(ஜியா அக்காவுக்கு பதிலாக இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன்..)
பார்க்க.. பார்க்க..
ஜியா ஜானவி️
1
சென்னை மாநகரம்..
அதிகம் அறிமுகம் தேவையில்லாத.. தினசரி நாளிதழ் பதிவுகளிலிருந்து தினச் செய்திகள் என்று தினமும் ஒரு முறையாவது சிலர் வார்த்தைகளிலும்.. பலர் வாழ்க்கையிலும் திளைத்து வளரும் மாநகரம்..
சென்னை மாநகரத்தின்.. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபம் அது.
மண்டபமே பெரிய மாளிகை போன்ற பிரமாண்டமாக இருக்க.. அலங்காரங்களோ பார்ப்பவர்களை மாயலோகமா பூலோகமா என்று ஆச்சரியத்தில் கண்களை விரிக்க.. மின் விளக்குகளின் அலங்காரங்களோ அந்தகார இரவை பகலாக்கி பல வர்ண ஜாலங்களை வாரி இறைத்துக் கொண்டிருக்க.. அங்கு பட்டுக் கட்டிய சீமாட்டிகளும்… பட்டு வேட்டியில் திளைத்த சீமான்களுமாக உலா வந்து கொண்டிருக்க.. சென்னை மாநகரே திரும்பிப் பார்த்து வியக்கும் அளவுக்கு ஆடம்பரத்துடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது அந்த திருமண வரவேற்பு.
சென்னை மாநகரத்தின் பல இடங்களில் பிரபலமான ராஜன் உணவகத்தின் உரிமையாளர் செந்தில்ராஜன் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள் அஞ்சனாவிற்கும்..
பிரபல தொழிலதிபர் சந்திர பிரகாஷின் ஒரே மகனான சூரிய பிரகாசஷூக்கும் நடைபெறும் திருமணம் என்றால் சும்மாவா?!
அதுவும் மாப்பிள்ளை வீட்டின் உயரத்திற்கு ஈடாக செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்து தான் சம்பாதித்த பணத்தை தண்ணீராக.. இல்லையில்லை இப்போதெல்லாம் தண்ணீர் கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது.. காசை வாரி இறைத்து பிரமாண்ட திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் செந்தில்.
சூரிய பிரகாஷ் வெட்ஸ் அஞ்சனா..
என்று ஆர்கிட் பூக்களைக் கொண்டு அழகாக வடிவமைத்து இருக்க.. அதை இரண்டு கண்கள் வன்மமாக பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது சட்டென்று எட்டிப்பார்த்து, சாரி ரைட்டர்.. ரெண்டு இல்ல நாலு.. என்றது மற்றொரு உருவம்.
டேய்.. சப்போட்டா மண்டையா.. நல்லா பாரு நாலு இல்லடா.. எட்டு என்ற அந்த குண்டன் மண்டையில் குட்டு வைத்தது மற்றொரு உருவம்.
வாயில அடி.. வாயில அடி.. முக்கியமா நம்ம தலைய விட்டுட்டுடியேடா..
அதானே.. அதானே.. என்று பல குரல்கள் கேட்க..
ஆமா.. ஆமா.. தலையோட சேர்த்து பத்து கண்கள்.
சரி ஆபிசர்ஸ்.. பத்து கண்களையும் பக்காவா நோட் பண்ணிக்கிறேன்..
முகத்தில் ஸ்கார்ப் கட்டிய மொத்த உருவமும் தங்கள் பற்களை காட்டி சிரிக்க..
அய்யய்யோ.. இரத்த காட்டேரிங்க.. ஓடு ஜியா.. ஓடு..
“என்னங்கடா இங்கே சத்தம் போட்டுடு இருக்கீங்க.. ஒழுங்கா அமைதியா இருட்டுற வரைக்கும் இங்கேயே இருங்க.. இல்ல வகுந்துடுவேன் வகுந்து” என்று மற்றவர்களால் தலை என்று அழைக்கப்பட்ட அந்த உருவம் தன் கை முஷ்டியை முறுக்கி அவர்களை குத்துவது போல் காட்ட பயந்த மற்ற நான்கு உருவங்களும் பம்மிக் கொண்டன.
இவர்கள் இங்கே பேசிக்கொண்டே இருக்க..
உள்ளே திருமண விழா வெகு ஜோராக ஆரம்பமானது.
வெண்ணிற ஆர்க்கிட் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் இடையிடையே சிவப்பு நிற மலர்கள் கொண்டு இதய வடிவிலான செய்த அலங்காரம் கொள்ளை கொண்டது. பொன்னிற பட்டில் தங்க ஆபரணங்கள் பூண்டு அழகு ஓவியமாக நடத்த வந்தாள் அஞ்சனா. ஐந்தடி அழகு பெட்டகமாக அன்ன நடையிட்டு வந்தவளை, பார்ப்பவர் கண்களை விரிய வைக்கும் வண்ணம் பேரழகாக தோன்றினாள் பாவையவள்.
தன்னருகில் நிற்கும் அழகு பாவைக்கு சற்றம் குறையாமல் நின்றிருந்தான் சூர்ய பிரகாஷ் கம்பீரத்தில்.. ஆறரையடி உயரத்தில் ஆஜானுபாகுவான தேகம்.. எதிரிகளை விழிகளாலே மிரண்டோட வைக்கும் கூர் விழிகள்.. நேரான விடைத்த நாசி.. எப்போதும் இறுக மூடிய அதரங்கள்.. மேல் அதரங்களை மறைத்த கருத்தடர்ந்த கற்றை மீசை.. தாடியற்ற வழவழப்பான இறுக்கமான தாடை.. அணிந்திருந்த கோட் சூட்டில் பார்க்கும் கன்னிகளை வாவ் சொல்ல வைக்கும் வனப்புடன் மேடையில் நின்றிருந்தான்.
தன்னருகே நின்றிருந்த வருங்கால மனைவியின் அழகில் லயிக்காமல், கண்ணெடுத்தும் பாராமல், தன் கையிலிருந்த போனில் யாரிடமோ அதிமுக்கியமாக பேசிக்கொண்டே இருந்தான் இந்த மாப்பிள்ளையாகப்பட்டவன்.
அஞ்சனாவோ தன் அஞ்சனை விழிகளை உயர்த்தி அவனை பார்ப்பதும்.. பின் தலை கவிழ்வதுமாக இருந்தாள்.
சட்டென்று தன் போனில் இருந்து பார்வையை இவள் புறம் திருப்பியவன் “என்னிடம் ஏதாவது கேட்கனுமா?” என்று ஒற்றை புருவத்தை தூக்கி கேட்க..
அதையும் வருங்கால மனைவியை பார்த்து கேட்கும் காதல் கணவன் போலவா கேட்டான்? ஏதோ தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளியை கேட்கும் தொனியில் கேட்க.. அவன் ஒற்றை பார்வைக்கே மிரண்டவளோ தன் தலையை இடவலமாக அசைத்து ஒன்றும் இல்லை என்று கூறி மீண்டும் தன் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.
“ஓகே” என்று இரு தோள்களையும் குலுக்கிக் கொண்டவன், பின்பு தன்னுடைய போனிலேயே ஐக்கியமாகி விட்டான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தாய் வாசுகி தன் அருகில் இருந்த கணவனின் இடுப்பில் முழங்கையால் இடித்து தன் மகனை சுட்டிக்காட்டினார்.
“இவன் இப்படியே விரைப்பாக இருந்தான்னா காலையில கல்யாணத்துக்கு இந்த பொண்ணு ஓகே சொல்லாது போல.. இதுல இவனெல்லாம் குடும்பம் நடத்தி குழந்தை பெத்து.. நான் எப்ப என் பேரன் பேத்திகளை கொஞ்சறது?” என்று வருத்தமும் வேதனையும் ஆக தன் கணவர் சந்திர பிரகாஷிடம் கூறினார்.
“விடுமா.. கல்யாணம் ஆகிவிட்டால் எல்லாம் சரியாயிடும்” என்று எல்லா கணவர்களையும் போல் மனைவியின் மன அழுத்தத்தை போக்க அவர் சமாதானம் கூற..
“இப்பவே வயசு முப்பது தொடங்க போது.. ஏதோ போனாபோகுதுன்னு இப்போ தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருக்கான். நல்லபடியா என் பையனுக்கு கல்யாணத்தை முடிஞ்சி வைப்பா முருகா” என்று வேண்ட.. யாரோ “ஹச்சு” என்று பின்னால் தும்மல் போட..
“பாரு.. பாரு வாசு.. நல்ல சகுனம் தான் யாரோ தும்முறாங்க பாரு” என்று சந்திரன் கூறினார்.
“நல்லபடியா எல்லாம் நடந்தால் சரி” என்று பெருமூச்சு ஒன்று விட்டு தன் மகனை நோக்கி மணமேடைக்குச் சென்றார்.
அவன் கையில் இருந்த போனை அவர் பிடுங்கி ஆஃப் செய்தார்.
“ம்ப்ச் மா.. முக்கியமான காலில் வந்து இப்படி பண்ணுறீங்க” என்று அவன் அன்னையிடம் பல்லைக் கடித்து கொண்டே முறைக்க..
அவர் அன்னையோ புன்னகை முகத்துடன் அவன் கழுத்திலிருந்த மாலையை சரி பார்ப்பது போல அவன் அருகே குனிந்து.. “இங்கே பார் சூர்யா.. ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன். இந்த இரண்டு நாள் மட்டும் உன் கவசகுண்டலம் ஆன போனுக்கும்.. கோபத்துக்கும் கொஞ்சம் லீவு கொடுன்னா.. நீ கேட்கவே மாட்டேங்கிற.. அங்க பாரு கல்யாண பொண்ணு உன்னை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்துக்கிட்டே இருக்கா.. மணமேடையில் நிற்கிறனு கொஞ்சமாச்சும் ஃபீல் பண்ணுறியா நீ? நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கிற நேரத்தில எதோ பேசுறதுக்கு ஆசைப் படுறா.. என்னன்னு அத முதல்ல கேளு.. வருங்காலத்தை முதல பார் நிகழ்காலத்தை அப்புறம் பாக்கலாம்” என்று அவன் போனை பிடிங்கி தன் ஹேன்ட் பேக்கில் போட்டுக்கொண்டு அவர் சென்று விட்டார்.
“ம்மா.. ம்மா” என்று அவன் அலறியது எல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை.
‘உங்க அப்பாவை அடக்கி ஆண்டவடா நான்.. நீ எம்மாத்திரம்’ என்பது போல் அவனை பார்த்து ஒரு லுக்கு விட்டு விட்டு மிக பவ்யமாக தன் கணவர் அருகில் சென்று நின்று கொண்டார். வருகின்ற விருந்தினர்களை இருகை கூப்பி புன்னகை முகத்துடன் இருவரும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.
தன் போன் இல்லாததுதான் அவனுக்கு பெரும் கஷ்டமாக ஏதோ இழந்தது போல இருக்க.. ஏற்கனவே இறுக்கமாக இருந்த முகத்தை இன்னும் இறுக்கமாக வைத்துக் கொண்டான்.
அருகில் இருந்த அஞ்சனாவோ அதுக்கு ‘அவங்க அம்மா போன வாங்கிட்டு போகாமலேயே இருந்திருக்கலாம்’ என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது.
ஆனால் இந்த ஒரு போன் தான் அவர்கள் இருவரின் வாழ்க்கையும் திசை மாற்றி விட போகிறது என்பதை அறிந்தால் வாசுகி எடுத்துச் செல்லாமல் இருந்திருப்பாரோ!!
பெரும்பாலும் மறுநாள் கல்யாணத்துக்கு வர இயலாதவர்களுக்கான வரவேற்பு தான் அது. அதிலும் பெரும்பாலானவர்கள் அவர்களைச் சார்ந்த உறவினர்களும் தொழில்துறை நண்பர்களுமாகாவே இருக்க இருவரும் வெகு நேரம் கழித்தே உணவு உண்ண அழைத்து செல்லப்பட்டனர்.
அப்போது மறுநாள் திருமணத்துக்கு வர இயலாது என்று முதல் நாளே வந்த அவனது நெருங்கிய நண்பன் விஷ்ணுவுடன் பேசியவாறே அருகிலிருந்த அஞ்சனாவை கண்டுகொள்ளாமல் உணவை உண்டு முடித்து எழுந்துவிட்டான்.
விஷ்ணுவுக்கு விடை கொடுக்க வாசல் வரை அவன் செல்ல.. அங்கிருந்த அவனது மற்ற நண்பர்களும், அவன் கீழ் வேலை செய்பவர்களும் பிடித்துக் கொண்டனர்.
“ஒரு வழியா நம்ம எஸ்பி சர் குடும்பஸ்தர் ஆகப்போறாரு டா.. இனி நாம லீவு கேட்கும்போதெல்லாம் காரணமே கேட்காமல் கரெக்டா கொடுப்பார்” என்று ஒருவன் சொல்லி சிரிக்க மற்றவர்களும் சேர்ந்து சிரித்தனர்.
அவர்களால் எஸ்பி என்றழைக்கப்பட்ட சூரியபிரகாஷ் முகத்திலோ மெல்லிய கீற்றாய் புன்னகை வெகு அரிதாய்..
எஸ்பி என்று அழைத்து அவனுடைய நண்பர்களும் உறவு முறை பசங்களும் கல்யாண மாப்பிள்ளையான அவனை ஓட்டித்தள்ளிக் கொண்டு இருந்தார்கள்.
மாப்பிள்ளை அவன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை சற்று தூரத்தில் இருந்து அந்த பத்து கண்களும் வெகு வெகு பாசத்துடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர் முக்கியமாக எஸ்பி-ஐ தான்..
“லெட்ஸ் எக்ஸிகியூட் அவர் ப்ளான்” என்று தல கூற.. மற்ற நால்வருள் ஒன்று “தல இங்கிலீஷ் எல்லாம் பேசுது” கிண்டல் செய்ய..
“ஆமா.. ஆமா நாம செய்ய போற வேலைக்கு அது தான் பாக்கி” என்று நக்கல் சிரிப்பு சிரிக்க..
“இவங்களோ மேல்தட்டு வர்க்கம்.. அதே போல நாமளும் நம்ம வேலைய ஹைபையா செய்யலாம் பார்த்தா.. உங்கள வச்சுக்கிட்டு ஒன்னும் முடியல டா” என்று நக்கலடித்தவன் தலையில் மாங்கு மாங்கு என்று கொட்டியது தல..
“தல வலிக்குது தல.. அப்புறம் நான் அழுதுடுவேன். சமாதானப்படுத்துவது ரொம்ப கஷ்டம்” என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டு குட்டுவாங்கிய உருவம் அழ தொடங்க..
“அச்சச்சோ அழுதுடாதே.. இரு.. இரு எப்படியாவது ஒரு ஐஸ்கிரீம் லவட்டிக் கொண்டு வந்து தரேன்” என்று சமாதானம் செய்ய..
“ஐய்.. ஐஸ்கிரீம்” என்று சிரிக்க..
மற்ற மூன்றும் தலயைப் பார்த்து முறைக்க..
“உங்களையெல்லாம் கூட்டிட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும்.. எடுத்துட்டு வந்து தரேன்.. எடுத்துட்டு வந்து தரேன்” அந்த தலை ஆகப்பட்ட உருவம் தலையில் அடித்துக்கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் ஐஸ்கிரீம் ஸ்டாலில் இருந்த ஐந்து கோன் ஐஸ்க்ரீம்களை எடுத்துக்கொண்டு கொடுத்து தன் படையினரை சமாதானப் படுத்தியது.
அவனவன் தண்ணி பார்ட்டி.. பிரியாணி என்று கேட்க.. இதுகளோ ஐஸ்க்ரீம் கேட்குதுகளே ஒருவேளை 90’ஸ் கிட்ஸா இருக்குமோ!!
ஒருவழியாக இவர்களை ஐஸ்கிரீம் கொடுத்து சமாதானப்படுத்தி தன் வார்த்தை ஜாலத்தால் அவர்களுக்கு புதுவித உற்சாகத்தைக் ஊற்றி தன் செயலை தொடங்கியது அந்த உருவம்.
அப்படி என்ன இவர்களின் செயல்?
மாப்பிள்ளையை கடத்துவது தான்!!
அந்த ஆறரை அடி அரக்கனை இந்த ஐவர் படை கடத்த திட்டமிட்டு தான் இந்த கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்து இருக்கிறார்கள்.
உணவு முடிந்ததும் ஆங்காங்கே மீதம் இருக்கும் சிறு சிறு அலங்கார வேலைகள்.. நாளை மறுநாள் கல்யாணத்திற்கு ஹாலை ஏற்றவாறு மாற்றியமைப்பது என்று இந்த கல்யாணத்தை ஏற்று நடத்தும் செந்தில் ராஜனால் நிறுவப்பட்ட ஈவண்ட் ஆட்கள் மும்முரமாக தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
ஐவரும் சட்டென்று தாங்கள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த மேரேஜ் ஈவெண்ட் ஆட்களை போல தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு, அவர்களோடு கலந்து வேலை செய்வது போலவே மெல்ல மெல்ல மாப்பிள்ளை வீட்டாருக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள அறைகளில் சென்று நோட்டமிட்டனர். மறுநாள் கல்யாணம் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் முகூர்த்தம் என்பதால் அனைவரையும் சீக்கிரம் உறங்குங்கள் என வாசுகி கட்டளையிட்டு இருக்க.. சொந்தங்கள் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
மாப்பிள்ளையோ தன் நண்பர்களுக்கு என்று பேச்சுலர் பார்ட்டி தனியாக, கிக் ரெக்ரேஷன் கிளப்பில் ஏற்பாடு செய்திருக்க.. அதை பார்த்துவிட்டு பின்னிரவு வந்து விடுவதாக தன் அன்னையிடம் சொல்ல.. அவரோ அதற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.
“அவங்களுக்கு என்ன ஏற்பாடு வேணாலும் சொல்லு, நான் ஆளுங்கள வைச்சு செஞ்சு கொடுக்குறேன். கல்யாண மாப்பிள்ளை வெளியில எங்கயும் போகக்கூடாது” என்று திட்டவட்டமாக மறுத்துவிட.. “இந்த கல்யாண வேலையை ஆரம்பித்ததிலிருந்து உங்களோட அடக்குமுறை தாங்கவே முடியல.. இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இன்னும் ஒரு நாள்தானே.. அதுக்கப்புறம் உங்களை பார்த்துக்கறேன்” என்று அவன் எழுந்து தன் அறைக்குள் சென்றான்.
இந்த விவாதத்தை தங்களுக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்தது ஐவர் படை..
“டேய் நீ மொதல்ல கீழே போய் நம்ம ஜாக்குவார ரெடி பண்ணி வச்சுக்கோ”
“நீ பின்பக்கம் ஏறி, மயக்க மருந்து ஸ்பிரேயோட ரெடியா இரு. நாங்க உள்ள நுழைஞ்ச உடனே மூஞ்சில அடிச்சிடனும். சரியா?”
“தல யாரு முதல்ல உள்ள நுழைஞ்சாலும் அடிச்சிடவா?” என்று ஒரு உருவம் கேட்க..
“தருதல தருதல.. அவன் உள்ளே நுழைஞ்சதும் அவன் மூஞ்சில அடி.. பாத்து எங்க மூஞ்சில அடிச்சு தொலைஞ்சிடாதே”
என்று இருவரையும் அனுப்பி வைத்துவிட்டு, ஒருவனை தன் கூட அழைத்துக் கொண்டு மற்றொருவனை இவர்கள் உள்ளே நுழைந்ததும் அந்த பக்கம் கதவை சாத்த சொல்லி கட்டளையிட்டது தல..
எஸ்.பி தன் நண்பர்களுக்கு போன் செய்து வரவில்லை என்று கூற, போனை அறை முழுவதும் தேட.. அப்போது தான் அன்னை வாங்கியது நினைவு வந்தது. அப்போது அறைக்கதவு தட்டப்பட..
“எஸ் கம் இன்” என்ற ஆளுமையான குரலில் உள்ளுக்குள் சற்று பயந்து வர அதையெல்லாம் பார்த்தால் என்ன ஆகுறது, என்று தைரியத்தை மீட்டு அவன் முன் பணிவாக நின்று “சார் கிக் ரெக்ரேஷன் கிளப்ல ஒரு சின்ன பிரச்சனை ஆயிடுச்சு.. உங்க பிரெண்ட்ஸூக்குள்ள.. இரண்டு பேருக்கு வேறு அடிபட்டுடிச்சு.. நீங்க கொஞ்சம் வரமுடியுமா?” என்று பதட்டத்துடன் கேட்ட தலையின் பர்ஃபாமன்ஸை கண்டு உண்மை என நம்பிய எஸ்.பி-ஓ “இதோ..” என்று அம்மா கிட்ட கொடுத்த போனையும், அம்மாவுக்கு கொடுத்த வாக்கையும் காற்றோடு விட்டு அவர்கள் பின்னே வர..
“வண்டி” என்று கேட்வனிடம், “சார் எங்க வண்டியே இருக்கு. அதிலே போலாம் சர்” என்று கூறி அவனை முதலில் ஏற்ற..
ஏற்கனவே சீட்டிற்கு பின் அமர்ந்திருந்த மற்றொருவன் நொடியும் தாமதிக்காது தன் கையில் இருந்த ஸ்ப்ரேயை இரண்டு மூன்று முறை அழுத்தமாக அடிக்க.. அதில் எஸ்.பியுடன் சேர்ந்து அதை சுவாசித்த அவனுமே மயக்கமானான்.
“ஸ்ஸ்ப்பா.. ஒருவழியாய் இவனை கடத்தியாச்சு.. சரி எடுங்கடா வண்டிய.. விடுங்கடா அந்த கெஸ்ட் ஹவுஸூக்கு” என்ற தலையின் உத்தரவில்.. கல்யாண மண்டபத்தை விட்டு வெகு வேகமாக பறந்தது அவர்கள் கையில் ஜாக்குவார்.
மறுநாள் காலை கண்விழித்த எஸ்.பியோ தன்னை யாரோ நாற்காலியோடு சேர்த்து கட்டி வைத்ததை பார்த்து ரௌத்திரம் கொண்டு கத்தினான்.
ஐவர் படை அவன் முன்னால் வர.. தான் ஏமாற்றப்பட்டது அப்பட்டமாக தெரிய.. தன்னுடைய வாழ்நாளில் முதன் முறையாக ஏமாற்றிய இவர்களை கண்டவனுக்கு கொலை வெறி தாண்டவமாடியது முகத்தில்..
“யார்ர்ரா.. நீங்க? எதுக்கு என்னை கடத்திட்டு வந்து இருக்கீங்க?” என்று அவன் கர்ஜிக்க..
“சும்மா கத்திக்கிட்டு இருக்க கூடாது.. இந்த கல்யாணத்தை நிறுத்த தான் உன்னை கடத்திக்கிட்டு வந்திருக்கோம்” என்று கூற..
“நீங்க எல்லாம் யாரு.. என்னை கடத்தி பணம் வாங்க பிளான் பண்றீங்களா.. அதெல்லாம் ஒரு காலமும் நடக்காது?” என்று எகத்தாளமாக அவன் சிரிக்க..
“யாருக்கு வேணும் உன் பணம்..
எங்களுக்கு தேவை கல்யாண நிக்கணும்..
இதில் சம்பந்தப்பட்டிருப்பது ஒரு பெண்ணோட மனம்..” ஐந்தில் ஒன்று கூற..
இந்த மொக்க கவிதை இப்ப ரொம்ப அவசியமா என்று தலையின் முறைப்பில்..
அசட்டு சிரிப்போடு பம்மியது அந்த உருவம்.
“என்னங்கடா மனம்.. பணம்னு ரைமிங் பேசுறீங்க?” என்று பல்லைக் கடித்தபடி அவன் உறும..
“கல்யாண பொண்ணுக்கு உன்ன புடிக்கல அவ ஏற்கனவே வேற ஒருத்தன லவ் பண்றா.. இந்நேரத்துக்கு அந்த பொண்ணு லவ் பண்ற பையனுக்கே அவள கல்யாணம் பண்ணி வச்சு இருப்பாங்க” என்று கூற..
” உங்க பிரண்டுக்காக என்னை கடத்திட்டு வந்து அவனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்றீங்களா? ரொம்ப ஓல்ட் ஸ்டைல டா.. அந்த பொண்ணு என்கிட்ட சொல்லியிருந்தா நானே இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன்.. அப்படி ஒன்னும் அந்த பொண்ணு பெரிய வொர்த் எல்லாம் இல்ல” என்று நக்கலாக பேசியவனின் முகம் இறுக்கமாக மாறி..
“ஆனா என்னை தூக்கி நீங்க தப்பு பண்ணிட்டீங்க. நான் யாருன்னு உங்களுக்கு தெரியல?” என்று எரிமலை உள்ளடக்கிய குரலில் அவன் பேச..
“இங்க பாருங்க மிஸ்டர்.. ஏற்கனவே உங்களை தொடர்பு கொள்ள நாங்கள் எவ்வளவோ ட்ரை பண்ணனோம். ஆனால் உங்களை சந்திக்கவே முடியவில்லை.. என்ன பண்ண சொல்றீங்க.. அப்பாயிண்ட்மெண்ட் உங்ககிட்ட வாங்க தனியா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கனும் போல இருக்கு” என்று தல கிண்டல் குரலில் பொய்யை அளந்து விட..
அனாவசியமாக ஒரு எதிரியை சம்பாதித்துக்கொண்டு இருப்பதை அறியாத அனைவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
“என்னை கடத்துனத்துக்கு உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?” என்று அவர்களைக் கூர்ந்து பார்த்தவாறு நிதானமாக அவன் கேட்க..
“நாங்க இப்போ உங்கள கடத்துனோம்? நாங்க இவ்வளவு நேரமாக கல்யாண மண்டபத்தில் தானே இருந்தோம்” என்று மேவாயில் கை வைத்து கூறிய தலைக்கு படையின் அங்கத்தினர் ஹை-பை கொடுக்க..
“வாட்?? மண்டபத்துல இருந்தீங்களா?” என்று அவன் புரியாமல் கேட்க..
“ஆமா பிரண்டோட அக்கா கல்யாணத்துக்கு நாங்க எல்லாம் இல்லாம எப்படி?” என்று கேட்க.. அவன் அவர்களை கூர்ந்து பார்க்க..
“ஆமாம்.. கல்யாண பெண் அஞ்சனா ஓட தங்கச்சி நிரஞ்சனா எங்களுடைய ஃபிரண்ட். அவங்க அக்கா ஏற்கனவே அவங்க கசின் ஒருத்தன லவ் பண்றது அவங்க அப்பாவுக்கு பிடிக்காமல் பெரிய இடம் சொல்லி உங்களை பிக்ஸ் பண்ணிட்டாரு. அதான் அந்த காதல் புறாக்களை சேர்த்து வைக்க உங்களை கடத்த வேண்டியதாயிடுச்சு.. அவங்க கல்யாணமும் சூப்பரா நடந்து முடிஞ்சிடுச்சு.. நாங்களும் ஃபுல் கட்டு கட்டியாச்சு” என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கும் போதே தன் இரு கை தளைகளையும் விடுவித்துக் கொள்ள முயன்றான் எஸ் பி.
தன் முழு உயரத்துக்கும் அவன் அமர்ந்திருந்த நாற்காலியோடு எழுந்தவன் “நான் யாருன்னு தெரியுமா உங்களுக்கு?” என்று பற்கள் நற நறக்க.. கண்களில் கனல் கக்க.. நின்றவனை பார்த்தவர்களுக்கு உள்ளுக்குள் பயந்தாலும்.. பில்டிங் ஸ்ட்ராங்கு என்பதைப்போல தங்களைக் கண்டு பிடிக்க முடியாது என்ற தைரியத்தில்.. தைரியமாகவே காட்டிக் கொண்டனர்.
“எஸ்பி-னு எல்லாரும் உன்னை கூப்பிட்டா நீ பெரிய போலீஸ் எஸ்பின்னு உனக்கு நினைப்பா? எங்க அப்பா யார் தெரியுமா? என்ன போஸ்ட்ல இருக்காரு தெரியுமா?
ஏதோ நானா இருக்கப்போக உன்னை இதோட விடுறேன். இல்லாட்டி நீ நெஞ்ச நிமிர்த்தி பேசுறதுக்கு, எங்க அப்பாட்ட சொல்லி உன்னை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லிடுவேன்” என்று அந்த தல எகிறி எகிறி பாய மற்ற நால்வரும் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர்.
தல பேசியதை கேட்டவன் அதிர்ந்துதான் போனான்.
காரணம் அது தல அல்ல தலைவி..
இனி அவனுடைய தலைவலி..
அதுவரை மிமிக்கிரியில் கைதேர்ந்தவளான அந்தத் தல, குரலை மாற்றி மாற்றி பேசி இருக்க.. இப்போது கோபத்தில் தன்னையும் அறியாது தன் குரலில் பேசி விட அதில்தான் அதிர்ந்து போனான் சூரிய பிரகாஷ்.
ஆம்.. ஒரு பெண்ணால் தான் கடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை, பல கிரிமினல்களையும்.. பல தாதாக்களையும் அசால்டாக என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய.. அசிஸ்டன்ட் கமிஷனர் சூரியபிரகாஷ் ஐபிஎஸ் அவர்களுக்கு…
எங்கோ மூலையில் சைரன் சத்தம் கேட்க,
மீண்டும் அவன் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து விட்டு, அடுத்த நொடி ஐவர் படை அப்பிட்டாகியது.
2
சென்னை கமிஷ்னர் அலுவலகம்..
தன் மேலதிகாரிக்கு விரைப்பாக சல்யூட் அடித்து வணக்கம் செய்தான் சூரிய பிரகாஷ்.
அது ஏற்றுக்கொண்டார் மெல்ல தலையசைத்து கமிஷனர் தியாகராஜன், பின் தன் எதிரில் இருந்த இருக்கையை காட்டி அமரச் சொன்னார்.
அபிஷியலை கடந்த ஒரு இணக்கமான உறவு இவர்கள் இருவருக்கும் எப்போதும் உண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளாக சூரியபிரகாஷ் சென்னை மாற்றப்பட்டு வந்தது முதல் அவனுக்கு உயர் அதிகாரியாக இருப்பவர் தியாகராஜன் தான். பெரும்பாலான சவாலான கேஸ்களில் திறமையாக செயல்படும் இந்த சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் அதேசமயம் அடாவடியான இளைஞனை அவருக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் சில சமயங்களில் அவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காமல் அவன் எடுக்கும் முடிவுகளையும் அதில் வரும் பிரச்சனைகளையும் கண்டு அவன் பயப்படுகிறானோ இல்லையோ இவர்தான் தலையை பிய்த்துக் கொள்வார். அப்படியும் அவன் செய்யும் செயல்களில் நியாயம் இருப்பதாகவே நிச்சயமாக நம்புபவர். அதனால் பல என்கவுண்டர்கள் இவன் தன் இஷ்டம் போல நடத்துவதையும் கண்டுகொள்ள மாட்டார். வேறு ஏதாவது இவர் வாயைத் திறந்தால் கூட..
“அவனெல்லாம் இந்த பூமிக்கு பாரம் சர்.. ரெண்டும் புல்லட்டுல தீர்க்குற விஷயத்துக்கு இரண்டு வருஷம் வாய்தா வாங்க என்னால முடியாது” என்று அலட்சியமாக கூறுபவனை.. ஒன்றும் சொல்லமுடியாமல், அவரின் மேல் அதிகாரிக்கு இவர் தான் பதிலளிக்க வேண்டியதாக இருக்கும்.
இப்படியாக அவன் பொறுப்பேற்றுக்கொண்ட ஐந்து ஆண்டுகளில் மற்றவர்கள் மீது இவன் போட்ட வழக்குகளை விட இவன் மீது வந்த புகார்கள் தான் அதிகம்..
இப்படி சீறுவதில் சிங்கம்.. பாய்வதில் புலி.. வேகத்தில் வேங்கை.. என்று காவல்துறையினரால் அன்பாக அழைக்கப்பட்டு வந்த நம்ம அசிஸ்டன்ட் கமிஷனர் தான் கடத்தப்பட்டு இருந்தான் அதுவும் ஒரு பெண்ணால்..
இப்படிப்பட்ட தன்மான சிங்கம் ஒரு பெண்ணால் கடத்தப்பட்டது தெரிந்தால் அவனின் கெத்தும்.. போலீஸ் ஆளுமையும் கேலி பொருளாக மாற அநேக வாய்ப்புகள் உள்ளதை அறிந்தவன் இன்றுவரை அந்த உண்மையை யாரிடமும் சொல்லவில்லை.
அப்புறம்.. என்ன சொல்லி சமாளித்தான் கல்யாணத்து அன்று காணாமல் போனதை?
அது ஒரு தனிக்கதை.. சோக கதை.. துயரக் கதை.. எஸ் பி யின் வாழ்க்கை வரலாற்றில்.
கல்யாணம் செய்துகொள்ள பிடிக்கவில்லை என்று சென்றுவிட்டதாக அனைவரிடமும் கூறி மலுப்பி இருந்தான் இந்த டெரர் போலீஸ்.
இப்படி டெரர் போலீசாக இருப்பதிலும் ஒரு நன்மை இருக்கிறது.. யாராவது கேள்வி கேட்டால் நமக்கு பதில் தெரியவில்லை என்றால் முறைப்புடன் நாம் நிறுத்திக் கொள்ளலாம்!! (என்ன ஒரு புத்திசாலித்தனம்)
“உட்கார் எஸ் பி.. என்ன வேலை செஞ்சுட்டு வந்திருக்கிற நீ?” என்று அவர் கோபமாக கேட்க..
அவர் என்ன கூறுகிறார் என்று புரிந்தும் பதிலளிக்காமல் அலட்சியமான முகபாவத்துடன் அவர் மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தான்.
“உன் அலட்சிய போக்கை இதுலயும் காட்டனும்னு அவசியம் இல்லை இது வாழ்க்கை எஸ்.பி. இப்படித்தான் முடிவு எடுப்பியா நீ? எடுத்தோம் கவிழ்த்தோம் என்று.. அதுவும் அதுல வேற ஒரு பொண்ணோட வாழ்க்கையும் சம்பந்தப்பட்ட இருக்கு.. இவ்வளவு தெளிவா யோசிக்கிற நீ முதலேயே வேண்டான்னு சொல்ல வேண்டியதுதானே கடைசி நேரத்துல ஏன் இப்படி செய்த?” என்று அவன் மேல் அக்கறை கொண்ட ஒரு நல்ல உள்ளமாக அவர் கேட்க..
அவனோ பதிலளித்தால் அல்லவா?!
“எனி இம்பார்டெண்ட் கேஸ்? என்று கேட்டவனை.. “வாழ்க்கையை விட வழக்குல என்னடா இம்பார்டெண்ட் இருக்கு?” என்று சற்று காரமாக அவர் கேட்க..
இப்படிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல வேண்டிய தன் நிலையை நினைத்து அவனுள் இருந்த கோபம் வன்மம் எல்லாம் பலமடங்கு அதிகரித்தது அந்த ஸ்கார்ப்காரியின் மீது..
“சொல்லு எஸ்.பி… உன் மேல உள்ள அக்கறையில் தானே கேட்கிறேன்” என்று தன் கோபம் விடுத்து தன்மையாக அவர் கேட்க..
அப்போதுதான் அவரை நிமிர்ந்து பார்த்தான்.
அவருக்கு தான் தெரியுமே இவனிடம் கோபம் அதிகாரம் இது எதுவும் வேலை செய்யாது என்று.. அவரின் தன்மையில் போனால் போகுது என்று உண்மை பாதி பொய் பாதி கூறினான்.
“அந்த பொண்ணுக்கு ஏற்கனவே வேறு ஒரு அஃபர் இருந்திருக்கு சார்.. கடைசி நிமிஷத்துல தான் எனக்கு அது தெரிய வந்தது. அதனாலதான், நான் சொல்லாமல் போயிட்டேன்” என்று கூறியவன் அதோடு அந்த பேச்சு முடிந்துவிட்டது என்பது போல எழுந்து நின்று கொண்டான்.
எப்பவும்போல இப்பவும் எஸ்.பி.யின் செயலில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டவர்.. “ஒரு விஷயம் நமக்கு நடக்காம போகுதுன்னா அதைவிட பல மடங்கு நல்ல விஷயம் நமக்கு நடக்கப் போகுதுன்னு அர்த்தம் எஸ்.பி.” என்று பாசிட்டிவாக பேசி அவனை தேற்ற முயன்றார்.
“நடக்க போனதே எனக்கு நல்ல விஷயம் கிடையாது.. இதுல அதை விட பலமடங்கு நல்ல விஷயமா? விளங்கிடும்.. சர்.. கல்யாணம் எல்லாம் நம்மல சிக்க வைக்கிற சிலந்தி வலை” கேலி குரலில் சொல்லிவிட்டு தன் அலுவலகம் நோக்கி சென்றவன் அறிவானா? தானே போய் அந்த சிலந்தி வலையில் சுகமாக விழப்போகிறான் என்று!!
ஆனால் அதற்குள் அவன் காதுபட பலபேர் “விஷயம் தெரியுமா? சாரோட கல்யாணம் நின்னு போச்சு.. அதைவிட.. கல்யாணத்து அன்னைக்கு சார்.. சொல்லாம கொள்ளாம போயிட்டாரு” என்று கொரோனாவை விட அதிவேகமாக எஸ்.பி-யின் கல்யாண விஷயம் பரவிப் படர்ந்தது.
இதெல்லாம் ஒரு மேட்டரா என்று கடந்துதான் இருந்திருப்பான் அந்தப் பெண்ணால் கடத்தப்படாமல் இருந்தால்.. தானாகவே இந்த திருமணத்தை நிறுத்தியிருந்தால்..
ஆனால் தன்னை கடத்தி.. அதனை வாய்விட்டுச் சொல்ல முடியாத தன்னுடைய இந்த நிலை அவனுக்கு மிகவும் வெறுக்கத்தக்கதாக இருந்தது. கோபம்.. கோபம்.. கோபம் தான்..
அன்று அவனிடம் எதிர்ப்பட்டவர்கள்.. அவனிடம் வழக்கில் மாட்டியவர்கள்.. அவனிடன் வேலை பார்ப்பார்கள் என்று அனைவரையும் காய்ச்சிதான் எடுத்தான். அவர்களோ எதற்காக எரிமலையாய் இவன் தகிக்கிறான் என்பதை அறியாமல் புரியாமல் நொந்து கொண்டு வேலையை செய்து கொண்டிருந்தனர்.
மதியத்திற்கு மேல் சிறிது ஓய்வு எடுத்தான் இல்லை இல்லை மற்றவர்களுக்கு ஓய்வு கொடுத்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இருந்தது இன்றைய எஸ்.பி.யின் அனல் தெறிக்கும் பர்பாமன்ஸ்..
தன் தலையை பின்னே இருக்கையில் சாய்த்துக்கொண்டு கண்மூடி இருந்தவனின் நினைவு அன்று அவர்கள் கடத்திய நாளுக்கு சென்றது.
மறுநாள் மாலையில் கண் விழித்தவனுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்று சற்றே புரியவில்லை. அப்போதுதான் நேற்று ரெக்ரேஷன் கிளப் இப்பிரச்சினையை என்று கூறி தன்னை கடத்தி வந்தது புரிய.. நாளை இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தன்னுடைய நிலைமை என்னவாகும்.. என்னது ஏசிபிய கடத்திட்டாங்களா? என்று பல்வேறு மாடுலேஷனில் சென்னை மக்கள் வியப்பில் அதிர்ச்சியில் ஆழ.. அவன் டிபார்ட்மெண்டில் உள்ள அவனது நண்பர்கள் “ஆனாலும் எஸ்பிக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது” என்று வருத்தத்தில் பேச.. இவனால் பலமுறை மெமோ வாங்கிய அதிகாரிகளும் இவன் மேல் வஞ்சம் கொண்டவர்களும் “அவனுக்கு வேண்டும் தான்.. என்ன ஆட்டம் ஆடினான்” என்று நக்கல் செய்ய.. இவனுக்கு பயந்து தங்கள் வேலைகளை குறைத்து உள்ள சென்னை மாநகர தாதாக்களும் ரவுடிகளும் இவன் கண்ணெதிரே இவனை கிண்டல் செய்ய.. அதற்கும் மேல் அவனின் தந்தை சந்திரபிரகாஷோ “நீ போலிஸ்ல குப்புக்கொட்டியது வரைக்கும் போதும் வந்து நம்ம கம்பெனியை பார்த்துக்கோ” என்று கட்டளையிட.. இதுவெல்லாம் கணநேரத்தில் அவன் மூளையில் வந்து சென்று சில நிகழ்வுகள் மட்டுமே..
அந்தக் கணநேர அதிர்ச்சி தாங்காமல் “நோஓஓஓ…” என்று உச்சாஸ்தூதியில் இவன் கத்த.. அறைக்கு வெளியில் இருந்த அந்த குண்டு உருவம் உருண்டு புரண்டு அறைக்குள் வந்தது.
மயக்கம் தெளிந்து விட்டவன் கத்தியதை பார்த்தவனுக்கு, தல இல்லாமல்.. தல கட்டளை இல்லாமல்.. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டே நிற்க..
“அடேய் குண்டோதர.. வந்து கட்டை ஒழுங்கா கழட்டிவிடு இல்ல.. என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது” என்று எஸ்பி உறும..
“சார் சொன்னா புரிஞ்சுக்கோங்க.. அந்த கேடி இல்லை. அவ இல்லாம நான் என்ன செஞ்சாலும், உங்க கிட்ட என்ன பேசினாலும் வந்து உடன் என்னதான் போட்டு மொத்துவா.. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. கொஞ்ச நேரத்தில் உங்களை விட்ருவோம். கத்தி கத்தி உடம்பிலுள்ள எனர்ஜி எல்லாம் வேஸ்ட் பண்ணாதீங்க” என்று அவன் அறிவுரை கூற.. அதைக் கேட்க எஸ்பிக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லை.
‘இப்போதே மாலை ஆகிவிட்டது. எப்படியும் அந்த பெண்ணுக்கு கல்யாணத்தை நடத்தி வைத்திருப்பார்கள் பின்ன எதுக்கு இன்னும் என்னை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்’ என்று இவன் கடுப்பில் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்க..
அப்பொழுது உள்ளே நுழைந்தாள் மற்ற நால்வரோடு, அருகில் இருந்தவனை பார்த்து, “ஏண்டா உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நாம் ஒரு கிட்னா பண்ணி இருக்கோம் டா.. அப்போ நாம ஒரு கிட்னாப்பர்ஸ், அந்த கெத்து கொஞ்சமாவது உன்கிட்ட இருக்கா? என்னமோ அந்த ஆளுகிட்ட பக்கத்துல பம்மிக்கிட்டு பேசிக்கிட்டு நிக்குற.. உன்ன எல்லாம் பாதுகாப்பு விட்டுட்டு போனேன் பாரு.. என்ன சொல்லணும்” என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள் தான் கொண்டுவந்த பார்சல்களை அங்கு கடை பரப்பி வைத்தாள்.
“இந்த பிரியாணி உனக்கு” என்று அவனுடைய பங்கை அவனிடம் கொடுக்க..
“என்னடி பொட்டலம் சின்னதா இருக்கு?” என்று அவன் சண்டைக்கு வர..
“உன் பக்கத்துல பக்கெட் பிரியாணி வச்சாலே சின்னதா தான் தெரியும்” என்று மற்றொருவன் அவனை கிண்டல் செய்ய..
“தெரியுது இல்ல.. அப்போ என் உருவத்துக்கு தகுந்த மாதிரி பிரியாணியும் கொடுக்கணும்.
நேத்து நைட் அவர் மயக்கத்தில் இருக்கும்போது நான் ஒத்தை ஆளாக கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்தேன்.. அப்போ மட்டும் நீ குண்டா இருக்க உன்னால தான் தூக்க முடியும்ன்னு சொன்னீங்க.. என் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் எனக்கு வேணாமா?” என்று அவன் சிலிர்த்து கொண்டு சண்டைக்கு வர..
“இவன் தொல்ல தாங்கல டா.. இன்னொரு பார்சல் சேர்த்து அவன் கிட்ட குடு டா” என்று தல கூற..
“எங்க யாரு பங்குலுயவது கைய வெச்ச அப்புறம் தான் இருக்கு” என்று அங்கேயே நின்றிருந்த ஒல்லியான உருவம் கூறியது..
“அடேய்.. ஒட்டடை குச்சி பிரியாணி மோந்து பார்த்தாலே உனக்கு எல்லாம் வயிறு நிரம்பிராது?” என்று இந்த குண்டன் கேலி செய்ய..
“அடேய்.. பிரியாணிய எடுத்துட்டு ஒழுங்கா ஓடி விடுடுங்க” என்றவள் கையில் இருந்த ஒரு பார்சலுடன் எஸ்பிஐ நோக்கி சென்றாள் அவள்.
அவன் முன்னே விரித்து வைத்து “சாப்பிடுங்க” என்றாள்.
“நீ என்ன முட்டாளா?!” என்பது போல அவளை நக்கலாக பார்த்தவன் பிறகு கட்டியிருந்த தன் கைகளை பார்க்க..
“ஓ.. அப்படி ஒன்னு இருக்குல்ல.. உங்களை கழட்டி விட்டுட்டு அப்புறமெல்லாம் நாங்கள் பிடிக்க முடியாது” என்றவள் சிறிதும் யோசிக்காமல் உணவை எடுத்து அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.
தன் கண்களுக்கு எதிரே தெரிந்த அந்த மஸ்காரா கிட்ட கண்களை பார்த்தவன் மனம் சற்று தடுமாறியது. மஸ்காரா இட்ட விழிகளை பார்த்த போலீசின் மூளை ஸ்தம்பித்து நின்றது.
ஆனாலும் விரைப்பாக வாயை இறுக மூடிக் கொண்டு அவளை பார்த்தவண்ணம் அமர்ந்திருக்க..
“இங்க பாருங்க சார் உங்கள கடத்த எல்லாம் என் கையில இருக்குற பாக்கெட் மணி எல்லாம் போட்டு தான் இதுவரைக்கும் செலவு செஞ்சுகிட்டிருக்கோம். இந்த சோகத்துல இந்த பக்கிங்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்துட்டு ஒரே ஒரு பார்சல் மட்டும் தான் இப்ப என்கிட்ட இருக்கு.. இப்ப இதை நீங்க சாப்பிடலேன்னா நான் பாட்டுக்கு பீஸையும் பிரியாணியும் சாப்பிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கும் அவளை பார்க்கும்போது ஸ்கூல் பிள்ளை தன்னை மிரட்டுவது போலவே தோன்ற அந்த டெரர் உள்ளே இருந்த ஒருவன் மெல்ல எட்டிப்பார்த்தான்.
அவளைப் பார்த்துக்கொண்டே மெல்ல அவன் வாய் திறக்க.. இவளும் இவர்களை கடத்துவதற்காக தான் செலவழித்த சொந்தக்கதை சோகக்கதையை அனைத்தையும் கூறிக்கொண்டே ஒரு வழியாக அவனுக்கு ஊட்டி முடித்தாள்.
அவனுக்கு தன் தாய் சிறுவயதில் ஊட்டியது நினைவில் வந்து போனது.
இங்கே ஊட்டி முடித்தவள் அங்கே சென்று தன் நண்பர்களிடம் சண்டை போட்டு அவர்களிடம் இருந்து பிரியாணியை பிடுங்கித் தின்றதை பார்த்தவனுக்கு
“இவளை எல்லாம் பெத்தாங்களா? இல்ல செஞ்சாங்களா?” என்று எண்ணத்தான் தோன்றியது. மெல்ல தன் தலையை இடவலமாக ஆட்டி கொண்டான்.
அதற்குள் இவன் இருந்த அறையை பூட்டிவிட்டு வெளியில் வெகு தீவிரமாக ஐவர் படை அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
“இன்னைக்கு ராத்திரி அவன் கூட யாருடா இருக்கிறது?” என்று அங்கிருந்த குண்டன் கேட்க..
மற்றவர்கள் தங்களுக்குள் பார்த்துக்கொண்டு அந்த ஒல்லி பெல்லியை கை காட்டினர். “அது.. நான் இருக்க மாட்டேன். எனக்கு பயமா இருக்கு அவன் உருவத்தை பார்த்தாலே.. நீ தான் இவனுக்கு செட்டாவ.. அதனால நீயே நேத்து மாதிரி இன்னிக்கும் இருந்துடு” என்று அவன் தப்பித்துக்கொள்ள பார்க்க..
“ஆஹ்.. அஸ்கு புஸ்கு.. நேத்து நான் இருந்தேன் இல்ல.. அதனால இன்னிக்கு தான் இருக்கணும்” என்றான்.
மறுபடியும் ஒரு கூச்சல் குழப்பம் உருவாவதை பார்த்த தல “சத்தம் போடாதீங்க டேய்.. இன்னிக்கு நீ தான் இருக்குற” என்று அந்த ஒல்லி பெல்லியைப் பார்த்து சொன்னவள், அவன் பயந்த முகத்தை பார்த்து “கவலைப்படாதடா நேத்து மாதிரியே அவனை தூங்க வைத்து விடலாம்” என்று கூறினாள்.
“ஆனால் இடையில் அப்பப்போ எந்திரிச்சி அவனை போய் செக் பண்ணிக்கோ” என்று கூறிவிட்டு, மீண்டும் அவனுக்கு ஸ்பிரே அடிக்க மயக்க மருந்து ஸ்பிரே பார்க்க அது காலியாக இருந்தது.
“என்னடா.. ஒரு பாட்டில் ஸ்ப்ரேயும் ஒரே நாள் நைட்ல அடிச்சி காலி பண்ணிட்ட” என்றவள் அதிர்ந்து அந்த குண்டனை பார்த்து கேட்க..
“அது.. நேத்து நைட்டு அந்த ஆளு எழுந்திடுவானோ என்ற பயத்தில் இருந்தேனா.. எனக்கு தூக்கமே வரல. அதான் இதை அடிச்சி அடிச்சி அவனை தூங்க வச்சுட்டு. லைட்டா நானும் கொஞ்சம் அடிச்சிட்டு தூங்கிட்டேன்” என்றவன் இளிக்க.. அந்த ஒல்லி பெல்லியோ அவனை மொத்திவிட்டு, “ஒட்டுமொத்த காலி பண்ணிட்ட இன்னைக்கு நான் என்னடா பண்ணுவேன்?” என்று அழும் குரலில் அவன் கேட்க..
“இருடா கைவசம் ஐடியா இருக்கு” என்றவள் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து தூக்க மாத்திரையை உடைத்து நொறுக்கி ஏற்கனவே அவனுக்கு இரவு கொடுப்பதற்காக வைத்திருந்த பாதாம் பாலில் கலக்கினாள்.
“நீங்கல்லாம் இங்கேயே இருங்க” என்றவள் கதவைத் திறந்து கொண்டு அவனிடம் சென்றாள்.
“என்ன?” என்று அவன் அனல் தெறிக்க கேட்க..
“அது சாப்பாடு வாங்க கையில காசு இல்ல.. அந்த நிரஞ்சனா பணம் போட்டு விடுரேன்னு சொல்லிட்டு போடவே இல்லை.. அதனால இப்ப நைட்டுக்கு பாதாம் பால் தான் வாங்கிட்டு வந்திருக்கேன். இதை மட்டும் நீங்கள் குடுச்சிடுங்க” என்று அவன் வாய் அருகே கொண்டு செல்ல..
மீண்டும் அந்த மஸ்காரா விழிகளை பார்த்துக் கொண்டே அந்த பாலை குடித்து முடித்தான்.
“அவங்க கல்யாணந்தான் முடிஞ்சிடுச்சு இல்ல.. அப்புறம் என்னத்துக்கு என்னை இன்னும் கட்டி வச்சு இருக்கீங்க?” என்று அவளை முறைத்துக் கொண்டே இவன் கேட்க..
“கல்யாணம் மட்டும் முடிஞ்சா போதுமா ஆபீஸர்.. மத்ததெல்லாம் முடிய வேண்டாமா?” என்று அவள் கேட்க..
நம்ம டெரர் போலீஸோ கல்யாணமே முடிஞ்சிட்டு.. இனி மற்றது என்ன முடியனும் என்று புரியாமல் யோசிக்க..
“மக்கு மக்கு.. இது கூட தெரியலையா அதான் சார் ஃபர்ஸ்ட் நைட்” என்று ஒற்றை கண்ணடித்து இவள் கூற.. அவனுக்குமே சற்று சங்கூஜமாகத்தான் இருந்தது. அதை முகத்தில் காட்டாமல் இருக்க அரும்பாடுபட்டான் அந்த காவல்துறை இணை ஆணையர்.
“ஒரு வயசு பொண்ணு பேசுற பேச்சா நீ எல்லாம் பேசுற.. அதுவும் ஒரு ஆம்பள கிட்ட” என்று இவன் கடுப்பில் கூற..
அவளோ இந்நேரம் திருமணமாகி அந்த முதலிரவை கொண்டாடிய வேண்டியவன், தற்போது நாம் அதை சொன்னவுடன் கோபம் வந்துவிட்டது என்று நினைத்தவளுக்கு
“ஆமாமில்ல.. கல்யாணம் பண்ணிருந்தா இந்நேரம் நீங்கதானே கொண்டாடி இருக்கனும்” என்று வாய் பொத்திக் கொண்டு அவள் சிரிக்க..
ஏனோ அந்த நினைப்பே அவனுக்கு கசந்தது. “ஏய் வாய மூடுடி.. வந்தேன் வாயில உள்ள மொத்த பல்லையும் ஒத்த குத்துல விழ வைச்சிடுவேன்” என்று ஆத்திர மிகுதியால் கத்தினான், அவள் அறியாமல் கைத்தளைகளை கழட்டிக்கொண்டிருந்தார்.
“கொடுப்பீங்க.. கொடுப்பீங்க அது வரைக்கும் ஈஈன்னு என் பல்லைக் காட்டவேனா நானு”
தன் முன் பாய்ந்து பாய்ந்து எகிறி பேசிக்கொண்டிருந்த அவளின் ஸ்கார்பை கண நேரத்தில் அவன் கழட்டிவிட கண்களை நம்ப முடியாமல் பார்த்தான் எதிரில் இருந்த பெண்ணை..
அவளும் பார்க்க.. அவனும் பார்க்க..
அவளோ எப்படி இவன் கை கட்டுகளை அவிழ்த்தான் என்று அதிர்ச்சியில் பார்க்க..
அவனோ சிறு பெண் இவ்வாறெல்லாம் நம்மை படுத்துகிறாள் என்று கடுப்பில் பார்க்க..
அடுத்த கணம் இவள் கொடுத்த தூக்க மாத்திரை வேலை செய்திருக்க.. கண்கள் சொருக அவன் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே மீண்டும் விழுந்தான் சூரிய பிரகாஷ்.
நாற்காலியில் மட்டுமா?
இந்த சின்ன பெண்ணின் மஸ்காரா விழிகளிலும் தான் விழுந்தான் கட்டுமஸ்து காவல்துறை ஆணையன்..
3
இரண்டாம் நாள் காலை…
நேற்று பாதாம் பாலில் மயக்க மருந்து கலந்து ஏமாற்றியவளை நினைத்து அவனுக்கு வெஞ்சனம் ஏற.. கண்கள் இரண்டும் ரத்தம் என சிவந்திருக்க அருகில் நெருங்கினாலே எங்கே அடித்து விடுவேனோ இல்லை பாய்ந்து கடித்து விடுவானோ என்ற பயத்தில் அந்த ஒல்லி பெல்லி நடுங்கிக்கொண்டே அந்த அறையில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தான்.
அவளோ நேற்று அவன் கை தளைகளை எவ்வாறு கழட்டினான் என்று புரியாமல் வந்து குண்டனிடன் விசாரிக்க.. குண்டனோ பாத்ரூம் செல்ல வேண்டும் என்பனை அவன் தான் அவிழ்த்து விட்டதாகவும்.. அதே அறையில் இருந்த பாத்ரூமை அவன் யூஸ் செய்து வந்தவனை மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பின்பு கைகளை கட்டியதாகவும் கூறினான் அந்த குண்டன்..
“நீ கட்டின லட்சணம் தான் தெரியுதே.. கொஞ்சம் விட்டு இருந்தா நேத்து அவன் என்னைப் பார்ட்டு பார்ட்டா பிரிச்சி மேஞ்சு இருப்பான்.. ஏதோ எங்க அப்பா செஞ்ச புண்ணியத்துல நான் தப்பிச்சேன்” என்று கூறியவள் “இன்னைக்கு அவனை விட்டு விடலாம்.. அப்புறம் அந்த நிரஞ்சனா எருமைக்கு.. போன் போட்டா எடுத்து தொலைய மாட்டேங்குறா.. பணமும் போட்டு விட மாட்டேங்கிறா.. இருக்கு அவளுக்கு காலேஜ்ல” என்று அவளை திட்டிக்கொண்டே எஸ்பி-ஐ பார்க்க சென்றாள்.
உள்ளே கோபத்தில் கணன்று கொண்டிருந்தவனை பார்த்து, “சார்.. உங்களுக்கு இன்னைக்கு ரிலீஸ்” என்று காவல்காரனுக்கே விடுதலை அளித்தாள் நம் நாயகி.
“முதல்ல அவிழ்த்து விடு” என்று பற்கள் நறநறவென கடித்தப்படி அவளைப் பார்த்து கூறியவனை கண்டவளுக்கு ஜெர்காக..
“கழட்டிவிடுவேன் ஆனா ஒரு டீல்.. எங்கள பாஞ்சி வந்து அடிக்க கடிக்க கூடாது.. பாருங்க நீங்க இப்போ எங்க இருக்கீங்க என்று கூட உங்களுக்கு தெரியாது. உங்களை பத்திரமா வீட்ல விடனும் இல்லையா? உங்க கையில போன் கிடையாது.. பர்ஸ் கிடையாது.. கட்டின வேட்டியோடு வந்துட்டிங்க” என்று அவள் உச்சுக்கொட்டி கொண்டே கூற..
“என்னது நான் வந்தேனா?” அவன் கோபத்தில் கொக்கரிக்க..
“ஓகே.. ஓகே.. நாங்க தான் உங்கள கடத்திட்டு வந்தோம். எப்படி நாங்க பத்திரமா உங்களை கடத்திட்டு வந்தோமோ.. அதே மாதிரி பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது எங்க பொறுப்பு” (எம்மாடி உன் பொறுப்ப கண்டு நான் வியக்கேன்) என்று கெத்தாக கூறியவளை பார்த்தவனுக்கு அவள் என்ன கேட்டகிரி என்று வரையறுக்க முடியவில்லை.
‘முதல்ல இங்க இருந்து வெளியில போனதுக்கு அப்புறம் உங்க எல்லாருக்கும் இருக்குடி’ என்று மனதுக்குள் வன்மம் மிக முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டவன், அவளை பார்த்து “எதுவும் பண்ண மாட்டேன் அவிழ்த்து விடு” என்றான் ஒற்றைப் உருவத்தை தூக்கி.. தன்னருகே குனிந்து கயிறுகளை கழட்டும் அவளைத்தான் இமைக்காமல் பார்த்து இருந்தான்.
இவள் முகத்தை மட்டுமே அவன் பார்த்து இருக்க.. மற்றவர்களோ இன்னும் அதே ஸ்கார்பால் மூடிய முகத்தோடு தான்.
அவன் கைகளை கட்டிய தளைகளை அவிழ்த்து விட்டவுடன் மற்றவர்கள் அவர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஜாக்குவாரில் ஏறிக்கொள்ள.. இவளோ இவனுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓலோ காரை அவனிடம் காட்டிவிட்டு..
“மிஸ்டர் கஞ்சி சட்டை.. கார் மட்டும் தான் நாங்க ஏற்பாடு பண்ணினோம்.. பணம் நீங்களே பே பண்ணிடுங்க” என்றவாறு தங்கள் ஜாக்குவாரில் பறந்தது அந்த ஐவர் படை..
“என்னது கஞ்சி சட்டையா?” என்று இவன் அதிர்ந்து பார்க்க..
“பின் என்னாடி.. எப்ப பாத்தாலும் முகத்தை கஞ்சி போட்ட வைத்த மாதிரி விரைப்பா வைத்திருந்தா எப்படிடி ஒரு பெண்ணுக்குக் பிடிக்கும்? அதான் நிரஞ்சனா அக்கா இவன வேணாம் சொல்லிட்டாங்க போல” என்று காருக்குள் கலகலத்து சிரித்தவள் அறியவில்லை.. தான்தான் அந்த கஞ்சி சட்டைக்கு ஏத்த கள(கலகல)வாணி என்று..
இரண்டு நாட்களாக மகனைக் காணாமல் அழுது அழுது ஓய்ந்து போயிருந்த வாசுகியை, அருகில் அமர்ந்து சமாதானம் பண்ணிக் கொண்டிருந்தார் சந்திர பிரகாஷ். உறவினர் கூட்டம் எல்லாம் எப்போதோ மாப்பிள்ளை காணோம் என்ற ஒற்றை வார்த்தையில் காக்கை கூட்டத்தில் எறிந்த கல் மாதிரி சிதறிப் பறந்து போய் இருந்தது.
இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாமல் மயக்க மருந்து வீரியத்தில் இரவெல்லாம் இருந்தவன் காலை போல வீட்டுக்கு சற்று சோர்வாக தான் உள்ளே நுழைந்தான்.
அதுவரை மகனை காணும் ‘எங்கே சென்று இருப்பானோ? அவன் மேல் அதிகாரி கூட தெரியாமல் போய் இருக்க வாய்ப்பில்லையே.. யாரேனும் கடத்திக்கொண்டு போயிருந்தால் இந்நேரம் தொடர்பு கொண்டு இருப்பார்களே’ என்று பலவாறு உழண்டு கொண்டிருந்த தாயின் மனம் அவனை கண்ட நொடி அனைத்து கிலோச்சமும் மறைந்து போக “சூரியா” என்று பாய்ந்து அணைத்து இருந்தார். மகனுக்கு ஒன்றுமில்லை நலமாக இருக்கிறான் என்று பரிதவித்த தாயின் மனம் குளுமை அடைய.. அதே நேரம் இக்கட்டான நிலையில் ஒரு பெண்ணை விட்டுவிட்டு இவன் எப்படி செல்லலாம் என்ற கோபம் மீதூர அடுத்த கணம் அவனை அறைந்திருந்தார்.
கடத்தியவர்கள் மேலுள்ள கோபம்.. மயக்க மருந்து சோர்வு.. தன்னை முட்டாளாக்கிய அவர்கள் மீதான வன்மம் அனைத்தும் சேர்ந்து கலவையாக நின்றவனுக்கு அன்னையின் கதறல் சற்று ஆறுதலை அளித்தாலும், அடுத்த கணம் அவர் அறைந்தது இன்னும் அவனும் அந்த பெண்ணின் மீதான வன்மத்தை தான் கூட்டியது. கண்களை மூடி.. பற்களை கடித்தப்படி.. விரல்களால் உள்ளங்கையை நெறித்தப்படி நின்ற கோலமே அவன் கடுங்கோபத்தில் இருக்கிறான் என்பதாய்..
“ஏண்டா இப்படி பண்ணுனே? புடிக்கலேன்னா முதலிலே சொல்லித் தொலைய வேண்டியதுதானே.. இவ்வளவு ஏற்பாடு செஞ்சு.. காசு போனா கூட பரவால்ல அந்த பெண்ணை கல்யாண மண்டபத்தில் இப்படி தவிக்க விட்டுட்டு நீ எப்படி போகலாம்?
(என்னமோ இவனா இஷ்டப்பட்டு போன மாதிரி.. போமா.. அவனே ஒரு பொண்ணால கடத்தப்பட்டு வந்த ஃபீலிங்ல இருக்கான்)
“எவ்வளவுதான் நாம முன்னேறி இருந்தாலும் இன்னமும் கல்யாண மண்டபத்தில் ஒரு பொண்ணோட கல்யாண நினைச்சுன்னா.. அந்த பொண்ணு மேல தான் தப்புன்னு சொல்லிட்டு அடுத்தடுத்த அவளோட கல்யாண வாய்ப்புகள் போகும். அது உனக்கு தெரியுமா? அது எப்படி உனக்கு தெரியும்? உடம்பு மட்டுமல்ல போலீஸூல சேர்ந்ததுக்கு அப்புறம் உன் மனசுக்கு கூட விரைப்பாக தான் இருக்கு.. நல்ல வேலை அங்க அவங்க சொந்தக்கார பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அந்தவகையில் நமக்கு பாவம் வந்து சேரவில்லை.. பெண் பாவம் பொல்லாதது டா” என்று அவர் ஆற்றாமையால் பேச.. மறு வார்த்தை பதிலுக்கு பேசினானில்லை அவர்களின் தவப்புதல்வன்.
ஆனால் எதுவோ சரியில்லை என்று ஊகித்த சந்திரபிரகாஷ் மனைவியை பார்த்து “அவன் எங்க போனான்? என்ன நடந்தது? என்பதை பொறுமையாக கேட்டுக்கலாம் வாசு.. அதான் நல்லபடியா வந்துட்டான் இல்லையா.. முதல குளிச்சிட்டு வந்து சாப்பிட்டடும். அவன் முகமே சரியில்ல” என்று கூற..
அப்போதுதான் மகனின் முகத்தை கூர்ந்து பார்த்தவருக்கு அவரின் களை இழந்த முகம் கண்ணுக்கு புலப்பட “நீ குளிக்க எல்லாம் வேண்டாம். முதலில் சாப்பிட வா.. முகமே சரி இல்லை” என்று தன் மகனின் பசியாற்ற நுழைந்தார் சமையலறைப் பக்கம் அன்பான தாயாய்..
“நடந்தது என்னென்னு நான் உன்கிட்ட கேட்க மாட்டேன். ஆனால் நீ பண்றதுல ஏதாவது ஒரு நியாயம் இருக்குன்னு எனக்கு தெரியும். முதல்ல போய் குளிச்சிட்டு வா” என்று தந்தை அனுப்பிவைக்க.. மெல்ல தலையை ஆட்டியவன் தன் அறையை நோக்கி விடுவிடுவென்று மாடியில் ஏறினான்.
சுவற்றில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு ஷவரின் அடியில் நின்றவனுக்கோ மனம் ஆற மறுத்தது.
குளுமையான தண்ணீர் அவனது வெம்மையான மனதை சற்றும் ஆற்றவில்லை..
‘இவ்வளவு வருஷம் வளர்த்த தன் அம்மாவே இவ்வளவு பேசுகிறார் என்றால்.. அந்த மண்டபத்தில் உள்ளவர்கள் எல்லோரும் என்னென்ன பேசியிருப்பார்கள்? என்ன மாதிரி உருவம் எனக்கு கொடுத்திருப்பார்கள்? ச்சே..” அதை நினைக்க நினைக்க அவனுக்கு வெறுப்பாக இருந்தது. ஒரு செயல் அவனாக செய்தால் அதற்கு வரும் பின்விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளும் பண்பு அவனுக்கு எப்பொழுதும் உண்டு… “ஆமாம் நான் தான் செய்தேன்.. என்ன இப்போ? அப்படித்தான் செய்வேன்!!” என்று திமிர்தனமான பதிலை நெஞ்சை நிமிர்த்தி கூறுவான். ஆனால் இன்று யாரோ செய்ததற்காக.. அதுவும் தன்னை மீறி நடந்து விட்ட ஒன்றுக்காக அனைவரும் இவனை குற்றம்சாட்டுவது.. இவன் மேல் பழியைப் போடுவது.. அவனுக்கு கொஞ்சமும் விருப்பமானதாக இல்லை. இது இப்படியே விட்டால் அவன் எஸ்பி அல்லவே!!
ஆனால் தன்னை கடத்தினதைப் பற்றி அங்குள்ளவர்களுக்கு ஏன் யாருக்குமே தெரியப்படுத்த அவன் விருப்பம் இல்லை.. அதேநேரம் இந்த விஷயத்தை அப்படியே விட அவனது அந்த கர்வம் மிகுந்த மனம் ஒப்பவில்லை..
கடகடவென்று ஆயத்தமான அவன் கீழே இறங்கி, தன் தாய் தந்தையை அழைத்தான்.
மகனுக்காக சாப்பாடு மேசையில் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தவரோ தாயோ,என்ன ஏது என்று பதறி ஓடி வர இருவரையும் பார்த்தவன் “வாங்க” என்ற ஒற்றை வார்த்தையில் முன்னே வேகமாக நடக்க “என்னவாக இருக்கும்?” என்று புரியாமல் இருவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
அவன் சென்று நின்றது செந்தில் ராஜன் வீட்டுக்குத்தான்.. ஏன் இங்கு வந்தான் என்று புரியாமல் பெற்றோர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள..
மீண்டும் அவர்களை பார்த்து “வாங்க” என்று அழுத்தமான குரலில் இவன் முன்னே நடக்க.. “ஏற்கனவே மண்டபத்தில் வாங்கியது எல்லாம் பத்தாது திரும்பவும் வாங்குவதற்கு உங்க புள்ள கூட்டிட்டு போறான். ஒரு சீனுக்காக எத்தனை தடவை திட்டு வாங்குறது என்னால முடியாதுப்பா” என்று வாசுகி முறுக்கிக் கொள்ள..
“வாசு .. ஏதோ நடந்திருக்கு அதை சொல்வதற்காகத் தான் அவன் அங்க போறான். அமைதியாக வா.. உன் புள்ள முன்னாடி யாரும் வாய திறக்க மாட்டார்கள்” என்ற சந்திரப் பிரகாஷ் மனைவியை அழைத்து சென்றார்.
நிமிர்ந்த வேக நடையுடன் தன் சட்டையை முழங்கை வரை சுற்றிக் கொண்டே அவன் வேகமாக அவர்கள் வீட்டினுள் நுழைய.. அங்கிருந்த சொந்தக்காரர்கள் முதல் வேலை செய்பவர்கள் வரை அனைவரும் இவனைத்தான் ஆச்சரியமாக பார்த்தனர். அதேநேரம் ஒவ்வொருவரும் குசுகுசுவென்று அவனைப் பற்றி பேசிக் கொள்ளவும் அவர்கள் மறக்கவில்லை. ஆனால் இது எதையும் கவனிக்கும் மனநிலையில் சூரியபிரகாஷ் இல்லை.
நேராக அவன் அவர்கள் வீட்டு வரவேற்பரையில் நிற்க.. அங்கிருந்த ஆண்கள் இளைஞர்கள் முதியவர்கள் அனைவரும் இவனைப் பார்த்து “ஏன்டா இப்போ இந்த வீட்டுக்குள்ள வந்த? பாதியிலேயே விட்டு ஓடிப் போனவன் அப்படியே போக வேண்டியது தானே?” என்று கேட்க..
அதற்குள் அடுத்தவரும் “ஏற்கனவே எங்கேயாவது தொடுப்பு இருந்திருக்கும். கடைசி நேரத்தில் ஞாபகம் வந்து ஓடிட்டான் போல” என்று நக்கல் செய்ய..
“போலீஸ்காரனுக்கு பொண்ணு கொடுக்காதனு நான் அப்பவே சொன்னேன். அவங்க எல்லாம் ஒரு திடமான இடத்தில் இருக்க மாட்டானு.. கேட்டானா அந்த செந்தில்? இப்ப பாரு.. நல்லவேலை இவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டா நம்ம வீட்டு பொண்ணு” அங்குள்ளவர்கள் இவனைப் பார்த்து தங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டவாறு பேசிக்கொண்டிருக்க…
“இப்ப எதுக்கு வந்துருக்க?” என்று ஒருவன் கேட்க..
“வேற எதுக்கு நம்மகிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்திருப்பான். வளர்ப்பு சரியில்லை” என்று மேலும் அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றினான் ஒரு இளைஞன்..
அனைவரையும் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவன் “மிஸ்டர் செந்தில் ராஜன்” என்று சத்தமாக அழைத்தான்.
அடுத்த கணம் சத்தம் கேட்டு ஓடிவந்தவர், சூரியபிரகாஷ் பார்த்தவருக்கு திக்கென்று இருந்தது. இவனைப்பற்றி உறவினர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். முற்றும் முதல் இவன் வேலை.. குணங்களை அறிந்து தானே பெண் கொடுக்க தயாரானார். ஆனால் இப்படி கர்ஜிக்கும் சிங்கம் போல தன் வீட்டின் முன் நிற்கும் அவனை பார்த்த அவருக்கு ஏதோ புரிவது போல இருக்க…
அமைதியாகவே அவன் முன் வந்து நின்றார்.
சுற்றியிருக்கிற சொந்தங்கள் அனைவரையும் உற்றுப் பார்த்தவன் “உங்க பெண்ணையும் மாப்பிள்ளையையும் கூப்பிடுங்க” என்று அதிகாரமாக கூறியவன் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து தோரணையாக அவர்களை பார்க்க..
“எதுவோ நடந்திருக்கு இவர்கள் பக்கம்” என்று உணர்ந்த சந்திரப் பிரகாஷூம் வாசுகியும் மகனின் அருகில் போக அருகிலிருந்த சோபாவில் காட்டி அதில் அமருங்கள் என்று கண்களாலேயே அவன் செய்கை செய்தான்.
அடுத்த கணம் செந்தில் ராஜன் தன் மகள் அஞ்சனாவையும் தற்போது மாப்பிள்ளையான ரோஹித்தையும் அழைத்துக் கொண்டு அவன் முன் வந்து நிற்க..
அவர்களைப் பார்த்துக் கொண்டே எழுந்தவன் தன் வளர்ப்பு சரியில்லை என்று கூறிய அங்கிருந்த இளைஞன் ஒருவனை பிடித்து பளார் என்று கன்னத்தில் அறைந்தான். அவன் அடித்த அடியில் சுருண்டு கீழே விழ உதட்டின் ஓரம் கிழிந்து ரத்தம் கசிந்தது அந்த இளைஞனுக்கு.
அந்த செயல் அங்கிருந்த அனைவருக்கும் திக் என்று ஆக.. அஞ்சனாவுக்கோ முகம் வெளிறியது.
அஞ்சனாவுக்கு சிறிதும் இந்த திருமணத்தில் இஷ்டமில்லை என்பதை தன் தங்கையை நிரஞ்சனாவிடமும் கூறியிருக்க.. அவளும் தன் நண்பர்கள் மூலம் ஏதாவது செய்து இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுவதாக அஞ்சனாவிடம் கூறியிருந்தாள். மாப்பிள்ளை காணோம் என்று காலையில் அனைவரும் பேசிக்கொள்ள.. நிரஞ்சனாவும் அஞ்சனாவும் இது தங்கள் நண்பர்களின் வேலை என்று புரிய அமைதியாகவே இருந்து கொண்டனர்.
இப்படி இவனே வந்து நேரில் நிற்பான் என்று அவர்கள் கனவா கண்டார்கள்??
பின்பு அவர்கள் முன் நிமிர்ந்து நின்று கைகளை பின்னே கட்டிக் கொண்டு இருவரையும் கூர்ந்து பார்க்க… கள்ளம் புகுந்து உள்ளம் அல்லவா.. அஞ்சனாவுக்கும் ரோஹித்துக்கும் வேர்த்து வழிந்தது. அடுத்த நொடி அனைத்து உண்மைகளையும் கடகடவென ஒப்பித்தாள் அஞ்சனா.
“என்னை மன்னிச்சுடுங்க சார். நான் ரிசப்ஷன்ல உங்க கூட உங்ககிட்ட பேசணும்னு தான் எவ்வளவோ ட்ரை பண்ணேன். ஆனா பேச முடியல” என்று அவள் கூற.. தன் அன்னையை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் மகன்.
“சோ நீங்க போட்ட பிளானுக்கு நான் தக்காளி சட்னியா?” என்று எகத்தாளமாக அவன் கேட்க..
பெற்றோர்களுக்கு மட்டுமல்ல அங்கு உள்ளவர்களுக்கும் உண்மை நிலவரம் அப்போதுதான் புரிந்தது.
திரும்பி செந்தில் ராஜனை பார்த்தவன்.. “எனக்கு நேத்து நைட்டே விஷயம் தெரியும் அதனாலதான் நான் போயிட்டேன். அடுத்தவன் காதலிக்கிற பொண்ண நான் கல்யாணம் பண்ணி என்ன பண்றது?” என்று எள்ளலாக அவன் கேட்ட விதத்தில் அவருக்கு தான் சற்று அவமானமாக போனது.
“பல கள்ளக் காதலுக்கு இதுதான் தொடக்கம்” என்று மேலும் போலீசாக தான் கண்ட வழக்குகளைப் பற்றி அவன் கூற தான் செய்த முட்டாள்தனம் அவருக்கு அப்பட்டமாக புரிந்தது.
பின் அவனை பேசியவர்களை இவன் பார்த்த பார்வையில் அனைவரும் பம்மினர்.
“அம்மா அப்பா வாங்க இங்க” என்று செந்தில்ராஜன் முன் அவர்களை நிற்க வைக்க..
இம்முறை சரியாக புரிந்து கொண்டவர் தன் மனைவியுடன் சேர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
பின்பு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் இருவரையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தவன் தன் அறையில் புகுந்து கொண்டான்.
அதிரடியாக அவன் செய்த செயலினால் தன் மேலிருந்த.. தான் செய்யாத ஒன்றுக்காக ஏற்படுத்தப்பட்ட உருவத்தை நீக்கி விட்டான். அதே சமயம் அன்னை தந்தையின் அவமதிப்புக்கு மன்னிப்பும் வாங்கி கொடுத்து விட்டான். அவனை கண்ட வாசுகிக்கு “என்ன டிசைனோ?” என்றுதான் எண்ணத் தோன்றியது. அதேநேரம் பிள்ளையின் இந்த அதிரடியில் அவருக்கும் பெருமைதான்.
மறுநாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பியவனை தியாகராஜன் அழைக்க.. நேராக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று விட்டான்.
தற்போது அதையெல்லாம் நினைத்தவாறு பின் இருக்கையில் சாய்ந்து கொண்டிருக்க..
அப்போது கதவு தட்டப்படும் சத்தத்தை கேட்க
“எஸ் கம் இன்” என்றான் எப்போதும் அவனுடைய அந்த கம்பீரமான குரலில்..
