ATM Tamil Romantic Novels

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 9

இஷ்டம் -9

 

“கண்களை மூடினால்…

கனவிலும் நீ தானே!!”

 

நடிகர் கார்த்திக் சொன்னது நம் கார்த்திக்கு பக்காவாக பொருந்தி போனது!!

 

“என்னடா இப்படி காஜி காஜியா கனவு வருது கார்த்திக்!” தனக்கு தானே கேட்டுக் கொண்டு, தலையை உலுக்கிக் கொண்டவன், அவன் அறையோடு ஒட்டி இருந்த குளியலறைக்கு சென்று முகத்தில் தண்ணீரை வாரி இறைத்தான்.

 

வெறும் முத்தத்துக்கே இப்படி?

அப்போ.. மொத்தத்துக்கு எப்படியோ??

 

அவளை வெறுக்கிறேன்.. மறுக்கிறேன்.. என்று முடிந்த மட்டும் அவள் நினைவுகளோடு தான் சுற்றிக் கொண்டிருந்தான் கார்த்திக், கல்யாண நாள் வரும் வரை!! 

 

வேலையில் கூட கவனம் இல்லாமல்… அதுவும் அவனுக்கு விரும்பி ஆரம்பித்த தொழில் வேறு!!

 

முதலில் பிரான்ஸைஸ் போல பிற கம்பெனி ப்ராஜெக்ட்களை எடுத்து இவனும் இவன் நண்பன் கண்ணனும் 20 தொழிலாளர்களுக்கு கொண்டு ஆரம்பித்தது தான் இந்த 2கே கன்சல்டன்சி!!

 

இன்று இருநூறு தொழிலாளர்களோடு இரண்டு வருடத்தில் வளர்ந்து நிற்கிறது. இன்னும் இந்நிறுவனத்தை பெரிதாக கொண்டு செல்ல.. கடல்கடந்து இவர்களின் திறமையை நிலைநாட்ட தான் பெரிதும் பாடுபடுகின்றனர் இருவரும்!! பேரில் உள்ள 2k போல.. 2000 தொழிலாளர்களைக் கொண்டு வளர்ந்த நிறுவனமாக மிளிர வேண்டும் 2கே கன்ஸ்டென்ஸி என்பதே இருவரது கனவு!!

 

அவர்களின் டார்கெட்டில் ஒன்று தான் சிங்கப்பூர் ப்ராஜெக்ட்.. அதற்கு கார்த்திக் தான் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் போனமுறை பெண் பார்க்கப் போவதற்காக அவன் கோயம்புத்தூர் சென்று விட, ஃபோனிலேயே அனைத்தையும் முடித்து கண்ணனை அனுப்பி வைத்திருந்தான்.

 

வெற்றிகரமாக அவனும் மற்ற விஷயங்களை முடித்து வந்துவிட, சந்தோசத்தை கொண்டாட முடியாத நிலைமையில் தான் கார்த்திக்!! அவன் குறைந்தது ஒரு வாரத்திற்கு இப்பக்கம் வர முடியாது. அதற்குள் பெண்டிங் வேலைகளை முடித்துவிட்டு செல்ல இரவும் பகலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான் கூடவே நேத்ரா அவளையும் தன் கூட்டில் இருந்து மெல்ல விடுவித்து ட்ரெயின் ஆர்ஜேயாக சேர்த்து விட்டு இருக்கிறான். தன் கன்ஸல்டெண்டிலேயே வேலை தருகிறேன் என்று எவ்வளவு கூறியும் பெண் மறுத்துவிட்டாள்.

 

சிறிது நேரம் கண் மூடி படுத்து இளைப்பாற நினைத்தால் அதிலும் இவளின் ஞாபகங்கள்… 

 

“யூ.. யூ..‌யூ.. உன்னோட கஷ்டம்டி!!” என்று புலம்பினான் கண்ணாடி முன் நின்று!!

 

இவனின் புலம்பல்கள் பிடிவாதங்கள் விருப்பமின்மை எதுவும் கணக்கில் கொள்ளாமல் நாட்களும் கடந்து செல்ல… கல்யாண நாளும் இனிதாக விடிந்தது.

 

இடையில் கல்யாணத்தில் பிரச்சனை பண்ண கூடாது என்று பஞ்சாயத்தைக் கூட்டி மாணிக்கவேலை எச்சரித்து அனுப்பியிருந்தார் பசுபதி.

