ATM Tamil Romantic Novels

காதல் கனிச்சாறே நிறையே

2.

 

சாலையில் நடந்த சலசலப்பில் நூறுக்கு யாரோ அழைத்து விட்டார்கள்…

 

இங்க என்ன கூட்டம் எல்லாம் கிளம்பு கிளம்பு ஏம்மா இங்க என்ன பிரச்னை… யார் தகராறு பண்றது…

 

என கூட்டத்தை பிளந்து கொண்டு வந்தது அந்த நீல நிற டி வி எஸ்… அதில் இருந்து இறங்காமலே கேள்வி பறந்தது…

 

வணக்கம் ஏட்டய்யா…இந்த அம்மா தான் நடுரோட்ல வண்டி விட்டு தகராறு பண்ணுது… மாரி

 

 

சார் இந்த பொறுக்கி… என கனி தொடங்கும் போதே தடுத்தான் ஹர்ஷா…

 

நத்திங் சார் சின்ன ஆக்சிடென்ட் அவ்வளவு தான்…!! பூசி மொழுகினான்… தோண்டி துருவினால் பல விஷயங்கள் வெளி வரும்…தேவை இல்லாமல் அது எதுக்கு…?? உயர்ந்த எண்ணம் தான்…

 

 

“டேய்ய் என்ன நடுரோட்ல நின்னு ரௌடி தனம் காட்டுறியா…இறங்கி வந்தேன் முட்டிக்கு முட்டி தட்டி தொலைச்சு போட்டுவேன்… கிளம்புடா இங்க இருந்து… அடிங்க கிளம்புங்குறேன்…!!” என லத்தி கொண்டு எட்டி அடித்து விரட்ட….இல்லாதவனை பார்த்தால் எகிற தோன்றும் போல…

 

சார் இன்னா இந்தா போய்கினோம்…!!டேய்ய் பேமானி சொன்னா கேட்டியா நீ… பாரு காக்கி சட்டை கைமா பண்ண ரெடியா கிறான் வாடா போலாம்…

 

என்னடா அங்க சத்தம்…?? அதட்டால்…

 

 “ஒண்ணுமில்ல சார், நீ டென்ஷன் ஆயிக்காத இந்தா போய்கினோம்…!” ஓடுறா ஓடுறா வென குணாவின் கையை பற்றி இழுத்து சென்று மறைந்தான்…

 

 என்ன அடி போலீஸ் அடி மறக்குமா என்ன…??போன கேஸ்ல ஒடிச்சி விட்ட காலையே இன்னும் ஒட்டுன பாட காணோம்…எதுக்கு வம்பு… வலி தாங்க முடியலல…

 

ஏன் ஹர்ஷா என்னை தடுத்த அவன் தப்பிச்சு போறான் பாரு… அவன் தலை மறைந்த பின் இவளுக்கு துணிச்சல் வந்த ஒட்டிக்கொண்டது போல…

 

 “ஏம்மா பார்த்தா பெரிய இடத்து பொண்ணு மாதிரி தெரியுது உனக்கு ஏன்மா இந்த ரவுடி பசங்களோட வீண் தகராறு… அவன் எல்லாம் பாக்குறதுக்கு தான் பயந்த மாதிரி பம்முவானுங்க… சந்தர்ப்பம் கிடைச்சா கழுத்து அறுத்து போட்டு போயிட்டே இருப்பானுங்க தேவையா உனக்கு இதெல்லாம்… கிளம்பு… தம்பி புத்தி சொல்லி கூட்டிட்டு போ ப்பா…!!” வந்த வேலை முடிந்து விட்டது கிளம்பி விட்டார்…

 

இவளுக்கு தான் அவர் அட்வைஸ் பிடிக்கல… இளமையும் துடிப்பும் இருக்கும் போது அப்படித்தான் அடுத்தவன் என்ன சொல்றது நாம என்ன செய்யறது… நினைப்பு இங்கு அநேகம் மீறி சொன்னால் பூமர் ஆகி விடுகிறார்கள்… இப்போதெல்லாம் அட்வைஸ் பண்ண வாய் திறக்க கூட அச்சமாக உள்ளது… எல்லாம் பூமர் மயம் ஹாஹா டூ கிட்ஸ் ஜோகம்…

