ATM Tamil Romantic Novels

பாவையிடம் மையல் கூடுதே 02

அத்தியாயம் 2

 

பிராடோ என்பது இத்தாலியின் டஸ்கனியில் உள்ள ஒரு நகரம் மற்றும் கம்யூன் ஆகும். இது பிராட்டோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இரவின் இருட்டில் காற்றை கிழித்துக் கொண்டு, வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த கருப்பு நிற ஆடி கார். கைகள் தாளமிட, வாயில் ஆங்கிலப் பாடலை முணுமுணுத்தவாறே காரின் ஸ்டீரிங்கில் தாளமிட்டவனின் கைப்பேசி அழைக்க, தன் காதில் இருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தான். 

 

“ஹலோ..” 

 

“மிஸ்டர்.. தேவ்..”

 

“எஸ்.. டெல் மீ..”

 

“தேவ்.. என் தம்பியை ஏமாத்துன.. கும்பல்கிட்ட இருந்து.. எங்க பணத்தை திருப்பி வாங்கிக் கொடுத்துட்டீங்கன்னா.. அதுல இருந்து இருப்பத்தைந்து பர்சன்டேஜ் உங்களுக்கு நான் கொடுத்துர்றேன்..”

 

“தேவையில்ல..”

 

“ப்ளீஸ்.. மிஸ்டர்.. தேவ்.. அவன் ரொம்ப இன்னோசென்ட்.. அவனை ரொம்ப ஈசியா ஏமாத்தி வாங்கிட்டாங்க.. ப்ளீஸ்.. எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க..”

 

“வெல்.. அப்போ நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.. பட், அதுக்கு பதிலா நீங்க எனக்கு அவளை கண்டுபிடிச்சு கொடுக்கணும்..”

 

“ஷ்யர்.. மிஸ்டர்.. தேவ்.. கண்டிப்பா அந்த பொண்ணைப் பத்தின டீடெயில்ஸ் நாளைக்கு காலைல உங்க கையில இருக்கும்..” 

 

“அப்போ.. உங்க மணி.. உங்க கைக்கு வந்த மாதிரி தான்..” என்றவன் அழைப்பை துண்டிக்க, மீண்டும் அவனது கைபேசி சிணுங்கியது. 

 

“ஹலோ.. தேவ்.. இவங்க தான் அந்த அமௌண்ட்டை சுருட்டிட்டு போன கும்பல்.. அவங்களை பத்தின டீடெயில்ஸ் எல்லாம் அனுப்பிருக்கேன்.. பீம் இந்நேரம் அவனுங்க இடத்துக்குள்ள போயிருப்பான்..”

 

“குட்..” என்றவனின் உதடுகள் விரிந்து வெற்றிப்புன்னகை சிந்தியது. பிரம்மாண்டமான ஹோட்டலுக்குள் நுழைந்த காரின் உள்ளே இருந்து கம்பீரமாக இறங்கி வந்தான் தேவ்மல்கோத்ரா.. ஆறடி உயரத்தில் ஆண்களே கண்ணிமைக்காது பார்க்கும் அழகு, அசாத்திய துணிச்சல் கண்ணில் தெரிய, எதிரிகளின் கால்கள் தன்னால் பின் நகர்ந்து செல்லும் கம்பீரம் தோற்றத்தில், தன் நீளத்கால்களை எட்டு வைத்து, வேகநடையோடு உள்ளே நுழைந்தவனை வரவேற்றான் அந்த ஏமாற்றக்கும்பலின் தலைவன். 

 

“ஹாய்.. ஐம் தேவ் ப்ரம் தேவ் குரூப்ஸ் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ்..” என்ற தேவ் தனது ஐடி கார்டை காட்ட, அதனை வாங்கிப் பார்த்தவனின் முகம், அதன் பின்னால் இருக்கும் கேமராவினால் பதிய, அவனை பற்றிய முழு விவரமும் தேவ்வின் நண்பனான ஆர்யாவிற்கு செல்ல,

 

“பாஸ்.. வேலை முடிஞ்சது..” என்ற ஆர்யா, ஏமாற்றுக்கும்பலின் தலைவனுடைய மொத்த பணத்தையும் அவனது அக்கௌன்ட் டில் இருந்து, தங்களது டிரஸ்ட்டிற்கு மாற்ற, 

 

“வெல்கம் மிஸ்டர்.. தேவ்.. எங்க கம்பெனில இன்வெஸ்ட் பண்றதுக்கு தாங்க் யூ சோ மச்..” என்று தலைவன் கூறிய அடுத்த நொடி, 

 

“சாரி.. ஐம் நாட் இன்டெரெஸ்ட்டேட்..” என்று திரும்பிச் செல்ல முயன்றவனின் தோளில் கை வைத்தவன், அடுத்த நொடி வலியுடன் தரையில் கிடந்தான். 

