ATM Tamil Romantic Novels

மயக்கத்தில் ஓர் நாள் 7

அத்தியாயம் 7

 
“மேம்.. நீங்க பண்றது சாருக்கு கண்டிப்பா பிடிக்காது.. அவருக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்..” என்று ராபர்ட் கூற,
 
“ஹும்.. எத்தனை நாளைக்கு நீ இங்க இருப்பேன்னு பார்க்குறேன்.. அவன் என்னைக்கும் ஒரே இடத்துல தங்குனதில்ல.. நீயும் அதே மாதிரி தான்.. நீ அவனுக்கு சலிப்பு போனதும், அவனே உன்னைய வீட்டை விட்டு போகச் சொல்லிடுவான்.. அப்போ அவன் உனக்கு கொடுக்குற அமெண்டை விட உனக்கு நான் ரெண்டு மடங்கு தர்றேன்.. இப்பவே இந்த வீட்டை விட்டு வெளியே போ..” என்று ஆயிஷா கத்த,
 
“அவரோட டேஸ்டை பத்தி உங்களுக்கு நல்லாத் தெரியுமா? அதுவும் பணத்துக்கு வர்றவங்களைப் பத்தி ரொம்ப ரொம்ப நல்லாத் தெரியுமா?” என்ற அதிதி, தன் முன்னே குட்டை பாவாடை உடுத்தி, நின்று கொண்டிருப்பவளை மேலும் கீழுமாக பார்க்க,
 
“ஹேய் உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா? என்னைய பணத்துக்கு வந்தவன்னு சொல்லுவ?” என்று அதிதியை பார்த்து கூறியவள்,
 
“ராபர்ட்.. இப்பவே இவ கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளு..” என்று ராபர்ட்டிடம் கத்தினாள் ஆயிஷா. அதனை சிரித்தபடி பார்த்து கொண்டிருந்த அதிதி,
 
“ராபர்ட்.. நான் தனியா வெளியும் போக அலோ பண்ணுவியா? ஒருவேளை சாறு திரும்ப வந்ததுக்கு அப்புறம் என்னைய காணோம்னு தேடுனார்னா.. அவருக்கு எவ்வளவு கோபம் வரும்? எனிவே.. எனக்கு அதைப் பத்தி எந்த கவலையும் இல்ல.. ஏன்னா.. எனக்கு இங்க இருக்கணும்குற எண்ணம் துளி கூட இல்ல.. சோ..” என்றவள் அங்கிருந்து நகர முயல,
 
“சிஸ்டர் ப்ளீஸ்.. எங்கேயும் போகாதீங்க.. அப்படி நீங்க பாஸ் சொல்லாம வெளியும் போனா.. என்னைய கொன்னுடுவாரு..” என்று அதிதியிடம் ராபர்ட் கூற,
 
“இப்ப நான் என்ன பண்ணனும் ராபர்ட்? உங்க பாஸ் கூட படிச்சவங்களுக்கு நான் இங்க இருக்குறது பிடிக்கலையே..” என்ற அதிதியையும் ஆயிஷாவையும் ராபர்ட் மாறி மாறி பார்க்க,  
 
“ப்ளீஸ் மிஸ். ஆயிஷா.. இப்ப நீங்க கிளம்புங்க.. பாஸ்‌ வந்ததும் நீங்க வாங்க.. இப்ப கிளம்புங்க..” என்றான் அந்தோனி. 
 
“ஓகே.. நான் கிளம்புறேன்.. பட் என்னோட கேள்விக்கு நீ பதில் சொல்லணும்..”
 
“கேளுங்க மிஸ். ஆயிஷா..”
 
“இவ.. இவளை நிஜமாகவே அக்னி மேரேஜ் பண்ணிக்கிட்டானா?”
 
“உங்கக்கிட்ட நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை மிஸ். ஆயிஷா..”
 
