இவர்கள் குடில்களுக்கு இடையில் உள்ள குறுக்கு சந்து வழியே வர…
அங்கே மௌனமாய் அரங்கேறிக்கொண்டிருந்தது அந்தரங்கம் இரு காதலர்களுக்கு இடையே!!
அங்கு நடந்த காதல் கடந்த காம தேட மௌன பரிபாஷையில் சில சத்தங்களும் சிணுங்கல்களும் முணங்கல்களும் அடக்கம்!!
அந்தச் சத்தத்தை கேட்டு சடுதியில் நின்ற விதுரனின் முதுகில் கிடைத்தது எதிர்பாராத அவளது இதழ் ஒற்று!!
“ம்ம்ம்… நிதா.. இந்த.. வழி… வேணாம். நாம வேற வழியில போகலாம்” என்று திரும்ப வந்த வழி செல்ல முடியவில்லை. அங்கே அடைத்தப்படி டேபிள் போட்டு இருந்தார்கள். சரி வேறேதும் வழிகள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு சற்று தள்ளி போக… அங்கேயும் குடில்களாக இருக்க… அந்த காதலர்களுக்கு சற்று தள்ளி இரு குடில்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் மாட்டிக் கொண்டார்கள் நிதாவும் விரதனும்.
சற்றுத் தள்ளி காதலர்கள் அங்கே காதல் களியாட்டம் போட்டு கொண்டிருக்க… இவர்களோ அவஸ்தையில் சங்கடத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் நெளிந்து திரும்பி நின்று கொண்டிருந்தனர்.
அக்காதலர்களின் செய்கையில் பேச்சு குறைந்து சிணுங்கல், கொஞ்சல், கெஞ்சல் இது தான் அதிகம் இருந்தன. அந்த பெண்ணின் வாயில் இருந்து வரும் அந்த சத்தம் இவர்களின் மனதை ஏதோ செய்தது. அந்த உணர்வை வார்த்தையால் சொல்லி விவரித்து விட முடியாது. ஒவ்வொரு முறையும் அவளின் சிணுங்கலோ கொஞ்சலோ அல்லது கெஞ்சலோ இரவு நேர தனிமையில் அவர்களது தாபத்தை ஏற்றியது.
அந்த கெஞ்சல் கொஞ்சலை பக்கத்தில் இருந்து பார்த்து சற்றே ஏக்கம் கொண்டது காதல் கொண்ட மனங்கள் இரண்டு!! அவள் என்னை இது போல் எதுவும் கொஞ்சிடமாட்டளா என்ற ஏக்கம் அவனிடமும்!! இது போல் அவனும் என்னை காதல் செய்திட மாட்டானா என்ற ஏக்கம் அவளிடமும்!!
சட்டென்று அவன் மனம் முன்னால் வந்து “அவள் உன்னை கொஞ்சி கெஞ்ச வேண்டும் என்றால் நீ அவளின் காதலனாகவோ அல்லது கணவனாகவோ இருக்க வேண்டும்” என்று சொல்லி விட்டு போனது. நமக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே என்று தன் மனதில் நினைத்தவன் பெருமூச்சை வேகமாக இழுத்து விட்டான். அந்த மூச்சு அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்த நவியின் வெண்ணிற முதுகில் வெம்மையாய் இறங்க.. அவளுள் அது உணர்வலைகளை பரவி விரவச் செய்தது உடலெங்கும்!!
“இதெல்லாம் நமக்கு எங்கே நடக்க போகுது? அதற்கெல்லாம் அதிர்ஷடத்தின் அண்டை வீட்டுக்காரனாக இருக்க வேண்டும்!!” என்று அவள் காதருகே குசுகுசுக்க… அவன் கற்றை மீசையின் குறுகுறுப்பும்… அவள் பின்னோடு நின்றிருந்தவனின் நெருங்கிய நெருக்கமில்லா அணைப்பும்… காதல் கொண்ட பெண்ணவளை மாய லோகத்துக்கு அழைத்துச் செல்ல… முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் உதடுகளை கடித்தப்படி!!
