ATM Tamil Romantic Novels

மயக்கத்தில் ஓர் நாள் 3

அத்தியாயம் 3

 

“என்னாச்சு அக்னி? இதை யார் பண்ணிருப்பா?”

 

“யாரு பண்ணாங்கன்னு இன்னும் பத்து நிமிஷத்துல உங்களுக்கு சொல்றேன் பெரியண்ணா..”

 

“இங்கப்பாரு அக்னி.. இன்னும் நாலு மாசத்துல எலெக்ஷன் வருது.. என்னோட இன்னொரு பக்கம் யாருக்கும் தெரியக்கூடாது.. நான் மந்திரியா அந்த சீட்டுல உட்காருறதுக்கு யாரெல்லாம் தடையா இருக்காங்களோ.. அத்தனை பேரையும் போடு..”

 

“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த டெல்லியைத் தவிர வேற யாரும் நமக்கு குடைச்சல் கொடுக்கமாட்டாங்க..”

 

“ஆமா.. நானும் கேள்விப்பட்டேன்.. பார்டர் தாண்டி போக வேண்டிய நம்ம சரக்கை போலீஸ்கிட்ட மாட்டிருக்கானாம்.. இப்ப ஜெர்மனில நாம ஆரம்பிக்கப் போற பிஸ்னஸையும் தடுக்க ஏற்பாடு பண்ணிட்டுருக்கான்.. இந்த கேசினோ எரிஞ்சதுக்குக்கூட அவன் காரணமாக இருக்கலாம்..”

 

“அவன் யாரா வேணா இருக்கட்டும்.. என்னோட பிஸ்னஸ் மேல கை வைச்சா.. அது என் மேல கைவைச்ச மாதிரி.. அவனை போட்டுட்டு தான் இனி உங்கக்கிட்ட பேசுவேன்..” என்ற அக்னி சாஹித்யா, தனது ரகசிய குடோனிற்கு செல்ல, அங்கே அவனது ஆட்கள் நான்கு பேரை வைத்து கைப்போட்டு வைத்திருந்தனர். 

 

“ஆல்பர்ட்.. யாரு இவங்கல்லாம்?”

 

“நம்ம கூடவே இருந்துக்கிட்டு.. நமக்கு எதிரா வேலை செஞ்சுருக்காங்க பாஸ்.. அந்த டெல்லி சொல்லித் தான் நம்ம கேசினோவை கொழுத்திருக்காணுங்க..”

 

“அப்படியா? அப்போ எதுக்கு கட்டி வைச்சு பேசிட்டுருக்கீங்க?” என்றவன், தன்னருகே இருந்த துப்பாக்கியை எடுத்து சுடப்போக,

 

“சார்.. சார்.. எங்களை விட்டுடுங்க சார்.. எங்க குடும்பமே அந்த டெல்லிக்கிட்ட மாட்டிக்கிச்சு.. அவங்களை காப்பாத்த எங்களுக்கு வேற வழி தெரியல..” என்று காலில் விழுந்த நான்கு பேரையும் கூர்ந்து பார்த்தவன்,

 

“அதுக்கு எனக்கு துரோகம் பண்ணுவீங்களா? திரும்பவும் எனக்கு இதை பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” என்று அவர்களை பார்த்து கூறியவன்,

 

“ஆல்பர்ட்.. இனி இவனுங்க யாரும் இங்க இருக்கக்கூடாது.. இவனுங்களை அசாம்ல இருக்குற வெடி ஃபெக்டரிக்கு அனுப்பிடு.. இவனுங்க குடும்பத்தை பாதுகாப்பா தமிழ்நாட்டுக்கு அனுப்பிடு.. இவனுங்க எப்பவும் நம்மாளுங்க கண் பார்வைல இருக்கணும்..” என்றவன் தன் வேலை முடிந்ததென கிளம்பி, அவனை பயத்துடன் பார்த்தனர் அந்த நான்கு பேரும்.. அவனை எதிர்த்தவர்களின் உயிரை மட்டும் விட்டுவிட்டு, உயிரைக் தவிர மற்ற அனைத்தையும் எடுத்துவிடுவான். தனது பெயருக்கேற்ப அக்னியாக வலம் வந்தவனின் மனதில் தென்றலாய் வீசிக் கொண்டிருந்தாள் அதிதி. 

 

 இரண்டு நாட்கள் கழித்து, அலுவலகம் வந்த அதிதியை ஷாலினி யோசனையுடன் பார்த்தாள். 

