3.
வீசும் வாடையில் கூட உப்பு மட்டுமே… போட்டு இருக்கும் முண்டா பனியன் புகுந்து சுழட்டி செல்லும் நெய்தல் காற்று…
கையில் இருக்கும் துண்டு பீடி தீரும் வரை விட போவதில்லை…கருத்த உதடு வழி இழுத்து மூக்கு வழியாக புகை வெளியேற்றியதில் அத்தனை ஆணவம்… அங்க நுரையீரல் இரண்டும் கருகுது அது தெரியல… அந்த நேர சிற்றின்பம் மட்டுமே அவன் கருத்து…
உலக பொது ஆய்வின் படி புகைப்பவர்களை விட அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்பு என்கிறது… இவனை மாதிரி நாலு பேர் இருந்தா பரலோகம் தான்…டத்துவம்
குணாவை பொறுத்த வரை சந்தோசமா அது கடல்… வருத்துமா அதுவும் கடல்… கோவமா அதுவும் கடல்…தனிமையா அப்போவும் கடல் மட்டும் தான்டா கேஸ்…ஏனாம்…??
பிறந்தது வளரந்தது…?? தெரியாது ஞாபகம் இல்லை…!! அப்பா அம்மா சொந்தம் பந்தம்…?? எவனுக்கு தெரியும்… குற்றுயீராய் கண் திறந்த போது கடல்… அனாதரவாக நின்ற போது அரவணைத்த கடல் அலை… மறு உயிர் கொடுத்ததால் கடல் அவன் அன்னை… பசிக்கு சோறு போட்ட மக்கள் அவன் சொந்தம்… அவனை போல வந்த மாரி கூட தோஸ்த்
சோறு போட்ட இடம் சொர்க்கம் வாழ்வான்… விரட்டி விட்டால் போக கடல்… படகில் மீன் பிடிக்க சென்றால் திரும்ப குறைந்தது நற்பத்தி ஐந்து நாள்… அதுவரை கரைக்கு பை பை…
ஆக மொத்தம் அவனுக்கு தெரிந்தது கடல், இருப்பிடம் கடலோரம்…தொழில் கடல்சார்ந்தது… அவன் ரசனை எல்லாம் கடல் கடல் துண்டு பீடி சுண்ட கஞ்சி…அவ்வளவே… அதை தாண்டி பெண் மோகம் கலவி பிடிக்கல விருப்பமில்லை தாண்டி நானே ஒண்ட வந்தவன் எதுக்கு இன்னொரு ஒன்றை உருவாக்கணும்… நிச்சயம் இல்லாத வாழ்க்கை… எப்போ என்ன வேணாலும் நடக்கலாம்…
“வம்பு சண்டையா வா வா… அடுத்தவனுக்கு நல்லதா யோசிக்காத அடிச்சி துக்கு… அவன் எவனா இருந்தா எனக்கு என்ன…?? இப்படி ஏவல் தெரியாது பல இடங்களில் கை வச்சி பாதி நாள் ஜெயில் தான்… மாமியார் வீடு அச்சு அடிச்ச சோறு வாரத்துல ஒரு நாள் கரி மீன் போதும் போங்கடா… மத்தப்படி பெண்கள் எல்லாம் தெய்வங்கள் அவள் ஒருத்தியை தவிர…
“பஜாரி… நடு ரோட்டில் ஆம்பள மேல கை வைக்கிது… பொண்ண பெத்தவடா சொன்னா பொறுக்கியப் பெத்த வச்சுக்கிறாங்க…ஃபில் பன்னிக்கு
நோவுதா …? மாரி
சீ வலியா வெல்வேட் துணி வச்சி துடைச்சு விட்டமாதிரி இருந்துச்சு… பூட்ஸ் காலால் அடிவாங்கி அடிவாங்கி இறுகி போன கன்னம் தொட்டு அவள் கை தான் நோவு எடுத்து இருக்கும்… இருக்குமா…?? கண்டிப்பா இருக்கும்…
என்னடா உன் சேதி அடி வாங்குனது போய் இம்புட்டு ரசிக்குற…கத அப்படி போவோதோ…மாரி
