“என்ன மா? என்ன நிதா?” என்று அவளின் கலங்கிய கண்களை கண்டு மனதுக்குள் பதறி வெளியே நிதானமாக கேட்ட விரதனை தான் ஆழ்ந்து பார்த்தாள், ‘ஏன் உனக்கு தெரியாதா?’ என்று!!
ஆனால் பாவையவளின் பார்வையை கண்டுக் கொண்டவனோ கற்பித்து கொண்ட காரணமே வேறு!!
ஆம்!! அவனின் சற்றே உரிமையான தொடுதலில் தீண்டலில் அவள் கோபம் கொண்டு கலங்கி விட்டாள் என்றே நினைத்தான். அவன் மனமோ ‘உனக்குத் தானடா அது உரிமையான தீண்டல்! அவளுக்கு அது அத்துமீறல் தானே!!’ என்று தலையில் கொட்டி விட்டு செல்ல… ஆழ்ந்த அமைதி அவனுள்!!
எப்பொழுது இப்பெண் தன்னுள் வந்தாள் என்று கேட்டால்… அவனுக்கு தெரியாது!! சிறு சிறு அடிகளாக எடுத்து வைத்து இதய சிம்மாசனத்தில் சம்மணமிட்டு நன்றாக அமர்ந்து விட்டாள். ஆனால்… அவளுள் நான் இருக்கோனா? என்று கேள்விக்கு அவனுக்கு உரிமையாக அழுத்தமாக ஆம் என்று சொல்ல முடியவில்லை.
நிதாவுக்கு தன்னை பிடிக்கும்!! அது அவனுக்கும் தெரியும். அந்த பிடித்தல் என்பது அன்பு.. பாசம். அக்கறை.. நட்பு.. எல்லாம் சேர்ந்த கலவை என்று அவனுக்குப் புரியும். ஆனால் நேசம்??? காதல்??
அன்று அவளிடம் அத்துமீறிய அந்த இரவில் கூட அவனால் அவளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதன்பிறகு இரண்டு வருட இடைவெளியில் அந்த பொல்லா இரவை அவள் மறந்து இருப்பாள் என்றுதான் நினைத்து இருந்தான். அது போலவே அவளும் கேரளாவில் விதுரனை சந்திக்கும்போது அவனிடம் எதுவும் அதைப்பற்றி காட்டாமல் இருக்க.. அவள் மறந்து விட்டாள் என்று இருந்தானே ஒழிய அது அவளுள் பெரும் தீயை பற்ற வைத்தது பற்றி அவன் அறியவில்லை!!
போதாக்குறைக்கு கேரளாவிலும் அவர்களின் நெருக்கம் மீண்டும் அவளுக்கு தவிப்பை ஏற்படுத்திவிட விருப்பமில்லாத ஆணை வற்புறுத்த தயங்கியவள், அதைப்பற்றி பேசாமல் சென்றுவிட இவனோ அவளுக்கு பிடிக்கவில்லை என்றே நினைத்தான். இன்னமும் நினைத்து கொண்டிருக்கிறான்.
அவ்வப்போது அவள் கண்களில் தெரியும் அந்த மின்னல்… சந்தோசம்.. அது என்ன? அவன் மீது உள்ள பாசத்திற்கு அதிகப்படியான ஏதோ ஒன்றா? இந்த கண்ணீருக்கு என்ன அர்த்தம்?? என்று அவனுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்!!
‘இந்த பொண்ணுங்க மனச எப்படி டா கண்டுபிடிக்க?’ என்று நொந்து கொண்டான்.
‘அப்படி என்ன செய்துவிட்டேன்? தெரியாமல் சற்று லேசாக உதடு உரசியது பெரும் குற்றமா? அதிலும் என் மனதுக்கு பிடித்தவளிடம் தானே?’ என்று அவனும் கோபம் கொண்டான் அவளின் கலங்கிய கண்களை கண்டு!!
ஆனால் அவள் கலங்கி நின்றது அன்று தான் சொன்ன ஜஸ்ட் ஃப்ரென்ட் என்ற வார்த்தையை இத்தனை வருடம் கடந்தும் வேண்டுமென்றே திரும்பக் கூறி தன்னை பழிவாங்கி விட்டானே என்று!!
‘இன்னும் அவன் மனதில் நான் ஜஸ்ட் பிரண்டாக தான் இருக்கிறேனா? என்று நினைத்தவள் கண் முன்னே ஜூகு பீச்சில் நிகழ்ந்த பேச்சு.. முதல் நெருக்கம்!! அதன் பின்னால் மொட்டைமாடி முதல் முத்தம்… சற்றே வன்மையான முத்தம்!! கேரளாவில் குடில்களுக்கு இடையே ஏற்பட்ட தீண்டல் இல்லா தீண்டல்!! இவை அனைத்திற்கும் என்ன காரணம்? அது கூடவா தெரியாது அந்த மட்டிக்கு? இதற்கு மேல் அவனிடம் விவாதித்து பெறப்போவது ஒன்றுமில்லை!!’ என்று நினைத்தவள் அவனை திரும்பிப் பார்த்து ‘குட் நைட்!!” என்று செல்ல…
விதுரன் அன்று அவள் பிடித்ததுபோல் இன்று அவன் அவள் கைகளை பிடிக்க… உதிரவில்லை!! விலகவில்லை!! ஆனால் நிதானமாக அவனை திரும்பிப் பார்த்தவளின் கண்கள் குற்றம்சாட்டின..
