“இந்த சொம்பு போய் இவ்ளோ நேரம் ஆச்சு… இன்னும் ஒரு தகவலையும் காணலையே?? என்னை பத்தி தானே சொல்ல சொன்னேன்.. நாலஞ்சு பிட்டு வேற எக்ஸ்ட்ரா போட சொன்னேன்!! எதுக்கு எக்ஸ்ட்ரா பிட்டெல்லாம்? நாம ஒரிஜினலா செஞ்சதை சொன்னாலே.. அவன் அரண்டு ஓடிடுவான்!” என்று யோசித்தபடி அவள் கிளையில் நின்றிருக்க தூரத்தில் இவர்கள் இருவரையும் பார்த்தவள், “என்ன ரெண்டு பேரும் சோடி போட்டு கிட்டு வராக?” அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே.. அவர்கள் நெருங்கி வர..
“என்னை இந்த கோலத்துல பார்த்தா என்ன நெனைப்பாங்க?” கையில் இருந்த கொய்யாவையும் தன்னையும் பார்த்தவள் சட்டென்று மறைவாக அந்த கிளையில் அமர்ந்து கொண்டாள்.
அவளுக்கு கார்த்திக் அந்த மரத்தின் பக்கம் வருவான் என்று ஒரு சதவீதம் கூட நினைப்பில்லை!! சொம்பு அவனை கூட்டிக்கொண்டு சென்று இருப்பான் என்று நினைத்திருந்தாள்.
நண்பன் கூப்பிட்டதும் ஓடி விட்டான் சொம்பு!! காரணம்.. மேகலை சொல்லிவிட்டாள் என்று அவளை பற்றி அள்ளி விட்டான் தான்.
“அக்கா சொன்னங்கனு ரெண்டு மூணு பிட்டு நல்லா போட்டு விட்டேன்டா.. இனிமே அத மெயின்டெயின் பண்ண வேண்டியது அக்கா பொறுப்பு!! ஐயாவுக்கு இது தெரிஞ்சது.. என்னை வகுந்துடுவாரு” என்று நண்பனிடம் சொல்ல, இருவரும் ஓடிவிட்டனர்.
ஆசுவாசமாக முடித்தவன் பாக்கெட்டில் இருந்த சானிடைஷரை கொண்டு கையை நன்றாக துடைத்துக் கொண்டான், சானிடைஷர் எல்லாம் கொரோனா உபயம்!!
ஆனாலும் ஏனோ வயிறு சரியில்லாதது போல உணர்ந்தான்.
“பொண்ணு பார்க்க வந்தது ஒரு குத்தமாடா?” என்று அண்ணாந்து பெரு மூச்சு விட்டவனின் கண்களில் பட்டது ஜல்ஜல் கொலுசு அணிந்திருந்த சிவந்த பாதங்கள் இரண்டு!!
அந்த அந்நேரத்தில் அரண்டு அவன் கத்த.. அந்த கத்தலில் பயந்து பதறி நிலை தவறி அவள் விழ..
மோகினி பிசாசை எதிர்ப்பார்த்தவன்
மேல் தொப்பென்று அவள் விழுந்திருக்க.. அவள் இடையோடு சேர்த்து அணைத்த வாக்கில் நின்றிருந்தான்.
அவளுடைய கை இடுக்கில் இருந்து, கீழ் நோக்கி.. சதை பிடிப்பில்லாத அவளுடைய மெல்லிடையில் அவன் முரட்டு கை அழுத்தமாக பதிந்திருக்க.. அவனை அறியாமல் அவன் விரல் நுனி அதன் மென்மையை உணர்ந்து வருட வருட, அவள் கையில் இருந்த பூனை மயிர்கள் கூட சிலிர்க்க..
“கீழ விடுங்க என்னை!” என்றாள் பயந்த சன்னக்குரலில்… அவனும் மெல்ல மெல்ல அவளை இறக்கினான்.
அவனுடைய முகம் அவளது தொப்பை இல்லாத ஆலிலை வயிற்றை நெருங்க.. நெருங்க..
