இஷ்டம் -18
அன்றிரவு கிருஷ்ணகுமார் அனைவரும் சாப்பிடும் நேரத்தில் “நாளைக்கு எல்லாரும் கிளம்பி ஊருக்கு போகலாம்.. நாளை மறுநாள் நாள் நல்லா இருக்கு அன்னைக்கே தாலி பிரிச்சி போடலாமான்னு அய்யன் கேட்டாங்க.. மாப்பிள்ளைக்கு வசதி படும்மானு கேட்டாங்க..” என்று நிறுத்தியவர் நிமிர்ந்து தன் குடும்பத்தை ஒரு முறை பார்க்க..
பாமா பவ்யமாக கணவரை பார்த்தார் ‘உங்கள் இஷ்டம் பிராண நாதா!’ என்று 70 நாயகிகள் போல..
அப்பா பேரு சொன்னதுமே மேகலைக்கு கண்கள் எல்லாம் ஒளிர்ந்தது. மெதுவாக கணவனை ஓரக் கண்ணால் பார்த்து மாமனாரை பார்க்க.. தொண்டையைக் கனைத்துக் கொண்டான் அந்நேரம் கார்த்திக்.
‘மாப்பிள்ளை கெத்து காட்டுறானாம்!’ என்று அவனை முறைத்து பார்த்த கிருஷ்ணகுமார், “அது..” என்று அவன் ஆரம்பிக்கும் முன் “அதெல்லாம் உங்க மாப்பிள்ளைக்கு ஒரு வேலையும் கிடையாது. முக்கியமான வேலையே இது தான்னு நானே சொல்லிட்டேன்” என்றார் மகனை மறைத்துக் கொண்டே…
கார்த்திக்கோ “என்ன கேட்கமாக எப்படி நீங்க சொல்லலாம்? அதுவும் என் மாமனார்கிட்ட!!” என்று அவன் அவரை கோபத்தோடு கேட்டான்.
பாமா அருகில் இருந்த மருமகளின் கையை சுரண்டி “பேய்க்கும் பேய்க்கும் சண்டை!! அதை ஊரே வேடிக்கை பாரக்குது!” என்று அவர்கள் இருவரையும் சுட்டிக்காட்ட மேகலைக்கு முட்டிக்கொண்டு சிரிப்பு வர வாயைப் பொத்தி அடக்கி கொண்டாள்.
‘இப்பதான் ஒரு ப்ராஜெக்ட் அம்பேலானது!! திரும்பவும் என்னால் வொர்க்ல கான்சென்ரேட் பண்ண முடியாமல் இரண்டு நாளைக்கு வந்து உட்கார்ந்து இருக்கேன். இதுல இன்னும் மூணு நாள் ஊருக்கு போனா கிழிஞ்சிரும் என் பொழப்பு!” என்று அவன் மைண்ட் வாய்ஸ்.
“மகனே.. அவர் என்கிட்ட கேட்டார் அதுக்கு எதுக்கு நான் உன்ன கேக்கணும். உன் மாமனார் வேணா உன்னை கேட்கலாம்.. எனக்கு அது அவசியமில்லை! நான் கேட்க வேண்டிய ஆளே வேற…” என்றவர் அதுவரை கடுகடுத்த முகம் கனிவாக மாற.. “பாப்பா.. தேதி உங்களுக்கு வசதி படுங்களா?” என்றார்.
‘பாப்பாவாம் பாப்பா! இவள பாப்பா பாப்பானு கூப்பிட்டு கூப்பிட்டு எங்களுக்கு பாப்பா பொறக்க விடாம சதி பண்ணிடுவாங்க போல’ என்று கடுக்கடுத்தவாறு திரும்பி மனைவியை பார்த்தான்.
“ஏனுங் மாமா.. உங்களுக்கு ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட் இல்லை மீட்டிங் ஏதாவது இருக்குதுங்களா?” என்று இவள் கணவனிடம் கேட்க.. கார்த்திக் திரும்பி கெத்தாக ஒரு பார்வை பார்த்தான் தன் தந்தையை.. ‘பார்த்தீர்களா என் மனைவியை?’ என்று!! அவர் அமைதியாக அவர்களை பார்த்தப்படியே தான் இருந்தார்.
“முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு..” என்றவன் தந்தையை திரும்பி பார்க்க… அவரோ பல்லை கடித்துக் கொண்டு இவன் செய்யும் அலும்பை மேகலைக்காக பொறுத்திருந்தார்.
“அப்போ இன்னொரு நாள் வச்சுக்கலாமுங்க.. நீங்க மீட்டிங் முடிச்சுட்டு பொறுமையா வாங் மாமா.. அதுவரைக்கும் நான் இங்கே அய்த்த மாமாங் கூட இருக்கேன்னுங்” என்று மேகலை சொல்லியது தான் தாமதம்.. ‘ஏற்கனவே நாலு நாள் ஆகிடிச்சு மேகலை இங்க வந்து, இன்னும் எத்தனை நாள்?’ என்று விதிர்விதித்தவன் “அதெல்லாம் ஒன்னும் இல்லை!! நீ இவ்வளவு தூரம் கெஞ்சி கேட்கிறதுனால நான் அதை கண்ணன விட்டு பார்த்துக்க சொல்கிறேன்” என்று பதட்டமாகவே அவன் கூற.. இப்பொழுது கிருஷ்ணகுமார் முகத்தில் அத்தனை நக்கல் வழிந்தது.
‘எப்படி? எங்க பாப்பாவ பாத்தியா? எங்க உன்னால அவங்கள மீறி பேச முடிஞ்சுதா?’ என்றவாறு!!
“குடும்பமா இது? குடும்பம்னா எப்படி இருக்கணும்? அம்மா பிள்ளைக்கு சப்போர்ட் பண்ணனும்.. புடிச்சத சமைச்சு கொடுக்கணும்!! அப்பா எப்படி இருக்கணும்?? மகன் தோளுக்கு மேல வளர்ந்து விட்டான், அவனுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கணும்.. அவன்கிட்டயும் கருத்து கேட்கணும்!! ஆனா இவங்க? எல்லாம் அப்படியே உல்டாவா இருக்காங்க டா!! எங்க அம்மா என்னமோ மேகி மேகின்னு என்னை விட என் பொண்டாட்டியே கொஞ்சி கொஞ்சி கூப்பிடுறாங்க.. எங்க அப்பாவோ பாப்பா பாப்பா பாப்பானு அவளை இன்னும் பத்து வயசு பாப்பா மாதிரியே ட்ரீட் பண்றாரு!! இதெல்லாம் எங்க போய் முடியும்னு தெரியல டா!!” என்று இரவு வழக்கம் போல கண்ணனை ஃபோனில் பிடித்து வைத்துக் கொண்டு புலம்பி தள்ளினான்.
காலை முதல் வேலை பார்த்து வந்த களைப்பில் தூங்க விடாமல் புலம்பும் இவனை தவிர்க்கவும் முடியாமல் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு மெத்தையில் கவிழ்ந்து தூங்கி விட்டான்.
நமக்கு தூக்கம் முக்கியம் பிகிலு!!
மேகலையும் மாமியாரின் அறையில் நின்றிருந்தாள். மறுநாள் ஊருக்கு போவதற்கு எந்த சாரி கட்டலாம்? எந்த மாதிரி பிளவுஸ் போடலாம்? என்று பாமா கேட்டுக் கொண்டிருக்க.. அவளோ அவருடைய வார்ட்ரோப்பை திறந்து வைத்து ஒவ்வொன்றாக பார்த்து தேர்வுசெய்து கொண்டிருந்தாள்.
“நாளை மறுநாள் தாலி பிரித்து கோர்த்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் குலதெய்வ கோயிலுக்கு போவதாக ஏற்பாடு!! அங்கே கட்டி செல்வதற்கு நம் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி சாரீஸ்” என்று இரண்டு புடவையை காட்டினர்.
