அத்தியாயம் 4
‘அனி செல்லம்.. உன்னோட சேஃப்டிக்காக தான் தாத்தா.. உன்னைய யாருக்கும் தெரியாம.. இப்படி ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு இடத்துல படிக்க வைக்குறேன்.. நேரம் வரும் போது நீ என்கூடவே வந்துட்டான்.. ஐ ப்ராமிஸ் யூ.. செல்லம்..’ என்று பதிமூன்று வருடத்திற்கு முன் கேட்ட தன் தாத்தாவின் குரல், இப்போதும் தன் காதில் கேட்பது போன்ற பிரம்மை தோன்றியது அனிதா ஷெரஜிற்கு.. தன் கண்முன்னே தன்னைப் போல் உருவம் கொண்ட பெண்ணை கடத்திச் செல்பவனை தடுக்க வேண்டும் என்று மனது கூறினாலும், கால்கள் தன் முன்னேற தடுமாறின. அரை மயக்கத்தில் இருந்த கவிதாஞ்சலியோ, தனது கண்களை விரிக்க முயன்று தோற்றுப் போனாள்.
‘அடேய்.. கண்ணிமைக்கும் நேரத்தில்.. மூக்கில் துணியை அடைத்து.. கவ்விக் கொண்டு வந்த தடிதாண்டவராயா.. நீ எதிர்பார்த்த பொண்ணு நானில்லடா.. கடவுளே.. என்ன நடக்குது எனக்கு? நான் பேச நினைக்குறதை என்னால ஏன் பேச முடியல? அடேய்.. வண்டியை நிறுத்துடா.. பன்னி மூச்சு வாயா..’ என்று மனதுக்குள் நினைப்பதாக நினைத்து, அந்த அரைமயக்க நிலையிலும், தன்னை கடத்தியவனை திட்டிக் கொண்டிருந்தாள் கவிதாஞ்சலி.
“ஹரே.. சுப்.. இஸ் லடுக்கி.. குச்னா குச்.. போல்தி ரஹத்தி ஹை..” என்று முணுமுணுத்தவாறே, அவளை தூக்கி தான் கொண்டு வந்திருந்த காரின் பின்புறம் போட்டவன், காரை வேகமாக செலுத்தினான்.
***************************************************
“ஹலோ.. அனி.. நான் உனக்காக காலேஜ் பின் கேட்ல வெயிட் பண்ணிட்டுருக்கேன்..”
“அங்கேயே இரு.. ஒரு சின்ன வேலையிருக்கு.. முடிச்சுட்டு.. சீக்கிரமே வந்துடுறேன்..”
“ஐம் வெயிட்டிங் அனி..”
“மீ டூ..” என்று தனக்கு வந்த அழைப்பிற்கு பதிலளித்த அனிதா ஷெரஜ், தனக்கு முன் அதிவேகமாக வந்து கொண்டிருந்த, கவிதாஞ்சலியை கடத்தியவனின்
கார் கண்ணாடி மீது பெருங்கல்லை தூக்கி வீசினாள். அது குறி தவறாது சரியாக கடத்தல்காரனின் முன் பக்க கண்ணாடியில் விழ, தடுமாறியபடி ஸ்டியரிங்கை ஒடித்து திருப்பினான். அதில் கார் தன் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே இருந்த மரத்தில் மோதி கவிழ, உடனே அதன் அருகே சென்ற அனிதா, பின் சீட்டின் அடியில் மாட்டிக் கொண்டிருந்த கவிதாஞ்சலியை பார்த்தாள். காரின் பின்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து, மயக்கமாய் இருந்த கவிதாஞ்சலியை தன் சக்தி மொத்தத்தையும் பயன்படுத்தி, வெளியே இழுத்த அனிதா ஷெரஜ், சற்று தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த தன் காருக்கு கவிதாஞ்சலியை தரதரவென இழுக்க,
“அடேய்.. யாருடா நீ? எதுக்குடா என்னைய இப்படி இழுத்துட்டுப் போற? என்னால உனக்கு சல்லிக்காசு ப்ரொயோஜனம் இல்ல..” என்று புலம்ப,
