ATM Tamil Romantic Novels

பாவையிடம் மையல் கூடுதே 03

அத்தியாயம் 3

 
“மெதுவா போடி.. ஹிட்லர் முழிச்சுக்க போகுது..” என்றபடியே சஹானா, தனது கைபேசியில் டார்ச்சை ஆன் செய்து முன் செல்ல, அவளைப் பின்தொடர்ந்து சென்றாள் கவிதாஞ்சலி. தங்களது அறைக்கு வந்ததும், பேக்கை தூக்கி வீசிய கவிதாஞ்சலி,
 
“அப்பா.. ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்.. அங்கேயே இருந்திருந்தேன்னா.. அந்த கரிச்சட்டி தலையனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைச்சுருப்பாரு..”
 
“இப்படியெல்லாம் பேசாதடி.. அவருக்கு மட்டும் உன்னைய அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா? பஞ்சாயத்துல முடிவு பண்ணிட்டாங்க.. அதை அவரால மீற முடியல..”
 
“ஏன்டி.. அவர் நீயா நானான்னு போட்டி போட நான் தான் கிடைச்சேனா? யாரை கேட்டு என்னை வைச்சு பந்தயங்கட்டினாரு? எனக்கும் கனவு இருக்கும்.. லட்சியம் இருக்கும்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தாரா?”
 
“என்னைய கேட்டா.. அவருக்கு நீ இப்படி எஸ்கேப் ஆவன்னு முன்னாடியே தெரியும்னு நினைக்குறேன்..”
 
“எப்படி சொல்ற?”
 
“அவர் உன்னைய தடுக்கணும்னு நினைச்சுருந்தா.. வீட்டைச் சுத்தி காவல் பலமா போட்டுருப்பாரு.. இப்படி நீ சுவர் ஏறி குதிக்குற அளவுக்கு விட்டுருக்க மாட்டாரு..” என்று சஹானா பேசிக்கொண்டு இருக்கும் போதே, கவிதாஞ்சலியின் ஃபோன் சிணுங்கியது. அதனை எடுத்து பார்த்த கவிதாஞ்சலி,
 
“தாத்தா தான் கூப்பிடுறாரு.. சஹு..” என்று கூற, 
 
“எடுத்துப் பேசு டி..” என்ற சஹானா, கைபேசியை கவிதாஞ்சலியின் காதின் அருகில் வைத்தாள். 
 
“அம்மாடி.. கவி.. யத்தா.. தாத்தா பேசுறேன்தா..”
 
“……”
 
“ஏன்தா.. தாத்தா மேல கோபமாத்தா? கோவிச்சுக்காதத்தா.. அன்னைக்கு ஏதோ ஒரு நினைப்புல.. உன் பேர்ல பந்தயங்கட்டிப்புட்டேன்.. இந்த தாத்தனை மன்னிச்சுருத்தா.. பேசுத்தா.. என்னைய மன்னிச்சிட்டேன்னு ஒத்த வார்த்தை சொல்லுத்தா..”
 
“……”
 
“உனக்கு என் மேல இன்னும் கோபம் குறையலன்னு புரியுது.. போனை அந்த நாச்சியாக்கிட்ட கொடு..” என்று சக்ரவர்த்தி பாண்டியன் கூறிய உடன், சஹானாவின் காதில் வைத்தாள் கவிதாஞ்சலி. 
 
“ஏத்தா.. நாச்சியா..”
 
“தாத்தா.. என் பெயரு சஹானா..”
 
“அது நீயா மாத்திக்கிட்ட பெயரு.. நாச்சியார் அப்படிங்குற பெயர்.. குலதெய்வம் கோயில்ல.. மொட்டையடிச்சு.. கெடா வெட்டி.. காது குத்தி வைச்ச பெயரு.. நான் அதை சொல்லித் தான் கூப்பிடுவேன்..”
 
“அப்போ நான் கேட்கமாட்டேன்..” 
 
“சரித்தா.. அப்போ.. நான் அடுத்த பஸ்ஸை பிடிச்சு.. மெட்ராஸுக்கு வந்துடுறேன்..”
 
“மெட்ராஸா? அய்யோ.. தாத்தா.. வேணாம்.. வேணாம்..சொல்லுங்க.. என்ன விஷயம் தாத்தா? சொல்லுங்க..”
 
“எதுக்கு இப்படி ஷாக்காகுற? எனக்கு தெரியாம ஏதாவது திருகுத்தனம் பண்ணி வைச்சுருக்கீங்களாலே?”
 
“ஒன்னுமில்ல தாத்தா.. ஒன்னுமே இல்ல..”
 
