அத்தியாயம் 1
மும்பை மாநகரம் பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் அழகான நகரம். எவ்வளவு அழகானதோ, அவ்வளவு ஆபத்தானதும் கூட.. பாதாள உலகத்து தாதாக்களும் மல்டி மில்லியனரும் வாழும் உலகில் தான் சாதாரண மக்களும் வாழ்கின்றனர். அனைத்து இந்திய முன்னணி தொழிலாளிகளுக்காக கூட்டம் நடக்கும் இடத்தில், தனக்கு ஒரு செய்தியாவது கிடைக்காதாவென காத்திருந்த மீடியாக்களின் முன்னால் சர்ரென்று வந்து நின்றது பிஎம்டபிள்யூ கார். கருப்பு நிற உயர்ரக காரில் இருந்து நீளக்கால்களால் உலகத்தை அளிப்பவன் போல், தனது நீளக்கால்களை வெளியே நீட்டி இறங்கி வந்தான் அக்னி சாஹித்யா. நிழல் உலகதாதாவாக உலா வரும் இளம் தொழிலதிபர். கண்கள் இரண்டும் காந்தமோ? பார்ப்பவர்களை சுலபமாக ஈர்க்கும், அதே நேரத்தில் நல்லவர் யார்? கெட்டவர் யாரென நொடியில் எடை போடும் ஸ்கேனரோ? அவன் இறங்கிய தோரணையில் மயங்காதவர் எவருமிலர். இதழோரம் வளையும் சின்ன சிரிப்பில் இதயம் கரைந்தோடிவிடும் வசீரத் தோற்றமென காண்போரின் கவனத்தை தன்னோடு அள்ளிக் கொண்டு வீரநடை நடந்தவன், மீட்டிங் நடக்கும் இடத்திற்கு விரைந்தான். அவன் இறங்கிய நிமிடத்தில் இருந்து அரங்கத்திற்குள் செல்லும் வரை, அவனை தனக்குள் பதிந்து கொண்ட பல புகைப்பட கருவிகள்.
“இங்கு வந்திருக்கும் அனைத்து இளம் தொழிலதிபர்களையும் எங்கள் சாம்பர் சார்பாக வரவேற்கின்றோம்.. இன்றிரவு இங்கு நடக்கவிருக்கும் விருந்தில் நீங்கள் பலவிதமான தொழிலதிபர்கள், அடையாளங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என பல நாடுகளின் ரெப்ரசன்டேட்டிவ் பலரை காண உள்ளீர்கள்..” மேடையில் இருக்கும் பெரிய மனிதர் பேசிக்கொண்டிருக்க, அசட்டையாக உள்ளே நுழைந்திருந்தான் அக்னி சாஹித்யா.
“அண்ட் மீட் மிஸ்டர் அக்னி சாஹித்யா.. தி யங் பிஸ்னஸ் மேன்..ஓனர் ஆஃப் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன்.. லேட் வெல்கம் ஹிப்..” என்று மேடையில் இருந்தவர் கூறியதும் கரவோசங்கள் முழங்க, அரங்கத்திற்குள் நுழைந்நதவனின் மீது மீடியாக்களின் வெளிச்சம் வெள்ளமென பாய்ந்தது. பலநாட்டு தொழிலதியர்களுடன் கலந்துரையாடல் செய்தவன், அவர்களோடு புதிய தொழில் ஒன்றில் ஒப்பந்தமிட பேச்சுவார்த்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டான். அதற்கான சந்தோஷத்தை கொண்டாட தனியாக பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருக்க, அவரோடு சென்றான்.
“இட்ஸ் அவர் சக்ஸஸ் பார்ட்டி மிஸ்டர். அக்னி சாஹித்யா.. எஸ்.. லிசன்.. எவ்ரி படி.. டுடே மை ட்ரீட்.. கமான் என்ஜாய்..” என்ற தொழிலதிபருக்கு சிறு புன்னகையை பரிசளித்தவன், அங்கே இருக்கும் சோஃபா ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான். மது அருந்தாது, அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டாள் அவள்.
“ஹாஆஆஆஆ.. ஹஹஹஹஹாஆஆஆ..”
“நீ அழுகிறியா? சிரிக்கிரியா?”
“ஏன்டி.. ப்ரேக்கப்பான யாராவது அழுவாங்களா?”
“இது எத்தனாவது ப்ரேக்கப்?”
“ஃபர்ஸ்ட் தெரியுமா?”
“ஓ..”
“எப்பயிருந்து?”
