ATM Tamil Romantic Novels

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 11

இஷ்டம்-11

 

 

“ஏய்.. பெல்லுஉஉஉ…” என்ற கத்தி அழைத்தப்படி அந்த விருந்தில் அவளை தேடித் தேடி அலைந்தான் கார்த்திக்.

 

அவள் ஓரிடத்தில் இருந்தால் தானே? இந்த பக்கம் “மாமா.. ஐய்த்த உங்கள கூப்பிடறாங்க” என்று சவுண்டு கேட்டால், அந்தப் பக்கம் இவன் செல்ல முன்னே சிட்டாக பறந்திருப்பாள். 

 

“மதனி.. தம்பி அழுதுகிட்டே இருக்கானுங்க. உங்கள அப்பத்தா கூப்பிடுச்சு” என்று பின் பக்கத்திலிருந்து சத்தம் வரும், கார்த்திக் திரும்பி பார்ப்பதற்குள் “பெரியப்பா.. உங்க இரண்டாவது மருமகன் குடிச்சிட்டு அலும்பு பண்றாருங்க.. நீங்க போனா தான் சரிப்பட்டு வருமுங்க.. போங்.. போங்.. வெரசா போங்!!” என்று அவரை துரத்தி விடுவாள்.. 

 

இவன் அந்த இடத்தை திரும்பிப் பார்க்கும் முன்னரே ஜெட்டாக மாறி.. “அடேய் சொம்பு.. நீங்க எல்லாம் சாப்டீங்களா?” என்று தன் படை பரிவாரங்களை உபசரித்துக் கொண்டிருப்பாள்.

 

 இவன் கிராமத்து காளையாக இருந்திருந்தால் வேட்டியை மடித்துக் கொண்டு அவள் பின்னே இலகுவாக சென்று பிடிந்திருப்பான். இவன் வேட்டி கட்டுவதே அரிதிலும் அரிது!!

 

அதிலும் இந்த ஒரு வாரமாக கிருஷ்ணகுமார் தான் அவனுக்கு வேட்டி கட்ட பயிற்சி கொடுத்தார்.

 

“அப்பா.. இவ்வளவு ஏன் கஷ்டப்படனும்! அதான் கட்டிக்க ஒட்டிக்கோ இருக்கேப்பா.. என்னை போட்டு படுத்தாதீங்க” என்று அவன் சொன்னாலும் விடுவதாக இல்லை அவர்.

 

“வேட்டி நம்ம பாரம்பரிய உடை டா.. அதைக் கட்ட தெரியலனா ஆம்பளையே இல்லைன்னு சொல்லிடுவாங்க ஊருல.. அதைவிட நம்ம தொழிலின் அடிப்படையே வேட்டி தாண்டா!! அத வச்சு நாம இவ்வளவு முன்னுக்கு வந்துட்டு அதை கட்ட மாட்டேன்னு சொல்லுவியா நீ?” என்று டிரில் மாஸ்டர் ஒரு நாளைக்கு குறைந்தது 50 முறையாக அவனை கட்ட வைத்து.. நடக்க வைத்து.. ஓட வைத்து.. என்று பக்கா ட்ரைனிங் கொடுத்தே ஊருக்கு அழைத்து வந்திருந்தார்.

 

“ஆனாலும் என் புள்ளைய நீங்க இப்படி படுத்த கூடாது” என்று பாமா முறுக்கிக் கொண்டார்.

 

“உனக்கு தான் டிசைனர் பிளவுஸ் வெரைட்டியா வந்துட்டு தானே? அப்புறம் என்ன? ஊர்ல உன்னையா கேப்பாங்க? என்னதான் கேப்பாங்க! என்ன கிருஷ்ணா உன் பையனுக்கு வேட்டி கட்ட தெரியாதானு நக்கலா ஒரு பார்வை பார்த்தாலே போதும்.. நம்ம மானம் கப்பல் ஏறிடும்!! போ.. போ.. இதெல்லாம் உனக்கு சொன்னா எங்க புரிய போது?” என்று மனைவியை துரத்தி விட்டார்.