“அது மட்டுமல்ல பிளவுஸ் டிசைன் கூட அதுக்கு ஏற்ற மாதிரி தான் ஒரே டிசைன்! செம்மையா இருக்குல.. நம்ம ரெண்டு பேரும் சேம்.. சேம்!!
“சேம் பின்ச் அய்த்த!” என்று அவள் அவர் முழங்கையில் கிள்ள..
“நோ.. நோ.. மேகி!! இப்படி சேம் பின்ச் பண்றது எல்லாம் பழைய ஃபேஷன்! ஒரே மாதிரி போட்டு இருந்தா ஸ்வீட் தான் கொடுக்கணும். நீ என் ஸ்வீட் மருமகள் இல்லையா.. ஸ்வீட்டுக்கே நான் எப்படி ஸ்வீட் கொடுக்க?” என்று அவள் தாடையை கிள்ளி கொஞ்சினார் பாமா.
இது போங்கு ஆட்டம் அய்த்த..” என்று அவள் சிணுங்க.. அவரும் அவளுக்கு திஷ்டி கழித்து கன்னத்தில் முத்தமிட்டவர், “ஏதோ பர்ன் ஆகுற மாதிரி ஸ்மெல் வருதுல்ல..” என்று மூக்கை தேய்த்து விட்டபடி திரும்பிப் பார்த்தார் பாமா.
இவை அனைத்தையும் பார்த்தவாறு பாமாவின் அறை வாசலில் கடுப்போடு நின்றிருந்தான் கார்த்திக்!!
“அது எப்படிம்மா நான் என் பொண்டாட்டிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தா.. நான் காஜி!! அப்ப நீ யாரு?”என்றதும்..
“நான் பட்டும் படாம தொட்டும் தொடாம ஒரு பூவ ஸ்பரிச்சிக்கிற மாதிரி எவ்வளவு மென்மையா என் மருமகளுக்கு ஒரு உம்மா கொடுத்தேன். ஆனால் நீ..?? அதை இன்னும் நான் உங்க அப்பா கிட்ட சொல்லல.. சொல்லட்டுமா? ஏங்க…” என்று இவர் குரல் கொடுக்க..
“நாங்கள் கிளம்பிட்டோம்! ரூம்க்கு போய் அரைமணிநேரம் ஆகுது!” என்று கையோடு பொண்டாட்டியையும் இழுத்துக் கொண்டு படி ஏறினான் கார்த்திக்.
அன்று இரவும் நடுவில் தலையணை சுவர் எழுப்பி கணவனை கட்டிலுக்கு அந்த பக்கம் படுக்க வைத்தாள் காரிகை.
“இன்னும் ஒரு நாள் தாண்டி!! அப்புறம் இருக்கு உனக்கு!” என்று அவனும் மிரட்டி விட்டு குப்புற படுத்து தூங்கி விட்டான்.
மறுநாள் காலை.. குளித்து முடித்து
கூந்தலை டவலால் உலர்த்திக்கொண்டே மெல்ல வெளியில் பார்க்க.. கார்த்திக் அங்கே அறையில் இல்லாததை நினைத்து பெருமூச்சு விட்டவள், வெண்ணிற பூந்துவாலைவோடு வெண்தந்த அங்கங்கள் அரைகுறையாக தெரிய குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் மேகலை!!
வேறு அறையில் குளிக்க சென்றிருப்பானாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே.. வார்ட்ரோபில் தன் துணிகளை எடுக்க, அவள் கரத்திலிருந்து துணி பிடுங்கப்படுவதை கண்டு அதிர்ச்சியுடன் திரும்பியவளின் முன் முட்டி நின்றான் கார்த்திக் வெற்று மார்பை விடைத்தப்படி..
அவனின் சூடான மூச்சுக்காற்று அவள் ஈர தேகத்தில் பட்டு அவளை தகிக்க வைக்க.. உணர்ச்சி பிடியில் தத்தளித்தவள் இப்பொழுது உணர்ச்சிப் பிழம்பாக மாறி வெடிக்கத் தயாராக, தன் கீழிதழை மேற் பற்களால் கடித்து அவனைப் பார்க்க முடியாமல் தயங்கி முயங்கி நின்றாள் மாது!!