“அவன் என்னோட சின்ன வயசு ப்ரெண்ட்.. ரெண்டு பேரும்.. இப்படி.. இப்படி.. நகமும் சதையுமா இருந்தோம்..தெரியுமா? ஒன்னா தான் தூங்குவோம்.. ஒன்னா தான் சாப்பிடுவோம்.. ஒன்னா தான் காலேஜ்கு போவோம்.. இப்போ.. அவன் கூட வேலை பார்க்குற பொண்ணை பிடிச்சுருக்குன்னு போயிட்டான் தெரியுமா?”
“அழுகாதடி.. உன்னைய பார்த்தா.. ஒரு கம்பெனியோட மேனேஜர்னு யாரும் சொல்ல மாட்டாங்க..”
“ம்ம்ம்.. நான் மேனேஜர்.. அவன் என்னோட எம்ளாயிங்குற மாதிரியா பழகுனேன்? ஆஆஆஆஆ..”
“சரி.. சரி.. உனக்கு ஓவராகிருச்சு.. நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு.. போ ஷாலு.. போ.. எவ்வளவு குடிச்சாலும் நான் ஸ்டெடி.. நீ கவலைப்படாம போ..” என்று பாதி போதையில் இருந்தாலும் தன் தோழியை சீக்கிரமாக வழியனுப்பி வைத்தாள் அதிதி. முழு போதையில் நிற்கும் தன் தோழியை தனியே விட்டுப் போக மனமில்லாத ஷாலினி,
“ஹலோ.. அசோக்.. ம்ம்.. இங்க தான் ***பார்ல தான் இருக்கா.. என்ன நீ வந்து கூட்டிட்டு போறியா? ஓகே.. உன்னைய நம்பித்தான் அவளை விட்டுட்டு போறேன்.. சீக்கிரம் வா..” என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது, தன் தோழிக்கு ஆயிரம் அறிவுரைகள் கூறி, அங்கிருக்கும் பாதுகாவவரிடம் அசோக் வரும்வரை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு, மனமேயில்லாது கிளம்பினாள். பாவம் அவளும் தான் என்ன செய்வாள்? வீட்டிற்கு சென்றதும் அவளுக்கு என்ன காத்திருக்கின்றதோ? தன் தோழி தன்னை விட்டு சென்றது கூட அறியாது,
“நீ முதல்ல கிளம்பு.. வீட்டுல உன்னோட அப்பா அம்மா எல்லோரும் தேடுவாங்க.. எனக்கு தான் யாருமேயில்லயே..” என்று புலம்பிய அதிதி, தன் இதயத்தில் கை வைத்தவாறே,
“எனக்குன்னு யாருமேயில்லயே? உன் கூடத்தானே ஆசிரமத்தில வளர்ந்தேன்.. எனக்கு அம்மாவா.. அப்பாவா.. தோழனா.. இருந்தியே.. உன்னைய ரொம்ப பிடிக்கும்டா.. இப்படி என்னைய அம்போன்னு விட்டுட்டு அந்த ராகினிகூட போயிட்டியேடா..” என்று தன் முன்னே இருந்த பீரை எடுத்து ஒரே வாயில் கவிழ்த்தியவள், டேய்.. அசோக்.. இந்த நாளை உன் டைரியில குளிச்சு வைச்சுக்கோ.. ஓ.. உன்கிட்ட டைரியில்லயா? ம்ம்.. அப்போ உன்னோட போன்ல நோட் பண்ணிக்கோ.. அந்த குரங்கு ராகினிய நீ பிடிச்ச மாதிரி.. ம்ம்.. இவே அந்த குரங்கை பிடிச்சானா? அந்த குரங்கு இவனை பிடிச்சதா? இல்ல.. இல்ல.. அந்த குரங்கு தான் அசோக்கை பிடிச்சுருக்கணும்.. அசோக் ரொம்ப நல்லவன்.. அதுனால அடியேய் ராப்பகல் ராகினி.. நீ எப்படி அசோக்கை கரெக்ட் பண்ணி, கைல போட்டுகிட்டியோ.. அதே மாதிரி நானும்.. நானும்.. நானும்.. என்று எழுந்தவள் தடுமாறி விழுங்கும் முன், அவளை வழுவான கரங்கள் தாங்கிப் பிடித்தன. அரை போதையில் கண் திறந்து பார்த்தவள், தன் முன்னே ஆறடி உயரத்தில், வசீகரமான புன்னகையோடு கம்பீரமாக நின்றிருந்தவனின் தோற்றத்தில் முழுதாக மயங்கி சரிந்தாள்.
