ATM Tamil Romantic Novels

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 15

இஷ்டம் -15

 

 

பசுபதி வரும்பொழுது இருவருக்கும் புது உடைகள் எடுத்து வந்திருந்தவர் இருவரிடமும் கொடுத்தார் பூ பழங்களோடு!!

 

தந்தையின் காலில் விழுந்து வணங்கியவள் கணவனையும் ஆன் த வேயில் பிடித்து இழுத்து பசுபதியின் காலை தொட்டு எழுந்தாள். இதெல்லாம் பழக்கம் இல்லாத கார்த்திக்கு ‘சொன்னால் செய்ய மாட்டேனா?’ என்று முணுமுணுத்துக் கொண்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்.

 

இன்று கம்பெனிக்கு செல்லவே அவனுக்கு பிடிக்கவில்லை. காலையில் எஃப்எம்க்கு மட்டும் சென்று விட்டு வந்து விட்டான்.

 

நேத்ரா தான் அவனை கிண்டல் பார்வை பார்த்தாள். சூ சூ என்று விரட்டி விட்டு கெத்தாகவே தனது காலை ஒளிபரப்பை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

 

கண்ணனுக்கு ஒரு முறை ஃபோன் செய்ய.. அவனோ எடுக்கவே இல்லை!

 

“பயபுள்ள செம கோவத்துல இருக்கான் போலையே.. பொண்டாட்டிய கூட சமாதானப்படுத்தலாம் போல இந்த தடிமாட்ட சமாதானப்படுத்துறது ரொம்ப கஷ்டமா இருக்கு! வழக்கம் போல ஒரு பாட்டில் சரக்கு எடுத்து நீட்டினா.. கோபம் அமுங்கிடும் நைட் ட்ரை பண்ணுவோம்!” என்று யோசித்துக் கொண்டே ஹாலில் அமர்ந்திருந்தான் கார்த்திக்.

 

மேகலைக்கு எதோ மனதிற்குள் பட்டம் பூச்சி பறப்பது போல் ஒரு உணர்வு!! அவளுக்கு அந்த சந்தோசத்தை எப்படி வெளிபடுத்துவது என்று தெரியாமல் தவியாய் தவிக்க.. இருவருக்கும் இடையே இருந்தே நிசப்தத்தை அவளே உடைத்தாள்.

 

“ஏனுங்க.. மாமா இன்னைக்கு ஆபீஸ் போலீங்களா?”

 

“……”

 

“என்னாச்சுங்…??” என்று மெல்ல சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள். அவள் தவிப்போடு அவனைப் பார்த்தாள். நேற்று வந்தவுடன் பேசியது, பசுபதி வந்தது முதல் இதுவரையும் பேச விட்டு அவன் பார்வையாளராக இருக்க… அப்போது தெரியாது கணவனின் அமைதி இப்போது வருத்தியது!!

அவள் எட்டிப் பார்த்ததை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்கும் ஆனால் கவனிக்காதது போலவே இருந்தான்.

 

“என் மேல கோபமுங்களா??” பாதியில் வார்த்தைக்கு மேல் தொண்டையைத் தாண்டி வரவில்லை நேற்று அவள் செய்ததும் அதீதம் என்று அவளுக்கும் புரிந்து இருந்தது.

 

அழுதுருவேன் என்ற அவளை அதற்கு மேலும் வாட்ட பிடிக்காமல் “ஒன்னும் இல்லை ஒரு லெமன் டீ போடு.” என்றான்.

 

அவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.. முகம் முழுதும் புன்னகையோடு அவனுக்கு டீ போட்டுக் கொண்டே தொடர்ந்தாள்.

 

“நீங்க ஒண்ணுமே சொல்லலிங்…”

 

அவள் புடவையை பற்றி தான் கேட்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. நேற்று பசுபதி எடுத்து வந்த புடவை தான் காலையில் கட்டி இருந்தாள் கணவனின் பாராட்டுக்காக. அவளின்பார்வைஅவ்வப்போது அவனை ஆராய்ந்த வண்ணமே இருந்தது.

 

“எனக்கு நல்லா இல்லையாங்க?” சற்று பொறுமை இழந்தவள் போல் வேக வேகமாக சமையல் செய்யும் பாத்திரங்கள் அங்கே உருண்டது. அவளுடைய பார்வை அவனை எரிப்பது போல் இருந்தது. 

