இஷ்டம் -16
“எங்கேயாவது இப்படி நடந்து நீ பார்த்து இருக்கியாடா? பெத்த அம்மாவே பிள்ளை கிட்ட இருந்து மருமகளை பிரிச்சி கூட்டிட்டு போனதை? இதுவரைக்கும் எந்த குடும்பத்துலயாவது நடந்திருக்கா? ஏன் சீரியல் நடந்திருக்கா? எங்க அம்மா.. என்னை பெத்த புண்ணியவதி.. பண்ணுனாங்க டா! பிரிச்சு கூட்டிட்டு போய்டாங்க..!” என்று கண்ணனின் வீட்டுக்குள் அமர்ந்து ஒரு கையில் சரக்கு பாட்டிலும் மறுகையில் ஃபோனை பார்த்துக் கொண்டே உளறி குழறி பேசிக் கொண்டிருந்தவனை முறைப்போடு பார்த்தான் கண்ணன்.
காரிகையின் கன்னத்தில் கடித்த தடத்தை பார்த்த உடனே கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்று விட்டார் பாமா.. ‘ஏற்கனவே மகன் பிடிக்கவில்லை.. பிடிக்கவில்லை என்று சொல்லி கல்யாணம் செய்து இருக்கிறான், இதில் செத்த நேரம் அவளோடு பேசினதுக்கு மதியம் சமைக்கலை என்று சண்டை போடுகிறான்.. இப்போது பார்த்தால் அவ கன்னத்தில் காயம்!! என்ன வன்புணர்வா?” என்று பயந்து விட்டார்!!
இதற்கு மேல் இந்த பெண்ணை இங்கே விட்டுவைத்து அவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால்.. ஒரு பெண்ணாக தன்னைத்தானே நியாயம் செய்து கொள்ள முடியாது என்று எண்ணிக் கொண்டே காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அம்மா.. பாமா.. அக்கறை இருக்க வேண்டியதுதான்! ஆனால் அது ஒவர் ஃப்லோ ஆனா சர்க்கரை கூட இனிக்காது!!
முதல் விளையாட்டு செய்கிறார்கள் அத்தை என்று நினைத்தவள் அமைதியாக இருக்க.. அவரோ அவளை இழுத்துக் கொண்டு வர “ஐயோ.. அய்த்த நான் சொல்றதை கேளுங்க!” என்றவளிடம், “மூச்சு..! பேசாதே!” என்று மிரட்டி அழைத்துக் கொண்டு சென்றார்.
“இவன் செய்து வைத்த வேலையை உங்க மாமா பார்த்தா.. அவ்வளவு தான்!! ஒரு ஆட்டம் ஆடி விடுவார்! அவர் பத்தி இன்னும் சரியாக தெரியல உன் புருஷனுக்கு!” என்றார் பயத்தோடு!!
“அதுவும் நீனா… அவர் உன்னை மருமகளா.. பொண்ணா பார்க்கிறதே இல்லை..” என்றதும், “ஐயோ. அய்த்த..!” என்று மேகலை அலறினாள்.
“இல்லம்மா.. அதையும் தாண்டி தெய்வீகமாகத் தெரியுற நீ அவருக்கு! இதுல இவன் இப்படி பண்ணியதை பார்த்தார்?? அவ்வளவுதான்!! சாமி.. கண்ணு நீ என்ற கூட வந்து இரு கண்ணு ஒரு ரெண்டு நாளைக்கு!! அய்த்த கூட இரு.. அந்த பயலுக்கு எல்லாம் புரிஞ்சு வரட்டும். அப்புறம் அவனை வச்சு வெளுத்துட்டு அவன் கூட அனுப்பி வைக்கிறேன்.. நான் சொல்றதை கேளு ராசாத்தி” என்று கெஞ்சி கொஞ்சி மிஞ்சியே அவளை காருக்குள் தள்ளி இதோ சென்னையை நோக்கி அழைத்து வந்து விட்டார்.
