அத்தியாயம் 5
பெரிய அரண்மனை போன்ற வீட்டின் வாசலில் வந்து நின்றது அந்த உயர் ரக கார். அதில் இருந்து மழையும் கழுத்துமாக இறங்கியவன், வலது புறமாக அமர்ந்திருந்தவளின் கார் கதவை திறந்துவிட்டான்.
“வா.. வீட்டுக்காள்ள போகலாம்..”
“ஆர்த்தி?”
“ஆர்த்தியா? யாரவங்க? இங்க வர்றேன்னு சொன்னாங்களா?”
“அய்யோ.. இதுக்கூட தெரியாதா? கல்யாணம் பண்ணி வந்தவங்களுக்கு திருஷ்டி கழிக்க ஆர்த்தி சுத்துவாங்களே.. அதை தான் கேட்டேன்..”
“ஓ?! என்கூட இருக்குறவங்க.. இவங்க தான்..” என்றவாறு தனது பாதுகாவலர்களை காண்பித்தவன்,
“சமைக்காரம்மா இருக்காங்க.. ஆனா, இப்போ அவங்க பேத்திக்கு ஏதோ விசேஷம்னு ஊருக்கு போயிருக்காங்க.. நாளைக்கு காலைல வந்துடுவாங்க..” என்றவன் அவளை உள்ளே அழைத்துச் செல்ல,
“இவங்க யாருக்கும் என்னைய இன்டிட்யூஸ் பண்ணி வைக்கமாட்டீங்களா?” என்றவாறே அவர் பின்னோடு செல்ல,
“இது ஃபர்ட் ஃளோர்.. என்னோட கோ- ஆர்டினேட்டர்ஸ் தங்குவாங்க.. இது செண்ட் ஃளோர்.. நம்மளோடது..” என்றவாறே தனது அறைக்கு அழைத்துச் செல்ல,
“இங்க பூஜை ரூம்னு எதுவுமில்லையா? கல்யாணம் பண்ணி வந்தவங்க.. ஃபர்ஸ்ட் விளக்கேத்துவாங்கன்னு கேள்விபட்டுருக்கேன்.. ஆனா, இங்க அந்த மாதிரி எதுவும் இருக்குற மாதிரி தெரியலை..” என்றவாறே அவ்வறைக்குள் நுழைந்தாள். அங்கிருந்த கட்டிலில் கால் நீட்டி படுத்தவன்,
“எனக்கு அந்த மாதிரி எந்த செண்டிமெண்ட்ஸும் இல்ல.. உனக்கு வேணும்னா நாளைக்கு ஆல்பர்ட்கிட்ட சொல்றேன்.. ஏற்பாடு பண்ணி தருவான்..” என்றபடியே கண்மூடினான்.
“ஹேய்.. என்ன இங்க படுத்துருக்கீங்க? எந்திரிச்சு.. உங்களோட ரூம்கு போங்க..”
“இது என்னோட ரூம்..”
“அப்போ என்னோட ரூம்?”
“இது தான் உன்னோட ரூமும்.. நம்மோட ரூம்”
“நான் உங்ககூட எல்லாம் இருக்கமாட்டேன்.. எனக்கு இன்னொரு ரூம் வேணும்..” என்றவாறு தன்னருகே நின்று கொண்டிருந்தவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன்,
“கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் நானும் தனித்தனியா இருக்குறது நல்லாருக்குமா?” என்றவாறே அவளது கழுத்துக்கு கீழே முத்தமிட்டவனை விலக்கியவள்,
“இதெல்லாம் தெரியுது.. மத்தது எதுவுமே தெரியமாட்டேங்குது..” என்றவளை தன் மேல் அள்ளி போட்டுக் கொண்டவனை விலக்கியவாறு,
“அதெல்லாம் முடியாது.. உங்களோட ஒரே ரூம்ல என்னால இருக்க முடியாது.. எனக்கு உங்களைப் பத்தி எதுவுமே தெரியாது.. நாம இன்னும் சரியா பழகக்கூடயில்ல..”
