மீமிகை அரக்கனே
மீமிகை அரக்கனே – 1
ஹீரோ :- அகிலன் கண்ணன்
ஹீரோயின் :- வெண்பா
ஹீரோயின் அக்கா:- சாருமதி
அகிலன் கண்ணன் 29 வயது ஆணழகன் ஆறடி உயரமும் இளஞ்சிவப்பும் நிறமும் கொண்ட அழகிய ஆண்மகன். அகிலன் தன்னுடைய யு. ஜி மற்றும் பி. ஜி காலேஜ் எல்லாம் லண்டனில் முடித்து இந்தியா வரும்பொழுது 23 வயது யங் மேன்.
“தினேஷ் கண்ணன் டாப் நம்பர் ஒன் இந்தியன் பிசினஸ் மேன் அமுதா தினேஷ் கண்ணன் அவர் தன்னுடைய கணவனுக்கு உறுதுணையாக பிசினஸில் இருக்கிறார். பிசினஸில் தினேஷ் கண்ணன் ராஜா என்றால் அமுதா ராணியாக திகழ்கிறார்”
தன் தந்தை தொடங்கிய ஆரோ டெக் தன் நாட்டில் மட்டுமில்லாமல், வெளிநாட்டிலும் நம்பர் ஒன் ஆரோ டெக்வாக உருவாக்கிய அசைக்க முடியாத உயரத்தில் இருக்கிறான்.
தன் எதிரிகளுக்கு அரக்கனாகவும் இரக்க குணமற்றவனாகவும்,தன்னை யார் எதிர்த்து நின்றாலும் அவர்களை உறுதெரியாமல் அளித்து தான் அடுத்த வேலையை அகிலன் பார்ப்பான். அதுவரை உணவு தண்ணீர் கூட இறங்காத அவனுக்கு அவ்வளவு கோபக்காரன், கொடூரமானவன். அகிலன் பொருத்தவரை தான் அழகன் என்ற திமிரும் சின்ன பொருள் என்றால் கூட தனக்கு பெஸ்டாக இருக்கணும் என்ற எண்ணமும் கொண்டவன், முன்கோபகாரன் ஆனால் நல்ல ஒழுக்கமான ஆணழகன்.
அகிலனுக்கு இப்பொழுது திருமணம் வயது என்பதால் அவனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறனர் தினேஷ் கண்ணன் தம்பதியர்.
அவர்களுக்காக எல்லாம் அவன் திருமணம் செய்து கொள்ள மாட்டான்… அந்தப் பெண்ணின் தகுதி அழகு அவனுக்கு ஏற்றார் போல் இருந்தால் மட்டும் ஒப்புக் கொள்வான்.
அவன் நினைத்தது போல சாருமதி நம்பர் ஒன் மாடல்… சாருமதி டேட்டுக்காக பல கம்பெனிகள் வரிசையில் இருப்பதால், பெஸ்ட் என்று சாருமதி திருமணம் செய்ய ஒப்புக் கொண்டான் ஆனால் அவன் எண்ணங்களை சாருமதி மாற்றுவார் என்று அவனுக்கு பிடித்தால் போல் திருமணம் நடக்கப் போவதில்லை என்று அவன் அறியான்.
வெண்பா 22 வயது, அழகானவள் அவள் மனதைப் போல தூய்மையானவள் வாழ்க்கை லட்சியம் உடைய பெண்.
அழகாக பாடக்கூடியவள், பரதநாட்டியம் தெரியும்… தன் பள்ளி படிப்பை சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் வரை சென்னையிலும், செவன்த் ஸ்டாண்டர்டிலிருந்து காலேஜ் திருச்சியிலும் தன் பாட்டி வீட்டில் இருந்து படிக்கிறாள். தன் பாட்டி உடல்நிலை சரியில்லை என்பதாலும், அக்கா திருமணம் என்பதால் சென்னை வந்தனர்.
யாராவது வெண்பாவை கஷ்டப்படுத்துற மாதிரி பேசினாலும் சரி, அவர்களை எதிர்த்து பேசாமல் சிரித்து அந்த இடத்தை கடந்து விடுவாள்… எப்பொழுது அவள் சோர்ந்து போனாலும் அவள் தன்னை தானே ஊக்குவித்துக் கொள்வாள்.