 

கிருஷ்ணகுமாரின் பயிற்சியால் தான் கார்த்திக் வேட்டி அவிழ்ந்து விழாமல் இப்பொழுது வேட்டி கட்டி நடப்பதே!! இதில் எங்கிருந்து சிட்டாக.. ஜெட்டாக பறந்து பறந்து செல்லும் மேகலையை அவன் பிடிக்க?? 

 

ஒரு வழியாக அவள் பந்தியில் இருப்பதை கண்டுபிடித்தான்.

 

“அதான் இத்தனை ஆளுங்க இருக்காங்கள.. இவ ஏன் இங்க வந்து நிக்குறா?” என்று யோசனையோடு அவன் அந்த பந்திக்குள் நுழைய.. 

 

வரிசையாக அமர்ந்திருந்த மேகலையின் அண்ணன் தம்பி முறையில் உள்ள விடலை பையன் முதல் பெண்ணை கட்டிக் கொடுத்த நடுத்தர ஆண் வரை அனைவரிடமும்  

நலம் விசாரித்துக் கொண்டே செல்ல.. அவர்களும் இவளுக்கு கறிச்சோறு.. மட்டன் சுக்கா.. நாடு கோழி வறுவல்.. இரத்த கூட்டு.. கோழி காலு என்று வகை வகையாக பாசத்தோடு ஊட்டினர்.

 

“ம்ம்.. போதுமுங்க ணா..” என்று வாய் நிறைய வாங்கிக் கொண்டு, கண்கள் கலங்கிய சிரிப்போடு அவள் ஒவ்வொருவரிடமும் ஆசையோடு ஊட்டிக் கொள்ளுவதை கண்களில் ரசனையோடு மனதில் நெகிழ்ச்சியோடு பார்த்தான் கார்த்திக்!!

 

‘இப்போது எதுவும் கேட்க வேண்டாம்.. அவர்களை விட்டு பிரிந்து புகுந்த வீடு செல்லும் தங்கள் வீட்டு பெண்ணிற்காக பாசமாக அவர்கள் ஊட்டி விடுகிறார்கள்.. இதுல டிஸ்டர்ப் பண்ண வேணாம்!’

என்று சிரிப்போடு நகர்ந்தான்.

 

இனி எப்போது காண்போமோ? எப்பொழுது இது போல் அன்போடு கூடி மகிழ்வோமோ? அவள் கண்களில் ஏக்கத்தை பார்த்தவன் வேறு ஏதும் பேசாமல் தான் திரும்பி போக எத்தனிக்க..

 

“எங்க மச்சான சமாளிக்க வேணாம்.. இன்னும் நாலு வாய் வாங்குங்க கண்ணு..” என்றான் ஒருத்தன்.

 

“ஏனுங்.. எங்க அண்ணன் கட்டுக்கோப்ப உடம்ப பாத்திகளா.. கட்டிலே உடைஞ்சிப் போச்சு! அதனால உங்க தங்கச்சிய நல்லா எலும்பும் கறியுமா கொடுத்து கவனிங்க” என்றாள் முன்னவனின் மனைவி!!

 

கட்டில் உடைந்தது என்று கேட்டதும், பெண்கள் எல்லாம் வெட்கத்தோடு சிரிக்க.. ஆண்களோ சத்தமாக கடகடவென்று சிரிக்க.. அந்த இடமே சந்தோஷ அலையில் மிதக்க.. நம் கார்த்திக்கோ கண் மூக்கு வாய் காது நவ துவாரங்களிலும் புகை வர நின்றிருந்தான்.

 

“ஆமா கண்ணு.. நீயும் உடம்பை தேத்து” என்று ஒருவர் கூற..

 

“உன்ற தங்கச்சிக்கு உடம்பு முழுக்க வினை அதாம் உடம்பு ஏற மாட்டேங்குது..” என்று நாத்தி முறையில் ஒரு பெண் மேகலை கன்னத்தில் இடித்து கூற.. 