“அப்புறம் மேகலை… அய்யோ இந்த மேகலை ரொம்ப பெருசா இருக்கு நான் ஒன்ன ஷார்ட்டா மேகினு கூப்பிடவா?” என்றதும் தன்னவனின் மேகியான அழைப்பு அப்போது அவள் காதில் ஒலிக்க.. உதடு மடித்து கடித்தவள் சரி என்று தலையை ஆட்டிவிட்டாள்.
“இப்ப சொல்ல போற தான் ரொம்ப முக்கியமான விஷயம்..” என்றார் முன்னே இருந்த டிரைவருக்கு கேட்காமல் குசுகுசுப்பாக..
“அங்க நடந்தது எதுவும் உன் மாமாவுக்கு தெரிய வேணாம்! தெரிஞ்சுது.. அவ்வளவுதான் உன் புருஷன்!! எனக்கு இருக்கிறது ஒரே புள்ளைங்கறதை விட.. உனக்கு இருக்கிறது ஒரே ஒரு புருஷன்!!” என்று அவர் அபிநயத்துடன் கூற கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு பக் என்று சிரிப்பு வந்தது.
“உண்மைதானுங்க அய்த்த.. ஊர்ல உள்ளவங்களுக்கு எல்லாம் நாலு அஞ்சு இருக்க… எனக்கு மட்டும்தான் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு ஒத்த புருஷர் இருக்காருங்க..” என்று அவளும் அதே அப்பாவியான முகத்தோடு கூற..
“என்னது?” என்ற பாமா அதிர..
“அதானுங் அய்த்த.. புருஷன்.. புருஷன்.. நீங்க சொன்னீங்க இல்ல எனக்கு ஒரே ஒரு புருஷன்!” என்றதும் ஒரு நிமடம் யோசித்தவர், பின் அவளின் குறும்பில் “வாயாடி..!” என்று அவள் தோளில் அடித்து சிரித்தார்.
“சரி மாமா கிட்ட எதுவும் சொல்லாத அத்தை வந்தாங்க.. அவங்களோட வந்தேன் மட்டும் சொல்லு” என்றதும் சரி சரி என்று ஒரு தலையாட்ட, காலையில் கிளம்பிய மனைவி இரவு வீட்டுக்கு வந்துவிட.. அதுவும் மருமகளையும் கூட அழைத்து வந்ததை யோசனையோடு பார்த்தார் கிருஷ்ணகுமார்!!
அதற்குள் இருவரும் குளித்து முடித்து வேறு உடையில் இருக்க மேகலையும் தன் கன்னத்தின் தடத்தை மேக் போட்டு மறைத்துக் கொண்டாள்.
உணவு பரிமாறும்போதே கணவனின் கேள்வி பார்வையில்..
“இல்லைங்க.. உங்க புள்ள ஏதோ ப்ராஜெக்ட் விஷயமாக வெளியூர் போறேன் மா.. நான் வருவதற்கு ரெண்டு நாளாகும் நீங்க இங்க இருந்து அவளை பார்த்துக்குங்கன்னு சொன்னான். அதுக்கு எதுக்கு அந்த பிளாட்டில் நாங்க மட்டும் உக்காந்துகிட்டு.. அதான் மேகியையும் நம்ம கூட வந்து இருக்கட்டும்னு.. இங்கேயே கூட்டிட்டு வந்துட்டேன்!”
“மேகியா???” என்று கிருஷ்ணகுமார் பார்க்க..
“அதாங்க.. நம்ம மருமக மேகலையை சுருக்கி மேகினு கூப்பிட்டேன்!” என்றார் பூரிப்போடு பாமா! கணவன் தன்னை மெச்சுதலாக பார்ப்பார் என்ற ஆவலில்..
