மாணிக்கவேலின் பார்வையை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை பசுபதியால்!!
அத்தனை வரன்கள் மேகலைக்கு வந்தும் அனைத்தும் தள்ளிப் போக காரணம் மாணிக்கவேல் தான்!! அது பசுபதிக்கு தெரிந்தும், அமைதியாக இருந்தார். இல்லாத ஒன்றை.. இருக்கிறது என்று.. அவன் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறான். நாமும் அதில் பிரச்சனை பண்ணினால்.. ஏதோ இருக்கிறது என்பது ஊருக்கே அம்பலமாக விடும் என அமைதியாக இருந்தார்.
“அவன் ஏதோ பொருணி பேசிட்டு திரியுறான். பாரு சம்பந்தப்பட்டவரே.. அமைதியா தானே இருக்காங்க” என்று புரளி பேசும் அதே நாலு பேர் பேசினர்.
இது தான் பசுபதிக்கும் வேண்டியது!! தப்பே செய்யாமல் ஊருக்கு அவலாக தன் பெண் இருக்க அவர் விரும்பவில்லை. அதிலும் ஒரு கல்யாணத்தில் பார்த்த கிருஷ்ணகுமாரை கண்டவருக்கும் மனதில் ஒரு எண்ணம். ஆனால் தாமாக சென்று பேசவும் அவருக்கு சற்று மனம் முரண்டியது. பொதுவாக உள்ள சிலரிடம் கண்ணை காட்ட.. அவர்கள் பேச.. கிருஷ்ணகுமார் தானாகவே இவரிடம் வந்து சம்பந்தம் பேச.. என்று அனைத்தும் இதோ கச்சிதமாக முடிந்து விட்டது.
கிருஷ்ணகுமாரின் குடும்பத்தை நன்கு அறிவார் பசுபதி. வீண் வம்பு தும்புகளில் ஈடுபட மாட்டார்கள். அதே வேலை மனிதர்களை நேசிக்கும் அன்பானவர்கள். நல்ல குடும்பம்!! அதனால் தான் இத்தனை வருடமாக பாசமாக அன்பைக் கொட்டி வளர்த்த மகளை இவ்வளவு தூரம் எட்டிக் கொடுக்கவும் முடிவு செய்தார்.
திருமணம் இன்னும் பத்தே நாட்களில் என்று முடிவாய் இருக்க.. பெண்ணையும் எங்கேயும் வெளியில் அனுப்பவில்லை பசுபதி. மணிமேகலையும் தந்தையின் கண்களை பார்த்து மனதை புரிந்து நடந்து கொள்ளும் அருமையான பெண். என்னத் தான் குறும்பு ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கு தக்க குணமும் உண்டு அவளிடம்.
இதுவரை தரிசு நிலமாக இருந்த அவள் மனதில் முதல் முதலில் கணவன் என்று வித்தை ஆழமாக விதைத்தாள் ஃபோட்டோ வில் இருந்த கார்த்திக்கின் முகத்தை பார்த்தவாறு..
அந்த விதை விருச்சமாகி பல்கி பெருகுவது கார்த்திக்கின் கையிலும் இருக்கிறது அல்லவா?
வாழ்க்கை என்று வண்டிக்கு இரண்டு சக்கரங்களும் மிகவும் அவசியம்.. இது பழசு கண்ணா!!
நம்ம அகௌண்ட் ஷேஃபா இருக்க மெயில் ஐடி ஃபோன் நம்பர் கொடுத்து டபுள் ஸ்ட்ராங் ஆக்குவது போலத்தான் லைப்பும்.. கூடவே வொய்ப்பும்!!
ஒன்னு லீக்கானா கூட ஹேக்கர்ஸ் உள்ள வந்து மொத்தத்தையும் அடிச்சிட்டு போயிடுவானுங்க அக்கௌன்டை.. அதே போல தான் சில சொந்தங்களும் குடும்பத்துக்குள்ள குத்த வைச்சு உட்கார்ந்து நல்லா போற வாழ்க்கைக்குள்ள கும்மாளம் அடிச்சிட்டு போய்டுவானுங்க…
அந்த சிலர்… சிலீஃபர் செல்ஸை விட பேராபத்து!!