 

“ஆங்.. என்ற‌ அண்ணன் சம்பாரிச்சு போட வூட்டில் உட்கார்ந்து திங்கறீங்களே மதனி.. அந்த மெதப்புதான் உங்களுக்கு” என்று இவளும் திருப்பிக் கொடுக்க…

 

“பாத்து டி ஆத்தா… நீயும் என்ற தம்பி சம்பாதியத்துல உக்காந்து தின்னு உடம்பு வைச்சிடாதே.. அப்புறம் நித்தமும் ஒரு கட்டிலு காலு உடைய போகுது!!” என்று அவர் சொல்லி சிரிக்க.. விகற்பம் இல்லாமல் மற்றவர்களும் சிரிக்க.. இங்கு கார்த்திக்கு கொதித்துக் கொண்டு வர.. பெல்லு என்று கூப்பிட வந்தவன் மணி என்றான் சத்தமாக…

 

“போ.. போ.. கண்ணு.. உன்ற வூட்டுக்காரர் கூப்புடுறாரு…” என்று அக்கரையாக சொன்னாலும் அந்த அக்கறையின் பின்னே ஒளிந்திருக்கும் நக்கலை இவள் இனம் கண்டு ஒற்றை விரல் காட்டி பத்திரம் சொல்ல…

 

“எதுக்கும் ஐயங்கிட்ட சொல்லி இன்னொரு கட்டிலுக்கு ஆர்டர் கொடு புள்ள” என்று சத்தமாகவே அந்த நாத்தி உறவு பெண் கூற.. மீண்டும் ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது அங்கே!!

 

அவர்கள் முன்னாடி இவளை திட்டவும் முடியாமல் அவர்கள் பேசியதை ரசிக்கவும் முடியாமல் அவஸ்தையில் தவித்தவன், அவள் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாக பந்தியை விட்டு வெளியே வர… “மாப்பிள்ளைக்கு ரொம்ப அவசரம் போல..” என்று மீண்டும் கேலி பேச்சு வர..

 

“ஓ மை காட்!! ஓ மை காட்!! உன்னோடு தான் கஷ்டமுனு பார்த்தா.. உன் சொந்தத்தோட ரொம்ப ரொம்ப கஷ்டமடி!” என்று திட்டினான். அவளோ ஏன் என்று புரியாமல் அவனை பார்க்க…

 

“ஏண்டி.. அதுவே பழைய கட்டில் ஏதோ வெயிட் தாங்காம ஒடஞ்சிட்டு அது; எப்படி டி ஊர் ஃபுல்லா ஸ்பீக்கர் இல்லாமலே சொல்லுவ? கொஞ்சம் கூட நமக்குன்னு ஒரு பிரைவசி வேண்டாம்?” என்று கண்களை உருட்டி அவன் மிரட்டி கேட்டான்.

 

“நான் ஒன்னும் யார் கிட்டேயும் சொல்லிங் மாமா… நான் அப்பத்தா கிட்ட சொன்னேனுங்களா.. இப்படி இப்படி கட்டிலு உடைஞ்சிட்டுனு.. அத என்ற பெரிய தாத்தன் கேட்டுட்டு அப்பாரு கிட்ட சொல்ல.. அந்த பக்கம் வந்த என்ற காடமரை மாமா அத கேட்டு சிரிச்சிட்டே இருக்க.. என்னன்னு காரணம் கேட்டவங்க கிட்ட எல்லாம் இப்படி இப்படினு அவரு தானுங்க பரப்பிவிட்டுடாரு…” என்று இமையை தட்டி தட்டி விழித்து சிறுப்பிள்ளை போல கூற.. கேட்டவனோ, “அப்போ இவ அப்பத்தா கிட்ட அதைத்தான் பேசினாளா? அத கூட ரசிச்சோமே நாம!” என்று உள்ளுக்குள் ஷேம் ஷேம் பப்பி ஷேகமாக உணர்ந்தாலும், வெளியில் கெத்தாக அவளை முறைத்தான்.

 

‘இவ கூட மட்டுமல்ல.. இவ குடும்பத்தோட குடும்பம் நடத்துறதே.. ரொம்ப ரொம்ப கஷ்டம் போல’ என்று நினைத்தவன் இரண்டு எட்டி தான் எடுத்து வைத்திருப்பான் போல… அதற்குள் அவன் காலை கெட்டியாக ஏதோ கட்டிக் கொள்ள அவன் அதறி பதறி பார்க்க.. மூன்று அடியில் ராஜபாளையம் நாய் ஒன்று அவனை பாசத்தோடு பார்த்தது!!