அவள் உடல் முழுதும் நெருப்பை போல் கொதிக்க.. அவனது கூர் மூக்கு.. அடர்ந்த மீசை.. தடித்த சிவப்பான இதழ்கள் அவளது ஆலிலை வயிற்றின் வைரக்கலாய் இருக்கும் அந்த நாபிச்சுழியில் இம்சிக்க… அவளால் தாங்க முடியாமல், அவன் தலையை அவள் தள்ள.. அவன் உடம்பு அவனே அறியாத உணர்வுகள் பரவி படர்ந்து
அவனை ஆட்ட… அவனது இதழ்கள் நாபி சுழியில் சற்று அழுத்தமாக பதிந்ததோ?? என்று யோசிக்கும் முன் அவள் அவனை தள்ளி விட பிரயத்தனம் பட.. அந்த தள்ளு முள்ளில் இருவருமே விழுந்தார்கள்.
தன் மீது விழுந்த அணங்கவளின் அழகிய முகத்தை தான் பார்த்திருந்தான் கார்த்திக்!!
அவளின் மூடிய கண்களில் தெரிந்த
கருவழியின் சதிராட்டமும்…
மாதுள பழ நிற உதடுகளில் முணுமுணுத்த சாரியும்…
அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்த தளிர் விரல்களின் திரட்சியும்..
அவள் பெண்மையின் வாசமும்..
நெருங்கி விழுந்தவளின் மென்மைகளின் ஸ்பரிசமும்..
அவனின் ஆண் மனதை கிறக்கி முயக்கும் வேலையை பார்த்தன செவ்வனே!!
அவள் மூக்கு அவனின் மூக்கோடு முட்டி மோதி முட்டி நிற்க…
அவளின் மூச்சு காற்று அவனின் மூச்சு காற்றோடு உரசி அவனது சுவாசத்தில் கலக்க..
அவனின் இதயத்துடிப்பு அவளது வலது நெஞ்சில் பலமாய் துடிப்பதை போலவே அவளின் இதயத்துடிப்பும் தன் வலது நெஞ்சில் துடிப்பதை உணர்ந்த சமயம்.. சொல்ல முடியாத ஆழிபேரலையாய் அவனை அடித்து புரட்டிப் போட்டது அவளின் நெருக்கம்!!
அவனை அணைத்தபடி கிடந்தவளின் அழகிய ரோஜா மொட்டு இதழ்களை அவன் இதழருகில் உரசியும் உரசாமலும்.. தீண்டியும் தீண்டாமலும்.. உரிமையோடு உலாவின!!
“இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தோம்னா.. இந்த மோகினி பிசாசு நம்மை மயக்கிடுவா போலையே!” என்று தலையை இடது வலமாக ஆட்டிக் கொண்டவன், மெல்ல அவளைத் தள்ள.. அவளுக்கும் பெரும் அதிர்ச்சி தான்!! தூக்கி வாரிப் போட எழுந்துக் கொண்டாள்!!
மேகலை உணரும் முதல் ஆணவன்!! அவன் ஸ்பரிசத்தில் அவள் முகத்தில் அழையா விருந்தாளியாய் வெட்கம் வந்தமர.. கூடவே பதட்டமும் பயமும் துணைகளாக!!
அவள் வாழ் நாளில் அனுபவித்திராத புது வித உணர்ச்சி அவளை மொத்தமாக தாக்கியது. அவனை விரட்ட நினைத்தவள்.. அவனில் வீழ்ந்து கொண்டிருந்தாள் அவளை அறியாமலே!!
சிலு சிலுவென்று காற்று வீசினாலும்.. அவள் உடல் முழுதும் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் நேரடி பார்வை தவிர்த்து நின்றிருக்க.. ஆனாலும் ஓர விழியால் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
ஆணவனின் அணைப்பு அவளின் இளமை நரம்புகளை இதமாக தீண்டி விட.. அவளால் நம்ப முடியாத அளவுக்கு சுகமான ஒரு இன்ப உணர்ச்சியைக் கொடுத்தது.
இதுவரை அறியாத இளமை உணர்வு!!
அதை அறிந்துக் கொள்ள துடிக்கும் வேகம்!! என தனை மறந்த நிலையில் அவள்!!
நம்ம மரத்துகிட்ட ஒதுங்கினா போது இவள் பார்த்திருப்பாளோ? நாம பயந்து அலறியதை கண்டுபிடித்திருப்பாளோ? என்று சிந்தனையில் அவன்!!
