அத்தியாயம் 6
“பாஸ்.. நம்ம ஃபாரின் டீலர்ஸ் எல்லாம் இப்போ டெல்லிக்கூட மீட்டிங்ல இருக்காங்க.. இப்படியே போனா.. நமக்கு ஒரு ஆர்டர் கூட கிடைக்காது.. நம்ம கேசினோவும் நம்ம கையை விட்டு போயிடும்.. இம்போர்ட் எக்ஸ்போர்ட் பிஸ்னஸும் கையவிட்டு போயிடும் பாஸ்..”
“நான் டெல்லியை மீட் பண்ணணும்..”
“பாஸ் அது இப்போ உங்களுக்கு சேஃப் கிடையாது..”
“ஆல்பர்ட் நான் சொல்றதை செய்.. இப்போ ஆஸ்திரேலியால ஒரு பிஸ்னஸ் மீட்டிங்குக்கு போறேன்.. நான் திரும்பி வந்ததும், டெல்லியோட பிஸ்னஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணு.. அப்புறம் நான் ஊர்ல இல்லாதப்போ.. அதிதியை பத்திரமா பார்த்துக்கோங்க..” என்ற அக்னி சாஹித்யா, தனதறையை நோக்கி சென்றான். அங்கே காட்டன் புடவையில் தேவதையாக மின்னிய தன் காதல் மனைவியை பின்புறமாக அணைத்தவன்,
“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..” என்று கூறியவாறு, அவளை தன் புறம் திருப்ப,
“இப்ப உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு என்னைய தொந்தரவு பண்ணிட்டுருக்கீங்க.. விடுங்க.. நான் ஆஃபிஸ் போகணும்..” என்று கூற, அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்,
“இப்ப வேணாம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. அதுவரைக்கும் உன் ஃப்ரெண்ட் ஷாலினியே ஆஃபிஸை பார்த்துக்கட்டும்..” என்று கூற,
“நான் என்ன பண்ணணும்? பண்ணக்கூடாதுன்னு நீங்க சொல்லாதீங்க.. வேலைக்கு போறதும் போகாததும் என்னோட இஷ்டம்.. நான் கண்டிப்பா போய் தானாகணும்.. க்ளைண்ட்டோட மீட்டிங் இருக்கு..” என்றவள் கோபத்தில் முகம் சிவக்க, உதடு சுளித்தவாறே கூற, தன் இரு கைகளையும் மேலே தூக்கியவாறே,
“ஓகே.. ஓகே.. நீ ஆஃபிஸ் போ.. பட், உன்கூட அந்தோனியும் ராபர்ட்டும் வருவாங்க.. அவங்களை நீ தடுக்கக்கூடாது.. இதை மட்டுமாவது கேளு.. ப்ளீஸ்..” என்றவனின் முகத்தை பார்த்தவளுக்கு மறுக்கத் தோன்றாது,
“ம்ம்.. ஓகே..” என்றாள்.
“சீக்கிரம் ரெடியாகி கீழே வா.. உனக்கு முக்கியமான ஒருத்தரை இன்டிட்யூஸ் பண்ணணும்..”
“யாரு?”
“கீழ வந்தா.. உனக்கே தெரிஞ்சுடும்.. சீக்கிரம் வா..” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு கீழே செல்ல, அங்கே வயதான பெண் ஒருவரும் இளம் பெண் ஒருவரும் காத்திருப்பதை கண்டாள்.
“இவங்க?”
“இவங்க தான் சமையல் காரம்மா பெயர் புஷ்பா.. அப்புறம் இது அவங்களோட பேத்தி பெயர் சஷ்மிதா..”
“ஓ?!”