 

“ஏய் பெல்லு… என்னடி தெரு நாய் எல்லாம் உள்ள விட்டுயிருக்கிங்க” என்று அவன் தள்ளி தள்ளி போய்.. “ஏய்.. ச்சூ.. ச்சூ… போ.. போ..” என்று விரட்டினான்.

 

“ஏனுங்.. போமேரியன்.. டால்மேசன்.. 

டாபர்மேன்… ராட்வீலர்.. மாஸ்டிஃப்… ஜெர்மன் ஷெப்பர்ட்.. பாக்ஸர்… புல்டாக்.. ஷைபீரியன் ஹஸ்கி.. க்ரேஹவுண்ட்.. இதுங்க மட்டும் தான் நாய்கங்களா… உலகுத்துல 350 வகை இருந்தாலும்.. அதில் 7 வகை, இந்திய நாய்ங்.. இதில் கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நான்கும் நம் தமிழகத்தின் இனமுங்க… என்ன தான் வெளிநாட்டு மோகம் இருந்தாலும் நம்ம ஊர விட்டு கொடுக்கப்புடாதுங்க… இது தெரு நாய் இல்ல.. ராஜபாளையத்து நாய்ங்..” என்று அவள் வியக்கானம் செய்து விட்டு செல்ல.. அவன் கேட்க வந்ததையே மறந்து போனான்.

 

அதிலும் போகிற போக்கில் “வா.. சுப்புணி… நாம போலாம்! நீ சாப்பிட்டியா சுப்புணி?” என்று அந்த ராஜபாளையத்து நாயை அவள் அன்பாக விசாரித்து அழைத்துச் செல்ல.. “எது?? சுப்புனி இதுவா?” என்று அயர்ந்து தான் போனான் இவளின் பழக்கவழக்கத்தில்!!

 

மதிய விருந்து என்று ஆரம்பித்தது மாலை போல் தான் முடிந்தது. விடைபெற வந்தவர்களிடம் தலையாட்டி தலையாட்டி.. காது வரை இழுத்து ஒட்ட வைத்த புன்னகை முகம் நின்றதிலேயே சோர்ந்து போனான் கார்த்திக்!!

 

பெங்களூரில் கம்பெனி எஃப்எம் ப்ராஜெக்ட் என்று அத்தனை சுறுசுறுப்பாக இருந்தவன் தான், இன்று ஒரே நாளில் கதற வைத்து விட்டார்கள் பாசத்தில்.. அன்பில்.. அக்கறையில்.. நம் கொங்கு மக்கள்!!

 

மீண்டும் அவர்களை அந்த தோட்ட வீட்டுக்கே இரவுக்கு அனுப்பி வைத்தார்கள். 

 

“முத ராத்திரி தாங்க முடிஞ்சிடுச்சே பசுபதி.. ஏன் இன்னும் புள்ளைகள அங்கேயே அனுப்பிக்கிட்டு?” என்று மிச்ச சொச்ச உறவுகள் எல்லாம் பசுபதி இடம் கேட்க..

 

“இருக்கட்டுமுங்க மாமா.. மாப்புள்ளங் அங்க இருந்தா கொஞ்சம் ஃப்ரீயா இருப்பாருங்.. அலுப்பு தீர தூங்கி எழுந்து ஆசாவாசமா இருக்கட்டும்!! இந்த வயசுல இருக்காம எந்த வயசுல இருப்பாங்? இருந்துட்டு போகட்டுமுங்க மாமா!!” என்ற மாமனாரின் பேச்சைக் கேட்ட கார்த்திக்.. விட்டிருந்தால் இன்னொரு ஷாஜகானாய் மாறி அவருக்கு தாஜ்மஹாலை கட்டியிருப்பான்.. அப்படி ஒரு அலுப்பில் சோர்வில் தான் இருந்தான்.

 

அவன் இங்கே ஊருக்கு வந்தால் பயன்படுத்தி கொள்ளட்டும் என்று புது வண்டி ஒன்றை வாங்கி வைத்திருந்தவர், மதியமே அவனிடம் கொடுத்து இருந்தார். அதிலேயே இப்பொழுது அவர்கள் போகட்டும் என்றார்.