கூடவே அன்று சொம்பு சொன்ன எங்க அக்கா ரொம்ப நல்லவங்க கோவம் மட்டும்தான் கொஞ்சம் ஜாஸ்தியா வரும் என்றது அனைத்தும் ஞாபகம் வர, பாத்திரம் உருண்ட சத்தத்தில் மெல்ல பயப்பந்து உருண்டது கார்த்திக்கு!!

 

அவனுக்கு டீ போட்டு வைத்தவள் மிக வேகமாக வாயில் கணவனை மென்று அரைத்தப்படியே காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள். டக் கென்று கத்தி அவள் கையில் கீறல் இட்டது.

 

“ஆஆ… அம்மா..” என்று அவள் கத்தியை போட்டு விட்டு கையை உதற, அவள் வலியில் துடிக்க கண்கள் நீர்க் குளமானது!!

 

அவனின் மனது என்ன நினைத்தது என்று தெரிய வில்லை. எழுந்து வந்தவன் அவள் கையைப் பிடித்து இழுத்து… அவள் விரலை தன் வாய்க்குள் நுழைத்தான்.

 

அவளிடம் இருந்து எந்த மறுப்போ? சத்தமோ? இல்லை. கண்களில் மட்டும் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. இரண்டு நிமிடங்கள் கடந்தோடியது.

வலி குறைய அவளின் விசும்பல் நின்றது.

 

“போதுமுங்க …”

 

அவன் உதட்டில் அழுத்திப் பிடித்திருந்த அவளின் விரலை மெதுவாக விடுவித்தான். இரத்தம் முற்றிலும் நின்று இருந்தது.

 

“மேகி…” குழைந்தது அவனது குரல்!! அவளின் உடலின் தீண்டலில், அவன் உடல் முழுதும் காம கிளர்ச்சியில் வெகுண்டெழுந்தது. அவள் முகமோ சிவந்து வலியுடன் கூடிய கோபத்துடன் காணப்பட்டது.

 

ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.

 

ஆறி இருந்த டீயை பார்த்து “சூடு பண்ணவா?” அவளுடைய வார்த்தைகள் தடுமாறியது. அவளுடைய கைகள் நடுங்கியது. கோபத்தில் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை!!

 

இருவருக்குள்ளும் நேற்றைய கோபத்தை வருத்தத்தை தாண்டி சமாதானத்துக்குள் நுழையதடுமாறுகிறோம் என்பது மட்டும் புரிந்தது. அவன் சூழ்நிலையை மாற்ற, டீவி ரிமோட்டை ஆன் செய்தான். டீயை எடுத்து சிப் செய்துக் கொண்டே..

 

“எப்படி இருக்குங்?” என்று கேட்டாள்.

அவள் முகத்தைப் பார்த்தவன். அவளின் கோபப் பார்வை அவனை அம்புகளாய் துளைத்தது. வேண்டுமென்றே அவளை சீண்டவென்று…

 

“ம்ம்.. நாட் பேட்!! சூடு ஜாஸ்தி..” என்றான் முயன்று மறைத்த புன்னகையோடு!!

 

“நான் டீயை கேட்டேனுங்க..” என்று

கொஞ்சம் சத்தமாக.. அழுத்தமாக.. வெகு திருத்தமாக அவள் கேட்க..

 

அவள் கேட்ட விதத்தில்… தன் நிலை மறந்து எங்கே சிரித்து விடுவோமா இல்லை அருகே சென்றால் இழுத்து அணைத்துக் கொள்வோமா.. என்று 

மீண்டும் சேரில் உட்கார்ந்தவன், பதில் சொல்லாமல் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவரது கண்களும் மௌன பாஷையில் பேசிக்கொண்டதே தவிர, தொண்டை இறுகி வார்த்தை வெளி வர வில்லை!!

 

“என்னாச்சுங்… புடிக்கலையா..?” என்றாள் குரல் விம்ம..

 

“உன்னை இப்பவே கடிச்சு ருசிக்கணும் போல இருக்குடி.. மேகி..” என்றான் அவன் மனதோடு! ஆனால் பார்வை மட்டும் அதே மாற்றம் இல்லாமல்…

 

அவள் விசுக்கென்று மூக்கு விடைத்து பெரு மூச்சு விட்டவள், புடவையின் பின்னைக் கழட்டிய படியே பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.