அவளது கன்னங்களை பற்றி கீழிதழை விடுவித்தான்அவள் பற்களில் இருந்து தன் இதழ்களை கொண்டு.. அந்தோ பாவம்!! அவள் மேற்பற்களில் இருந்து விடுதலை பெற்ற கீழுதடோ அவனது முரட்டு இதழ்களுக்குள் சிக்கிக்கொண்டது.
காப்பாற்றப் போன அவளது மேலுதடும் பலியாகின அவனது பற்களுக்கு!!
இதழ்களுக்குள்ளே இதழ்கள்..
இடைகளின் இறுகிய அணைத்தல்..
வன் மார்பில் பெண் மார்பு நசுங்கல்..
கைகளின் தடையற்ற ஊரல்..
என தாபம் பொங்கிய
பெருக்கில்.. இருவரும்!!
அவள் கன்னத்தில் தன் மிருதுவான கன்னத்தை தேய்த்தவன், குட்டி குட்டி
முத்தங்களை இட்டான் பிறை நெற்றி தொடங்கி.. முகம் முழுவதும்!!
“ம்ம்… மாமா…” என்று மேகலை முணங்க..
அதில் தூண்டப்பட்ட ஆணவனோ அணங்கவளின் மெல்லிய கழுத்தை கவ்வி இழுத்து சுவைத்தான். அவள் கழுத்தில் வீசிய சோப்புடன் கூடிய பெண்ணின் மணம் அவனை கிறங்க வைத்தது.
அவன் விரல்கள் அவள் இடுப்பை இறுக்கி பிடித்து கசக்க.. அவளின் கை அவன் கையைப் பற்றி தடுக்க.. இடுப்பில் லேசாக அவன் கிள்ள..
“ஸ்ஸ்ஆ” என்று கிறக்கத்துடன் சிணுங்கினாள் பெண்.
“முரடுங்.. மாமா!” என்று பட்டம் வழங்க, சிரிப்புடன் அவளின் மிருதுவான இடுப்பில் இருந்த கையை மெல்ல நகர்த்தி முன்னால் கொண்டு வந்து அவளின் நாபியில் விரலால் கோலம் போட.. மென்மையாக விரலை விட்டு சுழற்ற.. அவள் சுணங்கி சிலிர்த்து முனகினாள். விரல்கள் இங்கே விளையாட.. இதழ்களோ அவள் கழுத்தை விடுத்து வெற்று தோளில் முற்றுகையிட்டன.. பின் மெது மெதுவாய் அவளது இதழ்களில் இளைப்பாறின!!
அவனுக்கோ தன் இதழ்களுக்குள் வெண்ணெயென கரையும் அவள் இதழ்களை விட முடியாமல்.. மென்று தின்று.. இதழ்த்தேன் மொத்தமாக பருகினான்.
“ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ் மாமா..” என்று அவன் தன் இதழ்களில் நடத்தும் ஆராய்ச்சியில் அவள் முயங்கி மயங்கி நிற்க… அவன் சிகை முழுவதும் அவளது கரங்களுக்குள் சிக்கி சின்னபின்னமாகி போக.. இருவருக்கும் இடையில்
அவள் மார்பில் பேருக்கு இருந்த பூந்துவாலையை தன் முகத்தால் தள்ளினான் கார்த்திக்.
வெற்று தேகங்களின் உரசலில் தங்கள் நிலையை அப்போது தான் உணர்ந்தாள் மாது!! இருளில் உணர்ந்த கணவனின் கோலம் இப்போது வெளிச்சத்தில் அவளுக்கு திக்கென்று ஆக.. விலக முயன்றவளை இழுத்து தன் கோலத்தினை உணர செய்ய.. விதிர்வித்தவளை இறுக்கி அணைத்து கொண்டான் மோகனன்.