 

புது வண்டி.. பின்னால் புது மனைவி!! அதுவும் தலை நிறைய பூக்கடையையே சுமந்து.. மைவிழி பார்வையால் அவ்வப்போது அவனை மோகனமாக பார்க்க.. அதுவரை பிரிந்து விடலாமா? இல்லை கொஞ்சம் டைம் எடுத்து வாழலாமா? என்றெல்லாம் ஆக்சிலேஷனில் ஆடிக் கொண்டிருந்த ஆண் மனது நங்கூரம் கட்டி நின்றது, வாழ்ந்தே விடுவோம் என்று!!

 

வீட்டுக்குள் நுழைந்து நிலை கதவை சாத்திய உடன் முத்தத்தில் இறங்கி பால் நிலவை பார்த்திருந்த இந்த வெள்ளி நிலவை நெருங்கி.. மடிப்பில்லா மெல்லிடையில் மென்மையாக கை வைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான் கார்த்திக்!!

 

அவள் கழுத்தருகே முகம் புதைத்து அவளது பருவ வாசணையையும்.. அவளது பெண்மை மணத்தையும்.. பாவையவள் சூடி இருந்த பூவின் மணத்தையும் நுகர்ந்தான்!!

 

அவள் கழுத்தில் பட்ட அவனது மூச்சுக் காற்றின் வெப்பம்.. அவள் பெண்மையை தீண்டியது!! நடுங்கும் தன் உதடுகளை வாய்க்குள் இழுத்து கவ்வியபடி நாணத்தில் கண்களை மூடினாள் மாது!!

 

“ஏனுங்..‌ இது என்னங்க… முத்தத்திலேயே…” என்று அவள் இடத்தைக் கூற, அவனும் அதை செயல் ஆக்கினான்! முத்தத்திலேயே முத்தத்தை கொடுத்து மொத்தத்தையும் எடுத்துக் கொள்ள துணிந்து…

 

அவளின் மூடிய கண்களில் முத்தமிட்டான். அவள் இமைகளென்னும் சிறகுகள் படப்படத்து துடித்து அடங்கின. அவளின் கண்கள் மட்டுமல்ல செழித்த கன்னங்கள், கூர் மூக்கு.. என்று அவன் இதழ்களின் ஊர்வலம் தொடங்கியது நனி தாபமாக!! துளி காமமாக!!

 

பெண்ணவளும் வெட்கம் கொண்டு அவனிடமிருந்து தள்ளி நிற்க.. அவளை முந்தானை பற்றி இடது கையில் சுற்றியவன்..

 

“செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே…

என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே…

வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே..

உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே

காணாமல் நான் போனேனே..

இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க..

எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க..

தொடட்டுமா தொல்லை நீக்க..

 

தங்கத் தாமரை மகளே வா அருகே..

தத்தித் தாவுது மனமே வா அழகே..”

 

 

என்று பாடியவனின் கையில் அவள் முந்தானை சிக்கியிருக்க.. மற்றொரு கையை அவள் முதுகில் போட்டு வளைத்து அணைத்தபடி அவளின் சிவந்த உதடுகளை முத்தமிட்டு மெல்லக் கவர்ந்தான் கந்தர்வனாய்!!

 

கொஞ்சம் தடித்த அவளது கீழுதடும்.. மெலிந்த மேலுதடும்.. தனித்தனியே பல்லால் மெல்லக் கடித்து சுவைத்தவன் கிறங்கிப் போனான், மாதுவில் மதுவின் போதை கண்டு!!

 

மெல்ல அவள் கீழ் உதட்டை கவ்வி இழுத்து அவன் சுவைக்க.. அவள் உதடுகள் பிரிந்தன. பின் சுலபமாக அவன் வசமானது அவளது அதரங்களும் அங்கங்களும்!!

 

அவரின் முரட்டு உதடுகள் மெல்லிய கனிந்த அவள் அதரங்களை உறிஞ்சி சுவைத்தன. பெண்மையோ ஆண்மையின் முதல் முத்த பலமான உணர்ச்சி தாக்குதலை எதிர்க்க முடியாமல் கண்கள் இரண்டையும் இறுக்கி மூடின!!

