ATM Tamil Romantic Novels

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 17

இஷ்டம் -17

 

அனித்ரா அடுத்த நாளும் தாய் வீடு வந்துவிட.. பெண்கள் மூவரும் தங்கள் கடைகளுக்கு விஜயம் செய்தனர். இத்தனை நாளில் மேகலை இங்கே வந்ததில்லை!! அவர்களுக்கு பிரபலமான துணிக்கடைகள் இருக்கிறது என்பது மட்டுமே அவளுக்கு தெரியும். ஆனால் சென்றதில்லை!! இன்றைக்கு பார்த்தவுடன் வாயை பிளந்தாள் “இவ்ளோ பெரிய கடையை வைச்சிக்கிட்டு அவரு ஏனுங் அங்க போய் கஷ்டப்படுறாருங் அய்த்த?” என்று சாதாரண மனைவியாக அவள் கேள்வி கேட்க.. பெருமூச்சு ஒன்று மட்டுமே பாமாவிடமிருந்து.

 

“என்னதான் குடும்பத் தொழில் இருந்தாலும்.. அவனுக்கு பிடித்தம் ஒன்று இருக்கிறது இல்லையா மேகலை?” என்றாள் அனித்ரா சாதாரணமாக.. அது சுருக் என்று தைத்தது அவளுக்கு.

 

“அன்னைக்கு மாமா சொன்னாங்களே இதுல இன்னும் சாதிக்கோணும்னு.. இன்னும் கம்பெனியை முன் கொண்டு வரணும்னு. இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு.. ஆனா நாம தான் அரக்கி முழுக்கீனு அவரை குழப்பி விட்டுடோமோ? அதான் அவருக்கு நம் மீது பாராமுகமோ? இயல்பாக பொருந்த முடியலையோ?” என்று தனக்குள் ஏதேதோ சிந்தித்து கொண்டு இருந்தாள். அவர்களின் அந்தரங்க நேரங்களை நினைத்திருந்தாலே இம்மாதிரி குழப்பங்கள் மனதில் எழ வேண்டிய அவசியமே இருந்திருக்காது அவளுக்கு! கார்த்திக் முழுதாக இந்த மேகலையின் நாயகன் என்பது அவளுக்கு தெளிந்திருக்கும்!!

 

இங்கே அனித்ராவோ தம்பியின் அருமை பெருமைகளை அடிக்கடிகூறிக் கொண்டு இருந்தாள்.

“அப்பா ஆசைக்காக டெக்ஸ்டைல்ஸ் படிச்சாலும், அவனது விருப்பமெல்லாம் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டது தான். அதுவும் சாஃப்ட்வேர்னா அவனுக்கு பயங்கர இஷ்டம்!! படிக்கும்போதே நிறைய கோர்ஸ் சைடுல அதுக்காக அவன் பண்ணினான். அதனாலதான் டெக்ஸ்டைல்ஸ் படிச்சு இருந்தாலும் அவனால் கம்ப்யூட்டரில் ஜொலிக்க முடியுது! நீ வேணா பார் இன்னும் அஞ்சு வருஷத்துல இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஐடி கன்சல்டன்சி 2கேவா தான் இருக்கும்” என்று தன் போல பேசிக் கொண்டிருந்தவள் மேகலையின் கவனம் இங்கு இல்லை என்பதை கவனித்து “மேகலை என்ன ஆச்சு? புருஷன பத்தி பேச ஆரம்பிச்சதும் ட்ரிம்முக்கு போயிட்டியா?” என்று கிண்டல் செய்தாள்.

 

மெல்ல புன்னகை செய்தவள் அப்போதுதான் பார்த்தாள் பாமா அவர்களோடு இல்லை என்று!! 

 

“எங்க அண்ணி அய்த்தய காணும்?” என்றதும் “அவங்களை பத்தி தெரியாதா உனக்கு? இந்நேரத்துக்கு அவங்க செக்ஷனுக்கு போயிருப்பாங்க.. நீ இதெல்லாம் பார்க்கலைன்னு உன்னை இங்க சுத்தி காட்ட தான் நான் இங்கே கூட்டிட்டு வந்தேன்” என்று அவர்கள் பேசிக்கொண்டு ப்ளவுஸ் செக்சனுக்கு போக.. அங்கே டிசைனர் செக்ஷனில் நின்று தனது ஆலோசனைகளை கூறிக் கொண்டிருந்தார் பாமா.