உள்ளே நுழைந்த ஒரு கான்ஸ்டபிள் தன் கையிலிருந்த ஒரு பைலை அவன் முன்னே வைத்து, “சர்.. நீங்க கேட்ட டீடெயில்ஸ் இந்த பைலில் இருக்கு சார்” என்றவாறு விரைப்பாக ஒரு சல்யூட் வைத்து விட்டு சென்று விட்டார்.
தன் முன் இருந்த பைலை பிரித்து பார்க்க.. அதில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் திவ்யபாரதி ஐயப்பன்..
நம் எஸ்.பியை தூக்கிய களவாணி..
இனி அவனின் காதல் களவாணி..
பார்க்க.. பார்க்க..
4
️
திவ்யபாரதி ஐயப்பன்!!
கள்ளமில்லா சிரிப்புடன் போட்டோவில் சிரித்தவளை பார்த்தவனுக்கு இவள் ஒரு ஆளை கடத்தினாள் என்று யாரும் சொன்னால் நம்பியே இருக்க மாட்டான்.. அந்தளவு குழந்தைத்தனமான முகம்.
ஆனால் அவனின் அனுபவம் அப்படிப்பட்டதே.. அதனால் நம்ப தான் வேண்டி இருந்தது, இந்த சிறுபிள்ளை முகத்திற்கு பின்னே இருக்கும் கேடியை..
முக்கியமாக அவளின் அந்தக் கண்கள்.. பார்ப்பவரை வசீகரமாக.. உள்ளிழுக்கும் ஆழியாக.. சிறிது நேரம் அந்த கண்களை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தானுமே அதுக்குள் இழுக்கப்படுவது போல் தோன்ற.. தலையை உலுக்கிக் கொண்டான்.
திவ்யபாரதி ஐயப்பன்..
அவளின் பெயரை இன்னொரு முறை உச்சரித்து பார்த்தான் அவன். கேடிக்கு பாரதி பேரு.. என்னடா பாரதியாருக்கு வந்த சோதனை. ஐயப்பன் யார் என்று பார்க்க அவளின் அப்பாவி அப்பா என்று புரிந்தது.
அவளை பற்றிய தகவல் மட்டுமல்ல அந்த ஐவர் படையின் தகவலும் அதில் இருந்தது.
நேற்று இரவே இவர்களுக்கு ஸ்பையாக செயல்படும் சில நபர்கள் மூலம் நிரஞ்சனா மற்றும் அவளின் நண்பர்கள் பற்றிய தகவல்களை எடுத்து விட்டான் அதிலும் குறிப்பாக ஐந்து நபர்கள் என்று குறிப்பிட்டு அவன் சொல்ல.. ஐவர் படை பற்றிய தகவல்களை பெறுவது அவ்வளவு கடினமானதாக இல்லை ஏனென்றால் இவர்கள் அனைவரும் அவ்வளவு பாப்புலர் அந்த கல்லூரியில்..
திவ்யபாரதி.. கர்ணன்.. விபாகர்.. சாந்தினி.. ஈக்னேஷ்.. இந்த ஐவர் பட்டாளம் தான் அது.
இதில் திவ்யபாரதி கர்ணன்(குண்டோதரன்) இருவரும் ஒரே அபார்ட்மெண்ட்ல இருந்து வருகிறார்கள்.
கர்ணனின் அப்பா காவல்துறையின் மற்றொரு பிரிவான போக்குவரத்து துறையில் இருக்கிறார்.
விபாகர் கனரக தொழிற்சாலை நடத்தி வரும் ஒருவரின் மகன்.. சாந்தினி ஆடிட்டர் ஒருவரின் மகள்..
விக்னேஷ் இல்லை இல்லை ஈக்னேஷ்
ஈக்னேஷ் என்று அவனே கத்துவதை போலிருந்தது எஸ்.பிக்கு. ஆம் முதன் முதலில் அவனது பெயரை உச்சரிப்பவர்கள் விக்னேஷ் என்றே தான் உச்சரிப்பார்கள்.
இவன்தான் ஜீன்ஸ் ராஜசுந்தரம் மாடுலேஷனில்.. ஈக்னேஷ்.. ஈக்னேஷ் என்று பல்லைக் கடித்தபடியே கூறுவான்.
(தட் ஒல்லி பெல்லி) சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஒரு சேட் ஒருவரின் மகன். இவர்கள் அனைவரும் பள்ளிக் காலம் முதலே நண்பர்கள். நிரஞ்சனா தற்போது கல்லூரியில் அவர்களுக்கு கிடைத்து இருக்கும் தோழி.
திவ்யபாரதிவின் அப்பா என்ன செய்கிறார் என்ற பார்த்தவனுக்கு அதிர்ச்சியே.. “என்னுடைய அப்பா போலீசில் பெரிய அதிகாரியாக்கும்.. உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லிடுவேன்” என்று விழிகளை உருட்டி மிரட்டி தன்னிடம் வீராவேசம் பேசிய அவளின் அப்பா எப்படியும் தன்னை விட மேலதிகாரியாக இருப்பார் அல்லது தன் நிலையில் இருப்பார் என்று அவன் நினைத்திருக்க.. ஆனால் திவ்யபாரதியின் அப்பா ஐயப்பன் இவன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில்தான் சப் இன்ஸ்பெக்டராக பணியில் இருக்கிறார். அதுவும் ஏட்டாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் பதவி உயர்வில் சப் இன்ஸ்பெக்டராக உயர்ந்துள்ளார்.
எஸ்.ஐ-யை தான் எஸ்.பி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துருக்கு பயபுள்ள.. அவளைப் பார்த்த நொடியிலிருந்து அவளின் ஒவ்வொரு செயல்களும் அவள் தொடர்பான செயல்களும் அவனுக்கு அதிர்ச்சியே தருகிறது.
பயோடேட்டா படிக்கும் போதே இவ்வளவு அதிர்ச்சியைத் தருகிறது அவனுக்கு என்றால்..
இன்னும் அவளைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டால்????
சாம்பிளுக்கு ஒன்னு பார்ப்போமா.. ஆபீஸர்???
திவ்யா மற்றும் கர்ணன் இருவரும் ஒரே அப்பார்மெண்ட் ஐ சேர்ந்தவர்கள்..
சமூக பணி செய்கிறேன் என்று தன் கூட ஒரு பட்டாளத்தை சேர்த்து கொண்டு அவள் போடும் ஆட்டம் சொல்லி மாளாது.
ஒரு வருடத்திற்கு முன்பு.. இவர்கள் அப்பார்ட்மெண்ட் செக்கரட்டரியின் மகன் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்ல..
அதற்கு அவர்கள் குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க.. அவனோ உண்ண விரதம், பேசா விரதம் என்று புதுசா புதுசா விரதம் கொண்டு பெற்றவர்களை படுத்தி எடுத்தான். ஆல் ஐடியா நம்ம தல தான்.
ஆனால் அவனின் தந்தையோ ஒன்றுக்கும் மசியாமல் நீ எவ்வளோ வேணா செய்.. என்று அசைந்து கொடுக்காமல் இருத்தார்.
அதே நேரம் தன் சுற்றத்தில் அவனுக்கு பெண் வேற பார்த்து கொண்டிருந்தார்.
இதை அறிந்து பொங்கிய ஐவர் படை..
மாப்பிள்ளையை தூக்கியது(இதே பொழப்பு தான் போல இதுகளுக்கு).
கோவிலில் தல தலைமையில் தடபுடலாக திருமணம் நடந்தது. ஏதோ பெரிசாக சாதித்து விட்டோம் என்று பெருமையில் இருக்க அப்புறம் தான் வந்தது அவர்களுக்கு வினை..
அந்தப் பையனோ சுத்த வைணவ ஐயங்கார் வீட்டு பையன்.. பெண்ணோ ராயபுரத்தை சேர்ந்த ஒரு லோக்கல் தாதாவின் மகள்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட ராயபுரம் ரங்கன் தன் அல்லக்கைகள் சுற்றத்தாரோடு ஆட்டோவில் பறந்து வர.. அதேநேரம் அவர்கள் வீட்டுக்கு ராதா கிருஷ்ணனை மாப்பிள்ளை வீடு பார்க்க பெண் வீட்டுக்காரர்களும் வந்திருக்க.. அதுக்கப்புறமும் சொல்லவும் வேண்டுமா?
பெண்ணையும் மாப்பிள்ளையையும் நடுவில் நிற்க வைத்துக்கொண்டு ஒருபுறம் ராயபுரம் பேமிலியும் மறுபுறம் அய்யங்கார் பேமிலியும் சேர்ந்து ரகளையோ ரகளை..
“லோகத்துல நோக்கு வேற பொண்ணே கிடைக்கலையாடா அம்பி.. இந்த லோக்கல் பொண்ணுதான் கிடைச்சாளா?” என்று மாப்பிள்ளை ஃபேமிலி பேச..
“என்னது லோக்கலா.. இந்தாருமா நாங்க லோக்கல் தான். ஆனா இந்த லோக்கல் இல்லன்னா நீங்களும் உங்க வீடும் நாறிடும் நாறி.. இன்னொரு தபா வாய தொறந்த கீச்சிபுடுவேன் கீச்சி” என்று பெண்ணின் அம்மா தனது புடவையைத் தூக்கி சொருகிக்கொண்டு பதிலுக்கு பேச..
“பாத்தியான்னோ.. சரியான பஜாரிங்களா இருப்பா போல.. நீ அவள அத்துவிட்டுட்டு நம்ம ஆத்துக்கு வந்திடு” என்று மற்றொருவர் கூற..
“அத்துவிடுவீங்களா? அதுவர நாங்க சும்மா இருப்போமா.. டகரு டமாலு ஆகிடும்” என்று பெண்ணின் பக்கம் பாய்ந்து கொண்டு வர..
இப்படியே மாறி மாறி இரு தரப்பினரும் தங்களை விமர்சித்துக் கொண்டே இருக்க.. சட்டென்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் “இதுகள சொல்லக்கூடாது.. இதுகளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சவங்களை கூப்பிட்டு இரண்டு போடுனும்.. அப்போ தான் இனிமே இதுபோல் செய்ய யாருக்கும் தைரியம் வராது” என்று கூற.. அதானே அதானே என்று இதற்கு மட்டும் இரண்டு கோஷ்டிகளும் ஒன்றாக சேர்ந்து கொள்ள…
அதுவரை இவர்களின் சண்டையை ஏதோ ஐபிஎல் மேட்ச் பார்ப்பது போல ஐவர் படை மாடி பால்கனியில் அமர்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. இவர்களை கூப்பிட அடுத்த கணம் வழக்கம் போல அப்பிட்டானது..
பின் அந்த அப்பார்ட்மெண்டின் செகரட்டரி ஐயப்பனையும் கருணாவின் தந்தை ராஜசேகரனையும் அழைத்து பிடி பிடி என்று பிடித்து விட.. பத்தாததுக்கு ராயபுரம் ரங்கனும் அவர்களது கழுத்தில் அருவாளை வைத்து அவன் பங்குக்கு மிரட்டி விட்டுச் செல்ல…
இது இரண்டையும் பெத்ததுக்கு நாம நைட் ஷோ படமே போயிருக்கலாம் என்று நொந்து தான் கொண்டனர் ராஜசேகரும் ஐயப்பனும்..
அந்த ஏரியாவில் இவளின் பிரதாபம் மிக பிரபலம்..
கையில் வைத்திருக்கும் சின்ன ஹாண்டி கேமராவில் அங்கு வசிக்கும் ஆண்களின் சில சிமில்சங்களை பதிவு செய்து அவர்கள் மனைவிடம் போட்டு கொடுப்பது..
அப்பார்ட்மெண்ட் பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டு மேட்ச்.. விளையாட்டு போட்டி நடத்துகிறேன் என்று பணம் வசூலிப்பது.. பெற்றவர்கள் தரவில்லை என்றால் அவர்கள் பிள்ளைகள் முன்னே “என்னடா உங்க அப்பா.. தம்மாத்தூண்டு பணம் குடுக்க மாட்டேங்குறாரு.. நாளைக்கு உன்னை எல்லாம் எப்படி நல்ல காலேஜ் சேர்ப்பார்.. பாவம் தான் நீ” என்று போட்டு கொடுக்க.. பிள்ளையோ தன் தந்தையை முறைத்து பார்க்க.. வேறு வழியின்றி பணம் கொடுக்க தான் முடியும் அவர்களால்.. அதன் பின் போட்டி என்ற பெயரில் அதகளம் தான் நடக்கும் அங்கே ஒரு வாரம்..
அதற்கும் சேர்த்து ஐய்யபன் தான் வாங்கி கட்டி கொள்வார் அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகளிடம்..
இது என்ன பெரிய விசயம்.. மெயின் அயிட்டமே இனி தான்.
அது தான் காவலன் ஆப்..
பெண்கள் சில பொறுக்கிகளால் தங்களுக்கு ஆபத்து நேரிடும் போது, இந்த ஆப் மூலம் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களை அழைத்து உதவி கோர முடியும்.. அதை இவளை விட அதிகமாக யாரும் பயன்படுத்தி இருக்க முடியாது இதுவரை..
“அங்க சுத்தி இங்க சுத்தி போலீசிலேயே கைய வச்சுட்டாளா?” என்று அவன் கோபத்தில் பேச..
“உன்னையே தூக்கி இருக்கா இதெல்லாம் என்ன ஜுஜுபி” என்று அவனின் மனச்சாட்சி வாறியது..
ஒருமுறை திவ்யாவின் ஸ்கூட்டி பஞ்சர் ஆகி நின்று விட்டது. நம்ம ஸ்கூட்டி பஞ்சரானால் ஒன்று நமக்கு தெரிந்த மொபைல் மெக்கானிக்கை அழைத்து சரி செய்ய செல்லுவோம் அல்லது லொங்கு லொங்கு என்று அருகில் இருக்கும் ஏதாவது ஒரு மெக்கானிக் செட்டுக்கு வண்டியை தள்ளிக் கொண்டு செல்லுவோம். ஆனால் திவ்யாவின் அணுகுமுறையே வேறாகத்தான் இருக்கும்.
இவள் தன் மொபைல் எடுத்து காவலன் ஆப்பில் உள்ள பட்டனை அழுத்தி விட..
அருகில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் ஏதோ ஆபத்து என்று சைரன் எல்லாம் போட்டு அலறியடித்துக் கொண்டு வந்து சேர.. இவளோ பஞ்சரான தன் வண்டியில் அமர்ந்து கடலையை கொறித்துக் கொண்டிருந்தாள்.
இவளைப் பார்த்த அந்த காவலர்கள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவள் நம்பரை காண்பித்து “நீங்கள் தான் அழைத்ததா?” என்று கேட்க..
“ஆமாம்” என்றாள் வெகு சிரத்தையாக கடலை சாப்பிட்டுக்கொண்டே..
“ஏன்மா.. ஏதாவது ஆபத்துன்னா தான் இந்த பட்டனை அழுத்தனும். உன்னை எல்லாம் பார்த்தா படிக்கிற பொண்ணு மாதிரி இருக்குற.. எதுக்கு நீ தேவையில்லாம பட்டனை அழுத்தி எங்கள வீணா அலைய வெச்சு விட்ட” என்று கோபத்தில் கத்தினார் அந்த ஆபீஸர்..
அவளோ வெகு கூலாக தன் சட்டையில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருந்த கடலை தோள்களைத் தட்டி விட்டுட்டு.. “சார்.. நான் எப்பவுமே கொஞ்சம் அட்வான்ஸ் தான் யோசிப்பேன். இப்ப பாருங்க என் வண்டிய பஞ்சர் ஆகி இருக்கு நான் வேற தனியா நிக்கிறேன். பொண்ணு.. அதுவும் என்ன மாதிரி அழகான பொண்ணு தனியா நின்னா அதுக்கு பின்னால வர்ற ஆபத்து பத்தி உங்களுக்கு தெரியாதா? ஏற்கனவே இந்த மாதிரி ஒரு டாக்டரையே பண்ணி இருக்காங்க மெக்கானிக் ஷெட் கூட்டிட்டு போறேன்னு சொல்லி..
அதனாலதான் பாதுகாப்புக்கு உங்களை கூப்பிட்டேன்.. என் வண்டியோட எங்க அம்மா அப்பாவுக்கு நான் தான் ரொம்ப முக்கியம்.. அதுவுமில்லாம போலீசு பொண்ணுக்கே இங்க பாதுகாப்பு இல்லைன்னு நாளைக்கு வரலாறு உங்கள தான் தப்பா பேசும் ” என்று கூறியவளை பார்த்தவர்கள்.. சுற்றுமுற்றும் பார்க்க அப்போதுதான் அந்த ஏரியா வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் சுறுசுறுப்பான ஏரியா என்பது தெரிய அவளை திட்டிக்கொண்டே அழைத்து சென்று வீட்டில் விட்டனர்.
ஆனால் அவளின் அம்மா ரத்னாவோ மகளுக்கு மேல “என்னது வண்டியை விட்டு நீ மட்டும் வீட்டுக்கு வந்துட்டியா.. வண்யோட விலை என்னென்னு தெரியுமா டி எண்பதனாயிரம் ரூபா.. வாங்கி ஆறு மாசம் கூட ஆகல” என்று அவளைத் திட்டியது தனிக்கதை.. அதன்பின் ஐயப்பனுக்கு போன் செய்து வண்டி நிற்கும் அட்ரஸை சொல்லி அங்கு இருந்த வண்டியை வேற ஒரு குட்டி யானை மூலம் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த செலவு ஒரு சோகக்கதை..
இப்படியாக வஞ்சகமில்லாமல் தன்னைப் பெற்றவர்கள் ஆரம்பித்து சுற்றம் உள்ளவர்கள் முதல் அனைவரையும் அல்லாமல் கொள்ளாமல் அல்லுவிட வைத்தாள் இந்த களவாணி..
இதைப் படித்த கஞ்சி சட்டைக்கும் அவனையும் அறியாமல் புன்னகையில் உதடு வளைந்தது. இந்த அட்டு பீஸா நம்மை தூக்கியது என்று எண்ணியவனுக்கு புன்னகை இன்னும் விரிந்தது..
நல்லவேளை அவனின் இந்த புன்னகையை யாரும் பார்க்கவில்லை. இல்லை சென்னை மாநகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும்.
ஏன்னென்றால் எஸ்.பி.யின் டெரர் முகமே அனைவருக்கும் பழகி போன ஒன்று..
சிறிது நேரம் இருக்கையில் சாய்ந்து யோசித்துக்கொண்டே இருந்தவன் அடுத்த நொடி டிரைவரை வண்டி எடுக்க சொல்லி கிளம்பிவிட்டான் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியை நோக்கி…
அது தான் நம்ம ஐவர் படை படித்துக்கொண்டிருக்கும் யூனிவர்சிட்டி..
திவ்யபாரதியும் கர்ணனும் இங்கே கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் நாலாம் ஆண்டு
படித்து வருகிறார்கள்.. ஈக்னேஷ் எம்பிஏ முதலாமாண்டும்.. விபாகர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டிலும்.. சாந்தினி பி.பார்ம் நான்காம் ஆண்டிலும் படித்து வருகிறார்கள்..
“திவ்யபாரதி ஐயப்பன்.. உன்னை பார்க்க போலீஸ்காரர் ஒருத்தர் வந்திருக்கார்” என்று அட்டெண்டர் ஒருவர் கூற..
“போலீஸா.. நம்மை தேடியா? புதுசா இன்னிக்கு எந்த சோசியல் சர்வீஸூம் நாம செய்யலையே” என்று யோசித்தவாறே அவள் லேப் இருந்த இரண்டாம் தளத்தில் இருந்து எட்டி பார்க்க.. அங்கே பார்க்கிங் ஏரியாவில் தனது ஜீப்பை நிறுத்தி விட்டு அதில் ஒரு கையை வைத்து சாய்ந்தவாறு,
மறுகையால் தன் கையிலுள்ள ஸ்டிக்கை சுழற்றிக் கொண்டு நின்று கொண்டிருந்தான் கன கம்பீரமாக சூரிய பிரகாஷ்..
“வாட்ட்ட்.. இவன் போலீஸா.. இவனையா கடத்தினோம்” என்று அதிர்ந்து பார்த்தாள் திவ்யபாரதி..
5
‘யார் அப்படி என்னை தேடிவந்து இருக்கக்கூடும்.. அதுவும் போலீஸ்’ என்று எண்ணிக்கொண்டே எட்டிப்பார்த்தவள் அதிர்ந்து அங்கிருந்து தூணின் பின்னே மறைந்தாள். எகிறி துடிக்கும் தன் நெஞ்சத்தை அழுந்தப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்றாள் சிலையென..
“வாட்.. இவன் போலீசா? இவனையா தூக்கினோம்?” என்று அதிர்ந்து நிற்க..
திவ்யா பாரதியை தேடி போலீஸ் வந்திருக்கு என்ற செய்தி காட்டுத் தீ போல் கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட் முழுக்க பரவ.. வேறு ஒரு லேபில் இருந்த கர்ணனும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான் தன் தலையின் தலையைக் காக்க…
வந்தவன் தூணின் மறைவில் நின்று கொண்டிருந்தவளை பார்த்து அவள் தோளில் கையை வைத்து ஒரு உலுக்கு உலுக்கி “என்னடி இங்கே பல்லி மாதிரி பம்மிகிட்ட நிக்கிற.. உன்னை தேடி போலீஸ் வந்ததாமே யாருடி அது” என்று பதட்டமாக கேட்டான் கர்ணன்..
அவளோ வாய் பேச முடியாமல் கையை காட்டி எஸ்பிஐ பார்க்க சொன்னாள். முதலில் எதார்த்தமாக பார்த்த கர்ணனும் எஸ்பிஐ பார்த்த பின்னர், இன்று தாங்கள் பதார்த்தம் ஆவது உறுதியென முடிவு எடுத்து அவளுக்கு துணையாக அந்த தூணின் மறைவில் பல்லியென அவனும் ஒட்டிக்கொண்டு நிற்க..
“அடேய் கருணா.. இவன் உண்மையிலேயே போலீஸா டா?” அதிர்ச்சி மாறாமலேயே கேட்டது திவ்யா..
“ஆமாம் தான் போலடி” அவளுக்கு குறையாத அதிர்ச்சியுடன் பதிலளித்தான் கர்ணன்.
“என்னடா இவன் நம்மள தேடிட்டு வந்து இருக்கான்.. இத்தனை வருஷ சோசியல் சர்வீஸ்ல இப்படி ஒரு நிகழ்வு நமக்கு நடந்ததே இல்லையடா.. இப்ப என்னடா செய்றது” என்று கையை பிசைந்தவாரே அவள் கேட்க..
“அது எப்படி கரெக்டா நாம படிக்கிற யூனிவர்சிட்டிக்கு வந்து நிற்கிறான்” ஐசக் நியூட்டன் போல அன்னார்ந்து பார்த்துக்கொண்டு யோசனை செய்தான் கர்ணன்.
அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டி “இது பெரிய அரிய கண்டுபிடிப்பு பாரு.. நாமதான் உளறி கொட்டுனோமே டா நிரஞ்சனாவோட ஃபிரண்ட்ஸ்னு.. அதிலேயே கண்டுபிடிக்க முடியாதா? போதாக்குறைக்கு அன்னைக்கு என் ஸ்கார்பை புடுங்கி என் மூஞ்சிய வேற பாத்துட்டான். அப்பவே உஷாராய் எஸ்கேப் ஆகி இருக்கணும்.. அதுங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்குற வரைக்கும் பொறுத்து இருக்கனும் நினைச்சு, இன்னைக்கு நம்ம நைட்டு வீட்டிலயா ஸ்டேஷனுலையா தெரியலையே?” என்று புலம்பியவாறு இவள் நின்று கொண்டிருக்க..
“ஏம்மா திவ்யபாரதி உன்னைத் தேடி யாரோ ஒரு போலீஸ் வந்திருக்காருனு சொல்லி எம்மா நேரம் ஆகுது.. இன்னும் என்னமா பண்ற.. சீக்கிரம் போ.. ப்ரின்சிபால் ரெண்டாவது தபா என்ன அனுப்பி வைச்சிட்டார்” அட்டெண்டர் மாணிக்கம் கத்திவிட்டு செல்ல..
“அடே வாடா என் கூட.. எனக்கு பயமா இருக்கு” என்று கர்ணனின் கையை பிடித்துக்கொண்டு திவ்யபாரதி கூற..
“ஹ..ஹ..ஹ.. தலையே பயப்படலாமா” என்றவாறு அவன் நழுவ பார்க்க..
“உனக்கு எல்லாம் யாருடா கர்ணனு பேரு வச்சா.. நட்புக்கு மரியாதைன்னா கர்ணன்.. ஆனா நீ பாரு எப்பவும் என்ன கோர்த்து விடுவதிலேயே குறியா இரு.. ஆனாலும் நான் உன்ன விடமாட்டேன் எதுவாக இருந்தாலும் அது சரிசமமாக நம்ம அஞ்சு பேரும் தான் சமமா பிரிச்சுக்கணும்” என்று நவயுக குந்தியாய் தீர்ப்பு சொல்லியவள் அந்த குண்டோதரனை விடாமல் முடிந்த அளவு தம் கட்டி இழுத்துக் கொண்டே சென்றாள் எஸ்பிஐ பார்க்க..
தொலைதூரத்தில் அவர்கள் வரும்போதே இருவரையும் கவனித்து விட்டான் சூரியபிரகாஷ். அதுவரை அவர்களை பார்த்துக் கொண்டிருந்தவன் அவர்கள் கிட்ட நெருங்கியதும் தன் கைகளில் உள்ள கூலரை கண்களில் மாட்டிக்கொண்டான்.
“ஏண்டி திவி.. அன்னைக்கு நம்ம கடத்துனதுக்காக இன்னைக்கு நம்மள அரெஸ்ட் பண்ண வந்து இருப்பாரோ?” என்று நடுங்கிக்கொண்டே திவ்யபாரதியின் இழுப்புக்கு சென்றுகொண்டிருந்தான் கர்ணன்.
“வந்திருப்பாரோ இல்லை கண்டிப்பா நாம தான்னு தெரிஞ்சு போய் தான் வந்திருக்காரு.. விடு எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் வருவதை” என்று உள்ளத்தில் இருந்த பயத்தை வெளிக்காட்டாமல் வைஜெயந்தி ஐபிஎஸ் போலே நடை நடந்து சென்றவளை பார்த்தவனுக்கு “ஆனாலும் ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது திவி” என்று இழுத்தான்.
“இப்ப நீ வாயை மூடிக்கிட்டு வரல எல்லாத்துக்கும் பிளான் போட்டுக் கொடுத்தது நீ தான்.. மயக்க மருந்து ஸ்பிரே அடித்தது நீ தான்.. எல்லாத்துக்கும் உன்னை கையை காட்டிடுவேன். தெரியும்தானே கொலை செஞ்சவனை விட.. அதுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த உனக்குத்தான் அதிக தண்டனை” என்று கண்களை உருட்டி அவனை மிரட்ட..
“அடியே என்னடி பாவம் பண்ணுனேன் நானு.. உனக்கு பிரண்டா இருந்த ஒன்னை தவிர, அப்படி எல்லாம் போட்டு கொடுத்துடாதடி நான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை” என்று கெஞ்சிக் கொண்டே வந்தான் அந்த உற்ற நண்பன்..
“நானா விரும்பி எதையும் செய்ய மாட்டேன் கருணா.. அதுவா ஃபோலல வந்துச்சுன்னா நீ என்ன தப்பா நினைக்க கூடாது சரியா?” என்று அவனுடன் வலவலத்துக்கொண்டே எஸ்பிஐ நெருங்கி இருந்தார்கள் இருவரும்.
வாய் ஓயாமல் நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தவள் எஸ்.பியை கண்டதும் பயத்தில் வாயை பொத்தி நின்றுகொண்டாள்.
கைகளில் வைத்திருந்த ஸ்டிக்கை சுழற்றியபடியே.. வெகு நிதானமாக இருவரையும் இமைக்காமல் பார்த்தவன் அடுத்த நொடி திவ்யபாரதியை தான் முற்று முதலாக தன் கண்களாலேயே ஸ்கேன் செய்து கொண்டிருந்தான்.
“ஆமாம் ஐவர் படையில் ரெண்டு பேரும் தான் இருக்கீங்க.. மத்த மூணு பேரை காணோம்?” என்று எஸ்.பி கேட்க..
ஆகமொத்தம் எல்லா விவரமும் தெரிஞ்சுதான் வந்திருக்கான் என்று எச்சில் விழுங்கிக் கொண்டு அமைதியாகவே அவனை பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
“நான் கேட்டா பதில் சொல்லணும்” என்றவனின் குரலில் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது திவ்யபாரதியின் தேகம்.
“அவர்கள் எல்லாம் வேற வேற டிபார்ட்மெண்ட். அவங்களுக்கு இன்னும் கிளாஸ் முடியல” என்று திக்கி திணறி கூறி முடித்தாள் அவள்.
அருகிலிருந்த கருணாவை கையால் சுட்டிக்காட்டி “அவன் என்ன பாடிகார்ட்டா? உன்னை மட்டும்தான் வர சொன்னேன்” என்று கேட்க..
கர்ணன் தான் எப்போ எப்போ என்று இருந்தானே மிக பவ்யமாக திவ்யபாரதி பார்த்து “நீ சார் கிட்ட பேசிட்டு இரு நான் அப்படிக்கா நிக்கிறேன்” என்று விட்டால் போதும் என்று ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டான்.
‘குண்டா வீட்டுக்கு வாடா உனக்கு இருக்கு’ என்று கண்களால் அவனை எரிக்க.. அவனும் அருகில் இருக்கும் எஸ்பிஐ பதிலுக்கு சுட்டிக்காட்டினான்.
“ஆமாம் உங்கப்பா போலீஸ்னு சொன்ன, போலீஸ்ல என்னவா இருக்காரு?” என்று தன் தாடையை தடவியவாறு கேட்க..
ஏற்கனவே தன்னை பற்றிய அனைத்தும் தெரிந்து வைத்துக் கொண்டுதான் இவன் கேட்கிறான் என்று அவளது மூளைக்கு புரிந்தாலும் வீம்பாக மறுக்க முடியாத சூழ்நிலையில் அவளை நிறுத்தி வைத்திருக்கிறான் என்று புரிந்தவள் “எஸ்.ஐயாக இருக்கிறார்” என்று மெதுவாக கூறினாள்.
“எஸ் ஐ.. யைத்தான் எஸ்.பி லெவலுக்கு பில்டப் கொடுத்த நீ.. ம்ம்ம்” என்று நக்கலாக கேட்க..
உதடுகளை காது வரை இழுத்து வைத்து இளித்தாள் திவ்யா.
“கிட்னாப் பண்றதுக்கு என்ன தண்டனைனு உனக்கு தெரியுமா? அதான் உன் அப்பாவும் போலீஸ்ல தான் இருக்காரு அவரு கிட்ட கேளு.. உனக்கு தண்டனை என்னென்னு தெளிவா சொல்லுவாரு” என்றவனை அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் திவ்யா.
“ஆனா.. நீ போலீசையே கடத்தி இருக்க. நான் என்ன பொசிஷன்ல இருக்கேன் தெரியுமா?” என்று தனது அடையாளங்களை சுட்டிக்காட்ட அவளுக்கு உள்ளுக்குள் தடதடவென ரயில் வண்டி ஓட தொடங்கியது.
“இதுக்கு எல்லாம் சேத்து வச்சு உனக்கு என்ன தண்டனை தரலாம்?” என்று வெகு சிரத்தையாக அவளுக்கு தண்டனை தரும் பொறுப்பை அவளுக்கே விடுத்தான்.
“அப்பாவி பொண்ணு.. ஏதோ ஒரு காதல் ஜோடியை சேர்த்து வச்சு சோசியல் சர்வீஸ் பண்ண நினைச்சுதுனு… போனா போகுதுன்னு விட்டுடுங்க சார்” என்று கெஞ்சலாக கூறினாள்.
“அப்படி எல்லாம் விடவா.. உன்னை கண்டுபிடித்து.. பெட்ரோல் விக்கிற விலையில இவ்ளோ தூரம் உன்னை தேடி வண்டிய எடுத்து வந்து இருக்கேன்” என்று கூற.. “நான் வேணும்னா இவ்வளவு தூரம் வந்து போன அப் அண்ட் டவுன் பெட்ரோல் செலவு ஏத்துக்கிறேன் சார்” என்று அப்பாவியாக கூறியவளை கண்களாலே எரித்தவன்.. “என்னை என்ன அதுக்கு கூட வக்கில்லாதவனு நினைச்சியா?” என்று எகிறினான்.
“அச்சச்சோ அப்படி எல்லாம் இல்ல சார்.. கேஸ் கீஸ் போடாதிங்க சார்.. என் ஏரியால எனக்குன்னு ஒரு நல்ல பேரு இருக்கு சார் அது எல்லாமே போய்விடும்” என்று வராத கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவள் கூறினாள்.
அவனுக்கு தான் தெரியுமே அவள் ஏரியாவில் அவள் எவ்வாறு பிரபலம் என்று.. அதை நினைத்தவனுக்கு சிரிப்பு வர அது உதட்டை எட்டு முன்னே கடிவாளமிட்டான்.
“ஆனா உன்னை ஏதாவது ஒன்னு செஞ்சே ஆகனுமே.. என்னை ரெண்டு நாளா வச்சு செஞ்சதுக்கு” என்று சொன்னவன் தொணியிலிருந்த கோபத்தை கண்டளுக்கு உடலெல்லாம் வியர்த்து வழிந்தது.
என்ன செய்வது என்று புரியாமல் தன் கைகளைப் பிசைந்து கொண்டு.. “நீங்க.. என்ன சொன்னாலும் செய்றேன் சார்” என்று
என்று இவளே வாலியண்டராய் சரண்டராக..
அவனே ஆடு எப்போது மாட்டும் பிரியாணி போடலாம் என்று காத்துக் கொண்டிருக்க..
இவளோ பிரியாணி மட்டும் போதாது சுக்காவையும் சேர்த்து வை என்பது போல தன் வாயை கொடுத்து தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டாள்.
“அப்போ நாளைக்கு கரெக்டா அஞ்சு மணிக்கு சங்கீத் ரெஸ்டாரன்ட் கார்டனுக்கு வந்துரு” என்றவன் அவ்வளவு தான் உனக்கும் எனக்கும் பேச்சு முடிந்தது என்பது போல தன் வண்டியை நோக்கி சென்றான்.
அவளுக்கு திக்கென்றது எதுக்கு ஹோட்டலுக்கு வரச் சொல்லுகிறார். ஏதாவது தப்பாக நடந்திடுமோ என்று பெண்ணாக ஒரு பக்கம் மனம் பதற.. “என்னாலெல்லாம் அவ்வளவு தூரம் தனியா உங்க கூட வர முடியாது” என்றும் முதுகுக்குப் பின் கேட்ட அவளது குரலில்.. காற்றை விட வேகமாக அவளை நெருங்கியவன் “முடியாது என்கிற வார்த்தை உன் வாயிலிருந்து இனி வரவே கூடாது.. முக்கியமா என்கிட்ட” அவளது கண்களை பார்த்துக்கொண்டே கூர்மையாக அவன் கூற.. திவ்யபாரதியின் தலையோ அவளே அறியாமல் சரி என்று ஆட்டியது.
அவனது பார்வை வெகு நிதானமாக அசையாமல் அவளையே கூர்ந்து பார்க்க அதில் அவளது பூமேனி நடுங்கியது.
“இப்போ எதுக்கு இப்படி பார்த்த வைக்கிறான் தெரியலையே” என்று மனதுக்குள்ளே புலம்பினாள். “ஒருவேளை நம்ம வாயாலேயே சரினு சொல்லனும்னு அவன் எதிர்ப்பார்கிறானோ?” என்று நினைத்து மிகவும் கடினப்பட்டு தன் இதழ்களை பிரித்து “வரேன்” என்றாள்.
அது என்று கெத்தாக ஒரு பாவனை வந்து போனது அவனது கண்களில்..
“நாளைக்கு வரணும்” என்று அவனது குரலில் தெறித்த ஆளுமை உச்சாதி பாதம் வரை திவ்யபாரதிக்கு தகித்துக் கொண்டு வந்தது.. ‘அப்படி என்ன பெரிய இவன்!! இவன் சொன்னா உடனே நான் போய் நிக்கனும் எதிர்பார்க்கிறான்’ என்று பொரும மட்டுமே முடிந்தது. ஆனால் எதிர்த்து ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை கூட அவனிடம் பேச முடியவில்லை அவளால்..
அதுவரை இவர்கள் இருவருக்கும் இடையில் நடப்பதை பார்த்துக் கொண்டு நின்ற கர்ணன், எஸ்.பி நகர்ந்த அடுத்த நொடி திவ்யாவை அடைந்து ‘என்னாச்சு திவி.. என்ன சொன்னார்?” என்று கேட்டான் கர்ணன்.
அன்று மாலை அவர்களது காலேஜ் கேண்டீனில் கூடியது ஐவர் படை..
திவ்யபாரதியோ தனக்கு எதிரே இருந்த குளிர்பானத்தை வெறித்தவாறு அமர்ந்திருக்க.. மற்ற மூவரும் “என்னாச்சு? என்ன நடந்தது?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்துக் கொண்டிருந்தனர்.
“என்ன நடந்ததுன்னா??” என்று டைரக்டர் பாணியில் இரு கைகளையும் சதுரமாக வைத்துக்கொண்டு “நாம் கடத்தின அந்த மாப்பிள்ளை.. அதான் நிரஞ்சனா அக்காவோட கல்யாணத்து அன்னைக்கு.. அவரு ஒரு போலீஸ்காரர்” என்றான்.
“என்னது போலீசா?!!” என்று வாயை பிளந்தனர் மூவரும்..
“அவர்தான் இன்னைக்கு திவிய தேடி வந்தது” என்று அடுத்த குண்டையும் அசால்ட்டா அவன் கூற..
“என்னது நம்மள கண்டுபிடிச்சு இங்கேயே வந்துட்டாரா? ஏண்டி கேஸ் எதுவும் போற்றுவாரா? எனக்கு இப்பவே பயந்து பயந்து வருது” என்று சாந்தனி அழுக ஆரம்பிக்க..
“இதுவரைக்கும் அந்த மாதிரி ஒன்னு நாம வரலாற்றிலேயே கிடையாது.. இனிமே வந்தால் சூப்பரா தான் இருக்கும்.. கேஸூ.. கோர்ட்.. வாவ்வ்வ்” என்று விபாகர் கூற..
ஈக்னேஷூம் சாந்தினியும் எழுந்து அவனை மொத்தினர். “வாய மூடுடா பன்னி..” என்று திட்டியபடி..
நால்வரும் ஒருவருக்கொருவர் ஒவ்வொன்றை பேசிக் கொண்டு விவாதித்துக் கொண்டே கூச்சல் போட.. “ஃப்ர்ஸ்ட் எல்லாம் நிறுத்துங்க டா” என்று கத்தினாள் திவ்யா.
“இங்க பாருங்க சாதாரண ஒரு மனுஷன கடத்தினால் அவன் போய் போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாம்.. ஆனா ஒரு போலீஸையே கடத்தினா.. அவன் யார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண முடியும்?” என்று தனது அறிவார்த்தமான கேள்வியை அவர்களை பார்த்து கேட்க..
“அதானே யார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண முடியும்?” என்று கர்ணனும் தோழிக்கு ஒத்து பாட..
“அதே.. அதே.. அதுமட்டுமில்லாம கல்யாணத்து அன்னைக்கு பெரிய பதவியில் இருக்கிற அவனையே நாம கடத்திட்டோம்னு வெளியில் சொன்னால் அது அவனுக்கு தான் வெட்கம்.. அவமானம். தன்மான சிங்கம் அந்த அசிங்கத்தை எல்லாம் ஏற்காது. கூடவே நாமதான் கடத்தினதுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது எஸ்.பியை தவிர.. அதனால அவரால் லீகலா நம்மை எதுவும் பண்ண முடியாது” என்று கெத்தாக கூறி அமர்ந்தாள் திவ்யபாரதி..
“நீ சொன்ன லீகல் எல்லாம் ஓக்கே.. ஆனா இல்லீகலா ஏதாவது செஞ்சா? பழிக்கு பழி வாங்கினா? நம்மையும் தூக்கினா? இப்படி நிறைய விஷயம் இருக்கு” என்று சாந்தினி பயந்தவாரே கூற..
“இது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் ஆபீஸர்” என்றான் ஈக்னேஷ்.
“சந்து உனக்கு கூட மூளையில் கொஞ்சம் சாந்து.. இருக்கு பாரேன்” என்று நக்கல் அடித்தான் விபாகர்.
“அதுக்கு இப்ப என்ன செய்யலாம்?”
“ஒன்னும் இல்ல அவன் போக்கிலேயே போய் அவனை இதை பத்தி யோசிக்க விடாம டைவர்ட் பண்ணிடலாம்” என்று விபா ஐடியா கொடுக்க..
“புரியல?” என்று திவ்யா அவனை பார்க்க..
“அதான் திவி.. அவன் நாளைக்கு ரெஸ்டாரன்ட்க்கு கூப்பிட்டுயிருக்கான் இல்ல.. நீயும் அவன் என்ன சொன்னாலும் கேளு. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நம்ம வழிக்கு கொண்டுவந்துடு” என்று இவர்கள் திட்டம் தீட்டி அவளை அனுப்ப..
அங்கே இருப்பவனோ இவளை கட்டம் கட்டி தூக்க மறுதிட்ட போட..
யார் திட்டம் தீட்டி என்ன பயன்..
ஏற்கனவே காதல் தேவதை எதிரெதிர் துருவங்களை ஒன்று சேர்க்க போட்ட திட்டத்தில் தான் இவர்கள் வட்டம் போடுகிறார்கள் என்று யார் சொல்வது??
6
மறுநாள் மாலை ஐந்து மணி சங்கீத் ரெஸ்டாரன்ட் ரூப் கார்டன்…
காக்கி பேண்டின் மேலே இளநீல நிற போலோ டீசர்டோடு வசீகரமாய்..
திரண்ட புஜங்கள் அவனின் தேக வலிமையை காட்டுவதாய்..
காற்றில் அலைபாய்ந்து முன் உச்சியில் விழும் சிகை, அதை அவ்வப்போது நேராக்கும் கைகள் வனப்பாய்..
தனது சுற்றுப்புறத்தை அவதானித்து கொண்டே இருக்கும் கூர் கண்களை கூலரால் மறைத்தவனாய்..
கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தான் தோரணையாய் அரசனாய்..
வழக்கம்போல் கர்ணனுடன் தனது ஃபேசினோவில் வந்து இறங்கினாள் திவ்யா.
ரெஸ்டாரன்ட் வாயிலேயே நின்றுகொண்ட கர்ணன் “நீ உள்ள போ திவி.. நான் இங்கேயே வெயிட் பண்ணுறேன்” என்று கூற..
“அடேய் விட்டுட்டு போயிடாத டா.. அந்த எஸ்பி என்ன மூடுல இருக்கான் வேற தெரியல. கொஞ்சம் பயந்து பயந்துதான் வருது” என்று நண்பனிடம் புலம்பி விட்டு மெல்ல ரூப் கார்டனை நோக்கி நடந்தாள் மாது..
ரூப் கார்டனில் அவ்வளவாக கூட்டம் இல்லை அங்கு ஒருவர் இங்கு ஒருவராக இருக்க தன் கண்களாலேயே துலாவினாள் இவன் எங்கே என்று…
கண்களில் கூலர் மறைத்து இருந்தாலும் அவன் தன்னை தான் கூர்ந்து நோக்குகிறாளன் என்று புரியாமல் இல்லை அவளுக்கு..
அவனைப் பார்த்த நொடி வலுக்கட்டாயமாக பல்லை இளித்து சிரித்து வைத்தாள். அவன் அதற்கும் எந்தவித ரியாக்சனும் கொடுக்காமல் அவளைப் பார்த்தபடியே தான் அமர்ந்திருந்தான்.
“கொஞ்சமாவது சிரிக்கறானா பாரு.. கஞ்சி சட்டை” என்று அவனை மனதுக்குள் திட்டிக்கொண்டே வெளியே சிரித்துக்கொண்டே அவன் எதிரே சென்று அமர்ந்தாள்.
“குட் ஈவினிங் சார்” என்று ஃபார்முலா சொல்லியபடி எதற்கு என்னை அழைத்தாய் என்று கேட்காமல் கேட்டு வைத்தாள்.
கண்களாலேயே அவளையும் அவளது சுற்றுப்புறத்தையும் ஆராய்ந்தவன் “எங்கே உன் பாடிகார்ட்ஸ் வரலையா?” என்றான்.
“இல்ல.. இல்ல யாரும் வரல” என்று அவசரமாக உரைத்தாள். அவளது பரப்பரப்பான உடல்மொழியும்.. பார்வையை தன் பார்வையுடன் கலக்காமல் குனிந்து கொண்டே செல்லும் விதத்தில் இருந்து கண்டு விட்டான் அவள் பொய் சொல்கிறாள் என்று…
“எனக்கு பொய் சொன்னா பிடிக்காது” என்று அழுத்தமாக கூற..
இவன் எப்படி பார்த்தான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் “கர்ணா மட்டும் வந்திருக்கான்.. நானும் கர்ணாவும் எப்போதும் ஒன்னா தான் வீட்டுக்கு போவோம். அவனை விட்டு நானோ இல்லை என்னை விட்டு அவன் போனாலும் எங்க அம்மாகிட்ட பாட்டு வாங்க முடியாது. அதான் கீழ தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான்” என்றாள்.
“ம்ம்ம்” என்றவன் அவன் கட்டளைக்கு காத்திருந்த சர்வரை அழைத்து இரண்டு காஃபிசினோ என்று ஆர்டர் செய்ய..
“காப்பிசினோவா?? உவ்வேக்க நல்லாவே இருக்காதே.. கொழகொழன்னு மேலே ஏதோ கிரீம் போட்டு வைச்சு இருப்பாருனுங்க.. அதுல அது வேற ஜில்லுனு இருக்கும்.. எந்த மடப் பையலாவது அதை குடிப்பானா?” என்று முணுமுணுக்க.. அது அச்சிரம் பிசகாமல் எஸ்.பி காதில் விழ..
“எனக்கு பிடிக்கும்” என்று கூற..
“ஹி.. ஹி.. எனக்கும் கூட பிடிக்கும் சர்” என்றாள்.
சர்வர் இருவருக்கும் அதை வைத்து விட்டு செல்ல.. அவனோ மெது மெதுவாக அவளை பார்த்து கொண்டே குடித்து கொண்டிருந்தான்.
இப்போது தான் அவளை முழுதாக பார்க்கிறான்.. குண்டு கண்களும்.. வெறுமையாக இருந்த பிறை நெற்றியும்.. மொழுக்கென்ற மூக்கும் அதில் இருந்த வளைய வடிவ மூக்குத்தியும்.. செழுமையான கன்னங்களும்.. செர்ரி பழ உதடுகளுமாக அவன் பாஷையில் செம ஃபிகர் என்று தோன்ற.. தலையாட்டி சிரித்துக் கொண்டான்.
திவ்யாவோ கையில் இருந்த அந்த காப்பிசினோவை ஏதோ கபசுர குடிநீர் ரீதியில் பார்த்து வைத்தவள், அடுத்த நொடி கடகடவென்று அதை குடித்து முடித்திருந்தாள். எஸ்.பி அவளை அதிர்ந்து பார்க்க.. “சர் இதை எவ்வளவு நேரம் தான் பார்த்துக்கிட்டே இருக்க.. அதான் டபக்குன்னு எடுத்து படக்குன்னு குடிச்சிட்டேன்” என்று கூறி அவள் சிரிக்க..
“இது நாயர் கடை காபி இல்ல.. காப்பிசினோ.. அதுக்குன்னு ஒருமரியாதை இருக்குல.. அதை குடிக்கிறதுக்கு” என்று அவன் கேட்க..
“நாயர் கடை காபியாவது சூடா இருக்கும்.. மெதுவாக குடிக்கலாம்.. இது எல்லாம் அப்படி முடியாது சர்.. நான் ஐயப்பனுக்கே அளந்து தான் மரியாதை கொடுப்பேன் சர்.. இதுக்கு கொடுத்த வரை போதும்.. அப்போ நான் வரட்டா சர்” அவள் சொன்ன ஐயப்பன் அவள் அப்பா என்று புரிய.. இவளை வளர்த்து வைத்த லட்சணத்திற்கு அந்த ஆளுக்கு தேவை தான் என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
“உன்னை காபி குடிக்கவா வர சொன்னேன்?” என்றவனோ அவன் கையில் இருந்ததை ரசித்து ருசித்து குடிக்க..
“பின்ன எதுக்கு? ஒருவேளை மீண்டும் தூசு தட்டி பழைய கேசை எடுக்கப் போகிறோனோ? இல்லை நம்ம வாயாலேயே எல்லா உண்மையும் வர வைச்சு உள்ள தூக்கி போட்டுவானோ?” என்று அவள் மூளை கணநேரத்தில் பலவித கணக்குகளை செய்ய..
அவனோ பதில் சொல்லாமல் காப்பிசினோவில் கவனமாய் இருந்தான். மொத்தத்தையும் சொட்டு விடாமல் அவன் குடிக்க.. இவள் தவிக்க.. அதை கண்டவனுக்கோ ரகசிய சிரிப்பு..
“அது என்னான்னா?” என்று அவன் கூற விழைய..
அவளும் ஆர்வமாக அவன் முன் குனிந்து கேட்க.. “இந்நேரம் எனக்கு கல்யாண ஆகியிருக்கும்.. உன்னால தான் ஆகல” என்று அவள் மீது பழியை ஏற்றி.. அவளுக்கு குற்றவுணர்வை தூண்டினான். இவன் அதை விடவே மாட்டான் என்று ஆயாசமாக இருந்தது அவளுக்கு.
“எப்படியும் அந்தப் பெண்ணை கல்யாண செய்திருந்தால் இப்போ அவள் கையால எங்க வீட்டுலையோ இல்ல ஏதோ ஒரு ஹோட்டலிலோ அவளுடன் இப்படி காப்பிசினோவை தனியா குடிக்காம இரண்டு ஸ்ட்ரா போட்டு ரோமான்டிக்கா குடிச்சிட்டு இருந்திருப்போம்.. இப்போ எல்லாம் போச்சு.. அதனால் எனக்கு எப்போ எல்லாம் இந்த மாதிரி காப்பிசினோ குடிக்க தோணுதோ அப்பெல்லாம் நீ தான் வந்து கம்பெனி கொடுக்கனும்.. சரியா? இப்போ கிளம்பு” என்றவன் காசை வைத்து விட்டு எழுந்து சென்று விட்டான்.
“என்னது?? நான் வந்து கம்பெனி கொடுக்கனுமா?” என்று அதிர்ந்து விழித்தாள் திவ்யபாரதி..
“எவ்வளவோ தைரியம் இருந்தா அவன் அப்படி சொல்லுவான்.. போலீஸ் மாதிரியா பிகேவ் பண்றான்.. பொறுக்கி மாதிரி பேசிட்டு போறான்.. எங்க பார்க்குறான்னு தெரியாம இருக்க கூலர் வேற.. இவனை எல்லாம்..” என்று அவள் வசைபாடிக் கொண்டே செல்ல..
“ம்ஹூம்” என்று தொண்டை கனைக்கும் சத்தம் கேட்க.. திரும்பி பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள். அருகிலுள்ள இருக்கையை ஒற்றை கையால் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையை பாக்கெட்டில் விட்டபடி நின்றிருந்தவன் அவளை தான் கூர்ந்து பார்த்தான்.
அவன் பார்வையில் இவளுக்கு தொண்டை வரள.. வார்த்தை சிக்கி கொள்ள.. அவனையே பார்த்தப்படி மெல்ல எழுந்து நின்றாள்.
மெல்ல அடிகள் எடுத்து அவன் நெருங்கி வர.. திவ்யாவுக்கோ திக் திக் என்று இருக்க.. அருகில் இருந்த மேசையை இறுக்க பற்றிக்கொண்டாள். அவன் இன்னும் நெருங்க.. நெருங்க.. பின்னால் மேசையை இருக்க அவளால் நகர முடியவில்லை. அவள் கண்களில் தெரிந்த பயம் அவனுக்கு அவளை சீண்ட சொன்னது.
தொட்டு விடும் தூரத்தில் அவன்..
மூச்சை உள்ளிழுத்து கொண்டு அவள்..
கண்களில் சுவாரஸ்யத்துடன் அவன்..
கண்கள் அலை பாய பயத்துடன் அவள்…
அகன்ற தோளும்.. சிக்ஸ்பேக் மார்பும்.. உருண்டு திரண்ட புஜங்களுடன் முழுதாக ஆறடி ஆண்மகன் அவனின் அந்த உடல்வாகு அவளை இம்சிக்க, அவளோ முகத்தை குனிந்து கொண்டாள். ஆனால் அவனோ அதை கண்டுகொள்ளாமல் மெல்ல அவள் புறம் குனிய.. கண்கள் விரிய.. மூச்சை உள்ளே இழுத்து பிடித்தப்படி நின்றிருந்தாள் முடிந்தளவு அவன் மீது ஒன்றிவிடாமல்.. அவனோ இன்னும் அவளை உடலோடு உடல் உரச நூலளவு இடைவெளியில் நெருங்கியவன் அவள் பின்னால் இருந்த டேபிளில் இருந்து தன்னுடைய பைக் சாவியை எடுத்தவன் அவள் முன்னே அதை ஆட்டிவிட்டு திரும்பி நடந்தான்.
“அப்பாடி போய்விட்டானா?” என்று அவள் இழுத்த மூச்சை விட சட்டென்று திரும்பியவன், “ஆமா கொஞ்ச நேரம் முன்னால் என்ன சொன்னா? ஏதோ போலீசு பொறுக்கின்னு பேசிக்கிட்டு இருந்தியே என்னது அது?” என்று அந்த சாவியால் காது குடைந்து கொண்டே அவன் கேட்க..
“அது.. அது.. ஆஹான்.. நீங்க வந்து பொறுக்கிய எல்லாம் கரெக்டா பிடிப்பீங்க.. சூப்பர் போலீஸ்னு சொன்னேன்” திக்கி திணறி கூறியதிலிருந்து அவள் சொன்னது அனைத்தும் பொய் என்று நொடியில் புரிந்து கொண்டான்.
“இந்த போலீஸ பொறுக்கியா பாக்கணும்னு ரொம்பவே ஆசைப்படற போலவே.. பார்க்கிறியா?” அவள் முன் குனிந்து இவன் கேட்க.. வேண்டாம் வேண்டாம் என்று வேகமாக தலையசைத்தாள்.
அவனது அலட்சியமான போக்கு.. அதிரடியான பேச்சு.. கூர்ந்து நோக்கும் பார்வை.. அவனின் ஆறடி உயரம் என்று அவளுக்கு சற்றே அவன் மீது பயத்தை ஏற்படுத்தியது முதன் முறையாக..
மேலும் அவளை சீண்டி நினைத்தவனும் “போலீஸாக பொறுக்கியாக இன்னும் டெஸ்ட் பண்ணவே இல்லையே? டெஸ்ட் செய்வோமா?” என்று கிண்டலாக கேட்டவாறே அவளை பார்த்து குனிந்து நெருங்கி நின்றான். அவனின் ஆறடி உயரத்துக்கு அவன் தோள் வரைக்குமே அவள் இருந்தாள்.
கைகளை மெல்ல உயர்த்தி அவளது கன்னத்தைத் தொட எத்தனிக்க.. பின்னால் நகர முடியாமல் அதே சமயம் அவனது தொடுதலை தவிர்க்க முயன்று வில்லென அவள் பின்னால் சாய.. அதில் அவளது முன்னெழில்கள் ப்ரமீடென அவனை ஆய்வு செய்ய அழைக்க..
சட்டென அவனது கண்களோ ஆய்வாளர் பார்வை மாறி ஆராய்ச்சி பாவையாக மாறி ஆராய.. அவன் கண்கள் சென்ற திசையை கண்டவளுக்கு உடம்பெல்லாம் ஏதோ ஊர்வது போல் இருக்க.. அதை தவிர்க்க சட்டென்று நிமிர்ந்தவளின் இதழ்கள் முட்டி நின்றது என்னவோ குனிந்திருந்த அவனது இதழ்களில்..
அவன் இதழ்களோடு இதழ்கள் ஒட்டிக் கொள்ள.. அவளுக்கு அந்த நேரம் அவன் யார்? தான் யார்? சுற்றும் எது? எங்கே இருக்கிறோம்? என்பது எல்லாம் மறந்து போனது.
சில நொடிகளா பல வினாடிகளா என உறைந்து போன நிலையில் அவர்கள் இருக்க.. அவள் காலேஜ் பேக்கில் இருந்து கேட்ட போன் சத்தத்தில் சட்டென்று அவளை விட்டு பிரிந்தவன்.. இரு தோள்களையும் குலுக்கி கைகளை விரித்து.. “இட்ஸ் நாட் மை பால்ட்.. நான் சாவி எடுக்க தான் குனிந்தேன்” என்றவன்.
“இனிமே இந்த மாதிரி எல்லாம் எச்சில் செய்யாதே எனக்கு பிடிக்காது” என்று தனது இதழ்களை துடைத்துக் கொண்டான். “எதா இருந்தாலும் இரண்டு அடி தள்ளி நின்னே பேசு.. நான் இன்னும் கல்யாணம் ஆகாத கன்னி பையன். நாளை பின்ன எனக்கு பொண்ணு குடுக்குறவன் கண்ணுல இது எல்லாம் பட்டா நல்லாவா இருக்கும்? எனக்கு இந்த மாதிரி யார் கூடவும் கிஸ் பண்ணி பேசி பழக்கமெல்லாம் கிடையாது. நாளைக்கு பார்க்கலாம்.. சேம் டைம் டைம் ப்ளேஸ்.. வரட்டா” என்று கூறியவன் இரண்டு விரல்களால் நெற்றியில் சல்யூட் அடித்து
வேக எட்டுக்களுடன் விரைந்து சென்றான்.
சற்று நேரம் உறைந்த நிலையில் தான் திவ்யபாரதி.. பிறகுதான் அவன் சொன்னது எல்லாம் அவள் நியூரான்களில் பதிந்து அவளுக்கு புரிய வைக்க..
‘இவன் கன்னிப்பையனா நான் கன்னி பொண்ணு தானே.. இவனை மட்டும் தான் என்னமோ பாக்கறவங்க தப்பா பேசுற மாதிரி சொல்லிட்டு போறான்.. அப்ப நான் எல்லாம் என்ன?? போற போக்குல என்னவோ சொன்னானே… ஹான்.. அவன் இதுவரைக்கும் யாருக்கும் கிஸ் பண்ணி பழக்கம் இல்லையாம்.. நான் மட்டும் நாளைக்கு 10 பேருக்கு வரிசையா கிஸ் கொடுத்துட்டா இருக்கேன்’ என்று புலம்பிக்கொண்டே வர மீண்டும் அவள் பேக்கில் இருந்த போன் அடிக்க எடுத்து பார்க்க அவளது நட்பு கர்ணாதான் அழைத்திருந்தான்.
முகம் தக்காளி பழம் என்று கோபத்தில் ஜிவஜிவுக்க பார்க்கிங் ஏரியாக்கு வந்தவளை பார்த்தவன், ஏதோ எஸ்பி கோபமாக பேசி விட்டார் என்பதை மட்டும் புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் அவன் வண்டியை எடுக்க அவன் பின்னே ஏறி அமர்ந்தாள் அவள்.
“அவ ஏன்டா அப்படி சொன்னான்?” என்று கேட்க..
“யார் என்ன சொன்னா?” என்று புரியாமல் கர்ணா பதிலுக்கு அவளிடம் கேட்க..
“அதான் அந்த கஞ்சி சட்ட.. வளர்ந்து கெட்டவன்.. எஸ்பி தான்” என்று அலுத்துக் கொண்டே அவள் கூற..
“என்ன சொன்னார்?” என்று அறிந்து கொள்ளும் ஆவலில் கர்ணா..
“அது..” என்று ஆரம்பித்தவள் முழுதாக அவனிடம் எதையும் சொல்ல முடியாமல்.. முதலில் திக்கி திணறியவள், பின்பு அவன் கூப்பிடும் நேரமெல்லாம் அவனுடன் சென்று காபி குடிக்க வேண்டும் என்று சொன்னதை இவள் கூறி முடிக்க.. அவனோ அதிர்ந்து வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்திவிட்டான்.
அதில் திவ்யாபாரதியின் நெற்றி ஹெல்மெட் போட்டு ஓட்டிய அவன் மண்டையில் நச்சென்று மோத, வலியில் கத்தியவள் தன் கையில் முன்னாடி வைத்திருந்த பேக்கால் அவன் முதுகில் “பார்த்து போடா பன்னி” என்று இரண்டு அடி போட்டாள்.
அதன்பிறகு வீட்டுக்கு போய் சேர எடுத்துக்கொண்ட அந்த அரை மணி நேரமும் “ஏன்டா.. அவன் என்னை பார்த்து அப்படி கேட்டான்” என்று குறைந்தது நூறு முறையாவது கேட்டிருப்பாள் திவ்யபாரதி ஐயப்பன்..
கரகாட்டக்காரன் செந்தில் பரவாயில்லை என்று எண்ண வைத்து விட்டாள் கர்ணாவை அவள்.
இரவு உணவு உண்டு இருக்கும் போதும் அதே ஞாபகம் தான் அவளுக்கு. வழக்கம்போல அன்னை வாசுகியிடம் திட்டு வாங்கிக் கொண்டே இரவு உணவை முடித்து தன் அறைக்கு வந்தவள், அழைத்து விட்டாள் தன் பஞ்ச பாண்டவர்களுக்கு குரூப் காலை..
வந்தவுடனே அனைவரிடமும் அனைத்தையும் ஒப்பித்தவள் திரும்பவும் இரவு போன் போட்டு “அவன் ஏன் என்னை மட்டும் அந்த மாதிரி கேட்டான்? கூடவே சாந்தின் இருந்தா தானே.. என்னை மட்டும் கேட்க காரணம் என்ன டா?” என்று திரும்பத் திரும்ப அவர்களை அன்று இரவு முழுவதும் தோன்றும் போதெல்லாம் போனை போட்டு படுத்தி எடுத்தாள் அவள்..
பற்றாக்குறைக்கு மறுநாள் காலை காலேஜுக்கு சென்றவள் நிரஞ்சனாவை தேடி கண்டுபிடித்து அவளை மொத்து மொத்து என்றும் மொத்தி எடுத்தாள்.
“உன்னால நான் போய் ஒரு சிம்பான்சி கிட்ட மாட்டிகிட்டுகிட்டேன்டி.. அவன் என்னென்ன அவனுக்கு எப்ப எல்லாம் காபி சாப்பிட தோணுதோ அப்பல்லாம் என்னை கூப்பிடுவேனு சொல்லி வச்சிருக்கான்.. அடுத்த முறை என்னை கூப்பிட்டான்.. நான் பத்ரகாளியாக மாறி விடுவேன்” என்று அவள் கத்திக் கொண்டிருக்க.. அதேநேரம் அவளது போன் சிணுங்க.. புதிய நம்பராக இருக்கே என்று எடுத்துப் பார்த்தவள் அட்டன் செய்து காதில் வைக்க.. ஹலோ என்று கூட அவள் சொல்லவில்லை..
மறுமுனையில் இருந்தவனோ “உடனே கிளம்பி என் ஸ்டேஷனுக்கு வா” என்றான்.
“என்னது ஸ்டேஷனுக்கா?” என்று இவள் அலற..
“ஆமா இன்னைக்கு காபி சாப்பிட வெளியே போக முடியாது. இம்பார்டண்ட் கேஸ் ஒன்னு இருக்கு.. சோ ஸ்டேஷன்லேயே சாப்பிட போறேன். கம்பெனி கொடுக்க வா?” என்று சொன்னானே பார்க்கலாம்!!
“ஐயையோ..” என்று அலறியது அவள் அல்ல அவளை சுற்றி இருந்த அவளது நண்பர்கள்!!
பின்னே ஒரு நாள் சென்று வந்ததற்கே விடிய விடிய படுத்தி எடுத்தவள், இன்று சென்று வந்தால் அவர்களின் நிலை!!
7
எஸ்.பி கம்பெனி கொடுக்க ஸ்டேஷனுக்கு கூப்பிட..
திவ்யாவோ சந்திரமுகி கம்மிங் சூன் என்று நின்றிட..
சுற்றியிருந்த நண்பர்களோ அய்யோ என அலறிட..
வழக்கம்போல் விபாகர் தான் அவளை சமாதானம் செய்து கர்ணாவோடு அனுப்பிவைத்தான்.
“என்னங்கடா எப்ப பார்த்தாலும் என்னையே பார்டிகார்டா அனுப்புறீங்க.. அதெல்லாம் முடியாது. இந்த தடவை வேற யாராவது போங்க” என்று அவன் முறுக்கிக் கொள்ள..
“அப்ப நானு???” என்று கண்ணில் ஃபையர் ஸ்டேஷனை திவ்யா திறக்க..
“அதில்லடா குண்டோதர..” என்று ஆரம்பித்த ஈக்னேஷ் தலையில் தட்டினான் கர்ணா கோபத்தில்.. “சரி சரி விடு.. அதாவது உங்க ரெண்டு பேரோட அப்பாவும் போலீஸ் டிபார்ட்மெண்ட். சோ.. நீங்க போலீஸ் ஸ்டேஷன் போனா ஸ்யூ ஆகாது.. ஏதாவது சொல்லி, எதையாவது சமாளிக்கலாம்.. ஆனா நாங்க யாராவது கூடப்போனால் எங்களை பாக்குறவங்க யாராவது ஏன் போலீஸ் ஸ்டேஷன் போன? எதுக்கு போன? இந்த மாதிரி நிறைய கேள்விகள் வரும். கண்டிப்பாக சாந்தினி, நிரஞ்சனா போக முடியாது. அதுக்காக தாண்டா சொல்றேன்.. வேணும்னா அடுத்த தடவை நான் போறேன் ரெஸ்டாரன்ட்க்கு” என்று அவன் கூற..
“அடேய் அந்தாளே அடுத்த மீட்டிங் எப்ப எங்கன்னு மறந்தாலும் மறந்து இருப்பான் போல.. நீ ரொம்ப ரெடியா இருக்க.. என்னங்கடா எல்லாரும் என்ன வச்சு கேம் விளையாடுறீங்களா?? கொன்னுடுவேன்” என்று ஒரு விரலை காட்டி அவள் பத்திரம் வாசிக்க..
“சரி சரி டைம் ஆகுது கெளம்பு.. அப்புறம் அடுத்த போன்கால் வந்துட போகுது” என்று விபாகர் கிளப்பிவிட.. “அட ஆமாம் இல்லை!!” என்று தன் பேக்கை எடுத்துக்கொண்டு கர்ணாவையும் இழுத்துக்கொண்டு தன் ஃபேசினாவில் விரைந்தாள்.
“எனக்கு என்னமோ எஸ்.பி பண்றது கொஞ்சம் கூட சரியில்லைனு தோணுது” என்று சாந்தினி தன் தோழியின் வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டாள்.
“ஆமாம் சந்து.. அன்னைக்கு எங்க வீட்ல வந்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டார் தெரியுமா?” என்று அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் ஒன்றுவிடாமல் நிரஞ்சனா அவர்களிடம் பகிர்ந்து கொள்ள..
“ஏண்டி தெரியாமல் நடந்ததுக்கு உங்களையே இந்த பாடு படுத்தி பேசி இருக்காரு.. அப்போ கடத்துன எங்களை??” என்று அவள் நடுங்கி கொண்டே கூற..
“நான் நினைக்கிறேன் அப்படி எல்லாம் பெருசா ஒன்னும் அவருக்கு அந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. அதனாலதான் நாம் அன்னைக்கு கடத்துன போது அவரு அமைதியா இருந்திருக்கிறார். நான் விசாரிச்ச வரைக்கும் அவர் எல்லாம் டெரர் தான்.. அவரு நினைச்சா அப்பவே தப்பி இருந்திருக்கலாம். உங்களை இந்த பாடு படுத்தி இருக்காரு, ஆனா எங்கள இதுவரைக்கும் ஒன்னும் செய்யாமல் விட்டு தானே வச்சிருக்காரு. அவருடைய கேரக்டருக்கும் இப்போ நடந்துக்கிறதுக்கும் எங்கோ என்னவோ இடிக்குது எனக்கு” என்று விரிவாக கூற.. மற்ற மூவரும் அதை ஆமோதித்தனர்.
எஸ் பி யின் ஆபீஸ்க்கு இவள் நுழையும்போதே அங்கிருந்த அதிகாரி இவ்விருவரையும் அவர்கள் கையில் இருந்த பேக்கையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே “என்ன விஷயம்?” என்று அதிகாரத் தோரணையில் கேட்க..
எப்படி சொல்லுவாள் ‘எஸ்பி காபி சாப்பிட என்னை கம்பெனிக்கு கூப்பிட்டார்’ என்று அவன் கைகளை பிசைந்துக்கொண்டு நிற்க..
கர்ணாதான் “சார் எஸ்பி சாரை பாக்கணும்” என்றான் சற்று துணிச்சலை வரவழைத்துக் கொண்டு..
“அவரை பாக்க எதுக்கு அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆபீஸூக்கு வந்திருக்கீங்க” என்று அந்த அதிகாரி கேட்க..
“இல்லையே எஸ்பி சார் ஆபிஸ் இது தானே.. அதான் வந்திருக்கோம்” என்று இவன் விளக்கம் கூற..
“என்னை என்ன லூசு நினைச்சியா? கமிஷனர் ஆஃபீஸ் வந்துட்டு எஸ்பி சாரை பார்க்கணும்னு சொல்ற? எஸ்பியை பார்க்கனும்னா எஸ்பி ஆபிஸ் தானடா போகனும்.. ஏன்டா கமிஷ்னர் ஆபிஸ் வந்து எஸ்.பியை பார்க்கனும் எங்க உயிரை எடுக்குற” என்று அந்த அதிகாரி கத்த..
அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது இவர்கள் சொன்ன எஸ்பி வேற அந்த அதிகாரி சொல்கின்ற எஸ்பி வேற என்று!!
“அட ஆண்டவா!!” என்று தன் தலையில் அடித்துக்கொண்ட திவ்யபாரதி அந்த அதிகாரியை நோக்கி “சார் இவன் சொன்ன எஸ்பி நம்ம அஸிஷ்டெண்ட் கமிஷ்னர் சூரியபிரகாஷ் சாரை தான்” என்று அவள் விளக்க..
“ஓ.. நீ அப்படியே வரியா!!” அந்த இன்ஸ்பெக்டர் கூறினாலும், “ஏன்டா உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்.. நாங்களே அவரை சாருனு வார்த்தைக்கு மரியாதை கம்மியா கூப்பிடுவது இல்ல.. நீ எஸ்.பி சார்னு ஷார்ட்டாக கூப்பிடுற” என்று அதற்கும் அவர் கோபப்பட..
“ஏண்டா குண்டோதரா.. அவரு ஏன்டா கத்திரி வெயில் நிக்குறவரு மாதிரி பேசுறாரு” என்று அருகில் இருக்கும் கர்ணாவின் காதை அவள் கடிக்க.. “சும்மா இருடி” என்று அவளை முறைத்தவன், அந்த அதிகாரியைப் பார்த்து “இல்ல சார் அசிஸ்டன்ட் கமிஷனர் கிட்ட தான் பேசணும். அவரைத் தான் பார்க்கணும். கொஞ்சம் அலோ பண்ணுங்க சார்” என்று பவ்யமாகவே கேட்டான்.
அதற்குள் இவர்கள் வந்ததை அறிந்து வேறொரு ஆள் மூலம் அவர்களை உள்ளே வரவழைத்தான் எஸ்பி..
திவ்யாயோடு கர்ணாவும் சேர்ந்து உள்ளே செல்ல, வந்திருந்த அந்த உதவியாளரோ “சார் மேடமை தான் வர சொன்னாங்க.. நீங்க இங்க வெயிட் பண்ணுங்க” என்று கர்ணாவை தவிர்த்துவிட்டு திவ்யாவை மட்டும் உள்ளே அழைத்து சென்றான். வழக்கம்போல் உள்ளே பொருமி கொண்டு வெளியே முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் இந்த களவாணி..
உள்ளே அறைக்கு செல்ல அவனோ, அவளுக்கு எதிரிலிருந்த இருக்கையை காட்டி விட்டு அவளை சற்றும் பாராமல் ஏதோ ஒரு கேசில் மூழ்கியிருந்தான். அவ்வப்போது அந்த கேஸ் டீடைல் பைலை பார்ப்பதும் அருகிலிருந்த ஒரு டைரியில் குறிப்பெடுத்துக் கொள்வதுமாக இருக்க அவனுக்கு பின்னே இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அதனால் இவளால் வாய்திறக்க இயலாமல் அமைதியாகவே அவன் எழுதுவதை பார்த்தவளுக்கு அவனது சீரான நகங்கள் அழுக்கில்லாமல் வனப்புடன் காணப்பட்டதை பார்த்து “பார்ட்டி செம ஃப்ர்பெக்ட் போல” என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு உதட்டை பிதுக்கிக் கொண்டாள்.
அதேநேரம் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒற்றைக் கண்ணடித்துவிட்டு மீண்டும் புதைந்துகொள்ள அவளுக்குத்தான் விதிர்விதிர்த்து போனது. இவனுக்கு பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த மற்றவர்களுக்கோ அது சற்றும் தெரியவில்லை.
“அரசு.. இந்த கேஸ் டீடைல்ஸ் ஃபுல்லா நான் அனலைஸ் பண்ணிட்டேன்.. நீங்க ஒரு தடவ முழுசா படிச்சிட்டு ப்ராசஸ் பண்ணுங்க” என்ற ஃபைலை அவனிடம் கொடுக்க.. அவனோ திவ்யபாரதியை பார்த்துக் கொண்டே தயங்கி நிற்க…
எஸ்.பியின் அழுத்தமான பார்வையில் பயத்தில் எச்சில் விழுங்கியவாறு விரைத்த சல்யூட் அடித்துவிட்டு அவ்விடம் விட்டு சென்றனர் இருவரும். அதைப்பார்த்த திவ்யாவுக்கு ‘இவன் நெஜமாவே டெரர் தானா?’ என்று உள்ளே அல்லு விட்டது.
“அப்புறம்..” என்றவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு மேலுயர்த்தி நெட்டி முறிக்க.. அதில் அவனின் தேக்கு மர தேகம் காக்கி சட்டையும் தாண்டி வெளிப்பட, அதை ஆவென வாயை பிளந்து பார்த்தாள் திவ்யா. அவளின் பார்வையை அறிந்தவன் “க்கும்” என்று தொண்டயை சரி செய்ய, அவள் தலையை குனிந்து கொண்டாள். தலைக்கு பின்னால் கைகளை கட்டிக் கொண்டு அவளையே இலகுவாகப் பார்த்தவனை கண்டதும் உள்ளுக்குள் தடதடவென ரயில் வண்டி ஓடியது.. ‘இவன் கோவமா பார்த்தாலே பரவால்ல போலவே.. இந்த பார்வை வீச்சை தாங்க முடியல’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த மணியை அடிக்க உதவியாளர் வந்தவுடன் அவரிடம் “இரண்டு டீ” என்று சொல்லிவிட்டு மேசையில் கைகளை வைத்து தன் தாடையை தாங்கியவாறு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
எதற்கு இப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான் என்று அவளுக்கும் தெரியவில்லை!! இவனுக்கும் புரியவில்லை!!
திவ்யபாரதியோ மிகவும் டென்ஷனாக இருந்தாள். தனது துப்பட்டாவை விரலில் சுற்றுவதும் பின் அவிழ்பதுமாக திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்க.. அதைப் பார்த்தவனுக்கு முகத்தில் லேசாக புன்னகை. அவளிடம் சீண்ட மனம் விரும்பியது ஆனால் அதே சமயம் அவள் டென்ஷனை குறைக்கவும் தோன்றியது.
அவளை நோக்கி “பாரேன் உனக்கு வந்த வாழ்வை!! உள்ள கம்பிக்கு பின்னாடி டீ குடிக்க வேண்டிய நீ.. இப்போ அசிஸ்டென்ட் கமிஷனருக்கு முன்னாடி உட்கார்ந்து டீ குடிச்சிட்டு இருக்க” என்று கூற..
அதில் விதிர் விதிர்த்துப் போய் அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் அப்பட்டமான பயம் தெரிந்தது. இதுவரை அவளது குறும்பு கோபம் அதட்டல் என்று அவள் முகத்தில் பலவகைப்பட்ட உணர்வுகளை பார்த்தவனுக்கு இந்த பயம் பிடித்தும் பிடிக்காமலும் போன்ற நிலை!!
அவனது கிண்டலில் சற்றே பயந்தாலும் அது அவனால் முடியாது என்று திடமாக நினைத்தவள் “நான் போகணும்” என்றாள் மெதுவாக..
அவளை பார்த்துக்கொண்டே சூடான டீயை மிக மிக மெதுவாக அவன் குடிக்க.. அவளோ அந்த டீயை தொடாமல் அமர்ந்திருக்க..
“ஒருவேளை நான் தான் ஊட்டி விடனும்னு எதிர்பார்க்கிறியோ?” என்று மிக அருகில் கேட்டு அந்த குரலில் அவள் வாரிச் சுருட்டி எழுந்திருக்க.. அவள் கைகளைப் பிடித்து இருக்கையில் அமர வைத்தவன், அவள் முன்னே இருந்த மேசையில் சட்டமாக அமர்ந்து கொண்டான்.
வசதியாக அமர்ந்து அவளைப் பார்த்தபடி டீயை ருசிக்க.. பார்வையோ அவளைத்தான் ரசித்தது.
“ஆமா உங்க அப்பா எந்த ஸ்டேஷன் தெரியுமா?” என்று அவன் கேட்க..
இதற்கு இதைக் கேட்கிறான் என்று தெரியாமல் அவள் விழித்தவாறு அவனை பார்க்க..