இவர்களின் நெருக்கம் ஒரு பக்கம் இருக்க.. அவர்களின் பேச்சு சத்தமும்.. முத்தச் சத்தமும்.. அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக லஜ்ஜை அடைய செய்து தகிப்பை ஏற்றிக் கொண்டிருந்தது!!
“கொஞ்ச நேரம் பொறுங்க.. எங்கையும் ஓடி போயிட மாட்டேன்” என்றாள்.. சில வினாடிகள் கழித்து “ஸ்ஸ்.. மெதுவா… வலிக்குது” என்று அந்த பெண்ணின் ஹஸ்கி குரல் அவர்கள் நினைவு உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு கொண்டு வந்தது, கூடவே நிதர்சனமும் புரிய சட்டென்று அதிர்ந்து திரும்பினாள் நிதா!!
இருவர் உதடுகளும் வெகு அருகருகே நூலிழை இடைவெளியில்!! அந்த இடைவெளியை தாண்டி இதழ்களைக் கவ்விக் கொள்ள கன நேரம் ஆகாது இருவருக்கும்!! ஆனால்… அது அவர்களுக்கான இதழ் அணைப்பாக இருக்காது!! அது அவர்களுக்கான காதல் முத்தமாக இருக்காது!! யாரோ இருவரின் காதல் லீலைகளை கண்டு காமத்தோடு நடப்பதாக இருக்கும்!!
இங்கே தேவைப்படுவது காமம் இல்லை!! காதல் மட்டுமே!!
காதல் வழிய இருவரின் பார்வைகளும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டன!! மெல்லிய நிலவொளியில் வார்த்தெடுத்த பொன் சிலை போல் நின்றவளை தான் ரசித்திருந்தன விரதனின் விகர்ப்பமில்லா கண்கள்!!
வானவில்
வளைவாம்
அவள் புருவமது அழகு!!
மயக்கமதை
நல்கும்
அந்த மாய
விழியது அழகு!!
விசித்திரம்
செய்யும்
மயில் தோகை
இமையது அழகு!!
அமிலங்களை
பூசினாலும்
பவள இதழது அழகு!!
அவள்
பொன் வார்த்த
அகமது அழகு!!
பூவையவள்
செவி கூட
ஓர் அழகு!!
நீண்ட
வெண் சங்கு
கழுத்து அழகு!!
மறைந்த
தேசங்கள் அழகு!!
மறையா
வளைவுகளும் அழகு!!
நங்கையவள்
அங்கம் முழுவதும்
படரும் நிலவொளியும் கூட அழகு!!
இப்போதும்
எப்போதும்
முப்பாேதும்
எனை
சிலிர்க்க..
விதிர்க்க..
காதல் கொள்ள
செய்யும்
தங்க
சிலையவள்
பேரழகு!!
விரதனின் கண்கள் அவளை ரசித்துக் கொண்டிருக்க.. அவளது கண்களும் ரசிக்கும் அவனது கண்களை புசித்துக் கொண்டிருக்க…
தங்களை மட்டுமல்ல தாங்கள் இருக்கும் இடத்தையும் மறந்து தங்களுக்குள் லயித்து இருந்தவர்களை.. எங்கோ விழுந்து நொறுங்கிய கண்ணாடியின் சத்தம் நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தது.
சட்டென்று இருவரும் விலகி நிற்க சுற்றும் முற்றும் பார்ப்பது போல நவி முகத்தை திருப்பிக் கொள்ள.. “அவங்க போயிட்டாங்க போல வா போகலாம்!!” என்றவனின் கரகரப்பான குரலில் அவளது முகம் செங்காந்தள் பூ போல சிவந்து நாணியது!! அவளை அழைத்துக் கொண்டு சென்றான் விதுரன். இன்னும் ட்ரிங்க்ஸ் பார்ட்டி முடியாததால் இவளை பத்திரமாக குடிலுக்குள் அனுப்பிவிட்டு மீண்டும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டான் விதுரன்.