“ஸ்ஸ்.. சும்மா இரு.. நான் தான் அனிதா ஷெரஜ்.. கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா.. ரெண்டு பேரும் தப்பிச்சுடலாம்..” என்ற அனிதா, கவிதாஞ்சலியை முன் சீட்டில் அமர வைத்து சீட் பெல்ட்டை மாட்டிவிட்டாள். பின்னர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரினை வேகமாக செலுத்தத் தொடங்கியவளின் ஃபோன் அடிக்க அதனை எடுத்து காதில் வைக்க,
“அனி.. இன்னும் வராம என்ன பண்ற? உனக்காக நான் வெளியில வெயிட் பண்ணிட்டுருக்கேன்..” என்று ஒலித்த குரலை கேட்டு அனிதா ஷெரஜ்,
“நான் ****ஹை-வேல போயிட்டுருக்கேன்..” என்றவள் தன் காரின் இடது ஓரப்பக்க கண்ணாடியை பார்த்தாள். அதில் தன்னை யாரோ துரத்திக் கொண்டு வருவதை கவனித்தவள்,
“பாய்.. என்னைய யாரோ துரத்திட்டு வர்றாங்க.. என்னால முடிஞ்ச மட்டும் ஃபாஸ்ட்டா போயிட்டுருக்கேன்..” என்று கூற,
“டோண்ட் பேனிக் அனி.. அப்படியே போயிட்டுரு.. ஐம் ஆன் தி வே..” என்று மறுமுனையில் கேட்ட பதிலையடுத்து, கைப்பேசியை அணைத்தவள், தன்னை துரத்திக் கொண்டு வரும் காருக்கு இடது மற்றும் வலது புறமாக மாற்றி மாற்றி, முன்னேறி செல்லும் வழியை அடைத்தவாறு காரை ஓடியவள், தனக்கு அருகில் மயக்கம் பாதி, குழப்பம் பாதியாக அமர்ந்திருந்த கவிதாஞ்சலியை கன்னத்தில் தட்டி எழுப்பினாள்.
“ஹலோ.. ஹலோ.. டேமிட்.. ஓப்பன் யுவர் அய்ஸ்.. நீ இப்படியே இருந்தா ரெண்டு பேரும் சாகத் தான் போறோம்.. ப்ளீஸ்.. வேக் அப்..”
“ம்ம்.. சஹு.. சஹு.. எனக்கு என்னமோ பண்ணுதுடி.. கண்ணை திறக்கவே முடியல..” என்று கவிதாஞ்சலி கண்ணைத் திறக்க முயன்று தோற்றுப் போக, காரில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து, கவிதாஞ்சலியின் முகத்தில் ஊற்றினாள் அனிதா ஷெரஜ். அதில் ஓரளவு தெளிவு பெற்ற கவிதாஞ்சலி, அனிதா ஷெரஜை பார்த்து,
“அப்போ நீங்க தான் அனிதா ஷெரஜா?” என்று கேட்க,
“ம்ம்..” என்று பதிலளித்த அனிதா ஷெரஜின் மொத்த கவனமும் பாதையில் தான் இருந்தது.
“அவங்க எதுக்கு என்னைய கடத்துனாங்க? நான் என்ன பண்ணேன்?”
“நீ ஒன்னும் பண்ணல.. நீ அப்படியே என்னைய மாதிரியே இருக்க.. அதான் நான்னு நினைச்சு.. உன்னைய கடத்திட்டாங்க..”
“நீங்க பெரிய மாஃபியவா?”
“ஏன்? என்னைய பார்த்தா கொள்ளக்கூட்ட தலைவி மாதிரியா தெரியுது?”
“இல்ல.. ஆனா, ஒரு காரணமும் இல்லாம எதுக்கு உங்களை கடத்தப்பார்க்கணும்?”
“கொல்லுறதுக்கு தான்..”
“கொலையா? அதான் ஏன்?”
“ப்ராப்பர்டீஸ்.. மணி..”
“அப்போ.. அவங்கக்கிட்ட நான் நீங்க கிடையாதுன்னு சொல்லலாமே?!”
“சொல்றதுக்கு முதல்ல நாம ரெண்டு பேரும் உயிரோட இருக்கணும்..”
“இப்போ என்ன பண்ண போறோம்?”
“என்னோட கசின் இங்க வந்துட்டு இருக்கான்.. அவன் வர்ற வரைக்கும் இவங்களை சமாளிச்சா போதும்.. மீதியை அவன் பார்த்துக்குவான்.. அப்புறம் உன்னைய சேஃபா உன் ப்ளேஸ்கு அனுப்பி வைச்சுடுறேன்..” என்று அனிதா ஷெரஜ் பேசிக் கொண்டிருக்கும் போது, இருவழிசாலையின் வழியாக அவளுக்கு முன் கன்டெய்னர் லாரி ஒன்று செல்ல, அதனை தாண்டி செல்ல முயன்று தோற்றுப் போனாள்.