“தெரியாதா?” என்று அவன் மீதம் இருந்த டீயும் குடித்து முடித்து “சீக்கிரம் குடிச்சி முடி. அதுக்கு அப்புறம் உனக்கு டீ குடிக்க டைம் இருக்கோ இல்லையோ?” என்றவாறே எழுந்தான்.
அவசர அவசரமாக கையில் இருந்த டீயை சூட்டோடு சூடாக அவள் குடித்து முடிக்க..
அவளது செர்ரி உதடுகளையும் கீழிறங்கிய தொண்டைக் குழியையும் பார்த்தவாறு அவன் அமர்ந்து இருக்க.. இம்முறை கண்களில் கூலர் போடாத காரணத்தினால் அவனது பார்வையை பார்த்தவள் சட்டென்று தனது துப்பட்டாவை ஒழுங்காக போட..
அவள் சும்மா இருந்திருந்தாலாவது அவன் பார்வையோடு விட்டிருப்பான்.. இப்போது ஒழுங்காக துப்பட்டாவை சரி செய்கிறேன் என்று அவனது பார்வை அங்கே தான் மேய்ந்தது.
டீ கிளாசை முன்னால் இருந்த டேபிளில் வைத்தவள் “நான் கெளம்புறேன் சார்” என்று எழுந்து கொள்ள சட்டென்று அவள் இடையில் கை கொடுத்து தன் இடையோடு நெருக்கியவன், “ஆமாம் இப்போ எதுக்கு அந்த துப்பட்டாவை சரி செஞ்ச?” என்றான்.
அவள் எவ்வாறு சொல்லுவாள் நீ அங்கு பார்த்ததனால் நான் சரி செய்தேன் என்று!!
“நேத்து என்ன இது போல துப்பட்டா எல்லாம் போட்டுட்டு வந்தியா? இல்ல என்னை கடத்துன போது சுடிதார் போட்டுயிருந்தியா? அப்பல்லாம் மட்டும் ஞாபகம் வரலையா?
நான் நார்மலா தான் இருக்கேன்.. ஆனா இந்த போலீச பொறுக்கியா பாக்கணும்னு நீதான் பிடிவாதமா இருக்க போல.. அதனால இனிமே உன்கிட்ட பொறுக்கியா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவனின் விரல் நெற்றியிலிருந்து அவளது முகத்தை அளவெடுத்து இதழில் வந்து இளைப்பாற.. கீழ் உதட்டை அழுத்தமாக பற்றி இழுத்தவன்.. “இந்த கடை டீ கொஞ்சம் கசப்பாக இருந்துச்சு இல்ல?” என்று கேட்க..
அவன் என்ன செய்ய வருகிறான் என்று புரியாமல் பதட்டத்தோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் இப்போது ஆமாம் சாமி போட்டு, இங்க இருந்து எஸ்கேப் ஆன போதும் என்ற நிலை..
எனவே மேலும் கீழும் தலையை ஆட்டி “ஆமாம்” என்க..
“அப்ப என்ன செய்யலாம்? இங்க ஸ்டேஷன்ல சுகர் எல்லாம் கிடையாது.. அதனால..” என்றவன் அடுத்த நிமிடம் அவளது கீழ் உதட்டை தன் நாவை கொண்டு தடவி இதழ்களால் சப்பியவன்.. பின் தன் நாவை உள்ளே இழுத்து சப்பு கொட்டி “நவ் சீம்ஸ் பெட்டர்” என்று அவளை விடுவித்தான்.
(சும்மா இருக்கிறவனா.. ஏன்மா சும்மா சும்மா சீண்டுற)
ஒரு வினாடிக்குள் இதழை சுவைத்து விடுவித்தவனை கண்டு அவள் பதறி அடித்து விலக.. நேற்று பட்டும் படாமல் உரசிய இதழ்கள் இன்று அழுத்தமாக படிந்து விலக, அவன் அதரங்களின் வெம்மை, அதில் அவள் உடலில் தோன்றிய மெல்லிய நடுக்கம் நிலை கொள்ளாமல் அவள் தவிக்க.. அவனோ அவளை சாதாரணமாக பார்த்து “நீ வீட்டுக்கு போ.. டைம் ஆயிடுச்சு பாரு” என்று கூலாக ஆங்காங்கே கசங்கி இருந்த தனது காக்கி சட்டையை நீவி விட்டவாறு சொன்னான்.
“நான் உங்களை கடத்துனது தப்புதான்.. அதுக்காக இப்படியா என் பர்மிஷன் இல்லாம என்னை.. என்னை.. நீங்க.. நீங்க..” என்று அவளுக்கு நாக்கு தந்தியடிக்க அவனைப் பார்த்து முடிக்க முடியாமல் திணறினாள்.
“நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா.. உன்னால எனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான விஷயங்களெல்லாம் கிடைக்காமல் போயிடுச்சு.. இனிமே பொண்ணு பார்க்கணும்.. இந்த பொண்ணை எனக்கு பிடிக்கணும்.. அதுக்கு அப்புறம் எங்களுக்குள் எல்லாம் செட்டாக வேண்டும்.. அப்புறம் எங்களுக்கு கல்யாணம் நடக்கணும்.. அதுக்கு இன்னும் எவ்வளவு செலவாகும்.. உன்னை போல யாரும் வந்த கடத்தாமல் இருக்கணும் முக்கியமா.. ஷப்பா சொல்லும்போது எவ்வளவு மூச்சு வாங்குது பாரு.. எல்லா நடந்ததற்கு அப்புறம்தான் என் வைஃப் கூட காப்பியோ டீயோ ரொமான்டிக்கா குடிக்க முடியும்.. அது வரைக்கும் எனக்கு நீதான் கம்பெனி கொடுக்கனும்” என்று அவன் நீண்ட நெடிய விளக்கம் கொடுக்க அதில் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“அதுக்காக.. இப்படியா..” என்று தன் கீழ் உதட்டை அழுத்தமாக தன் கைகளால் தேய்ந்து கொள்ள அவனோ வெகு சுவாரஸ்யமாக அவள் செய்கை பார்த்து கொண்டிருந்தான்.
“பிடிக்கலையா?” என்று அவள் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு அவன் கேட்க..
அந்த சூழலுக்குள் சிக்காமல் இருக்க முடிந்த மட்டும் தனது கண்களைத் திருப்பிக் கொண்டாள் திவ்யா.
மீண்டும் “பிடிக்கலையா?” என்று கனிந்த குரலில் அவன் கேட்க.. அந்த குரலில் என்ன இருந்தது என்று உணர அவளால் முடியவில்லை.
ஆனாலும் பிடிக்கவில்லை என்று இருபக்கமும் தலையாட்டி அவள் கூற..
அவனோ.. “நோ ப்ராப்ளம்.. உனக்கு புடிக்கலைன்னா திருப்பி கொடுத்துவிடு” என்றான் உதட்டில் சிரிப்பை மறைத்துக்கொண்டு..
அவன் சொன்னதின் அர்த்தம் முழுவதும் புரியாமல் “ஓகே சரி” என்று அவள் தலையை ஆட்ட.. இப்பொழுது சிரிப்பு அடக்குவது பெரும்பாடாக இருந்தது அவனுக்கு.
பின்தான், தான் சொன்னதின் அர்த்தம் புரிந்தது பொசு பொசுவென்று வேக வேகமாக மூச்சை இழுத்து விட்டவள், “நான் போறேன்” என்று அவனது அறைக்கதவைத் தாண்டி வெளியே சென்றாள்.
“அப்போதிலிருந்து அதை தான் சொல்லிக்கிட்டு இருக்க.. ஆனா போகாமல் என்னையைத்தான் சைட் அடிச்சிட்டு இருக்க”
என்று அவளிடம் குனிந்து கிசுகிசுக்க..
கால்களை சிறு பிள்ளை மாதிரி உதைத்துக் கொண்டு முகத்தை சுளித்தவாறு வெளியே சென்றாள்.
காலையிலிருந்து ஒரு கேசில் மிகவும் சோர்வுடனும் களைப்புடனும் இருந்தவன் அவளை சந்தித்த பிறகு அது எல்லாம் எங்கே சென்றது அவனுக்கு தெரியவில்லை. இன்னும் அவளிடம் சீண்டிப் பார்க்கவே மனம் ஏங்கியது. அதுவும் அவளின் செர்ரி பழ உதடுகளை சுவைக்க மனம் ஏங்கியது. மெல்ல தன் உதடுகளை தன் நாவினால் தடவிக் கொண்டான்.
தானா ஒரு பெண்ணிடம் இப்படி பழகுகிறேன் என்று அவனுக்கு தன் மீதே ஆச்சரியம்!! தன் கழுத்து பகுதியை நீவி விட்டுக் கொண்டே அவனும் அவளை பார்ப்பதற்கு வெளியே செல்ல எத்தனிக்க..
வேகமாக வெளியில் சென்றவள் அடுத்த நிமிடம் வேகமாக அவன் அறைக்குள் ஓடி வந்தாள். வந்தவள் வேகமாக அவன் மீது மோதி நிற்க.. ஏற்கனவே அவளை சீண்ட நினைத்தவன்.. “முன்னையே சொல்லியிருக்கேன் தானே.. கல்யாணம் ஆகாத கன்னி பையன் நான். ரெண்டு அடி தள்ளியே நில்லுனு” என்று கம்பீரமாக கூற..
அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையில் அவள் இல்லை.. “போனவ எதுக்கு இப்போ வந்த?” என்று அவன் கேட்க..
“அது.. வந்து..” என்று இழுத்தவள் பேச முடியாமல் கையை வெளியே காட்ட..
“யாரு.. யாரு.. அங்கே?” என்ற இவனும் தன் அறைக் கதவில் ஒரு கதவை மட்டும் லேசாக திறந்து வெளியில் எட்டிப் பார்க்க அவனுக்கு ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை..
பின் தன் மூச்சை இழுத்து சீராக விட முயன்றவாறு.. கையைக் காட்டி “ஐயப்பா.. ஐயப்பா” என்றாள்.
“எந்த ஐயப்பா?” என்று அவனுக்கு அப்போது புரியவில்லை..
“ஐயோ என் அப்பா!!” என்று அலறினாள்..
8
“ஐயப்பா.. ஐயப்பா..” என்றவள் அடுத்து “ஐயோ என் அப்பா” என்க.. அப்போதுதான் அவனுக்கு தன் அப்பாவை அவள் சொல்கிறாள் என்று புரிய சிரிப்பில் துடிக்கும் உதட்டை மீசைக்குள் மறைத்தவாறு.. “ஹோ மிஸ்டர் ஐயப்பன் வந்திருக்காரா? நான் தான் ஒரு கேஸ் விசயமா வரச் சொன்னேன் அவர.. மறந்துட்டேன்” என்று அவன் கூறி வாசல் கதவை திறந்து வெளியே செல்ல போக..
சட்டென்று அவன் கையை பிடித்து தடுத்து “நீங்கதான் வர சொன்னிங்களா எங்க அப்பாவா?” என்று அவள் திக்கித் திணற..
“உங்க அப்பா என் சர்க்கிள் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல தான் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். ஒரு முக்கியமான கேஸ் விஷயமா என்னை பாக்கணும்னு சொன்னாரு அதுக்கு தான் வர சொன்னேன்” என்றான்.
அதுவரை இருந்த பயம் மெல்ல கோபமாக மாறி “எங்க அப்பாவ வர சொல்லிட்டு கூடவே என்னையும் காபி குடிக்க கம்பெனிக்கு வர சொல்லியிருக்கீங்க நீங்க.. என்னை பார்த்துட்டா? ஏன் இங்க வந்த? எதுக்கு வந்த? ஏன் என்கிட்ட சொல்லாம வந்தேனு அவர் கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்லுவேன்?” என்று அவன் கையை பிடித்து இருப்பதை மறந்து அவள் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருக்க..
அவனோ மீண்டும் அவள் ஸ்பரிசத்தில் மெய் மறந்து நிற்க.. அவளது மெல்லிய தேகத்தின் தீண்டல்.. பதட்டத்தில் விம்மி தணியும் ஏற்ற இறக்கங்கள்.. அவளின் குண்டு குண்டு நேத்தரங்களின் நர்த்தனங்கள்.. நெஞ்சில் சுடும் அவள் மூச்சுக்காற்றின் வெம்மை.. தகித்தது உள்ளுக்குள் அவனுக்கு. ஆனால் இது எதுவும் அறியாமல் அவள் பாட்டில் தன் தந்தை பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் பேசிக்கொண்டே செல்ல..
தன் கரங்கள் கொண்டு அவள் வாயை பொத்தியவன், “ஷப்பா உன் வாய தொறந்தா இன்னும் மூடவே மாட்டியா.. நான் ஸ்டாப்பா போய்கிட்டே இருக்கு.. ஆமா நீ தான் உங்க அப்பாவுக்கு அளந்துதான் மரியாதை கொடுப்பேன் சொன்ன.. இப்ப எதுக்கு இவ்வளவு பயம்?” என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவன் கேட்க.. அவன் புருவத்தை ஏற்று இறக்கியது அவ்வளவு வசீகரமாக இருந்தது அந்த ரணகளத்திலும் அவள் ஜொள்ளும் குணம் மனதின் ஓரம் அதை குறித்துக் கொண்டது.
அவன் வாயை மூடி இருப்பதை மறந்து அவள் பேசிக்கொண்டே இருக்க.. மெல்லிய இதழ்கள் தீண்டிய அந்த குறுகுறுப்பில் சட்டென்று தன் கையை எடுத்தான்.
தன் உள்ளங்கையை பார்க்க அதில் அவள் அதரங்களின் ஈர எச்சங்கள்.. விரல்களால் அதை மெல்ல வருடினான். அவளோ அவன் நிலையை சற்றும் கண்டுக்கொள்ளாமல் அவள் பேசிக்கொண்ட சென்றாள்.
“மரியாதையை தான் அளந்து கொடுப்பேன் சொன்னேன், பயம் இல்லனு எப்ப சொன்னேன். அதுவும் எங்க அம்மாவோட தொடப்பக்கட்டன்னா எங்க அப்பாவோட பிஸ்டலோட பயம் ஜாஸ்தி எனக்கு” என்று முகத்தில் பயத்தை கொண்டு வந்து விழி விரித்து அவள் கூற..
“ஸ்ஸ்.. தப்பு பண்ணிட்டேனே முதல உங்க அம்மாவ வர சொல்லி இருக்கலாம் போலையே!!” என்று அவன் யோசித்த விதத்தில் பக்கத்தில் ஏதேனும் இருந்தால் அவன் தலையில் போட்டு உடைத்து விடலாம் என்று கொதிநிலையில் திவ்யா..
“அப்படியெல்லாம் என்னை அடித்து விட்டு என் ஆபீஸிலிருந்து போகமுடியாது” என்று உன்னை நான் அறிவேன் என்ற விதமாக அவள் அருகில் நெருங்கி நிற்க..
‘எப்ப பாரு கிட்ட கிட்ட நெருங்கி வரது.. இல்லை உதட்டை கடிச்சு சாப்பிட வேண்டியது.. கேட்டால் நான் கல்யாணம் ஆகாத கன்னிப் பையன் இரண்டு அடி தள்ளி நின்னு நமக்கு அட்வைஸ் பண்ண வேண்டியது’ என்று தனக்குத்தானே அவள் முணுமுணுத்துக் கொள்ள..
“என்ன சொன்ன கேட்கல?” என்றவன் அவள் காது அருகே நன்றாக குனிந்து, அவன் கற்றை மீசை உரச கேட்க.. அதில் அவளுக்கு குறுகுறுப்பு ஏற்பட விலகி நின்றாள். அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டே அவன் வெளியே சென்றான். அதற்குள் கர்ணாவை பார்த்துவிட்ட ஐயப்பன் அவனை நெருங்கி “ஏன்டா இங்க வந்திருக்க? அதுவும் கமிஷனர் ஆபீஸ்க்கு? எதா இருந்தாலும் என்கிட்டயும் அப்பாகிட்டேயும் சொல்ல வேண்டிய தானே.. நீங்களே போலீஸ் ஸ்டேஷன் வர அளவு பெரிய மனுஷங்களா ஆயிட்டீங்களோ.. இல்ல ஏதாவது சோசியல் சர்வீஸ் பண்றேன்னு எக்கு தப்பா ஏதும் செய்து எவனாவது உங்க மேல கம்ப்ளைன்ட் பண்ணிட்டானா? சொல்லுடா? வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க?” என்று அவர் பாட்டுக்கு அவனிடம் கேள்விக்கணைகளை தொடுத்து கொண்டே இருக்க அக்கணைகளை தாங்க முடியாமல் சோர்ந்து தான் போனான் கர்ணன். இதுக்கு அவளே பரவாயில்லை என்று மனதுக்குள் நினைத்தான்.
அவர் இன்னும் அவனைத்தான் பார்த்துக்கொண்டே நின்றிருக்க “இப்ப என்னத்த சொல்லி சமாளிக்க? இந்த நேரம் பார்த்து டக்குனு பொய் பேச வர வர மாட்டேங்குதே!! அவ்வளவு நல்லவன் இல்லையே நானு?? எல்லா ஸ்டார்டிங் ட்ரபுள்” என்று அவரை பாவமாக பார்த்துக் கொண்டு மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க.. “என்னடா மைண்ட் வாய்ஸ்ல பேசிகிட்டு இருக்கியா? அந்த கேடியோட சேர்ந்து நீயும் பயங்கர கேடி ஆகிட்ட? வாய திறக்குறியா இல்ல அங்க இருக்கிற லத்திய எடுத்து உன் வாயில குத்த சொல்லவா?” என்று அவர் முறைப்புடன் என்று கேட்டார்.
“இல்ல மாமா.. வந்து திவ்யா.. திவி” என்று அவன் இழுக்க..
“என்னடா ஆச்சு அவளுக்கு?” என்று பெற்றவராக பதறினாலும்.. “கண்டிப்பா மத்தவங்களால இவளுக்கு எந்த ஆபத்தும் வந்திருக்காது. இவளாள தான் மத்தவங்களுக்கு வரும்” என்று சேர்த்து சொல்ல.. அதே நேரம் அங்கு வந்த எஸ்பி ஐயப்பன் சொன்னதை கேட்டு “மகளை சரியாக கணித்து வைத்திருக்கிறார்” என்று சிரித்துக் கொண்டான்.
எஸ்பிஐ பார்த்த நொடி “இவரை பார்க்க தான் மாமா திவ்யா வந்தா” என்று அவன் போட்டு உடைக்க..
ஐயப்பனும் எஸ்பிக்கு விறைப்பாக சல்யூட் ஒன்றை அடித்து விட்டு “எதற்காக தன் பெண்ணை இவன் வர சொன்னான்?” என்று புரியாமல் அவனை நோக்க..
எஸ்பியோ படு கேஷூவலாக “திவ்யபாரதி உங்க பொண்ணா ஐயப்பன்? எனக்கு தெரியாதே!!” என்று அசால்டாக தோளை குலுக்கி சற்று தள்ளி இருந்த அவளை கையசைத்து கிட்டே வர சொன்னான்.
போலீசை கண்டாலே திருடனுக்கு கதிகலங்கும் அதிலும் தேள்கொட்டிய திருடனுக்கு?? அந்த நிலையில்தான் கர்ணனும் திவ்யாவும் நின்றிருந்தனர்.
அடக்கப்பட்ட சிரிப்புடன் கண்களில் குறும்பு கூத்தாட திவ்யாவை பார்த்தவன், “மிஸ்டர் ஐயப்பன் தான் உங்க அப்பாவா? என்கிட்ட நீ சொல்லவே இல்லையே” என்று வெகுநக்கலாக கேட்டுவிட்டு “அப்புறம் நாளைக்கு பார்க்கலாம்” என்று அவள் அப்பா முன்னேயே சொல்ல… கர்ணாவுக்கு ஐயோ என்று இருக்க.. திவ்யாவோ அதிர்ந்து அவனை பார்த்தாள்.
ஐயப்பன் ஏட்டாக இருந்த காலம் தொட்டே சூரியபிரகாஷை நன்கு அவருக்கு தெரியும் பெண்கள் விஷயத்தில் அவன் ருஷ்யசிங்கரே!!
தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்ததும் தப்பு செய்யாமல் இருப்பவனே நேர்மையானவன் என்று கொள்கை கொண்டவர் ஐயப்பன். அவரும் இதே துறையில் பல ஆண்டுகளாக இருப்பவர் தானே.. எத்தனை தவறான பெண்களை இல்லை சந்தர்ப்பவசத்தால் மாட்டிக் கொள்ளும் பெண்களை நிறைய அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்வதை கண் கூட பார்த்திருக்கிறார். பெண்ணை பெற்றவராக அப்போது அவர் தவித்தாலும் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் அமைதியாகவே அதை கடந்து விடுபவர். இன்று தன் பெண்ணை இவன் நாளை பார்ப்போம் என்று சொன்னது கொஞ்சம் கூட உறுத்தல் இல்லை அவருக்கு. ஏதோ விஷயத்தில் இவள் மாட்டியிருக்கிறாள் அதற்காகத்தான் அவர் கூட்டி வந்திருக்கிறாரோ இல்லை வேறு ஏதேனும் தகவல் பெறுவதற்காக கூட்டிவந்து இருப்பாரோ என்று அந்த அப்பாவி ஐயப்பன் நினைத்துக் கொண்டார்.
தன் பெண்ணே ஒரு களவாணி.. இவனோ அவளுக்கு எல்லாம் பெரிய களவாணி என்று அறியாமல்!!
இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்த ஐயப்பனை பார்த்த எஸ்பி “திவ்யபாரதியை என் நின்னு போன கல்யாணத்துல இருந்து தெரியும்” என்று அவன் கூற விதிர்விதிர்த்து போனாள் திவ்யா. கர்ணாவோ தொப்பலாக நனைந்த தனது சட்டையில் தனது முகத்தை வேகவேகமாக துடைத்துக் கொண்டான்.
‘விஷயம் ரத்னாவுக்கு சென்றது என்றால் கண்டிப்பாக இன்னைக்கு தொடப்பக்கட்ட பூஜை கன்ஃபார்ம்’ என்று பயத்தில் கண்களால் எஸ்பிஐ பார்த்து “சொல்லாதே!!” கெஞ்சிக் கொண்டிருந்தாள் திவ்யா.
இந்த கெஞ்சல் கொஞ்சல் ஆக மாறினால் எவ்வாறு இருக்கும் என்று அந்த காவல் ஆணையரின் மனம் எண்ணியது!!
அதே சமயம் அவளை மாட்டி வைத்து விட்டால் அப்புறம் எங்கனம் அவளை சந்திப்பது என்று நினைத்தவன், “அது ஒன்றும் பெரிய விஷயமில்லை ஐயப்பன்.. புதுசா காவலன் ஆப் மாதிரி வேறு ஒரு ஆப் பண்ணலாம்னு எனக்கு ஒரு ஐடியா. அதனால இவங்க கம்ப்யூட்டர் இன்ஜினியர் தானே.. சில டீட்டைல்ஸ் கேட்பதற்காக கூப்பிட்டுயிருந்தேன்” என்று அவன் கேஷுவலாக சொல்லி இன்னும் நீ என் பிடியில் தான் என்று அவளைப் பார்த்து தன் விழிகளால் கூற..
‘அப்பாடி இப்போதைக்கு தப்பித்தோம்’ என்ற நிம்மதியில் மற்ற இருவரும். ஐயப்பனுக்கு மிக சந்தோசம். “சோசியல் சர்வீஸ்னு ஊரை சுத்துனாலும்.. எக்ஸாம்ல நாலஞ்சு அரியர் வச்சாலும்.. இந்த மாதிரி ஆப் கிரியேட் பண்றது ஹேக் பண்ணுவதுல எல்லாம் இதுல அடிச்சுக்க ஆளே கிடையாது சார்” என்று தன் பெண்ணின் பெருமையை அவர் வாரி வாரி இறைக்க..
‘போச்சு போச்சு ஏற்கனவே அவன் செய்கிற நக்கல் பத்தாதுன்னு நான் செய்றதெல்லாம் இவர் சொல்லி என்னை மாட்ட வைக்கிறார்” என்று மனதுக்குள் தன் தந்தையை கடிந்தவாறு அவனைப் பார்த்து சிரித்து வைத்தாள் திவ்யா.
“குட்.. அப்ப நாளைக்கு என்னை வந்து நீங்க மீட் பண்ணுங்க. எப்போ எங்கேனு நான் உங்களுக்கு சொல்கிறேன்?” என்று அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான்.
“அதெல்லாம் கண்டிப்பாக வருவா சார்” என்று தன் பெண்ணுக்காக தானே வாக்குறுதியை கொடுத்து வருங்கால மாப்பிள்ளைக்கு இன்னும் வசதி செய்து கொடுத்தார் ஐயப்பன்.
“சரி.. உள்ள வாங்க” என்று அவரை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று அமர்ந்தவன் அவரைப் பார்த்து “என்ன விஷயம்” என்று கேட்க..
“சார் அந்த குழந்தை மேட்டர்தான்” என்று ஆரம்பிக்க “விரிவா சொல்லுங்க ஐயப்பன்” என்ற இதுவரை இருந்த சைட் அடிக்கும் மோடை தற்காலிகமாக ஆப் செய்து கடமை தவறாத காவலனுக்கு மோடுக்கு ஆன் ஆனான் இந்த இணை ஆணையன்.
“வியாசர்பாடியில் உள்ள அப்பார்ட்மெண்டில் பத்து வயசுப் பெண் குழந்தையைக் காணோம் சார்.. குழந்தையோட பேரண்ட்ஸ் ரெண்டு பேருமே வேலைக்கு போறவங்க.. குழந்தையை அவங்க பாட்டி மற்றும் வேலை செய்ற பெண்ணோட பாதுகாப்புல விட்டுட்டுப் போயிருக்காங்க.. எப்போதும் அந்த பாட்டி தன் பேத்தியை கீழே உள்ள பிளே கிரவுண்டுக்கு ஈவினிங் ஒரு டூ ஹவர்ஸ் விளையாட அழைச்சிட்டு போவாங்க.. அன்னைக்கு அந்த மாதிரி விளையாடிட்டு இருந்தா. அப்புறம் காணோம்.. அங்கிருந்த சிசிடிவி புடேஜ் ஃபுல்லா செக் பண்ணிட்டேன் சார். ப்ளே கிரவுண்ட் சிசிடிவி கேமரா அந்தளவு கிளியரா இல்ல ஆனா அப்பார்ட்மெண்ட் என்டரன்ஸில் உள்ள செக்யூரிட்டி கிட்ட கேட்டாச்சு அங்கு உள்ள சிசிடிவி எல்லாம் செக் பண்ணிப் பார்த்தாச்சு. எந்த இன்பர்மேஷன் கிடைக்கல சார்.. அந்த அப்பார்ட்மெண்ட் பிரபல கன்ஸ்டிரக்ஷன் சுதர்மன் அவரோட தங்க நிவாஸ் சார்.. அவர் கொஞ்சம் பொலிடிசியன் சைடுல இருந்து பிரஸர் பண்றாரு. நாங்களும் எங்களால் முடிந்த அளவு அந்த சைட்ல பார்த்துட்டோம் எந்த இன்பர்மேஷன் என்னால கண்டுபிடிக்க முடியல. அதான் உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தேன் சார்” என்றார்.
சிறுது நேரம் அவர் சொன்னவற்றை அனைத்தையும் தன் மூளையில் ஏற்றி கண்களை மூடி ஒரு முறை அனைத்தையும் ஓடவிட்டு பார்த்தான். “ஓகே மிஸ்டர் ஐயப்பன்.. நாம் அந்த ஸ்பாட்டுக்கு போகலாம்” என்று அவரையும் அழைத்துக்கொண்டு அந்த தங்கம் நிவாஸ் அபார்ட்மெண்ட் நோக்கி விரைந்தான்.
பல அடுக்கு மாடிகளை கொண்டது அந்த தங்க நிவாஸ்.. அதிலும் ஏ பி சி டி என்று வரிசையாக 10 அடுக்குகளை கொண்டது.
ஒவ்வொரு அடுக்கிலும் தளத்திற்கு 6 வீடுகள் என 10 தளத்திற்கும் 60 வீடுகள்..
மொத்தமாக பத்து அடுக்குகளுக்கும் 600 வீடுகள் உள்ள ஒரு குட்டி சொசைட்டி போல இருந்தது அந்த தங்க நிவாஸ்…
பொறம்போக்கு நிலத்தையோ அல்லது ஏதோ ஒரு ஏரியை வளைத்துப் போட்டு இதை காட்டியிருப்பதை பார்த்த உடனே அவனுக்கு புரிந்து போனது. “இருக்கிற இடத்துல எல்லாம் வீட்டை வரிசை வரிசையாக கட்டி வைத்து விடுவார்கள், அப்புறம் மழை பெய்து தண்ணீர் போக இடமில்லை சாக்கடை போக வழி இல்லைன்னு சொல்லி நம்ம உசுரை எடுப்பானுங்க.. இவனுங்கள மட்டும் சொல்லி தப்பு இல்லை பணத்தை வாங்கிட்டு இதுக்கெல்லாம் அப்ரூவல் கொடுக்கிற அதிகாரிகளையும் சேர்த்து சொல்லணும்” என்று தன் கண்களால் அந்த இடத்தை அளவிட்டபடி அந்தப் பெண் காணாமல் போன டி அப்பார்ட்ஸ்மெண்டை நோக்கி சென்றான் சூரிய பிரகாஷ் கூடவே ஐயப்பனும்..
ஆறாவது தளத்தில் நான்காவது வீடு அவர்களது.. அந்தப் பெண்ணின் பெயர் சஞ்சனா. அவளது பெற்றோர் இருவரும் ஐடி துறையில் பணிபுரிபவர்கள். நேரம் காலம் இல்லாமல் வேலை பார்த்து தங்களுக்கு என்று ஒரு சொந்தமாக வீட்டை வாங்கி குருவிக்கூடு போல் வாழ்ந்த சிறிய குடும்பம் அவர்களது.
இன்று பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பத்தைப் போல தான்.. கடனை உடனை வாங்கி வீட்டை வாங்குவது இல்லை கட்டிவிட்டு அந்த லோனை அடைக்க வேலை வேலை என்று ஓடி தன் உடல் நலத்தையும் சுற்றத்தையும் சொந்தங்களையும் பார்க்க நேரம் இல்லாமல் ஓடும் அவசரமான அவலமான வாழ்க்கை..
சந்துரு மற்றும் ராகவி அவர்கள் முன்னே எஸ்பி அமர்ந்திருக்க.. இவன் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருக்க, அந்த ஹாலின் ஓரத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தவாறு தன் பேத்தியின் போட்டோவை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த மூதாட்டி..
“சொல்லுங்க சந்துரு” என்றான்.
“சர்.. நாங்க ஐடியில் தான் வேலை பார்க்கிறோம். அரேஞ்ச் மேரேஜ் தான். எனக்கு அப்பா இல்லை அம்மா எங்க கூட தான் இருக்காங்க. காலையில நாங்க போன வரதுக்கு எப்படியும் சாய்ந்திரம் இல்ல நைட்டு ஆகிடும். சில சமயம் நைட் டியூட்டி கூட இருக்கும், அது வேலையைப் பொறுத்து.. எங்க பொண்ணு காணாம போனா அன்னைக்கு எப்பொழுது போல எங்க அம்மா அவளை ஸ்கூல் விட்டு வந்தவுடன் ஸ்னாக்ஸ் கொடுத்து கீழ இருக்கிற பிளே கிரௌண்ட் இல் விளையாட கூட்டிட்டு போகியிருக்காங்க.. இவளை போல கிட்டத்தட்ட நிறைய பசங்க விளையாடுவாங்க.. எங்க அம்மா அங்கு உள்ள சேர்ல உட்காந்து மத்தவங்களோட பேசிட்டு இருப்பாங்க.. இவ விளையாண்டு முடிச்சு நேரா எங்க அம்மா கிட்ட வந்து விடுவா.. அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்து ஹோம் ஒர்க் அப்படின்னு நேரம் போகும்.. ஆனா அன்னைக்கு.. அன்னைக்கு…” என்று அழுதவன் பேச முடியாமல் தவித்தான். ஏற்கனவே அருகே அழுது கொண்டிருந்த மனைவியோ என்னும் பெருங்குரலெடுத்து அழுக.. “என் பொண்ணு கிடைச்சிருவாளா சார்? இந்த காலத்துல என்னென்னமோ கேட்கிறோம்.. ரொம்ப பயமா இருக்கு சார். என் பொண்ணா உயிரோட கிடைப்பாளா??” என்று யாசகம் போல கையை உயர்த்திக் கேட்க, எஸ்பிக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அருகிலிருந்த ஐயப்பனுக்கு மனமெல்லாம் கலங்கி கண்களில் குளம் கட்டி விட்டது. ஆனால் போட்டு இருந்த காக்கி சட்டைக்காக தன் கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு விறைப்பாகவே நின்று கொண்டிருந்தார்.
அதன்பிறகு அவர்களிடம் மற்ற விவரங்களை எல்லாம் கேட்டுவிட்டு கீழுள்ள பிளே கிரவுண்டை ஒரு முறை சுற்றி வந்து பார்த்தான். எல்லா அப்பார்ட்மெண்டில் உள்ளது போல பிள்ளைகள் விளையாடுவதற்கு ஏதுவான அங்கே கட்டமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து வெளியே செல்வதற்கு எந்த வழியும் இருக்கவில்லை. பின் எப்படி அந்த குழந்தை மாயமாகி இருக்கும் என்று யோசித்துக் கொண்டே காவலாளியை பார்த்து கேமரா புட்டேஜை கேட்டான்.
மொத்தம் அந்த தங்க விலாஸ் அபார்ட்மெண்டுக்கு மூன்று வாயில்கள் இருக்கும். பெரும்பாலும் முதல் இரண்டு வாயில்களை மட்டுமே அனைவரும் பயன்படுத்தி இருக்க.. மூன்றாவது வாயில் யாரேனும் குடிவந்தால் அல்லது வீட்டை காலி செய்தால்.. தண்ணி வருவதற்கு என்று கனரக வாகனங்கள் போவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஐயப்பன் சோதித்தது இந்த இரு வாயில்களிலும் உள்ள கேமரா புட்டேஜை மட்டும்தான். மூன்றாவது வாயில் புட்டேஜையும் கேட்டு வாங்கியவன் எல்லாத்தையும் தன் பென் டிரைவில் காப்பி எடுத்துக்கொண்டு தன் அலுவலகத்துக்குச் சென்று விட்டான்.
முதலில் ஆப் செய்வது பற்றி ஐயப்பனுக்காக சும்மா பேசினானே ஒழியே எந்த ஐடியாவும் இல்லை. இந்த பிள்ளைக்கான போனதிலிருந்து அவன் மனதில் ஒரு தாக்கம் இதற்கு தேவையான ஒரு ஆப் செய்தால் தான் என்ன என்று நிஜமாகவே நினைத்து திவ்யபாரதியை அழைக்க.. அவள் எண் அந்தப்பக்கம் பிஸியாகவே இருந்தது.
இவனும் விடாது தொடர்புகொள்ள.. அவளும் அரை மணி நேரமாக தன் பஞ்ச பாண்டவர்களுடன் குரூப் காலில் இருந்தாள்.
வழக்கம்போல எஸ்பிஐ தாளித்து வறுத்து எடுத்துக்கொண்டு..
அடுத்த நொடி ஐயப்பனுக்கு அடித்தவன் திவ்யபாரதி அழைத்துப் பேச சொல்ல, அவரோ மிக பயபக்தியாக அந்த போனை எடுத்துட்டு வந்து மகளிடம் கொடுத்து பேசு என்று கொடுத்து விட்டுச் செல்ல..
“நாளைக்கும் சங்கீத் ரெஸ்டாரன்ட் ரூப் கார்டன்” என்று கூற..
“சார் நாளைக்கு சண்டே லீவு” என்று இவள் அலற..
“ஓஹோ.. அப்போ என் வீட்டுக்கு வந்துரு” என்று கேஷுவலாக கூறி வைத்து விட்டான்,
“வாட்ட்ட்ட்!!!!” இவள் அலறலை கேட்காமல்..
9
சூர்ய பிரகாஷ் அசால்டாக நாளை காலை என் வீட்டிற்கு என்னை பார்க்க வா என்று அழைப்பு விடுத்து விட்டு போனை அணைத்து விட..
திவ்யபாரதி அதிர்ச்சியாக கத்தினாள் நோ என்று.. அந்தோ பாவம்!! அவள் சொன்னதைக் கேட்க தான் அவன் லைனிலேயே இல்லையே!!
“யோவ் எஸ்பி.. என்னைக்காவது நீ என் கையில மாட்டாமலா போவ.. அப்ப இருக்கு உனக்கு” தினம் தினம் இவள்தான் அவனிடம் மாட்டுகிறாள் (கைகளிலா இல்லை இதழ்களிலா ) என்பதை மறந்து சவால் விட்டுக் கொண்டிருந்தாள்..
ஐயப்பன் வந்து போனை வாங்கி சென்று விட.. எப்படியும் அவன் எந்த நேரம் என்று சொல்லவில்லை தானே, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரவு வெகுநேரம் பிரண்ட்ஸ்களோடு அரட்டை பின்பு பயந்து பயந்து போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு வெப் சீரியஸில் பேய் நாடகத்தைப் பார்த்துவிட்டு அவள் தூங்கும் போது மணி இரண்டைத் தாண்டிவிட்டது.
மற்ற நாளளெல்லாம் காலையிலேயே ரத்னாவின் சுப்ரபாதம் அந்த வீட்டில் ஒலிக்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் போனாப் போகுதென்று விடுமுறை அளித்து விடுவதால் திவ்யாபாரதி நல்ல திவ்யமாக தூங்கி எழுவாள். ஆனால் அன்றைக்கும் வேட்டு வைத்தான் எஸ்பி!!
இவளைப் பற்றி தெரியும் ஆதலால் சிறிது நேரம் சென்று ஐயப்பன் போனுக்கு கால் செய்து நாளை காலையிலேயே திவ்யபாரதி அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வருமாறு உத்தரவிட.. ஐயப்பன் எஸ்பி மீது சூடம் ஏற்றி காட்டாத குறையாக பயபக்தியுடன் இருப்பவர்.. இன்று அவனே அழைத்து தன் பெண்ணின் உதவி தேவையென்றும் அழைத்துக் கொண்டு வருமாரும் சொன்னவுடன் கேட்கவும் வேண்டுமா ஐயப்பனின் பக்தியை..
அவன் சொன்ன எட்டுமணிக்கு இவர் ஐந்து மணிக்கே தன் மகளை எழுப்பி விட தயாராகி அலாரமாக மாறினார்.
தினமும் ரத்னாவின் சுப்ரபாதத்தை கேட்டு எழுந்து பழக்கப்பட்ட நம் திவ்யாவிற்கு ஐயப்பனின் அலராத்துக்கு கொஞ்சமும் அசைந்து கொடுத்தாள் இல்லை அவள்.. வேறுவழியின்றி அவர் தன் மனைவியின் உதவியை நாட வழக்கம்போல் ரத்னாவின் பேச்சில் அவள் தூக்க கலக்கத்துடன் எழுந்து, “ரத்துமா.. இன்னிக்கு ஞாயித்துக்கிழமை மா.. போ போ சீக்கிரம் எழ முடியாது. நான் நைட்டு 2 மணிக்கு தான் அம்மா தூங்கினேன்” என்று தூக்கத்தில் உளறிக்கொட்டி விட்டு மீண்டும் போர்வைக்குள் அவள் தஞ்சம் புக..
“அடி உங்க அப்பா அவருடைய ஹையர் ஆபீசர் வீட்டுக்குப் போகணும்னு சொல்லிட்டு கால்ல வெந்நீர் கொட்டாத குறையா நின்னுக்கிட்டு இருக்காரு.. சீக்கிரம் கிளம்பி போ” என்று திட்டிவிட்டு அவரும் விட்ட தூக்கத்தை தொடர்ந்தார்.
“என்னது ஹையர் ஆபீஸரா? யாராயிருக்கும்?” என்று அவள் யோசிக்கும் போதே அங்கு வந்த ஐயப்பன் “திவிமா சீக்கிரம் சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு வா.. கமிஷ்னர் சார் வீட்டுக்கு வர சொன்னார்” என்று அவளை பிடித்து தள்ளாத குறையாக அந்த நடுராத்திரியில் (ஐந்து மணிக்யெல்லாம் திவ்யபாரதி பொருத்தவரை நடுராத்திரி தான்பா) அதுவும் குளிர்ந்த நீரில் குளிக்க வைத்து கூட்டிக் கொண்டு சென்றார்.
தூக்கத்தில் வழிந்தவாரே தந்தையின் பின்னே வண்டியில் அமர்ந்து அவரை இறுக்க பிடித்துக்கொண்டு எஸ்பி வீட்டை நோக்கி சென்றாள்.
இவர்கள் அங்கே போய் சேரும் போது நேரம் 7.45 தான் ஆனது. அந்த வீட்டைப் பார்த்த உடனே “பார்ட்டி.. செம டப்பு பார்ட்டி தான் போல” என்று எண்ண தவறவில்லை திவ்யபாரதி.
அப்போது அந்த வீட்டின் தலைமை நிர்வாகி இவர்கள் யார் என்பதை அறிந்து அமரச்சொல்லி டீ வரவழைத்துக் கொடுத்தார்.
அதற்குள் திவ்யா தூங்கி வழிந்தவாரே இருக்க “திவி வந்த இடத்தில் இப்படி மானத்தை வாங்காதே.. கொஞ்ச நேரம் வெளியில் போய் நில்லு.. காத்துக்கு கொஞ்சம் தூக்கம் வராமல் இருக்கும்” என்று அவளை சிறிது நேரம் வெளியே அனுப்பி வைத்தார் ஐயப்பன்.
வெளியே சென்றவள் அங்கே இருந்த ஓவல் வடிவ தோட்டத்தைப் பார்த்து சிறிது நேரம் அதை வேடிக்கை பார்க்கலாம் என்று அது அருகே செல்ல அப்பொழுது உர்ர்ர் என்று சத்தம் கேட்டது.
“என்ன சத்தம்?” என்று அவள் சுதாரிக்கும் முன்னமே கண்ணு குட்டி சைஸில் ஒரு அல்சேஷன் நாய் வந்து அவளருகே அவளை அன்பாக பார்த்துக் கொண்டு நிற்க… அதில் ஜெர்க்கானவள்.. “இங்க பாரு.. எல்லா லேங்குவேஜும் எனக்கு பிடிக்காத வார்த்தை நாய் தான்.. நம்ம ரெண்டு பேரும் ஒரு சமாதான உடன்படிக்கை வந்துடுவோம்.. நீ அப்பாலிக்கா போய்டு.. நான் இப்பாலிக்கா போயிடுரேன் சரியா?” என்று அதனிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க.. அந்த அல்சேஷன் நாயோ இவளை முறைத்துக்கொண்டு நின்றது கூடவே உர்ர்ர் என்று சத்தம் வேறு..
“நான் என்னமோ இந்திய ஜனாதிபதி மாதிரியும்.. நீ என்னமோ பாகிஸ்தான் ஜனாதிபதி மாதிரியும் என்ன பாத்து முறைக்கிற.. குரைக்கிற.. இதெல்லாம் சரி இல்ல ஒழுங்கா போயிரு. அப்புறம் நான் கடிச்சா நீ தாங்க மாட்ட” என்று சொல்லி முடிக்கும் முன் அது அவள் மீது பாய எத்தனிக்க.. ஒரே ஓட்டமாக ஓடி அருகில் இருந்த சிறு கட்டை மீது ஏறி நின்று கொண்டாள்.
அதற்கு அதுவும் அவ்விடத்தை விட்டு நகராமல் அந்த கட்டையை சுற்றி சுற்றி வந்து அவளை பார்த்து குரைத்துக் கொண்டிருந்தது. காலையில் தனது உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு ஜாகிங் சென்று விட்டு வீடு திரும்பிய எஸ்பிக்கு அவனின் செல்ல வளர்ப்பன பைரவாவின் சத்தம் கேட்க..
“சாதாரணமாக சத்தம் போட மாட்டானே.. யாரு தெரியாதவங்க வந்திருக்கா?” என்றவாறு சத்தம் கேட்ட திசையை நோக்கி வந்தான்.
“ஏய் பைரவா ஏன் மேல் பார்த்து கத்திகிட்டு இருக்க” என்று கேட்டவாறு மேலே பார்க்க அங்கே அந்த சிறு கட்டையின் மீது கால்களை குத்தவைத்து உடம்போடு கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அசல் குரங்கு குட்டி போல திவ்யா..
பார்த்தவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் “ஏய் இங்கே என்ன பண்றே?” என்று கேட்க..
“ஏன் கேக்க மாட்டீங்க? நேத்து நைட்டு எங்க அப்பா கிட்ட என்ன சொன்னீங்களோ? அவரு நடுராத்திரி ஐஞ்சு மணியுனு கூட பாக்காம என்னை எழுப்பி, அதை விட அந்த குளுரில் என்னை குளிக்க வைத்து கூட்டிட்டு வந்துட்டாரு.. இங்கே வந்து பார்த்தா நீங்க வளர்க்குற இந்த நாய் என்னடான்னா என்னை டேஸ்ட் பண்ணித்தான் ஆகுவேன்னு அப்படியே கீழே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கு” என்று கூறினாள்.
“பைரவா ஷட் அப்” என்று அதற்கு கட்டளையிட மறுபேச்சின்றி அதை கேட்டு அமர்ந்து கொண்டது.
“நான் இருக்கும் போது அவன் ஒன்னும் செய்ய மாட்டான்.. நீ கீழே இறங்கு” என்று கூற..
“சொல்றது ஈசி ஆனா செய்றது ரொம்ப கஷ்டம்.. ஏறும்போது ஏதோ ஒருவித பயத்தில் மேலேயே ஏறிட்டேன் எப்படி இறங்குறதுனு தெரியலையே” என்று அவள் விழிக்க..
“குதி நான் பிடிச்சுக்கறேன்” என்றவாறு அவன் கைகளை நீட்ட..
“கரெக்டா புடிச்சிடிவிங்களா? என்னை பைரவாவுக்கு பிரியாணியாக விட மாட்டீங்கள?” என்று பயத்துடன் அவள் கேட்க..
“போனா போகுது பிடிக்கலாம்னு பார்த்தேன். ஆனால் உன் வாய் அடங்க மாட்டேங்குது. நீ அங்கேயே உட்காரு நான் போறேன்” என்று அவன் முறுக்கிக் கொண்டு செல்ல..
“அச்சச்சோ.. அச்சோ.. தெரியாம சொல்லிட்டேன் ப்ளீஸ் ப்ளீஸ் என்னை இறக்கி விடுங்க” என்று அவள் கெஞ்ச
“அது!!” என்றவாறு அவளை நோக்கி கையை நீட்ட.. அவன் கையைப் பிடித்து கீழே குதிக்க எத்தனித்தவள், தடுமாறி அவன் மீது ஆஆஆ என்று சத்தத்துடன் விழ.. ஒரு நிமிடம் அவளுடன் சாய பார்த்தவன் அடுத்த நிமிடம் தன் கால்களை வலுவாக ஊன்றி இறுக்கமாக அவளை அணைத்துக்கொண்டான்.
குதித்ததில் சற்றே மேலே ஏறியிருந்த குர்தியோ அவளது வழுவழுப்பான இடையை அவன் வருட வழிவகுத்தது. எஸ்பியின் இடதுக் கரமோ திவியின் இடுப்பை இறுக்கியப்படி மெல்லமாய் வருடி அவளின் மென்மையை சோதித்தது.
வலதுக் கரமோ முன்னேறி அவளின் பின்னங்கழுத்தை அழுத்தி பிடித்திருந்தது விழுந்து விடாமல்.. ஆனால் அது எல்லாம் சப்பைக்கட்டு தான். அவனுக்கோ மென்மையான பெண்மையின் ஸ்பரிசமும் கூடவே தன் மீது அவள் ஒட்டி இருந்த நிலையும் அவனை வெகுவாக சோதித்தது.
இவளை விட அழகிகளை பார்த்திருக்கிறான். கூட படித்திருக்கிறான்.. ஆனால், இவள் அவனைக் கடத்திப் போகையில் அவளோடு சேர்ந்து அவனின் இதயமும் போனது.. களவு போனதோ என்ற சந்தேகம் சில நாட்களாக நம் ஆணையருக்கு!! திவ்யாவோ வியர்வையில் குளித்த அவனின் ஆண் வாசமும் கூட அவனின் பெர்ஃப்யூம் வாசமும் அவள் நாசியைக் கடந்து இதயத்திற்குள் நுழைய முயற்சித்தது.. கூடவே அவனது திம்மென்ற நெஞ்சமும்.. திண்ணென்ற புஜமும் அவளை நிலை குலையச் செய்ய.. அவனிடமிருந்து பிரிய வேண்டும் என்ற நிலையை மறந்து போனாள் பாவையவள்.
பைரவாவோ இருவரையும் ஒரு முறை சுற்றி வந்து உர்ர்ர்.. வவ்.. வவ் என்று பல மாடுலேஷனில் குறைத்து தனது கோபத்தை காட்டி விட்டு இவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள் என்று அவர்களைப் பார்த்து முறைத்து விட்டு சற்று தள்ளிப் போய் படுத்துக் கொண்டது.
“மெதுவாக அந்த நாய் போயிடுச்சா?” என்று இவள் கேட்க..
“நீ போட்ட சத்தத்தில் அது பயந்து ஓடிப் போய் அரை மணி நேரம் ஆகுது” என்று அவன் அதரங்கள் கிசுகிசுப்பாக அவளது காதுகளில் தனது கற்றை மீசை உரச மூச்சுக்காற்று வெம்மை சேர்க்க உரைத்தான். அதில் அவளது இதயம் தாளம் தப்பி துடிக்க ஆரம்பிக்க.. அடுத்த நொடி “முன்னமே சொல்லி இருக்கேனே.. என் கிட்டே இருந்து இரண்டு அடி தள்ளி நின்னு பேசினு.. ஏன்னா..” என்று அவன் இழுக்க..
சட்டென்று அவனிடமிருந்து பிரிந்தவள் தன் கையை அவன் முன்னால் நிறுத்து என்பது போல காட்டி “ஏன்னா நீங்க என்ன கல்யாணம் ஆகாத கன்னி பையன் யாராவது உங்கள தப்பா பேசுவாங்க அதானே??” என்றவள் அவனை முறைத்துக் கொண்டே காலடிகளை வேகமாக தொப்பு தொப்பு என்ற வைத்து வீட்டிற்குள் சென்று தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அவள் போனவுடன் முகத்தில் தோன்றிய வசீகர புன்னகையை வழக்கம்போல் மீசைக்குள் மறைத்தவன் தலையை இடவலமாக ஆட்டி சிரித்துக்கொண்டே அவனும் வீட்டுக்குள் சென்றான்.
ஐயப்பனை பார்த்து தலையசைத்து வரவேற்று “டீ சாப்பிட்டீர்களா?” என்று கேட்க.. “இப்போது தான் சார்” என்று அவர் பேச அவர் அருகில் அமர்ந்தான். அப்போது அந்த வேலையாள் அவனுக்கும் டீ எடுத்துக் கொண்டுவந்து தர, அதை வாங்கி அவருடன் பேசிக்கொண்டே ஒருவாய் குடித்து விட்டு கீழே வைத்தான். அவர்கள் சஞ்சனா பற்றிய கேஸ் விஷயத்தை பேசிக் கொண்டிருக்கையில் அருகிலிருந்த கப்பை மாற்றி எடுத்து அவன் குடித்து விட, அது திவ்யாவுக்காக கொண்டுவந்து வைத்திருந்த சமயம் அவள் வெளியே சென்றதால் வேலையாள் எஸ்பிக்கு தரும்போது அவளுக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தான்.
பேச்சு சுவாரஸ்யத்தில் ஐயப்பனும் எஸ்பியும் இதை கவனிக்க வில்லை. ஆனால் திவ்யாவோ இது கவனித்துவிட்டு டீயை எடுக்காமல் இருக்க.. “டீ குடிக்கலையா?” என்று அங்கிருந்த டீயை காட்டி அவன் கேட்க..
அவளோ தந்தைக்கு தெரியாமல் அவனை பார்த்து “நீங்க குடிச்சிட்டு வச்சிருக்கீங்க.. எச்சில் எல்லாம் குடிக்கமாட்டேன்” என்று மெதுவாக கூறி, பின்பு “எனக்கு டீ வேண்டாம் சார்” என்று பொதுவாக உரைத்தாள்.
“சார் அம்மா அப்பா இல்லையா?” என்று ஐயப்பன் கேட்க..
“ஒரு கல்யாணத்துக்காக காலையிலேயே வடபழனி கோவில் வரைக்கும் போயிருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க” பேசிக்கொண்டே டீ கப்போடு எழுந்திருப்பது போல அருகே இருந்த திவ்யாவின் மீது சிந்தினான்.
“ஓஹ் சாரி” என்றவன் “கறை ஆகிடும் கெஸ்ட் ரூமில் அப்படியே இதை கிளீன் பண்றிங்களா?” என்று கேட்க..
டீ கறையை உடனே சுத்தம் செய்யாவிட்டால் கறை நன்றாக பிடித்து விடும், பின்பு யாரு ரத்னாவிடம் பூசை வாங்குவது என்று நினைத்தவள் சரி என்று அவன் பின்னே வர, கையில் டீ கப்புடன் அவளுக்கு அருகிலிருந்த விருந்தினர் அறையை காட்ட அவள் உள்ளே சென்று சுத்தம் செய்து வந்தாள்.
வெளியில் அவளுக்காக காத்திருந்தவன் அவள் வந்தவுடன் வாசலை மறைத்தவாறு இரு கைகளையும் கட்டிக் கொண்டு நின்றான். அவன் இன்று தோரணையே சரியில்லையே என்று திவ்யாவின் மண்டைக்குள் மணி அடித்தாலும் அமைதியாகவே அவனை கடந்து வெளியே செல்ல முயன்றாள். அவனோ வாசலை அடைத்துக்கொண்டு நின்று அவளைப் பார்த்தவன் அவளை இடிப்பது போல நெருங்கி வந்தான். “என்ன சொன்ன எச்சிலா?” என்று கேட்க..
“என்ன எச்சில்?” என்று முதலில் புரியாதவளுக்கு அப்புறம்தான் அவன் குடித்துவிட்டு வைத்த டீயை எச்சில் என்று இவள் குடிக்காமல் இருந்ததை குறிப்பிடுகிறான் என்று புரிந்து “ஆமா எச்சில் தான்” என்று முகம் சுளித்தாள்.
ஆனால் அவனோ அருகே வைத்த டீயை மிக நிதானமாக அவளைப் பார்த்துக் கொண்டு ரசித்து குடித்தவன், அடுத்த நிமிடம் தனது கைகளை கிண்ணங்களாக மாற்றி அவளது கன்னங்களை தாங்கி தான் குடித்திருந்த டீயை கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு ஊட்டி விட்டுக்கொண்டிருந்தான் இதழ்களோடு இதழ்கள் சேர்த்து…
அவளது நோ வேண்டாம் என்ற வார்த்தைகள் அனைத்தும் அவனது இதழ்களுக்கு உள்ளேயே சென்று மறைந்தது. மிக நிதானமாகவே அவளைவிட்டு பிரிந்தவன் “இனிமே வார்த்தையை சொல்றதா இருந்தா பார்த்து சொல்லு திவ்யபாரதி” என்று ஒற்றை கண்ணடித்துவிட்டு அவள் கன்னத்தை தன் முரட்டு கரங்களால் மென்மையாக வருடினான். பின்பு எதுவுமே நடக்காத மாதிரி ஐயப்பன் அருகில் சென்று அமர்ந்து கேஸ் பற்றி டிஸ்கஷன் நடத்திக் கொண்டிருந்தான்.
இவளோ முதலில் அதிர்ந்து பின்பு தனது வாயில் உள்ளதை துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்க அதேசமயம் திவ்யா என்று ஐயப்பன் அழைக்க வேகவேகமாக அவற்றை விழுங்கி விட்டே தந்தையிடம் வந்தாள்.
“சார் உன்கிட்ட தான் பேசவேண்டும் சொல்றாங்க திவிமா” என்று கூறி அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தார்.
“சொல்லுங்க சார்” என்று பற்களை நறநறவென்று கடித்தபடியே அவனை பார்த்தாள்.
“வந்ததிலிருந்து ஒண்ணுமே சாப்பிடலை. டீ பிடிக்கலைன்னா காபியது குடுக்கிறியா?” என்று உதட்டை நாக்கால் வருடியவாறு அவன் கேட்க.. “அடுத்த ரவுண்டுக்கு ஆட்டைய போடுறான.. கஞ்சி சட்ட” என்று புரிந்தவள் “வேணாம் சார்.. எனக்கு எதுவுமே வேணாம். நீங்க என்ன விஷயம் கேட்கனும் அதை கேளுங்க” என்றாள்.
அதற்குமேல் அவளை சோதிக்க விரும்பாதவனாய்.. இன்றைக்கு இது போதும் என்று முடிவு எடுத்தவனாய்.. மீண்டும் ரெமோ மோடில் இருந்து ஆபிஸர் மோடுக்கு மாறினான் அவன்.
“சீ.. மிஸ் திவ்யபாரதி இது ரொம்ப சீரியஸான விஷயம்.. காவலன் ஆப் தெரியும் தானே உங்களுக்கு.. உங்களுக்கு தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!! உங்களை விட அதை யாரும் ஜாஸ்தியா யூஸ் பண்ணி இருக்கவே முடியாது” என்று அவன் கூற..’ இவன் நக்கல் பண்றானா இல்லை உண்மையாகவே நம்மை பாராட்டுகிறானா?’ என்று புரியாமல் பே என்று அவனைப் பார்த்தாள் திவ்யபாரதி.
“லைக் வெய்ஸ்.. காவலன் ஆப் மாதிரியே நாம் ஒரு ஆப் கிரியேட் பண்ண போறோம். ஆனா அத போன்ல இன்ஸ்டால் பண்ற மாதிரியும் அட் த சேம் டைம் ஒரு சின்ன வாட்ச்ல இன்ஸ்டால் பண்ற மாதிரியும் நீயே கிரியேட் பண்ணி தரணும்.. இது புல் அண்ட் ஃபுல் சின்ன குழந்தைங்க காணாப் போனாலும் இல்லை அவர்கள் கடத்த முயற்சி செய்தாலோ இந்த ஆப்ல இருந்து மெசேஜ் போற மாதிரி செட் பண்ணனும்.. அந்த மெசேஜ் பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன்.. ரோந்துல இருக்கிற கார்ட்ஸ்.. இப்போதைக்கு இவ்ளோதான் நான் யோசிச்சேன். நீங்க ஆப் கிரியேட் பண்ண எனக்கு வேறு ஏதாவது யோசனை தோன்றினாலும் உங்கள காண்டாக்ட் பண்ணி நான் சொல்றேன்” என்று அவன் சொல்ல சொல்ல.. அவன் மீது முதல்முறையாக கொஞ்சமே கொஞ்சம் நல்ல எண்ணம் தான் திவ்யாவுக்கு வந்தது. ஐயப்பனும் சூடம் ஏத்தி கும்பிடு போட தயார் என்ற நிலையில் அமர்ந்திருந்தார்.
சிறிது நேரம் சஞ்சனா கேஸ் பற்றி அவரிடம் விவரித்து விட்டு அவர்களை அனுப்பி வைத்தான் சூரியபிரகாஷ்..
மறுநாள் மாலை வேளையில் சஞ்சனா கேஸ் விஷயமாக தனது சப்-இன்ஸ்பெக்டர் அரசுவோடு தங்க நிவாஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த எஸ்பிஐ தேக்கி நிறுத்தியது அந்தக் குரல்!! பார்த்தவன் அதிர்ச்சியடைந்தானா?? இல்லை அந்த குரல் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தானா??
எஸ்பி கே வெளிச்சம்!!
அந்தக் குரல் வேறு யார் அவனின் காதல் களவாணி திவ்யபாரதியோடதுதான்!!
10
ஐயப்பனும் திவ்யபாரதியும் சென்றபிறகு வெகு நேரம் கழித்து தான் சந்திர பிரகாஷூம் வாசுகியும் வீட்டிற்கு வந்தார்கள். தொழில் துறையில் சந்திர பிரகாசஷூக்கு வேண்டிய ஒருவரின் பையனின் திருமணம் அதற்குத்தான் சென்று வந்தது. வேண்டுதல் காரணமாக திருமணத்தை கோவிலில் நடத்தி இருக்க அதில் கலந்து கொண்டு வந்தவரின் முகம் தெளிவில்லாமல் இருந்தது வாசுகிக்கு..
பெரும்பாலும் இம்மாதிரி திருமணங்களுக்கு சென்று வந்தால் மகனை பார்த்து ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டு “என்னைக்கு இந்த மாதிரி நம்ம வீட்டுக்கு எல்லாரும் வர போறாங்க தெரியலையே” என்று சொல்லி விட்டுப் போவார். ஆனால் இன்று எதுவும் சொல்லாமல் அமைதியாக கடந்து சென்ற அவரை பார்த்தவாறு ஹாலில் அமர்ந்து இருந்தான் எஸ் பி..
அம்மாவின் சோர்வுக்கு காரணம் புரிந்துதான் இருந்தது. ஆனால் இது சில நாட்களில் தீரும் என்று நினைத்து அமைதியாக இருந்தானே ஒழிய.. அவர் பின்னோடு சென்று சமாதானம் செய்யும் பழக்கம் எல்லாம் அவனுக்கு இதுவரை கிடையவே கிடையாது.
சந்திரபிரகாஷூம் மகனிடம் சாதாரணமாக பேசியவாறு அருகில் அமர்ந்திருக்க… அறைக்கு சென்று உடை மாற்றி வந்து வாசுகியோ அவனை தான் முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
தந்தையிடம் பேசிக் கொண்டே இருந்தவன் “எதுக்கு இந்த முறைப்பு எல்லாம்?” என்று அன்னையை பார்க்காமலேயே வினவ..
“எல்லா பக்கமும் கண்ணு மட்டும் இருந்தா பத்தாது” என்று அவர் நொடித்துக்கொள்ள..
“வேற என்ன வேணுமாம்?” என்றான் இலகு குரலில்..
“பாக்குற கண்ணு அதை மூளைக்கு செலுத்தி கொஞ்சம் ரசிக்கவும் தெரியணும்” என்று அவர் வகுப்பு எடுக்க..
“அப்படி எதை யாரை ரசிக்கணுமாம்?” என்று அவன் இடக்காக கேட்க..
“உன்னை சுத்தி இருக்குற எல்லாத்தையும் தான்.. குறிப்பா பொண்ணுங்கள!” என்று அவர் நேராக விஷயத்திற்கு வர…
“எல்லா பொண்ணுங்களையும் நான் ரசித்துக் கொண்டே இருந்தேனா.. என்னைதான் புடிச்சி முதல்ல உள்ள போடுவானுங்க” என்று கடமை கொண்ட காவலன் எட்டி பார்க்க…
“பாக்குற எல்லா பொண்ணையும் ரசிக்க வேண்டாம். மனசுக்கு புடிச்ச பொண்ணு ரசிச்சு லவ் பண்ணலாம் தப்பு இல்ல” என்று கெஞ்சலாக அன்னை கேட்க..
சந்திரப் பிரகாஷோ “என்னடி நீ இப்படி மாறிட்ட? விட்டா நீயே உன் பையனுக்கு ஒரு பொண்ணை அரேஞ்ச் பண்ணி தந்திடுவ போல” என்று அதிர்ச்சியாக கேட்டார்.
புன்னகை என்ற பெயரில் மெதுவாக இதழை விரித்த எஸ்பிஐ “அதுக்கப்புறம் நீங்க மம்மி இல்ல.. மாமி ஆகிடுவீங்க” நக்கல் அடிக்க..
“ஏண்டா கல்யாணத்துக்கு உனக்கு பொண்ணு பாத்து அரேஞ்ச் பண்ணி கொடுத்தால் நாங்க மம்மி… அதுவே உனக்கு காதலிக்க ஐடியா கொடுத்து பொண்ணை அரேஞ்ச் பண்ணினா அதுக்கு பேரு மாமியா டா?.. என்னடா உங்கள் லாஜிக்!!உன்னையெல்லாம் பெத்ததுக்கு…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்…
“அவசரப்பட்டு ஏதாவது வாயை விட்டுடாத வாசு.. அது உனக்கே திருப்பி ரிப்பீட் ஆகும்” என்று எச்சரிக்கை செய்தார் கணவனாக மனைவியை காக்கும் பொருட்டு..
“ஆமா இதுல மட்டும் பாஸ்டா இருங்க” என்று அவர் நொடித்துக்கொள்ள..
கணவன் பார்வை காதலன் பார்வையாக மாறி “வேறு எதில் நான் ஸ்லோவா இருக்கேன்.. சொல்லு சரி பண்ணிக்கிறேன்” என்று அவர் சிரிக்க…
தன் அருகில் இருந்த சோபா குஷனை எடுத்து கணவனை தூக்கி கோபத்துடன் எறிந்தவர்.. “கல்யாண வயசுல பையன இருக்கான். அவனுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றதை விட்டுட்டு உங்களுக்கு இப்பதான் கொஞ்சல் வேண்டியிருக்கு.. ஏதோ பழமொழி சொல்வாங்களே ‘பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடானு’ அது மாதிரி இருக்கு” என்று கோபத்துடன் கூறினார். அதை எல்லாம் கண்டு கொண்டால் இவ்வளவு நாட்களில் குடும்ப வண்டி சரியாக செலுத்த முடியுமா என்ன!!
மனைவியே தவறு செய்தாலும் ‘தவறு என் பக்கம் தான் மா’ என்று சொல்லி சாரி கேட்டு குடும்ப வண்டியை நடத்தும் பெரும்பான்மையான கணவர்களை போலத்தான் சந்திரபிரகாஷ்..
“சரி விடும்மா விடுமா இனிமே வந்து இப்படி சொல்ல மாட்டேன்” என்று அவர் பவ்யமாக மாற..
நீ அவ்வளவு எல்லாம் நல்லவன் இல்லையே என்று கணவனை அறிந்த மனைவியாக அவர் பார்க்க… “இனிமே மகன் முன்னே சொல்ல மாட்டேன் சரியா.. எதா இருந்தாலும் நாம தனியா வச்சுப்போம் நம்ம ரூம்குள்ள மட்டும்” என்று அவர் கண்ணடித்து சிரிக்க.. அதுவரை இருந்த கோபம் வருத்தம் சோர்வு அனைத்தும் போக வாசுகி வதனம் வெட்கத்தைப் பூசிக் கொண்டது. ஒவ்வொரு தருணத்திலும் கணவனோ அல்லது மனைவியோ சோர்வோ மன கவலையோ சஞ்சலமோ படும் போது அவருடைய இணைகள் இம்மாதிரியான சிறு சிறு சீண்டல் கொஞ்சல் பேச்சுக்களால் அவர்களை அதிலிருந்து மீட்கும் பட்சத்தில் தான் அவர்களுடைய அன்னியோன்யமான தாம்பத்தியம் வெளிப்படுகிறது.
“போதும் போதும் உங்க பிரசாங்கம்” என்று கணவனை பார்த்து சிரிப்புடன் கூறியவர் மகனை பார்த்து.. “இப்பவே உனக்கு 30 வயசு ஆகுது.. நீ அந்த பொண்ணு சரியில்லை இந்த பொண்ணு சரியில்லை என்று பாக்குற பொண்ணை எல்லாம் ஆயிரம் குறை சொல்லிக் கொண்டே இருந்தே.. டைரக்டா உனக்கு அறுபதாம் கல்யாணம் தாண்டா” என்று மகனை எச்சரிக்க…
அதற்கெல்லாம் அசருபவனா அவன்!! அசால்டாக தன் தோள்களை குலுக்கி விட்டு “பார்த்துக்கலாம் பார்த்துக்கலாம்” என்று கூற…
அலட்சியமாக பேசும் மகனை பார்த்து “அறுபது வயசுல கல்யாணம் பண்ணிகிட்டேனா.. கூட சேர்ந்து வாழ முடியாது.. ரெண்டு பேரும் சேர்ந்து வாக்கிங் மட்டும் தான் போக முடியும்” என்று நக்கல் அடித்து விட்டு சென்று விட்டார்.
மற்றது மனதில் பதிந்தது இல்லை இவனுக்கு. தன்னுடைய வயது மட்டுமே அவனுக்கு பதிய.. அதேசமயம் இப்பொழுதுதான் நான்காம் ஆண்டில் இருக்கும் திவ்யபாரதியின் வயதையும் கணக்கிட்டான். எப்படியும் 21 அல்லது 22 தான் அவளுக்கு இருக்கும் கிட்டத்தட்ட இரண்டு பேருக்கும் எட்டு ஆண்டுகள் வித்தியாசம் அதுவே சற்று நெருடலாக இருந்தது அவனுக்கு..
‘அடேய் நீ அந்த பொண்ணை கல்யாணம் செய்துகொள்ள முடிவே பண்ணிட்டியா!!’ என்று அவனது உள்மனது அலற..
‘அப்படி தான் போல’ என்று தோளை குலுக்கி விட்டு அவன் கூற…
‘அப்ப தினம் தினம் தீபாவளி தான்.. உன் வீட்டுல தரமான சம்பவங்கள் இனி நடக்கும் எதுக்கும் உன் மூளையையும் உடம்பையும் பாதுகாப்பாக வச்சுக்கோ.. அவ டிசைன் அப்படி’ என்று அவனுக்கு ஆறுதல் அளித்து விட்டு உள்மனம் உள்ளே அடங்கிவிட்டது.
மறுநாள் கடமை அவனை உள்ளே இழுத்துக்கொள்ள அந்த நாள் முழுவதும் மிகவும் கொஞ்சம் பிஸியாகவே சென்றது அவனுக்கு. அன்று மாலை வேளையில் தங்க நிவாஸ் பற்றிய நிலையை அறிய அந்த ஏரியாவுக்கு தனது சப்-இன்ஸ்பெக்டர் அரசுவுடன் சென்றுகொண்டிருந்தான் எஸ்பி.
அவனது மனது மூளை இரண்டிலுமே ஆக்கிரமித்திருந்தது சஞ்சனா பற்றியே எண்ணங்களே… எங்கே சென்றிருக்கும் அந்த பிஞ்சுக் குழந்தை? யார் கையில் சிக்கி இருக்கும்? உயிரோடு இருப்பாளா?
எவ்வளவு குற்றங்கள் நடக்கின்றன.. உறுப்புகளை திருடுவதற்கும்.. பாலியல் வன்முறைகளும்… பிள்ளைகளை ஊனப்படுத்தி பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவற்கும்.. போதை மருந்து கடத்துவதற்கும் இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். சிறார்களின் வாழ்க்கையை கெடுப்பதற்கு என்றே பல கூட்டங்கள் சுற்றிக் கொண்டே தான் இருக்கின்றன இங்கே..
இதில் எந்த கூட்டம்? எதனால் இப்படி? என்று அவன் யோசித்துக் கொண்டே இருக்க சட்டென்று அவனது மனதையும் அறிவையும் தேக்கி நிறுத்தி அந்த ஒரு குரல்..
அவனை உள்ளிழுத்துக்கொண்டு ஆர்க்ஞிக்கும் காந்தக் குரல் அல்ல அது!! அவனின் உதட்டில் நூலளவு புன்னகையை தோற்றுவிக்கும் குரல் அது!! அக்குரலை கேட்டாலே ஒருவித குறும்பும் மகிழ்ச்சியும் மனதில் தோன்றும் அவனுக்கு.. அது திவ்யபாரதியின் குரல் தான்!!
இவர்கள் சென்றுகொண்டிருந்த பிரதான சாலையிலிருந்து சற்று கிளை பாதையில் இருந்து கேட்டது தான் அது.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் கிட்ட வம்பு இழுத்ததும் இல்லாமல் திமிரா வேற பேசுவ.. நான் யாரு நினைச்ச.. எங்க அப்பா யாரு தெரியுமா?? உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லிடுவேன் ஜாக்கிரதை!!” என்று ஒற்றை விரலை ஆட்டி பத்திரம் காட்டி அவள் எகிறி எகிறி பேசிக்கொண்டிருந்ததை தான் எட்டியிருந்த பார்த்துக்கொண்டிருந்தான் காவல்துறை ஆணையன்.
அருகில் இருந்த அரசு எஸ்பி யின் இந்த புரியாத நடவடிக்கையை புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.
எஸ்பியோ ஒரு இன்ச் கூட நகராமல் சீட்டில் அமர்ந்தபடியே எதிரே நடக்கும் இந்த கலவரத்தை தான் வண்டியை நிறுத்த சொல்லி பார்க்க.. அரசுக்கோ ‘ஏன் இப்படி அங்கே கிட்டே நெருங்கி என்ன ஏது என்று கேட்காமல் இவ்வளவு அமைதியாகவே இருக்கிறார்?’ என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
எஸ்பிக்கு தான் தெரியுமே திவ்யபாரதியின் துடுக்குத் தனத்தையும்.. சிறுபிள்ளை தனத்தையும். அதனால்தான் அவன் தலையிடாமல் அமைதியாக இருந்தது.
இப்பொழுது அவன் அவளுக்காக பரிந்து சென்றால் அவளின் இந்த சேட்டைகள் விண்ணை எட்டும் என்பது அவனுக்குத் தெரியும்.
“சார் அந்த பொண்ணு அன்னைக்கு நம்ம ஆபீஸ்க்கு வந்தவங்க தானே” என்று வாய் தவறி கேட்டு முறைப்பை பரிசாக பெற்று பின் அமைதியாக அமர்ந்திருந்தான் அரசு..
ஆனாலும் எதிரிலிருந்த அவன் கஜாவின் அடியாள் என்பதை அறிந்த அரசுக்கு அதற்குமேல் அமைதியாக இருக்க முடியாமல்
“சார் அவன் கஜாவோட ஆளு… எத்தன கேஸூல நாம உள்ள புடிச்சு போட்டாலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வெளியில வெளியில் வந்துடுவான். இந்த பொண்ணு அவன்கிட்டயே ஏதோ பிரச்சனை பண்ணிட்டு இருக்கு. அது அவ்வளோ நல்லது இல்ல சார்” என்று சாதாரண மனிதனின் மனதினை போல அவன் பேச..
“அரசு.. காக்கி சட்டையை போட்டு இருக்கீங்க போலீஸ் மாதிரி பிஹேவ் பண்ணுங்க.. பப்ளிக் மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க” என்று கோபமாக அவனுக்கு ஒரு ஷெட்டு வைத்துவிட்டு அமைதியாக அங்கே பார்க்க..
அதற்குள் திவ்யபாரதி சுற்றி சிறு கூட்டம் கூடி விட்டது. இவளோ அந்த ரவுடியிடம் பாய்ந்து பாய்ந்து பேசிக்கொண்டிருக்க கர்ணாவோ பயந்து அவள் பின்னே நின்று “வேண்டாம் திவி சண்டை வழக்காதே.. லூசுத்தனமா ஏதும் பண்ணாத. நாம போலாம்.. அவன பார்த்தாலே பெரிய ரவுடி மாதிரி இருக்கு. அப்புறம் எதுவும் பண்ண போறான்” என்று அறிவுரை கூறி அவளை தடுக்க பெரும்ப்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.
“சும்மா இருடா குண்டோதரா.. எல்லாம் உன்னால தான். ஒழுங்கா நீ வண்டியை இன்னைக்கு எடுத்துட்டு வந்து இருந்தேனா இந்த மாதிரி பண்ணாட எல்லாம் என்கிட்ட பல்ல இழிச்சி கொண்டிருக்குமா?” என்று அவன் தலையில் இரண்டு குட்டு வைத்து விட்டு, சுற்றியிருந்த கூட்டங்கள் கஜாவின் ஆளான அந்த ரவுடியை முறைத்துக்கொண்டு அடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க..
நம் சீனி வெடி சிங்காரியோ “இப்படித்தான் எல்லா பப்ளிக்கும் வேடிக்கை பார்ப்பீங்களா? நாளைக்கு உங்க வீட்டு பொண்ணுக்கு இந்த மாதிரி நடந்தாலும் நடக்கும். நல்லா வேடிக்கை பாருங்க!! அதுக்கு அப்புறம் இப்படி நடந்தது.. அப்படி நடந்தது.. குற்றம் நடந்தது என்னன்னு ஃபேஸ்புக் வாட்ஸ் அப்ல எல்லாம் பேசுங்க” என்று அவள் அவர்களிடமும் எகிற… நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கர்ணா “போதும் திவி.. நீ ரொம்ப பேசாத” என்று அவளை பிடித்து இழுத்து செல்ல முயல.. “அதெல்லாம் முடியாது டா.. என்ன விட்டுட்டு அவன இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்” என்று மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தாள் அவனிடம்..
சுற்றி இருந்தவர்களும் இவளது வீறுகொண்ட பேச்சில் சற்று வீரம் கொண்டு அந்த ரவுடியிடம் எக்குத்தப்பாக பேசி இரண்டு மூன்று பேர் கையை வைத்து அடித்துவிட, அதை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தாள் நம் நாயகி பின்னே வரும் ஆபத்தை அறியாமல்!!
அதற்குள் அவன் அங்கிருந்து ஓடி விட..
சுற்றி இருந்தவர்களும் கலைந்து சென்றனர்.
கர்ணா விடாப்பிடியாக அவளை இழுத்துக்கொண்டு ஆட்டோவை கைக்காட்டி நிறுத்தி, அதில் அவளைத் திணித்து வீடு நோக்கி சென்றான். ஆட்டோவை பாலோ செய்த எஸ்பி சிறு தூரம் சென்றவுடன் அதை ஓவர் டேக் செய்யுமாறு கட்டளையிட்டு அவர்களை வழி மறைத்தான்.
அவனைப் பார்த்ததும் முதலில் திகைத்தாலும், நேற்று அவன் நடந்து கொண்ட விதத்தில் அவள் வாய் திறக்காமல் அமைதியாக நின்று கொண்டாள் திவ்யா..
