அத்தியாயம் 6
“சரி.. இப்போ பர்ஸ்ட் கொஸ்டின்.. அனிதாவோட பர்டே எப்ப?”
“பக்கத்துவீட்டு பரிமளாக்கு நாலு பசுமாடு.. அந்த பசுமாடு எட்டு லிட்டர் பால் கொடுக்கும்.. அது இருபது வருஷம்
ரெண்டு நாளா அந்த வீட்டுல இருக்கு..”
“என்னது?”
“அதாண்ணே ஆகஸ்ட் மாசம்.. நாலாம் தேதி.. ரெண்டாயிரத்து ரெண்டு.. எப்படி கரெக்ட்டா சொல்லிட்டேனா?”
“எப்பா.. நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லமா.. உன்னையத் தான் இஸ்ரோ சைன்டிஸ்ட் எல்லாம் தேடுறாங்களாம்..”
“அய்யோ.. ரொம்ப புகழாதீங்கண்ணே.. வெட்க.. வெட்கமா வருது..” என்று ஆர்யா கேட்ட கேள்விக்கு விநோதமாக பதிலளித்துக் கொண்டிருந்த கவிதாஞ்சலியை பார்த்துக் கொண்டே, அவள் அமர்ந்திருந்த சோஃபாவில், அவளை ஒட்டியவாறு அமர்ந்து, அவளது
தோளில் கையிட்டவாறு அமர்ந்தான் தேவ் மல்கோத்ரா. அவன் அருகில் அமர்ந்ததும் நெளிய ஆரம்பித்தவள்,
“ப்ரோ.. இங்க கொஞ்சம் வெட்கை ஜாஸ்தியா இருக்குல.. வெளிய போவோமா?” என்று ஆர்யாவிடம் கூறியவாறே, எழுந்தவளின் கையைப் பிடித்து இழுத்து, தன்னருகே அமர வைத்துக் கொண்டவன்,
“என்ன? என்னைய அவாய்ட் பண்ணலாம்னு பார்க்குறியா?” என்றவாறே அவளது தாடை இறுக்கிப் பிடித்தவன்,
“நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்ல போறோம்.. அப்போ.. இந்த மாதிரி ஃபார்மலா இல்லாம.. அன்யோன்யமா இருக்குற மாதிரி காட்டிக்கணும்.. எனக்கொன்னும் உங்கக்கூட இப்படி எல்லாம் பண்ணணும்னு.. எந்த இன்ட்ரெஸ்டுமில்ல.. அப்புறம்.. இதெல்லாம், அனிதா.. எங்க படிச்சா.. எங்க வளர்ந்தா.. அவளோட ப்ரெண்ட்ஸ் சர்க்கில்.. எல்லா டீடெயில்ஸும் இருக்கு.. இதையும் ஒழுங்கா மெமரி பண்ணிக்கோ..” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல,
“நான் என்ன எந்திரன் ரோபோவா? நடந்ததையெல்லாம் மறந்துட்டு.. உடனே.. இப்படி.. சொய்ங்.. சொய்ங்.. புக்கை இப்படி அப்படி திருப்புன உடனே மெமரில வைச்சுக்குறதுக்கு? அவர் மனசுல என்னைய பத்தி என்ன தான் நினைச்சுட்டுருக்காரு?” என்று கத்தியவளிடம்,
“ரொம்ப கத்தாத.. அவன் காதுக்கு கேட்டுடப் போகுது? அப்புறம்.. அவன் வந்து கொஸ்டின் கேட்டாலும்.. ஆச்சரியப்படுறதுக்கில்ல..” என்று ஆர்யா கூற,
“ஆமா.. அவர் என்னையப் பத்தி என்ன தான் நினைச்சுட்டு இருக்காரு?” என்று அஸ்தி வாய்ஸில் பேசியவளைப் பார்க்க, ஆர்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
“ஆமா.. இதை எல்லாம் மெமரி பண்ண சொல்லிட்டு போயிட்டான்.. எப்படி மெமரி பண்ணப்போற?”
“எனக்கு கொஞ்சம் ஞாபகசக்தி அதிகம் ப்ரோ.. சோ, டோண்ட் ஒர்ரி..”
