அத்தியாயம் 10
கையில் பயணப்பொதியுடன் வந்தவளைப் பார்த்து ஏளன சிரிப்பு சிரித்தவாறு கௌதமை ஒருப் பார்வை பார்த்து, “ஆக… நீங்க ஸ்டெப்னி இல்லாம எங்கயும் போக மாட்டீங்கன்னு சொல்லாம சொல்லிட்டீங்க..” என குத்தலாக மொழிந்ததை, முகம் கடுக்க கண்களை இறுக்க மூடித் திறந்து ஏற்றவன், ஸ்வப்னாவை கண்டுகொள்ளாமல் கிளம்பிச் செல்வதைக் கண்ட மந்தாகினி,
அவசர அவசரமாக அவனிடம் ஓடிவந்து, “டேய்.. ஸ்வப்னாவுக்கும் கோவாவுல ஏதோ மேரேஜ் பங்க்ஷன் அட்டண்ட் பண்ணணுமாம். அவள எப்டிடா தனியா அனுப்புறது?! அதான் உங்கக் கூடயே கூட்டிட்டு போயிட்டு பத்திரமா கூட்டிட்டு வந்துடுங்க..” என கௌதமிடம் கூற,
முகத்தில் சற்றும் இளக்கமில்லாமல், “சாரி ம்மா.. என்கிட்ட முன்னாடியே எதுவும் சொல்லாம நீங்களா முடிவு பண்ண விஷயம் எதுவுமே இப்ப வரைக்கும் விளங்கல. அதுனால இதை என்னால ஏத்துக்க முடியாது. உங்க அண்ணன் மகள நீங்களே பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வாங்க. என்கிட்ட ரெண்டு டிக்கெட்ஸ் தான் இருக்கு.” எனக் கறாராக பேசியவனின் வாய்மொழியில் முகம் வாடினாலும் நொடியில் வெளிக்காட்டாமல் சமாளித்தவாறு,
“நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க அத்தான். எனக்கு நானே டிக்கெட் புக் பண்ணிட்டேன். உங்க சீட்டுக்கு பக்கத்து சீட்டு தான்.” என உரிமையாக தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த டிக்கெட்டை எடுத்துக் காட்டியதும் ஆர்த்திக்கும் கௌதமிற்கும் இவர்களின் திட்டம் நன்றாகவே புரிந்தது.
“டேய்.. ஆயிரந்தா இருந்தாலும் அவ உன் தாய்மாமனோட பொண்ணு. அவளப் பத்திரமா கூட்டிட்டு போக வேண்டியது நம்மக் கடமை டா.” என சட்ட நியாயங்கள் கூறியவரை சலிப்புடன் திரும்பிப் பார்த்தான் கௌதம்.
மனமொத்த தம்பதிகளாக இருந்திருந்தால் கோபம் வந்திருக்குமோ என்னவோ.. ஆர்த்திக்கு உடனே தன் மனதில் கற்பனை விரிந்தது. அவளுக்கும் கௌதமிற்கும் நடுவில் ஸ்வப்னா வந்தமர்ந்து இருப்பக்கமும் தடுப்பு பிடித்திருப்பது போல காட்சி தோன்றவும் பக்கென சிரித்து விட்டாள்.
“ஏய்.. இப்ப எதுக்கு சிரிக்கிற நீ..?!” என கோபத்துடன் ஸ்வப்னா கேட்டதற்கு, தன் தலையை இருப்பக்கமும் ஆட்டியவாறு, “ஒன்னுமில்ல.. சண்டை போடுற ரெண்டு ஆடுகளுக்கு நடுவுல மாட்டுன நரியோட நிலைமை என்னாச்சுன்னு சின்ன வயசுல எங்கப் பாட்டி சொன்ன கதை நியாபகத்துக்கு வந்துச்சா…. அதை நெனச்சேன்..சிரிச்சேன்..” எனக் கூறியபடி அவர்களைக் கடந்து சென்று காரில் பின்பக்கமாக ஏறிக் கொண்டாள் ஆர்த்தி.
ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்த மந்தாகினியும் ஸ்வப்னாவும் ஒருகணம் திகைத்து தான் போயினர். ‘ஆத்திரப்பட்டு கத்திக் கூச்சல் போடுவாள்’ என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது மட்டுமல்லாமல், ‘யாருக்கு வைத்த விருந்தோ?!’ என கௌதமை அவள் புறக்கணித்த விதம் ஏனோ ஸ்வப்னாவிற்கும் மந்தாகினிக்கும் இதமாகவே இருந்து வாயடைக்க வைத்தது.
