முதல் நாள் இரவு நன்றாக தூங்காதது அவன் முகத்தில் நன்றாக தெரிந்தது!!
“நல்ல வேளை வீட்டுக்கு இன்னும் போகல.. அந்த விவஸ்தை கெட்ட.. வெஜ்ஜினன்ஸ் நிறைந்த ரிலேட்டிவ்ஸ் எல்லாம்.. ‘இவங்க முதலிரவை செமையா கொண்டாடி இருக்காங்கன்னு’ நக்கல் பேசி நம்மள ஒரு வழி ஆக்கிடுவாங்க” என்று ஹாலில் தொங்க விட்டிருந்த கண்ணாடியில் தனது முகத்தை
உற்று உற்றுப் பார்த்தான் கார்த்திக்.
உறவுக்குள் உரிமையாக பேசப்படும் கேலி பேச்செல்லாம் இவனுக்கு நக்கலும் நய்யாண்டியாகவே தெரிந்தது.. புரிந்தது!! அதையெல்லாம் உரிமை கேலி என்று கடந்து விட இவனால் முடியவில்லை.
அதனால் மழையை காரணம் காட்டி காலையில் அப்பாவுக்கு போன் செய்து மதியத்துக்கு மேல் வருகிறோம் என்று விட்டான். பாவம் அவனுக்கு தெரியவில்லை அதுதான் இன்னும் அவனை கேலி செய்ய போதுமானதாக இருக்கப்போகிறது என்று!!
மழை காலையில் இருந்து வெளுத்து வாங்கியது. அங்கிருந்து சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள் மேகலை. இவன் கிருஷ்ணகுமாருக்கு போன் செய்து சொல்லி விட்டதால் காலையில் அவர்களுக்கு தேவையான அனைத்தும் வந்துவிட்டது துணி மணியிலிருந்து காலை உணவு பால் என்று…
அந்தப் பண்ணையாள் பரமு வந்து கொடுத்து விட்டு, “எதுவும் வேணுமுங்களா?””எதுவும் வேணுங்முகளா?” என்று அவ்வப்போது கேட்டது கூட இவனுக்கு எரிச்சலாக இருக்க.. “அடுத்த தடவை நீங்க இப்படி வந்து நிக்காம இருக்க வேணும்!” என்றான் கார்த்திக்!!
சற்று நேரம் யோசித்த அந்த நரைமுடிக்காரர் பின் புரிந்ததும் “புரிச்சிடுங்க ஐயா.. அம்மிணிய பாத்துக்கோங்க” என்று வெட்கத்தோடு செல்ல..
“இப்ப நான் என்ன சொல்லிட்டேனு இவரு வெட்கப்பட்டுட்டு போறாரு” என்று யோசித்தபடியே அவர் கொடுத்தவற்றைக் கொண்டு வந்து அறையில் வைத்தவன் கூடத்துக்கு வந்து விட்டான்.
குளித்து வந்த மேகலையும் அங்கிருந்த பையை பார்த்து புன்னகைத்தப்படி அவளுக்கு தேவையான உடுப்பை எடுத்து உடுத்திக் கொண்டாள். கூடத்தில் நின்றிருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்தபடி சமையலறைக்கு சென்றாள்.
காலை உணவு மிகுதியாக தான் வந்திருந்தது. அதில் அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்து மீண்டும் ஒரு முறை சூடு படுத்தி தயார் செய்தவள், அவனை சாப்பிட அழைக்க “லேட்டா சாப்பிடலாம்” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான்.
அவளும் நின்று நின்று பார்க்க அவன் வருவது போல் இல்லை..
மழை வேறு விடாமல் பெய்த்துக்கொண்டே இருந்தது. இப்பொழுது சற்று மெல்லிய சாரலாய்!!
தாழ்வாரத் தூணில் நின்று மழையை வெறித்தபடி இருந்தவன் சட்டென்று அந்த முத்தத்தில் இறங்கி மழையில் நனைந்தான். மேகலை அவனை சில நிமிடங்கள் அதிர்ச்சியோடு பார்த்தாள்.