கர்ணா தான் அவனைப் பார்த்து “வணக்கம் சார்” என்று சொல்லி வழக்கம்போல சற்று தள்ளி நின்று கொண்டான்.
மெச்சுதலான பார்வையை கருணாவை நோக்கி வீசிவிட்டு திவ்யபாரதியின் அருகே சென்ற எஸ்பி..
“மனசுல என்ன பெரிய ஜான்சிராணி நினைப்பா உனக்கு.. என்னமோ அப்படி அவன் கிட்ட எகிறி எகிறி சண்டை போடுற.. ஆமா அவன் யாருன்னு தெரியுமா உனக்கு? நாளை பின்ன நீ தனியா போகும்போது ஆளுங்களை கூட்டிட்டு வந்து ஏதாவது பண்ணா என்ன பண்ணுவ?” என்று அவளை முறைத்தவாரே கேட்க..
“ஜான்சி ராணியாய் இருந்தா மட்டும்தான் இப்படியெல்லாம் சண்டை போடுனும்னு அவசியம் இல்லை சார்.. சாதாரண மனுஷியா இருந்தா கூட போதும். நாளைக்கு அவன் என்ன பண்ணுவான், இவன் என்ன பண்ணுவான்னு என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்னா இன்னைக்கு நடக்குற எதையும் தடுக்க முடியாது. அப்புறம் நீங்க எல்லாம் எதுக்கு இருக்கீங்க? காவலன் ஆப் எல்லாம் எதுக்கு வச்சிருக்கீங்க?” என்று இம்முறை அவனை மடக்கி விட்டு சந்தோஷத்தில் அவள் கேட்க..
“நாங்களோ இல்ல ரோந்துல இருக்கிற அதிகாரிகளோ வர்றதுக்குள்ள ஒரே ஒரு புல்லட் போதும் உன்னை போட்டு தள்ள”
என்று அவளை கூர்ந்து பார்த்து இவன் கூற..
அதில் சற்றே அவள் கண்கள் பயத்தை காட்டி பின்பு அலட்சியத்தை காட்டியது.
“ஒரு இடத்தில் தப்பு நடந்தால் தட்டிக் கேட்கலாம் அது தப்பு கிடையாது.. ஆனா அதை அறிவார்த்தனமா யோசிச்சு செய்யணும். இப்படி கண்டவன் கிட்டையும் கண்ட நேரத்துல கண்ட இடத்துல எல்லாம் சண்டை போடுவதற்கு பேரு தைரியம் கிடையாது.. முந்திரிக்கொட்டை தனம்.. காலேஜ் படிக்கிறனு தான் பேரு.. யாராரு கிட்ட எப்படி நடந்தக்கனும் கொஞ்சமும் இதுவரைக்கும் தெரியல” என்று பிடி பிடி அவளை விளாசித் தள்ளி விட்டான் அவன்.
ஆனால் அதை எல்லாம் காதில் கேட்டு அதன்படி நடந்துவிட்டால் அவள் திவ்யபாரதி அல்லவே!!
அதையும் அசால்டாகவே எடுத்துக் கொண்டு மறுபடியும் இதே வேலையை செய்து ஆபத்தில் தான் மாட்ட போகிறாள் என்பது அப்போது அவள் அறியவில்லை!!
அவளருகே நெருங்கியவன் அரசுக்கும் கர்ணனுக்கும் முதுகை காட்டியவாறு நின்று.. “இந்த வாய் ரொம்ப பேசுச்சு அப்புறம்..” என்றவன், அவளது கீழ் உதட்டை தன் விரல்களால் பிடித்து வலிக்க கிள்ளினான்.
தன் இதழ்களால் ஒற்றை விரலில் முத்தமிட்டு அதை அவள் உதட்டில் பதித்து விட்டு அடுத்த கணம் அங்கிருந்து அகன்று விட்டான்.
அவளோ உறைந்த நிலையில்.. அவனின் உதட்டின் ஈர எச்சில் தன் உதட்டில் இருப்பதாக தோன்ற அவசரமாக துப்பட்டாவால் துடைத்துக் கொண்டாள்.
ஜிப்பில் ஏறும் முன் இதை கவனித்த எஸ்பி அவளைப் பார்த்து ஒற்றை கண்ணடித்துவிட்டு ஏறி சென்றான்.
மறுநாள் காலேஜில் ஐவர் கூட்டம் கேண்டீனில் குழுமியிருக்க அப்போது நேற்று நடந்த விஷயம் அனைத்தையும் வருத்தத்தோடு அனைவரிடமும் பகிர்ந்து கொண்டான் கர்ணா. முதலில் அதிர்ந்தாலும் பின்பு சாந்தினி ஈக்னேஷ் நிரஞ்சனா அனைவரும் அவளுக்கு அறிவுரை கூற விபாகர் எதுவும் பேசாமல் மேலே ஷீட்டையே பார்த்துக் கொண்டிருக்க…
“நிறுத்துங்க.. நிறுத்துங்க.. நீங்க எல்லாம் இங்க அட்வைஸ் பண்றீங்க அவன் மட்டும் என்ன வேலை பார்த்துட்டு இருக்கான்” என்று திவ்யா கேட்க, மற்றவர்களும் அப்போதுதான் அவனை பார்த்தனர் அவன் அப்போதும் அதே நிலையில்…
ஈக்னேஷ் அவனருகே தன் இருக்கையை இழுத்துப்போட்டு அவனும் அதே போல மேலே பார்க்க, அங்கு ஒன்றும் தெரியாமல் அவன் காதருகே சென்று “அங்கே அப்படி என்ன தெரிகிறது ஆபீசர்” என்று கேட்க..
முதலில் அதிர்ந்து “தள்ளி போடா பக்கி” என்று அவனே தள்ளி வைத்துவிட்டு.. “வருங்கால ஜீனியஸ் அறிவாளியை இப்படித்தான் எல்லாரும் கேலி பண்ணுவீங்களா?” என்று அனைவரையும் பார்த்து முறைத்தான்.
“அப்படி மேலுள்ள ஷீட்டை பார்த்து யோசிச்சு என்ன பெரிய அரிய கண்டுபிடிப்ப நீங்க கண்டுபிடிச்சீங்க தெரிஞ்சுக்கலாமா ஆபீசர்?” என்று இம்முறை நிரஞ்சனா நக்கல் அடிக்க…
அதில் அனைவரும் வாய்மூடி சிரிப்பை அடக்க.. “சிரிப்பு வந்தால் சிரித்திடனும் இப்படியெல்லாம் அடக்கக் கூடாது” என்று சத்தமாக சிரித்து வைத்து விபாகர் கோபத்தின் செல்சியஸ் ஐ ஏற்றினாள் திவ்யா.
“போடி.. உனக்காக நான் யோசிச்சேன் பாரு” என்று அவன் தலையில் அடித்து கொள்ள..
“எனக்காக அப்படி என்ன யோசிச்ச நீ” என்று ஆர்வமாக அவன் முன்னே கையை ஊன்றி கேட்டாள் திவ்யா.
“அதுவா.. நேத்து அவ்ளோ நடந்து இருக்கு. எஸ்பி சாரு உன்னை தேடி வந்து எதுக்கு எச்சரிக்கை செஞ்சுட்டு போகனும்? அவர் பாட்டுக்கு போக வேண்டியது தானே? யோசி! யோசி!!” என்று அனைவரையும் பார்த்து இவன் கேட்க…
“அதானே!! அதானே? அதானே!!” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாடுலேஷனில் கேட்க..
“எனக்கு என்னமோ நம்ம திவ்யாவை எஸ்பி சைட் அடிக்கிறாரோனு தோணுது?” என்று போட்டு உடைக்க..
“என்னது?!!” என்று திவ்யா வாயை பிளந்து அதிர்ச்சியாய் நின்றாள்.
11
“அப்படியெல்லாம் இருக்காது.. ஏன்னா எஸ்பி ரொம்ப புத்திசாலி” என்று கர்ணன் சொல்ல..
“புத்திசாலி அறிவாளி எல்லாரும் சறுக்கிய ஒரே இடம் காதல்தான்!!” என்று காதலில் பிஹெச்டி முடித்தவன் போல விபாகர் பேச..
அடுத்த நிமிடமே “வாயை ஆசிட் ஊத்தி கழுவு டா.. உனக்கு வாயில நல்ல வார்த்தையே வராதா டா? யார யார் கூட கோத்துவிடுற.. எனக்கு வர்ற கோவத்துக்கு..” என்று அருகிலிருந்த லைப்ரரி புக் எடுத்து அவனை அடிக்க எத்தனிக்க..
“வேண்டாம் திவி.. வேண்டாம்.. அந்த புக்குல அவன அடிச்ச நீ கொல கேஸூல உள்ள போய் விடுவ” என்று எச்சரித்தான் ஈக்னேஷ்.
ஏனென்றால் அந்த புக்கின் கணம் அப்படி!! பின்பு அந்த புக்கை டேபிள் மீது வைத்துவிட்டு “இங்க பாரு ஏதாவது உளறிக்கொண்டு இருக்காம ஒழுங்கா வேலைய பாருடா” என்றாள் திவ்யா மனதில் எழுந்த படபடப்பை யாருக்கும் தெரியாமல் அடக்கிய படி,..
“அது இல்லடி!! நீ நல்லா யோசிச்சு பாரு.. இத்தனை பேரும் சேர்ந்துதான் அவரை கடத்தி இருக்கோம். ஆனால் எங்க யார் கிட்டயும் இல்லாத ஒரு நெருக்கம் ஒரு அக்கறை உன்மேல மட்டும் அவருக்கு ஏன் இருக்கு? அதை யோசித்து பாரு?” என்று விபாகர் சரியான ரூட்டுக்கு செல்ல…
கர்ணாவோ யோசனையானான்.
“டேய் அவர் என்கிட்ட ஒரு ஆப் ஒன்னு க்ரியேட் பண்ண சொல்லி கேட்டு இருக்காரு டா.. அதுக்காக கூட இருக்கலாம். நீங்களா ஏதாவது கிளப்பி விடாதீங்க?” என்று பயந்தாள் திவ்யா..
“ஏண்டி அவருக்கு என்ன? நல்ல ஹாண்ட்சமா சிக்ஸ் பேக் போட சும்மா ஜம்முன்னு இருக்காரு. கூடவே அசிஸ்டன்ட் கமிஷனர் போஸ்ட் வேற.. ஆக்ஷன் ஹீரோ மாதிரி” என்று சாந்தினி சிலாகித்து சொல்ல..
“இந்த மாதிரி ஹீரோஸ் எல்லாம் ரசிக்க மட்டும் தான் செய்யணும், கூட சேர்ந்து வாழனும் எல்லாம் முடிவு பண்ணினோம் நாம காலி” என்று திவ்யா அலற..
“நமக்கெல்லாம் சாப்டா பேங்க்லையோ இல்ல ஐடிலையோ ஒர்க் பண்ற ஆளுதான் சூட்டு ஆவான்” என்று திவ்யா கூற..
“சீச்சீ.. அது எல்லாம் பர்கர் பீட்சா மாதிரி பார்க்க நல்லா இருக்குமே தவிர நம்ம வாழ்க்கைக்கு ஒத்து வராது. இந்த மாதிரி கரடுமுரடா.. ஹைட் அண்ட் வெயிட்டா.. அதிரடியா இருக்கிற நம்ம ஊரு குழிப்பணியாரம் கொழுக்கட்டை மாதிரியான ஆளு தான் உடம்புக்கும் ஹெல்தி, வாழ்க்கையும் செம சுவாரசியமா போகும்” என்று கண்ணடித்து நிரஞ்சனா கூற…
“அடிப்பாவி!! இது எங்களுக்கு தெரியாம போச்சே.. இது தெரிஞ்சிருந்தா அதே மேடையில் அவரை தூக்குவதற்கு பதில் பொண்ண தூக்கி உன்னை அவருக்கு கட்டிவைத்து இருப்போமே!!” என்று விபாகர் வருத்தப்பட்டான்.
“அடிங்க.. அக்காவுக்கு பார்த்தவன நான் கல்யாணம் பண்ணிக்கிறதா?” என்று நிரஞ்சனா முறுக்கிக் கொண்டாலும்.. “அப்படியெல்லாம் அந்த எஸ்பிஐ யாரும் சம்மதிக்க வைக்க முடியாது. அவரே நினைச்சாதான் உண்டு” என்று பெருமூச்சு வேற விட..
“இவ பெருமூச்சு விடுற டிசைனே சரியில்லை.. எனக்கு என்னமோ ஒருதலையாய் எஸ்பிஐ லவ் பண்றாளோன்னு தோணுது” என்று கர்ணன் கூற.. “அப்படி இருக்குமோ?” என்று பயந்தும் “அப்படி எல்லாம் இருக்கக் கூடாது” என்று வேண்டுதலுடன் திவ்யா நிரஞ்சனாவை பார்க்க…
“டேய் சும்மா இருங்கடா.. நீங்க வேற எதையாவது பரப்பிவிடாதீங்க.. ஏற்கனவே அவர் விட்ட டோஸ்ல எங்க வீடே பயந்து நடுங்கி போய் கிடக்கு.. போதாகுறைக்கு எங்க அக்கா லவ் மேரேஜ் பண்ணுனதுனால இந்த முறை எங்க அப்பா பார்க்கிற பையன் தான் நான் கல்யாணம் பண்ணியே ஆகணும். நோ ஆப்ஷன்” என்று சிரித்துக்கொண்டே கூறி முடித்தாள். அப்போதுதான் திவ்யாவுக்கு மனதில் குலுகுலுவென்று ஜிகர்தண்டாவை குடித்தது போன்று பீலிங்..
“சரி நாம எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டோம்.. இங்க பாரு திவி அவரு லவ் பண்றாரா இல்லையா என்பதெல்லாம் விட்டுட்டு.. ஆனா அவருக்குப் உன் மேல ஒரு அட்ராக்ஷனோ இல்ல சாஃப்ட் கார்னர் என்னமோ ஒன்னு இருக்கு. அதனை யூஸ் பண்ணிக்க” என்று அவன் விவகாரமாக கூறி விபாகர் கண்ணடிக்க..
“என்னத்த யூஸ் பண்ண சொல்ற?” என்று புரியாமல் கேட்டாள் திவ்யா..
“நீயே சொல்லு.. நிறைய இடத்துல எங்க அப்பா பெரிய போலீஸ் அது இதுன்னு சொல்லி தானே எஸ்கேப் ஆகிற.. அதே மாதிரி ஏதாவது சோசியல் சர்வீஸ் பண்ணும்போது பிரச்சினை வந்ததுன்னா இனி நான் அசிஸ்டன்ட் கமிஷனர் எஸ்பியோட ஆளுனு சொல்லி விடலாம்” என்று தாறுமாறாக அவன் ஐடியா கொடுக்க,..
“இந்த ஐடியா கூட நல்லா இருக்கே!!” என்று கைதட்டி ஆர்ப்பரித்தாள் திவ்யபாரதி..
“இங்க பாரு இந்த நாரதர் சொல்றதெல்லாம் கேட்டு நீயே எதிலாவது போய் மாட்டிக்காத.. சொன்னா கேளு” என்று நண்பனாக கர்ணன் எச்சரித்தான்.
“போடா நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும்.. நிஜமாய் தல” என்று விட மற்றவர்களும் இதை ஒரு ஜஸ்ட் ஃபன் என்ற அளவில் எடுத்துக் கொண்டு அந்தப் பேச்சை அதோடு முடித்து விட்டனர்.
அவர்கள் எங்கே கண்டனர் இந்த முண்டகண்ணி முந்திரிக்கொட்டை நிஜமாலுமே இதை தான் செய்யப் போகிறாள் பின்பு மாட்டப் போகிறாள் என்று!!
ஐயப்பனின் போலீஸ் ஸ்டேஷனுக்கு அயனாவரம் அருகில் குப்பைகள் போடும் இடத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் வர.. அதுவும் 10 லிருந்து 12 வயதுக்குள் இருக்கலாம் என்று கூற அவருக்கோ அது சஞ்சனாவாக போயிருக்குமோ என்று சற்று வருத்தமாக இருந்தது.
அடுத்த நொடி அவர் எஸ்பியை தொடர்புகொண்டு விஷயத்தை பகிர..
“நீங்க முன்னாடி போய் அந்த பாடி இருக்கிற இடத்தையும் மற்றொரு விஷயத்தையும் அனலைஸ் பண்ணுங்க ஐயப்பன். நான் பின்னாடி வந்துகிட்டு இருக்கேன்” என்று கூறி போனை வைத்தவனுக்கும் அது சஞ்சனாவாக இருக்குமோ என்ற அதே எண்ணம்..
முதலில் சென்ற ஐயப்பன், அங்கே ஆங்காங்கே உடலில் காயங்களோடு விகாரமான தோற்றத்தோடு யாரோ ஒரு கொடூரனுக்கோ இல்லை கொடூர செயலுக்கோ பலியாகிப் போன அந்த சின்னஞ்சிறு மொட்டு கருகிப் போய் கிடந்ததை பார்த்து வருத்தமடைந்தார். என்னதான் காவல் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தாலும் இதுபோல சம்பவங்களை பார்க்கும்போது பெண்ணைப் பெற்ற தந்தையாக.. பெண்ணின் கணவனாக… சகோதரனாக.. சமூகத்திலுள்ள நற்குடிமகனாக… அவருக்கு கோபமும் அதேசமயம் அனுதாபம் ஏற்படும். எவ்வளவு சட்டங்கள் எவ்வளவு பாதுகாப்பு முறைகளை அரசு எடுத்தாலும் அதையும் தாண்டி நடக்கும் இதுபோல அசம்பாவிதங்களை தடுக்க இயலாத தங்களின் கையாலாகாத தனத்தை நினைத்து அவருக்கு ஆற்றாமையாக இருக்கும்.
முகங்களிலும் உடல்களிலும் பல இடங்களில் காயங்களா அல்லது கீறல்களா அல்லது வெட்டுகளா என்று அறியாவண்ணம் ரத்தம் வெளிவந்து உறைந்து போய் கருஞ்சிவப்பாக அவை மாறி அந்த பெண்ணின் உருவத்தையே மாற்றியிருந்தது.. அதனோடு கூட அந்தப் பெண் இறந்து எப்படியும் ஒரு நாளுக்கு மேல் இருக்கலாம் என்று அதிலிருந்து வந்த வாடையே சொல்ல அனைவரும் முக கவசத்துடன் அங்கிருந்த ஒவ்வொன்றையும் சோதித்துக் கொண்டிருந்தனர்.
எஸ்பி வந்து அந்த இடத்தை ஒருமுறை தன் லேசர் கண்களால் சோதனையிட.. பெரிதாக எதுவும் சிக்கவில்லை. ஆனால் இறந்து கிடந்த அந்தப் பெண் சுற்றப்பட்டிருந்த கவர் சற்று வித்தியாசமாக அவன் கண்களில் பட்டது. அதை பல கோணங்களில் இவன் தன் செல்லில் பதிவு செய்துவிட்டு அதன் மாதிரியையும் தனியாக சேகரித்து வைக்க சொன்னான் தன்னுடன் வந்த அரசுவிடம்.
அதற்குப்பின் போரன்சிக் ஆட்களும் அந்த இடங்களில் வந்து இந்த வழக்குக்கு தேவையான சாட்சியங்கள் தடயங்கள் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். இது சஞ்சனாவாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் தோன்ற அவளது பெற்றோருக்கு அழைத்து விஷயத்தை சொன்னார் ஐயப்பன்.
அடுத்த அரை மணி நேரத்தில் அலறியடித்துக் கொண்டு அவளது பெற்றோர்கள் வந்து இறங்கினர். வெள்ளைத் துணியால் மூடப்பட்டு கிடந்த அந்த பிரேதத்தின் அருகே கைகள் உடம்பெல்லாம் நடுக்கத்துடன் சென்றான் சந்துரு. அவன் மனைவியும் அவன் கை விளைவிலேயே முகத்தைப் புதைத்துக்கொண்டு “நம்ம பொண்ணா இருக்காது.. சந்துரு வேணாம்.. கண்டிப்பா இது சஞ்சுவாக இருக்காது..” என்று பிதற்றிக் கொண்டே இருந்தாள்.
மெல்ல அந்த முகத்தை அங்கிருந்த கான்ஸ்டபிள் நீக்க.. முதலில் பார்ப்பவர்களுக்கு சற்றும் அடையாளமே தெரியவில்லை. பின்பு முழுவதாக நீக்குமாறு எஸ்பி சைகை காட்ட, அந்த பெண்ணின் உடலை பார்த்த சந்துரு திரும்பி அவன் மனைவியை பார்க்க மெல்ல கண் திறந்து பார்த்தாள் அவள்.
அதை பார்த்த வினாடி தன் கணவனை கட்டிக்கொண்டு கதறி தீர்ந்துவிட்டாள் அப்பெண். ஐயப்பன் விரைந்து அவளருகே வந்து “என்ன சார் இது சஞ்சனா வா? உங்களுக்கு அடையாளம் தெரியுதா?” என்று சிறு வருத்தத்துடனே கேட்க..
“இல்லை சார்.. எங்க பெண் இல்லை. சஞ்சனா கண்டிப்பாக கிடையாது. இந்தப் பெண்ணின் உடல் வாகு சற்று மெல்லியதாக இருக்கு, எங்க பெண் கொஞ்சம் பூசினால் போல் தான் இருப்பா.. மேலும் இந்த முக அமைப்பு நீள்வட்டமாக இருக்கு, எங்க பொண்ணுக்கு கொஞ்சம் வட்டமாக இருக்கும் சார்.. கண்டிப்பா இது எங்க சஞ்சுவா இருக்க சான்சே இல்லை” என்று சந்துரு கூறி முடிக்க ஒரு ஆசுவாசம் பிறந்தது ஐயப்பன் இடத்தில்..
அதுவரை தங்கள் பெண்ணாக இருக்குமோ என்று பயந்து துடித்த மனது அது தங்கள் பெண் இல்லை என்று தெரிந்த பின்பு தான் எல்லாம் வடிய கதறினாள் சஞ்சனாவின் தாய்.. ஆனாலும் யாரோ ஒரு தாயின் மகள் தான் அந்த பெண்ணும் அல்லவா? அந்த எண்ணமும் அவர்களை வருத்தத்தான் செய்தது!!
அதன் பிறகு “வழக்கமான புரோசிஜரை செய்திடுங்க” என்று எஸ்பி கட்டளையிட.. வேகமாக வந்த ஆம்புலன்சில் அந்த அப்பாவி பெண்ணின் பிரேத உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஐயப்பனிடம் திரும்பிய எஸ்பி.. “அந்தப் பெண்ணோட பிளட் குரூப் டிஎன்ஏ இத கலெக்ட் பண்ணி ரிப்போர்ட் தனியா வச்சுக்கோங்க.. ஒரு மணி நேரத்தில் அந்த பெண்ணோட அட்டாப்ஸி ரிப்போர்ட் எனக்கு வேண்டும்” என்று கூறிவிட்டு அவன் சென்று விட்டான்.
அவன் மனதில் சஞ்சனா இல்லையென்றால் இந்த பெண் யாராக இருக்கும்? என்று கேள்வி எழ, தன் அறைக்கு திரும்பியவன் தன் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து ஸ்டேஷனுக்கு ‘சமீபத்தில் பெண் காண போனாள் என்று யாரேனும் கம்ப்ளைன்ட் கொடுத்தார்களா? என்று உடனடியாக விசாரிக்க செய்து எனக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும்’ என்று கட்டளையிட்டான் அவன்.
“எல்லா ஸ்டேஷனுக்கும் இன்பார்ம் பண்ணிருங்க” என்று அதிகாரப்பூர்வமாக உரைத்தான்.
பல கொலைகளை பார்த்திருந்தாலும், இவனே சில ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி இருந்தாலும் இம்மாதிரியான பிஞ்சுகளின் கொடூர மரணத்தை காணும் போது அந்த கல்லுக்குள்ளும் ஈரம் கசிந்தது.. குழந்தை என்றும் பாராமல் கொடூரமாக அவளை கொன்ற அந்த கயவன் மட்டும் இந்நேரம் எஸ்பி கையில் சிக்கினால், அக்காலத்தில் வழங்கிய மாதிரி கடுமையான கொடூரமான தண்டனையை கொடுப்பானே ஒழிய, கண்டிப்பாக சிறையில் தள்ளி தண்டனை வாங்கி தர மாட்டான். இவனது பாணியே தனிதான்!!
குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை குற்றவாளிகளை திருத்தி நல்வழிப் படுத்துவதற்கு மட்டுமே.. இது போல அரக்கன்களுக்கும் கொடூரன்களுக்கும் இம்மாதிரி சிறை தண்டனைகளை வழங்கி சுகபோகமாக அவர்கள் சிறையில் காலம் தள்ள வேண்டுமா என்ன?? கண்களை மூடி இருந்தாலும் அவன் கண்ணுக்குள் கனல் கொதித்துக் கொண்டுதான் இருந்தது.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவரும் தீப்பிழம்பாக அந்த கொடூரன்களை தாக்க தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தது!!
இவன் யோசனையோடு தலையை இருக்கையில் சாய்ந்து கண்மூடி அமர்ந்து இருக்க ஃபேக்சில் செய்தி வந்ததாக அவனிடம் வந்து கொடுத்து விட்டு சென்றார் அந்த ஸ்டேஷனில் வேலை புரியும் கான்ஸ்டபிள் ஒருவர்.
ராயபுரத்தில் சேர்ந்த மீனவ தொழிலாளி ஒருவரின் மகள் இரண்டு வாரத்திற்கு முன்பாக காணாமல் போயிருந்தது அதில் தெரியவந்தது. உடனடியாக அந்தப் பெண்ணின் போட்டோவை வரவழைத்து பார்த்தவனுக்கு அது இறந்த அந்தப் பெண் என்று தீர்மானமாக தெரிய, அந்த மீனவ தொழிலாளிக்கு உடனடியாக தகவலை கொடுக்கச் சொன்னான் எஸ்பி.
மீன் பிடிக்கும் தொழிலை செய்யும் அந்த கூலி தொழிலாளி மாரியப்பனுக்கு இரண்டு குழந்தைகள் பெரியவள் மாலினி சிறியவன் மணிகண்டன். மனைவி உயிரோடு இல்லை.
அவனை அழைத்து விசாரிக்க சொல்ல..
“இரண்டு வாரங்களுக்கு முன்ன நான் கடலுக்கு போயிட்டேன் சார். என் பையன் ஸ்கூலுக்கு போயிட்டான். என் பொண்ணு படிக்க போகல வீட்லதான் வீட்டு வேலையை பார்த்துட்டு இருப்பா.. கடலுக்குப் போனால் எப்படியும் ஒரு நாள் ரெண்டு நாளா ஆயிடும். அந்த முறை போயிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது என் பையன் மட்டும் அழுது கிட்டு இருந்தான். அக்கா காணலனு என்கிட்ட சொன்னான். அக்கம் பக்கத்தில் உள்ளவங்ககிட்ட கேட்டபோது எல்லாரும் தேடிப்பார்த்தோம் தெரியலன்னு சொன்னாங்க.. நானும் எனக்கு தெரிஞ்சு இடத்திலெல்லாம் தேடிப் பார்த்தேன் சார். எங்க ஏரியாவை விட்டு என் பொண்ணு எங்கேயும் போகமாட்டா.. அப்புறம்தான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன்.. என் பொண்ணு இப்படியா வந்து சேருவா என்கிட்ட” என்று தன் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார் அந்த தாயுமானவர்.
அவரின் வாக்குமூலத்தை வாங்கி எஸ்பியிடம் ஒப்படைத்தார் ஐயப்பன். இருவருக்குமே புரிந்தும் புரியாத நிலை..
ஏதோ ஒரு குரூப் தான் இவ்வாறு செய்கிறது என்று அவர்களுக்கு புரிந்துதான் இருந்தது.
இன்னும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அவன் கைகளுக்கு வரவில்லை. வந்தப்புறம் தான் இது எதற்காக? எதனால் செய்யப்பட்ட கொலை? என்று தீர்மானமாக கணிக்க முடியும் என்று காத்திருந்தான் வேங்கை என..
இந்த ஒரு வாரமாக சஞ்சனா மற்றும் மாலினி வழக்குகளில் இவன் பிஸியாக இருந்ததினால் திவ்யபாரதியை அவனால் காண முடியவில்லை. எப்பவாது நேரம் கிடைக்கும் போது இரவில் கால் செய்தால் ஒன்று அவளுடையது பிஸி என்று வரும் இல்லை அடித்து அடித்து ஓய்ந்து போய்க் கிடக்கும். இவனுக்கு பதிலுக்கு அழைக்கும் எண்ணமே அவளுக்கு வரவே வராது..
திவ்யா வெளியே “அப்பாடி.. ஒரு வாரம் இவன் தொல்லை இல்லாமல் நிம்மதியாக போய்கிட்டு இருக்கு.. எதுக்கு வழியில போற சனியன் இழுத்து பனியனுக்குள்ள விடனும்.. திரும்ப போன் பண்ணினால் அவன் ஏதாவது வில்லங்கமா சொல்லுவான் செய்வான்.. அதனால் அடக்கிய வாசி திவ்யா” என்று
நினைத்தாலும் நண்பர்கள் சொன்னதை காதில் ஏற்றவள் மெல்ல காதல் கொண்டாள்.. கள்ளம் புகுந்த மனசு ஏக்கம் இருந்தாலும் தகுதி இருக்கோ என்று மறுகி வலிய பேசுவதை தவிர்த்தாள்.
அவளும் ஒரு வாரமாக அவ்வப்போது போனை கையில் எடுப்பதும் அவனுக்கு நம்பரையும் பார்ப்பதும் மட்டுமே, அதற்கு மேல் அவளுக்கு தைரியம் வரவில்லை அழைக்க.. அவளுடைய சோசியல் சர்வீஸ் செய்யவும், கூடவே கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் டே சேர்ந்து கொள்ள நண்பர்களோடு அதிலும் பிஸியாக சுற்றி கொண்டிருந்தாள்.
நீர் பூத்த நெருப்பாக மனதின் அடியில் எஸ்பியின் நினைவு தான்.
கல்லூரி கட் அடித்து விட்டு அன்று மதியம் இவர்கள் அனைவரும் ஒரு படம் பார்த்துவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்த நேரம், வழக்கம்போல் கர்ணாவும் திவ்யாவும் ஒரே வண்டியில் வந்து கொண்டிருக்க அப்போது அங்கே.. ஒருவனை ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருந்தது. சுற்றி இருந்தவர்களும் அதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்தபடியும் அதை கடந்து சென்ற படியும் இருக்க.. நம் நாயகி தான் ஜான்சிராணி ஆயிற்றே!! வம்பை வழியே சென்று விலைக்கு வாங்கும் ரகம்!! அதுவும் சோசியல் சர்வீஸ் என்ற பெயரில்!!
இப்பொழுதும் சும்மா இராமல் எதற்கு அடிக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்க செல்ல.. ஏற்கனவே அங்கிருந்த ரவுடிகளை பார்த்த கர்ணாவுக்கு மனதில் திக்கென்று இருந்தது. இவள் தப்பாக ஏதும் வாய்விடும் முன்னும் இவளைப் பிடித்து இழுக்க, அந்த குண்டோதரனின் பிடியெல்லாம் அசால்டாக தள்ளிவிட்டு அவர்கள் அருகில் சென்றவள்,
“உங்களுக்கு எல்லாம் அறிவு இருக்கா டா? தடிமாடு மாதிரி இருந்துகிட்டு ஒரு அப்பாவிய போட்டு இந்த அடி அடிக்கிறீங்க?” என்று வாண்ட்டாக போய் சிக்கினாள்..
அந்த அடிவாங்குபவன் இவர்களிடம் கடன் வாங்கிவிட்டு இப்போது தருகிறேன் அப்போது தருகிறேன் என்று ஏமாற்றி வந்துகொண்டிருந்தான். கடன் கொடுத்தவன் அவனிடம் வசூலிக்க முடியாமல் திணறி கடைசியாக கஜாவின் துணைகொண்டு இவனிடம் வசூலிக்க முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில்தான் நம் நாயகியின் என்ட்ரி.. அந்தக் கூட்டத்தில் ஏற்கனவே இவளிடம் பல்லைக் காட்டி அடி வாங்கியவனும் நின்றிருக்க இதுதான் சமயமென்று அவளை வளைத்துக் கொண்டனர் அவர்கள்..
“அவனே ஒரு பொறம்போக்கு கசுமாலம்.. வாங்கன துட்ட திருப்பி கொடுக்காம டமாய்க்கும் பன்னாட.. அவனுக்கு நீ சப்போட்டு பண்ணிகிட்டு வந்துகினியா.. அப்போ அவன் கொடுக்க வேண்டிய துட்ட நீ கொடுத்துட்டு போ” என்று அவர்கள் அவளை ஒரு மாதிரியாக மேலும் கீழும் ஆராய்ந்து கொண்டு நக்கலாக கேட்க..
‘இவளோ தெரியாம வந்து சிக்கிக் கொண்டோமோ?’ என்று நினைத்துக்கொண்டு “எவ்வளவு?” என்று வெளியில் பயத்தை காட்டாமல் கேட்க..
“ஹான்.. அவன் வாங்கிய துட்டு மூனு லட்சம் அதுக்கு வட்டி ஒரு லட்சம்.. அந்த வட்டிக்கு வட்டி இன்னொரு ஒரு லட்சம்.. எங்களுக்கு பேமண்ட் ஒரு லட்சம்.. ஆக மொத்தம் ஆறு லட்சத்தை எடுத்து வைச்சிட்டு நீ போய்க்கினே இரு” என்று அந்தக் கஜா கூற..
“அவ்வளவா?” என்று அதிர்ந்து வாயை திறந்தப்படி நின்று கொண்டிருந்தாள்.
“அண்ணாத்த.. இந்த பார்ட்டிதான் அன்னைக்கு என்ன பப்ளிக்ல மாட்டி அடி வாங்க வைச்சது, இவள சும்மா விட கூடாது அண்ணாத்த” என்று அன்று அடி வாங்கியவன் சேர்த்து போட்டு கொடுக்க..
“ப்ளீஸ் விட்டுடுங்க” என்று இவள் கெஞ்சி இருந்தால் கூட ஏதோ பாவப்பட்டு அனுப்பியிருப்பார்கள் அவர்கள்..
ஆனால் திவ்யபாரதிக்கு தான் சனீஸ்வரன் நாக்கில் திவ்யமாக ஆட்சி புரிந்து கொண்டிருந்தானே!! சும்மா இல்லாமல் வழக்கம் போல தன் அப்பாவை பற்றி வாய்திறக்க எத்தனித்தவள், ‘எவ்வளவு நாளைக்குதான் அப்பாவை இழுக்கிறது.. ஒரு சேஞ்சுக்கு எஸ்பியை இழுப்போம், அசிஸ்டன்ட் கமிஷனர் பெட்டர்’ என்று நினைத்தவள்.. “ஏய் நீங்க எப்படி எல்லாம் மிரட்டுனா நான் பயந்துடுவேன் நினைச்சிங்களா? நான் யார் தெரியுமா?” என்று இவள் ஆரம்பிக்க வழக்கம்போல அப்பாவை பற்றி பேச போகிறாள் என்று நினைத்து தலையில் கையை வைத்துக் கொண்டு நின்ற கர்ணா, இவள் அடுத்து பேசியதை கேட்டதும் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக் கொண்டான்.
“நான் அசிஸ்டென்ட் கமிஷனர் சூரிய பிரகாஷோட ஆளு.. உங்க மிரட்டலுக்கு எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க” என்று பொய்யை உண்மை போலவே நம்பும்படி அவள் கூறி முடித்து அவர்களின் எதிர்வினையை பார்க்க.. அந்தோ பாவம் அவளுக்கு அதிர்ச்சி!!
“வா.. வா.. வா.. உன்ன தான் நாங்க தேடிட்டு இருந்தோம்.. அந்த எஸ்பி எங்க ஆளுங்க ரெண்டு பேரை என்கவுண்டரில் போட்டவன்.. உன்ன வச்ச அவனை என்ன பண்றேன் பாரு” என்ற கஜா அடுத்த நிமிடம் அவளை தங்கள் காருக்குள் திணித்து கடத்திக் கொண்டு சென்று இருந்தான்.
கர்ணாவும் இந்த டிவிஸ்டை எதிர்பார்க்காதனாய் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றான்!!
12
அஸிஸ்டெண்ட் கமிஷனர் எஸ்.பியின் ஆள் என்று கூறினால் பயந்து ஓடி விடுவார்கள் என்று அவள் எண்ண.. அதற்கு எதிர்ப்பதமாக “அவனை தான் பழி வாங்க இத்தனை நாளாக கரவம் கட்டிக்கொண்டு காத்திருந்தோம் வசதியாக நீ வந்து மாட்டினாயா?” என்று அவளை அள்ளி கொண்டு பறந்தது கஜா கும்பல்..
கஜா புயலில் இருந்து தப்பி இந்த கஜா கும்பலிடம் சிக்கிக் கொண்டாள் நம் சீனி வெடி சிங்காரி!!
சற்றும் தாமதிக்காமல் கர்ணா திவ்யபாரதியின் பேக்கில் இருந்த செல்லை எடுத்து எஸ்பிக்கு அழைக்க.. ஒரு வாரமாக தன் அழைப்பை ஏற்காதவள் இன்று தன்னை அழைக்கிறாள் என்றதும் அவனுக்கும் கோபம் மிக காலை கட் செய்து கொண்டே இருந்தான்.
கர்ணாவுக்கோ திக் திக் என அடித்துக் கொள்ள, வாயில் வார்த்தைகளோ வண்ட வண்டையாக வந்தது ஐடியா கொடுத்த விபாகர் மீதும் அதை தலைமையில் கொண்டு பேசிய திவ்யபாரதி மீதும், திட்டிக்கொண்டே திரும்பத் திரும்ப டயல் செய்ய, திரும்பத் திரும்ப எஸ்பியோ கட் செய்துகொண்டிருக்க ஒரு கட்டத்துக்கு மேல் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை தட்டி விட்டுவிட்டு தன் மொபைலில் இருந்து எஸ்பி க்கு கால் செய்தான் கர்ணன்.
அதேநேரம் கஜாவிடம் சிக்கிய திவ்யபாரதி அப்பவும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல்… “அடேய் என்னை என்ன சும்மா நெனச்சிடீங்களா? என் அப்பா ஒரு போலீஸ் என் ஆளு ஒரு போலீஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் படையே வந்து உங்களை எல்லாம் போட்டுத் தள்ளிட்டு என தூக்கிட்டுப் போயிடுவாங்க” என்று வீரமாக பேசினாள்.
“பார்கலாம்.. பார்க்கலாம், இப்போ வாய மூடிகினு இரு” என்று கஜா சத்தமிட்டான்.
சிறிது நேரத்திலே திவ்யா கஜாவை பார்த்து “ஏன் கஜா ஒரு அடிக்கு ஒரு லட்ச ரூபா பேமெண்ட் வாங்குற ஆளு.. இந்த மாதிரி ஒரு டப்பா காரு வச்சிருக்கியே. போகும் போது எப்படி தூக்கி தூக்கி போட்டு குலுங்குது பாரு.. நல்ல காரை வாங்கி வைத்திருக்கலாம் தானே” என்று கூறியவள், தன் அருகில் இருந்த அந்த தடிமாடு போன்ற உருவம் கொண்டவனை பார்த்து “இம்மாம் பெரிய உடம்ப வச்சு நீ ஜன்னல மறைச்சிட்டா எனக்கு எப்படி காத்து வரும்? ஏற்கனவே காருக்குள்ள ஏசி வேற இல்ல.. எனக்கு வேர்க்குது. தள்ளி உட்காரு தடிமாடு” என்று அவனையும் அதட்டினாள்.
“அடேய் அவ ரொம்ப பேசினா நல்லா வாயிலேயே நாலு போடுங்கடா” என்று கஜா கூற.. “எங்க போடுவியா நீ?” என்று அருகில் இருந்தவனை இவள் மிரட்ட… “எங்க அண்ணாத்த சொன்னா மறு பேச்சு கேட்காமல் போட்டுருவேன்” என்றவன் அவள் வாயில் இரண்டு அடி போட, அடுத்த நொடி அவன் விரல்களை பிடித்துக் கடித்து வைத்திருந்தாள்.
“‘ஏய் விடு.. விடு.. விடுடீ வலிக்குது” என்று கத்தியவாறு “அண்ணாத்த இந்த பொண்ணு என்ன கடிச்சிடுச்சு” என்று சிறு பிள்ளை போல கஜாவிடம் புகார் செய்ய.. கஜாவோ தலையில் அடித்துக்கொண்டு “அடேய் நீங்க எல்லாம் ரவுடி டா!! எல்கேஜி புள்ளைங்க மாதிரி அவ என்ன கடிச்சிட்டா அடிச்சிட்டானு என் கிட்ட வந்து கம்ப்ளைன்ட் பண்ற.. பிரியாணியும் லெக் பீஸூமா போட்டு எதுக்கு உன்னை வளர்த்து வச்சிருக்கேன்.. இப்படிக் கடி, அடி வாங்கிட்டு வரதுக்கா?? அவ வாய பர்ஸ்ட் கட்டுடா” என்க பின்னால் இருந்தவன் தன் கையிலுள்ள கர்சீப்பால் அடுத்த நொடி அவள் வாயை கட்டியிருந்தான்.
ஆனாலும் அவர்கள் போய் சேரும் இடம் வரைக்கும் சில்வண்டு போல வாய் மூடி இருந்தாலும் சத்தம் போட்டு கொண்டுதான் இருந்தாள் திவ்யா.
வாய்ஸ் மெசேஜில் கர்ணாவின் குரலை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கூடவே அவனது பதட்டமான குரலில் கேட்க அடுத்த நொடி கர்ணாவிடம் இருந்து வந்த காலை அட்டெண்ட் செய்து “என்னாச்சு கருணா?திவ்யா எங்கே?” என்று கேட்க..
அவன் நடந்ததை அனைத்தையும் கூறி முடிக்க.. ‘அசிஸ்டன்ட் கமிஷனர் எஸ்பி ஓட ஆளு’ என்று அவள் சொன்னதாக கர்ணா கூற அதைக் கேட்டவனது வதனத்தில் கீற்று போல புன்னகை ஓடியது. அடுத்தகணம் இவளை என்று தலையிலடித்துக் கொண்டவன், அனைவரையும் தவிர்த்து விட்டு தானே ஜீப்பில் கர்ணா இருக்குமிடம் நோக்கி விரைந்தான். பத்து நிமிடத்தில் அவன் அங்கு வந்துவிட, கர்ணாவிடம் “எந்த பக்கமாக போனாங்க.. எத்தனை பேர் இருந்தாங்க” என விபரங்கள் கேட்டுவிட்டு திவ்யபாரதி மொபைலையும் எடுத்து கொண்டு ஜீப்பில் புறப்பட்டான்.
அதே நேரம் கஜாவின் இருப்பிடத்திற்கு சேர்ந்தவுடன் திவ்யாவை குண்டுகட்டாக தூக்கி வந்து ஒரு இருக்கையில் வைத்து கட்டிவிட ஓஓ. ஊஊ.. என்று முக்கிக் முனகிக் கொண்டே இருந்தாள்.
ஒருவேளை பாத்ரூம் எதும் போகணும் என்று கூறுகிறாளோ என்று ஒருவன் வந்து கர்சீப்பை அவள் வாயில் இருந்து அகற்ற..
“உவ்வேக்.. உவ்வேக்.. கர்மம் இந்த கர்சீப்பை துவைச்சு எத்தனை நாள் ஆகுது.. எவன்டா இதை என் வாயில கட்டியது.. ஒற்றே நாத்தம்” என்று மீண்டும் அவள் குமட்டிக்காட்டினாள். வந்தது முதல் அங்கிருந்த ஒருத்தரையும் அவள் விடவில்லை அனைவரையும் டேமேஜ் செய்து கொண்டிருந்தாள்.
அன்று அவளால் அடி வாங்கியவன் கஜாவிடம் சென்று “அண்ணாத்த.. அவ பேச்சு தாங்க முடியல.. வர வேகத்துக்கு ரெண்டு இறுக்கு இறுக்கிடுவேன்.. உங்களால் தான் பாக்குறேன். என்ன சொல்றீங்க?” என்று பழிவாங்க நினைக்க..
“டேய் அவசரப்பட்டு கை வைக்காத உண்மையாவே அஸிஸ்டெண்ட் கமிஷ்னரோட ஆளா என்னனு செக் பண்ணனும். அவ சொன்னது உண்மைன்னா அடுத்த நிமிஷம் இவ தான் நமக்கு அந்த சுறாவை பிடிக்கிற தூண்டில்”
என்று கண்களில் ஒரு வித வெறியோட கஜா கூறினான்.
கஜா அடுத்து எஸ்பிக்கு அழைக்க..
வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனோ இதை எதிர்பார்த்து தான் இருந்தான்.. “சொல்லு கஜா” என்று அவன் கூற..
எப்படி தெரியும் என அதிர்ந்தவன் அதை காட்டிக்கொள்ளாமல் “என்ன ஏசிபி சார் உங்க ஆளு தேடுறீங்க போல.. என்கிட்டதான் பத்திரமா இருக்கு. நீங்க மட்டும் தனியா வரணும் தீர்க்கப்படாத கணக்கு ஒன்னு இருக்கு.. உங்க போலீஸ் படை பட்டாளத்தோட நீங்க வந்தீங்கன்னா என்கிட்டயும் 10 பேர் இருக்காங்க.. உங்க ஆளு ஒத்தையா இருக்கு. ஞாபகம் வச்சுக்கோங்க” என்று மிரட்டி விட்டு போனை அணைத்து விட்டான்.
எஸ்பிகோ தனியாக வர சொன்னதெல்லாம் கொஞ்சம் கூட அவனுக்கு பயம் இல்லை. ஆனால் தாங்கள் 10 பேர் இருக்கிறோம் என்று அவன் சொன்னது தான் மனதுக்கு நெருடலாக இருந்தது. கொலை கொள்ளை கற்பழிப்பு என்று பஞ்சமா பாதங்களை கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் செய்யும் கூட்டம் தான் அது. அவர்களாக அப்படி செய்யாமல் இருந்தாலும் இவள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் எதையாவது பேசி வம்பை வளர்ப்பாள் அதை நினைத்தே எஸ்பிக்கு கொஞ்சம் அல்லு விட்டது.
அடுத்த அரை மணி நேரத்தில் இவன் போய் சேர்ந்தான். அந்த அரை மணிநேரமும் திவ்யபாரதியின் வாய் ஓயவே இல்லை..
“அண்ணாத்த ரெண்டு கிலோ அரிசியை இந்நேரம் அந்த பொண்ணு வாயில் கொட்டி இருந்தா மாவாக்கி கொடுத்திருக்கும் அம்புட்டு பேச்சு பேசுவது வாய் ஓய மாட்டேங்குது. உங்க மூஞ்சிக்காகத்தான் பாக்குறேன் இல்ல அது மொகரையை பேத்திருப்பேன்” என்று கடுப்பில் கூறினான் அவனின் அடியாள் ஒருவன்.
சட்டென்று எழுந்து தன் பாக்கெட்டில் பதுக்கி வைத்திருந்த கன்னை எடுத்து திவ்யபாரதி நெற்றிக்கு நேரே வைத்து “ஒரு வார்த்தை! இன்னும் ஒரே ஒரு வார்த்தை!! உன் வாயிலிருந்து வந்தது.. ஒரே ஒரு புல்லட் மட்டும் உன் தலையில் இறங்கும்” என்று மிரட்ட அதற்குபின் நம்ம அம்மணியோ கப் சிப் சப் தான்.. திவ்யபாரதியின் வாழ்க்கை வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நேரம் இது!!
எஸ்.பி வந்தவுடன் கஜா அவனை ஒரு நக்கல் பார்வை பார்த்து “உன்னோடு குடுமி இப்போ என் கைல.. உன்கிட்ட உள்ள கன்னை எடுத்து பக்கத்துல இருக்குற மேசையில் வை” என்று அதட்டலாக சொன்னான்.
சூரிய பிரகாஷ் ஒரு முறை திவ்யாவை கூர்ந்து பார்க்க அவளோ கஜா காட்டிய துப்பாக்கியில் அரண்டு போய் கண்களில் மரண பயம் தெரிய அமைதியாக ஒடுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள். கஜவோ எள்ளலாக எஸ்பிஐ தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரையும் மாறி மாறி பார்த்த எஸ்பி ஒரு வார்த்தைகூட பேசவில்லை மெதுவாக எட்டு மேல் எட்டு எடுத்து வைத்து தனது கன்னை எடுத்து மீண்டும் இருவரையும் ஒருமுறை பார்த்து அந்த மேசையின் மேல் வைக்க…
“அது!!” என்ற கஜா தன் ஆளை விட்டு அதை எடுத்துவர சொல்ல, அவன் எஸ்பியின் துப்பாக்கியில் கை வைக்க அடுத்த நிமிடம் பறந்து போய் விழுந்து இருந்தான்.
அனைவரும் இதை எதிர்பார்க்கவில்லை அதிர்ச்சியோடு திரும்ப, அந்த கன்னை சரேலென்று திரும்பி கையில் எடுத்த எஸ்பி அடுத்த நொடி ஒரே ஜம்ப் ஆக எம்பி அந்த மேசையின் மேல் அமர்ந்து கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாக கஜாவை பார்த்து சிரித்தான்.
கஜாவோ உள்ளுக்குள் அரண்டாலும் வெளியில் “என்ன ஏசிபி சார், உன் ஆளு என் கிட்ட மாட்டி இருக்கிறது மறந்து போச்சா” என்று கேட்க..
“ஏன் ஆளா? யாருடா அது?” என்று அவன் திரும்ப கேட்க..
அனைவரும் திவ்யபாரதியை பார்த்து முறைத்தனர். “நானும் அவளும் ஒன்னா ஊர் சுத்தியத நீ பார்த்தியா? இல்ல அவள தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னதை நீ கேட்டியா? யாரோ ஒருத்தி சொன்னா நீ நம்படுவியா அவ்வளவு புத்திசாலியாக டா நீ?” என்று கூறி சிரித்தான் எஸ்பி.
கஜாவுக்கும் கொள்ளிக்கட்டையை எடுத்து தானே தன் தலையில் சொறிந்து கொண்டோமோ என்று நினைத்தவன் அடுத்த நொடி “அந்த பொண்ணு உன்ஆளு இல்லையில்ல அப்புறம் எதுக்கு நீங்க வந்த?” என்று கேட்க..
கையில் வைத்திருந்த துப்பாக்கியை அருகில் வைத்துவிட்டு இரு கைகளையும் உயரே தூக்கி நெட்டி முறித்தவன், “அதுவா? மொத்தமா நீங்க எல்லாரும் சிக்கி இருக்கீங்க.. அதான் அப்படியே அள்ளிக்கிட்டு போகலாம்னு வந்து இருக்கேன்” என்று இலகுவாக கூறியவன், கையை தன் தொடையில் வைத்து அவர்களை அழுத்தமாக பார்த்து “என்ன போலாமா??” என்று இரும்பின் அழுத்தத்தோடு கேட்க..
கஜா அவனின் ஆட்களுக்கும் பயத்தில் தொண்டை எல்லாம் வரள, எச்சிலை விழுங்கி கொண்டனர். ஏற்கனவே எஸ்பிஐ பற்றி அறிந்தவர்கள் தெரியாமல் அவனை சீண்ட பொய் தானே மாட்டிக் கொண்டோமே என்று நினைத்தாலும், அடுத்த வினாடி தங்களிடமிருந்த துப்பாக்கியை திவ்யாவின் தலையில் வைத்து… “எப்படியும் இவ உன் ஆளு இல்லை தானே, நீ எங்கள தொட நினைச்சா இவள நாங்க போட்டுத் தள்ளிட்டு போய்க்கிட்டே இருப்போம்” என்று கூற ஒரு நொடி திகைத்தாலும் அது முகத்திற்கு கொண்டு வராமல் தடுத்தான் எஸ்.பி.
“அவ என்ன என் மாமன் பொண்ணா? இல்ல அத்தை பொண்ணா? அவ போனா நான் பீல் பண்றதுக்கு… அப்படியே அவன் என் ஆமா இருந்தாலும் திவ்யா இல்லனா திரிஷா” என்று நக்கலடிக்க.. அவனின் அந்த வார்த்தைகள் திவ்யபாரதியின் மனதை ஈட்டியால் குத்தியது போன்று வலித்தது ஏனென்றே தெரியாமல்!! கண்கள் கலங்க அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். அந்த பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தன் முகத்தை திருப்பிக் கொண்ட எஸ்பி, கஜாவை பார்க்க அவனும் குழம்பிய நிலையில் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தியவன், கஜா எதிர் பார்க்காத நேரம் அவன் கையில் சுட துப்பாக்கி பறந்து சென்றது.
அதற்குள் இவர்களெல்லாம் தப்பி ஓட முயல தன் விரல்களை வாயில் வைத்து வேகமாக விசில் அடிக்க… அடுத்த நொடி போலீஸ் படை ஒன்று இவர்களை சூழ்ந்தது. கஜா மற்றும் அவனது ஆட்களை மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்றது.
அவர்கள் சென்றபின் இவன் திவ்யபாரதி நோக்கிச் செல்ல.. அவளோ இவனை சிறிதும் ஏறெடுத்துப் பார்க்காமல் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.
இவன் கைகளை நீட்ட..
அவள் அதை தட்டிவிட..
இவன் சிரிப்புடன் அவளை தொட..
அவள் மறுத்து விலகிட..
இவன் தன்னை நோக்கி இழுத்திட..
அவள் முறைப்புடன் நகர்ந்திட..
இவன் கன்னங்களை பற்றிட..
அவள் அவனை முறைத்திட..
இவன் உதடுகளால் உரசிட..
அவள் தலையை திருப்பிட..
இவளின் விளையாட்டை முடிவுக்கு கொண்டுவர நினைத்தவன், அவள் தாடையை இறுக்கமாகப் பற்றி தன்னை நோக்கி இழுத்து தனது உதடுகளால் முரட்டு முத்தத்தை கொடுத்து தனது அச்சாரத்தை அழுத்தமாக பதித்தான் சூரிய பிரகாஷ்..
எதிர்பாராத திடீர் முத்தத்தால் அதிர்ந்தாலும் அவனை விலக்கி விட கை எழவே இல்லை திவ்யபாரதிக்கு..
மெல்ல அவனிடமிருந்து உதடுகளை விலக்கி திரும்பி நின்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. அவளை தன் பக்கம் திருப்பி, கன்னங்களை தாங்கி பெருவிரலால் அவளது கண்ணீரை துடைத்தான்.
“நான் செத்தா பரவாயில்லையே உங்களுக்கு?? திவ்யா இல்லனா திரிஷானு அவன் கிட்ட சொல்றீங்க?” என்று அழுகைனுடே உள்ளிருந்த உரிமை வெளியே வந்தது திவ்யாவுக்கு.
“ஏ சில்வண்டு.. அவனை டைவர்ட் பண்றதுக்காக அப்படி சொன்னேன். அப்படின்னு நினைக்கிறவன் உன்னை தூக்கிட்டான்ன உடனே இவ்வளவு வேகமாக வந்து இருப்பேனா?” என்று குழைந்து வந்தது அவனது குரல் முதன் முறையாக..
மெல்ல தலையை நிமிர்த்தி கண்களாலேயே நிஜமாய் என்று அவனை பார்த்து கேட்க..
அந்தக் கண்களிலே தனது அதரங்களை பதித்து நிஜம்தான் என்று நிரூபித்தான் இணை ஆணையன்.
“இன்னுமா புரியல? இந்த சில்வண்டு இங்கே வந்து ரொம்ப நாளாச்சு” என்று தன் இதயத்தை தொட்டு காட்டியவன்.. “லவ் யூ டி” என்று அவளது நெற்றியில் அழுத்தமாக இதழ்களைப் பதித்தான்.
அவனின் கற்றை மீசையின் குறுகுறுப்பு..
தடித்த இதழ்களின் அழுத்தம்.. நச்சென்று நெற்றியில் எச்சிலோடு கூடிய குளுமை..
இவையெல்லாவற்றையும் விட அவனின் காதல் தந்த பூரிப்பு என்று அந்த நிமிடங்கள் அப்படியே உறைந்து விடாதா என்று ஏக்கம் கொண்டாள் பாவையவள்.
நெற்றியில் இருந்து பயணித்த அவனது உதடுகள் அவளது காது மடலை மொய்த்து சுவைத்தது. அவளின் கீழ் உதட்டை கவ்வி சப்ப அதில் அவளுக்கு காதெல்லாம் சூடேறி போனது. அவளின் இருக்கைகளால் அவனின் கழுத்தை எக்கி வளைத்துக் கொண்டு நெஞ்சோடு இறுக்கமாக இணைந்திட.. அவனது திண்ணென்ற நெஞ்சத்தில் அவளது திம்மென்ற முன்னெழில்கள் அழுத்தமாக பதிய.. அவனுள் புது ரத்தம் பாய.. அவனின் முரட்டு இதழ்களால் அவளின் இதழ்களை வஞ்சகமின்றி கவ்வி சுவைத்தவன், பெண்ணவளின் இதழ்களை பிரித்து கூர் வாளென தன் நாவினை பாய்ச்சி சுழற்றி துழாவி எச்சில் போர் புரிந்து கொண்டிருந்தான்.
காதலில் எதுவுமே நியாயமே..
அத்துமீறல் கூட அழகானதாக..
எச்சில்கள் கூட அமிர்தமாக..
காவலன் காதல் செய்து கொண்டிருந்தான் காதலாக!!
13
காவலன் காதலனாக அவதாரம் எடுக்க!!
காதலும் மோகமும் போட்டி போட!!
கன்னயவளும் காளையோடு முத்த சஞ்சாரத்தில் சதிராட!!
காலமும் நேரமும் மறந்துபோனது காதலர்கள் இவர்களுக்கு!!
அந்நேரம் மன்மத நேர பூஜையில (எவ்வளவு நாள் தான் சிவ பூஜையினே சொல்லுறது.. ஒரு சேன்ஞ்காக) கரடியாக வந்தது போன் கால்..
வேறு யார் நட்பின் திலகம் கர்ணன் தான்!!
வேகத்தோடு சென்ற எஸ்பி திவ்யாவை மீட்டானா? இல்லையா? என்னவானது என்று ஒன்றும் அறியாமல் திவ்யாவை கடத்தி சென்ற அதே இடத்தில் அவளது ஸ்கூட்டியோடு ஓரமாக அமர்ந்து இருந்தான் இருட்டும் வரை கவலையுடன்.. அதன் பிறகு எஸ்பி திட்டினாலும் பரவாயில்லை என்று அழைத்து விட்டான்.
கர்ணாவோ கவலையோடு இருக்க..
அங்கே காவலனோ காதல் புரிந்து கொண்டிருந்தான். மொபைல் சத்தத்தில் அவளிடமிருந்து பிரிந்தவன் அவளை இடுப்போடு அணைத்தபடியே தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து பார்க்க அதில் குண்டோதரன் என்ற வாசகம் மின்னியது..
“அச்சச்சோ கர்ணா.. கர்ணா தான் கூப்பிடுறேன்” என்று எஸ்பியிடம் இருந்து மொபைலை வாங்க இவள் எத்தனிக்க, அவனோ கையை உயரத் தூக்கிப் பிடித்திருந்தான்.
“அச்சோ தாங்க.. அவன் பயந்திருப்பான் அவன் கிட்ட முதல்ல சொல்லணும்” என்று காதல் மறந்து நட்பு பாசம் மேலோங்க திவ்யா கேட்க..
அவனோ வசீகர சிரிப்புடன் இருபக்கமும் தலையாட்டி விட்டு ஏற்றிய கையை இறக்கவே இல்லை. இவள் தான் அவனது ஆறடிக்கு இவளது ஐந்தடி உயரத்தால் எட்ட முடியாமல், எகிறி எகிறி குதித்து அதை கைப்பற்ற முயல.. இவனது கண்களோ துள்ளி விளையாடும் அவளது முயல்குட்டி மேலேயே இருந்தது. போதாக்குறைக்கு ஒட்டி உரசி அவனை தீண்டும் போது இதுவரை அனுபவித்திராத உச்சகட்ட சுகம் அவனுக்குள்.. அதுவரை ஏதோ விளையாடுகிறான் என்று நினைத்த திவ்யா, “கொடுங்க.. கொடுங்க ப்ளீஸ்” என்று கேட்டு அவன் கண்களையும் முகத்தையும் கண்டவள் சட்டென்று அவனிடமிருந்து விலகி இருந்தாள். பின்னால் இரண்டு அடி நகர்ந்து நின்று “பொறுக்கி பொறுக்கி” என்று அவன் உருண்டு திரண்டு புஜங்களில் தன் தளர் விரல்களால் அடிக்க.. அவனோ மந்தகாசமான சிரிப்புடன் அவளைத் தன்னை நோக்கி இழுத்தான்.
“அது என்னமோ உன் கிட்ட மட்டும் பொறுக்கியா தான் இருக்கத் தோணுது.. போலீஸ்காரன் வரவே மாட்டேங்குறான்” என்று பெருமூச்சு விட்டு சொன்ன அவனின் கண்கள் தாபமாக அவளைத்தான் உச்சாதி பாதம் வரை பார்த்தது. அதில் அவளது கண்கள் தாழ்ந்து கன்னங்கள் செம்மை பூசிக்கொள்ள வெட்கத்துடன் தன் உதடுகளை கடித்தாள் திவ்யா.. (நமக்கு கூட வெட்கம் வருதே என்ற மைண்ட் வாய்ஸ் உடன்.. நம்ம எஸ்பியோட பார்வை அப்படிமா!!)
காதலுக்கு மரியாதை கொடுத்தது போதும் என்று எண்ணிய எஸ்பி, நட்புக்கு மரியாதை கொடுக்க எண்ணி போனை அவளிடம் நீட்டினான். அதை அவள் வாங்க நீட்டிய கையோடு அவளை இழுத்து பின் பக்கமாக அணைத்துக் கொண்டு “இப்போ பேசு” என்றான்.
அவனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே போனை வாங்கிய திவ்யா கர்ணனுக்கு அழைக்க.. போனை அட்டன் செய்து மறுநொடி பரபரப்புடன் “திவி திவி நல்லா இருக்கியா? ஒன்னும் பிரச்சனை இல்ல.. எஸ்பி சார் உன்கூட தானே இருக்காரு.. யாரும் எதும் பண்ணல இல்ல? நல்லா தானே இருக்க.. சொல்லுடி.. சொல்லி தொலைடி” என்று பதட்டத்துடன் பாசமும் கலந்து ஒலித்தது அவன் குரலில்..
அவனது பாசத்தை பிறந்தது முதல் அனுபவித்து வருகிறாள் தான், ஆனாலும் இந்த பதட்டமான குரல் அவளுக்குள் ஒரு நெகிழ்வை தர கண்கள் தானாக கலங்கியது ஆனால் அதனைக் காட்டிக் கொள்ளாமல்..
“நல்லா தான்டா இருக்கேன். ஒன்னும் பிரச்சனை இல்ல. எஸ்பி சார் கூடத்தான் இருக்கேன். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்து விடுவேன்” என்று அவள் கூற..
“அடியே!! நீ பாட்டுக்கு நேராக வீட்டுக்கு போகாதே. இன்னும் வீட்டில யார்கிட்டயும் ஒன்னும் சொல்லல.. நான் அங்கேயேதான் நிற்கிறேன்” என்று அவன் கூற, அவள் திடுக்கிட்டு போய் “எங்க.. எங்க நிற்குற” என்று அதிர்ந்து கேட்டாள்.
“உன்னை குண்டு கட்டாக தூக்கிட்டு போன அன்றே அதே இடத்தில தான் இருக்கேன் சீக்கிரம் வந்து சேரு” என்று பதில் கூறியவன் மறுபடியும் மனசு தாங்காமல் “நிஜமாகவே அவனுங்க உன்னை ஒன்னும் பண்ணவில்லை தானே திவி?” என்று தழுதழுத்த குரலில் கேட்க..
அவனின் மனதை மாற்றும் பொருட்டு “பாவம்டா குண்டோதரா அவனுங்க.. என் தொல்ல தாங்க முடியாம, விட்டா போதும் ஓடிட்டாங்க” என்று அவள் கலகலத்து சிரிக்க, அப்போதுதான் கர்ணனுக்கும் மனம் சாந்தப்பட்டது. “இப்ப சொன்ன பாரு அதுதான் சரி!! உன் வாய்க்கு அவனுங்க பயந்து ஓடி இருப்பானுங்க” என்று சரியாக சொல்ல.. “அடேய் வந்தேன் உன்னை!!” என்று அவள் கூற பின்னிருந்து அணைத்த எஸ்பி, தன் அழுத்தமான இதழ்களால் அவள் கழுத்து வளைவில் கோலம் போட்டுக் கொண்டிருக்க அவளுக்கு பேச்சை அதற்குமேல் வளர்க்க முடியவில்லை.. நெளிந்துகொண்டே “சரிடா.. வந்துடுறேன்” என்று கூறினாள்.
ஆனால் கர்ணனுக்கு மனது சற்றும் கேட்கவில்லை. அவளை நேரில் பார்க்கும் வரை அவனால் நிம்மதியாக இருக்க முடியாது. “ஏண்டி.. அவனுங்க எதும் பண்ணல தானே” என்று திரும்பத் திரும்பக் கேட்க, இவளோ நெளிந்து கொண்டே, கிறக்கத்தில் கண்கள் செருக எஸ்பியின் இதழ் இம்சைகளை அனுபவித்துப் படிய “ஒன்னுமில்ல டா” என்று கூறிக்கொண்டிருந்தாள்.
அதற்கு மேல் தாங்காதவனாக அவளை தன் பக்கம் இழுத்து அவள் இதழை சுவைக்கத் தொடங்கியிருந்தான் எஸ்பி.. அங்கு காரணம் கேட்டு கேட்டு ஓய்ந்து போய் போனை வைத்து விட்டான் கர்ணா.
காவலனிடமிருந்து தன் உதட்டை கஷ்டப்பட்டு பிரித்து எடுத்துக்கொண்டு, அவனை முறைத்துப் பார்த்தவள் “ஒரே நாளில் உங்க வேகம் என்னால தாங்க முடியல. இதுல உங்க பேரு ருஷ்யசிங்கர்னு டிபார்ட்மெண்ட்ல பேசிக்கிறாங்க ஆனால்…” என்று அவள் இழுக்க, பேசிய அவள் உதட்டை தன் இரு விரல்களால் பிடித்து இழுத்தவன்..
“இப்பவும் நான் ருஷ்யசிங்கர் தான்.. உன்னை மட்டும் ருசி பார்க்கும் ருஷ்யசிங்கர். எல்லார்கிட்டயும் இது மாதிரி இருந்தா தாண்டி தப்பு.. என்னவள் கிட்ட மட்டும் இந்த மாதிரி இருந்தா அதுல என்னடி தப்பு?” என்று கேட்டவன், “சரி டைம் ஆகுது கிளம்பலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.
நேராக கருணா இருக்கும் இடத்திற்கு அவளை அழைத்து சென்றவன், அவளை கருணாவிடம் ஒப்படைத்து “கருணா இந்த லூசுவிடம் சொல்லி வைங்க. கண்ட இடத்திலும் வார்த்தையை லூசா விடாம பாத்துக்கோங்க. இன்னைக்கு கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைதான் இவளுடையது. அடக்கி வாசிக்கச் சொல்லுங்க” என்று காட்டமாகவே சொல்லிவிட்டு கிளம்பி சொல்லும் பொழுது அவன் இதழ்களில் தெரிந்த அந்த புன்னகையின் கள்ள தனத்தை கண்டுகொண்டாள் இந்த காதல் களவாணி..
“போட்டுக் கொடுத்திட்டீயே பரட்ட” என்று அவனை முறைத்தாள்.
கர்ணாவும் வீட்டுக்குப் போகிற வழியெல்லாம் தன் பங்குக்கு அவளை வசை பாடிக் கொண்டும், அட்வைஸ் கூறிக் கொண்டும் செல்ல பின்னால் அமர்ந்திருந்தவளோ முதலில் காதைக் குடைந்து கொண்டு வந்தவள், அதற்குப்பின் கொட்டாவி விட்டுக்கொண்டு முன்பக்கம் தனது பேக்கை டெடிபியர் போல் பாவித்து கட்டிப்பிடித்து தூங்க ஆரம்பித்தாள்.
வண்டியை நிறுத்திவிட்டு “இறங்கு வீடு வந்துட்டு” என்று சொல்ல, அப்போதும் இறங்காமல் இருந்தவளை கண்டு சந்தேகத்துடன் திரும்பிப் பார்க்க அவள் தான் தூங்கி இருந்தாளே!!
“அப்பவே நினைச்சேன்.. என்னடா நம்ம இவ்வளவு பேசுறமே பதிலுக்கு ஒத்த வார்த்தை கூட பதில் பேசாம அமைதியா வரளேன்னு.. உன்னை எல்லாம் வச்சிக்கிட்டு” என்று தலையிலடித்துக் கொண்டவன் அவளை ஒரு குலுக்கு குலுக்கி எழுப்பி விட்டு.. “வீடு வந்துடுச்சு மகாராணி.. வீட்ல போய் திவ்யமா தூங்குங்க” என்றவனை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி சென்றாள் திவ்யபாரதி.
திவ்யபாரதி இறக்கிவிட்டு தன் ஸ்டேஷனுக்கு சென்றவனோ பயங்கர ஆத்திரத்தில் இருந்தான். உள்ளே நுழைந்த அவன் சரமாரியாக கஜாவையும் அவன் ஆட்களையும் பின்னி எடுத்து விட்டான். அப்பவும் கோபம் தாளாமல், அவன் கண் முன்னே கஜா திவ்யாவின் நெற்றியில் துப்பாக்கி வைத்த காட்சியே வர, கோபம் இன்னும் பெருக.. கைகள் எல்லாம் தினவெடுத்து நரம்புகள் புடைக்க.. பிரம்பை எடுத்தவன் விளாசித் தள்ளிவிட்டான் அனைவரையும்..
கஜா அருகில் இருந்த ஒருவன் “என்ன அண்ணாத்த.. நாம ஒரு அடிக்கு ஒரு லட்சம் வாங்குற ஆளுங்க, நம்மள போட்டு இந்த அடி அடித்து தள்ளிட்டானே” என்று புலம்ப ஆரம்பிக்க..
“என்னடா அங்க சத்தம்?” சென்று எஸ்பி கர்ஜிக்க..
“ஒன்னும் இல்ல சார்” என்று அடி வாங்கியவர்கள் எங்கே திரும்ப வந்து விடுவானோ என்று பயந்து பம்ம, அடித்ததில் கைகால்கள் எல்லாம் உதறிக் கொண்டவன் நெட்டி முறித்துக் கொண்டு அவர்களிடம் வந்து “என்னங்கடா ரொம்ப வலிக்குதா?” என்று கேட்க..
“ஆமாம் சார் ரொம்ப வலிக்குது” என்று ஒருத்தன் புலம்ப, “எங்க ரொம்ப வலிக்குது?” என்று இவனும் அக்கறையாக கேட்க, அந்த அக்கறையில் உள்ள கள்ள தனத்தை அறியாத அந்த அப்பாவி ரவுடியோ (ரவுடி அப்பாவியா? அடப்பாவமே!!) “இங்கே சார்..” என்று தனது முதுகை காட்ட “அரசு அதை எடுத்துட்டு வாங்க” என்று எஸ்.பி கூற, மருந்து தான் எடுத்து வரச் சொல்கிறான் என்று நப்பாசையில் அவனும் எட்டிப்பார்க்க, வந்த அரசு கையிலோ இரண்டு பிரம்பு இருந்தது, அதனை வைத்து அவன் வலிக்குதுன்னு சொன்ன இடத்திலேயே அவனை வெளுத்து வாங்கினான் எஸ்.பி.
“வேற யாருக்காவது எங்கேயாவது வலிக்குதா?” இவன் பிரம்பை வாள்போல சுழற்றிக் கொண்டே கேட்க.. அவன் அடித்த அடியை பார்த்த பின்னும் அவர்கள் வலிக்குது என்றா சொல்லப் போகிறார்கள்?? “இல்ல சார்.. இல்ல சார் வலியே இல்ல சார்” என்று ஒருவன் வலியை மறைத்து சிரிக்க..
“ஆமாம் சார்.. சும்மா ஒத்தடம் கொடுத்தது மாதிரி தான் சார் இருந்தது” என்று ஒருவன் கூற..
“ஆமா சார்.. மசாஜ் பண்ண மாதிரி இருந்தது சார்” என்று மற்றொருவன் அடிக்கு பயந்து அண்டப்புளுகு புளுக..
“ஏன்டா.. இவ்வளவு நேரம் கை வலிக்க வலிக்க.. பிரம்பு ஒடிய ஒடிய.. அடிச்சா உங்களுக்கு ஒத்தடம் கொடுத்த மாதிரியும், மசாஜ் பண்ண மாதிரியும் இருக்கா? வலிக்கவே இல்லையா? என்னுடைய கேரியரில் இது ஒரு பெரிய பிளாக் மார்க்.. நீங்க வலிக்குது வலிக்குது என்று கதற வரைக்கும் நான் விட போறதில்லை” என்றவன்.. திரும்பவும் “அரசு அதை எடுத்துட்டு வாங்க” என்க.. இப்போதோ மூன்று பிரம்புடன் வந்த அரசு, பொங்கிய சிரிப்பை மறைத்துக்கொண்டு “செத்தாண்டா சேகரு!!” என்று..
வாயை விட்ட அனைவரும் வாயை பிளந்து எஸ்பிஐ பார்த்து அதிர்ந்து நின்றது சில நொடிகள்தான், அதன்பின் தான் இவன் தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டானே!!
இனி எஸ்பி என்ற வார்த்தையை கேட்டாலே அவர்கள் அந்தப் பக்கம் திரும்பி பார்ப்பார்கள் என்பது சந்தேகமே!! அப்படி ஒரு ஹாட் அண்ட் ஸ்பைஸி பர்ஃபாமன்ஸ்!!
வீட்டுக்கு செல்லும்போது கூட நைட் டியூட்டியில் இருந்த காவலர்களை அழைத்து “இவர்கள் வலிக்குது என்று சொன்னாலோ இல்லை சுகமாய் இருக்கிறது என்று சொன்னாலோ, சொன்ன வாயிலேயே போடுங்க” என்ற விட்டு சென்றான். கூடவே அவர்கள் வைத்திருந்த அனைத்து மொபைல்களையும் இவன் கையகப்படுத்த, அதில் தான் அவன் தேடிக் கொண்டிருந்த ருசு இருந்ததை அப்போது அவன் அறியவில்லை.
இரவு வீட்டுக்கு சென்றதும் தான் பார்த்தான் திவ்யபாரதியின் மொபைலை எடுத்து தான் வந்திருப்பது. “இது எப்போ என்கிட்ட வந்துச்சு அவ கர்ணா கிட்ட பேசிக்கிட்டு இருந்தா?” என்று யோசிக்க.. (நீ எங்கடா அவளை பேச விட்டா.. அவ வாயை திறந்தாலே உன் வாய வெச்சு அடைச்சுக்கிட்டு தானே இருந்த)
அப்படி என்ன இந்த மொபைலில் வைத்திருக்கிறாள் என்பதை அறிய ஆவல் கொண்டவன், அவளுடைய போட்டோஸ் வீடியோஸ் என்று பார்க்க.. நண்பர்களுடனும் அவள் அப்பார்ட்மெண்டில் உள்ள பிள்ளைகளுடனும் செல்பி எடுத்து தள்ளி இருந்தாள் அவள். கூடவே அந்த அபார்ட்மெண்டில் நடக்கும் சிறுசிறு சேட்டைகளையும் இவள் ஒளிப்பதிவு வேற செய்து வைத்திருந்தாள். அதை பார்த்தவனுக்கோ சிரிப்பு தாங்கவில்லை.. “இவ சரியான கேடி.. சிபிஐ வேலைக்கு போய் இருக்கலாம்.. ஒளிஞ்சு ஒளிஞ்சு எப்படி வீடியோ எடுக்குறதுக்கா?” என்று கூறிவிட்டு குளிக்க சென்றான்.
அதே நேரம் தன் மொபைல் இல்லை என்பதை அறிந்த திவ்யபாரதி “எங்கே விழுந்தது என்று சுத்தமாக தெரியவில்லை.. அவள் நினைவு முழுவதும் காவலனின் கட்டுக்கடங்காத காதல் முத்தங்களே ஆட்கொண்டு இருக்க!! எங்கே இதை ஞாபகம் வைக்க!!
பின் தன் தந்தையின் போன் மூலம் தன் நம்பருக்கு அழைக்க, குளித்து வந்தவன் அதை பார்த்து சிரித்துக்கொண்டே அட்டெண்ட் செய்து “சொல்லுங்க மேடம்” என்றான்.
“அப்பாடி.. போன் உங்ககிட்ட தான் இருக்கா நான் கூட எங்கையோ தொலைஞ்சு போச்சுன்னு பயந்திட்டேன், அப்புறம் ரத்னா பூசையை ஆரம்பிச்சுடும்” என்று ஆசுவாச பெருமூச்சு அவள் விட..
“நாளைக்கு வந்து வாங்கிக்கோ” என்றான்.
“என் மொபைல்ல நீங்க ஏதும் நோண்டலைல்ல?” என்று சந்தேகத்துடன் இவள் கேட்க..
“ஏன் ? பாக்கணுமா?” என்று அவன் சுவாரஸ்யமாய் கேட்க..
“அய்யையோ வேணாம்.. கண்ட கண்ட வீடியோ என்ன சுத்தி நடந்தது எல்லாத்தையும் வேற சேவ் பண்ணி வச்சிருக்கேன்.. அதெல்லாம் பார்த்திராதிங்க” என்று அவன் பார்த்ததை அறியாமல் அலற..
“நான் வயசுக்கு வந்து ரொம்ப நாளாகுதுமா!! அதெல்லாம் நான் பார்க்கலாம்” என்று அவன் விசமமாக கேட்க..
“அய்ய.. சீ.. சீ.. நான் அந்த மாதிரி எல்லாம் சேவ் பண்ணல” என்று அவள் கூற..