‘சரிதான் போடி!! அப்படித்தான் பிடிப்பேன்!!’ என்று தெனாவட்டு பார்வை அவன் கண்களில் குடியேற… கையை உதற முயற்சித்தவளின் முயற்சிகள் தோல்வியடைய ரகசிய சிரிப்பு அவன் மீசைக்கு அடியில்!!
“பேசுவோமா நிதா?”
“ஒன்னுமில்ல… கேட்க பேச ஒன்னுமில்லை… விடுங்க என்னை!” என்றவள் சற்று அழுத்தமாக கையை விடுவித்துக் கொண்டு சென்று விட்டாள். சிகையை கோதிக் கொண்டான் செல்லும் அவளை பார்த்துக் கொண்டே…
மீண்டும் ஒரு விலகல்… இருவருக்கிடையே!! ஆனால் அதே சுற்றுதல் மூவரும் சேர்ந்து சாப்பாடுதல் என்று இருந்தாலும், இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. ஐந்து நாள் ட்ரைனிங் வெற்றிகரமாக முடிந்து மறுநாள் அனைவரும் செல்வதாக ஏற்பாடு!!
இம்முறை அந்தோணியோடு அவள் சென்னைக்கு செல்லவில்லை. அவளது அம்மா தஞ்சாவூர் இருப்பதால் திருச்சிக்கு டிக்கெட் எடுத்திருந்தாள். அந்தோணியிடமும் அவள் கூறியிருந்தால் அவனும் சரி என்று தலையாட்டி இருந்தான்.
அன்று வழக்கம் போல் இரவு உணவுக்காக அனைவரும் பேச்சும் பிரிவுமாக உண்டு கொண்டிருந்தனர். நாளை காலை அவரவர் அவரவர் இடத்திற்கு… அதன்பின் இதுபோல் சந்திப்பது கேள்விக்குறியே!! இனம் மொழி மதம் எல்லாவற்றையும் கடந்து தோழமை அங்கே பலருக்கு.. ஒன்றாக இருந்தாலும் சிலருக்கு ரயில் பயண தோழமைகள் போலவேதான்… இருக்கும் வரை சிரித்து பேசி சென்றவுடன் மறந்து விடுவோம் என்பது போல…
இவர்கள் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இம்லிக்கு அவனது பாய்பிரண்ட் இடமிருந்து போன் வர “ஆரம்பிச்சிட்டான்.. அஞ்சு நாள் நிம்மதியாயிருந்தேன். இன்னையோட டிரைனிங் முடிஞ்சதுன்னு சொல்லிட்டு வந்தது தப்பா போச்சு!! பாரு நைட்டே ஆரம்பிச்சுட்டான்!!” என்ற புலம்பலோடு சலித்த குரலில் இவர்களிடம் குறைப்பட்டவள், போனில் “ஹாய் சித்து…” என்று குழைந்து கொண்டே பேசினாள். இவர்கள் இருவரும் அவளை பார்த்து நமட்டுச் சிரிப்போடு தங்கள் உணவை உண்டு கொண்டிருக்க அவள் அருகில் வந்து அமர்ந்தான் சர்வேஷ்.. சர்வேஷ் ரெட்டி!!
இவன் வேற பிரிவில் வேலை பார்ப்பவன், ஆந்திராவைச் சேர்ந்தவன். அடுத்து நடக்கும் அப்ரைஷல் மீட்டிங்கில் சேலரி உயர்வதோடு இவனது பதவி உயர்வுக்கும் வாய்ப்புகள் அதிகம்!!
“ஹாய் நவி!!” என்று அருகில் அமர்ந்தவனை விசித்திரமாக பார்த்தவள் “ஹாய்!!” என்றாள். இதற்கு முன் பார்த்ததில்லை. இந்த ஐந்து நாள் ட்ரைனிங்கில் தான் அவனை பார்க்கிறாள். அதிலும் தன்னோடு பேச தான் வந்திருக்கிறேன் என்பது புரிய கேள்வியாக விதுரனை பார்க்க.. அவனும் தோளை குலுக்கியவாறு சாப்பாட்டில் மும்முரமாக இருந்தான்.
“நவி.. ஐ நீட் டு டாக் சம் பர்சனல்!!” என்றான் குறிப்பாக விதுரனை பார்த்துக் கொண்டே.
விதுரனோ சற்றும் அசையாமல் பேச வேண்டும் என்றால் பேசிக் கொள்ளேன், எனக்கு தெரியாமல் எந்த பர்சனலும் அவளிடம் இல்லை என்பது போல் உணவை இன்னும் நிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க.. அவனது எண்ணம் புரிந்த நவியின் முகத்திலும் சிறு புன்னகை!!
“பரவால்ல சொல்லுங்க சர்வேஷ்.. ஹி இஸ் மை…” என்று விதுரனை பார்க்க அவனும் அப்போது அவளை தான் பார்த்திருந்தான்.
