விடியற்காலை 4:00 மணி போல பெங்களூருக்கு வந்த கார்த்திக்கு ஏனோ வீட்டுக்கு போகும் எண்ணம் வரவில்லை!! பஸ் ஸ்டாண்டில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன் அந்தக்கார இருளை வெறித்தவாறு இருந்தான். ஏனோ மனம் நிலைக் கொள்ளாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது!! ஏதோ தவறு செய்தவன் போல தவித்துக் கொண்டிருந்ததான்!!
இந்த கல்யாணம் சரியா தவறா என்று தெரியவில்லை. அந்த பெண்ணை பிடித்திருக்கிறதா என்று கேட்டால்.. அதுவும் தெரியவில்லை!! ஆனால் ஏதோ கல்யாணம் வரை வந்துவிட்டாகிவிட்டது. குலதெய்வ கோயிலில் பூஜை முடிந்து “எத்தனை வேணுமோ அத்தனை பத்திரிக்கைய எடுத்துக்க!” என்று தந்தை சொன்னதும், தந்தையின் முகத்தை வெறித்தவாறு ஒரே ஒரு பத்திரிகை மட்டும் எடுத்துக் கொண்ட மகனை விசித்திரமாக பார்த்தார் கிருஷ்ணகுமார்.
ஆனாலும் மகன் மீது அபார நம்பிக்கை இருந்தது. கண்டிப்பாக சில பல மேடு பள்ளங்கள் அவர்களது வாழ்க்கையில் வந்தாலும் இறுதிவரை இருவரும் இனிமையாக பயணிப்பர் என்று மனதார நினைத்தார்.
சில சமயங்கள் நம் அறிவை விட மனதிற்கு படும் விஷயங்கள் தான் நம்மை வழி நடத்தும். அதுவும் சரியான நேரத்தில் மிக சரியாகவே இருக்கும்!! அதுபோலவே தான் கிருஷ்ணகுமாருக்கும் அன்று திருமண வீட்டில் பேச்சுவாக்கில் கல்யாண பேச்சு வந்ததுமே மணிமேகலை கார்த்திக்கு சரியாக இருப்பாள் என்று முடிவெடுத்து விட்டார். அதன் ஆரம்பம் யாராக இருந்தாலும் முடிவு எடுத்தது கிருஷ்ணகுமாரே!!
“கோயம்புத்தூருக்கு என் கூட வாடா அங்கிருந்து ஃப்ளைட்ல போய்க்கலாம்!” என்று கிருஷ்ணகுமார் எவ்வளவு கூறியும் கால் டாக்ஸி வர வைத்து கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்கு பஸ்ஸில் தான் பயணமானான் கார்த்திக்!!
பாமா கணவனை பாவமாக பார்க்க “அதெல்லாம் சரியாயிடும் நீ கவலைப்படாதே பாமா” என்று மனைவியை ஆறுதல் படுத்தியவர் அடுத்தடுத்து திருமண வேலைகளை துரிதப்படுத்தினார்.
இங்கு பேருந்து நிலையத்தில் தான் விடியலுக்கு முன் இருக்கும் அந்த கருமை இருளை வெறித்திருந்தவனுக்கு அவனது வாழ்க்கையும் இதே போல தான் இருக்கும் என்று எண்ணம் மேலோங்கியது!!
ஆனால் அந்த கருமை இருளுக்கு பின் இருக்கும் அழகிய விடியலை அவனது மனம் எண்ணவில்லை!!
உலக அழகியும் ஆணழகனும் திருமணம் செய்து கொண்டாலே அந்த திருமணம் அத்தனை காதலும் ரொமாண்டிக்காக செல்லாது. அடித்து பிடித்து உருண்டு புரண்டு சண்டை சமாதானங்கள் என்று எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் கடந்தே ஒரு நிதானத்திற்கு வரும்!!
அதன் பின்னால் நிதானம் தான் அவர்களுக்கு புரிதலையும் வாழ்க்கையின் தார்ப்பரியத்தையும் புரிய வைக்கும்.
அவ்வப்போது அவன் எண்ணங்களுக்கு இடையே ஒரு குழந்தையின் அழுகுரல் இடையூறாக கேட்க.. முதலில் என்ன என்று சுற்றிமுற்றி பார்த்தவன் தள்ளி ஒரு இருக்கையில் இருந்த பெண்ணின் கையில் திமிறிக்கொண்டு அழுதுக் கொண்டு இருந்தது ஒரு மழலை.
