ATM Tamil Romantic Novels

19 கணவன்

19 கணவன்

 

மகி பார்த்ததை பார்த்துவிட்ட அஜு சங்கடப்பட்டுவிட்டான்.

 

உண்மையா இது யாருன்னே தெரில புது நம்பர் நீயே பாரு என்று அவன் செல்லை அவளிடமே கொடுக்க.. 

 

“வேணாம் அஜு நானே செகண்ட் ஹாண்ட் உங்களை கட்டுப்படுத்த என்னென்ன யோக்யதையிருக்கு?” கண்ணீர். இதுவரையிருந்த  மகிழ்ச்சி மாயமான பீல். 

 

“போடி பன்னி அழுகையை முதலில் நிறுத்து.. விஷயம் தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் பீலிங்ஸ்க்கு வா.. ” கிட்ட தட்ட குரல் உயர்த்தினான். முதன்முறை இத்தகைய ஓங்கிய குரலை மகி கேட்கிறாள். அதில் இன்னும் பயந்து விழி விரிக்க.. அந்த முகபாவனையில் எரிச்சல் தணிந்தவன் நெகிழும் குரலில்..

 

“நானும் வாழ்க்கையை எளிமையா ஹாண்டில் பண்ணனும் முயற்சி பண்றேன் மகி ஆனா அது எவ்ளோ பக்குவமா இருந்தாலும் அந்த பக்குவத்தை தூக்கி சாப்பிடுமளவு பிராப்ளம்ஸ் தருது ! நான் என்ன செய்ய? நீ பெண் ரொம்ப வசதி! வருத்தப்பட்டா கண்ணீர் விடுற ஈஸியா கடந்துடுற.. என்னை போல ஆண்கள் என்ன பண்ண முடியும்? அழுதா கோழைன்னு சொல்வாங்க.. நியாயமில்லை என்று பேசினால் ரவுடிப்பய! நீசன்! என்கிறார்கள் என்ன பண்ணட்டும் மகி? முத கல்யாண தோல்வியிலேயே காரணம் சொல்லி சொல்லி  ஓய்ஞ்சு போய்ட்டேன்.. இப்ப தானா வரதுக்கு நான் எப்படி உனக்கு விளக்கம் கொடுக்க முடியும்?”அவன்  நீர்திரையிட்டு வலியோடு மினுங்கியது.

 

அலங்கார சொற்கள் அவ்ளோவா பதியாது. ஆன்மாவிலிருந்து வந்தால் இன்னொரு ஆன்மாவை பாதிக்கும்ல.. 

 

தன் விழிநீர் துடைத்து உம்மென்ற முகத்தோடு  அவன் செல்லை  வாங்கினாள் மகி.

 

அஜு பிரண்ட் ஏதோ வீடியோ அனுப்பி சில ஆடியோ கிளிப்பிங்ஸ் போட்ருந்தார்.  அது முழுக்க அவருக்கும் இவனுக்குமான பிசினஸ் தாட்ஸ்.

 

அடுத்து அந்த டவுட் கால்

எடுத்து பார்க்க ஒரு பெயரிடப்படாத நம்பர்  ஆப்லைன் காட்டியது. அஜு பேர் பதியலையோ? அல்லது அப்படியே டெலிட் பண்ண வசதியா வச்சுருக்கானோ?

 

அதில் ஏகப்பட்ட செய்திகள்..

ஹாய் அர்ஜுன் எப்படி இருக்கடா? ஐ மிஸ் யூ. நீ ஆசையா பலதடவை கேட்டும் கொடுக்காததை இப்பொழுது உனக்கே உனக்காக பரிசாகத்தாரேன் பிசைஞ்சிக்கோ! பார்த்துக்கோ! சப்பிக்கோ! கடிச்சுக்கோ! ஐ லவ் யூடா.. உன்னை மிஸ் பண்ணது மிக துரதிஷ்டமானது. வருத்தப்படுறேன். மூவாயிரம் மிஸ் யூக்கள் ரெண்டாயிரம் சாரிகள் அனைத்தும் ஆங்கிலத்தில்.. சேவ் செய்யும் ஆப்ஷன் போய் சேவ் பண்ணி பார்க்க பேருக்கு பதில் ரோஜாப்பூ மட்டும். அதிலேயும் மர்மம். டீபில எந்த சிம்பலும் இல்லாமல் ப்ளைன்யா இருந்தது.