சொல்லி விடுவாயா? எங்கே சொல்லித்தான் பாரேன் ஃப்ரெண்ட் என்று!! அத்தனை மிரட்டல் அந்தக் கூரிய கண்களில்!!
அதனை சரியாக படித்தவள் “ஹி இஸ் மை பெஸ்டி!!” என்று இக்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி கூறி அவனை சற்றே கடுப்படையச் செய்து ‘மேலே சொல்லு’ என்பதாய் சர்வேஷை பார்த்து கையசைத்தாள்.
“ஓஹ்!! இட்ஸ் கிரேட்!!” என்று விதுரனை பார்த்து சிரித்தவன் நிவியிடம் திரும்பி “எனக்கு உங்களை கொஞ்ச நாளாக தெரியும்!! எப்படின்னா ஒரு மீட்டிங்காக சென்னை வந்ததிலிருந்து.. சிக்ஸ் மந்த்ஸ் எகோ…”
“சோ..!!” என்று நிறுத்தி நிதானமாக கேட்டது நவி இல்லை விதுரன்.
அதுவரை அவளிடம் பேசிக் கொண்டிருந்தவனின் பார்வை விதுரனை பார்த்து அசட்ட சிரிப்பையும் ஒன்றை உதிர்த்துவிட்டு மீண்டும் நவியின் பக்கம் திரும்பி “ஐ திங்க்… ஐ ஃபால் இன் லவ் வித் யூ!!” என்றான் சிறு வெட்கத்தோடு..
சாப்பிட்டுக் கொண்டிருந்த நவிக்கு புரையேற. விதுரனுக்கு கண்ணு மூக்கு எல்லாம் செவசெவ என்று கோபத்தில் சிவந்திருந்தது. அதனை காட்டாமல் சர்வேஷ்யிடம் திரும்பி “சோ.. யூ திங்க் ஒன்லி!! நாட் கன்ஃபார்ம்!! அப்படியா?” என்று கேட்க இதற்கு என்ன பதில் சொல்வது என்று ஒரு நிமிடம் யோசித்தவன், “நோ.. நோ… கன்பார்ம் தான்” என்றான் அவசரமாக நவியை பார்த்துக் கொண்டே…
“ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்ட்…!!” என்றாள்.
“நீங்க கமிட்டடா?”
“நோ!!”
“வீட்டுல ஏதாவது அலையன்ஸ் பார்த்துவிட்டு இருக்காங்களா?”
“நோ!!”
“உங்களுக்கு பாய் ஃப்ரெண்ட் யாரும் இருக்காங்களா??”
“நோ!!”
“ஏதும் அஃபேர் இருக்கா??”
“ம்ம்ம்….” என்று இழுத்தவள் விதுரனின் கண்கள் பார்த்து அழுத்தமாக “நோ..!!” என்றாள்.
“நீங்க கமிட்டட் இல்ல.. வீட்ல வரனும் பாக்கல.. பாய் பிரண்டும் இல்ல… அப்புறம் ஏன் நீங்க என்ன கன்சிடர் பண்ண கூடாது?” என்று சர்வேஷ் பாயிண்ட்டை பிடிக்க… மெச்சுதலாக அவனை பார்த்தாள் நவி.
விதுரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.. அதை பார்த்த நவிக்கு சற்றே அவனை இன்னும் சீண்டும் எண்ணம் வர, “வொய் நாட்?? கன்சிடர் பண்ணலாமே!!” என்றாள் உதட்டை சுழித்து சிரிப்பை அடக்கி விதுரனை பார்த்துக் கொண்டே..
அதுவரை சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தவன் வேகவேகமாக உண்டுவிட்டு “எக்ஸ்கியூஸ் மீ!!” என்று எழுந்து சென்று விட்டான்.
இந்த பக்கம் இம்லி போனில் தன் பாய் பிரண்டோடு பேசிக் கொண்டிருக்க.. இங்கே சர்வேஷூம் நவியும் பேசிக் கொண்டிருந்தார்கள். எழுந்து சென்றவன் மீண்டும் பத்து நிமிடம் கழித்து வந்து பார்க்க… அப்பொழுதும் இவர்கள் ஏதோ சிரித்து பேசிக் கொண்டே இருப்பதை பார்த்தவனுக்கு இன்னும் பொச பொச என்று பொங்கி வந்தது பொஸஷிவ்னஸ்!!
இதுவரை அவன் முன்னிருந்த அவனின் கடமைகளை சற்றே ஓரம் தள்ளி வைத்து விட்டு தன் வாழ்க்கை துணைவியை முடிவெடுக்கும் கடமையை கையில் எடுத்துக் கொண்டான்.
அதன் பின் வழக்கம் போல இரவு உணவு முடித்து தன் அறைக்கு சென்றவளை வழியில் நின்று முறைத்துப் பார்த்தவன் “அவன்கிட்ட என்ன அவ்வளவு நேரம் பேச்சு வேண்டி கிடக்கு?” என்று கேட்க..
‘என்னையா?’ என்று ஒரு விரலை பக்கம் நீட்டி தன்னையா கேட்டவளை, அவன் ஆமாம் என்று தலையசைத்தவுடன், “கல்யாணம் செய்ய கேட்டார்.. வெறும் ஆள பாத்து சரி சொல்ல முடியுமா என்ன? அதுக்கு தான் அவருக்கு கொஞ்சம் இன்டர்வியூ வச்சேன்!! மனுஷன் பாஸ் ஆயிடுவான் போல இருக்கு?” என்று உதடு கடித்து யோசித்த வண்ணம் சொன்னவளின் இதழ்களை கடித்து குதறும் வெறியே வந்தது விதுரனுக்கு.
