10 கணவன்
“”நன்றியுணர்விருந்தால் பிரபஞ்சத்தை வசப்படுத்தலாம்.””
கதையை ஒளிஞ்சி மறைஞ்சு படிச்சிட்டு ஓடிருறீங்க. ஒரு லைக் 👍 ஒரு கமெண்ட்💐 தந்தா இந்த writer ஆத்மா இன்னும் rom பின்னி பெடலெடுக்கும் ல.. 😜
உங்களுக்காய் ஈரம் சொட்ட (no 2mean) 😁 rom எழுதுவதுக்கு ஏதாச்சும் நன்றி செலுத்தவும் readers.. எதிர்பார்ப்புடன் ஆதி
என்னதான் பிரண்டு உனக்கு என்று அஜு வாக்கு கொடுத்தாலும் மகிக்கு அந்த சாய்ஸ் எடுக்க முடில.
இத்தனை காலம் வாழ்ந்த அடிமை வாழ்க்கை இன்னும் தன்னம்பிக்கை தரல. இவள் ஓபன் டைப்பும் அல்ல தனக்குள் அனைத்தையும் புதைப்பவள். அது வேற கூட்டிலிருந்து வெளிவருவது எளிதாயில்ல. வீட்டு பறவைக்கு எப்படி இயற்கையாய் வெளியில் சர்வைவ் பண்ணத் தெரியாதோ அப்படித்தான் மகி.
எனக்கு கல்யாணம் அதுவும் ரெண்டு ஒரு கேடு. எதுக்கும் நான் லாயக்கில்ல. யாருக்கும் நேர்மையா இல்ல. நானே ஒரு மனநோயாளி . எனக்குன்னு பொண்ணு வேற. கொடுமை! கொடுமை! நொடிக்குள் நூறு எண்ணங்கள் ஏகி ஸ்ட்ரெஸானாள் அஜுவின் மனைவி.
வடிவேல் தன் மனைவியையே தெரு ஜன்னல் நின்று ரசிப்பது போல அஜுவை வெளியில் அதுவும் பக்கா பார்மல் ட்ரெஸ்ஸில் நீட் யா பார்த்தது தான் இந்தம்மா பொசு பொசுப்புக்கு காரணம். செம்மையாயிருந்தான் வெளிநாட்டில் இருந்தவனல்லவா? ஒட்டிய வயிறும் உயரமும் பேசும்போது ஒரு தோரணையும் அபாரம். இவளுக்கே உருத்துச்சு. பொண்ணு கூட நிற்கிறான் ஊரே பார்க்குது கவலை வேறு.
அன்று முழுக்க ஒன்னுத்துக்கும் உதவாது முடிஞ்சுது. உடல் மட்டுமே சும்மா வேலை பார்த்த போல நடிச்சுட்டு இருந்தது. மனம் அவனிலேயே. போன் பண்ணி கேட்கலாமா? அது எதுக்கு வேலியில் போவதை மடிக்குள் விடுவது போல.. நோ நோ அவனா சொல்லட்டும் கேட்டுப்போம்.
அவர்கள் உறவு தொடர்ந்தால் கண்டும் காணாமல் இருக்கணுமோ?
புது கவலை.
ஐய! பெர்மிஷன் போட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாள். நிம்மதியா பத்து நிமிஷம் படுப்போம். குடையும் மனசை அடக்க தெரில.
அங்கு போனா வந்துட்டியா இப்ப தான் கண்ணு தெரியுதா? புது புருஷன் கிடைச்சதும் உறவெல்லாம் மறந்துபோச்சு. அப்பப்பா என்னா பேச்சு. அம்மா தொண தொணக்க.. எப்பவும் பிரச்சனை தான். ஒன்றாயில்லாமல் வேறு வேறு மாறினால் கொஞ்சம் ரிலாக்சா தானிருக்கும். அது போல அஜு பற்றி இருந்த எண்ணங்கள் எல்லாம் அம்மா வைத்த குற்றச்சாட்டில் திசை மாறி வேறு பக்கம் பயணித்தது.
எனக்கு நேரமே போதல மா.. புரிஞ்சிக்கோங்க.. முடிஞ்சா ஒரு கிளாஸ் காபி கொடுங்க.. தலைவலிக்குது.
தான் முன்பிருந்த ரூமில் குப்புற படுத்துக்கொண்டாள் மகி. சுகமாத்தானிருந்தது.
காபி கொண்டு வந்த கமலா..