முகிழ்த்த புன்னகையை மீசைக்குள் மறைத்தப்படி எழுந்தவன் கண்களில் வெற்றி மின்னல்!!

 

எஸ்.. என்று வலது கையை மடக்கி கீழே வெற்றிக்குறி காட்டியப்படி குதித்தான் கார்த்திக்!!

 

ஜிவ்வென்ற உணர்வு உடல் முழுவதும் விரவி படர.. கைகள் அவளை அறிய துடித்துக் கொண்டிருக்க.. தன்னையும் அறியாமல் அவன் கால்கள் பெட்ரூமுக்குள் அடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டது.

 

அவன் வேகமாக பெட்ரூம் கதவில் கை வைக்க அது உள் வாங்கி சுவற்றில் மோதி அதிர்ந்து நின்றது. அங்கே இருந்த ட்ரெஸிங் டேபிள் கண்ணாடி முன் நின்றிருந்தாள் மேகலை. பாதி புடவை அவள் இடுப்பிலும் மீதி புடவை தரையிலுமாய் ரவிவர்மன் வரைந்த ஓவியமாய்!!

 

கார்த்திக்கை அங்கே எதிர் பாராமல் அதிர்ந்து விழி தாழ்த்தியவள் 

மாராப்பை எடுக்க.. அதுவோ அசைவேணா என்றிருக்க… அப்போது தான் கவனித்தாள் அது கார்த்திக்கின் காலுக்கு தஞ்சம் கொண்டதை!!

 

“ம்ஹூம்…” என்றவனின் குரல் மாறுபாட்டில் அவள் பின் கழுத்திலும் மெல்லிடையிலும் வியர்வை சுரந்து வழிந்து கொண்டிருந்தது.

 

அவள் திரும்பாமல் அவளுடைய பின் புறத்தை கணவனுக்கு விருந்தளிக்க.. மோகத்தில் சொக்கித் தவித்தவனுடைய கண்களின் வீச்சை கண்ணாடியில் பார்த்தவளுக்கு திக்கென்றது!!

 

அவன் அவளை நோக்கி ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்க.. அவனிடம் அருகாமை அவளை உண்ர்வு குவியலில் தள்ள.. அந்த கணத்தை.. அவ்வுணர்வை தாங்க இயலாதவள் கால்கள் நடுங்க.. சற்றே முன்னோக்கி நகர்ந்து கண்ணாடியில் மோதி நின்றாள் தன் பெண்மைகளை தன் கையால் எக்ஸ் குறியிட்டப்படி!!

 

வெட்கத்தில் சிவந்த மூக்கும்..

அலைபுறும் கண்களும்..

துடித்த இதழ்களும்..

கனிந்த கன்னங்களும்.. அவனை வேறொரு உலகத்துக்கு அழைக்க..

அவள் பின்னே போய் அவளைத் தொடும் தூரத்தில் நின்றான்.. ஆனால் தொடவில்லை!!

 

கை கண்ணாடி வளையல்கள் அவளின் இறுக்கத்தில் கண்ணாடியில் பட்டு நொறுங்கி கீழே விழுந்தது!! 

 

அவளுடைய நடுங்கும் உதடுகள் எதோ சொல்ல துடித்தது!!

 

வேணாம் என்றா? வேணும் என்றா??

 

ஹார்ட் பிட் லப் டப் லப் டப் என்று வேகம் எடுக்க, காற்று புக மட்டும் இடைவெளி விட்டு அவளை அவன் நெருங்க.. அவளின் புது மஞ்சள் தாலிக்கயிறு வியர்வை வாசத்துடன் கலந்து மணக்க.. மெல்ல குனிந்து அதன் வாசம் பிடித்தான் கார்த்திக்!!

 

அவன் இரு கைகளையும் அவள் இடை வழியே நுழைத்து கண்ணாடியில் பதித்து, தலை பின்னலில் இருந்த மல்லிகை பூவில் முகம் புதைக்க.. காமன் மீட்டாமலே மோகன ராகம் இசைத்தது பெண்ணவள் மேனி எங்கும்!!

 

அவள் கூந்தலில் அவன் மூக்கின் நுனி சீண்டலில் அவள் உடல் சிலிர்த்து சிணுங்கியது!! 

 

தன் மூக்கால் அவள் கூந்தலை விலகி அவள் பின் கழுத்துதில் அவன் வல்லிய உதட்டால் அழுத்தி முத்தமிட.. அவள் உடலில் கரெண்ட் பாய்வது போல் ஜெர்க் அடித்து கண்ணாடியில் இருந்த அவன் கையை அழுத்தி பிடித்தாள்.