 

தனது மாமியாரிடமும் நாத்தனாரிடமும் அவள் கண்டு கொண்டது.. இருவருமே இவள் படிக்கவில்லை என்று தாழ்த்தி பேசியதே கிடையாது!!

அதுவும் கிருஷ்ணகுமார் இவளை பக்தி பரவசமாக பார்ப்பதிலிருந்து இயல்பாக தான் பழகினார்கள்.

 

“வா வா மேகி அனி.. இந்த டிசைன் பாருங்களேன். இப்ப புதுசா ஒரு பிரைடலுக்காக நாம ரெடி பண்ணிட்டு இருக்கோம்..” என்றதும் அதன் டிசைன்களை மேகலையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இதில் சில மாற்றங்கள் செய்தால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. ஆனால் தானாக வாய் விட்டு மாமியாரின் அதிருப்தியை பெற்றுக்கொள்ள அவள் முயலவில்லை.

 

“டிசைன் பென்டாஸ்டிக் மா!! ஆனா இந்த கலர் காம்பினேஷன் என்னமோ ஒன்னு குறையுதும்மா.. அத சரியா எனக்கு சொல்ல தெரியல. இன்னும் கொஞ்சம் பெட்டரா இருக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க இன்னொரு தடவ டிஸ்கஸ் பண்ணிட்டு அதுக்கப்புறம் ஸ்டார்ட் பண்ணுங்க.. ஏன்னா இது பிரைடல் பிளவுஸ்ன்னு சொல்றீங்க. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவங்க கல்யாண பிளவுஸ் கனவே பெருசா இருக்கும்!! அதனால யோசிச்சு செய்யுமா” என்று அவள் சற்றே மிரட்டி விட “என்னடி இப்படி பயமுறுத்துற?” என்று சற்று கலங்கினார் பாமா.

 

இப்போது சிறிது காலமாக தான் இந்த டிசைனர் பிளவுஸ் தொழிலில் இறங்கி இருக்கிறார் பாமா.

 

அது ஒரு பெரிய இடத்து பெண்ணுக்கு திருமணத்திற்காக வந்தது. மகள் இப்படி குழப்பி விட மருமகளை பாவமாக பார்த்தார் பாமா.

 

அதில் டக்கென்று அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. “ஐயோ அய்த்த…” என்று அவரை கட்டிப்பிடித்துக் கொண்டாள் மேகலை.

 

“இதுக்கு எதுக்கு இப்படி வெசனப் படுறீங் அய்த்த.. இருங்க எனக்கு தெரிஞ்சது சொல்றேனுங்க.. அது சரியா வருமான்னு பாருங்க” என்று அவள் அந்த புடவையின் நிறத்திற்கு கான்ட்ராஸ்ட் ஆக பிளவுஸ் வைத்து அதற்குரிய ஆரி ஒர்க் பற்றி விவரித்தாள். இன்னொரு புறம் அதே கலரில் ப்ளவுஸ் ஸ்டோன் ஆரி ஒர்க் மட்டும் கான்ட்ராஸ்ட்டான கலரில் கொடுத்து செய்யலாம் என்று இரு விதமாக அவள் சட் சட்டென்று கூற பாமா திகைத்துப் பார்த்தார் மருமகளை!!

 

“மேகி சூப்பர்!! இது ரெண்டுமே நல்லா இருக்கும். ஆனா நான் அந்த பொண்ணு கிட்ட நீ சொன்னதை அப்படியே சொல்லி சஜஷன் கேட்டுகிறேன்” என்றதும் “சரிங் அய்த்த..” என்றாள் அமைதியாக..

 

பாமா அந்த பக்கம் சென்றதும் அனித்ரா மேகலையை பார்த்து “உங்க அப்பா நீ பிளஸ் டூ தான் படிச்சிருக்கேன்னு சொன்னாங்க.. அதுவும் ஃபெயிலுனு சொன்னாங்க!! ஆனா நீ பேசுறது எல்லாம் பார்த்தா சாதாரணமா படிக்காத பொண்ணோட பேச்சு மாதிரி தெரியல மேகலை.. இத பத்தி தெரிஞ்ச பொண்ணு மாதிரி தான் பேசுற” என்றதும் மெல்ல சிரித்தாள் மேகலை.