“உங்களை நம்பித் தான் நான் அந்த காலேஜ் பக்கமே வர்றதில்ல.. ஏதாவது திருகுத்தனம் பண்ணி வைச்சுருந்தீங்க.. ஒக்காலி.. கையக்காலை முறிச்சு வைச்சுடுவேன்.. ஜாக்கிரதை..”
 
“கண்டிப்பா தாத்தா.. நாங்க அப்படி எது பண்ணியிருந்தாலும் உங்கக்கிட்ட சொல்லிருவோம்ல.. அதுனால நீங்க நிம்மதியா இருங்க..”
 
“சரி.. சரி.. வாயளக்காம.. கவிய கொஞ்சம் நல்லா பார்த்துக்கோ..”
 
“ஓ.. பார்த்துக்குறேன்.. தாத்தா.. நல்லாவே பார்த்துக்குறேன்..” என்ற சஹானா கைபேசியை அணைக்க, தனது உடைகளை பெட்டியில் இருந்து எடுத்து, ஒவ்வொன்றாக அடுக்கு ஆரம்பித்திருந்தாள் கவிதாஞ்சலி. 
 
“ஏன்டி.. நீ ஒரு வார்த்தை பேசியிருந்தா.. உன் தாத்தா சந்தோஷப்பட்டுருப்பாருல.. ஏன்டி பேசமாட்டேங்குற..”
 
“அவர் மேல இருக்குற கோபம் குறைஞ்சதும்.. நானே பேசுறேன்.. இப்ப என்னைய ஃபோர்ஸ் பண்ணாத..”
 
” அவரை பார்க்க பாவமாக இருந்துச்சு.. அதான் சொன்னேன்.. அப்புறம் உன் இஷ்டம்..” என்ற சஹானா, தன் வேலைகளை செய்ய தொடங்க, கட்டிலில் படுத்திருந்த கவிதாஞ்சலியின் கண் முன்னே என்றோ தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தந்தையின் முகம் வந்து போனது. பெருமூச்சுடன் எழுந்து அமர்ந்தவள்,
 
“ம்ஹும்.. இப்படியே இருந்தா.. ஏதாவது தோன்றிக் கொண்டே இருக்கும்.. நாளைக்கு நடக்கப் போற காம்பட்டிஷனுக்கு ப்ரிப்பர் பண்ணுவோம்..” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள், மறுநாள் நடக்கவிருக்கும் பல்கலைக்கலக ஓவியப் போட்டிக்கு தயாராக தொடங்கினாள். 
****************************************************
“ஹலோ.. மிஸ்.. நில்லுங்க..” என்று சில மாதங்களாக பின் தொடர்ந்து வரும்‌ இளைஞனை திரும்பிப் பார்த்தாள் அவள். 
 
“ஹாய்.. ஐம் ரோஹித்.. இங்க தான் ஃபினாஸ்ல மாஸ்டர் பண்ணிட்டுருக்கேன்..”
 
“ஓகே.. இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொல்றீங்க?”
 
“ஆக்ஜுவலி.. நான் உங்களை கொஞ்ச நாளாக ஃபாலோ பண்ணிட்டுருக்கேன்..”
 
“வாட்?”
 
“சாரி.. தப்பான கண்ணோட்டத்தில் ஏதும் இல்ல.. நீங்க தமிழா?”
 
“ம்ம்ம்.. அதுக்கு?”
 
“நான்.. அம்மா ஃப்ரான்ஸ்.. அப்பா தமிழ்.. சோ, தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.. உங்களைப்‌ பார்த்ததும்.. ஃபோட்டோல இருந்த என்னோட அம்மா தான் ஞாபகத்துக்கு வந்தாங்க.. சோ.. வில் யூ மேரி மீ?” என்றவன் கேட்டதும், தன் புருவங்களை நெருக்கி அப்புதியவனை பார்த்தவள்,
 
“ம்ம்ம்.. மிஸ்டர்?”
 
“ரோஹித்.. “
 
“ஹஹ.. மிஸ்டர் ரோஹித்.. நீங்க நினைக்குற மாதிரி பொண்ணு நானில்ல.. நீங்க வேற யாரையோ நினைச்சுக்கிட்டு என்னைய ஃபாலோ பண்ணிட்டுருக்கீங்க.. சாரி.. எனக்கு உங்க மேல எந்த இன்ட்ரெஸ்டும் இல்ல.. ப்ளீஸ்.. இனிமே என்னைய ஃபாலோ பண்ணாதீங்க..” என்றவள் தன்னை அழைக்கும் அழைப்பேசியை எடுத்து காதில் வைத்தவாறே, அவனைத் தாண்டி செல்ல, அவளை குழப்பமாக பார்த்தவன், குழப்பத்துடனேயே அங்கிருந்து திரும்பிச் செல்லலானான். 
 
