ATM Tamil Romantic Novels

மயக்கத்தில் ஓர் நாள் 11

அத்தியாயம் 11

 

“அதிதி.. நான் சொல்றதை பொறுமையா கேளு.. முதல்ல இப்படி வந்து உட்காரு..” என்று அதிதியை அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்தவள், அசோக்கிடம் திரும்பி,

 

“டேபிள் மேல.. ஜுஸ் போட்டு வைச்சுருக்கேன் அதை எடுத்துட்டு வா..” என்று கூற, அசோக் உள்ளே சென்ற நேரம் அதிதியின் அருகில் அமர்ந்து கொண்டு, அவளது கைகளை பிடித்துக் கொண்டாள் ராகினி. அசோக் எடுத்து வந்து கொடுத்த ஆரஞ்சு ஜுஸை அதிதியின் கையில் கொடுத்தவள்,

 

“இதை முதல்ல குடி..” என்று நீட்ட,

 

“ம்ஹும்..” என்று முகத்தை திருப்பினாள் அதிதி. 

 

“எங்கக்கூட சண்டை போட தெம்பு வேணும்ல.. அதுக்காகவாவது இதை குடி.. நான் எல்லாத்தையும் சொல்றேன்..” என்ற ராகினியை கூர்ந்து பார்த்தவள், அவள்‌ கையில் இருந்த பழச்சாற்றை வாங்கி ஒரே மூச்சில் குடித்து விட்டு,

 

“சொல்லு..” என்றவாறு வேறு எங்கோ பார்த்தவாறு அமர்ந்து கொண்டாள். 

 

“இதை எங்கயிருந்து தொடங்குறதுன்னு தெரியலை..” என்று பெருமூச்சு விட்ட ராகினி, தனதறைக்கு எழுந்து சென்றவள், தன் கையில் சிறு ஆல்பத்துடன் திரும்பி வந்தாள். 

 

“இவங்கல்லாம் யாருன்னு தெரியுதா?”

 

“ம்ஹூம்.. தெரியாது..”

 

“அந்த ஃபோட்டோல இருக்குற குட்டிப் பொண்ணு யாருன்னு தெரியுதா?”

 

“ம்ம்.. நான் தான்.. சின்ன வயசுல ஆஸ்ரமத்துல எடுத்த ஃபோட்டோல இப்படி தான் இருந்தேன்..”

 

“நல்லாப் பாரு உன்னோட ஜாடைல இருக்காங்களே.. இதோ இவங்க தான் உன்னோட அம்மா.. இவரு தான் உன்னோட அப்பா..”

 

“என்னோட அம்மா அப்பாவா?”

 

“நம்பலைன்னா.. ஆஸ்ரமத்துல இருக்குற உன்னோட பேர்த் சர்டிபிகேட்இருக்குற டேட்டும் இந்த ஃபோட்டோல இருக்குற டேட்டும் ஒன்னு தான்.. நல்லாப்பாரு..” என்ற ராகினி, அப்புகைப்படத்தின் கீழே இருக்கும் நாள், தேதியை காண்பிக்க, ஸ்தம்பித்து போயிருந்தாள் அதிதி. 

 

“இப்போ நம்புறியா? இவங்க ரெண்டு பேரும் உன்னோட அம்மா.. அப்பான்னு?”

 

“ம்ம்..”

 

“இங்கப்பாரு.. இதோ.. உன்னைய தூக்கி வைச்சுட்டு நிக்குறானே அந்த பையன் யாருன்னு தெரியுதா?”

 

“ம்ஹூம்.. தெரியல..” என்று இருபுறமும் தலையாட்டியவளை ஆதுரத்துடன் பார்த்த ராகினி, 

 

“சொல்றேன்.. அதுக்கு முன்னாடி இந்த பையனையோ.. இல்ல இவன் ஜாடையா யாரையாவது பார்த்த ஞாபகம் இருக்கா?”  என்று கேட்க, தன் கண்களை சுருக்கி யோசித்துப் பார்த்தவளுக்கு, அப்புகைப்படத்தில் இருந்த சிறுவனின் பார்வையும் சிரிப்பும் அக்னி சாஹித்யாவை ஞாபகப்படுத்தியது. 

 

“அ.. அ.. அக்னி சாஹித்யா? இது .. இது.. அவர் தானே?”