இருவரும் இரு வேறு நிலையில் தத்தம் சிந்தனையில் உணர்வில் கட்டுண்டு கிடக்க.. அந்நேரம் வந்தான் பூபாலன் கரடியாக..
‘வெளியில் சென்ற மாப்பிள்ளைய காணுமே?’ என்று ஒரு புறம் யோசனை, மறுபுறம் ‘எவ்வளவு நேரம் இந்த கூட்டத்துக்கு இடையே உட்கார்ந்து ஆமாம் சாமி போடுவது?’ என்று நினைத்தவன், மெல்ல பசுபதியின் உறவுக்காரர் ஒருவரிடம் “ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?” என்றதும்..
“அது பொறத்தாப்புல இருக்குங்க தம்பி! இருங்க நான் கூட்டிட்டு போறேனுங்க!” என்றார்.
“இல்லை இல்லை நானே பார்த்துக்கிறேன்!” என்று மெதுவாக எழுந்து வெளியே வந்து விட்டான்.
“ஹே மாப்புள.. இங்க என்ன பண்ற?* என்று இருவரையும் மேலும் கீழும் பூபாலன் பார்க்க..
“பேசலாம்னு வந்தேன் மாமா!” என்று அதரடியாக பதில் தந்த மாப்பிள்ளை அதிர்ச்சியோடு பார்த்தான் பூபாலன்.
‘இவன் ஏதாவது எக்குத்தப்பா பேசி நம்மை சிக்கலில் மாட்டி விட்டுருவான் போலையே?’ என்று பயந்தவன் “போதும் போதும் பேசுனது! எனக்கு ரெஸ்ட் ரூம் காட்டு!” என்று அவனையும் இழுத்துக் கொண்டு நடந்தான்.
“அதுக்கு எதுக்கு என்ன கூப்பிடுறீங்க? எனக்கு எப்படி தெரியும்?” என்று இவன் மேகலையை பார்க்க..
“வாங்கங்கணா.. வாங்கங்கண்ணா..” என்று அவர்கள் வீட்டுக்கு பின்னால் இருந்த டாய்லெட்டுக்கு அழைத்து சென்றாள்.
உள்ளே அவன் நுழைந்து கதவை சாத்த.. அவர்கள் வெளியில் நிற்பதை பார்த்து “பாப்பா.. நீ போம்மா!!” என்று அவன் கையசைக்க..
“ஏனுங்க.. நீங்க பார்த்து பத்திரமா போங்!” என்றாள் விழியை விரித்து..
நன்றாக அவள் புறம் திரும்பிய கார்த்திக் “என் மாமா என்ன போருக்கா போக போறாரு.. பாத்ரூமுக்கு தானே போறாரு!! இதுல என்ன பத்திரமா போக வேண்டி இருக்கு?” என்று அவன் பல்லை கடித்துக் கொண்டு பேச…
“அதில்லிங்.. நம்ம மேல தெரு மருதமுத்து இல்லிங்..” என்று அவள் ஆரம்பிக்க முன் இடைபுகுந்து வெட்டியது பூபாலன் வார்த்தை!!
“யாரு அவன்?” என்று தெரிந்துக் கொள்ள வினவ..
“அதாங்கங்கணா… நம்ம பங்காளி முத்துசாமி கவுண்டர் இல்லிங்.. அவரு ஒன்னு விட்ட மாம மகன் சாரங்கபாணி இருக்காரு இல்லிங்.. அவரு பொண்டாட்டியோட இரண்டாவது தம்பியோட மூணாவது மச்சினனுக்கு…” என்று அவள் ஆரம்பிக்கவும் பெரிதாக கும்பிடு போட்ட கார்த்திக், “அம்மா தாயே.. சொல்றத சீக்கிரமா சொல்லு!!என் மாமாவுக்கு அர்ஜெண்ட்!”
“என்ற கிட்ட ஈவா செண்ட் தானுங்களே இருக்கு.. அர் செண்ட் இல்லீங்களே.. பொழுத்தாப்புல சொம்ப விட்டு வாங்கி வர சொல்லவாங்க?” என்று அவள் கேட்க..
“ஓ மை காட்!! ஏய்.. என் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு! அந்த மருதமுத்துவுக்கும் அவர் பாத்ரூம் போறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான்.