“அப்போ நாம லவ் பண்ணலாமா?”
“அதுக்கு ஒருத்தருக்கு ஒருத்தரை பிடிக்கணும்”
“உனக்கு என்னைய பிடிக்கலைன்னு சொல்லு.. ஒத்துக்குறேன்.. ஆனா, எனக்கு உன்னைய மட்டும் தான் பிடிச்சுருக்கு.. நான் உன்னைய மட்டும் தான் லவ் பண்றேன்..” என்றவன் அவளது இடையை இறுக்கிப் பிடிக்க,
“விடுங்க.. விடுங்க..” என்று அவனது கையை இடையில் இருந்து எடுக்க முயன்றவளின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டவன், அவளது இதழ்களை சிறைபிடித்தான். மெல்ல, மெல்ல பூவில் இருந்து தேனருந்தும் வண்டை போல் அவளது இதழ் ரசத்தை அருந்தியவனின் கைகள் எல்லை மீற, அதனை தடுக்க முயன்று தோற்று போனவள், அவளையும் அறியாமல் அவனோடு இழையத் தொடங்கியிருந்தாள். அவளோடு மீண்டும் மீண்டும் கூடி களைத்தவன், விடியும் தருவாயில் அவளை தன் மீது போட்டுக் கொண்டு உறங்கத் தொடங்கியிருந்தான். காலையில் கண்விழித்து எழுந்தவள், வெற்று மேனியுடன் அவனை ஆடையாக அணிந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். தன்னையும் மீறி, தன் உடலும் உணர்வும் அவனது அருகாமையை ஏற்றுக் கொள்வதை எண்ணி, விநோதமாக உணர்ந்தாள். தனக்கு பிடிக்காத ஒருவனின் விரல் கூட, தன்னை தொட ஒரு பெண் அனுமதிக்கமாட்டாள். அப்படியென்றால் இவனை எனக்கு பிடித்திருக்கின்றதா? என்று யோசித்தவாறே, குழந்தையென உறங்குபவனை பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது உறக்கம் கலையாது, போர்வையால் தன்னை சுற்றுக் கொண்டு, அங்கிருந்து எழுந்து செல்ல முயல, அவளது கையைப் பிடித்து இழுத்தவன், அவளை மீண்டும் தனது கையணைப்பிற்குள் கொண்டு வந்தான்.
“தூங்கு.. நைட் நீ சரியா தூங்கல.. சீக்கிரம் எந்திரிக்கணும்னு இங்க யாரும் உன்னைய கட்டாயப்படுத்தமாட்டாங்க.. தூங்கு..” என்றவன், சிறக்கைக்குள் தன் குஞ்சினை வைத்து அணைக்கும் பறவையைப் போல் தனது அணைப்பினால் அவளுக்கு கதகதப்பூட்டினான்.
****************************************************
“பிக்கப்.. பிக்கப்.. ச்சே..” என்றவாறு கோபத்துடன் தனது போனை தூக்கிப் போட்டு உடைத்தாள் ஆயிஷா.
“இதோட இன்னைக்கு மட்டும் ஏழாவது ஃபோன் நீ உடைக்குற.. என்னாச்சு? எதுக்கு இந்த டென்ஷன்?”
“அண்ணா.. நான் பார்க்க அழகாயிருக்கேனா?”
“என் தங்கச்சிக்கு என்ன குறை? தேவதை மாதிரியிருக்கம்மா..”
“நான் டேலண்டானவளா?”
“கண்டிப்பா.. நம்ம அம்மா ஆரம்பிச்ச பிஸ்னஸை இப்ப வரைக்கும் சக்சஸ்ஸா நடத்திட்டு போயிட்டுருக்கம்மா.. அப்போ நீ டேலண்டான பொண்ணு தானே?”
“அப்புறம் எதுக்கு அண்ணா அவன் என்னைய அவாய்ட் பண்றான்?”
“எவன்?”
“அவன் தான் சாஹு?”
“வாட்? அந்த அக்னி சாஹித்யாவா?”