இம்முறையும் இருவரும் தங்களைப் பற்றியோ தங்கள் மனக் காதலை பற்றியோ பேசிக் கொள்ளவே இல்லை!! ஆனால் அதையெல்லாம் கடந்த ஒரு அன்னியோன்யம் இருவருக்குள்ளும் உருவாகி இருந்ததை அவர்களால் மறுக்க முடியவில்லை.
அதிகாலை போட்டிலேயே அனைவரும் கிளம்ப வேண்டும் என்று உத்தரவு வர அடித்துப் பிடித்துக்கொண்டு அனைவரும் கிளம்பிச் சென்றனர்.
ரயில் நிலையம் வரை அனைவரும் ஒன்றாக சென்றனர். ஆனால் அவர்களுக்கான ரயில்நேரம் வெவ்வேறாக இருக்க… முதலிலேயே சென்னை செல்லும் குழுவுக்கு ரயில் வந்துவிட கண்களாலேயே அவனிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றாள் பூவை!!
அதன்பின் மீண்டும் ஒரு நெடிய மௌனம் அவர்களிடத்தில்!! ஆம்.. இந்த ஒரு வருட காலம் மிக அதிகமாக புரட்டி போட்டது நவியை!!
திடீரென்று ஏற்பட்ட தந்தையின் இழப்பு அவளை வேறு எதையும் யோசிக்க விடாமல் செய்தது. தம்பியை தாங்கிப் பிடிக்கவும், அன்னையை அரவணைத்துச் செல்லவும், சுற்றியுள்ள சுற்றத்தாரை சரிக்கட்டி செல்லவும் என்று இருந்தவளுக்கு தந்தையை பிரிந்த வலியை கூட அழுது கரைக்க முடியவில்லை!! காரணம் அன்னையின் உடல் நிலை.. எங்கே தானும் உடைந்தால் அவர்களும் உடைந்து விடுவார்களோ என்று தன் வலியையும் துக்கத்தையும் தன் மனதுக்குள்ளேயே புதைத்து வைத்திருந்தாள். முகம் புதைத்து தனது வலிகளை ரணங்களை அழுது தீர்க்க அந்த திண்ணிய மார்பு கிடைக்காமல்!!
முன்னை விட இப்போது அவள் வாழ்வுக்கான ஓட்டம் அதிகம்!! பண மட்டுமே பிரதானம் இல்லை. ஆனால் அந்த அத்தனை பிரதானமும் அப்பணத்தை சுற்றியே இருந்தது!!
வாழ்வியலை நன்கு படிக்க கற்றுக் கொண்டாள் தந்தை இறந்த பின்.. அதிலும் முதல் பாடம் வெகு அழுத்தமாக தன் சுற்றத்தாரிடமே மாது!! அப்போதெல்லாம் அவளின் மனச்சுணக்கத்தை போக்க அவள் தேடியது அவனின் அக்கறை கலந்த அன்பை!! சற்றே அத்திண்ணிய மார்பில் முகம் சாய்த்து தன் மனதினை இளைப்பாற ஆவல் கொண்டது பெண் மனது!! ஆனால் நிதர்சனம் வேராக இருந்தது!!
தந்தை இல்லாத பெண்… கட்டுப்பாடுகள் அற்ற வாழ்க்கை… சொந்தமான சம்பாத்தியம்…
தனியாக இருக்கிறாள்.. காதல் என்று வந்து நிற்கப் போகிறாள்!! இல்லை யாரிடமாவது ஏமாந்து விடப் போகிறாள்!! என்று சொந்தங்களே பேசிப்பேசி அவள் அன்னைக்கு அழுத்தத்தையும் பயத்தையும் கொடுத்தது!!
