக்கிறான்.
அந்த அரக்கனுக்கு தகவல் சொன்னது வேறு யாரும் அல்ல…? மஹாலட்சுமியே தான்.
அவன் வீட்டை விட்டு சென்ற போது அவசரமாக எழுந்தவள் தன் அறைக்குள் சென்று யாரோ ஒருவருக்கு அவசரமாக அழைத்தாள்.
இரண்டாம் முறையில் ரிங் எடுக்கப்பட்டது. தகவல்களை எழுதி அனுப்புமாறு மெசேஜ் ஒன்று போனில் வர… அவர்கள் அனுப்பிய இரகசிய லிங்கில் சென்று மெசேஜை அனுப்பியவள் பதிலுக்காக காத்திருந்தாள். ஒரு அரை மணி நேரம் கழித்த பின்பு, இன்னொரு லிங்க் அனுப்பப்பட்டது அதை பிரித்து படித்தவள், தான் செய்ய வேண்டிய விவரமும் எழுதப்பட்டிருக்க…
அதன்படியே ரா அமைப்புக்கு தகவல் தர, மஹாலட்சுமியை நேரடியாக பேச விடாமல் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் ஒரு ஆளை ஏற்பாடு செய்து அவன் மூலம் ராவுக்கு தகவல் சென்றது.
போலீஸ் தகவல் தெரியாத அரக்கனை தேடுவதற்காக தீவிர வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க… ரா சைபர் க்ரைம் வழியாக, அவனை பிடிக்கும் முயற்சி செய்து கொண்டிருந்தது.
ஆனால் இங்கு நம் அரக்கனோ, அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாது அந்த புகைப்படத்தில் கண்ட காட்சியை திரும்பத் திரும்ப பல கோணங்களில் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு விடைகள் பட்டென்று மனதில் ஆணி அடித்தாற் போல விழுந்தது.
“தங்க பொன்முட்டையிடும் வாத்து.” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன்… :அடுத்த ஆபரேஷனை இமீடியட்டாக ஆரம்பிக்கனும் டேவிட்.”
“என்ன ஆபரேஷன் அண்ணா…?” என்றான் புரியாமல்.
“ஆபரேஷன் ஆதிரா…?”
“அண்ணா.” என்று திகைத்தான் டேவிட்.
“எஸ்… என் சாம்ராஜ்யத்தோட அடித்தளம் அந்த ஆதிரா.”
“அந்த பொண்ணு தான்னு தெரிஞ்சிடுச்சா அண்ணா…?”
“டி என் ஏ டெஸ்ட் தொண்ணூற்று எட்டு சதவீதம் மேட்ச் ஆகுது. அதோட அவ பிறந்தநாள்… பனிரெண்டு டிசம்பர். இப்ப புரிஞ்சிருக்குமே…?”
டிசம்பர் பன்னிரெண்டு என்று சொன்னபோது டேவிட் முகம் செங்குருதி கொப்பளித்தது போல ஆனது. தெரியாத அப்பாவி பெண் என்பதால் பாவம் பார்த்த டேவிட் அந்த தேதியை சொன்ன பிறகு ஈவு இரக்கமற்ற அரக்கன் போல “ஆபரேஷன் ஆதிரா…? என்ன பண்ண போறோம்… சொல்லுங்க அண்ணா…? என்றான்.
“குட்.”
மேலும்… “போலீஸ் அதுபாட்டுக்கு தேடட்டும். அத பத்தி நமக்கு கவலை இல்லை…. நம்ம கவலை எல்லாம் மஹாலட்சுமியின் பொய்யான பெயரை வைத்து சுத்திகிட்டு இருக்க சரிதாவை பற்றி தான்.” என்று அடுத்த குண்டை இறக்கினான்.
“சரிதாவா…? அவளா…? அவதான்னு அப்போவே என்கிட்ட சொல்லாம இருந்தீங்க….? அப்பவே என் கையால வெட்டி போட்டு இருப்பேன்.” என்று ஆத்திரமாக கூறியவனை…
“நம்ம துரோகி. ஈசியாக எல்லாம் சாகக்கூடாது.” என்றவனின் கண்களில் வன்மம் தெளித்தது.