 

“நான் இல்லேன்னு சொல்லமாட்டேன்..” என்ற ராகினி, அதிதியின் கைகளைப் பிடித்துக் கொள்ள, அவளை புரியாது குழப்பமாக பார்த்தாள் அதிதி.

 

“உங்கப்பா அம்மாவோட ஊர் திருநெல்வேலி பக்கம்.. உங்கப்பாக்கு சீனியர் தான் எங்கப்பா..  ரெண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ்.. காலேஜ் படிக்கும் போது உங்கம்மா அப்பா ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க.. அது தெரிஞ்சு அவங்க ரெண்டு பேர் வீட்டுலயும் ரொம்ப ப்ராப்ளமாகிடுச்சு.. என்ன செய்யன்னு தெரியாம இருந்தப்போ.. எங்கப்பாவை தேடி மும்பை ஓடி வந்துட்டாங்க.. அவங்க ரெண்டு பேருக்கும் எங்கப்பா தான் கல்யாணம் பண்ணி வைச்சாரு.. நம்ம ரெண்டு குடும்பமும் எப்பவும் ஒன்னாதான் இருப்போம்..நீ பிறந்ததும் மருமக பிறந்துட்டதா எங்கப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாரு.. நீ எப்பவும் எங்க வீட்டுல.. என் அண்ணோட கைல தான் இருப்ப.. உன்னோட ஃபர்ஸ்ட் பர்த் டேக்கு கோயில் போனப்போ.. அங்க நடந்த கலவரத்துல நம்ம குடும்பத்தை காரோட வைச்சு எரிச்சுட்டாங்க.. அதுனால நீ, நான், அண்ணா அப்புறம் அப்பா மட்டும் தான் உயிர் பிழைச்சோம்.. அப்பாக்கு ரொம்ப காயம்.. அவர் உயிர் பிழைக்குறதே ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டாங்க.. போலீஸ்காரங்க நம்ம ரெண்டு மூணு பேரையும் அனாதை இல்லத்தில சேர்த்துவிட்டாங்க.. அங்க பார்த்துக்க வசதியில்லாததுனால நம்ம மூணு பேரையும் வேற வேற ஆஸ்ரமத்துக்கு மாத்துனாங்க.. அண்ணன் எவ்வளோ போராடுனான்.. நம்ம மூணு பேரும் பிரிக்கக்கூடாதுன்னு எவ்வளவோ கெஞ்சுனான்.. ஆனா, ஒரு ஏழு வயசு பையனால எவ்வளவு தான் போராட முடியும்.. அப்போ ஒரு பணக்காரர் வந்து அண்ணனை தத்தெடுத்துட்டு போயிட்டாரு.. கொஞ்ச நாள் கழிச்சு அண்ணன் என்னையும் அவன் கூட கூட்டிட்டு போயிட்டான்.. உன்னைய தேடி அந்த ஆஸ்ரமத்துக்கு வந்தப்போ.. யாரோ ஒரு பெரிய மனுஷன் உனக்கு ஸ்பான்சர்ஷிப் கொடுக்குறாருன்னும் அதுனால உன்னைய அவரோட ஸ்கூலோட ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டதாகவும் சொன்னாங்க.. உன்னைய பார்க்க அங்க வந்தோம்.. உனக்கு அப்போ எங்களை அடையாளம் தெரியல.. எடுத்துச் சொன்னாலும் உனக்கு புரியுமான்னு தெரியல.. அதுனால அண்ணன் என்னையும் அந்த ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைச்சான்.. அண்ணன் என்னைய பார்க்க வர்றப்போ.. என்னைய பத்தி கேட்குறதை விட உன்னைய பத்தி தான் அதிகமா கேட்கும்.. அதுல எனக்கு உன் மேல பொறாமை வந்துச்சு.. அசோக்ல இருந்து ஷாலினி வரைக்கும் ஸ்கூல்ல இருக்குற அத்தனை பேரும் உன்னைய கொண்டாடும் போது, அந்த பொறாமை ரொம்ப பெருசா வளர்ந்துடுச்சு.. என்னைய என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை.. உனக்கு கிடைக்க வேண்டிய எதுவும் உனக்கு கிடைக்கக் கூடாதுன்னு நினைச்சேன்.. உனக்கு போட்டியா தான் அசோக் கூட பழக ஆரம்பிச்சேன்..” என்ற ராகினியின் தோளில் கை வைத்து அழுத்திய அசோக்கை புன்னகையோடு பார்த்த ராகினி,