முன்னே என்றால் அவரும் தைரியமாக என் பெண்ணை கல்யாணம் செய்து வைக்க நாங்கள் இருக்கிறோம் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறுவார். ஆனால் இப்பொழுது அப்படி முடியாது அல்லவா?? மகனோ சிறுவயது கல்லுாரியில் படித்துக் கொண்டாருக்கிறான். கணவனும் இல்லை. ஏதாவது ஒன்றென்றால் சொந்தங்கள் தானே பார்க்கவேண்டும் என்று கல்யாணத்திற்கு நெருக்க ஆரம்பித்தார் நவியை!!
தந்தை இறந்த துக்கத்தை இன்னும் அழுது தீர்க்கவில்லை அதற்குள் கல்யாணமா என்று திகைத்தாள் நவி?
அதற்கும் அன்னை சொன்ன காரணத்தை கேட்டு அவளுக்கு ஐயோ என்றானது!!
விட்டார்களா உறவினர்கள்? இல்லை!! மாப்பிள்ளை டீச்சர்… மாப்பிள்ளை பெரிய உத்தியோகம்… மாப்பிள்ளை பெரிய கம்பெனியில் பிஏ… என்று வரிசையாக கொண்டுவந்து அவளின் அன்னையின் மனதை கரைத்தனர்.
கடைசியாக இப்படி அப்படி என்று அவர்களே குலுக்கல் முறை போட்டு எடுத்தார்களா இல்லை இங்கி பிங்கி போட்டு எடுத்தார்களோ… தெரியவில்லை!! பெரிய உத்தியோகத்தில் இருக்கும் இன்ஜினியர் அது இது என்று மாப்பிள்ளையின் பெருமையை பெரிய பட்டியல் வாசித்து.. அதை விட சீர்வரிசைக்கு பெரிய பட்டியல் வாசித்து, தந்தை இல்லாத பெண்ணுக்கு எங்களால் இயன்ற உதவி என்று பேசியே முடித்து விட்டனர் நவிக்கு மாப்பிள்ளையை!!
என்ன ஆனது இவர்களது காதல்?
கரை சேருமா? இல்லை கலைந்து போகுமா??
கதைப்போமா 14
மணமகன் வீட்டாரிடம் இருந்து வந்த சீர்வரிசை பட்டியலை பார்த்து கோபத்தில் பொங்கியே விட்டாள் நவி.
“என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க? இவ்வளவு கேட்டிருக்காங்க? ஏன் அவங்க பையன் சம்பாதிக்கவே மாட்டானாமாம்!! வழமையா வாங்கித்தர கட்டில் மெத்தை பண்ட பாத்திரம் ஏதோ சரி ஓகே!! அது என்ன? பித்தளையில் ஒரு செட்டு வெள்ளியில ஒரு செட் பாத்திரம்! பாத்திரக்கடை ஓபன் பண்ண போறாங்களா? எப்படிமா இதுக்கெல்லாம் நீங்க ஒத்துக்கிட்டீங்க??” என்று அன்னையிடம் கோபத்தை காட்ட முடியாமல் சலிப்பாக கேட்டாள்.
“என்ன பண்ண சொல்ற? நம்ம வீட்ல ஆம்பள துணை யாராவது இருக்காங்களா? இல்லைத்தானே!! ஏதோ உங்க பெரியப்பா மனசு வந்து இதெல்லாம் அவரே எடுத்து செய்றாரு. செய்யும்போது நாம தக்க வைச்சுக்கணும்!! காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற மாதிரி!! அதுக்கப்புறம் அவங்களும் செய்யலைனா நமக்கு இதெல்லாம் யாரு செய்வாங்க சொல்லு?” என்று அவர் மகளின் வாழ்க்கையை பற்றிய கவலையோடு பேசினார்.
“சரி!! உன் பாயின்டுக்கு நானும் வரேன்!! இவ்வளவு சீர்வரிசை பண்றதுக்கு நம்ம கிட்ட காசு கிடையாது. இருக்கிறதா அட்ஜஸ் பண்ணி ஏதோ செய்யலாம். இவங்க சொன்ன சீர் செய்ய கடன் தான் வாங்கணும். அதுக்கு அப்புறம் கல்யாணத்துக்கு நாம பாதி பணம் தரணமாம். இதுல நிச்சயதார்த்தமும் நாமலே வச்சு கல்யாணத்துக்கும் பாதி பணம் கொடுத்து, திரும்ப ஒரு ரிஷப்ஸன் வைச்சு… அந்த செலவுகளுக்கு என்ன பண்ணுவ?” என்று அவள் முடிக்கும் முன்..