தன்னைக் கண்டுகொள்ளாமல் செல்லும் தன் மனைவியிடம் ‘தான் வேண்டுமெனக் கருதி தனக்காக சண்டையிடவில்லையே’ என்ற ஏக்கமே தலைதூக்கி கௌதமை ஏகத்திற்கும் பெருமூச்சு விட வைத்தது.
ஆனால் தன் மனதில் ஏங்கித் தவித்த எண்ணத்தை ஈடேற்றி விட வேண்டும் என்ற திண்ணமான எண்ணத்துடன் ஒன்றும் சொல்லாமல் ஸ்வப்னாவை அழைத்துக் கொண்டு இரயில் நிலையத்திற்கு காரில் செல்லத் துவங்கினான்.
ஆர்த்தியின் ஒதுக்கத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய ஸ்வப்னா, வேண்டுமென்றே கௌதமைத் தொட்டு தொட்டு பேசுவதைக் கவனித்த ஆர்த்திக்கு மீண்டும் கௌதமின் மீது வெறுப்பு தான் மூண்டதே தவிர கோபம் வரவில்லை.
‘மிரர் வியுவ்’ வழியாக ஆர்த்தியின் முகபாவனைகளைக் கண்காணித்து வந்த கௌதமின் விழிகள், சட்டென ஒருகணம் ஸ்வப்னாவிடம் திரும்பியபோது ஸ்வப்னா பயத்தில் ஒருகணம் தடுமாறித் தான் போனாள்.
“என்னை டச் பண்ணாம வந்தா நம்ம எல்லாருக்கும் நல்லது. ஒழுங்கா ஜங்க்ஷனுக்கு போகணுமா வேணாமா?!” என நேராக பார்த்தபடி கேட்டவனின் குரலில் தெரிந்தக் கடினத்தைக் கண்டு சற்றுத் திணறினாலும்,
“ஓ.. நம்மக் கச்சேரிய ட்ரெயின்ல போயி பாத்துக்கலாம்ன்னு சொல்ல வர்றீங்களா அத்தான்?! அதுவும் சரி தான். தேவையில்லாத டிஸ்டர்பன்ஸ் இருக்காது.” என ஓரக்கண்ணால் ஆர்த்தியைத் திரும்பி பார்த்து வக்கனைக் காட்டியபடி கூறவும்,
தன் இடது முழங்கையை ஓங்கி அடித்து, இரத்தம் குடித்து மாண்ட கொசுவைத் தூக்கிக் காட்டி, “உன் தொல்லை.. பெருந்தொல்லையாவுல போச்சு.. எத்தனை தடவ ட்ரை பண்ணாலும் சரி. மவளே சங்கு தான் உனக்கு. என்கிட்ட வச்சுக்குற வேலையெல்லாம் வேணாம்..” என ஜாடையாக ஸ்வப்னாவை எச்சரித்த விதத்தைக் கண்டு அதுவரை முகம் கடுக்க காரை ஓட்டிச் சென்றவனின் இதழ்களில் புன்னகைத் ததும்பத் தொடங்கியது.
தன்னைத் தான் கூறுகிறாளெனப் புரிந்து முகத்தை சீர்படுத்திக் கொண்டு கௌதமிடம் திரும்புகையில் அவனது முகத்தில் தோன்றியிருந்த புன்னகைக்கு காரணம் ஆர்த்தியின் ஜாடைப் பேச்சு தானென புரிந்து எரிச்சலைக் கூட்டியது ஸ்வப்னாவிற்கு.
உம்மென முகத்தை வைத்துக் கொண்டு வந்தவளுக்கு இரயில் நிலையத்தில் அதிர்ச்சியொன்று காத்திருந்தது. அங்கே தங்களது இருக்கைப் பார்த்து அமரச் செல்கையில் ஸ்வப்னாவின் மனம் முழுவதும் இவர்கள் இருவரும் சேர்ந்து அமர்வதைத் தடுப்பதிலேயே இருந்ததால் தன்னை சுற்றி வேறு எவரையும் கவனித்தாளில்லை.
“ஏய்.. தள்ளு.. அத்தான் பக்கத்துல தான் எனக்கு சீட்டு போட்டிருக்கு..” என ஆர்த்தியை இடித்துக் கொண்டு இருவருக்கும் நடுவில் அமர எத்தனித்த போது, “ஹாய் ஸ்வப்னா..” என்ற இளமைத் துள்ளும் ஆண்குரலொன்றும் பெண்குரலொன்றும் கேட்க, தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் ஸ்வப்னா.