 

அவளுடைய தலை ஒரு பக்கமாக திரும்ப, அவளுடைய இடது கன்னம் கண்ணாடியில் அழுத்த அவன் நாக்கின் நுனியால் அவளுடைய வலது காது மடலை வருட..

 

“ம்மம்… கார்த்திக் ” கணவனின் இன்ப சுகத்தில் உதிர்ந்த முதல் வார்த்தை!!

 

அதில் சொல்லவொண்ணா உணர்வு கொண்டவன், பச் என்று அவள் கன்னத்தை அவன் உதடுகளால் கவ்வினான். அவன் பல்லுக்குள் அவள் கன்னங்கள் கடி பட.. அவளின் கண்களில் வலியோடு கூடிய கண்ணீர் பெருகி அவனின் உதட்டை நனைத்தது!!

 

“ஹே.. என்ன டி அழுகிறியா? சாரி.. சாரி.. ரொம்ப ஃபோர்ஸா நடந்துகிட்டேனா? மேகி.. இங்க என்ன பாருடி!” என்று அவள் முகத்தை நிமிர்த்த அவன் படாதபாடுபட.. அவளோ முகத்தை அவன் நெஞ்சத்தில் இருந்து உயர்த்தினாள் இல்லை!!

 

“சும்மா உன்னை சீண்டி பார்த்தேன் மேகி.. பட் நேத்து உண்மையில் உன் மேல செம கோபம்.. டென்ஷன் தான்!!” என்றான் அவள் மூக்கை கடித்து..

 

மூக்கை தேய்த்துக் கொண்டே அவனை முறைத்தாள் பெண்.

 

“பின்ன எவ்ளோ இம்பார்ட்டண்டான மீட்டிங் அது!! காலைல குளிச்சிட்டு வந்த உன்னை பார்த்தா எங்க மீட்டிங் போகாம உன் கூட டீலிங் போட்டு விடுவேனோனு பயந்து நானே உன் முகத்தை பார்க்காமல் ஓடினா.. அங்க இருந்துட்டு ஃபோன் பண்ற.. என்னை போலீஸ்காரங்க புடிச்சு வச்சிருக்காங்கனு!! இதுல அவரு உங்க ஊர்காரர்னு பெருமை பீத்தல் வேற!! எப்படி இருக்கும் எனக்கு? நினைச்சு பார்த்தியா?” என்றான்.

 

“நீயா பிசினஸா என்று வந்ததும்..

மீட்டிங்காது டீலிங்காவதுனு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு பதறி அடிச்சிட்டு உன்னை தேடி ஓடி வந்தா.. நீ சாவகாசமா அவர் கூட உட்கார்ந்து உங்க ஊர் சாதிசனத்த பத்தி பேசுற? எப்படி இருக்கும் எனக்கு? யோசிச்சு பாரு!!” என்றதும் பக் என்று சிரித்து விட்டாள்மேகலை.

 

சிரித்த அவளது இதழ்களை பிடித்து இழுத்தவன் “சிரிக்கிறியா நீ..? சிரிப்படி சிரிப்ப!! என் நிலைமைய நினைச்சா உனக்கு சிரிப்பு வருது? இதுல வீட்ல வந்து ஒரு சாரியாவது கேட்டியா நீ?” என்றதும்..

 

“சாரி தான் எப்படி இருக்குன்னு கேட்டேனுங்களே.. மாமா?” என்றாள் குறும்போடு அவள்!!

 

“சாரி தானே…!” என்றவன் அவள் உடலில் மீதமிருந்த புடவையும் அவிழ்த்து எறிந்தான்.

 

“அச்சோ.. மாமா..” என்று இன்னும் அவனோடு ஒட்டிக்கொண்டாள் மேகலை.

 

குறும்பு சிரிப்போடு “இந்த ஐடியா கூட நல்லா இருக்கே மேகி…” என்று இழுத்து அவன் கூற..

 

அப்போதுதான் இவன் வேண்டும் என்று தன்னை சீண்டி விட்டு அதில் நாமே அவனிடம் இப்படி ஒட்டிக்கொண்டு நிற்பதை என்ஜாய் செய்கிறான் என்று புரிந்தவள், “நீங்க ரொம்ப மோசமுங்க.. போங்க மாமா..” என்று அவனை விட்டு பிரிய எத்தனிக்க.. சட்டென்று அவள் நீண்ட சடையை பிடித்து இழுத்தவன் தாடையை பற்றி அவள் கன்னத்தில் அழுத்தமாக கடித்து வைத்தான்.