“அது இல்லிங்… அவருங் ரெண்டு மாசம் முன்னாடி பாத்ரூம் போக உள்ள நுழைய…”
கன்டினியூ என்று அவளிடம் கார்த்திக் கை அசைக்க..
“அவரு உள்ள போன கொஞ்ச நேரத்திலேயே அந்த பாத்ரூம் ஓட்டையில இருந்து ஒரு பெரிய பாம்பு வந்து… அவர கொத்திட்டாமுங்க…” என்றாள் முகத்தில் அத்தனை பயத்தை தேக்கியபடி…
“எதே.. பாம்பா!!” என்று அலறிய பூபாலன் பாத்ரூமில் இருந்து வெளியில் வந்து நின்று அவளை கேள்வியாய் பார்க்க..
“ஆமாங்.. நல்ல கரு கருனு கருநாகமுங்க.. ஒரே போடு! அவ்வளவு தான் சத்தம் கேட்டு ஊரே கூடி போச்சுங்க!” என்று அவள் சொல்ல சொல்ல.. பூபாலனுக்கு மெலிதாக வியர்த்தது!! கார்த்திக்கும் சற்று பயம் தான். அவனை அறியாமல் சுற்றுப்புறத்தை கண் ஆராய்ந்தது.
பாம்பு என்றால் படையே நடுங்கும்போது.. இவர்கள் நடுங்க மாட்டார்களா?
முதலில் பாம்பு என்றதும் பயந்தான் தான். “ஆமா.. இதுக்குள்ள எப்படி பாம்பு வரும்?” என்று பூபாலன் சற்று யோசனையோடு கேட்க..
“என்னங்கங்ணா… நீங்க அறிவோடா தான் பேசுறிங்களா? சுத்தி இருக்குறத பாருங்.. எல்லாம் காடு வயலு.. தோப்பு தொரவு..!! உங்க ஊரு மாதிரியா ஒரே வீடா காங்கிரிட் காடாவா இருக்குங்? இது இயற்கையோடு இணைந்த இயைந்த வாழ்வுங்!! இங்கே பாம்பு பல்லி பூரான் நண்டுவாக்களி தேளு எல்லாம் அது பாட்டுக்கு அது இஷ்டத்திற்கு போகுமுங்.. வருமுங்!! நாமதானுங்க சூதானமாக இருக்கோணும்! அதுகள நாம டிஸ்டர்ப் பண்ணிட கூடாதுங்க.. அப்புறம் அதுகளுக்கு கோவம் வந்து பட்டுனு போடுச்சுதுன்னா.. நம்ம பொட்டுன்னு போயிடுவோமுங்..!!” என்று ஏகத்துக்கும் பயமுறுத்தினாள்.
அவள் சொல்வதைக் கேட்டு கேட்டு கலங்கிய வயிறு கூட அதிர்ந்து நின்றுவிட.. பாத்ரூம் ஆவது ஒன்னாவது என்று பூபாலன் வீட்டுக்குள்ள போறேன் என்று ஓடிவிட்டான். அவன் பின்னே இவளை முறைத்துக் கொண்டு கார்த்திக்கும் சென்று விட்டான்.
அப்படி ஒரு சிரிப்பு நம் மேகலைக்கு!! அவர்கள் ஓடுவதைப் பார்த்து… “ஆளுதான் பட்டணத்தான் படிச்சவனானுங்க.. இதுக்குள்ள பாம்பு வருமா வராதானு ஒரு ரோசன கூட இல்ல பாரு.. அய்யோ அய்யோ!” என்று அவள் சொல்லி சொல்லி சிரிக்கும் போது பக்கத்தில் உஷ்.. உஷ்.. என்று எங்கிருந்தோ சத்தம் கேட்க..
“பாம்புனு சொன்னவுடனே நெஜமா வந்துவிட்டாரு போலையே இந்த நாகராஜன்!! அய்யோ சாமி! நான் இல்லிங்கோ…” என்று ஓடியே போயிட்டாள் அவளும் அவர்கள் பின்னோடு!!
“குடும்பமாடா இது!! பூரா விவகாரமா தான் இருக்கு! பொண்ணு பத்தி கேக்கலாம்னு பார்த்தா.. இளநீர வைத்து மண்டைய உடைச்சான்னு அவன் கதை சொல்றான்! அங்கிருந்து ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு ஒதுங்கினா.. இவ அனகோண்டா கதை சொல்லுறா! பாம்பு வருமாம் இல்ல.. அதுவும் ரெஸ்ட் ரூம்ல இருந்து!!” அதை நினைத்து பார்க்கவே அவனுக்கு கடுப்பாக இருந்தது.