அங்கே தனது தோழியைப் பார்த்த சந்தோஷத்தில் ஆனந்தக் கூச்சலிட்டவாறு தலையெல்லாம் ‘ப்ளீச்’ செய்த இளைஞனும் குட்டைப் பாவாடையும் ஸ்லீவ்லெஸ் டாப்பும் அணிந்த இளம்பெண்ணொருத்தியும் நின்றிருந்தனர்.
“ஹெ..ஹேய்.. ஹாய் காய்ஸ்.. நீங்க எப்டி இங்க?!” எனக் குரலில் தடுமாற்றத்துடன் அவர்களை வரவேற்றாள் ஸ்வப்னா. கையில் ஒரு மேகஸினை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்த ஆர்த்தியின் கண்களில் ஸ்வாரஸ்யம் கலந்த குறும்பு மலர்வதைக் கண்ட ஸ்வப்னாவிற்கு பக்கென இருந்தது.
ஏனெனில் தன் குடும்பத்திற்கும் கௌதமிற்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த சில பழக்க வழக்கங்கள் எல்லாம் எங்கே இவர்கள் மூலம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில்,
“அ..அதுவந்து.. இவங்க என்னோட ஃப்ரண்ட்ஸ் அத்தான். இவன் நந்து.. அவ இந்திரா..” என நாகரீகமாக அறிமுகப்படுத்த முயன்றவளின் கைவிரல்களைப் பிடித்து தங்களிடம் இழுத்து நிறுத்தி,
“ஹேய்.. என்ன என் பேர இப்டி இன்ட்ரோ கொடுக்குற?! ஹாய் சர்.. நான் நண்டி.. இவ இந்து..” என ஸ்டைலாக கூறியபடி தன் சிகையைக் கோதிக் கொண்டான் அந்த இளைஞன்.
மரியாதை நிமித்தமாக, “ஹலோ..” என்ற வார்த்தையுடன் நிறுத்திக் கொண்ட கௌதமிடமிருந்து இவ்விருவரையும் நகர்த்திச் செல்லும் அவசரத்தில் இருந்தவளிடம் குறும்புடன்,
“அடடே.. நீங்க ஸ்வப்னாவோட ஃப்ரண்ட்ஸ்ஸா.. ஓ… யூ ஆர் லுக்கிங் வெர்ரி ப்யூட்டிஃபுல்..” எனப் புகழாரம் பாடிய ஆர்த்தியை ஸ்வப்னா முறைத்தாளென்றால் இவ்விருவருக்கும் உச்சிக் குளிர்ந்து விட்டது.
“பேச்சுத் துணைக்கு ஆளில்லையேன்னு நான் ரொம்ப கவலப்பட்டேன் பாஸ்.. வாங்க ஃப்ரண்ட்ஸ்.. நம்ம பேசிக்கிட்டிருக்கலாமே..” எனத் தோழமையுடன் ஆர்த்தி கூறுவதை ஒத்துக் கொண்டு அங்கே அமரச் சென்றவர்களை அவசர அவசரமாக தடுத்தபடி,
“அட.. என்னப்பா நீங்க?! எவ்ளோ நாள் கழிச்சு மீட் பண்ணிருக்கோம். ஃபர்ஸ்ட் நம்ம ரிலாக்ஸ் ஆகிக்கலாமே.. அப்புறமா இங்க வந்து பேசலாமே.. நம்ம சீட்டு எங்கருக்கு?” என இயல்பாக பேச முயன்றவாறு தன் தோழனையும் தோழியையும் அங்கிருந்து நகர்த்தி அழைத்துக் கொண்டு சென்றாள் ஸ்வப்னா.
‘தான் என்னென்னவோ நினைத்து வந்தோமே... இறுதியில் இப்டி ஆகிவிட்டதே...’ என்ற வருத்தத்துடன் தனக்கு தொடர்ந்து மொபைலில் அழைத்த லலிதா மற்றும் மந்தாகினியின் அழைப்பைத் துண்டித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ஸ்வப்னா.. வந்ததுலருந்து டென்ஷனாவே இருக்க?! இந்தா.. இந்த தம்ம அடி.. டென்ஷன்லாம் பறந்து போயிடும்..” என தன் கையில் வைத்திருந்த போதைப் பொருள் கலந்த சிகரெட்டை ஸ்வப்னாவின் வாயில் திணித்தாள் இந்திரா.
முதலில் மறுத்தவளுக்கு அந்தப் புகையின் நறுமணம் மேலும் புகைக்கத் தூண்டவே, தானும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கத் துவங்கினாள் ஸ்வப்னா. இப்பழக்கங்கள் யாவும் வீட்டிற்கு தெரியாமல் மறைத்தக் காரணத்தால் தனக்கு வந்த மொபைல் அழைப்புகளை எல்லாம் துண்டித்து, ஃபோனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்தாள்.