தன் பாட்டி மற்றும் அவளது சிறிய வயது தோழி மாலா மட்டுமே அவளுடைய பெஸ்ட் பிரின்ட்…
சாருமதி எப்பொழுதும் வெண்பாவை தன் தங்கையாக பார்க்க மாட்டாள், அவளுக்கு தங்கை ஒருத்தி இருக்கிறாள் என்று யார்கிட்டயும் சொல்ல கூட விருப்பப்பட மாட்டாள்.
வெண்பா அதை எல்லாம் நினைத்து வருத்தப்படாமல், தனக்கு ஒரு அக்கா இருக்கிறாள் என்று எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பாள்… ஆனால் அவள் செய்யப் போகும் ஒரு செயலால் தன் வாழ்க்கை மாறும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.
நளினா மற்றும் ராமு, சாருமதியின் பெற்றோர்கள்.. அவர்களைச் சாருமதி பெற்றோர்கள் என்று தான் சொல்ல வேண்டும், வெண்பா என்று அவர்களுக்கு இரண்டாவது ஒரு மகள் இருக்கிறாள் என்று நினைவில் கூட இல்லாமல் இருப்பார்கள் .
நளினா மற்றும் ராமு, முதலில் பெண் குழந்தை என்று மகிழ்வாக இருந்தார்கள்… இரண்டாவது ஆண் குழந்தை எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர்களை பொய்யாக்கி வெண்பா வந்து பிறந்தாள்.
இதனால் இவர்களுக்கு வெண்பாவை சிறுவயதிலிருந்தே பிடிக்காது, வெண்பா பிறந்ததால் தான் அவர்களுக்கு பிசினஸ் லாஸ், கஷ்டங்கள் வருகிறது, ராசி இல்லாதவள் என்றும் அவளைக் குற்றம் சாட்டுவார்கள்…
வெண்பாவிற்கு சிறுவயதில் இருந்தே அவள் ஆசைப்பட்ட எதுவும் கிடைக்காது… சாருமதி வேண்டாம் என்ற துணி மற்றும் பொருட்கள் மட்டுமே அவளுக்கு கிடைக்கும்…
திடீரென்று அவள் பெற்றோர் அவளை ராமுவின் அம்மா விமலா பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் திருச்சிக்கு…
விமலா பாட்டி வெண்பாவை அரவணைத்துக் கொண்டார்… முதலில் வெண்பாவிற்கு கஷ்டமா இருந்தாலும், விமலா பார்ட்டியின் அன்பில் அவள் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தால்.
தன்னுடைய பிரண்ட் மாலாவிடம் மொபைல் போனின் மூலம் நட்பை வளர்த்துக் கொண்டனர் இருவரும், இன்னும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.
வெண்பா சென்னைக்கு வர விருப்பப்பட மாட்டாள் ஆனால் மாலாவை பார்க்க மட்டும் எப்போயவாவது வருவாள்.
இப்பொழுது விமலா பாட்டிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னைக்கு ட்ரீட்மென்ட் வந்தனர், தன்னுடைய அக்கா திருமணம் என்றும் செமஸ்டர் லீவ் என்பதால் சிறிது காலம் நம் சென்னையிலே இருக்கலாம் என்று முடிவெடுத்து வந்தனர் .
ஆனால் அவள் இனி சென்னை விட்டுப் போக மாட்டாள் என்று அவளுக்கும் தெரியாது விமலா பாட்டிக்கும் தெரியாது.
தினேஷ் கண்ணன் தம்பதியினர், தங்களுக்கு ஒரே மகன் என்பதால் தங்களுடைய செல்வ செழிப்பை அவனுடைய திருமணத்தில் காட்டினர்.
அகிலன் திருமணம் நான்கு நாட்கள் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி முதல் நாள் வெல்கம் பார்ட்டி, இரண்டாவது நாள் சங்கீத், மூன்றாவது நாள் மெஹந்தி, நான்காவது நாள் திருமணம் என்றும் முடிவெடுத்தனர் .
ஆனால் இதில் எதிலும் முழுதாக அகிலன் கலந்து கொள்ளவில்லை. வெண்பாவிற்கு மாப்பிள்ளை யார் என்று கூட சரியாக பார்க்கவில்லை, அகிலுடைய பின்பக்க தோற்றம் மட்டுமே பார்த்துள்ளால் வெண்பா.
அகிலனுடைய முகத்தைப் பார்க்க முயற்சி செய்யும் போதெல்லாம் அவளுக்கு ஏதேனும் வேலையை யாராவது கொடுத்து விடுவார்கள்.
