ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 4

 

4

 

“என்னது!! வெற்றி அண்ணே காரா?” என்று சந்தோஷம் பொங்க அவர்கள் கேட்க…

 

 

“அது அண்ண காரே தான்டா!! சந்தேகமே கிடையாது. நாம கட்டம் கட்டி தூக்க திட்டம் போட்டா??அண்ண அசால்டா செஞ்சுட்டு போயிட்டே இருக்காரு பாரேன்!!” என்று என்றும் போல இன்றும் தன் அண்ணனின் அறிவை மெச்சி அப்படியே சிலாகித்துக் கூறினான் கதிர்..

 

“அண்ணே வேலை விஷயமா வெளியூர் போய் இருந்தாங்கன்னு அன்னைக்கு சொன்னிங்க??” என்று இன்னொருத்தன் கேள்வி கேட்க..

 

 

“ஆமாண்டா போயிருந்தாரு.. ஆனா கரெக்டான டயத்துக்கு செமயா என்ட்ரி கொடுத்திட்டார் பாரு.. யாருக்கும் துளிக்கூட சந்தேகம் வராது” என்றான் கதிர்.

 

 

“அப்படியே சந்தேகம் வந்தாலும் நம்ம அண்ணன என்ன பண்ண முடியும் அவிங்களால??” என்றவனிடன்..

 

“அதே.. அதே..” என்று விரலை உயர்த்தி காண்பித்தான் கதிர்.

 

இவனின் கார் மீண்டும் குவாரியை தஞ்சமடைய அன்று முழுவதும் குவாரி வேலைகள் இழுத்துக்கொண்டது கதிருக்கு.

அதன்பின் வீட்டுக்கு சென்றவனை வெளியிலேயே நின்று வரவேற்றார் அவனது அப்பத்தா பெரிய நாச்சி…

 

“என்ன பேபி.. எனக்கா காத்திருக்க?” என்று தன் அப்பத்தாவின் உயரம் குனிந்து அவரது தண்டத்தை ஆட்டியபடியே இவன் கேட்டான்.

அது என்னவோ சிறுவயதிலிருந்து கதிருக்கு இது ஒரு பழக்கம். அவரின் தண்டத்தை பிடித்து ஆட்டவதும் அதை சுண்டிவிட்டு விளையாடுவதும்..

 

“எடுப்பட்ட பயலே.. கையை எடுடா வலிக்குது” என்று தன் வெத்தலை பெட்டியால் அவனை விரட்டுவார். அதையெல்லாம் கேட்டுடவா போறான் இந்த குறும்புக்காரன்..

 

 

இன்றும் அதே போல அதை ஆட்டிக் கொண்டே கேட்க.. “ஏலே சின்ன ராசா.. இன்னைக்கு பாண்டி கோவில் என்னடா பிரச்சனை? உங்க பெரியப்பன் மூஞ்ச தூக்கி வைச்சிகிட்டு உட்கார்ந்திருக்கான். உன்னைய தான் தேடிட்டு இருக்கான்.. புறவாசல் வழியா உள்ளே போயி உங்க பெரியம்மா சாப்பாடு வச்சிருக்கா சாப்பிட்டுட்டு பொத்துனாப்புல போய் படுத்து தூங்கு” என்று தன் ஆசை பேரனை பெரிய மகனின் கோபத்திலிருந்து காப்பாற்ற முயன்றார் இந்த பாசமிகு அப்பத்தா!!

 

 

“இரு.. இரு.. நான் என்ன தப்பு பண்ணுனேனு இப்ப எதுக்கு நான் புறவாசல் வழியா உள்ளே போகணும்?”

 

 

“அதான் சொன்னேன் டா.. நீ பாண்டி கோவில் ஏதோ பிரச்சினை பண்ணி இருக்கேன்னு”

 

 

“நான் அவனுகள எல்லாம் அடிக்கல.. பெரிய பிரச்சனை ஒன்னும் இல்ல பேபி.. இங்க பாரு நான் பாட்டுக்கு தங்கபாண்டி விருந்துக்கு போய் நல்லிய சாப்பிட்டு வந்துட்டேன்.. இந்த மருது பயதேன்.. ஏதோ குறுக்கா மறுக்கா பேசிட்டு போனான்.. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சொல்லிட்டேன்.. என் கவனம் எல்லாம் நல்லில தேன்” என்றான்.

