ATM Tamil Romantic Novels

8 கணவன்

8 கணவன்

தன் வீடு தன் குடும்பம் தன் இஷ்டம் சர்வ சுதந்திரம் என்ற நிறைவில் மகிழ் நீந்திக்கொண்டிருக்க கோர்ட்டில் அனைத்தும் கிளியர் கட் பண்ணியிருந்தாலும் பொண்ணு வேணும் என்று அடம் பிடிப்பவனை என்ன செய்வது? அட்சயா மனநிலை என்னாகும்? கலங்கினாள்.

இப்ப கிடைத்திருக்கும் சொர்க்கம் திரிசங்கு நிலையாகுமோ? முந்தைய பயம் வெளிவந்து மேலும் திகில் கொடுத்தது.

முன்பென்றால் பெற்றோர் பாலாவை எதிர்கொண்டார்கள்.. இவளுக்காய் பேசினார்கள்.. கோபப்பட்டார்கள்.. இவளை பொம்மையாய் ஆட்டி வைத்தார்கள். இது உனக்கு நன்மை என்று அவ்ளோதான் முடித்துக்கொண்டார்கள். கோர்ட்டில் பேசக்கூட அட்சயாவுக்கு பாடம் எடுத்ததற்கு கூட இவள் பார்வையாளர் மட்டுமே!

இப்போ நேரடியா பாலா வந்து நின்றபொழுது எப்படி கையாளுவது தெரில.

முன்பென்றிருந்தால் கூட அவன் நினைவு அடிக்கடி வரும். நீ எனக்கு அமைதியான வாழ்க்கை கொடுத்திருந்தால் இந்த அடிமைத்தனம் நீங்கியிருக்குமே?! இப்படி வதை செஞ்சுட்டியே பாலா என்று கோபமும் வருத்தமும் வந்திருக்கும். கொந்தளிச்சி திட்டியிருப்பாள். கண்டிப்பா உடைந்து அழுதிருப்பாள்.

இன்று நேர்மையாக அந்த மாதிரி முட்டா எண்ணங்கள் வாராது.. உள்ளது கெட்டு போயிருமோ? அஜு என்ன நினைப்பார்? அவருக்கு சங்கடம் தானே! கையை பிசைந்தாள். சும்மாவாச்சும் மிரட்டும் உருட்டும் பெண் கூட இல்ல மகி.

வேலையை விட்டு வந்ததால் மன நடுக்கத்தோடு, கேட்டை திறந்து இவள் வண்டியை மெல்ல தள்ளி போர்ட்டிக்கோவில் நிறுத்தும் முன் சந்திராயன் ராக்கெட்டில் போய் நிலாவில் இறங்கிய திகில் நேரம் போன்று நீண்டது.

தங்கள் பெரிய வீடுகள் தெருவை சுற்றும் முற்றும் பார்த்தவள் அவ்ளோவா அரவம் இல்லாதது கண்டு லேசா ஆசுவாசமானாள்.
கேட்டை உள்பக்கம் பூட்டி உள்ளிருந்தே பாலாவை விசாரித்தாள். முகத்தை கூட பார்க்க வில்லை. எதிர்வீட்டு பாக்கு மரத்தின் இலையை நோக்கி..

“என்ன விஷயம்? இங்கு எதுக்கு நிற்கிறீர்கள்?”

“முன்பே வந்துட்டேன். தெருமுனையில் நின்றுருந்தேன் ராஜீ”

அவன் அக்கா ஒன்னு இறந்துடுச்சாம் அவள்ன்னா பாலாக்கு பிரியமாம் ராஜீ என்பான் இவளை. இது அன்பிலும் சைக்கோத்தனமானது.
செத்தவள் பேரை வைத்தான் சரிதான் வாழ வைத்தானா? உதடு தானாய் விரக்தியில் வளைந்தது. நினைக்கக்கூடாது அழிக்கணும் என்றாலும் கர்மா விடுதா என்ன? அழணும். இரசிக்கும்.

அதான் ஏன்?

அட்சயா பார்க்கணும்?

இது ரெண்டாம் நபருக்கு தெரியுமா?

எனக்கு என் பொண்ணை பார்க்கணும்.. அவ்ளோதான் வீண் பேச்சு பேசாதே ராஜீ.

கட்டை குரல் உயர்த்த..

அதெல்லாம் காட்ட முடியாது? முகம் பார்த்திருப்பானா? உடை வாங்கி கொடுத்திருப்பானா? குழந்தை பருவத்தில் தோள் தாங்கி இருப்பானா? புதுசா எப்படி பாசம் வரும்? இதென்ன சினிமாவா? பிஜீயம் போட்டு.. கண்ணான கண்ணே! பாட.. போடா டேய்.. பொம்பளைய போட்டு பிள்ள தந்து எட்டிக்கூட பார்க்காத மிருகத்துகிட்டே என் பிள்ளைய காட்டணுமா? மகிக்கு உள்ளிருந்த நடுக்கம் போய் வெப்பம் ஏறியது.