 

” நான் மட்டும் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்றேன். ஆனா நீ ஏதாவது என்கிட்ட ஷேர் பண்ணிக்கிறியா? எனக்கு அக்கா தங்கச்சி எல்லாம் கிடையாது. அதே மாதிரி நாத்தனார் கூட கிடையாது. எங்க வீட்டுக்காரர் ஒரே புள்ள வேற.. அதெல்லாம் நான் உன்கிட்ட க்ளோஸா இருக்கலாம்னு நினைச்சா.. நீ ஒதுங்கி ஒதுங்கி போற மேகலை” என்று அவள் முகம் வருத்தத்தை காட்ட…

 

“என்னங்க அண்ணி நீங்க.. இதுக்கு போய் மொகத்த தூக்கி வெச்சி இருக்கீங்க! பிளஸ் 2வில் நான் பெயிலுதானுங்க.. எங்க அப்பாவுக்கு நான் பாஸ் ஆனா எங்கே பெரிய படிப்பு படிக்க வெளிவூர் போக கேட்டுடுவேணோ.. அவரை விட்டு பிரிந்து போய்டுவேணோனு கொஞ்சம் பயமுங்க.. என்னால் அவர அப்படி வருத்தத்தோட பயத்தோட சுத்துறது பார்க்க முடியலங்க.. அதான் நானே தான் வேணும்னு எல்லா சப்ஜெக்டிலும் பெயில் ஆனேனுங்க.. அதுக்காக அப்படியே விடல.. எனக்கு இந்த கலர் காம்பினேஷன் டிசைன் இதெல்லாம் பண்றது ரொம்ப பிடிக்குமுங்க அண்ணி.. அதனால ஆன்லைன்ல எங்க அப்பாருக்கு தெரியாம சில கோர்ஸ் எல்லாம் நான் முடிச்சேனுங்க.. என் பிளவுஸ் டிசைன் இருக்கல.. அதெல்லாம் நானே செஞ்சது தானுங்க..” என்றாள் சாதாரணமாக!!

 

அப்பாவுக்காக என்றாலும் இப்படி தன் சுயத்தை தொலைத்து இருக்க முடியுமா? படிப்பை துறந்து இருக்க முடியுமா? தன் லட்சியத்தை அலட்சியம் செய்ய முடியுமா? என்று

அவளை திகைத்துப் பார்த்தாள் அனித்ரா!! இப்படியும் ஒரு பெண் இருக்க முடியுமா என்று!!

 

முடியும் என்று அவள் முன்னே புன்னகையோடு நின்றாள் மேகலை!!

ஒரு நிமிடம் தம்பியோடு மேகலையை ஒப்பிட்டாள்!!

 

தன் லட்சியத்துக்காக அப்பாவிடம் இருந்து பிரிந்து இருக்கும் அவனும்..

அப்பாவிற்காக தன் லட்சியத்தையே துறந்து இருக்கும் இவளும்..

 

என்ன காம்போ டா??!! ஆண்டவா??!!

 

பாசம்.. அன்பு அதற்காக எதையும் செய்ய முடியும் என்று வாழ்வியல் நிதர்சனமாக நிற்கும் பெண்ணை பார்த்ததும் நெகிழ்ந்தது உள்ளம் அனித்ராவுக்கு!!

 

அதற்குள் பாமா வந்துவிட.. “மேகி..” என்று சந்தோசமாக துள்ளல் நடையோடு வந்தவர் “அந்த பொண்ணுக்கு நீ சொன்னது ரெண்டுமே பிடிச்சிருக்கு. இரண்டுமே செஞ்சு கொடுங்க ஆன்ட்டி அப்படின்னு சொல்லிட்டா.. சோ ஒன்னுக்கு இப்போ ரெண்டு பிசினஸ்” என்று சந்தோசமாக மருமகள் தாடையை பிடித்து அவர் கொஞ்சி பேச..