அதனை கண்டு தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவள், “சீக்கிரம் என்னை எங்கம்மா ஏதாவது ஒரு குக்ராமத்துக்கு தான் பார்சல் பண்ண போகுது.. அதுக்கு இப்படிப்பட்ட ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடலாம்!! வேலைக்கும் கூட போகலாம். ஹைதராபாத் சிக்கன் பிரியாணி செம டேஸ்டா இருக்குமாம்!! கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டியது தான்!! எப்படி நம்ம ஐடியா?” என்றவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே தன் அறைக்கு வந்து விட்டான் விதுரன்.
“போடா போ… நாய் கையில கிடைத்த தேங்காய் பழம் மாதிரி தான்!! இவனும் சொல்ல மாட்டான்.. சொல்ல வரவனையும் விட மாட்டான்!! நான் என்ன இப்படி ஔவையார் மாதிரி இருக்க போகிறேனா? இவனுக்காக எவ்வளவு நாள் வீட்டில் சமாதானம் சொல்லி காத்திருக்கிறது. ஒரு வாரத்தை இல்லை ஒரு பார்வை எதுவும் கிடையாது!! போடா மட்டி!!” என்று தன் போல அவனை திட்டிக் கொண்டே அறைக்கு வந்தவள் அனைத்தையும் பேக் செய்து ரெடியாக வைத்தாள்.
மறுநாள் காலை வழக்கம் போல ஒரு பிரிவு உபச்சாரம் இம்லியும் நவியும் செய்து முடிக்கும் முன் அந்த இடமே அவர்கள் கண்ணீரால் நனைந்தது. காலை உணவை இவர்களோடு முடித்தவன் இவர்களுக்கு முன்னே கிளம்பி விட்டான். ஒற்றை பை ஓடு!!
இம்லியையும் வழியனுப்பி வைத்தவள் ஆட்டோவில் செல்லும் பொழுது அத்தனை அழுகை இம்முறையும் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டான். ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து.. எதிர்பார்த்து… நாம்தான் பைத்தியமாகி போனோம்!!
“நீ ஏன் எதிர்பார்க்கிற? நீயே சொல்ல வேண்டியது தானே!!” என்று அவளது மனசாட்சி அவளை திட்ட..
“அதை சொல்ல தைரியம் இருந்தா அப்பவே சொல்லியிருக்க மாட்டேனா? ஓடிடு நீ உன் வேலையை பாத்துக்கிட்டு!!” என்று அதனை அடக்கி வைத்தவள் அழுகையை அடக்கி வைக்க முடியவில்லை. மடை திறந்த வெள்ளம் போல வந்து கொண்டே இருந்தது குற்றால அருவி போலக் கண்ணீர்… அவளை தான் அந்த டிரைவர் ஒரு மாதிரியாக பார்த்தான்.
அவன மாதிரி பார்ப்பதைப் பார்த்தவள் “பையா.. லவ் பெயிலியர்.. மீ க்ரையிங்… யூ காடி ஓட்டிஃபையிங் ரோட் பார்த்து!!” என்று தமிழ் ஆங்கிலம் ஹிந்தி அனைத்தையும் கலந்து வைத்து பேசியவளை கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது.
ரயில் நிலையம் வந்து இறங்கியவள் தனக்கான ரயில் எந்த நேரம் என்று பார்த்து அந்த பிளாட்பார்மில் சிறிது நேரம் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பின் தனக்கான கோச்சில் ஏறி தன் சீட்டில் அமர்ந்து விட்டாள்.
“போய்ட்டான்!! போயே விட்டான்!! ஒன்றும் சொல்லாமல்!” என்று மீண்டும் அழுக துடித்த கண்களையும் உதடுகளையும் அடக்கிக்கொண்டு அமர்ந்தவள் அருகில் உரசிக்கொண்டு அமர்ந்தவன் ஸ்பரிசமே சொன்னது அவன் யாரென்று!!
கதைப்போமா 16
தன் போல கதைத்துக் கொண்டிருந்தவள் அருகில் யாரோ அமர்வது போல் இருக்க… தன்னிச்சையாக இவள் சற்று நகர்ந்து உட்கார… மீண்டும் அவளை உரசிக் கொண்டு அமர்ந்தவன் ஸ்பரிசமே சொன்னது அவன் யார் என்று!!
அதுவரை போய்விட்டானா போய்விட்டானா என்று புலம்பிக் கொண்டிருந்தவள், வந்துவிட்டானா என்று நம்ப முடியாத ஆச்சரியத்தில் கயல் விழிகள் இன்னும் விரிய திரும்பி பார்க்க… விரிந்து விழிகளை தனது கூரிய விழிகளுக்குள் சிறைப்படுத்திக் கொண்டான் மாயவன்!!
அவள் கண்களில் மகிழ்வும் ஆச்சரியமும் கலந்து கூத்தாட… அந்த சந்தோசத்தில் பெருக்கெடுத்த கண்ணீரை உதடு கடித்து மறைத்துக் கொண்டவளை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டினான்.