“ஹலோ..” என்றவளுக்கு எதிர் முனையில் பேசியவரின் குரல் அதிர்ச்சியை கொடுக்க,
 
“நீ.. நீ.. உயிரோடு.. பதினேழு வருஷம் கழிச்சு.. எப்படி இருக்க? எங்க இருக்க? நான் உன்னை பார்க்கணும்..” என்றவளுக்கு எதிர்முனை கூறிய பதிலில் முகம் மலர்ந்தாள். 
 
“ஓகே.. ஓகே.. இன்னைக்கு ஏழு மணிக்கு காலேஜ் பின்னாடி கேட்ல வெயிட் பண்றேன்..” என்று கூறி அழைப்பேசியை அணைத்தவளின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. அக்கண்ணீர் சோகத்தினாலா? அல்லது ஆனந்தத்தினாலா? அதனை அவளே அறிவாள். 
**************************************************
“ராமே.. ஆண்டாலும்.. ராவணே ஆண்டாலும்.. எனக்கொரு கவலையில்லை.. நான் தான்டா என் மனசுக்கு ராஜா.. வாங்குங்கடா வெள்ளியில் கூஜா.. நான் கேட்டா.. கேட்டதை கொடுப்பேன்.. தானன.. தானன.. தானா..” 
 
“என்னடி இது?”
 
“ட்ராயிங்..”
 
“இதுல ஒன்னுமே புரியலையே டி.. மண்ணுக்குள்ள இருந்து ரெண்டு ரோஜாப்பூ வருது.. பின்னாடி பேக் ரவுண்ட்ல ஏதோ நிழல் மாதிரி யாரோ நிக்குற உருவம்.. தெரியுது.. அது மேல.. பத்து தலை மாதிரி ஏதோ தெரியுது.. என்னடி இது? இதைப் போயி செலக்ட் பண்ணி ஒன்றை லட்ச ரூபாய் வேற பரிசா கொடுத்துருக்காங்க.. அவனுங்களுக்கு மூளையே இல்லன்னு நினைக்குறேன்..”
 
“ஆமா.. உன்னோட மூளை எதுக்கும் உதவாம அப்படியே ஃரெஷா தானே இருக்கு.. அதை தூக்கி கொடுக்க வேண்டியது தானே?! ஞானசூன்யம்! ஞானசூன்யம்..”
 
“வர வர என்னைய ரொம்ப திட்டுற.. ஒருநாள் இல்ல ஒருநாள்.. நான் உன்பக்கத்துல இல்லாம போகப் போறேன்.. அப்போ நீ ரொம்ப கஷ்டப்பட போறப் பாரு?!” என்ற சஹானாவை புன்னகையோடு பார்த்த கவிதாஞ்சலிக்கு தெரியவில்லை, அவ்வார்த்தைகள் என்றேனும் ஒருநாள் பழிக்கப் போகின்றென்று.. 
 
நம்மை சுற்றி எப்போதும் தேவதைகள் உலாவுகின்றார்களாம்.. நாம் பேசும் நல்லது.. கேட்டது.. அனைத்தையும் கேட்டுவிட்டு ததாஸ்து.. என்று ஆசிர்வதிப்பார்களாம்.. அது அப்படியே நம் வாழ்வில் நடக்குமாம்.. இதை அறியாத சஹானா, கூறிய வார்த்தைகளை கேட்ட தேவதைகள் ததாஸ்து கூறியோ.. என்னமோ.. அவைகள் வருங்காலத்தில் நடக்கும் போது, எவ்வளவு வலிக்கும் என்று அப்போது கவிதாஞ்சலி அறிந்திருக்க வாய்ப்பில்லையே?!
 
“ஹேய் கவி..”
 
“ம்ம்..”
 
“உன்னைய ப்ரொஃபசர் கூப்பிட்டாரு..” என்று இந்தியில் மாணவன் ஒருவன் வந்து கூற, 
 
“ஓகே.. கவி.. பாரீஸ்ல நடக்கப் போற.. காம்படிசன் பத்தி சொல்றதுக்கா இருக்கும்.. நீ போய் பார்த்துட்டு வா.. கண்டு தெரியாம இங்கதே இண்டர்நேஷனல் லெவல்னு பொய்.. பொய்யா.. சொல்லி.. உலகத்தை ஏமாத்தி.. உனக்கு ப்ரைஸ் கொடுத்துட்டாங்கலே.. அவனுக வெள்ளக்காரனுங்க.. அவ்வளவு சுலவா ஏமாறமாட்டாய்ங்கலே..”
 
“எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.. இந்த தெக்கத்தி பொண்ணு நினைச்சா.. மண்டி போட வைச்சுருவா தெரிஞ்சுக்க..”
 
