ATM Tamil Romantic Novels

1. இரண்டாம் கணவன்

1. இரண்டாம் கணவன்

“சொல்லுங்கப்பா..” தன் அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்த மகிழ் .. அவ்ளோ அரிபரியிலும் நேரம் ஒதுக்கி பவ்யமாய் தந்தை இராமமூர்த்தியின் முன் நிற்க..

“இன்னைக்கு அர்ஜுன் வீட்டிலிருந்து வராங்க… சாயங்காலம் பெர்மிஷன் போட்டுட்டு வா”

மகிழ் அமைதியா நிற்க.. காதை செய்கை காட்டி கருவியை போட்டுருக்கியா? என்பது போல கேட்க.. “ஆமாம்” என்பதாய் தலையசைத்தாள் மகள்.. மரத்து போன உணர்வுகளுக்கு எதுக்கு புது ஊட்டம்?!!

இப்படியே வசதியா பாதுகாப்பாக இருந்துட்டு போறேனே?!.. நானும் என் பொண்ணும் உங்களுக்கு பாரம் கூட கிடையாதேப்பா.. என் பிள்ளைக்காய் ஓடாய் தேய சித்தமாயிருக்கிறேனே!!.. எதுக்கு திரும்பவும் சூடு.. தாங்குவேனா? மிரண்டாள் மகிழா

இதெல்லாம் வாய் விட்டு சொல்ல ஆசைதான்.. புகுந்த இடத்தில் வஞ்சிக்கபட்டு அங்கு வாழ முடியாது தோற்று பெற்றோரை அண்டி ஆறுவருசம் இருந்தாச்சு.. இவர்கள் ராணுவ கட்டுப்பாட்டில் ஆகச்சிறந்த அடிமை நிலைதான்.. எதிலும் வாய் திறக்க முடியாது.. கருத்து சொன்னால் உனக்கு என்ன தெரியும்? விவரம் இருந்தால் தான் வாழ்ந்திருப்பியே?? ஏளனம்! கேலி பார்வை.. அம்மம்மா!! என்ன ஒரு விஷ உலகம்!!!

கணவனோடு குடித்தனம் பண்ணுபவர்கள் எல்லாம் அறிவாளிகளா? தெரில.. சூடு பட்ட பூனையாய் என் பார்வை.. அந்த இருப்பில் ஏதோ ஒரு காம்பரமைஸ் உள்ளது அல்லது அப்பாவித்தனம் இது ரெண்டும் இல்லாது உள்ளது என்று மாயமாய் .. வெளியில் சொல்லப்படும் அன் கண்டிஷனல் லவ் இல்ல..

கணவனுக்கு மனைவியின் அடிமைத்தனம் வேணும்.! முட்டாளாகவே அவ இருக்கணும்.. லா பேசக்கூடாது.. என்ன செய்தாலும் கேள்வியே கேட்கக்கூடாது.. நீ நல்லவன், வல்லவன், தூயவன், ராஜாதிராஜன் பள்ளு பாடணும்… இன்னும் பிறவும் சேரலாம்

மனைவிக்கோ கணவன் முழு சம்பளம் கையில் தரணும் தன் வீட்டு சொந்தங்களை தெய்வமா மதிக்கணும்.. நில்! நட! பேசு! எனும் கட்டளைகளை திறம்பட கணவன் செய்யணும்.. இன்னும் பல..

இல்லற அன்பென்றால் என்ன? யாராவது அனுபவித்து இருந்தால் தயவுசெய்து சொல்லவும்.. நான் கண்டது அனைத்தும் வெறுப்பின் சாயல்கள் மட்டுமே..!!! சுரண்டல்களின் தேசம், பேராசைகளின் கேந்திரமே இல்லறம்..!!

இடது காது பாதி கேட்பு திறன் மட்டுமே உண்டு.. வலது நலம்.. அதனால் மாற்றுத்திறனாளிகள் கோட்டாவில் மின்துறையில் மகிழவல்லிக்கு அலுவலகப்பணி..

