ATM Tamil Romantic Novels

3 கணவன்

 

3 கணவன்

“என்ன வெளியிலேயே அசமந்தமா நின்றுகிட்டு இருக்க.. உள்ளே வா மகி..”

கமலா அழைத்த போது தான் சிலைக்கு உயிர் வந்தது. அஜு அருகில் இல்ல..

“அவர் எங்கேம்மா?”

“உள்ளே இருக்கார் வா .. இந்த பித்துகுளித்தனம் என்னைக்கு உன்ன விட்டு போவுமோ? முப்பத்திரெண்டு வருஷம் வச்சி தள்ளிட்டேன். அர்ஜுன் எப்படி இருந்தாலும் இருந்துட்டு போவட்டும்.. அடஜஸ்ட் பண்ணி அங்கு தான் இருக்கணும்.. இங்கு வந்து மட்டும் கண்ணை கசக்கிறாதே.. வா வந்து அந்த இடியப்பத்த பிழிஞ்சி கொடு.. ராகவ் வந்திருக்கான்..” எப்பவும் போல அம்மா பல்லவி பாடி உள்ளே அழைத்து போக.. இது போல ஆயிரம் முட்களை கிரீடமாய் சூடியவள்.. அடிமையா பின்னாடியே போனாள்.

அங்கோ ரெண்டு கையில் ரெண்டு பிள்ளைகளை பிடித்துக் கொண்டு.. “போய்ட்டு வரோம் அங்கிள்” என்று தலை வாசல் தாண்டி வெளியில் வர ஆரம்பித்தான் அஜு..

இருங்க மாப்பிள்ளை மதியம் சாப்பிட்டுட்டு போகலாம்..

நிச்சயமா வரோம் ஆன்ட்டி.. இப்போ எனக்கு வெளியில் வேலை இருக்கு.. போணும்

நீங்க போங்க.. மகி இருக்கட்டும்..

முக்கியமா மகி தான் வேணும்.. அவன் பாட்டுக்கு வெளியில் போய்ட்டான்..

அவன் பின்னாடியே தாயை திரும்பி பார்த்துக்கொண்டே போனாள் மகி.

ஏதாவது லோன் வாங்க பேங்க் கூட்டிட்டு போராரோ? விசனப்பட்டாள்.

முன்னாடி சிட்டுக்கள் அமர்ந்திருக்க.. இவளா பின்னாடி போய் அமர்ந்தாள்

அஜுவும் கண்டுக்கல

அங்கிள் இந்த கார் நல்லாருக்கு .. இது பேர் என்ன? அட்சயா கேட்க..

அதன் பேரை மழலையில் சொன்னான் ஸ்ரீ

அட்சி இது விலை எவ்ளோ தெரியுமா?

எவ்ளோடா ஸ்ரீ

பத்து கோடி..

ஓ காஸ்ட்லில.. அட்சயா விலாட்டு போல சும்மா விட்டாலும் மகிழாவுக்கு நெஞ்சடைத்தது. அம்மாடியோவ்! அவ்ளோ பணக்காரானா இவன்..

கார் பற்றி தெரியாதவள் கரண்ட் பிடிச்ச காக்கா போலானாள். அஜு கிட்டே இன்னும் சரியா நெருங்காததால் அப்பவே கேட்க முடில.. சகஜம் வரல. இவளுக்கு தான் இந்த தொல்லை.. அவனோ ஆறு கடல் ஏழு மலை கூட ஈஸியா தாண்டுவான் போல.. இரவே அதுக்கு சாட்சி.

ரெஜிஸ்தர் ஆபிசுக்கு அழைத்து போனான்.. உள்ளே போய் பார்த்து அவனே விவரம் எழுதி கொடுத்து.. கையெழுத்து மட்டும் இவளிடம் வாங்க.. நல்லவன் தான் போல என்றே தோணுச்சு மகிழாவுக்கு.. அது திருமண பதிவு தொடர்பான முதல் படி.

அங்கிருந்து ஒரு அரைமணி நேரம் பயணம்.. ஒரு தனி வீடு கிட்டே நிறுத்தினான்.

அதை தன்னிடமிருந்த சாவி கொண்டு திறந்து உள்ளே அழைத்து போனான்.. புத்தம் புது பர்னிஷ்டு தனி பங்களா..

நா வாடகைக்கு எடுத்திருக்கிறேன்.. இதற்கு உன் ஷேர் பத்தாயிரம்.. தர முடியுமா?

ஒன்னும் புரிலன்னாலும்

தரேன் அஜு சொல்லிட்டாள்..

பெரிய நடு ஹாலில் அழகிய வேலைபாடுகளோடு கூடிய ஊஞ்சல் இருந்தது.. கண்ணில் ஒற்றி கொள்ளலாம் அம்புட்டு அழகு அவ்வீடு.

உனக்கு பிடிச்சிருக்கா? பாப்பா அட்சயா கிட்டே கேட்டான் அஜு..