“என்னடி இது?  அதுவும் இப்படி.. கண்ணுல கூலிங் க்ளாஸ்.. தலைல முக்காடு.. கழுத்துல ஸ்கார்ஃப்.. முகத்துல மாஸ்க்.. என்னடி எங்கேயாவது கொள்ளையடிக்கப் போறியா?” 

 

“ஸ்ஸ்ஸ்ஸ்.. மெதுவா பேசுடி.. நீ பேசுற சத்தத்தை கேட்டு.. அந்த அக்னி இங்க வந்துடப் போறான்..”

 

“யார் அக்னி? எதுக்கு இங்க வரணும்?”

 

“அதான் அன்னைக்கு..”

 

“ம்ம்.. சொல்லு என்னைக்கு?”

 

“அதான் நான் ஃபுல்லா குடிச்சிருந்தேனே?”

 

“ஓ! அன்னைக்கு என்னாச்சு? நீயும் அசோக்கும் ஏதாவது தப்பு தண்டா பண்ணீங்களாடி? எனக்கு தெரியும்.. அந்த பொறுக்கி.. ராஸ்கலை..”

 

“இல்லடி.. அசோக் எதுவும் பண்ணல..”

 

“கிராதகி.. அப்போ நீ தான் அவனை ரேப் பண்ணியா? இருபடி இதோ வர்றேன்..”

 

“ஹேய்.. ஹேய்.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னுமில்ல.. நான் அவனை மீட் பண்ணவேயில்ல..”

 

“அப்போ.. அன்னைக்கு நைட் எங்க? யார் வீட்டுல  தங்குன?”

 

“அக்னி சாஹித்யாவோட.. ஹோட்டல்ல..”

 

“யாருடி அக்னி சாஹித்யா? பெயர் புதுசாயிருக்கு.. எனக்கு தெரியாம அவனை லவ் பண்றியா?”

 

“ச்சே.. ச்சே.. நானாவது அவனை லவ் பண்றதாவது.. அவன் பார்க்க அழகாகத்தான் இருக்கான்.. ஆனால் அதுக்காகலாம் அவனை லவ் பண்ண முடியாது..”

 

“என்னடி உலர்ற? தெளிவா  சொல்லு.. முதல்ல இந்த வேஷத்தை எல்லாம் எடு..” என்ற ஷாலினி, அதிதியின் கழுத்தை சுற்றியிருந்த ஸ்கார்ஃப்பை விலக்க, அவளது கழுத்தில் அக்னி சாஹித்யாவின் பல் தடங்களினால் சிவந்து போயியிருக்கும் இடங்கள் கண்ணில் பட்டன. 

 

“என்னடி இது? இப்படி கண்ணிப் போயிருக்கு? அப்போ.. நீயும் அவனும்..”

 

“ம்ம்ம்.. எல்லாம் முடிஞ்சு போச்சு..”

 

“என்னடி? ஏதோ.. நிகழ்ச்சி முடிஞ்சு போன மாதிரி சொல்ற?” 

 

“வேற என்ன சொல்ல சொல்ற? நடந்துடுச்சு.. அவ்வளவு தான்.. இப்ப என்ன பண்ணணும்குற? அவனையே கல்யாணம் பண்ணிக்க சொல்றியா?”

 

“அவன் நல்லவாயிருந்தா தப்பில்லயே?”

 

“நல்லவனா இருந்தா தப்பில்ல.. ஆனா கேங்ஸ்டரா இருந்தா? மாஃபியாவா இருந்தா?”

 

“என்னடி சொல்ற?”

 

“ம்ம்ம்.. உனக்கு சாஹு பத்தி தெரியுமா?”

 

“ஓரளவு தெரியும்.. நியூஸ் பேப்பர்லயும் ஆர்டிக்கல்ஸ்லயும் படிச்சுருக்கேன்.. சாஹு.. தி ஒன் ஆஃப் தி கிங் மேக்கர்..”

 

“ம்ம்.. அவன் தான் அக்னி சாஹித்யா..”

 

“அப்போ மாஃபியா கூடவாடி பழக்கம் வைச்சுக்கிட்ட?”

 

“ம்ம்.. நாளைக்கு அவன் தேடி வரும் போது, நான் அவன் கண்ணுலயே படமாட்டேன்..”

 

“ஏன்டி.. லிட்டில் ஜானாகப் போறியா?”

 

“காமெடி பண்ணாதடி.. அவன் என்னைய கண்டுபிடிக்கவே முடியாத இடத்துக்கு போக போறேன்..”

 

“அப்படி என்ன இடம்?”

 

“பொறுத்திருந்து பாரு.. சிறுத்தை சிக்கும்.. சில்வண்டு சிக்காது டி..”