புகைமூட்டம் சேராமலிருக்க ஜன்னல் கதவுகளையெல்லாம் திறந்து வைத்தனர் இந்திராவும் நந்துவும். அதன் விளைவு அவர்களுக்கு அருகிலிருந்த பகுதியின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஆர்த்தியின் முகத்தில் அப்புகை நன்றாகவே பட்டது.
முதலில் துணி வைத்து மறைத்தவளின் சுவாசத்தில் மெல்ல மெல்ல போதையேறத் துவங்கியதும் ஜன்னலிலிருந்து விலகி அமர்ந்தாள். ஆனாலும் தனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தவள், தண்ணீர் அருந்தினால் சரியாகி விடும் என நினைத்து எழுந்த போது அவளது கால்கள் தடுமாறியது.
தனக்கு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த கௌதமின் மீது சரிந்து விழுந்தவளின் முந்தானைப் புடவை விலகி காணக்கிடைக்காத இலவசத் தரிசனம் தன் கணவனுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோமெனப் புரிந்து சுதாரித்து எழ முயன்றபோது மிக அருகில் கௌதமின் விழிகளை சந்தித்தாள் ஆர்த்தி.
அந்தக் கண்களில் காதலும் தாபமும் ஏகத்திற்கும் தேங்கியிருப்பது புரிந்து, மனம் குழம்பிப் போனாள். ‘என்னைத் தான் இவருக்கு பிடிக்காதே.. பிறகு ஏன் இந்த ஏக்கமும் பெருமூச்சும்..?!’ என நினைத்தவள் அவனது விழித் தேடல் தன் அங்கங்களில் தவழ்ந்து செல்வதைக் கண்டு சிவந்தக் கன்னங்களுடன் எழ முயன்றாள்.
அப்போது அவளது இடையை அழுந்தப் பற்றித் தூக்கியபோது தன் ஆண்மையை அடக்க பிரம்மப்பிரயத்தப்பட்டுப் போனான் கௌதம். நாணத்துடன் அவனிடமிருந்து விலகி தன்னை சரிசெய்து கொண்டு அமர்ந்தவளுக்கு உடலெல்லாம் வியர்க்கத் துவங்க, தன்னை சமன்படுத்திக் கொள்ள எண்ணி மீண்டும் ஜன்னலின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் ஆர்த்தி.
ஆனால் அங்கும் விதி நன்றாகவே அவளிடம் விளையாடியது. தென்றலுடன் கலந்து வந்த அந்தப் போதைப் புகையின் வாடையும் ஆர்த்தியின் சுவாசத்தில் ஏகத்திற்கும் கலந்து அவளது சிந்தையை நிலைகுலையச் செய்தது.
தன் சிந்தை அனைத்தும் மழுங்கடிக்கப்படுவது உணரும் நிலையில் அவளில்லாதத் தருணத்தில் எங்கிருந்து தான் வந்ததோ அந்த மரப்பல்லியும்?! நிலைதடுமாறி சட்டென அவளது தோளில் அது விழவும் ‘வீல்’லென்ற அலறலுடன் தன் புடவையை வேக வேகமாக அவிழ்த்து அப்பல்லியைத் தேடி விரட்டிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.
அவளது அலறலில் என்னவோ ஏதோ எனப் பதறியவனின் கண்களில் அவளது வற்றாத நதியின் வெண்ணிற மேடுபள்ளங்களில் வழிந்தோடிச் செல்லும் கவர்ச்சியான உடல்வாகு விழவும் மீண்டும் தாபம் குடிகொள்ள,
‘ம்ஹூம்.. இது சரியில்ல..’ என தன் கண்களை வலுக்கட்டயமாகத் திருப்பி, தன்னை இறுதியாகக் கட்டுப்படுத்திக் கொண்டு திரும்பி நின்றத் தருணம் கருமேகங்களின் சங்கமத்திற்கு சான்றாக பலத்த இடியோசைகள் தொடர்ந்து ஒலிக்கத் துவங்கியதில் அரண்டு போனாள் அவனது ஆருயிர் மனைவி.
வேகமாக ஓடிவந்து கௌதமின் பின்புறத்தில் இறுக்கியணைத்தவாறு, “என்னங்க.. எ..எனக்கு பயம்மாருக்கு..” எனக் கத்தியவளை, அதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் அவளிடம் திரும்பி அவளது எலும்புகள் நோகுமளவிற்கு இறுக்கியணைத்தான் கௌதம்.
wow interesting Sis
Superb sis