“என்ன விதுரா? ட்ரெயின் மாத்தி இங்கே வந்து உட்கார்ந்திடீங்களா? இந்த ட்ரெயின் கோயம்புத்தூர் போகாது! சென்னையும் போகாது!! திருச்சி போகுது…” என்றாள் சற்றே முறைப்போடு!!
“தெரியுமே!!” என்றான் கையை மேலே தூக்கி நெளிவு எடுத்தபடி..
“தெரியுமா? லூசா இவன்?” என்றபடி இவள் பின்னால் சாய இப்போது அவனது இடது கை அவள் பின்னால் இருந்தது.
இவள் சற்று நகர்ந்து ஜன்னலோரம் அமர… இவனும் அவளை சற்று உரசிக் கொண்டே வந்து அமர்ந்தவனது கையோ இன்னும் அணைவாய்!!
திரும்பி அவனை பார்த்து “இப்ப என்ன?” என்று அவள் கேட்க…
“நத்திங்!!” என்றான் முகிழ்த்த சிரிப்பை இதழ்களில் அடக்கியவாறே…
‘என்னை சமாதானப் படுத்துவதற்காக தான் வந்திருக்கிறான். ட்ரெயின் கிளம்பவும் இவனும் கிளம்பி விடுவான்!’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் மனதின் ஓரத்தில் ‘நம்மோடு பயணிப்பானா?’ என்று எதிர்பார்ப்பும் இருந்தது.
அது செகண்ட் ஏசி கோச்… அதற்குள் மற்ற இருக்கைக்கான பயணிகளும் வந்து அமர்ந்து விட.. நவியோ அவர்களை பார்ப்பதும் திரும்பி விதுரனை பார்ப்பதுமாகவே அமர்ந்திருந்தாள். அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாவகாசமாகத்தான் அமர்ந்திருந்தான். ட்ரெயின் கிளம்புவதற்கான விசிலும் அடிக்கப்பட.. இவள் அவஸ்தை மற்றும் பிரிவு துயரை மனதில் அடக்கிக்கொண்டு விதுரனை பார்த்து “ட்ரெயின் கிளம்ப போகுது நீங்க கிளம்புங்க!” என்றாள்.
“ஏன்?” என்றவன் இன்னும் கால்களை மடித்து உட்கார்ந்து நன்றாக அமர்ந்தான்.
அதற்குள் ட்ரெயினும் கிளம்பி விட இவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க, “ஏன் ஃப்ரண்ட் திருச்சி வழியே கோயம்புத்தூருக்கு போகக்கூடாதா?” என்றான்.
“அதுக்கு என்ன பிரெண்ட் தரலாமா போகலாம்!! ஆனா உங்க லக்கேஜ் எல்லாம் எங்கே?” என்று கேட்டாள்.
“இருக்க வேண்டிய இடத்துல பத்திரமா இருக்கு ப்ரண்ட்!!” என்றவன் இன்னும் அவளை இடித்தபடியே தான் அமர்ந்து இருந்தான் மற்ற பயணிகளும் வந்துவிட…
வந்தவர்கள் அவனையும் கையிலுள்ள டிக்கெட்டையும் பார்த்து பேச ஆரம்பிக்கும் இவனே “ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ் ப்ரோ!!” என்றவன் நவியை மறைத்தபடி சைகையால் சண்டை சமாதானம் செய்கிறேன் என்ற உடன் அந்த பயணியும் சிரித்துக்கொண்டே வேறு இருக்கையில் அமர்ந்தார்.
“என்னடா தடியா சொன்ன அவர்கிட்ட? அவர் தள்ளிப் போய் உட்கார்ந்து இருக்காரு!!” என்று கேட்டவளை அதிர்ந்து நோக்கியவன், “டா வா!!! கொழுப்பு டி உனக்கு!!”
“பிரண்ட் அ டா போட்டு கூப்பிடலாம் விதுரா!! அதுவும் ஜஸ்ட் பிரண்ட் தானே டா!!” என்றவளின் குரலில் அவ்வளவு வலி!!
அப்போதுதான் இந்த மட்டி மரமண்டைக்கு புரிந்தது. இவள் என் இதழ் உரசலில் கோபம் கொள்ளவில்லை வாய் தவறி விழுந்த வார்த்தையால் தான் என்று!!
முருகா!! என்று தலையில் கை வைத்துக் கொண்டவன் “ஆரம்பமே அதிரடியாக இருக்கே.. இன்னும் போகப்போக எப்படி இருக்கும் தெரியலையே???” என்று புலம்பிக் கொண்டான். அவள் அறியாமல் தான்!!
“சரி சரி கிளம்பு!!” என்று அவளது கையை பற்றி இழுக்க.. மற்றவர்களை பார்த்து “கையை விடு விதுரா!! எங்கு இழுக்குற இப்ப நீ!!” என்றாள் பற்களுக்கு இடையே வார்த்தைகளை துப்பி…
அவள் புறம் குனிந்து “என் மேல் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டதும் அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. எழுந்து கோபமாக நின்று கொள்ள.. அவளது லக்கேஜையும் எடுத்துக்கொண்டு அவன் முன்னே நடக்க பின்னே நடந்தாள் மாது படபடக்கும் இதயத்தை பிடித்தப்படி!!