 

“அப்படி எங்க தான்டி போய் ஒளியப் போற?”

 

“அசோக் வீட்டுல..”

 

“அதானே பார்த்தேன்?! என்னடா இன்னும் அவன் பேரை சொல்லையேன்னு..”

 

“நான் அசோக்கைத் தானே லவ் பண்றேன்..”

 

“இங்கப்பாரு.. அதிதி.. உனக்கு இருபத்தி மூணு வயசாகுது.. இன்னும் சின்ன குழந்தை மாதிரி பேசாத.. அசோக் மேல உனக்கு இருக்குறது ப்ரெண்ட்ஷிப்.. அட்ராக்ஷன்.. அவ்வளவு தான்.. அவனே மூவ்வான் பண்ணிட்டான்.. நீ இன்னும் அவனையே நினைச்சிட்டுருக்க?”

 

“எனக்கு வலிக்குதுடி.. ரெண்டு வருஷம் பழகிருக்கோம்.. அவ்வளவு சீக்கிரம் அதையெல்லாம் எப்படி மறக்க முடியும்?”

 

“சரி நான் உன்னைய ஒன்னு கேட்கட்டா?”

 

“ம்ம்..”

 

“அந்த அக்னி உன்னைய தொடும் போது.. உனக்கு அசோக்கோட ஞாபகம் வரலையா? நல்லா யோசிச்சு பதில் சொல்லு..” என்று ஷாலினி கேட்க, அவனோட அவளிருந்த தருணங்களை யோசித்து பார்த்தாள் அதிதி. அந்நேரத்தில் அவளுக்கு அசோக்கோ.. வேற யாரும் ஞாபகத்திற்கு வரவில்லை. அக்னியும் அவளும் மட்டுமே தனியுலகத்தில் சயனித்திருக்க, இனிய கனவு போல் இருந்தது. நடந்தவற்றை எண்ணிப் பார்த்தவருக்கு குழப்பமாக இருந்தாலும், தன் தலையை உலுக்கிக் கொண்டாள். 

 

“அதிதி.. என்னோட ஊர்காரன் ஒருத்தனோட வீடு இருக்கு.. அங்க நாம ரெண்டு பேரும் போயிடலாம்..”

 

“நீ.. உன்னோட டாடி.. மம்மி?”

 

“நிரந்தரமா தங்கப் போறதில்லையே?! சும்மா ரெண்டு மூணு நாள் போயிட்டு வருவோம்.. மம்மியோ டாடியோ.. ஏதாவது கேட்டா.. அவுட்டோர் விசிட்னு சொல்லிடு..”

 

“என்னால உனக்கும் பிரச்சனை..”

 

“அதெல்லாம் ஒன்னுமில்ல.. எங்க ஊர்காரன்னு சொன்னேன் பாரு.. அவரைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. எங்க ரெண்டு பேருக்கும் என்கேஜ்மெண்ட் நடந்துருச்சு.. அடுத்த மாசம் கல்யாணம்.. அதுனால நீ ஃபீல் பண்ணாத..”

 

“ம்ம்.. ஓகே.. அப்போ நான் என்னோட திங்க்ஸை பேக் பண்ணி எடுத்துட்டு வந்துடட்டுமா?”

 

“வா.. நான் அவனுக்கு போன் பண்ணி நாம வர்ற விஷத்தை சொல்லிடுவோம்.. அவன் இப்போ ஊர்ல இல்ல.. குலந்தெய்வ கோயிலுக்கு பத்திரிகை வைக்க போயிருக்கான்..”

 

“ஓ! அப்போ இப்பவே போலாமா?”

 

“ம்ம்.. போகலாம்.. ஆனா, அதுக்கு முன்னாடி நீ இந்த ஃபைல்ல சைன் பண்ணு..” என்று ஷாலினி பேசிக் கொண்டிருக்க, கட்டிடத்தின் வாசலில் வரிசையாக கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு எட்டி பார்த்த அதிதி,

 

“போச்சு.. போச்சு.. அவன் வந்துட்டான்.. நான் சொல்லல அவன் வந்துட்டான்..” என்று புலம்பியவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவள், 

 

“உனக்கு நம்ம எம்டி ராஜகோபால் சாரை பத்தி தெரியும் தானே? அப்படியெல்லாம் நடக்க விட்டுற மாட்டாரு.. நீ உன்னோட வேலையைப் பாரு..” என்று ஷாலினி கூறிக் கொண்டிருக்க,

 

“எக்யூஸ்மீ மேம்..” என்றபடியே உள்ளே நுழைந்த பெண்ணொருத்தி, 

 

“மேம் உங்கக்கிட்ட பேசணும்னு உங்க க்ளைண்ட் ஒருத்தர் வெளில வெயிட் பண்ணிட்டுருக்காரு..” என்று கூற,

 

“யாரு?” என்ற அதிதியின் பார்வை முழுவதும் ஜன்னலில் தெரிந்த வாயிற்புறம் தான் இருந்தது. 