“என்ன தாய் அவள்? என்ன பெண் இவ குழந்தை அழுகிறது இவ பாட்டுக்கு அமர்ந்திருக்கிறாளே?” என்று முதலில் யோசித்தவன் அதற்குப் பிறகு நமக்கு என்ன வந்தது என்று மீண்டும் தனது எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தான்.
அவனுக்கிருந்த மனநிலையில் மீண்டும் கம்பெனிக்கோ இல்லை எஃப்எம்க்கோ செல்ல அவனுக்கு சுத்தமாக பிரியமில்லை. அருகில் இருக்கும் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்றால்தான் என்ன? என்று எண்ணம் தோன்ற.. அடுத்த பேருந்தில் ஏறி சென்று விட்டான். மலையின் மீது இருந்த கோயிலில் வீற்றிருக்கும் அம்பிகை அவனது மனதை குளிர்வித்தாள். இயற்கை சூழலும்.. பலதரப்பட்ட மக்களின் பேச்சுக்களும்.. சில்லென்று வீசிய காற்றும் அவனது மனதை நிலைப்படுத்த.. மீண்டும் இரவு போல் தான் பெங்களூர் வந்து சேர்ந்தான்.
‘ஏன் என் மனம் இவ்வளவு தவிக்கிறது? அந்த பெண் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறாள்! படிப்பு தான் இல்லை. ஆனால் படிப்பு மட்டுமே ஒருவரின் அறிவை நிர்ணயித்து விடுமா என்ன?’என்றவன் மனதின் கேள்விக்கு அறிவு வந்து அவள் போட்ட விடுகதையை கூறி ‘அரக்கியும்.. அரைக் கீயும் ஒன்றா?’ என்று கேட்டு வாதிட.. மெல்லிய புன்னகை அவனிடம்!!
ஆனாலும் நம் வாழ்க்கை இப்படித்தான் போய்விட போகிறது என்று பெரும் சஞ்சலமும் இருக்கத்தான் செய்தது அவனுக்கு. அந்த நேரத்தில் மீண்டும் அந்த குழந்தையின் அழுக் குரல் இடையூறாக கேட்க.. ‘காலையில் கேட்ட அதே குழந்தையின் குரல் போல் அல்லவா இருக்கிறது?’ என்று யோசித்தவன் திரும்பிப் பார்க்க அதே குழந்தை.. அதே பெண்மணி.. அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தாள்.
சுற்று மற்றும் பார்த்தான். ஏதேனும் அவளுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்களா இல்லை பிளாட்பாரத்தில் கடை போட்டு இருக்கும் யாருடையாவது மனைவியா என்று!! யாரும் அருகில் இல்லை. அப்படி அவளை பார்க்கும் போதும்தெரியவில்லை.
ஆனால் அழும் குழந்தைக்கு அவ்வப்போது பால் மட்டும் வாங்கி வந்து புகட்டிக் கொண்டிருந்தாள். ‘சுற்றம் அறியாமல் அப்படியே அமர்ந்திருக்கிறாளே?’ என்று அவன் பார்க்க.. அவளை கண்களாலே துயில் உரிக்க தயாராகும் வல்லூறுகள் அவளை சுற்றி ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன!!
எப்படியும் இந்த இரவு நேரம் இந்த பட்சியை பிடித்து செல்லும் எண்ணம் அவர்கள் கண்களில் இருப்பதை கண்டவனுக்கு.. அந்த பெண்ணை அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை.
‘ஒரு ஆணுக்கு பெண்ணை பாதுகாப்பது முக்கியம் அதுவும் ஆண்களிடம் இருந்து’ என்று எண்ணியவன் அதுவரை இருந்த தயக்கத்தையும் தன் மனக்கிலேசங்களையும் தூக்கி எறிந்து அவளது அருகில் அமர்ந்தவன், “யாருமா நீ? ஏன் இங்க உக்காந்திருக்க?” என்ற கன்னடத்தில் கேட்க அவளோ திருத்திருவென்று விழித்தாள்.
“ஒருவேளை ஊமையோ? கன்னடம் புரியலையோ? இங்கிலீஷ்ல கேட்போமா?” என்று தனக்குள் பேசிக் கொண்டவன் அவளை திரும்பிப் பார்க்க.. அவள் முகத்தில் அத்தனை மலர்ச்சி!!