 

“ஸ்ஸ்ஸ்.. ஏனுங் மாமா.. அசைவம் போன வாரம் தானுங்களே விருந்துக்கு போகும் போதும் ஒரு பிடி பிடிச்சிங்க.. மறுபடியும் உங்களுக்கு அசைவம் சாப்பிட ஆசை வந்துடுச்சு போலங்.. இருங் ஒரே ஒரு ஃபோன் எங்க அப்பாவுக்கு போடுறேனுங்.. அடுத்த வாரம் விருந்துக்கு கூப்பிட்டுடுவாங்க.. எப்படிங்?” என்று அவள் புருவத்தை உயர்த்தி கேட்க..

 

“ஆத்தா.. ஆள விடு!” என்று அவன் கையெடுத்து கும்பிட.. வேண்டுமென்றே இவள் ஃபோன் எடுக்க ஓட.. அந்நேரம் அவளது ஃபோன் சினுங்கியது.

 

“அய்யய்யோ.. உங்க அப்பாவா?” என்று இவன் பயத்தோடு பார்க்க.. ஆனால் அதில் தெரிந்தது என்னவோ பாமாவின் நம்பர்!!

 

“இல்லிங்.. அய்த்த தானுங்” என்று சிரிப்புடனே அவள் ஃபோனை அட்டென்ட் செய்து வைத்தவுடன்,

 

“மேகலை.. நான் அனுப்பிவெச்ச பிளவுஸ் டிசைன்ஸ் நல்லா இருந்ததா? இப்போ நம்ம கடையிலேயே பிளவுஸ் டிசைனுக்குனு தனியா ஒரு செக்ஷன் ஆரம்பிச்சு நானே ஃபுல் அண்ட் ஃபுல் பாத்துக்குறேன்! இனி சென்னையில் என்ன தாண்டி யாரும் புதிய டிசைன் போட முடியாது.. போட முடியாது!” என்று அவர் பிளவுஸ் டிசைனை பற்றி விலாவாரியாக மருமகளோடு பேச…

 

இவளும் அதுக்கு தக்கவாறு பதில் அளித்துக் கொண்டிருக்க ..அருகில் நின்றிருந்தவனோ ‘கரடியாய் ஒவ்வொருத்தராய் வந்து இப்படி என் வாழ்க்கையில் கும்மி அடிக்கிறார்களே!’ என்று வேதனையோடு அம்மாவோடு பேசும் மனைவியை முறைத்துக் கொண்டிருந்தான்.

 

சட்டென்று அவளிடம் இருந்து ஃபோனை பறித்து “ம்மா போதும்.. போதும்.. பேசினதெல்லாம்!! அவளுக்கு வீட்ல வேலை இல்ல? நீங்க இப்படியே பேசிக்கிட்டே இருந்தா நான் எப்ப தான் சாப்பிடுவது? அவ இன்னும் மதிய சாப்பாட்டை செய்யல” என்று கடுமையாக பேசி அன்னையை கட்பண்ணி விட முனைந்தான் மைந்தன்!

 

“மை சன்.. நீங்களும் அங்க தான் இருக்கீங்களா? அம்மா ஒருத்தி இருக்குறது உனக்கு ஞாபகம் இருக்கா? ஃபோன் பண்ணி மூணு நாளாச்சு!! ஆனா என் மருமக தினமும் போன் பண்ணிடுவா.. இப்ப என்ன.. சாப்பாடு இல்லைன்னா ஹோட்டல் ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க!! எப்பொழுதும் அவள் தான் சமைக்கணுமா என்ன? இப்படி எல்லாம் ஆணாதிக்க குணத்தோடு இருக்காதடா!!” என்று அவனுக்கு லச்சர் எடுக்க.. இதற்கு அவளே பேசிக் கொண்டிருந்திருக்கலாம் என்று நொந்து போனான் கார்த்திக்!!

 

அவனின் முகத்தை பார்த்தவளுக்கு சிரிப்பு பீறிட வாயைப் பொத்திக் கொண்டு மடிந்து அமர்ந்து சிரித்தாள் மேகலை!! கண்களால் அவளை உருத்து விழித்து ‘சிரிக்காதே..!’ என்று ஒற்றை விரல் பத்திரம் காட்டி அதட்டினான் கார்த்திக்.