 

உர்ர்ர்ர் என முகத்தை வைத்து கொண்டு நேர் சாலையை வெறித்தப்படி அமர்ந்து வந்தவளை பார்க்க சகியலை…

 

“ஹே சில் கனி… இன்னுமா அந்த பிரச்சனையை இழுத்து படிச்சிட்டு இருக்க… அவன் கிடக்கிறான் தேர்ட் ரேட் பொறுக்கி… சொன்னது ஹை கிளாஸ் பொறுக்கி…

 

” அவனை நினைச்சாலே எனக்கு கோபம் குமுறிக்கிட்டு வருது… உன்னால தான் இன்னைக்கு அவன் தப்பிச்சான்… **** ***… மொழிபெயர்ப்புக்கே தகுதியற்ற சுத்த ஆங்கில வார்த்தை அவள் கோவத்தின் வடிகாலா

 

” இன்ஃப் கனி நாளைக்கு நான் இந்த நாட்டுலே இருக்க மாட்டேன்…இருக்குற நேரம் நம்மள பற்றி மட்டும் யோசி ஹனி… என கனியின் கைகளை தொட்டான்…

 

 காரை அந்த கடற்கரை சாலையின் அரவமற்ற இடத்தில் நிறுத்திவிட்டு…

 

 தன் சீட் பெல்ட் விலக்கிவிட்டு கனியை பார்த்தப்படி அமர்ந்தவன்…

 

அவள் கைகளை தன்னுள் பொதிந்து கொண்டு…

 

 நாளை இருந்து ஆறு மாசம் பிசினஸ் டிரிப்காக யூரோப் போறேன்… அதுவரை உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் கனி… மை டியர் மை ஸ்வீட் பேபி என கொஞ்சிய படி அவள் இதழில் முத்தமிட…

 

அவனை கை நீட்டி தடுத்து விட்டால் கனி…

 

“நோ ஹர்ஷா ஐ அம் நாட் இன் மூடு… நான் ஏற்கனவே அந்த பொறுக்கியால செம இரிடேஷன்ல இருக்கேன்…

 

ஹே கம் ஆன் யார் உன் மூடை எப்படி சரி பண்ணனும் எனக்கு தெரியும்… முத்தம் ஒன்றே மதி அந்த நாரைக்கு

 

“ப்ச் சொன்னா கேளு ஹர்ஷா…!!!” என எரிச்சல் மண்டியது…

 

“ஓகே ஓகே கூல் கனி… சரி முதல்ல நீ ரிலாக்ஸ் ஆகு அப்புறம் பார்த்துக்கலாம்… வா ரிசார்ட் போவோம் ஃப்ரெண்ட் எல்லாம் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க அவங்கள பார்த்தா நீ ஆட்டோமேட்டிக்கா சில் ஆகிடுவ… அங்க நிறைய சர்ப்ரைஸ் உனக்காக காத்துட்டு இருக்கு…!!”என சில்மிஷ சிரிப்பில் அவன் உடல் குலுங்கியது…

 

“வேணாம் வண்டிய வீட்டுக்கு விடு…!!”எரிச்சல் 

 

ஹே கனி ஏன் இப்படி பண்ற அங்க நமக்காக எல்லாம் காத்துட்டு இருப்பாங்க… டோன்ட் சீட் தெம்…பதற்றம் 

 

 

இப்போ வீட்டுக்கு விடுவியா மாட்டியா ஹர்ஷா… முடியுமா முடியாதா…??