 

“இனிமே எதுனாலும் உங்க மருமகளையே கேட்டுக்கோங்க.. அவ இதுல நிறைய படித்திருக்கிறா டிப்ளமோ கோர்ஸ்!” என்று அனித்ரா கூறியதும் ஆச்சரியமாக மருமகளை பார்த்தவருக்கு சந்தோஷத்தில் வானில் பறந்த உணர்வு!! யாருக்குத்தான் தனக்கு பிடித்ததையே படிப்பாக கொண்ட மருமகளை பிடிக்காது!!

 

அதன்பின் மால்.. வெளியில் சாப்பாடு.. ஐஸ்கிரீம் பார்லர்.. ப்யூட்டி பார்லர்.. என்று மூன்று பெண்களும் தங்கள் விருப்பம் போல் சுற்றினர். அவ்வப்போது அனைத்தையும் அனித்ரா செல்பி எடுத்துக் கொண்டவள் மறக்காமல் தன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் போட்டாள்.. கண்டிப்பாக தம்பி பார்ப்பான் என்று தெரியும். பார்க்கட்டும்.. வயிறு எரியட்டும் என்று நினைத்து சிரித்தாள்.

 

இவர்கள் கடையில் இருக்கும் போதே மருமகளை பார்க்க வேண்டும் என்று வேறொரு கடையில் இருந்து ஓடி வந்தார் கிருஷ்ணகுமார்.

 

“வாங்க.. வாங்க.. பாப்பா இவ்ளோ நாள்ல இப்பதான் உங்க கடையை நீங்க பார்க்க வந்திருக்கீங்க” என்றவர், “ஐயோ சொல்ல மறந்துட்டேனுங்க.. ஐயா போன் பண்ணி இருந்தாங்க.. உங்க ஃபோன் ரிங் போயிட்டே இருக்கு.. நீங்க அட்டெண்ட் பண்ணலைன்னு சொன்னாங்க.”

 

“ஆமாங் மாமாங்.. நான் ஊரிலேயே வச்சிட்டு வந்துட்டேனுங் ஃபோனை” என்றதும்.. “இப்போ உங்ககிட்ட ஃபோன் இல்லையா?” என்றவர் தன் ஃபோன் மூலமே பசுபதிக்கு பேச கொடுத்தவர் அடுத்த அரை மணி நேரத்தில் வேறு ஒரு புதிய போனை வாங்கி சிம்மையும் ஆக்டிவேட் செய்து அனைவர் நம்பரையும் பதித்துக் கொடுத்தார்.

 

அனித்ராவும் பாமாவும் அதிசயமாக எல்லாம் பார்க்கவில்லை. அப்பாவின் இந்த பரவசம் தெரிந்தது தானே என்று அமைதியாகவே இருந்தனர்.

 

தான் எடுத்த போட்டோவை எல்லாம் அனித்ரா மேகலையின் செல்லுக்கு அனுப்பி வைத்தாள். ஒருவழியாக மூவரும் மாலை போல் வீடு வர “பிள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வந்திருப்பாங்கமா.. நான் போயிட்டு வரேன்” என்று கிளம்பினாள் அனித்ரா.

 

“அடி வாசல தான் வீடு இருக்கு. அடிக்கடி வந்துட்டு போலாம் இல்ல” என்று பாமா மகளை பார்த்து ஏக்கமாய் கேட்க..

 

“அடிவாசலில் இருந்தாலும் அடிக்கடி அம்மா வீட்டுக்கு வரக்கூடாது!! இப்படி எப்பயாவது வந்தா தான் நீங்க எல்லாம் நல்லா கவனிக்கிறிங்க… அடிக்கடி வந்தா சலிச்சு போய்டாது?” என்று சிரித்துக் கொண்டே விடை பெற்றாள்!!

 

காலையில் ஆபீஸ் சென்ற கார்த்திக் மனம் எதிலும் லயிக்கவில்லை. ‘இவளிடம் தள்ளி இருந்தால் வேலையில் முன்னேறி விடலாம்.. ப்ராஜெக்ட்டை பாய்ந்து பிடித்து செய்துவிடலாம்..’ என்று ஏகப்பட்ட ரெஸ்ட்ரிக்ஸனோடு கல்யாணம் முன்ன இருந்தவனுக்கு.. இப்போது கண்களை மூடினாலே காரிகையின் கனிந்த முகம் தான்!!