 

உடன் உள்ளவர்களும் “என்றா பிரச்சனை பண்ற! அந்த பொண்ணும் உன்ற மேல ஆசைப்பட்டா பரவால்ல.. அப்படியும் இல்ல! அதுக்கு கல்யாணத்துக்கு பேசி இருக்கும்போது அத கலைக்கிறது தப்பு!!” என்று கோபமாக எடுத்துக் கூறியிருந்தார்கள்.

 

சுந்தரவேலும் மகனை கண்டித்து இருந்தார். ஆனால் அல்லிராணி தான் பொருமி தள்ளிவிட்டார்.

 

“என்ற மவன் பவுசு என்ன? மவுசு என்ன? காரமடை கனகவேல் குடும்பம் கேட்டிருந்தாக… பஞ்சு மில் பஞ்சரத்தினம் ஒத்த பொண்ண என்ற மவனுக்கு கொடுக்கோணும்னு ஒத்த காலுல நின்னாரு.. என்ன குறைனு அந்த சீம சித்திராங்கி சீமையிலிருந்து வேற பையன கட்டிக்க போறா.. கண்டிப்பா நான் சொல்லுறேன்! அவ நல்லா இருக்க மாட்டா.. நல்லாவே இருக்க மாட்டா!!” என்று மூக்கை உறிஞ்சி உறிஞ்சி முந்தானையில் துடைத்தவாறு அவர் சாபம் கொடுக்க.. அருகில் இருந்த தேக்கு மர டீபாய் தூக்கிப்போட்டு உடைத்திருந்தான் மாணிக்கவேல்.

 

குடும்பமே அதிர்ந்து அவனை பார்க்க.. “இனி ஒரு தரம்.. ஒரு தரம் என்ற கண்ணு பத்தி நீ ஏதாவது பேசுன ஆத்தா.. கீழே போட்டு உடைச்சத உன்ற தலையில் போட்டு உடைச்சுபுடுவேணாக்கும்” என்றதும் இப்பொழுது குடும்பமே ஸ்தம்பித்தது அவனது வார்த்தையில்!! 

 

இதுவரை இப்படி அம்மாவை எடுத்து எறிந்து பேசும் பழக்கம் மாணிக்கவேலிடம் கிடையாது. ஊருக்குள் சண்டியராய் சுற்றினாலும்.. அம்மாவின் மகனாய் அவர் கைக்குள் தான் வளர்ந்தவன்!! இன்று அவன் ஜீவனற்று சுத்தி கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் அல்லிராணி பேச.. அவரையே அடிப்பேன் என்றவனை தான் குடும்பமே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.

 

“சொன்னது நீ தானா…

சொல்லு.. சொல்லு… என் மவரே..” என்று தன் வெண்கல குரலில் அல்லிராணி மீண்டும் பாட ஆரம்பிக்க..

 

“ஆமா.. நான் தான்!! நீ இன்னாருவாட்டி பேசிப் பாரு என்ற‌ கண்ணுவ.. அப்புறம் மண்டை உடைக்குறேனா.. இல்லையானு பாரு!” என்று சீறி கொண்டு நின்ற மகனை கண்களில் கண்ணீரோடு பார்த்தார் அல்லி.

 

“என்றா பேச்சு இது? அந்த பொண்ணுக்கு வேற இடம் பார்த்தாச்சு. பிரச்சனை பண்ண கூடாதுன்னு பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லியாச்சு!! இப்பவும் என்ற கண்ணு மண்ணுனு பேசிட்டு இருக்க.. இதெல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்தவனுக்கு அழகா? என்னதான் நீ சண்டியரா திரிஞ்சாலும் ஒழுக்கமில்லாதவனா உன்னைய வளக்கல.. இப்படி பேசுன புள்ளனு பார்க்க மாட்டேன்.. பொரணிலேயே இரண்டு அப்பு அப்பீடுவேன்” என்று சுந்தரவேலு தன் கடா மீசையை முறுக்கிக் கொண்டு மகனை மிரட்ட..

 

அவனோ அலட்சியமாக அவரைப் பார்த்து சிரித்தான். “பஞ்சாயத்துக்காக எல்லாம் நான் பம்மிக்கிட்டு போக முடியாதுங்க ஐயா!! அந்த பொண்ணு இப்ப உம்முன்னு ஒத்த வார்த்தை சொல்லட்டும்!! சும்மா தேசிங்கு ராஜா மாதிரி தூக்கிட்டு வந்து நான் தாலி கட்டிடுவேன்” என்று தன் கற்றை மீசையை முறுக்கி கொண்டு அய்யனார் கணக்காக அப்பனுக்கு ஏற்ற சுப்பனாய் நின்றிருந்தான் மாணிக்கவேல்!!