 

“என்ன? பார்க்க செம ரிச்சா.. ஹைக்கிளாஸா இருக்கான்.. இவனுக்கு லோக்கலா இறங்கத் தெரியாதுன்னு நினைக்காத.. இறங்கி அடிச்சா.. எலும்பு மிஞ்சாது.. ஜாக்கிரதை..” என்றவனை சுற்றி அக்கும்பலின் பாடிகார்ட்ஸ் மடக்க, புயல் வேகத்தில் அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கி தேவோடு சேர்ந்து கொண்டவன், அவனது மற்றொரு நண்பன் பீம் படேல். அங்கிருந்த அத்தனை பேரையும் அடித்து நொறுக்கியவர்கள், தாங்களே போலீஸிற்கும் தகவல் கொடுத்து, அவர்களை பிடித்துக் கொடுத்தனர். 

 

மறுநாள் காலையில் தேவ் மல்கோத்ராவை கம்பெனியில் தேடி ஓடி வந்தான் ஆர்யா. 

 

“தேவ்.. அந்த பொண்ணு இப்ப எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சுட்டேன்..” 

 

“வாட்? ரியலி!?”

 

“எஸ்.. டில்லி யூனிவர்சிட்டில பினான்ஸ் படிக்குறா..”

 

“டில்லி?!”

 

“மே பி.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு அங்க படிச்சிட்டுருக்கலாம்..”

 

“ம்ம்.. அப்படியும் இருக்கலாம்..”

 

“மல்கோத்ரா குரூப்ஸோட பிராப்பர்டீஸ் ஏலத்துக்கு வரப் போகுது.. அந்த கம்பெனியோட மார்க்கெட் ரொம்ப டவுனாகிடுச்சு.. ஷேர் ஹோல்டர் எல்லாம் ஷேர்ஸ் விற்குதுக்கு ரெடியா இருக்காங்க.. இப்போ அங்க மிஸஸ் ஹேமா மல்கோத்ராவோட கை தான் ஓங்கியிருக்கு.. மேக்ஸிமம் ஷேர்ஸ் அவங்கக்கிட்ட தான் இருக்கு.. சோ..”

 

“இப்போ அந்த சொத்துக்களுக்கெல்லாம் வாரிசு யாருன்னு முடிவு பண்ற நேரம் வந்துடுச்சுன்னு சொல்ற?”

 

“ம்ம்.. எஸ் பாஸ்.. மல்கோத்ரா குரூப்ஸோட ஓனர் ராம் மல்கோத்ரா.. நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடல்ல இருக்காரு..”

 

“சோ.. இப்ப அவ வெளியே வந்தே ஆகணும்..”

 

“ம்ம்.. அவளைப் பத்தின ஃபோட்டோ.. டீடையில்ஸ் எல்லாம்.. இப்போ நெட்ல ரொம்ப வைரலாகிட்டு வருது..” என்றவன் ஒரு பெண்ணின் புகைப்படத்தை கைபேசியில் தேவ் மல்கோத்ராவிடம் காட்ட,

 

“அனிதா ஷெரஜ்..” என்றவனின் உதடுகள் தானாக அவளது பெயரை உச்சரித்தது. யாரிந்த தேவ் மல்கோத்ரா? இவனுக்குப் அனிதா ஷெரஜிற்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவளை இவன் தேட வேண்டும்? 

****************************************************

“என்னடி அதுக்குள்ள இருட்டிருச்சு? கேட்டை வேற பூட்டி வைச்சுருக்காங்க?”

 

“மணியப்பாரு.. நைட் ஒன்பதாகுது.. இப்ப கேட்டை பூட்டாம.. திறந்து வைச்சுட்டா தூங்குவாங்க..”

 

“ஆனாலும்.. இந்த ஹாஸ்டல் வார்டன் ரொம்ப ஸ்டிக்ட் டி.. இப்படியா.. கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு கேட்டை பூட்டி வைக்கும்.. இந்த டெல்லி குளிர்ல அப்படியே உறைப்பு போயிறமாட்டோம்?!”