அடுத்த நாள் காலையில் எழுந்து, தான் இருந்த நிலையை பார்க்க தலை தட்டாமலை சுற்றியது. தன் மேல் இருந்த போர்வையை விலக்கிப் பார்த்தவளுக்கு, அழுகை வந்தது. ஒரு பெண்ணாய் எதை இழக்கக் கூடாதோ.. அதை இழந்திருப்பதை நினைத்து தன் மேலேயே கோபம் வந்தது. இரவு நடந்ததை தன் முன்னே கொண்டு வந்தாள். தனது மேஜையின் அருகில் இருந்தவனின் மேல் விழுந்ததும், தானே அவனிடம் சென்று அசோக்கை மறக்க வைக்கச் செய்யும்படி கேட்டுக் கொண்டதும் ஞாபகம் வந்தது. அதனையடுத்து, தன்னை பூப்போல் ஏந்தியவன், அங்கிருந்த ஹோட்டல் அறைக்கு அவளை தூக்கிச் சென்றதும், பூவை கொய்வது போல் மெல்ல மெல்ல தன்னை ஆட்கொண்டதும் ஞாபகம் வர,
“அவன் பெயரென்ன சொன்னான்? ம்ம்..” என்று யோசித்து பார்த்தவளுக்கு,
“ஆர் யூ ஷ்யர்? உனக்கு நீ பண்ணறன்னு தெரியுதா?” என்றவன் கேட்டதும்,
“ம்ம்ம்.. தெரியும்.. உன்னால அவனை மறக்க வைக்க முடியுமா? முடியாதா? இன்ஸ்டாகிராம்ல அவக்கூட சேர்ந்து போட்டோலாம் எடுத்து போட்டுட்டுருக்கான் தெரியுமா? அதைப் பார்க்கும் போதெல்லாம் இங்க.. இங்க.. மனசு வலிக்குது..” என்றவள் தனது இதயம் இருக்கும் இடத்தை தொட்டுக் காட்டியதும்,
“எத்தனை பீர் குடிச்ச?” என்றவன் கேட்டதற்கு “அஞ்சு.. ஆறு.. ம்ஹும் ஞாபகமில்ல..” என்றவள் அவனது மார்பில் மேலும் ஒட்டியதும் ஞாபகம் வந்தது.
“அய்யோ.. அதிதி.. என்ன காரியம் பண்ணி வைச்சுருக்க? இப்படி முன்ன பின்ன தெரியாதவன் கூட.. அய்யோ..” என்று புலம்பியவளின் கண் முன்னே மேலும் சில நிகழ்வுகள் வந்து போயின. அவனது மார்பில் சாய்ந்தவளின் கன்னத்தை வருடியவன்,
“நான் யாருன்னு தெரியுமா?” என்று கேட்க இல்லையென தலையாட்டியவளின் நெற்றியில் முத்தமிட்டவன்,
“நான் அக்னி.. எல்லோரும் அக்னி சாஹித்யான்னு கூப்பிடுவாங்க..” என்றவனை குறுகுறுவென பார்த்தவள்,
“எனக்கு அதெல்லாம் தேவையில்லை.. உனக்கு என்னை புடிச்சிருக்கா? புடிக்கலையா?” என்று கேட்டதும் தான் தாமதம், அவளது இடையோடு கையிட்டு தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவன்,
“நல்லா யோசிச்சுக்கோ.. அப்புறம் நீயே நினைச்சாலும்.. என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது..” என்றவனின் இதழை கவ்விக் கொண்டாள். அதன்பின் அவளது செயலை தனதாக்கிக் கொண்டான் அக்னி சாஹித்யா. தேனை அள்ளித் தரும் பூவிற்கு வலிக்கவில்லை என்றால் தேன் உண்ணும் தேனீக்கு வலிக்குமா என்ன? அவளை அப்படியே விடிய விடிய அவளது மேனியில் கவிதை எழுதியவன், விடிந்த பின்னரும், அவளை விட்டு விலக முடியாது தவித்தான். அதிமுக்கிய வியாபார பொதுக்கூட்டம் இருப்பதினால், அவளுக்கு காவலாக தனது பாதுகாவலர்களை அறைக்கு வெளியே நியமித்தவன் தனது வேலையைப் பார்க்க சென்றிருக்க, மாலையில் கண்விழித்தவளின் பார்வையில், அவளது கட்டிலுக்கு அருகில் இருந்த, மேஜையின் மீது படபடத்த காகிதம் தான் பட்டது.