“நல்லா வாயில வருது எனக்கு.. அழகான பேரு மேகலை.. அத போய் மேகி நூடுல்ஸ் இப்பீனு.. கேட்கவே கண்றாவியா இருக்கு..” என்று அவர் திட்ட..
பாமாவின் எதிர்பார்ப்பு பூஜ்ஜியம் ஆனது. என்றுதான் இந்த கணவர்கள் நம்ம எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறார்கள்??? மிகச் சரியாக தவறாகவே நடந்து கொள்வார்கள்!!
“ஐயோ மாமா… அய்த்தைய திட்டாதிங்க.. எல்லாரும் எங்க வீட்ல மேகலைனு தானுங்க என்னை கூப்பிடுவாங்க.. அய்த்த இந்த மாதிரி கூப்பிடுறதும் எனக்கு புடிச்சு தானுங்க இருக்கு.. என் மேல உள்ள அன்புனால தானுங்களே கூப்பிடுறாங்க.. நீங்க வையாதீங்க என்ற அய்த்தையை..” என்றதும் “நீங்க சொன்ன சரிங்க பாப்பா!!” என்று எரிச்சல் முகமாக இருந்தவர் மருமகளிடம் சிரித்த முகமாக மாறினார்.
‘அப்பாவும் பிள்ளையும் ஒரே மாதிரி எப்ப கோவப்படுறாங்க? எதுக்கு கோபப்படுறாங்கன்னு தெரிய மாட்டேங்குது..’ என்று நினைத்தவள் அமைதியாக உண்டு விட்டு அவர்கள் அறைக்கு சென்று விட்டாள்.
கல்யாணம் முடிந்து இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே இங்கு இருந்தது. அதுவும் சொந்தக்காரர்கள் விருந்து.. பார்ட்டி... வரவேற்பு.. என்று சென்றுவிட.. பெரிதாக தங்கியதில்லை!!
இரவு மட்டும்.. அதுவும் சில நேரம் காமத்திலும் சில நேரம் மோகத்திலும் பல நேரங்கள் தூக்கத்திலுமே கழிந்து விட.. இன்றுதான் நிறுத்தி நிதானமாக அவர்கள் அறையை பார்த்தாள்.
இங்கேயும் அவளுக்கான ஆடைகளை வைத்திருந்தார் பாமா. “எல்லாத்தையும் வழிச்சி எடுத்துட்டு போகாதடான்னு சொன்னா.. அந்த பய கேட்கவே மாட்டான். ஆனாலும் நான் அப்பப்போ வாங்கி அவனுக்கு வெச்சிருவேன். நீயும் அதே மாதிரி சில புடவைகளை சுடிதார் கொஞ்சம் வச்சுக்க மேகலை.. இங்க வந்து தங்கும் போது எல்லாத்தையும் தூக்கிட்டு வரணும்னு அவசியம் இல்லை பாரு” என்று முன்னமே கூறி இருக்க.. அதை போலவே அவள் சில உடைகளை இங்கே வைத்திருந்தாள் அவசர தேவைக்கு என்று!!
இன்று அதில்தான் நைட்டி எடுத்து போட்டுக் கொண்டு உறங்க போனவளுக்கு என்ன தோன்றியதோ கணவனுக்கு அழைக்கலாம் என்று ஃபோனை தேட.. அது அவளிடம் இல்லை. “ஐயோ இந்த அய்த்த பண்ண அவசரத்தில் ஃபோனையும் மறந்து வச்சிட்டு வந்துட்டேனே” என்று வருந்தியவாறு உறங்கி விட்டாள்.
ஆனால் அங்கு கார்த்திக்கோ சிறிதும் உறக்கமே இல்லை!!
அன்னை சென்றவுடன் அதிர்ந்து நின்றவன் அவன் பால்கனி வழியே எட்டிப் பார்க்கும்போது.. அவனுக்கு டாட்டா காட்டி மருமகளோடு காரில் ஏறி விட்டார் பாமா.