“ஏனுங்… நீங்க இம்புட்டு ஹாண்ட்ஸமா.. இப்படி நீட்டா இருந்திருக்க வேணாமுங்க.. பாருங்.. பாக்குற சொந்தங்களாம் நான் உங்களுக்கு பொருத்தமே இல்லைன்னு கூடி கூடி பேசுவாங்.. இதெல்லாம் தேவையாங்.. என்ன செய்யலாம்?” என்று யோசித்தவள் நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க் என்று கடலைமாவு.. கற்றாழை.. முல்தானிமெட்டியோடு ஊரில் இருக்கும் அத்தனை எலுமிச்சை பழத்தையும் கொண்டு மினி மாரியத்தாவாக வலம் வந்தாள் மேகலை.. மணிமேகலை! எல்லாம் அவள் பரிவாரங்களோடு போட்ட ஆட்டத்தில் கருத்து போயிருந்த அவளது நிறத்தை மீட்டெடுக்க தான்..
“ஆத்தாடி ஆத்தா…பயந்திட்டேன்டி! நீ என்னதான் கத்தாலைய கட்டிக்கிட்டு குடும்ப நடத்தினாலும்.. முல்தானியமெட்டியலேயே முக்கி முக்கி எழும்னாலும்.. ரோசாப்பூவா வாங்கி முகத்துலே அப்பினாலும்.. ஒட்டுற மண்ணுதேன் ஒட்டும்! உன்ற நிறத்த மாத்த முடியாதுடி.. மாத்தவே முடியாது..” என்று சமையலறையில் தயிருக்கு காய்ச்சி வைத்திருந்த பாலின் மேலிருந்த பாலாடையை முகத்தில் தடவிக் கொண்டிருந்த பேத்தியை பார்த்து கூறினார் நாகவள்ளி.
“பாம்பு… உனக்கு வர வர வாயில வாஸ்து ஜாஸ்தி ஆயிடுச்சு! இரு இரு என்ற அப்பாரட்ட சொல்லி அந்த வாயில சுண்ணாம்ப வைச்சு பூச சொல்றேன்!”
“போடி.. போடி போகத்தவளே!!” என்ற நாகவள்ளி சமையல் வேலையை கவனித்தார்.
“சர்பம்.. ஒன்னும் இல்ல.. எல்லாம் என்ற நிறத்த விட கொஞ்சம் நிறம் ஜாஸ்தியா இருக்கிற ஆணவம் உனக்கு!! அந்த ஆணவத்தில ஆடுற.. ஆடு.. ஆடு!!” என்றபடி தன் முகத்தில் தடவி இருந்த பாலாடையை, அப்பாத்தாவின் முகத்தை தன்னை நோக்கி இழுத்து அவர் கன்னத்தில் நன்றாக தேய்த்து விட்டு சிட்டாக அவள் ஓடிவிட..
“அடியே.. எடுபட்ட சிறுக்கி.. காலையில குளிச்சு வந்தவ முகத்தில் என்னன்னு தேச்சு விட்டு இருக்க.. உன்னை எல்லாம் எப்படி மாப்பிள்ளை வைத்து மேய்க்க போறாருன்னு தெரியல.. பாவம் அந்த அப்பாவி” என்றபடி முகத்தை கழுவிக் கொண்டே கோபத்தில் கத்தினார்.
ஆனால் வார்த்தையிலிருந்த கோபம் முகத்தில் இல்லை அவருக்கு!! காரணம் எண்ணி பத்து நாட்கள் தான்!
அதன் பின் வீடு முழுவதும் கேட்கும் பேத்தியின் இந்த குறும்பு பேச்சும்.. ஜல்ஜல் கொலுசு சத்தமும்.. சந்தோஷ ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் வீடு அத்தனை அமைதியாய் வெறுமையாய் இருக்கும். நாமும் தனிமையில் தான் இருக்க வேண்டும் என்று நிதர்சனம் அவரை அசைத்துப் பார்க்க… முடிந்த அளவு அதை முகத்தில் காட்டாமல் எப்பொழுதும் போல அவளை திட்டிக்கொண்டு வளைய வந்தார் நாகவள்ளி.