“நோ.. நோ.. அந்தோனி.. நீயும் என்கிட்ட பொய் சொல்ற.. இதை நான் நம்பமாட்டேன்..”
 
“நீங்க நம்புறீங்களோ இல்லையோ.. இப்ப இங்க இருந்து கிளம்புங்க.. நீங்க எங்க சிஸ்டர்கிட்ட இப்படி நடந்துக்கிட்டது மட்டும் எங்க பாஸ்கு தெரிஞ்சா.. அப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னு சொல்ல முடியாது.. ப்ளீஸ்.. கிளம்புங்க..”
 
“நான் இப்பவே அக்னிக்கு ஃபோன் பண்றேன்..” என்ற ஆயிஷா, அக்னி சாஹித்யாவிற்கு அழைக்க, ‘தாங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்..’ என்று வரவே, கண்களில் கோபத்துடன் அதிதியை நெருங்கியவள்,
 
“இன்னைக்கு நீ வேணா.. நீ இந்த வீட்டை விட்டு போகாமல் இருக்கலாம்.. பட், ஒரு நாள் அக்னியே, அவரோட கையால, உன் கழுத்தை பிடிச்சு, வெளியே தள்ளுவாரு..” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றவள், தொடர்ந்து அக்னி சாஹித்யாவின் போனிற்கு, பலமுறை தொடர்பு கொள்ள முயன்றாள். ஆனால், ஒருமுறை கூட அவனிடம் பேசமுடியவில்லை. 
 
“அக்னி நிஜமாவே மீட்டிங்க்ல இருக்கானா? இல்ல என்னைய வேணும்னே அவாய்ட் பண்றானா?” என்று தனக்குள் முணுமுணுக்கும் கொண்டவளுக்கு பயத்திமே பிடித்துவிடும் போல் இருந்தது. அக்னி சாஹித்யாவின் பாதுகாவலனான ஆல்பர்ட்கு போனில் அழைத்தாள் ஆயிஷா. 
 
“அக்னி எங்க?”
 
“சார் பிஸியா இருக்காரு மேடம்..”
 
“அவன் எப்பவுமே பிஸியாத் தானே இருக்கான்.. ஆனா, இப்ப அவன்கூட பேசணும்..”
 
“சாரி.. மேடம்.. இப்போ முடியாது..”
 
“அப்போ எனக்கு ஒன்னு மட்டும் சொல்லு.. யாரிந்த அதிதி? அவளுக்கு அக்னியோட வீட்டில என்ன வேலை? எதுக்காக அவ அங்க இருக்கா?”
 
“அவங்க எங்க பாஸோட வொய்ஃப்.. அப்போ அவங்க, அவங்க வீட்டுல தானே இருப்பாங்க?”
 
“வொய்ஃபா? இதை நான் எப்படி நம்புறது?”
 
“நீங்க நம்பலைனா அதுக்கு நான் என்ன பண்ண முடியும் மேடம்?”
 
“அப்போ நான் இதைப் பத்தி எல்லார்கிட்டயும் சொல்லலாம் இல்ல? அக்னியோட வீக்னஸ்.. அவனோட பொண்டாட்டி தான்னு..”
 
“இதைப் பத்தி நீங்க யார்கிட்ட வேணாலும் சொல்லலாம்.. பட், நீங்க அப்படி எல்லார்கிட்டேயும் சொன்னதுக்கு அப்புறம், பாஸ் உங்கக்கூட இருக்குற ப்ரெண்ட்ஸ்ஷிப்பை மொத்தமா கட் பண்ணிடுவாரு..”
 
“என்ன மிரட்டுறியா?”
 
“இல்ல.. நடக்கப்‌போறதை சொல்றேன்..”
 
“அப்போ.. இதையும் நல்லா கேட்டுக்கோ.. இன்னும் பத்து நிமிஷத்துல அவன் எனக்கு போன் பண்ணணும்.. இல்லேன்னா.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” என்று ஆல்பர்ட்டிடம் கத்தியவள், தனது போனை தூக்கி எறிய, அது அங்கிருந்த கட்டிலில் விழுந்து தன் உயிரை காத்துக் கொண்டது. 
 