அவன் என்ன அவ்ளோ பெரிய அழகனா என்று அகீலனை மனதில் திட்டிக்கொண்டே பார்க்காத வருத்தத்தில் சென்றுவிட்டாள், ஆனால் காலம் முழுக்க அவள் அந்த முகத்தைத்தான் பார்க்கப் போகிறாள் என்று அவளுக்கு தெரியாமலே அவனை திட்டி சென்றால்.
மீமிகை அரக்கனே – 2
இரவு 9 மணி அளவில் சாருமதி வெண்பாவிடம் தன்னுடைய கல்யாண பிளவுஸை வாங்கி வர சொல்லி இருந்தாள் அதுவும் தன்னுடைய டிசைனரிடமிருந்து.
டிசைனருக்கு வேறு வேலை இருப்பதால், சாருமதி இல்லை வேறு யாராவது வந்து வாங்கிக்க சொன்னார். சாருமதி வெளிய போக முடியாத காரணத்தால் வெண்பாவை அனுப்பி வைத்தாள்.
சாருமதி உபயோகித்த பழைய காரை தான் வெண்பா இப்பொழுது வைத்துக் கொண்டிருக்கிறாள்.
அதுவும் போனா போகுது என்று தான் கொடுத்தாள். ஆனால் வெண்பா அந்தக் கார் கொடுத்ததற்காக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால்.
சாருமதி சொன்ன அட்ரஸ் இருபது கிலோமீட்டர் என்பதால் அந்த இரவில் இடம் தேடி செல்லும் போது கார் பஞ்சர் ஆகிவிட்டது.
வெண்பாவிற்கு பஞ்சர் சரி செய்ய தெரியாததால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் யாராவது உதவிக்கு வருவார்களா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தால்.
இரவு என்பதால் அந்த ஏரியாவில் யாரும் இல்லை தன்னுடைய மொபைல் சார்ஜ் இல்லாமல் மொபைல் ஆப் ஆகி விட்டதால் மிகவும் பயந்துவிட்டால் வெண்பா.
யாராவது உதவிக்கு வருவார்களா என்று சுற்றி முற்றி அழுவாத குறைக்கு பார்த்துக் கொண்டிருந்தால்.
அப்பொழுது அந்த வழியாக ஒரு கார் அவளை கடந்து சென்றது அவள் உதவி கேட்கலாம் என்பதுக்குள் அவளை விட்டு கார் தாண்டி சென்றுவிட்டது .
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே வெண்பாவிடம் திரும்ப அந்தக் கார் வந்து நின்றது.
கார் டிரைவர் இறங்கி எதனா உதவி வேண்டுமா என்று கேட்டார்.
ஆமா அண்ணா கார் பஞ்சர் எப்படி மாத்தணும் தெரியல என்றால் பின் அவளுக்கு கார் சரி செய்து கொடுத்து உதவி செய்தார் அந்த டிரைவர்.
வெண்பா ரொம்ப நன்றி அண்ணா நீங்கள் தாண்டி போயிட்டீங்க, யாரும் உதவிக்கு வர மாட்டாங்க என்று நினைத்தேன்.
ஆனா நீங்க திரும்ப வந்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா என்றால் .
நீங்க தனியா நிக்கும் போது உனக்கு எப்படி உதவி செய்யலாம் தெரியாம கடந்து போனப்போ, எங்க சின்னையா தான் வண்டிய நிப்பாட்டி உங்களுக்கு என்ன உதவி வேணும்னு கேட்க சொன்னார் என்றார்.
வெண்பா காரை எட்டி எட்டிப் பார்த்தால் ஆனால் முகம் சரியாக தெரியாததால் உங்க சின்ன ஐயா ரொம்ப பிஸி போல அண்ணா.
ஆமாம் லேப்டாப்ல கம்பெனி வேலை பார்த்து கொண்டு இருக்கிறார் என்றார் .
ஓ சரி அண்ணா ரொம்ப நன்றி உங்க சின்ன ஐயாவுக்கும் நான் நன்றி சொன்னதா சொல்லிடுங்க அண்ணா, சரிமா என்று இருக் காரும் கிளம்பியது.
சாருமதி சொன்ன இடத்தில் வெண்பா பிளவுஸ் வாங்கிட்டு, திருமணம் நடக்கும் மண்டபத்தை நோக்கி செல்லும்போது, இன்று நடந்த அனைத்தையும் நினைத்து காரை ஓட்டி சென்றாள்.