இரண்டு மூன்று பெட்டிகள் கடந்து.. தனி கூபே போன்ற முதல் தர வகுப்பில் அவன் நுழைய.. அதிர்வுடன் அவள் அப்படியே நிற்க..
திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவுடன் மனதில் எழுந்த படபடப்பை மறைத்தபடி விரல்களுக்கு இடையே ஷாலை சுழற்றியவாறு அவன் பின்னே அன்ன நடையிட்டு சென்றாள்.
இருவர் மட்டுமே பயணம் செல்லும் படியான தனி கூபே அது!!
இரவு பகல் பார்க்காது அவனுடன் தனியாக இருந்திருக்கிறாள் தான். அப்பொழுதெல்லாம் இல்லாத ஒரு பதட்டம் பயம் இப்பொழுது மங்கைக்குள் நங்கூரம் இட்டது!!
“ஏன்?” என்றாள் மெல்லிய குரலில்…
“இன்னும் நான் உன்னை பிரண்டாக தான் நினைக்கிறேனு.. நீ நினைக்கிறாயா?” என்றான் அவளைக் கூர்ந்து பார்த்தபடி…
“ஆமா… நீதான சொன்ன நான் உனக்கு பிரண்டுனு!!” என்று அவள் முகத்தை திருப்பிக்கொள்ள ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.
சில நொடிகள் வார்த்தைகளின்றி அவளின் முகத்தையே உற்றுப் பார்த்தான் விதுரன். கண்ணாடிக்குள்ளிருந்த அவன் கண்களின் பார்வை அவளை ஆழமாக ஊடுறுவிச் சென்று தாக்கியதில் அவளின் பெண்மைக்குள் மீண்டும் உஷ்ணமான அதிர்வலைகள் எழத் தொடங்கின…
ஒரு கையை அவள் கன்னத்தில் மெதுவாக வருடியவன், “ஓஹ்.. ப்ரண்டு?? இந்த ப்ரண்டுக்கு என்னை பிடிக்குமோ?” கேள்வி கேட்டான்.
“ஓஹ் பிடிக்குமே!!” என்றாள் திக்கி திணறி!!
“நிஜமா?” அழுத்தமாக வந்தது வார்த்தைகள்!!
“நம்புங்க சாரே.. உங்க ப்ரண்டுக்கு உங்க மேல அளவில்லா அன்பு சாரே” என்றாள் சற்றே குழைந்த சீண்டல் குரலில்…
“என்மேல உனக்கு அன்பிருக்குனு தெரியும்!! ஆனா அது இவ்வளவு ஆழமான அன்பா இருக்கும்னு நான் நெனைக்கல டி” என்றபடி வலது கை கட்டை விரலை நகர்த்தி மெதுவாக அவளின் உதட்டைத் தொட்டு நீவினான். அவளுக்கு உடல் சிலிர்த்தது. முகம் சிவந்து அந்தி வானமாக மாறியது. கண்களின் வழியாக மோகச் சூடு படருவதை உணர்ந்தாள். இருவருக்குமான தனிமையான நேரம் இனிமை சேர்ப்பதாய்!!
“வேண்டாம்!!” என்று அவள் நகர…
“ப்ளீஸ்டா நிதா… நான் உன்னை புரிஞ்சுக்கல… என் தொடுதல் தீண்டல் எல்லாம் உனக்கு பிடிக்கலைன்னு நினைச்சேன். என் மேல் உள்ள அன்பு பாசத்தை தாண்டிய நேசம் உனக்குள் இருக்கும்னு புரிஞ்சுக்காம போயிட்டேன். ப்ளீஸ் இந்த மட்டி மர மண்டையை கொஞ்சம் மன்னிப்பாயா?” என்று அவள் கைப்பிடித்து மண்டியிட்டு கேட்டவனை மறுக்க முடியவில்லை மங்கையால்!!
“கதைப்போமா… நம் காதலை காதலே!!” என்றவனை அவள் வாய் பிளந்து பார்க்க..
அவளின் மெல்லிய உதட்டை தன் கட்டை விரலால் மிருதுவாக வருடினான். அவள் உதட்டின் ஈரம் அவன் விரலில்…. மோகன புன்னகையோடு அவ்விரலை சுவைத்தான். ஒரு ஆழப் பெருமூச்சுடன் கண்ணை மூடிச் சிலிர்த்தவள், உதட்டை உள்ளிழுத்து கடித்துக் கொண்டாள் இவ்வுணர்ச்சியை தாங்க இயலாமல்…
அவள் கைகள் மேலெழுந்து வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டன இறுக்கமாக!!
“நிதா!!”
“ம்ம்ம்…!!”
“நீ அன்பான பொண்ணு மட்டுமில்ல… ரொம்ப அறிவும் கூட.. சில சந்தர்ப்பத்தில் அதை பயன்படுத்த தான் மாட்டேங்குற” என்றவன் நெற்றி முட்டி சிரித்தான்.
அவள் முறைத்தாள்!!