அவன் அருகில் மேகலை இப்போது!! அவளும் மழையில் நனைந்தபடி… கொட்டும் மழைத் துளிகள் அவள் தலையிலும் பட்டுத் தெறிக்க அவன் திகைத்தான்.
”ஏய்.. மணி!! நீ எதுக்கு நனையுற..? போ.. உள்ள போ!!” என்று அதட்டினான்.
”ஏய்.. நீ போ இங்கிருந்து… நீ நனையாத.. அப்புறம் உன் மாமனார் வந்து என்னை தான் பேசுவார்!!”
”அப்ப நீங்களும் வாங் மாமா!! ரெண்டு பேரும் போவோமுங்க!!” அவள் அவன் கையைப் பிடித்தாள் உரிமையாக!!
”போ மணி… விளையாடாதே… நான் மழையை ரசிக்கனும் ” என்றவனின் முகத்தில் மருந்துக்கு கூட மழையை ரசிக்கும் பாவம் இல்லை.
”ஏனுங்.. நாங்க ரசிச்சா என்னவாமுங்க..? மழை கோச்சுக்குமுங்களா? நானும் ரசிக்கறேனுங்.. சேர்ந்தே ரசிப்போமுங்.!!” அவன் கையை இறுக்கினாள். அவன் முகத்தில் இருந்து ஏதோ பெரும் யோசனையில் இருக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு. அவனை தனியாக விடவும் தைரியம் இல்லை.
அவனுக்கு தடுமாற்றமானது. ‘நான் நனைவது என் மன உளைச்சலினால்… இவள் ஏன் என்னுடன் சேர்ந்து நனைய வேண்டும்? என்னை நிம்மதியா யோசிக்கக்கூட விட மாட்டேங்குறா!’ என்று திட்டிக் கொண்டான்.
”மணி… போ நீ..!!” அவனோடு அவள் நனைவது அவனுக்கு பிடித்தமில்லை!
”நான் மட்டும் ஏனுங் மாமா போகனுமுங்க..?” என்று குழந்தையாக சிரித்தவளை குமரி என்று காட்டிக் கொடுத்தது மழை.. அவளது உடைகளை நனைத்து!!
அவனும் அனைத்து உணர்ச்சிகளையும் கொண்ட சராசரி ஆண்மகன் தானே!! தாரமானவளை தனதாக்க சிறு தயக்கம். ஆனாலும் அதனை உடைத்தெறிய சொன்னது அவளது நெருக்கம்!!
அவனுக்கு மூச்சு முட்டியது. எப்படியும் அவளுடன் தான் வாழ்க்கை. ஆனால் அதற்கு அவன் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் முன்னே அவளது இந்த உரிமையான பேச்சு பழக்கம் எல்லாம் அவனை நிலைக்குலையச் செய்தது.. அத்துமீறி அனங்கவளை அள்ளி ஆண்டு விடுவோமோ என்று!!
”யூ… யூ.. யூ.. உன்னோட… ஒரே கஷ்டம்டி!!” என்று இடுப்பில் வலது கையை வைத்துக் கொண்டவன் இடது கையால் கழுத்தை நீவிக் கொண்டான். அப்படி ஒன்றும் மழை வலுவாக பெய்யவில்லை.. மெல்லிய சாரல் தான். ஆனால் அதற்குள் உடை நனைந்து உடல் குளிர் எடுக்க ஆரம்பித்து இருந்தது மேகலைக்கு.
“அது இல்லிங்…” என்று ஆரம்பித்தவள் உதடுகள் குளிரில் நடுங்க… தன் இதழ்களை கொண்டு அந்நடுக்கத்தை குறைக்க துடித்தன அவனது மனம்!! உரிமையாய்… உறவாய்!!
“நோ.. நோ.. நான் ஸ்டெடி!” என்று தனக்குள் உருப்போட்டுக் கொண்டான்.
“சரி.. சரி..! பேசாத நட..!” அவளை தள்ளிக் கொண்டு அறையின் கதவருகே போக, கரெண்ட் போய்விட்டது!! காலை நேரம் தான் ஆனாலும் சற்றே மழையினால் இருளாக இருந்தது!!