 

போதாக்குறைக்கு அனித்ராவிடம் இருந்து மெசேஜ் வர என்ன என்று பார்க்க.. அவன் மனைவியோடு சேர்த்து எடுத்திருந்த ஃபோட்டோவை அனுப்பி இருந்தாள்.

 

“என்ன இது.. ரெண்டும் நம் கடையில் இருக்கிற மாதிரி இருக்கே?” என்று யோசனையோடு அவளில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்க்க.. ரயில் ஒட்டியது போல வரிசையாக இருந்ததை பார்த்தவன், “இங்கிருந்து அவ போய் நான் தான் கண்ணதாஸன் மாதிரி கவிதை பாடிட்டு.. தேவதாஸ் மாதிரி சுத்திகிட்டு இருக்கேன்.. இவ நல்லாதான் மாமியார் நாத்தனார் கூட ஊர் சுத்துறா” என்று கடிந்து கொண்டான்.

 

அதற்கு மேல் அவனுக்கு வேலையில் நேரம் செலவே இல்லை சரி எஃப் எம் செல்லலாம் என்று அங்கே சென்றான். அங்கே நேத்ரா அவனது முகத்தை பார்த்து “என்ன கேகே ஆள் ரொம்ப டல்லா தெரியுற? பெல்லு ஊருல இல்லையா?” என்று எதார்த்தமாக கேட்க.. ஆம் என்ற தலையாட்டி அவன் பதார்த்தமாக.. அவ்வளவுதான்!! பேசிப்பேசி அவனை ஒரு வழியாக்கி விட்டு அனுப்பினாள்.

 

“அம்மா தாயே.. போதும் விடு!! நான் போறேன்!!” என்றவனை பார்த்து… “நான் நினைக்கிறேன் இங்கே கிளம்புற ட்ரெயின் நேரா போய் தாம்பரத்தில் தான் நிற்கும்னு!” அவள் நக்கலாக கூற.. சிரித்துக் கொண்டே “ஆமா என் பொண்டாட்டி!! நான் போறேன்! இதுல என்ன வெட்கம்..” என்றவாறு கிளம்பி விட்டான் சென்னைக்கு!!

 

இரவு நேரம்.. அனைவரும் உறக்கத்தில் இருக்க.. தன்னிடம் உள்ள சாவியை கொண்டு வீட்டிற்குள் வந்தான் கார்த்திக் சத்தம் செய்யாமல்.. பூனை போல படியேறினான். வேற எதுக்கு மேகலை எனும் பாலை களவாட தான்!! 

 

நிதானமாக அறைக் கதவை சாத்தி விட்டு திரும்பினான். அவன் நெஞ்சம் அதிர்ந்து துடிக்கவில்லை. வீட்டுக்குள் நுழைந்தபோது இருந்த படபடப்போ.. பதட்டமோ இப்போது இல்லை..!! எல்லாம் கிருஷ்ணகுமாரின் வாய்க்கு பயந்து தான்.

 

 

மேகலையை பார்த்தான். எப்பொழுதும் புடவை சுடி நைட்டி என்றே பார்த்திருக்க.. இன்றோ டாப் மற்றும் லாங் பாவாடையில் இருந்தாள் அவள்! அக்காவின் கைங்கர்யம் என்று புரிந்தது!!

மேகலையின் நெகிழ்ந்த பாவடையில் தெரிந்த அவளது தந்த கால்களை கண்டவன் ‘உப்ப் ‘ பென ஊதிக் கொண்டே.. அவளை நெருங்கிப் போய் கட்டில் பக்கத்தில் நின்றான். சிவந்த உதடுகள் விரிய ஆ வென வாயை பிளந்தப்படி தூங்கும் மேகலையின் அழகு முகத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.

 

பருவ மோகம் அவனைப் பற்றிக் கொள்ள.. பிளந்த அவள் உதடுகளை சுவைக்க அவன் உதடுகள் தவித்தன.. துடித்தன!!

