ATM Tamil Romantic Novels

1 அசுரன்

1 அழகியும் அசுரனும்..
 
எதுக்கு அந்த விளம்பரம் பார்க்கணும்? பார்த்ததும் கடக்காது.. அறிவா யோசிக்கிறோம் என்று முட்டாள் தனமா  ஏன் போன் பண்ணோம்? என்றானது மது @ மதுபாலாவுக்கு.. மானக்கேடு.. மாச சம்பளம் பெரிய அமவுண்ட் சொல்லி.. இது எல்லாமும் செய்யணும் கூப்பிடும் பொழுதெல்லாம்.. என்று பூடகமாய் எதிர் குரல் சொல்ல.. பேயடிச்சது போல ஆனாள் மது..
 
இப்படியெல்லாம் அழைப்பதுக்கா  விளம்பரம்??!! அருவெறுப்பு வந்தது..
 
இவள் பேசாதிருக்க.. போட்டோ அனுப்ப வேண்டும் முதலாளிக்கு பிடிச்சா மட்டுமே வேலையும் கிடைக்கும்.. இஷ்டமிருந்தா அனுப்புங்க.. அதுவும் உடனடியா.. நிறயப்பேர் போட்டோ அனுப்புறாங்க வைக்கப்பட்டது..
 
இதுக்கும் வரிசையா? மலைத்தாள் மது..
 
இவளுக்கு பசி அதிகம்  வாழ்ந்த குடும்பம் அவர்களின் ஒரே நிழல் வீடு மட்டுமே.. அம்மா ஆபிசுக்கு சென்று சம்பாதித்து வருவது  வயிறை பசியில்லாது வாழ உதவினாலும்  வீட்டின் தவணை பேங்க் லோன் கட்ட முடில .. வாடகை எடுத்து போகும் அளவு அடிப்படை இல்ல.. வாழ முடியாத விளிம்பில் இவர்கள் வாழ்வு.. எல்லாம் ஒருவருடத்துள் நடந்த மாற்றங்கள்.. இவளும் கல்லூரி படிப்பை நிறுத்தியாயிற்று.. தம்பி முகில் மட்டும் பள்ளிக்கு போகிறான்..நோயால் படுக்கையாய் இருக்கும்  அப்பாவை பார்க்க .. பால் வெள்ளையில் மினுங்கும் தன் மது பெண்ணை ஒளித்து வைத்தார் அவளின் அப்பாவி தாய்.. அவர்கள் வறுமையை ஏற்றுக்கொள்ள பழக.. செல்லமாய் வளர்ந்த மதுவால் எடுக்க முடில.
 
ஊக்கமாய் இவளுக்கு பழைய செல்வ செழிப்பை குடும்பத்தில் கொண்டு வர பேராசை.. வானவில்லை வளைத்தே ஆகணும் சிறு குருவியின் பெரிய எண்ணங்கள்.. இருக்கும் தடைகள் பெருசா தெரில.. மீள மட்டுமே வழித்தேடுச்சு..
 
அக்கம் பக்கத்து வீடுகளுக்கு வீட்டு ஆணுக்கு உடம்பு சரியில்ல அதனால் சிரமம் என்று மேலோட்டமாக தெரியுமே தவிர.. முழுசும் தெரில.. ஆர்வமுமில்ல.. ஒருவேளை வீடு கையை விட்டு போனாலும் அதையும் நியூஸ் யா எடுத்துட்டு போய்யிருவாங்க.. 
 
இன்டர்நெட் உலகம் ஜாப் தேடல் பயம் தர… பேப்பரில் அதிக சேலரி தேடும்பொழுது தங்கி வேலை பார்க்கணும் அதிக சம்பளம் என்று இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றின் பேனர் தாங்கி வந்தது..
 
அவன் கோடிகளில் புரள்பவன் தினமும் மீடியாகளால் பேசப்படுபவன்
மான்ஸ்டர் என்று புனைபேரில் அழைக்கப்படுபவன்.. வசந்த காலத்தில்  இவளின் அப்பாவே அவனின் ஒவ்வொரு மூவ் பற்றி சிலாகிப்பார்.. அதனாலேயே ரொம்ப யோசிச்சு போன் செய்தாள்..  இப்படி பதில் வர.. அப்செட்.. எப்பவும் உள்ளம் முதலில் கொடுக்கும் அறிவுரை தான் சரியானது..
 
சில பல காம்பரமைஸ்க்கு பிறகு நாமா ஏதோ ஒரு ஆசையில் மாற்றினால் பின்னர் நிகழும் போராட்டங்களுக்கு இப்போதுள்ள ஸிரோ நிலையே நன்றாக இருந்திருக்கும் எண்ண வைத்துவிடும் வாழ்க்கை..
 
மதுவுக்கும் அதே நிலை வர்ப்போவதை அனுபவமில்லா இளம்கன்று முயற்சித்தது..
 
முதலில் ச்சீ போ என்றவள்.. ஒருவர் அழிந்தால் ஒருகுடும்பம் உயிர்க்கும் என்றால் தன்னை தியாகம் செய்ய துணிந்தாள்.. இளைஞன் தானே.. வம்சி கிருஷ்ணா ஒன்றும் கிழவன் இல்லையே.. போய்ட்டு போவுது.. எரியும் கொல்லியில் எது நல்லது தேர்ந்தெடுக்கும் நிலையில் மது… கல்யாணம் ஆனவனோ? டவுட் வேற வந்து தொலைக்க.. முழுக்க நனைய முடிவெடுத்தாச்சு.. இனி வயசுக்கு வந்தா என்ன?  இல்லன்னா என்ன? போடி அவள் மனசாட்சி கைவிட்டது..
 
