ATM Tamil Romantic Novels

மயக்கத்தில் ஓர் நாள் 9

அத்தியாயம் 9

 

“ஹலோ.. மிஸ்டர். அக்னி சாஹித்யா.. வெல்கம்.. வெல்கம்.. நான் கூட ரொம்ப பயந்துட்டேன்..”

 

“ஏன்?”

 

” நீங்களெல்லாம் ரொம்ப பெரிய ஆளு.. இந்த சின்ன மனுஷனோட பார்ட்டிக்கெல்லாம் வருவீங்களா?”

 

“நீங்களே நேர்ல வந்து கூப்பிட்டிருக்கீங்க.. மரியாதைக்காக வந்து தானே ஆகணும்..”

 

“ஓ?! பார்ட்டி எப்படி நல்லாருக்கா? உங்க ஒப்பீனியன் சொல்லுங்க அக்னி..”

 

“பார்க்க சின்ன இடமாமிருந்தாலும்.. ரொம்ப நல்லாவே அரேன்ஜ் பண்ணிருக்கீங்க..”

 

“இதுக்கெல்லாம் காரணம் என்னோட தங்கச்சி.. ஆயிஷா தான்..” என்று கூறிய டெல்லியைத் தொடர்ந்து அங்கு வந்தாள் ஆயிஷா.

 

“ஹாய் அக்னி.. பார்த்து ரொம்ப நாளாச்சு? எப்படி இருக்க?” என்றவாறு அவனோடு ஒட்டிக் கொண்டவளை விலக்கி நிறுத்தினான் அக்னி சாஹித்யா. அங்கிருந்த மேடையில் ஏறி, தனது உரையை நிகழ்த்தி கொண்டிருந்த டெல்லியின் அருகில் வந்த அக்னி,

 

“ஃபங்கஷன்னு வந்த கிஃப்ட் கொடுக்கணும் இல்லையா? இது என்னோட கிஃப்ட்.. எப்படியிருக்குன்னு பாரு..” என்றவன் அவன் கையில் ஒரு பார்சலை கொடுக்க,

 

“இது.. இது என்ன பாம்மா..” என்றவன் பதற,

 

“கத்தாத.. திறந்து தான் பாரேன்..” என்ற அக்னி சாஹித்யா, அங்கிருந்து இறங்க, டெல்லிக்கு பின்னால் இருந்த திரையில், அக்னியின் குடோனை, டெல்லி தன் கையால் பற்றி வைக்கும் தொகுப்பு காட்சி ஓட, 

 

“நோ.. நோ.. இதை நான் பண்ணல.. இதுல ஏதோ கிராபிக்ஸ் நடந்துருக்கு..” என்று டெல்லி கதற, 

 

“இப்ப கதறி ஒரு பிரயோஜனமும் இல்லை மிஸ்டர் டெல்லி.. ஆல் ரெடி கோர்ட்ல ப்ரெட்யூஸ் பண்ணியாச்சு.. உங்களை வலை வீசி தேடிட்டு இருக்காங்க.. எப்படி கிஃப்ட் சூப்பரா இருக்கா?” என்ற அக்னியைப் பார்த்து சிரிக்கக் தொடங்கிய டெல்லி,

 

“இங்க இருந்து நீ எஸ்கேப்பாக முடியும்னு நினைக்குறியா? ஆமா.. உன்னோட பாடி கார்ட்ஸ்ல ரெண்டு பேரை காணோமே.. எங்க அவங்க? அச்சச்சோ.. அவங்களைத் தான் உன்னோட பொண்டாட்டிக்கு காவலா அனுப்பியிருந்தியோ? பாவம்.. அநியாயமா செத்துப் போயிட்டாங்களோ? ஆமா.. அவங்களுக்கே  அந்த நிலைமைன்னா.. உன் பொண்டாட்டிக்கு என்ன நிலைமைப்பா?” என்று கூற, அவனது சட்டையை பிடித்து அக்னி சாஹித்யாவோ,

 

“அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு.. உன்னைய துண்டம் துண்டமா வெட்டி.. பீஸ்.. பீஸாக்கிருவேன்..” என்று கர்ஜிக்க,

 

“முதல்ல அவ பீஸ்.. பீஸாகாம போய் காப்பாத்து..” என்று கூறிய அதே நேரத்தில்,

 

“இந்த ஹால்ல பாம் வைச்சுருக்காங்களாம்.. எல்லோரும் போங்க..” என்றவாறே போலீஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். இப்போது தன் மனைவியை எங்கு தேட என்று யோசித்தவனின் கண்ணில் அவன் கையில் இருந்த வாட்ச் தெரிந்தது. அவனது கடிகாரத்துடன் அவளது கடிகாரத்தின் ஜிபிஎஸ் இணைப்பு இணைக்கப்பட்டிருப்பதை ஞாபகம் வந்ததும், அதன் மூலமாக அவளது இருப்பிடத்தை அறிந்து கொண்டான். அதே சமயம், அதிதியை அடைத்து வைக்கப்பட்டிருந்த கீழ் தளத்திற்கு வந்திருந்த ஆயிஷா, அரை மயக்கத்தில் இருந்தவளின் மீது குளிர்ந்த நீரை ஊற்றி மயக்கத்தை தெளிய வைத்தாள்.  