“என்ன அந்த குண்டன் வந்தானாமாம்.. சொல்லவேயில்ல .. நீ எப்பவும் அரங்கமாவே திரிஞ்சிட்டு இருந்தா நாங்க என்ன செய்வது? அர்ஜுன் சொல்லலேன்னா தெரியாது. அப்பா ஒற்றே கூச்சல். இனி இந்த பக்கம் வரட்டும் வெட்டிருவேன் குத்திடுவேன்…” இன்னும் பல தொடர
ஹா! சோர்ந்தான். என்னத்த பேச? எரிச்சலாயிருந்தது. தன் வீடே சொர்க்கம் . அமைதியாயிருக்கும். அஜுவின் கண்காணிப்பில் இரு குழந்தைகளும் தேவைக்கு பேசுவார்கள் சாப்பிடுவார்கள் படிப்பார்கள் விளையாடுவார்கள்.
இவள் வேலைக்கு போகும் முன் உதவிக்கு ஒரு அம்மா பாத்திரம் துணி துவைக்க, வீடு பெருக்க, துடைக்க, செய்துட்டு போயிரும். சமையல் இவள். பகலில் வீட்டில் இருப்பதால் மிச்சம் பூரா அஜு. அதே போல இவள் வரும் போது உதவியாளர் திரும்ப வந்து சொச்ச சேலை முடிச்சுட்டு போயிருவாங்க. நைட் டிபன் இவள். வெளியிலிருந்து ஒரு பண்டமும் இவர்கள் பேமிலி வாங்குவதில்லை. இந்த டிஷ் பிரியமா? யூடியுப் பார்த்து பிள்ளைகள் கொண்டே செஞ்சு அதில் சந்தோஷமா இருப்பது இதமாயிருக்கும். பெரிய வீடு அளவான பொருள்கள் சப்தமில்லா இணக்கமான உறவுகள் அவள் ஊஞ்சல் வீடு சொர்க்கம் தான்.
ஊஞ்சல் நினைப்பில் தானாய் உதட்டில் நாணச் சிரிப்பு. அஜு அதில் இவளோடு அடிக்கும் லூட்டிகள். இனியவை. மன்னித்தாள். அஜுக்கு என்ன இஷ்டமோ அப்படியிருக்கட்டும்.
அதில் ரொம்பவும் வெடியா இருக்கானே! பெண்களுக்கு பூரா பிடிக்குமே.. ம்ம்ம் மனசின் ஓரத்தில் கொஞ்சோண்டு சந்தேகம் பொறாமை வேஷம் கட்டி ஓடிக்கொண்டிருந்தது.
===========
என்னாச்சு திடீர்ன்னு அம்மாவீடு விசிட் மகி..
சும்மா தான்.
இங்கு வந்திருக்கலாம்ல.. தனியா போர் அடிச்சுட்டு இருக்கேன்ல.
அதான் வரல.. முதன்முறை ஒரு மார்க்கமாய் பார்த்து மகி லேசா கிண்டல் செய்தாள்.
பிள்ளைகள் இருக்கும் போதே ரகசியமாய் அவள் வழ வழ இடுப்பை கிள்ளினான் கள்ளன். ரச பேச்சால் அவனுக்கு ஒற்றே சந்தோசம்.
தினமும் வரும் அதே நிலா அதே இரவு. தம்பதியர் தனிமை நேரம்.
ஊஞ்சலில் மகி மடியில் சொகுசாய் கண் மூடி அஜு.. இன்று தேடல. எந்த புது நிலையும் ஆராயல. நெட் பக்கம் படம் பார்த்து கத்துக்கக்கூட போகல. சும்மாயிருந்தான்.
மகிக்கு இங்குதான் சந்தேகம் ஹை லெவல் போச்சு.
சும்மாயிருப்பவனா இவன்? கண் மூடிக்கிடந்தவனை உத்து உத்து பார்த்தாள்.
முதல் காலி பண்ணிட்டு ரெண்டு மூணு செஞ்சா சூப்பரா இருக்கும் அதான் பெஸ்ட் மெதட் என்றெல்லாம் நேற்று அவ்ளோ பாடம் எடுWத்தவன் இப்ப ஏன் ப் இருக்கிறான்? சரக்கு காலி P வந்துட்டு இப்படி கள்ளக்கிடை கிடக்கானோ?
ஐயோ! சொக்கா! நான் என்ன செய்வேன்? ஒரு அப்பாவிய இப்படிலாம் சிந்திக்க விடுறான்!! நொந்து போனாள்.