 

இருவருக்கும் வெளியில் தெரிஞ்சது ஒரு போட்டோ தான். உள்ளே முகமில்லாது வெறும் மார்பகங்களை மட்டும் வெள்ளை பிராவோடு கிட்டே தூர பிதுங்கி பிதுக்கி வெளியில் முழுக்க என்று சகிலாவையும் விட பெருசான ரெண்டையும் காட்டி விதவிதமாக கறிகடை பரப்பியிருக்க.. அது வந்த நேரங்கள் இவளுடன் அஜு இருந்த நேரங்கள். சோ அவனை நம்பலாம். பார்க்க கண் கூசினாலும் நெஞ்சை திடப்படுத்திக்கொண்டு அஜுவிடமே போனை கொடுத்தாள்

 

 “இந்தாங்க ஒரு பொண்ணு தான் பெர்சனலா மெஸேஜ் போட்ருக்கு யாருன்னு நீங்களே கெஸ் பண்ணி சொல்லுங்க …”

 

அந்த போட்டோக்களை முறைத்து பார்த்துவிட்டு முத வேலையா அத்தனையும் பெர்மனேன்ட் டெலிட் கொடுத்துட்டு மெசேஜ் படித்தவன்.. 

 

டைப் செய்தது பயங்கரமான கெட்ட வார்த்தைகள்.. மகி இவ்ளோ மோசமா திட்ட முடியுமா அதிர்ந்து நிக்கும் போதே.. என் பிள்ளைக்கு பால் கொடுக்காத அது உனக்கு இருந்தா என்ன இல்லன்னா என்ன மூதேவி.. அவளை பிளாக் பண்ணிவிட்டு தன் சிம்மை கை நடுங்க எடுத்து பிச்சி போட்டான்.. கேடுகெட்டநாய் என் கூட படுக்க ஆசைப்படுது.. வாடா அர்ஜுன்னா  பின்னாடியே நாய் மாதிரி போன பழைய அர்ஜுன் நினைச்சுட்டா போல.. தே…மு.. அந்த கட்டைக்கு திரிசம் கேக்குதா? நறநறவென பல்லைக் கடித்தான்.

 

ஆபாச படம் வந்தப்போ நண்பர்கள் செய்யும் விளையாட்டு மகியே பார்த்தால் ஆண்கள் உலகம் லேசா நீலமானது ஏன் தானே நெட்டில் அதுமாதிரி வீடியோ பார்த்து மூட் ஏற்றிக்கொண்டு வருவது மகிக்கு தெரியுமே நார்மல் தொல்லை என்றே நினைத்திருக்க விசாகாவே இப்படி அசிங்கம் பண்ணியது அஜு பொறுமையை கடுமையாக சோதித்துவிட்டது. கொதித்துவிட்டான்… ஸ்ரீ பிறந்தப்போ பற்றிய தீ .. இன்னும் சூடா இருக்கேனா சோதிக்கிறா போல.. இன்னும் நாலு கெட்ட வார்த்தை. யார் என் மொபைல் நம்பர் கொடுத்திருப்பார்கள்? அவ சங்காத்தமே வேணாம்.. ஒழிஞ்ச சனியன் அப்படியே போனாத்தான் என்ன? இனி என் வழிக்கு வரட்டும் .. என்னை திட்டி தீர்த்த மகளிர் போலீஸ் கிட்டேயே புகார் கொடுக்கிறேன்.. அவன் மூடும் கெட்டுப்போனது.

நரசிம்ம அவதாரம் எடுத்தவன் போன்று நரம்புகள் புடைக்க கோபத்தில் உலாவினான். அவன் கத்தியதில் ஓரளவு விஷயம் பிடிபட்டு விட சிம்மை பிச்சி போட்டதில் மகி படுதிருப்தி. கண்ணெதிரே பார்த்த அனைத்திலும் நேர்மையான கோவமே தெரிய அது பிடித்திருந்தது. இது தான் ஆண்மை ! அன்பும் வேணும் தேவைப்படின் ரௌத்திரமும் பழகனும்.