இருளில் அவள் உருவம் வரி வடிமாக அவனுள் அனலை மூட்டுவதாக இருந்தது!!
”உனக்குமா நான் சந்தோசமா இருக்கறது புடிக்கல.? என்ன கொடுமைடா.. ஆண்டவா.. !!” உண்மையாக வருந்தி புலம்பினான்.
மேகலை உள்ளே போய் ஒரு துண்டை எடுத்து வந்து கொடுத்தாள்.
அவளோ அவனுக்கு சொல்ல.. அவனோ அதை அவளுக்கென்று தப்பர்த்தம் புரிந்து கொள்ள.. அது தப்பா சரியா என்று புரியாமல் ஒரு சில நிமிடம் யோசித்த மேகலை சட்டென்று அவன் கழுத்தில் கையூட்டு முன்னால் குனிய வைத்து அவனுக்கு தலை துவட்டி விட்டாள்.
“ஏய்.. என்ன பண்ற?” என்று தள்ளி போனான் கார்த்திக்!!
“அது.. நானுங் ஈரம் தொடைத்தேனுங்..” என்றாள்.
”ம்ப்ச்.. என் நிலைமை உனக்கு தெரியாது!! என்னையும் புரியாது.. விடு!!” என்று அறையின் உள்ளே நுழைந்தான்.
”எதுக்குங் மாமா.. இப்படி பீல் பண்ணுறிங்.. ??”
அவனோ அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“இல்லிங்… இதுக்கெல்லாமா ஃபீல் பண்ணுவாங்?” என்று அவள் தானாக ஒன்றை நினைத்துக் கேட்டாள்.
அவளோ எதை சொல்வாள் தெரியாமல்.. அதனால் பேச்சை மாற்றினாள்.
“தல ஈரமா இருக்குங்.. ஈரத்த தொடைங் மாமா மொதல்ல.. ” என்று
”நீயும் நனைஞ்சிருக்க.. இந்தா நீ தொட முதல்ல.. ” என்று துண்டை நீட்டினான்.
அவள் வாங்கி தன்னுடல் ஈரம் துடைத்தாள். அவனோ அவளை பார்த்துக் கொண்டு அவள் நீட்டிய துண்டை வாங்கியவன், அதன் பின் அவளை பார்த்துக் கொண்டே துடைத்தான். ஆழ் அமைதி அவ்விடம்!!
அமைதியை கலைக்க..
ஈரம் மினுக்கும் இதழ்கள் மலரப் புன்னகைத்த மேகலை…
”ஏனுங் மாமா.. நேத்து எதுவும் மப்பு ஓவருங்களா? என்ன பண்றோம்னு கூட தெரியாத அளவுங்களா?” என்றாள் அவனை சீண்ட..
”ஏய்.. இப்ப என்ன நான் அப்படி பண்ணிட்டேன்? நைட்டு உன்னை ஒன்னும் பண்ணல.. காலையில உன் ட்ரஸ் எல்லாம் பார்த்த தானே!! எல்லாம் அதது இடத்துல சரியாகத்தான் இருந்திச்சு!” என்றவன் தன் டீசர்ட்டை கழட்டி வெற்று மார்போடு தான் அவளிடம் பேசினான்.
”அதில்லிங்.. மழைல போய் நெனைஞ்சிங்களே..?”
”அது.. அதுலாம் தெரிஞ்சே நெனைஞ்சதுதான். எனக்கு மப்பெல்லாம் இல்ல. தெளிவாத்தான் இருக்கேன்!!”
”ஆமாமா… ரொம்ப தெளிவா இருக்கீங்க.. ” கிண்டலாகச் சிரித்தாள். பின்னர் அவன் குளித்துவிட்டு வர.. இவளும் அதற்குள் ஈர உடையை மாத்தியிருக்க.. இருவருக்கும் உணவு எடுத்து வைக்க.. உணவு உண்டனர். சீக்கிரம் எழுந்து விட்டான் கார்த்திக்!!