 

“இப்ப கேளு.. நான் தான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேனே.. முதல்ல ஹாஸ்டல் போலாம்.. அப்புறமா.. ஹோட்டல் போலாம்னு.. மகாராணி இறங்குன உடனே..சாப்பிட இழுத்துட்டு போயாச்சு.. இப்பப் பாரு.. நடுத்தெருவுல நிற்குறோம்..”

 

“பின்ன பசிக்கும்ல.. சாப்பிடணும்ல..”

 

“ஆனாலும் எங்கப்பா முத்தையா பாண்டியன் ரொம்ப க்ரேட் டி..”

 

“இப்ப எதுக்கு திடீர்னு உன்னோட அப்பாவை உள்ளே இழுக்குற?” 

 

“என்னோட அப்பா ஒரு தீர்க்கதரிசி டி.. அவர் நாக்குல சரஸ்வதி அப்படியே தாண்டவமாடுறா..”

 

“அவ தாண்டவமாடட்டும்.. இல்ல ப்ரேக் டான்ஸே ஆடட்டும்.. இப்ப என்ன அதுக்கு?”

 

“இப்ப என்ன அதுக்கா? அப்பவே.. நான் தம்மா துண்டா இருக்கும் போதே சொன்னாரு.. இவ கூட சேராத.. இவ கூட சேராதன்னு.. அப்படி சேர்ந்தா.. ஒரு நாளில்ல.. ஒரு நாள் நடுதெருவுலதே நிற்பன்னு.. படிச்சு.. படிச்சு.. சொன்னாரு.. அந்த நாள்.. இந்த நாளா மாறும்னு.. நான் கொஞ்சமும் நினைச்சுப்பார்க்கல டி”

 

“இப்ப என்ன? உனக்கு ஹாஸ்டல் உள்ள

போகணும் அவ்வளவு தானே?”

 

“ஹலோ மேடம்.. ஃபார் தி கைண்ட் இன்ஃபர்மேசன்.. நீங்களும் என்கூட நடுத்தெருவுல தான் நிற்குறீங்க.. நீங்களும் உள்ள போய் தானாகணும்.. இல்லேன்னா.. காலங்காத்தால.. இங்க நிற்கும் தலைவருங்க சிலை மாதிரி நாமளும் உறைஞ்சு போயிருவோம்..”

 

“பேச்சை குறைடி.. இப்பப் பாரு..” என்ற கவிதாஞ்சலி, சுற்றும் முற்றும் கண்களை உருட்டியவள், கல்லூரி வளாகத்தின் பின்புறம் சஹானாவை அழைத்துச் சென்று, அங்கே சாலையின் ஓரமாக போடப்பட்டிருந்த சில சாக்கு மூட்டைகளை சுவற்றோரமாக அடுக்கி வைத்தாள். 

 

“இப்ப எதுக்கு ரோட்டுல கிடக்குற குப்பையை எல்லாம் பொறுக்குற?”

 

“ம்ம்.. நல்ல எடைக்கு போட்டு.. பேரீச்சம் பழம் வாங்கி திங்கத் தான்.. கேட்குறா பாரு கேள்விய? வாய் பேசாம இந்த மூட்டை மேல காலை வைச்சு சுவத்துல ஏறி.. அந்தபக்கமா குதி..”

 

“அடிப்பாவி.. கடைசியா கொள்ளக்கூட்ட தலைவியாவே மாறிட்டியா?”

 

“வாயை மூடிட்டு ஏறு டி..”

 

“நான் ஏறிடுவேன்.. ஆனா நீ என்ன பண்ணுவ? ஏற்கனவே குள்ளமா வேற இருக்க.. நீ முதல்ல ஏறு..”

 

“நீ முதல்ல ஏறு சஹூ.. நாய் எதுவும் இல்லேனா.. நான் ஏறி குதிக்குறேன்..”

 

“அதானே பார்த்தேன்.. என்னடா நம்ம மேல இவ்வளவு பாசம் வைச்சு.. முதல்ல ஏறி குதிக்க சொல்றாளேன்னு.. அம்புட்டும் விஷம்.. விஷம்..”

 

“இப்போ ஏறப்போறியா? இல்ல.. இன்னைக்கு நைட் ரோட்டுல தங்குறியா?”