“சாரி.. ஹனி.. சம் இம்பார்டாண்ட் வொர்க் வந்துடுச்சு.. சோ, ஐ வில் மீட் யூ.. இன் தி ஈவினிங்.. டேக் கேர்..” என்று அதில் எழுதியிருந்ததை படித்தவளுக்கு நேற்று நடந்த அனைத்தும் ஞாபகத்திற்கு வந்தது.
“என்னது ஈவினிங்கா?” என்றவாறு போர்வையை சுருட்டிக் கொண்டு எழுந்தவள், அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்க்க, அந்திவானத்தில் பொட்டு வைப்பது போல், சூரியன் மறையத் தொடங்கியிருந்தான். சரியாக அவளது கைபேசியும் அழைக்க, அதனை எடுத்து காதில் வைத்தவளுக்கு,
“ஏய்.. அதிதி.. நீயெல்லாம் போனை வைச்சுருக்குறது பதிலா.. தலையை சுத்தி தூக்கி எறிஞ்சுரு.. உனக்கெல்லாம் எதுக்குடி போன்னு.. காலைல இருந்து எத்தனை தடவை போன் பண்றேன் தெரியுமா? எங்கடி இருக்க? உன்னோட அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிகிட்ட உன்னோட கார் பார்க்கிங் ஏரியால இருக்குதான்னு பார்க்க சொன்னேன்.. அவர் இல்லேன்னு சொன்னதும்.. எவ்வளவு மறந்துட்டேன் தெரியுமா? இன்னைக்கும் நீ அந்த கடன்காரன் அசோக் வீட்டில போய் தானே தங்கியிருக்க? ஏன்டி உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தியே வராதா? அவன் வீட்டுல போய் தங்கு.. அப்புறம் அந்த ராகினியோட அவன் அடிக்குற கூத்தை பார்த்துட்டு எங்கிட்ட வந்து புலம்பு.. உன்னோட பிஏவா இருக்குறதுனால நீ எங்க போனாலும் கூட வர வேண்டியதா இருக்கு.. அந்த மாதிரி பிஸ்னஸ் பார்ட்டி நடக்கும் இடத்துக்கெல்லாம் போகாதன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. ஒரு தடவையாவது கேட்குறியா?” என்று பொறிந்து தள்ளிக் கொண்டிருந்தவளின் வார்த்தையில் இருந்து அக்கறை மனதை தொட,
“இதோ கிளம்பிட்டேன்..” என்றவளுக்கு அவனால் தன் உடம்பில் ஏற்பட்ட தடங்களின் ஞாபகம் வர,
“ஷாலு.. இன்னைக்கு வர்றது டவுட்டு தான்டி.. எனக்கு கொஞ்சம் ஃபீவர் மாதிரி இருக்கு.. சோ, ட்டூ டேஸ்ல ஆஃபிஸ் வந்துடுவேன்..” என்று அதிதி கூறி முடிக்கும் முன்,
“என்னது ஃபீவரா? இதோ, இப்பவே வர்றேன்.. ஹாஸ்பிடல் போனியா? டேப்லெட் போட்டியா?” என்று கவலையாக படபடத்த ஷாலினியை,
“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஷாலு.. அவசரப்படாம.. நான் சொல்லுறதை கொஞ்சம் பொறுமையா கேளு..” என்று சமாதானப்படுத்தினாள் அதிதி.
“ம்ம்.. சொல்லு..”
“இப்பப்பாரு ஷாலு.. ஏற்கனவே நாம பார்க்க வேண்டிய வொர்க் நிறைய பெண்டிங்ல இருக்கு.. இப்ப நீயும் லீவ் போட்டு என்னைய பார்க்க வந்துட்டேனா.. அந்த வேலையெல்லாம்.. அப்படியே நின்னு போயிடும்.. சோ, நீ நான் வர்ற வரைக்கும் வொர்க்கை பார்த்துக்கோ.. ஏதாவது எமர்ஜென்சனா.. எனக்கு மெஸேஜ் போடு.. ஃபைலை மெயில் பண்ணி விடு.. என்னைய நான் பார்த்துக்குறேன்.. இப்போ வொர்க்கை நீ பார்க்குறது தான் நீ எனக்கு செய்யுற பெரிய ஹெல்ப்..”
“ம்ம்.. ஓகே.. டேக் கேர்.. அந்த கடன்காரன் இருக்கானா? இல்லை போயிட்டானா?”