 

“நீ எல்லோரையும் உடனே நம்பிடுற.. அக்னி உன்மேல உயிரையே வைச்சுருக்கான்.. ஆனா, நீ அவனை நம்பாம.. என்னோட அண்ணனோட பேச்சை நம்பி.. இங்க வந்து.. இப்படி மாட்டிக்கிட்டியே?!”

 

“என்னை விட்டுடு.. உனக்கு என்ன தான் வேணும்?”

 

“அப்கோர்ஸ்.. எனக்கு அக்னி தான் வேணும்.. நான் தான் அன்னைக்கே உன்கிட்ட சொன்னேனே.. வீட்டை விட்டு வெளியே போன்னு.. நீ கேட்டியா? இப்போ அநியாயமா.. உன்னோட உயிரை விடப் போறியே..”

 

“எனக்கு மட்டும் ஏதாவது ஆச்சு.. அவர் உங்க யாரையும் சும்மா விட மாட்டாரு..”

 

“என்னடி அவரு.. ம்ம்.. அவரு.. அக்னி என்னோட அக்னி.. புரிஞ்சுதா? எனக்கு மட்டும் தான் சொந்தம்..” என்ற ஆயிஷா, பளாரென்று அதிதியின் கன்னத்தில் அறைய, “ஆஆஆஆஆ.. அம்மா..” என்று அலறினாள் அதிதி.

 

“அக்னி இங்க வர்றதுக்கு முன்னாடியே இவளை முடிச்சுடுங்க..” என்ற ஆயிஷா, அங்கிருந்து கிளம்ப, அதிதி இருந்த நாற்காலிக்கு கீழே டைம் நாம் வைக்கப்பட்டது. செய்வதை எல்லாம் செய்து விட்டு யாருக்கும் தெரியாமல் மேலே வந்து கொண்டிருந்த ஆயிஷாவை சந்தேகமாக பார்த்த அக்னி சாஹித்யா, அவளை பாதி வழியிலேயே மடக்கினான். 

 

“அக்னி.. என்னாச்சு? எதுக்கு எல்லோரும் ஓடுறாங்க?”

 

“ஏன்னு உனக்கு தெரியாது? ம்ம்ம்.. உண்மைய சொல்லு.. அதிதி எங்க?”

 

“எனக்கு சத்தியமா..” என்றவள் முடிக்கும் முன் பளாரென்று அவளது கன்னத்தில் அறைந்திருந்தான் அக்னி சாஹித்யா. 

 

“உனக்கும் எனக்கும் இடையில்‌ கொஞ்ச நஞ்சம் ஒட்டிட்டுருந்த ப்ரெண்ட்ஸ் ஷிப்பும் இன்னையோட ஒட்டு மொத்தமா முடிஞ்சது.. இனிமே, எக்காரணம் கொண்டும் என்னைய தேடி வராத..” என்றவன் தனது கைகடிகாரம் காட்டிய திசையை நோக்கி செல்ல, அங்கே ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரை நிறுத்திய ஆயிஷா,

 

“மிஸ்டர் குப்தா.. என்னாச்சு? எல்லோரும் எதுக்கு கிளம்புறாங்க?” என்று கேட்க,

 

“அட உனக்கு நடந்த விஷயமே தெரியாதா? இப்ப தான் உன்னோட அண்ணன் டெல்லியை கொலை முயற்சி வழக்கில் அரெஸ்ட் பண்ணிட்டு போனாங்க.. இது தெரியாம நீ இங்க நிக்குற? அப்புறம் நியாயமா நடந்துக்காத, உங்கக்கூட இனிமே நாங்க பிஸ்னஸ்‌ பண்றதாயில்ல.. நாளைக்கு காலைல அசோசியேசன் மீட்டிங் இருக்கு.. கண்டிப்பா வந்து சேரு..” என்று கூறிவிட்டு செல்ல, என்ன செய்வதென்று தெரியாது நின்றாள் ஆயிஷா. 