 

 ஒரு அடி உள்ளே காலெடுத்து வைத்தவன் தலையை மட்டும் அப்பத்தா புறம் திருப்பி “பெரிய ஐயா ரொம்ப கோவமா இருக்காரா?” என்று கேட்க.. அவரோ மேலும் கீழும் தலையை ஆட்ட “நீ சொன்னா சரி தான் பேபி” என்றவாறு பின்பக்கம் சென்று அவனின் பெரிய அன்னை சுலோச்சனா அவனுக்காக வைத்திருந்த உணவை எடுத்து வேக வேகமாக சாப்பிட.. புரை ஏற தொடங்கியது.

 

 

“பெரியம்மா சோத்த வச்சுதுதே.. தண்ணி வைச்சுதா?” என்று வாயாடிய படியே அருகிலிருந்த தண்ணி குவலையை தேட.. அதற்குள் அவன் முன்னே தண்ணீர் குவளை நீட்டப்பட.. டபக் என்று வாங்கி ஒரே வாயில் குடித்து முடித்தவன் “ரொம்ப தேங்க்ஸ் பெரியம்மா” என்று சிக்கனுக்கு ஆதரவு கொடுக்க கையில் எடுத்தவன் அதிர்ந்து நின்றான்.

 

 

“பெரிய்யா..” என்ற வார்த்தை தொண்டைக் குழியிலிருந்து வெளியே வரவே இல்லை.

 

 

“மொதல்ல சாப்பிடு அப்புறம் என்ன வந்து பாரு” என்றுவாறு அவர் உள்ளே சென்று விட..

 

‘இவருக்கு எப்படி தெரிந்தது என்று தெரியலையே?’ என்று யோசித்தாலும் கையும் வாயும் சிக்கனோடு சண்டையிட்டுக் கொண்டே தான் இருந்தது.

 

 

வாஞ்சி வேந்தன் அந்த வீட்டின் தலைமகன்!! எப்பொழுதும் அவர் அமரும் அந்த நாற்காலியில் மிடுக்கும் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அருகே சற்றுத்தள்ளி மலர் வேந்தன் அவரது தம்பி அமர்ந்திருக்க.. பெரிய அன்னை சுலோச்சனாவும், இவனது அன்னை மரகதமும் அறை வாசலில் நின்றுகொண்டு கதிரை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

இவனோ அன்னையை பார்த்து சைகை மொழியில் சிக்கன் சூப்பர் என்று கூற “கதிரு!!” என்ற வாஞ்சியின் குரலில் அட்டென்ஷன் பொசிஷனுக்கு வந்தவன் “சொல்லுங்க பெரிய ஐயா” என்றான் பவ்வியமாக.. இந்த பூனையும் பால் குடிக்குமா என்று நம்மையே யோசிக்க வைக்கும் வண்ணம் இருந்தது அவனது முகபாவனை!!

 

“என்ன நடந்தது பாண்டி கோவில?” என்று விசாரணை தோரணையில் அவர் கேட்க..

 

நடந்ததில் சிலபல எடிட்டிங் வேலையை செய்து கடகடவென்று ஒப்பித்தான் அதில் சிறு பிசிறு கூட இல்லாமல்..

 

அதாவது சின்ன வயதில் இருந்தே அவனுக்கு இது ஒரு பழக்கம்.. ‘திக்கி திணறி சொன்னாதானே பொய்யின்னு கண்டுபிடிப்பாய்ங்க.. சட சட சடவென்று ஒப்பிச்சா அது உண்மைதானே நம்புவாய்ங்க’ என்று!! 

 

ஆனால் இவனை சிறுவயதிலிருந்து அறிந்த அவருக்கு தெரியாமலா போகும்??

 

“நான் கேட்டது முழு உண்மையும்!! இப்ப சொல்ல போறியா? இல்லையா?” என்று கேட்க..