சிறிது நேரம் அவர்கள் அறைக்குள்ளேயே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
நேரம் செல்ல செல்ல அவர்கள் காதல் கொண்டு மோகித்த கணங்கள் எல்லாம் காட்சிப்பிழையாய் வந்து போக.. தலையை உலுக்கி எழுந்து கொண்டான்.
வீட்டினுள் எங்கே சென்றாலும் “ஏனுங் மாமா…” என்ற பெண்ணின் ஆசையான குரலும்..
“விடுங் மாமா..” என்று அவன் அணைப்பில் இருந்து திமிறியவளின் கெஞ்சலும்..
“மாமா.. மாமா..” என்று கொஞ்சும் கிளியாய் அவளின் மொழிகளும் திரும்பத் திரும்ப அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க.. இதற்கு மேல் ஆகாது என்று வெளியே சென்றவன் பார் செல்லலாம் என்று நினைக்க.. கண்ணன் வீட்டை தாண்டும் போது தான் அவனுக்கு கண்ணனை நினைப்பே வந்தது!!
வேகமாக அவன் வீட்டின் கதவை தட்டினான். யாரு என்று பார்த்த கண்ணன் இவனை கண்டவுடன் கதவை சாத்தும் முன் வேகமாக அவனை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவன், கொஞ்சம் கூட யோசிக்காமல் அவன் எப்பொழுதும் ப்ரிஜில் வைத்திருக்கும் சரக்கு பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து விட்டான்.
நேற்று ஜப்பானிய ப்ராஜெக்ட்டில் அவமானமாகி அவர்கள் பேச்சு கேட்க முடியாத அளவுக்கு கேட்டு நொந்து நூலாகி வந்தவனுக்கு, ஆதரவளித்தது என்னமோ.. அவன் பிரிட்ஜுக்குள் அடைகாத்து வைத்திருந்த சரக்கு தான்!
மாது தான் இல்லை மதுவையாவது உள்ளே அனுப்புவோம் என்று நேற்று இரண்டு பாட்டில் காலி செய்துவிட்டு ஒரு பாட்டில் மட்டும் மீதம் வைத்திருந்தான் கண்ணன்!! அவ்வளவு கோபம் கார்த்திக் மீது கண்ணனுக்கு.
“எப்படி எல்லாம் முன்னேற வேண்டும் என்று சொன்னான்… என்ன எல்லாம் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும்.. எப்படி எல்லாம் உழைக்க வேண்டும்.. என்று அத்தனை திட்டம் போட்டானே அத்தனையும் பொண்டாட்டிங்கிற பேச்சு வந்த உடனே கழுவி ஊத்திட்டு போயிட்டானே.. பாவி!! படுபாவி!! உன்னால என் கேரியரே போச்சுடா! தேடி வருவ இல்ல நீனு.. அப்போ இருக்கு டா உனக்கு!” என்று நேற்று அத்தனை முறை வந்த கார்த்திக்கின் ஃபோன் காலை தவிர்த்து விட்டான். இன்றும் அவன் காலை வேளையில் ஃபோன் செய்யும்போது எடுக்கவில்லை. அதை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்!!
இப்பொழுது அதிரடியாக கதவை திறந்து கொண்டு வந்து.. அதிலும் தான் வைத்திருந்த.. ஒன்னே ஒன்னு கண்ணே கன்னு சரக்கு பாட்டிலை எடுத்து அவன் குடிப்பதை காணக் காண பத்திக் கொண்டு வந்தது கண்ணனுக்கு.
ஆனாலும் அவன் வாய் திறக்கவில்லை. ‘இவனிடம் ஏதாவது கேட்டால் காரணம் சொல்லி மழுப்புவான். அதுவம் இப்போது தண்ணி வேறு… அன்று பிடிக்காத திருமணம் என்றான்.. இன்று பொண்டாட்டியை விட்டு நகர மாட்டேங்கிறான்!! என்னங்கடா உங்க கல்யாணம்? அதுக்கு சிங்கிளே பெஸ்ட்!!” என்றபடி கைகளால் மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டு காட்டமாக அமர்ந்திருந்தான் கண்ணன்.
