அத்தியாயம் 8
“அதிதி கிளம்பு..”
“எங்க?”
“சும்மா.. அப்படியே வெளியில போயிட்டு வருவோம்..”
“ட்ரூ மினிட்ஸ்.. இந்த ஃபைலை ஆஃபிஸ்கு அனுப்பிட்டு வந்துடுறேன்..”
“ம்ம்..” என்ற அக்னி சாஹித்யா, அதிதியின் மடியில் தலை வைத்து படுக்க, அவளுக்கு அருகே அமர்ந்தபடி படித்துக் கொண்டிருந்த சஷ்மிதா, சிரித்தபடியே எழுந்து செல்ல,
“இப்படியா ஒரு சின்ன பொண்ணு முன்னாடி நடந்துக்குறது?” என்றவனை கடிந்து கொண்டவளின் கை விரலில் முத்தமிட்டவன்,
“என் கண்ணு முழுசும் உன் மேல மட்டும் தான் இருக்கும்.. பக்கத்துல யார் இருக்காங்கன்னுலாம் நான் பார்க்குறதில்ல..” என்றவாறே கண்களை மறைத்துக் கொண்டு உறங்கத் தொடங்கியவனைப் பார்த்தவள்,
“பேரு தான் பெரிய மாஃபியா லீடர்.. ஆனா, சின்னக்குழந்தை மாதிரி நடத்துக்குறாரு..” என்று மனதுக்குள் முணுமுணுத்தவாறே தனது வேலையை செய்யத் தொடங்கியிருந்தாள். சிறிது நேரத்தில் தன் வேலை முடிந்ததும், தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்தவனின் நெற்றியில் முத்தமிட்டவளின், கழுத்தினைப் பிடித்து இழுத்தவன்,
“எனக்கு முத்தம் கொடுக்கணும்னா.. இங்க தான் கொடுக்கணும்..” என்றவாறே அவளது இதழ்களை சுவைத்தவனிடம் இருந்து விலகியவள்,
“எங்கேயோ போகணும்னு சொன்னீங்க?” என்று கேட்க,
“ஷாப்பிங் போகலாம்.. நீ வந்ததுல இருந்து, உனக்குன்னு நான் எதுவும் வாங்கிக் கொடுத்ததில்ல.. வா.. கொஞ்ச நேரம் ஷாப்பிங் போயிட்டு வரலாம்..” என்றவனை குறுகுறுவென பார்த்தவள்,
“இந்த விஷத்துல உங்களுக்கு ரொம்ப அனுபவம் போல?” என்று கேட்க, அக்குரலில் உசாரானவன்,
“இந்த தேவனின் சேவை, தேவிக்காக மட்டுமே..” என்று நாடகபாணியில் கூறியவனை சிரித்தபடி பார்த்தவள்,
“இப்படியே படுத்திருந்தா.. நான் எப்படி கிளம்புறது?” என்றபடியே அவனை எழுப்பிவிட்டவள்,
“சஷ்மி.. சஷ்மி..” என்றழைக்க, அங்கு வந்து நின்றார் புஷ்பா.
“என்னதுமா.. எதுக்கு சஷ்மியை கூப்பிடுறீங்க? அவ ஏதாவது தப்பு பண்ணிட்டாளா?”
“அய்யோ.. அப்படியெல்லாம் இல்லம்மா.. நாங்க ஷாப்பிங்குக்கு வெளியே போறோம்.. அதான் சஷ்மிக்கு ஏதாவது வேணுமான்னு கேட்க தான் கூப்பிட்டேன்மா..”
“அதெல்லாம் எதுக்குமா? நீங்க அவளை இவ்வளோ நல்லா பார்த்துக்குறதே பெரிய விஷயம்..”
“அட இதை எல்லாம் விஷயம்னு சொல்லிக்கிட்டு.. சஷ்மியை வரச் சொல்லுங்கம்மா.. சும்மா அப்படியே வெளிய போயிட்டு வர்றோம்..”
“அது அது வந்தும்மா..” என்ற புஷ்பாமாவிற்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஆல்பர்ட்டோ,
“அவ அப்போவே தூங்கிட்டா சிஸ்..” என்று கூற,
“ஓ?!” என்ற அதிதியை தன் கைகளில் ஏந்திக் கொண்டவன்,
“விட்டா நீ இப்படி வாயளந்துட்டே இருப்ப.. சீக்கிரம் வா.. போகலாம்..” என்றவாறே அவளை நகரத்தின் மையத்தில் இருக்கும் காம்ப்ளக்ஸிற்கு அழைத்துச் செல்ல,
“நாம ஷாப்பிங் தானே போறோம்?” என்றவளை திரும்பிப் பார்த்தான் அக்னி சாஹித்யா.
“அப்படித்தான் நினைக்குறேன்..”