 

சரியான நேரத்திற்கு,  கீழ் தளத்திற்கு சென்ற அக்னி சாஹித்யாவை தாக்க வந்தவர்களை தாக்கினான் ஆல்பர்ட். அறைக்குள் நுழைந்த அக்னியின் கண்ணில் கன்னத்தில் அறை வாங்கி, உதடு கிழிந்த நிலையில் அமர்ந்திருந்த அதிதியை கண்டவனின் உள்ளம் வலித்தது. அவளை நெருங்கும் போது தாக்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியவன், நாற்காலியில் கட்டப்பட்டிருந்த அவளது கைகளை அவிழ்தவன், அவளது இதழோரம் வழிந்திருந்த ரத்தத்தை துடைத்துவிட்டவாறே,

 

“உன்னைய அடிச்சவன் யாரு? சொல்லு.. அவன் தோலை உரிச்சுடுறேன்..” என்று கூற, அவனை தாவி அணைத்துக் கொண்டாள் அதிதி. 

 

“எனக்கு ரொம்ப பயமாயிருக்கு.. என்னைய இங்கே இருந்து கூட்டிட்டு போறீங்களா? இனிமே நீங்க என்ன சொன்னாலும் நம்புறேன்.. ஐம் சாரி..” என்றவள் அவனது கன்னத்தை பிடித்தவாறே உடல் முழுவதும் ஆராய,

 

“எனக்கு ஒன்னுமில்ல..” என்றவளின் கைகளை ஆராந்தவன்,  அதில் தெரிந்த கயிறு இறுக்கிய தடத்தை கண்டு, “ரொம்ப வலிக்குதா? சாரி லேட்டா வந்ததுக்கு.. இதுல உன்னைய நான் இன்வால்வ் ஆக விடாம வைச்சிருந்துருக்கணும்..” என்றவன் அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அங்கிருந்து கிளம்ப, உடல் நடுங்கியபடியே, அவனோடு ஒட்டிக் கொண்டாள் அதிதி. வீட்டிற்கு அழைத்து வந்தவன், அவளது காயத்திற்கு மருந்திட்டு, சிறு குழந்தைக்கு உணவளிப்பது போல் அவளை கவனித்துக் கொள்ள, மங்கையின் மனதுக்குள் சப்தமிட்டு அமர்ந்து கொண்டான் காளையவன். குழந்தையென மங்கையவளை தன் மார்பில் போட்டு தூங்க வைத்தான். அடுத்த நாள் காலையில் எழுந்தவளுக்கு தன்னருகே உறங்கிக் கொண்டிருந்த தன் கணவன் மீது காதல் பொங்கி வழிந்தது. தானே எழுந்து சமையலறைக்குச் சென்று, அவனுக்காக ஏதாவது சமைக்க நினைத்தவள், அவனுக்கு சாப்பிட என்ன பிடிக்கும் என்று தெரியாது, விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். அப்போது அங்கு புஷ்பாம்மாவிடம் கேட்டு அவனுக்கு பிடித்த உணவை செய்து கொண்டிருந்தவளை பின்னால் இருந்து அணைத்தான் அக்னி சாஹித்யா.   

 

“ஆர் யூ ஓகே பேபி?” என்றவனுக்கு பதிலாக, அவனது கன்னத்தில் முத்தமிட்டவளை, சுற்றும் முற்றும் நோட்டமிட்டு, யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டவன், அவளது இடையை வளைத்து தூக்கி, அங்கிருந்த சமையல் மேடையில் அமர வைத்தவன். 

 

“எனக்கு கிஸ் கொடுக்கணும்னா, அது இங்க இல்ல.. எப்பவுமே இங்க கொடுக்கணும்..” என்று  கூறிக் கொண்டே, அவளது இதழ்களை அழுத்தமாக சிறைபிடிக்க மூச்செடுக்க சிரமமாக இருந்தாலும், இந்த சுகவதை அவளுக்கு பிடித்தமானதாயிருந்தது. தன்னவளை ஒவ்வொரு நிமிடமும் காதலால் திளைக்க வைத்தான். கடைக்கண் பார்வையின் ஆணையை நிறைவேற்றும் பித்தனானான். இருவரும் சேர்ந்து தொலைகாட்சி பார்த்து கொண்டிருக்கும் போது,

 

“பிரபல தொழிலதிபர் டெல்லி, விடுதலை செய்யப்பட்டார்.. அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு போதுமான சாட்சிகங்களும் ஆதாரங்களும் இல்லாததால், அவரை நிரபராதி என்று கருதி, கோர்ட் விடுதலை ஆணை பிறப்பித்தது..” என்று கூற, சிரித்தபடி அமர்ந்திருந்தவனின் பார்வை மாறியது. அவனது முகமாறுதலை கவனித்தவள், 

 

“என்னாச்சு? ஏன் இப்படி முகத்தை வைச்சுருக்கீங்க?” என்று கேட்க,

 

“ஒன்னுமில்ல..” என்றவனின் முகம் யோசனையை தத்தெடுத்திருந்தது. 