“புஷ்பம்மா.. இவங்க தான் என்னோட பொண்டாட்டி.. இந்த வீட்டுல எனக்கென்ன உரிமையிருக்கோ.. அதைவிட ஒருபடி மேலயே இவங்களுக்கு இருக்கு.. அதுனால எனக்கு கொடுக்குற மரியாதையை இவங்களுக்கும் கொடுக்கணும்.. நான் இந்த வீட்டுல இல்லேன்னாலும், இவங்களை நல்லா பார்த்துக்கணும்.. இவங்க உங்களோட பொறுப்பு..” என்றவன் கூற,
“அப்படியே ஆகட்டும் தம்பி.. நான் இவங்களை நல்லா பார்த்துக்குறோம்.. அப்புறம் தம்பி.. என்னோட பேத்தி பன்னிரண்டாவது வரைக்கும் படிச்சுருக்கா.. ஊர்ல கல்யாண ஏற்பாடு பண்ணிருந்தோம்.. பிடிக்கலைன்னு விஷத்தை குடிச்சுட்டா.. எப்படியோ காப்பாத்திட்டோம்.. இவளுக்கும் இங்கேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்தா நல்லாருக்கும்..” என்று அப்பெண்மணி கேட்க,
“இனிமே இங்க எல்லாமே என்னோட பொண்டாட்டி தான் புஷ்பம்மா.. அவங்க என்ன சொல்றாங்களோ.. அதுபடி பண்ணுங்க..” என்றவன் அங்கிருந்து செல்ல, பதிலுக்காக அதிதியின் முகத்தை பார்த்தான் புஷ்பா.
“நீ என்ன மேஜர்?”
“சயின்ஸ் மேஜர் மேம்..”
“ஓ! மேம் இல்ல.. அக்கா.. ஓகே..” என்றவள், தன்னருகே நின்றிருந்த புஷ்பாம்மாவைப் பார்த்து,
“இந்த பொண்ணு இங்கேயே இருக்கட்டும்.. எனக்கு தெரிஞ்ச காலேஜ்ல சேர்த்து விடுறேன்.. நல்லா படிக்கட்டும்..” என்று கூற, அவளுக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தார் புஷ்பாம்மா. உணவு மேஜைக்கு வந்தவள், அங்கே அக்னி சாஹித்யா மட்டும் அமர்ந்திருக்க, அவனது பாடிகார்ட்ஸ் அனைவரும் நின்றிருக்க கண்டாள். அவனருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தவள்,
“நாம ரெண்டு பேருக்கு மட்டும் தான்னா எதுக்கு இவ்ளோ பெரிய டைனிங் டேபிள்?” என்றவாறே தன்னுடைய தட்டில் இரு இட்லிகளை எடுத்து வைத்தவள்,
“அவங்க எல்லோரும் நம்மக்கூட சேர்ந்து சாப்பிடலாமே?” என்று அக்னி சாஹித்யாவை பார்த்து கூறியவள்,
“சஷ்மி.. நீ இங்க வா.. என் பக்கத்துல உட்கார்ந்துக்கோ..” என்றாவாறே, தன்னருகே நின்றிருந்த சஷ்மிதாவின் கையைப் பிடித்து இழுத்தவள், தனக்கு அடுத்திருந்த நாற்காலியில் அமர வைத்தாள். அவளது செயல் இதழோரம் சிரிப்பை வரவழைக்க, தனது பாதுகாவலர்கள் அனைவருக்கும் தனது கண்களால் அனுமதியளித்தான் அக்னி சாஹித்யா. அவனது அனுமதியில் மகிழ்ச்சி அடைந்த அனைவரும் அப்பெரும் உணவு மேஜையில் அமர்ந்து உணவருந்தத் தொடங்கினர். வீட்டில் அடைந்து கிடப்பது சோம்பலாயிருக்க, அரண்மனை போலிருக்கும் வீட்டைச் சுற்றி வந்தாள் அதிதி. அதனைப் பார்த்த அக்னி சாஹித்யா,
“ராபர்ட்.. எதுக்கும்.. அதிதிக்கு பாடிகார்ட்டா இரு..” என்று கூறிவிட்டு, தனது கம்பெனிக்கு கிளம்ப, அவனும் அவள் செல்லும் இடத்திற்கெல்லாம் செல்ல கடுப்பானாள் அதிதி. அன்றிரவு வீட்டிற்கு வந்த அக்னி சாஹித்யாவிடம் முகத்தை வைத்து கொண்டு திரிந்தாள். சிறு குழந்தை போல் கோபம் கொள்பவளை குறுஞ்சிரிப்புடன் பார்த்தவன், அவளை பின்னால் இருந்து அணைக்க,
“ப்ச்.. விடுங்க.. என் மேல நம்பிக்கையில்லாம தானே ராபர்ட்டை எனக்கு காவலா போட்டுருக்கீங்க?” என்று அவனது கையை தட்டிவிட்டவள், அங்கிருந்து செல்ல, அவளை பின்தொடர்ந்து செல்ல எண்ணியவனின் கைப்பேசி அழைக்க, அதனை எடுத்து காதில் வைத்தவன்,
“ம்ம்.. ஓகே.. ஆல்பர்ட்.. ட்டூ மினிட்ஸ்.. ரெடியாயிரு..” என்றவாறே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன், கண்ணில் ஹாலில் சோஃபாவில் அமர்ந்திருந்த அதிதி படவே, அவளருகே சென்று அமர்ந்தான்.
