ATM Tamil Romantic Novels

மயக்கத்தில் ஓர் நாள் 10

அத்தியாயம் 10

 

“ராகினி..”

 

“ம்ம்..” 

 

“யார் வந்துருக்காங்கன்னு பாரு..” என்று அசோக் கூறியவுடன் திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.

 

“ஹேய் அதிதி.. வா.. வா.. இப்பத்தான் எங்க வீட்டுக்கு வரணும்னு தோணுச்சா? நான் கூட இவர்கிட்ட கேட்டுட்டே இருப்பேன்.. அதிதி ஏன் முன்ன மாதிரி என்கூட பேசுறதில்லன்னு..” என்றவளின் தோளில் சாய்ந்து அழுக ஆரம்பித்திருந்தாள் அதிதி. 

 

“ஹேய் இப்ப எதுக்கு அழுகுற?”

 

“சாரி டி.. உன்னைய ரொம்ப ஹர்ட் பண்ணிருக்கேன்.. இன்செல்ட் பண்ணிருக்கேன்.. பட், அதையெல்லாம் துளி கூட மனசுல வைச்சுக்காம.. ரொம்ப தாங்க்ஸ் டி..”

 

“ஹேய் லூசு.. இதுக்கா அழுகுற? ப்ரெண்ட்ஸ்னா சண்டை வரத்தான் செய்யும்.. அதுக்காக பார்க்காம பேசாம இருந்துடுவாங்களா? அப்படிப் பார்த்தா.. தப்பெல்லாம் என் மேல தான்.. நான் தான் உன்கிட்ட சாரி கேட்கணும்.. நீ அசோக்கை லவ் பண்றேன்னு தெரிஞ்சிருந்தும், அவன் ப்ரபோஸ் பண்ணலை நான் அக்செப்ட் பண்ணிக்கிட்டேன்..”

 

“இல்ல.. ராகினி.. நான் அசோக்கை லவ் பண்ணல.. அவனும் நானும் ஒன்னாவே வளர்ந்ததுல வந்த அட்ராக்ஷன்.. அவ்வளவு தான்.. அவன் கூட எனக்கு இருந்தது எல்லாமே ப்ரெண்ட்ஸ் ஷிப் மட்டும் தான்.. நான் தான் லவ்வெது ப்ரெண்ட்ஸ் ஷிப் எதுன்னு தெரியாம குழப்பிகிட்டேன்..”

 

“ஓகே.. ஓகே.. எதுக்காக வீட்டு வாசலேயே நின்னு பேசணும்.. உள்ள வா..”

 

“இல்ல.. எனக்கு உன் வீட்டுல கொஞ்ச நாள் தங்கணும்.. உனக்கு தொந்தரவா இருந்தா சொல்லிரு.. வெளியே எங்கேயாவது ரூம்மெடுத்து தங்கிக்குறேன்..”

 

“நல்லா கேட்டப்போ.. நீ ரூம்மெடுத்து தங்கிட்டேனா.. அப்புறம் என் அண்ணணுக்கு யார் பதில் சொல்றது?”

 

“அண்ணனா?”

 

“அது .. அது.. வந்து.. இல்ல.. நெத்தில குங்குமம்.. கழுத்துல தாலியோட வந்துருக்க.. அப்போ.. உனக்கு கல்யாணம் ஆகியிருக்கணும் இல்ல.. அவர் எனக்கு அண்ணன் முறை தானே? அதான்..”

 

“அவர் பேச்சை எடுக்காம இருந்தா.. அப்படினா உன் வீட்டுக்குள்ள வர்றேன் ராகினி..”

 

“தப்பு.. தப்பு.. இனிமே அவர் பேச்சை எடுக்கவேமாட்டேன்.. நீ உள்ள வா..” என்றவாறே ராகினி அதிதியை வீட்டின் உள்ளே அழைத்துச் செல்ல, அதிதியின் பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றான் அசோக். 

 

“அப்புறம் சொல்லு அதிதி.. நீ எப்படியிருக்க? எதுக்காக பெட்டியோட வந்துருக்க?”

 

“நான் மனசு நொந்து போய் வந்துருக்கேன் ராகினி.. அவரைப் பத்தி என்கிட்ட எதுவுமே கேட்காத.. அவரை நினைச்சாலே பத்திக்கிட்டு வருது..”

 

“ஓகே.. ஓகே.. சரி அவரை விடு.. ஷாலினி எப்படியிருக்கா? உன்னோட பிஸ்னஸ் எப்படியிருக்கு?”

 

“அவ அவளோட ஊருக்கு போயிக்கா.. அவளுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்க.. என்னையும் வரச்சொல்லி சொன்னா.. பட், இப்படி அவ முன்னாடி போய் நின்னா, கல்யாணம் பண்றதை விட்டுட்டு எனக்கு நியாயம் கேட்க கிளம்பிடுவா.. அவளை இப்போ டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தோணுச்சு.. அதான் அசோக்கை தேடி வந்தேன்.. இவங்க ரெண்டு பேரை விட்டா எனக்கு வேறு யாரையும் தெரியாது.. ம்ம்ம்.. பிஸ்னஸ்? அது போயிட்டுருக்கு.. என்னோட அசிஸ்டன்ட் பார்த்துக்குறான்..”