“அக்னி.. உன்னைய நான் யாருக்கும் தரமாட்டேன்.. அதிதி.. உன்னையே என்னப்‌ பண்றேன்னு பாரு?” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள், தனது அண்ணனிற்கு அழைத்தாள். 
 
இங்கு இரு நாட்களாக அக்னி சாஹித்யாவிற்காக காத்திருந்த அதிதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அன்றிரவு அவன் வருவதாக அந்தோனியிடம் இருந்து தகவல் கிடைக்கவே, தன்னை புடவையில் அலங்கரித்து கொண்ட அதிதி, தங்களது அறையில், கட்டிலில் அமர்ந்தபடியே உறங்கிக் போனாள். நள்ளிரவில் அறைக்குள் வந்த அக்னி சாஹித்யா, அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த அதிதியை, தூக்கி நன்றாக படுக்குமாறு செய்தான். அவனது வாசத்தை தனக்குள் நிரப்பிக் கொண்டவள், அவனது மார்போடு தலை சாய்த்து, நன்றாக படுத்துக்கொண்டாள். அதனை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த அக்னி சாஹித்யா,
 
“ஒழுங்கா படு.. கழுத்து சுளுக்கிக்க போகுது..” என்று கூற, அவனை மேலும் நெருங்கிப் படுத்துக் கொண்டவள்,
 
“இன்னைக்கு உங்களைத் தேடி ஒரு லேடி வந்தா..” என்று கூற, அவளது முதுகில் தட்டிக் கொடுத்தபடியே அமர்ந்தவன்,
 
“ம்ம்.. தெரியும்..” என்று கூற,
 
“அவ ரொம்ப அழகாயிருந்தா..” என்றவளின் தாடையைப் பற்றி அவளது நெற்றியில் முத்தமிட்டவன்,
 
“இனிமே ஆயிஷா.. இங்க வரமாட்டா.. உன்னைய டிஸ்டர்ப் பண்ணமாட்டா..” என்றவன் கூற, 
 
“அவ உங்கக்கூட படிச்சவ மட்டும்தானா?” என்று குழந்தையென தன் தலையை தூக்கி, அவனைப் பார்த்தவாறு கேட்டபின் கண்ணில் முத்தம் வைத்தவன்,
 
“அவக்கூட சேர்ந்து வேலை பார்த்துருக்கேன்.. அதைத் தாண்டி அவளுக்கும் எனக்கும் இடையே வேற எந்த உறவும் இருந்ததில்ல.. அவ என்னைக்குமே எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட் மட்டுந்தான்.. நீ நினைக்குற அளவுக்கெல்லாம் எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் எந்த உறவும் இருந்ததில்ல.. உனக்கு வேறெந்த கேள்வி இருந்தாலும் என்கிட்ட தாராளமா கேட்கலாம்.. எதையும் மனசுக்குள்ளே மே வைச்சுக்காத..” என்றவனுக்கு பதிலாக எதுவுமில்லையென தலையாட்டினாள் அதிதி. அவளது கண்களை பார்த்துக் கொண்டே, புடவைக்குள்ளிருந்த அவளது‌ அசையா சொத்துகளை தொட்டவனிடம் இருந்து, விலகியவள்,
 