“மேகி.. மேகி..” என்று மோகத்தில் பிதற்றியவன் அவள் இதழ்களில் ஆரம்பித்து… கழுத்தில் ஊர்ந்து.. தோளில் கடித்து.. தேகத்தில் தவழ்ந்து… அமுத கலசங்களை கொள்ளையிட ஆரம்பித்தான் கள்வனாக!!
மெல்ல மெல்ல அவனது கொள்ளையடித்தல் மெது மெதுவாக முன்னேறி உடலின் அங்கங்களை சுவைத்து ரசித்து கூடலுக்கு வித்திட்டான். அவள் இடுப்பை இறுக்கி பிடித்தபடி அவளை தூக்கியவனை பார்த்தவவளின் முகம் சூடாகியிருந்தது. கண்களை மூடியபடி சயனத்திருந்தாள் அவன் கிடத்திய மெத்தையில்..
கிறங்கி மூடிய கண்களைத் திறந்து அவனைப் பாரத்தாள் மோகம் ஏறிய கண்களோடு.. அதனை தன் தாப பார்வையால் விழுங்கியவன் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.
அவளோடு அழுத்தமாக அவன் நெருங்க.. அவன் முகம் காட்டும் வர்ணஜாலமும்.. அவள் தேகத்துக்குள் நடக்கும் பூகம்பமும் என அவள் சிதறினாள்.
அவனின் வேகத்தில் அவனது வெற்று முதுகு இவளின் நகக்கண்ணுக்கு இலக்கானது!! அவன் கன்னங்கள் தாடை தோள் புஜம் என்று அவள் கடித்து தன் உணர்வுகளை வெளிக்காட்ட.. ஆணவனின் முகத்திலோ வெற்றி புன்னகை!!
வெகுநாளுக்கு பின்னான அவனின் இந்த வேகத்தில் அலறியவளை இழுத்து தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டு அவளின் முதுகை தலையை வருடி “ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..” என்று சமாதானம் செய்ய இந்த புதிய உச்சம் அவளை புரட்டி போட்டு இருந்தது!!
அதிலும் ஒவ்வொரு நெருக்கத்திலும் ஒவ்வொரு அழுத்தத்திலும் அவனது மேகி மேகி என்று வார்த்தைகள் அவளின் உயிர் வரை நிறைத்தது!!
சற்றும் விலகாமல் கண்களை மூடி கணவனை கட்டிக் கொண்டு கிடந்தாள் காரிகை!! இன்று சற்று அவளை படுத்தி விட்டோமோ என்று அவளின் கட்டுக்குள் இருந்தான் கார்த்திக்!!
இன்று ஊருக்கு செல்ல வேண்டும் இன்னும் இருவரும் கீழே வரவில்லையே என்று பாமா பார்த்திருக்க..
“பார்த்துகிட்டே இருந்தா எப்படி ஃபோனை போடு!” என்றார் கிருஷ்ணகுமார் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்தவாறு..
“ஆமாம் இல்ல.. மறந்துட்டேங்க” என்று அவர் தலையில் தட்டிக் கொள்ள…
“பார்த்து பார்த்து இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் இப்படி தட்டி தட்டி கலங்கிட வைக்க வேண்டியது. அப்புறம் எது தான் ஞாபகம் இருக்கும்?” என்று மனைவியை வாரியவர்.. கொஞ்சம் கூட கெத்து குறையாமல் முகத்தை செய்தித்தாளுக்குள்ளேயே நுழைத்து இருந்தார். பாமாவோ திரும்பி கணவனை முறைக்க அவர் பார்த்தால் தானே…
விடாமல் ஒலிக்கும் ஃபோனின் ரிங்டோனில் தங்கள் நிலை உணர்ந்து அவள் அவசரமாக பிரிய “இரு எதுக்கு இவ்வளவு அவசரம்.. நான் எடுக்குறேன்” என்றவாறு இவனே ஃபோனை எட்டி எடுத்துக் கொடுத்தான்.. அவளது அங்கத்தோடு நன்றாக உரசியப்படியே!!
“ஏனுங்க அய்த்த..” மென் குரலில் கேட்க..