“நான் காதலித்தவன் ஒரு
மூளை இல்லாதவன்!! அவன் கூட பழகி பழகி நானும் மூளைய யூஸ் பண்றத மறந்துட்டேன்!!” என்றாள் கேலியாய்..
“இவ்வளவு அழகும், அன்பும், அறவுமா இருக்குற உன்மேல ஆசை இல்லாத உன் காதலன் ஒரு ரசணை இல்லாதவனாத்தான் இருக்கணும். உன்னோட அன்பை புரிஞ்சுக்காத அவன் ஒரு மூடன்தான்” எனச் சொன்னபடி அவள் கன்னத்தை தட்டினான்.
“ஆமா ப்ரண்டு!! உன்னளவுக்கு அவனுக்கு அறிவு இல்ல தான்!! சரியான மாங்கா மடையன்!! காதலியை காதலிக்க தெரியாத கல்லுளிமங்கன்!! இவ்வளவு நாளா காதலை புரிந்து கொள்ள தெரியாத முட்டா பீசு!!” என்று கிடைத்தது சாக்கு என்று அவள் பாட்டுக்கு விரதனை திட்டிக்கொண்டே சென்றாள்.
“அடியே… அடியே… போதும்டி!! நிப்பாட்டு!!” என்று அவள் வாயை பொத்தினான் தன் விரல்கள் கொண்டு!! அவளோ குறும்புடன் அவன் விரல்களை கடித்து வைத்தாள்.
“ஸ்ஸ்ஆஆஆ.. நீ ஒரு அசைவ பிசாசுனு தெரியும்!! ஆனா மனிதர்களையே தின்பேனு இன்னைக்கு தாண்டி தெரியும்!!” என்றான் தன் விரல்களை உதறிக் கொண்டே…
“ஆஹான்.. சைவ பிசாசா இருக்கிற நீயே அன்னைக்கு என் உதட்டை கடித்து குதறி வைச்ச.. நான் செய்யக் கூடாதா?” என்று அவள் மீண்டும் அவன் விரல்களைக் கடிக்க முனைய.. இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவளை இழுக்க.. விரல்களுக்கு பதில் அவன் இதழ்கள் மாட்டிக் கொண்டது அவள் இதழ்களுக்குள்!! விரும்பியே கொடுத்தான்… சுகத்தில் திளைத்தான்!!
அவள் வெட்கம் கலந்த பரவசப் புன்னகையுடன் மெதுவாக எழுந்துக் கொள்ள… சுடிதார் ஷால் கொஞ்சமாய் தோளை விட்டு சரிந்து மார்பின் திரட்சியைக் காட்டியது. பிறை நிலவுகளை அவன் கண்கள் ரசித்து பின் மீண்டது.
“தேங்க்ஸ் டி!!” அவள் கண்களைப் பார்த்தபடி அவளை நெருக்கமாக இழுத்து அணைத்தான். அவள் மென்மைகள் அவன் நெஞ்சில் மெத்தெனப் படிந்து அழுந்தின. அவன் கைகளுக்குள் அவளின் மென்மையான உடல் சுகத்தை உணர்ந்தாலும் அவளின் நெஞ்சு மட்டும் படபடவென அடித்துக் கொண்டது. அவள் கை, கால்கள் எல்லாம் கூட வெடவெடத்து நடுங்கியது. அவனின் இறுக்கம் அதிகரிக்க, அதில் அவள் மென்மையும் வன்மையாக அவன் நெஞ்சில் நசுங்க.. அவளை அணைத்து அவளின் பட்டுக் கன்னத்தில் பட்டும் படாமலும் உதட்டைப் பதித்து ஒரு முத்தம் கொடுத்தான் விதுரன்.
அவன் கைகள் அவள் முதுகைத் தடவின அவளுக்கு இளக்கம் செய்துக் கொள்ள… அவள் கைகளும் மெதுவாக அவன் உடலைத் தொட்டு பின் மெல்ல சுற்றி வளைத்து அணைத்துக் கொண்டன.
சில நொடிகள் இருவரும் அணைத்தபடி நின்றிருந்தனர். மெலிதான பதட்டம் தணிந்தபின் மீண்டும் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். பின் அவள் முகத்தை நேராக்கி அவளின் மெல்லிய உதட்டில் தன் சூடான உதடுகளைப் பதித்து முத்தமிட்டான் சற்றே அழுத்தமாக!! அவளோ அவனின் இதழ் ஸ்பரிசத்தில் உணர்வலைகளில் உச்சத்தில்!!
பெண்ணவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்ன, மன்னவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்தாள். “ரிலாக்ஸ் நிதா!!” என்று காது மடலில் கற்றை மீசை உரச கூறியவன் மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவன் கண்களை ஒரு நொடி பார்த்தவள், அதன் வசீகரத்தை அக்கண்களில் பொங்கும் காதலை தாங்க இயலாமல் உடனே கண்களை மூடினாள்.
“நிதா… ஓப்பன் யுவர் ஐஸ்!!” என்று அவள் காதுகளில் மந்திரம் சொன்னது அவன் இதழ்கள்!!
அவள் வெட்க முகத்துடன் புன்னகை காட்டியபடி அவன் முகத்தைப் பார்த்தாள். எவ்வளவு அருகில் அவன் முகம்? இத்தனை அருகில் அவனது முகத்தை பார்க்க எத்தனை நாள் ஏங்கி இருப்பாள்? இன்று அனைத்தும் கைக்கூடிய நிறைவு அவளது வதனத்தில்!!