“அது ஒன்னும் பிரச்சினை இல்லை!! நிலத்தை வித்து கொஞ்சம்….” என்று கூற வந்த அன்னையை தடுத்து “இருக்கும் ஒரு நிலத்தை வித்திட்டு அவனை அன்னகாவடியா நிக்க வைப்பியா? ஏற்கனவே இவ்வளவு கடனை வாங்கினா அத்தனையும் அவன் தான் கட்டணும். என்னையும் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக விடமாட்டாங்களாம். அப்படியே விட்டாலும் இந்த ஃபேமிலி கண்டிப்பா உங்களுக்கு செய்ய விட மாட்டாங்க.. அப்போ தம்பி வாழ்க்கை பூராவும் கடன் கட்டிக்கிட்டே இருந்தா… எப்ப தான் அவனோட லைபை வாழுவான்?” என்று தம்பிக்காக இவள் வரிந்து கட்டிக்கொண்டு பேச..
நிதர்சனம் புரிந்தாலும் பெண்ணின் வாழ்க்கையே கண் முன்னாடி வந்து நின்றது நவியின் அன்னைக்கு.
“ஆனா நவிமா… நல்ல குடும்பம்… கொஞ்சம் யோசிச்சு பாரு…” என்று திரும்பவும் அவளை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் பேச..
“இவ்வளவு சொல்லியும் அவங்க நல்ல ஃபேமிலியா? இங்க பாருமா… மூஞ்ச தூக்காத!! எனக்கும் எல்லாம் புரியுது. ஆனா நான் வந்து சந்தையில விக்குற பொருள் கிடையாது. இஷ்டத்துக்கு பேரம் போய் பேச… அது மட்டும் இல்லாம எனக்கு வரவன் என்னை சக மனுஷியா பாக்கணும்!! எல்லாவற்றிலும் உரிமையோடு என்னிடம் கலந்து பேசி முடிவெடுக்கணும்!! அவர் ஃபேமிலியைநான் பார்க்கிற மாதிரி என் ஃபேமிலியையும் அவர் தன்னுடைய ஃபேமிலியா பாக்கணும்!! ஆனா நீங்க பார்த்திருக்குற மாப்பிள்ளை கண்டிப்பாக செய்ய மாட்டான். இப்பவே இவ்வளவு கட்டன் ரைட்டா அவங்க அம்மா பேசியதற்கு மறுப்பு பேசாம இருக்கான்னா… வருங்காலத்துல எனக்காக என்ன சப்போர்ட் செய்வான்? அவங்க என்ன சொன்னாலும் இவனும் சேர்ந்து தலையாட்டி செய்ய சொல்வான்!! இதெல்லாம் அராஜகம்… குடும்ப வன்மை…” என்று நவி சொல்ல சொல்ல திகைத்துப் போய்விட்டார் அவளின் அன்னை.
“இதெல்லாம் காலம் காலமாக நடக்கிறது நவி!!” என்று அன்னையாக வாழ்வியல் அர்த்தங்களை அவர் புரிய வைக்க முயல…
“அம்மா அன்னைக்கு நீ மேல படிக்கல.. கல்யாண செலவு மட்டும் தான் உனக்கு செஞ்சு கொடுத்தாங்க. ஆனா இன்னைக்கு எவ்வளவு செலவு பண்ணி படிக்க வெச்சு இருக்கீங்க.. கல்யாணம் கட்டும் போதும் இத்தனை சீர்வரிசை கொடுத்து நாளைக்கு நான் வேலைக்கு போய் அந்த உழைப்பையும் அவங்க கிட்ட கொடுக்கனும்!! உங்களுக்கு நான் எதுவும் செய்யனும்னா திரும்பவும் அவன் கையை எதிர்பார்க்கணும்!! இது எல்லாம் உங்க காலத்தோடு முடிஞ்சுது!! எனக்கு எல்லாம் அப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம்!! அப்பா இல்லாத என் குடும்பத்திற்கு மூத்த மகனாய் எனக்கு வரவன் இருக்கணும் தான் நான் ஆசைப்படறேன்” என்றாள்.