வெண்பா மற்றும் விமலா பாட்டி ஒரே அறையில் தான் தங்கி இருக்கின்றனர்.
வெண்பா வனஜா ஆன்ட்டி கிட்ட பாட்டிக்கு மருந்து கொடுத்து கரெக்ட்டா போடுறாங்களா என்று பார்க்க சொல்லி சென்றாள்.
வனஜா ஆன்ட்டி என்பவர் திருச்சியில் பாட்டி வீட்டு பக்கத்தில் இருப்பவர்.
இவர்கள் சென்னை போகவும் வனஜாவிற்கு சென்னை சுற்றி பார்க்க ஆசை என்பதால் இவர்களுடன் சென்னைக்கு வந்தார். விமலா பாட்டியின் மேலும் வெண்பாவின் மீதும் மிகவும் அன்புள்ளவர்.
வெண்பா ரூமில் வந்து பார்க்கும்போது வனஜா ஆன்ட்டி மற்றும் விமலா பாட்டி இல்லை, எங்கே என்று தேடும் பொழுது இருவரும் மட்டும் அல்லாமல் மற்ற அனைவரும் உறவினர்களும் ஒரே இடத்தில் இருந்தனர்
வெண்பா வனஜா ஆண்டியிடம் ஏன் எல்லாரும் ஒன்னா நிக்கிறீங்க அம்மா, அப்பா ஏன் கோவமா இருக்காங்க, அப்புறம் சாருமதி எங்கே என்று கேட்டால்.
அதற்கு வனஜா ஆன்ட்டி லாஸ்ட்ல கேட்டியே அதுதான் முதலில் நீ கேட்டிருக்கணும் என்று இருவரும் முணுமுணுத்துக் கொண்டு இருந்தனர்.
இவர்கள் முணுமுணுப்பை பார்த்த நலினா வெண்பாவை பார்த்து எங்கடி போன சாருமதியை விட்டு எங்கேயும் போகக்கூடாதுன்னு சொன்னேன்ல எங்கே போனாய் என்று கேட்டார்.
சாருமதி ப்ளவ்ஸ் வாங்கிட்டு வர சொன்னா, லாஸ்ட் நேரத்துல யாரையும் சொல்ல முடியாது, நீ தான் போகணும் என்ன அவசர அவசரமா அனுப்புனா அதான் போனேன் என்றால் .
அதை என்கிட்ட சொல்ல வேண்டியது தானே இப்போ அவ 200 சவரன் நகையையும், 50 லட்சம் பணத்தையும் எல்லா எடுத்துட்டு ஓடி போயிட்டா, எல்லாம் உன்னால தான் என்று வெண்பாவை திட்டினார்.
விமலா பாட்டி இவ்வளவு நேர அமைதியாக இருந்தவர் வெண்பாவை திட்டவும் வாயை திறந்தார்.
இப்ப எதுக்கு இவள திட்டுற தப்பு பண்ணது அவ, இப்பயும் அவளை திட்டாம இவளை திட்டுற என்றார்.
அதற்குள் சுற்றி நின்ற உறவினர்கள் எல்லாம் அக்கா ஓடிப் போயிட்டா அடுத்த தங்கச்சி என்ன பண்ணப் போறாளோ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், இன்னும் சிலர் தங்கச்சி ஒரு மாறினா அக்காவும் அதே போல தான் இருக்கா என்று வாய்க்கு வந்ததை எல்லாம் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர் .
நிலைமையை கையில் எடுத்துக் கொண்ட விமலா பாட்டி எல்லோரும் போய் தூங்குங்க, முதல்ல காலைல சம்மந்தி வீட்ல வந்ததும் எல்லாரும் கால்ல விழுந்து சமாதானப்படுத்தலாம் என்று எல்லாரையும் அவர்கள் ரூமுக்கு அனுப்பி வைத்தார்.
காலையில் தன் வாழ்க்கை மாற போவதை அறியாமல் தூங்கினால் வெண்பா.
காலை தூங்கி முழித்த வெண்பா இன்றைக்கு மனசே சரியில்ல கொஞ்சம் வெளியே போய் நடக்கலாம் என்று வெளியே சென்றாள்.
அவள் போகும்பொழுது பிஎம்டபிள்யூ கார் ஆடி கார் என்று வரிசையாக அவளை தாண்டி சென்றது.