 

 

“நான் அந்த புள்ளைய தூக்கலாமுறு பிளான் போட்டது என்னமோ உண்மைதானுங்க.. ஆனால் அந்த புள்ள அதுக்குள்ள என்கிட்ட தப்பித்து ஓடிருச்சு.. கூட்டத்திலே என்னால அதை தொடர்ந்து ஓட முடியலங்க.. அதுக்கு அப்புறம் நல்லி முக்கியமா பொண்ணு முக்கியமான என் அந்தராத்மா உள்ளிருந்து ஒரு கேள்வி கேட்டாதுங்க.. நமக்கு நல்லி தான் முக்கியம்னு தங்கபாண்டி விருந்துக்கு திரும்ப வந்துட்டேனுங்க பெரியய்யா.. அவ்வளவு தானுங்க நடந்தது!!” என்று அவன் கூற..

 

அவன் கண்களை கூர்ந்து பார்த்தார் வாஞ்சி.. அவனும் சளைக்காமல் மறுப்பார்வை பார்க்க.. “சரி போ!!” என்று அவனை அனுப்பினார்.

 

 

மெல்ல திரும்பியவன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு தப்பிச் சென்று வேகவேகமாக மாடி ஏற கதிரு என்று இப்போது அழைத்தது அவரது தந்தை மலர் வேந்தன்…

 

“என்னய்யா?” என்று அங்கிருந்த கேட்டவனிடம்..

 

“வேந்தரு எப்போ வராரு?” என்று கேட்டார் எதார்த்தமாக..

 

எங்கே நாமே வாய்விட்டு பதார்த்தம் ஆகி விடுவோமோ என்ற பயத்தில் “அது எனக்கு எப்படி தெரியும் ஐயா? என்ன வேலை முடிஞ்சா வந்திட போறாரு.. அவர் வேலை எப்போ முடியுது அவருக்கு மட்டுந்தேன் தெரியும்” என்று கூறி சென்றவனை நம்பத்தான் வேண்டி இருந்தது இரு தந்தையாராலும்..

 

வெற்றி வேந்தன் எப்போதுமே அப்படித்தான்.. சிறுவயதிலிருந்தே ஒரு மிடுக்கும் கம்பீரமும் அவனது உருவத்திலும்.. வேகம் விவேகம் அவனது செயலிலும் என்றுமே இருக்கும். அதுவும் அவன் வளர வளர அவர்களது தந்தை ராஜ வேந்தனையே ஒத்திருக்க.. தந்தைக்கு கொடுத்த மரியாதையை அப்படியே அவனுக்கும் கொடுத்து “வேந்தரே!!” என்றுதான் இன்னமும் அழைப்பார்கள்‌ வெற்றி வேந்தனை!!

 

வாஞ்சிக்கு ஏதோ எங்கேயோ சரியில்லை என்று ஒரு சிறு முணுமுணுப்பு உள்மனதில்.. ஊருக்காக உறவுக்காக சில பல நேரங்களில் தன் நிலையிலிருந்து வளைந்து சென்றாலும் பெரும்பான்மையான நேரம் நேர்மையை கடைபிடிப்பவர் வாஞ்சி.. சுதந்திரப் போராட்ட தியாகியான வாஞ்சிநாதனின் ஞாபகார்த்தமாகவே இந்தப் பெயரைத் தன் மூத்த மகனுக்கு வைத்தார் வேந்தர்.

 

“மலரு!?” என்று தன் தம்பியை அழைக்க “என்னங்கண்ணே..” என்று வந்தவரிடம்.. 

 

 

“என்னமோ சரி இல்ல டா.. எதுக்கும் நம்ம வேந்தருக்கு போன் பண்ணி அவரு பத்திரத்தை உறுதிப்படுத்திக்கோ.. இந்த மாதிரி அந்த வீட்டுப் புள்ளைய காணலைன்னா நம்ம மேல வஞ்சம் வச்சிருப்பாய்ங்க அவிங்க..

ஜாக்கிரதை!!” என்று அவர் எச்சரிக்கை செய்ய..

 

 

“என்னணே.. அவிய்ங்க வீட்ல பொண்ணு காணாம போனா அதுக்கு நாம பொறுப்பாக முடியுமா? அப்படியே அந்த புள்ளைய நம்ம பையனுவோ தூக்கி இருந்தாலும் தான் என்ன தப்பு சொல்லுங்க?” என்றார் எங்கோ பார்த்தபடி..