சாயங்காலம் வரை இருமனதாய் பல யோசனைகள் செய்தவள் 
 இதாவது கிடைக்குதா பார்ப்போமே? முடிவு பண்ணி தன்னை சீர் பண்ணி லேசாய் மேக்கப் செய்து.. அவர்கள் சொன்னது போல செல்பி ஒன்று எடுத்து போட.. ரெண்டு நாள் பார்க்கவேயில்ல.. முதலில் ஆர்வமாய் பதிலுக்கு எதிர்பார்த்த மது பின் தங்கள் தரித்திரம் இப்படி என்று விரக்தியா சிரித்து திரும்ப தேடலுக்கு போய்ட்டா.
 
ஒருசமயம் ப்ளூ டிக் விழுந்தாலும் ஒரு மாதம் வரை பதிலில்லை..  ரிஜெக்டட் போல.. “அவுசாரியா போனாலும் அதிர்ஷ்டம் வேணுமாம்” மனதை தேற்றிக்கொண்டுவிட்டாள்.. உலக அனுபமில்லா மதுவுகோ குடும்ப வளமைக்கான சாலை கண்ணுகெட்டிய தூரம் வரை தெரில தேடி தேடி தொலைந்தவளின் ஒரு நாளில் யூ ஆர் செலக்டட் ப்ளீஸ் கம் திஸ் அட்ரஸ் .. என்று அதுவும் நறுக்கு தெரித்தாற்போல வர..
 
கிடைக்காத பொழுது ஏக்கத்தில் சுற்றிய மனசு.. வா என்றதும் மருண்டது.. இது நல்லதுக்கா? கெட்டதுக்கா? குடும்பத்துக்கு போய் இப்போதைக்கு ஏழை என்ற பேர் மாறி வேறு அவப்பேர் வருமோ? ரகசியமாயிருந்தாலும் கூட அசிங்கத்தை பொறுக்கலாம்.. வெளிப்பட்டுட்டா?. திரும்ப வரமுடியா ஒரு வழி பாதையா இருந்தால்? சாவது மட்டுமே ஒரே வழி.. இவளின் போக்கை கண்டித்த மனசாட்சி தீர்ப்பு சொல்ல.. எஸ்.. இவளும் ஒத்துகிட்டா.. என் சம்பலில் குடும்பம் வசதியா இருக்கும் என்றால் நான் தயார்.. உறுதி எடுத்துட்டு..
 
அங்கு போகும் நாள் அவங்க தரும் விதிகளில் விக்கனம் இருந்தால் முடியாது சொல்லிட்டு வந்துருவோம்.. தெளிவா யோசிச்சு நிதானமானாள் ஆபத்து தெரியாமல் மாட்டும் பொழுது தான் சேதாரம் அதிகம்… கண்டு கொண்டால் ஜாக்கிரதை உணர்வில் விழிப்பாய் இருப்போம்  விதிப்படி மது..
 
பெற்றோரிடம் நிறுவனம் பேர் சொல்லி இன்டெர்வியூ என்று மட்டும் அளவாய் சொல்லி தனியா போக ஈரக்குலை நடுங்க.. டூ வீலர் வைத்திருக்கும் தன் இம்சை டம்மி தோழியை  தேர்ந்தெடுத்து துணைக்கு கூப்பிட்டு போய்ட்டா.. அவள் கேள்வி கேட்டுட்டே வர.. இவளுக்கோ, அந் நிறுவனந்தலைவருக்கு”எல்லாமும் செய்யனும்” வார்த்தையே கருத்தில் சொருகி நின்றது..
 
ப்ராப்பரா ஏதாச்சும் பேசுவார்கள் பார்த்தால் இங்கு சைன் போடுங்கோ .. ஒருமாசம் தயாரித்தல் இருக்கும்.. பின்னரே வேலை சொல்ல… ஷரத்தை பார்த்தவளுக்கு ஒவ்வாமை வர.. நேரடியா வேலை தரவர் கிட்ட பேசணும் அப்புறம் தான் கையெழுத்து.. என்றதும் சிறிது அமைதி அங்கு..
 
வாய்ப்பில்லை என்று சொல்லப்பட.. அப்போ சாரி.. நன்றி என்று இவள் எந்திரித்து… வாசல் நோக்கி நடக்க.. பின்னோடு ஒருவர் வந்து.. ஷார்ப் 8pm  பேசுவாராம்..
 
தசலையசைத்து வீட்டுக்கு வந்துட்டா.. என்னன்னு கேட்டவங்களுக்கு காலிங் லெட்டர் அனுப்புவாங்களாம் .. சாக்கு தானா வந்தது..
 
8 மணிக்கு அப்பக்க அலோ என்ற ஆளுமை குரலுக்கே இவளுக்கு பேச வரல.. 
 
ப்ச்ச் ச்ச் ச்சு.. பல்லி சத்தம் போட்டு சிரிச்சது இவளுடைய தகிரிய லெவெல் கண்டு.. இதில் இந்தம்மா கண்டிஷன் வேற போடப்போரங்களாமாம்.. விதியும் ஹை பை பல்லியோடு கொடுத்துக்கொண்டது.. 
 
 
 
 
 
 
 

4 thoughts on “1 அசுரன்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top