அப்போ மாப்பிள்ளைக்கு வீட்டுக்காரங்க வந்துட்டாங்க போல, என்ன நடக்கப் போகுதோ என்று எண்ணிக் கொண்டு சிறிது நேரத்தில் அவள் அந்த கல்யாண நடக்கும் இடத்திற்கு சென்றால்.
அவள் போகும்பொழுது பட்டு வேட்டி சாட்டையில், ஆளை அசர அடிக்கும் அழகில் ஆறடி ஆணழகன். பூவில் எழுதப்பட்ட நேம் டெக்கரேஷன் எல்லாத்தையும் உடைத்துக் கொண்டு இருந்தான்.
வெண்பா இப்பொழுதுதான் முதன் முதலில் மாப்பிள்ளை பார்க்கிறாள் , அதுவும் கோபமாக மூஞ்சி எல்லாம் சிவந்து போய் பொருட்களை உடைத்துக் கொண்டிருப்பவனை பார்த்தாள்.
உள்ளே செல்லும்போது அவளுக்கு ஏதோ போருக்கு போவதைப் போல் இருந்தது.
அங்கே நளினா அமுதா காலிலும், ராமு தினேஷ் கண்ணன் காலிலும் விழுந்து தங்களை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டிருந்தனர் .
இதை பார்த்த வெண்பா இது கனவா நினைவா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் காலில் விழுவதைப் பார்க்க வெண்பாவிற்கு தன்னுடைய அக்காவின் மீது மிகுந்த கோபம் வந்தது, அவளால் தான் தன்னுடைய பெற்றோருக்கு இவ்வளவு அவமரியாதை என்று எண்ணி வருத்தப்பட்டு ஓரமாய் நின்றாள்.
மீமிகை அரக்கனே -3
தினேஷ் கண்ணன் அமுதா இருவரும் மிகுந்த கோவத்தில் இருந்தனர், அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அதனால் தினேஷ் கண்ணன் தன்னை நிதானம் படுத்துவதற்காக காத்து வாங்க வெளியே சென்று விட்டார். நிலைமையை சரி செய்ய அமுதா தான் பேசினார்.
அவர் நளினாவை அழுத்தமாக பார்த்தார், உங்க பெண்ணு ஏற்கனவே ஒருத்தனை காதலிக்கிறார் என்று உங்ககிட்ட சொல்லி இருக்கா, இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைன்னு சொல்லி இருக்கா, அவளை மிரட்டி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கீங்க கரெக்டா என்று உண்மையை கூறினார்.
ராமு மற்றும் நளினா ஒருவர் ஒருவரை பார்த்து இவருக்கு எப்படி தெரியும் என்று அமுதாவை தலை குனிந்து பார்த்தனர்.
மேலும் அமுதா தொடர்ந்தார், எதற்கு என் பையன் பெயரை சொல்லி பேங்க்ல லோன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்று நினைத்து தானே சாருமதிய மிரட்டி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சீங்க சரியா என்றார்.
நீங்க எங்கள விட வசதி கம்மி என்றாலும், உங்க பொண்ணு நம்பர் ஒன் மாடல் ஒழுக்கமாக இருப்பாள் என்று தான் இந்த கல்யாணத்துக்கு நாங்க சரி சொன்னோம். ஆனா நாங்கள் நினைத்தது பொய்யின்னு உங்க பொண்ணு நிருபிச்சுட்டா.
அது மட்டும் இல்லாம இன்னொரு விஷயம் சொல்லவா உங்க பொண்ணு மாசமா இருக்கா, என்று உண்மையை சொன்னார்.
இதைக் கேட்ட விமலா பாட்டி முதற்கொண்டு அனைவரும் ஆடிப் போயினர் இதைக் கேட்ட நளினா எனக்கு இது பெரிய அதிர்ச்சி இல்லை என்று அவர் முகத்திலேயே காட்டியது.
தன் அன்னை முகத்தை பார்த்த வெண்பாவிற்கு அசிங்கமாக இருந்தது .
வெண்பா தான் சாருமதி இடம் அதிக தீட்டு வாங்கியது.
மூடுசுவிங்ல தான் இப்படி கோபப்பட்டாளா அதிகமா பாதிக்கப்பட்ட ஜீவன் நான்தான் போல என்று நினைத்து ஓரமாக நின்று கொண்டாள்.