 

“என்றா பேச்சு இது.. ஒரு தினுசா இருக்கு!” என்று மெல்லிய குரலில் அவன் சொன்னதை நம்ப மாட்டாமல் கேட்டார் அல்லிராணி.

 

“நான் அந்த புள்ளைய நினைச்சது நினைச்சது தானுங்க!! அதுக்காக போய் தள்ளி இருந்து பார்த்து அச்சத தூவிட்டு ‘எங்கிருந்தாலும் வாழ்கனு’ சோக கீதம் வாசிக்க சொல்றிகளா என்னைய? நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.. ஒருவேளை அந்தப் புள்ளையே இந்த வூட்டுக்கு மருமகளா வந்தாலும் வரலாம்!! யாராவது இனி சாபம் விட்டீக… அடுத்து பேசறதுக்கு வாய் இருக்காது.. அம்மைனு பார்க்க மாட்டேன்.. அக்காகனு பார்க்க மாட்டேன்” என்று அங்கு அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி கொண்டு வந்த அவனது அக்காள்களையும் சேர்த்து ஒரு வாங்கு வாங்கிவிட்டு வெளியில் சென்றவனை குடும்பமே இப்பொழுது வருத்தத்தோடு பார்த்தது. 

 

“இந்த பய இம்பூட்டு ஆசைய வச்சுக்கிட்டு இருக்கானுங்களே.. அந்த பொண்ணு ஒத்துக்க மாட்டேங்குதே!” என்ற அல்லிராணியை பார்த்து

“விடு.. விடு.. எல்லாம் சரியா போயிடும். இவனுக்கும் சீக்கிரமா ஒரு பொண்ண பார்த்து கட்டி வைச்சிடலாம்!” என்று சுந்தரவேலு சமாதானப்படுத்தினாலும் அல்லியின் மனதிற்குள் மகனின் வாழ்க்கை குறித்து பெரிய கவலை!!

 

இங்கே மாணிக்கவேல் தண்ணி அடித்துக் கொண்டு ‘அவள் பறந்து போனாளே…!’ என்ற ரீதியில் பம்பு செட்டில் பாட்டு பாடிக் கொண்டு கிடக்க… அங்கே மற்றொரு புறத்தில் பாட்டு கும்மாளம் மகிழ்ச்சி என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள் கார்த்திக் மணிமேகலை கல்யாணத்திற்கு.

 

அவர்கள் பாரம்பரிய முறையில் கல்யாணம் விமர்சையாகவே நடந்தது. கல்யாணத்திற்கு கார்த்திக் சார்பாக கண்ணன் மட்டுமே வந்திருந்தான். பெங்களூரில் யாருக்கும் அவனது திருமணத்தைப் பற்றி சொல்லவில்லை. அப்பாவிடம் இருந்து ஒற்றை பத்திரிகை வாங்கிக் கொண்டு சென்றவன், அதை கண்ணனுக்கு கூட கொடுக்கவில்லை. அதை ஊர்தாண்டவம் அண்ட் நேத்ரா என்ற பெயரில் தாண்டவத்திற்கு தான் அனுப்பி வைத்தான்.

 

திருமணம் முடிந்த அன்றிரவு… சற்று தள்ளி இருக்கும் பசுபதியின் பாரம்பரிய வீட்டில் தான் முதலிரவு!!

இவர்களுக்கு தனிமை கொடுக்க என்று!!

 

“அம்மணி… உன்ற வாய அடக்கிட்டு இன்னைக்கு ஒரு நாள் இரு!! உன்ற 

வூட்டுக்காரர் சொல்லுற பேச்ச கேட்டு நட…” என்று அவளை அலங்காரம் செய்தவாறே உறவு பெண்கள் பேச..

 

“அப்படி என்ன செய்ய சொல்லுவாக? ஆமா ஐய்த்த.. முதலிரவுக்குள்ள என்ன பண்ணுவாக?” என்று அப்பாவி போல இமை சிமிட்டி கேட்டவளை கண்டவர்கள்… “ஆத்தாடி ஆத்தா… என்ன இவ இப்படி கேள்வி கேக்குறா?” என்று மேவாயில் கை வைத்துக் கொண்டார் அந்த பெண்மணி!!