“என்ன டா மைண்ட் வாய்ஸா.. கன்டினியூ.. கன்டியூனி…” என்று பாட்டிலை வாயில் கவுத்தான். கண்ணன் பேசாமல் அமர்ந்திருப்பதை கண்டவன் “கோச்சிட்டியா மச்சான்?” என்றதும் அருகில் இருந்த பேப்பரை தூக்கி போட்டான் கார்த்திக் மீது!!
“ரொம்ப கோவமா இருக்க போலயே.. சரி! கோச்சுக்க.. கோச்சுக்க..” என்று இவன் சரக்கு அடித்தான்.
“அவ்வளவு கடுப்பாகுதுடா.. எங்க அம்மாக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல டா! புது பொண்டாட்டிய.. கடிக்காம பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டியவா கடிக்க முடியும்? அதுவும் என் பொண்டாட்டி தானே கடிச்சேன்!;அதுக்கு என்னமோ நான் காஜி பையன் மாதிரி அவள புடிச்சி இழுத்துகிட்டு போயிட்டாங்க டா” என்று புலம்பி தள்ளிக் கொண்டு இருந்தான் கண்ணனிடம்..
“எது காஜியா?” என்று அதுவரை கோபத்தில் இருந்தவன் இப்பொழுது வெடித்து சிரித்தான்.
“பக்கி.. பன்னாட.. சிரிக்கிற நீ!” என்று அவனை பிடித்து அடிக்க..
கண்ணனோ இன்னும் அதிகமாக சிரித்தான். இவனோ அவன் மீது விழுந்து உருள.. அவன் இவன் மீது உருள.. இருவரும் மாறி மாறி உருண்டு புரண்டு சண்டை போட்டனர் சத்தத்தோடு!!
அன்னை மீது கோபத்தில் இருந்தவன் கண்ணன் வீட்டு கதவை தட்டி இருக்கும்போதே அவர்கள் ஃப்ளோரில் இருக்கும் அந்த வயதான பெரியவர் வெளியே வந்து எட்டிப் பார்த்தார். இவன் அதை கண்டு கொள்ளாமல் கண்ணனை இடித்து தள்ளிக்கொண்டு ஆவேசமாக உள்ளே நுழைந்ததும் அவர் கண்கள் விரிந்தது.
போதாக்குறைக்கு இவர்கள் கதவு சாத்தாமலே உள்ளே அமர்ந்து தண்ணி அடிக்க.. அதில் ஒரு சொட்டு கூட தனக்கு தராமல் குடிக்கும் நண்பன் மீது கோபம்.. நேற்று காலையில் ப்ராஜெக்ட் பாதியில் விட்டு போன கடுப்பு.. எல்லாம் சேர்ந்துதான் அவனை காஜி என்றதோடு வெடித்து சிரித்தான் கண்ணன்.
ஏனென்றால் கார்த்திக் கண்ணில் கனல் காக்கும் ஒரு நவ யுக கொங்கணவர். அவனை இப்படி சொன்னதும் இவனும் கிண்டலாக சிரித்தான்.
“விடுடா.. விடுடா.. முடியலடா!” என்று கண்ணன் கார்த்திக்கின் கீழ் அவனுடைய உடும்பு பிடியில் கத்த.. “இனிமே இப்படி எல்லாம் சிரிக்க மாட்டேன் டா… நீ சொல்றத கேக்குறன்டா!” என்று ஈன ஸ்வரத்தில் அவன் கத்த..
“தட் மை பட்டி!!” கார்த்திக் அவன் கன்னத்தில் தட்ட..
அப்போது படார் என்று கதவை திறக்க..