அமுதா நளினாவை பார்த்து எனக்கு இப்போ என் பையன் கல்யாண நடக்கணும், அதுவும் உங்க குடும்ப பெண்ணாக இருக்கணும் என்றார், நாங்க பிரஸ் மீட்டில் உங்க வீட்டுப் பெண்ணை தான் கல்யாணம் பண்ண போறோம் சொல்லிட்டோம்.
நல்லவேளை யார் பொண்ணு என்று சொல்லவில்லை, அதனால நீங்க தான் எங்க வீட்டு சம்மந்தி என்று முடித்து விட்டார்.
நளினா அமுதாவிடம் ஒரு அஞ்சு நிமிஷம் டைம் தாங்க நான் எங்க வீட்ல பேசிட்டு சொல்றேன் என்று தயங்கி நேரம் கேட்டார், அமுதாவும் சரி என்று தள்ளி நின்றார்.
பின்பு தன்னுடைய சொந்தங்கள் அனைவரிடமும் நளினா பேசினார், அவர்கள் எல்லோருக்கும் பெரிய வீட்டு சம்பந்தம் என்று ஆசையாக தான் இருந்தது ஆனால் அவர்கள் முடியாது என்று நளினாவிடம் சொல்லிவிட்டனர்.
பின்பு தன் தம்பி குடும்பத்திடமிருந்து பேசி அவர்கள் பொண்ணை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார் நலினா. பின் தன் தம்பி மகள் திருமணத்திற்கு தயார் என்று பவியமாக வந்து சொன்னார்.
அமுதா நலினாவிடம் உங்க தம்பி குடும்பத்துக்கு சம்மந்திய ஆகணும் சொல்லல, உங்களுக்கு தான் சம்பதின்னு சொன்னேன் என்றார்.
அவர் பேசுவதை புரியாமல் கேட்ட நளினா டக் என்று அவரைப் பார்த்தார், அவரும் தலையசைத்தார்.
நளினா அவ சின்ன பொண்ணு இப்பதான் காலேஜ் பைனல் இயர் படிக்கிறாள் என்று அமுதாவிடம் சொன்னார், அது எனக்கு தேவையில்லை உங்க மகள் தான் எங்க வீட்டு மருமகள் என்று அமுதா அழுத்தமாக கூறினார்.
ஒரு ரெண்டு நிமிஷம் டைம் தாங்க நான் பேசிட்டு வர என்று வெண்பாவிடம் வந்தார்.
வெண்பாவை திட்டி, மிரட்டி இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தார் நளினா.
பின் விமலா பாட்டி வந்து இந்த கல்யாணம் பண்ணிக்கோடா என் செல்லம் நான் ஆசைப்பட்ட மாதிரியே உனக்கு நல்ல வீட்டு சம்பந்தம் கிடைச்சிருக்கு.
உனக்கு தான் இந்த கல்யாணம் இருக்கு போல அதனாலதான் அவ போய்ட்டா. நீ இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப சந்தோஷமா இருப்ப, உன்ன பத்தி இந்த பாட்டி கவலைப்பட வேண்டாம், நீ சந்தோஷமா இருக்கேன்னு தெரிஞ்சாலே சந்தோஷமா போய் சேர்ந்துருவேன்.
இது இந்த பாட்டியோட கடைசி ஆசையா வச்சுக்கோ டா என்று அவளை முழு மனதாக சம்மதிக்க வைத்தார்.
நளினா அமுதாவிடம் வந்து எங்க பொண்ணு கல்யாணத்துக்கு ரெடி உங்க பையன் சம்மதிப்பாரா என்று கேட்டார்.
அதற்கு அமுதா உங்க பெண்ணை போல மரியாதை தெரியாத பையன் என் பையன் இல்லை என்றார், நான் சொன்னா சரி சொல்லுவான் என் பையன் என்று நக்கல்லாக பார்த்து சென்றார் அமுதா.
அகிலன் கண்ணனிடம் அமுதா பொறுமையாக பேசினார் சாருமதி, தங்கையுடன் தான் அவனுடைய திருமணம் என்றதுக்கு, அகில் கோவப்பட்டான்.
இது என்ன பொருள் வாங்கற மாதிரி பேசுறீங்க எனக்கு இந்த கல்யாண வேண்டாம் என்று கூறினான்.