கல்யாணக் களை கட்ட ஆரம்பித்திருந்தது பசுபதி வீடு!! பத்திரிக்கை அடித்து வந்திருக்க.. அந்த பத்திரிக்கைகளை அவர்கள் வீட்டு குலதெய்வ கோவிலில் வைத்து கும்பிட்டு கிருஷ்ணகுமாரையும் வரவழைத்து கொடுத்திருந்தார். மொத்தமாக கல்யாண செலவை தான் ஏற்றிருந்தார் பசுபதி. கிருஷ்ணகுமார் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.
“ஒத்த புள்ளைய வச்சிருக்கேனுங்க.. அதுக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன்? அதுவும் இல்லாம உங்களுக்கு ரிசப்ஷன் செலவு வேற இருக்குமுங்க.. நீங்க அத பாத்துக்கோங்க இங்கே கல்யாணத்தை நான் பாத்துக்குறேன்” என்று விட்டார்.
அதற்கு பிறகு தான் கிருஷ்ணகுமார் கார்த்திக் ஃபோன் போட்டு வர சொன்னதே..
அந்த பெண்ணை பிடித்திருக்கிறதா மேற்கொண்டு பேசலாமா என்று கேட்க தான் அப்பா இத்தனை பீடிகை போடுகிறார் என்று நினைத்தவனுக்கு.. உனக்கு எத்தனை பத்திரிக்கை வேண்டும் என்று அதிரடியாக கேட்ட கிருஷ்ணகுமாரை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை கார்த்திக்.
முகம் கோபத்தில் சிவக்க “நான் அந்த பெண்ணை…” என்று வாய் திறந்தவன் கையில் பிடி பத்திரிக்கையை என்று அவர் திணிக்க…
“அப்பா.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லை.. தெரியுமா? அந்த பொண்ண எனக்கு பிடிக்கவில்லை..” என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே “பிடிக்கலைன்னு முதல்ல சொல்லாதே கார்த்திக்!” என்று அழுத்தமாக கூறினார்.
பின் அவனைப் பார்த்து “ஃபர்ஸ்ட் எடுத்த உடனே ஆராயச்சி பண்ணாம நம்ம ஒரு கருத்தை மனசுல பதிச்சிட்டோம்னா.. அது தான் காலம் பூராவும் நம் மனசுல தொடர்ந்துகிட்டே இருக்கும். விருப்பு வெறுப்பு என இல்லாம நடுநிலையா அந்த பொண்ணை வைத்து பார் கார்த்திக்… அந்த பொண்ணை பிடிக்கும் உனக்கு! ஆமா.. பிடிக்கலைன்னு சொல்லுற.. வேற ஏதாவது பொண்ண நீ காதலிக்கிறாயா?” என்றதும் அவன் அவசரமாக இல்லை என்ற தலை ஆட்ட “அப்புறம் என்ன? சரி எத்தனை பத்திரிக்கை வேணும்?” என்று தன் காரியத்திலேயே கண்ணாக நின்றார் கிருஷ்ணகுமார்.
“எந்த பெண்ணும் இதுவரை என்னை கவரவில்லை தான்.. எந்த பெண்ணையும் நான் காதலிக்கவில்லை தான்.. அதற்காக இந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ன அவசியம்? நான் இப்பதான் கம்பெனி ஆரம்பிச்சு ஒரு நிலைமையில் கொண்டு வந்துட்டு இருக்கேன்.. இன்னும் அதை வளர்க்கணும்! இன்டர்நேஷனல் அளவுக்கு கொண்டு போகணும். இப்ப என்னால இந்த மாதிரி மேரேஜ்.. வொய்ப்.. புள்ள குட்டினு கமிட்மெண்ட்ஸ்ல எல்லாம் சிக்க முடியாது” என்று அவன் உறுதியாய் நிற்க…
“அப்ப கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடிச்சிட்டு தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறியா கார்த்தி?”