“என்னது ஆசைப்படுறியா? யாரையாவது லவ் பண்றியா?” என்று மற்றதை எல்லாம் டீலில் விட்டு கடைசியாக அவள் சொன்னதை மட்டும் பிடித்துக் கொண்டு அவள் அன்னை கேட்க… “ஐயோ அம்மா!!” என்று சிரித்து விட்டாள் நவி.
“இங்கே பார்!! நான் யாரையும் லவ் பண்ணல… இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் சொல்றேன் அவ்வளவு தான்!! முதல்ல தம்பி படிப்பு முடிக்கட்டும். அவனுக்கு ஒரு வேலை கிடைக்கட்டும். கொஞ்சம் செட்டில் ஆனதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம். இப்ப எல்லாம் 26 வயசு மேல தான் கல்யாணம் பண்ணிக்குறாங்க.. நீ போட்டு மனச குழப்பிக்காம உன் வேலையை பாரு!!” என்று அன்னையை அனுப்பி வைத்தாள் இன்முகமாகவே!!
அவள் சொன்னதில் மற்ற எல்லாத்தையும் விட மகளுக்கு மட்டும் செய்தால் மகனின் நிலைமை… ‘அவனைப் பற்றி யோசிக்க வேண்டும் தானே? எல்லா கடனையும் சிறு பாலகன் அவனின் தலையில் எப்படி ஏற்றுவது? சிறு குருவி தலையில் பனங்காயை வைத்தது போல தான்!! பெண் சொல்கிறபடி இரண்டொரு வருசம் போகட்டும்’ என்று நினைத்தவர், அதையே தன் அத்தானிடம் கூறிவிட்டார். இப்போதைக்கு இவ்வளவு செய்யும் நிலைமையில் நாங்கள் இல்லை கொஞ்சம் நாங்களும் முன்னேறுகிறோம் முதலில் என்று!!
சீர்வரிசை இவ்வளவும் செய்ய முடியாது என்று சொன்னதிலிருந்து இவர்களது பொருளாதாரத்தை உணர்ந்த மாப்பிள்ளை வீட்டாரும் வேண்டாம் என்று அவர்களாகவே ஒதுங்கிக் கொண்டனர்.
உறவினர்களும் அவ்வபோது வந்து இவர்களை பார்த்ததில்லை.. காரணம் பணம்!! இவர்களது பொருளாதார நிலையில் ரொம்பவும் பின்தங்கியிருந்த அவர்களது வீட்டை பார்த்தே முகம் அஷ்ட கோணலாக்கி அதன் பின்னே உள்ளே நுழைவார்கள். நவியின் உழைப்பினால் ஓரளவு முன்னேறி இருந்தது அவர்கள் குடும்பம்!! இன்னும் 6 மாதத்தில் தம்பியும் படிப்பை முடித்து விட்டால்.. அவனும் தலை எடுத்து விட்டால்.. இனி நிம்மதி என்று இருக்கையில் தான் தந்தையின் திடீர் மரணம்!!
அதற்கு அடுத்து கெட்டது நடந்த வீட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று இந்த மாப்பிள்ளை வீட்டாரின் படையெடுப்பு!! அதுவும்
அவர்கள் இருக்கும் இந்த வீடும் சற்று தள்ளி இருக்கும் நிலமும் அவர்களை கண்களை உறுத்தியது அதாவது உறவினர்களின் கண்களை!! அதற்குத்தான் அதை விற்று இதை விற்று மகளின் திருமணத்தை சீக்கிரமாக முடி!! காலம் கெட்டுப்போய் கிடக்கிறது என்று அடுக்கடுக்காக அத்தனை அறிவுரைகள்.. போலியான அன்புகள்.. முகமூடி போட்டுக் கொண்ட அக்கறை முகங்கள்!!