 

“கடந்த காலத்துல நடந்ததுக்கெல்லாம் நினைச்சு, நிகழ்காலத்துல அதற்கு நாம பழிக்கு பழி எடுத்திட்டு இருந்தோம்னா.. நம் புள்ளைக எதிர்காலம் நல்லா இருக்காது மலரு சொல்லிபுட்டேன்.. அவனுக தான் இள ரத்தம்.. ஜல்லிக்கட்டு காளை கணக்கா சிலும்பிக் கிட்டு ஆடுறாய்ங்கனா, நீயும் அவிய்ங்களுக்கு கொம்பு சீவி விடாதே!!” என்று அண்ணனாக வாஞ்சி கண்டிக்க..

 

“புரியுது!! நீங்க சொல்றது நல்லாவே புரியுது அறிவுக்கு!! ஆனா மனசு ஒன்னு இருக்கு தானே?? அதுக்கு வலிக்குதுண்ணே ரொம்ப வலிக்குது” என்று குரல் கலங்க சொன்னவர் அடுத்த நிமிடம் தன் அறைக்கு சென்றுவிட்டார்.

 

“உனக்கு இருக்கிற அதே வருத்தம் வலி எனக்குள்ளும் இருக்கும் மலரு.. ஆனால் அதையெல்லாம் இப்போ காமிச்சுக்கிட்டு இருந்தா நாம வாழ்நாள் முழுக்க வீச்சருவா வேல் கம்புமா தான் சுத்திக்கிட்டு திரியனும் போதாக்குறைக்கு நம்ம பசங்களோட வாழ்க்கையும் இதுல இருக்கு” என்று அங்கிருந்து பேசினார் வாஞ்சி..

 

 

பின்னர் ஹாலில் ராஜ தோரணையில் புகைப்படமாக நின்றிருக்கும் தனது தந்தை ராஜ வேந்தர் முன்னிலையில் நின்று.. “இந்த பயலுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் வரவே மாட்டேங்குது ஐயா.. நீங்க இருந்து இருந்தா கண்டிப்பா கேட்டு இருப்பானுங்க.. எல்லாம் விதி!!” என்று பெருமூச்சு விட்டு அவர் தன் அறைக்கு சென்றார்.

 

 

மிகப்பெரிய விஸ்தாரமான இரண்டு அடுக்கு வீடு அது!! கீழே பெரிய ஹால் அதன் இரு மருங்கிலும் அறைகளும் சற்றுப் பின்னால் 50 பேர் அமர்ந்து சாப்பிடும் படியான ஹாலும் அதன் பின்னே சமையலறையும்.. வீட்டு ஆட்கள் சமையலறைரோடு சேர்த்திருக்கும் டைனிங் டேபிளில் அமர்ந்து விடுவார்கள்.

 

வீட்டு வேலையாட்கள் இவர்கள் பின்னே இருக்கும் ஆட்களுக்கு என்று அந்த முன்னறையில் சாப்பாடு எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும்..

 

 

முதல் அடுக்கில் விருந்தினர்களுக்கான அறையும் ஒரு பக்கமும்.. மறு பக்கம் கதிர் வேந்தனின் உலகம்.. உடற்பயிற்சிக்கு என்று ஒரு அறையில் உபகரணங்கள் வைத்து இருந்தாலும்.. இன்று வரை அந்த அறையை இவன் உபயோகித்த நாளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. ஒரு அறைக்குள் உடற்பயிற்சி செய்வதெல்லாம் அவனுக்கு பிடிக்காத ஒன்று.. காலையில் மொட்டை மாடியில் நின்று உருளை கட்டை கரலாக்கட்டை என்று விதவிதமான கட்டைகளை தூக்கி சுழற்றுவதும் சிலம்பம் பயிற்சி செய்வதுமே அவனது பிரதான உடற்பயிற்சிகள்.. 

 

 

அவரது பெரிய அன்னை கூட கிண்டலாக கேட்பார் “நீ சாப்பிடற சாப்பாட்டுலாம் உன் எலும்புக்கே போய் சேருதுடா.. எங்கேயாவது சத போடுதா பாரு” என்று கூற, அன்னையோ “அம்புட்டும் விஷம்.. விஷம் கா அப்புறம் எங்கிருந்து உடம்பு போடும்” என்று கூறும் அன்னையின் சற்று பெருத்த மேனியை பார்ப்பவன்.. “வஞ்சனையில்லாமல் தின்னுட்டு நான் வஞ்சனையோடு இருக்கேனா?? கலி காலம் கலிகாலம்” என்றவாறு செல்வான்.