“அப்பாவுக்கு ஏன் இப்படி ஒரு ஊர்ல பொண்ணு எடுக்க ஆச வரனும்?” என்று புலம்பினான் கார்த்திக் எல்லாம் மனதோடு தான்!
அவனுக்கு தெரியவில்லை அவர்களின் வேர் இது தான் என்று!! அந்த வேரின் மகத்துவமும் புரியவில்லை!!
அவன் தீர்மானித்தால் மட்டும் போதுமா?
விதி மட்டும் சதி செய்யவில்லை!! பசுபதி மீதான கிருஷ்ணகுமாரின் பய பக்தியும் மரியாதையும் சேர்ந்து கூட்டு சேர.. சீக்கிரம் இந்த கருத்தம்பட்டிக்கு மாப்பிள்ளையாக போகிறான் நம் கார்த்திக்!!
இந்த பக்கம் பூபாலனும் மேகலை சொன்னது கேட்டு பாம்பு கடித்தது போல பயங்கர கற்பனையில் இருந்தான். அதற்கே அவனது உடல் நடுக்கத்தில் குலுங்கியது.
‘கற்பனை பண்ணத்துக்கே வலிக்குற மாதிரி இருக்கே.. கடி வாங்கினவனுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்?’ என்று தலையை உலுக்கி கொண்டவன், இனி இந்த ஊரு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்று தீர்மானித்தான்.
“என்ன மாப்புள.. ஒரே யோசனையா இருக்க?” என்றான் பயத்தோடு!
‘இவர் வேற.. நேரம் கெட்ட நேரத்துல..’ என்று முதலில் ஏன் சொல்ல வேண்டும் என்று யோசித்தவன், பின்பு ‘இவரும் சேர்ந்து பயந்து சாகட்டும்..!’ என்று நினைத்தவன் சொம்பு சொன்னதையும் நிஜமாகவே பாம்பு கடித்து இறந்தவர்கள் பற்றி அள்ளி விட..
கார்த்திக்கின் கையை பிடித்த பூபாலன், “என்ன மாப்புள.. நிஜமாகவே அப்படி உள்ள இருக்குமாடா? நீ இந்த ஊருக்கு மாப்பிள்ளையா வந்தா என் உசுருக்கு கேரண்டியாடா?” என்று அவன் கேட்ட தொணியில் கார்த்திக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர.. அதை அடக்கிக் கொண்டவன், “தெரியுதுல.. உங்க மாமனார் கிட்ட சொல்லி இந்த ஊரும் வேணாம்! இந்த பொண்ணும் வேணாம்னு சொல்லி கிளம்ப சொல்லுங்க” என்றான்.
“நான் எப்படி டா மாப்புள சொல்றது?” என்றான் பூபாலன் தயக்கத்துடன்..
“நீங்க தானே எங்க வீட்டுக்கு மாப்பிள்ளை!! அதுவும் ஒரே மாப்பிள்ளை!! மாப்பிள்ளை என்கிற மரியாதை கொஞ்சமாவது இருக்கணுமா இல்லையா? இல்ல அது வேஸ்டுனு பூட்டி வச்சிருக்கீங்களோ? அதெல்லாம் தூசி தட்டி எடுங்க!! நீங்க சொல்றத கேக்கலைன்னா உங்க பொண்ணு உங்க வீட்டுக்கே வந்துடும்னு பயமுறுத்துங்க!!” என்று இவன் மாமனுக்கு ஐடியா கொடுக்க.. பூபாலனுக்கு உள்ளம் நடுங்கியது அதன் பிரதிபலிப்பு அவன் கைகளில் தெரிய…
“என்ன மாம்ஸ் கை கதக்களி ஆடுது” என்றவனிடம்,
“கை மட்டும் கதக்களி ஆடுதுனு சந்தோஷப்படு மாப்புள!! உங்க அக்காவை, உங்க வீட்டோட வச்சிங்கன்னு பேசினேன் வை.. அவ காளி ஆடிடுவா மாப்புள!! உன் வாழ்க்கையை காப்பாத்துறேன் என் வாழ்க்கையை பலி கொடுத்து விடாதே மாப்புள! மாப்பு வைச்சிடாதேடா ஆப்பு!” என்று வடிவேல் வாய்ஸில் கெஞ்சினான்.