“அப்போ.. நீ அங்க காம்படிஷனுக்கு போறியா? இல்ல அங்கேயே செட்டிலாக போறியா? அடியேய்.. கோண கொண்டைக்காரி அப்படியேதும் பண்ணிடாதடி.. அப்புறம் பெரியாத்தா.. என் தோலை உறிச்சு.. உப்புகண்டம் போட்டுரும்..”
 
“உன் தோலை தானே?”
 
“அய்யோ.. இந்த கைய காலா நினைச்சு.. கேட்குதேன்.. அப்படி ஏதாவது சம்பவம் பண்ணணுங்குற எண்ணமிருந்தா.. குழி தோண்டி புதைச்சுருடி.. எனக்கு உயிர் பிச்சை கொடுடி..”
 
“அழாத.. அப்படி எதுவும் இப்போதைக்கு ஐடியாயில்ல.. முதல்ல பாரீஸ் போறதுக்கான அரேன்ஜ்மெண்ட்ஸ் என்னன்னு ப்ரொபசர்கிட்ட கேட்டுட்டு அப்ளே பண்ணிட்டு வாரேன்..” என்ற கவிதாஞ்சலி, தனது புத்தகப் பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல, அவள் எதிரே நின்றுகொண்டிருந்தான் ஆகாஷ். 
 
“ஹாய் ஹனி..” 
 
“ம்ஹும்.. நான் உங்க ஹனியில்லவோய்.. நான் கவிதாஞ்சலி.. ஆர்ட் டிசைனர்.. ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்.. இன்னும் எத்தனை தடவை சொல்லணும்? நான் வேணா.. என்னோட ஆதார் கார்ட்.. பான் கார்ட்.. பால் கார்ட் எல்லாத்தையும் காட்டட்டுமா?”
 
“ஓ?! சாரி.. சாரி.. மிஸ்?”
 
“கவி.. கவிதாஞ்சலி..”
 
“ம்ம்.. அஞ்சலி..”
 
 “சாரி.. சாரி.. வெரி சாரி..” என்றவனை புன்னகையோடு பார்த்தவள், அங்கிருந்து செல்ல, தன் கண்முன்னே சென்று கொண்டிருப்பவளையும், தன் கையில் இருந்த ஃபோட்டோவில் இருப்பவளையும் பார்த்த ஆகாஷின் புருவத்தின் மத்தியில் முடிசொன்று விழுந்தது. பாரீஸ் செல்வதற்காக தான் வரைந்து வைத்திருந்த புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, தனது ப்ரொபசரை பார்க்க அடுத்த பகுதி, அடுக்கு மாடி கட்டிடத்திற்குள் நுழைந்த கவிதாஞ்சலி, லிஃப்டிற்குள் ஏற, அதே நேரத்தில் அவளைப் போன்ற ஒரே உருவம் கொண்ட அனிதா ஷெரஜும் ஏறினாள். ஒருவரையொருவர் பார்த்த நொடியில் அதிர்வலைகள் தாக்க, தங்களது உடலை தொட்டு பார்த்துக் கொண்டனர். அனிதாவின் கன்னத்தை கவிதாஞ்சலி தொட, தன் எதிரே இருப்பவள், உண்மையான உருவம் என்று அறிந்ததும், பேச வார்த்தை வரமறுத்தது கவிதாஞ்சலிக்கு.. 
 
“நீ.. நீ.. நீ.. என்னைய மாதிரியே..” என்று கவிதாஞ்சலி கூற வருவதை கேட்கக்கூட அடுத்த நிமிடம் அனிதா ஷெரஜ் அங்கு நிற்கவில்லை. லிஃப்ட்டை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தாள். மின்சாரம் தாக்கியது போல் நின்று கொண்டிருந்தவள், வழக்கம் போல் லிஃப்டில் மேலே செல்ல, அடுத்த மாடியின் இடையில் மாஸ்க் அணிந்த ஒருவன், கவிதாஞ்சலி இருந்த லிஃப்டிற்குள் ஏறினான். முதலில் அவனிடம் அவளுக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால், பெண்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வு, உள்ளிருந்து அலாரம் அடிக்க, அங்கிருந்து தப்பிக்க எண்ணி, லிஃப்ட்டை நிறுத்த முயற்சித்தவளின் மூக்கில் மயக்க மருந்தை வைத்து அழுத்தினான். மயங்கி சரிந்தவளை தன் தோளில் போட்டுக் கொண்டு, மாடியிறங்கி சென்றவனை மாடிப்படி இடுக்கில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் அனிதா ஷெரஜ். தன்னை தூக்கிச் செல்ல வந்தவனிடம் அப்பாவியான கவிதாஞ்சலி மாட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்த அனிதா ஷெரஜிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னால் கவிதாஞ்சலி பாதிக்கப்படப் போகும் கவிதாஞ்சலிக்கு உதவி புரிவாளா அனிதா ஷெரஜ்? 
 
 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top