“எஸ்.. அஃப் கோர்ஸ் பா!” என்றான் கார்த்திக்.
“அப்ப.. நீ உன்னோட அறுபது வயசுல தான் கல்யாணம் பண்ணிக்க முடியும்! டேரக்ட்டா அறுபதாம் கல்யாணம்!” என்று கூறிய தந்தையை இவன் முறைத்துப் பார்த்தான்.
“ஆமா உண்மைதானே சொல்றேன்.. இப்போ உனக்கு வயசு 28! நானும் இதே 28 29 வயசுல தான் கல்யணம் பண்ணுனேன். உங்க அம்மாவை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமும் தொழில் தொழில்னு தான் ஓடினேன். குடும்பத்தை எல்லாம் உங்க அம்மா தான் பாத்துக்கிட்டா.. ஏன் இன்ன வரை பார்த்துக்குறா!
அப்ப நீங்க எதுக்கு கல்யாணம் பண்ணிட்டீங்க ? அப்படின்னுதானே கேட்க வர?” என்று மகனின் முகத்தை படித்தவராய் அவர் கேட்க.. அவனும் ஆமாம் என்று தலையசைத்தான்.
“எஸ்.. வேலை.. வேலைன்னு ஓடினாலும்.. வீட்டுக்கு நாம வரும்போது ‘என்னங்க இன்னைக்கு ரொம்ப வேலையோ? ஏங்க சூடா காபி எடுத்துட்டு வரவா?’ என்று ஆறுதல் அணுசரனையா கேட்கிற உங்க அம்மாவும்.. பாசத்தோடு அப்பானு ஓடி வர உன்னையும் பார்த்தேனா அந்த நாள் எனக்கு புத்துணர்ச்சி கூடினா போல தான் தெரியும். அது மட்டுமல்ல என்னோட தொழிலை நான் பார்த்தா.. உறவுகளையும் குடும்பத்தையும் தாங்குனது உங்க அம்மா தான்!! ஆனால் அவளுக்கே தெரியாம அவளோட பிட்னஸ் சாப்பாடு எல்லாத்தையும் நான் பார்ப்பேன் அது உனக்கு தெரியுமா? இப்படி இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாய் அன்பாய் நேசத்தை காட்டுவது தான் குடும்பம் தாம்பத்தியம்..!!” என்றார் கிருஷ்ணகுமார்.
ஓரமாய் அப்பா மகனின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த பாமாவுக்கு கணவன் இத்தனை யோசித்து இருக்கிறாரா? என்று ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம் வீட்டுக்கு வந்து தன்னுடைய உடல் நலத்தை பரிசோதித்து விட்டு செல்லும் மருத்துவரை பற்றி இப்பொழுது யோசித்தவருக்கு கணவனின் அன்பு புரிய மெலிதாக சிரித்துக் கொண்டார்.
“கமிட்மென்ட் மட்டும் சொல்லி குடும்பத்தை நாம் தள்ளி நிறுத்துனோம்னா..
நம்மை தாங்க வேண்டிய நேரத்தில் நமக்கு அன்பாய் ஆதரவை பேச ஒரு ஜீவனும் இருக்காது” என்றவரை கண்டவன், எப்படி எது சொன்னாலும் அடக்கி மடக்கி பேசும் தந்தையிடம் வீண்விவாதம் செய்ய அவனுக்கு விருப்பமில்லை.