எந்த கட்சி செய்திகளிலும் அரசியல் கூட்டங்களிலும் ஊழல் லஞ்சம் சர்வதிகாரம் என்று தீயது ஆயிரம் அரசு எந்திரத்தை கூறினாலும் என் முதல் கடவுள் அரசே.. இந்த பணி மட்டும் இல்லன்னா??!! என்னை பூமியில் புதைத்து அங்கு புல்லும் வளர்ந்திருக்கணும்.. வாழ்க்கையின் ஒரு திருப்பத்தில் கணவனா? வேலையா? வாய்ப்பு வந்ததும் “வேலை” முடிவெடுத்தது சரியா? தவறா? இன்னும் தெரில..

திருமணத்தோல்வி, டைவர்ஸ், கோர்ட் கேஸ் அலைச்சல்களால், வெறுமைகள் கொண்டு வாழ்க்கை கோப்பை நிரம்பி வழிவது மகிழாவுக்கே நன்றாக தெரிந்தது.. ரெண்டு காதும் முழுசா கேட்காதிருந்தால் பேசவும் தேவையிருக்காது.. வரமாய் கூட இருந்திருக்கும்.. இல்லையே!! கேட்பதை கேட்டும் பேச முடியா நிலை கொடுமை அல்லவா?

கதைகள் சொல்லும் சின்ட்ரெல்லா பெண்ணின் காதல் இளவரசன் போன்று யாராவது வருவார்களா? நீயே சதம் அன்பு செலுத்துவார்களா? கன்னிப்பெண்களுக்கே அத்தகைய வரன்கள் தகையாத பொழுது ஒரு பெண் குழந்தையோடு தன்னை யார் ஏற்பார்கள்? தாங்குவார்கள்?

அர்ஜுன் என்ன கடவுளோ?!! அவனை நன்றாகவே தெரியும் இதே தெருவாசிதானே.. எல்லாம் இங்கே பிறந்தோம் வளர்ந்தோம்.. ஒரே மணவாடு என்பதால் கொஞ்சம் ஈடுபாடு கவனிப்பு அதிகம்.. இவங்க வீட்டில் அது நடந்தது இது நடந்தது என அறிதல் உண்டு.

வெளியூரில் வேலை பார்த்தான் என்றார்கள் கல்யாணம் என்றார்கள்.. மருமகள் சரியில்ல என்றார்கள்.. அப்புறம் ஒரு குட்டி பையனோடு இங்கேயே வந்துவிட்டான் .. ஆன்லைன் பிசினஸ் வீட்டிலேயே பார்க்கிறான் என்றார்கள்.. எல்லாமே அப்பப்ப பிட் நோட்டீஸ் போல தன் தாய் சொல்லி கேட்டவை..

அம்மாக்கு வீட்டை விட ஊர் கவனம் அதிகம்.. இங்கு உடல் தான் வீட்டில் இருக்கும் கண்ணு பூரா தெருவில்.. கழுகாய் போவோர் வருவோரை கண்டு .. வீட்டு வேலைக்கு வரும் லச்சுவிடம் கேள்வியா கேட்டு பதில்கள் வாங்கிக்கொள்வார்.. நேற்றைய டேட்டாவோடு இன்றையதை ஆட் பண்ணி மெமரியில் வைத்துக்கொள்வார்.. அபார விசயஞானம் பட் எதுக்கும் உதவாது.. அதற்கு நேர் மாறாக அக்கம் பக்கம் செய்திகளில் மகிழாவிற்கு ஆர்வம் கிடையாது.. தான் உண்டு தன் அலுவலகம் வீடு அவ்ளோதான உலகம்

டியோவில் வேலைக்கு கிளம்பி போகும் போதும் வாசலிலேயே அம்மாவும் ஒருமுறை தன் பங்குக்கு “சாயங்காலம் சீக்கிரம் வா” என்க.. சரி என்பதாய் தலையாட்டி விடைபெற்றாள் மகி..

ஏதோ பெரியவர்களுக்கு பொழுது போகல தன்னை வச்சி விளையாடப்போகிறார்கள் மட்டும் தெரிஞ்சி போச்சு.. பூமனங்களை தீ வச்சு சுடுவது வாழ்க்கையின் விளையாட்டு என்றால் சுடட்டும்.. சாவடிக்கட்டும் விரக்தியில் மகி..

மேம் யாரோ உங்களை பார்க்க வந்திருக்காங்க..