“சார் ப்ளீஸ்.. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?” என்று அவள் தமிழில் கேட்க அப்பொழுது அவள் தமிழ் பெண் என்று அறிந்தவன் “உன் பேர் என்ன.?” கேட்க அவள் “நேத்ரா..” என்றாள்!!
ஆம்.. நம் தாண்டவனின் கண்ணு!!
“நீ இங்க என்ன செய்ற? ஏன் இப்படி தனியா இருக்க? உன் சொந்தக்காரர்கள் எங்க? உன் புருஷன் எங்க?” என்று எத்தனை கேள்விகளுக்கும் அவள் எதுவும் பேசவில்லை!!
“எனக்கு இப்போதைக்கு தங்குவதற்கு ஒரு நல்ல இடம் மட்டும் பார்த்து கொடுங்க சார்! பணம் பத்தி பிரச்சனை இல்லை” என்று அவள் மெதுவாக கேட்க.. சரி வா என்று அவளை அழைத்தவன் டாக்ஸியில் புறப்பட, அங்கிருந்த வல்லூறுகளோ “அட!! நம்ம முன்னாடியே ட்ரை பண்ணி இருக்கலாம் போலவே.. டக்கரா வந்து ஒருத்தன் கூப்பிட்டதும் போய்ட்டா பாரு” என்று எள்ளி நகையாடினர்.
நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் அந்த பொருளை பற்றி தரம் குறைவாக பேசுவது இப்பொழுது மலிந்து வரும் அருமையான குணங்களில் ஒன்றாக இருக்கிறது. என்ன செய்வது?? கலிகாலம்!!
அவன் இருக்கும் வீட்டிற்கு தற்போது அழைத்துச் செல்ல முடியாது. அங்கே அவனுடன் அவனுடைய நண்பன் கண்ணனும் தங்கி இருக்கிறான். வேறு எங்க அழைத்துச் செல்வது என்று யோசித்தவன், அவனது கம்பெனியில் பணி புரியும் அவனது தோழியும் மற்றும் இன்னொரு பெண் தங்கி இருக்கும் வீட்டுக்கு அழைத்து சென்றான்.
முதலிலேயே ஃபோனில் அவளைப் பற்றி தகவலை கூறி அவர்களிடம் “என்னுடைய பிரண்டு நேத்ரா! வீட்ல ஒரு சின்ன பிராப்ளம் கொஞ்சம் பாத்துக்கோங்க.. கொஞ்ச நாளைக்கு தான்!” என்று அறிவுறுத்தி விட்டே வந்தான்.
அடுத்து இரு தினங்களில் அவளிடம் எவ்வளவு கேட்டும், அவளைப் பற்றி முழுமையாக சொல்லவில்லை. ஆனாலும் கணவனோடு தற்போது சேர்ந்து வாழ முடியாது என்று மட்டும் உரைத்தாள்.
“கணவன் குடிக்காரனா? பொம்பள பொறுக்கியா? இல்லை வேறு ஏதும் தப்பானவனா?” என்று அத்தனை கேட்க.. முறைப்பாளே தவிர கணவனை பற்றி தவறாக ஒன்று அவள் கூறமாட்டாள். அதிலிருந்து வேற ஏதோ பிரச்சினை என்று கிரஹித்துக் கொண்டான் கார்த்திக்.
ஆனால் அடுத்த ஒரே வாரத்தில் தாண்டவம் இவனை சந்திக்க.. சற்று அதிர்ந்து தான் போனான் கார்த்திக்!! ஏனென்றால் தாண்டவனின் நடை உடை பாவனையிலேயே அவன் எப்படிப்பட்டவன் என்று அறிந்திருக்க.. நேத்ராவின் ஆங்கில புலமையும்.. அவளது நேர்த்தியான பாங்கும்.. அவள் பெரிய இடத்துப் பெண் என்று கட்டியம் கூறியது.
அவளுக்கு அப்படியே நேர்மறையாக இருந்தால் தாண்டவம் கார்த்தியின் கண் பார்வையில்..
“எப்படி எதிரும் புதிரும் தம்பதிகள் ஆனார்கள்?” என்று குழம்பினான்.
அதிலும் கண்ணு என்று அத்தனை குழைவாக பேசும் தாண்டவனை பார்த்தவனுக்கு இன்னும் ஆச்சரியமே!!