 

“ஒன்னுமில்லன்னா.. இப்படி புருவம் எதுக்கு சுழிச்சுட்டுருக்கு?” என்றவாறே அவனது சுழித்த புருவங்களை நீவியவளின் கையைப் பிடித்து தடுத்தவன்,

 

“கொஞ்ச நாளைக்கு வெளியே எங்கேயும் தனியா போகாத.. எங்கப் போனாலும் பாடி கார்ட்ஸ்ல யாராவது ரெண்டு பேர் கூடவே வருவாங்க.. தடுக்காத..” என்றவனை கேள்வியாக பார்த்தவளின் உள்ளங்கையை எடுத்து, தன் கைக்குள் வைத்தவாறே சொன்னவனை இறுக அணைத்துக் கொண்டாள் அதிதி. 

 

“எனக்கு எதுவுமாகது.. நீங்க கவலைப்படாதீங்க..” என்றவளுக்கு அப்போது தெரியவில்லை, தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்க இருக்கின்றோம் என்று.. வழக்கம் போல் தனது ஆஃபிஸிற்கு கிளம்பியவளின் காரில் ஏறிக் கொண்டனர் அந்தோனியும் ராபர்ட்டும்.. செல்லும் வழியில், சிக்கலின் போது காரின் கதவைத் தட்டிய சிறுவன் ஒருவன் தன்னிடம் இருக்கும் புத்தகங்களில் ஒன்றை வாங்கும்படி கெஞ்ச, அவளும் காரின் கண்ணாடியை கீழே இறக்கி, புத்தகம் வாங்கும் இடைவேளியில் எங்கிருந்தோ வந்த கத்தி, அவளது கழுத்தினை பதம் பார்க்கும் முன், அதனை தன் கையால் தடுத்து நிறுத்தியிருந்தான் ராபர்ட். அதனைப் பார்த்தவளுக்கு மூச்சு விடவும் மறந்து போயிற்று. அங்கிருந்தவனைப் பிடித்து அடித்த ராபர்ட்டிடம் இருந்து வாகனயிடுக்களில் நுழைந்து தப்பிச் சென்றான், அந்த கொலை முயற்சி செய்தவன்.  இதனை கேள்விப்பட்ட அக்னி சாஹித்யாவோ, கோபத்தின் உச்சிக்கே சென்றான். பெரும் முலையோடு மோத அவன் தயார், ஆனால் தான் உயிராக நினைக்கும்‌ காதல் மனைவிக்கு ஏதாவது ஆகிவிட்டால், அவன் உயிரோடு இருந்தும் உயிரில்லாத உடலாவான். ஆகையால், அதிதியை சிறிது காலம் பிரிவதென்று முடிவெடுத்தவன், அவளை ஊரில் இருக்கும் ஷாலினி வீட்டிற்கு அனுப்ப எண்ணினான். இதனை அதிதியிடம் அவன் கூறிய போது,

 

“உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நீங்க வேணும்னா தூக்கிட்டு வந்து வீட்டுல வைச்சுக்குறதுக்கும்.. வேணாம்னா தூக்கி எறியுறதுக்கும்.. நான் என்ன உயிரில்லாத பொருள்னு நினைச்சீங்களா? எனக்கும்‌ மனசிருக்கு.. அதுல உணர்ச்சியிருக்கு.. நீங்க போன்னு சொன்னா நான் போகணுமா?” என்று வாதிட்டவளுக்கு பதில் கூற மறுத்தவன், அதன் பிறகு அவளை பார்க்க மறுத்தான். வீட்டிற்கு வருவதையே குறைத்துக் கொண்டான். அவனது நடவடிக்கைகளை கண்டவள், அவனுக்கு சிறு கடிதம் ஒன்று எழுதி, தனது அறையில் வைத்து விட்டு அங்கிருந்து செல்ல எண்ணியவளை காரில் ஏற்றிய அந்தோனி, அவளை அழைத்துச் சென்று ஷாலினியின் இருப்பிடத்தில் விட்டு விடவே, ஷாலினியை தொடர்பு கொண்டு, அதிதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அழைத்த அக்னி சாஹித்யாவிற்கு அதிர்ச்சியொன்று காத்திருந்தது. ஷாலினியின் வீட்டு வாசலில் இறங்கிய அதிதி, ஷாலினியின் வீட்டிற்கு செல்லவில்லை. தனது தோழி வருவாள் என்று ஷாலினி காத்திருக்க, அவள் தன்னிடம் வராது எங்கு சென்றாள் என்று பயத்தில் ஷாலினியும், தன்னவள் எங்கு சென்றாளோ என்று பதட்டத்தில் அக்னியுமாக அதிதியை தேடிக் கொண்டிருக்க, அவள் எங்கு தான் சென்றிருப்பாள்? 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top