அம்மா போலவே அவளும் வெட்கத்துடன் தலையாட்டினாள்.

நான் பாப்பா இல்ல.. பிக் கேர்ள்..

சாரி சாரி அட்சயா அக்கா.. மில்லி மீட்டர் அளவுக்கு அஜு அழகாய் சிரிக்க..

முத முறை மகிழாக்கு அவன் மீது நல்லெண்ணம் உருவானது.. தன் மகளிடம் இணக்கமாய் பேசுவது கூட அடிநாதமாயிருக்கலாம்.

போங்க அக்கா இல்ல.. சிணுங்கி மம்மி இந்த அங்கிள பாருங்க.. என்று தாயின் சேலைக்குள் மகள் பம்ம..

நோ நோ அங்கிள் சும்மா விளையாட்டுக்கு சொல்றாங்க.. டேக் இட் ஈசி அட்சயா..

ஆமா அட்சி அப்பா அப்படித்தான் கிரேசி மேன் டோன்ட் கிரை கையை ஆட்டி தோளை குலுக்கி நீட்டி முழக்கி மழலையாய் ஸ்ரீயும் சமாதானம் சொன்னான். அத்தனையிலும் ஓவர் நடிப்பு பந்தா ஸ்டைல் ரசனையாயும் இருந்தது.

ஆ! வென்று மெய் மறந்து வாய் திறந்தே ஆச்சர்யம் கொண்டாள் மகிழா.

தான் பார்த்த குழந்தைகளில் இந்த குட்டி அறிவு அபாரம் வியந்தாள்.

பேசியது போதாதென்று அட்சயா கையை பிடித்து வீட்டின் ஒவ்வொரு அறையா கூட்டிக் கொண்டு போய் இது அதுக்கு இப்படி யூஸ் பண்ணனும் இந்தந்த பொருள் இந்தந்த இடத்தில் வைக்கணும் எது வைக்கக்கூடாதுனு பாடம் எடுக்க.. ஒன்னுக்கு ஏழு ஒணக்கம் எடுக்கும் மகள் அட்சயா கூட ஆமாம் போட்டது மகிக்கு அதிசயம்.

மகன் வேஸ்டா ரொம்ப பேசறான் அப்பன் அதை மட்டும் தான் விவரமா பேசுரான் ம்ம்ம்.

ஆண் பெண் ஈர்ப்பு கவர்ச்சியில் தான் உலகமே சுத்துதாம். மகிக்கு ஏனோ அதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.

பாலாவோடு முதன்முறை இருந்தெதெல்லாம் பிரசாதம் வாங்கும் சேவார்த்தி போல அவ்ளோ பயபக்தியோடு கடந்திருக்கிறாள். வாழ்ந்தது மூணு மாசம் சண்டைகள் இருபது கூடல்கள் எண்ணிக்கை பத்து கூட இருக்காது… ஊர் மெப்புக்கு உடனே பிள்ளை தணிச்சது.. அம்மா வீட்டிலேயேயிருந்து இவளுக்காய் அப்பா பேசி ஒரு அஞ்சு மாசம் கருத்து வேறுபாடு.. வளைகாப்பு பண்ண வென்று எட்டாம் மாச இறுதியில் திருச்சியிலிருந்த மாமியார் வீட்டுக்கு போனது பாலாவை யாரோ போல பார்த்தது கடைசி..

அப்பாக்கும் பாலாக்கும் வார்த்தை தடிக்க, சீதன பொருள்கள் பூரா முடியோடு கூடிய சீப்பு கூட அனுப்பி வைக்கப்பட்டது அவமானம்.

வயிற்றில் நிறை மாச குழந்தை வைத்துக்கொண்டு மனம் பட்ட பாடு.. இது போல எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது கடவுளே! சப்தமில்லாது அழுதது மகிழாக்கு மட்டுமே தெரியும்.

பிள்ளை பெற்றவன் முகம் காணாத அனாதையாய் அட்சயா.. மனங்கள் செழிப்பாயிருந்தால் தான் உடல்கள் இன்பத்தை நுகரவே முடியும்.

இங்கேயோ பாலையாய் போன உடலில் அஜு நீர் ஊற்றியா பாசனம் செய்யப் போறான்… இப்பவும் மகிழாவின் நிலைப்பாடு எடுத்துக்கோ பொது மகளிர் போல.. பிரதிபலிப்பு இருக்காது . அவ்ளோ தான்.

அன்றும் இரவு வந்தது பூனையும் அருகே வந்தது.

 

 

 

 

 

3 thoughts on “3 கணவன்”

  1. Ajju ne avlo periya panakaarana…achu paapa ku uncle nu sollikodukama appa nu solradhukku innum kaalam poganumo..magi manasula ajju varanum..superr

  2. இப்படி பும் மனித உரிமைகள் பறி போகுமோ திருமண வாழ்க்கையில் பாவம் பெண்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top