 

“அதெல்லாம் அவுகளே சொல்லுவாக.. அவுக சொன்னபடி நடந்துக்கோ” என்று மட்டும் கூறிவிட்டு வெளியில் நின்ற நாகவள்ளியிடம், “பெரியம்மா.. உன்ற பேத்திக்கு என்னால முடிஞ்ச அளவு புத்தி சொல்லி இருக்கேனுங்க.. இதுக்கு மேல அந்த ஆண்டவன் விட்ட வழி” என்று சொன்னவர் போகும்போது “பாவம் மாப்புள்ள” என்று முனங்கியவாறே சென்றார்.

 

தன்னிடம் வந்து ஆசிர்வாதம் வாங்கிய பேத்திக்கு திருநீறு பூசி விட்டவர், “இதுநா வரையும் சின்ன புள்ள கணக்கா இருந்துட்ட அம்மணி! இனிமேலும் அப்படி இருக்க கூடாது கொஞ்சம் பக்குவமா நடந்துக்க கண்ணு.. உன்ற அம்மா இருந்தா இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பா.. எனக்கு அந்த அளவு கூறு இல்ல கண்ணு.. அப்பத்தா வளர்த்த புள்ள.. அதான் இப்படி மருவாத இல்லாமல் நடந்துக்கிறானு யாரும் ஒத்த சொல்லு சொல்லிப்புட கூடாது கண்ணு!! பார்த்து பக்குவமா நடந்துக்கோணும்” என்று பேத்தியின் உச்சி முகந்தார் நாகவள்ளி.

 

“சரிங் அப்பத்தா…” என்றாள் கண்கள் கலங்க…

 

சற்று தள்ளி நின்றிருந்த பசுபதிக்கு மனம் பதைபதைத்து.. பெண்ணின் கண்களில் கண்ணீரை கண்டவுடன்!!

 

“அம்மிணி…” என்ற அவரின் பரிதவிப்பான குரலில் கண்ணீரை உள் இழுத்துக்கொண்டு “சொல்லுங் ப்பா..” என்றாள் சிரித்த முகமாக..

 

கூடத்தில் அனைத்து சொந்தங்களும் இருக்க அனைவரும் பெண்ணையும் மாப்பிள்ளையும் ஆசீர்வாதம் பண்ண.. கார்த்திக்கு அதெல்லாம் பிடித்தமே இல்லை. மல்லுக்கட்டி தான் பாமா அவனை இங்கே இழுத்து வந்திருந்தார்.

 

“என்னம்மா இது? என்னம்மா கல்ச்சர் இது? இப்படி இத்தனை பேரும் நின்னுகிட்டு ஆசிர்வாதம் பண்றோம்னு பேருல.. உள்ள நாங்க என்ன பண்ணனும்? என்ன செய்யணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா.. கேட்கவே டிஸ்கஸ்டிங்கா இருக்குமா..” என்று கடிந்தான்.

 

“என்றா? என்றா சத்தம்?” என்று கிருஷ்ணகுமார் மகனின் அருகில் வர.. “இவர் வேற சென்னையில் இருக்கும்போது பிசினஸ் மேன் மாதிரி பேசுவாரு!! இந்த கருமத்தம்பட்டிக்கு வந்துட்டா நாட்டாமை மாதிரி பஞ்சாயத்து பண்ண ஆரம்பிச்சிடுவாரு” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

 

அவனுக்கு வேற ஒரு வீட்டில் முதல் இரவுக்கான ஆயுத்தங்கள் நடைபெறுகிறது என்பது தெரியாது.

 

“பொண்ணு பால் சொம்போட உள்ள வருவதும்.. இவங்க கேலி பேசி தள்ளி விட்டுட்டு போறதும்.. அப்புறம் உள்ள என்ன நடக்குதுன்னு இவங்க எல்லாம் யோசிச்சுகிட்டு இருக்குறதும்.. ஏன் இருப்பாங்க தானே!! ஐயோ ஆண்டவா.. இதோட எப்படிடா ஒரு பொண்ணு கிட்ட நம்மளால நெருங்க முடியும்?? வெளியில இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியும் இப்போ இங்க என்ன நடக்குதுன்னு! அட்லீஸ்ட் மைண்ட்லயாவது அதெல்லாம் யோசிப்பாங்க தானே… இப்படி இங்கு எல்லாம் வெளியில நினைக்கிறாங்கனு நினைப்பு வந்தாலே.. நமக்கு எப்படிடா மூடு வரும்” என்று அருகில் இருந்த கண்ணனிடம் புலம்பி தீர்த்தான் கார்த்திக்!!