வந்த முதியவர் இருவரையும் விழிவிரித்து பார்த்தவர், பின் தலையில் தட்டிக் கொண்டு “கருமம்.. கருமம்!! அழகான பொண்டாட்டி இருந்தாலும் இவனுக்கு இந்த மாதிரி கேக்குது!” என்று திட்டிக் கொண்டே செல்ல..
முதலில் இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு பின்னால் தான் கார்த்திக்கு புரிய.. “ச்சீ.. கருமம்!” என்று அவனும் கண்ணன் மீதிலிருந்து எகிறி குதித்து தள்ளி அமர்ந்தான்.
ஆனால் கார்த்திக்கு புரிந்தது கண்ணனுக்கு புரியவில்லை. “ஏண்டா.. அந்த ஓல்டு நம்மள திட்டிட்டு போகுது? உன் பொண்டாட்டி ஊருக்கு போனா நான் என்னடா பண்ணுவேன்? அதுக்கு என்னை பார்த்து இவரு ஏன திட்டிட்டு போறாரு? வயசான புத்தி கூட வாடா போயிடும்?” என்று கார்த்திக்கிடம் கேட்டான் கண்ணன்.
“அடேய்…!!” என்று கலகலத்து சிரித்தான் கார்த்திக்!!
“அவரு சொன்னது இன்னுமா டா உனக்கு புரியவில்லை?” என கேட்ட கார்த்திக் இப்போது அவனைப் பார்த்து நமட்டு சிரிப்போடு “நானாவது பரவாலடா.. எங்க அம்மா கிட்ட காஜி தான் பேர் வாங்கினேன்! நீ என்ன பேர் வாங்கி இருக்க தெரியுமா?” என்று வாய் பொத்தி கொண்டு கார்த்திக் சிரிக்க..
“சொல்லி தொலடா பக்கி.. பயந்து பயந்து வருது!” என்று அருகில் இருந்த பாட்டிலை தூக்கி எறிய..
அதை உருண்டு கேட்ச் பிடித்தவன் “ஒன்னு தான்டா இருக்கு..” என்று அதை கைப்பற்றிக் கொண்டான் கார்த்திக்.
“உன்னை.. உன்னை.. அந்த ஆளு..” மீண்டும் சிரித்து “‘அவனு’ நினைச்சுட்டு பேசுறாரு டா!” என்று சொல்லி சத்தமாக சிரிக்க..
“எது அவனா?” என்று புரிந்த உடன் “பாரேன் இந்த ஓல்டுக்கு இருக்கிற கொழுப்ப.. எதையாவது அரைகுறையா தெரிஞ்சிக்கிட்டு கண்டதையும் பேச வேண்டியது!
“ஆமா டா.. என்ன இருந்தாலும் எனக்குனு ஒரு டேஸ்ட் இருக்குல!” என்று கார்த்திக் கூற..
கண்ணனும் அனைத்தையும் மறந்து நண்பனோடு சிரித்தான்.
“சரக்க முழுசா நீயே குடிச்சிடாத டா.. அதுல எனக்கு கொஞ்சம் கொடுடா” என்று பாய்ந்து பாட்டிலை அவனிடமிருந்து பிடுங்கினான்.
இருவரின் சிரிப்பு குரலோடு “இது எனக்கு.. எனக்கு.. கொஞ்சம் ப்ளீஸ்!” என்று கண்ணனின் கெஞ்சலும் சற்று தள்ளி மெதுவாக வீட்டை நோக்கி நடந்து கொண்டு இருந்த அந்த பெரியவரின் காதில் விழ…
“ஐயோ ஆண்டவா!! கலிகாலம்.. கலிகாலம்!!” என்று காதை பொத்திக் கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடினார்!!