 

“நானே முதல்ல போறேன்..” என்ற சஹானா, மூட்டையில் ஏறி சுவற்றுக்கு அந்தப்பக்கம் குதிக்க, கீழே வைத்திருந்த பயணப்பொதிகளை தூக்கி உள்ளே போட்டாள் கவிதாஞ்சலி. 

 

“ஹேய் கவி.. சீக்கிரம் வா.. வார்டன் ரவுண்ட்ஸ் வந்துற போகுது..”

 

“வெயிட்.. வெயிட் வந்துடுறேன்..” என்ன கவிதாஞ்சலி, அம்மூட்டையில் ஏற, சுவற்றின் கைப்பிடியை மட்டுமே அவளால் தொட முடிந்தது. 

 

“இப்ப என்ன பண்றது? ஏற முடியலையே.. இதுக்கு தான் சின்னப்புள்ளையில காம்ப்ளான் குடிக்கணும்னு சொல்றது.. அய்யோ இப்ப என்ன பண்ணுவேன்? எப்படி உள்ள போவேன்?” என்று தனக்குள் புலம்பிக் கொண்ட கவிதாஞ்சலி, அருகில் வேறு ஏதாவது மூட்டை இருக்கிறதா? என்று பார்க்க, சற்று தூரத்தில் இருந்த மூட்டையை தரதரவென இழுத்து வந்து தூக்கிப் போட்டு, அதன் மேல் ஏறியவளின் கால் இடறி விழ, கீழே விழப் போனவளை ஒரு கரம் வந்து தூக்கி நிறுத்தியது. 

 

“தாங்க் யூ ப்ரோ..” என்றவாறே நிமிர்ந்து பார்த்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவன் முன்னே கையை ஆட்டிய கவிதாஞ்சலி,

 

“ஹலோ.. கேன் யூ கியர் மீ?” என்று கேட்க, நிகழ் காலத்திற்கு வந்தவன்,

 

“நீ.. நீ.. அனிதா ஷெரஜ்?”

 

“அனிதா ஷெரஜா? நான் கவிதாஞ்சலி.. கையை விடுங்க சார்.. கீழே விழுகாம பிடிச்சதுக்கு தாங்க் யூ..” என்றவள் மீண்டும் மூட்டை மீது ஏற, இம்முறை அவள் மீண்டும் கீழே விழாதிருக்க, அவளை பின்புறமாக பிடித்து சுவற்றின் மீது ஏற்றினான் அப்புதியவன். சுவற்றின் மீது ஏறி அமர்ந்து, அப்புறமாக இரு கால்களையும் போட்டவள், திரும்பி அவனைப் பார்த்து,

 

“ரொம்ப தேங்க்ஸ்.. அப்புறம் நீங்க ரொம்ப ட்டாலா.. கலரா.. ஹாண்ட்சமா இருக்கீங்க..” என்று கூறிவிட்டு கீழே குதித்திருந்தாள் கவிதாஞ்சலி. 

 

“ஹலோ.. டாடி.. நான் இங்க டில்லில அனிதாவை பார்த்தேன்..”

 

“வாட்.. அனிதாவா? அங்கேயா?”

 

“எஸ் டாடி.. ஐ அம் டாம் ஷ்யர்.. சீ இஸ் அனிதா ஷெரஜ்..”

 

“உடனே அவளோட டீடெயில்ஸ் எல்லாத்தையும் எனக்கு அனுப்பு.. அப்புறம் மறக்காம அவளை இங்க கூட்டிட்டு வா.. அவளைப் பார்த்தா.. பெரியய்யா.. எந்திரிச்சு உட்கார்ந்துருவாரு..”

 

“கண்டிப்பா டாடி.. நாளைக்கு அவளை உங்க கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவேன்..”  

 

“ஆகாஷ்..”

 

“டாடி?”

 

“அப்புறம் இந்த விஷயம் நமக்குள்ள சீக்ரெட்டா இருக்கணும்.. வேற யாருக்கும் தெரியக்கூடாது.. வெளிய தெரிஞ்சா அனிதா ஷெரஜ்.. உயிருக்கே ஆபத்தாகிடும்.. பீ கேர்ஃபுல்..”

 

“ஓகே டாடி..” என்ற ஆகாஷ், அவளை சந்திக்கப் போகும் மறுநாளுக்காக காத்திருக்க, மறுநாள் நடக்கப் போகும் நிகழ்விற்காக, விதியும் அவனுக்கு முன்பாக காத்து கொண்டிருந்தது. 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top