 

“டேய்.. நானே வடிகட்டுன்ன சிங்கிள் டா!! என்கிட்ட வந்து இதெல்லாம் புலம்புரியே டா? ஆனா ஒன்னுடா மச்சான்.. உன்னை மாதிரி எல்லாம் நான் பொலம்பிட்டு இருக்க மாட்டேன்! எனக்கெல்லாம் இப்படி கூட்டி வைச்சு கல்யாணம் பண்ணாங்கனா.. எவன் என்ன நினைக்கிறானு எல்லாம் யோசிக்கவே மாட்டேன்! நான் முதல்ல என் பொண்டாட்டி இழுத்துட்டு ரூமுக்குள்ள போயிடுவேன்” என்றதும், “கருமம் புடிச்சவனே.. காஜி பயலே!” என்று அவனை போட்டு மொத்தினான் கார்த்திக்.

 

“போடா.. பூமரு அங்கிள்…” என்று ஓடி விட்டான் கண்ணன்.

 

அதன்பின் பாமா இவனை இழுத்து வந்து மேகலை அருகில் நிற்கவைக்க.. கூடியிருக்கும் சொந்தங்கள் அனைவரும் முன்னால் இவர்கள் இருவரும் காலில் விழுந்து வணங்க.. அனைவரும் ஆசீர்வதித்தனர்!!

 

பெரியோர்கள் மனம் உவந்து ஆசீர்வாதம் பண்ணும் போது விதியால் நமக்கு ஏற்படும் சில சதிகள் கூட.. பெரியோர்களின் நல்வார்த்தையால் நல்லவிதமாய் மாறவும் வழி உண்டு!!

 

வாக்குக்கு அத்தனை வலிமை உண்டு!!

 

அதற்கு தான் ஒவ்வொரு சடங்கும் சாங்கியங்களையும் வைத்து… உறவுகளை ஒன்று கூட்டி…  

மணமக்களை வாழ்த்த சொல்கின்றனர்.

 

விருந்து மருந்தில் திளைத்திருக்கும் மனிதர்களின் மனதில் இருந்து வரும் நல்ல வார்த்தைகள் பிரபஞ்சத்தின் ஆசிர்வாதத்தை மணமக்களுக்கு பெற்று தரும்.

 

அதன் பின் கிருஷ்ணகுமார் பாமாவும் அவர்கள் காரில் ஏறச் சொல்ல.. எங்கே என்று யோசனையோடு ஏறியவனை, அந்த பழங்கால பண்ணை வீடு அழகாய் வரவேற்க, சற்றே ஆசுவாசம் அவனுள்!!

 

“ஐயா.. ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க.. அந்த பக்கத்துல இருக்குற ஓட்டு வீடு என்னது தானுங்க” என்று அங்கிருந்து பண்ணையாள் சொல்ல.. சரி என்று தலையசைத்தவன் மனைவியோடு வலது காலை வைத்து உள்ளே நுழைந்தான்.

 

கிருஷ்ணகுமாரும் பாமாவும் இவர்களை அழைத்து வந்து அங்கேயும் விளக்கேற்றி சாமி கும்பிட சொன்னார்கள். ஏற்கனவே பசுபதி சொன்ன அறையில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்வை பார்த்து விட்டு வந்தார் பாமா. இருவருக்கும் தலையசைத்து விட்டு கோயம்புத்தூருக்கு சென்று விட்டனர்.

 

அறைக்குள் நுழையாமல் அங்கே நின்று பார்த்திருந்தான் கார்த்திக்!!

 

நடுவில் முத்தத்துடன் சுற்றியும் நான்கு புறமும் தாழ்வாரமும் அதன் பின்னே அறைகளும்.. பூஜை அறை..

சமையலறை மேலே ஒற்றை அடுக்கு என்று அக்காலத்து பாரம்பரியத்தோடு அழகாக இருந்தது அவ்வீடு!!

 

மாலை போல லேசாக மழை தூறல் போட்டது! இப்போது இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கி விட்டது. திடுமென ஆரம்பித்த மழை நேரம் செல்லச் செல்ல பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கியது.. தோட்டத்துடன் கூடிய வீடு என்பதால் இன்னும் சில்லென்று இருந்தது அந்த வீடு!!