“நான் இப்போ என்னோட ப்ளாட்டுக்கு வந்துட்டேன்.. அவனோட வீட்டுல இல்ல.. அதுனால நீ பயப்படாத..”
“ஓகே.. டேக் கேர்..” என்றவாறு ஷாலினி அழைப்பை துண்டிக்க, அங்கிருந்து எப்படி தப்பிக்கவென்று யோசித்தவள், தன்னுடைய ஆடைகளை தேடி எடுத்து அணிந்து கொண்டாள். பாதுகாவலர்கள் அசந்த நேரத்தில் அங்கிருந்து தப்பித்து, தனது இருப்பிடத்திற்கு வந்திருந்தாள் அதிதி. தான் ஏன் அவனோடு அப்படி நடந்து கொண்டோம் என்று பலவாறு யோசித்தும், அவளுக்கு அதன் பதில் தான் கிடைக்கவில்லை. அன்று நடந்ததை கெட்ட கனவாக நினைத்து மறக்க, அவள் எண்ணிக் கொண்டிருக்க, அவளைத் தேடி வந்து கொண்டிருந்தான் நெருப்பே உருவான அக்னி சாஹித்யா. புலியிடம் மாட்டிக் கொண்ட புள்ளிமான், தப்பிவிட்டதாக எண்ணியிருக்க, அது அவ்வளவு சுலபமில்லை என்று புரிய வைக்க புயல் வேகத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது புலி. புலியிடம் இருந்து புள்ளிமான் தப்புமா?
அத்தியாயம் 2
“சார்.. மிஸ்.. ஆயிஷா.. உங்களை பார்க்க வந்துருக்காங்க..”
“எனக்கு நேரமில்லைன்னு சொல்லு ஆல்பர்ட்..”
“சார்.. அவங்க ரொம்ப பிடிவாதமா உங்களை பார்த்துட்டு தான் போவேன்னு.. ரொம்ப அடம்பிடிக்குறாங்க..”
“ஓகே.. வரச் சொல்லு..” என்ற அக்னி சாஹித்யா, இறுகிய முகத்துடன் சோஃபாவில் அமர்ந்திருக்க, அவனது அலுவலக அறைக்குள் நுழைந்த ஆயிஷாவோ,
“ஹாய் டார்லி..” என்றவாறே அவனது சோஃபாவின் கைப்பிடியில் அமர்ந்து, அவனது தோளில் கையிட,
“என்ன விஷயம் சொல்லு? எதுக்காக இங்க வந்த? பிஸ்னஸ் விஷயமாவா?” என்றவன், தன் மீதிருந்த அவளது கையை எடுத்துவிட்டான்.
“பிஸ்னஸ் விஷயமா இருந்த மட்டும் தான் உன்னையே பார்க்க வரணுமா? சும்மா உன்னையே பார்க்க வரக்கூடாதா?” என்றவளின் அருகில் இருந்து எழுந்தவன்,
“உனக்கு என்கிட்ட பேச ஒன்னுமில்லைனா.. ப்ளீஸ்.. கொஞ்சம் கிளம்புறியா? எனக்கு முக்கியமான வேலையிருக்கு..” என்றவாறே, அங்கிருந்து வெளியேறி, தனது தனியறைக்குள் நுழைந்து கதவை பூட்டிக் கொண்டான். அவனது பின்னோடு செல்ல முயன்றவளை தடுத்த ஆல்பர்ட்,
“அவரோட தனியறைக்கு செல்ல யாருக்கும் அனுமதியில்ல.. நீங்க அவர்கிட்ட ஏதாவது சொல்லணும்னா.. என்கிட்ட சொல்லுங்க.. நான் அதை பாஸ்கிட்ட சொல்லிடுறேன்..” என்று கூற,
“உங்க பாஸ் இன்னும் எத்தனை நாளைக்கு என்னைய இப்படி அவாய்ட் பண்றாருன்னு பார்க்குறேன்..” என்று தன் கல்லை உதைத்தவாறே அங்கிருந்து வெளியேறியிருந்தாள் ஆயிஷா. அவள் அங்கிருந்து சென்றதும் அக்னியின் அனுமதி பெற்று உள்ளே சென்ற ஆல்பர்ட்டை கேள்வியாக பார்த்தவனுக்கு பதிலாக, அவன் முன்னே அதிதியின் புகைப்படத்துடன் அடங்கிய கோப்பொன்றை வைத்தான் ஆல்பர்ட்.