“எந்த மாதிரி?” என்று கேட்டவன் அந்த மாதிரியை வாய்விட்டு இப்படியா? அப்படியா? என்று கேட்க.. அவளுக்கோ அந்நாளின் இரண்டாவது முறையாக வழக்கமில்லாத வெட்கம் வந்தது..
அந்த போனுக்கு மட்டும் காது இருந்தால்.. அது நெஞ்சில் கை வைத்து சாய்ந்து இருக்கும் எஸ்பி யின் விளக்கங்களை கேட்டு..
“போதும் போதும்.. போன்ல இப்படி எல்லாமா பேசுவீங்க?” என்று அவள் வெட்கத்துடன் கூற..
“கரெக்ட்!! இனிமே போன்ல பேசல.. நேர்ல பேசலாம்.. டெமோ கூட செய்யலாம்” என்றான் மொத்தமாக காதல் நோய் பிடித்து முழுமையாக காதலனாக மாறிய இந்த காவலன்.
“பின் எதுக்கு அந்த மாதிரி வீடியோ எல்லாம் எடுத்து வச்சி இருக்க?” என்று இவன் கேட்க..
“அதுவா சில சமயம் அதைப் போட்டுப் பார்க்கும்போது சுவாரசியமாகவும் இருக்கும். அதே சமயம் அவங்களால எனக்கு ஏதாவது வேலை ஆகணும்னா, இந்த வீடியோ காட்டி அவங்ககிட்ட வேலையை வாங்கிக்குவேன் கிட்டத்தட்ட பிளாக்மெயில் மாதிரிதான்” என்று கூறி சிரிக்க, அவனுக்கு எங்கோ பொறி தட்டியது.
“சரி சரி இன்னைக்காவது மொபைல் நோண்டாமல் சீக்கிரமா தூங்கு” என்று
மீண்டும் காவலனாக மாறி, அழைப்பை துண்டித்தவன், அடுத்த நொடி விரைந்து கஜா மற்றும் அவன் ஆட்களிமிருந்து பறிமுதல் செய்து வைத்திருந்த போன்களை எடுத்து வரச்சொல்லி ஸ்டேஷனுக்கு கட்டளையிட்டான். அரை மணி நேரம் அவனை காக்க வைத்து, ஒரு கான்ஸ்டபிள் வந்து அனைத்தையும் அவனிடம் கொடுத்துவிட்டு சென்றார்.
அன்று இரவு முழுவதும் ஒவ்வொருத்தரின் மொபைலில் உள்ள போட்டோஸ் வீடியோஸ் என்று ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் கஜாவின் மொபைலில் சஞ்சனாவின் போட்டோ சிக்கியது அவனுக்கு.
“இந்த பொண்ணு ஃபோட்டோ எப்படி இவன்கிட்ட வந்துச்சு?” என்று யோசிக்க..
எங்கெங்கோ முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டும், பல புள்ளிகள் ஒன்று சேர்வது போல தோன்ற காவலன் தன் ஆட்டத்தை ஆரம்பிக்க மூளையை முடக்கி விட்டான்.
14
எப்படி? எப்படி? எப்படி? என்று தன் காவலன் மூளையை தூண்டிவிட்டவன் மாலினி கொலை மற்றும் சஞ்சனாவின் கடத்தல் இரண்டுக்கும் காரண காரியங்கள் ஒன்றாக இருக்குமோ? என்று எண்ணினான். இருவரின் வயதை தவிர வேற எதுவும் சம்பந்தமில்லை.. இருக்குமிடம்.. சூழல்..
நமக்கு தெரிந்து இந்த இரு பெண் குழந்தைகள், ஆனால் தெரியாமல் எத்தனையோ?? முதலில் அதை அறிய வேண்டும் என்று எண்ணியவன், நள்ளிரவு என்றும் பாராமல் கிளம்பி விட்டான் ஸ்டேஷனுக்கு..
ஹாலில் அமர்ந்து இவன் ஷூ அணிந்துக் கொண்டிருக்க.. வாசுகி தண்ணீர் அருந்த வந்தவர் யூனிஃபார்மோடு அவன் இருப்பதை பார்த்து வழக்கமான ஒன்றுதான் என்று நினைத்தாலும் பெற்ற மனது அல்லவா?
“என்ன சூர்யா புதுசா எதுவும் கேஸா இல்லை ஏதும் எமர்ஜென்சியா? மிட் நைட்டுல போயே ஆகனுமா?” என்று அருகில் வந்து அமர்ந்து கேட்டார்.
“ஒரு கேஸ் விஷயமா போறேம்மா.. நீங்க போய் தூங்குங்க” என்று அவன் தன் பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருக்க..
“ம்ஹூம் நான் எங்க தூங்க.. உனக்கு ஒரு கால்கட்டு போட்டா மட்டும் தான் என்னால் நிம்மதியா தூங்க முடியும். உனக்குன்னு ஒருத்தி வந்திருந்தா.. இப்படி அர்த்தராத்திரியில் எழுந்து ஸ்டேஷனுக்குப் போகவேணும்னா விடுவாளா? என்னமோ போ!!” என்று அவர் சலித்துக்கொள்ள..
அவனது நினைவில் திவ்யபாரதியின் முகம் மின்னி மறைய.. “அதெல்லாம் விடுவா விடுவா.. அவ எனக்கு மேல பெரிய களவாணி” என்று மனம் அவளை நினைத்து நெகிழ அவனை அறியாமலேயே வார்த்தைகள் வெளி வந்தது.
“என்னது?? என்னது?? என்ன சொன்ன??” என்று வாசுகி பரபரப்பாக கேட்க..
சட்டென்று சுதாரித்தவன் “எனக்கு வரப்போற பொண்ணு என்னோட வேலை புரிஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிட்டு தான் ஆகனும்னு சொன்னேன்” என்று அன்னையின் அருகே வந்தவன் அவள் தோள் மீது கை போட்டவாறு..
“நீங்க மனசை ரொம்ப போட்டு குழப்பிக்காம போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. எப்படியும் ரெண்டு நாள் எனக்கு ஸ்டேஷன்ல தான் வேலை ஜாஸ்தி இருக்கும். சமத்தா சந்திரபிரகாஷ் கிட்ட சண்டை போடாம, குட் கேர்ளா இருங்க” என்று அவரது கன்னத்தை தட்டி விட்டு செல்ல..
எப்பொழுதும் அவசரம், கேஸ் என்றால் காலில் வெந்நீர் கொட்டா குறையாக பறந்து பறந்து செல்பவன் இன்று நிதானமாக தன்னிடம் பேசிவிட்டு, அதுவும் நான் நல்ல பிள்ளையாக இருக்க அட்வைஸ் வேற கூறி செல்பவனை ஒரு வித ஆச்சரியத்துடன் பார்த்தார். “என்னவோ இவன் கிட்ட வித்தியாச இருக்கு.. கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு தானே வரணும்!! அப்ப பார்த்துக்கிறேன்டா உன்னை” என்று முணுமுணுத்து விட்டு தூங்க சென்றார்.
ஸ்டேஷனுக்கு வந்தவனை அந்த நேரத்தில் இரவு நேர பணியில் இருந்த காவலர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆங்காங்கே அமர்ந்து தூங்கி வழிந்து கொண்டும், சிலர் டீ அருந்திக் கொண்டும் இருக்க இவனை பார்த்ததும் அனைவரும் அலறி அட்டனென்ஸ் பொஸிசனுக்கு வந்து சல்யூட் அடித்துவிட்டு தங்கள் பணியை ஆரம்பித்தனர்.
பெரிதாக யாரையும் கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் வேகமாக நுழைந்தவன், இரண்டு கேஸ்களையும் முழுதாக ஒரு முறை பார்த்துவிட்டு இரண்டுக்கும் பொதுவானவற்றை தனியாக ஒரு பேப்பரில் எழுதினான். அதில் இருவரும் சாயங்கால நேரத்தில் கடத்தப்பட்டு உள்ளார்கள் அதுவும் 4 லிருந்து 5 மணிக்குள்.. கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது.. அதிலும் அந்நேரம் இருவரையும் பாதுகாக்க சரியான ஆட்கள் அருகில் இல்லை அதாவது அன்னையோ தந்தையோ.. இவ்வாறு அவனுக்கு தெரிந்தவற்றை தனியாக எழுதி வைத்துவிட்டு இதே வயதுள்ள வேற பெண் குழந்தைகள் சமீபகாலத்தில் காண போனதாக ஏதேனும் கம்ப்ளைன்ட் வந்துள்ளதா என்று சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க அவன்
ஸ்டேஷனிலிருந்து தகவல் பறந்தது.
மாலினி இறந்த அன்று அவள் உடம்பில் ஒட்டியிருந்த சற்றே வித்தியாசமான கவர் அவன் கண்ணில் பட்டதை அரசுவிடம் எடுத்து அதை பற்றி விசாரிக்க சொல்லி இருந்தான் சூர்யபிரகாஷ்..
அந்த அர்த்த ராத்திரியிலும் அரசுக்கு போன் செய்தான். பாதி தூக்கத்தில் இருந்தவன் பதறிப் போய் போன் அட்டென்ட் செய்து “என்ன சார்?” என்று கேட்க..
“அரசு அன்னைக்கு மாலினி பொண்ணு உடம்புல சுத்தியிருந்த அந்த சீட் குவாலிட்டி பத்தி உங்ககிட்ட விசாரிக்க சொன்னேன் இல்லையா அது விசாரிசிங்களா?” என்று கேட்க..
“சர் ஈவினிங் போல நான் உங்ககிட்ட அதை சொல்வதற்கு வந்தேன், நீங்க அதுக்குள்ளே வேறு ஒரு கேஸ் விஷயமாக கிளம்பி போய்ட்டீங்க, அப்புறம் கஜா புடிச்சிட்டு வந்ததிலிருந்து என்னால சொல்ல முடியாம போயிடுச்சு சார்.. சாரி சார்” என்று மன்னிப்பு கேட்டவன்,
“அந்த சீட்டு வந்து நார்மலா கிடைக்கிற சீட் கிடையாது சார். குக்கிங் பர்பஸ்காக அதுவும் பெரிய பெரிய ஹோட்டல் ரிசார்ட்ல இந்த மாதிரி இடத்தில் ஆர்டர் பண்ணி வாங்குவாங்களாம் சார்.. ஆனா அந்த சீட் அவங்க தயாரிக்கிறது இல்லைன்னு சொல்றாங்க.. இந்த மாதிரி தயாரிக்கிற நாலைந்து இடத்தோட அட்ரஸ் கொடுத்திருக்கிறாங்க சார். நாளைக்கு நான் விசாரித்து உங்களுக்கு ரிப்போர்ட் பண்ணிறேன் சார்” என்றான் தூக்கத்தை விரட்டியபடி..
“இட்ஸ் வெரி அர்ஜென்ட் அரசு.. அந்த சீட்டு விஷயம் மட்டும் நமக்கு தெளிவாக ஆயிடுச்சின்னா நாம குற்றவாளியை ரொம்ப நெருங்கிடுவோம். இதுதான் நமக்கு இருக்கிற துருப்பு சீட்டு, இதை நாம மிஸ் பண்ணிட கூடாது. அதே சமயத்தில் அவங்க இந்த விஷயத்தை ஸ்மெல் பண்ணிட கூடாது. அப்புறம் எதிராளி உஷார் ஆயிடுவான்” என்று எச்சரித்தான்.
“ஓகே சார்.. நாளைக்கு அந்த விஷயம் உங்க டேபிளில் இருக்கும்” என்று கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்கியபடி அவன் கூற..
“நாளைக்கு இல்ல.. இன்னைக்கு!!” என்று அவன் குரலில் அதுவரை படுத்திருந்த பேசியவன் தடாரென்று எழுந்து உட்கார்ந்து “சார்.. இப்போ நீங்க ஸ்டேஷன்ல இருக்கிங்களா?” என்று அதிர்ந்து கேட்க..
“எஸ்!!!” என்றான் அதிகாரமாக..
மணியைப் பார்க்கும் அதுவோ இரண்டை தாண்டி சென்று கொண்டிருக்க “இந்த நேரத்திலா சார்..” என்று அரசு இழுக்க..
“நேரம் காலம் எல்லாம் நம் வேலைகளில் கிடையாது அரசு” என்று அழுத்தமாக உச்சரிக்க.. அதற்குப் பின் ஏன் அவன் தூங்க போகிறான். சடான வீட்டிலிருந்து கிளம்பி 4 மணிப் போல வந்து சேர்ந்தான் ஸ்டேஷனுக்கு.
தன்னிடமுள்ள அட்ரஸை எஸ்பியிடம் காட்ட..
அதைப் பார்த்தவன் “எப்போ போறீங்க? நீங்க எப்படி விசாரிக்க போறீங்க?” என்று கேட்க..
“என்ன சார்.. நம்மள பார்த்தாலே பயந்து எல்லா உரிமையும் கக்கிட மாட்டான்” என்று சற்று அலட்சியமாக பதில் வந்தது அரசுவிடமிருந்து.
எஸ்பி மெதுவாக இருக்கையில் சாய்ந்து கால் மீது கால் போட்டு அவனைக் கூர்ந்து பார்த்தவன், “என்கொய்ரி போகும் போது நீங்க மட்டும் தனியா போகாதீங்க அரசு, நாலு கான்ஸ்டபிள் சேர்த்து கூட்டிட்டு போங்க.. அவன கேட்டு உண்மை வரலைன்னா அங்கேயே போட்டு நாலு மிதி மிதித்து எல்லா உண்மையையும் வாங்கிடுங்க சரியா?” என்று இலகுவான குரலில் கேட்க..
வேகவேகமாக “சரி சார்” என்று மண்டையை ஆட்டினவன், உள்ளுக்குள் ‘எஸ்பியின் பேச்சுக்கும் அவனது பார்வைக்கும் சம்பந்தமே இல்லாதது உணர்ந்து ‘ஏதோ தப்பா பேசிட்டேன் போல’ என்று எச்சில் விழுங்கினான் அரசு..
“சார்..” என்று மெதுவாக இழுக்க..
சாய்ந்து இருந்தவன் சட்டென்று நேராக உட்கார்ந்து மேஜையில் ஒரு தட்டு தட்ட அதில் உள்ள பொருட்கள் எல்லாம் அந்தத் தட்டில் அதிர்ந்து ஒரு எம்பு எம்பி பின் தனது இடத்தில் வந்து அமர்ந்தன. அரசுவோ அதிர்ந்தவன் கால்களை நேராக நிமிர்த்தி வைத்து விறைத்து நின்று “சார்” என்றான்.
“டாம் யுவர் சார்.. நான் ஏற்கனவே உன்கிட்ட நாம விசாரிக்கிற விஷயம் வெளியில் தெரியக்கூடாது, ஈசியா எதிராளி ஸ்மல் பண்ணிடுவான் சொன்னேன். இதுல டைரக்டரா போய்.. அதுவும் யூனிஃபார்ம்ல போய் விசாரிக்கிறேன் என்று சொல்றீங்க?” என்று ஆத்திரமாக கேட்க..
“சாரி சார்” என்றான் அரசு தன் தவறை உணர்ந்து..
ஒரு ரெஸ்டாரன்ட் ஓனர் மாதிரி போய் அவங்ககிட்ட பேசிக்கிட்டு விஷயத்தை வாங்குங்க என்று சொல்லிக் கொடுத்தவன்,
“இப்போ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு 9 மணிக்கு மேலே கிளம்பி வாங்க” என்றான்.
பின் நேராக சிறையில் அடைத்து வைத்திருந்த கஜா மற்றும் அவனது ஆட்களை பார்த்தவன் கஜாவை மட்டும் தனியாக ஒரு இருட்டு ரூமில் அடைத்து வைக்க கட்டளையிட்டான். ஏற்கனவே இவனது அடியில் சற்று பயந்து இருந்த மற்ற அடியாட்கள் எப்பொழுது தங்கள் தலைவரை தனியாக அழைத்து சென்றதும் இன்னும் பயந்து நடுங்கினர். ஏற்கனவே இவர்கள் ஆட்களில் இரண்டு பேரை என்கவுண்டரில் போட்டுத் தள்ளியவன். முதலில் அதை நினைத்து கோபமாக இருந்தவர்களுக்கு இப்போது அதை நினைக்க நினைக்க உயிர் பயம் வந்தது. அங்கே இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்த கஜவோ இருட்டுக்கு கண்கள் பழக்கப்பட்ட உடனே அந்த அறையைச் சுற்றிப் பார்க்க, அந்த அறை முழுவதும் ரத்தக் கறைகளாகவும் அவனால் கணிக்க முடியாத சில எந்திரங்கள் அங்கு இருப்பதை கண்டவனுக்கு அட்ரினலின் அதிகமாக சுரந்து வியர்வையில் குளித்தான்.
அப்போது படாரென்று கதவைத் திறக்க பயத்தில் எழுந்து நின்றான். அங்கிருந்து லைட்டை உயிர்ப்பித்த படி உள்ளே நுழைந்தான் எஸ்பி. “என்ன கஜா உன்ன மட்டும் இங்க தனியா வச்சிருக்கேன் பாக்குறியா.. இதுக்கு பேரு ட்ரீட்மெண்ட் ரூம்னு சொல்லுவோம்.. இங்கே இருக்கிற ஒவ்வொரு சாதனங்களின் வச்சு ஒவ்வொருவிதமாக சித்ரவதை பண்ணி உண்மையை வரவழைக்க தான். இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி பார்த்தாலே தெரியுமே!!” என்று சொல்ல இருட்டில் லேசுபாசாக தெரிந்த ரத்தக் கறைகள் வெளிச்சத்தில் பயங்கரமாகத் தெரிந்தது. என்னதான் ரவுடியாக இருந்தாலும் அவனுள்ளும் உயிர் பயம் இருக்கத்தான் செய்தது.
“உனக்கு ரெண்டு மணி நேரம் டைம் அதுக்குள்ள ஒன்னு விடாம எல்லா உண்மையையும் நீ கக்கணும்.. எந்த உண்மையனு கேக்குறியா? சஞ்சனா!! தங்க நிவாஸ்!!!” என்று கூற அதுவரை பயத்திலிருந்தவனுக்கு இதைக் கேட்டதும் இன்னும் படபடத்தது உடம்பு.
பின் தன் அறைக்கு வந்தவன் மணியை பார்க்க அது ஐந்தை காட்டியது. அங்கிருந்த இருக்கையிலேயே தலையை சாய்த்து ஒரு ஸ்டூலை எடுத்து காலுக்கு வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான் எஸ்.பி. சரியாக இரண்டு மணி நேரம் கூட உறங்கி இருக்க மாட்டான், அதற்குள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்து அவனுக்கு பேஸ் தகவல் வந்து இருப்பதாக என்று கான்ஸ்டபிள் கூற.. சரியாக தூங்காததால் கண்கள் எல்லாம் ரத்தம் என சிவந்து இருக்க, அதை கசக்கி கொண்டே “எல்லாத்தையும் எடுத்து ரெடி பண்ணுங்க” என்ற குளியலறையில் புகுந்து சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.
அதாவது கிட்டத்தட்ட 30 கேஸூகள் வந்திருந்தன. மதுரை ராமநாதபுரம் செங்கல்பட்டு கன்னியாகுமாரி என்று அதன் அருகில் உள்ள ஊர்களில் இருந்து வந்திருந்தது. இவர்களுக்கு தேவை 10லிருந்து 15 வயதுள்ள பெண்கள் பற்றிய குறிப்புகள். அதில் பத்து மட்டுமே அவ்வாறு இருக்க மற்றவையெல்லாம் அதற்கு மேல் உள்ள பெண்கள். தனக்கு தேவையானவற்றை தனியாக பிரித்து எடுத்தவன் அதில் உள்ள பெண்களின் பின்னணியை ஆராய்ந்தான்.
சரியாக அதில் நான்கு பெண்களின் பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தனர். இரண்டு பெண்கள் பெரிய பின்புலமற்ற கூலித்தொழிலாளிகளின் பெண்கள். பின்பு அவர்கள் காணாமல் போனதாக சொல்லப்பட்ட நேரத்தை பார்க்கும்போது அனைவரும் அதே மாலை நேரத்தில் தான் காணாமல் போய் இருந்தனர்.
பெரும்பாலும் நாலில் இருந்து ஆறு மணி என்பது பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும். பிள்ளைகள் ஸ்கூலில் இருந்து காலேஜில் இருந்த வீடு திரும்புவதும் அதேபோல பெரியவர்கள் அலுவலகத்திலிருந்து திரும்புவதும் அந்நேரத்தில் தான். அந்த நிலையில் பெரும்பாலும் சோர்வுடன் வீட்டுக்கு போனால் போதும் என்பதே அனைவரின் விருப்பம். இந்தக் கும்பல் அதைத்தான் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது என்பதை நினைத்தவனுக்கு வெறியேற, கோபத்தில் கண்கள் சிவக்க, ‘இவனை கிடைக்கிற அன்னைக்கு என் கையால தான் இவனுக்கு சாவு’ என்று நினைத்துக் கொண்டான்.
இவ்வாறு அன்று நாள் முழுவதும் காணாமல்போன பெண்களைப் பற்றிய தகவலை அறிந்து, அவற்றை எல்லாம் திரட்டி தன் வழக்குக்கும் இந்த வழக்குகளும் உள்ள ஒற்றுமை வேற்றுமை எல்லாம் அவன் சரி பார்த்துக் கொண்டிருக்க.. இடையிடையே அரசும் தான் சென்ற இடங்களில் எல்லாம் அந்தக் கவர் பற்றிய விவரத்தை தெரிந்து கொண்டு போனில் எஸ்பியை தொடர்பு கொண்டு கூறிக் கொண்டிருந்தான். முதல் மூன்று இடங்களில் அவர்கள் எதிர்பார்த்தபடி எந்த தகவலும் கிடைக்கவில்லை நான்காவது இடத்தில் தான் அந்த கவர் அவர்கள் கம்பெனியின் தயாரிப்பு என்று தெரியவந்தது. ஆனால் இதுபோல் அவர்கள் மூன்று ரெஸ்டாரன்ட், இரண்டு ரிசார்ட்டுக்கு செய்து கொடுப்பதாக சொல்ல.. அவற்றின் அட்ரஸ் கலை அரசு கேட்க.. “நீங்க ரெஸ்டாரண்ட் ஓனர் தானே சொன்னிங்க? உங்களுக்கு எதுக்கு இந்த இன்ஃபர்மேஷன் எல்லாம்?” என்று சந்தேகத்துடன் அவனை பார்த்தார் அந்த ஓனர்.
தனது ஐடி கார்டு காட்டியவன் “கேஸ் விஷயமா வந்திருக்கேன் சொல்லுங்க” என்று சற்று மிரட்டலாக கேட்க, அந்த ரெஸ்டாரண்ட் மற்றும் ரிசாட்டுகளின் அட்ரஸை அவனுக்கு கொடுத்து அனுப்பினார்.
நான் அதை பெற்றுக்கொண்டவன் கொண்டுவந்து எஸ்பியிடம் காட்ட.. அதில் பிரபல கன்சட்ரக்சன் அதிபர் சுதர்மனோட ஸ்டார் ஹோட்டலும் அதில் இருந்தது. தங்க நிவாஸை புரமோட்டரும் அவரேதான்!!
காலையிலிருந்து அவன் இதிலேயே மூழ்கிவிட மாலை திவ்யபாரதி சந்திப்பதாக சொன்னதை சுத்தமாக மறந்து போனான் அந்த கடமை தவறாத காவலன்.
மறுநாள் காலை போனை வாங்க எங்க வரவேண்டுமென்று எஸ்பிக்கு போன் செய்தாள். தந்தையின் ஃபோனை இன்று மட்டும் வைத்துக் கொள்கிறேன் என்று கெஞ்சிக் கூத்தாடி வாங்கி வைத்து இருந்தாள். கேட்டதற்கு தன்னுடைய ஃபோனை சாந்தினியிடம் மறந்து கொடுத்து விட்டேன் என்று வழக்கம்போல பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு தந்தையின் போனை கைப்பற்றி இருந்தாள். காலை அட்டன்ட் செய்தவனோ வழக்கம்போல சங்கீத் ரெஸ்டாரன்ட் ரூப் கார்டன் என்றான்.
ஆனால் மறுநாள் மாலை காத்திருந்து காத்திருந்து கண்கள் பூக்க பூக்க.. எத்தனை முறை டயல் செய்தாலும் அவள் போனையும் எடுக்கவில்லை அவனின் போனையும் எடுக்கவில்லை எஸ்பி..
அவனுக்கு ஆபத்து என்று நினைக்கும் அளவுக்கு அவன் சாதாரணமானவன் இல்லையே!!
“இதுக்குதான் இந்த போலீஸ்காரனை லவ் பண்ணக்கூடாது. ஒரு ஆத்திர அவசரத்துக்கு லவ் பண்ணா கூப்பிட்டா வரவே மாட்டானுங்க!! கஞ்சி சட்டை” என்று திட்டி விட்டு அவள் வீட்டிற்கு சென்று விட..
நடு இரவு 12 மணிக்கு அவள் தந்தையின் நம்பருக்கு அழைத்த எஸ்பியோ அவளை வீட்டை விட்டு வெளியில் வர சொன்னான்.
“என்னது வெளியிலையா? நடுராத்திரியில் எதுக்கு கூப்பிடுறிங்க?” என்று இவள் தூக்கக்கலக்கத்திலே கேட்க..
“ம்ம்.. வேற எதுக்கு குடும்பம் நடத்தத்தான்” என்றவன், “உங்க அபார்ட்மெண்ட் பக்கத்துல தான் இருக்கேன் எழுந்து வாடி தூங்குமூஞ்சு” என்றான்.
“எங்க அப்பா அம்மா பார்த்துட்டு கேட்டா நான் என்ன பதில் சொல்ல?” என்று அவள் பதற..
“என் மாமனார் மாமியார் கிட்ட, உங்க மாப்பிள்ளையோட டூயட் பாட போறேன்னு சொல்லிட்டு வா” என்று போனை வைத்து விட்டான்.
“அச்சோ.. உன் அலும்பு தாங்கலையே.. முன்னாடி பார்த்து பார்த்து கடுப்பேத்துனான்.. இப்ப காதல் சொல்லி சொல்லியே ஒரு வழி ஆகிறான் நம்மை” என்று அலுத்துக் கொண்டாலும், அவனை காண யாரும் அறியா வண்ணம், பூனை நடையிட்டு மெதுவாக கதவைத் திறந்து தலை முதல் கால் வரை ஷாலை போர்த்திக்கொண்டு அவனை காண சென்றாள்.
அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டி கண்களுக்கு படாமல் வெளியே சென்றவள், அர்த்தராத்திரியில் அந்தகாரமான இரவில் எங்கும் நிசப்தமாக இருக்க.. எஸ்பிஐ காணாமல் கண்களால் தேடினாள். அந்த இரவில் மெல்லிய சத்தம் கூட அவளுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது. “ஐயோ போனை வேற வீட்டிலேயே வெச்சுட்டு வந்துட்டேன்.. இப்போ இவனை எப்படி தேட?” என்று கைகளை பிசைந்து கொண்டே, இருக்க சரேலென்று பின்பக்கமாக இரு வலுவான கைகள் அணைக்க பதறி அவள் கத்த போக.. ஆனால் ஸ்பரிசமும் அவன் யார் என்று கூற.. மெல்ல அவன் கைக்குள் அடங்கி போனாள் மாது.
பின்னிருந்து அணைத்தவன் அவளது இடது கழுத்தில் முத்தங்களை வாரி வழங்க.. அதில் மொத்தமாக தொலைந்த பெண்ணவள் சிணுங்க.. அவளது காது மடல்களில் சூடான முத்தங்களை பதித்தான். ஒவ்வோரு முத்தத்திற்கும் “ரதி.. ரதி.. ரதி” என்று தாபமாக அழைத்தான் அந்த காதல் மன்மதன். அடுத்த நொடி அவளது இதழ்களை கொய்திருந்தான். காலையிலிருந்து இருந்த அழுத்தம் அனைத்தையும் இந்த ஒரு இதழணைப்பில் கரைத்துக் கொண்டிருந்தான். அவளுள் அவன் கரைந்து கொண்டிருந்ததான். அவளும் அவன் இதழ் செய்த ஜாலத்தில் மற்றதை மறந்து அவனின் கேசத்தை இறுக்கமாக பற்றி இருந்தது அவளது தளிர் கரங்கள்.
மெதுவாக அவளை விடுத்து இருளிலும் பளிங்கென மின்னும் அவளது முகத்தை வருடியவாறு “சாரிடி.. காலையிலிருந்து ஒரே டென்ஷன் கேஸ் விஷயமா.. அதான் உன்னோட கால் அட்டன்ட் பண்ண முடியல” என்று முதல் முறையாக மன்னிப்பு வேண்ட..
அவளோ முறுக்கிக்கொண்டு “ஒன்னும் தேவை இல்ல. நான் உங்க மேல கோவமா இருக்கேன், போன குடுங்க நான் போறேன்” என்று கூறினாள்.
“அப்போ கோபமா இருக்குறவ கொஞ்ச நேரம் முன்னாடி..” என்று அவள் இதழ்களில் தன் விரல்களால் கோலமிட்டு காட்ட..
“அது வேற டிபார்ட்மெண்ட்!! இது வேற டிபார்ட்மெண்ட்!!” என்று புருவம் உயர்த்தி அவள் சொல்ல..
“ஏண்டி டிபார்ட்மெண்ட் ஆளுக்கே டிபார்ட்மெண்ட் பத்தி சொல்லுறுயா நீ?” என்று கேட்டவன் கடகடவென்று சிரிக்க.. சட்டென்று அவளது வாயை தனது கைகளால் அழுத்தியவள் சுற்றும் முற்றும் பார்த்து “இப்படி அர்த்தராத்திரியில் அரக்கன் மாதிரி சிரிக்கிறீங்க? யாராவது பார்த்தா என்ன ஆகிறது?” என்று அவள் பயந்திட..
“என்னது அரக்கனா!! நானா?” என்றவன் “அரக்கன் என்ன தெரியுமா செய்வான்?” என்று விஷமத்தோடு மீசைக்குள் சிரிப்பை ஒளித்தபடி கேட்க..
அவள் உதட்டைப் பிதுக்கி தெரியவில்லை என்று கூற..
“உன்னை மாதிரி பொண்ணுங்களை பார்த்தா.. அரக்கன் ஸ்வாகா பண்ண கடத்திட்டு போய்டுவான். நான் இப்போ உன்ன கடத்திக்கிட்டு போக போறேன்” என்றவன், அவள் “என்ன!!!” என்று அதிர்ந்து சுதாரித்துக் கொள்ளும் முன், அருகிலிருந்த தனது காரில் அவளை கிடத்தி கடத்தி சென்றான் இந்தக் காதல் ராவணன்..
15
சூர்யபிரகாஷ் தன் காதல் பைங்கிளியை கடத்தி சென்றான் கலியுக காதல் ராவணனாக!!
ஆனால் அவன் கவர்ந்து சென்றது என்னவோ அடுத்தவன் மனையாளை அல்ல தன் மனம் கவர்ந்த மண்டோதரியை!!
இருள் சூழ்ந்திருந்த நேரம் எங்கும் நிசப்தமான அமைதி காரை வேகமாக ஓட்டிச் சென்றான் எஸ்பி. அருகில் அமர்ந்து இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவனைத்தான் முறைத்துக் கொண்டு இருந்தாள் திவ்யபாரதி. பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் சிறுமியை போலவே இருந்தாள் அவள்..
எஸ்பியோ வண்டியை செலுத்துக் கொண்டே அவளை பார்த்து வசீகர புன்னகை சிந்த..
“ஆரம்பிச்சிட்டான் ஆரம்பிச்சிட்டான்.. சிரிச்சு சிரிச்சே நம்மல சிக்க வைக்கிறான்..
சிரிச்சு தொலையாதடா சின்ன புள்ள மனசு என்னமோ பண்ணுது” என்று முனுமுனுத்துக் கொண்டே தன் தலையை ஜன்னல் பக்கம் திருப்பி கொண்டாள்.
அவளின் செயலை பார்த்துக் கொண்டிருந்தவன் வாய்விட்டு இன்னும் அழகாக சிரித்தான். அவ்வளவு கவர்ச்சியாய் இருந்தது!! அவன் சிரிப்பு சத்தத்தில் திரும்பி பார்த்தவள், அவனின் அதீத கவர்ச்சி புன்னகையில் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போலவே வெறித்து பார்த்தாள்.
அவளின் வெறித்த பார்வையை பார்த்தவனுக்கு கொஞ்சம் வெட்கம் கூட வந்தது. அதில் இன்னும் அவன் பேரழகனாக தெரிய.. “ஏண்டி இப்படி பார்த்து தொலையுற?” என்று சிரிப்புடன் கேட்டவனை பார்த்து, “நீங்க ஏன் இவ்வளவு மேன்லியா, கவர்ச்சியா இருக்கீங்க? இனி நீ உங்கள காப்பதுறதே எனக்கு பெரும் வேலையா போய்டும் போலையே” என்று அவள் பெருமூச்சு விட..
“எது?? என்னை.?? நீ?? காப்பத்த போற??” என்று அவன் சிரிக்க.. அவள் எக்கி அவன் கன்னத்தை கடித்து வைக்க.. அதில் சட்டென்று காரை நிறுத்தியவன், “கடிக்கனும்னா இங்க கடிக்கனும் டி கேடி” என்று தன் இதழ்களை காட்ட, ம்ஹீம் என்று தன் அதரங்களை கைகளால் பொத்தி கொண்டு தலையை ஆட்டி வேண்டாம் என்றாள்.
“வேண்டாமென்றால் பொண்ணுங்க பாசையில் வேண்டும் என்று அர்த்தமாம்..
இப்ப சொல்லு உனக்கு வேணுமா? வேண்டாமா?” என்று குறும்புடன் கேட்க..
திருதிருவென்று விழித்தாள் திவ்யபாரதி..
வேணும் சொன்னாலும் அதற்கும் ஒரு காரணத்தைக் கற்பிப்பான் இந்த காவலன்..
அதனால் அவள் அஹிம்சையை தத்தெடுக்க.. அவனோ அதை இன்ப இம்சையாய் மாற்ற விழைந்தான்.
பெண்ணின் உடலை வீணையென தன் வனப்பு விரல்களால் மீட்டிட, அதில் கண்மூடி சிலிர்த்து சிரித்தாள். முன்னே குனிந்து மெல்ல அவளின் முகத்தில் ஊத, ஏற்கனவே சிலிர்த்திருந்த அவளின் தேகம் இப்போது ஊதக் காற்று பட்டதை போல இன்னும் தளர்வடைந்தது. அவளின் கைகள் ஷாலை இறுக்க பற்றிக் கொள்ள, மிக மிக சூடாக இறங்கியது அவனின் முத்தங்கள் அவள் முகத்தில்.. உணர்ச்சி தாக்கத்தில் நடுங்கினாள் பாவையவள்.
விழிகள் மூடி இருந்தவளின் மூக்கை உரசி உரசி தாபம் ஏற்றினான். விழிகள் திறந்து தன் முகம் அருகே முகம் ஒட்டி நின்றவனை பார்த்தவள் உதட்டை கடிக்க.. தன் பற்களால் மெல்ல விடுவித்தவன், தன் உதட்டினை அவளின் உதட்டில் இறுக்கி, இறக்கி வைத்தான். அழுத்தமான முத்தத்தில் அதரங்கள் இரண்டும் ஒட்டிக் கொள்ள, கண்கள் மூடிக் கொண்டவள் கைகள் ரெண்டும் ஆண்வனின் முதுகை பற்றியது வன்மையாக..
ஒன்றில் ஒன்று லயித்து..
உலகம் மறந்து..
காதலில் தகித்து..
மோகத்தில் முகித்து..
இருந்தன காதல் புறாக்கள் இரண்டும்!!
“இப்ப நாம எங்க இருக்கோம்?” அவனில் இருந்து பிரிந்து சுற்றும்முற்றும் பார்த்து அவள் கேட்க..
“யாருக்கு தெரியும்?” இரு தோள்களையும் குலுக்கிக்கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“என்ன இப்படி சொல்றீங்க!! அம்மா அப்பா காணோம்னு தேடுவாங்க” என்று அவள் பயத்தில் கூற..
“கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ட்ராவல் பண்ணி வந்துயிருக்கோம்.. இப்ப எங்க இருக்கோம்ன்னு எனக்கே தெரியாது. தோனுன ரூட்டில ரோட்டில வந்து சேந்துருக்கேன். இனிமேதான் கூகுளாண்டவர் கிட்டு வழி கேட்டு நாம எங்க இருக்கோம் கண்டுபிடிக்கணும்” என்று கூறினானே ஒழிய, அதற்கான வேலையை சிறிதும் செய்யாமல் தன் சீட்டை சாய்த்து அதில் கண் மூடி படுத்திருந்தான்.
பின் அவள் பக்கமாக திரும்பி, காரின் சீட்டை சாய்த்தவன் அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான். அகன்ற தோள், விரிந்த மார்பு ஒட்டிய வயிறு என கிரேக்க சிலையென இருந்தவனின் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டாள் பாவை..
அவனது இடது கை அவள் காது மடலை நீவி விட, வலது கையோ அவளது இடையில் ஊர்வலம் நடத்த, அவள் தலை மீது தன் தாடையை பதித்தவன், அவ்வப்போது அவள் உச்சியில் தன் இதழ்களை பதிந்து கொண்டிருந்தான். அவன் ஏதோ சிந்தையில் இருப்பது போல தோன்ற, அவளும் அதிசயமாக அவனை தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவனுள் கட்டுண்டு இருந்தாள்.
அவளின் முகத்தை அவனின் வலது தோளில் பதித்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் உறங்கி போக, உறங்கும் அவளை பார்த்துக் கொண்டே இருந்தவன், “என்னடி பண்ணி வைச்ச என்னை? எஸ்பின்னு டெர்ரா சுத்திக்கிட்டு இருந்தேன்.. இப்படி டீன்ஏஜ் பாய் மாதிரி திருட்டுத்தனம் பண்ண வைச்சிட்டியே டீ?” என்று அவள் மூக்கின் மீது குட்டி குட்டி முத்தங்களை வைத்துக்கொண்டே அவன் கூற, அவளோ அதில் கூச்சம் கொண்டு மூக்கை தேய்த்து கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள். அவனும் அவளை நெருங்கி அணைத்துப் படி உறங்கினான்.
அந்த அணைத்தலில் அவன் மனதில் இருந்த அனைத்து மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் விலகிக் கொண்டிருந்தது இருளைப் போல..
எங்கோ போன் சிணுங்கும் சத்தம் கேட்க அதில் கண் விழித்தாள் திவ்யபாரதி.. அப்போதுதான் தாங்கள் இன்னும் காரிலேயே இருப்பது புரிய, அதிலும் எஸ்பியின் கை அணைப்பில் அவன் மார்பிலே உறங்குவது புரிந்து விலக எத்தனிக்க.. அவனின் முரட்டு கையோ அவளை ஆக்டோபஸ் போல வளைத்திருந்தது. அவனின் பிடியில் இருந்து விலகி அவள் போனை எடுத்து பார்க்க.. மணி காலை ஆறை காட்டியது.. அதற்குள் ஐந்து கால்கள் வந்திருந்தன அவளது மொபைலில்.. யார் என்று எடுத்துப் பார்க்க அவளது அன்னை தான்!!
“ஐயையோ ரத்னா எப்பபோ என்னை வீட்டில தேடி பார்த்ததுனு தெரியலையே.. நான் வீட்டுக்கு போகும்போது தொடப்பக்கட்டையோட தான் என்னை வரவேற்கும் போல.. நான் என்ன பண்ணுவேன்” என்று பயந்தவள், தன் திருட்டுத்தனத்தை சமாளிக்க நட்பின் துணையை அழைத்தாள். வேறு யார் நம் பாவப்பட்ட கர்ணா தான்!!
தூக்க கலக்கத்திலேயே “ஹலோ” என்றான்..
“டேய் குண்டோதரா!!” என்று அவள் அலற..
“என்ன டி அதிசயமா இருக்கு?? இவ்ளோ காலைல நீ எனக்கு போன் பண்ணி இருக்க” என்று அவன் கேட்க..
“டேய் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா..
எங்க அம்மாகிட்ட நான் வாக்கிங் போய் இருக்கேன் பொய் சொல்லப்போறேன்.. அதுவும் உன் கூட.. காலையிலேயே 5மணிக்கு.. ஏதாவது சொதப்பி வச்ச உன்னை பொலி போட்டு விடுவேன்” என்று அவள் மிரட்ட..
“நீ சொல்லப் போறியா? அப்ப நீ இப்ப எங்க இருக்க?” என்று அவன் பதறி எழுந்து அமர..
“அதுவந்து.. அதுவந்து..” என்று அவள் இழுத்தாள்.
“திவி.. இப்போ சொல்ல போறியா? இல்லையா?” என்றவனின் குரலில் கடுமை ஏற..
“நான் எல்லாம் வந்து விவரமா உன் கிட்ட சொல்றேன் டா” என்று அவள் நழுவ பார்க்க..
“இப்ப நீ சொல்லலைன்னா நானே போய் அத்தை கிட்ட போட்டுக் கொடுப்பேன்” என்று அவன் இம்முறை மிரட்ட..
“எஸ்பி சார் கூட இருக்கேன் டா” என்று மெல்லிய குரலில் வெட்கத்துடன் கூற..
“என்னடி சொல்லற?” என்று அவன் அதிர..
“இங்க பாரு சும்மா சும்மா வாய பளக்காத!!நான் சொன்னதை நீ செய்!! நான் வந்து உனக்கு வீட்ல எல்லாம் விவரமா சொல்றேன்” என்று போனை ஆப் செய்தாள்.
அவள் சொன்னதுபோல கருணா ரத்னாவுக்கு அழைத்து தாங்கள் இருவரும் காலையில் வாக்கிங் வந்ததாகவும், கொஞ்ச நேரத்தில் திரும்பி வீட்டுக்கு வந்து விடுவதாகவும் கூறியவன், “திவியோட போன் சாந்தினி கிட்ட இருக்கு ஆன்ட்டி அதுக்கு கால் பண்ணாதீங்க” என்று விட்டு போனை வைத்து விட்டான்.
கர்ணாவிடம் பேசி முடித்தவள் போனை அணைக்க.. எஸ்பியோ அவளை இறுக்க அணைத்து தன்னுள் புதைத்து கொள்ள..
“ஐயோ விடுங்க.. அம்மா இதுவரைக்கும் என் போனுக்கு அஞ்சு தடவ கால் பண்ணிட்டாங்க.. வீட்டுக்கு போகனும் கிளப்புங்க” துரிதப்படுத்த..
கண்விழித்து பார்த்தான் நன்றாக விடிந்திருந்தது பொழுது.. பெண் அவளைப் பார்த்து வசீகரம் சிரிப்பை சிந்தி அவளது பிறை நுதலில் அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்து “லவ் யூ ரதி.. நேற்றிலிருந்து ஒரு கேஸ்ல செம டென்ஷன் தூங்க கூட இல்ல.. இப்பதான் ஓகே” என்றவன் காரை திருப்பினான் சென்னை நோக்கி..
வீட்டுக்கு செல்லும் வழியில் சஞ்சனா கேஸ் பற்றிய விபரங்களை அவளிடம் சொல்லிக் கொண்டே வந்தான்.
அப்பார்ட்மெண்டில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் பார்க்கில் அவளை இறக்கிவிட, அங்கே அவளுக்காக கர்ணன் காத்திருக்க, அவள் இறங்கி கர்ணனோடு செல்லும்வரை அவளையே பார்த்து இருந்தவன் பின் தன் வீட்டை நோக்கி காரை திருப்பினான்.
கர்ணனோ கோபத்தில் அவளை முறைத்துக் கொண்டே வந்தான். ஆனால் திவ்யாவோ அவனை திரும்பிப் பார்த்தால் தானே.. அவள் மனதை முழுவதும் ஆக்கிரமித்து இருப்பது சஞ்சனா மற்றும் மாலினி பற்றிய நினைவுகளே!!
வீட்டிற்கு வந்தவன் அவசரமாக கிளம்பி மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றான்.
நேற்று இரவில் வராதது பற்றி வாசுகி ஏதும் கேட்கவில்லை இது வழக்கமான ஒன்றுதான் என்று நினைத்துவிட்டார்.. அவர் அறிய நேர்ந்தால்??
நடு இரவில் கஜாவை இருட்டு அறையில் நன்றாக பயமுறுத்தி விட்டு வந்தவன் இப்போது சென்று அவனை பார்க்க..
ஒருவனை அடித்து துன்புறுத்துவது ஒருவகை பயம் என்றால்!! அடிக்காமலே அவனை அந்த பயத்திலேயே உலவ விடுவது மற்றொரு வகை!! முதல் வகையில் ஆவது சிறிது நேரம் அடி வாங்கியதும் வலி மட்டுமே மிஞ்சும்.. ஆனால் இரண்டாவது வகையில் என்ன செய்யப்போகிறானோ? என்ன செய்யப்போகிறானோ? என்ற பயத்திலேயே நம் பாதி பலம் போய்விடும்.. கஜாவும் இந்நிலையில் தான் இருக்கிறான் இப்போது.
ஏற்கனவே நேத்து அடித்த அடியில் உடம்பு பாதி ரணமாக இருக்க, இப்போது இந்த அறையில் சுற்றியுள்ள சாதனங்களை பார்க்கும் போதே சொல்லியது இம்முறை அடித்தால் கண்டிப்பாக தன்னுயிர் மிஞ்சாது என்று!! எவ்வளவு பெரிய ரவுடியாக இருந்தாலும் உயிர் பயம் இருக்கத்தான் செய்யும் ஒருசிலரை தவிர..
ஒருவரின் பயம் அவரது பலவீனம்!!
அந்த பயம்தான் மற்றவரின் ஆயுதம்!!
பெரும்பாலான தைரியசாலிகள் பயப்படாமல் இருப்பதில்லை!!
பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதாலே அவர்கள் தைரியசாலிகள்!!
கஜாவும் இந்த வகைதான். எஸ்பி என்ன செய்யப்போகிறான் என்று அறியாமல் பயத்திலேயே விழித்து கொண்டிருந்தவன் தூங்க முடியாமல் தவித்தான். கூடவே அந்த அறையில் ஓடித்திரியும் சிறுசிறு பூச்சிகள் கூட அவனின் பயத்தை அதிகரிக்கச் செய்தது.
அவன் அறையை படாரென்று திறந்துகொண்டு உள்ளே நுழைந்து எஸ்பி அறையின் விளக்கை போட்டுவிட்டு அவன் எதிரில் அமர்தலாக அமர்ந்தான்.
அங்குள்ள சாதனங்கள் ஒவ்வொன்றையும் காட்டி விளக்குமாறு தன் அருகில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு உத்தரவிட்டான்.
ஆஜானுபாகுவான உடம்பு கொண்டு அந்த கான்ஸ்டபிள் தன் மீசையை ஒரு முறை நன்றாக முறிக்கிவிட்டு கஜாவை கொடூரமாக பார்த்து முதலாவதாக இருந்து அந்த சாதனத்தை நோக்கி சென்றான்.
“பாக்குறதுக்கு சின்ன ஸ்டூல் மாதிரிதான் இருக்கனும் தப்பா நினைக்காதே.. இந்த ஸ்டூலுல உன்ன படுக்க வச்சு, உன் கை கால்களை வளைத்து இந்த ஸ்டூல் கால்களோடு கட்டிடுவோம். உன் முட்டியிலேயே லத்தியால் இரண்டு பக்கமும் ரெண்டு பேரும் நின்னு அடிக்க ஆரம்பிப்பாங்க… முதலில் கொஞ்சம் கொஞ்சமா உன் முட்டி எலும்பு உடைய ஆரம்பிக்கும், அதுக்கு அப்புறம் உன்னோட முதுகெலும்பு வலிக்க வலிக்க…”
என்று அந்த கான்ஸ்டபிள் ஒவ்வொரு சாதனங்களையும் விளக்கி கூற, கஜவோ பயத்தில் நாக்கு வரண்டு உடலெல்லாம் தடதடவென ஆட வியர்வையில் குளித்தான்.
எஸ்பி அவனின் பயத்தையும் முக உணர்ச்சிகளையும் அவதானித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான். அவனாக எந்த ஒரு கேள்வியும் அவனிடம் கேட்க வில்லை..
சடாரென்று எழுந்த கஜா கீழே அமர்ந்து எஸ்பியின் கால்களை பிடித்துக் கொண்டவன் “சார் சார் இதெல்லாம் சத்தியமா நான் தாங்க மாட்டேன் சார் என்னை விட்டுடுங்க” என்று கதற..
அவனோ தாடையை தடவியவாறு “உண்மைய சொன்னா நீ உயிரோட இருப்ப” என்று கூற..
உண்மையை சொல்லாவிடில் எஸ்பியால் அவனுக்கு ஆபத்து.. உண்மையைச் சொன்னால் எதிராளியால் அவனுக்கு ஆபத்து.. என்ன செய்வது என்று புரியாமல் ஆனது ஆகட்டும் என்று தனக்குத் தெரிந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.
“சார் எங்க ஏரியாவுல 20 வயசுல நான் ஒரு கொலை பண்ண, அதிலிருந்து நானும் பிரபலமானேன்.. அதுக்கப்புறம் ரங்கன்னு ஒரு ஆளு கிட்ட கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அவர் கிட்ட இருந்து சில பல வித்தைகள் வேலை எல்லாம் கத்துக்கிட்டு வெளியே வந்து எனக்குன்னு சில ஆளுங்கள சேர்த்துக்கிட்டு வேலை பார்த்துகிட்டு இருக்கேன் சார்”
“மேலே சொல்லு” என்று கைகளை அசைத்தான் எஸ்பி..
“சார்.. இன்னார் கிட்டன்னு நான் வேலை பாக்குறது கிடையாது சார்.. யார் எந்த வேலை கொடுத்தாலும் எங்களுக்கான கமிஷன் பேசிட்டு அந்த வேலையை செஞ்சு கொடுத்துடுவோம். அப்படித்தான் அந்த பொண்ணோட போட்டோவை என் மொபைலுக்கு ஒருத்தன் அனுப்பியிருந்தான். ஆனா யாரு என்னனு எனக்கு தெரியாது.. இந்தப் பெண்ணை கடத்தி அவங்க சொன்ன இடத்தில் ஒரு காரில் வைக்க சொன்னாங்க.. அதுபடியே நாங்க செய்து குடுத்தோம். அவ்வளவு தான் சார் எனக்கு தெரியும்” என்றான்.
“எப்படி அந்த பொண்ண கடத்தனீங்க? என்று கேட்டான் எஸ்பி.. அவன் மனதில் ஒரு எண்ணம் இருந்தது.
“அதையும் அந்த ஆளே எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துட்டான் சார்”
“எப்படி??” என்று புருவங்கள் சுருங்க கேட்டான்.
“அந்தப்பெண் சாயந்திரம் 5 மணி வாக்குல பார்க்ல விளையாடும் அப்ப நீங்க.. சமயம் பார்த்து அந்தப் பெண் முகத்தில் மயக்க மருந்து ஸ்ப்ரே பண்ணி தூக்க சொன்னான். அப்போ தண்ணி லாரி, தண்ணி கொடுத்துட்டு எம்ட்டியா போகும் அதுக்குள்ள அந்த பெண்ணை போட்டு தூக்கிட்டு போயிடுங்கனு சொன்னான் சார்.. அவன் சொன்னப்படி, அன்னைக்கு அந்த பொண்ணு கொஞ்சம் விளையாடிக் கொண்டே ஒதுக்குப் புறமா வரும் போது எங்க ஆளு அந்த அது முகத்திலேயே ஸ்ப்ரே அடிச்சி மயக்கமாக்கி, ஓரமா நிறுத்தி வைத்திருந்த தண்ணீர் லாரியில் போட்டு தூக்கிட்டோம் சார்.. அதுக்கப்புறம் அவன் சொன்ன இடத்தில் இருந்த கார்ல, எங்களுக்கு தேவையான பணம் இருந்தது அதை எடுத்துட்டு இந்த பொண்ண வச்சுட்டு நாங்க வந்துட்டோம் சார்” என்றான்.
கஜா சொல்ல சொல்ல எதிராளியின் ஸ்கெட்ச் எண்ணி கோபமடைந்தான் எஸ்பி. இம்மாதிரி தருதலைகள் தான் பல பெண்களின் வாழ்க்கையை கெடுக்குறானுங்க என்று நினைத்தவன், விட்டான் ஒரு அறை வேகமாக கஜாவின் கன்னத்தில்.. அவன் அலறி அருகில் விழ.. தன் ஷூ அணிந்த கால்களால் அவனது இரு கைகளையும் மிதித்தான்.
“ஆமா நீ சுதர்மன் கிட்ட வேலை பாக்கலையா?” என்று கேட்க..
“யார் சார் அந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஆள் தானே சொல்றீங்க” என்று வலியில் துடித்தவாறு கேட்க, ஆமாம் என்று எஸ்பி தலையாட்ட.. “அவருக்கும் பண்ணி இருக்கேன் சார். கன்ட்ரக்ஷன் பத்தி தான் தெரியுமே சார் சில பல ஆர்டர்ஸ் எடுக்க ஆட்களை மிரட்ட.. சில சமயம் அவருக்கு பாதுகாப்பாக போக இப்படி நிறைய நேரத்தில் அவருக்கு நிறைய வேலை கொடுத்து இருக்கேன் சார். ஆனால் அவர் கிட்டே மட்டும் நான் வேலை பார்க்கல” என்றான்.
எஸ்பியோ அவனைக் கூர்ந்து பார்க்க.. “நசமா சார்.. எனக்கு அந்த பொண்ண பத்தி அதுக்குமேல எதுவுமே தெரியாது சார்” என்று அழாத குறையாக அவன் கூறினான்.
திரும்பி அந்த கான்ஸ்டபிளை பார்த்தவன் “உங்களுக்கு பொண்ணு இருக்கா ராமன்?” என்று கேட்க..
“இருக்கு சார்.. ஒரு பொண்ணு காலேஜ்ல படிக்கிறா” என்றார் அந்த கான்ஸ்டபிள்..
“ஒரு பொண்ணோட அப்பாவாக இருந்து என்ன தண்டனை இந்த பொறுக்கி கொடுக்கணும்னு நினைக்கிறீர்களோ?? அந்த தண்டனை கொடுங்க!! உயிரை மட்டும் விட்டுட்டு” என்றவன் அந்த அறையிலிருந்து வெளியேற, அங்கே கஜாவின் அலறல் கேட்டுக்கொண்டே இருந்தது.
“அரசு!!” என்று அந்த இடமே அதிர அழைக்க..
ஓடிவந்து விரைந்து சல்யூட் அடித்த அரசுவிடம் தங்க நிவாஸில் அன்று எடுத்த வீடியோ புட்டேஜை போட சொன்னான்.
சஞ்சனா கடத்தப்பட்ட அன்று மூன்றாவது வாயில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப்பிங் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நேரம் தண்ணீர் லாரி ஒன்று அவ்விடத்தை கடந்து செல்ல.. “ப்ரீஷ்.. ப்ரீஷ்” என்று எஸ்பி சொல்ல.. அதைப் பார்த்தவன் கண்கள் விரிந்தது.
“சுதர்மன் வாட்டர் சர்வீஸ்” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்த வாசகத்தைப் பார்த்து!!
அன்று காலேஜ்க்கு சென்ற திவ்யபாரதியை மதியம் கேன்டீனில் ரவுண்டு கட்டியது ஐவர் குழு..
முதலில் புரியாவிட்டாலும் பின்பு கர்ணன் மூலம் விவரம் தெரிந்து இருக்கிறார்கள் என்று புரிந்து, அசட்டு சிரிப்பை அவர்களை பார்த்து வீசி, இவள் நழுவ பார்க்க அவளைப் பிடித்து நிற்க வைத்து அனைவரும் அவளை சுற்றி வர..
“அடேய்.. உங்க தொல்லை தாங்கலடா.. என் கழுத்து வலிக்குது ஒவ்வொருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்து.. சொல்லுங்க டா” என்று அவள் கத்தினாள்.
“நடந்தது என்ன!! நேத்து ராத்திரி!!” என்று ஒரு மாதிரி கில்மா குரலில் விபாகர் கேட்க..
“அது.. அது..” என்று உதட்டைக் கடித்து நிலத்தில் கோலம் போட்டபடி திவ்யபாரதி நிற்க..
“தயவு செய்து, நீ வெட்கம் எல்லாம் படாத திவி.. எங்களால பார்க்க முடியல” என்று ஈக்னேஷ் தலையில் கை வைத்து கொள்ள..
“அது..” என்று அவள் மேலும் இழுக்க ஆரம்பிக்க.. அவள் தலையில் தட்டிய கருணா “சாட் அண்ட் ஸ்வீட்டாக சொல்லு.. இல்ல” என்று அதட்டினான்.
“ஷார்ட் அண்ட் சுவீட் தானே.. எஸ்பி சார், ஐ லவ் யூ ரதி” சொன்னார் என்று கூற..
“என்னது ஐ லவ் யூ ரதி சொன்னாரா?” என்று அதிர்ந்தது ஐவர் குழு!!
16
“என்னது?? ஐ லவ் யூ ரதி சொன்னாரா? அதுவும் எஸ்.பி???” என்று அதிர்ந்தது ஐவர் குழு!!
“ஆமாம்!!” என்று திவி வெட்க புன்னகை சிந்த…
“இது எப்போ?” என்று சாந்தினி அதிர்ச்சியுடன் கேட்க..
“அது அன்னைக்கு என்னை காப்பாத்தும் போது கிஸ் பண்ணாறுல அப்போ சொன்னார்” என்று முகம் செம்மையுற திவ்யா சொல்ல..
“வாட்??!!! கிஸ் பண்ணாறா? எஸ்பியா???” என்று கர்ணா அலற…
“ஆமாம்டா.. குண்டோதரா!! நான் அவரு ஆளுன்னு சொன்னேல்ல அதனால ரவுடிங்க என்னை கிடனா பண்ணானுங்கள, அப்போ!!” உதட்டை கடித்து கொண்டு நாணத்துடன் சொன்னாள் திவ்யா..
“ரவுடிங்க கிட்னா பண்ணாங்களா உன்னை ?” என்று விபாகர் அதிர்ச்சியோடு கேட்க..
“என்னது நீ அவரு ஆளுன்னு சொன்னியா அதுவும் ரவுடி கிட்ட?” என்று அதே அதிர்ச்சி குறையாமல் கேட்டான் ஈக்னேஷ்..
“எஸ்!! எஸ்!!” என்று கெத்தாக திவ்யா அவர்களை பார்க்க..
“நான் அன்னைக்கே சொன்னேன் இல்ல, எஸ்பியோட பார்வையே சரியில்லை இவகிட்ட மட்டும் ஏதோ சம்திங் சம்திங் என்று.. இந்த குண்டோதரன் வேற அப்படியெல்லாம் இருக்காது.. எஸ்பி அறிவாளி, புத்திசாலினு எல்லாம் சொன்னான்.. பார்த்தியா? இந்த அர லூசு கிட்ட கவுந்திட்டார்” என்றான் விபாகர்.
“எப்படி மச்சி இப்படி?” என்று கர்ணா கேட்க..
“அதுக்கெல்லாம் ஒரு தொலைநோக்கு பார்வை வேணும் மச்சி” என்று அவன் தோளில் கைபோட்டு கூறினான் விபாகர்.
“அடேய்!! கொஞ்சம் நிறுத்துங்கடா எல்லாரும்” என்று அனைவரிடமும் சத்தம் போட்ட சாந்தினி திவ்யா பக்கம் திரும்பி..
“திவி நெஜமாவே எஸ்பி சார் உன்னை லவ் பண்றாரா?” என்று சந்தேகம் தீராமல் அவள் கேட்க..
“தினமும் சூரியன் உதிக்கிறது எவ்வளவு உண்மையோ… தாய் அன்பு எவ்வளவு தூய்மைன்றது உண்மையோ… அந்த அளவு உண்மை எஸ்பி சார் என்னை காதலிக்கிறது” என்று கண்கள் மின்ன காதல் ரசம் பொங்க சொன்னவளை கேட்டவர்கள் மனதில் ஒருவித நிம்மதி கலந்த சந்தோசம்.
“நீ எவ்வளவு லவ் பண்ற திவி?” என்று கர்ணா கேட்க..
“காற்று இல்லாமல் நாம உயிர் வாழ முடியாது என்கிறது போல அவர் இல்லாமல் என்னால் ஜீவிக்க முடியாது” என்று திவ்யா கூறினாள்.
“பாருடா.. சூரியன்.. தாய்.. காத்து பேசுறா.. கவிதை கவிதை.. கொட்டுது திவிமா” என்று ஈக்னேஷ் கிண்டல் செய்தான்.
“ஆமாம் இந்த விஷயம் அங்கிள் ஆண்டிக்கு தெரியுமா?” என்று சாந்தினி கேட்க..
“அந்த அப்பாவி அப்பா அம்மாவுக்கு எங்க தெரியும்.. நேத்து நைட்டு இவ வீட்ல இல்லைங்கிறது அவங்களுக்கு தெரியாது” என்று கர்ணா போட்டு உடைக்க..
“வாட்?? நேத்து நைட்டு திவி வீட்டுல இல்லையா?” என்று திரும்பவும் அதிர்ந்தது அந்த ஐவர் குழு!!
“அச்சோ.. திரும்பவும் எல்லாம் கோட்டையும் அழிச்சிட்டு முதலிருந்து ஆரம்பிக்கிறானுங்களே” என்று தன் தலையில் கை வைத்துக்கொண்டு கீழே அமர்ந்து விட்டாள் திவ்யா.
“ஆனாலும் இது தப்பு தானே” என்று மன உறுத்தலுடன் சாந்தினி கேட்க..
“சாந்து இந்த கேடிய நம்பவே முடியாது.. திருட்டு களவாணி.. அப்பேர்ப்பட்ட எஸ்பி சார் கவுத்துட்டானா பாரு? பாவம் அப்பாவி மனுஷன் பொண்ணுங்க பக்கமே திரும்பாதவர்” என்று ஈக்னேஷ் கூற..
“யாரு? அப்பாவியா? அடபாவி டா!!” என்று நேற்று நடந்ததை சில கட்டிங் அண்ட் எடிட்டிங்ஙோடு சொல்லி முடித்தாள். (அந்த கட்டிங் எடிட்டிங் எல்லாம் அவங்களுக்குள்ள மட்டும் அந்தரங்கம் பா.. பட் நமக்கு தான் தெரியுமே!! ஹி.. ஹி)
சஞ்சனா மற்றும் மாலினி பற்றி அறிந்தவர்களும் சற்று சோகமாக இருக்க..
“என்ன எல்லோரும் சோகமா இருக்கீங்க.. அந்த டிபார்ட்மென்ட் எல்லாம் நமக்குள்ள என்டர் ஆகக்கூடாது.. அல்வேஸ் ஃபுன் ஒன்லி சிரிப்பு சிரிப்பு” என்று அனைவரையும் உற்சாகப் படுத்தினான் விபாகர்.
“ஆமா நீ எப்போ ட்ரீட் கொடுக்க போற?” என்று கேட்க..
“எதுக்குடா ட்ரீட்?” என்று திவ்யா புரியாமல் விழிக்க..
“வேற எதுக்கு எஸ்பி ஐ கரெக்ட் பண்ணி இல்ல அதுக்கு தான் ட்ரீட்”
“என்னது? நான் கரெக்ட் பண்ணனேனா?” திவ்யா வாய் பிளக்க..
“இல்லையா பின்ன? அந்த அப்பாவி மனுசனுக்கு நடக்க இருந்த கல்யாண நிப்பாட்டி, அவர ராவோட ராவா கடத்திட்டு போனல, இப்படி உன்னை லவ் பண்ண வைக்க தானே இவ்வளவு பிளான் போட்ட.. மாஸ்டர் ப்ளான் டி திவி” என்று ஈக்னேஷ் விலாவாரியாக கூற.. அடிங்க என்று அவனைத் துரத்திக்கொண்டு திவ்யா ஓட மற்றவர்கள் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
சுதர்மன்… ஐம்பது வயது மதிக்கத்தக்க தொழிலதிபர்.
அடிமட்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து தற்போது சென்னையின் ஒரு பகுதியையே தன் வசம் வைத்திருக்கும் தொழிலதிபர்… தன் வேலை ஆக வேண்டும் என்றால் ஆட்களை வைத்து மிரட்டும் ரவுடி.. அரசியல்வாதி எல்லாம் இவர் பாக்கெட்டில்.. மொத்தத்தில் தொழிலதிபர் போர்வையில் இருக்கும் ஒரு ரவுடி..
இவர் கால் பதிக்காத தொழிலே கிடையாது எனலாம்.. முதற்கட்டமாக ஆரம்பித்தது என்னவோ சுதர்மன் தண்ணி லாரி சர்வீஸ் தான். அதையே தன் ஆட்களை வைத்து விரட்டி மிரட்டி ஆர்டர் எல்லாம் வாங்கியவர்.
தண்ணீரில் போட்ட காசு தங்கம் என அவருக்கு திரும்பி வர.. இன்னும் அவரது தொழில் புத்தியும் சேர, தான் கால் பதித்த இடத்தில் எல்லாம் தன் தடயத்தை படிக்க ஆரம்பித்தார் சுதர்மன்.. போதாக்குறைக்கு அரசியலில் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதி ஒருவரின் மகளை மணந்து கொண்டதால், அரசியல் செல்வாக்கும் நிறைந்து இருந்தது. தன்னை எதிர்த்து நிற்பவர்களை ஒன்று பணத்தால் அடிப்பார் இல்லையென்றால் ஒரேடியாக முடிப்பார். இதுவரை தன் சாம்ராஜ்யத்தில் தனக்கு என்று ஒரு எதிரியை முளைக்க விடாத சாணக்கியத்தனமும் சத்ரியத்தனமும் கலந்த ஒரு கலவை சுதர்மன்.
சூரிய பிரகாஷ் தன்னிடம் உள்ள ஆதாரங்களை எல்லாம் திரட்டி யோசிக்க எல்லாமே சுதர்மனிடம் தான் கடைசியில் வந்து நின்றது. மேலும் எந்த ஆதாரங்களும் வலுவான இல்லாத நிலையில் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள தொழிலதிபர் என்ற பெயரில் பல அரசியல் கட்சிகளின் ஆதரவை கொண்டவனை அவ்வளவு சீக்கிரம் குற்றம்சாட்டி விட முடியாது.
அப்படியே வலுவான ஆதாரங்கள் இருந்தாலும் இந்த மாதிரி ஆட்கள் சட்டத்திலுள்ள ஓட்டைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வெளிவந்துவிடும் பெருச்சாளிகள் போன்றவர். அவ்வாறு இருக்கையில் ஆதாரங்களே வலுவா இல்லாத நிலையில் என்ன செய்வது என்று யோசித்தான் சூரிய பிரகாஷ்.
முதலில் அரசுவிடம் சுதர்மன் பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்ட சொல்லி இருந்தான். அன்று ஐயப்பன் மற்றும் அரசு இருவரையும் வரச்சொல்லி சுதர்மம் பற்றி பேச்சை ஆரம்பித்தான் சூரிய பிரகாஷ்.
முதலில் சுதர்மன் என்ற பெயரைக் கேட்டதும் அதிர்ந்து விட்டார் ஐயப்பன்.
“சார்.. அப்படி எல்லாம் அந்த ஆளு மேல நம்ம கைய வைக்க முடியாது சார்” என்று அவன் கூற..
“ஏன் ஐயப்பன்? அவருக்கு இருக்கிற அரசியல் செல்வாக்கு நினைச்சு பயப்படுகிறீங்களா?” என்று எஸ்பி கேட்க..
“சார்.. அந்த அரசியல்வாதிகளுக்கு ஆளுங்களை சப்ளை பண்றதே இவர் தான் சார்” என்றார் ஐயப்பன்.
“அப்ப ரவுடின்னு சொல்லுங்க” என்று எகத்தாளமாக கேட்டான் சூரிய பிரகாஷ்..
“அப்படியும் சொல்லலாம். ஆனால் ரவுடியா மட்டும் இருந்தா இவன அள்ளி போட்டு நம்ம கொண்டு வந்துடலாம் சார். இந்த சமூகத்தில் தொழிலதிபர் என்கிற பேரில் சுத்திட்டு இருக்கான். போதாக்குறைக்கு அவர் மாமனார் இறந்து, அவர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் போல இருக்கு சார்.. அதுக்கு இவரைத்தான் அவங்க கட்சி சார்பா நிறுத்துவதாக ஒரு பேச்சு கூட அடிபடுது” என்று ஐயப்பன் கூற..
“ஓ ஐயா.. இப்போ தொழிலதிபரிலிருந்து முழுநேர அரசியல்வாதியாக மாறப் போறாரா?” என்று நக்கலாக சூரியபிரகாஷ் கேட்க..
“ஆமாம் சார். அவரோட மச்சானுக்கு தான் இந்த சீட்டு கிடைக்க வேண்டியது. ஆனா அவருகிட்ட இருக்கிற ஆட்கள் பலம் பணபலம் அந்த சீட்டை தன்னை நோக்கி வர வைக்க ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கார் சுதர்மன்” என்று அரசு கூற..
“யாரு அவரு மச்சான்? என்ன பண்றான் அவன்?” என்று தன் மேஜையில் மேலிருந்து பேப்பர் வெயிட்டை சுற்றிய படியே சூரியபிரகாஷ் கேட்க..
“அவன் பெயர் ராஜரத்தினம் சார். அவங்க அப்பாவுக்கு ரொம்ப நாள் கழிச்சு தான் பிறந்தவன், அதுக்குள்ள அவன் அக்காவை கல்யாணம் பண்ண சுதர்மன் ஆளுமை நிலைச்சிருச்சி… ராஜரத்தினத்துக்கு சில காலேஜ்.. இம்போட் எக்ஸ்போர்ட் பிசினஸ் தான் பிரதானம். அங்க வந்து கொஞ்சம் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறான். அப்புறம் அவங்க அத்தான் கூடவே இருக்கான் சார்” என்று அரசு கூறினான்.
“ஆகமொத்தம் மாமனும் மச்சானும் ஒன்னாம் நம்பர் கேடீங்க.. அப்படித்தானே!!” என்றான் சூரிய பிரகாஷ்.
“ஆமாம் சார்” என்று சொல்வதைத் தவிர அவர்களால் வேறு ஏதும் சொல்ல முடியவில்லை.. எதிர்த்து இவனிடம் விதண்டாவாதம் பேச அவர்களுக்கு தைரியம் வருமா என்ன?
“அப்ப சரி அந்த தொழிலதிபர் கிட்ட எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வாங்கி வைங்க.. நேர்ல பாத்து பேசிட்டு வரலாம்” என்று கூற அரசு திடுக்கிட்டு எழுந்தே விட்டான்.
“சார்.. நாம அவர் மேல சந்தேகப்பட்டோம்னு தெரிஞ்சாலே நம்மள அவங்க விட்டு வைக்க மாட்டாங்க சார்” என்று அப்பட்டமான பயம் அரசு முகத்தில் தெரிய..
அவனைக் கூர்ந்து பார்த்த எஸ்பி “அப்பவே சொல்லி இருக்கேன் அரசு உங்ககிட்ட.. யூனிபார்ம் போடும்போது போலீஸ்காரன் மாதிரி பிகேவ் பண்ணுங்க முடியலன்னா கழட்டி வைச்சிட்டு போயிட்டே இருங்க” என்று அதிகாரமாக அழுத்தமாகக் கூற அதற்கு வழக்கம் போல விறைத்து ஒரு சல்யூட் அடித்து விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டான்.
சிங்கத்தின் குகை நோக்கி செல்ல போகுது இந்த வேங்கை..
பார்ப்போம்.. சிங்கம் சிக்குதா? இல்லை வேங்கை வெல்லுதா? என்று!!
அரசுவும் எஸ்பி சொன்னதைக் கேட்டு அரண்டு போய் ஒருவழியாக சுதர்மன் பிஏ வை பிடித்து, மறுநாள் காலை 11 மணி அளவில் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்தான்.
அதை எஸ்பியிடம் கூற.. “குட் நாளைக்கு நீங்களும் என் கூட வந்துருங்க” என்று கூற, அரசுவுக்கு இப்போ அடி வயிற்றைக் கலக்கியது. அவன் மென்றும் மிழுங்குவதை பார்த்த எஸ்பி வழக்கம் போல அவனுக்கு யூனிபார்ம் டயலாக் சொல்ல வர, அதற்குள் முந்தியவன் நாளைக்கு வரேன் என்று அழு குரலில் கூறி சென்று விட்டான்.
“இவனையெல்லாம்..” என்று திட்டி கொண்டு தன் வேலையில் மூழ்கியனை செல்போன் அழைக்க யாரென்று பார்த்தால் அவனது காதல் களவாணி.. இல்லையில்லை இந்த மன்மதனின் ரதி தேவியார்!!
“என்ன எஸ் பி சார்.. ஒன்னும் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?” என்று கேட்க..
“நேத்தி கண்டுகொண்டது பத்தல போலையே?” என்று மந்தகாசமான குரலில் இவன் கூற..
அந்தப் பக்கமோ அமைதி.
“நீ காலேஜில் தானே இருக்க.. எதுக்கு இந்த நேரத்துக்கு போன் பண்ற?” என்று சற்று கடுமையாகவே கேட்டான் எஸ் பி..
“நான் எங்க காலேஜ்ல இருக்கேன். காலேஜ் கட் அடிச்சுட்டு பக்கத்துல இருக்குற பார்க்ல உட்கார்ந்து பாப்கான் சாப்பிட்டு கிட்டு இருக்கேன்” என்று இழுத்து அவள் கூற..
“பார்க்ல இருக்கியா? அப்போ கிளாஸ் என்னாச்சு?”
“ம்ம்ம்.. அதுவா இப்போ ஹார்ட்வேர் அனலைஸ் கிளாஸ்.. என்னமோ அந்த எழவு மட்டும் எனக்கு வரவே மாட்டேங்குது.. நானும் முட்டி மோதி பார்த்துட்டேன்” என்று அவள் சோககீதம் வாசிக்க..
“புக்கோட முட்டி மோதி பார்க்க கூடாது. படிச்சா தான் மண்டையில ஏறும்” என்று நக்கலாக அவன் கூற..
“புக்கோட முட்டி மோதினேன் என்று யார் சொன்னா?”
“பின்ன?” என்று சுவாரசியமாக அவன் கேட்க..
“அதை எடுக்கும் நீலகண்டனிடம் தான் முட்டி மோதியது எல்லாம்.. அதனாலதான் அவரு என்னை கிளாஸ் விட்டு வெளியில் அனுப்பிட்டார்” என்று கிளுக்கி சிரித்தாள் அவள்.
“பாஸ் ஆவியா? இல்லை இதுலயும் அரியர் தானா?” என்று எஸ்பி கிண்டலடிக்க…
“உங்கள கட்டிட்டு குடும்பம் நடத்த போற எனக்கு.. எந்த ஹார்டுவேர் அனாலிசிஸ் எல்லாம் எதுக்கு” என்றவள், பின்னி ஹஸ்கி வாய்ஸில் “பள்ளியறை பாடம் தெரிந்தால் போதாதா எஸ்பி சார்.. பள்ளிக்கூட பாடம் எல்லாம் வேணுமா?” என்று கூற..
சட்டென்று தன்னை சுற்றி ஒரு முறை பார்த்துக்கொண்டான் எஸ்பி. ‘ஐயோ போன்ல தான் பேசுறா பக்கத்துல இருந்து பேசுற மாதிரி ஃபீலிங் ஆகி நான் சுத்தி முத்தி பாக்குறேன்’ என்று தலையிலடித்துக் கொண்டவன், “ரைமிங்கா மட்டும் பேசினா பத்தாது.. மத்ததும் தெரிஞ்சு இருக்கணும் ரதி டியர்” என்று விஷமமாக கூற..
“எல்லாம் எங்களுக்கு தெரியும்” என்று சிரிக்க..
“அப்படி என்ன தெரியுமாம் உங்களுக்கு?”
“போனில் சொன்னால் ஆகுமா?”
“அப்ப நேரில் சொல்லு” என்று அவன் கூற..
“நேர்ல வாங்க.. அப்ப கண்டிப்பா சொல்றேன்” என்று ஸ்டேஷனில் இருப்பான் என்ற நம்பிக்கையில் அவள் கூற..
“இப்போ சொல்லு!!” என்று காதருகே ஒலித்து அவனது குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள் அவன் அகன்று மார்பில் முட்டி சரிய, அவன் கைகளோ அவள் முதுகோடு அணைத்து பிடித்திருந்தது. “அடப்பாவி!! எப்படி வந்தார்?” என்று ஆச்சர்யம் அகலாமல் அவனை விழி விரித்துப் பார்க்க…
“நீ பார்க்ல இருக்கேன் சொன்ன உடனே நான் கிளம்பிட்டேன், வண்டி ஓட்டிக்கிட்டு தான் உன்கிட்ட பேசிட்டு வந்தேன்” என்று அவள் மனதில் இருப்பதற்கு இவன் பதிலளித்தான்.
யூனிபார்மில் வராமல் கருநீலத்தில் டி-ஷர்ட் அணிந்து வந்திருந்தான், அது அவனின் கவர்ச்சியை கூட்டிக் காட்ட கூடவே அவனுடைய வசீகர புன்னகையும் சேர்த்துக்கொள்ள.. வெகு அருகாமையில் தெரிந்தவ அவன் முகத்தை ரசித்து பார்த்தாள் திவ்யபாரதி.
சிந்தனை முழுவதும் அவன் மீது கொண்ட காதல் மயக்கம் மட்டுமே.. காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்.. கிளாஸ்.. சப்ஜெக்ட்.. ஏன் பெற்றோர்கள் கூட அச்சமயம் அவள் ஞாபகத்திற்கு வரவில்லை. முழுக்க முழுக்க அவன் நினைவுகள் அனைத்தையும் ஆண்டு கொண்டிருந்தான் எந்த மாயவன்.
காவலன் மீது கொண்ட காதல் அந்த மயக்கம்!!