 

பாலா முதுகெலும்பில்லாதவன். தாய் தகப்பன் சொத்தில் வாடகை வாங்கி தின்று உடம்பு வளர்ந்தவன். அவன் குடும்பத்துக்கு உடன்பிறப்புகளுக்கு வேலை செய்ய மட்டுமே தன் மனைவி. இவள் கேட்டது லட்சக்கணக்கில் வாடகை வரட்டும் நீ  ஐந்தாயிரம் ரூபாய்க்கு கூட வேலைக்கு போ நான் காலம் பூரா அடிமையா இருக்கேன். இப்படி அந்த பணத்தில் உடம்பு வளர்க்க ஒரு மாறி இருக்கு புரிஞ்சிக்கோங்க பாலா  என்ற ஒரே ஒரு கோரிக்கை தான். அதற்கு அந்த சோம்பேறி.. நான் எவ்ளோ பெரிய பணக்காரன்.. ஒருத்தன் கிட்டே கை கட்டி வேலை பார்ப்பதா? ஈகோ பிராப்லம் போல ஆக்கி அதே வித்தாகி வேர் ஊணி கல்யாண வாழ்வை சிதைத்து போட்டது நிஜம். அஜு புலம்பியது போல சமரசமாயிருந்தால் எல்லாம் சரியாக இருப்பது போல பிம்பங்கள் இருக்கும். சரியில்லன்னா இதுதான் வேர் பிராப்ளம் என்று விளக்கமே கொடுக்க முடியாது. விளக்கம் கொடுத்து புரிய வைப்பதும் வியர்த்தமே! லேசா மயக்கம் வருவது போல உணர்ந்தாள் மகி. பூமியில் நிற்பது கூட பறப்பது போன்ற பிரமை தர.. பாட்டிலை திறந்து தண்ணீரை மிக்ஸிங் செய்து குடிகத் துவங்கிய அஜுவின் கரங்களை பிடித்தாள். கீழே விழுந்துருவோமோ? பயம்.

 

என்னாச்சு மகி?!

 

தலை சுத்துர மாதிரி இருக்கு..

 

ஓ! பெருமூச்சு விட்டவன்.. முன்பு மாத்திரை போட்டு கலக்கிய ட்ரிங்க்ய கொடுத்து இது காஸ்டலி ஹெல்த் ட்ரிங்க்! குடி தூங்கு எல்லாம் சரியாகிரும்..

 

இருக்கும் படபடப்பில் நீராகாரம் ஏதேனும் குடித்தால் நன்றாக தானிருக்கும்.. கேள்வி கேட்காது அரை லிட்டர் அளவிலான அந்த பானத்தைக் குடித்தாள். 

 

சிப்பு சிப்பாக குடித்து ஒரு வாரத்துக்கு வச்சுக்கோணும் என்று வாங்கி வந்திருந்த வாசமில்லா உயர்ரக ஜின்னை விசாகா மீதிருந்த கடுப்பில் கவிழ்க்கவாரம்பித்தான்.

 

அஜு ஐ லவ் யூடா! நான் உன்னை நம்புறேன்.. உனக்கு நானிருக்கிறேன் மகி முதன் முறை மனம் திறந்தாள். அவள் கண்கள் உணர்ச்சிப்பிழம்பில் கலங்கி நின்றன.

 

போடி போ தூங்கு.. மனுஷனை நீயும் சாகடிக்காதே..

 

“இல்ல நான் சொல்லணும் அஜு நெஞ்சு பட படன்னு அடிக்குது.. நான் செத்து போய்ட்டா சொல்ல முடியாதுல.. உன் ஸ்ரீயோடு என் அட்சயாவும் பார்த்துக்கோடா” என்று ஓ ன்னு அழுகை.

 

100க்கு போன் அடிக்க செல்லை எடுத்தான் அஜு.

comments வந்தேயாகனும் இல்லன்னா புறா கூட ஓடிருவேன்.

6 thoughts on “19 கணவன்”

  1. சரக்கடிச்சிட்டு தைரியமா மனசுல இரேக்கிறதை எல்லாம் சொல்ல போறா போல இருக்கு

  2. “சமரசமா இருந்தால் எல்லாம் சரியாக இருப்பது போல் பிம்பம் ஏற்படும் சரியில்லைன்னா அதுதான் வேர் பிராப்ளம். ”
    அவ்வளவுதான் அவ்வளவே தான் இதுதான் திருமணத்தின் அடிப்படை.

    அருமை நண்பரே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top