“எப்படி? இப்படி ஆட்டுக்குட்டி.. பன்னிக்குட்டின்னு ஞாபகம் வைச்சுக்குவியா?”
“ஆமா.. இதோ பாருங்களேன்.. அனிதாவோட ப்ரெண்ட் பெயரு.. ஆம்ரூஸ்.. எங்க ஊரு எஃப் எம்லயும் ஆம்ரூஸ் இருக்காரு.. அப்போ எஃப் எம்னு ஞாபகம் வைச்சுக்கிட்ட போதும்? எப்படி?”
“எப்படிமா.. இப்படி எல்லாத்தையும் மறந்துட்டு உன்னால சகஜமா இருக்க முடியாது?”
“பின்ன அழுதுட்டே இருக்க சொல்றீங்களா? நானும் ரெண்டு நாளா ட்ரை பண்ணேன்.. பட், என்னால முடியல.. நம்ம மேனுஃபாக்சரிங் டிஃபெக்ட் அப்படி ப்ரோ..”
“சரி.. இதையெல்லாம் மைண்ட்ல ஏத்திக்கோ.. நாளைக்கு காலைல நாம பிருந்தாவனம் போகப் போறோம்..”
“கர்நாடகா பிருந்தாவனமா?”
“இல்ல.. மும்பைல இருக்குற பிருந்தாவனத்துக்கு..”
“புரியல..”
“சொல்றேன் கேட்டுக்கோ.. பிஸ்னஸ் உலகத்தோட சக்ரவர்த்தி ராம் மல்கோத்ரா.. அவருக்கு மொத்தம் மூணு பசங்க.. ரோஷன் மல்கோத்ரான்னு ஒரு பையனும்.. லலிதா மல்கோத்ரா.. ஹேமா மல்கோத்ரான்னு ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்க.. சுமார் பதின்மூன்று வருஷத்துக்கு முன்னாடி, ஃபேமிலி டூர் போயிட்டு திரும்பி வரும் போது, ப்ரிஜ் மேல, கார் விபத்துல ரெண்டு குடும்பத்து ஆளுங்களும் இறந்துட்டாங்க.. அதுல ஹேமா மல்கோத்ராவோட குடும்பமும் லலிதா மல்கோத்ராவோட பொண்ணான அனிதா ஷெரஜும், அவங்கக்கூட டூர் போகாததுனால உயிர் தப்பிச்சுட்டாங்க..”
“ஓஹோ.. அப்போ.. அனிதா ஷெரஜ் யாரோட பொண்ணு?”
“லலிதா மல்கோத்ராவோட பொண்ணு.. அவங்களோட ஹஸ்பெண்ட் நேரம் விநோத் ஷெரஜ்.. ரோஷன் மல்கோத்ராக்கு ஒரு பையன் இருந்ததா சொல்றாங்க.. அவனும் கார் ஆக்ஸிடென்ட் நடந்தப்போ.. பக்கத்துல இருந்த ஆத்துல விழுந்து இறந்துட்டதா சொல்றாங்க.. இத்தனை வருஷங்கழிச்சு இப்ப தான் தன்னோட வீட்டுக்கு திரும்பி வர்றதா இருந்தாங்க அனிதா ஷெரஜ். அவங்கம்மா அவங்களுக்காக விட்டுட்டு போயிருந்த ஷேர்ஸ்.. அவங்களுக்கு கிடைக்குமா இருந்துச்சு.. அவங்கம்மாவோட ஷேர்ஸ் தான்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏற்பட்ட தீ விபத்துல மல்கோத்ரா குருப்ஸ் பல கோடி ரூபாய்க்கு கடனாளியாகிட்டாங்க.. அந்த கடனை இன்னும் ரெண்டு மாசத்துல அடைச்சாகணும்.. அந்த கடனை கொடுத்தது மல்டி நேஷனல் பேங்க்.. அதோட லோக்கல் பாலிஸி படி இன்னும் ரெண்டே வாரத்துல ஏதாவது ஒரு சொத்து மதிப்பை சரண்டர் பண்ணணும்.. மல்கோத்ரா குரூப்ஸ்கிட்ட இப்ப இருக்குறதெல்லாம் ரா மெட்டீரியல் அசட்ஸ் தான்.. இப்போ அனிதா ஷெரஜால மட்டும் தான் மல்கோத்ரா குரூப்ஸையும் பிருந்தாவனத்தையும் காப்பாத்த முடியும்.. அதுமட்டுமில்ல அவங்ஙளுக்காக அவங்க அம்மா விட்டுட்டுப் போன நாற்பது சதவீத ஷோர்ஸும் அவளை நம்பித் தான் இருக்கு.. அனிதா ஷெரஜோட வருகை தான்.. நாளைக்கு மல்கோத்ரா குரூப்ஸோட தலையெழுத்தையே மாத்தி அமைக்கப் போகுது..”