எப்படி கேட்பேன்? குற்றமில்லா நெஞ்சாயிருந்தா இந்நேரம் மதியம் எங்காவது போனீங்களா? கேள்வி கேட்டு ஐயம் தெளிஞ்சிருக்கும். இவளே சந்தேகத்திலிருக்க புயலில் அகப்பட்ட கலமென அல்லாடினாள்.
அஜு!
ம்ம்..
ஏதாவது பேசுங்களேன்..
இன்று விரதம் மகி.. படுக்கப் போலாமா? தூக்கம் வருது.
பூனை போல இவள் மடிமேலேயே நெளிந்து வாயை மூடி கொட்டாவி விட்டு எந்திரிக்க.. சப்புன்னு ஆச்சு மகிக்கு. காரணம் காதலால் சீராட்டியனின் கண்டுக்காத நிலை. என்னாச்சு கவர்ச்சி போயிருச்சோ? புது உறவால் ஆசை தீர்ந்துடுச்சோ? கலங்கினாள்.
பெண்கள் பூரா சாமிகள் போல சேவார்த்தியா கணவன் பூஜை செய்ஞ்சு பழகிட்டா நியமமாய் செய்யணும். இல்லன்னா எதிர்பார்த்து ஏங்கும்.
இருவரும் தங்கள் அறைக்கு சென்று விளக்கணைத்து பக்கம் பக்கம் படுத்து விட்டனர். அஜு பக்கம் அமைதி. இவள் பக்கம் அலைப்புறுதல் என்று புது அனுபவம்.
கேட்டுவிடுவோமா? யார் அந்த பொண்ணுன்னு..ம்
அஜு!
சொல்லுடி..
ஏடூபி கிட்டே உங்களை பார்த்தேன்..
எஸ் எஸ்.. மதியம் ஒரு பிசினஸ் மீட். டீம் மெம்பர்லாம் பேசினோம் சாப்பிட்டோம். அப்புறம் அனுப்பி விட்டுட்டேன். நான் ஆபிஸ் வச்சுக்கலல்ல இப்படி ரேரா நேரில் பார்த்துப்போம்.
மெம்பர்ஸ் சொல்றாரு ஒருத்தணும் கண்ணில் படலையே! காது குறைபாடு உள்ளவள் கண்ணையும் சந்தேகித்தாள்.
ஓ..உங்ககூட ஒரு பொண்ணு ரோஸ் கலர் சுடிதார் போட்ருந்தது..
சுமிதா அந்த பொண்ணு பேர்.. மனுஷ கம்ப்யூட்டர் சொல்லலாம் என்கிட்டே வேலை செய்றதிலேயே இந்த பொண்ணு கற்பூர புத்தி.. அந்த பெண்ணை சில அட்வைஸ்க்காக நேரில் வர வச்சிருந்தேன்.
அப்போ விசாகா இல்லையா?! நிம்மதி
அந்த சுமி பொண்ணு சிறு வயசா மூக்கும் முழியுமா இருக்கே?! அடுத்த கவலை! அடச்சே! எல்லாத்தையும் விடு! விடு! மனமே! உன் இஷ்டத்துக்கு போனா புதைகுழியில் தள்ளிட்டு தான் மறுவேலை பார்ப்ப! ளவீடு ஆழமாய் மூச்செடுத்து தறி கெட்ட மனசை அடக்கினாள்.
அஜுவை உசுப்பனுமே!! இருட்டை முறைத்து யோசிக்க.. அவன் ஒரு முறை போட சொன்ன உடை அடி செல்பில் தான் இருந்தது. போடலாமா? மயக்க ட்ரை பண்ணலாமா? யோசனை வந்த நொடி முகம் சிவந்து போனது. நானா இது? இந்த பன்னி மாத்திடுச்சு. அருகில் குழந்தை போல படுத்திருந்தவனை வலிய நெருங்கி நெற்றியில் முத்தமிட இன்னும் சொகுசாய் இடுப்பை சுற்றி கைப்போட்டு அணைத்தானே தவிர திரும்ப அதே தீண்டாமை போஸ்.
இந்த மன்மதனை என்ன செய்வாள் மகிழ்!! ஐயோ பாவம்!
Nice UD🙂
Thanks
Upload ud daily,please
நன்றி நன்றிகள்
Sema story 😍😍😍
Trying
Semmme interesting story.
Interesting 👌
Story interesting 👌😍😍
superb