ATM Tamil Romantic Novels

தீப சுடரொளியே கண்ணம்மா.. 1

தீபச் சுடரொளியே கண்ணம்மா…

 

ஜியா ஜானவி ❤️

 

1

 

“ஏய்… என்ன டி சொல்ற? நான் தான் உன்னை ஒன்னுமே பண்ணலையே?” என்று அதிர்ந்து கூவினான் ஆதித் நிகேதன், தன் ஆஃபிஸ்‌ கான்ப்ரன்ஸ் ஹால் என்பதையும் மறந்து….

 

“உஷ்… ஏன் நிக் கத்துற… எல்லாரும் நம்மை தான் பார்க்கிறாங்க” என்றவள் கடித்த பற்களுக்கு இடையே சிரித்துக் கொண்டே ஆதித்தை திட்டினாள் தீபத்தாரா.

 

மூச்சை வேக வேகமாக இழுத்து விட்டு தன்னை சமன்படுத்தியவன் 

பின்பு கிசுகிசுப்பான குரலில் அவள் புறம் குனிந்து “ஏய் தீப்ஸ்.. நிஜமா… நான் ஒன்னுமே அன்னைக்கு பண்ணலடி!” என்றான் கண்களில் கலவரத்துடன்!

 

“நிஜமா ஒண்ணுமே பண்ணல.. நிக் நீனு?” என்று தாராவின் கூர் விழிகள் அவனை குத்திக் கிழிக்க..

 

“அது.. அது.. கொஞ்சம் அங்க இங்க.. அப்படி இப்படி.. அவ்ளோ தான். அதுக்கு மேல இன்னும்…” என்றவனின் வார்த்தைகளை கேட்க கேட்க தாராவின் காதுகள் கூசி சிலிர்த்தது‌.

 

“ஜஸ்ட் ஷட் அப்!” என்றாள் உதடுகளை கடித்து.. அவனை முறைத்து… 

 

“எனக்கு ஷூட் அப் ஆகுது டி!” என்றான் அவள் அதரங்களை கண்களால் அள்ளி பருகியவாரே..

 

“நிக்.. என்ன பண்ற நீ?” அவன் பார்வையில் முளைத்த நாணத்தில் சிவந்த கன்னங்களை தேய்த்துவிட்டப்படி.. “எல்லோரும் இங்க தான் பார்க்குறாங்க..” என்றாள் மெல்லிய குரலில் எதிரே இருந்த கணினி ஸ்கீரினை பார்த்தப்படி..

 

“டோண்ட் வொர்ரி.. நம்மை தவிர யாருக்கும் இங்க தமிழ் தெரியாது. தெரிஞ்ச சில பேரும் இங்கே கான்ஃபரன்ஸ் ஹாலில் கிடையாது.

அதனால் வார்த்தைகளுக்கு நோ சென்சார்…” என்றான், குரலில் அவ்வளவு கல்மிஷத்தை தேக்கி..

 

“யூ.. யூ..”

 

“யாப்.. மீ.. மீ..”

 

“போய்யா… உன் கூட…”

 

“சொல்லு.. சொல்லு.. என் கூட.. என்ன என்ன?” அத்தனை சுவாரஸ்யம் அவன் குரலில்… அதனோட கூட கண்களில்..!

 

“ஹேய் கைஸ்.. என்ன உங்களுக்குள் மட்டும் ரொம்ப நேரமா கான்வர்சேஷன் நடந்துகிட்டு இருக்கு.. எங்க கிட்டயும் சொன்னா நாங்களும் சேர்ந்து கலந்துப்போம் இல்லையா?” என்றான் ஆங்கிலத்தில், டேனியல் இவர்களை முறைத்துக் கொண்டே… 

 

“நந்திங்.. நந்திங் டேனி.. தீப்ஸ்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லையாம். ஆஃப்டர்நூனுக்கு மேல் லீவ் கேட்டா… சோ அத பத்தி தான் கான்வர்சேஷன் நடந்துகிட்டு இருக்கு” என்றான் இப்போது அக்கம்பெனியின் டைரக்டராய்… 

 

“ஓஹோ.. வாட் ஹப்பெண்ட் தீம்ஸ்? என்று டேனியல் அக்கறையோடு கேட்க.. அங்கே குழுமியிருந்த மற்றவர்களும் கண்களில் அக்கறையோடு “ஆர் யூ ஓகே தீப்ஸ்?” அவளிடம் உடல் நலத்தைப் பற்றி கேட்டனர்.

 

‘இப்படி மாட்டி விட்டுட்டானே பாவி!’ என்று ஓரக் கண்ணால் ஆதித் நிகேதனை முறைத்த தீபத்தாரா, அனைவரிடமும் விரிந்த சிரிப்போடு கஷ்டப்பட்டு “நேற்று சாப்பிட்ட ரெஸ்டாரன்ட் உணவு ஒத்துக்கொள்ளவில்லை.. ஸ்டோமக் அப்செட்” என்று ஏதேதோ கூறி சமாளித்தாள்.