 

அவங்க எல்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஸ் கனி… அவனுக்கு அவளை எப்படியாவது ரிசார்ட்க்கு கூட்டி சென்று விட வேண்டும்… 

 

அதுதான் இந்த ராட்சசனின் கூடாரம் இதுவரை அவன் அழைத்து சென்ற சிட்டுக்கள் எல்லாம் நெறியோடு திரும்பியதில்லை… ஏன் உயிரோட திரும்பியது கூட வெகு சிலரே… சிலந்தி வளையில் சிக்கிய சில்வண்டான கதை ஏராளம்… முழுங்கி ஏப்பம் விட்டவன்…

 

இன்று இவள்…

 

ஆனால் அதற்கு வேறு காரணம் … கசாப்பு காரனிடம் காரணம் கேட்பது அபத்தம்…

 

 

கார் டோரை திறந்து குதிக்க இறங்கினாள் பயந்து விட்டான்… ஓரளவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடம்தான் ஆனால் பெரும் பணக்காரப் புள்ளிகளின் சொகுசுபங்களாக்கள் இருக்கும் போது போலீஸ் ரோந்து வருவது இயல்பே அப்படி யார் கண்ணில் மாட்டி ரஸபாசம் ஆகி பெரிய சீன் ஆக விரும்பல… சாமர்த்தியம் தான்…

 

“ஹே கனி வெயிட் வா வீட்டுக்கு தான நானே கார்ல கொண்டு போய் விடுறேன்… ப்ளீஸ் மா ப்ளீஸ்… கெஞ்சலில் இறங்கினான் கை தேர்ந்த நடிகன்… அவார்ட்லாம் கொடுக்க முடியாது போடா… நாக்கு தள்ள நாலு கதை எழுதறவனுக்கே கொடுக்க மனசில்லையாம்… ஒரவஞ்சனை ஹாஹா

 

அமைதியாக மீண்டும் ஏறி கொண்டாள் கார் கனி வசிக்கும் புற நகர் நோக்கி சென்றது அவளை வீட்டு வாசலில் இறக்கி விட்டவன்… “ஆனாலும் உனக்கு பிடிவாதம் ஆகாது…!!” அதிருப்தி காட்டி விட்டு பறந்து சென்றான் அவன் ஏமாற்றம் எல்லாம் ஸ்டீயாரிங்கில் காண்பிக்க வண்டி ஆகாயத்தில் பறந்தது…

 

அதெப்படி அவன் கட்டி பிடிக்கலாம்… இதுவரைக்கும் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஆ தான இருந்தோம்… அவன் மேல எனக்கு ஃபீலிங்ஸ் இருக்கா இல்லையா கேக்காம அது என்ன அநாகரிகமாக முத்தம் கொடுக்கறது…

 

 அந்த தருணத்தை இப்பொழுது நினைத்தாலும் பதட்டமும் படபடப்பும் வந்து ஒட்டி கொள்வேன் என்கிறது…

அதில் இருந்து தப்பிப்பதற்கே கோவம் என்னும் முகமூடி அணிந்து கொண்டாள்…

 

ஹ தெரிந்தோ தெரியாமலோ இன்று அவள் தப்பிக்க அந்த பொறுக்கி ஒருவகையில் காரணம் அந்த மட்டும் அவனுக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறாள்… அவளுள் தேவதை 

 

ச்சீ ச்சீ போயும் அந்த **** பன்னாடைக்கா இன்னைக்கு மூட் ஸ்பாயில் ஆனதே அவனால தான்… அவளுள் அரக்கி…

 

எது எப்படியோ இனி அவன் யாரோ நான் யாரோ… அவன் இருக்குற பக்கம் கூட தலை வச்சி படுக்க மாட்டேன்… உறுதி பூண்டாள்… நாளை விடியல் வரை கூட அதற்கு ஆயுள் இல்லை… தெரியாதே…

 

அந்த அர்த்த ராத்திரியில் தன்னையும் தன்மானத்தையும் காக்க ஓடினாள் ஓடினாள் ஓடி கொண்டே இருந்தாள்…

 

 

வாழ்க்கை ஒரு அழகான பொய்…

அதில் நிஜம் ஒரு கொடிய அரக்கன்…

இன்று அவளை விடாமல் துரத்துகிறது…

  

 

4 thoughts on “காதல் கனிச்சாறே நிறையே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top