 

பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்க.. அந்த முத்தத்து சாரலில் மேகலைக்கு குளிரெடுக்க தவிர்க்க முடியாமல் அறையில் போய் அமர்ந்துக் கொண்டாள்.

 

பெரும் மூச்சை ஒன்று எழுத்து விட்டவன் அந்த அறைக்குள் சென்றான். மேசையில் கன்னத்தை தாங்கியவாறு அரைத் தூக்கத்தில் இருந்த மேகலை அவன் வந்து கதவை தாழிட்ட சத்தத்தில் விழித்தவள் எழுந்து பாமா கொடுத்து சென்ற ஃப்ளாஸ்கில் இருந்த பாலை வெள்ளி டம்பளரில் ஊற்றி அவனிடம் நீட்டினாள்.

 

 அவளைக் கண்களால் பருகிக் கொண்டு பாலையும் வாங்கி பருகினான் கார்த்திக்.

 

குடித்து முடித்து டம்ளரை அவளிடம் நீட்ட… வாங்கியவள் அதன் உள்ளே எட்டி எட்டி பார்த்தாள்.

 

“என்னத்த டம்ளர ஆராய்ச்சி செய்யற?” என்று அவன் கேட்க..

 

“இல்லிங் மாமா.. நீங்க குடிச்ச மிச்ச பால தருவீங்கன்னு சொன்னாக.. ஆனா இதுல மிச்சதை காணுங்களே?” என்று உதடு பிதுக்கி கேட்டவளை.. அவன் உதட்டை கடித்து முறைத்துப் பார்க்க..

 

“இப்படி பாக்காதீங் மாமா.. எனக்கு வெட்கம் வெட்கமா வருதுங்..” என்றாள் கால் கட்டை விரலால் தரையில் கோலம் போட்டப்படி..

 

“ஆண்டவா!! ஏய் போய் தூங்கு…” என்றான் சற்று அதட்டலோடு!!

 

அவளும் “சரிங்.. மாமா..” என்று கட்டிலில் படுத்துக்கொள்ள..

 

“என்ன இவ.. சொன்னவுடனே சட்டுனு படுத்துட்டா..” என்று யோசித்தவன் “புடவை மாத்தலையா?” என்று கேட்க..

 

“அது.. வேற எடுத்துட்டு வரலீங் மாமா” என்றாள்.

 

“பின்ன எப்படி.. இதோட தூங்குவியா.. டிஸ்டப்பா இருக்குமே” என்று அவன் அக்கறையில் கேட்க..

 

“ஆமா இல்லிங்…” என்றவள், “அது உங்களுக்கு தான் டிஸ்டப்பா இருக்கும்னாங்… அத நீங்களே பார்த்துக்குவீங்னு சொன்னாங் மாமா!! பாத்துப்பீங்களா??” என்று‌ கூறியவுடன், மெத்தையில் படுத்திருந்தவன் “எதே..?” என்று ஜெர்காகி திரும்ப… அருகில் இருந்தவள் பயந்து திரும்ப… இப்போது அவனுக்கு அடியில் அவள்!!

 

எப்போது எப்படி என்று தெரியாமல் பூவையள் மீது பள்ளிக் கொண்டிருந்தான் மாதவன்!!

 

அவனது முகம் அவளது கழுத்தில் புதைந்து இருக்க.. அவளது காதருகே அவனது மீசை!!

லேசாக இசைப்பாடும் அந்த காதோர ஜிமிக்கியை கடித்து சுவைக்கும் ஆசை கிளிர்ந்தது கோமகனுக்கு!!

 

“அது… அது வந்துங்….” மேலே பேசமுடியாமல் திகைத்து விழித்தாள் மாது!!

 

“இப்படி பக்கத்துல வந்து என்னை மூடு ஏத்த பாக்குறியா? நான் ரொம்ப ஸ்டெடி!! உன் ஸ்டெடிய பார்க்கவா?,” என்றவன் அவள் காதை அந்த ஜிமிக்கியோடு கடிக்க அவள் உணர்ச்சி வெள்ளத்தில் தவித்தாள்.