 

“சரி.. ஏதாவது குடிக்கிறியா? எடுத்துட்டு வரவா?”

 

“ராகினி.. முதல்ல அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடு.. அவ முகத்தை பார்த்தா ரெண்டு நாளா பட்டினி கிடந்தவ மாதிரி கண்ணெல்லாம் உள்ளம் போய்.. பாட்டி மாதிரி இருக்கா..”

 

“அசோக்.. வேணாம் வம்பிழுக்காத.. என்னையப் பார்த்தா பாட்டி மாதிரியா இருக்கு?”

 

“பின்ன? கண்ணெல்லாம் உள்ள போயி.. கன்னத்துல டொக்கு விழுந்து.. பார்க்கவே சகிக்கல..”

 

“உனக்கு என்னைய பார்க்க பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கோ.. உன்னைய பார்க்க சொல்லி இங்க யாரும் கெஞ்சல.. அவருக்கு என்னைய பார்க்க புடிச்சிருந்தா போதும்..”

 

“சரி.. சரி.. போதும்.. ரெண்டு பேரும் இன்னும் சின்னப்புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு.. அதிதி.. கை கழுவிட்டு வா.. சாப்பிடலாம்.. உனக்கு பிடிச்ச இடியாப்பம் பண்ணி வைச்சுருக்கேன்..” என்று ராகினி கூறியதும்,

 

“என்ன ராகினி.. நான் வரப் போறது முன்னாடியே தெரியுமா? எனக்கு புடிச்சதெல்லாம் செஞ்சு வைச்சுருக்க?” என்று சிரித்தவாறே கேட்ட அதிதியை திகைத்துப் பார்த்த ராகினியை முந்திக் கொண்டு,

 

“ப்ச்.. அவ என்ன மாயஜாலமா தெரிஞ்சு வைச்சுருக்கா.. நீ வருவன்னு? எதார்த்தமா சமைச்சா.. ஆனா, அது உனக்கு பிடிக்கும்னு நான் தான் சொன்னேன்.. அதான் அதை ஞாபகப்படுத்தி இப்ப சொல்றா.. இல்ல ராகி?” என்று அசோக் கூற,

 

“ஆமா.. ஆமா..” என்று தலையாட்டினாள் ராகினி. அதிதி எழுந்து கை கழுவ சமையலறை சென்று விட, உணவு மேஜையில் அமர்ந்திருந்த ராகினியிடம்,

 

“ராகினி.. என்னப்பண்ற? இந்நேரம் நீ பேசுனதை வைச்சு, நமக்கும் அக்னிக்கும் சம்மதம் இருக்குங்குறதை அதிதி கண்டுபிடிச்சுருப்பா.. பேசும் போது கொஞ்சம் யோசிச்சு பேசு.. அப்புறம் அவ இங்கிருந்தும் போயிட்டா.. அவளை கண்டுபிடிக்குறது ரொம்ப கஷ்டம்..” என்ற அசோக்கை பார்த்து சரி எனும் விதமாக ராகினி தலையசைக்க, அவளது விழிகளை நேருக்கு நேராக பார்த்து அசோக்,

 

“அவ என்னோட ப்ரெண்ட்.. ஃப்ரெண்ட் மட்டும் தான்.. புரியுதா? நீ தான் என்னோட லவ்.. வொய்ஃப்.. நீ தான் என்னோட லைஃப்.. புரிஞ்சுதா? இன்னொரு தடவை இப்படி பார்க்காத..” என்றவன் கூற,

 

“இல்ல.. இல்ல.. நான் அந்த மாதிரி பார்க்கல.. உங்களைப் பத்தியும் அவளைப் பத்தியும் அண்ணனைப் பத்தியும் எனக்கு நல்லாத் தெரியும்.. இருந்தாலும் ஏதோ குற்ற உணர்வு.. அதான் அப்படி பார்த்தேன்..” என்றவளை தோளோடு அணைத்துக் கொண்டவன்,

 

“மனசுல தேவையில்லாத எல்லாம் போட்டு குழப்பிக்காத.. அதிதி இப்போ நல்லாருக்கா.. அவ முகத்துல சோகத்தையும் மீறி ஒரு பளபளப்பு தெரியுது.. கவனிச்சியா?” என்று கேட்க,

 

“ம்ம்..” என்று ராகினி தலையாட்ட,

 