 

அவள் பக்கத்தில் உட்கார்ந்து மெல்ல அவள் முகம் நோக்கி குனிந்தான். அவள் உதடு வரை போன அவன் உதடுகளை சட்டென நிறுத்தி, “என்னை விட்டுட்டு வந்திட்டல.. அம்மா கூப்பிட்டாங்க ஆட்டுக்குட்டி கூப்பிட்டாங்கனு.. உன்னை.. என்ன செய்ய? ஹாங்.. உன் உடம்பில் பதியப் போகும் என் முத்தம் சாதாரனமானதாக இருக்க கூடாது பெல்லு.. ” என்று ஒரு எண்ணம் கொண்டவன், “இப்போது நான்.. அவளை எங்கு வேணாலும் முத்தமிடலாம். அது அவளுக்கு தெரியப் போவதில்லை. ஆனா.. அது அழியா சித்திரமாக இருக்க வேணும்.. நாளைக்கு அவள் பார்க்கும் போது!” என்று கிறுக்குத்தனமான எண்ணம் தோன்றியது கார்த்திக்கு.

 

என் முத்தத்தை எங்கு பதிக்கலாம்?? பொதுவானது உதடுகள்.. ஆனால் அது வேணாம்!!

 

அடுத்தது அவளது கன்னங்கள்? அன்னையின் காஜி நினைவு வர.. அய்யய்யோ அது வேண்டவே வேண்டாம்!!

 

ஆழிலை வயிறு..?? அழகிய நாபி சுழி?? ம்கூம்…!! ம்கூம்…!! ஆக.. இறுதியில் அவன் தேர்வு செய்ய முடியாமல் தடுமாறினான்.

 

ஒரு முத்தம் எதுக்கு? மொத்தமா எடுத்துக்கிட்டா‌ என்ன?? என்று நினைத்தவன், அவள் முகத்தருகில் இருந்து.. திரும்பி அவள் காலை பார்த்து உட்கார்ந்தவன், அவளது பாவாடை விலகிய அவளது பளப்பள தந்த கால்கள் சந்தனத்தில் செதுக்கிய செவ்வாழை தண்டுகள் போல மின்னிக் கொண்டிருந்தது!! அதில் அவன் கையை வைத்து மெதுவாக தடவ.. சிறு குழந்தை போல மிருதுவான அவளது கால்கள் மிகவும் மென்மையாக இருந்தது..!!

 

குழந்தையின் பட்டுக் கன்னம் போல குழைந்து கொண்டு போன அவளது கால் விரல்களை.. மெதுவாக தடவிப் பார்த்தவன் மென்மையாக முத்தமிட்டான்.

 

கொதித்துக் கொண்டிருந்த அவன் ஆண்மை தன் பொறுமையை தகர்க்கத் தொடங்கியது..!!

 

அவளின் வாசத்திலும்.. அவளது அழகிய மோகன தோற்றத்திலும் பொறுமை இழந்து போனான் கணவனாய்!! 

 

அவனுக்கு போதும் என்று தோன்றும்வரை… ‘பச்..பச்..!’ நிமிடக் கணக்கில் முத்தம் கொடுத்ததில்.. இதற்கு மேலும் என்னால் பொறுக்க முடியாது என்று லேசான படபடப்புடன் மெதுவாக அவனைக் கட்டிப் பிடித்தாள் மேகலை!!

 

அவன் அதிர்ந்து பார்க்க.. “மாமா.. நீங்க வந்தது எனக்கு தெரியுமுங்க.. சும்மா என்ன பண்ணுறீகனு பார்த்தேனுங்க உறங்குவது போல கண்ண மூடி!” என்றாள் உதட்டை சுழித்து..

 

அவ்வளவுதான்.. அவ்வளவே தான்! அவன் உணர்வுகள் பீறிட.. சட்டென்று அவனுக்குள் கணன்று கொண்டிருந்த தீப்பிழம்பு வெடித்தது. அவளை இறுக்கி அணைத்து அள்ளித் தூக்கினான். அவன் சட்டென இப்படி மாறுவான் என்று எதிர் பார்க்காதவள், சிணுங்கி அவன் தோள்களை பிடித்து இறுக்கினாள். அவள் உதட்டை லபக்கென கவ்வினான். கடித்து தின்று உறிஞ்சி சுவைத்தான். அவள் கண்களை விரித்தபடி அவனை பார்க்க.. பார்க்க.. இன்னும் இன்னும் தாபம் அவனுள்!!