 

மகனிடமும் அரை மணி நேரம் பேசியதும் “சரிடா.. ஃபோன வைக்கிறேன்!” என்றதும் பெரிய கும்பிடு என்று அவன் கூற..

 

“ஃபோன வைச்சிட்டு போய்.. வந்து கதவை திற.. நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன்” என்றார் பெரிய குண்டை போட்டு…

 

“எதே.. இங்க வரிங்களா? சொல்லவே இல்ல!” என்றான் அதிர்ந்து..

 

“ஆமா!! எப்பவும் நீ தான் அங்க வராத.. எனக்கு வேலை இருக்குன்னு சொல்லுவ! கூடவே அந்த காட்டெருமை கண்ணனும் உன் கூடவே சுத்திக்கிட்டு இருப்பான். இப்பதான் மருமக வந்துட்டாளே.. இனி அப்பப்ப இந்த பாமாவின் விஜயம் அங்கே இருக்கும்!! இதோ உன்னோட அப்பார்ட்மெண்ட்குள்ள கார் நுழைஞ்சிடுச்சு..” என்று ஃபோனை கட் செய்து விட்டு, மனைவியிடம் “அம்மா வந்துகிட்டே இருக்காங்க.. நீ டிரஸ் சரி பண்ணு” என்றவன் தானும் சரி பண்ணிக்கொண்டு வாசல் கதவைத் திறக்க..

 

அங்கு “ஹாய்..!” என்றபடி உள்ளே நுழைந்த பாமாவோ மகனை ஒரு தள்ளு தள்ளிவிட்டு மருமகளை நெருங்க “வாங்க அய்த்த…!!” என்றாள் புன்னகை முகமாக மேகலை!!

 

“உங்க அப்பா.. ரெண்டு பேருக்கும் டிரஸ் எடுக்கனும்னு சொன்னவுடன் நான் தான் அனுப்பி வைத்தேன். டிசைன் சூப்பரா இருக்கு இல்ல? இந்த சாரிக்கு தகுந்த மாதிரி சிம்பிள் பேட்ச் ஒர்க்!!” என்று அவளது பிளவுசை பற்றி அவர் கதை சொல்லிக் கொண்டிருக்க.. இடுப்பில் கை வைத்துக் கொண்டு இருவரையும் பாசமாக பார்த்தான் மகன்.

 

“ரெண்டு நாள் இங்கே தான் ஸ்டே!! நாம பொறுமையா பேசிப்போம்.. இவனை ஃபர்ஸ்ட் பேக் பண்ணி ஆபீஸ்க்கு அனுப்பணும்! சமைக்கல சொன்னா…” என்றபடி அப்போதுதான் பிளவுஸில் இருந்து மருமகளின் முகத்தை ஆராய்ந்தவர் அதிர்ந்து வாயை கையில் வைத்து விட்டார்.

 

அவன் விளையாட்டாக காதலோடு அவள் கன்னத்தில் கடித்து வைத்திருக்க… அந்த தடயங்கள் அப்பட்டமாக தெரிந்தது!! இவளும் அவசரத்தில் உடைய சரி செய்தவள் கன்னத்தை கவனிக்க தவறினாள்.

 

“மை சன்… என்னடா பண்ணி வச்சிருக்க?” என்றதும் இருவரும் அதிர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க… “ஏற்கனவே சமைக்கலைன்னு சொல்லிட்டு அவள திட்டிக்கிட்டு இருந்த… இப்போ கடிச்சு வச்சிருக்க??” என்று வேகமாய் அதிர்ந்து மகனைப் பார்த்தவர், “இப்படி ஒரு காஜி காண்டாமிருகமாவா இருப்ப?!!!” என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த குரலில் கூறியவர், “இந்த பொண்ண இனிமே உன்கிட்ட நான்

விட மாட்டேன்!” என்று வந்த காரிலேயே மருமகளை அப்படியே அழைத்துக் கொண்டு சென்று விட்டார் பாமா!!

 

“காஜியா நானு?” என்று அதிர்ந்து நின்றான் கார்த்திக்!!

 

இஷ்டமாகுமா??

3 thoughts on “நீ நீ நீ என்னோட இஷ்டம்… 15”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top