பாமா தன்மகள் அனித்ராவை வரவழைத்து இருந்தார்.. மறுநாள் நண்பகல் போல் வீட்டிற்கு வந்த மகளை பார்த்து “வா.. அனி..” அவர் அழைக்க.. அருகில் இருந்த மேகலையும் அவளைப் பார்த்து சேர்த்து “வாங்க அண்ணி..!” என்றாள். தன் கையில் கொண்டு வந்த இணைப்புகளை மேகலையிடம் கொடுத்தவள் “நீ என்ன அண்ணினு கூப்பிடுறியா.. இல்லை எங்க அம்மா மாதிரி அனினு கூப்பிடுகிறியானே தெரிய மாட்டேங்குது?” என்று சிரித்தபடி சொல்ல…
“அச்சச்சோ.. அண்ணினு தானுங் கூப்பிட்டேன்” என்றாள் மெல்ல பதறியபடி..
“ஹே... நான் சும்மா கிண்டல் தான் பண்ணேன்” என்று பெண்கள் மூவரும் அமர்ந்துவிட.. பேச்சுவாக்கில் பாமா.. தான் மேகலையை இங்கு அழைத்து வந்ததற்கான காரணத்தை கூறிவிட்டார்.
மகளோ ‘எது காஜியா?’ என்று திகைத்தவள் தம்பி மனைவியை திரும்பி பார்க்க.. அவளோ உதட்டை கடித்து முகிழ்த்த நாணத்தை பெருவிரலை நிலத்தை அழுத்தி அடக்கியவாறு அமர்ந்திருந்தாள்.
அவளின் நாணிச் சிவந்த முகமே சொன்னது கன்னத்தின் காயத்திற்கு காரணம் எதுவென்று!! மெல்ல அவள் கையை பிடித்து அழுத்திட.. நிமிர்ந்து பார்த்த தம்பி மனைவியிடம் கண்ணடித்து சிரித்தவள், “மா சத்தியமா சொல்றேன்.. உங்களுக்கு அறிவே இல்ல தான். அப்பா திட்றதுலையும் தப்பே கிடையாது! உங்களை யாரு இப்போ அங்க போக சொன்னா? இதுல எல்லாமா நீங்க போய் தலையிடுவீங்க? கொஞ்சமாச்சும் இங்கிதம் இருக்கா உங்களுக்கு?” என்று கிருஷ்ணகுமாரின் மகள் என்று நிரூபித்தாள் அனித்ரா.
“அப்படியா சொல்ற அனி? சண்டை இல்லைனா..??” என்று மருமகளை எட்டிப் பார்க்க அவளோ “அச்சோ அய்த்த..” என்று இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். பாமா முகமோ தப்பு செய்து மாட்டிக்கொண்டு குழந்தை போல் திருதிருத்தது.
“சரி விடு.. அழைத்து வந்ததுதான் அழைத்து வந்தாச்சு.. ரெண்டு நாள் இருந்துட்டு போகட்டும்!! அந்த பயலும் இந்த வீட்டுக்கு பக்கமே வரவே மாட்டேங்குறான். பொண்டாட்டி கூப்பிட்டு போக வரும்போது ரெண்டு அவனையும் நாள் இங்கே பிடிச்சு வைச்சிடலாம்!” என்று மிடுக்காக பேசினார் அதுவரை இருந்த அப்பாவித்தனம் முகத்தில் இல்லை!!
“என்னம்மா ப்ளேட்டை மாத்திட்ட பாத்தியா நீ?” என்று அனித்ரா சிரிக்க மற்ற இருவரையும் அதில் கலந்து கொள்ள.. வீட்டில் ஆனந்தம் அன்லிமிடெட்!!
சந்தோசமாகத்தான் சென்றிருக்கும் மேகலை கார்த்திக் வாழ்க்கை.. மாணிக்கவேலின் தலையீடு உள்ளே நுழையாமல் இருந்தால்..
இந்த தற்காலிக பிரிவு நிரந்தர பிரிவாக மாறுமோ??
இஷ்டமாகுமா??
Super sis