“என்னம்மா இன்னும் எழலையா? மணி ஆயிடுச்சு நம்ம கிளம்பனும் இல்லையா? 11 மணிக்கு ஃப்ளைட்” என்று ஞாபகப்படுத்தினார் பாமா.
“அச்சோ.. கொஞ்சம் தூங்கிட்டேன்னுங்க. ஏதோ 15 நிமிஷத்துல கிளம்பி வந்துடுவேனுங்க அய்த்த” என்றாள்.
“சரி சரி.. மணி ஒன்பது தான் ஆகுது பத்து மணிக்குள் கிளம்பி வந்துருங்க ரெண்டு பேரும். சரியா?” என்று போனை வைத்தார்.
இவனும் வாகாக மெத்தையில் பள்ளி கொண்டு அவளை அள்ளி தன் மீது போட்டுக்கொண்டு அவள் ஃபோன் பேச.. இவனோ அவள் அங்கங்களில் விளையாட என்று இம்சை கொடுத்துக் கொண்டிருந்தான்.
அந்த இம்சையும் இனிமையாக அவளுள் இறங்க.. கிறங்கியவள் தன்னை நிதானித்து “கிளம்புங்க நேரம் ஆச்சு” என்று இறங்கப் போனவளை தடுத்து.. “ஒன்ஸ் மோர்” என்று அவன் கேட்க…
“அச்சச்சோ.. மோரும் இல்லை தயிரும் இல்லிங்.. ஆளை விடுங் மாமா” என்று அலறியவள் குளியல் அறைக்குள் புகுந்து அதை தாழிட முயல, அதனைத் தடுத்தவன்..
“இங்க பாரு பெல்லு.. ரெண்டு பேரும் தனித்தனியா குளிச்சு முடிக்கிறதுக்கு டைம் ஆகும்! ஒன்னா குளிச்சா சீக்கீரம் கிளம்பிடலாம். என்ன சொல்ற?” என்று கேட்க.. அவளோ குழம்பியிருக்க அந்த குழப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவன், ஒன்றாக குளியலிட்டு சில பல சேட்டைகளையும் செய்தே வெளிவந்தான்.
மகனும் மருமகளும் மாடியில் இருந்து இறங்கி தயாராகி வருவதைப் பார்த்த பாமா தன் கைக்கடிகாரத்தை பார்க்க.. அதுவும் பத்து என்று காட்டியது. ‘ஒரு பேச்சுக்கு பத்து மணிக்கு வாங்கன்னு சொன்னா.. கரெக்டா ரெண்டும் 10 மணிக்கு வருது பாரேன்!’ என்று அதிசயத்தார்.
“சரி டைம் ஆகுது.. நீ போய் அப்பா கூட இரு! நான் மேகியுடன் வரேன்”
அந்த மேகி என்று வார்த்தையில் இவன் அன்னையை முறைக்க..
“ஓஹோ.. மை சன்! எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” என்று அப்பாவியாய் கேட்டவரிடம் தன் அந்தரங்கத்தை சொல்ல அவனுக்கு கஷ்டமாக இருக்க.. “அதெல்லாம் உங்களுக்கு தான் உங்க புருஷன் இருக்காரு இல்ல.. நீங்க அவர் கூட போங்க அவ என் கூட வருவா!” என்றான்.
“எது? உங்க அப்பா கூடவா?” என்று அவர் நெஞ்சில் கை வைத்து பார்க்க அத்தையின் அளப்பறையில் மெல்ல சிரித்தாள் அழகாக…
“ஏங்க கேட்டீங்களா உங்க புள்ள சொல்றத..?” என்று தன் கணவனிடம் மகனை மாட்டி விட முயல..
“அவன் தான் சொல்றான்ல பாப்பா கூட வருகிறேனு.. அவங்க இரண்டு பேரும் வரட்டும்! நீ என் கூட முன்னால் வா” என்று எப்பொழுதும் மகனுக்கு எதிர்ப்பாவே பேசுபவர் என்று ஆதரவாக பேச..