“பசி ஆறியாச்சா? அதுக்குள்ளா?” சரியாக சாப்பிடவில்லையோ என்ற கலக்கத்துடன் அவள் கேட்க..
“பயங்கர பசி தான்! ஆனா அதை ஆத்த நீ தான் வேணும்! வரியா?” என்றான் நக்கலுடன்.
”ச்சீ… என்ன பேசறிங்..?” முகம் சிவந்தவள், “நான்.. நான்..” என்று அவள் தடுமாற..
”நீ.. நீ.. தரப் போறியா..??” என்றவன் பார்வை கணவனாய் மாற… மெல்ல நெருங்கினான் அவளை!!
“என்றா இன்னுமா ரெடி ஆகல? அங்க மதிய விருந்துக்கு எல்லாம் காத்திருக்காங்க.. வெரசா கிளம்பு!” என்றப்படி கரடியாய் உள்ளே வந்தார் கிருஷ்ணகுமார் மனைவியுடன்!!
“நானே இப்போ தான் அவகிட்ட ஏதோ கொஞ்சம் நெருங்கினேன்.. அது இவருக்கு பிடிக்காதே!! மூக்கு வேர்த்துட்டு போல.. வந்துட்டாரு!!” என்று முணுமுணுத்தான்.
“என்றா அங்க முணுமுணுப்பு!” என்று அவர் கேட்க.. பாமா “வந்ததும் ஆரம்பிச்சிட்டீங்களா? நீங்க இரண்டு பேரும் ரெடியாகிட்டு வாங்க” என்றதும் மாமனார் மாமியாரை பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்ன.. சட்டென்று அவள் அறைக்குள் ஓடி ஒளிய.. இவனும் தந்தையை பார்த்துக் கொண்டே மெதுவாக அறைக்குள் நுழைந்து கதவை சாற்றினான்.
“உங்களுக்கு கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா? வெளியில கார்ல இருந்து ஹாரன் அடிங்கன்னு சொன்னேன்.. நீங்க பாட்டுக்கு உள்ள வரீங்க.. வந்ததும் இல்லாம அதட்ட வேற செய்றீங்க? எல்லாம் என் மாமியார சொல்லனும். புள்ளைய ஒழுங்கா வளர்க்காமல் என் தலையில கட்டி வச்சுட்டாங்க” என்று அவர் பொறும.. கிருஷ்ணகுமாருக்கும் அப்போதுதான் புரிந்தது மகனும் மருமகளும் நெருக்கமாக நின்றது.
“சொதப்பிட்டேனோ??” என்று அவர் பார்க்க.. “ரொம்ப நல்லாவே!!” என்றவர் மீண்டும் கணவனை அங்கு இருக்க விடாமல் காருக்கருகில் அழைத்து சென்று விட்டார்.
புது மனைவி கண்டவனுக்கு புதிதாய் தோன்றும் இந்த உணர்வு வெகு புதிது!! அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தவனின்
மோகம் உச்சிக்கு ஏறி விட்டது!! புடவை எடுத்துக் கொண்டிருந்தவளை இழுத்து நெஞ்சோடு சேர்த்தணைத்து இறுக்கினான், மூச்சுத் திணறுமளவு அவள் இதழோடு இதழ் வைத்து முத்தமிட்டான்.
பின் அவளை விலக்கியவன், “பெல்…” என்று அழைத்தான் கிறக்கமாக.. அவள் காதோர முடி கற்றைகளை ஒதுக்கியவாறே..
அந்த விளிப்பில் அவளது பவள இதழ்கள் அழகாய் பிளந்து விரிந்திருக்க.. அவனின் உதடுகள் அவள் உதடுகளுக்கு பக்கத்தில் மெதுவாக செல்ல.. மெல்லிய முத்தம் ஒன்று!!
வேட்டியை மடித்து கட்டியவன், காலால் கதவை சாத்தியவன், அவள் கண்களில் ஆழ்ந்து பார்த்தான். அவள் மீது எந்த புள்ளியில் ஈர்ப்பு உண்டானது என்று தெரியவில்லை.. ஆனால் காதல் இன்னும் அவன் உணரவில்லை. இயல்பாய் மனைவி மேல் ஏற்படும் உரிமையுணர்வு மட்டுமே!!