 

ஒரு நிமிடம் அவளின் உதடுகளை சுவைத்தபின் அவளை தரையில் இறக்கி விட்டான் கார்த்திக்.

 

“ஸ்ஸப்பா.. என்ன மொரட்டுத்தனமுங்க மாமோய்!!” என்று லேசான வெட்க முகத்துடன் அவனைப் பார்த்தாள் மேகலை.

 

அவள் டாப்பை விலக்கி மெல்லிடையில் கை வைத்து தடவினான். “எல்லாம் என்ற பொண்டாட்டி செய்த மாயமுங்க அம்மணி!” என்று அவள் நெற்றி முட்டி சிரித்தான். 

 

அவள் ஆசையாய் பார்க்க…

அவன் தாபமாய் பார்க்க…

அடுத்து அவளை ஆள பரப்பரத்தவனை கண்டு கன்னக் குழியில் நாக்கு சுழற்றி பார்த்தவள், “மாமா.. இன்னைக்கு நீங்க தனியாதானுங்க தூங்கோணும்” என்றாள்.

 

“எதே.. தனியாவா? அதுக்காகவா இவ்வளவு தூரம் தனியாக கார் ஓட்டிக் கொண்டு வந்தேன்?” என்றான் முறைத்தபடி..

 

“வேறு வழி இல்லிங் மாமா..” என்று அவள் மூன்று விரல்களை காட்டாமல் ஐந்து காட்ட.. இவனோ முழித்தான்.

பின் புரிந்தவனாய்.. “அதென்ன பெல்லு.. இந்த படத்துல சீரியல்ல வர பொண்ணுங்க எல்லாம் மூனு விரல் தான் காட்டுவாங்க.. நீயென்ன அஞ்சு காட்டுற.. இதெல்லாம் அநியாயம் டி!” என்றான் சரசமாக அவளோடு இழைந்தப்படி..

 

“அய்ய ச்சீ.. இதனெங் பேச்சு! எனக்கு அஞ்சு தானுங்க” என்றாள் முகத்தை அவனது புஜத்தில் மறைத்துக் கொண்டு!!

 

“பெல்லு.. நான் ஒன்னும் தெரியாத சின்னப் புள்ளன்னு என்னை ஏமாத்தாத..” என்றான்.

 

“ஏனுங் மாமா.. நீங்க சின்னப் புள்ளைனு சொன்னா அப்போ நான் யாருங்கோ..” என்று அவள் சிரிக்க..

 

“சிரித்து சிரித்து சிறையிலே..

சிக்கி கொள்ள மனம் துடிக்கும்..” என்று பாடினான் அவள் காதுக்குள்.

அதனோடு அவள் ஜிமிக்கியையும் ஆசையா அவன் நா வருடியது!!

 

“நிஜமாய் நீ என்னை தீண்டினால்..

 

நிஜமாய் நீ என்னை தீண்டினால்

பனியாய் கனியாய் உறைகிறேன்!

 

ஒளியாய் நீ என்னை தீண்டினால்,

நுரையாய் உன்னில் கரைகிறேன்

 

காதல் வந்தாலே வந்தாலே

எனோ உளரல்கள் தானோ?”

 

அவனின் குரலிலும்.. அவன் நா ஜாலத்திலும்..

மயங்கி முயங்கி நின்றாள் மாது!!

 

பாடலும் பாடலோடு உரசலும்.. அணைத்தலும்.. முத்தமிடலும்.. கவ்வி சுவைத்தலும் இடையிடையே அரங்கேறி கொண்டிருக்க..

முழுதாய் மெழுகாய் உருகி போனாள் அவன் கைகளில் மேகலை!!

 

மறுநாள் காலை டைனிங் டேபிளில் மகனைப் பார்த்ததும் மெல்ல புருவத்தை மட்டும் உயர்த்தினார் கிருஷ்ணகுமார். வேறு எதுவும் கேட்கவில்லை!!