“பெயர் அதிதி.. அதிதி ரங்கராஜன்.. சின்ன வயசுல நடந்த கார் விபத்துல மொத்த குடும்பமும் இறந்து போயிட்டாங்க.. இவங்க மட்டும் தான் எஞ்சியிருந்துருக்காங்க.. அவங்களோட அப்பாவோட ஃப்ரெண்ட் தான் அனாதை இல்லத்தில சேர்த்துவிட்டு, கார்டியனா இருந்துருக்காரு.. படிச்சது.. வளர்ந்தது எல்லாமே காலர் ஷிப்ல தான்.. இவங்களுக்கு ரெண்டே ஃப்ரெண்ட்ஸ் தான்.. அசோக் அப்புறம் ஷாலினி.. சொந்தமா ஆடிட்டிங் கம்பெனி வைச்சு நடத்திட்டு இருக்காங்க.. அப்புறம் நம்ம****ப்ரான்ஜோட மேனேஜரா இருக்காங்க.. இந்த விலாசத்துல தான் இருக்காங்க.. அப்புறம் அவங்க ஃபோன் நம்பர்ல இருந்து இண்ஸ்டாகிராம் அக்கௌன்ட் வரைக்கும் எல்லா டீடெயில்ஸும் இதுல இருக்கு..” என்றவனை போகுமாறு கையால் சைகை செய்தவன், தன் முன்னே இருந்த அதிதியின் புகைப்படத்தை கையில் எடுத்து,
“என்கிட்ட இருந்து தப்பிக்குறது அவ்வளவு ஈசின்னு நினைச்சியா?” என்று இதழோரத்தின் சிறு புன்னகை ஏற்பட, அப்புகைப்படத்தை பார்துக் கொண்டிருக்க, இங்கே தன் வீட்டில் நடந்தவை அனைத்தையும் மறக்க போராடியாவாறு தனதறையில் அமர்ந்திருந்தாள் அதிதி.
“அய்யோ.. அவன் மூஞ்சி திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து இம்சை பண்ணுதே..” என்று முணுமுணுத்தவாறே, டிவியை போட, அதில்,
“மறக்குமா மாமே நெஞ்சம்.. மயக்குதே பஞ்சவர்ணம்.. மடியிலேயே ஊஞ்சல் கட்டிஇஇஇ.. நீ வா..” என்ற பாடலை பார்த்தவளுக்கு அவனது உடலில் இடையின் கீழ் பச்சை குத்தப்பட்டிருந்தது ஞாபகத்திற்கு வர,
“அதிதி.. நீ நேத்து குடிச்சிருந்த.. அதுனால உன்னை மீறி தப்பு நடந்துடுச்சு.. அதுக்கு நீ காரணமில்ல.. அவன் யாரோ.. எவனோ?” என்று ஒரு மனது இடித்துரைக்க,
“அப்படி அவன் யாரு.. எவருன்னு தெரியாமத் தான்.. மறக்குமா மாமே நெஞ்சம்.. மயக்குதே அதிதியின் மஞ்சம்னு.. அவன் முகம் ஞாபகத்துக்கு வந்தேச்சோ? உன்னைய நீயே ஏமாத்திக்காத.. அவனை உனக்கு பார்த்த உடனே புடிச்சதுனால தான்.. அவன் தொட்ட உடனே உருன?” என்று மற்றொரு மனம் இடித்துரைக்க,
“ம்ஹும்.. இல்ல.. இல்ல.. நான் அசோக்கைத் தான் விரும்புறேன்.. இவன் யாருனே எனக்கு தெரியாது.. பார்க்க ஏதோ கேங்ஸ்டர் மாதிரி இருந்தான்..” என்று மற்றொரு மனம் அவளிடம் தர்க்கம் செய்ய,
“கேங்ஸ்டரோ? மான்ஸ்டரோ? அவனோட ஒவ்வொரு புடியும்.. ப்பா.. அப்படி இருந்துச்சு.. அவன் கடிச்சு வைச்சு பல் தடம் கூட.. வலிக்கலியே.. சுகமாத்தானே இருக்கு..” என்று மற்றொரு மனம் அவளிடம் உண்மையை கூற,
“அய்யோ.. பைத்தியக்காரியாக்குறானே? டேய்.. அக்னி.. நான் உன்னையே லவ் பண்ணல.. பண்ணல.. பண்ணலடா.. இனிமே நீயே என் எதிர்ல வந்து நின்னாலும்.. நீ யாரோ.. நான் யாரோ.. அவ்வளவு தான்..” என்று புலம்பியவள், அருகே இருந்த தலையணையை எடுத்து தனது தலையின் பின்னால் வைத்து, இரு காதுகளையும் மூடியவள்,
“அய்யோ.. ராமா!” என்று புலம்பிக் கொண்டிருந்தவள், சிறிது நேரத்தில் தனது லாப்டாப்பை எடுத்து வைத்து வேலை செய்ய ஆரம்பிக்க, அவளது காதில் வீட்டின் அழைப்பு மணி ஓசை விழ, எழுந்து சென்றவளின் முன்னே கற்சிலை போல் நின்றிருந்தான் அக்னி சாஹித்யா.