 

“உனக்கு போட்டியா பழகுறேன்னு தான் அசோக் கூட பழகுனேன்.. ஆனா, அப்புறம் அவனை முழு மனசோட விரும்ப ஆரம்பிச்சிட்டேன்.. நீங்க ரெண்டு பேரும் வேலை பார்க்குற கம்பெனியில நானும் வந்து சேர்ந்தேன்.. அண்ணன்கிட்ட நானும் அசோக்கும் லவ் பண்ற விஷயத்தை சொன்னப்போ.. அசோக் மேல ரொம்ப கோபப்பட்டான்.. நம்பிக்கை கொடுத்து ஒரு பொண்ணை ஏமாத்துறது ரொம்ப பெரிய பாவம்னு சொன்னான்.. நாங்க அதையெல்லாம் காதுலயே வாங்கல.. அண்ணனுக்கு தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்.. அதை தெரிஞ்சுகிட்டவன், உன்னைய வந்து பார்த்தான்.. உன்னைய பார்த்ததுக்கு அப்புறம் என் கூட இப்போ வரைக்கும் அவன் பேசவேயில்ல.. அசோக் கூட  தான் பேசுவான்.. சாரி.. ரொம்ப சாரி.. உன் வாழ்க்கையை உன்கிட்ட இருந்து எடுத்துக்கிட்டேன்.. அதுக்கு கடவுள் எனக்கு சரியான தண்டனை கொடுத்துட்டான்..” என்றவளை தன் திருப்பிய அசோக்,

 

“ராகி..  இப்படி பேசக்கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. நமக்கு என்ன வயசா ஆகிடுச்சு.. இன்னும் எத்தனையோ காலமிருக்கு.. கண்டிப்பா நமக்கு புள்ள பிறக்கும்..” என்று அதட்ட,

 

“இல்ல.. அச்சு.. இன்னைக்கு மட்டும் தான்.. அப்புறம் இதைப் பத்தி நான் பேசவே மாட்டேன்..” என்று சிறு புன்னகை புரிந்தவள், அதிதியின் புறம் திரும்பி,

 

“அதுனால தான் சொல்றேன்.. நாங்க எதையும் உன்கிட்ட இருந்து மறைக்கணும்னு நினைக்கல.. சொல்லக்கூடிய சந்தர்ப்பம் அமையல.. அண்ணன் மேல எந்த தப்பும் இல்ல.. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்.. ஐம் ரியலி சாரி அதிதி..” என்ற ராகினியின் கையில் சிறு அழுத்தம் கொடுத்து அதிதி, அங்கிருந்து எழுந்து சென்று, உணவு மேஜையில் அமர்ந்து கொண்டாள்.

 

“என்ன பசிக்கலையா?” என்று கேட்டவாறே தனது தட்டில் உணவை எடுத்து வைத்த அதிதி, அதனை சாப்பிடத் தொடங்க, மலர்ந்த முகத்துடன் அவளருகே சென்று அமர்ந்து கொண்டாள் ராகினி. 

 

“அப்போ உனக்கு எங்க மேல கோபமில்ல தானே?”

 

“உன் மேல கோபமில்ல.. ஆனா, அதுக்காக உன்னோட அண்ணன் மேல கோபமில்லன்னு சொல்லலியே?!”

 

“அண்ணா பாவம்..”

 

“நீ உன் பக்கம் தான்னா சொல்லிரு.. நான் கிளம்பி வேற எங்கேயாவது ரூம்மெடுத்து தங்கிக்குறேன்..”

 

“இல்ல.. இல்ல.. நான் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்.. நீ எங்கேயும் போயிடாத..”

 

“ம்ம்.. அந்த பயமிருக்கணும்.. உன் அண்ணனுக்கும் எனக்கும் இருக்குறதை நான் பார்த்துக்குறேன்.. நீ உள்ள வராம தள்ளி நின்னு வேடிக்கை மட்டும் பாரு..” என்ற அதிதி சாப்பிட்டு விட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள். அவள் மனதில் பல கேள்விகள் எழுந்து, அவளை நிலையில்லாது தவிக்கச் செய்தது. அதே சமயம் அதிதியின் போனிற்கு பல முறை அழைத்து சோர்ந்தான் அக்னி சாஹித்யா. அவன் அழைத்த எந்த ஒரு அழைப்பையும் அதிதி ஏற்கவில்லை.  அதன் தொடர்ச்சியாக ராகினியை அழைத்தான் அக்னி சாஹித்யா.