“வேணாம்.. நான் தூங்கணும்..” என்று கூற,
 
“நடிக்காத டி.. இந்த மல்லிகைப்பூ.. புடவை.. உனக்கே உரிய வாசனை.. இதெல்லாமே சொல்லுதே.. உன் மனசுல நானிருக்கேன்னு..” என்றவன் புலியென அவள்‌ மீது பாய்ந்து, புள்ளிமானென அவளை வேட்டையாடத் தொடங்கினான். அவளது உடல் முழுவதும் அவனளித்த இதழ் முத்தத்தில் அவளது மேனி செந்நிறம் பூசிக் கொண்டது. அவனோடு பல உலகம் சென்று வந்ததை போல் உணர்ந்தாள். இருவரது முணங்கல்களும் நாதங்களாய் அறை எங்கும் முழங்கியது. முத்துச்சத்தமும் கவிதை மழை பொழியுமோ? என்றுமில்லாத திருநாளாய் உடலோடு உயிராய்.. உணர்வாய்.. அவனோடு ஒன்றிணைந்தாள் அதிதி. அடுத்த நாள் காலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அக்னியின் நெற்றி முடியை ஒதுக்கி, அவனது நெற்றியில் முத்தமிட்டாள் அதிதி. மெல்ல அவனிடம் இருந்து விலகியவள், குளித்துவிட்டு எப்போதும் போல் வீட்டிற்கு முன்னால் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல, அதே சமயம் முகமூடி அணிந்த சில மனிதர்கள் அங்கு வரவே, கடத்துவதற்கு வாய் திறந்தவளை அப்படியே தூக்கிக் கொண்டு தாங்கள் கொண்டு வந்திருந்த காரை நோக்கிச் சென்றனர். அதே சமயம் எப்போதும் போல் எழுந்தவன், தன்னருகே இருக்கும் மனைவியை தேட, அவள் தன் கண்ணில் படாது தவித்துப் போனான். அவசர அவசரமாக உடையணிந்தவன், ஜன்னல் வழியே பார்க்க, தன் மனைவி பூக்கூடையுடன் கோயிலுக்கு செல்வதை பார்த்தவன், வேகமாக இறங்கிப் செல்ல, அதற்குள் சிலர் அவளை கடந்த முயல்வதை பார்த்தான். தனது துப்பாக்கியால் அவர்களை சுட முயல, அவனிடம் இருந்து தப்பிச் செல்வதையே தற்போது சிறந்ததாக எண்ணிய முகமூடி மனிதர்களும் அதிதியை அப்படியே காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு விட்டு, வேகம் கூட்டி, தப்பிச் சென்றனர். தன் கண் முன்னே மயக்க நிலையில் இருந்தவளை, தன் இரு கைகளாலும் தூக்கிக் கொண்டு, வீட்டிற்குள் நுழைந்தவன்,
 
“ஆல்பர்ட்.. கால் தி.. டாக்டர்..” என்று சத்தமிட, பதறிப் போன அனைவரும் ஹாலில் கூடினர். மருத்துவர் வந்து பார்த்து விட்டு, அதிதிக்கு ஒன்றுமில்லை என்று கூறும் வரை கூண்டில் அடைபட்ட புலி போல் இங்கும் அங்கும் நடைபயின்றவன், அதிதி கண்விழித்ததும் அங்கிருந்த அனைவரையும் ஹாலுக்கு வரச் சொன்னான். 
 
“ஆல்பர்ட்.. யாரவங்க? என் வீட்டு வாசலுக்கே வந்து.. என் பொண்டாட்டி மேலயே கை வைக்க துணிஞ்சவன் யாருன்னு எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்..” என்று கத்தியவன், ஹாலில் நின்று கொண்டிருந்த ராபர்ட்டை அடி நொறுக்கினான். 
 
“உன்கிட்ட என்ன சொன்னேன்? அவ எங்க போனாலும் கூடவே போகச் சொன்னேன்ல.. அவ கோயிலுக்கு போறப்போ.. நீ என்ன பண்ணிட்டுருந்த?” என்று கேட்டவாறு அடித்தவனின் கையைப் பிடித்து இழுத்து தடுத்தாள் அதிதி. 
 
“ப்ளீஸ்.. சாஹு.. ஸ்டாபிட்.. அவன் மேல எந்த தப்பும் இல்ல.. நான் தான் அவனை என் பின்னால வர வேணாம்னு சொன்னேன்..” 
 