இங்கு மாதுங்காவில், அலறியடித்துக் கொண்டு ஓடி வந்த அகரனையும் அதிராவையும் கண்ட மஹா, “ என்னாச்சு அகரா ?” என்று பதட்டமாக கேட்டபோது…
ம்மா… அங்கு நடந்தவை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னவன்… “அவளை யாரோ ஃபாலோ பண்றாங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கம்மா…? ஏதோ மாஸ்க் டேவில் எல்லாம் சொல்றா…?”
“ அதெல்லாம் மனப்ராந்தியாக இருக்கும். ஆதிரா கொஞ்ச நேரம் போய் உன் ரூம்ல தூங்கு.” என்று சொல்லி அவளை தூங்க வைத்தவர் போர்வையை போர்த்தி விட்டு அறையை விட்டு வெளியே வந்தவரோ கதவை தாழ்ப்பாளிட்டு, அகரனை மாடிக்கு வா என்றார் அவசரமாக.
“என்னம்மா…?”
“அவன் வந்தான்…?”
“ யாருமா…? இப்படி மொட்டையா சொன்னா எப்படி…?”
“நம்ம எதிரி தான் வேற யாரு…?”
“நம்ம இங்க இருக்கிறது அவனுக்கு எப்படி தெரியும்…?” என்றவனுக்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தது.
“அவனுக்கு ஆதிரா பற்றின உண்மை தெரிஞ்சு இருக்கு…
இனி தாமதிக்காம உனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி ஆகணும்.”
“ம்மா…. நீங்க எடுக்கிற முடிவு சரியா…? இதனால் என் உயிர் கூட போக வாய்ப்பு இருக்குமா…? இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கணுமா…?”
“எடுத்து தான் ஆகணும். நமக்கு வேற வழியில்லை.”
“அவ தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்கிறாளே…? இந்த முடிவு மட்டும் அவருக்கு தெரிஞ்சது நம்ம ரெண்டு பேரையும் பொணம் ஆக்கிடுவார். அவசரப்பட வேண்டாம்மா…?” என்றான் மகன்.
மகனா என்று நீங்கள் அதிர்ந்திருக்கலாம். ஆம் அகரம் தான் மஹாலட்சுமி இல்ல இல்ல சரிதாவின் உண்மையான மகன். ஆதிரா வளர்க்க கொடுக்கப்பட்ட மகள். மஹாலட்சுமிக்கு ஆதிரா தனக்கு மகளாக அல்ல மருமகளாக வேண்டும்… அவள் மூலம் வரும் அதிகாரம் வேண்டும்… அதற்காகவே அவள் சிறு வயதிற்கும்போதே அகரன் தான் உன் புருஷன் என்று மனதில் பதிய வைத்தார். எங்கே அகரனை அண்ணனாக வரித்து காரியம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து செதுக்கினார் அவரின் கனவுக்கோட்டையை… ஆதிராவை தன் கை பொம்மை போல ஆடவைத்து எல்லாம் சுபமாக வரவேண்டிய நேரத்தில் அந்த அரக்கனின் இடைஞ்சல் எரிச்சலை கிளப்பியது.
“ ம்ம்” என்று ஒரு நொடி யோசித்தவர்… “ சரி இதற்கு ஒரு முடிவு எடுக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு கீழே வந்தவர் தகவலை அனுப்பவேண்டிய இடத்திற்கு அனுப்பிவிட்டார்..
இங்கு அந்த அரக்கன் ஆதிராவை தன் வசப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியில் இறங்கி விட்டான்.
யார் அந்த அரக்கன்?
ஆதிராவை சுற்றி பின்னும் வலை பின்னல்கள் என்ன…?
இனி ஒவ்வொரு முடிச்சுகளும் ஒவ்வொன்றாக அவிழும்.
மோகம் தொடரும்.
Supero super ❤️
Super… Interesting
When is the next UD?