 

ஆனால் பாமாவுக்கு தான் சிரிப்பு தாங்க முடியவில்லை. அன்று மகள் சொல்லிக் கொண்டிருந்தது போல இரண்டே நாட்களில் வந்து விட்ட மகனை தான் வெடித்து கிளம்பும் சிரிப்பை அடக்கியவாறு பார்த்து இருந்தார். கணவன் முன்னே ஏதும் கேட்க முடியாமல் அமைதியாக பரிமாறியப்படி நின்று இருந்தார் பாமா!!

 

கிருஷ்ணகுமார் அந்த பக்கம் கிளம்பியதும்.. சிரித்துக் கொண்டே “மேகி எங்கடா?” என்றார்.

 

சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு புரையேற தானே தலையில் தட்டிக் கொண்டு.. “என்ன சொன்னீங்க மேகியா?” என்றான்.

 

“ஆமா.. நான் அப்படி தான் கூப்பிடுவேன் என் மருமகள..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குளித்து புது மலராக கீழே இறங்கி வந்தாள் மேகலை.

 

இருவருக்கும் பொதுவான புன்னகையோடு கணவன் அருகில் அமர.. “மேகி.. உனக்கு தனியா உளூந்துகளி இருக்கு பாரு. அதை சாப்பிட்டு அதுக்கப்புறம் உனக்கு எது பிடிக்குமோ அதை சாப்பிடு” என்றார் பாசமாக..

 

அவரின் மேகியில் அதிர்ந்து கணவனை பார்க்க… அவனோ வாடிவாசலிலிருந்து வெளிவரும் காளையாக பொசு பொசு என்று மூச்சை வெளியிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். இவளோ சிரிப்பை அடக்கிக் கொண்டு “சரிங்க.. அய்த்த..” என்றாள் நல்ல பிள்ளையாக..

 

அதன் பின் அடிக்கொரு தரம் இல்லை இல்லை ஒவ்வொரு வாய் உணவு உள்ளே செல்லும் போதும் ஒவ்வொரு மேகியை போட்டு பாமா மருமகளிடம் பாச பயிரை வளர்க்க.. அந்த பக்கமும் மகன் தனல் மேல் தவித்து இருந்தான்.

 

“மை சன்.. நீங்க எப்படி உங்க பொண்டாட்டியை செல்லமாக கூப்பிடுவீங்க?” என்று கடைசியாக அவர் கேட்டு வைக்க..

 

“அம்மா…!!!” என்று அவன் பற்களை கடித்தப்படி கத்த…

 

“என்ன இருந்தாலும் என்னை போல ஷார்ட்டா.. அழகா கூப்பிட முடியாது மை சன்! பாவம் என் மேகி.. ரசனை இல்லா புருஷன் நீ!!” என்று நன்றாக மகனை வெறுப்பேற்றியதை தெரியாமல்.. மருமகளுக்கு பாவப்பட்டு உள்ளே சென்றார் பாமா!!

 

“ஒழுங்கா உன்‌ அய்த்த கிட்ட சொல்லி இனிமே மேகின்னு கூப்பிடாதீங்கன்னு சொல்லு!! புரியுதா?” என்று அவன் கடித்த பற்களிலே வார்த்தைகளைத் துப்ப.. 

 

அவளோ “மை புருஷருங்… வேணுமுன்னா நீங்களே சொல்லுங்!” என்று நக்கல் அடிக்க…

 

சுற்றும் மற்றும் பார்த்தவன் முன்னே குனிந்து அவள் இதழ்களில் மென்மையாக இளைப்பாறிவிட்டு விலகினான்.

 

“இனி.. மேகினு அவங்க கூப்பிட்டா.. இப்படி தான் பண்ணுவேன். அதுவும் அவங்க முன்ன…” என்று மிரட்டி விட்டு செல்பவனை இவள் வாயை பிளந்து அதிர்ச்சியோடு பார்க்க…

 

கார்த்திக்கோ அவளின் அதிர்ந்த பார்வையில் விளைந்த சிரிப்பை மீசைக்கு அடியில் மறைத்துக் கொண்டே சென்றான்!!

 

 

இஷ்டமாகுமா??

2 thoughts on “நீ நீ நீ என்னோட இஷ்டம்… 17”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top