 

கண்களில் சிரிப்போடு முகத்தை வெகு சீரியஸாக வைத்துக் கொண்டு ஆதித் நிகேதனும் அவள் சமாளிப்பை ரசித்தான். அவன் சிரிக்கிறான் என்பது அவனது கண் சுருக்கங்களில் இருந்து கண்டுபிடித்தவள்… இப்போது கண்களில் மிரட்டல் விடுத்தாள் “வீட்டுக்கு வாடா.. உன்னை வச்சிக்கிறேன்” என்று!

 

‘ஏற்கனவே நீ என்னை வைச்சு தானடி இருக்க… இன்னும் புதுசா வைச்சுக்க என்ன‌ இருக்கு?’ என்று மென் குரலில் பதில் கூறியவனை கண்டவள் “நிக்.. நீ சரியான விவஸ்தைக் கெட்டவன்!” என்றாள்.

 

“விவஸ்தைக் கெட்டவன் இல்ல தீப்ஸ்.. உன்னால் கெட்டவன்… அது எப்படினா..” என்று அவன் விளக்க ஆரம்பிக்கும் முன்.. பயந்து, அவன் விளக்க முற்பட்டால் என்ன என்ன க்ரீனிஷ் வார்த்தைகளாக வந்து விழும் என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவள், சட்டென்று எழுந்து அவன் வாயை பொத்தினாள் தாரா.

 

மீண்டும் அனைத்து கூட்டமும் கரிகாலன் மேஜிக் ஷோவை பார்ப்பது போலவே.. அப்படியே திரும்பி இவர்கள் இருவரையும் பார்க்க.. அதேசமயம் தன் அதரங்களை மூடி இருந்த தாராவின் வெண் பிஞ்சு விரல்களில் அழுத்தமாக தன் மீசை முடி குத்த முத்தம் கொடுத்தான் ஆதித்.

 

அவனின் முத்தமும் புதிதல்ல.. அவனின்‌ ஸ்பரிசமும் புதிதல்ல பெண்ணவளுக்கு! 

 

ஆனால்.. இப்படி அனைவரும் முன்னும் அவன் செய்வதைக் கண்டு மானசீகமாக தலையடித்துக் கொண்டாள். அவனை முறைத்துக் கொண்டே கையை எடுத்தவள், “நிக்.. உன் அட்வைஸ் போதும்! எனக்கு ஏற்கனவே ஸ்டொமக் அப்செட்! நீ என் மூடையும் அப்செட் பண்ணாதே.. அட்வைஸ் பண்ணாதே!” என்று அனைவருக்கும் கேட்கும் வகையில் ஆங்கிலத்தில் உரைத்தவள் அவனை பார்த்து 

‘இனி இப்படி பேசின அப்புறம் அவ்வளவு தான்’ என்று கண்களில் மிரட்டினாள்.

 

“உன்கிட்ட இப்படி பேசாம வேற யார் கிட்ட இப்படி பேச தீப்ஸ்?” என்றவன் அவள் கையை விலக்கி “சரி நான் பேசல.. அப்ப நீ பேசு!” என்று சட்டமாக கையைக் கட்டிக் கொண்டு இருக்கையில் பின்னால் சாய்ந்தவன் அரைவட்டமாக அந்த இருக்கையில் ஆடியப்படி அவளை தான் தீர்க்கமாக பார்த்தான்.

 

“எனது நான் பேசவா?” என்று அதிர்ந்தவள் இடவலமாக தலையாட்டி “நீ இன்னைக்கு சரியில்ல ரொம்ப டர்ட்டி பையனா போயிட்ட டா” என்றாள்.

 

“எனது நான் டர்ட்டி பையனா? ஹே பேப்ஸ்.. நான் டர்ட்டி பையன் இல்ல.. உண்மையிலேயே ரொம்ப நாட்டி பையன் தெரியுமா?” என்றான் அவளை பார்த்து கண் சிமிட்டி..

 

“எது நீ நாட்டியா?” என்று அதிர்ந்து விழித்தவளை அருகே இழுத்து அவள் காதில் “எனக்கு ஒரு விஷயம் சொல்லு… உனக்கு நாட்டி பிடிக்குமா? இல்ல டர்ட்டி பிடிக்குமா?” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டான். அந்த குரலிலும் அவன் கேட்ட விதமே அத்தனை கல்மிஷமாக இருக்க அதனை கண்டு கொண்ட தாராவோ யாருக்கும் தெரியாமல் ஒற்றை கண்ணடித்து இரண்டுமே என்றாள். அவனுக்கு குறையாத குறும்போடு!