“ம்ம்.. நாங்க ரெண்டு பேரும் ஒன்னா காலேஜ் படிச்சோம் அண்ணா.. அப்போ இருந்தே அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நானும் அவனை எப்படியாவது மடக்கிடலாம்னு ட்ரை பண்றேன்.. மடங்குவேணாங்குறான்..”
“அவன் அண்ணோட எனக்கு பகையிருக்கேமா.. கண்டிப்பா அவன் தான் வேணுமா?”
“எனக்கு எப்படியாவது அக்னி வேணும்ண்ணா..”
“இந்த டெல்லியோட தங்கச்சி ஆசைப்பட்டு அவளுக்கு நான் வாங்கிக் கொடுக்காததுன்னு ஏதாவது இருக்கா? கண்டிப்பா அந்த அக்னி சாஹித்யா, உனக்கு தான்..”
“தாங்க் யூ சோ மச் அண்ணா..” என்ற ஆயிஷா சந்தோஷத்தில் துள்ளி குதிக்க,
“இங்கப்பாரு ஆயிஷா.. உன்னோட அக்னி உனக்கு வேணும்னா, இந்த அண்ணன் சொல்றதையும் நீ கேட்கணும்..”
“எனக்கு அக்னி கிடைப்பான்னா.. நீங்க சொல்ற எதை வேணாலும், நான் செய்யுறேன்..” என்று சிரித்த ஆயிஷாவை வைத்து தனது திட்டத்தை நிறைவேற்ற எண்ணினான் டெல்லி. டெல்லியும் அன்வரும் ஒன்றாக ஒரே நேரத்தில் மும்பைக்கு வந்தவர்கள். ஆரம்பத்தில் சிறு சிறு குற்றங்கள் செய்து வந்தவர்கள், பின்னர் இணைந்து போதைகடத்தலில் ஆரம்பித்து, இப்போது ஆள் கடத்தல் வரை செய்து கொண்டிருக்கின்றனர். தங்களது ஈகோவின் காரணமாக பிரிந்தவர்கள், இப்போது முழு எதிரியாக மாறி நிற்கின்றனர். அன்வரை எதிர்ப்பதாக நினைத்து, அக்னி சாஹித்யாவை பழிவாங்க எண்ணினான். எப்படியாவது அக்னியையும் அன்வரையும் வீழ்த்திவிட்டு அவர்களது இடத்திற்கு சென்று விட துடித்துக் கொண்டிருந்த டெல்லியின் கையில், துருப்பு சீட்டாக ஆயிஷாவும் அக்னி சாஹித்யாவும் கிடைக்க, தான் செய்ய வேண்டிய காரியங்களை திட்டம் தீட்ட தொடங்கினான் டெல்லி. அக்னி சாஹித்யாவின் வெளிநாட்டு வாணிபத்தை சரிக்க எண்ணினான். அவனுக்கு வரும் ஆர்டன்களை குறைந்த விலையில் முடித்துக் கொடுப்பதாக வாக்களித்தவன் அதற்கான தொழில் முறை சந்திப்பதையும் ஏற்பாடு செய்திருந்தான். இதையறியாத அக்னி சாஹித்யாவோ, தனது புது மனைவியின் ஆசைக்கேற்ப தனது வீட்டின் முன்புறம் கோயிலைக் கட்டினான். தினமும் அக்கோயிலில் அமர்ந்து பூஜை செய்யும் தன் மனைவியின் அழகை தூரத்தில் இருந்து ரசிப்பனே ஒழிய, அக்கோயிலுக்குள் செல்லமாட்டான். இதனை பார்த்துக் கொண்டிருந்த அதிதியோ, தங்களது அறைக்குள் அவன் இருக்கும் போது,
“உங்களுக்கு சாமி மேல நம்பிக்கை இல்லையா?” என்று கேட்க,
“உனக்கு இப்போ என்ன தெரியணும்? எதாயிருந்தாலும் நேரா கேளு..” என்றவாறே அவள் அமர்ந்திருந்த சோஃபாவில் அமர்ந்தவன், அவளது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவளது கையை எடுத்து தானே, தனது முடிக்குள் அலையும் படி செய்தவரின் நோக்கம் புரிந்து கொண்டவள், தன் கைகளால் அவனது முடியை கோதியபடியே,