அவனது மீசை முடிகள் அவளின் உதட்டுக்கு மேல் மென்மையாக் குத்த, மீண்டும் அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டான். இரண்டு கைகளையும் மேலே கொண்டு வந்து அவள் முகத்தைத் தாங்கிப் பிடித்தான். கட்டை விரல்களால் அவளின் கன்னத்தை வருடிக் கொண்டே மெல்லச் சொன்னான்.
“இன்னும் கூட என்னால நம்ப முடியல”
“எதை?”
“நீ என் கைக்குள்ள இருக்கேனு டி”
“நம்புங்க சாரே.. நான் உங்க இறுக்கமான பிடிக்குள்ளதான் இருக்கேன்.. பாருங்க மூச்சு விட முடியல!!” என்றாள், அவன் படியிலிருந்து விலக முற்பட்டு!!
“இல்லை. நான் தான் உன் பிடிக்குள்ள இருக்கேன்!!” என்றான் உணர்ந்து!!
“ஆஹான்…!!”
“எனக்கு மொத்தமாவே நீ வேணும் நிதா!! உன்கிட்ட இருக்குற எல்லாமே வேணும்.. உன் அன்பு.. கோபம்.. பாசம்.. நேசம்.. அக்கறை.. கொஞ்சல்.. கெஞ்சல்.. காதல்!! எல்லாமும்!!”
“நான் மொத்தமாவே உனக்குத்தான் விதுரா..”
“உன்னை.. அங்கம் அங்கமா.. அணு அணுவா நான் ரசிக்கணும்”
“ரசிச்சுக்கோ…”
“வெகுளியான உன்னோட அழகு முகம் என்னை கவிதை சொல்ல வைக்கிற நிலவு டி கண்ணம்மா” என்று அவள் கன்னத்தை வருடினான். அவன் மூச்சுக் காற்று அவள் முகத்தில் பட்டு அவளைக் கிறங்க வைத்தது. வாயைத் திறந்து பேச முடியாமல் நின்றாள். அவள் முகத்தை ரசித்து நெற்றியில் இருந்து மெல்ல விரலால் கோடிழுத்தான்.
“உன்னோட இந்த கருவண்டு விழிகள் ரெண்டும் கனவுகளோட சொர்க்கம்!! மினுங்கும் செழுமை கன்னங்களும்.. கொஞ்சமா சிவந்த கனிந்த இதழ்களும்.. மனசை மயக்கற மாய வலைகள். உன்னை பாத்த அன்னைக்கே நான் அந்த மாய வலையில சிக்கிட்டேன். ஆனால் காதலுக்கான நேரம் இது இல்லை என்று எனக்கு நானே மேலும் பல தடைகளை தளைகளை உருவாக்கிக் கொண்டேன். காரணம் என் முன்னே இருந்த பொறுப்புகளும் கடமைகளும். ஆனால் அதை எல்லாம் உடைத்து எறிந்து இதோ நீ என் பக்கத்தில்!!”
அவளோ அவன் வார்த்தைகளில் ஆழ்ந்து இருந்தாள்.
“ஆனா நீயே இப்படி.. என்னை காதலிப்பேனு நான் சத்தியமா எதிர் பாக்கல.. நிதா !!” எனக் கொஞ்சிப் பேசி அவள் மூக்கின் முனையில் மூக்கைத் தேய்த்து பின் முத்தமிட்டான் அழகாக!!
அதன் பின் அவளை முதன்முதலில் ட்ரெய்னிங் காக ட்ரெய்னில் வரும்போது பார்த்ததில் இருந்து.. அவள் பக்கம் திரும்பும் தன் மனதை கடிவாளமிட்டு அடக்கியது முதற்கொண்டு.. பார்ட்டியில் கணேஷ் அவளிடம் பிரபோஸ் பண்ண போவதை எண்ணி கோபம் கொண்டு அவளிடம் சற்றே மூர்க்கத்தனமும் உரிமையுடன் நடந்து கொண்டதும்.. பின்பு கேரளாவிலாவது தன் மனதைத் திறக்கலாம் என்று எண்ணி அதுவும் நடக்காமல் போனது கூறி வருந்தினான்.
“இப்போதும் மூத்த மகனாய் என் பொறுப்புகளும் கடமைகளும் இருக்கு. ஆனால் அதே சமயம் என் வாழ்க்கையை விடப்போவதிலை!!
மூன்று வருடங்களாக உன் மீது காதல் கொண்டு காத்திருக்கும் இந்த காதலனுக்காக கொஞ்ச நாள் நீயும் காத்திருப்பாயா கண்மணி?” என்றான்.
“அதுவரை… என்ன செய்வது விதுரா?” என்று அவள் யோசனையுடன் கேட்க…
“கதைப்போமா காதலே?? இதுவரை கதைக்காத நம் காதலை!!” என்றவன் கூறி அவள் முகம் பார்த்திட… கிங்கினியாய் சிரித்தபடி அவன் மார்பில் முகம் சாய்ந்தாள் பெண்ணவள்!!
So lovely 🥰
Super sis