அவனின் மனைவி என்ற நொடியில் இருந்து அவளின் அண்மையை ரசிக்க துவங்கியது மனம். சிறு சிறு சந்தர்ப்பத்தையும் விடாமல் பற்றி கொண்டு அவளிடம் நெருங்க துடித்த மனதை அணை போட்டு தடுத்து இருந்தான். அவ்வணையை உடைக்க மனம் தற்போது விழைய.. இறுக அணைத்துவாறு அவளை அள்ளி சென்று மெத்தையில் கிடத்தினான்.
தையல் அவளோ மிரண்டு அவளின் மாமனை பார்க்க…
மையல் கொண்ட கோமகனோ அவளை அங்குலம் அங்குலமாய்
ரசனையாய் பார்க்க…
கண்கள் நான்கும் மட்டுமல்ல..
இதழ்கள் நான்கும் ஒன்றையொன்று விழுங்கின!!
பெண் இதழ்களை விழுங்கி அமிர்தம் பருகி தேவனாகி போனான் கார்த்திக்!!
அவளோ அமிர்தகலசமாகி போனாள் தன்னவனுக்கு!!
அவளை கட்டிலில் கிடத்தி, தன் விரல்கள் கொண்டு வருட.. அவன் விரல்களின் வித்தையை உணர துவங்கியவளின் கண்கள் மெல்ல சுகத்தில் மூடிக் கொண்டன!!
அவள் மேனி எங்கும் ஊர்ந்து செல்லும் அவன் விரல்களை தடுக்க மனமின்றி லயித்து இருந்தாள் மேகலை!!
காதோரம் அவன் பேசிய அந்தரங்க மொழிகளில் மேனி எங்கும் வெட்க அதிர்வலைகள் பரவ.. அதை தாங்க இயலாதவளாய் தன் இதழ் கடித்து சமன்ப்படுத்த முனைய.. அவனோ அவளின் வேலையை தானே எடுத்துக் கொள்ள.. அவன் இதழ்களும் பற்களும் தேனூறும் இதழ்களில் கவி பாட.. கிறங்கி முயங்கி இருந்தாள் தோகை!!
அவள் பட்டு புடவையை விலக்கி.. வெண்ணெயென வழுவழுத்த இடையில் நுழைந்து நாபியில் விளையாடிய அவன் விரல்கள், பின் மெல்லிடையை அழுத்தமாக பற்ற.. மெல்லிய முனகல் சத்தம் மட்டுமே பெண்ணிடம்!! அதுவும் அவன் இதழ்களால் விழுங்கினான்.
இனிய இம்சையைக் கொடுத்த அவளின் இளமை நரம்புகள் தீண்டப் பட்டதும்.. அவளால் நம்ப முடியாத அளவுக்கு சுகமான ஒரு இன்ப உணர்ச்சியைக் கொடுக்க.. இதுவரை தெரியாத புது உலகிற்கு பமணயானாள் தன்னவனோடு மேகலை!!
அவளை இன்றி யாரும் தொடாத ரகசிய அங்கங்களில் அவன் விரல்கள் எல்லையை மீறி கொண்டிருக்க.. என்ன அதிசயம் தடுக்க மனமில்லமால்… சுகத்தில் சுகித்து கொண்டிருந்தாள்.
அவன் தேடலில் இவள் மூச்சு வேக வேகமாய் வெளி வர.. மெல்ல அணைத்து.. நெற்றி முட்டி.. மூக்கோடு மூக்கு உரசி.. சிவந்து மின்னிய கன்னங்களில் தன் கன்னம் உரசி.. இவனுள் இருக்கும் வெப்பத்தை அவளுக்கு கடத்த மோக தீ அவளையும் தொற்றி கொண்டது!!