அப்பாக்கு போன் பண்ணுவோமா? வரட்டும் பேசட்டும்.. பாலாவை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது வண்டியிலிருந்து ஹான்ட் பேக் எடுத்து, ஜிப் நீக்கி, போனை துழாவ,

“யாரது மகி? வெளியில் நிக்க வச்சிருக்க?” பின்னிருந்து ரட்சகன் குரல்..

அவனுக்கு ஓரளவு தெரியும் சிசி கேமராவை எதேச்சையாக பார்த்த பொழுது யூகித்தான். போயிருவான் என்றே வெயிட் செய்தான் எதிராளி போகவில்லை என்றதும் களம் இறங்கிவிட்டான் அஜு.

அவ்.வ..ர்ர்.. உணர்ச்சி பெருக்கு திடீர்னு மோத.. குரலும் எழும்பவில்லை மனைவிக்கு…

ம்ம்ம்..

பாலா .. பால சுப்பிரமணிங்க..

“ஓஹ்.. அவர்தானா? எதுக்கு வெளியில் நிற்க வச்சுருக்க?
உள்ளே கூப்பிடு மகி.”

அவ்ளோதான் இப்போ பாலா மீதிருந்த எரிச்சல் அஜு பக்கம் திரும்பிவிட்டது. ஆனா காட்ட முடியாதே? பலகீனம் தாக்க கண்ணீர் சுரந்து அழுகை மழை.. அஜுவையும் மதிக்காது.. விருட்டென வீட்டுக்குள் போய்விட்டாள்.

கடந்த நாட்களில் ரெண்டு குட்டிகளும் இவள் வந்ததும் எல்லோரும் ஒன்னா சேர்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டு பூஸ்ட் குடிச்சுட்டு அஜு கூட பூங்காவிற்கு விளையாட சென்றுவிடுவார்கள். வீட்டுக்குள்ளிருந்து வெளுத்து கிடந்த அட்சயா இப்ப லேசா கருத்திருந்தாலும் உடல் வலிமையாயிருந்தாள். ஹாஸ்பிடல் செலவு வைக்கவில்லை.

உள்ளே பிள்ளைகள் வெளி செல்ல தயாராகயிருந்தார்கள்.

வலுக்க அட்சயா கையை பிடித்து இழுத்து கொண்டு போய் கெஸ்ட் க்கு என்று உள்ள அறையில் தாழிட்டுக்கொண்டாள்.

யார் வேணும்னா எப்படியோ போங்க.. என் பிள்ளை போதும் எனும் விரக்தி மட்டும் வலிமையாய் மனதில்.

லூசாய் பேக் யை ஹாலில் போட்டுவிட்டதால் செல் கையில் இல்லை..

திக் திக் பத்து நிமிடங்கள் தாண்டி அஜு கதவை தட்ட.. முடியாது நான் வெளியில் வரமாட்டேன். சாரி அஜு. ப்ளீஸ்.. புரிஞ்சிக்கோங்க.. அழுதாள். ஒன்னும் தோணல.

ஏன் இப்படி பண்ற! லூசு போல! இரு தாத்தா கிட்டே சொல்றேன்.. விடு நான் வெளியில் போகணும்.. இத்தனை நேரம் முரண்டு செய்து மகள் கையை உதற முயற்சித்தாலும் நிஜமாவே காது கேட்காத மாதிரி இருந்தவள் இதயம் கீறி போட்ட மாதிரி வலித்தது.

*மகி நான் மட்டும் தான் இருக்கேன் பால் போய்ட்டார்.*

*நம்ப மாட்டேன்..* மகி அழுகை.

*ஸ்ரீ! சின்னம்மா கிட்டே நீயே சொல்லுடா!*

*ஆமாம்மா அந்த அங்கிள் போயிட்டாரு.. *

கதவு திறக்கல்ல!

பாக்சிங் போல ஆக்சன் காட்டி.. சொல்லு சொல்லு தகப்பன் கள்ளம் சொல்லி கொடுக்க..

*அப்பா அந்த அங்கிளை செம்மையா அடிச்சி துவச்சு அனுப்பிட்டாரு வெளியில் வாங்கம்மா..*

உண்மையாவா?வெளியே படக்குன்னு வந்து, அழுத கண்ணீர் துடைச்சு.. ஆசையா மகி ஸ்ரீயின் கன்னம் தாங்கி ஆர்வமாய் கேட்க..