“என்னவோ போங்க!! இது நாள் வரைக்கும் உங்க விருப்பப்படி தான் இருந்தேன். இதுவும் உங்க விருப்பப்படி தான்..” என்றதும், “ஏன் டா.. பொய் சொல்ற? என் விருப்பப்படி டெக்ஸ்டைல்ஸ் படிச்ச தான். ஆனா என் விருப்பப்படிதான் தொழில் செய்றியா? இல்ல!! ஏன் விருப்பப்படிதான் எஃப்எம் ல ஆர்ஜேவா இருக்கியா?” என்று கேட்டதும் அதிர்ந்தவன் அப்பாவை பார்க்க…
“என்ன நீ பெங்களூர்ல இருந்து எஃப்எம்ல ஆர்ஜேவா பேசுறது தமிழ்நாட்டுல அதுவும் சென்னையில் இருக்கிற எனக்கு தெரியாது நினைச்சியா? டேய் நான் உனக்கு அப்பன்டா!!” என்று சிரித்தார்.
“உன்னோட விருப்பம் என்னென்னு எனக்கு தெரியும்!! நீ எனக்கு தெரியாம இருக்கணும்னு நினைச்ச… நானும் எனக்கு தெரிஞ்சது போல அதை காட்டிக்கல! அவ்வளவுதான்!! நானும் அம்மாவும் நாளை குலதெய்வ கோயிலுக்கு போறோம். நீயும் என் கூட வந்து சாமி கும்பிட்டு உனக்கு தேவையான பத்திரிக்கை எடுத்து அப்படியே பெங்களூர் கிளம்பு” என்று சென்று விட்டார்.
என்னவோ கார்த்திக்கு இந்த கல்யாணத்தில் முழு விருப்பமில்லை. தற்போதைய இளைஞர்கள் போல வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும்! இன்னும் நிறைய நிறைய சாதித்து கம்பெனியை முன்னணியில் கொண்டு வர வேண்டும்!! இதற்கு இடையே கல்யாணம் பொண்டாட்டி உறவுகள் இதெல்லாம் அவனுக்கு தொல்லைகளாக தான் தெரிந்தது. அனைத்தும் இம்சைகளாக எரிந்தது!! ஆனால் அந்த இம்சையும் இனிமையாக இனிக்கும் என்று எடுத்துரைக்க வருவாளா மேகலை?
விருப்பமில்லாமல் தான் அப்பாவோட குலதெய்வ கோயிலுக்கு சென்றான் கார்த்திக். அங்கேயும் சுவாரஸ்யமின்றி முகத்தை வைத்திருந்தவனைப் பார்த்தார் கிருஷ்ணகுமார். ஏனோதானோ என்று வந்திருந்தவனை எல்கேஜிக்கு முதன் முதலாக செல்லும் அடம்பிடிக்கும் பிள்ளையை நினைவு கூற… இவரோ அவனுக்கு ட்ரில் மாஸ்டராக மாறி “ஒழுங்கா வேஷ்டி கட்டிக் கொண்டு வா” என்று பெரிய கரை வைத்த பட்டு வேஷ்டியை நீட்ட..
கார்த்திக் முறைப்புடன் பார்த்தான்.
“அப்போ இதைக்கட்டு” என்று சன்னமாக கரை வைத்த வேட்டியை காட்ட அதை பிடுங்கிக் கொண்டு..
“எப்படி எல்லாம் இந்த மனுஷன் என்னை பழி வாங்குகிறார்? இதுக்கெல்லாம் சேர்த்து வைத்து உங்களுக்கு இருக்கு!!” என்று புலம்பி கொண்டு வேட்டி சட்டையில் தயாராகி வந்தான்.
கோவிலிலும் முகத்தை சுணங்கி வைத்துக் கொண்டே இருக்க.. சொந்தங்களும் ஏன் மாப்பிள்ளை ஒரு மாதிரியாக இருக்கிறார் என்று கேட்க…
“அது ஒன்னும் இல்லிங்.. ரெண்டு நாளா அவனுக்கு ஒரே காய்ச்சலு கபம்னு வேறு படுத்தி எடுக்குதுங்.. நான் கூட வரவேண்டாம் வீட்டில் இருடான்னு சொன்னேனுங்க.. அது எப்படிப்பா என்ற கல்யாண பத்திரிக்கை வைத்து கும்பிடும் போது நான் இல்லாமல அப்பறம் என்ற அம்மணி முகம் வாடிடும்னு வந்திருக்கானா பார்த்துக்கோங்க..” என்று கூசாமல் புளுகினார் கிருஷ்ணகுமார்.