“எல்லாம் சரியாகிடும்.. நீ கவலைப்படாதே..” என்றவாறே அவளது நெற்றியில் முத்தமிட்டான் அசோக். கை கழுவிவிட்டு திரும்பி வந்த அதிதி, அவர்கள் இருவரின் அன்னியோன்யத்தையும் பார்த்து தயங்கி நின்றாள். அவள் கண்முன்னே அக்னி சாஹித்யா தோன்றினான். அவனும் அவளும் தனித்திருந்த காட்சிகள் படமாக ஓடின. அவளது கண்கள் தானாக கலங்க ஆரம்பித்தது. எங்கு திரும்பினாலும் அவனது ஞாபகம் வாட்ட, அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். காதை மூடினாலும் அவனது குரல், ‘பேபி’ என்று ஒலிக்க, கண்களால் அவனது உருவத்தை தேடினாள். அவனைப் பிரிந்து அவளால் ஒரு மணி நேரம் இருக்க முடியவில்லையே.. எப்படி வாழ்நாள் முழுவதும் இருப்பாள்? நெஞ்சை அடைத்தது. அதீத காதல் வரமா? சாபமா? புயல் போல் அவள் வாழ்க்கையில் நுழைந்தான்; கல்லாய் இருந்த மனதை கரைத்தான்; உடலோடு உயிராக கலந்ததும் விலகிச் செல் என்கிறான்; நான் என்ன பொம்மையா? அவன் விளையாட? என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு குமட்டிக் கொண்டு வர, சமையலறைக்கு சற்று தூரத்தில் இருந்த குளியலறை நோக்கி ஓடினாள் அதிதி. அதிதியின் ஓட்டத்தைக் கண்ட ராகினி அவள் பின்னோடு செல்ல, அங்கே வயிற்றில் இருக்கும் மொத்தமும் வெளியே வந்து விழுவது போல, வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் அதிதி. அதிதி யின் தலையை இருக்கமாக பிடித்துக் கொண்டாள் ராகினி. வாந்தியெடுத்து அமர்ந்து போனவளை, கைத்தாங்கலாக அழைத்து வந்த ராகினி, சோஃபாவில் அமர வைக்க, குளியலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான் அசோக். 

 

“அசோக்.. விடு நானே க்ளீன் பண்ணிடுறேன்..”

 

“நீ கொஞ்சம் பேசாம உட்காரியா? எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்..”

 

“ஆமா.. நீ ரொம்ப கஷ்டப்படுத்திக்காத.. அதையெல்லாம் அவர் பார்த்துப்பான்.. ஆமா, காலைல என்ன சாப்பிட்ட இப்படி வாந்தியெடுக்குற?”

 

“ம்ஹூம்.. ஒன்னுமே சாப்பிடல.. காலைல எந்திரிச்சதும்.. யார்கிட்டேயும் சொல்லாம இங்க வந்துட்டேன்..”

 

“ஏன் அப்படி பண்ண? யார்க்கிட்டயாவது சொல்லிட்டு வந்துருக்களாமே?”

 

“சொல்றதுக்கு யார் இருக்கா?”

 

“சரி.. சரி.. அழாத.. அதிதி..”

 

“…”

 

“அதிதி..”

 

“ம்ம்ம்..”

 

“கடைசியா நீ தலைக்கு ஊத்தி எத்தனை நாளாகுது?” என்று ராகினி கேட்டதும், தன் மொபைலில் இருக்கும் காலெண்டரில் தேதியைப் பார்த்து, கை விரல்களை நீட்டி கணக்கிட்ட அதிதியின் முகத்தில் சந்தோஷமும் துக்கமும் ஒருங்கே தோன்றியது. 

 

“என்னாச்சு அதிதி?”

 

“நாள் தள்ளி போயிருக்கு..”

 

“வாவ்.. அப்போ.. குட்டி அதிதியோ.. இல்ல அக்னியோ வரப்போறாங்கயில்ல சூப்பர்.. அண்ணன் இதை கேட்டா.. ரொம்ப சந்தோஷப்படுவார்..” என்று அதிதியை ராகினி அணைத்துக் கொள்ள எதுவும் புரியாது அமர்ந்திருந்தாள் அதிதி. 

 

“அசோக்.. அசோக்.. இங்க வாங்களேன்..”

 

“என்ன ராகி?’

 

“நான் அத்தையாகிட்டேன்.. என் அண்ணன் அப்பாவாகிட்டான்..” என்றவாறே அசோக்கை அணைத்துக் கொண்டவளை புரியாது பார்த்தாள் அதிதி. 

 

“ராகினி..”

 

“சொல்லு.. அதிதி.. எனக்கு இப்போ எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?”

 

“இப்ப நீ என்ன சொன்ன?”

 

“என்ன சொன்னேன்?’

 

“அக்னி உன்னோட அண்ணனா? நீங்க ரெண்டு பேரும் அண்ணன்.. தங்கச்சியா?”

 

“அது.. அது.. வந்து..”

 

“உண்மையை சொல்லப் போறியா? இல்லையா?”

 

“அதிதி.. ப்ளீஸ்.. அப்படி பார்க்காத.. நான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிடுறேன்..” என்ற ராகினி, நடந்தவைகளைக் கூற, அதிதியின் தலை தட்டாமாலையாக சுற்றத் தொடங்கியது. அப்படி ராகினி என்ன கூறியிருப்பாள்? 

 

 

2 thoughts on “மயக்கத்தில் ஓர் நாள் 10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top