“ஓ! அப்போ அவங்க பேத்தியை பத்திரமா கூடவே வைச்சு வளர்த்துருக்கலாமே? எதுக்கு அனிதா ஷெரஜை பிரிச்சு தனியா அனுப்பி வைச்சுருக்காங்க..”
“தன்னோட பொண்ணும் பையனும் ஒரே நேரத்துல இறந்து போன அதிர்ச்சில இருந்த ராம் மல்கோத்ராக்கு யாரை நம்புவது? யாரை நம்பக்கூடாதுன்னு தெரியாம.. தன்னோட ஒரே பேத்தியை வெளிநாட்டு அனுப்பி வைச்சாரு.. அவ எங்க இருக்கான்னு யாருக்குமே தெரியாம பார்த்துக்கிட்டாரு..”
“ஓஹோ! அப்போ, ஹேமா மல்கோத்ரா இருக்கும் போது, எதுக்காக அனிதா ஷெரஜை பொசிசன் டேக் ஓவர் பண்ண சொல்லி கேட்டாரு?”
“ம்ம்.. உனக்கு ஒன்னு சொல்லவா?”
“என்ன?”
“நான் என்ன கதைய சொல்றேன்? எல்லாத்தையும் இட்டு கட்டி சொல்றதுக்கு.. எனக்கு இது வரைக்கும் தான் தெரியும்.. நீ கேட்குற கொஸ்டினுக்கு ஆன்சர் நீ தான் கண்டுபிடிக்கணும்..”
“ம்ம்.. அப்போ அனிதாவை கொலை பண்ணது யாரு?”
“சின்ன திருத்தம்.. அனிதாவையில்ல.. கவிதாவை..”
“ம்ம்ம்..”
“என்ன முறைக்குற? இனிமே தெரிஞ்சோ.. தெரியாமலோ.. அனிதா ஷெரஜ் செத்துப் போயிட்டான்னு.. உன் வாயால மட்டுமில்ல.. மனசாலையும் நினைக்கக்கூடாது.. புரியுதா?” என்ற ஆர்யா அங்கிருந்து கிளம்ப, தேவ் மல்கோத்ரா கொடுத்த கோப்புகளில் இருந்து, அனிதா ஷெரஜை பற்றி தெரிந்துக் கொண்டாள். அடுத்த நாள் காலையில் தேவ் மல்கோத்ராவுடன் பிருந்தாவனத்திற்கு செல்ல தயாரானாள். காரில் தன் அருகில் அமர்ந்திருந்தவள், தன் கையில் இருந்த துண்டு சீட்டை பார்த்து, எதையோ வாயிற்குள் முணுமுணுப்பதை கவனித்தான் தேவ் மல்கோத்ரா.
“என்னதிது?”
“அது.. அது வந்து..”
“கொடு..” என்றவன் அவள் கையில் இருந்த துண்டு சீட்டை பிடிங்கி, அதில் அவள் எழுதி வைத்திருந்ததை படித்தவன், கோபத்தில் தன் பற்களை நறநறவென கடித்தான். அக்காகிதத்தை தூக்கி காரின் ஜன்னல் வழியே எறிந்தவன்,
“பெருசா.. எனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கம்னு சொன்ன? இப்ப என்னன்னா துண்டு சீட்டுல, பிட்டடிக்குற மாதக் எழுதி வைச்சுருக்க?” என்றவன் பல்லை கடித்தவாறே கேட்க,
“அது வந்து.. அது வந்து..” என்று தடுமாறியவளை நோக்கி உக்கிரமாக திரும்பியவன்,
“நீ என்ன நினைச்சுட்டுருக்க? இவ தான் அனிதா ஷெரஜ்னு நாங்க உன்னைய அங்க கொண்டு போய் நிறுத்துன உடனே அவங்க உன்னைய ஏத்துக்குவாங்கன்னா? இல்ல உன்னைய பார்த்த உடனே எல்லாத்தையும் தூக்கி உன் கையில கொடுத்துடுவாங்கன்னா?” என்று தன் கைகளை மடக்கி தன்னை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தவன், தன் மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவர், சிறிது நேரத்தில் அவள் புறம் திரும்பினான்.