சாரை பாம்புகளாய் அவர்கள் கட்டிலில் பின்னி பிணைந்து மோகத்தில் தத்தளிக்க.. சட்டென்று ‘மொடக்!’ என்ற சத்தம்!! கட்டில் ஒரு பக்கம் சாய்ந்தது!! பின்னி பிணைந்த நிலையில் கட்டிலை விட்டு இறங்கி என்னவென்று பார்க்க..
கட்டிலின் ஒரு கால் முறிந்திருந்தது. அதுவோ பழைய கட்டில் ஆதலால்!!
அதைக் கண்டவளோ குபீரென பொங்கிய வெட்கத்தில் சட்டென தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள்!! சடாரென பின்னால் திரும்பி.. குனிந்தபடி சிரித்து.. வட்டமடித்து சுழன்று வந்து அவனுக்கு நேராகப் பார்த்து.. வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.
வெட்கத்தில் அவள் உடல் வெளிப்படுத்திய அசைவுகள்!!
தாபம் போய் நாணச் சிரிப்பில் முகிழ்த்த அவளது கன்ன சிவப்பு!!
அவனை ஆகர்ஷித்தது!
அவளது வெட்கம் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது!!
வளைந்து நெளிந்து அவள் நின்ற கோலம் அவனுள் தாபத்தை ஏற்ற..
இடையோடு அவளை இழுத்து அணைத்திருந்தான்!!
கன்னங்கள் நாணத்தில் ஜிவுஜிவுக்க.. முகம் சிவந்து போய் அவனைப் பார்த்தாள் மேகலை.
“ஏன் பெல்லு.. மாமனோட பாதி பர்பாமென்ஸக்கே உங்க வீட்டு கட்டிலு தாங்கல.. அப்போ முழுசா காட்டினா??” என்று அவன் கண் சிமிட்டி கேட்க..
“அச்சோ… மாமா!” என்று அவன் நெஞ்சத்தை மஞ்சம் ஆக்கினாள் வஞ்சியவள்!!
அதற்கு மேல் கிருஷ்ணகுமார் தம்பதி வந்து விட… இவர்களும் கிளம்பினர்.
புது மணமக்களை ஆலம் கரைத்து வீட்டுக்குள் அழைத்தனர். இன்று காலையிலேயே கிருஷ்ணகுமார் மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு அவரோட குலதெய்வ கோவில் சென்று அங்கே பொங்கல் வைத்து பூஜை முடித்து விட்டு தான் இங்கே மதியம் விருந்துக்கு வந்திருந்தார்.
“கல்யாண பொண்ணு புகுந்த வீட்டுக்கு வர நேரம் மழை பெய்தால் நல்லதுன்னு சொல்லுவாங்க.. பாரு உங்க வீட்டுக்கு மாப்பிள்ளை வந்த நேரம் மழை பிச்சிக்கிட்டு கொட்டுது!” என்று பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து அங்கங்கே உறவினர்களிடம் சிறு சிறு பேச்சுகள் எழுந்த வண்ணம் இருந்தது.
“சம்மந்தி.. இன்னைக்கு இங்க விருந்து முடிச்சுட்டு நாளைக்கு காலைல எங்க குலதெய்வத்துக்கு போய் ஒரு படையில் போட்டுடலாம். அதுக்கப்புறம் எல்லாம் உங்கள் வசதி தான்” என்று பசுபதி சொன்னதும் கிருஷ்ணகுமார் மனைவியை பார்க்க..
“அண்ணா.. நாளைக்கு செவ்வாய்க்கிழமை வேணாங்க.. புதன் காலையிலேயே கிளம்பலாம்” என்றதும் அனைவருக்கும் ஒப்புதலாய் இருந்தது.
“நீங்க சாப்பிடுக மச்சான்..” லாங் லாங் ஏகோ.. சோ லாங் ஏகோ.. கல்யாணம் முடிந்து மறு வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை சரியாக கவனிக்கவில்லை என்று மச்சான் மீது கோபத்தில் இருந்தவன் இப்போது ஆசையாய் அவனுக்கு ஊட்டினான்.