“அப்போ.. இத்தனை பேர் பாதுகாப்பா வேணுமா? ஏதோ.. கட்சி ஊர்வலம் போற மாதிரி இருக்கு.. நான் லேடீஸ் செக்ஸின் போகப் போறேன்.. நீங்க உங்களுக்கு ஏதாவது வேணும்னா போய் வாங்கிட்டு இருங்க..” என்றவள், பெண்கள் உலகத்திற்குள் நுழைய, அங்கிருக்கும் உணவு உலகத்திற்குள் நுழைந்தான் அக்னி சாஹித்யா.
“ஹாய் சாஹூ..” என்றவாறே அவனருகே வந்து அமர்ந்தான் டெல்லி.
“என்னப்பா.. பார்த்தா.. ஒரு ஹாய் கூட சொல்லமாட்டேங்குற? நானும் உன் அண்ணனும் அப்படியா பழகிருக்கோம்? நீ என்னன்னா.. பார்த்தும் பார்க்காத மாதிரி உட்கார்ந்துருக்க?” என்றவனுக்கு எந்த பதிலும் கூறாது அமைதியாக அமர்ந்திருந்தான் அக்னி சாஹித்யா.
“ஆமா.. உனக்கு கல்யாணமாகிடுச்சாமே? பொண்ணு கூட சும்மா கிளி மாதிரி டக்கரா இருக்காளாம்.. என்ன சாஹூ? எங்க யார் கண்ணுலயும் காட்டாம மறைச்சுட்டப் பாரேன்.. நீயும் உன்னோட பொண்டாட்டியும் ஷாப்பிங் வந்தததா தகவல் வட்டாரத்துல இருந்து தகவல் வந்துச்சு.. இங்க வந்து பார்த்தா.. நீ மட்டும் இருக்க.. அந்த பொண்ணை காணோம்.. என்னப்பா.. பொண்டாட்டி ஓடி போயிட்டாளா? இல்ல.. யாராவது கிட்னாப் பண்ணிட்டு போயிட்டாங்களா? ப்ச்.. என்ன சாஹூ? இப்படி என்னைய முறைக்குற? நான் நாட்டு நடப்பைத் தான்பா சொன்னேன்.. சரி விடு.. வந்த விஷயத்தைப் பத்தி பேசாம.. வேற எதை எதையோ பேசுறேன் பாரேன்.. நம்ம கமிட்டி சார்பா நாளைக்கு ஈவினிங் பிஸ்னஸ் மீட் வைச்சுருக்கோம்.. நீ கட்டாயம் அதுல கலந்துக்கணும்..” என்றவாறே அவனிடத்தில் அழைப்பிதழை நீட்டினான் டெல்லி. சரியாக அதே சமயம்,
“சாஹூ.. இங்கப் பார்த்தீங்களா? உங்களுக்கு சூட் வாங்கிருக்கேன்.. அப்புறம் கேஷுவல் வேர்ஸ்.. ஆல்பர்ட், அந்தோனி, ராபர்ட் அப்புறம் எல்லாத்துக்கும் வாங்கிருக்கேன்.. புஷ்பாம்மா.. சஷ்மிதாக்கும் கூட வாங்கிருக்கேன்..” என்று தான் வாங்கிய அனைத்தையும் அக்னி சாஹித்யாவின் முன் கடை பரப்பி குழந்தையென சிரிக்கும் அதிதியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் டெல்லி.
“வாவ்.. உன்னோட வொய்ஃப்.. ரொம்ப அழகா இருக்கா அக்னி.. நான் கூட என்னமோன்னு நினைச்சேன்.. அந்த கண்கள்.. ப்பா.. கவி பாடுது.. இப்படி ஒரு பொண்ணு கிடைச்சா.. யார் தான் கல்யாணம் பண்ணாம இருப்பாங்க? நீ ரொம்ப கொடுத்து வைச்சவன்..” என்று டெல்லி கூறும் போது, தன் கைகளை இறுக மடக்கினான் அக்னி சாஹித்யா. அக்னியின் முக மாறுதல்களை கவனித்த அதிதியோ,
“என்னாச்சு? நான் ராங் டைமிங்ல வந்துட்டேனா?” என்று கேட்டவளை பார்த்து அக்னி இல்லையென தலையாட்ட,
“அய்யோ.. இல்லமா.. சத்தியமா சரியான டைமிங்ல தான் வந்துருக்க.. இல்லனா.. உன்னையே என் கண்ணுல காட்டமலேயே வைச்சுருந்துருப்பான்.. இந்தாம்மா.. இது நாளைக்கு நடக்கப் போற ஃபங்ஷனோட இன்விடேஷன்.. யார் வர்றாங்களோ? இல்லையோ? நீ கண்டிப்பா வரணும்..” என்றவாறு அவளது கையைப் பிடிக்க போனவனின் கையைப் பிடித்துக் கொண்டான் அக்னி சாஹித்யா.
“இட்ஸ் ஓகே.. மிஸ்டர் டெல்லி.. அவ என்னோட வொய்ஃப்.. வரணுமா வேண்டாமான்னு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணிக்குறோம்.. நீங்க பெரிய ஆளு.. இன்னும் நிறைய பேரை இன்வெய்ட் பண்ண வேண்டியிருக்கும்.. சோ.. ப்ளீஸ்..”