 

அடுத்த இரண்டாவது அடுக்கு அவர்களது மூத்த வாரிசான வெற்றிவேந்தனுடையது.

அவனது படை தளவாடங்கள் எல்லாம் அந்த இரண்டாம் அடுக்கில் மட்டுமே…

 

 

தன்னுடைய அறைக்கு வந்த கதிரோ ஒருமுறை வராண்டாவில் நடந்தவாறே கீழே உள்ள அறைகளை நோட்டமிட்டான். தந்தை பெரிய தந்தை அப்பத்தாவின் அறைகளெல்லாம் இருளில் மூழ்கி இருக்க.. அனைவரும் உறங்கிவிட்டனர் என்று உறுதி செய்து கொண்டு தனது அண்ணனுக்கு அழைத்தான்.

 

இரண்டு மூன்று முறை அழைத்தும் அந்தப் பக்கத்திலிருந்து இணைப்பு எடுக்கப்படாமல் துண்டிக்கப்பட்டு கொண்டே இருக்க..

 

 

அதற்கு மேலும் அவன் முயற்சி செய்யவில்லை.. மிக முக்கியமான நேரத்தில் மட்டுமே இவ்வாறு அழைப்பை துண்டிப்பான் வெற்றி.. மற்ற நேரங்களில் எடுத்து ஓரிரு வார்த்தைகளாவது சொல்லி வைத்து விடுவான்.

 

 

“இன்னைக்கு அந்த பொண்ணு அண்ணன் கையில கைமாதான்!!” என்று எண்ணியவாறு இவன் குதுகலமாக தூங்க போக..

 

 

ஆனால் அங்கே அவள் தான் வெற்றிவேந்தனையே புரோட்டாவாக பிச்சுப் பிச்சு போட்டு சால்னாவை ஊற்றி தின்பதற்கு ஆயத்தமாக இருந்தாள்.

 

கொடை ரோட்டை நோக்கி சென்ற வண்டி சில பல திருப்பங்கள் கடந்து மலை அடிவாரத்திலிருந்து மெல்ல மெல்ல ஏற ஆரம்பித்தது… 

 

 

நிவேதிதா கத்தி கத்தி ஓய்ந்து ஆனால் அவனை முறைக்க மட்டும் தவறவில்லை.. கைகள் என்னும் அவன் கையிலேயே சிறையில் இருக்க.. தானும் அவனுடைய சிறைகள் இருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை அவளால்..

 

 

“சரியான பார்பாரிசம் நீங்க பண்றது.. இதெல்லாம் தப்பு தெரியுமா? எல்லாம் சொல்லி கொடுக்கலியா உங்க வீட்டுல? பொண்ணுகிட்ட எப்படி மரியாதை கொடுக்கணும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்னு?” வாய் ஓயாமல் அவள் பெண்ணியம் பேசி கொண்டே வர..

 

 

இவனோ ரிமோட்டை எடுத்து இளையராஜாவின் குரலில் பாட்டை தவழவிட்டப்படி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கொஞ்சமும் கோபமே இல்லாமல் வெகு வெகு நிதானமாக..

 

 

சற்று நேரத்தில் பேசிப்பேசி அவளும் ஒய்ந்துபோக.. அப்படியே கால்களை மடக்கி இருக்கையில் வைத்து ஒரு பக்கமாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள் பின் கைதான் இன்னும் அவன் கையிலேயே சிறை இருக்கே..

 

 

மலை ஏற ஏற அந்தகார இருள் மட்டுமே.. எந்த இடம்னு அவனிடம் கேட்டால் அதற்கும் பதில் சொல்ல மாட்டான் என்று கண்களில் பயத்தை தேக்கியப்படி நிவேதிதா..

 

கொடைரோட்டில் இருந்து சற்று தூரத்தில் இருக்கும் மலைப் பாங்கான கிராம பகுதிக்கு வந்திருந்தனர்.‌அவர்களுக்கு சொந்தமான வீடு அங்கேயே ஒன்றியிருக்க அங்கே நிறுத்தியவன்.. அவளது கையை விட்டு “இறங்கு!!” என்றவன், இறங்கி நின்று கைகளை மேலே உயர்த்தி நெட்டி முறித்தான்.