*இல்ல அப்படி சொல்லச்சொன்னார்..*

மகி முகம் வாட,

அடிக்கணுமா மா? அப்பாக்கு ஏஜ் ஆகிருச்சி போர்ஸ் இருக்காது நான் அடிக்கிறேன்.. நெக்ஸ்ட் டயம் ஓகே.. பீல் பிரீ மா* பதிலுக்கு மகிழ் கன்னம் தொட்டு ஈரம் துடைக்க.. பிள்ளையின் பாசங்கள் அடிவயிற்றோடு வேராய் பின்னுமாம். ஸ்ரீக்காய் இரண்டாம் குழந்தை ஈன்ற சுகவலி பெற்றாள் அந்த ரெண்டாம் தாய்.

*அதெல்லாம் ஒன்னும் வேணாம் கண்ணா நீ சொன்னதே போதும்.* அவனை மகி கொஞ்ச ஸ்ரீ முகத்தில் ஒற்றே வழிசல்.

*சரி சரி சென்டிமெண்ட்ஸ் முடிஞ்சுது.. வாங்க கொறிஸ் சாப்பிடுவோம்..*அஜு அழைக்க

“இன்னைக்கு எந்த பார்க் டேடி!” அட்சயா

மகி புயலடித்து ஓய்ந்த ஆயாசத்தில் சோபாவில் அமர்ந்தவள் ஏதும் உண்ண தோணாது யாரும் எங்கும் போக வேணாம் வீட்டில் இருந்தா போதும். முத முறை கட்டளை போட்டாள். இது நாள் வரை அவர்கள் மூவர் ராஜ்ஜியம் தான்.,

இன்று இன்டோர் கேம் ஒன்லி ! அஜு சொல்ல அனைவராலும் ஒருமனதாய் ஏற்கப்பட்டது.

டிவி போட்டு விட்டுட்டு “இதோ வரேன்” னு அஜு நழுவினான்.

கதவை சார்த்த சென்றவள் “இதா இன்டோர் கேம்?” டிவியை காட்டி கேட்க..

இன்டோர் கேம்னா எதெது வந்து சொலித்தறேன்.. பசங்களை சீக்கிரம் தூங்க வச்சுரு.. சப்பாத்தி சென்னா மசாலா இருக்கு போ மூணு பேரும் சாப்பிடுங்க.. போங்க”

“அப்புறம் அஜு.. உங்க கிட்டே பேசணும் சீக்கிரம் வாங்க.. ப்ளீஸ்”

“நானும் பேசணும் பிள்ளைகள் இருக்கேன்னு சும்மா இருக்கேன்.. கண்டிப்பா பேசணும்.. இப்ப உங்கப்பாவை பார்க்கத்தான் போறேன்.. வரேன்” முகம் கோபத்திலிருப்பது போல இருக்க.. சோகமானாள்.

ஆமாம்ல மேலிடத்திலும் பாலா வந்தது பெரும் புயலை கிளப்புமே! இவர் வேற முகமே மாறி தெரிராரே! விரக்தியானாள். வாழ முடியாது விடவும் மாட்டார்கள். கண்ணீர் தளும்பியது.

இவள் தூங்க முயல போர் அடித்ததால் பிள்ளைகளும் விரைவில் படுத்து விட்டனர் . மகி ஏதும் சொல்லாமலே!

அஜு, சொன்ன மாறி விரைவில் வந்தவன், தூங்க முயன்றுக்கொண்டிருந்தவளை உசுப்பி, ஹாலுக்கு வா பேசலாம் என்று செய்கை காட்டி அழைத்தான்.

உம் ன்னு சோபாவில் அமர்ந்தவன். மகிழ் வந்த பின்னும் சும்மாவேயிருந்தான்.

இவள் காத்திருக்க, அங்கு, இங்கு, மோட்டுவளை, ஓடாத டிவி , ஆடாத ஊஞ்சல், சீராக அடுக்காத நியூஸ் பேப்பர், இரைக்கு தரையில் சுற்றிக்கொண்டிருந்த ஒற்றை பல்லி என்று பார்வையிட்டுக் கொண்டிருக்க.. மகிக்கு என்னவோ ஏதோன்னு இதயம் வேக வேகமாய் அடித்தது.

“அஜு.. பாலா இனி வராத அளவு..”

“நிறுத்து மகி.. முதலில் என் விஷயம் தெளிவு படுத்திருறேன். அப்புறம் அது ..”

“சரி சரி நீங்க் முதலில் சொல்லுங்க..” இவள் விட்டு கொடுத்தாள்.

நீ ஒன்னும் தவறா எடுத்துக்க மாட்டே இல்ல..

இல்ல இல்ல..

அது.. அது..

ஒரு வேளை பாலா போல விசாகாவும் ஏதும் ஸ்ரீ விஷயத்தில் பிரச்சனை தருதோ? இவளுக்கு கற்பனை ரெக்கை கட்டி பறந்தது.

அப்படி இருந்தால்? தீர்வு

 

 

 

 

 

 

1 thought on “8 கணவன்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top