“டீசெண்டா கிளம்புங்கன்னு சொல்ற? பரவாயில்ல.. வந்ததுக்கு இந்த தேவதையை பார்த்தேனே அதுவே போதும்..” என்று அக்னி சாஹித்யாவின் கையைப் பிடித்து குலுக்கியவனின் பார்வை முழுவதும் அதிதியின் மீதே இருந்தது.
“மறந்துடாதம்மா.. உன்னை ரொம்ப எதிர்ப்பேன்..” என்ற டெல்லி அங்கிருந்து செல்ல,
“அவர் யாரு? எதுக்கு இப்படி பேசிட்டு போறாரு?” என்று கேட்டவளை கூர்மையாக பார்த்தவன்,
“அப்படி யாருன்னு சொல்ற அளவுக்கு.. அந்த ஆளு ஒன்னும் பெரிய மனுஷன் இல்ல..” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல, காரில் செல்லும் வழியில்,
“அப்போ நாளைக்கு ஃபங்கஷனுக்கு நானும் வரணுமா?” என்று கேட்க,
“தேவையில்ல..” என்று பதிலளித்தவனின் கவனம் முழுவதும் தன் மடியில் வைத்திருந்த மடிக்கணினியில் இருக்க,
“ஏன்? ஏன் நான் வரக்கூடாது? என்கிட்ட எதையாவது மறைக்கிறீங்களா? அதனால தான் வர வேண்டாம்னு சொல்றீங்களா?” என்று கூற, தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தவன், மீண்டும் தனது மடிக்கணினிக்குள் புகுந்து கொள்ள,
“சொல்லுங்க.. நீங்க என்கிட்ட எதையோ மறைக்குறீங்க தானே?” என்று மீண்டும் கூற,
“இல்ல..” என்றவன் மீண்டும் கூற,
“அப்போ அதை ஏன் அந்த டாப்பாக்குள்ள தலையை விட்டுட்டே சொல்றீங்க.. என்னைப் பார்த்து.. என் கண்ணை பார்த்து சொல்லுங்க..” என்றவள் சத்தமிட, தனது மடிக்கணினியை டப்பென மூடியவன்,
“இப்போ உனக்கு என்ன தெரியணும்? சொல்லு.. உனக்கு என்ன தெரியணும்.. உன்கிட்ட மறைக்குற அளவுக்கு என்கிட்ட அப்படி எந்த ரகசியமும் இல்ல.. இல்ல.. நீ அதை அந்த ஃபங்கஷனுக்கு வந்தா தான் நம்புவேன்னா.. கிளம்பு.. வா.. என்கூட..” என்றவன் சத்தமிட, கண்கள் விரிய பயத்துடன் அமர்ந்திருந்தாள் அதிதி. அதன் பின், ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசவில்லை. அவனுக்கே அவளது மௌனம் உறுத்த, அவளருகே சென்று சமாதானப்படுத்த எண்ணியவன், அவள் கேட்ட கேள்விகளை ஞாபகப்படுத்திக் கொண்டு, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். அடுத்த நாள் மாலையில் அவனோடு விருந்துக்கு கிளம்பியவள்,
“இல்ல.. நான் உங்கக்கூட வரலை.. நான் ஷாலினிய பார்க்க போறேன்..” என்று கூற, அவனும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை என்றாலும்
“அந்த பார்ட்டிக்கு வர்றதா இருந்தா ராபர்ட், அந்தோனி கூட வரலாம்.. நீ என்னைய சந்தேகப்பட்டு தான் அங்க வந்தேன்னு கண்டிப்பா நான் நினைக்கமாட்டேன்..” என்று கூறி விட்டு முன்னேச் செல்ல, அவனக்கு பின்னால் வரும் காரில் அந்தோனி, ராபர்ட்டுடன் ஏறிக் கொண்டவள், விருந்து நடக்கும் இடத்திற்கு சென்றாள். அக்னி சாஹித்யா காரில் இருந்து இறங்கி, அரங்கத்திற்குள் சென்றதும் வரவேற்புரை தொடங்கப்பட்டது. அவன் சென்ற பிறகு, அங்கு வந்த அதிதி, அரங்கத்திற்குள் செல்லும் நேரம் சரியாக மின்சாரம் தடை பட, தனது துப்பாக்கியை ஏந்திய அந்தோனி மற்றும் ராபர்ட்டின் தலையில் தாக்கப்பட, அதே இடத்தில் மயங்கி சரிந்தனர். அப்போது அங்கு வந்த பெண் உருவமானது, அதிபதியின் மூக்கினில் எதோ ஒரு நெடியுள்ள துணியை வைத்து அடைக்க, அவ்விடத்தில் மயங்கி சரிந்தாள் அதிதி. மயங்கி சரிந்தவளை இருளடைந்த இடத்திற்கு தூக்கிச் சென்றனர் முகமூடி அணிந்த மனிதர்கள். இனி அதிபதியின் நிலையென்ன? உயிர் தப்புவாளா அதிதி?
Ayyayo enna sis idhu