“த்து *** நாய… நம்ம பொழப்பே நாறுது இதுல பொம்பள சாபம் வேறையா… அப்படியே இருந்தாலும் அந்த பஜாரி கிட்ட சிக்கி சீரழியறதுக்கு இந்த கடல்ல விழுந்து சமாதி ஆகலாம்… சனியனே சரக்கு அடிக்கிற மூடே போச்சே… குடிசைக்கு போறேன் நாயே பின்னாடியே வந்து சேர்… எழுந்து கொண்டான் குணா…
அடிச்ச போதை எல்லாம் இறங்கி போச்சே… இனி அவள் சங்காத்தமே வேணாம் அவ திசை இருக்குற பக்கம் ஒரு பெரிய கும்பிடு போ… என கைய மேல தூக்கி கும்பிட…
அவனை இடித்து தள்ளி கொண்டு ஓடினால் அவன் தேவகன்னிகை…ஆஹா வேண்டியதும் வரம் தந்து விட்டாளே…
கூடவே நாலு பூதகணங்களுடன்… பக்கா பாடிகார்டு போல நாலு எருமை மார்ல முட்டுன மாறி வலிக்குதே… ஸ்ஸ்ஸ் எம்மாஆ…
நெஞ்சை நீவிய படி மேலே எழும்பியவன் தன் குடிசை நோக்கி நடக்க அதற்குள் காப்பாத்துங்க காப்பாத்துங்க கூக்குறள் அவன் காலை கட்டி போட…
வேணாம்டா குணா நமக்கு அவ சங்கார்த்தம் ஏ வேணாம் காத்தாலை தான் அவ அறஞ்சதுக்கே செவுள் கிழிஞ்சு போச்சு சொன்னா கேளு … அது எப்படி போனா நமக்கின்னா வேலை பார்த்து போயிகினே இரு திரும்பிடாத திரும்பிடாத… சொன்ன மனசாட்சியா எவன் மதிச்சான்…
கால்கள் பெண்ணின் கூக்குரல் வந்த திசையை நோக்கி பயணித்தது…விதி வலிய இழுத்து இட்டது…
பத்து தடிமாடுகளை பறந்த பறந்த சமாளிச்சு கடல் பன்னி வேர்த்து போய் நிக்க…
சாமி பிராண நாதா என்னே உங்கள் வீரம் என வியந்து முன் உவந்து தன்னை கொடுத்து காதல் ஆற்றில் இறங்கி கன்னிகையின் கட்டழகு மேனியில் துடுப்பு போட்டு மோக கரையை கடந்த காலமும் உண்டு …
ஆனால் இங்கோ கட்டி அணைத்து முத்தம் பெற வழி இல்லை பெண்களின் மனம் சுருங்கி விட்டது…
“இன்னாமே உன் பிரச்சனை… ஒன்னு பிரச்சனை இருக்குற எடத்துல நீகீற இல்லை நீகீற எடத்துல பிரச்சனை கீது… என்னவோ போ சரி சரி அடுத்த பிரச்சனை வரங்கட்டியும் ஊட்டுக்கு கிளம்பு போ… சொல்லியதோடு கடமை முடிஞ்சி போச்சு கிளம்பி விட்டான்…
நாலு அடி தூரம் கடந்தும் பொல்லா அழகு சிலை அசையவே இல்லை
“இன்னாமே உன்னான்ட ஒரே பேஜாரா கீது… இது என்ன மாதிரி ஏரியா தெரியுமா… வரவன் எல்லாம் யோக்கியனா இருக்க மாட்டான் தூக்கி நாஸ்தி பண்ணி போட்டா கூட கேட்க நாதி கிடையாது… பாக்க படிச்ச பொண்ணு மாறி கீற சொல்லிக்கினு கிறேன் கமுக்காம இருந்தா இன்னா அர்த்தம்… எந்திரி உன் ஊடு வரைக்கும் வந்து வுட்டு வரேன்…
புத்தி சொன்னவனை புரியாத பார்வை ஒன்றை வீச…
பகலில் எருமைக்கு ஆன்னா ஆவன்னா தெரியாது போதை ராவுல அவள் அபிநயம் விளங்கிடும்…
உன்னான்டா கத்தி கத்தி அடிச்ச போதை இறங்கி போய்டுச்சு… நல்லதுக்கு காலமில்லை ஆனா என் கண்ணெதிரே நாசமா போகாத… என் கண் காணாமல் எங்கனா போயிடு…போயே போய்ட்டான்…
காக்கவிருந்த கடைசி பற்றும் பறந்து விட்டது இனி இறுகபற்ற யார்
Interesting 👌