பார்த்து பார்த்து சலித்து விட்டது நவிக்கு. ஆனாலும் அன்னையின் மனம் ஊசலாடும் ஊஞ்சலை போல அங்குமிங்கும் ஆடுவதை அறிந்து இத்தனை தூரம் வேப்பிலை அடித்து இருந்தாள், தம்பியையும் இதில் இழுத்து… ஆனாலும் உண்மையும் அதுதானே!! எல்லாவற்றையும் இவளுக்கே செய்துவிட்டால் அடுத்து அவனின் நிலை??
இவள் கூறியதை சற்று பட்டி டிங்கரிங் செய்து தனது அக்கா அத்தானிடம் அனைத்தையும் கூறினார் நவியின் அம்மா. அக்காவுக்கு தங்கை என்ற பாசம் அங்கே இங்கே கொஞ்சம் ஓடிக்கொண்டிருந்தது போலும் சரிதான் என்று விட்டார்.
ஆனால் அக்காவின் கணவருக்கு அதெல்லாம் இல்லை. “அட அவன் ஆம்பள புள்ள மா.. பொம்பள புள்ளைய தான் சீரோடும் சிறப்போடும் நல்ல குடும்பமாய் பார்த்து கட்டிக்கொடுக்கணும். இந்த மாதிரி இன்னொரு வாய்ப்பு எல்லாம் வரவே வராது!! வயசு ஏற ஏற இதைவிட வயசான மாப்பிள்ளைதான் கிடைப்பாங்க. காலம் போன கடைசியில் அவள இரண்டாம் தாரம்.. சொட்டை விழுந்தவன்… நாற்பத்தைந்து வயசானவன்.. இப்படித் தான் பார்க்கணும்!!” என்று அவரின் மனதில் இருந்த வன்மத்தை எல்லாம் இவ்வாறு காட்டிவிட்டுச் சென்றார்.
அவருக்கோ… எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இதுவரை தங்களிடம் வந்து நின்றது இல்லையே, இனியாவது வருவார்களா? அந்த எதிர்பார்ப்பு!! இன்னும் நம்மால் முடிந்த துன்பம் கொடுப்போமே என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்? என்று கேவலமான எண்ணங்கள்!! இப்படியும் சில உறவுகள் நம்மை சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்!! ஆனாலும் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று நாம் தான் அவர்களை கடந்து செல்கின்றோம். கடக்க முடியா நேரத்தில் கழட்டிவிட்டு செல்கின்றோம்!!
இதையெல்லாம் கேட்டு நவியின் அம்மாவுக்கு. அவ்வப்போது நெஞ்சுவலி வந்து கொண்டிருந்தது. அதை மகளிடம் காட்டாமல் மறைத்தாலும் ஒருசமயம் கொட்டி விட… வேண்டும் மட்டும் அன்னையைத் திட்டி, நல்ல மருத்துவமனையில் காட்டியவள், அன்னையை தன்னோடு சென்னைக்கு அழைத்து சென்று விட்டாள் சிறிது காலத்திற்கு…
மீண்டும் ஆறு மாத காலம் நன்றாக தான் சென்றது இடையில் நவ்னீதாவின் தம்பி மிதுனும் தனது படிப்பை முடித்து பெங்களூரில்
வேலை தேடிக் கொண்டான். சிறிது காலம் நவியோடு இருந்தவர் சென்னையின் உஷ்ணமும் தண்ணீர் பஞ்சமும் ஒத்துக்கொள்ளாமல் மீண்டும் தஞ்சாவூர் பார்க்க சென்று விட்டார்.