“ப்ச்.. இப்போ நாம முன்னாடி போக முடியாது.. இதே ஸ்பீட்ல போனா? பின்னாடி வர்ற கார் நம்மளை இடிச்சு தள்ளிடும்.. இப்போ என்ன பண்றது?” என்று கவிதாஞ்சலி கூறி முடிக்கும் முன் பின்னால் வந்து கொண்டிருந்த கார், அவர்களது காரை முன்னோக்கி இடிக்க, முன்னே சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டது அவர்களது கார். சாலையின் பக்கத்தில் இருந்த பள்ளத்தில் கார் உருண்டு விழுக, தன் அருகே இருந்த கவிதாஞ்சலியை மறைத்தவாறு அவளுக்கு கேடயமாக மாறினாள் அனிதா. தன்னால் கவிதாஞ்சலி உயிர்நீக்க அனிதா விரும்பவில்லை. ஆதலால், அவளுக்கு அதிக அளவில் அடிபடாதவாறு பார்த்துக் கொண்டவள், அவளுக்கான அனைத்தையும் தானே வாங்கிக் கொண்டாள். அதே சமயம், அனிதா ஷெரஜிற்கு சற்றுமுன் அழைப்பேசியில் அழைத்தவன் மின்னல் வேகத்தில் அவ்விடத்தை நெருங்கியிருக்க, அவனது கண்முன்னேயே விபத்து கோரமாக நடந்திருந்தது.
“அனிஇஇஇஇஇ..” என்ற கத்தியபடி காரில் இருந்து இறங்கியவன், சிறிதும் தாமதிக்காமல் பள்ளத்தில் இறங்கினான். அவன் பின்னோடு இறங்கியிருந்த அவர்களது நண்பர்கள்,
“தேவ்.. தேவ்..” என்று கத்தியபடி, அவர்களும் அவனுடன் இறங்கியிருந்தனர். சுக்கு நூறாக நொறுங்கியிருந்த காரையும் காரினுள் அடிபட்டு கிடந்த அனிதாவையும் பார்த்தவனுக்கு தலை எல்லாம் சுற்றியது. அவனையும் அறியாது, நரம்புகள் புடைக்க தன் கையை மடக்கி,
“அனிஇஇஇஇ.. அனிஇஇஇ..” என்று கத்தியவன் காரின் கதவை திறக்க முயன்றான். உடைந்திருந்த கார் கண்ணாடி துகள்களும் கதவின் முனைகளும் அவனது கைகளை பதம் பார்க்க, அவை எதையும் கவனிக்கும் மனநிலையில் அவனில்லை.
“ஸ்டாபிட் தேவ்.. தேவ்.. ஆம்புலன்ஸ் வந்துருச்சு.. தேவ்.. லிசன்.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருவோம்.. அவளுக்கு எதுவும் ஆகாது.. தேவ்.. தேவ்..” என்றவனை பின்னால் இழுத்தான் ஆர்யா. அவசர சிகிச்சை பிரிவில் இருவரையும் அனுமதிக்கப்பட, சில மணி நேரம் சென்ற பின்னர், ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த மருத்துவர்,
“சாரி மிஸ்டர் தேவ்.. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்.. அவங்க ரெண்டு பேர்ல ஒருத்தரைத் தான் எங்களால காப்பாத்த முடிஞ்சது..” என்று கூற இரும்பு போல் நின்றிருந்தவனின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் இறங்க, தேவ்விற்கு அருகில் நின்றிருந்த ஆர்யா,
“அந்த இன்னொரு பொண்ணு நல்லாருக்காங்களா?” என்று கேட்க,
“அவங்களுக்கு அதிகமா எந்த அடியும் படல.. கார்ல இருந்த ஏர் பலூன் காரணமாகவோ.. இல்ல கடவுள் உதவியாலோ அவங்க உயிர் பிழைச்சுட்டாங்க.. ஆனா..” என்றவர் இழுக்க, தன் புருவங்களை சுருக்கி மருத்துவரை கூர்மையாக பார்த்தான் தேவ் மல்கோத்ரா.
“டாக்டர்.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க..”