 

 

கை கால்களை உதறி, மெல்ல இறங்கி அந்த இடத்தை சுற்றிப் பார்த்த நிவேதிதாவின் கண்களுக்கு, மை பூசியது போல வெறும் இருள் மட்டுமே தெரிந்தது.. 

“எதுக்கு இங்கே என்ன கொண்டு வந்திருக்க?” என்று சுற்றிலும் பார்வையை படர விட்டபடி அவள் கேட்க..

 

“ம்ம்ம் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட!!” என்று இலகுவாக கூறியவனை பார்த்து அரண்டு அங்கிருந்து ஓட எத்தனிக்க.. “ஓடு.. ஓடு.. இந்த இடங்கள் எல்லாம் காடுதான்.. நைட்ல யானை எல்லாம் வரும். தும்பிக்கையால் தூக்கி ஒரே அடிதான்.. மண்டை பிளந்து ரத்தம் வந்து நீ அவ்வளவுதான்!!” என்று கூற இரு காதுகளையும் கைகளால் பொத்திக் கொண்டு “சொல்லாதே.. சொல்லாதே..” என்று பயந்தவள் கடத்தியவன் பின்னே பாதுகாப்பாய் நின்று கொண்டாள்.

 

 

அவள் கையை பிடித்து முன்னே நிறுத்தி.. “உள்ளே போ!!” என்றான்.

 

“மாட்டேன்.. மாட்டேன்!! உள்ளே போனா நீ சொன்ன மாதிரி என்கிட்ட நீ தப்பா நடப்ப” என்று அவள் தலையை ஆட்டி ஆட்டி பேச..

 

 

“ரொம்ப டயர்டா இருக்கு.. இப்போ உள்ள போக போறியா? இல்லையா?” என்றவன் மீண்டும் கேட்க… அவன் பேசும் தொணியே சில்லென்ற கத்தியை எடுத்து வயிற்றுக்குள் குத்துவது போல ஒரு பயத்தை கொடுத்தது நிவேதிதாவுக்கு..

 

தலையை இருபக்கமும் ஆட்டியவாறு நின்ற இடத்திலேயே அவள் நிற்க..

இவன் மெல்ல அடி எடுத்து அவளை நெருங்க…

அவளோ பயத்தில் எந்தப்பக்கம் ஓடித் தப்பிக்கலாம் என்று கண்களை சுழல விட்டவாறே பின்னே நடக்க..

நடந்தவள் காரின் மீது தட்டி நடை தடைபட..

 

இன்னும் அவளை நெருக்கமாக நெருங்கியவன் கார் மீது சாய்ந்து நின்றவளை இரு பக்கமும் கை வைத்து சிறைப்பிடித்தான். அவள்புறம் குனிந்தவனின் கற்றை மீசை அவள் காது மடலில் உரச..

 

இரவு நேரம், மலைப்பாங்கான பகுதி.. உள்ளே ஊடுருவும் குளிர்.. வெம்மையான அவனது மூச்சு காற்று என்று காதலுக்கும் தாபத்துக்கும் மோகத்துக்கும் மிக ஏற்று சுச்சுவேஷன் ஆனால் இரண்டே இரண்டைத் தவிர..

 

பயத்தில் இருக்கும் அவள்!! 

கோபத்தில் இருக்கும் அவன்!!

 

மூக்கால் அவள் வெண் கழுத்தில் படையெடுத்தவன் மெதுவாய் அதே இடத்தினை மூர்க்கமாய் உரசிட.. 

அவளோ திமிறினாள் விடுபட..

 

 

“எப்படி வசதி.. இங்கேயே கொண்டாடிடலாமா ஃபர்ஸ்ட் நைட்டை?” என்றான் தாபத்தினை குரலில் ஏற்றி..

 

 

நிவேதாவின் தேகமெங்கும் ஜிவ்வென்று ஏறி இறங்கியது நடுக்கத்தில்..

ஒரு விதமான ரசாயனம் மாற்றம் பெண்ணிடத்தில்..

 

“வேண்டாம்.. வேண்டாம்” என்று திக்கி திணறிய அவள் கதறலானது இப்போது மென் முனகலானது அவனது நெருக்கத்தில்..