“ஒய் பேபி.. ஒய் பேபி.. உனக்கு தெரியுமா? சமயத்துக்கு இப்ப நான் மட்டும் வரலைன்னா.. நீ இப்படி என் கண்ணு முன்னாடி இருந்திருக்க மாட்ட.. தெரியுமா? ஏன்.. இப்படி நீ போய் ஆபத்தை விலைக்கு வாங்கிட்டு வர்ற?”
 
“ஓஹோ?! அப்போ நான் கோயிலுக்கு போனது தான் உங்களுக்கு பிரச்சனை இல்ல? அப்போ இந்த பிரச்சனைக்காரியை எதுக்கு கூடவே வைச்சுருக்கீங்க? வெளியில் தூக்கி எறிய வேண்டியது தானே?”
 
“அது மட்டும் என்னால் இந்த ஜென்மத்துல முடியாது.. உன்னைய விட்டு என்னால இருக்க முடியாதுடி..” என்று அவளுக்கு இணையாக கத்தியவன், கோபத்துடன் அங்கிருந்து செல்ல, ராபர்ட்டை பரிதாபமாக பார்த்த அதிதி,
 
“சாரி ப்ரோ..” என்று கூற, அவளிடம் புன்னகை புரிந்தவனை மருந்திட தூக்கிச் சென்றனர் அங்கிருந்தவர்கள். இங்கே தான் அனுப்பிய ஆட்கள் வெறுங்கையுடன் திரும்பி வந்திருப்பதை பார்த்த ஆயிஷா, கோபத்தில் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் தூக்கிப் போட்டு உடைக்க, அப்போது அங்கு வந்த டெல்லி, 
 
“ஆயிஷா.. உனக்கென்ன பைத்தியமா? எதுக்கு இப்படி வீட்டுல இருக்குற எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைக்குற?” என்றவளை கடிந்து கொண்டான். 
 
“நியாயமா பார்த்தா.. உன்னைய தான் நான் அடிச்சுருக்கணும்.. ஆனா, நீ எனக்கு அண்ணனா போயிட்டியே.. அதான் உன் மேல இருக்குற கோபத்தை இதை எல்லாம் தூக்கிப் போட்டு உடைச்சு, தீர்த்துக்குறேன்..”
 
“அப்படியென்னாச்சு? சொல்லுமா..”
 
“நீ அனுப்பும் ஆளுங்க.. அந்த அதிதியை அங்கேயே போட்டுட்டு வந்துட்டாங்க.. எனக்கு இப்ப அவ வேணும்.. அக்னியோட வீட்டுல அவ இருக்குற ஒவ்வொரு நிமிஷமும்.. என் உடம்பெல்லாம் எரியுது..”
 
“ஓகே.. ஓகே.. ரிலாக்ஸ்.. நாளைக்கு நடக்கப் போற பிஸ்னஸ் மீட்டுக்கு அவங்க ரெண்டு பேரையும் இன்வெய்டட் பண்ணுவோம்.. நீ அக்னியோட கவனத்தை கொஞ்சம் திசை திருப்புன போதும்.. அந்தப் பொண்ணை அவன்கிட்ட இருந்து தூக்கிடுவோம்.. வெரி சிம்பிள்.. இதுக்கு போயா.. இப்படி சந்திரமுகி மாதிரி.. நடந்துக்குற?”
 
“நானா? நானா? சந்திரமுகி..”
 
“இப்ப தான் நீ ஒரிஜினல் சந்திரமுகி..”
 
“அண்ணா..”
 
“ம்ம்.. இதே மாதிரி எப்பவும் சிரிச்சுட்டே இரு.. மத்ததை எல்லாம் அண்ணன் பார்த்துக்குறேன்..” என்றவன் மறுநாள் நடக்கவிருக்கும் வியாபார விருந்தில் அதிதியை கடத்தமிட்டிருக்க, அவனிடம் இருந்து தப்புவாளா அதிதி? 
 
 

2 thoughts on “மயக்கத்தில் ஓர் நாள் 7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top