 

“அது யாரோ நமச்சிவாயம்னு சொன்னாரு..”

 

“அந்த ப்ளேடு கேஸா?” என்ற ஷாலினி, அதிதியின் புறம் திரும்பி, 

 

“ஆமா.. அதிதி.. ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து உன்கிட்ட பேசணும்னு சொன்னாரு.. நான் தான் உனக்கு உடம்பு சரியில்லை.. ரெண்டு நாள் கழிச்சு வரச் சொன்னேன்.. மனுஷன் டான்னு இன் மாதிரி கரெக்டா வந்து நிக்குறாரு.. நீ போய் அவர்கிட்ட என்னன்னு பேசிரு.. இல்ல.. எனக்கு போன் மேல போன் அடிச்சு.. சாகடிச்சுருவான்..” என்று கூற, அலுவலக காத்திருப்போர் அறைக்கு விரைந்தாள் அதிதி. அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த நமச்சிவாயம்,

 

“இப்ப உங்க உடம்புக்கு பரவாயில்லையா?” என்றபடி தன் கையில் இருந்த பழக்கூடையை அவள் முன்னே வைக்க, 

 

“இல்ல.. இதெல்லாம் எதுக்கு?” என்று பழக்கூடையை மறுத்தவள், “இப்ப பரவாயில்ல.. உங்க மெயில் பார்த்தேன்.. நீங்க சொன்ன மாதிரி அந்த சொத்தையும் கணக்குல காண்பிச்சுருலாம்.. இதுக்காக நீங்க இவ்வளவு தூரம் வர வேண்டிய அவசியமில்ல.. உங்களுக்கு ஏதாவது டீடெயில்ஸ் தெரியணும்னா.. என்னோட அசிஸ்டன்ட் நாகேஷ்ராவ்.. ஆபிஸ்ல தான் இருக்காரு.. நீங்க அவரை போய் பாருங்க..” என்று கூறியவளின் கையைப் பிடிக்க போன நமச்சியாவத்தின் முன்னே வந்து நின்றிருந்தான் அக்னி சாஹித்யா. இப்படி அவன் சட்டென வருவானென்று அறியாத அதிதி, திருதிருவென முழித்துக் கொண்டு நிற்க, நமச்சிவாயம் நீட்டிய கையோடு தன் கையை இணைத்துக் கொண்ட அக்னி சாஹித்யா, 

 

“ஹலோ.. மிஸ்டர்.. ஐம் சாஹு.. மிஸ் அதிதியோட ஃபியான்சி..” என்றுக் கூற, அங்கிருந்து தலைதெறிக்க ஓடினான் நமச்சிவாயம். ஓடுபவனையே பார்த்துக் கொண்டிருந்த அதிதியின் இடையை வளைத்து தன் கையில் ஏந்திக் கொண்டவன்,

 

“நம்ம வீட்டுக்கு போலாமா பேபி?” என்றவாறே அங்கிருந்து புறப்பட,

 

“என்னைய கீழ இறக்கி விடு.. இல்ல எங்க எம்டி ராஜகோபால் சார்கிட்ட சொல்லிடுவேன்..” என்றவனை மிரட்டியவளின் கன்னத்தில் முத்தமிட்டவன்,

 

“இந்த கம்பெனியோட ஓனரே நான் தான்.. நீ யார்கிட்ட வேணாலும் சொல்லிக்கோ.. ஆனா, என்கூடவே இரு..” என்றபடியே தன் காரில் அள்ளிக் போட்ட,

 

“வெயிட்.. வெயிட்.. நான் என்னோட திங்க்ஸை எடுக்கணும்..” என்றபடியே மீண்டும் காரில் இருந்து கீழே குதித்து, தனது அறைக்குள் சென்றவள், தன் கைப்பையை எடுத்துக் கொண்டு, பின்புற ஜன்னல் வழியாக வெளியே குதித்தாள். ஷாலினி கூறியிருந்த முகவரியைத் தேடி அதிதி ஓட, ஓடும் அவளை கள்ளச்சிரிப்போடு பார்த்திருந்தான் அக்னி சாஹித்யா. தேடி வரும் வண்டை விட்டு மலரால் ஓட முடியுமா? 

 

1 thought on “மயக்கத்தில் ஓர் நாள் 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top