ஒரு நல்லது நடக்க நாலு பொய்கள் சொன்னா தப்பு இல்லை என்று நாயகன் பிஜிஎம் அவருக்கு பின்னால் ஒலிக்க.. அப்படியே திரும்பி மகனை பார்த்தார்.
எல்லாம் நம் கைமறி போய்விட்டது இனி என்ன செய்வது என்று அமைதியாக நின்று இருந்தான் கார்த்திக்!! ஆனால் அவனுக்கு கடைசி வாய்ப்பு ஒன்று கொடுக்க எண்ணினார் போல அவனது குலதெய்வம் முத்தைய்யனார்!!
ஆமாம் கோவிலுக்கு தனது பெண் அம்மாவுடன் வந்து இருந்தார் பசுபதி. கூடவே அவரது சொந்தங்களும்!!
ஏற்கனவே கிருஷ்ணகுமார் முறையாக அழைத்து இருக்க அருகில் இருக்கும் ஊர் தானே என்று வந்துவிட்டார். முதலில் அசுவாரசியமாக பார்த்து உதட்டை காது வரைக்கும் இழுத்து ஈ என்று இளித்து ஒரு புன்னகையை கொடுத்தவன், மண்டைக்குள் மணி அடிக்க.. திரும்பி மணிமேகலை பார்த்தான் ஒரு சுவாரஸ்யத்தோடு!!
“ஆமா.. கல்யாணத்தை நான் தானே நிறுத்த முடியாது!! இவளிடம் தன்னை பிடிக்கவில்லை என்று ஒரு ஏழெட்டு பிட்டை சேர்த்து போட்டால் என்ன?” என்று யோசித்தவன் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்க்க.. தானாகவே கிடைத்தது அப்படி ஒரு சந்தர்ப்பம்!!
பூஜைக்கு பழங்களை கழுவி வர என்று பாமாவோடு சென்ற மணிமேகலை பின்னால் இவனும் சென்றான்.
அப்பா கவனிக்கிறாரா என்று பார்க்க அவரோ பசுபதியோடு பேச்சு சுவாரசியத்தில் இருந்து விட.. அந்தோ பரிதாபம்! இவனை கவனிக்காமல் விட்டுவிட்டார்.
அப்பாடி என்ற பெருமூச்சு விட்டவன் சற்று தூரம் சென்றதும் அம்மாவை பார்த்து “ம்மா உன்னால படி ஏன் இறங்க முடியாது. நான் கூட போகிறேன் துணைக்கு.. நீ போ” என்று கழட்டி விட, மணிமேகலை ஒருவிதமான தயக்கத்தோடு குனிந்து கொண்டாள். என்ன பேச இவனிடம் என்று அவளுக்கு தெரியவில்லை.
கூட வராதே என்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்வானோ என்று பயம்!! இன்னொரு பக்கம் அப்படி என்னதான் பேசப்போகிறான் என்று ஒரு சிறு சுவாரசியம்!! இரண்டும் கலந்திருக்க.. அவள் அமைதி தத்தெடுக்க.. அதை தனக்கு சாதமாக்கியவன், அவளோடு சென்று அருகில் இருந்த குளத்தில் அவள் பழங்களை கழுவி.. பிரம்பு தட்டில் அதை வாங்கிக் கொண்டிருந்தவன் மெல்ல அவளிடம் பேச்சை துவங்கினான்.
“ஆக்சுவலி… எனக்கு இந்த திருமணத்தில பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல!” என்றதும் பழத்தைக் கழுவிக் கொண்டிருந்த அவளது கைகள் ஒரு நிமிடம் நிறுத்த.. விழிகள் அங்கும் இங்கும் அலைப்புற.. தன்னை பிடிக்கவில்லையோ என்று அவரது மனம் லப்டப் லப்டப் என்று வேகமாக துடித்தது.