 

“அடிப்பாவி?” என்றான் ஆதித்.

 

“நாங்க வேணா போயிட்டு லஞ்ச் ப்ரேத் முடிச்சுட்டு வரட்டுமா?” என்று இவர்கள் இருவரையும் பார்த்து லீனா கேட்டாள்.

 

“எதுக்கு அவ்வளவு சீக்கிரமாக?? நாம் நாளைக்கு வருவோம்!” என்று வின்ஸ்டன் சொல்ல அதற்கு ரோஸியும் தலையாட்டி ஆமோதித்தாள்.

 

“ஹே.. ஹே.. என்ன ஒரேடியா எல்லாரும் ஓட்டுறீங்க? இவ என் லவ்வராச்சே உடம்பு சரி இல்லைன்னு சொல்ற இல்லன்னா கொஞ்சம் பேசி டைவர்ட் பண்ணினேன். அது பொறுக்காதே உங்களுக்கு எல்லாம்!” என்று சிரித்தபடி அவர்கள் அனைவரையும் மீண்டும் வேலைக்குள் இழுத்து வந்தான் ஆதித் நிகேதன்.

 

‘நிக் அட்வர்டைஸ்மெண்ட்’ என்ற நிறுவனத்தை சிங்கப்பூரில் தொடங்கி நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறான் ஆதித் நிகேதன்.

 

ஆதித் நிகேதன்… முப்பத்தி இரண்டு ரெண்டு வயது இளைஞன் இதுவரை எந்த கமிட்டிக்கும் காதலுக்கும் கட்டுப்படாமல் கழண்டு கொண்டு இருந்தவனை கண்களாலேயே கட்டி இழுத்து இருந்தாள் காரிகை… தீபத்தாரா!

 

இவ்வளவு நாட்களாக கமிட் ஆகாமல் இருந்தான் என்றால்… காதல் தோல்வியா என்று கேட்டால்? ஆம்! தோல்விதான் காதல் தோல்வி தான்!

 

அந்த காதல் என்பதன் விளக்கம் தான் இங்கே வேறுபடுகிறது. ஒரு பெண் மீது கொண்ட அன்பு மட்டுமே காதலாக நம் நாட்டில் பார்க்கப்படுகிறது. ஆனால் தாய் தந்தையர் நண்பர்கள் நாம் வளர்க்கும் பிராணி என்று அனைத்து மீதும் காட்டும் அன்புமே காதல்தான் என்கிறது வெளிநாடு!

 

அப்படி யார் மீது காதல் கொண்டிருந்தான் என்று கேட்டால்… அவன் கனவின் மீது! அவன் துறையின் மீது! 

 

ஆதி சேனலின் சேர்மன் ஆதித் நிகேதன்!! தமிழ்நாட்டில் ஆதி குரூப்ஸை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அத்துணை பாரம்பரியமிக்கது!! பணத்தில் மட்டுமல்ல அதிகாரத்திலும் கோலோச்சும் குடும்பம். வாரிசு வாரிசாக அரசியலிலும் தொழிலிலும் கலந்திருக்கும் குடும்பம். ஆதித்தின் தந்தை அருணாச்சலம் எம்பி.. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்களுடைய தொகுதியில் இவர் மட்டுமே வாகை சூடுவார். பல ஆண்டு காலமாக பெரும் வாக்கு வத்தியாசத்தில் வெற்றி பெற்று வருபவர்.

 

ஆதித்துக்கு பெரிதாக அரசியலில் நாட்டம் இல்லாததால் அவன் தொழிலை கையெடுக்க.. அவனது சித்தப்பா மகன் பெரியப்பாவுக்கு வாரிசாக அரசியலில் குதித்துள்ளான். அதில் கடந்த சில ஆண்டுகளாக ஊடகத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தான் இவன் என்றால் மிகையாகாது. அருந்த பழசான நாடகங்களை மட்டுமே போட்டு வந்த சேனல்களுக்கு மத்தியில் இவன் ஐந்தாறு சேனல்களுடன் இளமை ததும்ப இறங்க.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல சேட்டிலைட் உலகத்தையே இவன் கட்டி ஆண்டு கொண்டிருந்தான். 

 

இப்படிப்பட்டவனுக்கு பெரும் சவாலாக வந்து இறங்கினான் விநாயக்.. விநாயக் ரணசிங்க!! 

 

தமிழ்நாட்டில் விவிஆர் சேனல் மெல்ல மெல்ல தலை எடுக்க டிஆர்பி ரேட்டிங்கில் எப்பொழுதும் முதலிடத்தை தக்க வைத்திருந்த ஆதி சேனல் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. புதுசுதானே என்று மெத்தனமாக இருந்த காரணத்தினால் இப்பொழுது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டதிலிருந்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான் ஆதித்.