போதை ஏற்றி சுற்றும் மறக்க வைக்கும் அந்த மயக்கம்!!
வசீகரமாக சிரிக்கும் மாதவன் தந்த மயக்கம்!!
அவன் தோளில் இருந்து இறங்கிய அவன் கைகள் அவள் இடுப்பில் ஊர அவளுக்குள் அந்தோ மின்சார பாய்ச்சல்!!
வசியம் செய்வதில் வசிய காரனாகவும்!!
பெண்ணை மயக்கும் மாயக் கண்ணனாகவும்!!
காதலை கையாளுவதில் வித்தகனாகவும்!!
மொத்தத்தில் மன்மதனின் மறு உருவமாக நின்றான் அவன். அவனின் ரதியை மயக்கியப்படி!!
அவன் இதழ்கள் திவ்யபாரதி என் கன்னத்தில் அழுத்தமாக பதிய.. லவ் யூ ரதி என்றான் கிறக்கமாக..
அந்தக் குரல்!! அதில் வழிந்த காதல்!! பதில் பேச திராணியில்லாமல் மேலும் அவன் கைகளில் சரிந்தாள் திவ்யபாரதி. அவளை முழுவதுமாக தன் கையில் தாங்கிக் கொண்டான் இந்த காவலன். மெல்ல மெல்ல அவனது உதடுகள் கன்னத்தில் இருந்து உதட்டை நோக்கி பயணித்து அதை கவர்ந்து கொண்டது. செர்ரி பழம் போன்ற மெல்லிய சிவந்த உதடுகளை தன் அழுத்தமான உதடுகளுக்குள் ஒளித்து சுவைத்துக் கொண்டிருந்தான் இந்த கள்வன்.
ஆம் காவலனும் கள்வன் ஆவது காதலில் மட்டுமே!!
கவர்ந்த காந்தனின் அதரங்களுக்குள் தன் அதரங்களை ஒப்புவித்தவள் விடுப்பட மனமில்லாமல்.. விடப்பட விரும்பாமல்.. சுழலுக்குள் சிக்கிய மலரென தள்ளாடினாள்.
நீண்ட நெடிய முத்தத்திற்கு பிறகு மெல்ல அவளை விடுவித்தவனின் கைகள், வெட்கத்தில் செங்காந்தள் மலர் என செம்மை பூசிய அவளது கன்னங்களை மிருதுவாக வருடியது. கன்னங்களை வருடிய அவன் விரல்கள் மெல்ல மெல்ல கீழே இறங்கி சங்கு கழுத்தில் கோலங்கள் போட..
கண் மூடி உதடுகளை கடித்து சுகித்தாள் பெண்ணவள். அவளின் நிலையை ரசித்துக் கொண்டே அவனது கைகள் இன்னும் சற்று கீழே இறங்கி நர்த்தனங்கள் ஆட துவங்க.. சட்டென்று அவனது கைகளை இறுக்கிப் பிடித்தாள் மாது.
“என்னடி தடா போடுற.. அதெல்லாம்..” என்று அவள் காதோரம் அவன் ரகசியம் பேச..
“சீச்சி..” என்று எல்லையில்லா லஜ்ஜையுடன் அவன் டீஷர்டை பிடித்து இழுத்து அவன் மார்பில் புதைந்தவள், அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
“ரதி.. ரதி மா.. எப்பவும் முதலடி என்னுடையதா தான் இருக்கு”
“ஆமா எல்லாமே அதிரடி தான்!!” என்று அவள் சிரிக்க..
“உன்னோட அதிரடி காண ஆவலாய் இருக்கிறேன் கண்மணியே!!” என்று அவன் பேச..
“நீங்க தாங்க மாட்டீங்க மச்சான்” என்று அவள் கண்ணடித்து கூற..
“மச்சானா? என்னடி புதுச புதுச ஆரம்பிக்கிற?” என்று அவன் கேட்க..
“ஏங்க பிடிக்கலையா?” முகம் பார்த்து தவிப்பாக திவ்யா கேட்க..
“ஏன் பிடிக்காமல்? நீ என்னை எப்படி கூப்பிட்டாலும் பிடிக்கும்” என்றவன் அவளை இறுகத் தழுவிக் கொண்டான்.
இவர்கள் இருவரும் அணைத்தபடி நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க அதையெல்லாம் ஒரு செல்போன் தனக்குள் புகைப்படமாக எடுத்து தள்ளிக் கொண்டே இருந்தது!!
17
காலையிலிருந்து கோபத்தில் கனன்று கொண்டிருந்தான் சூரிய பிரகாஷ்.. காரணம் மாலினியுடைய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருந்தது. அவனின் யூகம் சரியே என்பது போல, அச்சிறு மலரை கசக்கி பிழிந்து முகந்து கருக்கி இருந்தனர் காமூக ராட்ஷன்கள் சிலர்.. அவர்களின் அதீத தாக்குதலை தாங்க முடியாத அச்சிறு பெண்ணும் தனது மூச்சை நிறுத்தி இருந்தாள். பலதரப்பட்ட வழக்குகளை இதுநாள் வரை தனது அனுபவத்தில் பார்த்து கடந்து வந்தாலும்.. இம்மாதிரியான பெண்களின் மீதான தாக்குதலை வன்புறுதலை அவன் ஒருபோதும் கேட்கும் போது மனதில் எழும் கோபத்தை அடக்க கடக்க முடியாது தவிம்பான் எஸ்பி.
பெண்கள் மீது இம்மாதிரியான பாலியல் வழக்குகளில் முதலில் அவர்கள் போட்டிருந்த அரைகுறை உடை தான் காரணம் என்றார்கள்.. பின்பு இரவில் தனித்து வருவது தகாத காரணம் என்றார்கள்.. சமூக வலைத்தளங்களில் கண்டதும் காதல் கொண்டது தவறு என்றார்கள்.. இன்னும் பற்பல காரணங்கள் கண்டுப்பிடித்துக் குறை கூறும் இந்த சமூகமும் சமூக ஆர்வலர்களும்..
இந்த காம அரக்கர்களின் ஆட்டங்களை அடக்க இதுவரை தகுந்த சட்டத்தை ஏற்படுத்தி கொடுக்க குரல் கொடுப்பதும் இல்லை.
ஆனால் மேற்சொன்ன காரணங்கள் எதுவுமே இல்லாமல் பதின்ம பருவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த பிஞ்சுகளில் என்னதான் கண்டன அந்த ராட்ஷ மிருகங்கள்.. இவர்கள் எல்லாம் நம் நாட்டில் உள்ள போடோ சட்டம் எல்லாம் பத்தாது.. அரபு நாடுகள் மாதிரி உயிருடன் வதைத்து அதுவும் பொதுவெளியில் செய்ய வேண்டும். அப்போதுதான் அதை பார்க்கும் மற்றவர்களும் இம்மாதிரியான மிருகங்களாக உருவாகாமல் இருப்பார்கள்.
சில மிருகங்கள் பல நாள் உள்ள வக்கிரம் திடீரென்று தலைவிரித்தாடும் போது தங்கள் கைகளில் சிக்கும் இம்மாதிரியான சின்னஞ்சிறு பிஞ்சுகைகளை வதைத்து விடுவார்கள். இன்னும் சில மிருகங்களோ தான் செய்வது தப்பு என்று தெரியாமல் பல பிஞ்சுகைகளை வேட்டையாடிக் கொண்டே இருக்கும். மாலினியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டை படித்த எஸ்பி-கும் அப்படித்தான் இருந்தது.
அந்தப் பெண் கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறாள், அதுவும் நிறைய ஆண்களால்.. மேலும் அவள் உடலில் ஆங்காங்கே பல காயங்கள்.. அவை பற்களாலும், கத்தி போன்ற சிறு ஆயுதத்தாலும் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம் என்று அவ்வறிக்கை கூற அதை நினைத்துக் கொண்டிருந்தவன் மனதில் தான் அவ்வளவு கோபம் ஆற்றாமை எல்லாம்.
தாய்நாடு.. தாய்மொழி.. நாட்டில் ஓடும் 90 சதவீத ஆறுகளுக்கு பெண்கள் பெயர்.. கும்பிடும் குல தெய்வங்களில் இருந்து பாதுகாக்கும் மாரியம்மன்.. பழிவாங்கும் ருத்ர காளி என பல்வேறு அம்சங்களில் பெண்களை கொண்டாடும் பூஜிக்கும் இதே பூமியில் தான், ஜாதி பெயரை சொல்லியும் தனியாக சென்றாள் பாய் ப்ரண்டோடு சென்றாள் என்றும் பெண்களை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர் சில அரக்கர்கள்..
இவர்களுக்கான கடுமையான கொடூரமான தண்டனை கிடைக்காத வரை இந்த அரக்கர்களை தடுப்பது என்பது இயலாத காரியம்.
அதே கோபமும் வேகமும் தன்னுள் சற்றும் குறையாதவனாய் எழுந்தவன், அன்று அப்பாய்ண்டமெண்ட் கொடுத்த சுதர்மனை பார்க்க அரசுவுடன் அவரது வீட்டிற்கு சென்றான். அவனது மனநிலையை கணிக்க முடியாதவாறு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இருந்தவனை அமைதியாக பார்த்தான் அரசு.
“என் மூஞ்சில எதுவும் கூகுள் மேப் இருக்கா?” என்று எஸ்பி கேட்க..
“இல்ல சார்” என்று அவசரமாக அவன் பதில் அளிக்க.. “அப்போ இங்க என்ன பார்வை.. ரோட பார்த்து ஓட்டுங்க” என்று அவனிடம் காய்ந்தான்.
“ஓகே சார்” என்றவன், ‘சார் ஒரு முடிவோட தான் இருக்கிறார்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு வண்டியை செலுத்துக் கொண்டிருந்தான் அரசு. அன்று இவன் தயங்குவதைப் பார்த்து ஐயப்பன் தான் வருவதாக சொல்ல, அதை தவிர்த்து விட்டான் எஸ்பி. காரணம் நாளை பின்ன எதுவாக இருந்தாலும் அது தன்னோடும் அரசுவோடும் போகும், இதே ஐயப்பன் கூட வந்தால் அது திவ்யபாரதியையும் சேர்ந்து பாதிக்கும் என்று எண்ணினான். இதே மூன்று மாதத்திற்கு முன்னால் இருந்த சூரிய பிரகாஷாக இருந்தா, இவ்வாறெல்லாம் யோசித்திருக்க முடியாது. என்ன செய்வது எல்லாம் காதல் படுத்தும் பாடு!!
ஆனால் தன்னால் கூட அவளுக்கு ஆபத்து வரலாம் என்று அப்போது அவன் எண்ணவில்லை. இவர்கள் விஷயம் யாருக்கும் தெரியாது என்று நினைத்து இருக்க… இவர்களை பற்றி சகலமும் அறிந்து வைத்திருந்தார் சுதர்மன்.
சுதர்மன் வீட்டில் இவர்கள் இறங்க அவர்கள் சுற்றிப் பார்த்தது அவ்வீட்டை தான். சூரியபிரகாஷூம் பெரிய தொழிலதிபரின் மகன், அவர்கள் வீடும் இரண்டடுக்கு வீடு தான். ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவு இருந்தது சுதர்மன் வீடு. 10,000 சதுரடியில் அரண்மனை போல இருந்தது, அதற்கு தகுந்த உள்புற அலங்கார வேலைப்பாடுகள் என்று அசத்தலாக இருந்தது.
அந்த வீட்டை தன் கண்களால் அளவெடுத்துக் கொண்டே வேலையாட்கள் காட்டிய இருக்கையில் அமர்ந்திருந்தான் எஸ்பி கூடவே அரசும்.
அரசுவோ அந்த வீட்டைச் வாயை பிளந்து “ஆ” வென்று பார்த்திருந்தான்.
“ஏன் அரசு? இந்த மாதிரி ஒரு வீடு கட்ட என்ன செலவாகும்?” என்று கேட்க..
“வீடா சார் இது!! மாளிகை சார்!!” என்றான் வியப்பு அகலாதவனாய்..
“கரெக்ட்!! இது மாளிகை தான்.. இதை கட்டுனதுக்கு என்ன செலவாகி இருக்கும்?? இதன் உள் அலங்காரங்களுக்கு எவ்வளவு செலவாகியிருக்கும்?? அதைவிட ஒவ்வொரு மாதமும் இதை மெயின்டென் பண்றதுக்கு எவ்வளவு செலவாகும்?? வீடுவிட்டு சுத்தி இருக்குற தோட்டம் பின்புறம் உள்ள பழ மரங்கள் என எல்லாத்தையும் பராமரிக்க..” என்று கேட்டுக் கொண்டே போக அரசுவோ “ஐயோ சார்!! எனக்கு மயக்கமே வருது!!” என்றவன், “எப்படி சார்.. ஒரே பார்வையில எல்லாத்தையும் அனலைஸ் பண்ணுறிங்க” என்று வியக்க..
மெல்ல அவனை பார்த்து சிரித்தான் எஸ்பி. “அதான் இந்த மாதிரி ஒரு வீட்டை கட்ட பராமரிக்க சாதாரண நேர்மையான முறையில சம்பாதிக்கிறவனால முடியாது. அப்படின்னா இவன் எந்த அளவு வருமானம் உள்ளவனா இருக்கணும்.. எப்படி சம்பாதிக்கிறவனா இருக்கனும்?” என்று கைகளில் உள்ள அந்த சிறு லத்தியை சுழற்றிக் கொண்டே அரசுவிடம் கூறிக் கொண்டிருந்தான் எஸ்பி.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வந்தார் சுதர்மன். வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி.. முறுக்கிய வெண்ணிற மீசை.. கட்டுமஸ்தான சற்று கருத்த நிறமாக ஆனால் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தார் சுதர்மன். இவர் சென்னையின் பாதி பகுதியை ஆட்டி வைப்பர் என்று சொல்ல முடியாத அளவு அப்படி ஒரு நல்லவன் லுக்..
இவர்களை பார்த்து கைகூப்பி அவன் எதிரே அமர்ந்து “சொல்லுங்க சூரியபிரகாஷ்.
அப்பா சந்திரபிரகாஷ் நல்லா இருக்கார் தானே?” என்று கேட்க..
தொழில்துறையில் உன் தந்தை எனக்கு அறிமுகம் என்று சொல்லாமல் சொன்னார்.
“சாரி மிஸ்டர் சுதர்மன்.. இன்டஸ்ட்ரியலிஸ்ட் சந்திரபிரகாஷ் சன் சூரியபிரகாஷ் உங்கள பாக்க வரல.. அசிஸ்டன்ட் கமிஷனர் சூரியபிரகாஷா உங்களை பார்க்க வந்திருக்கேன்” என்றான் அவரை கூர்ந்து பார்த்து கொண்டே..
“வீடு ரொம்ப நல்லா இருக்கு சார்.. மெயின்டெய்ன் பண்ண ரொம்ப கஷ்டம் இல்லையா சார்?” என்று அவன் கேட்க.. சம்பந்தமே இல்லாம இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று அவரைப் பார்த்தான் அரசு.
“ஆமாம் நான் பார்த்து பார்த்து கட்டின வீடு!! மெயின்டன் என்ன நானா பண்ண போறான்? அதுக்குனு ஆளுங்க இருக்காங்க.. அவங்க பார்த்துக்குவாங்க” என்று கர்வம் பொங்க அவர் கூற..
“எப்படியும் ஒரு 20 ஆட்களாவது இந்த வீட்டுல வேலை செய்வார்களா?” என்று அவன் கேட்க..
“அப்புறம் சொச்சம் எல்லாம்??” என்று கூறி கடகடவென்று சிரித்தார் அவர்..
“நீங்க வந்த காரணம் என்னன்னு சொல்லவே இல்லையே?”என்று சுதர்மன் கேட்க…
“உங்களை விசாரிச்சிட்டு போகறதுக்கு தான் வந்திருக்கேன்” என்றான்..
“உன்னை போல பல போலீஸ்காரங்க என் வீட்டு வாசல காவலுக்கு இருக்காங்க.. அதைத்தாண்டி உள்ளே வந்தது கிடையாது.. அவங்களுக்கு கவர்மெண்ட் கொடுக்கிறது விட அதிக சம்பளம் நான்தான் கொடுக்கிறேன்” என்று அவர் பெருமையாக சொல்ல..
“பின்ன குற்றவாளி தப்பி ஒடாம பாதுகாக்கிறது தான் எங்களுடைய டியூட்டியே!!” என்று அவனும் பெருமையாக சொல்ல..
கண்கள் இடுங்க அவனைப் பார்த்தார் சுதர்மன். “தம்பி உங்க வயசு என்னோட அனுபவம்.. எதற்காக இன்னைக்கு அபார்ட்மென்ட் வாங்கி என்னை பார்க்க வந்தீங்கனு தெரிஞ்சுக்கலாமா?” என்று விஷயத்துக்கு வந்தார்.
“அதான்.. என்னோட வயசு உங்களோட அனுபவம் என்று சொன்னீங்களே, அதுல இருந்தே நான் எதுக்கு வந்துருக்கனு உங்களால புரிஞ்சுக்க முடியாதா?” என்று இவன் நக்கலாக கேட்க..
சுறுசுறுவென்று சுதர்மனுக்கு கோபம் ஏறினாலும் அவரின் சமூக அந்தஸ்து சட்டென்று கோபத்தை காட்ட முடியாமல் தேக்கி வைத்தது. அவர் கோபத்தில் இருக்கிறார் என்பது அரசுக்கு புரிய “இந்த சார் சும்மா இருக்க கூடாதா? எடக்கு மடக்காக பேசுகிறாரே?” என்று எண்ணிக்கொண்டான். அரசுவிற்கே சுதர்மன் கோபம் புரியும் போது சூரியபிரகாஷ்க்கு புரியாதா என்ன??
பெரும்பாலும் நாம் நிதானமாக அமைதியாக இருக்கும்போது நம் ஆழ்மனதில் உள்ளவற்றை சட்டென்று வெளிப்படுத்த மாட்டொம்.. ஆனால் இதுவே நாம் பெரும் கோபத்தில் ஆத்திரத்தில் நம்மை நாமே கட்டுப்படுத்த முடியாமல் நிலை தடுமாறி நிற்கும் நேரத்தில் உள் மனதில் உள்ள உண்மைகளை நம்மை அறியாமலேயே வெளிப்படுத்தி விடுவோம்.. இதை நன்கு அறிந்தவன் சூரிய பிரகாஷ்.
எதிராளியை இவன் சதிராடுகையில் அவர்களின் பலவீனமான பயத்தையும் கோபத்தையும்.. இவன் ஆயுதமாக கையில் எடுத்து, அதை கொண்டு அவர்களிடம் தன் வேலையை முடித்து விடுவான் பெரும்பாலும்!! அதைத்தான் இங்கு சுதர்மனுக்கு செய்துகொண்டிருந்தான்.
“என்ன தம்பி அஸிஸ்டெண்ட் கமிஷனரிலிருந்து கமிஷனர் ஆகணும்னு ஆசை வந்துடுச்சா? அதுக்கு சிபாரிசு கேட்டு எங்கிட்ட வந்து இருக்கீங்களா?” என்று உனக்கு நான் சளைத்தவன் இல்லை என்று அவரும் நக்கலாக கேட்க..
“அடுத்தவன் போட்ட பிச்சையில் எல்லாம் பதவி உயர்வுக்கு வரணும்னு நான் ஆசைபட்டதை கிடையாது. ஆனாலும் கமிஷனர் ஆயிடுவேன், அதுவும் உங்களால தான்!!” என்று அவன் குதர்க்கமாக பேச..
“என்னால உங்களுக்கு ஒரு நல்லது நடந்தால் எனக்கு அது சந்தோசம் தான் தம்பி” என்று அவர் நிதானமாகவே பதிலுரைக்க முயன்றாலும் அவரது குரலில் கோபம் தொணித்தது..
“உங்க ரெஸ்டாரென்ட் மற்றும் தண்ணி லாரி சர்வீஸ் மேல எனக்கு நிறைய கம்ப்ளைன்ட் வந்திருக்கு. அதுபற்றி விசாரிக்க தான் உங்ககிட்ட வந்து இருக்கேன்” என்றான்.
“ரெஸ்டாரன்ட்ல என்ன ப்ராப்ளம்?” என்று அவர் கேட்க..
“அநியாயமா ரெஸ்டாரண்டில் காசு வசூல் பண்றீங்களாமே? ஏன் சார் வாட்டர் பாட்டில் கொண்டுவந்து வச்சா காசு? அதுக்கு மூடியைத் திறந்து வைத்தா சர்வீஸ் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறிங்களாமே?” என்று வெகு சீரியஸா கிண்டலடிக்க..
அவருக்கு பற்றி கொண்டு வந்தது. “ரெஸ்டாரன்ட் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் இருக்கிற மாதிரி தான் சர்வீஸுக்கு நாங்க காசு வாங்குவது தான். உங்களுக்கு இதுல ஏதும் பிரச்சனைனா நீங்க இதற்காக நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றத்தை நாடுங்க.. அங்க கம்ப்ளைன்ட் பண்ணிங்க, நாங்க பார்த்துக்குறோம்” என்றார் அடக்கப்பட்ட கோபத்துடன்..
“ஆஃப் கோர்ஸ், அதுபோல வாட்டர் சர்வீஸ் மட்டும் பண்ணாம கூட வேற சர்வீஸ் எல்லாம் சேர்ந்து பண்றிங்கன்னு கம்ப்ளைண்ட் அப்படியா சார்?” என்று அப்பாவியாக முகத்தை வைத்தே அவன் கேட்க..
“என்ன இது சின்னப்புள்ளத்தனமா பேசிகிட்டு இருக்கீங்க.. தண்ணி லாரில தண்ணி தவிர வேறு என்னத்தை கொண்டு வரப்போறோம்” என்று அவரும் கடுப்பாக மொழிய..
“யார் கண்டா? சில சமயம் மனுஷங்கள கூட தண்ணி டேங்க்ல டிராவல் பண்றாங்களாமே?” என்று அவர் கண்களை பார்த்துக்கொண்டே எஸ்பி கேட்க, சுதர்மன் சட்டென்று ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை கவனமாக மறைத்து “யாராரோ தப்பு தப்பா உங்க கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க.. அது யாரு நான் பாத்துக்குறேன். சட்டரீதியாக நீங்க என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நானும் தயார்” என்று அவர் கூற..
“என்ன சார்.. பெரிய சட்டம்!! சட்டத்தில் உள்ள பினல் கோடை விட அதில் உள்ள ஓட்டைகள் தான் அதிகம் இருக்குன்னு எங்களுக்கும் தெரியும்!! உங்களுக்கும் நல்லாவே தெரியும்!!இது ஜஸ்ட் ஒரு என்கொய்ரி மட்டும் தான்.. விசாரணைக்கு வந்தா என் விசாரணையே வேற மாதிரி இருக்கும்” என்று அவன் கூற..
அதுவரை அருகேயிருந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த சுதர்மன் மச்சான் ராஜரத்தினம் பாய்ந்து வந்து எஸ்பியின் சட்டை காலரை பிடித்து தூக்கினான்.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் மாமன் கிட்டே வந்து நீ விசாரணை பண்ணுவ? உள்ள தூக்கி போடுவேன்னு சொல்லுவ? எங்க உனக்கு தைரியம் இருந்தா செஞ்சு பார்டா பார்க்கலாம்” என்று அவன் கோபம் கொண்டு கத்த..
சூர்ய பிரகாசு சற்றும் கோபம் கொள்ளாமல், “ஸ்மைல் பிளீஸ்!!” என்று கூற, இவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் திரும்பி ராஜரத்தினம் பார்க்க.. அவன் சட்டை பிடித்து இருந்ததை சேர்த்து செல்பி எடுத்து இருந்தான் எஸ்பி. “விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரியை தாக்கினதா இப்போ இந்த நிமிஷம் அரஸ்ட் பண்ண முடியும்.. பண்ணவா?” என்றான் கூலாக கையில் வைத்திருந்த செல்போனை ஆட்டியபடியே..
தீச்சுட்டார் போல அவன் சட்டையில் இருந்து கையை எடுத்த ராஜரத்தினம், தன் மாமனையும் அவனையும் மாறி மாறி பார்க்க.. அதற்குள் அவனை நெருங்கிய சுதர்மன் “எதுக்கு இப்படி அவசர படுற ராஜா.. அமைதியாக இரு எல்லாம் நான் பார்த்துக்குறேன்” என்றார்.
“மாமா என்ன இருந்தாலும் உங்கள..” என்று அவன் திரும்ப ஆரம்பிக்க… “நீ அமைதியா இரு நான் பாத்துக்கிறேன்னு சொன்னேன்!! அவசரப் புத்திக்காரன்” என்று கூறினார்.
அந்த ராஜரத்தினமும் அவனை முறைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு தள்ளி நின்றான்.
எஸ்பியோ அவனை பார்த்து முறைத்துக் கொண்டு நிற்க “சாரி தம்பி.. அவனுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்று இவர் இறங்கி வர, சற்று ஆச்சிரியமாக அவரைப் பார்த்தவன் ‘இதுவும் ஒருவித தொழில் யுக்தி தான்’ என்று அடுத்த நொடியே புரிந்து கொண்டவன் “எதுக்கும் உங்க மச்சான் கிட்ட சொல்லி வைங்க.. நான் மத்த போலீஸ்காரங்க மாதிரிலாம் கிடையாது.. அடிக்கிற அடியும், கொடுக்குற கொடுப்பும் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்” என்றான்.
“நாங்களும் அப்படித்தான் அசிஸ்டெண்ட் கமிஷனர் தம்பி.. எங்ககிட்ட மோதும் போது நீங்களும் கொஞ்சம் பார்த்து ஜாக்கிரதையாக இருங்க” என்று அவரும் திருப்பிக் கொடுக்க..
“எஸ் அப்படி இருந்தா தான் ஆட்டம் சூடு பிடிக்கும்.. ஒரு பக்கமே ஆக்சன் இருந்தா சப்புனு சுவாரசியமே இல்லாமல் இருக்கும்” என்று அவன் அவரைப் பார்த்து கண்ணடித்துவிட்டு அவ்விடம் விட்டு சென்றான்.
சூரிய பிரகாஷ் செல்வதை பார்த்துக் கொண்டே ராஜரத்தினம் சுதர்மனை நெருங்கி “மாமா அந்த அசிஸ்டன்ட் கமிஷனர்…” என்று இழுக்க..
“அவசரப்பட்டு கையை வைக்காதே.. இவன் எல்லாரு மாதிரியும் இல்லை. கோபத்தைக் கூட வெகு நிதானமாக காட்டுறான். கூடவே நம்ம வாயாலேயே தப்பை ஒத்துக்க வைக்க பார்க்கும் சாமர்த்தியம் அவன்கிட்டே இருக்கு. இப்போ கண் முன்னாடி நடந்ததை பார்த்த தானே??” என்றார்..
மதியம் உணவு முடித்து திரும்பவும் மாலினியின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு
கமிஷனர் தியாகராஜனிடம் இருந்து அழைப்பு வர..
சொல்லுங்க சார்” என்றான்.
“நீ கிளம்பி உடனே ஆபீசுக்கு வந்து என்னை பாரு எஸ்பி” என்ற அவர் வைத்துவிட..
இவனும் அடுத்த அரைமணி நேரத்தில் அவர் முன்னால் அமர்ந்திருந்தான். வந்தவன் அவருக்கு விறைப்பாக ஒரு சல்யூட் வைத்து விட்டு அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தான்.
அவர் எதற்கு கூப்பிட்டார் என்று தெரிந்தாலும், மேசையில் உள்ள ஒவ்வொரு பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தானே ஒழிய வாய் திறந்து பேசவே இல்லை.
“என்ன எஸ்பி வந்து அமைதியாக உட்கார்ந்து இருக்க?” என்று அவர் சற்று கடுமையாக கேட்க..
‘போ போ இதெல்லாம் நான் நிறைய பார்த்திருக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டவன், “என்ன சார் நீங்க தானே வர சொன்னிங்க.. வந்ததிலிருந்து நீங்க பேசாம இருந்திங்களா? ரொம்ப நாள் கழிச்சு பார்க்குறதுனால என்னை சைட் அடிச்சிட்டு இருந்திங்க நீங்கனு நான் நினைத்தேன் சார்” என்று நக்கலாக அவன் பேச..
தலையை இடவலமாக ஆட்டி கொண்டவர் “உன்கூட..” என்று ஆரம்பித்தவர் கடகடவென்று சிரித்து விட்டார். அடுத்த கணம் “பீ சீரியஸ்.. எதுக்கு நீ போய் சுதர்மனை பாத்துட்டு வந்த.. அதற்கான காரணத்தை முதலில் சொல்லு?” என்று அவர் கேட்க..
“அது சார்.. அவர் வீடு ரொம்ப பெருசா இருக்கும்னு சொன்னாங்க. அதான் போய் பாத்துட்டு வரலாம்னு நானும் அரசுவும் போனோம்” என்றான்.
“எஸ்பி..” என்றவர் முறைக்க..
“ஓகே.. ஓகே.. கூல் கூல்” என்றவன்.. மாலினி மற்றும் சஞ்சனா கேஸ் பற்றிய டீடெய்ல்ஸ் அனைத்தும் அவருடன் பகிர்ந்து கொண்டு “இந்த கேஸ்ல எனக்கு அவர் மேல கொஞ்சம் டவுட்டா இருக்கு சார்” என்றான்.
முதலில் அவன் சொன்னத எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர் கடைசியாக சுதர்மன் மீது சந்தேகம் என்றவுடன் அதிர்ந்து அவனைப் பார்த்தார்.
“இப்படியெல்லாம் டக்குனு ஒருத்தரை சந்தேகப்பட முடியாது.. அதுவும் சமூகத்தில் ஒரு நல்ல நிலையில் இருக்கிறார். அது மட்டும் இல்லாம நிறைய பேருக்கு அவருக்கு உதவி செய்துகிட்டுவரார்.. கடைசியா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிறைய நிவாரணம் இவரோட ஆளுங்க கொடுத்ததாக கூட நான் கேள்விப்பட்டேன். அதனால சரியான ஆதாரம் இல்லாமல் இவரு மேல நாம கை வைக்க முடியாது” என்றார்..
“இப்போ தான் சாரே.. என் சந்தேகம் இன்னும் வலுக்குது.. மாலினி மீனவ குடும்பத்தை சேர்ந்த பொண்ணுதான்” என்று தியாகராஜன் கூர்ந்து பார்த்தவாறு அவன் கூற..
அவன் சொல்ல வருவது புரிந்து கொண்ட தியாகராஜனும் “எதா இருந்தாலும் வெளியே தெரியாமல் பார்த்து பதமா பண்ணு எஸ்பி” என்றார் அவனை அறிந்தவராக..
அதே நேரம் அவனது செல்போன் ஒலிக்க எடுத்துப் பார்க்க அதில் ரதி என்று பெயர் மின்னி மின்னி மறைந்தது.
‘நேத்து போல இன்னிக்கும் கிளாஸ் கட் அடிச்சிட்டா.. இவ கிளாஸ் கட் அடிச்சா நாமும் ஸ்டேஷன கட் அடிக்க முடியுமா? என்ன?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டு அவன் போனை கட் செய்ய, திரும்பத் திரும்ப போன் செய்து கொண்டே இருந்தாள் திவ்யபாரதி.
போன் அடிப்பதையும் இவன் கட் செய்வதும் திரும்பத் திரும்ப அது அடிப்பதையும் பார்த்த தியாகராஜனும் “ஏதாவது எமர்ஜென்சி இருக்கும் போல எடுத்துப் பேசு எஸ்பி” என்று அவர் கூற..
‘இவ ஏதாவது எக்குத்தப்பாக பேசினால், நாமும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அவளுக்கு தகுந்த மாதிரி பேசுவோமே இதெல்லாம் தேவையா இவருக்கு முன்னால்? நல்லவனா இருந்த என்னையும் டோட்டலா கல்பிரிட் மாத்திட்டா!! வேண்டாம் சாமி” என்று நினைத்தவன் போனை கட் செய்யப் போக, அது ஆன் ஆகி இவன் கை பட்டு லவ் ஸ்பீக்கரில் ஓட.. இச் இச் இச் என்ற சத்தம்…
கேட்ட இருவரில் யார் அதிகமாக அதிர்ந்தார்கள் என்று சொல்வதற்கில்லை!!
ஆனால் அந்தப் பக்கத்தில் இருந்த திவ்யாவோ இது எதுவும் அறியாமல் “எஸ்பி.. மச்சான்!! ஐ லவ் யூ!! ஐ லவ் யூ!! ஐ லவ்யூ!! இச் இச் இச்” என்று மேலும் தனது இச்சைகளை அவள் தொடர்ந்து கொண்டே இருக்க.. அதில் ஸ்தம்பித்த எஸ்பியோ லவுட் ஸ்பீக்கரை ஆப் பண்ண வேண்டும் என்று மறந்து உரைந்து உட்கார்ந்திருந்தான்.
18
இச் இச் இச் என்று இச் மழை இசை மழையாய் பொழிய.. அதில் நனைந்து உறைந்து சுற்றம் மறந்து அவன் அமர்ந்திருக்க.. “எஸ்பி மச்சான் இன்னைக்கும் நான் கிளாஸ் கட்.. ரூப் கார்டன் போவோமா?”என்று கிளுக்கி சிரித்த பெண் குரலில் தியாகராஜன் எஸ்பிஐ முறைக்க..
“என்ன மச்சான் இவ்ளோ இச்சு கொடுத்தேன். ஒரு ரெஸ்பான்ஸ் கூட இல்ல உங்க கிட்ட.. வெறும் காத்து தான் வருது” என்று சோகக் குரலில் அவள் கூற..
‘அடியே காத்தா காத்து.. இந்த காத்து பெரும் புயலா கொஞ்ச நேரத்தில் வரும் பாரு.. நேரா பார்க்கும் போது ஒரு முத்தத்துக்கு கூட பஞ்சம்.. போன்ல அள்ளிக் கொட்டுறா!! உனக்கு இருக்குடி!!’ என்று மனதுக்குள் அவளுக்கு கவுண்டர் கொடுத்துக் கொண்டாலும், வெளியே எஸ்பியோ செய்வது அறியாது திருதிரு என்று முழித்தான் அவன் வாழ்வில் முதல் முறையாக.. செய்ய வைத்தாள் அவனின் காதல் களவாணி!!
தியாகராஜனோ “எஸ்பி..” என்று அழுத்தமாக அழைக்க..
சட்டென்று காதலெனும் மாய உலகில் சஞ்சரித்தவன், விழித்து எழுந்தவன் போல உடலை ஒரு முறை குலுக்கி போனை கைப்பற்றி ஆப் பண்ணி இருந்தான் பெருமூச்சு விட்டபடி..
காக்கி சட்டையை போட்டாலே கஞ்சி சட்டையை போல விரைத்துக்கொண்டு சுற்றுபவன்.. தன்னை சுற்றி இருப்பவர்களை எல்லாம் தோற்றத்திலும் வார்த்தையிலும் அலற வைப்பவன்.. ரவுடிகளையும் கேடிகளையும் என்கவுண்டர் என்ற பெயரில் நடுங்க செய்பவன்.. அவ்வளவு ஏன் மேல் அதிகாரியான தன்னிடம் கூட பயம் ஏதும் இல்லாமல் சற்று அமர்த்தலாக நடந்து கொள்பவன் இன்று தன் கண் முன்னே மீசைக்குள் உதட்டை கடித்துக்கொண்டு லேசாக வெட்கம் சூழ இருப்பவனை பார்த்து தியாகராஜனுக்கு சிரிப்பு வந்தது.
இம்முறை “எஸ்பி” விஷயத்தை சொல் என்ற தொனியில் அவர் அழைக்க…
மெல்ல அவரை நிமிர்ந்து பார்த்தவன் சிரிப்புடன் வேறு புறம் திரும்பி கொண்டான்.
“யோவ் என்னய்யா நடக்குது. விழுந்துட்டியா?” என்று நம்ப முடியாமல் என்று தியாகராஜன் கேட்க.. அவரின் வார்த்தை மேலதிகாரியாக இல்லாமல் அவனின் நண்பனாக நலம் விரும்பியாக இருந்தது.
வசீகர புன்னகையுடன் அவரை பார்த்து ஆமாம் என்று மேலும் கீழும் அவன் தலையை ஆட்ட..
“அடப்பாவி!!” என்று அதிசயத்தவர் அவனை நோக்கி முன்னே குனிந்து “இதனால்தான் அந்த கல்யாணத்தை நிறுத்துனியா? அன்னைக்கு கேட்கும்போது அந்த பிள்ளைக்கு ஏதோ அஃபர் இருந்துச்சுன்னு சொன்ன.. இப்படி முழு பூசணிக்காய சோத்துல மறச்சிடியே எஸ்பி” என்று அவர் சிரிக்க…
என்னத்தை சொல்ல!! அந்த கல்யாணத்தின் போது தான் அவளை முதல் முதலில் பார்த்தேன் என்றும், அவளால் கடத்தப்பட்ட போது தான் காதல் கொண்டேன் என்றா சொல்ல முடியும்.
“இல்ல சார்.. அப்போ அவள நான் விரும்பல.. இப்போ தான் கொஞ்சு நாளா..” என்று புன்னகையுடன் கூறினான்.
“டெரர் எஸ்பி உள்ளேயும் ஒரு ரொமான்டிக் எஸ்பி ஒளுஞ்சு இருக்கான் பாரேன்.. ஆல் த பெஸ்ட் மேன்” என்று அவனை வாழ்த்தியவர் “சரி சரி.. வழக்கோடு வாழ்க்கையையும் சேர்த்து பார்” என்று அறிவுரை கூற, ஒப்புதல் ஆக தலையாட்டி விட்டு வெளியேற..
“எஸ்பி ஒரு நிமிஷம்” என்று அவனை தேக்கி நிறுத்தினார். கதவுக்கு மேல் கை வைத்து திறக்க போனவன் என்ன என்று திரும்பி அவரை பார்க்க…
“இதே மாதிரி சிரிச்ச முகத்தோட வெளியில் போய் விடாத எஸ்பி, கமிஷனர் ஆபீஸே ஸ்தம்பித்து நின்றுவிடும்.. எப்பொழுதும் போல முஞ்சை கடுப்பாவே வைத்துக் கொண்டு போ” என்று அவர் வார.. அவனுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது, கூடவே அவனது முகத்தில் ஒரு சிறு புன்னகை வேறு. முதன்முதலாக அவனின் இந்த புன்னகையை பார்க்கும் அவருக்கும்
சூரிய பிரகாஷின் இந்த வசீகர தோற்றம் கவர்ந்தது என்றே சொல்லவேண்டும்.
மெல்ல தலையை ஆட்டி விட்டு வெளியேறியவன்.. தன் ஜீப்பில் ஏறி அமர்ந்தவுடன் “போச்சு போச்சு என் மானம் எல்லாம் போச்சு ஒரே போன் காலில்.. அம்புட்டும் போச்சு.. வகை தொகையா வச்சு செஞ்சுட்டா” என்று புலம்பியவன், ரிவ்யூ கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து, “டேய் எஸ்பி ஒரே ஒரு போன் கால் உன் போஸ்டுக்கே ஆப்பு வச்சுட்டா.. இன்னும் என்னென்ன வச்சு செய்யப் போறான்னு தெரியல.. எதுக்கும் உஷாரா இருந்துக்கோ எஸ்பி” என்று தனக்குத்தானே தைரியம் ஊட்டிக் கொண்டு அவளுக்கு கால் செய்தான்.
மறுபுறம் போனை எடுத்தவள் “என்கூட பேசாதீங்க எவ்வளவு ஆசையா அத்தனை கிஸ் கொடுத்தேன்.. பதிலுக்கு ஒன்னு கூட நீங்க கொடுக்கல.. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன்.. இப்போ நான் கோபமா இருக்கேன், அதனால இப்போ அது கட்” என்று அவனக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் அவள் போனை வைத்துவிட..
“அடிங்க… போன வச்சுட்டாளே!!” என்று யோசித்தவன், அவளுக்கு சங்கீத ரூஃப் கார்டன் அஞ்சு மணி என்று மெசேஜ் தட்டி விட்டு இவன் தன் ஸ்டேஷனுக்கு சென்றான்.
அரசுவை அழைத்தவன் அவர்களுக்கு நம்பகமான இவர்களுக்காக துப்பறியும் வேலை செய்யும் 5 ஆட்களை வரவழைத்து இருந்தான். அவர்களிடம்..
“இது கொஞ்சம் சீக்ரெட்டா செய்ய வேண்டிய வேலை. அதனாலதான் உங்களை வரவழைத்தேன்.. சமீப காலமா பெண் குழந்தைகள் கடத்தப்படுறதும், கொடூரமாக கொலை செய்யப்படுறதுமா இருக்காங்க சில பேரு என்ன ஆனாங்கன்னு தெரியல அதை கண்டுபிடிக்க தான் இந்த டீம்.. உங்களுக்கு நான் தரப் போற வேலை.. சுதர்மன் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட தொழில்கள் பத்தின டீடெயில்ஸ் எனக்கு அப்பப்போ தெரியப்படுத்தனும். முக்கியமா அவரோட பைவ் ஸ்டார் ஹோட்டல் அப்புறம் ரிசார்ட்” என்று அவர்களைப் பார்த்தான்.
“எஸ் சார்!! வி ஆர் டூ இட்” என்று அவர்கள் கூற..
“இன்னைக்கே உங்க வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டுங்க” என்று அவர்களை அனுப்பி வைத்தான்.
சுதர்மனை கட்டம் கட்டி தூக்க இவன் எங்கே தன் ஆட்களோடு முயற்சி செய்து கொண்டிருந்த அதே நேரம், சுதர்மன் வீட்டில்..
“அவனுக்கு நம்ம மேல டவுட்டு வந்துட்டு அதனாலதான் ஜஸ்ட் என்கொய்ரினு வீட்டுக்கு வந்துட்டு போயிருக்கான்.. இவனை இப்படியே வளர விட்டால் நமக்கு தான் ரொம்ப ஆபத்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று தன் ஆட்களிடம் கூற..
அவர்களோ அவனும் திவ்யபாரதியும் பார்க்கில் இருந்த போது இவர்களால் எடுக்கப்பட்ட போட்டோக்களை காட்ட..
“அப்போ இவளை தூக்கி.. அவனை வரவழைத்து ரெண்டு பேரையும் போட்டுடு” என்று அதிகாரத்துடன் கட்டளையிட.. அதை சிரமேற்கொண்டு அவனது ஆட்களும் திவ்யபாரதியை தூக்க சென்றார்கள்.
இவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குப் பின்பு, சந்துருவும் அவன் மனைவியும் தங்கள் மகள் பற்றி தெரிந்ததா? ஏதேனும் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்று கேட்பதற்காக அவனது அறைக்கு வெளியே காத்திருக்க, அவர்களை அழைத்தான் எஸ்பி.
“வாங்க மிஸ்டர் சந்துரு” என்று அவர்களை அழைத்து உட்கார வைத்தான்..
“கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆயிடுச்சு எங்க பொண்ணு காணாமல் போய்.. எங்க இருக்கா? எப்படி இருக்கா? உயிரோடு இருக்கிறாளா என்று கூட தெரியாமல் தினம் தினம் மனதுக்குள்ளேயே செத்துப் பிழைக்கிறோம் சார்.. எதிலேயும் எங்களால கான்சன்ட்ரேட் பண்ணவே முடியல.. வேலைக்கும் போறது இல்ல சார்” என்று சந்துருவின் மனைவி அழ..
“என்னால தான் என் பேத்தி காணாம போயிட்டானு, எங்க அம்மா அதையே தினம் தினம் சொல்லி கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மாதிரி ஆயிட்டாங்க சார்.. என் பொண்ண கண்டுபிடிச்ச கொடுங்க.. அவை எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை நாங்க பத்திரமா பாத்துக்வோம்” என்று சந்துரு துக்கத்துடன் கூறினான்.
அன்று மாரி!! இன்று சந்துரு!! எத்தனை எத்தனை பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை இவ்வாறு பறி கொடுத்து பரிதவித்து வருகிறார்களோ? என்று எண்ண எண்ண மனம் கனத்தது எஸ்பிக்கு. அதுவரை இப்படி யாரிடம் பகிராத சில விஷயங்களை அவரிடம் பகிர முயன்றான் எஸ்பி.
“இங்க பாருங்க சந்துரு, உங்க பொண்ணு மட்டும் இல்ல உங்க பொண்ணு மாதிரி நிறைய பொண்ணுங்க ரிசன்ட் நாளா காணாம போய் இருக்காங்க. சென்னை மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து 40க்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் அடிக்கடி இந்த மாதிரி காணாம போறது மறைந்து போற மாதிரி இருக்கு.. அன்னைக்கு ஒரு பொண்ணு இறந்து கிடந்தானு உங்களை கூட்டி போய் காமிச்சேனே, அந்தப் பெண்ணும் சஞ்சனா காணாமல் போறதுக்கு ரெண்டுவாரம் முன்ன காணாம போன பெண் தான்” என்று எஸ்பி சொல்லிக்கொண்டே போக சந்துரு அருகில் இருந்த அவன் மனைவி…
“அப்போ எங்க பொண்ணும்.. எங்க பொண்ணும்..” என்று அதற்கு மேல் பேச முடியாமல் மயங்கி கணவன் மேல் சரிந்தாள்.
தன் மனைவியை சந்துரு தாங்கிப்பிடிக்க அதற்குள் எஸ்பி கான்ஸ்டபிள் என்று அழைக்க வந்த ஆண் கான்ஸ்டபிள் இடம் பெண் காவலரை வர சொல்லி அவளை அருகிலிருந்த பெஞ்சில் கிடத்தினார்கள்.
சந்துரு பயந்தபடியே தன் மனைவியின் அருகே நிற்க… “பயப்படாதீங்க சந்துரு, ஜஸ்ட் அதிர்ச்சில வந்த மயக்கம் தான். கொஞ்ச நேரம் இருக்கட்டும் அப்புறம் டாக்டர்கிட்ட போய்ட்டு, வீட்டுக்கு கூட்டிட்டு போங்க” என்றான்.
“சார் ஏதோ சொல்ல வந்திங்க.. முழுசா சொல்லி முடிக்கல சார்” என்று தன் பெண் என்ன ஆனாள் என்று அறிய முயலும் ஒரு தந்தையின் ஏக்கம்..
வலது கையால் தனது நெற்றியை நீவிவிட்டு கொண்டவன், “சந்துரு இது ஒரு பெரிய நெட்வொர்க். யாரோ ஒரு குழந்தையை கடத்தி பிச்சை எடுக்கவோ.. இல்ல தவறான முறையில் உபயோகித்து தூக்கிப் போடவில்லை. இதுக்கு பின்னாடி ஒரு வலுவான ஒரு கூட்டம் இருக்கு.. அந்தக் கூட்டத்தை பிடிக்க தான் வலை விரித்து இருக்கேன் கொஞ்சம் டைம் கொடுங்க கண்டிப்பா உங்க பொண்ணு மட்டும் இல்ல உங்க பொண்ணு மாதிரியே அகப்பட்டுக்கொண்ட இன்னும் பல பெண் குழந்தைகளை மீட்டு தந்திடுவேன்” என்று அவன் தோளில் கைவைத்து கூறினான்.
எஸ்பி யின் இந்த நம்பிக்கையான பேச்சு கலங்கிய மனதிற்கு கலங்கரைவிளக்கு போல் ஆறுதல் அளிக்க.. “சார் உங்கள நம்பி தான் போறோம்”என்று மனைவி பக்கம் திரும்பியவன், எஸ்பிஐ பார்த்து.. “பலபேர் நினைக்கலாம் ரெண்டு பேரும் வேலை வேலைன்னு இவ்ளோ நாளா ஓடிட்டு பொண்ணு சரியா பார்க்காம இப்போது கவலை பட்டு என்ன பிரயோஜனம் என்று!! இப்ப இருக்கிற காலத்துல அவளுக்கு நல்ல படிப்பு நல்ல வாழ்க்கையை அமைத்து தர தான் சார் நாங்க ஓடுறோம். அதுக்குன்னு அவளை நாங்க விட்டுடோம் அர்த்தம் இல்லை.. முடிந்தவரை எங்கள் நேரங்களை அவளோடு தான் நாங்கள் செலவிடுவோம்.. அவ இல்லேன்னா எங்களுக்கு உலகமே இல்ல சார். எங்க மொத்த உலகத்தின் உயிர்ப்பே அவதான்” என்று கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே கூறினான் சந்துரு.. பெண்ணை பறிகொடுத்து விட்டோம் என்று பரிதவிப்பு அப்பட்டமாக தெரிந்தது அவன் குரலில்!!
சந்துரு பேச பேச ஏற்கனவே கடத்தியவர்கள் மீது கனலாக கொண்ட கோபம் இப்போது எரிமலையாக வெடிக்க காத்துக்கொண்டிருந்தது எஸ்பியின் மனதினுள்!!
அடுத்தவர் குழந்தைக்காகவே எவ்வளவு பாடுபடும் நம் எஸ்பி.. அவனின் மறு பாதியை கடத்தினால் என்ன செய்வான்!!
எரிமலை வெடிக்குமா?
சந்துருவையும் அவன் மனைவியையும் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கவே அவனுக்கு நேரம் ஓடி விட.. மணியை பார்க்க அதுவோ ஐந்தரை என காட்டியது.
“போச்சி.. ஏற்கனவே அம்மணி ஏக கோபத்தில் இருந்தா.. இப்போ லேட்டா வேற ஆயிடுச்சா” என்று அவசரமாக ஸ்டேஷனிலேயே இருக்கும் அவனுடைய டீசர்ட்டை மாட்டிக் கொண்டு காரில் பறந்தான் என்றுதான் சொல்லவேண்டும் தன் காதலியை காண!!
மொபைலில் எஸ்பியின் மெசேஜை பார்த்த அவளுக்கு மனம் துள்ள தான் செய்தது.. என்னதான் அவன் மீது கோபம் கொண்ட மாதிரி நடித்தாலும், அந்த நடிப்பை அவளால் ரொம்ப நேரம் பிடித்து வைக்க இயலாது என்று அவளுக்குத் தெரியும்!! எங்கே அவனும் கோபித்துக் கொண்டு நம்மை சமாதானப்படுத்த வராவிட்டால் என்ன செய்வது? என்று தவித்து கொண்டிருந்தவளுக்கு அவனின் மெசேஜ் இன்பத்தை அள்ளித் தர அவள் சொன்ன ஐந்து மணிக்கு முன்னாடியே சென்று ரூப் கார்டனில் அமர்ந்துவிட்டாள்.. அவனுக்காக சர்ப்ரைஸ் உடன்!!
இவர் தனியாக அமர்ந்து இருப்பதை பார்த்து வெயிட்டர் என்ன வேண்டும் என்று கேட்க..
“வெயிட் பண்ணுங்க சார் வந்துடுவாங்க” என்று அதே டயலாக்கை அரை மணி நேரமாக அவள் கூற.. அவனோ அவளை சந்தேகத்துடனே பார்த்தான்.
“எல்லாம் இந்த கஞ்சி சட்ட தான் காரணம்.. வரட்டும் வச்சிக்கிறேன்” என்று மனதில் பொறுமையை பிடித்தப்படியே அவள் அமர்ந்திருக்க..
இன்று கர்ணாவையும் அவளை அழைத்து வரவில்லை. இவள் எஸ்பியை பார்க்க செல்கிறேன் என்று சொன்னவுடன் இவளை ட்ராப் செய்தவன் “நான் வழக்கம் போல அந்த பார்க்கில் வெயிட் பண்றேன். சீக்கிரம் வந்துரு டயத்தை கடத்தாத.. அப்புறம் அத்தைகிட்ட என்னால பதில் சொல்ல முடியாது” என்று அவளை இறக்கிவிட்டு அவன் சென்று விட.. தனியா அமர்ந்திருக்கிற ஒவ்வொரு நேரமும் மனதிற்குள் என்னவென்று சொல்ல தெரியாத ஒருவித அலைக்கழிப்பு..
ஐந்து நாற்பத்தி ஐந்து வரை பார்த்தவள் இதற்கு மேல் அவன் வரமாட்டான் என்று எண்ணி கோபம் கரைந்து கண்ணீர் பெருக கண்கள் குளம் கட்ட.. எழுந்து வீடு நோக்கி சென்றவளை இரு கரங்கள் அவளை தன் நோக்கி இழுக்க.. அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவன் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் மணிகள் விழுந்து அவள் மார்புக்குள் சென்று ஒளிந்தது..
புருவங்களை உயர்த்தி சிரித்தான் மாயவனாக.. அவளோ கோபப்பார்வை பார்த்தாள்.
அவளின் இடை வளைத்து இறுக்கியவனின் கைகளில் மாட்டிக்கொண்ட மங்கையவள் தன்னை விடுவித்துக் கொள்ள போராட, அவனோ பிடியை வலுத்தான்.
“விடுங்க எஸ்பி சார்.. விடுங்க”
அவனும் விடுவதாய் இல்லை.. உடும்புப்பிடி கூட தோற்றுவிடும் அளவுக்கு போலீஸ் பிடியாய் இருந்தது அவனது முரட்டு பிடி..
“விடப் போறீங்களா இல்லையா?” என்று அவள் வார்த்தை என்னவோ கோபமாக வந்தாலும், அவள் உடல் என்னவோ அவனிடம் குழைந்து கொண்டேதான் இருந்தது.
அவள் சொல்வது எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை எஸ்பி.. அவளின் கழுத்து வளைவினில் முகம் புதைத்தவன், அவளின் தோள்பட்டையில் அழுத்தமாக முத்தமிட்டான்.
“விடுங்க.. விடுங்க.. பப்ளிக்!! பப்ளிக்!! எங்க நின்னு என்ன காரியம் பண்றீங்க.. இதுல நீங்க பெரிய போலீஸ் அதிகாரி வேறு.. சொன்ன சொல்லை எப்பொழுதும் காப்பாற்றுவதே கிடையாது.. உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஆசையா ஆசையா போன் பண்ணினேன் அப்பவும் ரெஸ்பான்ஸ் இல்ல.. இவ்வளோ நேரம் என்னை காக்க வைச்சுட்டு இப்போ கட்டி பிடிச்சா ஆச்சா?” என்று அவள் கூற, நமட்டு சிரிப்புடன் அவளை தான் பார்த்தான்.
முதலில் அவள் திமிர திமிர இடுப்பை இழுத்து தன்னுடன் அணைத்து என்னவோ அவன் தான். ஆனால் அதன் பிறகு அவனைத் திட்டிக்கொண்டே அவளையும் அறியாமல் இவள் தான் இப்போது அவனுடன் பின்னிப் பிணைந்து நின்று கொண்டிருந்தாள்..
அவன் சிரித்த உடன் தான் அவளுக்கு புரிய அவனிடமிருந்து விலக எத்தனிக்க, அவனோ வேகமாக அவள் இடை பற்றி இழுத்து, அவள் கழுத்தில் அதரங்களை பதித்து கவ்வி சுவைக்க, உணர்வுகளை மொத்தமாக உருக்கும் நரம்புகள் அதிகமுள்ள கழுத்து பகுதியில் ஆணவன் அதரங்கள் உரச உரச, பெண்ணவள் ஹார்மோன்கள் எல்லாம் தரிகிட.. தரிகட என்னும் தாளம் போட… உணர்வு பெருக்கில் திவ்யா எஸ்பிஐ அணைத்துக் கொண்டு,
“எஸ்பி மச்சான்.. ரொம்ப போங்கு ஆட்டம் ஆடுறிங்க.. இப்படியெல்லாம் என்னை கூல் பண்ண முடியாது” என்று கிறக்கமாக கூற..
“நான் ஏன் ரதிமா, உன்னை கூல் பண்ணனும்.. உன்னை ஹாட்டா வைச்சு இருந்தா தான் மச்சானுக்கு நல்லது” என்று நுனி நாக்கினால் அவளது காது மடலில் கோலம் போட..
அதில் சிலிர்த்தவள், அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து அவனை தள்ளிவிட்டு அவனை முறைத்து பார்க்க.. அதுவோ மோக பார்வையாக இருக்க.. “பார்த்து பார்த்து கொல்லாதடி என் ரதியே” அவள் முகத்தை அருகில் இழுத்து அதில் உதடுகளால் கோலம் போட.. முதலில் கிறங்கியவள், “அச்சோ நேரம் ஆச்சு.. ரத்னா தொடப்பகட்டைய எடுத்திடும்.. கர்ணா வேற எனக்காக வெயிட் பண்றான்” என்று பரபரத்தவள் தன் கையில் இருந்த லேப்டாப்பை அவனிடம் திறந்து காட்டினாள்.
“என்னடி இது?” என்று எஸ்பி கேட்க..
“உங்களோட சர்ப்ரைஸ்!!” என்றாள்.
என்ன என்று அவன் புரியாமல் பார்க்க.. அவன் கேட்டிருந்த ஆப்பை அவள் கிரியேட் செய்து வைத்திருந்தாள். அவன் ஆச்சிரியமாக அவளைப் பார்த்து “எப்ப டி இதெல்லாம் செஞ்ச?” என்று கேட்க..
“அதெல்லாம் நேரம் கிடைக்கும்போது அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா செஞ்சு வைச்சேன். இன்னைக்கு தான் முழுசா முடிஞ்சது. உங்கவிட்டுக் காட்டலாம் தான் மத்தியானம் போன் பண்ணி வர சொன்னேன்”
அப்போதுதான் அவனுக்கு போன் ஞாபகம் வர, அவள் காதை பிடித்து வேகமாக திருகி, “ஏண்டி போன் போட்டா.. எங்க இருக்கேன் என்ன பண்றேன் எல்லாம் கேட்க மாட்டியா? நான் அப்போ கமிஷனர் கூட பேசிகிட்டு இருந்தேன். போச்சு போச்சு எல்லாத்தையும் கேட்டுட்டார்” என்று அவன் வெட்கத்துடன் கூற..
“நான் உங்களுக்கு தானே கொடுத்தேன், அதை ஏன் நீங்க அவருக்கு போட்டு காட்டுனிங்க?” என்று இவள் எடக்காக கேட்க..
“ம்ம்ம்.. எனக்கு வேண்டுதல்.. சரி இப்போது எப்படி ஃபங்ஷன் பண்றதுன்னு காட்டு” என்று அவன் கேட்க..
ஒரு சின்ன சிப்பை எடுத்துக்காட்டியவள் அதை தன்னுடைய வாட்ச்சில் பின்பக்கம் ஒட்டவைத்து அவனிடம் காட்டினாள். “இந்த மாதிரி இதை ஒட்ட வைத்து, அப்புறம் வாட்ச் உள்ளே இருக்கற மாதிரி செட் பண்ணிக்கலாம். இதுல உள்ள வைஃபை ஆன் பண்ணிட்டோம்னா, இது எந்த ஆப் போட கனெக்ட் ஆயிடும்.. ஏதாவது பிராப்ளம்னா இந்த சிப்ல உள்ள ஒரு பட்டனை அழுத்துனா இந்த ஆப் கரெக்டா எங்க எந்த ப்ளேஸ்ல இப்ப இருக்காங்கனு ட்ரேஸ் பண்ண முடியும். கூடவே ஒவ்வொரு சிப்புக்கும் குறைந்தது 3 லிருந்து 5 போன் நம்பரை ஆட் பண்ணிக்கலாம். இந்த ஆப்ல அலாரம் வர்ற அதேநேரம் சிப்போட இணைந்திருக்கிற அஞ்சு நம்பருக்கு அலாட் மெசேஜ் போகும். அது அந்த குழந்தைகளோட அப்பா அம்மா கூட இருக்கிற தாத்தா பாட்டி யாரா வேணா இருக்கலாம்.. உங்களுக்கு நார்மலா இல்லாமல் டிஃபரண்டான சவுண்டல அந்த அலாரம் கேட்கும். அதை கேட்டவுடனே தங்களுடைய பெண்ணோட பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கலாம்” என்று அவள் விளக்க..
“பாரேன் ரதி.. உனக்குள்ளேயும் ஒரு அறிவாளி ஒளிஞ்சிகிட்டு இருக்கிறா” என்று அவன் கிண்டல் செய்ய..
“டெரர் போலீஸ்க்கிட்டேயே ஒரு ரெமோ இருக்குற மாதிரிதான்” என்றவள் தன் முழங்கையால் அவன் இடுப்பில் ஒரு இடி இடித்தாள்.
அப்போதுதான் அவளுக்கு சுற்ற ஞாபகம் வர “அச்சோ!!” அவள் பதற, “என்ன என்ன” என்று அவன் கேட்க.. “இவ்வளவு நேரம் ரூப் கார்டனலையா இருந்தோம்” என்று கண்களை சுழல விட்டபடி அவள் கேட்க.. வாய்விட்டு சிரித்தான் எஸ்பி.
“அதெல்லாம் வரும்போதே நான் சர்வர் கிட்ட ரூப் கார்டனுக்கு யாரையும் அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டு தான் வந்தேன்.. நாம போற வரைக்கும் யாரும் வர மாட்டாங்க” என்று சொன்னவுடன் தான் அவளுக்கு நிம்மதியே வந்தது.
“சரி வா போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு கர்ணா காத்திருக்கும் பார்க்கில் அவளை விட, இருவரும் செல்வதை பார்த்துவிட்டு இவன் வீட்டுக்கு சென்றான்.
ஒரு வாரமாக அதிகமாக வீட்டுப்பக்கம் வர முடியாதவன் இன்றுதான் வர, மெதுவாக ஒரு குளியல் போட்டு இலகுவான ஆடையை உடுத்தி அவன் கீழே வர ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே வாசுகி அவனுக்கு டீ கொடுத்தார்.
“என்ன ஏசிபி சார் இன்னிக்கு ரொம்ப ஃப்ரியா இருக்குற மாதிரி தெரியுது.. பல்பு போட்ட மாதிரி முகம் பிரகாசம் வேற இருக்கு” என்று அவர் கேட்க..
அன்னையிடம் திவ்யபாரதி பற்றி கூறிவிடலாம் என்று எண்ணியவன் மெல்ல சிரித்துக்கொண்டே “அது மா..” என்று ஆரம்பிக்க அவனது போன் அப்போது அடித்தது.
யார் என்று பார்க்க கர்ணா..
‘இவன் ஏன் இப்போது கால் செய்கிறான்?’ என்று யோசித்தவாறே அட்டென்ட் செய்தான் அந்த பக்கத்திலோ “எஸ்பி சார்.. திவிய.. திவிய யாரோ கடத்திட்டாங்க” என்று அலறினான்.
கையிலிருந்து டீ கோப்பை கீழே விழுந்து நொறுங்கியது தெரியாமல் அதிர்ந்து எழுந்து நின்றான் எஸ்பி!!
19
தன் அன்னையிடம் தன் காதலை பற்றி கூறி விடலாம் என்று நினைத்தான் சூர்யபிரகாஷ். மெல்ல அன்னையை நோக்கி, “ம்மா.. கொஞ்சம் பேசணும்” என்று மெல்லிய குரலில் கூறிய தன் மகனை அவர் ஆச்சிரியமாக பார்த்தவர், சுற்றும் முற்றும் பார்த்தவர், மேலும் கீழும் தன் கண்களால் துழாவி அவனை சுற்றி சுற்றி பார்க்க..
என்னவென்று புரியாமல் “என்னம்மா என்ன தேடுறிங்க? எதையாவது தொலச்சிடடீங்களா?” என்று வெகு அக்கறையாக எஸ்பி கேட்க..
“ஆமாம் டா.. சூரியா.. சூரியான்னு எனக்கு ஒரு மகன் இருந்தான். அவன தான் காணோம். தேடிக்கிட்டு இருக்கேன்” என்று சீரியஸாக அவர் கூற..
“வாட்?? ம்மா.. ஓட்டாதீங்க!!” என்று அவன் சிணுங்க..
“மகனே!! வேண்டாம் டா.. சென்னை அடுத்த ஒரு மழையை தாங்காது” இரு கைகளையும் கன்னத்தில் வைத்து வாசுகி கூற..
“ம்மா..” என்று கோபமாக முறைக்க..
“ம்மா.. ஒரே ஒரு வார்த்தை தான்.. ஆனா நீ ஓராயிரம் மாடுலேஷனுல கூப்பிடுற டா. சரி சரி விஷயத்துக்கு வா” என்றார்.
“அது வந்து.. என்று அவன் இழுக்க..
“நீயும் வந்து முப்பது வருஷமாகுது.. ம்ஹீம்.. இன்னும் ஒரே ஒரு கல்யாணத்துக்கு வழிய காணோம்.. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா உங்க அப்பா அறுபதாம் கல்யாணத்தோட, உன் நாற்பதாவது கல்யாணத்தையும் சேர்த்து நடத்திடலாம்.. அதுவும் நடக்குமா?? சந்தேகம் தான்” என்ன மூடில் இருந்தாரோ எஸ்பிஐ வைத்து செய்து கொண்டிருந்தார் வாசுகி.
ஏற்கனவே காலையில் திவ்யா அவனை வைத்து செய்திருக்க இப்போது வாசுகியும்!!
இந்த பெண்களே இப்படித்தான்.. பெரும்பாலும் பொறுமையாக இருப்பது போல் இருந்து கொண்டு நேரம் கிடைக்கும்போது அனைத்தையும் வட்டியோடு சேர்த்து கொடுத்து விடுவார்கள்!! அது அம்மா என்ன!! மனைவி என்ன!! எல்லாம் ஒரே ரகம்தான்!! கணவனை வைத்து செய்யும் ரகம்!!
“மா போதுமா..” என்று கையெடுத்து கும்பிட அவனை ஆசிர்வதிப்பது போல் பாவனை செய்ய இருவருமே கலகலத்து வைத்தனர்.
பின் மகனின் அருகில் அமர்ந்து தலையை கோதி விட்டவாறு “ரொம்ப நாளாச்சு சூரியா.. இப்படி உன்கிட்ட பேசி சிரிச்சு.. இப்ப அந்த காக்கி சட்ட போட்டியோ அப்பவே உன்கிட்ட இந்த சிரிப்பு எல்லாம் காணம, கனவா போச்சு” என்று கூற.. ‘வீட்டில் கூட டெர்ரரா தான் இருந்திருக்கோம் போல.. கூடிய சீக்கிரம் இதை எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று அவன் நினைத்துக் கொண்டே இருக்கையில் தான் அவனது போன் அடித்தது.
யார் இந்த பார்க்க கர்ணா.. “இந்த நேரத்திலேயே இவன் கால் செய்கின்றான்?” என்று யோசித்தபடியே அட்டென்ட் செய்ய.. அவன் சொன்ன செய்தி அனைத்தையும் மறக்கச் செய்தது. பதறி எழுந்தவன் கையில் இருந்த டீ கோப்பை கீழே விழுந்து சுக்குநூறானது..
“திவ்யாவை.. திவ்யாவை யாரோ கடத்தி விட்டாங்க” என்று அலறினான் கர்ணா..
அதிர்ந்து நின்ற மகனை உலுக்கிய வாசுகி “என்ன ஆச்சு? என்னடா ஆச்சு?” என்று பதட்டத்துடன் கேட்க..
“அம்மா ரதி.. ரதிய யாரோ கடத்திட்டாஙகளாம் மா” என்றான்.
“யாரு டா ரதி?” என்று அவர் கேட்க..
“அச்சோ ரதி இல்ல திவி” என்று அவன் உளற..
“ரதியா? திவியா? இல்ல ரெண்டு பேரும் ஒன்னா டா?” என்று புரியாமல் வாசுகி குழம்ப..
“ரெண்டு பேருமே ஒருத்தர் தான் மா” என்றவன், மாடிக்கு விரைந்து தனது வண்டியின் சாவியை எடுத்து வந்தான்.
“அது சரி.. யாருடா அந்த பொண்ணு?” என்று கேட்க..
“உங்க மருமக மா” என்றவன் அடுத்த நொடி தனது வண்டியில் பறந்தான்.
“என்னது?? மருமகளா??” என்று இப்போது அதிர்வது வாசுகி முறையானது.
வேகமாக சென்றான் திவ்யபாரதி இருக்கும் அபார்ட்மெண்ட் நோக்கி..
அங்கே ஏற்கனவே அப்பார்ட்மெண்ட் வாசலில் அனைவரும் தவிப்போடு காத்திருக்க ஐயப்பனுக்கும் விஷயம் தெரிந்த அவரும் வந்திருந்தார்.
முறைப்படி அந்தப்பகுதி ஏரியா காவல் நிலையம் ஐயப்பன் கீழ் வர அவரால் விசாரிக்க முடியாததால், அவரின் இன்ஸ்பெக்டரே அப்போது விசாரித்துக் கொண்டிருந்தார்.
வில்லி இருந்த புறப்பட்ட அம்பென வேகமாக விரைந்து வந்தவனை யாரும் எதிர்பார்க்கவில்லை அங்கு..
இவனை பார்த்த முதலில் வேகமாக சென்றது கர்ணா தான். அவனும் வேக நடையுடன் கர்ணாவை நெருங்கி “என்னாச்சு கர்ணா?” என்று கேட்க..
“சார் உங்கள பாத்துட்டு திவியும் நானும் அவளோட வண்டியில வந்துகிட்டு இருந்தோம்.. அப்போ..” என்று கர்ணா இழுக்க…
“என்னது எஸ்பிஐ பார்த்துட்டு திவ்யா வந்தாளா?” என்று அங்குள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் ஐயப்பன் ராஜசேகர் எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘இவன் ஒருத்தன்’ என்று மனதுக்குள்ளே தலையில் அடித்துக்கொண்ட எஸ்பி, ஐயப்பனையும் ராஜசேகர் மற்றும் அந்த இன்ஸ்பெக்டரையும் தன் அருகில் வரவழைத்து.. “ஒரு ஆப் விசயாமா திவ்யபாரதி கிட்ட சொல்லி இருந்தேன்
அதை இன்னைக்கு முடித்துவிட்டு என்னை பார்த்து சொன்னாங்க” என்று பொதுவான விளக்கம் கொடுத்தான்.
“அப்புறம் என்ன ஆச்ச” என்று கர்ணாவை பார்த்து படப்படப்புடன் கேட்க..
“சார் வண்டிய நான்தான் ஓட்டிட்டு வந்தேன் அப்ப ஏத்தாப்பல குல்பி வண்டி வந்துச்சா..” என்று நிறுத்தியவன், எல்லாரையும் ஒரு முறை சங்கடமாக பார்த்து “குல்ஃபி சாப்பிடலாம்னு நான் தான் திவி கிட்ட சொன்னேன்” என்று மெதுவாக கூற..
அங்கே நின்றிருந்த ராஜசேகரோ தன் மகனின் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டி “அறிவு இருக்காடா உனக்கு? காலேஜ் முடிஞ்சா நேர வீட்டுக்கு வராம, எப்ப பார்த்தாலும் தின்கிறதே உனக்கு நினைப்பு” என்று அந்நிலையிலும் அவனை திட்டினார்.
“விட்டுவிடு ராஜசேகர்.. அவன் என்ன பண்ணுவான்? சின்ன பையன்தானே!!” என்று ஐயப்பன் தான் சமாதானப்படுத்தினர்.
“வழக்கமா நான் வண்டி ஓட்டும்போது லேப்டாப் எல்லாம் பின்னால் வைத்துகிட்டு அவ தான் சார் உட்கார்ந்திருப்பா. குல்பி பார்த்து நான் கேட்டவுடன் என் கழுத்துல மாட்டி விட்டு, அவ வாங்கிட்டு திரும்ப.. அப்போ சட்டென்று பக்கத்துல ஒரு கார் வந்தது கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை தூக்கி போட்டு கொண்டு போயிட்டாங்க சார்” என்று அழும் குரலில் கர்ணா சொன்னான்.
அன்று போல் இப்போது யாரிடமும் இவள் வாய் கொடுக்கவில்லை பிறகு எப்படி இது என்று யோசிக்க தொடங்கினான் எஸ்பி.
“உங்களுக்கு யாரும் ஏதாவது சந்தேகம் இருக்கா?” என்று ஐயப்பனை பார்த்து கேட்க..
“ஒருத்தர் ரெண்டு பேரா சார்? ஊர் புல்லா வம்பை தான் விலைக்கு வாங்கி வைத்திருந்தா சோசியல் சர்வீஸ் என்கிற பெயரில்.. இப்ப இந்த நேரத்தில் யார் பண்ணினாங்கனு எனக்கு எந்த வித அனுமானமும் இல்ல சார்” என்று பெண்ணை பெற்ற தந்தையாக பெரும் கலக்கம் அவருக்குள்..
“எப்ப பாத்தாலும் சோசியல் சர்வீஸ்னு ஊர் சுத்திக்கிட்டு இருப்பா.. பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா வீட்டிலிருந்து சொன்னா கேட்டாதான?” என்று ரத்னா அழுதுகொண்டே கூற..
“ரத்னா கொஞ்ச நேரம் அமைதியாய் இரு.. சோசியல் சர்வீஸ் என்று சொன்னாலும் அவ தப்பா எந்த செயலையும் செய்யல தானே!!” என்று மகளுக்கு அப்போதும் சப்போர்ட் செய்தார் ஐயப்பன்.
“இப்படியே சொல்லி சொல்லித்தான், நான் சொன்ன பேச்சைக் கேட்காம.. இப்ப பாருங்க” என்று ரத்னா அழுக..
அப்போது ஒரு கான்ஸ்டபிள் இவர்கள் வந்த வண்டி வெளியில் இருந்ததை உள்ளே தள்ளிக் கொண்டு வர, அதிலிருந்து பேக்கை ஓடி சென்று எடுத்தான் கருணா.
லேப்டாப்பை பார்த்ததும் சட்டென்று எஸ்பி கண்களில் மின்னல் அடிக்க, கர்ணாவை அருகே அழைத்து.. “இது யாரோட லேப்டாப் பேக்?” என்று கேட்க..
“இன்னைக்கு திவ்யாவுக்கு தான் ப்ராக்டிக்கல், அவ தான் லேப்டாப் எடுத்துட்டு வந்தா” என்று சொன்னான்.
“இங்க கொண்டு வா” என்று அதை எடுத்து அருகில் இருந்த ஜிப்பில் வைத்து ஓபன் செய்ய, அதுவோ பாஸ்வேர்ட் கேட்டது.
கர்ணாவை அருகே அழைத்து இதற்கு பாஸ்வேர்டு என்ன என்று கேட்க..
அவனோ தனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேர்களை சொல்ல, அது எதுவுமே சரியானது அல்ல என்று காட்டியது. இன்னும் ஒரு முறை தவறாக போட்டால் பிளாக் ஆகி விடும் வாய்ப்பும் அதிகம்.
“நீ போ” என்று அவனை அனுப்பியவன், சற்று நேரம் சிந்திக்க என்ன வைத்திருப்பாள் என்று பலவித கணக்குகள் அவனின் மூளையின் நியூரான்களை முடக்கி விட.. கண்களை மூடி திறந்தவன் அந்த பாஸ்வேர்ட்டில் ‘எஸ்பிமச்சான்’ என்று டைப் செய்ய.. சரி என்று ஓபன் ஆனது. மனதுக்குள் தன்னவளின் குறும்பையும் காதலையும் நினைத்து உள்ளம் குதூகலித்தது. ஆனால் அதே சமயம் அவளை பத்திரமாக மீட்க வேண்டும் என்றும் கவலையும் கொண்டது.
ரெஸ்டாரண்டில் தன்னோடு பேசும்போது அந்த வைஃபை இவள் ஆன் செய்து, இதிலுள்ள ஆப் போடு கனெக்ட் செய்து இருந்தாள். அதற்கு பின் அவள் அதை மறந்து விட.. இப்போது அது கனெக்டில் இருக்கிறதா என்று அந்த ஆப்பை இவன் பார்க்க.. ஆம் இருந்தது.
“வாவ்! சூப்பர்!!” என்று இவன் கைத்தட்டி ஆரவாரம் செய்ய..
அப்படி என்ன திவ்யாவின் லேப்டாப்பில் பார்த்து இவன் ஆரவாரம் செய்கின்றான் என்று புரியாமல் மற்றவர்களும் இவனைப் பார்த்து விழிக்க..
அப்போதுதான் திவ்யபாரதிக்கு தான் செய்ய சொன்ன ஆப் பற்றியும் அதை அவள் வெற்றிகரமாக செய்து இன்று தனக்கு டெமோ காட்டியதையும், அதில் தன் வாட்சின் பின்புறத்திலிருந்து அவள் ஒட்டிய சிப் பற்றியும் எல்லோருக்கும் கூற.. ஐயப்பனோ பெண்ணின் செயலில் பூரித்துப் போனார்.
அதைக்கேட்ட ரத்னா மற்றும் ரத்னா அருகிலிருந்த அந்த அபார்ட்மெண்ட் வாசிகளும் நம்ம திவ்யாவா? இது நம்ம திவியா? என்று ஏகப்பட்ட ஆச்சரிய குரல்கள்.. விளையாட்டுத்தனமாக எப்பொழுது ஓடி ஆடிக் கொண்டு இருப்பவளுக்குள் இப்படி ஒரு திறமையா என்று தான்..
என்னத்தான் வைரமாக இருந்தாலும் அதை பட்டை தீட்டினால் தான் அதன் ஒளி வெளிப்படும் அதன் மதிப்பும் கூடும்.. அது போல தான் வெட்டியாக ஹாக்கிங் கேம் ஆப் என்று எதுவோ செய்து கொண்டிருந்தவளை, சரியான பாதைக்கு சூரியபிரகாஷின் வார்த்தைகள் திருப்பிவிட இன்று அதுவே அவளைக் காக்கும் சக்தியானது..
அந்த லேப்டாப்பின் துணைகொண்டு தற்போது திவ்யபாரதி எங்கு இருக்கிறாள் என்று தேட, அது ஓரிடத்தில் நில்லாமல் போய்க்கொண்டே இருந்தது. அதன்மூலம் அவளை இன்னும் வாகனத்திலேயே வைத்து ஊரை சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டவன், அடுத்தடுத்து தனது அதிகாரத்தை பயன்படுத்தி மற்ற காவல் நிலையங்களுக்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.