“அதுக்காக உங்கள பிடிக்கல.. அதனால கல்யாணம் பிடிக்கலனு நான் சொல்லல!! எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்!! அதுதான் என்னோட பிராப்ளம்” என்றதும் அவளது தடுமாற்றத்தை மாறி நிதானம் அடைய.. நன்றாக பழங்களை கழுவி கொண்டே அவனை ஓரக்கண்ணால் பார்த்தவள், அவன் வைத்திருந்த பிரம்பு தட்டில் பழங்களை அடுக்கினாள்.
“ப்ளீஸ்.. என்னால எங்க அப்பா கிட்ட சொல்ல முடியல! நான் பிசினஸ்ல இன்னும் நிறைய லெவல் முன்னுக்கு வரணும். அதுக்காக எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்!! அதுக்குள்ள குடும்பம் புள்ள குட்டி வைஃப் இந்த கமிட்மெண்ட்ஸ் எல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் வேணா எனக்கு புரிஞ்சுக்காம இருக்கலாம்.. ஆனா உனக்கு புரியும் நம்பி தான் உன்கிட்ட சொல்றேன்” என்றதும், அதுவரை கல்யாணம் வேண்டாம் என்றதும், வேற ஏதாவது பொண்ணை மனதில் நினைத்திருப்பானோ? இல்லை வேற ஏதாவது பெரிய காரணமாக இருக்குமோ? என்று நினைத்தவளுக்கு இதுதானா என்று பெரும் ஆசுவாசமாக இருந்தது.
இத்தனை தூரம் தன்னை படபடக்க வைத்தவனை சீண்டி பார்க்க ஆசைப்பட்டாள் மாது!!
ஆமாம்.. இவன் பாட்டில் கல்யாணம் வேண்டாம் என்று நிறுத்தி இருந்தால் அவளது நிலைமை.. பசுபதி நிலைமை.. வருத்தத்தை முகத்தில் காட்டாமல் இருக்கும் அப்பத்தாவின் நிலைமை… இதுதான் சாக்கு என்று மாணிக்கவேல் திரும்பி வந்துவிட்டால்… என்று சற்று நேரத்தில் இதயம் துடித்த துடிப்பில் வெளி வந்து குதித்து விடும் அளவு இருந்தது.
இப்போது சற்று மனது ஆசுவாசப்பட.. அவளது குறும்பு தலைதூக்க.. மெல்ல குளத்தின் படியில் ஏறிக்கொண்டே அவனைப் பார்த்தவள் “நீங்க இவ்வளவு தூரம் சொல்றாதல.. நான் உங்களுக்கு ஒரு வழி சொல்றேனுங்க” அவனும் சந்தோஷமாக “சொல்லு!!” என்று ஆர்வமாக கேட்டான்.
“நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்பேனுங்க.. நீங்க சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா நானே ஏதாவது காரணம் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்னுங்க!! ஆனா நீங்க சரியா மட்டும் பதில் சொல்லல.. அப்புறம் என்னால ஒன்னும் பண்ண முடியாதுங்க!! உங்களுக்கு ஒரே ஒரு ஆப்ஷன் தானுங்க!” என்றதும் சரி என்று தலையாட்டினான் கார்த்திக்.
‘அப்படி என்ன இவள் பெரிதாக கேட்டுவிடப் போகிறாள்? கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவளுக்கு அப்படி என்ன பெரிய அறிவு இருந்து விடப்போகிறது? அதுவும் பிளஸ் டூ தாண்டவில்லை என்று அப்பா சொன்னார்! பிளஸ் டூ பெயில் வேற.. என்னதான் கேட்கிறாள் பார்ப்போமே?’ என்று அவளை அசால்ட் ஆக எண்ணி இகழ்ச்சியாக பார்த்தவன் நக்கலாக சிரித்து “கேள்..!!” என்றான்.