நீ என் பேச்சைக் கேட்பாய் என்று சொல்லிட்டு வந்திருக்கா, அகில் நீ மட்டும் இப்ப இந்த கல்யாணம் பண்ணிக்கலான என்ன நீ உயிரோடவே பார்க்க முடியாது என்றார், சிறிது நேரம் யோசித்து அகில் இந்த திருமணத்தை ஒப்புக்கொண்டான்.
அகில் முதல் முதலாக வெண்பாவை பார்த்தான் அதுவும் கேவலமாக பார்த்தான், பணக்கார வீட்டுப் பையன் என்று கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா போல என்று கேவலமாக எண்ணினான்.
ஆனா வெண்பா தன்னுடைய அம்மா அப்பா விருப்பத்திற்காகவும், பாட்டியோட கடைசி ஆசை என்று சொன்னால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டால்.
சாருமதிக்காக பல லட்சம் கொண்டு நெய்த பட்டுப் புடவையை இப்பொழுது வெண்பாவிற்கு கொடுத்தனர்.
அந்த புடவையின் பிளவுஸ் சாருமதி அளவு தைத்ததால் வெண்பாவிற்கு எப்படி பத்தும் என்று பாட்டி யோசித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அந்த பிளவுஸ் வெண்பாவிற்காகவே தைக்கப்பட்டது போல இருந்தது. சாருமதி வெண்பாவை விட உயரமாகவும் சிறிது கூண்டாகவும் இருப்பாள். வெண்பா ஒல்லியாகவும் குள்ளமாகவும் இருப்பாள் .
இதைப் பார்த்த பாட்டி வெண்பாவிடம் இந்த திருமணம் உனக்காக நிச்சயிக்கப்பட்டது என்று சொன்னார். இதை அங்கிருந்த அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
வெண்பா மண மேடைக்கு வரும்போது அவளைப் பார்த்து அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
புடவை அவளுக்காகவே நெய்தது போல் இருந்தது அந்த புடவையில் ஜொலி ஜொலித்தாள் வெண்பா.
சில கண்கள் ஆச்சரியமாகவும், சில கண்கள் பொறாமையாகவும், சில கண்கள் பாசமாகவும், அவளை வருடியது. ஆனால் அகில் மட்டும் வெண்பாவை பார்க்கவில்லை.
நல்ல சுபயோக நேரத்தில் வெண்பாவின் சங்கு கழுத்தில் அகிலன் கண்ணன் தாலி கட்டினான், வெண்பாவுடைய நெற்றி வகட்டில் குங்குமம் வைக்கும் பொழுது கூட அவளை அவன் பார்க்கவில்லை.
சில பல சம்பரதாயங்களை முடித்து வெண்பாவின் வீட்டிற்கு பால் பழம் சாப்பிட சென்றார்கள்.
அகிலன் தன் அம்மாவிடம் அவர்கள் வீட்டுக்கு போக மாட்டேன் என்றான் ஆனால் அமுதா இந்த ஒரு வாட்டி போய்ட்டுவா என்றார். தன் அம்மாவை முறைத்துக் கொண்டே வெண்பாவின் வீட்டிற்கு சென்றான் அகில்.
வெண்பாவின் வீடும் வசதியாக தான் இருக்கும் நாலு பெட்ரூம் ஒரு பெரிய ஆள் கொண்டது தான் அதற்கே அவன் மூஞ்சை சுழித்துக்கொண்டான்.
பின் ராமு அகிலனை வெண்பாவின் ரூமிற்கு அழைத்து சென்றார். வெண்பா சாருமதி ரூமிற்கு சென்றாள்.
அமுதா அகிலன் தூரத்து சொந்தமான அக்கா நந்தினி மற்றும் அவரது மகள் தாரணி அகிலுடன் அனுப்பி வைத்தார்.
தாரணி வெண்பாவிடம் அத்தை நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறினால், பின் நந்தினியும் வெண்பாவிடம் இயல்பாக பேசி அவளை நடப்புக்கு கொண்டு கொண்டு வந்தார்கள் .
Hi bro nd sis என்னுடைய first story மீமிகை அரக்கனே free site potu இருக்க daily 3epi varum. Full story Amazon iruku அமேசான் சந்தாதாரர்கள் படிச்சிகொங்க…..
மீமிகை அரக்கனே (Tamil Edition) https://amzn.eu/d/9w94qTB
தேன் மதுர தென்றல் (Tamil Edition) https://amzn.eu/d/3HBGuG9