 

அதன்பின்.. “இனி இந்த மாதிரி செய்த.. உன்னை முழுசா கடிச்சி ஏப்பம் விட்டுடுவேன்?” என்றவன் அவள் மீதிருந்து இறங்க முற்பட.. அவளும் இந்த பக்கம் புரள… அதில் அவள் சலங்கை கொலுசு மொத்தமாக அவனின் பட்டு வேட்டியில் சிக்கிக் கொள்ள.. பின்னிப்பிணைந்த நிலையில் இருவரும் உருண்டு புரண்டனர் அந்த கட்டிலில்!!

 

“இருடி.. அவசரப்படாத இரு!” என்றவன் முதலில் தான் எழுந்து எப்படி கழட்டுவது என்று பார்க்க.. சுத்தமாக வேட்டியை கழட்டினால் ஒழிய அந்த கொலுசுவிலிருந்து விடுவிக்க முடியாதபடி ஜரிகையில் மாட்டியிருந்தது.

 

இவன் சட்டென்று இழுக்க “ஐயோ மாமா.. கல்யாண வேஷ்டிங்!! கிழிச்சி போடாதீங்” என்று இவள் அலற..

 

“பின்ன எப்படி எடுக்க முடியும்?” என்றவாறு அவன் மெல்ல எழுந்து அமர்ந்து, அருகில் அவளையும் அமர்த்திக் கொள்ள இருவரும் கால்களும் பிணைந்த நிலையில்!!

 

“நான் ஒரு ஐடியா சொல்லுவேனுங்.. எனக்கு ஆனா நீங்க கோபப்படுவீங்!!” என்று அவள் பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க… 

 

“இப்பவே நான் செம டையர்ட்ல இருக்கேன். தூங்கணும்!! சீக்கிரமா ஏதாவது சொல்லு” என்றதும், “நீங்க வேட்டியை அவுத்துருங் மாமா” என்றாள்.

 

 அவனுக்கு தூக்கி வாரி போட “எதே.. வேஷ்டிய அவிழ்க்க வா?”என்று அவளை பார்த்து அதிர்ந்து கேட்டான்.

 

“இல்லிங் மாமா.. நான் உங்களை பார்க்கலிங்.. பெட்ஷீட் எடுத்தது உங்கள சுத்திக்கிட்டு வேட்டி கழட்டி கொடுதீங்கன்னா.. நான் மெதுவாக எடுத்துருவனுங்க” என்றதும் அவள் சொன்ன மாதிரி அருகில் இருந்த பெட்ஷீட் கட்டிக் கொண்டு வேட்டியை அவிழ்த்து கொடுத்தான்.

 

அவளும் பதமாக கொலுசிலிருந்து வேட்டியை பிரித்து அவனைப் பார்க்க.. அதற்குள் அவன் அருகில் இருந்து குளியலறை சென்று ஷார்ட்ஸூம் டீசர்ட்டுமாக வர… 

 

“ஏனுங் மாமா.. அண்ட்ராயரோடு வரீங்.. வேட்டியை சுருக்கா கட்டுங் முதல்ல” என்று அவள் வேட்டியை கொடுக்க.. அதை வாங்கியவன் “இது அண்ட்ராயர் ஆ? ஆண்ட்ராய்டு காலத்துல இருந்தும் உங்க ஊர் மட்டும் திருந்தல! நான் என்ன உன் ஊரு ஆளுன்னு நினைச்சியா பட்டாபட்டி போட்டுட்டு சுத்த” என்று சிரிப்புடன் கேட்டவன், “பழகிக்க.. பெங்களூர்ல முக்கால்வாசி நேரம் நான் இப்படித்தான் சுத்துவேன்.. உள்ளேயும் வெளியேயும்” என்றான். 

 

“அடி ஆத்தி..!!” என்று அவள் விழி விரிக்க… “நீங்க நைட்டி போடுற மாதிரி தான் இதுவும்” என்றவன் அவள் அருகில் படுத்தான். இருவரும் இயல்பாக பேசிக் கொண்டனர்.

 

“போர்வை எங்கங் மாமா?” என்று அவள் கேட்க…

 

“அய்யய்யோ பாத்ரூமில் விட்டுட்டு வந்துட்டேன்” என்றான் அவளைப் பார்த்து..