“நீ இப்படியெல்லாம் பண்ணேன்னா.. நீ அனிதா ஷெரஜ்னு ஈசியா கண்டுபிடிச்சுடுவாங்க.. அது மனிஷங்க வாழுற வீடுன்னு நினைச்சியா? மனுஷங்களை வேட்டையாடும் மிருகங்க வாழுற காடு.. நம்ம கண்ணுக்கு தெரியாத ஆயிரம் கேமிராஸ்.. நம்மள வாட்ச் பண்ணிட்டு இருக்கும்.. அதுல ஒன்னு நம்மளைப் பத்தி கண்டுபிடிச்சாலும் டெத் கன்பார்ம்.. புரியுதா?”
“ம்ம்ம்..” என்றவளின் கைகள் அவன் பேசியதில் நடுங்கத் தொடங்க, அதனை கவனித்த தேவ் மல்கோத்ரா, அவளது குளிர்ந்த உள்ளங்கையை தனது உள்ளங்கையோடு கோர்த்து கொண்டவாறு, அவளுக்கு அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான்.
“திரும்பவும்.. சொல்றேன்.. நீ தான் அனிதா ஷெரஜ்.. புரியுதா? நீ தான் அனிதா ஷெரஜ்..” என்றவனது அருகாமை நிம்மதி தந்ததோ.. அவளது மனம் பயத்தில் இருந்தாலும் அமைதியுறுதை உணர்ந்தாள். அதில் வந்த தைரியத்தில்,
“உங்கக்கிட்ட ஒன்னு கேட்கவா?” என்று கேட்க,
“ம்ம்?” என்றவாறே தனது புருவத்தை சுருக்கி அவளைப் பார்த்தான் தேவ் மல்கோத்ரா.
“இல்ல.. இவ்வளவு தூரம் நீங்க எல்லாரும் ரிஸ்க் எடுக்குறீங்களே.. இதுனால உங்களுக்கு என்ன ஆதாயம்?”
“உனக்கு தேவையில்லாத விஷயத்துல எல்லாம் தலையிடாத.. உன்கிட்ட சொன்ன வேலையை மட்டும் செய்.. அது போதும்..” என்றவன் அதற்கு மேல் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. தனது கைப்பேசியில் நேரலை பார்த்துக் கொண்டிருந்த ஆர்யா,
“பாஸ்..” என்றவாறு அதனை நீட்ட, அதில்
“சில நாட்களுக்கு முன்னால் மல்கோத்ரா குரூப்ஸில் ஏற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் கடனுக்காக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் அனைத்து ரைக்டர்களுக்காக கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மல்கோத்ரா குரூப்ஸின் அடுத்த தலைமுறைக்கான பிரசிடெண்ட்டாக ராம் மல்கோத்ராவின் சின்ன மகளான ஹேமா மல்கோத்ராவின் மகன் விஷ்ணு மல்கோத்ரா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..” என்று நிருபர் ஒருவர் பேச, தான் தலையில் அணிந்திருந்த கூலிங் கிளாஸை இறக்கி, கண்ணில் அணிந்து கொண்டவன்,
“அப்போ வண்டிய மல்கோத்ரா குரூப்ஸ்கு விடு..” என்றவனின் உதட்டில் உறைந்திருந்த செய்தியை புரிந்து கொண்டான் பீம். பிருந்தாவனத்திற்கு சென்று கொண்டிருந்த வண்டியை திருப்பி, மல்கோத்ரா குரூப்ஸ் இருக்கும் பக்கமாக ஓடியது தேவ் மல்கோத்ராவின் கார். குள்ளநரி கூட்டத்திற்குள் புள்ளிமானை கூட்டிக் கொண்டு வேட்டைக்கு செல்லும் சிங்கம், போரில் வெற்றி பெறுமா?