தனியாக வீடு எடுத்து தங்க வைக்க ஏற்பாடு செய்து விட்டு கிளம்பிய தாண்டவம் “கண்ண.. நல்லா பாத்துக்கோங்க ப்ரோ.. அப்புறம் நானும் அப்பப்ப வருவேன்” என்றவனிடம் தொண்டைக்குள் துடித்த கேள்வியை கேட்க முடியாமல் தவித்த கார்த்திகை பார்த்த தாண்டவம்…
“காதலுக்கு படிப்பு பணம் சாதி மதம் கண்ணுக்கு தெரியாது ப்ரோ.. ஏன் வயசு கூட தேவையில்லை. மனசு இருக்கு பாருங்க.. இந்த மனசு.. அது மட்டும் வெள்ளையா தூய்மையா இருந்தா போதும்!” என்றவனின் வார்த்தைகளை மெலிதாக அசைத்தது கேகே என்கிற கார்த்திக் கிருஷ்ணகுமாரை!!
இந்த இடைப்பட்ட ஒரு வாரத்தில் முழுதாக இல்லை என்றாலும் இந்த கல்யாணத்தை ஓரளவு ஒத்துக்கும் பக்குவம் வந்திருந்தது கார்த்திக். நேத்ரா தாண்டவமும் ஒரு காரணம் என்றால் மிகை இல்லை. ஆனால் அது மேகலை மீது வந்த இஷ்டத்தால் அல்ல தன் அப்பாவினால்… அவர் கொடுத்த வாக்கினால்..
10 நாட்கள் முன் சிங்கப்பூர் சென்றிருந்த கண்ணன் அன்று தான் வந்திருந்தான். இவர்களது மற்றொரு ப்ராஜெக்டுக்காக சிங்கப்பூரில் சில கிளைண்டுகளிடம் பேசிவிட்டு அந்த டீலை வெற்றிகரமாக முடித்தவன், வீட்டின் உள்ளே சந்தோசமாக நுழைந்து, “டேய் மச்சி.. நாம சாதிச்சிடோம்!” என்று அவன் குத்தாட்டம் போட, “எடேய் பக்கி… டீலுல சைன் போட்ட அன்னைக்கே எனக்கும் விஷயம் தெரியும் தானே!! ஓவர் பில்டப் பண்ணாம போய் குளிச்சிட்டு ரெடியாகு” என்றான் கார்த்திக்.
“காலையில தான்டா வந்து இறங்கினேன். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குறேன் டா! மதியத்துக்கு மேல ஆபீஸ்க்கு வரேன் டா” என்று இவன் கெஞ்சல் மொழியில் கூற..
“உன்னை யார் ஆபிஸ்க்கு வர சொன்னா? நீ தாராளமா இவ்வளவு வேணாலும் ரெஸ்ட் எடு!! ஆனா… இப்ப ரெடியாகி வீட்டை விட்டு கிளம்பு” என்றான் கார்த்திக்.
“என்னது?? நான் வீட்டை விட்டு கிளம்புனுமா? என்னடா சொல்ற? வொய் டா? புரியும் மாதிரி சொல்ல மாட்டியா நீ?” என்று தோளில் மாட்டி இருந்த பேகையும் கையில் பிடித்திருந்த டிராலியையும் உதறி தள்ளிவிட்டு கார்த்திக் முன் வந்து நின்றான் கண்ணன்.
அப்பொழுதுதான் கிளீன் ஷேவ் செய்து தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கை தன் புறம் திருப்பி “பதில் சொல்லு!” என்றவாறு பார்த்தான் கண்ணன்.
“ஏண்டா பேச்சிலர் வீட்டுல ஒரு பொண்ணு வந்து இருக்க முடியுமா? நீயே சொல்லு!”முகத்தை கழுத்தை துண்டால் நன்றாக துடைத்து அதனை கண்ணன் முகத்தில் விட்டெரிந்தான் கார்த்திக்.
“அது எப்படிடா தங்க வைக்க முடியும்?” என்று இவனும் துண்டை முகத்தில் இருந்து எடுத்துவிட்டு நண்பனை பின் தொடர்ந்தவாறே கேட்டான்.
“கரெக்ட்!! அதிலும் ஹஸ்பண்ட் வைஃப் இருக்கும்போது இன்னொருத்தனை உள்ள வச்சுக்க முடியுமா? நீயே சொல்லு?” என்றவாறு காஃபி கலந்தான் கார்த்திக்.
“எப்படி டா? நந்திய நடுவுல வச்சிக்கிட்டே வா கபிள்ஸ் பூஜை பண்ண முடியும்?” என்று இவன் சற்று விவகாரமாக பதில் அளிக்க.. காஃபி கப்பை அவன் கையில் திணித்த கார்த்திக் “அப்சலியுட்லி! அதனால்தான் உன்னை வெளில போக சொல்றேன்” என்றான் அசால்டாக..