“இல்ல.. இங்க நீங்க.. அப்புறம் உங்க பாடிகார்ட்ஸ் மட்டும் தான் இருக்கீங்க.. உங்க அப்பா அம்மா.. சொந்தபந்தம் யாருமேயில்லயா? எதுக்கு கோயிலுக்குள்ள நீங்க வரதில்ல?” என்று கேட்க, தன் தலையை கோதிக் கொண்டிருந்தவளின் கையை எடுத்து தன் கழுத்தோடு சுற்றிக் கொண்டவன்,
“எனக்கும் அம்மா அப்பான்னு குடும்பம் இருந்தாங்க.. என்னோட அப்பா அம்மா ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடி வந்து, லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க.. இந்த மும்பை மாநகரம் என்னோட அப்பாக்கு ரொம்ப புதுசு.. அப்போ ஒருகுடும்பம் வந்து அவங்களுக்கு உதவி செஞ்சது.. என்னோட அம்மாவை அவரோட தங்கச்சியா பார்த்துக்கிட்டாரு.. அவங்களுக்கு ரொம்ப நாளா குழந்தையில்ல.. பதினாலு வருஷம் கழிச்சு அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துச்சு.. பிறந்ததும் அந்த பொண்ணை இதோ.. இந்த கையால் தான் வாங்கினேன்.. அப்போ எனக்கு ஏழு வயசு.. அவளைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணாங்க.. அந்தளவுக்கு ரெண்டு குடும்பமும் அவ்வளவு அன்னியோன்யமா இருந்தாங்க.. எங்கப் போனாலும் நானும் என் தங்கச்சியும் பாப்பும்மாவை தூக்கிட்டு தான் போவோம்.. அன்னைக்கு பாப்பும்மாவோட ஃபர்ஸ்ட் பர்த் டே.. நாங்க எல்லாரும் கோயிலுக்கு போகலாம்னு கார்ல போனப்போ.. அந்த விபத்து.. அதுல என்னோட மொத்த குடும்பமும் போச்சு.. அப்புறம் அங்க இருந்த அனாதை ஆஸ்ரமத்துல இருந்து, அன்வருங்குறவர் தன்னோட புள்ளையா தத்தெடுத்துகிட்டாரு.. இப்போ நான் அன்வரண்ணாவோட சொத்தை பராமரிக்குற கருவி மட்டும் தான்.. இப்ப இந்த உலகத்துல எனக்கிருக்குற ஒரே சொந்தம் நீ மட்டும் தான்.. ப்ளீஸ்.. நீயும் என்னைய விட்டு போயிடாத..” என்றவன் அவளது இடையை சுற்றி வளைத்து, வயிற்றில் முகம் புதைத்தான். அழுதிருப்பான் போலும்.. அவனது சூடான தண்ணீர் அவளது வயிற்றில் பட, அவனது முகத்தை நிமிர்த்தியவள், அவனது கண்ணீரில் இதழ் பதித்தாள்.
“பிராமிஸ் மீ.. நீயும் என்னைய விட்டு போகமாட்டேல?” என்றவனுக்கு பதிலாக நெற்றியில் முத்தமிட்டாளே ஒழிய, அவனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. குழந்தையென தன் மடியில் தலை வைத்து படுத்திருந்தவனின் முதுகில் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தவளுக்கு, ஏனென்று தெரியாது கண்ணில் நீர் சுரந்தது. எதற்கு அழுகுகிறோம்? ஏன் அழுகுகிறோம்? என்று தெரியாமலேயே அழுதவள், அவனை மடியில் சுமர்ந்தவாறே, அமர்ந்தபடியே தூங்கிவிட்டாள். காதலுக்கும் அன்பிற்கும் நூலளவு தான் இடைவெளி.. அன்பு காதலாக மாறுமா?
Super sis ❤️