 

மெல்ல… மெல்ல… அவளைத் தன்வசமாக்கினான் கார்த்திக். அவள் முகத்தை தனது உதட்டு எச்சிலால் முத்தமிட்டு நிறைத்தான்!!

 

அவள் வெண் கழுத்தில் முத்தமிட்டு சிலிர்த்து சிணுங்க வைத்தான்!!

 

சிற்றிடைக்காரியின் சில்லென்று இடையினை இருக்கைகளால் இறுக்க பற்றி.. தன்னோடு இழைய வைத்தான்!!

 

கையால் அவள் ஆலிலை வயிற்றைத் தடவி ஆராய்ச்சி செய்ய.. ஆயிலையோ அதனைத் தடுத்தாள் கரம் கொண்டு!

 

“ம்ஹூம்..!” என்று தலையை இடவலமாக ஆட்டியவன்… நாபி சுழியின் வைர தாடகத்தை கைபற்றி சுழற்றினான் ஒற்றை விரலால்!!

 

பஞ்சணை இல்லை பால் பழம் இல்லை கட்டாந்தரையை படுக்கையானது அவர்களது தாம்பத்தியம் தொடங்க… 

 

அவளின் மெட்டியிட்ட விரல்களை பிடிக்க.. அவளோ அதிர்ந்து காலை மறைக்க முயல… மீண்டும் அவனின் “ம்ஹூம்..!”

 

அவளின் முயல் குட்டி போன்ற வெண்ணிற காலை தன் கன்னத்தை அழுத்தி தேய்த்தான்.. அவனின் முரட்டு உதடுகள் அவள் தந்த காலில் ஆங்காங்கே ஈரம் செய்தது. அவனின் நா அவளின் கால்களின் சுவையறிய முற்பட.. அவளுக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது.

 

அதனை ஓரக்கண்ணால் கண்டு கொண்டே.. அவள் பாதத்தையும்.. அவளின் பிஞ்சு பாத விரல்களையும் முத்தமிட்டான். மனதோ பேயாட்டம் போட்டது அவளை ஆட் கொள்ள.. அவனுக்கு அவள் மீது ஆசையும், மோகமும் பெருகியதே தவிர சிறிதும் குறையவில்லை. அவனின் தாபத்தையும் மோகத்தையும் அவளுக்குள் கடத்த தொடங்கினான் தன் இதழ்கள் கொண்டு..

 

அவளது மென்மையான சிணுங்கலையும்.. சத்தமில்லா முனகலையும் கண்டு கொண்ட கள்வன்.. அதை குறைய விடாமல் தொடர.. இடைவிடாமல் அவன் செவிகளை அறைந்து கொண்டே இருந்தது அச்சத்தங்கள் இன்ப தாளங்களாய்!! ஆனந்த லாகிரியாய்!!

 

கொஞ்சம் முன்பிருந்த தயக்கம் எல்லாம் முற்றிலுமாக அவனை விட்டு பறந்தோடி போக.. இன்னும் இன்னும் அவளுள் மூழ்கினான்.

 

உதடுகள் இந்த முறை கொஞ்சம் பலமாகவே அவள் உதடுகளில் உட்புக இந்த அழுத்தத்தால்.. ஏற்கனவே கொஞ்சம் விலகி இருந்த மேகலையின் தேன் சிந்தும் இளம் உதடுகள் மேலும் கொஞ்சம் விலக…. விலகிய அந்த உதடுகளில் ஒன்றை மெல்ல கவ்வி கடித்து நாக்கால் அவளது வெண் பற்களை வருடியபடி நாக்கால் பதப்படுத்த, ஆணவனின் இந்த புதிய பரிமாணத்தை கண்டு பேசற்று போனாள் பேதையவள்!!

 

இருவர் உடல்களும் காமனின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. மோக வேட்கையின் தவிப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் கொன்று தின்று விடும் வெறியில் இருந்தனர்.

ஆனால்.. அவன் வெளிப்படையாக..

இவளோ உள்ளுக்குள்!!