“அய்யோ.. இவனா?” என்றவள் பட்டென்று கதவை அடையடைக்க முயல, தன் ஒற்றை கையால் தடுத்து நிறுத்தியவன், ஒரே தள்ளு தள்ளிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தான். அவனோடு வந்திருந்த பாதுகாவலர்களை வெளியே இருக்கும்படி பணித்தவன், வெளிகதவை தாழ்ப்பாளிட்டு திரும்பிப் பார்க்க, தன் கையில் பெப்பர் ஸ்ப்ரேவுடன் நின்றிருந்தாள் அதிதி.
“பக்கத்துல வந்து ஸ்ப்ரே அடிச்சுடுவேன்.. முதல்ல இங்கிருந்து போ.. போன்னு சொல்றேன்ல..” என்றவள் அக்னி சாஹித்யாவை மிரட்ட, தனக்கு அருகில் இருந்த ஜன்னல் வழியாக கீழே பார்த்தவன். கீழே நான்கு வண்டிகளாக உயர்ரக கார்கள் நிற்க, அவனது பாதுகாப்பு காவலர்கள் கையில் ஆயுதத்துடன் தயார் நிலையில் நிற்க, ஊரே தன்னைப் பார்த்து அஞ்சி நின்று கொண்டிருக்க, சிறு பெப்பர் ஸ்ப்ரேவை வைத்துக் கொண்டு தன்னை மிரண்டும் தன்னவளை அள்ளிக் கொஞ்சிட மனம் துடித்தது. சிறு பிள்ளையென தன் முன்னே நின்று கொண்டிருந்தவளை லாவகமாக சுற்றி பிடித்தவன், அவள் கையில் வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேவை பறித்து, உயரமாக இருக்கும் அலமாரியில் வைத்தான்.
“பேபி.. பேபி.. இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கியே? நான் அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன்.. அந்த இரவு நம்ம ரெண்டு பேருக்கும் கடைசியா இருக்காதுன்னு.. அப்படியிருக்கும் போது, நீ ஏன் என்னைய பார்த்ததும் ஓடுற?”
“பக்கத்துல வராத.. வராதன்னு சொல்றேன்ல..” என்றவள் ஹாலில் இருந்து தனது பெட்ரூமிற்கு ஓட, அவளது எண்ணம் புரிந்தவன், அவள் அறைக்கதவை மூடும் அதனுள் புகுந்து கொண்டான்.
“என்ன பேபி நீ? இந்த காம்ப்ளான்.. ஹார்லிக்ஸ்.. எதுவும் குடிக்கமாட்டியா? அறிவு தான் வளரலைன்னு பார்த்தா.. மத்த எதுவுமே வரலை போலிருக்கே..” என்றபடியே அவளருகே வர, அவன் அசந்த நேரம் பார்த்து படுக்கையின் மேலேறி அவனுக்கு அந்த புறமாக இறங்கி, அறையில் இருந்து வெளியே ஓடி முயன்றவளின் இடையே வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டவன், அவளது பின்புற கழுத்தோரமாக இருக்கும் முடிகற்றையை தன் ஒற்றை கையால் ஒதுக்கி, பின்னங்கழுத்தில் சிறு முத்தம் வைத்து, அவளது கூந்தலுக்குள் தன் மூக்கை நுழைத்து, வேர்வையோடு வரும் அவளது பெண்மையின் வாசனையை நுகர்ந்தான்.