20
அதே நேரத்தில் சுதர்மன் தண்ணி லாரி டேங்கில்…
பொதுவாக மயக்க மருந்து எவ்வாறு பலவகையாக உள்ளதோ அதேபோல அதை பயன்படுத்தும் மக்களுக்கும் அதன் தாக்கம் பல வகையாக இருக்கும்.
சிலருக்கு மயக்கமருந்து அடித்த சில நிமிடங்களிலேயே தன்னிலை மறந்து மயக்கம் அடைந்து விடுவார்.. சிலரோ மயக்க மருந்தின் வீரியத்தில் மயங்கி இருந்தாலும் உள்ளே அவரின் மூளையோ நடக்கும் அனைத்தையும் பதிவு செய்து கொண்டே இருக்கும்.. இன்னும் சிலரோ அந்த மருந்து மயக்கத்தின் தாக்கம் அவர்களுக்கு வேறுமாதிரியாக வினை புரிய அதுவும் போதையின் உச்சியில் அவர்களை உளர வைக்கும்.
திவ்யாவும் மூன்றாவது கேட்டகிரியில் தான் இருந்தாள்.. அவர்கள் காரில் இவளை கடத்திய அடுத்த நொடி அவளுக்கு மயக்க மருந்து கொடுக்க.. முதலில் சிறிது நேரம் அதிர்ச்சியில் சுவாசிக்க மயக்க மருந்தின் தாக்கத்தில் மயங்கி இருந்தாலும் அடுத்த நொடி போதையில் உளற ஆரம்பித்து இருந்தாள்.
நல்ல நாளிலேயே இவள் தில்லைநாயகம் இப்போது கேட்கவும் வேண்டுமா என்ன!!
ஆம் நினைவு இருந்தாலே இவள் வாயில் மற்றவர்களெல்லாம் அரைப்படுவார்கள்.. இப்போது நினைவு தப்பிய நிலையில் வாயை மூடாமல் நான் ஸ்டாப்பாக எஃப்எம் போலவே பேசிக் கொண்டிருந்தாள் திவ்யபாரதி.
அந்த அடியார்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை என்னவோ கண்டிப்பாக சூரியபிரகாஷ் வரும்வரை இவளை பத்திரமாக வைத்து வந்தவுடன் இருவரையும் சேர்த்துப் போட்டு தள்ள வேண்டும் என்பதுதான். அவசரப்பட்டு இவர்கள் கை வைத்தாலோ இல்லை இவளை ஏதும் செய்தாலோ சிவனின் ருத்ரதாண்டவமாக அவன் ஆடித் தீர்த்து விடுவான் என்று எச்சரித்து வைத்திருந்தார்கள் எதிரிகள்..
முதலில் காரில் கடத்தி அதற்குப் பின்பு சுதர்மன் லாரி டேங்கில் கிடத்தினார்கள். இதற்கென்று ஸ்பெஷலாக அறை போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது உள்ளே அந்த டேங்க்.. அதில் தான் இவளை இப்போது வைத்து இருந்தார்கள்.
முதலில் தள்ளாட்டத்துடன் எழுந்தவள் “யாழுடா.. நீங்க.க… எல்லாம் எதுக்குழா.. என்னை கழத்தி வைச்சிருக்கிங்க” என்று குளறலாக பேசிக்கொண்டே ஒரு நிலையில் இல்லாமல் தள்ளாட “ழேய்.. தடிமாடு.. பிடி பிடி.. கீழ விழ போறேன் பாழு” என்று அதற்கும் அவர்கள் திட்டி வைத்தாள்.
அதன்பின் அவளை ஒருத்தன் பிடிக்க, “ஏன்டா. எருமை என்னை தொடுற.. உதைப்படுவ.. ஓடி போடா” என்று அதற்கும் அவனிடம் சண்டைக்கு சென்றாள்.
இவள் வாயாடுவது தாங்கமுடியாமல் ஒருகட்டத்தில் அந்த ரவுடி தன் துப்பாக்கியை எடுத்து அவள் தலை மீது வைக்க.. அவள் “ஆங்.. இங்க சுடு.. அங்க சூடு..” என்று தன் கை கால்களை மாற்றி மாற்றி கவுண்டமணி போல் அவனிடம் காண்பிக்க அலுத்து தான் போனான் அந்த ரவுடி..
அதற்கு மேல் தாங்க முடியாமல் அவள் வாயில் பிளாஸ்டர் ஒட்டி கை கால்களை கட்டி போட அப்போது உருண்டு பிரண்டு மூடிய வாயை வழியாக ம்ம்ம் என்று சத்தமிட்டு ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தாள் அவர்களை.
அவன் உடனே தன் முதலாளிக்கு அழைத்து “சார் இந்த பொண்ணு ரொம்ப பண்ணது எங்களால தாங்க முடியல ஒரே போடா போடட்டுமா?” என்று ஆத்திர மிகுதியால் கேட்க..
.
“ஏண்டா தடிமாடு மாதிரி பத்து பேரு இருக்கீங்க ஒரு பொண்ண உங்களால் சமாளிக்க முடியாத? அவள எதுவும் பண்ணிராதிங்க அதுக்கப்புறம் எஸ்பிஐ நம்மளால சிக்க வைக்க முடியாது. அவன பிடிக்க அவள் தான் தூண்டில் மீன்” என்று அவர்களையே திட்டிவிட்டு அவன் முதலாளி போனை வைத்து விட்டான்.
அதற்குப் பின் அவளை கண்டுகொள்ளாமல் கண்காணித்து கொண்டே, தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க.. அவர்களுக்கு கொடுத்த தகவலின்படி அந்த ஊரையே சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் அவர்களது சுதர்மன் ஸ்டார் ஹோட்டலின் பின்புறம் தண்ணீர் கொடுப்பதற்கு செல்வதுபோல அந்த தண்ணீர் லாரி அந்த ஓட்டலுக்குள் நுழைந்தது.
அதே நேரம் அங்கு.. எஸ்பி தன்னால் வேவு பார்க்க அனுப்பப்பட்ட மற்றவர்களிடம் அங்கு உள்ள நிலையைப் பற்றிக் கேட்க..
“சார் நீங்க சொன்னது மாதிரி தண்ணி லாரி சர்வீஸ்ல வழக்கமா தண்ணி பிடிக்கிறது போறதுதான் நடக்குது. ஆனால் காலையில் இருந்து ஒரு லாரி மட்டும் தண்ணி பிடிக்க போகாமல் ஏன் தண்ணீர் இருக்கும் பக்கமே போகம இருந்தது. சாயங்காலத்துக்கு மேல தான் சார் கிளம்பிப் போனது” என்று அவன் கூற..
எஸ்பி சந்தேகப்பட்டது போல, தண்ணீர் லாரியில் தான் திவ்யாவை கடத்தி இருக்கிறார்கள், அதில் வைத்துக்கொண்டுதான் ஊரையும் சுற்றுகிறார்கள் என்பது அப்பட்டமாக அவனுக்குப் புரிந்தது.
அதேநேரம் ரிசார்ட் மற்றும் ஸ்டார் ஹோட்டலில் உள்ள மற்றவர்களை கேட்க.. “சர் இங்க எந்த வித அசம்பாவிதமும் நடக்கிற மாதிரி ஒன்னுமே தெரியல. இப்போது வரைக்கும் நார்மலா நடக்கிற மாதிரி தான் சார் நடக்குது” என்று இருவரும் பதில் கூறினார். எஸ்பியோ பெரும் குழப்பத்தில்.. ரிசார்ட் ஹோட்டல் இரண்டிலுமே போகவில்லை என்றால் இவளை வேறு எங்காவது தான் அடைத்து வைக்க பார்ப்பார்கள். அவருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் மற்றும் அப்பார்ட்மெண்டில் உள்ள பிளாட்டுகள் ஆகியவற்றை கண்காணித்து உடனே கூறுமாறு கேட்க எஸ்பி கட்டளையிட்டான்.
அவர்களும் கண்காணித்து சுதர்மம் அவரோட ஆட்களை யாரும் காலையிலிருந்து இந்த பக்கம் வரவே இல்லை. அவர்கள் நன்றாக கண்காணித்து வந்து இன்பர்மேஷன் சொல்ல, சுதர்மன் தொழில் செய்யும் எல்லா இடங்களிலும் எல்லாமே நார்மல் தான் என்று சொல்லி அவர்களும் கையை விரிக்க.. முதன்முறையாக பயந்தான் எஸ்பி.. அதுவும் தன்னவளுக்காக!!
“ரதி பி ஸ்ட்ராங்!! பி ஸ்டிராங்!! எனக்காக நீ திரும்ப வர வேண்டும். நீ எந்த நிலை வந்தாலும் உன்னை நான் கைவிட மாட்டேன்டி. ஆனா உன் தைரியத்தை மட்டும் விட்டுடாதடா. என்னுடைய பலம் பலவீனம் எல்லாமே நீ மட்டும் தான்” என்று வானத்தில் இருந்த அந்த வெண்ணிலவை பார்த்து தனது பெண்ணவளிடம் பேசினான். இயற்கையிலேயே துடுக்கும் துடிப்புமிக்க பெண்தான் திவ்யபாரதி.. அதனால் பெரிதாக இந்த மயக்கம் கடத்தல் இதையெல்லாம் கண்டு
அச்சப்படவில்லை.. எப்படியும் எஸ்பி வந்து விடுவான் என்ற நம்பிக்கை அவளுள் திடமாக இருக்க அவளை தைரியமாகவே வைத்திருந்தது.
திவ்யபாரதி கையில் கட்டியிருந்த வாட்சைப் உள்ள சிட்பிள் மூலம் இப்போது வண்டி எங்கு நகருகிறது என்று பார்க்க அதுவோ சுதர்மனின் பைவ் ஸ்டார் ஹோட்டலை நோக்கி சென்று கொண்டிருப்பதை பார்த்த எஸ்பி கோ பல கணக்குகள் மனதில்..
சுதர்மன் பைவ் ஸ்டார் ஹோட்டல்!!
அன்று சுதர்மன் செய்துவரும் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் ஒரு வெளிநாட்டு கம்பெனிக்காக நம் தமிழ்நாட்டில் பல இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தம் நடைபெற அதை தனது ஓட்டலிலேயே நடத்திக் கொண்டிருந்தார் சுதர்மன்..
வெகுவாக லாபம் கொடுக்கக்கூடிய இந்த அக்ரிமெண்ட் கையெழுத்தானால், சுதர்மனின் மரியாதையும் செல்வாக்கும் தமிழ்நாட்டில் ஓங்கும் என்பது சிறிதும் ஐயமில்லை.. அதற்காக அவர் காத்துக்கொண்டிருக்க.. ஆனால் அவரும் காத்திருத்தலை தவிடுபொடியாக்கினான் இணை ஆணையர் சூரியபிரகாஷ்!!
சட்டென்று ஹோட்டலுக்குள் போலீஸ் படைகள் வந்து சோதனை செய்ய இவர்கள் அக்ரிமெண்ட் போட்டு கொண்டிருந்த அறையை சோதனை செய்ய.. ஒன்றும் புரியாமல் முதலில் சுதர்மன் விழிக்க எதிரில் இருந்த அந்த எம்என்சி கம்பெனி ஆட்கள் இது சரிவராது என்று எழுந்து சென்று விட்டனர்.
இவர் கோபத்துடன் கீழே வர, அங்கே ருத்ர மூர்த்தியாக நடைபயின்று கொண்டிருந்தான் சூரியபிரகாஷ்..
“என்ன தம்பி இதெல்லாம் ஏற்கனவே சொன்னேனே தானே? என்னை தெரியாம என்கிட்ட மோதுற நீ!!” என்று அவர் கோபப்பட..
“கூல்.. கூல்.. சுதர்மன்.. அதற்குள் அவசரப்பட்டால் எப்படி, இனி தான் இருக்கு. என் மேல் கை வைத்திருந்தால் கூட உன்னை விட்டு இருப்பேன்.. ஆனால் என் ரதியை தூக்கி உனக்கு நீயே ஆப்பு வைச்சிக்கிட்ட” என்று அடுக்கப்பட்ட கோபத்துடன் கூறியவன் அடுத்த நொடி கைகள் சுடுக்கிட.. எங்கிருந்துதான் வந்தது என்றே தெரியாமல் பத்திரிகையாளர் கூட்டம் சுதர்மன் மற்றும் அவரின் ஹோட்டலை சுற்றி படையெடுத்தது.
அதே நேரத்தில் சரியாக திவ்யாவை அழைத்துக்கொண்டு வந்த லாரி பேஸ்மென்ட் உள்ளே நுழைய.. அதற்குப்பின்னால் புயல் வேகத்தில் இரண்டு ஜீப்புகள் வந்து நிற்க.. இதை எதிர்பார்க்காத அதை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓட முயன்று அங்குள்ள காவல் துறையால் பிடிப்பட்டான். அவர்கள் அடித்த அடியில் அந்த லாரி டேங்கில் உள்ள கதவு போன்ற அமைப்பை திறக்க.. அதுவரை அந்த டேங்கினுள் சாவகாசமாக பேசிக்கொண்டு சரக்கு அடித்துக் கொண்டு இருந்த ரவுடிகள் போலீஸைக் கண்டு பதறியடித்து எழுந்து நிற்க.. அடுத்த நொடி பலவித ப்ளாஷ்கள் அவர்களை நோக்கி பளிச்சிட்டது.
ஆம்!! கதவை திறக்கும்போது பத்திரிகையாளர்களையும் டிவி சேனல்களையும் வர வைத்திருந்தான் சூரியபிரகாஷ்..
சுதர்மன் லாரி சர்வீஸ் டேங்கில் மயக்கமாக கிடந்த திவ்யபாரதி பத்திரமாக மீட்டனர். அதே நேரம் அங்குள்ள ரவுடிகளும் அதில் பலபேர் சுதர்மனிடம் வேலை செய்பவர்கள், அவர்களும் உடனடியாக கைது செய்யப்பட இந்த விஷயம் காட்டுத் தீ போல் தமிழகம் முழுவதும் பரவியது.
சூரிய பிரகாஷ் ஹோட்டலில் கைது செய்து கொண்டிருந்த அதே நேரம் சுதர்மனின் ரிசார்ட்டிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொள்ள பல திடுக்கிடும் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தது!!
மொத்தமாக கட்டம் கட்டி சுதர்மன் தொழிலையே ஆட்டம் காண வைத்தான் காவலன்!!
21
தண்ணீர் லாரி டேங்கில் உள்ளே வடிவமைக்கப்பட்ட அறையை பார்த்து அங்கு உள்ள அனைவருக்கும் அதிர்ச்சி என்றால்.. ரவுடிகளை பார்த்தது பேரதிர்ச்சி!! அதைவிட மயக்கத்தில் இளம்பெண் ஒருத்தி கைகால் கட்டிய நிலையில் இருந்ததை பார்த்து சற்று நேரம் திகைத்தே விட்டனர்.. அதேநேரம் காவல்துறையின் இந்த அதிரடியை அவர்கள் பாராட்டவும் தவறவில்லை.
துவண்டு கொடிபோல் மயக்க மருந்து தாக்கத்தில் மயங்கி இருந்தாலும் உடலை வளைத்து நெளித்து இங்கும் அங்கும் புரண்டு படியே இருந்த திவ்யாவை பார்த்தவனுக்கு கண்களில் குளம் கட்ட, எதிரியின் மீது கட்டுக்கடங்காத கோபம் வர, அதை மறைத்து அவசரமாக ஓடி சென்று இரு கைகளாலும் அவளை அள்ளியவன் கை கால் கட்டுகளை முதலில் அவிழ்த்து எறிந்தான்.
அவளை தூக்கி வந்து வரவழைத்து இருந்த ஆம்புலன்ஸில் அவளை கிடத்தி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.
ஐயப்பனுக்கு போன் செய்து திவ்யா கிடைத்து விட்டதாகவும் அவளை தற்போது மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறி, அவரை விரைந்து மருத்துவமனைக்கு செல்ல கூறினான். ஆனால் அவள் கூட செல்ல முயன்ற கைகளையும் கால்களையும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி தனக்கிருக்கும் கடமையை முதலில் முடிக்க முனைந்தான் கடமை தவறாதவனாய் இந்த காவலன்!!
அதன்பிறகு பேசியது எல்லாம் டிவி சேனலில் வந்த நிருபர்களும் பத்திரிக்கையாளர்களும் மட்டுமே!! பக்கம் பக்கமாக பேசி கிழித்து தள்ளினர் சுதர்மனின் இந்த நாச வேலையை.. மூடி மறைக்க முடியாமல் வெட்டவெளிச்சமாக அதுவும் பத்திரிக்கையாளர் தொலைக்காட்சி நிருபர்களுக்கு முன் இவை அனைத்தும் நடந்ததினால், அந்த நேரத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை சுதர்மனுக்கு.. ராஜரத்தினம் இம்மாதிரியான ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்காமல் தன் மாமன் அருகே பம்மியப்படியே நின்று கொண்டிருந்தான்.
அரசியல் செல்வாக்கு மிகுந்த மிகப்பெரிய தொழிலதிபர் சுதர்மன் அரை மணி நேரத்தில் செல்லாக்காசாக்கிய சூரிய பிரகாஷின் அதிரடி அனைவரும் புகழ்ந்து தள்ளினர். அதை பார்க்க பார்க்க.. கேட்க கேட்க சுதர்மனுக்கு வெறி கொண்டது போலானது.
எஸ்பிஐ பார்த்து “தம்பி இந்த வேலையை நான் செய்யல.. இது மாதிரி ஒரு பொண்ண தூக்கி தான் உங்களை பழி வாங்கனும்னு எனக்கு அவசியம் இல்லை. எனக்கு அதுக்கு ஆயிரம் வழி இருக்கு.. இது யாரோ எனக்கு வேண்டாதவர்கள் செஞ்சிருக்காங்க” என்று மறுக்க..
“ஆஹான்.. எப்படிங்க உங்க லாரிலேயே கொண்டு வந்து உங்க ஹோட்டல் அடச்சி வைங்க ஏற்பாடு பண்ணுவீங்க.. ஆனா நீங்க செய்யல.. இதை எவனாவது கேனையன் காதுல பூ வச்சிருப்பான் அவன்கிட்ட போய் இதெல்லாம் சொல்லுங்க.. இப்போ ஸ்டேஷனுக்கு நடைய கட்டுங்க” என்று அவர்களை காவலர்களோடு அனுப்பி வைத்தான்.
எங்கே இந்த சமயத்தில் இவருக்கு ஆதரவாக தான் வாயைத் திறந்தால் நாமளும் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பம் அதிகம் என்று உணர்ந்த மற்ற அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் இதில் தலையிட வில்லை. காக்கை கூட்டத்தில் எறிந்த கல்லாய் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் போயினர்.
மேம்போக்காக “எனக்கும் அவருக்கும் பெரிதாக எந்த தொடர்பும் இல்லை விழாக்கள் பொது நிகழ்ச்சிகளில் பார்த்துக்கொண்டால் சிரித்துக் கொள்வதைத் தவிர” என்று ஒரே மாதிரியாக அனைவரும் கூறி பின்னடித்து விட்டனர்.
நமக்கு வரும் துன்பம் கூட ஒரு வகையில் நமக்கு நன்மையைத் தான் செய்கிறது!!
நமக்கு உண்மையான நட்பையும் சொந்தங்களையும் காட்டிக்கொடுக்கும்!!
சுதர்மன் இப்போது அதே நிலையில்தான் தான் அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் எவ்வளவு செய்து இருந்தாலும் இந்த கணத்தில் அவரை காக்க யாருமே முன்வரவில்லை.
இந்த அமளி துமளிகளிலும் நிரூபர்களுக்கு தேவையான தகவலை கொடுத்துவிட்டு தன் கீழ் பணியாற்றும் காவல்துறையினருக்கு தேவையான கட்டளைகளை பிறப்பித்து விட்டு, திவ்யாவை காண மருத்துவமனைக்கு விரைய, அதே நேரத்தில் சுதர்மனின் ரிசார்ட்டில் சோதனை செய்த அரசு எஸ்பிக்கு அழைத்து சொன்ன விஷயத்தை கேட்டவன் அதிர்ந்துதான் போனான்.
22
அவனது ஜீப் இப்போது மருத்துவமனை செல்லும் வழியை மாற்றி சுதர்மன் ரிசார்ட் நோக்கி பறந்தது!!
சுதர்மனின் ரிசார்ட் சென்னை மாநகரத்தின் கடைக்கோடி எல்லையில் இருந்தது. பெரும்பாலும் இந்த ரிசார்ட்க்கு வருபவர்கள் தங்கள் தொழிலின் அழுத்தம் டென்ஷன் அனைத்தையும் உதறிவிட்டு, ஓய்வு எடுக்க இங்கே வருபவர்கள். அதில் குடும்பத்தோடு வருபவர்களை விட குடும்பத்தை விட்டு தனியாக சுகிக்க வருபவர்களே இங்கு அதிகம்.
வருபவர்கள் பெரும்பாலும் அரசியல் பெரும் புள்ளிகளாகவும் விவிஐபிகளாகவும் தான் இருப்பார்கள். அதனால் அவர்கள் பற்றிய ரகசியங்கள் இங்கே காக்கப்படும். மேம்போக்காக சாலையில் செல்லும் போது இவ்வாறான ஒரு ரிசார்ட் உள்ளே இருப்பது கூட யாருக்கும் தெரியாது. அந்த ரிசார்ட்டில் தான் இப்பொழுது ரைட்டு நடந்துகொண்டிருந்தது அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் சூரியபிரகாஷ் ஆணையில்..
உள்ளே தனது ஜிப்பை விரட்டி ரிசார்ட் வாயிலின் முன் நிறுத்திய எஸ்பி, இறங்கி வேகமாக வரவேற்பறைக்கு நுழைய அங்கே இன்ஸ்பெக்டர் அரசுவும் அவனோடு பல காவல்துறை அதிகாரிகளும் இருந்தனர்.
“என்னாச்சு அரசு? நீங்க சொன்னது உண்மைதானா?” என்று பதட்டத்துடன் கேட்டான் எஸ் பி..
‘உண்மைதான் சார்!!” என்று வருத்தத்துடன் அரசு கூற..
“எங்கே?” என்று எஸ்பி கேட்க..
“வாங்க சார்” என்று அவனை வழிநடத்தி அழைத்துக் கொண்டு முன்னே சென்றான் அரசு.
அந்த ரிசார்ட் முன்னால் வரவேற்ப்பறையுடன் கூடிய அங்கே வேலை செய்ய்யும் சிலருக்கு மட்டும் அறைகள் இருக்க.. அதற்கு பின்னால் தான் விரிந்து நீண்டிருக்கும் கஸ்டமர்களுக்கான சிறு சிறு குடில்கள்..
கடற்கரையோரம் ஒட்டி தென்னை மரங்கள் சூழ பார்ப்பதற்கே அவ்வளவு ரம்மியமாக இருந்தது அந்த இடம். ஆனால் தனக்குள்ளே ஒரு பெரும் இரகசியத்தையும் மர்மத்தையும் வைத்திருந்தது அப்போது யாரும் அறியவில்லை.
அரசு எஸ்பியை அழைத்துச் செல்ல கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குடில்கள் அங்கே இருந்தன. அதில் ஒரு குடிலுக்கு முன் நின்று அரசு அதை திறந்து விட உள்ளே சென்று பார்த்து அதிர்ந்து தான் போனான் எஸ்பி.
கிட்டத்தட்ட 20 லிருந்து 25 வரை பெண் குழந்தைகள். அதுவும் 10லிருந்து 15 வயதுக்கு உட்பட்டவை. கண்களில் பயத்தையும், உடல்களில் வலியையும் அடக்கிக்கொண்டு மிரட்சியுடன் இவர்களைப் பார்த்து மிரண்டு ஓடுங்கி அங்கே அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போதே தெரிந்தது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் பல இடங்களில் இருந்து இக்குழந்தைகளை இங்கு கடத்தி வந்து இருக்கிறார்கள் என்று!!
“கிட்டத்தட்ட இங்கே நாங்க வரும்போது ஐந்து பெண்குழந்தைகள் ரொம்பவும் மோசமான கண்டிஷன்ல இருந்தாங்க.. அவங்கள ஆம்புலன்ஸ் வரவழைத்து ஹாஸ்பிடல அட்மிட் பண்ணி இருக்கேன் சார்” என்றான் அரசு.
“எப்படி அரசு.. எங்கே ஒளித்து வைத்திருந்தானுங்க இவங்களை?” அடக்கப்பட்ட சீற்றத்துடன் எஸ்பி கேட்க..
“நீங்க சொன்ன மாதிரி வெளியிலிருந்து பாக்குறதுக்கு இந்த இடம் ரொம்ப அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள்ள இங்கே நடக்காத அசிங்கங்கள் குற்றங்கள் இல்லை என சொல்லலாம் சார். இங்கு வரும் பெரும்பாலான முக்கிய புள்ளிகளுக்கு இதே மாதிரி சிறு பெண்களைத்தான் சொல்லவே வாய் கூசுது சார்.. கம்பிளிமெண்டரி என்கிற பெயரில் அவங்க இங்க தங்க வரைக்கும் கூட இருக்க வைச்சி இருக்கானுங்க.. அதில சில குழந்தைங்க அந்த டார்ச்சர் தாங்க முடியாமல் உயிரை விடுவதும் உண்டு.. அப்படி இறந்த சில குழந்தைகளை இங்கே கடலேயே டிஸ்போஸ் பண்ணிடுறாங்க.. அதனால நம்ம பார்வைக்கு பெரும்பாலும் வந்தது இல்லை.. ஒருமுறை டிஸ்போஸ் பண்ண போக அங்கு கடல் போலீஸ் ரோந்து வந்ததினால் இவனுங்க மாலினியை குப்பை தொட்டில போட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டானுங்க. நாங்க வந்த போது எல்லா குழந்தைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்யும்போது எங்ககிட்ட வசமா மாட்டிக்கிட்டானுங்க” என்றான் அரசு.
“அவனுங்க எங்க?” என்று ரௌத்திரத்துடன் எஸ்பி கேட்க..
“வாங்க சார்” என்று குழந்தைகளுக்கு வேறு சில காவலர்களை காவல் வைத்துவிட்டு இன்னும் சிறிது தூரத்தில் இருந்த மற்றொரு குடிலுக்கு அழைத்துச் சென்று அங்கே திறந்த காட்ட.. இரத்தத்தில் தத்தளித்தப்படி வலியில் அலறியபடி இந்த வேலைக்கு துணைபோன அனைத்து ஊழியர்களையும் போட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தனர் எஸ்பி யின் ஆட்கள்..
“இவனுங்க எல்லாரையும் பத்திரிக்கையாளர்களுக்கு நேர காட்டக்கூடாது.. கோர்ட்ல கொடுக்கிற இவனுக்கு தூக்கு தண்டனையே ரொம்ப கம்மியா தான் இவனுங்களுக்கு. நல்லா வகையா கவனிங்க.. பேசுவதற்கு மட்டுமே வாய வெச்சு, அப்புறம் கொண்டு வாங்க” என்று வெறுப்புடன் அவர்களை பார்த்து கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றனர்.
அதன் பின் மீண்டும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ரிசார்ட்டில் மர்மங்கள் அனைத்தும் வெளியிடப்பட.. ஏற்கனவே திவ்யபாரதியை கடத்திய குற்றத்திற்காக சுதர்மன் பெயர் நார் நாராகக் கிழிந்து தமிழகமெங்கும் தோரணமாக தொங்கிக் கொண்டிருக்க.. அதில் இன்னும் இக்குழந்தைகளை முகத்தை காட்டாமல்.. ‘பச்சிளம் குழந்தைகளை பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்திய அரசியல் பிரமுகர்’ என்று சுதர்மனின் பெயர் மேலும் நாறிப்போனது.
முன்னே இவரை தெரிந்தவர் என்று சொன்னவர் கூட இப்பொழுது இவனை பாவி அரக்கன் கொடூரன் கொடுமைக்காரன் ராட்சஷன் என்று வகை தொகையாக பல பெயர்களால் சபித்தனர்.
அன்றிரவு திவ்யாவை பார்ப்பதற்காக அவன் செல்ல முடியாதபடி வேலைகள் அவனை இழுத்துக்கொள்ள, அதன் நடுவே விடியற்காலை சுமார் நான்கு மணி போல சிறிது நேரம் ஓய்வு கிடைக்க அந்த நேரத்தில் தன்னவளைக் காண பறந்தோடி போனான் காதல் நாயகன்.
மயக்க மருந்து தாக்கம் மட்டுமே திவ்யபாரதிக்கு.. மற்றபடி எந்த தொந்தரவும் அவளுக்கு இல்லை. ஆனாலும் இரண்டு நாட்கள் அப்சர்வேஷன் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறி அவளை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர்.
கூடவே கர்ணா..விபாகர்.. ஈக்னேஷ்.. நிரஞ்சனா.. சாந்தினி மற்றும் ஐயப்பன் ரத்னா.
திவ்யபாரதி கடத்தப்பட்ட விஷயத்தை கர்ணா தன் நண்பர்களுக்கு தெரிவிக்க, அடுத்தகணம் அவர்களும் அந்த அப்பார்ட்மெண்ட்க்கு வந்து விட்டிருந்தனர். எஸ்பி திவ்யாவை தேடி போக, இங்கே விபாகர், ஈக்னேஷ் கர்ணா மூவரும் ஐயப்பன் உடன் சுற்றிக் கொண்டிருந்தனர். வீட்டில் ரத்னாவிற்கு துணையாக கர்ணாவின் அம்மாவும் சாந்தினி நிரஞ்சனாவும் இருந்தனர் ஆறுதல் சொல்லியப்படி..
மிக நீண்ட நெடிய பொழுதாக இந்த மாலை பொழுதை அவர்கள் வாழ்வில் மறக்கவே முடியாது!! ஏற்கனவே எஸ்பி திவ்யா இருக்கும் இடம் ட்ரேஸ் பண்ணி கொண்டு இருந்தாலும், அவள் நல்லபடியாக கிடைக்க வேண்டுமே என்று பயம் அவர்கள் மனதை அரித்துக் கொண்டுதான் இருந்தது.
அதிலும் அவளுக்கு வாய் வேற நீளமா.. எந்தப் பிரச்சினையிலும் மாட்டக்கூடாது என்று வெகு சிரத்தையாக சாந்தினியும் நிரஞ்சனாவும் வேண்டிக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக திவ்யபாரதி கிடைத்துவிட்டாள் என்று எஸ்பி கால் செய்ய, அனைவருமே மருத்துவமனையில் குழுமி விட்டனர். அங்கேயும் போதை மருந்தின் தாக்கத்தால் திவ்யபாரதி உளறிக் கொண்டே இருக்க ரத்னாவை வெடித்து அழுதார் தன் மகளின் நிலையை கண்டு.
சாந்தினியும் நிரஞ்சனாவும் சேர்ந்து அவரை தேற்றி கொண்டிருக்க.. அவர்கள் அருகே வந்த விபாகர் “ஆன்ட்டி.. அவ நல்லாத்தான் இருக்கா. பாருங்க இந்த நிலையிலேயே என்ன பேச்சு பேசுறா!! நான் என்ன நினைக்கிறேனான்னா.. இவ பேச்சுக்கு பயந்து எஸ்பி சார் கண்டுபிடிக்கலைனாலும் அவனுங்களே அனுப்பி வைச்சிருப்பானுங்க திவியை” என்று கிண்டலுடன் கூற..
ஈக்னேஷூம் கூட சேர்ந்து “அப்புறம் தலன்னா சும்மாவா!! எப்பேர்ப்பட்ட எஸ்பியையே..” என்று அவன் ஆரம்பிக்க சட்டென்று அவனது வாயை பொத்தினான் கர்ணா.
மகள் கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷமும் அவளது உடல் நலமே மனதில் நிற்க ரத்னா இதை சரியாக கவனிக்கவில்லை.
அங்கிருந்து ஈக்னேஷை இழுத்துக் கொண்டு தனியே வந்த கர்ணா அவன் தலையில் இரண்டு கொட்டு கொட்டிட..
“டேய்!! நீ எல்லாம் சாதாரணமாக தட்டினாலே எனக்கு கொட்டுனது போல வலிக்கும் டா. இதுல நீ கொட்டினா என் தலை உள்ள போய்ட்டும், இனி ஒரு தடவ இந்த மாதிரி செய்யாதே” என்று கடுப்புடன் கூறி தலையை தடவிக் கொண்டான்.
“பக்கி!! நீ ஆன்ட்டிகிட்ட வாய் விட இருந்த.. உன்ன எல்லாம் லைட்டா கொட்டினேன் பாரு அது என் தப்பு.. பலமாக கொட்டி இருக்கணும் “என்று கர்ணா சீற..
“டேய்.. குண்டா.. அப்படியெல்லாம் கொட்டி வைக்காதடா.. அப்புறம் உங்க அப்பாவுக்கு நீ ஒரே பிள்ளை” என்று முறைப்புடன் கூற..
“இது என்னடா லாஜிக்” என்று புரியாமல் கேட்க, “ஆமா உன் கிட்ட கொட்டு வாங்கினா, என் தலை உள்ள போயிடும், நீயும் உள்ள போய்டுவ, சரியாத்தானே சொன்னேன்” என்று நக்கலடித்தவனை, இதெல்லாம் திருந்தாத கேஸூ என்று பார்த்தான்.
திவ்யபாரதி மெடிக்கல் எமர்ஜென்சி வார்டில் தனியாக அனுமதிக்கப்பட்டு இருக்க, அங்கே பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
எனவே சாந்தினியையும் நிரஞ்சனாவையும் ரத்னாவுக்கு துணையாக அவர்கள் வீட்டில் இருக்குமாறு பணித்துவிட்டு, கூடவே ஈக்னேஷை அவர்கள் துணைக்கு அனுப்பி வைத்தனர். இங்கே கர்ணா விபாகர் ஐயப்பனுடன் அங்கேயே வராண்டாவில் அமர்ந்து இருந்தனர்.
வயது மூப்பு மற்றும் காலையிலிருந்து இருந்த அலைக்கழிப்பு மனசஞ்சலம் காரணமாக அவர் சோர்வாக இருக்க அருகிலேயே வேறு ஒரு அறையை வாங்கி ஐயப்பனை அங்கே ஓய்வெடுக்க வைத்தனர்.
அதிகாலை மணி நான்கு இருக்கும் போது எஸ்பி கர்ணாவுக்கு அழைக்க, தூக்கத்தில் பதறி எழுந்து “என்.. என்ன.. சார்” என்று கேட்க, “நான் வெளியில தான் இருக்கேன், திவ்யா இருக்கும் ரூம்முக்கு என்னை வந்து கூட்டிட்டு போ” என்றான்.
அவசரமாக வெளியே வந்தவன் எஸ்பி அழைத்துக்கொண்டு ரூமை காட்டிவிட்டு இவன் வெளியிலேயே அமர்ந்துகொண்டான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவனின் ரதி!! அங்கங்கே சில சிராய்ப்புகள் மட்டுமே அதுவும் இவள் உருண்டு புரண்டதால்..
மற்றபடி எந்தவித பிரச்சினையும் இன்றி ஆழ்ந்த உறக்கத்தில் தான். மெதுவாக அவள் அருகில் சென்றவன், மெல்ல தலையை வருடி நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதிக்க.. அந்த ஆழ்ந்த தூக்கத்திலும் அவனது ஸ்பரிசத்தை உணர்ந்து மெல்ல இதழ் விரித்தாள் அவனின் கண்மணி.
“ரதி.. ரதிமா.. என்னை உணர்கிறாயாடா நீ!! இந்த மயக்கத்திலும் என்னோட ஸ்பரிசம் உனக்கு புரியுதா?” என்று நெகிழ்ச்சியாக எஸ்பி கேட்க.. அவள் எங்கே பதில் சொல்லும் நிலையில் இருந்தாள்.
ஆனாலும் அவளை விட்டு பிரிய மனமில்லாமல் அவளருகே அமர்ந்து மெல்ல நெற்றி கன்னம் இதழ்கள் என வருடிக்கொண்டே இருந்தான் காதலனாக மாறிய காவலன்.
கன்னங்கள் வருடிய அவன் விரல்களை தன் விரல்களோடு தூக்கத்திலேயே அவள் பிணைத்துக் கொள்ள, அதைக் கண்டதும் சூர்யபிரகாஷின் கண்களில் அவ்வளவு ஒரு பிரகாசம்!!
“ரதி.. ஐ லவ் யூ டி.. உன்னை கண்ணல காண்கிற வரைக்கும் என் உயிர் என்கிட்ட இல்ல தெரியுமா? செத்து பிழைச்சிட்டேன் டி.. இப்படி ஒரு நாள் துடிதுடிப்பேனு இதுவரைக்கும் என் கனவுல கூட நான் நினைத்து பார்த்தது இல்லை.. எல்லாம் உன்னால தான்டி கேடி” என்று கரகரத்த குரலில் மென்மையாக அவள் காதோரம் பேசிக்கொண்டிருந்தான்.
பின்பு காதிலேயே அழுத்தமாக தன் இதழ்களை பதிக்க அவன் கற்றை மீசையின் உரசலில் அவளுக்கு கூச்சம் கொள்ள.. தூக்கத்திலேயே அவளையும் அறியாமல் அவன் தலையை இழுத்து தன் நெஞ்சுக்குள் பொதித்து கொண்டாள். சஞ்சலங்கள் எல்லாம் அவள் ஸ்பரிசத்தில் கரைய.. தன்னவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு நிம்மதியை தர, அவள் மார்பு கூட்டிலேயே முகம் புதைத்து அவளைச் சுற்றி கரங்களை படரவிட்டு இறுக்க தன்னோடு அணைத்துக் கொண்டான்.
இந்த மன்மதனிடமிருந்து ரதியை பிரிக்க முடியாது என்றவாறு!!
அவளது கரங்களும் நீண்டு அவனது கழுத்தில் மாலையாக சுற்றிக் கொண்டது.
ஆழ்ந்த தூக்கத்திலும் அவள் காட்டிய அந்த நெருக்கத்தில் இந்த பிரிவின் தாக்கம் குறைய, மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் அவள் செவ்விதழ்களில் ஆழ்ந்த முத்தம் ஒன்று கொடுத்தான். பிரியவே மனமில்லாமல் அவனது அதரங்கள் அவள் அதரங்களை அணைத்துக் கொண்டே இருந்தது வெகு நேரமாய்..
அவளை தனது அணைப்பிலேயே வைத்துக் கொண்டு மெதுவாக அவளது உச்சந்தலையை கோதி விட்டான். அவளது காதில் மிகமிக மென்மையாக உயிர் உருக்கும் நேசத்துடன் கூடிய “ரதிமா.. ரதி.. ஐ லவ் யூ டி” என்ற வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தான் சிறிதும் அலுப்பு தட்டாமல்.. அவளோ பதில் சொல்லும் நிலையில் இல்லை ஆனாலும் அவன் கூறுவதையும் நிறுத்தவில்லை. அதிலும் ஒரு சுகத்தை தான் கண்டான் மாயவன்.
விடியும் வரை அவளை தன் கை அணைப்பிலேயே வைத்திருந்தவன்.. பொழுது விடிவதற்கான அறிகுறிகளாக செவிலியர்கள் டாக்டர்கள் நடமாடும் ஓசை கேட்க, அவளை மனமே இல்லாமல் விடுவித்து வெளியே வந்தான். கர்ணா நன்றாக அப்பொழுது தூங்கிக் கொண்டிருக்க, அவனை தொந்தரவு செய்யாமல் மீண்டும் தன்னுடைய காவல்நிலையம் நோக்கி சென்றான்.
அதன்பின் காவலனாக முழுவதுமாக உருமாறினான்.
சுதர்மன் ரிசார்ட்டில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் யாரும் தொந்தரவு செய்ய முடியாத பாதுகாப்பான மருத்துவமனையில் எஸ்பியின் நேரடி பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டு மருத்துவம் பார்க்கப்பட்டது. அதன்பின் அவர்களுக்கு அந்த அராஜகத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் மனம் பிறழ் போன்றவற்றிற்காக உளவியல் மருத்துவர்களால் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு குழந்தைகள் மீட்கப்பட்டனர் என்ற செய்தி கேட்டு தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட… தங்கள் குழந்தைகளை தொலைத்த பெற்றோர்கள் பலரும் காவல்துறையை தொடர்பு கொண்டு அதில் தங்கள் குழந்தை இருக்கின்றனர் என படையெடுத்தனர். பெற்றவர்களே ஆயினும் அவர்கள் யாரையும் எஸ்பி குழந்தைகளின் அருகில் கூட விடவில்லை.
அந்தப் பெற்றோரில் சந்துருவும் அவன் மனைவியும் அடங்க.. அவர்கள் கண்ணில் உயிர் தேக்கி வைத்து இவனின் பதிலுக்காக காத்திருப்பதை பார்த்தவன் “உங்கள் மகள் நலமாக இருக்கிறாள்” என்பதோடு முடித்துக் கொண்டான். அதிலே அவர்களது உயிர் மீண்டது.
காரணம் ஏற்கனவே பெற்றோர்களை பிரிந்து காம கொடூரர்கள் அரக்கர்களினால் பலவகை சித்திரவதைகளுக்கு ஆளாகி.. பாலியல் என்றால் என்னவென்றே தெரியாத இந்த வயதில், அவர்கள் மனதில் பதியப்பட்ட இருந்த அந்தக் கொடூர சம்பவங்கள் தாக்கங்களை முதலில் நீக்கவும் அவர்கள் இந்த சமூகத்தை தைரியத்துடன் எதிர் கொள்ளவும் வேண்டி அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்தான் சூரிய பிரகாஷ்.
பதினைந்து நாட்கள் உடலளவிலும் மனதளவிலும் அக்குழந்தைகள் நலமாக… அதன் பின்னே அவர்களின் பெற்றோர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து ஒவ்வொருவராக தனியே அழைத்து அவர்களுக்கும் ஆலோசனை வழங்கினான். கூடவே அப்பெற்றோர்களுக்கும் மருத்துவர்கள் மூலம் தகுந்த ஆலோசனை வழங்கிய பின்பு அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்தான்.
இந்த பதினைந்து நாட்களும் திவ்யாவை காண இவன் செல்லவில்லை அன்று பார்த்து வந்ததோடு சரி.. அதில் அவள் மிக பயங்கர கோபத்தில் இருக்கிறாள் என்று காற்று வழி செய்தி வந்தது கர்ணா மூலம் எஸ்பிக்கு!!
‘அவளின் கோபத்தை தணிக்கும் வித்தைதான் எனக்கு தெரியுமே!!’ என்று மனதுக்குள் சிரித்துகொண்டவன், அதை புறந்தள்ளிவிட்டு முழுமூச்சாக இந்த கேஸில் கவனம் செலுத்தினான் எஸ்பி.
மறுநாள் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வருகிறது..
குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கித் தருவானா காவலனாக?? அல்லது இம்மாதிரி குற்றம் செய்பவர்களுக்கு தானே தண்டனை வழங்குவானா கல்கியாக??
23
சுதர்மன் மற்றும் அவரது ஆட்கள் கைது செய்யப்பட்டு 15 நாட்களில் ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி வழக்கு பதிவு செய்து இருந்தான் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் சூரிய பிரகாஷ்.
அதுவும் மீடியாவுக்கு முன்னாக வெட்ட வெளிச்சமாக்கிய இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கவும் முடியாமல், ஒத்துக் கொள்ளவும் முடியாத நிலையில்தான் சுதர்மன். ஆனாலும் அவனின் மச்சான் ராஜாரத்தினம் அவர்களுடைய வக்கீல் மூலம் சுதர்மன் வெளியே எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தான்.
இதோ அதோ என்று பதினைந்து நாட்கள் ஓடிவிட நாளை விசாரணை நீதி மன்றத்தில்..
சுதர்மன் மற்றும் அவரது ஆட்களை தனது நேரடி பாதுகாப்பில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் எஸ்பி. மேலும் சுதர்மன் தொழில்கள் அனைத்திலும் காவல்துறை மற்றும் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் கணக்கில் வராத பெரிய தொகைகளும் சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக சுதர்மனை மொட்டையடித்து இருந்தான் எஸ்பி.
எல்லாம் ஒருவாறு சரியாகி இருக்க.. கிடைத்த கேப்பில் தன் இணையை காண ஓடினான் எஸ்பி. இவர்கள் பற்றிய விஷயம் இருவர் வீட்டிலும் தெரியாது. அன்று வாசுகியிடம் இவன் வாய் விட்டு விட.. அதன் பிறகான இவனது வேலை முழுமையாக இழுத்துக்கொள்ள, வீட்டில் எதிர்ப்படும் நேரத்தில் அன்னை அவனை எதிர்பார்ப்போடு பார்ப்பார். இந்த ஜெகஜாலனோ அவர் ஆரம்பிக்கும் முன்னமே “கிளம்புறேன்மா” என்று ஒற்றை வார்த்தையில் ஓடிவிடுவான். அவருக்கும் தெரிந்துதான் இருந்தது மிகப்பெரிய வழக்கு ஒன்றை மகன் எடுத்து நடத்திக் கொண்டிருப்பதும், அதில் அவன் எவ்வளவு பிஸியாக இருக்கிறான் என்பதும், ஆனாலும் இரண்டே இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி விஷயத்தை சொல்லிவிட்டு போகக்கூடாதா என்று பெற்றவராக அவரது மனம் ஏங்க தான் செய்தது. எப்படி இருந்தாலும் வீட்டுக்கு தானேடா வரனும் மகனே!! அப்போது பார்த்துக் கொள்கிறேன் என்று கருவிக் கொண்டிருந்தார், அவன் வகையாக சிக்கும் நாளை எதிர்பார்த்து!! அதுவும் தன் காதலியோடு சிக்குவான் என்று அவரே எதிர்பாராமல்!!
ஆனால் அவரின் அருந்தவ மகனோ தன் இணையை காண பறந்துவிட்டான்.
அவளை அவர்கள் வழக்கமாக சந்திக்கும் சங்கீத் ரூப் கார்டனுக்கு வர சொல்லி மெசேஜ் அனுப்ப, அவளோ அதை பார்க்கவே இல்லை. இவ்வளவு நாட்களாக நேரம் கிடைக்கும்போது எல்லாம் அவளுக்கு கால் செய்ய, அதை அட்டென்ட் செய்வதும் கிடையாது, திரும்ப அவள் கூப்பிடுவதும் கிடையாது. இவளை என்ன செய்வது? என்று புரியாமல் யோசித்தவன், அடுத்து கர்ணாவுக்கு அடித்து, அவள் எங்கே இருக்கிறாள் என்று கேட்க.. “சார்.. வீட்ல தான் சார் இருக்கா. எக்ஸாம் வருது குரூப் ஸ்டடி நாங்க ரெண்டு பேரும் பண்ணிட்டு இருக்கோம் சார்” என்றான் அவளுக்கு தெரியாமல் தான்.
“வீட்ல ஐயப்பன் அவங்க வைப் இருக்காங்களா?” என்று கேட்க.. “இல்ல சார் மாமா டியூட்டி போயிட்டாங்க. அத்தையும் எங்க அம்மாவும் இவளுக்காக வேண்டிக்க மாங்காடு கோவிலுக்கு போய் இருக்காங்க.. ஈவினிங் போல தான் வருவாங்க” என்றான்.
“அப்ப நாங்க வந்துகிட்டு இருக்கேன் அவளிடம் சொல்லாதீங்க” என்று போனை வைத்துவிட்டான்.
“என்னது?! இவரு வீட்டுக்கு வராரா??” என்று அதிர கூட அவனுக்கு நேரம் இல்லாமல் “யாருடா ஃபோன்ல?” என்றவாறு திவ்யா வந்து நிற்க, “விபாகர் தான் போன் பண்ணினான்.. இங்கே வரதா சொன்னான்” என்றவாறு சமாளித்து புக்கை கையில் எடுத்தாலும் மனமோ இவர்கள் இரண்டு பேரையும் சுற்றியே இருந்தது.
சிறிது நேரத்தில் காலிங் வெளியே அடிக்க “அந்த பக்கி தான் வந்து இருக்கு போல, இரு நானே திறக்கிறேன்” என்றவள் சென்று கதவை திறக்க, அங்கே இவளை மயக்கும் மாய சிரிப்புடன் கதவில் சாய்ந்து நின்று இருந்தான் எஸ்பி.
“ரதிமா” என்று குழைந்து வந்தது எஸ்பியின் குரல்.. அதுவரை அவன் மேல் இருந்த கோபம், அவள் எடுத்துக் கொண்ட வைராக்கியங்கள் எல்லாம் காற்றில் பறந்து விட.. மெல்ல ஏறிட்டு பார்த்தாள் அவள்.
அவனோ வசீகர சிரிப்புடன் பறக்கும் முத்தத்தையும் சேர்த்து அனுப்ப, ‘இவனால் எப்படி எவ்வளவு இலகுவாக சிரிக்க முடிகிறது? 15 நாட்கள்.. முழுதாக 15 நாட்கள்!!என்னை பற்றிய நினைவே இல்லாமல் இருந்தவன், இப்போது வந்து சிரித்தால் நானும் திரும்ப சிரிக்க வேண்டுமா?’ என்று முறுக்கிக் கொண்டு அவள் உள்ளே சென்றுவிட..
கண்களால் ஜாடை காட்டினான் கர்ணனுக்கு, அவன் தலையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டான் அவன் வீட்டுக்கு. அறையின் உள்ளே மெதுவாக சென்று, அவள் பின்னே இழுத்து அணைத்தவன் அவள் காதுகளில் “ஏண்டி போன் பண்ணா எடுக்க மாட்டேங்குற?” என்று போதையேற்றும் குரலில் பேச..
‘ஆரம்பிச்சுட்டான்!! ஒன்னு சிரிச்சி சிரிச்சி பேசிவான் இல்லை இப்படி குழைந்து குழைந்து பேசியே நமக்கு மயக்கிருவான். அவன் பேச்சை காதில் வாங்காதே திவி’ என்று மனதில் சங்கல்பம் எடுத்தவளாய் அவனின் பேச்சை கேட்காமல் இருக்க முயன்றாள்.
வெறும் முயற்சி மட்டுமே.. அவன் தான் ஆக்டோபஸ் போல அவளை பின்னாலிருந்து அணைத்து அவள் காது மடல்களில் கவி பாடிக் கொண்டிருந்தானே!! அவன் குரலை தவிர வேறொன்றும் கேட்காத மாயலோகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள் திவ்யா.
“ரதி.. எப்படா அந்த கேஸ் பிரச்சனை எல்லாம் முடிஞ்சி உன்னை பார்ப்போம் என்று நான் துடிச்சிகிட்டு இருந்தேன்.. ஒவ்வொரு நாளும் விடியும்போது இன்னைக்காவது நேரம் கிடைத்து உன்னை பார்க்க மாட்டோமான்னு தவிப்பாய் இருக்கும்டி.. ஆனால் அது சாதாரணமாக வேலை இல்லையே.. ஒவ்வொரு பிள்ளைகளையும் அவங்கவங்க பெற்றோரிடம் ஒப்படைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.. கூடவே சுதர்மன் அவனோட ஆட்களோட வீட்ல ரெய்டு இன்னும் நாட்கள் இழுந்திருச்சு… இப்போ டைம் கிடைக்கும்? அப்போ டைம் கிடைக்கும்? பார்த்தா ம்ஹீம்.. ஒருவழியா எல்லாத்தையும் முடிச்சுட்டு உன்னை பார்க்க ஆசையாக ஓடிவந்தா.. நீ என்னமோ மூஞ்ச தூக்கி வச்சு நிக்குற.. என்னடி கோபம் என்மேல்?” என்று கொஞ்சலாக வந்தது அவனது வார்த்தை.
அவனின் வேலை அவளுக்கு புரிந்தாலும் தன்னை அன்று மருத்துவமனை அனுப்பி வைத்ததோடு சரி, இவ்வளவு நாளாக பார்க்க வரவில்லை என்று ஏக்கமும் அவனைக் காணமுடியாத என்று தாபமும் சேர்ந்து அவன் மீது பெரும் கோபமாக மாறியிருந்தது. ஆனால் அவளும் தன் போல தான் தவிர்த்திருக்கிறான், ஆனால் கடமை என்னும்போது அதை தவிர்த்து விட்டு வர முடியாதவனாய் இருந்திருக்கிறான் என்பது புரிய, அவளது மனம் அவனிடம் உருகியது. அதை வெளிக் காட்டிக் கொண்டால் தான் அவள் திவ்யபாரதி இல்லையே!!
மெல்ல அவனது கைகள் அவளது கன்னத்தில் இருந்து இறங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவளது தளிர் மேனியை தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட..
அவன் தொட்டாலே மெழுகாக உருகும் தன் நிலையை நினைத்து அவளுக்கு வெட்கம் வர அதை கோபமாக காட்டி அவன் கைகளை அவள் தட்டி விட.. “என்னடி இன்னும்?” என்று அவன் சற்றே கடுப்பாக கேட்க..
“பரவாயில்லையே, ஏசிபி சாருக்கு என்னை சமாதானப்படுத்த எல்லாம் நேரம் இருக்கு” என்று அவள் உதட்டை சுழித்து கேட்க.. அந்த ஈரம் மின்னும் சுழித்த உதட்டை தன் உதட்டால் பற்றிக் கொள்ள மனம் விழைய.. ஆனால் இப்போது அவளை சமாதானப் படுத்துவது முக்கியம் என்று எண்ணி அவளருகே சென்றான்.
“ஏசிபி பொண்டாட்டி ஆனா இந்த மாதிரி சுச்சுவேஷன் வர தான் செய்யும் அதையெல்லாம் சமாளித்து தான் ஆகணும். கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டிக்கலாம்.. ரதி” என்று கண்ணடித்து கூறியவன் அவளை இழுத்து தன் அணைப்பிலேயே வைத்துக் கொண்டான்.
“அது என்ன கிடா வெட்டுவது?” என்று இவள் புரியாமல் கேட்க..
“இவ வேற!! பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது ரதிமா.. ஏற்கனவே திருட்டுத்தனமா தான் உன்னை பார்க்க வந்திருக்கேன் இதுல இருக்குற கொஞ்ச நேரத்தையும் நீ பேசிய கடத்து” என்று அவன் சலித்துக் கொள்ள..
“ஹோ வேற என்ன பண்ணனுமாம்”
“என்ன வேணா பண்ணலாம்” என்று அவனது கண்கள் கள்ள சிரிப்பில் சுருங்க..
அதைக் கண்டு கொண்டவள், “வர வர.. நீங்க ரொம்ப கெட்டு போய்ட்டீங்க” என்று தன் தளிர் கரங்களால் அவன் மார்பில் குத்த..
“ஆமாண்டி.. எங்க அம்மா பத்திரமா பொத்தி பொத்தி என்னை ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் மாதிரி வளர்ந்தாங்க.. ஒரு நாளு ஒரு கேடி வந்து என்னை கடத்திட்டு போய் கெடுத்திட்டா, அதான் நான் கெட்டுப் போய்ட்டேன்” என்று முகம் என்னவோ சோகமாக இருந்தாலும் குரலில் கேலி வழிந்தது.
“என்னது?? நான் உங்களைக் கெடுத்து விட்டேனா??” என்று முதலில் அதிர்ந்தாலும் அடுத்து அவனை தன்னிடமிருந்து தள்ளிவிட்டு முழு சட்டையை மடித்து விடுவது போல பாவனை செய்துகொண்டு “அப்போ முடிச்சிட்ட வேண்டியதுதான்!!” என்று கண்களில் மோகத்துடன் அவனை அதிரடியாய் நெருங்கினாள் காதல் களவாணி.
24
ரதியின் பாவனைகளில் அவனுக்கு சுவாரசியம் கூட முகத்தில் அதைக் காட்டாமல் பயந்து கொண்டவன் போல “வேண்டாம் ரதி.. சொன்னா கேளு இரண்டு அடி தள்ளி நின்னு என்னை விட்டு.. ஏன்னா நான் கல்யாணம் ஆகாத கன்னிப் பையன்..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் முகத்தை பற்றி தன்னருகே இழுத்தவள், “இனி இந்த டயலாக் நீ பேசவே கூடாது” என்று, பேசிய அவன் உதடுகளுக்கு சரியான தண்டனை கொடுத்தாள் தன் உதடுகளால்..
அவன் கீழ் உதட்டை கவ்வி தன் உதடுகளுக்குள் வைத்து அழுந்தக் கடித்து பின்பு தன் நாவினால் சரசமாட ஏதோ சிறு பிள்ளை மிட்டாய் சாப்பிடுவது போல அவனது உதட்டை மிட்டாயை போல் தின்று கொண்டிருந்தாள் தண்டனை கொடுப்பதாக எண்ணி..
அந்தக் கள்வனோ அவள் தண்டனை என்று கொடுத்த இதழணைப்பை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தான். அவள் கொடுத்த கடி எல்லாம் எங்கே அவனுக்கு வலித்தது?? உள்ளுக்குள் சுகமாக ஜிவ்வென்று ஏற சில பல ஹார்மோன்கள் அவன் உடலில் தூண்ட.. அதற்குமேல் அவளது தண்டனையை இவன் தனதாக்கினான். இவர்களின் இதழ் போர் முடிந்து, கூரிய வாளென தன் நாவினால் அவளது பற்கள் என்னும் கோட்டையைத் தகர்த்து உள்ளே பத்திரமாக உறங்கிக் கொண்டிருந்த அவளது அல்வாத்துண்டு நாவினை மொத்தமாக தன் வாயிலிட்டு முழுங்கி இருந்தான். அவனது அதிரடியில் கண்கள் சொருக.. தன் விரல்களால் அவனது முதுகில் அழுத்தமாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் பாவையவள்.
மெல்ல மெல்ல நாவிலிருந்து பிரிந்து உதடுகளுக்கு மாறிய அவனது அதரங்கள் அங்கே இளையாறியது. பின் அவள் முகம் முழுவதும் எச்சில் தெறிக்க முத்தங்களால் அர்ச்சித்தான். கூடவே அவனது “ரதி.. ரதிமா” என்ற குரல் தாபமாக அவனின் வேட்கையை காட்ட.. பெண்ணவள் கிறங்கி முயங்கி அவனுள் அடைக்கலமானாள்.
மெல்ல அவளிலிருந்து பிரிந்தவன் அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கி தன்னை நோக்கி மேல் உயர்த்தி நெற்றியில் அழுத்தமாக இதழ்கள் பதித்து.. “இனி எங்க போனாலும் கவனமா இருக்கணும். இந்த கேஸ் முடியுற வரைக்கும் ரொம்ப எல்லாம் வெளியில் போகாத வீட்டுக்குள்ளேயே இரு. ஏனென்றால் என் மொத்த உயிரும் நீ தாண்டி “என்று அவன் உருக்கமாக பேச..
அவனின் கண்களில் வழிந்த காதலும் உருக்கமான பேச்சும் பெண்களின் மனதை நெகிழச் செய்ய மெல்ல தலையசைத்து சரி, என்று சொன்னவள் உதடு ரகசிய சிரிப்பில் வளைய.. அதைக் கண்டு கொண்டு மாதவனோ “என்னடி உதடு வளையுது? கொடுத்தது பத்தலையோ?? இன்னும் கேக்குதோ??” என்று அவன் சீண்ட..
“ஆச தோச அப்பள வட” என்று அவனைத் தள்ளிவிட்டு.. இவள் ஓட முயல.. அவனோ அந்த அறைக்குள்ளேயே ஓடிய அவளை பிடிக்க முயன்றான். சிறிது நேரம் அவளிடம் போக்கு காட்டி விட்டு சட்டென அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க, அவன் மேலேயே விழுந்தவள், இருவரும் அருகில் இருந்த படுக்கையின் மீது விழுந்தனர். அவன் கைகள் அவளது இடுப்போடு இறுக்கமாக இணைந்து இருந்தது.
மிகவும் நெருக்கமாக இருவரும் இருக்க.. திவ்யாவோ அவளது கண்களை மூடி எதிர்பார்ப்போடு காத்திருக்க..
தலைவனும் ஏற்கனவே அவள் மலர் இதழில் கள்ளுண்ட போதை தெளியாமல் மீண்டும் அவ்வளிடம் தேன் எடுக்க வண்டென கிளர்ந்தான். அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் எஸ்பியின் சூடான மூச்சுக்காற்று அவளது அலர் கழுத்தில் வெம்மையேற்ற.. அவனது அழுத்தமான உதடுகளோ சூடான முத்தங்களை அந்த சங்குக்கழுத்தில் பதித்தவாறு இருந்தன.
அவளின் மென் கரங்கள் அவன் கழுத்தை இறுக்கி வளைத்தது. அவனது உதடுகளோ தனது பயணத்தை கழுத்திலிருந்து கீழ்நோக்கி நகர்த்த.. இரட்டை திமில்கள் இனிய தடையாய்.. அதில் பெண்ணவள் சிலிர்த்து, நாணம் கொண்டு அவனது கேசத்தைப் பற்றி முகத்தை தன்னை நோக்கி திருப்பினாள். அப்போது இருவரின் பார்வைகளும் காதலோடும் தாபத்தோடும் மோகத்தோடும் பிண்ணிப் பிணைந்தது.
இதுவரை அறியாத ஒரு புது உணர்வை இருவரும் உணர்ந்தனர். காதலோடு கூடிய மோகம்.. இருவரும் ஒருவருள் ஒருவர் கலந்து உணர்ந்து கொள்ள துடிக்கும் தாபம்.. ஆனால் விலங்கென சமூக கட்டுப்பாடுகள் முன்னெடுக்க.. அதை உடைத்து எறிய துணிவு இருந்தாலும் மனம் என்னவோ வேண்டாம் என்று மறுதலித்தது தன்னவளுக்காக..
ஒரு பெண்ணின் காதலுக்கு இவ்வளவு சக்தி உண்டா? தன்னை இவ்வாறு மொத்தமாக மாத்தி இருக்கும் அந்த சின்ன பெண்ணின் காதலில் கரைந்து மெழுகாக உருகி நின்றான் இந்த காவலன்.
“ஆக்டோபஸ் போல எனக்கும் எட்டு கைகள் இருந்தால் நல்லா இருக்குமடி” என்று அவன் விஷமத்தோடு கூற..
“இப்பவே மலைப்பாம்பு போல தான் என சுருட்டி மடக்கி உங்களுக்குள் வச்சு இருக்கீங்க.. ரெண்டு கைக்கே என்னால் தாங்கலை. இதுல எட்டு கை இருந்தா.. அம்மாடியோவ்” என்று அவள் போலியாக அலற..
“கட்டிக்க மட்டுமா கேட்டேன்.. உன்னை உணர்ந்து கொள்ளவும் தான் கேட்கிறேன்” என்று அதன் அர்த்தத்தை அவள் காதுகளில் அந்தரங்கமாக பேச..
ரோஜாவென இருந்த அவளது முகம் செங்காந்தள் என வெட்கத்தில் செம்மையுற அதை அவனது மார்பிலேயே அவள் புதைத்து மறைத்துக்கொள்ள.. இன்னும் இன்னும் வேண்டுமென அவள் மேல் இவனுக்கு தாபமும் மோகமும் கிளர்ந்ததே ஒழிய கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. எங்கே இருக்கிறோம் என்று தங்களை மறந்து சுற்றம் மறந்து காதலில் திளைத்திருக்க.. வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“அந்த குண்டோதரன் தான் கரடியாக வந்துட்டான்” என்று எஸ்பி கோபப்பட.
“இருங்க நான் போய் பாத்துட்டு வரேன்” என்றவள் அவனிடமிருந்து பிரிய..
” ட்ரெஸ்ஸ சரி செஞ்சுட்டு போடி” என்று பின்னே அவனும் வந்தான்.
“எதுக்கும் ஒரு தடவை மேஜிக் வியூ மூலமா யாருனு பார்த்துட்டு கதவ தொற.. எப்போதும் டக்குன்னு திறக்காத” என்று காவலனாய் அவன் அறிவுறுத்த…
ஏதோ நல்ல மூடியில் இருந்திருப்பாள் போல திவ்யபாரதி.. அவளும் சரி என்று தலையை அசைத்து, மேஜிக் வியூ மூலம் பார்க்க அங்கே ரத்னாவும் கர்ணாவின் அன்னையும் நின்று கொண்டிருக்க அருகில் கையை பிசைந்தபடி கர்ணா நின்று கொண்டிருந்தான்.
“என்னடி கர்ணா தானே?” என்று எஸ்பி கேட்க..
“ஆமா.. ஆமா அந்த குண்டோதரன் தான் வந்திருகிறான்” என்றவளின் குரலில் அவ்வளவு பதட்டம்..
“அதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படுற.. இரு நான் போய் கதவைத் திறக்கிறேன்” என்று அவன் கதவில் கை வைக்க, அதை தட்டி விட்டவள் அவனை பயத்துடன் பார்த்து..
“கர்ணா மட்டுமில்ல.. கர்ணா கூட அவன் அம்மாவும் மாமியாரும் நிற்கிறாங்க” என்று கண்கள் விரித்து அவள் கூற..
“என் மாமியார் தானே!! வரட்டும்!! வரட்டும்!! நான் அவங்க பொண்ண எவ்வளவு பத்திரமா பார்த்துக்கிறேனு பார்த்து தெரிஞ்சுக்கிட்டும்” அங்கிருந்த சோபாவில் ஒய்யாரமாக அமர்ந்து கால் மேல் கால் போட்டு கொண்டான்.
“கொஞ்சம் கூட உங்களுக்கு பயமே இல்லையா? ஏன் இப்படி பண்றீங்க? எந்திரிச்சு முதல்ல அந்த ரூம்ல போய் ஒளிஞ்சுக்கோங்க” இவள் அவனுக்கு ஐடியா தர..
“என்னது நான் ஒளிஞ்சிக்கிறதா? நான் என்ன திருடனு நினைச்சியா? ஏசிபிடி.. பல ரவுடிகளும் திருடர்களும் என்னை பார்த்தாலே அல்லு விடுவாங்க.. நீ என்னமோ என்னை போய் ரூம்ல ஒளிய சொல்லுற? அதெல்லாம் முடியாது!! முடியாது!! செல்லாது!! செல்லாது நான் இங்கேதான் இருப்பேன்!!” என்று அவன் அமர்த்தலாக அமர்ந்திருக்க..
மீண்டும் காலிங் பெல் அழுத்தம் சத்தம் கேட்க, தன் கைகளை உதறிக் கொண்டு பதறியவள் “சொன்னா கேளுங்க..உங்க நல்லதுக்காகத்தான் சொல்றேன். உள்ள போங்க” என்றாள்.
அதான் முடியாதுன்னு சொல்றேன்ல “மாமியார் வரட்டும் பார்த்துப் பேசிட்டு போறேன். வந்ததிலிருந்து உங்க பொண்ணு எனக்கு ஒரு காபி கூட போட்டு தரலனு உன்னை மாட்டி விட்டு போறேன்” என்று நக்கலாக அவன் கூற..
“உங்க தலையெழுத்தை மாத்தவா முடியும்!! விதி வலியது!! யாரு மாட்ட போறான்னு கதவை திறந்தால் தெரியும்!! நான் போய் கதவை திறக்க போறேன்” என்று கூறி கதவை திறக்க செல்ல..
“போ!! போ!!” என்று அலட்சியமாக காலாட்டியப்படி அமர்ந்திருந்தான் சூரிய பிரகாஷ்.
கதவு மேல் கைவைத்து திறக்கப் போனவள் கடைசியாக அவனை திரும்பிப் பார்த்து..
“நான் மாமியாருனு தான் சொன்னேன், ஆனா உங்க மாமியார்னு சொல்லையே..” என்று அவனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து “வெளியே நிற்கிறது என் மாமியார்” என்று கூறினாள்.
“என்னது உன் மாமியார்? உன் மாமியார்ன்னா.. எங்க அம்மா வாடி?” என்று அதிர்ந்து எழுந்தான் இணை ஆணையன்.
அவளோ ஒற்றைப் உருவத்தை கெத்தாக துவக்கி “இப்ப கதவை திறக்கட்டுமா?” என்று கேட்க, அவளை தள்ளி விட்டு மேஜிக் வியூ மூலம் பார்க்க கர்ணாவின் அம்மாவுக்கு அருகில் வாசுகியும் நின்று கொண்டிருந்தார்.
“அடியே!! வந்து ரூம்ல ஒளிஞ்சுக்கிறதுக்கு இடத்தை காட்டுடி” என்று இதுவரை தன்மான சிங்கமாக அலப்பறை செய்து கொண்டிருந்தவன் பதுங்க இடம் கேட்டான்!!
சிங்கம் அசிங்கப்பட்டதே..
அடடே ஆச்சிரியக்குறி!!
25
“அடியே உன் ரூமில் ஒளிஞ்சுக்க இடம் காட்டுடி?” என்று சீறிய சிங்கம் பம்ம.. அவளோ “அப்படியெல்லாம் சொல்ல கூடாது ஆபிஸர்.. நீங்க யாரு? எப்பேர்ப்பட்ட டெரர் போலீஸ்!! உங்க கண்டு ரவுடிங்க பொறுக்கிங்க எல்லாம் பம்மி ஓடுவாங்க.. நீங்க என்னடான்னா திருடன் மாதிரி ரூம்ல போய் ஒளியலாமா?” என்று அவன் டயலாக்கை அவனுக்கே திருப்பி கொடுக்க..
“வேணாம்டி.. என்னை மட்டும் சீண்டாத.. அப்புறம்..” என்று அவன் இழுக்க..
“அப்புறம்.. அப்புறம்” என்று கைகளை கட்டிக்கொண்டு அவனை பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்த…
“அப்புறம் என்ன.. உன்னையும் இழுத்துகிட்டு ரூமுக்குள்ள போய் கதவை சாத்திடுவேன்..
விடிய விடிய விருந்து தான். கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியார் வீட்டில முதல் இரவு.. சாரி.. சாரி முதல் மாலை கொண்டாடுற கிக்கே கிக்கு தான்.. என்ன சொல்லுற ரதி டார்லிங்? மச்சான் ஃபுல் மூடுல இருக்கேன்” என்று இரு கைகளையும் மேலே உயர்த்தி அவன் நெட்டி முறித்து அவளை கிறக்கமாக பார்த்து உதடு குவித்து பறக்கும் முத்தத்தை விட..
“அய்யோ சாமி ஆள விடுங்க.. ரத்னா அப்புறம் தொடப்பக்கட்டையை எடுத்து விடிய விடிய எனக்கு பூஜை நடத்திடும்.. தயவுசெய்து உள்ள போங்க சாமி” என்று அவனைத் தள்ளிக்கொண்டு போய் அவளது டிரஸ் வைக்கும் கப்போர்டில் இருக்கும் பொருட்களை கவனமாக எடுத்து கட்டிலுக்கு அடியில் தள்ளி விட்டு, ஆறடி ஆண்மகனை அந்த கப்போர்டில் ஒடுக்கி மடக்கி அமரவைத்து சாத்திவிட்டு, கதவு திறக்க சென்றவள் மீண்டும் ஓடி வந்து தனது ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்றாள்.
அதே நேரம் வெளியில் நின்று கொண்டிருந்த ரத்னாவுக்கோ மகள் கதவு திறக்கவில்லை என்று பதட்டமாக இருந்தாலும் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வரும் நிலையில் இவ்வாறு அவள் செய்வதை கண்டு கோபம் வந்தது. அருகிலிருந்த கர்ணாவிடம் கேட்க அவனோ, “அவ ரொம்ப பிசியா இருப்பா அத்தை” என்று வாயை விட..
“பிஸியா இருக்குற அளவு அப்படி என்னடா வேலை அவளுக்கு?” என்று கர்ணாவின் அம்மாவும் கேட்க..
“க்ரூப் ஸ்டடி பிரண்ட்ஸோட பண்ண போறேன் சொன்னமா.. வீடியோ கால்ல ஒருவேளை இருக்கலாம்” என்று வெளியில் சொன்னாலும் மனதில் “என்ன மாதிரி குரூப் ஸ்டடி இரண்டு பேரும் பண்ணுதுங்க தெரியலையே.. பக்குன்னு இருக்கு நமக்கு” என்று பதறிக் கொண்டு இருந்தான்.
வெளில சென்றவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நிற்பதை பார்த்தவன், “என்னடி கதவை திறக்க போறேன்னு சொல்லிட்டு இங்கே வந்து நின்னு என்னடி பண்ற?” என்று அவன் கேட்க..
அவளோ தலையை வாரிய வாரே கண்ணாடி வழியே அவனைப்பார்த்து, “அது ஒன்னு இல்ல மச்சான்… என் மாமியார் நான் நிறைய தடவை பார்த்திருக்கேன். ஆனா அவங்க இப்பதான் முதன்முறையா என்னை பார்க்க போறாங்க.. பஸ்ட் இம்பிரஷன் இஸ் தே பெஸ்ட் இம்பிரஷன் இல்லையா.. நீங்க என்னை போட்டு கசக்கி வச்சிருக்கீங்க அதோடு போய் நிக்க முடியுமா.. அதான் பிரஷா போறேன்” என்றவளின் விளக்கத்தில் ‘எப்பா சாமி கல்யாணத்துக்கு அப்புறம் இவள எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே’ என்று மனதுக்குள்ள மட்டுமே வேண்டினான்.
அதற்குள் மீண்டும் ஒரு முறை காலிங் பெல் சத்தம் கேட்க கழுத்தில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு போய் கதவை திறந்தாள்.
பின்னே போடுற வேடத்தை சரியாக போட வேண்டும் அல்லவா!!
“வீட்டு கதவை திறக்க இவ்வளவு நேரமா?” என்று திட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ரத்னா..
“அதுவா ஃபிரண்ட்ஸ் கூட குரூப் ஸ்டடி பண்ணிட்டு இருந்தேன் மா.. அதான்” என்று சிரித்து வைக்க, அவளை நம்பாத பார்வை பார்த்துக் கொண்டே கிச்சனின் நுழைந்து எல்லோருக்கும் கொடுப்பதற்கு அவர் ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்தார்.
“அம்மா யார் இந்த ஆன்ட்டி?” என்று தெரியாத போலவே அம்மாவிடம் கேட்டாள் திவ்யா. கர்ணாவும் இவங்களை உனக்கு தெரியாது என்று பார்வை பார்க்க… ‘அடங்கு டா!!’ என்று இவளும் பார்வையாலேயே அவனை அடக்கினாள்.
“அது திவ்யா உனக்காக வேண்டிக்க நாங்க மாங்காடு போயிருந்தோம்ல.. அப்போ அங்க அக்காவை பார்த்தேன்.. ” என்று ரத்னா கூற..
“என்னது அக்காவா??” என்று அதிர்ந்த குரல்கள் கேட்க..
வேறு யார் கர்ணாவும், திவ்யாவும் தான்!!
“அதுக்கு ஏண்டி இவ்வளவு ஷாக் ஆகுற.. ஷாக் குற.. ஷாக் குற..” என்றவர், “ஆமாம் நீங்க ரெண்டு பேரும் தானே கத்தினீங்க.. எனக்கு மூனு குரல் கேட்ட மாதிரி இருந்தது” என்று அவர் யோசிக்க..
“ஆமா எனக்கு கூட அப்படிதான் கேட்டது” என்று வாசுகி கூற..
‘போச்சு.. போச்சு’ என்று கர்ணாவும் திவ்யாவும் திருதிரு என்று விழித்தனர்.
ரத்னா வாசுகியை அக்கா என்று சொன்னதில் கப்போர்டில் இருந்த எஸ்பியும் ஷாக்காகி தன்னையறியாமலேயே வாய்விட்டு இருந்ததால் வந்த குழப்பம் தான் இது.
வழக்கம்போல கர்ணா தான் “இல்லை ஆன்ட்டி எனக்கு கோல்டு அதனால என் வாய்ஸ் உங்களுக்கு அப்படி கேட்டு இருக்கும் போல” என்று எதையோ சொல்லி சமாளிக்க..
“ஏம்மா இப்போ இது முக்கியமா.. கேட்டதுக்கு பதில் சொல்லுமா?” என்று காரியத்தில் கண்ணாக இருந்தாள் திவ்யபாரதி.
“அதுவா நானு, கர்ணா அம்மா அக்கா எல்லாம் ஒரே காலேஜ்ல படிச்சவங்க.. நாங்க யூஜி ஜாயிண்ட் பண்ண போது இவங்க பிஜி பைனல் இயர்.. வாசுகி அக்கா எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காங்க நோட்ஸ் எல்லாம் கொடுத்து.. இன்னைக்கு மாங்காடு கோவில இவங்களும் அவங்க பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகுறதுக்கு வேண்டிக்க வந்திருந்தாங்க. நான் தான் நம்ம வீட்டுக்கு வாங்கன்னு கூட்டிட்டு வந்தேன்” என்று அவரை பற்றி கூறினார் ரத்னா.
“அப்பாடி” என்று இப்பொழுதுதான் மூச்சு சீராக வந்தது கர்ணாவுக்கும் திவ்யாவுக்கும் கூடவே எஸ்பிக்கும்.
திவ்யபாரதியின் அடக்க ஒடுக்கத்தில் கவரப்பட்டவராக ( என்னது அடக்க ஒடுக்கமா? இது எப்போ??) அவளை தன் அருகில் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தார் வாசுகி. என்ன இருந்தாலும் வருங்கால மாமியார் அல்லவா திவ்யாவும் அடக்கமாகவே பதிலளித்துக் கொண்டிருந்தாள். கர்ணாவோ அவளை குறும்பு சிரிப்புடன் பார்த்து “நீ நடத்து நடத்து தல” என்று வாய் அசைத்தான்.
அந்த நேரம் ஐயப்பன் வீட்டுக்கு வர..
“இந்த நேரத்தில் வந்திருக்கிறிங்க” என்று ரத்னா கேட்க..
அ”து ஒன்னும் இல்ல ரத்னா, ஒரு கேஸ் விஷயமா ஏசிபி சார பார்க்க போகணும். அதான டீடெயில்ஸ் உள்ள பைல் வீட்டுல இருக்கு, அதற்காகத்தான் வந்தேன்” என்று உள்ளே வந்து அவர் அமர..
‘அதுக்கு எதுக்கு அவர் ஆபீஸ் போகனும், உள்ள தான் இருக்காரு. போய் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லுங்க’ என்று முணுமுணுத்தாள் திவ்யா.