 

ஒரு விரல் கொண்டு அவளது நெற்றியில் இருந்து மெல்ல கோடு இழுத்து வந்தான் கோமகன். பிறை நெற்றி.. கூர் மூக்கு.. சிவந்த அதரங்கள்.. சிறிய தாடை.. வெண்ணிற கழுத்தென பயணித்த அவனது விரல்கள்.. கழுத்தைத் தாண்டி இறங்க சற்று தயக்கம் காட்ட.. இவளோ இரு கைகளாலும் எக்ஸ் குறியீட்டு மறைத்துக் கொண்டாள் தன் மென்மையை.. பெண்மையை!!

 

அவனின் ம்ஹூம்-மில்… அவள் அதிர்ந்து பார்க்கும் முன் விடைப்பெற்று சென்றிருந்தது அவளது முந்தானை!!

 

ஒரு கை தேர்ந்த சிற்பியால் வடித்து வைத்த பொற்சிலை போல.. அவ்வளவு அழகாகவும்.. நேர்த்தியாகவும்.. அங்க லட்சணங்கள் பொருந்தி இருந்தது அவளின் பெண்மை வடிவம். அதுலேயே கிறங்கி போனது அவனது ஆண்மை!!

 

அதன்பின் அவ்வீட்டை நிறைந்தது!! 

பெண்ணவளின் சிணுங்கல்களும் முனங்கல்களும்..

ஆணவனின் மயக்கும் வார்த்தைகளும்…

பாவையவளின் சலங்கை கொலுசின் இடைவிடா கீர்த்தனைகளும்..

கோமகனின் ம்ஹீம் என்ற கிறக்க மொழிகளும்…

ஆணவனின் கிறக்க மொழிகள் பெண்ணின் ரகசிய பெட்டகங்களை திறந்தன.. ஆராதித்தன.. 

கொஞ்சின… கெஞ்சின.. மிஞ்சன!!

 

அவனின் அழுத்தமான கை தடங்களையும் இதழ் தடங்களையும் அவளுள் ஆழமாக பதித்து.. மூழ்கி.. எழுந்தான் கார்த்திக்!!

 

உடல் வியர்க்க.. பலமான மூச்சிறைப்புடன் களைத்தான்.. அவளையும் கலைத்திருந்தான்!! அவளை முழுமையாக உணர்ந்த சுகத்தில்.. அவளது முகத்தில் முத்தமிட்டு.. மெல்லப் பிரிந்து விலகிப் படுத்தான்!!

 

சிறிது நேர ஓய்வுக்குப்பின்.. வியர்வை ஈரம் மினுமினுத்த.. கணவனின் மார்பை தடவிக்கொடுத்தவள் அதில் முகம் பதித்துக் கொள்ள…

 

அவள் முகத்தை தூக்கி பிடித்து அவளது உலர்ந்த உதட்டில் முத்தமிட்டான் கார்த்திக்!!

 

”என் படுக்கைல நீ தினமும் எனக்கு வேனும் பெல்லு!! உடல் சுகத்துக்காக மட்டும் இல்ல.. உன் அன்புக்காக.. உன் அணைப்புக்காக.. உன் முத்தத்துக்காக… எல்லாமே!!”

மேகலை மெல்ல புன்னகைக்க.. சிரித்தவள் முகத்தை திருப்பி.. மது ரசம் ஊறி ததும்பிக் கொண்டிருந்த அவளது சிவந்த இதழில் மெண்மையாக ஒரு முத்தம் கொடுத்தான் கார்த்திக்!!

 

பால் நிலவு துகில் துரிந்து வானென்னும் மன்னவனிடத்தில் தஞ்சம் கொண்டு, மேகத்தை போர்வையாக்கி மோகனம் பாட…

 

பூமிதனில்

பாவையவளும் துகில் துறந்த மேனியாளாய் கணவனுடன் கலவிப் புரிந்து, பல்லவ சிற்பத்தை ஒத்த மன்னவன் மார்பில் மஞ்சம் கொண்டு ரகசிய கீர்த்தனைகளை இசைத்தாள்!!

 

இஷ்டமாகுமா??

2 thoughts on “நீ நீ நீ என்னோட இஷ்டம்… 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top