 

“ஆஹான்.. நீதான் உள்ள வர மாட்டேன்னு சொன்னியே? அப்போ இங்கேயே ஆரம்பிக்கலாமா?” என்று அவனின் மூக்கு மெல்ல அவள் வாசனையை நுகர..

 

 

அவனின் நெருக்கம் தாளாது.. கூடவே அவனின் பாரமும் சேர்ந்துகொள்ள “தள்ளிப் போடா ஹல்க்!!” என்று அவள் கத்தி தள்ளிவிட..

 

“அதுக்குள்ளார தள்ளி விட்டா எப்படி? ஆரம்ப அரிச்சுவடியை இன்னும் ஆரம்பிக்கலையே?” என்ற தாடையை இறுக்கமாகப் பற்றி கண்ணை ஆழ்ந்து பார்த்துக் கேட்க..

 

 

“இல்ல.. இல்ல.. நோ..” என்றாள்.

 

 

“நீ பாரின்ல வளர்ந்தவ தானே அப்போ இதெல்லாம்..” என்று வார்த்தைகளை அமிலமாக அவள் மீது பொழிய..

 

 

‘பாரின்ல வளர்ந்தா?? எல்லாத்தையும் விட்டுட்டு உன் கூட வந்து படுக்க முடியுமா??போடா ராஸ்கல்!!” என்று கத்தினாள்.

 

 

அவள் என்ன பேசினாலும் சற்றும் நிதானம் கலையாமல் இருந்தவனை கண்டவளுக்கு உள்ளுக்குள் குளிர் எடுக்க முதுகெலும்பை சில்லிட தொடங்கியது.

 

கோபமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்பவனை கூட சமாளித்துவிடலாம். இவ்வளவு நிதானமாக நெருங்கிபவனை என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள்.

 

 இன்னும் சற்று நெருங்கியவன் தன் நுனி நாக்கால் அவளின் மூக்கு நுனியை தீண்டயவாரே.. “வொய் நாட்?” என்றான். 

 

“பாவி.. என்னவெல்லாம் பேசுற நீ?!” என்று அவள் கூச்சலிட.. “ரொம்ப கத்தாத அப்புறம் வேறு எங்கே சுத்திட்டு இருக்கிற காட்டு மிருகமெல்லாம் இங்கே வந்திட போகுது!” என்றவன், இப்போது துழாவ ஆரம்பித்திருப்பதோ அவளின் முதுகின் நுனிப்பகுதியில். 

 

அவன் நாவால் தீண்ட.. 

இவள் வாய்விட்டு கத்த… 

அது அவனுக்கு சுப்ரபாதமாய் இனிக்க..

அவளோ பயத்தில் மயங்கியே விட்டாள்.

 

 

மயங்கி அவளை கையில் அள்ளி எடுத்து அவன் வீட்டின் உள்ளே நுழைந்து மெத்தையில் போட்டவன், அருவருப்பு பார்வை ஒன்றே அவள்மீது வீசினான்.

பின் அவளைத் தொட்ட தன்னை நினைத்தே கோபம் கொண்டு அந்தக் குளிரிலும் குளித்து விட்டு வந்தான்.

 

 

ஒரு நாள் இரவு முழுக்க தங்கள் வீட்டு குலமகள் வீட்டுக்கு வராததை நினைத்து மருதுவின் குடும்பமே பயத்திலும் சோகத்திலும் வருத்தத்திலும் கரைந்து கொண்டிருக்க.. விடியோ காலை 6 மணிக்கு மருதுவின் செல்லுக்கு ஏதோ ஒரு நம்பரிலிருந்து போன் வர..

 

 

ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்தும்.. இதுவரை எந்த தகவலும் தெரியாது கவலையில் இருந்தவர்களுக்கு இந்த போன் கால் ஆறுதல் மட்டுமல்ல அதிர்ச்சியையும் சேர்த்து அளித்தது..

 

 

அடுத்து ஒரு

மணி நேரத்தில் அப்பத்தாவையும் தனபாக்கியத்தையும் தவிர மொத்த குடும்பமும் கோடை ரோட்டில் உள்ள வெற்றியின் வீட்டின் முன்னால் நிற்க..

 

 

கார் சத்தத்தில் சாவதானமாக வெளியில் வந்து நின்றான் வெற்றி வெற்று உடம்போடு!

 

காதலே.. காதலே..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top