 

மன உளைச்சலில் தப்பான முடிவுகளை எடுக்க ஆரம்பித்து விட்டான் ஆதித்! அங்கே தான் அவனின் சறுக்கல் ஆரம்பமானது.

 

விநாயக்கை கட்டம் கட்டுவதாக எண்ணிக்கொண்டு இவன் செய்த செயலை, கண்டுபிடித்து வேற ஒரு அரசியல்வாதியிடம் விநாயக் இவனை மாட்டி விட.. அதாவது இவன் சேனலை மாட்டிவிட… மொத்தமாக மூடு விழா போடும் நிலைமைக்கு வந்து விட்டது ஆதி சேனல்.

 

அப்போது தந்தை அருணாச்சலம் “ஒன்று அரசியலுக்கு வா அல்லது வேறு தொழிலில் கையில் எடு” என்றார். இரண்டுமே இவனுக்கு பிடித்தம் இல்லாமல் ஆஸ்திரேலியா வந்து செட்டில் ஆகிவிட்டான்.

 

இவன் நினைத்திருந்தால் மற்றொரு சேனல் ஆரம்பித்து இருக்கலாம்.‌ அவன் அப்பாவின் பணமும் அதிகாரமும் அவனுக்கு கை கொடுத்திருக்கும். ஆனால் அவன் உள்ளே இருந்த அந்த மனசாட்சி, குற்ற உணர்வை தூண்ட, மீண்டும் சேனல் தொடங்கும் எண்ணத்தை கைவிட்டவன், கையோடு தனது ஜாகையை ஆஸ்திரேலியாவுக்கு‌ மாற்றிக் கொண்டான்.

 

ஆனால் மீடியாவை கற்றவனுக்கு அதை விட்டு வெளியே வர மனம் இல்லாமல் இந்த ‘நிக் அட்வர்டைஸ்மென்ட்’ கம்பெனியை நடத்திக் கொண்டிருக்கிறான்.

 

இதில் இடையில் பூத்த அவனது காதல்.. இப்போது கல்யாணம் முடித்து மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது. இவர்கள் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட விபரம் இன்னும் யாருக்கும் தெரியாது. அதாவது தாரா என்னும் யாருக்கும் அறிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருப்பதால் இவனும் அடக்கி வாசிக்கிறான்.

 

காலையிலிருந்து தலை சுத்தல் வாந்தி என்று கூறிக் கொண்டிருந்த தாராவை பார்த்து தான் இவ்வளவு பேச்சுக்கள் ஆதித். அதுவும் அவனது ஆபீசிலேயே… இவர்கள் காதலர்கள் லிவ் இன்னில் இருக்கிறார்கள் என்று மட்டும்தான் அங்கு உள்ளவர்களுக்கு தெரியும்.

 

அதனால் தான் இந்த கேலி எல்லாம்!

அது என்னமோ வீட்டுக்கு சொல்லாமல் மற்றவர்களிடம் நடந்த திருமணத்தை பகிர்ந்து கொள்ள தாராவுக்கு விருப்பமில்லை.

 

அருணாச்சலம் கடந்த சில ஆண்டுகளாக இவனை அழைத்து திருமணத்தை பற்றி பேச இவன் மறுக்க என்று மனிதர் சோர்ந்து விட்டார். ‘எப்படியோ போய் தொலை!’ என்று தண்ணீர் தெளித்து விட்டார். அதனால் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் கூட.. அவன் பக்கத்தில் இருந்து எதிர்ப்பு வரப்போவதில்லை.

 

ஆனால்… எதிர்ப்பு வேறு இடத்தில் இருந்து வந்தது.

 

தீபத்தாராவின் தந்தை அவளை தீபாவளிக்கு இந்த வருடம் கண்டிப்பாக வருமாறு அழைப்பு இல்லையில்லை கட்டளை விடுத்தார்.

 

விடுமுறையில் வரும் பெண்ணுக்கு தன் தங்கை மகன் வெற்றிவேலுடன் திருமண நிச்சயம் நடத்த முடிவு செய்திருக்க..

 

இங்கே மகளோ.. கைனக்காலஜிஸ்டிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி காத்துக் கொண்டிருந்தாள், அருகில் ஆதித் நிகேதன்!

 

“தீப்ஸ்.. எனக்கு பொண்ணு தான் வேணும். இந்த முறை மிஸ் பண்ணினாலும் நெக்ஸ்ட் டைம் மிஸ் பண்ணாம இருக்க

என்ன பண்ணனும்னு அந்த டாக்டர் கிட்ட‌ தெளிவா கேட்டுடு.. ஓகே பேபி?” 

என்று தொணதொணத்துக் கொண்டு!

 

தொடரும்…

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “தீப சுடரொளியே கண்ணம்மா.. 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top