அப்போதும் கண்ணனுக்கு புரியவில்லை. “நான் போவதற்கும் யாருக்கோ கல்யாணம் நடந்து சிங்கிள் இருந்து மிங்கள் ஆவதற்கும் என்னடா சம்பந்தம்?” என்று தனது இடது கையில் காஃபி கப்பை பிடித்துக் கொண்டு வலது கையால் தலையை சொரிந்து கொண்டே கேட்டான்.
“ஏன்டா.. நாளைக்கு என் வைஃப் இந்த வீட்டுக்கு வந்தா.. அவளுக்கு சங்கடமா இருக்காது உன்னை பார்த்து” என்றவன் பாதி குடித்து வைத்திருந்த கண்ணனின் காஃபி கப்பையும் பிடுங்கி கொண்டு மீண்டும் சமையலறையில் அதை கழுவி கவுத்து வைத்தான்.
“டேய்.. டேய்.. நான் இன்னும் குடிக்கல டா!” என்ற கண்ணனின் வார்த்தைகள் காற்றோடு போனது..
“மச்சான்… சீக்கிரம் ரெடியாகுடா நான் குளிச்சிட்டு வாரத்துக்குள்ள நீயும் ரெடி ஆகி பேக் பண்ணிடு” என்றவன் ரூம்மை அடைத்துக் கொள்ள சுத்தமாக வைரஸ் தாக்கிய கணினிபோலானான் அந்த மென்பொறியாளன் கண்ணன்.
” என்னை ஏன் இவன் இப்போ வீடு கடத்த திட்டம் போடுறான்? யாரோ ஒரு பொண்ணு வந்து தங்குவதற்கு நான் வீடு மாறுவதற்கும் என்ன சம்பந்தம்ஃ?” என்று புரியாமல் இருந்தவனுக்கு காஃபி கொடுத்து கார்த்திக் திருமணம் என்றது நினைவே வரவில்லை.
அவன்தான் ஏற்கனவே சொல்லியிருந்தானே.. “நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதையெல்லாம் முடித்து தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று!! அந்த கண்ணனின் எண்ண போக்கில் கார்த்திக்கின் திருமணம் வரவே இல்லை.
அதற்குள் குளித்து முடித்து வந்திருந்த கார்த்திக் “டேய் நீ என்ன இன்னும் கிளம்பலையா?” என்று கேட்க..
அதுவரை நண்பன் ஏதும் விளையாடுகிறானோ என்று எண்ணத்தில் இருந்தான். நிஜமாலும் அவன் கேட்கிறான் என்று எண்ணி “என்னடா ??? என்ன கிளம்ப சொல்லுற??” அதிர்வுடன் நெஞ்சில் கை வைத்து அவன் கேட்க..
“சீன் போடாத! சீக்கிரம் சீக்கிரம் கிளம்பு.. நான் வேற இன்டீரியர் டெகரேஷனுக்கு ஆள வர சொல்லி இருக்கேன்” என்றான் கார்த்திக்.
“ஆஹ்ஆஆஆ… என்ன நடக்குதுன்னு சொல்லித்தொலை! எனக்கு தலையை வெடிக்குது” என்று கத்தினான் கண்ணன்.
“எரும.. எரும.. எனக்கு தான் கல்யாணம் இன்னும் மூணு நாள்ல. உனக்கு நம்ம அப்பாட்மெண்ட்லேயே சிங்கிள் பெட்ரூம் உள்ள வீடு புக் பண்ணி வச்சிருக்கேன். நீ அந்த வீட்டுக்கு ஷிப்ட் ஆயிடு. சீக்கிரம் கிளம்பு வேலைக்கு ஆள் வந்துருவாங்க” என்றான்.
“என்னது உனக்கு கல்யாணமா?” என்றதிலேயே ஷாக்காக இருந்த கண்ணனுக்கு அதன் பின் அவன் கூறியதும் கேட்கவே இல்லை. காஃபியில் கவனம் வைத்திருந்த கண்ணன் அப்பொழுதுதான் கார்த்திக் சொன்னதை புரிந்து கொள்ள.. “டேய்.. நீ என்ன சொன்ன திரும்ப சொல்லு?” என்று படபடத்தப்படி கண்களை விரித்து அவன் முன்னே நின்றான்.