” கார் கண்ணாடியினால அவங்களோட கண் பாதிச்சுருக்கு.. அதை ஆப்ரேட் பண்ணணும்..”
“இதையெல்லாம் போய் எங்கக்கிட்ட கேட்குறீங்க.. ஆப்ரேட் பண்ணுங்க டாக்டர்..”
“அதுக்கில்ல.. இப்போ உடனே யாராவது ஒருத்தரோட கண்ணு கிடைச்சா.. அதை அவங்களுக்கு பொருத்திடலாம்.. ஆனா, இப்போ கிடைக்குறது ரொம்ப ரேர்..” என்ற மருத்துவர் தயங்கி நிற்பதை பார்த்து புரிந்து கொண்ட தேவ்,
“இறந்து போன பொண்ணோட கண்ணை உயிரோட இருக்குற பொண்ணுக்கு பொருத்துங்க டாக்டர்..” என்று அவனை அதிர்ந்து பார்த்தார் மருத்துவர்.
“சார்.. இட்ஸ் இல்லீகல்.. அந்த பொண்ணோட பேரெண்ட்ஸோ.. இல்ல சொந்தக்காரங்களோ இல்லாம.. அவங்களோட கையெழுத்து இல்லாம.. இந்த ஆப்ரேஷன் பண்ண முடியாது..”
“அந்த பொண்ணோ அம்மா.. அப்பா.. ரிலேட்டிவ்.. எல்லாமே நான் தான்.. நான் மட்டும் தான் இப்போ மிஞ்சி இருக்கேன்.. நான் சொல்றேன்.. ஆப்ரேஷன் பண்ணுங்க..”
“ஓகே மிஸ்டர் தேவ்.. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு..” என்றவாறே ஆப்ரேஷன் தியேட்டரை தயார் செய்யப் சொன்னவர், இறந்து போன அனிதா வெர்ஜின் கண்களை உயிரோடு இருக்கும் கவிதாஞ்சலிக்கு மாற்றி, அறுவை சிகிச்சை செய்ய தொடங்க, அனிதா ஷெரஜின் உடலை இறுகிய முகத்துடன் வாங்கிய தேவ் மல்கோத்ரா, அவளது இறுதிச் சடங்கை தானே செய்து முடித்திருந்தான். அனிதா ஷெரஜை வாங்கும் போது கண்ணீர் துளிகள் அவனது கண்ணில் வந்ததே தவிர, அதன் பின் அவனது கண்ணில் ஒரு பொட்டு கண்ணீர் வரவில்லை. இதற்கு முன் சிறிதளவாவது அவனது கண்ணில் தெரிந்த அந்த இரக்கமும் பாசமும் சிரிப்பும், இப்போது துணி கொண்டு துடைத்தாற் போல் காணாமல் போயிருந்தது. ஏற்கனவே இறுகிய இரும்பை போல் இருப்பவன், இப்போது எஃகால் செய்தவனை போலாகியிருந்தான்.
அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்த மருத்துவர்,
“இனிமே எந்த பயமும் இல்ல.. நீங்க போய் பேசெண்ட்டை பார்க்கலாம்.. அனிதாவோட கண்கட்டை அவிழ்க்க எப்படியும் ரெண்டு வாரமாகும்..” என்றவர் கூறிவிட்டு செல்ல, கண்ணில் கட்டோடு மயக்க நிலையில் படுத்திருந்த கவிதாஞ்சலியின் அருகில் வந்த தேவ் மல்கோத்ரா,
“இது அனிதா உனக்கு கொடுத்த வாழ்க்கை.. அவளை கொலை பண்ணவங்களை கண்டுபிடிச்சு தண்டிக்குற வரைக்கும்.. நீ அனிதா ஷெரஜ் தான்.. அவளாக தான் நீ வாழ்ந்தாகணும்..” என்று முணுமுணுத்த தேவ்வின் குரலிலும் கண்ணிலும் தெரிந்த ரௌத்திரத்தை, கண் மூடி படுத்திருந்தவள் கண்டிருந்தாள் என்னவாகியிருப்பாளோ? இனி கவிதாஞ்சலியின் வாழ்க்கை.. அனிதா ஷெரஜின் வாழ்க்கையாக மாறும் போது, கவிதாஞ்சலியின் நிலையென்னவோ?
Super sema sis
தாங்க் யூ சிஸ் 🤩🤩🤩🤩
Very nice sis story intresting ah iruku ♥️