“ம்ம்ம்.. என்ன வாசனை பேபி? நானும் பல பெண்களோட வாசனையையும் இப்படி நுகர்ந்து பார்த்துருக்கேன்.. ஆனா, உன்னோட வாசனை வித்தியாசமானது.. எந்த மலரோடும் சேராதது.. இந்த காட்டுல வீசுமே.. காட்டுமல்லி பூ.. அதோட வாசனை வீசுது பேபி..” என்றவாறே அவளது கழுத்தில் இருந்து தோள்பட்டையில் தனது இதழ்களால் கோலமிட, அவனது மீசையின் குறுகுறுப்பில் உடல் சிலிர்த்தாள் அதிதி. என்ன தான் அசோக்கை விரும்புவதாக நினைத்துக் கொண்டிருந்தாலும், அவனின் விரல் நுனியை கூட அதிதியின் மேல் படவில்லை.. அவள் படவிடவில்லை.. ஆனால், இவனின் ஸ்பரிசத்தில் தன் உடல் தன் பேச்சு கேட்காது குழைவதை உணர்ந்தவளுக்கு, தன்னை எண்ணி வெட்கமாக இருந்தது. தான் இவ்வளவு கேவலமானவளா? என்று தன்னைத் தானே தாழ்வாக எண்ணிக் கொண்டிருந்தவளின் கண்ணில் இருந்து நீர் அருவியாக கொட்ட, அவளது முகத்தை தனக்கு எதிரே இருந்த கண்ணாடியில் பார்த்த அக்னி சாஹித்யா,
“சாரி.. பேபி.. சாரி..” என்றவாறே அவளிடம் இருந்து விலகினான். அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவன், அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டவன்,
“எனக்கு உன்கூடவே இருக்கணும்.. உன்னையப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்..” என்றவன் அவளது முகத்தை இரு கரங்களால் பற்றி, தன் புறம் திருப்பினான். அவளது கண்ணீரை தன் இரு பெருவிரல்களால் துடைத்தவன், அவளது கண்ணை நேருக்கு நேராக பார்த்து,
“நான் பெண்மையை அறியாதவனில்ல.. ஆனா, அதுக்காக பொறுக்கியுமில்ல.. விளக்குல விழுந்த வெட்டிக்கிளியாய் என்னைத் தேடி வந்த பொண்ணுங்களைத் தான் தொட்டுருக்கேன்.. ஆனா, நீ.. நானா.. என் மனசால தொட்டப் பொண்ணு.. உன்னைய என்னால இப்பயில்ல.. எப்பவும் விட முடியாது.. உனக்கு என் மேல நம்பிக்கை வரணும்னா.. நீ என்கூட வந்து இருக்கணும்.. உனக்கு எந்த கட்டத்துல என்கூட இருக்க விரும்பவில்லையோ.. அப்ப நீ என்னை விட்டு போகலாம்.. அந்த வாக்குறுதி நான் உனக்கு தர்றேன்.. ஆனா, அதுக்கு நீ என்கூட இருக்கணும்..” என்றவன் பேசிக்கொண்டிருக்க, பட்டென கதவைத் திறந்து கொண்டு, உள்ளே நுழைந்தான் ஆல்பர்ட். அவர்கள் இருந்த நிலையைப் பார்த்தவன்,
“சாரி பாஸ்.. உங்களை டிஸ்டர்ப் பண்ணணும்னு வரலை.. பட், நம்ம கேசினோ பார்ல தீப்பிடிச்சுட்டதா.. ஃபோன் வந்துருக்கு..” என்று சொல்ல சட்டென அதிதியை விட்டு எழுந்தவன், தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கைகளை விட்டவாறே,
“நான் உனக்கு ட்டூ டேஸ் டைம் தர்றேன்.. அதுக்குள்ள நீ உன்னோட திங்ஸ் ரெடி பண்ணி வைச்சுருக்கணும்.. நான் வந்து உன்னைய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்..” என்று கூறிவிட்டு கதவிற்கு அருகில் செல்ல,
“ஹலோ.. மிஸ்டர் அனகோண்டா.. நான் வரமாட்டேன்.. கேட்டுச்சா.. நான் வரமாட்டேன்..” என்று கத்த,
“சீ யூ ஆன் ஆஃடர் டூ டேஸ் பேபி..” என்றவாறே, அவள் கூறிய எதையும் காதில் வாங்காது சென்றிருந்தான் அக்னி சாஹித்யா.
“ட்டூ டேஸ்ல.. உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போறியா? அதுக்கு நான் இங்க இருந்தாத் தானே நீ கூட்டிட்டு போவ?” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள், அவனிடம் இருந்து தன்னை மறைத்துக் கொள்ள, வேறிடம் செல்ல திட்டமிட்டாள். பாவம், அவளைப் பற்றிய ஜாதகமே, அவனது கையில் இருப்பதைப் பற்றி தெரியாத பேதைப் பெண், அவனிடம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட முடிவெடுத்திருந்தாள். கண்ணாமூச்சி ஆட்டத்தில் வெல்வது யாரோ?
very nice Sis