விட்டு விலகி இருந்த உறவுகள் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ள முயற்சி செய்ய.. என்னதான் தடுக்க முயன்றாலும் பெண்ணின் வாழ்க்கை முன்னிற்க.. எடுத்து செய்பவர்களும் உதவி செய்வதாய் கூற.. மீண்டும் நச்சரிக்க ஆரம்பித்தார் நவியை கல்யாணத்திற்கு!!
மனதில் இருக்கும் விருப்பத்தை அன்னையிடம் கூற முடியாமலும் அதே சமயம் வேறு ஒருவனை கணவன் என்று நினைக்க முடியாமலும் தவியாய் தவித்து தான் போனாள் நவி.
அதே சமயம் தான் இப்படி ஒரு காதல் என்று வந்து நின்றால்… சுத்தி இருக்கும் பிணந்திண்ணி உறவு கூட்டம் தன் அன்னையை கொத்திய தின்றுவிடும்!! போதாத குறைக்கு என்னால் நிறைய அவமானங்களும் படவேண்டும் என்னவன்!! கூடவே இவன் தான் என் காதல் என்று அறிமுகப்படுத்தினால் உடனே திருமணத்திற்கு நிற்பார் அன்னை!! என்னைப் போல அவனுக்கும் கடமைகள் அணிவகுத்து நிற்குமே??
என்ன செய்வது? என்று குழம்பினாள். அதைவிட.. அவனின் மனதில் தான் இருக்கிறோமா? என்ற பெரும் கேள்வி வேறு!!
மனதில் நீக்கமற நிறைந்து விட்டான் ஒருத்தன்!! அவனை மறந்து புது வாழ்வு என்பது அவ்வளவு சீக்கிரம் சாத்தியமில்லாதது. இன்னும் சிறிது காலம் தம்பியின் வேலையை காட்டி தள்ளிப் போடலாம். ஆனால் அதற்குப்பின்… ஒரு வயதிற்கு பின்… கண்டிப்பாக கல்யாணத்தை எக்காரணம் கொண்டும் தள்ளிப்போட முடியாதே!! என் செய்வேன் என்று இரவின் தனிமைகளில் அவளது தலையணை கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது அவளவன் மீது கொண்ட காதலால்!!
“காதலே தானா நிதா?” என்று விதுரனின் குரல் மெலிதாக அவள் காதுக்குள் கேட்க… தலையை குலுக்கிக் கொண்டவள் எழுந்து அமர்ந்து விட்டாள்.
காதலோ ஈர்ப்போ ஏதுவாகிலும் ஒன்று!!
வேண்டாம்.. என் பாதை மிக கற்களும் முள்ளும் நிறைந்தது. அதில் அவனையும் பிணைக்க வேண்டாம்!! கூடவே அவனும் தன்னைப் போல தான் கஷ்டப்பட்ட குடும்பத்தின் முதல் பட்டதாரி!! என்னை போலவே நிறைய கடமைகளும் கனவுகளும் கற்பாறைகளும் அவன்முன் அணிவகுத்து நின்றிருக்கும். எனக்காக அதை எல்லாம் உதறி விட்டு வர சொன்னால் இன்னும் பாவம்!! வேண்டாம்… வேண்டாம்… போனவைகள் போனவைகளாக.. கடந்தவைகள் எல்லாம் கடந்தவைகளாக இருக்கட்டும்!! இனி அவனை கண்டால் நண்பன் என்ற புள்ளியில் மட்டும் வைத்து பார்ப்போம் என்று இவள் திடமாக முடிவு எடுக்க… முடியுமா உன்னால்? என்று மனசாட்சி கேள்வி கேட்க.. முடித்து காட்டுகிறேன் என்று வீம்புவுடன் மீண்டும் தலையணைக்குள் முகம் புதைத்தாள்!!
இன்றோ அவனின் ஒற்றை ஸ்பரிசத்திலும்.. ஜஸ்ட் பிரெண்ட் என்ற வார்த்தையிலும்… முழுதாக தன் மனம் புரிந்து… கிடைக்காத காதலுக்காக தவம் போல அந்நிலவை வெறித்து நின்றாள் நவ்னீதா!!
Super sis ❤️