அப்பொழுது வாசுகியை கணவருக்கு அறிமுகம் செய்து வைத்த ரத்னா, “ஏங்க இவங்க பையனும் போலீஸ் தான் இருக்காராம். அக்கா சொல்லிட்டு இருந்தாங்க” என்று கூற..
“அப்படியா என்னவா இருக்காரு?” என்று அலட்சியமாக ஐயப்பன் கேட்க..
“அசிஸ்டன்ட் கமிஷனர்.. சூரியபிரகாஷ் தான்” என்றார்.
“ஏசிபி சார் அம்மாவா நீங்க?” என்று கேட்டவரின் குரலில் ஆச்சரியமும் மரியாதையும் கலந்து ஒலித்தது.
மெல்ல சிரித்துக் கொண்டார் வாசுகி. “ரத்னா அன்னைக்கு நம்ம திவி காணாமல் போனபோது வந்தார் அல்ல, அந்த சார் தான்” என்று என்ன புளி போட்டு அத்தனை பேருக்கும் விளக்க.. காணாமல் போனது.. திவி எல்லாம் ஏதோ புரிவது போல் இருந்தது வாசுகிக்கு.
அதேசமயம் பைல் தேடி எடுக்க என்று ஐயப்பன் அவர் ரூமுக்கு சென்று விட, “இந்த புடவை எனக்கு கசகசன்னு இருக்கு வேற மாத்திட்டு வந்திடுறேன்” என்று திவ்யா பெட்ரூமுக்குள் நுழைந்தார் ரத்னா.
அம்மா செல்வதை பார்த்து அலறியபடி பின்னோடு வந்த திவ்யா “இங்கே என்னமா பண்ற?” என்று பதட்டத்துடன் கேட்க..
“புடவை மாத்த போறேன் டி” என்று அவர் புடவையில் கைவைக்க.
“ஐயையோ” என்று பதறியவள்… “மா.. பிரண்ட்ஸோட ஜூம் மீட்டிங்ல இருந்தேன் நீ கூப்பிட்ட உடனே அப்படியே விட்டுட்டு வந்துட்டேன். நீ இங்க பண்றது எல்லாம் எல்லாரும் பார்ப்பாங்க. நீ போயி உங்க ரூம்ல மாத்தும்மா. அப்பா கிளம்பிட்டார்” என்று அவரிடம் கதை கதையாக கூறி கஷ்டப்பட்டு வெளியே அழைத்து வந்தாள.
கர்ணா அனைத்தையும் சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டு அவளை பார்த்து சிரிக்க.
அவனருகில் அமர்ந்து யாருக்கும் தெரியாமல் அவனது உள்ளங்கையில் நறுக்கென்று கிள்ளியவள் “ஒரே ஒரு லவ் பண்ணிட்டு நான் படாதபாடு பட்டு இருக்கேன்!! நீ என்னான்ன சிரிக்கிற.. என்ன பண்ணுவியோ தெரியாது முதல்ல எல்லாரையும் கூட்டிட்டு உங்க வீட்டுக்கு போ” என்று கட்டளையிட..
“அப்படியெல்லாம் போகணும்னு எனக்கு அவசியமே கிடையாது” என்றவன், “ஆன்ட்டி எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது இருந்தா தாங்க” என்று உள்ளே பார்த்து கூறினான்.
“நான் இப்பதான் டிபன் செய்யப்போறேன். வெயிட் பண்ணு கர்ணா செஞ்சு தரேன்” என்று ரத்னா பதிலளிக்க, இப்போதைக்கு இவர்கள் கிளம்புவதாக தெரியவில்லை என்று பயந்தபடியே தலையில் கையை வைத்து அமர்ந்தாள் திவ்யா.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு..
என்ற குரலை கர்ணா திவ்யாவுக்கு அருகே முணுமுணுக்க..
“டேய் நான் ஏற்கனவே டென்ஷனா இருக்கேன். நீ வேற என்ன கடுப்பு ஏத்தாத” என்று அவள் திட்டினாள்.
“இல்ல திவி, இந்த குரலில் வர்ற மாதிரி நான் உனக்கு இப்போது ஹெல்ப் பண்றேன்னு சொல்ல வந்தேன்” என்றவன், “ஆன்ட்டி நீங்க எங்க அம்மாவுக்கும் பிரண்டு தானே.. இங்கே ஜூஸ் சாப்பிட்டீங்கள அதே மாதிரி டிபன் எங்க வீட்டுல தான் சாப்பிடணும்” என்று விருந்தோம்பலை கையிலெடுத்து அம்மாவை அவன் உள்ளே நுழைக்க..
“அதானே.. வாசுகிக்கா வாங்க” என்று கர்ணாவும் அம்மாவும் அவரை அழைக்க அவரும் புன்னகையுடனே எழுந்து அவருடன் செல்ல.. “அத்தை நீங்களும் வாங்க” என்று அவரையும் அழைத்துக்கொண்டு திவ்யாவிடம் கண்ணை காட்டு விட்டு சென்றான் கர்ணன்.
மூவரும் சென்ற பின் கதவைத் தாளிட்டு அதன் பின்னே சாய்ந்து பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டாள் திவ்யபாரதி.
அனைவரும் சென்றபின் இருந்த அமைதியில் மெதுவாக கப்போர்டில் இருந்து இறங்கிய எஸ்பி கண்கள் மூடி கதவில் சாய்ந்து நின்றவளின் அருகே வந்து அவள் உடலோடு உடல் உரச நெருங்கி நின்றான்.
அவன் ஸ்பரிசத்தில் கண்களை விழித்தாள் பெண்.
“யாராவது வரதுக்குள்ள சீக்கிரம் கிளம்புங்க” என்று அவனை அவசரபடுத்தினாள்.
முன்னே இருந்து குறும்புத்தனமும் சீண்டலும் தாபமும் இப்போது இல்லை. காதல் மட்டுமே வழிந்தது இருவர் கண்களிலும்..
மெல்ல அவளது முகத்தை நிமிர்த்தி பிறை நுதலில் அழுத்தமாக தன் இதழை பதித்தவன், “சீக்கிரமே உன் மாமியார் மாமனாருடன் வரேன்.. இப்போ கிளம்பட்டுமா?” என்று அவன் கேட்க..
புன்னகையோடு தலையாட்டியவள் அவனது தோளில் சாய்ந்தாள். அவளது உச்சந்தலையில் தனது தாடையை பதித்தவாறு.. “என்னடா ஆச்சு ரதிமா?” என்று மென்மையாக கேட்க.. ஒன்றும் இல்லை என்று தலையாட்டினாள் திவ்யா.
மெல்ல அவளது உச்சந்தலையில் மென்மையாக முத்தமிட்டான் எஸ்பி. தலையைத் தூக்கி அவனை பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்தன.
“என்னடா ரதி.. நான் எதுவும் உன்னை கஷ்டப்படுத்திட்டேனா?” என்று கலங்கிய கண்களை பார்த்து கலக்கத்துடன் கேட்டான் எஸ்பி.
நான் ஸ்டாப்பாக பேசும் திவ்யபாரதியோ இப்பொழுது பேச்சுக்களை மறந்து செய்கையிலே இல்லை என்று தலையாட்டியவள், மெல்ல எக்கி அவனது கன்னங்களில் தனது செவ்விதழ்களைப் பதித்தாள். இவ்வளவு நாள் இல்லாத நெருக்கம் இந்த ஒரு நாளில் இருவருக்கு இடையே ஏற்பட்டிருக்க, பின்னிப் பிணைந்த கைகளை பிரித்து எடுக்க மனமில்லாமல் அமைதியாக இருந்தனர் இருவரும்.
“சரிடா டைம் ஆச்சு.. எனக்கும் இப்படியே இருக்கத்தான் ஆசை ரதிமா.. ஆனா அது உனக்கு நியாயம் செய்வதாய் இருக்காது. உன்னை முறைப்படி என் மனைவியை கூட்டி போனால் தான் நம் காதலுக்குமே மரியாதை” என்றவன்.. அவளது உதட்டில் அழுந்த முத்தம் வைத்துவிட்டு அடுத்த நொடி அவள் வீட்டை விட்டு வேகமாக விரைந்து சென்றான்.
மறுநாள் நீதிமன்றத்தில் சுதர்மன் ராஜரத்தினம் மற்றும் அவரது ஆட்கள் மீது குழந்தைகளை கடத்தியது.. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது.. கொலை செய்தது என்று இவ்வகை குற்றங்கள் ஒருபுறமும்.. அவர்கள் வீட்டில் கைப்பற்றிய கணக்கில் வராத சொத்துக்கள் நகைகள் தங்க கட்டிகள் என அவை ஒருபுறமும்.. குற்றங்களை பதிவு செய்யப்பட்டு ஆஜர்படுத்தினர் நீதிபதியின் முன்னே.
தகுந்த சாட்சியங்களுடன் அனைத்து குற்றங்களும் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டதால் சுதர்மன் மற்றும் ராஜரத்தினத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றும் அவர்களது அடியார்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு இவரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயன்படும் வகையில் டிரஸ்ட் அமைத்து செயல்படுத்துமாறு நீதிபதி ஆணையிட்டார்.
அடக்கப்பட்ட கோபத்துடன் சுதர்மன் சூரியபிரகாஷ் முறைத்தவர் அவன் அருகில் நின்று “இந்த ஒரு நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பு இறுதியானது கிடையாது. நாங்கள் மேல்முறையீடு செய்தால் சுப்ரீம் கோர்ட்டில் எங்களுக்கு சாதகமாக கண்டிப்பாக வரும்” என்று சவால் விட்டே சென்றார்.
அவனோ அடக்கப்பட்ட புன்னகையுடன் அமைதியாக பார்த்துக் கொண்டே நின்று இருந்தானே ஒழிய எதிர்வினை ஒன்றும் ஆற்றவில்லை.
அடுத்து வந்த நாட்களில் ஓய்வுபெற்ற கலெக்டர் மற்றும் நீதிபதி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதில் சுதர்மன் அநியாயமாக சேர்த்த அனைத்து சொத்துக்களும் ட்ரஸ்ட் அமைத்து அதற்கு பாத்தியமானது. மேலும் அந்த ட்ரஸ்ட் மூலம் பல பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை உடன் கூடிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.
26
ஒரு வாரம் கழிந்த நிலையில்..
எப்பொழுதும் அரசு என்று கூப்பிட்டால் விரைந்து வந்து தன் முன்னே விரைப்புடன் நிற்பவன், இன்று ஏனோதானோ என்று சல்யூட் அடித்து விட்டு செல்வதை பார்த்த சூரியபிரகாஷ்ற்கு ஒன்றும் புரியாமல் அவனை அழைத்து கேட்டான்.
முதலில் என்ன சொல்வானோ என்று பயந்தாலும் மனதில் இருப்பதை கேட்டே ஆகவேண்டும் என்று நினைத்த அரசு எஸ்பியை பார்த்து.. “உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்ல சார்.. அந்தச் சின்ன குழந்தைகளை அவனுங்க என்ன பாடு படுத்தினானுங்க.. அவனுங்களுக்கு வெறும் ஜெயில் தண்டனை போதுமா சார்? ஜெய்ல நல்லா சுகமா வாரத்துக்கு ஒரு நாள் சிக்கன் முட்டை என சந்தோசமாக தான் இருக்கானுங்க.. இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு சகோதரனா.. மகனா.. கணவனா.. ஒரு பெண் குழந்தையின் தந்தையா என் மனம் தவிக்குது சார்.. அவனுங்களை ஏதாவது பண்ணலேன்னா என்னால கண்டிப்பா நிம்மதியா தூங்க கூட முடியாது சார்.. என் கையில கொடுத்தா அவனுங்களை எல்லாம் சரமாரியாக வெட்டிப் போடணும்னு வெறி வருது சார்” என்று ஆத்திரத்துடன் வெகுண்டெழுந்து பேசிய இந்த அரசு சூரியபிரகாஷுக்கு புதியவன்.
அவனின் மனத்தாங்கலை புரிந்தவன் “என் கூட வாங்க அரசு” என்று அவனை அழைத்துக்கொண்டு சென்னை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றான்.
இங்கே எதுக்கு அழைத்து வந்திருக்கிறார் என்று புரியாவிடினும் அமைதியாக அவன் கூடவே அரசு வர.. அங்கே தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த சுதர்மன் எதிரே அமர்ந்து இருந்தான் சூரியபிரகாஷ்.
அமைதியாக ஆனால் தீர்க்கமாக அவனைப் பார்த்து முறைத்தார் சுதர்மன்.
“பொய்யா கேஸ் ஜோடித்து என்னை உள்ள தள்ளி ஒன்னும் இல்லாம பண்ணிட்டேன்னு இப்போ நீ கொக்கறிக்கலாம்.. நான் கண்டிப்பா வெளியில வருவேன், வெளியே வரும்போது அன்னைக்கு உனக்கு இருக்கு” என்று எஃகு குரலில் அவர் கூற..
“ஆமா உன் கூட இருப்பானே ஒட்டுபுல்லு மாதிரி உங்க மச்சான்.. அவன் எங்க இப்ப?” நல்லா யோசிச்சிங்களா என்று கேட்க..
அன்று தீர்ப்புக்கு பின் ராஜரத்தினத்தை சுதர்மன் பார்க்கவே இல்லை. இவர் தன்னுடைய நிலையிலேயே உழன்று கொண்டிருக்க மற்ற யாரையும் அவர் நினைவில் கூட இல்லை.
“என்னடா செஞ்சு? என்ன செய்ய மாப்பிள்ளைய?” என்று சூரியபிரகாஷின் சட்டையை கொத்தாக பிடித்து அவர் கோபப்பட..
“கைய எடு.. சட்டை கசங்குச்சுனா அப்புறம் எங்க அம்மாகிட்ட யாரு திட்டு வாங்குறது” என்று அவர் கையை தன் உடலிலிருந்து தட்டி விட்டவன்.
“சுதர்மன்.. நீ அரசியல் வாழ்க்கையில் பல கொலை கொள்ளை எல்லாம் செஞ்சு இருக்க.. அதுமட்டுமில்லாமல் கன்ஷ்ட்ரக்சன் என்கிற பெயரில் பல பேரோட நிலத்தை மோசடி செய்து வாங்கி இருக்க.. இதற்கான தண்டனை தான் இப்போ நீ அனுபவிச்சிட்டு வர.. ஆனா அந்த பெண் குழந்தைகளை கடத்தி சீரழித்தது நீ இல்லைன்னு எனக்கு தெரியும்” என்று அவன் கூற ஆத்திரத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்தார் சுதர்மன்.
“இதுக்கு எல்லாம் காரணம் உன் மச்சான் ராஜரத்தினம் தான்” என்று கூற, அவனைப் பார்த்தவர் “இருக்காது.. கண்டிப்பா இதெல்லாம் செஞ்சு இருக்க மாட்டான்” என்று ஆணித்தரமாக நம்பினார்.
“ஆனா அது தான் உண்மை” என்றவன் தன்னிடம் உள்ள ஒரு வீடியோவை அவருக்கு முன்னே காட்ட..
அதில் ராஜரத்தினம் ஒரு குடிசை வீட்டின் நடுவே உள்ள தூணில் கட்டப்பட்டு இருந்தான். “உண்மைய சொல்லுடா.. சின்ன பெண் குழந்தைகளை கடத்தி ஏன் சீரழித்த?” என்று கேட்க..
அடிபட்டு ஆங்காங்கே ரத்தமும் வீங்கிய முகமாக காட்சியளித்த ராஜரத்தினம் “எல்லாம் என் மாமன் சுதர்மன் பழிவாங்க தான்” என்றான். அதைக் கேட்டவரோ அதிர்ந்து அந்த வீடியோவையும் எஸ்பியையும் மாறி மாறி பார்த்தார். “முழுசா கேளு” என்று அந்த வீடியோவை ஓட விட்டான்.
“அந்தாளு எங்க அப்பாவை ஏமாத்தி எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதோட அவன் தொழில் மட்டும் பாத்துட்டு இருக்கலாம் இல்ல.. அத விட்டுட்டு என்னையும் சொந்தமா தொழில் பார்க்க விடாமல் அவன் கூடவே வைச்சிகிட்டு எங்க அப்பாவோட அரசியல் வாரிசான என்னை அடுத்த எலக்சனுக்கு நிற்க விடாமல் அவனே நிற்க முடிவு பண்ணினான். அதான் அவனை வச்சு என் தொழிலில் முன்னேற பார்த்தேன். அவன் லாரி சர்வீஸையும் ரிசார்ட்டையும் எனக்கு சாதகமா யூஸ் பண்ணி என்னோட இம்போர்ட் எக்ஸ்போர்ட் பார்ட்னருக்கு அந்த ரிசார்ட்டில் சின் பெண்களை விருந்து வைத்தேன். எனக்கு அதுல நிறைய கொள்ளை கொள்ளையா லாபம் வந்தது. நாளைக்கு ஏதாவது மாட்டுனா கண்டிப்பா என் பெயர் வெளியில் வராது என்று நினைத்து தான் இதை நான் செஞ்சேன் ஆனா நீ எப்படியோ கண்டுபிடிச்சிட்ட… இனி என்னை கொன்னாலும் எனக்கு சுதர்மன பழி வாங்கிட்ட சந்தோஷம் என்னைக்குமே இருக்கும்” என்று வெறி கொண்டவன் போல் அவன் சிரிக்க.. அதை பார்த்த சுதர்மனுக்கு பேச்சு எழவில்லை. தானே ஒரு நச்சு பாம்புக்கு பால் வார்த்தது புரிந்தது. தான் செய்த தவறுகளுக்கு இந்த தண்டனை தேவைதான் என்று அமைதியாக ஏற்றுக் கொண்டார்.
” ராஜரத்தினம்..” என்று அவர் இழுக்க..
“அவனுக்கு பால் ஊத்தியாச்சு” என்று அவ்விடம் விட்டு சென்றான் எஸ்பி..
“சார்.. அவனை என்ன சார் பண்ணுனீங்க?” என்று ஆர்வமாக அரசு கேட்க..
“இந்த வீடியோவை முழுசா பாருங்க” என்று அவன் கையில் கொடுத்துவிட்டு சென்றான் எஸ் பி. அதில் வெறிகொண்டு சிரித்த ராஜரத்தினத்தை புல் அறுக்கும் அருவாள் எடுத்துக்கொண்டு நெருங்கினான் மாரி.
மாலினியின் தந்தையே தான். அவன் கதறக்கதற.. வலியில் துடிக்க துடிக்க.. முதலில் அவனது மர்மவுறுப்பை வெட்டி எறிந்தவன், அவனை உயிருடன் வைத்துக்கொண்டே உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றையும் வயிற்றைக் கிழித்து எடுத்து தூக்கி எறிந்தான். பின் ரத்தம் ஓட கிடந்தவனை தூக்கிச்சென்று நரிகள் நடமாடும் காட்டுப்பகுதியில் போட.. அங்கே நரிகளின் ஊளையோடு.. ராஜரத்தினத்தின் மரண ஓலம் கேட்டது. இதை பார்த்த அரசுவுக்கு மனம் நிம்மதியாக இருந்தது.
அன்று வழக்கம் போல் காவல் நிலையத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்த எஸ்பியின் முன்னால் வந்து நின்றார் வாசுகி.
“என்னமா..” என்றவாறே கண்ணாடி முன் நின்று தனது யூனிபார்மை அவன் சரி செய்துகொண்டிருக்க..
“நாளைக்கு பொண்ணு பார்க்க போறோம் உனக்கு.. ரெடியா இரு” என்று அவர் சொல்லி விட்டுப் போக..
“அதெல்லாம் முடியவே முடியாது எனக்கு ரொம்ப வேலை இருக்கு. அதுவுமில்லாம எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமில்லை..” என்று அவன் மறுத்தான்.
“ஓ அப்படியா?? அப்போ அந்த பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க சொல்லிடுறேன்” என்று கதவருகில் சென்றவர், திரும்பி அவனைப்பார்த்து “பொண்ணு பேரு திவ்யபாரதி ஐயப்பன்” என்று விட்டு செல்ல..
“என்னது??” என்று தலைவாரி கொண்டிருந்த அவனது கை அந்தரத்திலேயே நிற்க..
“அய்யோ அம்மா என் தெய்வமே!! அன்னை ஓர் ஆலயம்!! அம்மா” என்று அழைத்தவாறு பின்னே ஓடினான் எஸ்பி..
27
“அம்மா!! தாயே!! என் குல தெய்வமே!!
அன்னை ஓர் ஆலயம்!!” என்று வரிசையாக தமிழ் திரைப்பட பெயர்களாக கூறிக்கொண்டு பின்னே வந்தவனை சிறிதும் கண்டுக் கொள்ளாமல், தன் அறைக்கு சென்றார்.
மிக மிகச் சிரத்தையாக தன் கப்போர்டில் உள்ள புடவைகளை.. அதுவும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புடவைகளை மீண்டும் எடுத்து அவர் மடிக்க ஆரம்பித்தார், இவனோ அவர் புடவை முந்தானையை பிடித்து “ம்மா.. ம்மா” என்று கூப்பிட.. சற்றும் அசைந்தார் இல்லை. பின் அங்கிருந்து சமையலறை செல்ல, அங்கும் பின்னோடு சென்றான். அப்போது கம்பனிக்கு செல்ல தயாராகி வெளிவந்த சந்திரபிரகாஷ் இதை கண்டு நம்ப முடியாமல், தன் கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்த்தார்.
கணவனை கண்டதும் அவருக்கு சாப்பாடு எடுத்து வைக்க செல்ல… “ம்மா.. வாசு.. வாசுகி.. எவ்வளவு நேரமா பின்னாடியே சுத்துறேன், கொஞ்சமாவது கண்டுக்கிறிங்களா?” என்று அவன் காலை உதறி கொண்டு சிறு பிள்ளை போல கேட்க.. அவரோ தன் கணவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தார்.
“நான் இங்கே கூப்பிட்டு கிட்டு இருக்கேன்.. இப்போ அவருக்கு சாப்பாடு ரொம்ப முக்கியமா?” என்று அவர் முன்னால் வைத்திருந்த தட்டை இவன் பிடுங்க, வாசுகியோ அந்த பக்கம் பிடுங்கி, “இப்படி தானே டா.. நான் அப்போ உன் பின்னாடி சுத்துனேன்.. பத்தாக்குறைக்கு கோவில் கோவிலா வேற சுத்தினேன்” என்று கூற..
அவனோ மீண்டும் தட்டை தன் பக்கம் பிடுங்கி, ” அதுக்கு இப்போ என்னை பழி வாங்குவிங்களா?” என்று முறைத்துக் கொண்டே கேட்க..
“நான் ஏன்டா உன்னை பழி வாங்க போறேன்.. என் வலியை உனக்கு புரிய வைச்சேன்” என்று ஆதங்கத்துடன் பேசியவாறு தட்டை அவர் பக்கம் பிடுங்க..
“நீங்க ஏறி இறங்கிய கோவில் தான் இப்போ உங்களுக்கு அருள்புரிந்திருக்கு” என்று அபிநயத்துடன் கூறி தட்டை பிடுங்க..
“இப்போ கூட நீயா சொல்லலைல.. நானாகத்தான் யூகித்தேன். உனக்கு அவ்வளோ தான் டா அம்மா மேல பாசம்” என்று அவர் தட்டை பிடுங்கியவாரே முந்தானையில் மூக்கை உறிஞ்ச..
“அம்மா.. என்ன மா நீங்க.. வேலை கொஞ்சம் இழுத்திடுச்சுமா.. உங்ககிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப்போறேனாம்” என்று அன்னையை அணைத்து ஆறுதல் கூற.. அங்கே தட்டும், அவன் அப்பாவும் கேட்பாரின்றி கிடந்தனர்.
மகன் சமாதானம் செய்தததும் அதற்கு மேல கோபத்தை பிடித்து வைக்க தெரியாத வழக்கமான தாயுள்ளம் மேல் எலும்ப.. “உன் கல்யாணத்தை நான் எவ்வளவு ஆசை ஆசையாய் எதிர்பார்த்தேன்.. ஒரு வார்த்தை நீ என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல” என்றும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அவர் பேச, அவள் தாடையை பற்றி தன் முகம் பார்க்க வைத்து “உங்க மருமகளால் தான் இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வந்தது. அதை எல்லாம் முடிச்சுட்டு டென்ஷன் இல்லாம உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லலாம் தான் நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே கண்டுபிடிச்சீங்க.. பாருங்க போலீஸ்காரன் அம்மான்னா சும்மாவா?” என்று இடது கையால் அன்னையை அணைத்து கொண்டு வலது கையால் அவன் மீசையை முறுக்கி விட..
“போடா போடா.. உன்னையும் பார்த்துட்டேன்.. உங்க அப்பனையும் பாத்துட்டேன்.. உங்களுக்கெல்லாம் காரியம் ஆகணும்னா மட்டும்தான் அந்த அம்மா தேவை அப்புறம் எல்லாம் கண்டுக்கவே மாட்டிங்க” என்று அவன் கன்னத்தில் தட்ட..
“ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்.. அம்மாவ வாங்க முடியுமா? அதுவும் என் அம்மாவை போல ஒரு அம்மாவை வாங்க முடியுமா?” என்று அவர் தாடையை விரல்களால் பற்றி இங்கும் அங்கும் ஆட்டியபடியே அவன் பாட.. உச்சி குளிர்ந்து போனது வாசுகிக்கு. சிறுவயதிலிருந்தே சூரியபிரகாஷ் அன்னையின் பிள்ளைதான்!! எது வேண்டுமானாலும் அன்னையை கெஞ்சி கொஞ்சி தன் காரியத்தை நடத்தி கொள்பவன். பிள்ளைகள் வளர வளர அன்னையிடம் இருக்கும் ஒட்டுதல் பின் நண்பர்களிடமும் அதற்குப் பின் அவர்களது வேலையிடமும் மாறிவிடும். அதுவும் இவன் காவல்துறைக்கு தான் செல்ல வேண்டும் என்று முதலிலேயே தீர்மானித்து விட்டதால் அதற்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திக் கொள்வதில் அன்னையை கூட டீலில் விட்டு இருந்தான்.
“சரி சரி வா சாப்பிடலாம்” என்று அவனை அழைத்து வந்து டேபிளில் அமர வைத்து பரிமாற, இருவருக்கும் அப்போதுதான் அங்கே ஒரு ஜீவன் இருப்பது ஞாபகம் வந்தது.
இவர்கள் அலப்பைறையால் தட்டில் இருந்த
சாம்பார் எல்லாம் சந்திர பிரகாஷ் மீது அபிஷேகம் செய்யப்பட்டு அவர் ‘சாம்பார் பிரகாஷாக’ அமர்ந்திருந்தார்.
இவர்கள் இருவருக்கும் பேச்சு சுவாரஸ்யத்தில் அது கண்ணிலோ கருத்திலோ படவே இல்லை. “என்னங்க இது? சாம்பார் புடிச்சிருந்தா முக்கி குடிப்பாங்க கேள்விப்பட்டிருக்கேன.. இப்படி குளிப்பத நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன்.. அவ்வளவு நல்லாவா இருக்குது நான் வைச்ச சாம்பார்?” வாசுகி ஆச்சரியமாகவே வாயில் கைவைத்து கேட்க..
“ஆனாலும்.. அப்பா உங்க பொண்டாட்டி மேல நீங்கள் வைத்த பாசத்தை எண்ணி நான் வியக்கேன்!!” என்று அவனும் சிரிக்காமல் கூற இருவரையும் முறைத்து பார்த்தவர், “ஏண்டா இங்க ஒருத்தன் உட்கார்ந்திருந்தானு கொஞ்சமாவது ரெண்டு பேரும் கண்டுக்கிட்டீங்களா.. என்னை நடுவுல வச்சு ரெண்டு பேரும் தட்டை கயிறு இழுக்கும் போட்டியில் இழுக்குறவன் மாறி மாறி இழுத்து, என் தலைல சாம்பார கொட்டிட்டு இப்போ என்னையே நக்கல் பண்றீங்க” என்று சந்திரபிரகாஷ் உறும..
“அய்யோ.. சாரிங்க.. புள்ளகிட்ட பேசிக்கிட்டு இருந்ததுல உங்களை மறந்துட்டேன்” என்று வழக்கமான அம்மா போல பேசிய வாசுகி, அவர் அருகே சென்று தனது புடவையாலேயே சாம்பாரை துடைக்க.. “ஏண்டி எதாவுது டவுல் எடுத்து துடைக்க வேண்டியதுதானே? எப்படி புடவையிலையா துடைப்ப?” என்று கேட்க..
“உங்கள விட இந்த புடவையா முக்கியம்” என்று அவர் துடைப்பதில் கவனமாக.. ‘இதுக்கு எத்தனை புடவைக்கு கேட்க போறாளோ?’ என்று மனதினுள் நினைத்துக்கொண்டே அவரும் மனைவியிடம் கவனமாகி விட..
தட்டில் இட்லியை மட்டும் வைத்து பார்த்துக் கொண்டிருந்த சூர்யபிரகாஷ் “இந்த வெறும் இட்லியை சாப்பிடுவதா? இல்லை போவதா?” என்று சிறிது நேரம் குழம்பியவன், நாம ஹோட்டலிலேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டான். “எனக்கும் பொண்டாட்டி வருவா.. நாங்களும் சாம்பருல ரொமான்ஸ் பண்ணுவோம்” என்று சத்தமாக கூறிவிட்டே சென்றான்.
28
பிறகு ஒரு நல்ல நாளில் வாசுகியும் சந்திரப் பிரகாஷூம் ஐயப்பன் வீட்டுக்கு சென்று திவ்யபாரதியை பெண் கேட்டனர். ஏற்கனவே வாசுகியின் குணத்தை தெரிந்த ரத்னாவுக்கு அவர்களின் செல்வ நிலையும் ஐயப்பன் மூலம் தெரிய வர வியப்பில் வார்த்தை வரவே இல்லை. ஐயப்பனுக்கு ஏக சந்தோசம் சூரியபிரகாஷ் மாப்பிள்ளையாக வருவது.
யாருக்கு கிடைக்கும் இது போல ஒரு மாப்பிள்ளை என்று பார்ப்பவரிடம் எல்லாம் தனது மாப்பிள்ளையின் அருமை பெருமைகளை எடுத்துக் கூற தவறுவதே இல்லை ஐயப்பன்.
ஒரு காதல் திருமணத்தை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போல மாற்றிவிட்டார் வாசுகி. பையனின் அறிவுரையால்..
நான்காம் ஆண்டு முதல் செமஸ்டர் நடந்துகொண்டிருக்க எக்ஸாம் முடிந்தவுடன் திருமணம் என்று ஏகமனதாக எல்லோரும் முடிவு செய்தனர். அதனால் எப்பொழுதும் திவ்யபாரதி சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. படிக்கிறேன் என்ற பெயரில் அலப்பறைகள் செய்துகொண்டும் அவளை ஒட்டிக்கொண்டும்.. அந்த ஒரு மாதமும் எஸ்பிஐ அவளால் கண்ணால் நேரில் காண முடியவில்லை எப்பொழுதும் இரவில் வீடியோ கால் மட்டுமே..
அவனும் தனக்கு இருக்கும் மற்ற கேஸ்களை எல்லாம் முடித்துவிட்டு ஃப்ரீயாக விடுகிறேன் என்று அவளை தொந்தரவு செய்யவில்லை.
இப்படியாக நாட்கள் செல்ல திருமணத்துக்கு முதல் நாள் இந்த ஐவர் குழு திவ்யபாரதி அறையில் கூடி இருந்தது.. கூடவே நிரஞ்சனாவும்!!
“போ திவி உன் கல்யாணத்துல ஒரு திரில்லிங் இல்ல.. சுத்த போரிங்கா இருக்கு” என்று விபாகர் கூற..
“ஏன்டா?” என்று சிரித்துக்கொண்டே திவ்யா கேட்க..
“பின்ன ஒரு லவ் மேரேஜ்னா.. ரெண்டு மூணு சண்டை.. நாலு அஞ்சு எதிர்ப்பு.. அஞ்சு ஆறு ரேசிங்.. ஏழு எட்டு சேசிங்.. இப்படி எல்லாம் இருந்தால் தானே என்ஜாய் பண்ண முடியும்” என்று ஈக்னேஷ் கூற..
“ஆமா பா.. ஒரு கடத்தல் கூட இல்லை” என்று சாந்தினி சிரித்தாள்.
“டேய் நானே கல்யாணம் நல்லபடியா நடக்கணும் வேண்டிக்கிட்டு இருக்கேன். அத்தைக்கு விஷயம் தெரிய கூடாதென பக்கு பக்குன்னு ஒக்காந்து இருக்கேன். உங்களுக்கு எல்லாம் போரிங்கா இருக்கா டா” என்று கர்ணா புலம்பினான். பின்னே அவன் தானே இவர்கள் இரண்டு பேர் செய்த கள்ளத்தனத்திற்கு எல்லாம் துணை நின்றது. விஷயம் தெரியவந்தால் ரத்னாவின் அம்மா என்னவோ தொடப்பக்கட்டை பூஜை மட்டும் தான் செய்வார்.. ஆனால் கர்ணாவின் அம்மாவோ அதற்கு மேல்.. அந்த பயம் இருக்கும் தானே!!
நிரஞ்சனா அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு சிரித்தவள்.. “எனக்கு இப்ப எங்க அக்கா மேரேஜ் நியாபகம் வருது டா” என்றாள் ஒற்றை கண்டித்து.. “அடிங்க.. போடி.. போ.. இந்த கல்யாணத்துல எல்லாம் அந்த சீன் கிடையவே கிடையாது மா.. மாப்பிள்ளை இங்கே தான் இருப்பார் யாரும் கடத்தலாம் மாட்டாங்க” என்று திவ்யா வரிந்துகட்டிக்கொண்டு நிரஞ்சனாவிடம் பேச..
பார்த்த அனைவருக்கும் திவ்யபாரதி சூரியபிரகாஷ் வைத்திருந்த அழமான அன்பு அதீத காதல் புரிந்தது. அதேசமயம் மணமகளாக அடக்க ஒடுக்கமாக அமராமல் குழாயடி சண்டை செல்வது போலவே வரிந்து கட்டிக் கொண்டு நிற்பளை பார்த்தவர்களுக்கு சிரிப்பு வர அனைவரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க அதேநேரம் திவ்யாவின் தலையில் டங்கு என்று ஒரு சத்தம் கேட்டது..
வேறு யார் ரத்னா தான்!!
“ஏண்டி பொண்ணா லட்சணமா அமைதியாக உட்காரமா? என்னடி இது?.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் உன்னை பாக்குறதுக்கு வந்துட்டு போயிட்டு இருக்காங்க. இப்ப போய் இப்படி நிக்கிறா பாரு” என்று அவளை திட்டிவிட்டு, “ஏன்பா நீங்களும் சேர்ந்து சிரிச்சுகிட்டே இருக்கீங்க கொஞ்சமாச்சும் சொல்றது தானே” என்று அவர்களயும் திட்டி விட்டே சென்றார்.
ஐவரையும் இவர் கோபத்தோடு பார்க்க..
“டேய் குண்டா.. ஒல்லி பெல்லி மாப்ள சார் நமக்கு பேச்சுலர் பார்ட்டி தராராம்.. வாங்க நாம போகலாம்” என்று விபாகர் இருவரையும் அழைத்துக்கொண்டு எஸ் ஆனான்.
“சேம் பேச்சுலர் பார்ட்டி டி” என்று சாந்தினி மறுபடியும் சிரிக்க..
இம்முறை திவ்யாவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை அவர்களுடன் சேர்ந்து அவளும் சிரித்தாள்.
இவர்களுக்கு ரிசப்ஷன் முதல் நாள் ரிஷப்சன் வைக்கவில்லை. போன தடவை ஏதோ கல்யாணம் தடைப்பட்டதால் வாசுகி அதை அனுமதிக்கவில்லை. அதற்கு பதில் முதல் நாள் இரவு தான் நிச்சயதாம்பூலம் மறுநாள் திருமணம்.. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து ரிசப்ஷன் விமர்சையாக வைத்துக் கொள்ளலாம் என்று முடித்து விட்டார்.
நள்ளிரவு நேரம் 12 மணி போல் திவ்யாவின் போன் ஒலிக்க எடுத்துப் பார்த்தால் எஸ்பி தான்!!
“மொட்டை மாடிக்கு வா” என்று கூறிவிட்டு வைத்துவிட்டான் எஸ்பி.
பதுமையென நடந்து வந்தவளை இரு கைகளை கட்டிக்கொண்டு மாடி ஓரத்தில் சாய்ந்து நின்றவாறு ரசித்துக் கொண்டிருந்தான் சூரிய பிரகாஷ்.
மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து பாதம் நோகுமோ இல்லை தரை நோகுமோ என்று மெதுவாக நடந்து வந்தவளை பார்க்க பார்க்க எஸ்பிக்கு.. இவளுக்கு இவ்வளவு மென்மையாக நடக்க வருமோ என்று அதிசயத்தைப் பார்த்தான்.
இருட்டிய நிலவொளியில் பாவையவள் அழகினை அவனின் கண்கள் மேய..
இடையோடு இழுத்தவனின் கரங்கள் அவளது வழுவழுப்பான பிரதேசத்தில் ஊற..
இரும்பை இளக்கும் இன்னிசை
கீதமாய் அவள் இருக்க..
இணையில்லா இந்த சுகத்தில் சுகமாய் அவன் மனம் மயங்கியது.
மெல்ல குனிந்து அவளது கன்னத்தில் முத்தம் பதித்தான் எஸ்பி.
“யாரும் உங்களை டெரர் போலீஸ்னு இனி சொல்ல மாட்டாங்க மச்சான்.. அவ்வளோ ரொமான்ஸ் மன்னனா மாறிட்டிங்க” என்று அவனின் அணைப்புக்குள் இருந்தவாறு அவள் கூற..
ஆடையில்லா இடையில் அவனது கைகள் அழுத்தமாக படிய.. உதடுகள் கடித்து தன் நாண சிவப்பை மறைத்தாள் திவ்யா.
“ரதி” என்று கிசுகிசுப்பாக எஸ்பி அழைக்க..
அவளுக்கு ஏதோ கனவிலிருந்து அழைப்பது போலவே இருந்தது. விழிப்பும் இல்லாத.. உறக்கமும் இல்லாத ஏதோ ஒரு பரவச நிலையில் இருப்பது போலவே திவ்யா உணர்ந்தாள். அவனது கைகளோ அவளது உடலில் அத்துமீறி பிரவேசிக்க.. தடுக்க நினைத்தாலும் தடுக்க இயலா நிலையில் அவள்!!
“பிரகாஷ்” என்ற மென்மையாக அழைத்து அவனது கைகளுக்கு தடா போட..
யாரும் அழைக்காத புதுவிதமாக அவள் அழைத்ததில் அவனுக்கு இன்னும் அவள் மீதான தாபம் கூடியதே தவிர குறையவே இல்லை. எஸ்பிக்கு அந்த நொடியில் உலகையே வென்றது ஒரு பிரமை.. இவ்வளவு நாட்களாக அடிமனதில் இல்லாத காதலை பிரவாகமாக ஊற்றெடுக்க வைத்தவள் அவள்!! இனி நாளை முதல் தன்னவள்!! எனக்கே எனக்கு மட்டுமாய்!!
அந்த நினைவு அவனுக்கு புதுவித உணர்வுகளை தூண்டி விட.. தடையாய் இருந்த அவளது கரங்களை தடுத்து.. அவளது எதிர்ப்புகளை எல்லாம் படிப்படியாக தகர்த்து எறிய முனைந்தான். இருள் சூழ்ந்திருந்த அந்த நேரம் அவர்களின் தனிமைக்கு இனிமை சேர்க்க.. அவர்களின் உடல் இணைப்பு மட்டுமல்ல இதழணைப்பும் இன்னும் இன்னும் இறுகியது. மலரிதழில் தேனை உறிஞ்சி எடுத்தான் வண்டென தனது முரட்டு இதழ்களால்..
அப்போது மாடி ஓரத்திலிருந்து “சூர்யா” என்று அழைப்பு வர..
அவளோ அந்த அழைப்பில் அவனிடமிருந்து பிரிய.. “ம்ப்ச் ஏன்டி?” என்று கோபப்பட்டு அவன் திரும்பவும் அவளை இழுத்து இதழ்களுக்கு அச்சாரமிட முனைய..
திரும்பவும் “சூர்யா” என்ற அழைப்பு வந்தது.
“ஏங்க மாமாங்க” என்று அவள் பதறி அவனிடமிருந்து பிரிந்து நின்றாள்.
“ஏய் எனக்கு மாமா எல்லாம் கிடையாது டி” என்றவன் அவளிடம் நெருங்க முயல..
“ஐயோ உங்க மாமா இல்ல.. என் மாமா!! என் மாமனார்!! உங்க அப்பா!!” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டாள்.
‘அன்னைக்கு எங்க அம்மா இன்னிக்கு எங்க அப்பா கரடி ஃபேமிலி டி’ என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்ள அது தெளிவாக திவ்யா காதில் விழ, அவளோ கைகளால் வாயை பொத்தி சிரித்துக்கொண்டாள்.
திரும்பவும் “சூர்யா” என்ற அழைப்பு வர..
“இங்கதான் இருக்கேன்.. வாங்க வாங்க” என்று பற்களைக் கடித்தபடி தந்தையை அழைத்தான்.
பின் மெல்ல படி ஏறி வந்தவர் மருமகள் அருகே இருப்பதை பார்த்து ஒரு புன்னகையை அவளுக்குக் கொடுத்துவிட்டு..
“தம்பி நேரமாச்சு.. நேரத்தோட படுத்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியும். விடியகாலை முகூர்த்தம் வேற” என்று அவனுக்கு நினைவு படுத்தினார்.
“இதோட 583” என்று அவன் கூற, புரியாமல் பார்த்தவரை, “சாயந்திரத்தில் 583 தடவை என்கிட்ட நீங்க சொல்லிட்டீங்க.. நான் என்ன சின்ன பிள்ளையா திரும்பத் திரும்ப இதையே சொல்றதுக்கு.. போங்க போங்க நான் வந்துட்டுறேன்” என்று அவன் சலித்துக்கொள்ள..
“வெரி சாரி தம்பி.. உங்க அம்மா என்னை உனக்கு காவலுக்கு வெச்சு இருக்கா” என்று அவர் பெரு மூச்சு விட்டார்.
பின்னே சொந்தங்கள் எல்லாம் வந்து இருக்கும்போது அவர்களுடன் சிரித்து பேசி.. பால்ய நண்பர்களுடன் அரட்டை கச்சேரி வைத்து.. பேச்சிலர் பார்ட்டி போல இவர்கள் தனியாக ஒதுங்கி தண்ணி பார்ட்டி வைக்கலாம் என்று பலவித கனவுகளுடன் இருந்தவரை மகன் கூடவே இருந்து மகனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு வாசுகி கட்டளையிட, உள்ளுக்குள் புகைந்து கொண்டாலும், வெளியே சரி என்று பெரிதாக தலை ஆட்டி விட்டு வந்து விட்டார். அந்த வருத்தம் தான்!!
“காவல? எதுக்கு எனக்கு? காவலனுக்கு காவலா?” என்று அவன் சிரிக்க..
அருகிலிருக்கும் திவ்யாவை அவர் சங்கடமாக பார்க்க.. “பரவால்ல சொல்லுங்கப்பா என் எல்லா விஷயமும் அவளுக்கும் தெரியும்” என்று எஸ்பி கூறினான்.
“அதில்லடா மகனே.. போன தடவை இப்படித்தான் உங்க அம்மா உன்னை தனியா படுக்க வைத்துவிட்டு காலையில் கல்யாணத்தின்போது பார்த்தா உன்ன காணோம். அந்த மாதிரி அசம்பாவிதம் இந்த தடவை நடக்கக்கூடாது என்று என்னையும் உன் கூடவே காவலுக்கு இருக்க வைத்து இருக்கா” என்று கூற..
அன்றைய நாளில் நினைவில் திவ்யாவும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் உதட்டை கடித்துக்கொண்டு தலை குனிந்து நிற்க.
அவளது கன்னச் சதைகள் அசைந்ததிலேயே அவள் சிரிக்கிறாள் என்று புரிந்துகொண்ட எஸ்பி தன் அப்பாவை கோபமாக முறைத்து..
“அப்படி எல்லாம் இந்த தடவை போக மாட்டேன்.. கவலைப்படாதீங்க!! அப்படி என்னை யாரு கடத்திட்டு போக போறாங்க, உங்க மருமகள் இருக்கும்போது?” என்று நக்கலாக திவ்யாவைப் பார்த்து கூற.. அவளும் அதிர்ந்து அவனை பார்த்து திருதிருவென முழித்தாள்.
“நாளையிலிருந்து உன்னை பாதுகாக்கிற பொறுப்பு என் மருமகளுக்கு!! அதுவரைக்கும் நான் தானே பாக்கணும். சரி சரி வா போகலாம்” என்று அதற்கு மேல் அவனை விடாமல் கையோடு அழைத்து சென்றார் சந்திரபிரகாஷ், முன்னே திவ்யாவை நடக்க விட்டு..
“வட போச்சே” என்று எண்ணியப்படி பெரு மூச்சு விட்டவாறு திவ்யாவை பின்தொடர்ந்தான் சூரியபிரகாஷ்!!
சூர்ய பிரகாஷ் வெட்ஸ் திவ்யபாரதி
29
சூர்ய பிரகாஷ் வெட்ஸ் திவ்யபாரதி!!
வெண்ணிற ஆர்கிட் மலர்கள் பின்னணியில் இளம் ரோஜா நிற மலர்களால் இவர்களது பெயர் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தில் மணமேடையில் வெண் பட்டு வேஷ்டியில் கந்தர்வன் என அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை திரும்ப கூறிக்கொண்டு மாப்பிள்ளை மிடுக்கோடு அமர்ந்திருந்தான் சூரிய பிரகாஷ்.
வழக்கமான அய்யரின் ‘பெண்ணை அழைத்து வாங்கோ’ என்ற குரலில் தாமரைப்பட்டில் நடக்கும் தாமரை பூவாய் அழகே உருவாக… இந்த கந்தர்வனுக்கு ஏற்ற காந்த ரூபிணியாக அவனருகில் திவ்யபாரதி அமர.. பெற்றோர்களின் மனம் நிறைந்த ஆசிர்வாதத்தோடும்.. நண்பர்களின் சந்தோஷ கூச்சலோடும்.. சொந்த பந்தங்களின் வாழ்த்துக்களோடும் திவ்யபாரதி சங்கு கழுத்தில் மங்கள நாணை பூட்டி தன் இணையாக ஏற்று அவளின் சரிபாதியாக மாறினான் சூரிய பிரகாஷ்.
இந்த காட்சியை காண தவமிருந்த வாசுகிக்கு ஆனந்தத்தில் கண்ணீர் பெருக்கெடுத்து வர அருகிலிருந்த சந்திரபிரகாஷ் அவரை தோளோடு அணைத்து ஆறுதல் வழங்கினார்.
மணமேடை என்றும் பாராமல் தன் அருகில் அமர்ந்திருந்த திவ்யாவை நோக்கி தனது வலது கரத்தை எஸ்பி நீட்ட.. எதற்கு என்று புரியாவிடினும் சற்றும் தாமதிக்காமல் தனது வலது கரத்தை அவனது கரத்தோடு திவ்யபாரதி பிணைக்க..
“வாழ்த்துக்கள் மிஸஸ் சூரியபிரகாஷ்!!” என்றான் எஸ்பி..
அவளோ கள்ள கோபத்தோடு அவனை முறைத்துவிட்டு புன்னகையோடு திரும்பி அவனது கரத்தை பலமாக தனது இரண்டு கைகளாலும் பற்றி.. “உங்களுக்கும் வாழ்த்துக்கள் மிஸ்டர் திவ்யபாரதி” என்றாள்
சிரிப்போடு..
ரத்னாவிற்கும் ஐயப்பனுக்கும் இந்த காட்சியை காணும் போது மனதுக்கு அவ்வளவு நெகிழ்வாக இருந்தது. பின்னே மகளின் குறும்புத்தனத்தை அறிந்தவர்கள் அல்லவா அதன் எல்லையையும் புரிந்தவர்கள்.. எங்கே இவளது துடுக்குத்தனத்தை புகுந்த வீட்டில் காட்டினால் பிரச்சினை ஆகி விடுமோ என்று எவ்வளவு நாள் மகளுக்கு தெரியாமல் கண்ணீர் வடித்திருப்பார் ரத்னா.. இன்று அது எல்லாம் ஆனந்த கண்ணீராக மாற்றிய பெருமை சூரிய பிரகாஷூகும் அவன் குடும்பத்திற்கும் மட்டுமே உரியது.. இதுவரை மருமகனாக பாவித்து சூரியபிரகாஷ் ஒரு படி மேலே ஏறி மகனாகவே பதிந்தான் ரத்னாவின் மனதில்..
பெற்றோரிடம் ஆசி வாங்கிய பின் மற்ற சடங்குகள் நடக்க.. ஆண்கள் கூட்டம் பிரகாஷின் பின்னும் பெண்கள் திவ்யாவின் பின் நின்றுகொண்டு சரிக்கு சரியாக அவர்களை குஷிப்படுத்தி சடங்குகளை போட்டியாக மாற்றிக் கொண்டு இருந்தனர்.
பெரியவர்களும் சிறியவர்களின் இந்த ஆனந்தக் களிப்பை மகிழ்ச்சியோடு பார்த்தவாறு நின்று இருந்தனர்.
அதற்குப்பின் போட்டோ ஷூட் என்ற பெயரில் இவர்கள் இருவரை நிற்க வைத்து எடுத்தார்களோ இல்லையோ ஐவர் குழு விதவிதமாக மணமக்களுடன் ஒரு ஆல்பமாக போடும் அளவுக்கு போட்டோ எடுத்து தள்ளியது!!
இதில் நொந்து நூடுல்ஸ் ஆன திவ்யா, “என் கல்யாணத்துல நீங்க எல்லாம் என்னென்ன லூட்டி பண்ணினீங்களா அதைவிட பத்து மடங்கு உங்க கல்யாணத்த அடிக்காம இருக்க மாட்டேன் டா” என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.
அதற்கு சிறிதும் அலட்டிக்கொள்ளாத அவர்கள் “வி ஆர் வெயிட்டிங்” என்று சத்தமாக அந்த கல்யாண மண்டபமே அதிர கத்தினர். சத்யபிரகாஷ் கண்களில் காதலோடும் முகத்தில் வசீகர புன்னகையுடன் இதையெல்லாம் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.
வாசுகிக்கு அன்றைய ரிசப்ஷனில் மகனின் முகத்திற்கும் இன்று உள்ள மகனின் சந்தோசம் சிரிப்பையும் பார்த்தவருக்கு மனதினில் பெருத்த நிம்மதி. இதைத்தானே அவர் எதிர்பார்த்தது!!
அதன்பின் திவ்யபாரதி வீட்டிற்கு சென்றுவிட்டு.. சூரிய பிரகாஷின் வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து தன் இணையோடு உள் நுழைந்தாள் திவ்யா மனம் நிறைய சந்தோஷமாக!!
அன்றைய இரவு அவர்களுக்கான தனிமையை கொடுத்து அனைவரும் சென்று விட…
தன்னவளை அழைத்துக்கொண்டு அவர்கள் அறையிலிருந்து பால்கனியில் சென்று நின்றான் எஸ்பி.
“இப்படி ஒரு நாள் என் வாழ்வில் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை ரதி மா” என்று அவளை பின்னிருந்து அணைத்தவாறு சூரிய பிரகாஷ் கூறினான் காதலாக..
அதன்பின் தன் மனதில் உள்ள காதலை அனைத்தையும் உருக்கும் குரலில் அவன் கூற, “ம்ம்” என்ற வார்த்தையை தவிர வேறில்லை பெண்ணவளிடம்.. பின்னே அவன் தொட்டால் தான் இவள் குழைந்து விடுகிறாளே!! பின் எங்கணம் அவ்வார்த்தைகள் எல்லாம் அவள் காது வழி பயணித்து மூளையை சென்று அடைய!!
அவளை இறுக்கி அணைத்தப்படி அவள் காதினுள் அவன் பேச பேச..
அவனுள் புதைந்த நின்ற அவளின் செல்கள் எல்லாம் தாபம் ஏற்றி வெம்மையை கூட்ட.. அதைத் தணிக்க அவனின் ஈர உதடுகள் அவளது வெற்று முதுகில் பயணிக்க..
அவனது கரங்கள் அவளது உடலில் அத்துமீறி பிரவேசிக்க..
அவள் அறியா பலவித உணர்வுகளை
அவனது தீண்டல் தூண்ட..
காதோரம் உரசிய அவனது கற்றை மீசையின் குறுகுறுப்பில் அவள் தன் நிலை மறந்திட..
அந்நிலையை தனக்கு சாதகமாக்கியவன் அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டு மஞ்சத்தில் வஞ்சியவளை கிடத்தி, அவளது நெஞ்சத்தை தஞ்சமடைந்தான்.
எஸ்பியின் முரட்டு கால்களோ அவளின் முயல் குட்டியை போன்ற மென்மையான கால்களை ஆலிங்கனம் செய்தது.
அவன் பாதங்களினால் அவளின் பாதங்களில் கோலமிட அதில் கிறங்கிப் தவித்தாள் பெண்ணவள். அவனை சட்டை காலரை இறுக்கமாக பற்றி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள.. அந்தக் கள்வனோ இன்னும் அவளை தன்னோடு அணைத்தவனது கைகள் அவள் அங்கங்களில் விளையாடியது.
அவள் உடலின் முப்பரிமாண திரட்சியை தனது கைகளால் சோதனையிட, உடல் மறைத்த ஆடை அதுக்கு தடையாய் இருக்க..
தடையாய் தகர்த்தலானான்.
அவனது தகர்த்தலில் அவளின் உடையை போல, அவளது உடலும் அவனிடம் நெகிழ..
அவளது இதழை இவன் கவ்வி பிடிக்க.. பலநாள் பட்டினி கண்டவன் போல அவளது இதழ் அமுதத்தை அவன் பருகி தேவனாக முனைய.. அவனது அதரங்களோ அரக்கனாக அவள் அதரங்களிடம் சண்டையிட்டு கொண்டே இருந்தது.
அவள் மூச்சுக்காற்றுக்கு திணறி, அவனது பின்னத்தலையின் முடியை இறுக பற்ற, அதில் இன்னும் கிளர்ந்தவன், இதழரசத்தை விடாமல் பருகினான்.
அவனின் இதழ் அணைப்பில் இவள் முழுவதுமாக கிறங்கி கிடக்க.. அப்போதுதான் உணர்ந்தாள் அவன் மட்டுமே தனக்கு ஆடையாக இருப்பதை!!
மெல்ல அவன் அவளது கழுத்துப்பகுதியில் முகம் புதைத்தவன் நாவினால் சரசமாட..
உடல் முழுவதும் சுகமாக பரவிய அந்த உணர்வை தாங்கமாட்டாமல் மெத்தை விரிப்பை கொத்தாகப் பற்றி அவள் நர்த்தனமாட…
அவனும் அவளது இரு கைகளை தனது தேக்கு மர உடம்பில் படரவிட…
கண்களாலேயே அவளது பூத்துக்குலுங்கும் அங்கங்களை அவன் கபளீகரம் செய்ய..
அந்த பார்வையையே வீச்சை தாங்காதவள் அவனின் கண்களை தன் கரங்களால் மறைக்க, அந்தக் கள்வனோ கண்களால் மறைத்தால் என்ன கைகள் இருக்கிறதே என்று கைகளால் அவளை உணர…
“இப்பெண்மையின் மென்மை எல்லாம் எனக்கு சொந்தமடி” என்று அவளது காதில் சமரசமாக பேசி தனது கைகளின் அழுத்தத்தை அவன் கூட்டிட..
“முரடா.. மெதுவாடா” என்று அவனின் கைகளில் வேகமும் அழுத்தமும் தாங்காமல் தடுக்க முயன்று தோற்று அவள் கிறங்கி முனங்கிட..
அந்த மாயவனோ “கரங்களை தான் கட்டி போடுவாய் இதழ்களை என்ன செய்வாய்” என்றவாறு கரங்கள் பயணித்த இடங்களில் அவன் தன் இதழ்களை இறக்கி பயணிக்க….
“ம்ஹும்… மெதுவா.. முடியல” என்ற அவளது போலி மறுப்புகளை கண்டு கொண்டான் இந்த கள்வன்..
அவன் இதழ்கள் செய்த மாயத்தால் வேறு ஒரு புதிய உலகத்தில் அவள் பயணிக்க.. அவன் காதலிலும் மோகத்திலும் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருந்தாள் பாவைவள். அவள் மேனியில் அவன் இதழ்கள் படாத இடம் இல்லை என்பதாய் போக..
“இதற்கு மேல் தாங்க மாட்டேன் மொத்தமாய் என்னை கொள்ளை கொள்” எனும் விதமாக துடித்தவள், அவனது கேசத்தை இறுக்கப்பற்ற, அவளை மெழுகுகென உருக வைத்தவன் இதழ்களில் மென்மையாக தீண்டி விட்டு “ரதி.. ரதி” என்று ஜெபித்திட…
அதுவரை சாரல் மழை என முத்தங்களால் அவளை கொள்ளை கொண்டவன் அடுத்த நிமிடம் சூறாவளி என அவளை ஆக்கிரமித்திட…
அவளது சிணுங்கல்கள்.. முனகல்கள் வலிகள் எல்லாம் அவனது நெருக்கத்திலும் அவனது இதழ்களிலும் சென்று மறைந்திட…
உணர்ச்சிப் பெருக்கில் அவள் வாயிலிருந்து “மச்சான்.. கொல்லுறடா” என்ற வார்த்தையை மட்டுமே வெளியேறிக் கொண்டிருந்தது.. அவன் நெருக்கம் ஏற்படுத்திய தகிப்பு உடல் முழுவதும் பரவியது சுகந்தமாய்.. அவனின் சூறாவளி வேகம்.. அவன் கண்களில் இருக்கும் மயக்கம்.. அவன் முகம் காட்டும் உணர்வுகள்.. அவனின் சதிராட்டம் என மொத்தமாக அவளை வாரி சுருட்டி இருந்தான் இந்த காவலன் காதலனாய்.. அவனின் வேகம் தாங்காமல் அவன் வெற்று முதுகில் தன் நகக்கண்களைப் பதித்தாள் பேதையவள்..
அவள் உடலில் ஏற்பட்ட திடீர் இன்ப பிரளயத்தில் தேகம் மெல்ல நடுங்க.. அதைத் தாங்க மாட்டாமல் “பிரகாஷ்.. பிரகாஷ்” என்ற அலறியவள், அவனது திரண்ட தோள்களை தனது பற்தடத்தை பதித்தாள். அதில் அவள் சற்று சோர்ந்து போக “ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ் ரதிமா” என்று அவளை கைகளில் அள்ளி முதுகை நீவி விட்டான் ஆணவன்.
அடுத்த நொடி முழுவீச்சில் அவளோடு கலந்தவன் தன் வேட்கையும் வேகமும் தனியும் வரை அவளோடு காதலாடிட..
அவை தணிந்த பின்பே அவளை விட்டு விலகினான். அவளை அள்ளி தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு முத்த மழை பொழிந்தான் கட்டுக்கொள்ளாமல்..
சிறிது நேரம் அவளை அணைத்துக் கொண்டு படுத்து இருந்தவனின் இதழ்கள் அவள் இதழ்களை தீண்டி தீண்டி சுகிக்க..
மீண்டும் ஒரு காதல் ஆட்டம் துவங்கியது.
காலையில் எழுந்தவள் கண்களால் தனது ஆடைகளை தேடி சுழற்ற.. அது எங்கே கண்ணில் பட.. பின்பு போர்வையை தனது ஆடையாக்கி குளியல் அறையில் புகுந்து குளித்துவிட்டு வந்து பார்க்க அப்போதும் எஸ்பி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
முதல் நாள் இரவு அவள் வைத்த இடத்தில் அவளது ஆடைகளை தேட அங்கு வெற்று கபோர்டே அவளை வரவேற்றது.
“இங்குதானே என்னோட அட்ரஸ் எல்லாம் வச்சேன்.. இப்ப எங்க போச்சு?” என்று வெகு மும்முரமாக அவள் யோசிக்க..
“காலையில் எழுந்தவுடன் திவ்யபாரதியின் திவ்ய தரிசனம்” என்று அவளது போர்வையை உருவியபடி அவன் கூற..
“அச்சோ” என்று தனது முகத்தை அவள் மூடிக்கொள்ள.. சிறுது நேரம் அங்கு எந்த சத்தமும் கேட்காமல் இருக்க மெதுவாக அவள் விழிகளைத் திறக்க.. அந்தக் கள்வனோ அவள் எதிரில் இல்லை.
அப்பாடி என்று ஆசுவாசபட அவளை பின்னிருந்து அணைத்தவன்.. அவளது முன்னெழில்களை சோதித்தப்படியே.. “எதையும் அரைகுறையாக கத்துக்க கூடாதாம் ரதிமா.. முழுசா கத்துக்கணுமாம்” என்றான் தாபமாக..
வெற்று தேகங்களின் உரசல் தீக்குச்சி இல்லாமலே மீண்டும் மோகத்தீ பற்றிக்கொள்ள.. அவள் நெஞ்சம் விம்மி தணிந்தது. அவள் முகத்தை மெதுவாக பின் பக்கம் திருப்பி ஆழ்ந்த முத்தமிட.. மீண்டும் ஒரு மொத்த போராட்டம் தொடங்கியது.
கட்டாந்தரை அவன் பஞ்சு மெத்தை ஆக்கிட.. அவளோ அவனைத் தடுக்க “வேண்டாமா?” என்று கேட்டவன் அவளது கழுத்துக்கு அடியில் குறுகுறுப்பூட்டி, விரல்களை அவளது மேனியில் இறக்க.. அவன் இதழ்கள் செய்த ஜாலங்களில் அவள் முனக, அலர் அவள் மேனியில் மெதுவாக பல் தடம் பதிய கடித்தான்.
“வலிக்குது.. கடிக்காதடா” என்று அவள் மெல்ல அவனை அடிக்க.. அவள் கோரிக்கையை ஏற்றவன் பற்களுக்கு பதில் நாவால் செய்கையை மாற்ற இதற்கு அதுவே பரவாயில்லை என்று உருகி தவித்தாள் மாது.
மெது மெதுவாக தன்னவளுக்கு தன்னை உணர்த்தி அதேபோல அவளையும் உணர்ந்து மீண்டும் ஒரு அழகிய சங்கமத்தை படைத்தான் காதலனாக மாறிய காவலன்.
அதன்பின் ஒரு வார காலமும் காதலும் மோகமுமாய் ஓடிட..
இதோ அவர்களது வரவேற்பு விழா!! மிக பிரமாண்டமாய் அதே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அந்த கல்யாண மகாலில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஒரு புறம் இன்னிசைக் கச்சேரிகளில் இவரது நண்பர்கள் குழு பாடலுக்கு நடனம் ஆடுகிறேன் என்று ரகளை செய்து கொண்டிருக்க.. இன்னொருபுறம் மணமான தம்பதிகளுக்கு லைட் மியூசிக் போட்டு நடனமாட செய்திட..
அதில் வாசுகி சந்திரபிரகாஷ் தம்பதியும் ரத்னா ஐயப்பன் தம்பதியும் கர்ணாவின் பெற்றோர்களும் என பெரியோர்களையும் விட்டுவைக்கவில்லை அவர்கள்.. கூடவே மணமக்களையும் அழைத்து ஆட வைக்க.. கசக்குமா என்ன இந்த காதல் மன்னனுக்கு? ஒரு கையால் இடையை பற்றி, மறு கைகளால் அவளோடு ஆடினான் என்பதைவிட அவளை நன்கு ஆட்டி வித்தான் என்பதே சரியாகும். மிகமிக ஆடம்பரமாய் அமர்க்களமாய் ஆர்ப்பாட்டமாய் நடந்து முடிந்தது இவர்களது வரவேற்பு விழா.
30
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்த நிலையில்..
பெண் குழந்தை இல்லாத வாசுகிக்கு திவ்யபாரதியை மிகவும் பிடித்துவிட்டது. அதுவும் கணவரும் மகனும் ஆபீஸ் காவல் நிலையம் சென்று விட்டால், தனிமையில் அவர் தனித்து இருக்க.. இப்போது அவளது குறும்புகளும் துடுக்கான பேச்சுகளும் உரிமையான செயல்களும் அவரையும் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்த்து விட.. இப்போது திவ்யபாரதி வெர்ஷம் 2 ஆகி விட்டார் வாசுகி அம்மையார்!!
அவள் செய்யும் சோஷியல் சர்வீசுக்கு மாமியாரின் ஏகோபித்த ஆதரவு எப்போதுமே உண்டு!!
கூடவே ஐவர் குழு அதிக நேரம் படிக்கிறேன் என்ற பெயரில் இங்கு கொட்டமடிக்கவும் செய்யும்.
இவ்வாறு ஒரு மாதம் கண்ணிமைக்கும் நேரத்தில் பறக்க.. எப்பொழுதும் காலையில் சுறுசுறுப்புடன் வரும் தன் மருமகள் இன்று சோகமே உருவாக வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருப்பதை பார்த்த வாசகி, “திவிமா என்ன ஆச்சு ஏன்டா ஒரு மாதிரியா இருக்க.. அந்த போலிஸ்காரன் ஏதாவது சொல்லிடானடா?” என்று மருமகளுக்கு மாமியாராக இல்லாமல் மகனுக்கு மாமியார் போல அவர் பேச..
“இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல மா நான் ஏதாவது சொல்லி இவ சோகமா இருக்காளா? நம்புறமாதிரியா இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே திவ்யா அருகில் வந்து அமர்ந்தான் எஸ்பி..
“அப்புறம் ஏன்டா இவ்வளவு சோகமா இருக்கா?” என்று மகனை முறைத்து கொண்டே நம்பாமல் கேட்டார் வாசுகி.
“ஆனாலும் இவ உங்கள ரொம்பவே மயக்கம் வச்சிருக்கா.. என்னையே நம்பாமா நீங்க முறைக்கிறிங்க?”
“பின்ன விஷயத்தை சொல்லுடா?” என்று அவர் அதட்ட..
“இன்னைக்கு ரிசல்ட் அம்மணிக்கு.. எழுதின செமஸ்டர் எக்ஸாம் ஏற்கனவே வைத்து அரியர்ஸூகும் சேர்த்து வருது. அதுதான் மூஞ்ச தூக்கி வைத்து உட்கார்ந்து இருக்கா” என்று விஷயத்தை எஸ்பி போட்டு உடைக்க
வாசுகியும் “அதுக்கு ஏன்டா திவிமா சோகமா இருக்க செப்டம்பர் போனா மார்ச்சில் எழுதிக்கலாம்? பீல் பண்ண கூடாது!!” என்று பேசியவரின் கன்னத்தில் அடுத்தடுத்து பல முத்தங்களை வாரி வழங்கிய திவ்யா..
“நல்லவேளை அத்தை.. எங்க நீங்களும் எங்க அம்மா மாதிரி தொடப்பக்கட்டையால் பூஜை செய்வீங்களோனு பயந்துட்டேன். இனிமே எனக்கு கவலையே இல்லை” என்றவள் மாடி ஏற செல்ல.. தள்ளாடி மாடிப்படியை இறுகப் பற்றிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.
“என்னாச்சு? என்னாச்சு?” என்று எஸ்பியும் வாசுகியும் பதறிக் கொண்டு அவள் அருகில் வர..
திவ்யாக்குமே சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை சிறிது நாட்களாக காலையில் வரும் இந்த மயக்கம் தலை சுத்தல் ஏன் என்று!!
அதன்பின் நாள்களைக் கணக்கிட்டவளின் கண்கள் பளிச்சிட.. ஆனால் அதை முதலில் தன்னவனுக்கு சொல்லவே ஆசைப்பட்டவள் “ஒன்னும் இல்லத்தை” என்று அறையை நோக்கி அவள் மாடி ஏற யோசனையுடனே அவளைப் பார்த்தார் வாசுகி.
“என்னாச்சு இவளுக்கு?” என்று எஸ்பியும் பின்னோடு செல்ல, அறைக்குள் நுழைந்த அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள் “என்னடி? அடுத்த ரவுண்ட் டா? எஸ்பி கேட்க..
“கங்கிராஜுலேசன் மிஸ்டர் திவ்யபாரதி” என்று அவள் கை கொடுக்க..
“உனக்கு இன்னும் ரிசல்ட் வரல. அப்படியே வந்தாலும் நான் தானே உனக்கு கங்கிராஜுலேசன் சொல்லணும்? நீ எதுக்கு எனக்கு கங்கிராஜுலேசன் சொல்ற?” என்று சொல்லிக் கொண்டு சென்றவனுக்கு சட்டென்று பல்ப் எரிய…
அவளை இறுக்கி அணைத்து ஒரு சுற்று சுற்றி கீழே இறக்கியவன் “கங்கிராஜுலேசன் மிஸஸ் சூரியபிரகாஷ்” என்று வாழ்த்தி நெற்றியில் இதழ் பதித்தான்.
பின்பு அவளது டாப்ஸை ஒதுக்கி ஆலிழை வயிற்றில் சூல் கொண்டு இருக்கும் தனது வாரிசுக்கு மென்மையாக முத்தமிட்டவன் “வெல்கம் ஜூனியர் பிரகாஷ்” என்று கூறினான்.
“அது என்ன பிரகாஷின் சொல்றீங்க?” என்று அவள் சந்தேகம் கேட்க.
“அது ஆணோ? பெண்ணோ? எப்படி இருந்தாலும் அதற்கு பின்னால் வருவது பிரகாஷ் தானே?! அதனால் தான் அப்படி சொன்னேன்?” என்றான்.
அதன்பின் அவர்கள் விஷயத்தை அவர்களது வீட்டில் பகிர்ந்துகொள்ள வாசுகிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. “அந்த ரிசல்ட் எப்படி வந்தால் என்னமா? இந்த ரிசில்டு தான் வாழ்க்கைக்கு முக்கியம்” என்று அவர் மருமகளை சீராட்டி துவங்கினார்.
“நீ இனிமே காலேஜுக்கு எல்லாம் போக வேண்டாம்” என்க.. அதற்குள் விஷயம் அறிந்து வந்த சந்திரப் பிரகாஷூம் மருமகளின் தலையைக் நீவிவிட்டு “இந்த செமஸ்டர் ப்ராஜெக்ட் தானேமா? நம்ம கம்பெனியில் செஞ்சிடலாம். நான் பார்த்துக்கிறேன்” என்று அவரும் ஒத்து ஊத தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் சூரிய பிரகாஷ்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு..
அன்று கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்ட சூரியபிரகாஷ்.. அனைவர் முன்னிலையிலும் யுவா என்ற ஆப்பை வெளியிட்டான்.
“இந்த ஆப் மூணு வருஷத்துக்கு முன்னாடி மிஸஸ் திவ்யபாரதி சூர்யபிரகாஷால் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போ அதனை நடைமுறைப்படுத்தி இருக்கோம். இந்த ‘யுவா’ ஆப்பை உங்க மொபைல்ல நீங்கள் டவுன்லோட் பண்ணிக்கலாம். இதனோட ஒரு சிப் இருக்கும், அதை வேலைக்கு போற வீட்ல உள்ள பிள்ளைகள் மட்டுமில்லாமல் எல்லா பிள்ளைகளுக்கும் அவங்க கழுத்தில் இருக்கிற பென்டன்.. ட்ரேஸ் இல்ல அவங்க கையில கால்ல போட்டிருக்கிற ஆர்ணமெண்ட்ல நீங்க பதிச்சு யூஸ் பண்ணலாம்.. விவரம் தெரிஞ்ச குழந்தைகளாக இருந்தால் தங்களை யாரும் கடத்தும் போது கீழ இருக்கிற பட்டனை பிரஸ் பண்ணுனா அந்த சிப்புடன் இணைந்து இருக்கிற நம்பருக்கு உடனடியாக அல்லார்ட் கால் கூடவே அருகில் இருக்கிற காவல்துறை ரோந்தில் உள்ள கார்ட்ஸைக்கும் கால் போகும்”
“சரி அப்போ சின்ன குழந்தைகளா இருந்தா?” என்று ரிப்போர்ட்டர் ஒருத்தர் கேள்வி கேட்க..
“இந்த சிப் எப்பொழுதுமே அந்த ஆப் இல் இணைந்து இருக்கிற மாதிரி அவங்களுக்கு வேற ஒரு டிவைஸ் நாங்க கொடுத்து இருக்கோம். அதை யூஸ் பண்ணலாம். பெரும்பாலும் வளர்ந்த குழந்தைகள தான் நாம கொஞ்ச நேரம் விளையாட விடுவோம் தனியே.. சின்ன பிள்ளைகளை விட மாட்டோம் என நினைக்கிறேன்?” என்று அவன் எதிர் கேள்வி கேட்க அவனும் சரியென்று அடங்கி அமர்ந்தான் அவன்.
“இந்த யுவா ஆப் மூலம் குழந்தைகள் கடத்தல் மேக்சிமம் கட்டுப்படுத்தலாம். உலகமே ஒரு குளோபல் வில்லேஜில் சொல்றோம் ஆனால் பக்கத்தில் இருக்கிறவங்க யார் என்னன்னு கூட நமக்கு தெரிய மாட்டேங்குது. அந்த மாதிரி இல்லாம நல்லவங்களா கெட்டவங்களா ஓரளவு நாமே தெரிந்து வைத்திருந்தாலே நமக்கு ஒரு அவசரம் இல்லை அவங்க உதவி தேவைப்படலாம் அதே நேரம் கெட்டவங்களா இருந்தா அவங்க கிட்ட தான் நம்ம குழந்தைகளையும் நம்மை பாதுகாப்பாக வைத்துக்கலாம்” என்று அவன் கூற அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.
அனைவரும் திவ்யபாரதியையும் சூரியபிரகாஷ் பாராட்டி தீர்த்துவிட.. அவர்களது இரண்டு வயது மகள் சைதன்யா பிரகாஷை வைத்துக்கொண்டு வாசுகி சந்திரபிரகாஷ் அமர்ந்திருந்தனர். ரத்னாவும் ஐயப்பனும் எட்டு மாத இரட்டையர்களான யுகபிரகாஷ்.. யுவபிரகாஷ் மடியில் வைத்திருந்தனர்.
அன்று மாலை மகன்,மருமகள், பேத்தி, பேரன்கள் அனைவரையும் வைத்து திருஷ்டி கழித்துக் கொண்டிருந்தார் வாசுகி. அப்போது ஐவர் குழு வழக்கம்போல உள்ளே நுழைந்தது. சாந்தினிக்கு சென்ற வருடம் தான் திருமணம் முடிந்திருந்தது. நிரஞ்சனா படித்தது என்னவோ இன்ஜினியரிங் ஆனால் அவளது அப்பாவின் ஹோட்டல் தொழிலை தற்போது அவள் தான் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.
விபாகரன் தனது அப்பாவின் தொழிலில் உதவி கொண்டு இருக்க, ஈக்னேஷ் சொந்தமாக பினான்சியல் சிட்பண்ட் நடத்திக் கொண்டு வருகிறான்.
கர்ணா ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் டீம் லீடாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.
சாந்தினியை தவிர்த்து மற்ற நால்வரும் இவர்களது வீட்டுக்குள் வர.. அனைவரையும் உற்சாகத்தோடு வரவேற்றாள் திவ்யாவின் ஜெராக்ஸ்..
அவர்கள் குடிப்பதற்கு கொறிப்பதற்கு கொண்டுவந்து வைத்துவிட்டு வாசுகியும் அமர்ந்து சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்க..
அப்பொழுது விபாகர் “எஸ்பி சார் ரிசல்ட் வந்துட்டு” என்று போட்டு உடைக்க.. திவ்யாவோ அதிர்ந்து அவனை பார்த்தாள்
“பத்த வச்சுட்டியே பரட்டை” என்ற கண்களில் கனல் கக்க..
“ரதி!!!” என்று எஸ்பி அழுத்தமாக அழைக்க..
“அவகிட்ட ஏன் கேக்குறீங்க நான் சொல்ற வழக்கம்போல இல்லை இந்த முறை” என்றான் ஈக்னேஷ்.
“எல்லாம் பாஸ் பண்ணிட்டாளா?” என்று ஆர்வமாக வாசுகி கேட்க..
“அஞ்சு அரியர்ஸ்ல கஷ்டப்பட்டு ஒன்னு பாஸ் பண்ணிட்டா” என்று கர்ணா கூறி சிரிக்க..
மூவர் தலையிலும் கொட்டுக்களை வைத்தவள், அடுத்த நிமிடம் அங்கிருந்து ஓடி இருந்தாள்.
“ரதி!!” என்று அலறினான் சூரியபிரகாஷ். அவள் அங்கு இருந்தாள் தானே!!
அவளைத் துரத்திக் கொண்டு சென்றவன் இரண்டே எட்டில் அவளை பிடித்து இருக்க.
“மூணு வருஷம் ஆகுது.. இந்த அரியர்ஸ எப்பதான்டி கிளியர் பண்ண போற?” என்று ஆதங்கமாக கேட்டான்.
“வராத படிப்பை வா வான்னு சொன்னா எப்படி மச்சான் அது வரும்?” லாஜிக் பேச..
“அப்போ அம்மணிக்கு எது நல்லா வரும்?” என்று அவன் குறும்பாக கேட்க..
“உலகின் மிகச்சிறந்த சொல் செயல்.. அது என்னன்னு செயலில் காட்டுகிறேன்” என்றவள் அடுத்த நொடி அவனை இழுத்து அவனது இதழ்களை தன்வசப்படுத்தி இருந்தாள்.
கண்கள் விரிய.. காதல் பொங்க..
தன் காதல் ரதியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் இந்த காவலன்!!
உன்னை
பார்க்க.. பார்க்க..
காதல் கூடுதே!!
நாமும் இந்த ஜோடியை இதேபோல் டாம் அண்ட் ஜெர்ரி ஆக வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.
ஜியா ஜானவி 💞
Wow super story sis
Super story sis 👌👌👌
Super story siss
Super sis