” இது உனக்கு தேவையா? தேவையா பாமா? இனி நீ வாயை திறப்ப?” என்று சுட்டு வரலை தனக்கு முன் சுட்டி அவர் தன்னை தானே திட்டிக் கொள்ள…
கலகலத்து சிரித்தாள் மேகலை. அவளின் சிரிப்பில் கிருஷ்ணகுமார் பரவசமாக பார்க்க.. கணவன் காதலாக பார்க்க.. பாமாவோ பயத்தோடு பார்த்தார்.
“ஏன் இப்படி ஆளாளுக்கு என் மருமக மேல கண்ண போடுகிறீங்க? உங்க கண்ணை கொள்ளிக்கண்ணு” என்று தன் கையால் மருமகளுக்கு திருஷ்டி எடுத்து தன்னுடன் இழுத்துக் கொள்ள முயல.. கார்த்திக் தன் தோளோடு அணைத்துக் கொண்டவன் “இந்த டகால்டி வேலையெல்லாம் என்கிட்ட வேணாம் அம்மா! நான் உங்க மகனாக்கும்!! போங்க.. போங்க.. என்னதான் நீங்க ட்ரை பண்ணாலும் இன்னிக்கு நீங்க அப்பாவோட தான் உங்களை கோர்த்து விட போறேன்” என்றான் அம்மாவை அறிந்த மகனாக!!
“நம் ராசதந்திரம் அனைத்தும் வீணா போனதே!” என்று பொறுமலோடு கணவனோடு சென்றார் பாமா. பிளைட்டில் ஏறியதும் அப்பவும் கணவனோடு அமர.. ப்ளைட் டேக் ஆன சில நிமிடங்களில் உறக்கத்திற்கு சென்று விட்டார் கிருஷ்ணகுமார். அவர் விட்ட குறட்டையில் காது மட்டும் அல்லாமல் உடம்பையே மூடிக்கலாமா என்ற நிலைக்கு ஆளானார் பாமா.
“நைட்டு தான் இந்த இம்சை படுத்துறாருன்னா.. பகலில் கூட அதுவும் ப்ளேட்ல கூட! ஆண்டவா.. பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்! தப்பிக்க பார்த்து முடிய மாட்டேங்குதே!” என்று நொந்தவாரே அமர்ந்திருந்தார்.
இவர்களுக்கு சற்று பின்னால் அமர்ந்திருந்த கார்த்திக் “உன்கிட்ட அன்னைக்கே சொன்னேனடி அம்மாவை மேகினு சொல்லிக் கூப்பிட வேண்டாம்னு..சொல்ல மாட்டியா நீ?” என்றான் அவள் கன்னத்தைக் கிள்ளி..
“நானும் அன்னைக்கே சொல்லிட்டேனுங்க உங்கள்ட்ட.. வேணும்னா நீங்க சொல்லுங்க! நான் என்ற அய்த்தகிட்ட அப்படி கூப்பிடாதீங்.. இப்படி கூப்பிடாதீங்னு சொல்ல மாட்டேனுங்க! அவங்களுக்கு எப்படி பிடிக்குதோ அப்படி கூப்பிடட்டும். உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தால் நீங்க வேற புது பேரு கண்டுபிடிங்.. மாமோய்!” என்று கண்ணடித்து சிரித்தவள் அவனுக்கு சவால் விட…
“இருடி!! சீக்கிரமா மேகியை விட ஒரு நல்ல சூப்பரான கிக்கான செல்ல பெயரை கண்டுபிடிக்கிறேன்” என்றவன் யோசனையில் ஆழ்ந்தான்!!
ஆனால் இதே கணவன் தான் இன்னும் சில மணி நேரங்களில் தன்னை மனசால புண்படுத்துவான் என்பதை அறியாமல் அவன் தோள் வளைவிலேயே சாய்ந்து குருகுருவென மகிழ்வோடு கணவனை பார்த்து வந்தாள் மேகலை!!
இஷ்டமாகுமா???
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super sis ❤️