ஆபிஸிலா? அதிசயம் தான்..

யார்? பதட்டத்தோடு கேட்க..

உங்களுக்கு தெரிஞ்சவராம்.. அட்டென்டர் போய்ட்டான்.. அவன் இவளோ பதில் சொன்னதே பெருசு.. மதிக்கமாட்டான்.

நேர்த்தியான சேலை கட்டு பவுடர் கலையா முகம் துலக்கி வைத்த குத்துவிளக்காய் ஒளிரும் மகிழா யோசித்தபடியே முகப்புக்குக்கு போக அர்ஜுன் அவன் மகனோடு நின்றுகொண்டிருந்தான். மகியை கண்டதும் ஹை என்றான்
பதிலுக்கு இவளும் முகமனாய் புன்னகைத்து

“வாங்க அர்ஜுன்.. ஹாய் குட்டி கண்ணா.. என்ன இவ்ளோ தூரம்? “அவன் முகம் பார்க்க..

“சும்மாதான் ஸ்ரீ உன்னை பார்க்கணும் சொன்னான் மகி அதான் கூட்டிட்டு வந்தேன்..”

“ஓ.. வாங்களேன் இங்கு கேன்டீன் டீ நல்லாருக்கும் சாப்பிடலாம்..”

“நோ நோ மகி! நாங்க வர்ரப்ப சாப்பிடுட்டு தான் வந்தோம்.. அப்புறம் ஈவ்னிங் நான் உங்க வீட்டுக்கு வரது தெரியுமா? ஆமாம் தலையாட்டினாள்.”

“உனக்கு ஒரே ஆப்ஷன் தான்.. அர்ஜுனை கட்டிக்கிறேன் சொல்லிடு ஓகே.. அத சொல்லத்தான் வந்தேன்..”

“ஏன் அப்படி சொல்லணும்?”

பர்ஸ்ட் நைட்ல சொல்றேன் பை..

டேய் மகிய உனக்கு பிடிச்சிருக்காடா பெரிய மங்கி கேட்க…அது பெற்ற குட்டியும்

யெஸ் டேடி! சொன்னது வரை இவளுக்கு கேட்டது..

மூணு வயசிருக்குமா? அந்த வாண்டுக்கு வாயப்பாரு! இவளுக்கு முத தோணியது அதான்..

வந்தான் அவனே பேசினான். ரெண்டாங்கல்யாணம் என்பதால் அவ்ளோ ஒன்னும் ஆர்வமில்லை ரெண்டு குடும்பத்துக்கும் ஒரு நல்ல நாள் பார்த்து அருகிருந்த முருகன் கோவிலில் சிம்பிளா திருமணம்..பலியாடா மகள் அட்சயாவோடு நான் ஸ்ரீயோடு அர்ஜுன்.. யாரும் யாரோடும் பேசல

அர்ஜுன் காரணம் சொல்வான் என்று நேர்மையான எதிர்பார்ப்போடு முதலிரவில் காத்திருக்க.. லைட் அணைச்சுரலாம் ஸ்ரீ எந்திருச்சிப்பான்..

எப்போ பேசுவது? மகிழ் திகைத்திருக்கும் போதே.. கட்டியணைக்கப்பட்டாள். சேலை உருவப்பட்டு ஆறுவருசம் பெறாத சுகம் எனப்படுவது கொடுக்கப்பட்டது. பெண்களை அசால்ட்டாக கையாளுபவன் என்பதை கண்டுகொண்டாள் மகி.. எப்படி இப்படி பழகாமல் செய்ய முடியும்? அஜுக்கு கீழே கிடக்கும் போதே நினைப்பு..

 

 

 

 

 

 

10 thoughts on “1. இரண்டாம் கணவன்”

  1. Nice start..new story..iva ipdi avan apdi nu yosichuttu irkumbodhe kalyanam mudinjudhu ..indha arjun yaarda ne ..super start aadhi ji..

  2. Ivan ithuku thaan kalyanam panninanga pola.rathiri aama ella annum onnu pola than.purithalavathavathu mannankartiyavathu. pondatiyoda manasu eppadi irunthalum avanuku avan joli mudiyala avvalavu than

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top