“மதனி.. இன்னும் கொஞ்சம் கோழி வறுவல் வைக்கிறேனுங்க…” என்று நாத்தனாரை பார்த்து பார்த்து பெண்மணி கவனிக்க..
“அடேய் இளந்தாரி பயலே.. நல்லா கறிச்சோறும் அள்ளி வாயில வை.. வெரசா சாப்பிடு.. கோதாத!” என்று இந்த பக்கம் நடுத்தர மனிதர் ஒருவர் இளைஞன் ஒருவனை சாடினார்.
இப்படி கலவையான தினுசான அன்பு குரல்களும்.. அக்கறை வார்த்தைகளுமாய் நிறைந்திருந்தது பசுபதி வீட்டின் கறி விருந்து!!
சில நிமிடங்கள் இவற்றை எல்லாம் பார்த்த கார்த்திக் பின் மெதுவாக கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும் மாமா என்றான்.
“அதுக்கென்ன மாப்பிள்ளைங்… வாங்க.. வாங்க.. நம்ம அம்மிணி அறையிலேயே நல்லா எடுங்க!” என்று அழைத்துச் சென்றார்.
கார்த்திக் உள்ளே வர.. அவளோடு பேசிக் கொண்டிருந்த மற்றவர்கள் எல்லாம் ஒரு சின்ன சிரிப்போடு வெளியே சென்றனர்.
பெண் பார்க்க வரும் போதே.. அப்படி கவனித்தவர்கள் இப்போதே கேட்கவும் வேண்டுமா?
கார்த்திக் வயிற்றை தடவ… “ஏனுங் மாமா.. வவுறு சரியில்லிங்களா?” என்று அக்கறையோடு கேட்க.. ஆமா என்று தலை அசைத்தான்.
“இருங்க!!” என்று சோடா ஒன்றை வாங்கி வந்தாள் யாரிடமோ சொல்லி.. கோலி சோடாவை முதன் முதலில் பாரத்தவன் முகத்தை சுழிக்க… “இந்த மாதிரி சுழிச்சு சுழிச்சு தானுங்கோ இப்போ தண்ணிய கூட காசுக் கொடுத்து வாங்குறோம்!” என்று நெற்றியடியாய் பேசியவளை அவன் விசித்தரமாக பார்க்க.. அவளோ சோடாவை குடித்து ஏப்பம் விட்டாள். அவனைப் பார்த்து..
”ஏனுங்.. உங்களுக்குங்?” எனக் கேட்டாள்.
அவன் பார்வை அவளின் மீதே நிலைத்திருந்தது. காலையில் விட்டதை தொடர எண்ணம் வலுத்தது!! அவளை பார்க்க.. பார்க்க…
ஏறி இறங்கிய தொண்டை குழி..
குடித்தபின் ஈரத்தில் மினுக்கும் உதடுகள்..
ஏப்பம் விட்ட பிளந்த வாய்…
தலை ஆட்டும் போதும் கன்னத்தில் கவி பாடும் ஜிமிக்கி..
காதோரம் சுருண்ட முடி கற்றைகள்..
மல்லிகை வாசம்…
என்று அனைத்தும் அவனை தாபத்தில் தள்ள.. தாகம் எல்லாம் தூர போனது!!
”உன்.. இதழ் சுவை ” என்றவன் தயக்கம் காட்டாமல் அவள் கழுத்தில் கைபோட்டு வளைத்து, அவள் முகத்தை அருகில் இழுத்து அவள் உதடுகளைக் கவ்வி உறிஞ்சி சுவைத்தான். மெல்ல இறங்கி முகம் கழுத்தில் பதிந்து அவள் காதை லேசாக கடித்து சுவைத்தது.
கோதையின் மெல்லிய இடையில் மென்மையாக இறுக்க, அவளுக்கு காலையில் அவன் நடத்திய மோகன லீலைகள் ஞாபகம் வர ஆரம்பித்தது. அவளையும் அறியாமல் அவனின் பிடியில்.. அணைப்பில் கிறங்கி முயங்க ஆரம்பித்தாள். அவளுடைய சென்சிடிவ் இடமே அவள் இடை தான். அதை அறிந்தவன் அவ்விடத்தை விட்டு கைகளை எடுக்கவேயில்லை.