“இப்ப எதுக்கு முகத்தை இப்படி தூக்கி வைச்சுட்டுருக்க?”
“என் முகம்.. நான் எப்படி வேணா தூக்கி வைச்சுப்பேன்.. ஏன்? அதுக்கு கூட எனக்கு உரிமையில்லையா?”
“இந்த வீட்டில உனக்கில்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு? எல்லாம் உன்னோட நல்லதுக்காக தான்..”
“என்னோட சுதந்திரத்தை பறிக்குற எந்த நல்லதும் எனக்கு வேணாம்..”
“ஓகே கூல்.. கூல்.. இப்ப என்ன ராபர்ட் உனக்கு பாடிகார்ட்டா வரக்கூடாது.. அவ்வளவு தானே? ஃபைன்.. வீட்டுக்குள்ள நீ எங்க வேணா போகலாம்.. பட், நீ ஆஃபிஸ் போகணும்னா.. அட்லீஸ்ட் அவனையாவது கூட கூட்டிட்டு போ.. அவன் உனக்கு எந்த தொந்தரவும் கொடுக்கமாட்டான்..”
“ஓகே.. அதுவும் ஆஃபிஸ் வரை மட்டும் தான்..”
“ஓகே டீல்.. இப்ப என்கூட கொஞ்சம் வெளில வரைக்கும் வர்றியா?”
“எதுக்கு?”
“நான் இப்போ பிஸ்னஸ் ட்ரிப்பா ட்டூ டேஸ் ஆஸ்திரேலியா போறேன்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுவேன்.. ஆனா, அதுவரைக்கும் தாக்குப்பிடிக்க, உன்னோட ஸ்பரிசம் வேணும்.. நீ என்னைய மிஸ் பண்ணுவியோ? இல்லையோ? நான் உன்னைய ரொம்ப மிஸ் பண்ணுவேன்..” என்றவன் அவளை பின்னால் இருந்து அணைக்க,
“என்னப் பண்றீங்க? நடு ஹாலில் நின்னுகிட்டு.. விடுங்க.. யாராவது பார்த்துடப் போறாங்க..” என்றவள் அவனிடம் இருந்து விலக,
“நீ எப்பவும் என்கிட்ட இருந்து விலகுறதுலேயே குறியா இருக்க.. ஆனா, எனக்கு உன்னைய மட்டும் தான் ரொம்ப பிடிச்சிருக்கு.. ஓகே.. சீ யூ.. நீ போய் தூங்கு.. நான் கிளம்புறேன்..” என்றவன் அவளை விட்டு விலகிச் செல்ல, அவனது கையைப் பிடித்து தடுத்தவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவனது உயரத்திற்கு தன் நுனிக்கால்களால் எம்பி, அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.
“இதனால எல்லாம் நான் உங்களை விரும்புறேன்னு அர்த்தமில்ல.. இது ஜஸ்ட்.. ஒரு காம்ளிமெண்ட்.. தட்ஸ் ஆல்..” என்றவள், அதற்கு மேல் அங்கு நிற்காது, தனதறைக்கு ஓடிச் சென்றாள். அவளது மாற்றத்தை எண்ணி, மனதுக்குள் மகிழ்ந்தவாறே, வெளிநாட்டிற்கு பயணமானான் அக்னி சாஹித்யா. அடுத்த நாள் காலையில்,
“அக்னி.. அக்னி..” என்றவாறே வீட்டிற்குள் நுழைந்தாள் ஆயிஷா.