கார்த்திக் அவ்ளோதானா நீ என்று அவனை முறைத்து பார்க்க..
“இப்ப என்ன இந்த கல்யாணம் பிரச்சனையா? இல்ல பாம்பு பிரச்சினையா? இனி உன் மாமனார் வீட்டுக்கு வந்த நான் ரெஸ்ட் ரூம் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்.. நீயும் படுக்காத!! வரும்போது கேரவன் வாங்கிட்டு வந்துடுவோம் போதுமா!” என்று கூறி தான் ஒரு கனகச்சித கணவன் அனித்ராவுக்கு என்பதை நிரூபித்தான் பூபாலன்.
கார்த்திக் அப்போதும் முறைப்போடு அமர்ந்திருக்க.. ‘டேய் மாப்புள.. உங்க அப்பா மூஞ்ச பார்த்தியா? அந்த பொண்ண பார்த்ததுமே ஏதோ தெய்வத்தை பார்த்த பக்தனின் பரவசம் போல எத்தன பரவசப்படுறாருனு.. மரியாதை கொடுக்கிறார்!! இந்த கல்யாணம் நிக்க வாய்ப்பே இல்ல ராசா.. வாய்ப்பே இல்லை!! சீக்கிரம் கல்யாண கனவு காண ரெடியாகு!” என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டான்.
அதற்குப் பின் விருந்து தடபுடல் பட மதிய விருந்தை முடிக்கும் முன் ஒரு வழியாகிவிட்டான் கார்த்திக்!
பின்ன மாப்பிளை என்றால் சும்மாவா? பார்த்து பார்த்து சொந்த பந்தங்கள் கவனிக்க.. தீர தீர இலையில் பதார்த்தங்களை அடுக்க.. முடியாமல் பாதியை அருகில் இருந்த பூபாலன் இலைக்கு தான் மாற்றினான்.
ஏற்கனவே கார்த்திக் சொன்ன சங்கதியில் கலவரமாகி இருந்தவன் வயிறு, இவன் வைத்ததையும் உண்ண முடியாமல் தத்தளிக்க… “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து கிளம்புகிறோம்” என்று மனைவியை அழைத்துக்கொண்டு கோயம்புத்தூரில் இருக்கும் கிருஷ்ணகுமாரின் வீட்டிற்கு உள்ளே நுழைந்ததுமே, மனைவியை கையை பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்து அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான் பூபாலன்!!
‘ஆனாலும் உங்க மாப்பிள்ளைக்கு இவ்வளவு அவசரம் கூடாதுங்க.. ஒரு இங்கிதம் இருக்கா மாமனார் மாமியார் இருக்காங்கன்னு? பாவம் என் பொண்ணு.. இவர்கிட்ட என்ன பாடுபடுகிறாளோ?” என்று வெட்கப்பட்டு கொண்டே பாமா உள்ளே செல்ல.. கிருஷ்ணகுமாரும் தலையாட்டி விட்டு அவர் பின்னே சென்று விட்டார்.
கார்த்திக்குக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.
அங்கே நோ இஸ்கு!! எல்லாம் அவனின் வயிற்று கலவரத்தை காலி செய்ய தான் என்று தான் அவனுக்கு தெரியுமே!!
அதுக்கு எதுக்கு மனைவியும் கூட? எல்லாம் ஒரு தைரியத்துக்கு தான் மனைவியின் துணையோடு போனான் பூபாலன்!!
மேகலை சொன்னதை தனக்கு சாதகமாக்கி கல்யாணத்தை நிறுத்தலாம் என்று தன்னால் முடிந்த வழிகளில் எல்லாம் செயல்பட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்!!
ஆனாலும் கிருஷ்ணகுமார் “கல்யணம் முடிவானது.. முடிவானது தான்!” திடமாக இருக்க…
முடிவாகிவிட்ட கல்யாணத்தை எப்படி முடிச்சு விட என்று தெரியாமல் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்கு கிளம்பி விட்டான் கார்த்திக் விமானம் மூலம்!!
Super sis
🤣🤣🤣
3 rd epi enga sis…