பாவையவளோ பேதையாகி பேசமுடியாமல் திகைத்தாள். அவளின் நிலையைப் பார்த்தவன் அவளைக் கட்டிப் பிடித்தான்.
“இப்ப நான் பயங்கர மூடிலே இருக்கேன்,” என்றவன் அவள் இதழ்களை மீண்டும் மையம் கொண்டான் மையல் கொண்டு… உணர்ச்சி வெள்ளத்தில் தவியாய் தவித்தாள் தத்தை!!
அவளுக்கு திமிறக் கூட தோன்றவில்லை. பெண்ணவளோ கண்களை மட்டும் இறுக மூடினாள். கையில் இருந்த சோடா பாட்டிலை இறுக்கி பிடித்தாள்.
அவ்வளவு சுலபத்தில் அவளது உதடுகளை விட்டு விட அவன் தயாராக இல்லை!! அவள் துவண்டு போகுமளவுக்கு அவளின் சின்னஞ் சிறு இதழில் தேன் குடித்தான்.
அதற்குள் யாரோ வந்து கதவைத் தட்ட.. அவசரமாக பிரிந்தவள் தன்னை ஒருமுறை சரிப்படுத்திக் கொண்டு அதைவிட அவசரமாக வெளியில் ஓடினாள். இவனும் மந்தகாச புன்னகையோடு பின் கழுத்தை நீவி கொண்டான்.
இவனும் தன்னை சரிப்படுத்தி கொண்டு கீழே வர.. பெண்கள் கொல்லென்று சிரிப்போடு இவனை கடந்துச் சென்றனர்.
கார்த்திக்கோ சாக்லேட் பிடிங்கிய குழந்தையாய் மேகலையை கண்களால் தொடர்ந்தான் அவள் செல்லுமிடம் எல்லாம்!!
அவள் அப்பத்தாவிடம் ஏதோ கையாட்டி கையாட்டி பேச.. அவரோ மேவாயில் கை வைத்து கேட்க.. இவனோ கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு இருக்கையில் லேசாக சாய்ந்து கொண்டு இவளை தான் பார்த்து கண்களில் குறும்பு கொப்பளிக்க புன்னகைத்தான். அந்த கண்களில் ஒன்றை மட்டும் லேசாக சிமிட்டியவாறே… அவளோ முகம் சிவக்க… அவர்களை கடந்து சென்றார் மேகலையின் பெரிய தாத்தா முகத்தில் அத்தனை சிரிப்பு!!
மச்சான் கல்யாணம் முடித்து வேறொரு தவிர்க்க முடியாத உறவின் ரிஷசப்னுக்கு என்று சென்றிருந்த அனித்ரா பூபாலன் தம்பதி விருந்துக்கு அப்போது தான் வந்தனர். அனித்ரா பெண்கள் பக்கம் செல்ல.. பூபாலன் மச்சானை நெருங்கியவன் அவனை ஏற இறங்கப் பார்த்தான்.
“என்ன மாமா? எப்படி விட்டுட்டு போனீங்களோ அப்படியே தான் இருக்கேன்!” என்றான் கார்த்திக் சன்ன சிரிப்போடு!!
“பிடிக்கல.. பிடிக்கலனு சொல்லிட்டு.. ஆனாலும்… கடைசில இப்படி பண்ணிட்டியே டா மாப்ள” என்று அவனை ஒரு முறை சுற்றி வந்து மேலும் கீழும் பார்த்தான் பூபாலன்.
“என்ன பண்ணுனேன்?” என்று புரியாமல் கார்த்திக் பார்க்க..
“ஏன் மாப்புள.. கட்டிலே உடைஞ்சிட்டாமே!!” என்று ரகசியம் பேசுவது போல் அவன் சத்தமாக கேட்க..
Semaya irukku sis story
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Super interesting sis semma srippu
🤣🤣🤣🤣Bell epadi panitiye🤪🤪🤪