 

“சொல்லுண்ணா..”

 

“அதிதி எங்க?”

 

“மேல ரூம்ல தான் இருக்கா..”

 

“அவளோட போன் எங்க?”

 

“அவ ரூம்ல தான்  இருக்கும்?!”

 

“உண்மையை சொல்லு.. எல்லாத்தையும் சொல்லிட்டியா?”

 

“ம்ம்.. ஆமா.. ரொம்ப ஷாக்கிங்ல இருக்கா..”

 

“ஓ! அதான் நான் ஃபோன் போட்டா எடுக்கவே மாட்டேங்குறாளா?”

 

“அவளுக்கு இருக்குற அதிர்ச்சில ஃபோன் எடுத்தாத்தான் ஆச்சரியம்..”

 

“நீ போய் அவளை ஃபோன் எடுக்க சொல்லேன்..”

 

“கதவை திறந்தால் தானே ஏதாவது சொல்லுறதுக்கு? உன் பேச்சை எடுத்தாலே மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் வருது.. இதுல நான் எங்க போய் பேச? நீயே நேர்ல வந்து பேசிக்கோ..”

 

“எனக்கு இங்க பெரிய வேலை ஒன்னு இருக்கு.. அதை முடிச்சிட்டா எல்லாரோட கணக்கும் நேராகிடும்.. அதை  முடிச்சிட்டு சீக்கிரமே வர்றேன்..”

 

“வா.. வா.. உனக்கு ஒரு குட் நியூஸ் வெயிட்டிங்..”

 

“கங்கிராஜுலேஷன்.. நான் மாமாவாகப் போறேனா?”

 

“இல்ல.. அப்பாவாகப் போறேன்..” 

“என்ன? நான்.. நான்.. அப்பா.. ஓ மை காட்! எனக்கு இப்பவே அதிதியை பார்க்கணும் போல இருக்கு.. ஆனா, வேலை இருக்கே? ராகி.. நீ அதிதியை நல்லாள் பார்த்துக்கோ.. அடுத்த வாரம்.. நான் அங்க வந்துடுவேன்..”

 

“இதை நீ சொல்லணுமா? அவளை உன் அளவுக்கு இல்லேன்னாலும் ஓரளவு நல்லாவே பார்த்துக்குவேன்.. நீ கவலைப்படாத..”

 

“தாங்க் யூ ராகி.. தாங்க் யூ சோ மச்..” என்றவன் கனவுகளோடு போனை அழைக்க, அவனை எப்போது பார்த்தாலும் கடித்து குதறும் கோபத்தோடு காத்திருந்தாள் அதிதி. வயிற்றில் இருக்கும் குழந்தையின் மசக்கை ஒருபக்கம் என்றால் மன்னவனின் ஞாபகம் மறுபக்கமென்று பாடாய் படுத்தியது அதிதியை. இன்றோடு அசோக் வீட்டிற்கு வந்து ஐந்து மாதங்களான நிலையில் பெண்ணவளிள் கோபம் மட்டும் குறைந்தபாடில்லை. அக்னி சாஹித்யாவின் போனிற்கு செவி சாய்க்கவுமில்லை.. சஷ்மியின் அழைப்பை மட்டும் ஏற்று, அவளோடு பேசினாள் அதிதி. ஆதலால், சஷ்மியின் அழைப்பின் மூலமாக தன்னவளின்‌ குரலை கேட்டு கொண்டிருந்தான் அக்னி சாஹித்யா. பூ தொடுத்துக் கொண்டிருந்த அதிதியின் காதில் அழைப்பு மணி ஓசை விழவே, மெல்ல எழுந்து சென்று, கதவை திறந்தவளை சுற்றி வளைத்தனர் டெல்லியின் கூலிப்படையினர். இனி அதிதியின் நிலையென்ன? குள்ளநரி கூட்டத்திடம் இருந்து சிறுமானை காக்க சிங்கமென வருவானா அக்னி சாஹித்யா?  

1 thought on “மயக்கத்தில் ஓர் நாள் 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top