அப்படியே அவனை இழுத்துக் கொண்டு அவன் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கும் சிங்கிள் பெட்ரூம் வீட்டினில் தள்ளி.. அவன் லக்கேஜை தூக்கி போட்டு “சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா” என்றான் கார்த்திக்.
அதற்குள் இன்டீரியர் டெக்கரேட்டரை எல்லாம் அனுப்பி வைத்திருந்தார் கிருஷ்ணகுமார். தனியாக ஒரு வீடு வாங்கி தருகிறேன் என்பதற்கு கார்த்திக் மறுத்து விட.. “சரி. வீடு தான் வேணாம். ஆனா.. வீட்டில் உள்ளதை மாற்றலாம்!” என்று இவரே ஆட்களை வர செய்து விட்டவர், இப்பொழுது வேலைக்கு ஆட்கள் வந்துவிட்டனரா என்று சரி பார்த்துக் கொண்டார்.
“இவர எனக்கு அப்பாவா இருக்க சொன்னா.. அந்த பிள்ளைக்கு தான் அப்பாவா இருக்காரு.. இவரையெல்லாம்??!!” என்று பற்களை கடித்தப்படி நினைத்தவன், என்ன ஆல்ட்ரேஷன் செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறிவிட்டு.. தன் பொருட்களை எல்லாம் கண்ணனின் அறையில் பத்திரப்படுத்திவிட்டு “இதையெல்லாம் முடிச்சிட்டு சொல்லுங்க.. கடைசியா அந்த ரூம் ரெடி பண்ணலாம்!” என்று விட்டு அலுவலகத்திற்கு சென்றவன் வாயில் அவலாக அவளைத்தான் மென்றபடி சென்றான்!!
கல்யாணத்திற்கு குறைந்தது பத்து நாட்களாவது விடுப்பு எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகுமார் கட்டளை இட்டு விட.. இவன் ஒரு வாரம் என்று நினைத்திருந்தான்.
அதற்குள் முடிக்க வேண்டிய வேலைகள் அவனை நெட்டித் தள்ள கண்ணனும் இல்லாமல் கடந்த ஒரு வாரமாக கண்விழித்து வேலை பார்த்ததின் பலன்.. மதிய உணவு உண்டவுடன் சற்றே அவனை தூக்கம் சொக்கியது. அப்படியே மேசையில் கவிழ்ந்து உறங்க ஆரம்பித்தான் கார்த்திக்.
அவனோ அவளது பின் கழுத்தில் விரல்களால் கோலமிட… உணர்ச்சிமிகு இடத்தில் அவனின் விரல் செய்த சரச விளையாட்டில்.. இன்பமாய் சிலிர்த்து சிணுங்கினாள் பெண்!!
அவனுக்கு பிடித்த அந்த ஜிமிக்கி..
காதோரம் சுருண்ட மென் முடி கற்றைகள்.. என்று அவனை அவள் பால் ஈர்த்தது, இரும்பை ஈரக்கும் காந்தம் போல்!!
கொஞ்சம் கொஞ்சமாக அவளது பின் கழுத்து.. காது மடல்.. கழுத்து என்று அவன் தன் நுனி விரல் கொண்டுவருட.. வருட.. ஆழியென உணர்வுகள் பொங்கி எழுந்தது அவளுள்!! அதில் இரத்தம் சூடாகி ஒவ்வொரு அணுவுக்குள் பரவி விரவ… தாப ஊற்றுக்கள் பெருக.. அதில் பெண்ணவள் சிவந்தாள் அந்திவானம் போல!!
கிறங்கிய நிலையில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் தோற்றம் அவனை ஈர்த்தது. சிவந்த கனிந்த கன்னங்களும்… பெருமூச்சு விடும் மூக்கும்.. சொக்கி நிற்கும் கண்களும் அவனை முத்தாட அழைத்தன!!
அவளின் மெல்லிய இதழ்களின் ஈரத்துளியை உறிஞ்சி சுவைக்கும் எண்ணம் எழுந்து மனதை பரிதவிக்க வைத்தது!!
அவன் பார்வையின் பொருளுணர்ந்த அவளிடமும் மெலிதான ஒரு படபடப்பு எழுந்திருந்தது. இருவருக்குமான அந்த மெல்லிய கோடு எப்போது வேண்டுமானாலும் உடைபடும் போலிருந்தது!!
Sema sis
Aha pidikala nu solitu kanavula Sama gujals 😂😂
Super mam
Ueer urukum thecal née full novel podunga