“ஒரு அரண்மனைக்குள்ள ஒரு ராஜா ராணி ஒரு அரக்கி இருந்தாங்களாம். ஒரு நாள் அந்த அரசர் ராணிகிட்ட அவர்கள் பெட்டகத்தில் உள்ள நகை எல்லாம் எடுத்துட்டு வர சொன்னாங்களாம். ராணியும் போய் அந்த பெட்டகத்திலிருந்து நகையை எடுக்க பார்க்க.. முடியலையாம்! ஏனுங்க?” என்று இவள் பாவமாக பார்த்து கேட்டாள்.
‘என்ன.. கேள்வி கேட்பாள் என்று பாரத்தால் இவ என்ன விடுகதை கேட்கிறா?’ என்று யோசித்தவன் “ஒருவேளை அந்த பெட்டகத்தோட கோட் வேர்ட் ஐ மீன் அந்த பெட்டகத்துக்கு சரியா திறக்கிற அதுக்கு பேரு என்னமோ சொல்லுவாங்களே.. ஹாங்.. திறவுகோல் மாதிரி அது இல்லாம இருந்திருக்கும்” என்றான்.
இல்லை என்று அவள் தலையாட்டினாள். அதில் அவளது செழுத்த கன்னங்களில் ஜிமிக்கிகள் முத்தமிட்டு முத்தமிட்டு உறவாட.. காதுக்கு அருகில் சுருண்டு இருந்த மூடிகள் நளினமாக காற்றில் அசைந்தாட.. ஒரு நிமிடம் அதில் பதிந்த கவனத்தை தலையை உலுக்கி திருப்பிக் கொண்டவன் தனக்கு தெரிந்த பதில் எல்லாம் கூற எதுவுமே சரி இல்லை என்று கூறினாள்.
“நீ என்ன குழப்புற! வேணுமே இப்படி எல்லாம் சொல்ற!” என்று அவளை கோபமாக பார்த்து முறைத்தான் கார்த்திக்.
உன் கோபம் எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்பது போல அவனை வசிகரமாக பார்த்து சிரித்தவள், “தெர்லனா உங்க தோல்வி ஒப்புக்குங்க.. நானே பதில் சொல்றேனுங்” என்றாள்.
சிறு பெண் அவளிடம் தன் தோல்வியை ஒத்துக் கொள் அவனின் ஈகோ தயாராக இல்லை. அதுவும் சற்று முன்னர் தான் தன்னைவிட குறைவாக படித்தவள் என்று எண்ணி இருக்க.. எப்படி போய் மன்னிப்பு கேட்க.. என்று தவியாய் தவித்தவன் கோவில் நெருங்குவதை பார்த்தான். அங்கே அப்பாவும் அவள் அப்பாவும் இருப்பதை கண்டவனுக்கு மனம் திடுக்கிட்டது!! அதற்குள் இவளிடம் பேசி முடித்திருக்க நினைத்தவன் “சரி சொல்லு!” என்றான் கடுப்போடு.
“மொட்டையா சொல்லுன்னு சொல்றீங்.. நீங்க தோத்துட்டேன்னு சொல்லுங்.. நான் சொல்றேனுங்க!” என்று அவள் விடாப்பிடியா இருக்க “சரி தாயே!! நான் தோத்துட்டேன் போதுமா.. ஆன்சர சொல்லு” என்றான்.
“நான் தான் முன்னாடியே சொன்னேனுங்களே.. அந்த அரண்மனையில் ராஜா ராணி அரக்கீ.. அது அரக்கி இல்லிங்.. அரை பாதி!! சாவியோட பாதி தான் இருந்ததானுங்க.. அப்புறம் எப்படிங் திறக்கும்!” என்றதும் விழித்தான் கார்த்திக். அவனால் தன்னை இவள் இப்படி ஜெயித்ததை தாங்க முடியவில்லை.
“கல்யாணத்துல சந்திப்போமுங் மாமா!!” என்று உரிமையாக அழைத்து மோகனமாக சிரித்தவளை பார்த்தவனுக்கு கடுப்பேற “யூ.. யூ.. யூ.. உன்னோட கஷ்டம் டி!” என்று கடித்து துப்பினால் வார்த்தைகளை..
Semaaa super siss last question semaaa
Thank you sis 💜❤️