 

“எனக்கு குளிருங்களே!!* என்றதும் ஜன்னல் எல்லாம் அடைத்திருந்தாலும் அந்த காலத்தில் கட்டிய வீடு அத்தனை குளிர்ச்சியாக இருந்தது. கூடவே மழையும் வெளுத்து வாங்க அவளுக்கும் குளிரடிக்க.. “வேற ரூம்ல ஏதாவது பெட்ஷீட் இருக்கா நான் பாத்துட்டு வரேன்” என்று அவன் எழ.. “இல்லிங்.. இங்கு தேவையானது மட்டும்தான் எடுத்துட்டு வருவோமுங்க” என்றாள் மேகலை.

 

“அதான் புடவை இருக்குது தானே.. அதையே போத்திக்கிட்டு தூங்கு” என்றவன் படுத்து விட்டாலும் தூக்கம் தூரத்தில் தான்!!

 

ஆனாலும் காலையிலிருந்து இருந்த அலுப்பில் அவன் மெல்ல கண்களை சொருக… அவன் புஜத்தில் ஒற்றை விரலால் சுரண்டினாள் மேகலை.

 

“ம்ப்ச்.. என்னடி?” என்றான் அரை தூக்கத்தில்..

 

*இல்லிங் மாமா… ரொம்ப குளுருது!! நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் கை மட்டும் உங்க மேல போட்டுக்கிட்டா?” என்று கேட்டதும்..

 

“போட்டு தொல!” என்றவன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை.

 

அவன் பின்னிருந்து வாகாக அணைத்தவள் அவன் வயிற்றை அணைத்தவாறு படுத்து கொண்டாள். முதலில் ஒருவித கூச்சமாக இருந்தாலும்.. இனி இதெல்லாம் பழகி தான் ஆகணும் என்றவாறு கண்களை இறுக்க மூடி தூக்கத்தை வரவழைத்துக் கொண்டிருந்தான்.

 

மெதுவாக அவன் டீ சர்ட் உயர்த்தப்பட.. அவனுக்கோ பக் பக் என்றது!! ஆனாலும் தூங்குவது போலவே படுத்திருந்தான். “ஒருவேளை நம்மள இன்னிக்கி இவ பிரியாணி போற்றுவாளோ?” என்று திகைத்த மனதோடு அப்படியே படுத்திருந்தான் கார்த்திக்.

 

டீசர்ட்டை நன்றாக அவன் நெஞ்சு வரை மேலே தூக்கி விட்டவள்.. பின்பு அவன் வயிற்றை தடவியவாறு அப்படியே தூங்க ஆரம்பித்தாள்.

 

முதலில் என்னவோ ஏதோ என்று கிரீனிஷ்ஷாக யோசித்தவன்.. அவள் சைல்ட்டிஸான செயலை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான். ஆனால் அந்த நிம்மதியும் அடுத்த நிமிடங்களில் பறிப்போனது. இவள் தளிர் விரல்களால் வருடி கொண்டே இருக்க.. தூக்கம் எங்கணம் வரும்? 

 

“இப்படி நீ பண்ணினா.. எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது.. சும்மா இரு!” என்று சத்தமாக சொன்னவன் ‘வேற என்னென்னமோ தான் வருது’ என்று முணுமுணுத்தான்.

 

“அது அங்க வீட்ல குளிருச்சினா இப்படி தான் சுப்புணிய பக்கத்துல போட்டுட்டு தடவிட்டு தூங்குவனா.. தூக்கம் வந்துடுங் மாமா” என்றாள்.

 

“அம்மா இல்லாத பெண் அதனால் பார்த்து பக்குவமாக பேசு கார்த்திக். உனக்கு அம்மா நான் இருந்துமே சில சமயம் உன் கோபம் எல்லை மீறுது” என்று பாமா அத்தனை தூரம் சொல்லி இருக்க.. பெருமூச்சு ஒன்று விட்டவன் “கையை மட்டும் போடு சொரண்டுன!!” எச்சரிக்கை விடுத்தவன் மனதிற்குள் ‘சுப்புணி யாராக இருக்கும்? ஒருவேளை இவ அப்பத்தாவாக இருக்குமோ?’ என்று நினைவோடு தூங்கியவன், சுப்புணியை நே

ரில் பார்த்து அதிர்ந்தான் மறுநாள்!!

 

ஆம் சுப்புணி!! அவள் வளர்க்கும் சுப்பிரமணி என்ற நாயின் சுருக்கம்!!

 

அடியே…. உன்னோட…. என்று அலறினான் கார்த்திக் சுப்புணியை கண்டவுடன்!!

 

இஷ்டமாகுமா????

4 thoughts on “நீ நீ நீ என்னோட இஷ்டம்… 9”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top