“சாரி மேம்.. சார் வீட்டுல இல்லை.. நீ அப்புறமா வாங்க..”
“நீ தள்ளிப் போட ராபர்ட்.. நான் எப்ப ஃபோன் பண்ணாலும், அவன் பிஸியா இருக்கான்னு தான் சொல்ற.. இப்ப வீட்டுக்கு வந்தாலும் இல்லேன்னு சொல்ற.. நான் இன்னைக்கு அவனை பார்க்காம போகமாட்டேன்.. நீ தள்ளு..”
“ப்ளீஸ் போகாதீங்க மேம்.. நான் சொல்றதை கேளுங்க..” என்ற ராபர்ட்டை விலக்கிய ஆயிஷா, வேகமாக ஹாலுக்குள் செல்ல, அவளை தடுக்க முயன்று தோற்றுப் போன ராபர்ட்டும் அவள் பின்னால் சென்றான்.
“அக்னி.. அக்னி.. வேர் ஆர் யூ? வீட்டுல இல்லாத மாதிரி சீன் போடாத.. இதையெல்லாம் நம்ப நான் தயாராயில்ல.. வெளில வா..” என்று சத்தமிட்டவாறு, இங்கும் அங்கும் நடந்தவளின் பின்னால் வந்த ராபர்ட்,
“மிஸ்.. ஆயிஷா.. இப்படி சாரோட வீட்டுக்குள்ள அத்து மீறி நுழையுறது ரொம்ப தப்பு.. சார்க்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவார்..” என்றவன் மாடிக்கு செல்ல முயன்றவளை தடுக்க முயன்றான்.
“அக்னி.. அக்னி.. எவ்வளவு நேரம் உன்னைய கூப்பிடுவது? எங்க இருக்க?” என்றவள் மாடிப்படியில் கால் வைக்க,
“யார் இப்படி சத்தம் போடுறது?” என்றவாறே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் அதிதி. மங்களகரமாக நெற்றியில் குங்குமமிட்டு, தலை நிறைய பூ வைத்து, அடக்கமான காட்டன் புடவையில் முகத்தில் அறிவுச் சுடர் மின்ன, மிளிரும் அழகோடு தன் முன்னே வந்து நின்ற அதிதியை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்தாள் ஆயிஷா.
“சாரி.. சிஸ்..”
“இட்ஸ் ஓகே ராபர்ட் அண்ணா.. இவங்க.. இந்த பொண்ணு யாரு?”
“அந்த கேள்வியை நான் கேட்கணும்? முதல்ல நீ யாருன்னு சொல்லு.. உனக்கும் அக்னிக்கும் என்ன சம்பந்தம்? நீ எதுக்காக அவனோட வீட்டுல தங்கியிருக்க?” என்று ஆயிஷா கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
“சிஸ்.. இவங்க மிஸ். ஆயிஷா.. சாரோட கூட படிச்சவங்க..” என்ற ராபர்ட், ஆயிஷாவை அதிதிக்கு அறிமுகப்படுத்தி வைக்க, அவனை கோபமாக முறைத்துப் பார்த்தாள் ஆயிஷா.
“நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்? நீ யாருக்கு பதில் சொல்லிட்டு இருக்க?”
“மேம்.. இவங்க மிஸஸ் அதிதி அக்னி சாஹித்யா.. சாரோட வொய்ஃப்.. இந்த வீட்டோட எஜமானி..” என்று ராபர்ட் கூறியதும், மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்வை உணர்ந்தாள் ஆயிஷா. அவள் கண் முன்னே, அவளது கனவு கோட்டைகள் நகர்ந்து விழுவதை கண்டாள். ஆயிஷாவிற்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால் அதிதியை பார்வையாலேயே எரித்திருப்பாள். ஆக்ரோஷமாக அதிதியை ஆயிஷா நெருங்கும் முன், அதிதிக்கு முன்னால் வந்து நின்றனர் அந்தோனியும் ராபர்ட்டும்.. இனி என்னவாகும்? அதிதியை கண்டு ஆயிஷா, ஒதுங்கிச் செல்வாளா? அல்லது சதித் திட்டம் தீட்டி அதிதியை அக்னி சாஹித்யாவின் வாழ்க்கையில் இருந்து விலக்குவாளா?